Sunday, May 4, 2025
பயிர், பச்சை இன்றி உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள். கழுநீர் நனைய வழியின்றி உலர்ந்த மோவாயை நாவால் வருடி காம்பு காயும் பசுக்கள். இலை தழை தேடி ஏமாந்து தன்நிழல் மேயும் ஆடுகள். இறுகி, இறுகி ஈரப்பசையற்றுப் போன நிலம் இறுதியில் விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.
இஸ்லாமியர்கள் தங்கள் சகோதரத்துவத்தை வெளிப்படுத்த இன்னும் நிறைய தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை நிரூபிக்க நிறைய சுயபலிகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது.
ரத்த வாசனையுள்ள ஒரு கேக்கை சாப்பிட்டு விட்டு ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க டீ கடையில் தேநீர் அருந்துங்கள் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும்...
எல்லையில் ஒரு சிறிய யுத்தம் வந்தால் எல்லாப்பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் உள் நாட்டில் அமைதி திரும்ப வேண்டுமெனில் எல்லையில் கொஞ்சம் பதட்டம் வேண்டும்...
ஒரு தேசமே ஒரு பிக்பாஸின் ரியாலிட்டி ஷோவா மாறிவிட்டது நூற்றி இருபது கோடி மக்களையும் பிக் பாஸ் கண்காணிக்கிறார், கட்டுப்படுத்துகிறார்.
“முஸ்லீம்கள் யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்காதீர்கள் முக்கியமாக உங்கள் உணவைப்பற்றியோ நீங்களும் இந்த நாட்டின் குடிமக்கள்தான் என்றோ உரத்துப் பேசாதீர்கள் கிசுகிசுக்கக்கூட செய்யாதீர்கள் நீங்கள் பத்திரமாக வீடு திரும்புவதற்கு அது மிகவும் அவசியம்’’
ஊரான் மாட்டை அவாள் ஓசியில் தின்றது உபச்சாரம்; இன்று: உழைத்திடும் மக்கள் காசுக்கு கறி வாங்கித் தின்றால் அபச்சாரம்!
கொள்ளையடிப்பதற்கான மணல் இன்னும் மிச்சமிருக்கிறது ஆற்றில், திருடி விற்பதற்கான நீர் இன்னும் மிச்சமிருக்கிறது நிலத்தடியில்,ஒருமுறை சொன்னால் நூறுமுறை வெட்டி எடுக்க இன்னும் மிச்சமிருக்கிறது கிரானைட்,
படிக்கும் மாணவரின் முழுக்கை சட்டையும், பைத்தியக்கார விதிகளால் கிழிக்கப்பட்டது. கழுத்தணியும், காதணியும் பாதணியும் கூட பறிக்கப்பட்டது.எச்சரிக்கை விதிகளால் எல்லா கயிறுகளும் அறுக்கப்பட்டது. ஆனால், பூணூல் கயிறு?

தணல்

1
மெரினா விரிந்து கிடக்கிறது நெடுவாசல் நீண்டு கிடக்கிறது தில்லி ஜந்தர் மந்தர் பிடிவாதம் பிடிக்கிறது... உடனே புரட்சி வேண்டுமென ஒவ்வொரு தருணமும் துடிக்கிறது.
'‍பொது தீட்சீதர் கோயில் தனியார்' எனும் அநீதிக்கெதிராக அடங்கார். அய்யா ஆறுமுகச்சாமி உம் போல் இனி யார் ? விடையேறி திருமேனியனுக்கும் தமிழ் தடை உடைத்த கண்மணியே நெற்றி‍யெல்லாம் திருநீறு உன் நெஞ்செல்லாம் தமிழ் வீறு ஓயாதய்யா உன் போர் !
அவசர அவசரமாக தூக்கிலிட்டு அறைகுறையாக வெட்டியெறிந்து சட்லெஜ் நதியில் கரைத்தார்கள் இதோ அவன் மெரினா கரையில் துளிர்க்கிறான்... அலகாபாத் ஆல்பிரட் பூங்காவில் வீரமரணம் எய்திய ஆசாத்தை வெறிகொண்டு முடித்தார்கள். இதோ அவன் நெடுவாசலில் வந்து நிற்கிறான்.
பிறப்புறுப்பை அறுக்கும் இந்து முன்னணி கயவர்களை இந்த ஊரில் வைத்துக்கொண்டே எனக்கும் மகளிர் தின வாழ்த்தா! கேட்கிறாள் அரியலூர் நந்தினி?
கடைக்கண் பார்வைக்கு கிடையாசனத்திலேயே கிடந்தவர் அரியாசனத்திற்காக பத்மாசனமா? கோபத்தில் குமுறுது அம்மாவின் ஆவி! பேய்களை சமாளிக்க ஒரே வழி பேயாகி விடுவதுதான்.
கார்ப்பரேட் ஆராதனை விளைநிலம் விழுங்கி கொள்ளையிடுது நாட்டை. வாய்‍பேச்சுக்கும் வருத்தமில்லாமல் உங்கள் நாவில் துள்ளுது 'நாட்டை'. மதகோசை முடங்கி பயிரோசை ஒடுங்கி உயிரோசை அடங்கும் புல்லினம். இதற்கொரு உணர்ச்சியில்லாமல் இதயம் மரத்தது இசையா ! நீங்கள் என்ன வகை உயிரினம் ?

அண்மை பதிவுகள்