ஹாலிவுட்: பிரம்மாண்டமான பொய்! கவர்ச்சிகரமான ஆக்கிரமிப்பு!!
ரத, கஜ, துரக பதாதிகளுடன் வருகிறார்கள். இராணுவ ஆக்கிரமிப்புக்கு முப்படை; சதிக்கு சி.ஐ.ஏ.; துரோகத்திற்குத் தன்னார்வக் குழுக்கள்; பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு ஆறாவது படையாக- ஹாலிவுட்.
Mad City (1997) பேனைப் பெருமாளாக்கும் செய்தி ஊடகங்கள்!
ஊடகங்களின் வணிக வெறி எப்படி ஒரு அப்பாவியை அலைக்கழித்து அவனது இயல்பான பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக மாற்றி மக்களை முட்டாளாக்கியது என்பதை அழுத்தமாகப் பேசுகிறது கோஸ்டா கவ்ராசின் மேட் சிட்டி
நீரோ மன்னனுக்குப் போட்டியாக கலைஞானி கமல்ஹாசன்!
தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த கமல்ஹாசன், முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் 'ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை' பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்.
ரஜினிக்கு 240 கோடி, ராபர்ட் வதேராவுக்கு 300 கோடி…எப்படி?
விடை தெரியாத கேள்வி அல்ல. பதில் சொல்ல விருப்பமில்லாத வினா இது.
சல்மான் கானின் கொலைக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?
சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டு வாழவேண்டியவர்கள் சாமான்ய மக்களும் உழைக்கும் வர்க்கமும்ம்தான். சல்மான் கான் போன்ற பணக்காரர்கள் அல்ல என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னுமொரு உதாரணம்.
சக்ரவியூக் படப்பாடலை எதிர்த்து முதலாளிகள் ஆவேசம்!
இது நக்சலைட்டுகள் குறித்த ஒரு தெலுங்கு மசாலாப் போன்றதுதான். புரட்சியை ஆதரிக்கும் படமல்ல. எனினும் முதலாளிகளால் இந்தப்பாடல் வரிகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
6000 குழந்தைகள் கொலையும் சூர்யாவின் இதயத் துடிப்பும்!
சூர்யாவைப் போலவே நாமும் கொஞ்சம் ஜிவ்வை ஏற்றிக்கொள்ளலாமே என இந்திய பிறப்பு-இறப்பு-வயது விவரங்களை தேடி படிக்க முயன்றோம். அப்போது நமக்கு கிடைத்த தகவல்கள் திடுக்கிட வைத்தன
மணிரத்னம் கைதாக தன்னார்வக் குழுக்கள் போராட்டம் நடத்துமா?
கடலின் நாயகி துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.
சிவாஜி கணேசன்: ஒரு நடிப்பின் கதை !
சிவாஜியைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார். நாம் அதை மறுபரிசீலனை செய்வோம்
இதுதான்டா ”மைனர் குஞ்சு”களின் இந்தியா….!
அன்று ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு நேரம். ஆந்திர போக்குவரத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாறுமாறான வேகத்துடன் ஒரு டாடா சஃபாரி வண்டி வந்துக் கொண்டிருந்தது.
யூ டூ புரூஸ் வில்லிஸ்???
அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை!
திருட்டுத் ‘தாண்டவம்’ !
எந்த நாளிதழ் அல்லது பத்திரிகைகளிலும் இது குறித்த செய்தி, ஒரு துணுக்காகக் கூட இதுவரை வரவில்லை. அப்படி செய்தி வரக் கூடாது என்பதற்காகவே தாண்டவம் பட விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் வாரி வழங்கப்பட்டுள்ளன
சுந்தரபாண்டியன்: உசிலம்பட்டி வழக்கா, தேவர் சாதி அழுக்கா?
தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் "பாண்டியன்"’ என்ற சொல், ரசிக இலக்கு யார் என்பதை கோடிட்டுக் காட்ட... முதல் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம் என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.
அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!
ஊழலற்ற இந்தியாவை உருவாக்க தன் உடல், பொருள், ஆவி என சகலத்தையும் அர்ப்பணிக்க அமலா பால் முன் வந்திருக்கிறார்
அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!
செல்வராகவன் இயக்கத்தில் ஜார்ஜியாவில் நடந்த இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் அனுஷ்கா செய்த காரியம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி.
























