தேசப்பற்றுக்கு ஜனகனமண – தோசை சட்னிக்கு ஜி.எஸ்.டி !

1
36

நாம் வாழும் தேசம்

சுவரொட்டியில்
வீரவசனம்,
சோடையற்ற
மேடைப்பேச்சு,
சொற்கள் மழையில்
சொரணையற்ற
மக்கள் கூட்டம் !

தேர்தல்
சுற்றறிக்கையில்
சொர்க்கம்,
சொந்த ஆட்சியில்
நெற்றியில் ஒற்றை
நாமம்!

தேர்தல் !
படித்தவனுக்கு
விடுமுறை நாள்,
பாமரனுக்கு
திருவிழா !

தேசப்பற்றுக்கு
திரையரங்கில்
ஜனகனமன,
தோசை சட்னிக்கு
உணவகத்தில்
ஜிஎஸ்டி !

மாடு விற்க
ஐந்து ஆவணம்,
மாட்டிகிட்ட
கண்டெய்னருக்கு
மூன்றுமாத
திரைக்கதையில்
மக்கள் காதில்
மலர் ஆரணம் !

கோட்டுக்கு
பத்து லட்சம்,
மலம் கழிக்க
வாழை இலை,
சிலை வைக்க
காசிருக்கு – ஆக்சிஜன்
சிலிண்டர் வைக்க
காசில்லை!

ஊழல் சிறைவாசிக்கு
ஷாப்பிங் சலுகை,
சல்லாப சாமியாருக்கு
சாலை மறியல்
போராட்டம்!

அப்பாவி சிறைவாசிக்கு
தலைமுறை கடந்து
தலை நரை !
பாவமென்று
பரோலில் விட்டால்
வழக்குபோடும்
பன்னாடை
பிறப்புகள் !

ஏன்னு கேட்டா
Anti Nationalist
Uncle Nationalist,
போமா நீன்னு
சொல்லும்
பேமானி அல்லக்கைகள் !

கொதித்தெழாத
குருதி,
நரம்பு தளர்ச்சியில்
நம் மானம்,
தள்ளாடும்
கிழவனாய்
தன்மானம் !

விவசாயிக்கு
வட்டிக் கடன் !
வர்த்தக
முதலைக்கு
வாரா கடன்
வரிவிலக்கு !

நீயே சொல்?
எவன் வந்தால்
விடியல்
நமக்கு ?

-த. ஹாஜி

_____________

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா