அடிக்கடி சிறைக்கு வருவோம் !
சிறைக்கு பலமுறை சென்றுள்ளதால் வீட்டில் ஒரு புரிதல் உள்ளது. எனக்கு இரண்டு பெண்பிள்ளைகள். தோழர்கள் தான் கவனித்துக் கொண்டார்கள். மக்களுக்காக போராடுறோம். போராளிகளுக்கு மக்கள் தான் பாதுகாப்பு.
கோக் பெப்சியோடு பவண்டோவையும் எதிர்ப்பது சரியா ?
காளிமார்க் குடிப்பதால் வரும் உடல்நலக்கேட்டை, அமெரிக்க கோலாக்களால் வரும் சமூக – பொருளாதார – அரசியல் கேட்டோடு துளி கூட ஒப்பிட முடியாது.
சுத்தியால் அடித்துத்தான் முதலாளி எங்களை எழுப்புவார் !
இவர்களது வேலை ஜீன்ஸ் துண்டுகளை கத்தரித்து அதை பேக் செய்வது. பத்து நிமிடத்தில் பத்து எண்ணிக்கை. இதில் கடைசியாக முடிப்பவருக்கு சுத்தியல் அடி கட்டாயம்.
தடுப்பூசி உதவியுடன் மக்கள் தொகையை குறைக்க விரும்பும் பில்கேட்ஸ்
2009-இல் கனடாவில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்ட போது டெட்டனஸ் தடுப்பூசி பரந்த அளவில் போடப்பட்டதால் 65% பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் தற்போது பன்றிக் காய்ச்சல் பரவியுள்ள நேரத்தில் பாரிய அளவிலான தடுப்பூசி இயக்கம், பெரும்பான்மையான குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கும்.
இராம அடையாளமும் தலித்துக்களின் நூற்றாண்டு துயரமும்
“என்னுடைய சாதியை வைத்து மக்கள் என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. உடலில் பச்சைக் குத்திக்கொள்ளும் நடைமுறையில் எனக்கு நம்பிக்கையில்லை.
திருச்சியில் உழைக்கும் மகளிர் தினக் கருத்தரங்கம் – அனைவரும் வருக !
வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர்தினம். ஆனால், இன்றைய சமூகத்தில் பெண்ணின் நிலையென்ன ? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணுர் ரித்திகா, பெங்களூர் விமானப்பணிப்பெண், நடிகை பாவனா...
வயக்காட்ட பாத்த எவனும் சோத்துல கை வைக்க முடியாது !
விவசாயி வீட்டு எருக்குழி, கட்டுத்தறி, வைக்கப்போரு இதப்பாத்து பொண்ணுக் கூடுன்னு சொல்லுவாங்க. அப்புடி பெருமையோட வாழ்ந்தவன் விவசாயி. இன்னைக்கி தரிசா கெடக்குற நெலத்த பாத்தா நாண்டுகிட்டு சாகலாம் போலிருக்கு
கோவில்பட்டி தரை டிக்கெட் கல்லூரியில் இருக்கைகள் வந்தது எப்படி ?
முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் தரையில் உட்கார்ந்துதான் படிக்கின்றனர். விளையாட்டு மைதானம் கிடையாது. விளையாட்டுக் கென்று உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. கலை விழாக்கள் கிடையாது. கேண்டீன் கிடையாது.
ஜல்லிக்கட்டு வில்லன்களான போலீசை பாராட்டும் மார்க்சிஸ்ட் ‘புரட்சி’யாளர்கள் !
ஜல்லிக்கட்டு வெற்றிவிழா குழு என்ற பெயரில், பிப்.25ம் தேதி, தூத்துக்குடி SAV மைதானத்தில் பாராட்டுவிழா நடத்தப்பட்டது. CPM கட்சியின் மாணவர் அமைப்பான SFI யும் அவர்களின் வங்கி ஊழியர் சம்மேளனமும் இணைந்து இந்த வெற்றிவிழாவை நடத்தின.
சீர்காழியில் இருப்பது அரசு போலீசா குற்றவாளி ஜெயாவின் போலீசா ?
ஜல்லிகட்டு போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியதை கண்டித்து நடைபெற இருந்த போராட்டத்திற்க்கு காவல்துறை அனுமதி மறுப்பு குற்றவாளி ஜெயா சமாதியை அகற்றகோரி சுவரொட்டி ஒட்டியதால் மக்கள் அதிகாரம் தோழர்கள் இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது
பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா
கேட்ஸ் ஃபவுண்டேஷன் நிதியுதவியில் நடத்தப்பட்ட கருப்பை புற்று நோய்க்கான மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி கிளினிக்கல் டிரையல் ஆந்திர, குஜராத் மாநிலங்களின் ஏதுமறியா ஏதிலிகளான 24,000 பழங்குடிப் பெண்குழந்தைகளுக்கு வழங்கியதால் உருவான பேரழிவுஅறிவியல் சமூகத்தையே குலைநடுங்கச் செய்தது.
தமிழ்நாட்டிற்கு தட்டம்மை – ரூபெல்லா தடுப்பூசி திட்டம் அவசியமா ?
15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசி குறித்து அவர்களுக்கே விளக்கமளித்து ஊசியையும் போட்டுவிடும் நிகழ்வுகள் உலகில் எங்காவது நடந்ததுண்டா?
இந்தியாவின் குப்பைக் கிடங்கில் மக்கள் வாழ்க்கை
”எனது கையைப் பாருங்கள்.. எப்படி நாற்றமடிக்கிறது. அவரெல்லாம் எனது கைகளைப் பிடித்துக் குலுக்குவாரா?” ஒரு பழிப்புச் சிரிப்புடன் குறிப்பிடுகிறான்.
நீட் தேர்வு – ஒரு சொந்த அனுபவம்
இணையம், அலைபேசி போன்ற மேல்மட்ட சேவைகளுடன் பெருமளவு பழக்கப்படாத, தினக்கூலி வேலைகளில் உள்ள ஒருவர் தனது மகனுக்கோ, மகளுக்கோ நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தைக் கண்டிப்பாக இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே முடிக்க இயலாது.
வறட்சி நிவாரணம் : காகிதத்தில் எழுதி நக்கச்சொல்லும் அரசாங்கம் !
தமிழக அரசு அறிவித்திருக்கும் பயிர் இழப்பீடு தொகையும், காப்பீடு தொகையும் கைக்குக் கிடைப்பதற்குள் விவசாயிகள் செத்துச் சுண்ணாம்பாகி விடுவார்கள்.