சவிதா இறந்தது வெறும் விபத்தல்ல அது உயிருக்கு துளிக்கூட முக்கியத்துவம் கொடுக்காமல் அரங்கேற்றப்பட்ட பச்சைப் படுகொலை. இக்கொலைக்கு துணை நின்ற கத்தோலிக்க மருத்துவர்கள் எப்படியும் இந்நேரத்திற்குள் பாவமன்னிப்பு கேட்டு புனிதம் அடைந்து இருப்பார்கள்! ஆமென்!
மஹ்மூத் தார்வீஷ் பாலஸ்தீனப் போராளி. இழந்த தாய்நாட்டை மீட்கப் போராடி வரும் எல்லா பாலஸ்தீன மக்களும் நேசித்த கவிஞரும் கூட.
உண்மையில் வன்னி அரசுக்கு கொஞ்சமாவது நேர்மை, நாணயம் இருக்கிறது என்றால் இதே அண்ணா நகருக்கு வந்து அவர் கூறும் ம.க.இ.க கிருஷ்ணனை காட்டட்டும் பார்க்கலாம். எப்போது வருகிறார் என்று தகவல் கூறினால் நானும் வருகிறேன். சவாலை ஏற்கத் தயாரா ?
தாழ்த்தப்பட்ட மக்களை சூறையாடி அவர்களின் பொருளாதாரத்தை கொள்ளையடித்த வன்னிய சாதிவெறி கும்பல் அந்த மக்களின் ஓலம் அடங்குவதற்குள்ளாக மீண்டும் சாதிவெறியை தூண்டிவிட கிளம்பியிருக்கிறது.
தனது வீழ்ச்சிக்கும், நஷ்டத்திற்கும் காரணம் மதிப்பிடும் டிஆர்பி கணக்கீட்டில் நடந்த மோசடிகள் தான் என்று பன்னாட்டு நிறுவனமான ஏ சி நீல்சன் மற்றும் அதன் கூட்டு நிறுவனங்கள் மீது நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறது என்.டி.டி.வி.
ராணுவப் படையினர் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் புகுந்து தங்கும் விடுதிகளை சுற்றி வளைத்து மாணவர்களைத் தாக்கியிருக்கின்றனர்.
வன்னி அரசுவின் கட்டுரைகளை கீற்று தளம் தொடர்ந்து வெளியிடுவதில் நமக்கு ஆட்சேபமில்லை. அவற்றை சிரிப்பூ என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்பது எம் பரிந்துரை.
பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள்.
தேனி ஸ்ரீ கிருஷ்ணையர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த ரத்தினபாண்டி தாழ்த்தப்பட்ட மாணவர்களை சாதிப் பெயர்சொல்லி அழைத்து தன் ஆதிக்க ஜாதித் திமிரை தொடர்ந்து நிலை நிறுத்தி வந்ததன் விளைவே இக்கவிதை.
தருமபுரி தலித் மக்கள் மீதான வன்னிய சாதிவெறியர்களின் காட்டுமிராண்டித்தாக்குதல் – கண்டன ஆர்ப்பாட்டம், நாள் : 29.112012, வியாழன், மாலை 4 மணி. இடம் : மெமோரியல் ஹால், சென்னை.அனைவரும் வருக!
நல்ல கவிதைகள் கவிதைகளாத்தான் எழுதப்பட வேண்டுமென்பதில்லை. அது போராட்டத்திலிருக்கும் வாழ்க்கையிலிருந்தும் பிறக்கலாம்.
கேவலம் பள்ளன் பறையனெல்லாம் போலீச எதிர்த்துப் பேசுவதா? அப்புறம் பாண்டியமாரு மரியாதை என்னாவது? என்கிற சாதிவெறிதான் போலீசை கொலைவெறியுடன் இயக்குகிறது என்கிறார் ஆனந்தனின் தாய்
“ஆ! ஊன்னா... சிவப்பு கொடிய பிடிச்சிட்டு வந்துர்றீங்க...! ஒழுங்கா அவனவன் பேசாம போவல! ஊரக் கெடுக்கறதே நீங்கதாண்டி. பேசாம வூட்ல அடங்கிக் கிடக்காம எதுக்குடி ரோட்டுக்கு வர்றீங்க.. என்று சொல்லிச் சொல்லி அடிச்சாங்க”
பில்டர் காபி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், சரவண பவன்கள் போன்றவை சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.
ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை என்பதில் ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை வரை தற்கொலைகளின் காரணங்களும், அடிப்படைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.










