privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!

அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும்!

-

கால-பைரவர்யக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படம் ‘இரண்டாம் உலகம்’. ஆர்யாவும், அனுஷ்காவும் ஜோடியாக இப்படத்தில் நடிக்கின்றனர். இதற்கான படப்பிடிப்பு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள் ஜார்ஜியாவில் நடந்தது. அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தெரியவரும் போது ஜெயமோகன் வயிற்றில் பால் வெள்ளம் பொங்குவது உறுதி.

படப்பிடிப்பு சமயத்தில் ஜார்ஜியாவை சேர்ந்த தெரு நாய் ஒன்று, யூனிட் ஆட்கள் எங்கு சென்றாலும் கூடவே சென்றிருக்கிறது. எனவே அனைவருக்கும் நண்பராகவும் மாறியிருக்கிறது. ஒருநாள் யூனிட்டை சேர்ந்த ஒருவர், தனக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டுவிட்டு, தன் வாயை டிஷ்யூ பேப்பரால் துடைத்து தூர எறிந்திருக்கிறார். இதைப் பார்த்த அந்த நாய், ஓடிச்சென்று அந்த டிஷ்யூ பேப்பரை கவ்வி சாப்பிட ஆரம்பித்திருக்கிறது.

உடனே அனுஷ்கா, பதறி விட்டார். டிஷ்யூ பேப்பரை சாப்பிட்டால், நாயின் உடல்நலம் பாதிக்கும். பேதியாகும். எனவே ஓடிச்சென்று நாயின் வாயை பற்றி திறந்திருக்கிறார். அத்துடன் தன் கையை நாயின் வாயில் விட்டு அந்த டிஷ்யூ பேப்பரை முழுமையாக எடுக்க முயன்றிருக்கிறார். நாய்க்கு இது பிடிக்கவில்லை. கேவலம் ஐந்தறிவு படைத்த உயிரினம்தானே? எனவே எங்கே தன் உணவை பறிக்க அனுஷ்கா முயல்கிறாரோ என்று நினைத்து கோபத்துடன் அவர் கையை கடித்து விட்டது.

அனுஷ்கா அசரவேயில்லை. வசிஷ்டரில் ஆரம்பித்து ரமணர் வரை சகல ஞானிகளும் அருள்வாக்கு வழங்கிய இந்துஞான மரபின் ஜீவகாருண்யத்தை அல்லவா உண்டு செறித்து வாழ்கிறார்? எனவே நாய் கடியையும் தன் பல்லைக் கடித்தபடி பொறுத்துக் கொண்டார். முழுமையாக டிஷ்யூ பேப்பரை நாயின் வாயில் இருந்து எடுத்த பிறகே தன் கையை வெளியே எடுத்தார். நாயை காப்பாற்றிய திருப்தி அவர் முகத்தில் தெரிந்தது. இதன் பிறகு நாய் கடித்ததால், தொடர்ந்து மூன்று நாட்கள் அனுஷ்கா ஊசி போட்டுக் கொண்டது தனிக்கதை.

ஒரு தெருநாய் அதுவும் சினிமா யூனிட்டின் எச்சில் பருக்கைகளை உண்டு வாழும் நாயின் கடியை பொறுத்துக்கொண்டு அனுஷ்கா செய்திருப்பது சாதாரணமான செய்கையல்ல. தனது வீட்டு நாயைக் குளிப்பாட்டவில்லை என்று வீட்டு டிரைவரை அடித்தும் பிற்காலத்தில் ஹைதராபாத்தின் ப்ளூ கிராஸ் தலைவராக உயர்ந்த முன்னாள் நடிகை அமலாவின் செய்கையோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டிய ஒன்றுதான் அனுஷ்காவின் தியாகம்.

அனுஷ்காவின் இந்த தியாகத்தை உள்ளது உள்ளபடி புரிந்து கொள்ளும் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா இந்த உலகில் ஜெயமோகன் மட்டுமே என்பது நமது உறுதியான கணிப்பு. மாறுபடுபவர்கள் ஆதாரங்களை காண்பிக்கலாம்.

இந்தியாவில் இலட்சியவாதத்தின் மறைவு குறித்து அடிக்கடி துக்கப்படுபவர் ஜெயமோகன். இலட்சியவாதம் என்றால் என்ன என்று ஜெயமோகன் அளவுக்கு அறிவில்லை என்றாலும் வாசகருக்காக ஒரு இலக்கணம் தர முயற்சி செய்கிறோம். அதாவது கறாரான விழுமியங்களுடன், புற உலகு பேதமிட்டு பிரிந்தாலும், அர்ப்பணிப்புடன் வாழும் இலட்சியவாதிகளின் அரசியல், சமூக, ஆன்மீக நடைமுறைகள்தான் இலட்சியவாதம். இந்த இலட்சியவாதிகள் அநேகமான எல்லா நிறுவனங்களோடும் முரண்பட்டாலும் தமது இ.வாதத்தை விடமாட்டார்கள்.

ஆனாலும் இந்த இலட்சியவாதிகள் கையெடுத்து கும்பிடும் வண்ணம் வரலாற்றின் பக்கங்களுக்குள் மட்டும்  ஒளித்து வைக்கப்படுவதாக ஜெயமோகன் வருந்துகிறார். அண்ணா ஹசாரேவின் எழுச்சியும், பிறகு வீக் எண்ட் புரட்சியாளர்கள் அவரைக் கைவிட்டதும் அவருக்கு பெரும் துக்கத்தை கொடுத்திருக்கிறது. அதே போல குஜராத்தில் அமுல் ராஜ்ஜியத்தை கட்டியமைத்த குரியனின் மறைவும் அவரை சொல்லணாத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இடையில் ஜெயமோகன் அன்புடனும், ஆன்மீக அர்ப்பணிப்புடனும் வளர்த்த ஹீரோ எனும் நாயும் சமீபத்தில் இறந்திருக்கிறது.

ஆனால் இந்த நாயின் சோகத்திலிருந்தும், இலட்சியவாதத்தின் மறைவு குறித்தும் இனி ஜெயமோகன் வருந்தத் தேவையில்லை. இரண்டின் அறத்தையும் வியப்பூட்டும் விதத்தில் அனுஷ்கா உயிர்ப்பித்திருக்கிறார்.

அனுஷ்கா அடிப்படையில் ஒரு யோகா டீச்சர் என்பது ஒரு முக்கியமான விசயம். அதன்படி ஜெயமோகன் மட்டுமே விளக்கும் அருகதை கொண்ட பதஞ்சலி யோக சூத்திரத்தை கற்று செரித்த ஒரு ஞானம் அனுஷ்காவிடம் உண்டு. அதனடிப்படையிலேயே தனது கட்டழகை பராமரிப்பதோடு பிரபல தமிழ் வலைப்பதிவர்கள் உள்ளிட்டு மிகப்பெரும் இரசிகர்களையே கட்டிப்போட்டிருக்கிறார். தென்னிந்தியாவின் இப்போதைய நடிகைகளில் ஏன் இந்திய அளவில் கூட அவரது அழகுக்கும் அறிவுக்கும் ஈடான ஒருவர் கிடையாது என்பது சத்தியமான உண்மை.

அத்தகைய அனுஷ்கா ரசிய நாட்டிலே ஒரு தெருநாயின் கடியைப் பொறுத்துக் கொண்டு அதைக் காப்பாற்றியிருக்கிறார் என்றால் இதைக் கேள்விப்படும் ரசிகர்கள் அதன்படி தங்களது தெருநாய்களை காப்பாற்ற துணிவார்கள் என்பது நிச்சயம். இப்படி நடிகையாக இருந்தாலும் ஒரு ஞானப்புரட்சியை, ஜீவகாருண்யத்தை தனது இமேஜை வைத்து பரப்புகிறார் என்றால் இந்தியாவில் இலட்சியவாதம் ஏன் மறைய வேண்டும்? அதுவும் மற்றவர் காமக்கண்ணால் பறிக்கும் அழகைக் கொண்டிருப்பவர், அதையே நடிப்பு என சம்பாதிப்பவர் செய்யும் செயலா இது? கண்டவர் விண்டிலர்.

அனுஷ்கா, காப்பாற்றியது நாயை அல்ல. பைரவரை. அதுவும் கால பைரவரை. எனவே காலத்தை அழியாமல் அனுஷ்கா பார்த்துக் கொண்டிருக்கிறார்… என்று அர்த்தம் சொல்லி, இடம் சுட்டி பொருள் விளக்கி, குறியீட்டுடன் ஜெயமோகன் எழுதுவார் என மலையாள பகவதியின் மேல் சத்தியம் செய்வதும் கொலைக் குற்றமாகவே கருதப்படும்.

இவ்வளவு பெரிய மன நிம்மதியையும், எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நடிகை அனுஷ்கா, தனக்கு கொடுப்பார் என ஜெயமோகன் துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டார். அவரையே நம்பி இயங்கும் ‘விஷ்ணுபுர வாசகர் வட்டம்’ கூட தராத பரிசு இது. என்ன செய்ய, அவரது மொழியில் சொல்வது என்றால், தற்செயலாக நிகழ்பவைதானே வரலாற்றை எழுதுகிறது?

கமான் ஜெயமோகன், உங்களது விசைப்பலகையை தட்டுங்கள்! அறம் வரிசையில் அனுஷ்காவின் நாய்க்கடியை மகுடமேற்றும் மந்திரசக்தி உங்கள் கைகளுக்குத்தான் உண்டு!

ஜெய் ஹிந்த்!

_____________________________________________________________

படம் – காலபைரவர் வாயில் பிரசாதம் வைத்து, எடுக்கும் பக்தை படஉதவி கூகிள்

______________________________________________________

  1. அனுஷ்காவின் நாய்கடியும் ஜெயமோகனின் இலட்சியவாதமும் வினவின் மொக்கைக்கட்டுரைகளும்!

  2. சாப்பிடும் நாயின் வாயிலிருந்து புடுங்கினால் அதுவும் புடுங்கும் என்பது நியதி.. அனுஷ்காவும் பதிலுக்குப் பிடுங்கியிருந்தால் அறம் பற்றிய கேள்விகள் எழலாம்.. அது சரி, அனுஷ்காவுக்கு நாயின் நல்வாழ்வின் மீது ஏற்பட்டுவிட்ட அக்கறைக்கும் காலபைரவருக்கும் என்ன சம்பந்தம்..?! யோகா பயிற்சியாளி என்று ஆரம்பித்து யோகம், ஞானம் வழியாக ஜெயமோகனை சீண்டுவதற்குத்தானா..?! அணு உலை எதிர்ப்புக்கு அடுத்து அனுஷ்காவுக்குத் தாவி வீட்டீர்களே, அன்னிய முதலீட்டை சில்லறை வர்த்தகத்தில் அனுமதிக்க மத்திய அமைச்சரவை முடிவு பண்ணிட்டாங்களாமே.. அதை பத்தி ஏதாச்சும் எழுதுங்களேய்யா..!

  3. நம்மவர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி. 🙂 நீங்கள் அவவப்பொழுது இப்படி நவீன இலக்கியவாதிகளை பற்றி எழுதுங்கள் வினவு. அவர்களை பற்றி சீரியசாக எழுதுவது ஒருவகை. அவர்களின் அற்பவாதத்தை நையாண்டியோடு எழுதுவது மற்றொரு வகை.

  4. எப்படி இருந்த வினவு இப்படி ஆயிடிச்சே. ரொம்ப பரிதாபமாக இருக்கிறது.

    ஈஸ்வரன்

  5. ஜெயமோகன் சாதாரணமான ஜீவகாருண்ய சிகாமணி அல்லே சாரே,இந்த மானுட குலமே அவர் கருணையால்தான் பிழைத்திருக்கிறது சாரே.சந்தேகம் இருந்தா இந்த கதையை படிச்சுட்டு சொல்லுங்க. http://www.jeyamohan.in/?p=65 அவர் எய்ட்ஸ் நோய்க்கே மருந்து கண்டு புடுச்சுட்டாராம்.நேரா சொல்ல அவரு தன்னடக்கம் இடம் கொடுக்காம ”சோலை சித்தர்” பேர்ல கதையா சொல்லிருக்காரு.100 வருஷம் கழிச்சு இந்த மனித இனம் அழிஞ்சு போகாம காப்பாத்துன அவரு நிச்சயம் அனுஷ்க்காவின் ஜீவகாருண்யத்தை பாராட்டாமா இருப்பாரா.

    அதுல பாருங்க உள்ளொளி போக சித்தர் சிறுநீரை கலந்து எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கொடுத்தார்ன்னு பினாத்துது .மாட்டு மூத்திரத்தை வைத்து குளிர்பானம் செய்யும் ஆர்.ஸ்.ஸ்.ல பாடம் பயின்ற மூளை இப்படி கிறுக்குத்தனமாகத்தான் சிந்திக்கும்.சிறுநீர் என்பதே கழிவுப் பொருள் என்பதும் உடம்புல இருக்கிற நோயின் கிருமிகள் அதில் கலந்து வெளியேறி பரவும் என்பதெல்லாம் உள்ளொளியில் தெரியாதோ.

    • // மாட்டு மூத்திரத்தை வைத்து குளிர்பானம் செய்யும் ஆர்.ஸ்.ஸ்.ல பாடம் பயின்ற மூளை இப்படி கிறுக்குத்தனமாகத்தான் சிந்திக்கும்.சிறுநீர் என்பதே கழிவுப் பொருள் என்பதும் உடம்புல இருக்கிற நோயின் கிருமிகள் அதில் கலந்து வெளியேறி பரவும் என்பதெல்லாம் உள்ளொளியில் தெரியாதோ.//

      புனுகுப் பூனையின் விட்டையை கலந்து பல வகை மருந்துகள் தயாரிக்கும் சித்த மருத்துவர்கள் யாரிடம் பாடம் பயின்றார்கள்..?! சிறுநீரில் நோய்க் கிருமிகள் இருப்பதுதான் பிரச்சனை என்றால் கொதிக்க வைத்து குடித்தால் ஓ.கே.யாக்கும்..?!

      பாலில் பூண்டு, கஸ்தூரி, 2 சொட்டு மண்னெண்ணை ஊற்றிக் குடித்து வந்தால் உங்கள் வயிற்றெரிச்சல் குணமாகும் என்று ஏலமலைச் சித்தர் எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார்.. ஏடாகூடமா ஏதாவது ஆகிப்போனா நான் பொறுப்பல்ல..

  6. Mr. Mokkai Anbu,

    I myself have got rid of jaundice at a very young age by getting treated in Ayurveda & Siddha.

    But thank for giving us a great article,

    I think it is time to put muzhukku to vinavu and read jeyamohan alone.

    • ஹரி, எங்களால குணப்படுத்த முடியாத பைத்தியங்களெல்லாம் கடசீயில போய் சேருகிற தாய்வீடு ஜெயமோகன்வாடிதான். அங்க இந்த மாதிரி அன்பான வைத்தியமெல்லாம் கிடையாது இரும்பு சங்கிலியில கட்டி போட்டுடுவாங்க, முணகறத்துக்கு கூட அங்க புண்ணூட்ட பொட்டி கிடையாது.

  7. வினவு அனுஷ்காவின் ரசிகர் என்பதை சொல்வதற்கு இப்படி ஒரு கட்டுரை தேவையா?.
    ஷில்பா ஷெட்டி போல் அனுஷ்காவும் யோகா டிவிடி வெளியிட்டிருக்கிறாரா.
    வெளியிட்டால் அதை வினவு வெளியிட ஜெமோ பெற்றுக்கொள்வது பொருத்தமாக இருக்கும்தானே.
    திகவின் குற்றாலாம் பெரியாரியல் முகாமில் தினமும் காலை 1 மணி நேரம் யோகா பயிற்சி சொல்லித் தருகிறார்கள் என்று விடுதலையில் வந்த நிகழ்ச்சி நிரலில் படித்தேன்.அனுஷ்கா பயிற்சியாளர் இல்லை என்பதால் வினவு அதை புறக்கணிக்க கூடும்.எனினும் திகவினர் கூட யோகாவை ஏற்றுக்கொள்கிறார்களே அதைப் வினவு ஏற்றுக்கொள்கிறாரா.அனுஷ்காவின் படத்தைப் போட்டே இதை எழுதியிருக்கலாம், காலபைரவரின் படத்தை போட்டிருக்க வேண்டாம்.

  8. பத்திரிக்கையாளன் காமெடியன் சோ சொல்வது போல் பல விஷயங்கள் இந்தக் கட்டுரையில் எனக்குப் புரியவில்லை. (பல வருடங்களுக்கு முன் அறிவாளிகள் மட்டுமே படிக்கக் கூடிய பத்திரிக்கையான “துக்ளக்”கை படிக்கக்கூடிய வாய்ப்பு எதேட்சையாக எனக்கு ஏற்பட்டது. (பொது நூலகத்தில் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது). அதில் அண்ணாயிசம் என்றால் என்ன என்று ஒரு கேள்விக்கு பதில் தரும் போது காமெடியன் சோ இவ்வாறு பதில் கூறியிருப்பார்: “அண்ணாயிசம் என்பது பல முறை படிக்கத் தூண்டும் ஒரு புத்தகம். ஏனெனில் அதை எத்தனை முறை படித்தாலும் ஒன்றும் புரியாது.”
    அதைப் போல் இக்கட்டுரையிலும் சில விஷயங்கள் எனக்கு புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. அதில் ஒன்று – நாயின் வாயிலிருந்து டிஸ்யூ பேப்பரை எடுப்பதற்கும் கால பைரவரின் வாயில் பிரசாதத்தை வைத்து மெழுகுவதற்கும் உள்ள தொடர்பு

    “கறாரான விழுமியங்களுடன், புற உலகு பேதமிட்டு பிரிந்தாலும், அர்ப்பணிப்புடன் வாழும் இலட்சியவாதிகளின் அரசியல், சமூக, ஆன்மீக நடைமுறைகள்தான் இலட்சியவாதம். இந்த இலட்சியவாதிகள் அநேகமான எல்லா நிறுவனங்களோடும் முரண்பட்டாலும் தமது இ.வாதத்தை விடமாட்டார்கள்” – இதற்கான தமிழ் விளக்கத்தை ஜெயமோகனிடம் தான் கேட்க வேண்டுமா?

  9. I always thought that you espouse alternate ideology to the present corrupt politics. After reading this stupid story i feel that you are like our cinema obsessed tamilnadu polticians. What has this cinema actress got to do with Jeyamohan. I read his article and he has forcefully argued his case which may not be palatable to you. But you don’t provide counter arguement but instead indulge in character assassination. If you feel correct about your ideology you should substantiate your arguement logically with the point of view of larger good of the people. Don’t bring this wretched rotten cinema politics . Cinema has destroyed tamilnadu for which these rotten tamil political leaders are responsible. Let tamilnadu be liberated from cinema poltics-sundaram

  10. ஐயா வினவு !

    நாட்டுல ஆயிரம் பெரும்பிரச்சனைகள் போயிட்டு இருக்கும் போது சீந்துவார் இல்லாம அம்போ நு இருக்குற டம்மி பீசையெல்லாம் பத்தி கட்டுரை எழுத வேண்டிய அவசியம் என்ன ?.. ஜெயமோகனே ஒரு டுபாக்கூர் .. அது அந்த ஆளுக்கும் தெரியும்.

    ஏற்கனவே இப்படித்தான் ஸ்ரேயா கோஷல் பத்தி ஒரு வெட்டி மொக்கையப் போட்டீங்க … இப்போ ஜெயமோகனா ?..

    இனிமேலாவது இப்படி நேரத்த வீணடிக்காதீங்க ..

    காலம் பொன் போன்றது .. கடமை கண் போன்றது …

  11. வினவில் இப்படிப் பட்ட கட்டுரைகள் வெளியிடவேண்டியதில்லை என்பது என் கருத்து. ஜெயமோகன் இப்படி அனுஷ்காவைப் பற்றி எழுதியிருந்து அதற்குப் பதில் நீங்கள் கொடுத்திருந்தால் கூடப் பரவாயில்லை. அவர் அப்படி எதுவுமே எழுதியிராத நிலையில் நீங்கள் இப்படி கற்பனை செய்து எழுதுவானேன்.
    நீங்கள் வெளியிடும் ‘செய்திகள்’ பகுதி செய்திகளையும் அதன் பின்னுள்ள உண்மையையும் அலசுவது நல்ல விஷயம் (வின் டி.வி.யின் செய்தியும் நிஜங்களும் இதைச் செய்யும் ஒரு நல்ல நிகழ்ச்சி). செய்தியின் மாயைகளில் உழலும் மக்களுக்கு தேவையானதும் கூட.
    ஆனால் தேவையில்லாமல் ஒன்றை இப்படி இட்டுகட்டி கற்பனை செய்யத் தேவையில்லை என்பது என் கருத்து.
    வினவின் தரம் இதில் இறங்கிவிட வாய்ப்பிருக்கிறது.
    இதைத் தவிருங்களேன். ப்ளீஸ்..

  12. அரசியலும் இல்லை,பகடியும் இல்லை இந்த கட்டுரையில். மொக்கை. ஜெயமோகனின் ஊட்டி நாரயண குருகுலத்தை பற்றி ஆய்வு செய்து எழுதுவதாக ஒரு சவால் விடப்பட்டது. எப்போது ஆய்வு செய்து எழுதுவீர்கள்? கழக கட்சிகள் பாணியில் சவால் விட்டுவதோடு மறப்பது தான் உங்கள் நடைமுறையா?

    https://www.vinavu.com/2012/05/18/nithyananda-madurai-pontiff-issue-6/#tab-comments
    ” வினவு May 19, 2012 at 5:11 pm   

    நாராயணகுரு பெயரில் நடக்கும் ஊட்டி குருகுலத்தில் முக்கியமானவர்கள் இடைக்கிடையே அமெரிக்கா, ஆஸ்திரேலியா சென்று பணிபுரிந்தவர்களென்று தெரிகிறது. ஏன் தொடர்ந்து குருகுலத்திலேயே தங்கி மாடு மேய்த்து வாழ முயலவில்லை என்று தெரியவில்லை. இருந்தாலும் அண்ணா ஹசாரேயின் ராலேகான் சித்திக்கு சென்று அவரது ‘புரட்சியை’ தரிசித்தது போல இந்த குருகுலம் இருக்கும் கிராமத்திற்கு நேரில் சென்று மக்களை சந்தித்துவிட்டு எழுதுகிறோம்.”

  13. சாக்கடையைச் சுத்தம் செய்ய அதில் இறங்கித்தானாக வேண்டும். அனுஷ்காவை காலபைரவர் கவ்விய கதையை ஜெமோ நீட்டு முழக்கி இலக்கியமாக்குவதற்குள் முந்திக்கொள்வது நல்லதுதான். இல்லையென்றால் தமிழிலக்கிய உலகில் அதுவுமொரு அத்தியாயமாகப் பதிந்து கிடக்கும். இனிமேல் ஜெமோ அனுஷ்காதேவியைக் காலபைரவன் கவ்விக்கொண்ட கதையை நிச்சயம் எழுதமாட்டார் என்று எதிர்பார்க்கலாம். எதிர்பார்க்கலாமா?

  14. ஜெமோவைப் பற்றி எழுதியவுடன் நிறைய அம்பிகள் பொங்கி எழுந்துவிட்டார்கள்.அது தான் இந்த கட்டுரையின் வெற்றி.கால பைரவன் மீது நிறைய பேருக்கு பயம் போல் தெரிகிறது.பைரவன் என்றால் நாய்.காலத்துக்கும் நாய்க்கும் என்ன சம்பந்தம்?இதைப் பற்றி புராண புருடாக்கள் எதேனும் உண்டா? கையோடு அதையும் அம்பிகள் சித்தே சொல்லிட்டால் தேவலாம்.குழப்பம் இல்லாமல் போய்விடும்.ஹி..ஹி..ஹி.

    • நாய்க்கு பைரவன், ஆட்டுக்கு ராமு, மாட்டுக்கு லட்சுமி, குரங்குக்கு மாருதி என்று பெயர் வைப்பது தமிழ்த் திரைப் பட மரபாகும்.. காலபைரவரின் வாகனமாகத்தான் நாயை புராணங்கள் காட்டுகின்றன.. ஒருவேளை காலபைரவருக்கு (சிவபெருமானின் ஒரு உக்கிரப் பிரதி) விசுவாசமான ஏவல் நாயாக காலம் செயல்படுகிறது என்பதன் குறியீடாக நாய் வாகனமாயிருக்கலாம்.. செல்வத்துக்கு அதிபதியான குபேரனுக்கு மனித வாகனம் என்பதும் ஒரு பொருத்தமான குறியீடு, பணத்துக்கு அதன் மீது பேராசை கொண்ட மனிதனை விட வேறு பொருத்தமான வாகனம் கிடைக்காதே.. அனுஷ்காவின் காருண்யத்தைப் போல் எதிர்பாராத நேரங்களில் தன்னலத்தையும் மீறி வெளிப்படும் மனிதத்தன்மை எல்லோரிடமும் மறைந்துகிடக்கிறது.. நம்மில் பலரிடமும் அது அடிக்கடி வெளிப்படுவதால்தான் குபேரன் எல்லா மனிதர்கள் மீதும் ஏறி வண்டி ஓட்டமுடிவதில்லை.. குழப்பம் தீர்ந்ததா, அதிகரித்துவிட்டதா என்று கணிக்கமுடியாததால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்..

  15. காலம் தெரிகிறது.சிவன் தெரியவில்லையே. நாய் தெரிகிறது.ஏவல் நாய் தெரியவில்லை.எப்போதாவது வெளிப்படும் மனிதத்தன்மைய்யை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லையே.குபேரன் தீயவனா?அப்படிஆனால் குபேர கடாட்ஷம் பெற்ற பணக்காரர்கள் எல்லாம் தீயவர் தனே.ஜெமோ ஏழையா பணக்காரரா, நல்லவரா,தீயவரா?

    • // காலம் தெரிகிறது.சிவன் தெரியவில்லையே //

      சந்தானம்.. சந்தானம்..

      // நாய் தெரிகிறது.ஏவல் நாய் தெரியவில்லை. //

      சொன்ன பேச்சு கேட்காத நாயிடம் சாக்கிரதையாக இருக்கவும்..

      // எப்போதாவது வெளிப்படும் மனிதத்தன்மைய்யை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லையே. //

      வெளிப்படுகிறது என்ற நம்பிக்கை முக்கியம் அல்லவா…

      // குபேரன் தீயவனா?அப்படிஆனால் குபேர கடாட்ஷம் பெற்ற பணக்காரர்கள் எல்லாம் தீயவர் தனே. //

      ஊதியமாகவோ, பரிசாகவோ கொடுக்கும் போது நல்லவன்.. அடிமை சாசனம் வாங்கிக் கொண்டு கொடுக்கும் போது தீயவன்..!

      // ஜெமோ ஏழையா பணக்காரரா, நல்லவரா,தீயவரா? //

      பிழைக்க தெரியாத ஒரு நல்ல மனிதர், மேதை என்பது கற்றறிந்தோர் கருத்து…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க