Friday, December 13, 2024
முகப்புகலைகவிதைஆம்பூர் பிரியாணியை காலத்தால் முந்தியது அய்யர் பிரியாணி

ஆம்பூர் பிரியாணியை காலத்தால் முந்தியது அய்யர் பிரியாணி

-

ரலாறு தெரியாமல் –
அசுரன் என்றால்
நம்மையே
அருவெறுப்பாய்ப் பார்க்கின்றாய்…
சுரா என்ற பார்ப்பன மதுவை
கறாராகக் குடிக்க மறுத்த
திராவிடப் பிரிவே அ-சுரா!

 முதலில்
சாராயம் குடித்த சாதி – பார்ப்பனச் சாதி
முதலில்
சாராயம் காய்ச்சிய சாதியும் பார்ப்பனச் சாதியே!
கூட்டுக்கறி தின்பவன்தான்
பார்ப்பான் என்று
குழம்பவேண்டாம் யாரும்!
முதலில் –
மாட்டுக்கறி குழம்பு கொதித்ததும்
ஆரிய பவன்தான்.

ஆம்பூர் பிரியாணி எல்லாம்
அப்புறம்;
அய்யர் பிரியாணிதான் – சரித்திரம்;
அவாளைப் பார்த்தாலே
ஆடு, மாடுகள்
சரித்திரப் பயத்தில் ஓடிடும்.

புல்மேயும் இளம் கன்றுக்குட்டியை
எப்படியெல்லாம்
நம் பல் மேயவேண்டும் என்று
பாடி வைத்திருக்கிறான் யாக்ஞவல்கியன்.
அது மனுதர்மமா
இல்லை இல்லை
பார்ப்பன ருசியின் ‘மெனு தர்மம்’.
பார்ப்பனப் பசிக்குப் பலியான
கணக்கற்ற
நம் கால்நடைகளுக்காகவும்
நாம் பழிதீர்க்க வேண்டும் பார்ப்பனியத்தை.

அன்று:

ஊரான் மாட்டை
அவாள் ஓசியில் தின்றது
உபச்சாரம்;

இன்று:
உழைத்திடும் மக்கள்
காசுக்கு கறி வாங்கித்  தின்றால்
அபச்சாரம்! அபச்சாரம்!

அவாள்
சாராயம் குடித்தால்
அது தூத்தம்;

நம்மாள் குடித்தால்
நாத்தம்.

  – துரை. சண்முகம்

  1. ‘சுரா’டாஸ்மாக்கும், அய்யர் அய்யங்கார் மாட்டு பிரியாணியும் எங்கள் கண்டுபிடிப்பு என்று”அவாள்” ராயல்ட்டி கேட்க்காமலிருந்தால் சரி…?

  2. அந்த காலத்தில் தின்னே ஒழித்தான்
    இந்த காலத்தில் தின்னக் கூடாதுன்னு ஒழிக்கிறான்
    இரண்டு வகையிலும் கால்நடை இனத்தையே
    ஒழிக்கப் பாக்குறான்
    இன்னும் விட்டா எதையும் செய்யப்
    பாப்பான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க