தனியார் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் சங்கமாக திரண்டு போராடினால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்பதற்கு இந்த போராட்டமே சான்று.
கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட தேசிய கீதம் தயார்… மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு தேசியக் கொடி தயார்…
மாணவர்களே! நமக்குள் அடித்துக் கொள்வதை நிறுத்துவோம்! ஒற்றுமையை கட்டியமைப்போம்! போலீசு – ஊடகங்கங்கள்- ஓட்டுப் பொறுக்கிகள்தான் எதிரிகள், சக மாணவர்கள் இல்லை என்பதை உணர்வோம்!
97ல், சினிமா தொழிலாளிகள் ஊதிய உயர்வுக்காக போராடியபோது பாரதிராஜா , பாலச்சந்தர் போன்றவர்கள் இதை படைப்பாளிக்கும் தொழிலாளிக்குமான பிரச்சினையாகவும், தமிழனது அடையாள பிரச்சினையாகவும் திரித்து தொழிலாளிகளுக்கு எதிராக நடந்து கொண்டார்கள்.
நடுத்தர, மேட்டுக்குடி வர்க்கங்களது கலாசாரமும் - சமூகப் பொருளாதார விழுமியங்களை ஒட்டுமொத்த சமூகத்தினதுமாக சித்தரிப்பதில் சாரங் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகள் வகிக்கும் பங்கு மிக முக்கியமானது.
சோறு, பருப்பு, சப்பாத்தி கொடுத்தால்தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்தான் ஆனால் கிடைக்கும் அற்ப வருமானத்தில் சோற்றுடன் மிளகாய்ப் பொடியைத்தான் கலந்து கொடுப்பதைத்தான் செய்ய முடிகிறது.
இதைக் கேட்கும் போது 'நாம் போடும் வெள்ளைச் சட்டை, எத்தனையோ உழைக்கும் மக்களின் வியர்வையின் பலன்' என்ற குற்ற உணர்வு எழாதவர்கள் இருக்க முடியாது.
நான் புத்தகங்களை வெறும் பண்டமாகத்தான் பார்க்கிறேன். இதை வெளிப்படையாகச் சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை. - பத்ரி, தொழிலதிபர் (கிழக்கு பதிப்பகம் - நியூ ஹொரைசன் மீடியா)
ஒரு கருத்தில் சரி அல்லது தவறென்று இரண்டுதான் இருக்க முடியுமே அன்றி அந்த சரிக்கும் தவறுக்கும் தாண்டி கருத்துரிமை என்ற ஒன்று அந்தரத்தில் தொங்க முடியாது.
இடதுசாரி - முற்போக்கு - சமூக அக்கறை கொண்ட அரசியலில்ஆர்வமும், துடிப்பும் மிக்க தோழர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் அவசியம் வாங்கி படிக்க வேண்டிய நூல்களின் பட்டியலை பதிப்பகம் வாரியாக இங்கு தந்திருக்கிறோம்.
என் பெயர், 'கடல்சார் பல்கலைக்கழகம்'. அரசு மற்றும் தனியார் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை ஆண்டுதோறும் உற்பத்தி செய்து அனுப்புவதுதான் என் வேலை. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் உத்தண்டிதான், என் இருப்பிடம்.
இந்தியப் புரட்சியின் ஒத்திகையாக நடந்த ஒரு உண்மை மக்கள் எழுச்சியின் கலை ஆவணம்தான் மாபூமி (எங்கள் நிலம்). கவனமாகப் பார்த்து படிப்பினைகளைக் கற்றுகொள்ளுங்கள்.
போலீசு ராஜ்ஜியத்தை எதிராக களத்திலே நின்று போராடினால்தான் அடக்கு முறைகளை தடுத்து நிறுத்த முடியும். உரிமைகளை வென்று எடுக்க முடியம். நீதிமன்றம் கூட இடை விடாத மக்கள் போராட்டத்திற்கு அஞ்சிதான் குற்றவாளி போலீசை பல வழக்குகளில் தண்டித்திருக்கிறது.
சுனாமியில எவன் எவ்வளவு அடிச்சான்னு எனக்கே தெரியும், ஒரு ஐஏஎஸ் அதிகாரி, சுனாமி நிவாரணத்தில் அடிச்ச பணத்தை வச்சு வடநாட்டில ஒரு மெடிக்கல் காலேஜே கட்டி விட்டான். அதுக்கு நாம என்ன செய்ய முடியும்?
வழிப்பயணத்தில் சந்தித்த ஒரு ஆட்டோ ஒட்டுநரை பேச விட்ட போது கிடைத்த விசயம். இனி அவரே பேசுகிறார்....