‘நீட்’ இந்தியா
தில்லியில்
ஆடை களைந்தான் விவசாயி.
தேர்வில்
ஆடை அவிழ்க்கப்பட்டார்கள்
மாணவர்கள்.
பர்தா களையப்பட்டது
துப்பட்டா விலக்கப்பட்டது
கூந்தல் கலைக்கப்பட்டது
உள்ளாடையும் உருவப்பட்டது
அதாகப்பட்டது,
மோடி அரசின் தூய்மையைக் காட்ட
ஆணுடலும், பெண்ணுடலும்
அசிங்கப்பட்டது.
பதஞ்சலியின் கோவணமும்
ஈசாவின் தலைப்பாகையும்
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது,
படிக்கும் மாணவரின்
முழுக்கை சட்டையும்,
பைத்தியக்கார விதிகளால்
கிழிக்கப்பட்டது.
கழுத்தணியும், காதணியும்
பாதணியும் கூட
பறிக்கப்பட்டது.
எச்சரிக்கை விதிகளால்
எல்லா கயிறுகளும்
அறுக்கப்பட்டது.
ஆனால்,
பூணூல் கயிறு?
அன்று
கல்வி உரிமையே
மறுக்கப்பட்டது,
இன்று
சுயமரியாதையும்
பொசுக்கப்பட்டது!
இந்த காட்டு மிராண்டித்தனங்களுக்கு பெயர்
‘நீட்’!
- துரை. சண்முகம்
//எச்சரிக்கை விதிகளால்
எல்லா கயிறுகளும்
அறுக்கப்பட்டது.
ஆனால்,
பூணூல் கயிறு? //
சரியான கேள்வி… ???
பூனூல் அறுக்கபட்டதா???
ஹிந்து பண்பாடு கலாசாரம் என்று பேசும் பிஜேபி ஆட்சி தானே பெண்பிள்ளைகளின் துப்பட்டாவை கூட அவிழ்த்து எரியும் ,பெண்களின் உள்ளாடைகளை கலையும் நிலையை நீட் தேர்வின் போது செயல்படுத்திக்கொண்டு இருந்தது….! பிஜேபி காரன் *******….. எதுக்கு எங்க வீட்டு பிள்ளைகளை மானபங்க படுத்துற தூ நாகரிகம் கேட்ட பிஜேபி ******…?
நீட்-என்ன செய்யப்போகின்றேம் நாம்!
——————————————-
சமுகத்தின் இயற்கையான நியதிக்கு எதிராக வெவ்வேறு பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கு பொதுவாக CBSE பாடதிட்டத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட நீட் தேர்வு மத்திய மந்திகளின் பிஜேபி அரசின் பூணுல் சார்பை அப்பட்டமாக வெளிகாட்டியுள்ளது….. சரி……!
சமுக நீதிக்கு ஆதரவான 69% இட ஒதுக்கீட்டு நீட் தேர்வின் வில்லங்கத்தை சரிகட்டுமா? BC 30%, MBC 20%, SC/ST 19% என்று இருக்க மீதம் உள்ள 31% இடங்கள் மட்டும் தான் CBSE பாடதிட்டத்தில் பயின்ற மேல் தட்டு பொது பிரிவினருக்கு செல்லுமா? இல்லை 69% இட ஒதுக்கீட்டிலும் CBSE மாணவர்கள் ஆக்கிரிமிப்பு செய்வார்களா? செய்வார்கள் என்றே நினைக்கின்றேன்…. CBSE யில் பயிலும் பணம் படைத்தவர்களின் பிள்ளைகள் இட இதுகீட்டின் கீழ் வருவார்கள் எனில் அவர்கள் மருத்துவ சீட்டுகளை ஆக்கிரிமிப்பு செய்ய சாத்தியம் அதிகம் என்றே நினைக்ன்றேன்…..
எப்படி இருந்தாலும் நேரடியாக பாதிப்பு அடைய போவது யார் என்றால் தமிழ் நாடு பாடத்திட்டங்களில் பயின்ற ஏழை கிராமத்து (இட ஒதுக்கீட்டின் கீழ் வரும்) மாணவர்களும் நகரங்களில் அரசு பள்ளிகளில் பயின்ற இட ஒதுகீட்டின் கீழ் வரும் மாணவர்கள் மட்டுமே! ஏன் இந்த முடிவுக்கு வருகின்றேன் என்றால் ஏழை மாணவர்களால் எப்படி நீட் தேர்வுதனி பயிற்சிக்கு பல ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி தம்மை தயார் செய்து கொள்ள முடியும்?
இன்னும் சில துணை கேள்விகள் என்னை யோசிக்க வைத்துகொண்டு தானே இருகின்றன! தமிழ் நாடு அரசின் பாட திட்டத்தில் பயிலும் பொது பிரிவு மாணவர்கள்(open quota ) CBSE பாடதிட்டத்தில் பயின்ற பொது பிரிவு மாணவர்களிடன் போட்டிபோட்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ கல்லூரி சீட்டுகளை பெறமுடியுமா? முடியாது என்றே நினைகின்றேன்….அப்படி எனில் அதிகபடியான பொது பிரிவு சீட்டுகள் CBSE பாடதிட்டத்தில் பயின்ற பொது பிரிவு மாணவர்கலுக்கு தானே சென்று அடையும்?
இது எதனை காட்டுகிறது என்றால் பிஜேபியின் இந்த பூனுள் சார்பு அதனுள் உள்ள பொருளாதார உயர் வர்கதுக்கே முழுமையான சார்பு என்பது மட்டுமே விளங்குகிறது…. தமிழ் நாட்டில் உள்ள நடுத்தர வர்க்கத்து பார்பனர்கள் என்ன செய்ய போகிறார்கள்?
பூணுல்தானே நீட்டை நடத்துது. ஆகவே தமிழகத்தில் பார்ப்பனியத்திற்கு நாம் வைக்க வேண்டும் நீட் தேர்வு அப்போதுதான் பூனூலை அருக்க முடியும்
yes, sentilkumaran,i think you are born in another foreign country like muslims. first know your self and write comments ****