இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
விஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு மாட்டிகிணு சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.
டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்
ஜெயலலிதா சட்டையைக் கழட்டச் சொன்னால் வேட்டியையும் சேர்த்துக் கழட்ட தயாராயிருக்கும் சரத்குமார் வாழும் நாட்டில், ஜெயிலரின் உத்திரவை சட்டை செய்யாத மாணவர்களின் உறுதியான தன்மானத்தைப் பார்த்து வியந்து நின்றார்கள் வேடிக்கைப் பார்த்த விசாரணைக் கைதிகள்.
ஜெனியின் தனிமையை ஜெஸியால் மட்டும் தான் தீர்க்க முடிந்தது. இவளது சிறு வயது துணி மணிகளை ஜெஸிக்கு அணிவித்து அழகு பார்ப்பாள். விலை உயர்ந்த சென்ட் பாட்டில்களை ஜெஸியின் மேல் பீய்ச்சி அடிப்பாள். ஜெஸியோடு பேசிக் கொண்டிருப்பாள்; கதை சொல்வாள்; பாடிக் காட்டுவாள்; சில சமயம் ஆடிக் கூட காட்டுவாள்.
’’நாங்கள் டிக்கெட் இல்லாமல்தான் பயணம் செய்யப் போகிறோம். நீங்களும் வாருங்கள், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோம்...’’
ஒரு தும்மலுக்காக அல்லும் பகலும் புலம்பித் தீர்த்து, தன்னைத்தானே சித்திரவதை செய்து மாண்டு போன ஒரு அற்பவாதியைப் பற்றிய கதை இது. அது என்ன தும்மல் பிரச்சினை? கதையைப் படியுங்கள்...........
கன்னியாகுமரி கிராமத்தில் பிதுங்கி வழியும் சுற்றுலா லாட்ஜூகளுக்குப் பின்னால் கடலைத் தழுவி வாழ்ந்து கொண்டிருக்கும் வாவுத்துறை, கன்னியாகுமரி மீனவர் கிராமங்களுக்குப் போன அனுபவப் பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி வட்டம். வடக்கு அம்மாபட்டினத்தில் தமிழ்நாடு தவுஹீத் ஜமாத்தின் பிரச்சார பீரங்கியாக செயல் பட்டு வருபவர் பாஸ் (என்கின்ற) பாசித் மரைக்காயர்
ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்தில் 2,700 காட்சிகள்தான் சிறப்பு காட்சிகளாக எடுக்கப்பட்டன, அதைவிட ரா ஒன்னில் கிராஃபிக் காட்சிகள் அதிகம் என்று ஊடகங்கள் பீற்றுவதை வைத்து அந்த உலக மகா மொக்கை படத்தின் அபத்தத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
கூடங்குளம் அணு மின்நிலையம் எதிர்ப்பு போராட்டத்தை ஒடுக்குவதற்கு, அணு உலைகள் தொடர்பான பொய்களைப் பிரச்சாரம் செய்வது, போராட்டக் குழுவில் பிளவை உண்டாக்குவது, மதரீதியாக மக்களிடையே பிளவை ஏற்படுத்துவது, வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறது என அவதூறு செய்வது எனப் பலமுனைகளில் தாக்குதல் தொடுக்கப் படுகிறது
1947 ஆகஸ்ட் 15 அன்று நிகழ்ந்த அதிகார மாற்றத்துக்கு பின்னர், ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டு செல்லும்போது, நில வருவாய்க்கு அடுத்தபடியாகக் குடி மூலமான வருவாயே இந்தியாவில் இருந்தது. இன்றைய தமிழக அரசின் வருவாய் நிலையும் குடி வழியாக வரும் வருவாயை நம்பியே இருக்கிறது.
திணித்துக் கொண்டு வரும் பெட்டிகளுக்குள்ளிருந்து பிதுக்கித் தள்ளப்படும் பைகளுக்குப் பின்னே, வெளுத்துச் சிவந்த விழிகள் முளைக்கின்றன. இறக்கித் தள்ளப்பட்ட வேகத்தில் எந்தத் திசை என்று தெரியாமல் கால்கள் மரத்துப் பாதை மறக்கின்றன.
அமெரிக்காவின் அட்லாண்டா நகரத்தில் சிறுமிகளுக்காக நடத்தப்படும் அழகிப் போட்டி ஒன்றைப் பற்றி, செய்திப் படமொன்றை பி.பி.சி. ஒளிபரப்பியது