முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!

ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!

-

ஐடியின் கலாச்சாரப் பெருவிழாவான ’சாரங்க்’ (SAARANG) – கின் காதைச் செவிடாக்கும் ஓசைகளுக்கிடையே இந்த கட்டுரையை எழுதுகிறேன். பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்து பத்தாயிரக்கணக்கில் குவிந்துள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெருத்த ஆராவாரமும் சீழ்க்கை ஒலிகளும், மின்னணுக் கருவிகளிலிருந்து செயற்கையான முறையில் கிளம்பும் இசை வன்முறையாய் காதையும், மனதையும் கிழித்துக் கொண்டிருக்கிறது. நெஞ்சில் இடிபோல் இறங்கும் ட்ரம்ஸ் பீட்டின் இசைக்கேற்ப தன்னிலை மறந்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள் மாணவர்களும் இளைஞர்களும். ‘தன்னிலை மறத்தல்’ – இதுதான் சாரங்கின் இலக்கு.

1950 களில் தேசிய​ முக்கியத்துவம் வாய்ந்த​ அமைப்புகளாக​ சென்னையின் இருபெரும் நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டன​. ஒன்று ஐ.சி.எப், இன்னொன்று ஐ.ஐ.டி. முதலாவது நிறுவனம் தொழிலாளி வர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டது. ஆனால், பார்ப்பனியக் கோட்டையான  ஐ.ஐ.டி சென்னையோ  கடந்த​ 20 ஆண்டுக்காலத்தில் படிப்படியாக​ நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்துவிட்டு ஒப்பந்த​ கூலிகளைக் கொண்டு நிரப்புவதோடு மட்டுமன்றி, அந்த​ அமைப்புசாரா தொழிலாளர்களை அடிமாடு போல​ நடத்துகிறது. கல்வி தனியார்மயத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக இருப்பதோடு மாணவர்களையும் மிக மோசமாக ஒடுக்கிவருகிறது. ஐஐடி மாணவர்களுக்கான கேண்டின் வசதி, ஹாஸ்டல் வசதிகள் பற்றி கேட்டால் ‘ஐஐடி ஒன்றும் தர்மாஸ்ரமமல்ல’ என்று சொல்லும் நிர்வாகம்தான் பல கோடிகளில் இக்கேளிக்கைச் சீரழிவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!ஐஐடி சென்னை வருடம் தோறும் ஜனவரி மாதத்தில் நடத்தும் சாரங்க் உயர் கல்விநிறுவனங்களில் நடத்தப்படும் கலாச்சார​ திருவிழாக்களிலே பெயர்போனது. நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஐஐடி மாணவர்கள் மட்டுமன்றி தென்னிந்தியாவிலுள்ள​ பெரும்பாலான​ கல்லூரிகளிலிருந்து வரும் மாணவர்கள் உட்பட​ சுமார் 50,000 பேர் கலந்து கொள்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கான​ கலாச்சார​ நிகழ்ச்சியாக​ சித்தரிக்கப்பட்டாலும், இது இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மேல்தட்டு மற்றும் நடுத்தர வர்க்க​ இளைஞர்களை ஒன்றிணைக்கும் தளமாகவும் உள்ளது. முழுமையாகவே மேற்கத்திய​ கலாச்சாரத்திற்கும் இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்படும்  இந்நிகழ்ச்சியில் உண்மையில் இரண்டுமே இருப்பதில்லை. மேற்கத்திய சீரழிவு கலாச்சாரக் கழிவுகளையும், பார்ப்பனியக் கலைகளான​ பரத​ நாட்டியம், குச்சுப்புடி, கர்நாடக​ இசை வழியாக​ இந்து புராணக் கட்டுக்கதைகளும்தான் அரங்கேறும்.

இந்த​ ஆண்டும் வழக்கம் போல​ ஜனவரி 18 ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதிவரைக்கும் நடந்திருக்கிறது இவ்விழா. சாரங்க் மாணவர்களால் மாணவர்களுக்காக​ நடத்தப்படும் இலாபநோக்கற்ற​ நிகழ்ச்சி என்று வெளியே கூறப்பட்டாலும், இந்த​ நான்கு நாட்களாக நடத்தப்படும் ‘ஷோ’க்களுக்கான​ நுழைவுக்கட்டணம், அதன் புரவலர்களான​ விளம்பரதாரர்கள், பங்கேற்கும் கலைகுழுக்கள் எனக் கோடிகளில் புரளும் இந்த நிகழ்ச்சியை பற்றி விரிவாகப் பார்த்தால் தான் இதன் பின்னாலிருக்கும் சமூகப் பொருளாதார​ இலாப​ நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள​ முடியும்.

இந் நிகழ்ச்சியின் முதல்நாள் கிளசிக்கல் நைட். அதில் சசாங்க் சுப்பிரமணியத்தின் புல்லாங்குழலுடன், மலேசியா நடனக் குழுவின் ஒடீசியோடு ஆரம்பித்தது சாரங்க். இந்து புராண கட்டுக்கதையான காளீயமர்த்தனத்தையும், மீரா கிருஷ்ணனின் மேல்வைத்த ஒருதலைக் காதலையும் பல்வேறு இசை வடிவங்களில் மேடையேற்றிய பின்னர் மோகினி வேடமிட்டு அசுரர்களிடமிருந்து அமுதத்தை ஆட்டைய போட்ட விஷ்ணுவிடம் மோகம் கொண்ட சிவனின் லீலைகளும் (ஹரி-ஹர லீலை), தாந்திரிகக் கதைகளில் வரும் யோகினியின் சுடலை நடனமும் ஒடீசி நடன வடிவத்தில் அரங்கேற்றப்பட்டது.  அடுத்தடுத்த​ நாட்களில் கொறியோ நைட், போப்புலர் நைட் (தேவி சிறீ பிரசாத் மற்றும் விஸால் அன் சேகர்) மற்றும் ரோக் ஷோ (வித்ஜர்தா, சுவீடன்) என்று மேற்கத்திய​ மற்றும் இந்திய​ மேல்தட்டு வர்க்க கலைகளின்​ கூட்டுக்கலவையாக​ நடைபெற​ உள்ளது.

இந்த​ ஆடம்பர கவர்ச்சிகரமான இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கான​ நுழைவுச் சீட்டுகள் இன்டெர்நெட்டிலிருந்து சென்னை நகரத்தின் பீட்சா கார்னர்கள் வரைக்கும் கூவிக்கூவி விற்கப்படுகிறது. இப்படி கூவிக்கூவி விற்கிறார்களே ஒரு நிகழ்ச்சிக்குப் போய் பார்க்கலாமென்றால், கட்டணம் 200 ரூபாயில் ஆரம்பித்து 1,500 ரூபாய் வரைக்கும் சில்வர், கோல்ட், பிளாட்டினம் என்று அவற்றின் இன்றைய​ சந்தை நிலவரம் போன்றே விலைவைக்கப்பட்டுள்ளது. சராசரியாக​ 30,000 பேர் பார்க்கும் இந்நிகழ்ச்சிகளுக்கான நுழைவுக்கட்டணம் தலைக்கு சராசரி 400 ரூபாய் போட்டாலும் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நுழைவுக் கட்டணத்திலிருந்து மட்டும் வருகிறது.

‘‘பெரிய​ பெரிய​ குரூப்பெல்லாம் வறாய்ங்க. ஐய்யோ பாவம் மாணவர்களால​ இலாபநோக்கமே இல்லாம​ நடத்தப்படுதே. அதனால​ தான் இம்புட்டு பைசா போலருக்குண்ணு’’ என்ன​ மாதிரியே நீங்களும் நெனச்சீங்கண்ணா​ எமாந்திட்டீங்க​. சாரங்க் ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி. இதன் புரவலர்களான​ விளம்பரதாரர்கள் யாரென்றால், நோக்கியா, டாடாவின் குரோமா, ரிலையன்ஸ், பீட்சா கார்னர், பேஸ்புக், லாஜிடெக், மக் டொனால்ட்ஸ், டொயோடா, ஹிந்து, கொக்கோ கோலா போன்ற​ ‘சின்ன​’ கம்பெனிகளிலிருந்து, பிரான்ஸ் எம்பசியின் அல்லயன்ஸ் பிராஞ்சைஸ் , யுஎஸ் கண்சுலேட்,  இஸ்ரேல் எம்பசி, கொதெ இன்ஸ்டிடுட்/மாக்ஸ்முல்லர் பவன் போன்ற ஏகாதிபத்திய புரவலர்கள்  என்று பட்டியல் விரிகிறது.

இந்த​ கார்பரேட்-ஏகாதிபத்தியப் புரவலர்கள் ஆதாயமில்லாமல் இந்நிகழ்ச்சிக்கு முதலீடு செய்வதில்லை. ஏற்கனவே புதிய​ தாராளவாதக் கொள்கைகளின் பகுதியாக​​ உயர்கல்வித் துறை தனியார்மயமாக்கப்பட்டு இன்று பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இந்திய​ உயர்கல்வித் துறை கொண்டவரப் பட்டிருக்கிறது. இச் சூழலில் ஐஐடிக்களை தனியார்மயமாக்கும் மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள​ நிலையில் இதைப் பற்றி சற்றும் பிரக்ஞையற்ற ஐஐடி மாணவர்களும் பேராசிரியர்களும் வழக்கம்போல​ ‘ஊழல்’தான் இந்த நாட்டின் முதன்மையான​ பிரச்சனையென்று அண்ணா ஹசாரே பின்னால் ஆட்டுமந்தைகள் போல் மெழுகுவர்த்தியுடன் பேரணி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.  தன்னுடன் பயிலும் மாணவர்கள் தொடர்ச்சியாக​ தற்கொலை செய்யும் போது கூட​ எதிர்வினையாற்றும் திராணியற்று விட்டேத்தியாக​ இருக்கும் அளவிற்கு இம்மாணவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் இந்த​ மனநிலைக்கு சாரங்க் போன்ற​ கலாச்சார ​ நிகழ்ச்சிகள் ஆற்றும் பங்கும் முதன்மையானது.

ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு!
படம் – இந்து நாளிதழ்

அதற்கு சாரங்கின் வரலாற்றை கொஞ்சம் புரட்டுவோம். 1960 களில் அமெரிக்க இளைஞர்களிடமிருந்து தொற்றுநோய் போல் கீழைநாடுகளிலும் திட்டமிட்டு பரப்பப்பட்ட​ ஹிப்பி கலாச்சாரம் கீழைநாட்டுப் பிற்போக்கு தத்துவங்களையும் உள்வாங்கி  புது வகை உதிரிக் கலாச்சாரமாகப் பரிணமித்த​ போதே 1973-74 லிருந்து ஆண்டுதோறும் ஐஐடி சென்னையும் ‘மார்திக்ரா’ (Mardi Gras)  என்ற​ பெயரில் இந்த​ களியாட்டங்களை அரங்கேற்றி வருகிறது. 1990 களில் அறிமுகப்படுத்தப்பட்ட​ புதிய​ தாராளமயக் கொள்கைகள் நாட்டை சூறையாட​ ஆரம்பித்ததும் இந்த​ களியாட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்பட்டன​. அப்படித்தான் 1996-ல் மார்திக்ரா என்ற​  அராஜகவாதிகளின் களியாட்டம் சாரங்க் என்று பெயர் மாற்றப்பட்டது. 90களில் ஆரம்பித்த​ இந்த​ இரண்டாம் தலைமுறை ஹிப்பிகளின் (New Ager) மிகப்பெரிய​ சங்கமமாக​ தென் இந்தியாவில் சாரங்க் விளங்குகிறது. இதற்கு   இந்தியாவின் பல்வேறு பாகங்களிலிருந்து வந்து Students Activity center (SAC) முன்புறம் தலைவிரிக்கோலத்தில் கறுப்புடை அணிந்து நாள்முழுதும் ஆடி, அண்டம் கிழியக் கத்தும் ட்ரூப்புகளைப் பார்த்தால் புரியும்.

நாட்டில் 90% உள்ள​ உழைக்கும் பெரும்பான்மை மக்களின் கலாசாரமும் பொருளாதார​ நிலைமைகளும் இருட்டடிப்பு செய்யப்பட்டு வெறும் 10% நடுத்தர​, மேட்டுக்குடி வர்க்கங்களதும் பார்ப்பனர்களதும் சமூகப் பொருளாதார​ விழுமியங்கள் ஒட்டுமொத்த​ சமூகத்தினதுமாக​ சித்தரிப்பதில் இம்மாதிரி கலாச்சார​ நிகழ்ச்சிகள் வகிக்கும் பங்கு மிக​ முக்கியமானது. மேற்கத்திய​ களிவெறி இசையுடன் கூட்டணி சேர்ந்துள்ள​ பார்ப்பனிய​ இசையானது, ஏகாதிபத்தியத்துடன் கள்ள​ உறவு வைத்துள்ள​ ஆர்.எஸ்.எஸ் ஐத்தான் நமக்கு நினைவூட்டுகிறது. சாரங்க் மட்டுமன்றி ஐஐடி வளாகத்துக்குள் இயங்கும் விவேகானந்த​ வாசகர் வட்டம், இஸ்கான் என்ற​ ஹிப்பி கும்பல், மியூசிக் கிளப், ஆத்ம​ ஞான​ யோகா போன்றவை மூலமும், Extra Mural Lectures வாயிலாக​ ராஜிவ் மல்கோத்ரா (உடையும் இந்தியா ஆசிரியர்), வாழும் கலையின் (Art of Living) ஐ.என்.கே. போன்றவர்களை உரையாற்ற​ அழைப்பதன் மூலமும் இந்துத்துவத்துவதை கட்டமைக்கும் வேலையிலும் அதனூடாக​ பார்ப்பனிய​ கலாச்சாரத்திற்கு முட்டுக்கொடுக்கும் வேலையிலும் ஐஐடி பார்ப்பனர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு  ஐஐடி உணவு விடுதிகள் இன்றும் தீட்டுப்படாமல் சைவ​ உணவகங்களாக​ இருப்பதும், பெரும்பாலான மாணவர்கள் அசைவப் பிரியர்களாக​ இருந்தும் இந்தியாவின் தேசிய​ உணவாக​ சைவத்தை சித்தரிப்பதும் உதாரணம்.

உயர்கல்வி தனியார்மயமாக்கலின் முதல் இலக்கான ஐஐடி கடந்த பத்தாண்டுகளில் மாணவர்கள் தங்கள்  நியாயமான உரிமைகளான உணவு விடுதிப் பிரச்சனைக்கோ அல்லது வாத்தியார்களின் தனிப்பட்ட பாழிவாங்குதலுக்கு எதிராகவோ முணுமுணுத்தால் கூட அதை தன் இரும்புக் கரங்களான பேராசிரியர்களை வைத்து ஒடுக்கிவருகிறது. இதன் கடந்தகால ரத்தசாட்சிகளான நிதின் குமார் மற்றும், அனூப்பின் தற்கொலைகள் இந்த அமைப்பின் கோரமுகத்தை வெளியுலகத்திற்கு அம்பலப்படுத்தியும், இந்த அமைப்பினை எதிர்த்து கேள்வி கேட்க்கும் உணர்வுகூட இல்லாததால் இம்மாணவர்களின் காதுகளில் ஒலிக்கும் சகமாணவனின் மரண ஓலம்கூட இன்று சாரங்கின் காக்கஃபோனி இசையின் இரைச்சலில் கரைந்து போயுள்ளது.

ஏகாதிபத்தியம் + பார்ப்பனியம் இணைந்து வழங்கும் ஐ ஐ டி சாரங்க் விழா!ஏற்கனவே இந்த​ கல்விமுறையால் சுயசிந்தனையற்றவர்களாக​ ஆக்கப்பட்ட​ மாணவனை கலாச்சார​ நிகழ்ச்சிகள் என்ற​ பெயரில் நடத்தப்படும் சாரங்க் போன்றவை மூலம் எதிர்காலத்தில் பொழுதுபோக்கு சந்தையின் வரைமுறையற்ற​ நுகர்வோனாவதற்கு​ தயாரிக்கப்படுகிறான்.  ஒரு டாலருக்கும் குறைவாக​ தினக்கூலியாகப் பெறும் 65% மக்கள் வாழும் நாட்டில் கூத்தாடுவதெற்கென்றே பல​ கோடிகள் செலவு செய்யும்   கேவலம் தான் இங்கே நடைபெறுகிறது. இத்தகைய​ கலாச்சாரத் தாக்குதல்களால் சீரழிவுக்காளான ​ மாணவன் கல்லூரியை விட்டு வெளியேறும் போது சமூகப் பிரக்ஞையற்றவனாக​ மாறுவதோடு ஏகாதிபத்தியத்தின் அடியாளாகவும் கொ.ப.செ.யாகவும் மாறுகிறான். ஒரு பக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பறித்து அடிமைகளாக்குவதுடன் இன்னொரு பக்கம் சாரங்க் போன்ற கலாச்சார சீரழிவுகள் மூலம் சுயசிந்தனையற்ற யுப்பிகளை உருவாக்குவது தான் சாரங்கின் புரவலர்களான கார்பரேட், ஏகாதிபத்திய தூதரகங்கள் மற்றும் திரைமறைவில் செயல்படும் சாரங்கின் பின்னாலுள்ள அதிகாரவர்க்க​ மூளைகளின் இலக்கு. சாரங்க் நிகழ்வு நடைபெற்ற பகுதியில் புரவலர்களின் விளம்பர மற்றும் விற்பனை அங்காடிகளில் ஒன்றாக டூயுரக்ஸ் ஆணுறை நிறுவனமும் இருந்தது சூசகமாக இதைத்தான் சுட்டுகிறது – F*CK their minds… but Play it Safe!

ராஜன்

 1. வலிந்து குற்றம் காண்பதற்காகவே எழுதப்பட்டுள்ள கட்டுரை. சாரங்கில் ஓவியம், நடனம் தொடங்கி, நாடகம், கார்டூன்ஸ், கோலப்போட்டி வரை நூற்றுக்கணக்கான போட்டிகள் உண்டு. இவை மாணவர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. இதில் இடம் பெறும் பல்வேறு க்விஸ் நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. குடியரசு தினத்தன்று (இப்பொழுது அப்படியா என்று தெரியவில்லை) நடைபெறும் இந்நியா க்விஸ் மிக அருமையாக இருக்கும்.

  ஒருமுறை இதில் யூனியன் கார்பைட் முதன்முதலாக வெளியிட்ட உர விளம்பரத்தை (பெயரை மறைத்து) காட்டி இதன் முக்கியத்துவம் என்ன என்று கேட்கப்பட்டது.

  மாணவர்கள் பிரச்சினை என்பவை களையப்பட வேண்டும்ந அதற்காக சம்பந்தமில்லாமல் சாரங்கை குறை கூறுவதில் அர்த்தம் இல்லை.

  இன்னொன்று, பல ஆண்டுகளுக்கு முன்புவரை நிர்வாகமே இதற்கான செலவை ஏற்று வந்தது. பிறகு அப்படி நிதி தருவதை நிறுத்திவிட்டது. அதனால் மாணவர்கள் வெளியிலிருந்து ஸ்பான்சர்ஷிப் பெற்று நடத்துகிறார்கள். இது சரியே. ஐஐடியின் பணம் என்பது மக்கள் வரிப்பணம்; அதை எடுக்காமல் சுயமான நிதியில் நடப்பது சிறந்ததே. விளம்பரம், ஸ்பாட்சர்ஷிப் என்பது எல்லா இடங்களிலும் இருப்பதுதான். நாம் கம்யூனிச நாட்டில் வாழவில்லை. அப்படி கம்யூனிச ஆட்சி வரும்போது பார்த்துக்கொள்ளலாம் 🙂 அதுவரை ஸ்பான்சரிங் இருக்கத்தான் செய்யும். அதில் தவறு ஏதும் இல்லை.

  • மாணவர்களை சமூக அக்கறையற்றவர்களாக மாற்றும் ’சாரங்’கிற்கு ஸ்பான்சர்கள் இருப்பதைப் பற்றி இங்கு யாரும் பேசவில்லை. இவ்வாறு ஸ்பான்ஸர் செய்து ஏகாதிபத்திய கைக்கூலிகளை ஏகாதிபத்தியமும் பார்ப்பனிய அடிவருடிகளை பார்ப்பனியமும் எப்படி உருவாக்குகிறது என்பதையே இங்கு குறிப்பிட்டுள்ளார்கள் .. திருவாலர் சரவணன் அவர்களே … அதற்கு பதில் கூறாமல் விசயத்தை திசை திருப்புவதன் காரணம் என்ன ?..

   • ஐ.ஐ.டியில் படித்து சாரங் நிகழ்ச்சியை நேரடியாக ரசித்தவன் என்ற முறையில் எனக்கு சாரங் அளித்த அனுபவம் வேறு என்கிறேன். ‘ஏகாதிபத்தியக் கைகூலி’, ‘பார்ப்பன அடிவருடி’ என்பனவற்றுக்கும் இக்கலை விழாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை (ஸ்பான்சர்ஷிப் பெறுவது தவறு என்று நீங்கள் கூறினால் ஒழிய). இதில் நீங்கள் ஏகாதிபத்தியத்தைக் குறைகூறி, முதலீட்டியம், தனியார்மயம் ஆகியவற்றைக் குறைகூறிக் கூடப் புகைப்படம், நாடகம் என வழங்கலாம். ஐஐடிகளையே குறை கூறிய சேத்தன் பகத்தின் ஃபைவ் பாய்ண்ட் சம் ஒன் (3 இடியட்ஸின் மூல வடிவம்) நாடகமாக நிகழ்த்தப்பட்டது.

    காட்டுக்கூச்சல், காது கிழிக்கும் இசை, வெறியாட்டம் என்பவை எல்லாம் இளைஞர்களின் கலைகளைப் பிடிக்காதவர்கள் காலம் காலமாகச் சொல்லிவரும் சனாதனக் கருத்துகளே . உதாரணம் வெங்கட் சாமிநாதன் மாதிரியானவர்கள். இக் கருத்துகள் நம் திரை இசை, பிங்க் ஃபிளாய்ட் மாதிரியான குழுக்கள், சமூக அக்கறைக் கருத்துகளை ராக் இசையில் முன் வைக்கும் இசைக்குழுக்களைப் பற்றிக் கூடச் சொல்லப் படுபவையே.

    • அனானி சரவணன்,

     முல்லை பெரியாறுக்கு எதிரான இந்து பத்திரிக்கைதான் விவசாயிகள் தற்கொலையை பற்றி எழுதறாங்க, ஈழப்படுகொலையை இருட்ட்டிப்பு செய்யும் இந்துதான் குஜராத் படுகொலையை வெளியிட்டது, இதுலேருந்து இந்துவை பற்றி என்ன முடிவுக்கு வருவீங்க? அது மக்களின் தோழன் உண்மையின் உரைகல்லுன்னா? இல்லேல்ல…? ஒரு விசயத்தை ஆராயும் போது பகுதி பகுதியா பரிசீலிக்காம மொத்தத்துல அது யாருக்கு சேவை செய்யுதுன்னுதான் பார்க்கனும், அந்த வகையில சாரங்கோட சாராம்சம் அது பெரும்பான்மை இந்தியார்களுக்கு சம்பந்தமே இல்லாத பார்ப்பனிய – ஏகாதிபத்திய பண்பாட்டை தூக்கி பிடிக்கிறது என்பதுதான்..

     உங்களுக்கு வேண்டுமானால் சாரங்கை பார்த்தவுடன் கல்லூரி கால நினைவுகள் வாட்டியெடுத்திருக்கலாம், ஆனால் அதை மட்டும் வைத்து இதை அலசக்கூடாது அல்லவா?

     • i am asking what u ppl are doing for india / tamil ? yes.. they put traditional music and krishna plays.. bcos its indian culture.. will u give money for these events.. no?? companies ll give for sponsers.. wat panpadu?? internet is also not tamil panpadu then why the …. u ppl are using it??

      • பாலாஜி அவர்களே, முதலில் தமிழாக்கம்…
       நீங்கள் தமிழுக்காக, தமிழனுக்காக என்ன செய்து கிழித்து விட்டீர்கள்… இந்திய கலாச்சார நிகழ்சிகள் தான் நடத்துகின்றனர்… நீங்கள் இதற்க்கு பணம் கொடுக்கிறீர்களா? என்ன பெரிய பண்பாடு? இன்டர்நெட் என்ன தமிழர் பண்பாடா? அப்புறம் ஏன் அதை உபயோக படுத்துறீங்க…

       \\நீங்கள் தமிழுக்காக, தமிழனுக்காக என்ன செய்து கிழுத்து விட்டீர்கள்…\\
       நிச்சயம் ஏதாவது செய்வோம் என்ற நம்பிக்கை இருக்கலாம்!!! அல்லது ஏன் செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் இருக்கலாம் 🙂

       \\இந்திய கலாச்சார நிகழ்சிகள் தான் நடத்துகின்றனர்\\
       indiyan institute of technology என்றால் நீங்கள் இந்திய கலாசார நிகழ்ச்சி நடத்துவீர்களோ? முதலில் பேரை TIT என்று மாத்திட்டு வரோம்…

       \\நீங்கள் இதற்க்கு பணம் கொடுக்கிறீர்களா\\
       எங்களுக்கு வாங்க மட்டும் தான் தெரியும்… இந்த நிகழ்ச்சியினால் எங்கள் உண்டியல்களுக்கு எந்த பயனும் இல்லையே.. பின் எப்படி ஆதரிப்போம் ?

       \\என்ன பெரிய பண்பாடு?\\
       பண்பு + ஆடு = பண்பாக ஆடு ?

       \\இன்டர்நெட் என்ன தமிழர் பண்பாடா? அப்புறம் ஏன் அதை உபயோக படுத்துறீங்க… \\
       விட்டா, கார், பஸ், பிளைட், மொபைல், கம்ப்யூட்டர் எல்லாமே மேற்கத்திய கலாச்சாரம் என்று சொல்வீர்கள் போலிருக்கே. அப்ப சினிமா கூட, ஏன் மின்சாரம் கூட நாங்க பயன்படுத்த முடியாது . குதிரை வண்டியில், லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் பயணிக்க முடியுமா என்ன ?
       நாங்க இண்டர்நெட்டை தமிழ் படுத்திட்டே வரோம், கூடிய விரைவில் தட்டப்:// வ்வ்வ்.வினவு.காம் (http :// www .vinavu .com ) என URL கொடுக்கிறோமா இல்லையா பாருங்க…

       • என்ன மனிதன் கலாயிக்கிறீங்களா? முதல்ல இந்த ஐஐடி காரன்ங்களுக்கு கொடை பிடிக்கிரத நிப்பாட்டுங்க. படித்து முடித்த பிறகு இவர்கள் எந்த நாட்டுக்கு ஓடலாமுனு யோசிக்கிரவனுங்க. அதனால இவனுங்க அயல் நாட்டு கலாச்சாரத்துக்கு சீர் தூக்குறானுங்க. சரி அப்படி பன்ரவனுங்க இவனுங்க வரைக்கும் பன்ன வேண்டியது தானே எதுக்கு மத்த பசங்களையும் சேத்து கெடுகுறானுங்க.

        ஐஐடி கலை தாகத்தை ஆதரிக்கும் கார்பிரேட் ஸ்பான்சர்ஸ் நந்தனம் கலை கல்லூரி மாணவர்கள் கலை தாகத்தையும் ஆதரிப்பாங்களா?.

        சரி அயல் நாட்டு கலாச்சாரத்த விடுங்க இந்திய கலாச்சாரம் தமிழ் நாடு இந்தியாவின் அங்கம் எல்லாம் சொல்லும் நீங்க தமிழர்களின் கலைகளான மயில்லாட்டம், ஒயில்லாட்டம், தார தப்பட்ட வாதியங்களை இவர்கள் நினைத்து பார்க்காமல் இருப்பது ஏன்?

        இல்ல இந்த தமிழர்களின் கலைகள் கல்லூரி கலை விழாக்களில் இடம் பெற்றால் அது தேச திரோகம் என்று எங்கயாச்சும் சட்டம் இருக்கா?

        இதனால தான் வினவு :”ஐஐடி சாரங்: ஏகாதிபத்திய-பார்ப்பனிய கலாச்சார நிகழ்வு” என்று தலைப்பு இட்டார்கள்.

        //எங்களுக்கு வாங்க மட்டும் தான் தெரியும்… இந்த நிகழ்ச்சியினால் எங்கள் உண்டியல்களுக்கு எந்த பயனும் இல்லையே.. பின் எப்படி ஆதரிப்போம் ?//

        உங்களுக்கு வாங்க மட்டும் தான் தெரியும் என்று எல்லாருக்கும் தெரியுமே.
        உண்டியல் குலுக்குறது பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? என்றைக்காவது சமுக விளிப்புனர்வு இல்லை நலனுக்கு தெருவில் நின்று மக்களிடத்தில் உண்டியல் கேட்டுள்ளீர்களா? உண்டியல் குலுக்குறதுனா பிச்சை எடுப்பது என்று நினைப்பா? இந்த நிகழ்ச்சிக்கு உண்டியல் குலுக்குறதுக்கு சும்மாவே இருக்கலாம்.

        //பண்பு + ஆடு = பண்பாக ஆடு ?//

        இங்க என்ன தமிழ் பாடமா நடத்துறாங்க. பிரித்து எழுதுக சேர்த்து எழுதுக எல்லாத்தையும் சொல்லிதறிங்க.

        • \\முதல்ல இந்த ஐஐடி காரன்ங்களுக்கு கொடை பிடிக்கிரத நிப்பாட்டுங்க.\\
         நான் கொடை பிடிக்கவில்லை.. கலாச்சாரம் பண்பாடு குறித்த குற்றச்சாட்டு என்பதால் மறுத்திருக்கிறேன்.. மற்றபடி ஐ.ஐ.டி மாணவர்களின் இலட்சணம் எனக்கு தெரியும்…

         \\தமிழர்களின் கலைகளான மயில்லாட்டம், ஒயில்லாட்டம், தார தப்பட்ட வாதியங்களை இவர்கள் நினைத்து பார்க்காமல் இருப்பது ஏன்\\
         அதோடு சேர்த்து வள்ளி திருமணம், அரிச்சந்திர மயான காண்டம் போன்ற நாடகங்களையும் சேர்த்துக்கோங்க…

         \\தெருவில் நின்று மக்களிடத்தில் உண்டியல் கேட்டுள்ளீர்களா\\
         கேட்டது இல்லை.. ஆனால் கொடுத்திருக்கிறேன்… கொடுக்காமல் போன நேரங்களில் வாங்கியிருக்கிறேன் வசவுகளை…

         இன்டர்நெட் என்ன தமிழர் பண்பாடா – இதுக்கு உங்கள் பதில் என்ன?

         • //இன்டர்நெட் என்ன தமிழர் பண்பாடா – இதுக்கு உங்கள் பதில் என்ன?//

          இன்டர்நெட் என்பது அரிவியல் அது எப்ப பண்பாடா ஆச்சுனு தெரியவில்லை. அரிவியலுக்கும் பண்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒருவர் கேள்வி கேட்டுட்டாரு. அதையே நீங்க திரும்பவும் கேக்குறீங்க. எனக்கு தெரிந்த பதிலை சொல்லிவிட்டேன் நீங்கள் தான் கல்லூரி ஆசிரியராசே வித்தியாசமா எதாச்சும் சொல்லுங்க.

          • இன்டர்நெட் என்ன தமிழர் பண்பாடா – என்பதை இன்டர்நெட் உபயோகித்தல் தமிழர் பண்பாடா? என்று நீங்கள் புரிந்து கொள்ளுவீர்கள் என்று எண்ணி இருக்கிறார்…
           \\அரிவியலுக்கும் பண்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் ஒருவர் கேள்வி கேட்டுட்டாரு\\
           அறிவியலுக்கும் பண்பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் அல்ல, அறிவியலுக்கும் பண்பாட்டுக்கும் உள்ள தொடர்பை கருதி கேட்கப்பட்ட கேள்வி… அறிவியலின் வளர்ச்சி பண்பாட்டின் அழிவு… தமிழ் இனி மெல்ல சாகும் என்பதே அது… இனிய உபயோகம் தமிழ் பண்பாட்டு அழிப்பு, கலாச்சார சீரழிவு என்கிறார்…

    • சரவணன் என்ற அனானிக்கு எதாச்சும் ஒரு பெயரில் எழுதவும். உங்கள் மின்னஞ்சல் முகவரி கொண்டு வினவு உங்களுக்கு என்று ஒரு அடையால படம் கொடுத்துள்ளது ஆகையால் நீங்கள் அனானியாக வந்தாலும் சரவணன்னாக வந்தாலும் மறுமொழிகள் வந்து கொண்டு தான் இருக்கும். சரி விசயத்துக்கு வருவோம்.

     //ஏகாதிபத்தியக் கைகூலி’, ‘பார்ப்பன அடிவருடி’ என்பனவற்றுக்கும் இக்கலை விழாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை (ஸ்பான்சர்ஷிப் பெறுவது தவறு என்று நீங்கள் கூறினால் ஒழிய). //

     மணவர்கள் கலை நிகழ்ச்சி நடத்தனும்னா அவங்ககுள்ள பணம் சேர்த்து (புரியும் படி சொன்னா: “உண்டியல் குலுக்கி”) நடத்த வேண்டியது தானே? நாங்க அந்த புகழ் பெற்ற ராக் ஸ்டாரை அலைகிறோம், இந்த “கலை”மாமணியை அலைகிறோம் என்றேல்லாம் சொல்லி நீங்கள் பெரிய கலைமாமணிகள் என்று யாருக்கு நிருபிக்க பாக்கிறீங்க? சரி இந்த ஸ்டாருகளையும் மாமணிகளையும் அலைப்பதற்கு பணம் தேவை அதற்கு கார்ப்பிரேட்டுகளிடம் செல்கின்றீர்கள். அப்படி கலைக்காக கொடுக்கும் கார்ப்பிரேட் ஏகாதிபத்தியர்கள் எதற்கு தங்களை மேயின் ஸ்பான்சர், சயிட் ஸ்பான்சர் என்று எல்லாம் சொல்ல வேண்டும். இல்லை நாங்கள் தான் போடுகிறோம் என்று நீங்கள் சொன்னால் உபயம் என்று எழுதி அவர்கள் பெயர்களை மட்டும் இட வேண்டியது தானே? அவர்கள் லொகோ எல்லாம் எதற்கு? கார்ப்பிரேட்டுகளில் இருக்கும் பிராண்டு மேனேஜர் புராண்டி விடுவார்கள் என்ற பயமா? அப்படி பயந்து எதற்கு ஒரு கலை நிகழ்ச்சி நடத்தனும்?

     //காட்டுக்கூச்சல், காது கிழிக்கும் இசை, வெறியாட்டம் என்பவை எல்லாம் இளைஞர்களின் கலைகளைப் பிடிக்காதவர்கள் காலம் காலமாகச் சொல்லிவரும் சனாதனக் கருத்துகளே //

     அதென்ன கலைகளில் இளைஞர்களின் கலை, நடுத்தர வயதினர் கலை, முதியவர்கள் கலை? கலை என்பது வயது, சமுதாய நிலை அனைத்தையும் தான்டிய ஒன்று.

     • Saarang is a business,every cultural festival is a business and the IIT also builds its own brand in lieu of this,so whats the problem?

      There is a cultural distance between people of different generations and different age groups,so why dont u just say we dont like this music instead of debating its very existence?

      • கலை நிகழ்ச்சி ஒரு வணிகமாக பார்க்க படுவதாலும் அந்த வணிகத்துக்கு லாபம் பார்க்க முற்படுவதாலும் தான் இதை ஏகாதிபத்திய கலாச்சார நிகழ்வு என்று சொல்லபடுகிறது. உண்மையை ஒத்துக் கொண்டத்துக்கு மிக்க நன்றி.

       பண்பாட்டில் இடைவெளியா? அதுவும் தலைமுறைகளிடம் பண்பாட்டில் இடைவெளியா? நீங்க என்ன எழுதுறீங்கனு தெரியுதா? நீங்க உதிர்த முத்துக்களின் வீரியம் தெரியுமா? தலைமுறைகளின் இடைவெளியி பண்பாட்டில் இருக்கும்மாயின் அது ஒரு சமுதாயத்துக்கே கேடு. தயவு செய்து அரிவியல் மற்றும் அரிவியல் வளர்ச்சியால் இன்றைய தலைமுறைக்கும் அதன் முந்திய தலைமுறைக்கும் இருக்கும் இடைவெளியை பண்பாட்டுடன் இனைத்து குழம்பிக்க வேண்டாம். பண்பாடு என்பது ஒரு சமுதாயத்தின் அடையாலம் அந்த அடையாலமே மாறுதுனா எப்படி பாஸ்? கலை என்பது ஒரு கலாச்சாரத்தின் அடக்கம் அப்படி அடங்கிய கலைகளை வீழ்த்தும் விதமாக நிகழ்வுகள் இருக்குமாயின் அது ஒரு கலாச்சாரத்தின் வீழ்ச்சிக்கு முதல் படி. அதாவது ஒரு சமுதாயம் தங்கள் கலைகளை புறம் தள்ளி மாற்று கலாச்சார கலைகளுக்கு வழிவிடும் பொழுது அது பெரும் வீழ்ச்சிக்கு வித்துயிடுகிறது என்று பொருள்.

       ஆகையால் சும்மா மறுமொழி எழுத வேண்டும் என்பதற்காக எழுதாதீங்க.

       • I am not joking. Panpaadu=culture.

        First thing,all the money that is collected in saarang goes back into it.The surplus is used to fund the next year’s budget, it is not used for any other purpose.

        second, this decadence of culture you are talking about has always been there.If you are an open minded society,then there always are going to be influences.My grandfather’s generation led a rigid life,my father’s had a little more flexibility and mine has absolutely no constraints at all.

        These are real facts and what Periyar & DK & DMk also professed the same thing.When you educate the people and ask them to reason out things you can just say this road is dark and that road has street light.The moment you open his eyes,he already knows which road has which lights and what he should be doing.

        You put him in a very well lit room and suddenly u say too much light is bad for you now go sit in that hut with a single castor oil lamp,he ll ask why?

        This is what i summarized in my statement and this is the present reality of TN and if you are bothered about this,you should look back and remember all the staunch rigid people you all buried in the past to realize the reason for today’s situation.

         • i agree,i did not explain clearly.I am just saying this serious problem of cultural decadence is happening already,no use fighting it.it has to be fought internally rather than externally.

  • //சாரங்கில் ஓவியம், நடனம் தொடங்கி, நாடகம், கார்டூன்ஸ், கோலப்போட்டி வரை நூற்றுக்கணக்கான போட்டிகள் உண்டு//

   இந்த போட்டியில தமிழர்களின் கலைகள் இருக்கா?.

   //இவை மாணவர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு//

   சரி நல்ல வாய்ப்புனே வைத்துக் கொள்வோம். ஒரு கலை நிகழ்ச்சிக்கு எதுக்குங்க ஐ எஸ் ஓ 9001:2008 சர்டிஃபிக்கேசன் எல்லாம் வாங்கனும்? இதுக்கு பெயர் என்ன?

   //இன்னொன்று, பல ஆண்டுகளுக்கு முன்புவரை நிர்வாகமே இதற்கான செலவை ஏற்று வந்தது. பிறகு அப்படி நிதி தருவதை நிறுத்திவிட்டது. //

   சும்மா ஆதாரம் இல்லாததை எழுதாதீங்க 1974 யில் இருந்து இது நடை பெற்று கொண்டு இருக்கிறது தெரியுமா? இந்த நிகழ்ச்சியை முலு வடிவ ஏகாதிபத்திய கலை நிகழ்ச்சியாக 2006யில் மாறுகிரது.

   //ஐஐடியின் பணம் என்பது மக்கள் வரிப்பணம்; அதை எடுக்காமல் சுயமான நிதியில் நடப்பது சிறந்ததே//

   அப்ப இதுக்கு முன்னாடி ஸ்பான்சர்ஸிப் வாங்காம நடத்தினதுக்கு மக்களிடத்தில் மன்னிப்பு கேட்பார்களா ஐஐடி காரவுக?

   //விளம்பரம், ஸ்பாட்சர்ஷிப் என்பது எல்லா இடங்களிலும் இருப்பதுதான்//

   சும்மா பொது தன்மையா கருத்து எழுதாதீங்க. எல்லா இடங்களிலும்னா எந்த இடங்களில்? லாபம் இல்லாமல் ஸ்பான்சர் செய்வதற்கு கார்பிரேட்டுகள் என்ன அவ்வளவு நல்லவர்களா?

   // நாம் கம்யூனிச நாட்டில் வாழவில்லை. அப்படி கம்யூனிச ஆட்சி வரும்போது பார்த்துக்கொள்ளலாம்//

   என்னத்த பார்பீங்க? சாரங்க என்பத “லால் ரங்குனு” மாத்துவீங்களா.

 2. நாட்டின் பொருளாதார மற்றும் இதர பல துறைகளில் கோலோச்சும் நபர்கள் பலர் ஐ.ஐ.டி யில் இருந்து வருகின்றனர்.
  பொறுப்புள்ள பதவிக்கு செல்ல தகுதி வாய்ந்த படிப்பும் திறமையும் ஒருங்கே பெற்ற இந்த மாணவர்கள் இப்படி சீரழிவது வேதனையை தருகிறது.

  பெரும்பான்மையான (உழைக்கும்) மக்களின் வாழ்க்கை முறைகளை , அவர்தம் பண்பாடுகளை ,குண நலன்களை, சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் இடர்படுகளைப் பற்றிய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் நடத்தப்படும் இது போன்ற ஆயிரம் நிகழ்ச்சிகள் இருக்கட்டுமே அனால் என்ன பயன்?

  நண்பர் சரவணன் கூறுகிறார், கோலப் போட்டி, பட்டுப் போட்டி, கவிதைப் போட்டி,க்விஸ் போட்டி இன்னும் பல போட்டிகள். ஆனால் என்னால் நம்ப முடியவில்லை இது பயனளிக்கும் என்று. ஏனெனில் நாம் படித்த முதல்நிலை பள்ளிகூடங்களிலே இது போன்ற போட்டிகள் நடைபெறும். அதையும் தாண்டி கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி (மொழி,பண்பாடு,சமுதாய கருத்துகள், விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி) சிறுவர்,சிறுமியர்கள் பேசுவார்கள்.

  இது போன்ற நிகழ்சிகளில் கூடும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களி வெறியூட்டும் நிகழ்சிகளால் அவர்களுக்கு என்ன பயன் ? விளம்பர தரகர்களே பயனடைகிறார்கள் .

  மாணவர்கள் நினைத்தால் எதையும் சாதிப்பார்கள் , மாணவர்களே எதிர்கால இந்தியா என்றெல்லாம் வாய் கிழிய கூறுபவர்கள் , இப்படியும் அவர்கள் இருப்பதை ஏற்றுக் கொள்கிறார்கள் .

  • so u r trying to say that an 19 year old has to behave like a 35 year old.I dont understand how someone having 2-3 days of fun is letting himself down for a whole lifetime.

   • இந்த ஒரு நிகழ்ச்சியால் மட்டுமே அவர்களின் வாழ்வு சீரழிந்துவிடுகிறது என்பதல்ல. பல நிகழ்ச்சிகளில்/விஷயங்களில் இதுவும் ஒன்று என்பதே அது. வேறு பார்வையில் சொல்வதானால்… Strictly No Rules என்று மங்காத்தாவில் ஆடியதை இச்சமுதாயம் கொண்டாடியதன் காரணம் அந்த ஆட்டம் தங்களை பிரதிபலித்ததன் அடிப்படையிலேதான்! இந்த நிகழ்ச்சியும் நம் இளைய சமுதாயத்தின் போக்கையே சுட்டுகிறது/பிரதிபலிக்கிறது – அந்தப் போக்கிற்கு அடிப்படை ஏகாதிபத்திய நிறுவனங்களின் பகாசுரப் பிடிமானம் – என்பதாக நம் பார்வையும் அமைகிறது. 19 வயதுப் பையன் அவன் தன் நிலையில் இல்லை என்பதே விமர்சனம். அவனை அவனாக இருக்கவிடுங்களேன்!

   • முடிந்த வரை தமிழில் பின்னூட்டம் இட முயற்சி செய்யவும்.

    [கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி (மொழி,பண்பாடு,சமுதாய கருத்துகள், விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி) சிறுவர்,சிறுமியர்கள் பேசுவார்கள்.]
    [so u r trying to say that an 19 year old has to behave like a 35 year old .]
    இல்லை, வேதியியல் , கணிதவியல்,கணிப்பொறியியல் இன்னும் பிற, கடினமான நூல்களைப் படித்து பட்டம் பெறுவதற்கு ௧௯ (19 ) வயது ஒரு தடையாக இருக்க முடியுமா? அது போலவே இதுவும்.

    அதவும், தாங்கள் கூறியுள்ள கருத்துப் படி, ௩௫(35 ) வயதுக்கு பிறகு தான் சமுதாய விழுமியங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறதே? இது சரியா?

    [dont understand how someone having 2-3 days of fun is letting himself down for a whole lifetime.]
    இக்கட்டுரை இடுகையாளர் எங்கும் , ஐ.ஐ.டிமாணவர்கள் கொண்டாட்டங்கள் மற்றும் பிற கேளிக்கைகள் யாவற்றிலும் கலந்துக் கொள்ள கூடாது என்று எழுதவில்ல்லை மாறாக அதன் எதிர்மறையான உண்மைகளை தானே அலசியுள்ளார்.

    அப்புறம் தாங்கள் கருதியுள்ளபடி, 2-3 நாட்கள் கொண்டாட்டம் தானே என்று எளிதில் கூறவியலாது ,ஏனெனில் இது ஒரு ஆண்டு மட்டும் வருவதோ அல்லது ஒருவர் மட்டும் கலந்து கொள்ளும் விழாவோ கிடையாது.

    கோடிக்கணக்கில் பணம் விரயம் செய்து என்னய்யா கேளிக்கை வேண்டி கிடக்கு?

 3. கட்டுரையில் பல விஷயங்களை ஆழமாகவும் சில விஷயங்களை மேம்போக்காகவும் தொட்டு விமர்சனம் செய்திருக்கும் நிலையில் சரவணன் அவர்கள் விஷயத்தை மிகவும் எளிமைப்படுத்திப் பார்க்கிறார். சாரங்கின் உள்ளடக்கம் மற்றும் ஸ்பான்ஸர்களை மேம்போக்காகத் தொட்டு ‘அது சரிதான்’ என்கிறார். ஸ்பான்சர் செய்யும் யாருடைய நோக்கமும் நாட்டுக்கு தொண்டூழியம் செய்வது என்ற கருத்தில் இல்லை. கலைகளை வளர்க்கிறோம் என்ற பெயரில் (அதுதானே சாரங்கின் நோக்கமாக சரவணன் கருதுவது?) கட்டவிழ்ந்து போன வாழ்க்கை முறையினை எப்படி என்ஜாய் செய்வது.. அனுபவிப்பது.. என்பதைச் சொல்வதாகவே நான் புரிகிறேன்.

  தென்னிந்திய அளவில் நடக்கும் இந்தப் போட்டிகளில் ஸ்பான்சர் செய்யும் நிறுவனங்கள் – வெறுமனே போட்டு நடத்துவதற்கான செலவுகளைக் கவனித்துக்கொள்கின்றன – என்று புரிந்து கொண்டால் அது சரியல்ல. மாறாக, பெரும்பான்மை மக்களின் அரும்பெரும் கலைகளையும், வாழ்க்கை முறைகளையும் பிரதிபலிக்காமல் தங்கள் ஏகாதிபத்திய நலன்களைக் காக்கும் வகையில் போட்டிகளின் உள்ளடக்கத்தையே தீர்மானிக்கின்றன என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். ஐஐடிக்களை தனியார்மயமாக்கும்போது இது ஒரு சாரங் அல்ல.. இன்னும் பல சாரங்குகளாக வடிவெடுக்கும்.

 4. சுட்டி காட்டிய அனைத்து விஷயஙகளூம் மறுக்கமுடியாத உண்மைகள் இது பதிவாளறின் சீறான சிந்தனையை வலியுறுத்துகிறது திருவாலர் சரவனணன் அவர்களே கொஞசம் உங்கள் பார்வையை விரிவுபடுத்துஙக்ள்

 5. i frankly see no connection between saarang and paarpaneeyam?

  irrelevant analysis.It is like saying Earth is bad,Mars is much better.So anything on earth ll seem bad,why pinpoint every single cm on earth and say 1st cm is bad,2nd cm is bad and go on till u count all the cms on earth.

 6. வரும் பிப்ரவரி மாதம் நடை பெற உள்ள சென்னை அண்ணா பல்கலை ஆண்டு விழாவான Techofes பற்றியும் வினவு எழுத வேண்டும். அங்கு 90% மக்களின் கலைகள் பிரதிபலிக்கப் படுக்கிறதா எனக் கூற வேண்டும்.

 7. //நிர்வாகம்தான் பல கோடிகளில் இக்கேளிக்கைச் சீரழிவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது//.தவறான தகவல்.1.
  விடுதிகளில் சைவம் 2.
  (விடுதிகளில் அசைவமும் உண்டு)
  இது ஒரு உயர்தர கல்வி அரசுநிருவனம்.இந்த மாணவர்கள் மிக பெரிய பதவிகளை அடைய வாய்ப்புள்ளது.ஆனால் இது போன்ற் நிகழ்சிகள் அவர்களுக்கு கண்டிப்பாக தேவை.கடுமையான படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்கிடையே ஒரு சிறிய relax.
  கட்டுரையாளரின் மனநிலையை அப்படியே பிரதிபலிக்கிறது,கட்டுரை.ஆனால் அது உண்மை அல்ல.

  • நீங்கள் தான் இரண்டு தவறான கருத்துக்களை பதிந்துள்ளீர் சுகுமார். 2. விடுதிகளில் சைவம் தவிர (முட்டை உட்பட) எந்த அசைவ உணவையும் விடுதி நிர்வாகம் மெனுவில் கொடுப்பதில்லை. Caterer கருணை வைத்தால் தவிர சிக்கன் அல்லது முட்டை தனியாக பணம் கொடுத்தால் கிடைக்கும். அத்ற்கும் ஹாஸ்டல் நிர்வாகத்திர்கும் சம்பந்தமில்லை.
   1. கட்டுரையில் எங்குமே நிர்வாகம் பலகோடி செலவு பண்ணுவதாகக் குறிப்பிடவில்லை. உண்மையில் நிர்வாகம் இந்த நிகழ்ச்சி வாயிலாக பலகோடி ஆட்டை போடுகிற்து என்பது தான் உண்மை.

   • Today we live in a world with so much free information and content available all across the internet/TV/any communication channels and a 19 year old is likely to get out of focus in anyway you may deem it to be.

    the issue is not limited to today’s times,even back in the 60s and 70s same things were issues.Not as much as today’s back then kids did other things.

    19 year old person especially in an IIT is focused enough and that’s why he/she is there. If people are generally concerned about decadence in moral and social values amongst youth today,that’s a bigger problem.

    And i am not saying people start getting socially conscious only after 35 years but that’s pretty much the time when he has enough experience to analyze society in a matured manner.

  • பதிவுக்கு சம்பந்தமில்லாத விசயங்களுக்கு இழுத்துட்டு போறதுக்குன்னே ஒரு குருப்பூ அலையுது போலயே…. ஒசிகே, அது பேன பதிவை பாத்து காண்டாயி ஹைதர் தலைப்பை முடிவு செய்தபின்னர் அந்த தலைப்புக்கு ஏற்றது போல உண்மையும் பொய்யும் கலைந்த கதம்ப சோறு.

 8. நானும் முன்னர் சாரங் இல் பங்குபெற்றவன் என்ற முறையில் இந்த விழா ஒரு ரிலாக்சேஷனுக்கு என்பதெல்லாம் சும்மா உதார். ஒரு போட்டியில் வெல்வதற்காக வெறியூட்டப்பட்டுத்தான் கல்லூரிகளில் இருந்து நேர்முகத்தேர்வுக்கு தயாராவது போல வருவார்கள். வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் நடுவர்களை நினைத்தால் இப்போது சிரிப்பாக வருகிறது. ஆம் அவர்களை அதிர்ச்சியடைய வைக்குமாறு பங்குபெற்றால் பரிசு நிச்சயம்.

 9. //இலாபநோக்கற்ற​ நிகழ்ச்சி என்று வெளியே கூறப்பட்டாலும், இந்த​ நான்கு நாட்களாக நடத்தப்படும் ‘ஷோ’க்களுக்கான​ நுழைவுக்கட்டணம், அதன் புரவலர்களான​ விளம்பரதாரர்கள், பங்கேற்கும் கலைகுழுக்கள் எனக் கோடிகளில் புரளும் இந்த நிகழ்ச்சியை பற்றி விரிவாகப் பார்த்தால் தான் இதன் பின்னாலிருக்கும் சமூகப் பொருளாதார​ இலாப​ நோக்கத்தை நம்மால் புரிந்து கொள்ள​ முடியும்.//
  ஆரம்பத்திலிருந்து 1978 வரை தொடர்பில் இருந்தேன்.அப்போது,சிக்கன்,முட்டை,ஆம்லட் எல்லாமே கிடைக்கும்.எக்ச்ட்ரா என்று தனியாக பில்லில் சேர்ப்பார்கள்.அப்பா,உறவினர்கள்,நண்பர்கள் சாப்பிடுவதற்கும் தனியாக பில் பண்ணுவார்கள்.மொத்த மாணவர்கள்,சாப்பிட்டநாட்கள் பொறுத்து பில் தொகை கணக்கிடப்படும். ஒருநாளைக்கு,நான்கு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய்க்குள் வரும்.
  முதன்முதலாக சங்கம் அமைத்து சம்பள உயர்வு பெற்று தந்தது,
  எங்களுடைய அ ணிதான்.

 10. The contents of the program can always only target the group of audience and their expectations. Is it not? They are running similar pattern of programs year by year and its well received by those students. Those students culture will not spoil in these few days !! there are hell lot of other ways. I don’t understand how baratham,krisha songs, etc can spoil their culture, its the way vinavu folks see them. I don’t understand who stopped the remaining 90% of the non-parpaniyam people in other college/companies conducting similar shows having only their traditional programs like – mayilatam,oyilatam,karagattam, etc and stick to it? I don’t understand why you are always targettig this 10% of people in all your articles. Just ignore them and try to see what you can realistically to do solve all the problems mentioned by you in SIMPLE STEPS, rather than stating Govt has to be changed. That could be final target, but you cannot achieve it in first step

  All the non-parapaniyams have been given reservations in all education/sector (not sure in IIT) for last 30 years. No one stopping them from getting the required entrance marks and joining IIT. Is there any such group of parpania professors stopping the non-brahmins entering the campus??

  • //They are running similar pattern of programs year by year and its well received by those students. Those students culture will not spoil in these few days !! there are hell lot of other ways//

   எதுக்கு உங்களுக்கு அடுத்தவன் நாட்டு கலாச்சாரம் யாருக்குகாக ராக் பாப் எல்லாம் நடத்தனும்? உங்களை மேட்டுகுடி மாகன்கள் என்று காட்டி கொள்ளவா? அங்க வந்த மாணவர்களிள் 80% மேடையில ஆடிய சில ராக் பாப் ஸ்டார்கள் யார் என்று கூட தெரியாது சுத்தி இருக்கும் 20% அடுரானுங்கனு இவனுங்க சேந்து அடுரானுங்க. தெரியாத கலைக்கும் அறியாத ஸ்டாருக்கும் எதுக்குங்க கொடிபுடிக்கனும்? இதயும் உள்ளடக்கி தான் கலாச்சார சீர்கேடு என்கிரோம். லூசிங் ஒன்ஸ் இன்டிஜுவாளிட்டி.

   // I don’t understand how baratham,krisha songs, etc can spoil their culture, its the way vinavu folks see them.//

   வினவு எங்கயாச்சும் பரதம், கர்நாடக சங்கீதம் எல்லாம் கலாசார சீர் கேடு என்று சொன்னார்களா? பார்ப்பனிய கலாச்சார போற்றுதல் என்று தான் சொன்னார்கள். சும்மா எதாச்சும் எழுத வேண்டியது.

   // . I don’t understand who stopped the remaining 90% of the non-parpaniyam people in other college/companies conducting similar shows having only their traditional programs like – mayilatam,oyilatam,karagattam, etc and stick to it? //

   இதே கேள்வியை நான் திருப்பி கேக்குறேன் உங்கள் கணக்கு படி இருக்கும் 10% பார்ப்பனியர்களை யார் தமிழர் கலைகளை நடத்தாமல் தடுத்தது ? மற்ற கல்லூரிகளில் இருக்கும் 90% பார்ப்பன அல்லாதவர்கள் எனற வாக்கியத்தின் உள்ளறுத்தம் என்ன? ஐஐடி யில் எங்கள் ஆதிக்கம் அதுனால் நாங்கள் வைப்பது தான் சட்டம் என்று அர்த்தமா?

   // I don’t understand why you are always targettig this 10% of people in all your articles..//

   இந்த 10% சும்ம விட்டா 90% இல்லாம ஆக்கிடுவனுங்க. வரலாறு கற்று கொடுத்த பாடம்.

   //All the non-parapaniyams have been given reservations in all education/sector (not sure in IIT) for last 30 years.//

   30 ஆண்டுகள் முன்பு வரை பார்ப்பனிய அல்லாதோரின் நிலை என்பது யாவரும் அரிந்ததே. அதிலும் கல்வி துறையில் சொல்லவே தேவையில்லை.

   //Is there any such group of parpania professors stopping the non-brahmins entering the campus??//

   ஆமாம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படிதான்.

   • Boss,

    why do you think the 90% people get attracted by the ideas of the 10%?why do you think the 10% come up with ideas that misdirects the 90%(according to you),we live in the era of internet and you tube and thus,culture is not isolated anymore.do you think you can resist a cultural imperialism by isolating yourself?I am merely asking you questions.I personally have gone through all these phases of loving everything westernized and thinking not too great of native ideas and all that.Now i am very balanced in my judgement and i dont only judge ideas/issues based on their mere quality.Just answer my questions honestly?

    how can 10% people influence 90% people.I agree 50 years ago people had an image of the 10% and they followed it but now everyone is educated,learned,the dravidian revolution has removed the ideas/influence/culture of the brahmins and even the brahmins have given up their rigid cultural beliefs/systems,then why do u still think the 90% gets swayed by the 10%. Honestly it is not even 10%,it is more like 3-4%.

   • 1. Again your repeating the same story. Why you are bothered about what culture they are following?

    2. You have to understand already majority of brahmins familes relocated to US/Europe. Now its only <5% – and you still like to target them. Sariana comedy !! – you can continue to write/talk in similar lines without actually concentrating on improving the SC/STs social status.

    3. If we are talking the present scenarion, why ur talking about 50 yrs back -:)

    4. If I ask u to concentrate on so called tamil arts (mayilatam,oyilatam,karagattam) you are again asking the reverse one and pointing this 5% folks. Again a comedy. It shows the vinavu & co inability to improve on required areas, rather just pointing mistakes. There are many social sites/papers/media doing the same excercise. I never say anyone stating 'practical' solutions. pl try that.

    • //Again your repeating the same story. Why you are bothered about what culture they are following?//

     நான் பாதர் ஆகுவதை பற்றி சொல்லும் பிரதர், நீங்க ஏன் அவங்களை பற்றி சொன்னால் பாதர் ஆகுறிங்க பாஸ். கருத்துக்கு கருத்து சொல்லுங்க தெரியலைனா சும்மா இருங்க. அத விட்டுட்டு அதே கதை, அடுத்தவன பற்றி உனக்கு ஏன் கவளை? இத எல்லாம் ஏன் சொல்றீங்க. இல்லை நீங்கள் சொல்வது தவறு இது போன்ற கலாச்சாரம் நம் இளைஞர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை ஆதாரத்துடன் எழுதுங்க அத விட்டுட்டு சும்மா பாதர் ஆகாதீங்க என்று எல்லாம் சொல்லாதீங்க பாஸ். நீங்க வினவையும் எங்களையும் “இனெபிலிட்டி” என்று வசபாடுறீங்க. என்ன கொடும்ம சார் இது?

     // You have to understand already majority of brahmins familes relocated to US/Europe. Now its only <5% – and you still like to target them. Sariana comedy !! //

     நீங்க தாங்க மிக பெரிய காமடி. முதல்ல 10% என்றீர்கள் பிறகு 5% என்று சொல்றீங்க. பெரும்பாலான பார்பனர்கள் அமெரிக்கா ஐரோப்பியா போய்ட்டாங்கனு வேற சொல்றீங்க. எந்த புள்ளி விவரத்த வைத்து இதை சொல்றீங்க? சென்சஸ்ல இந்த விவரங்கள் இருக்கா?.

     //you can continue to write/talk in similar lines without actually concentrating on improving the SC/STs social status//

     ஆடு நனையுதேன்னு ஓநாய் அலுதுச்சான். இதை பற்றி விரிவாக பேசி எழுதியாச்சு புதுசா ஒன்ன ஆறம்பிக்காதீங்க.

     // If I ask u to concentrate on so called tamil arts (mayilatam,oyilatam,karagattam) you are again asking the reverse one and pointing this 5% folks//

     நான் கேட்ட கேள்விக்கும் நீங்க சொன்ன பதிலுக்கும் எதாச்சும் இனைப்பு இருக்கா? சரி அந்த பின்னோட்டத்துல மற்ற கேள்விகளுக்கு அமைதியாக இருப்பது ஏன்?.

     //If we are talking the present scenarion, why ur talking about 50 yrs back //

     every present has a past and every past has a history. if you are going to deliberate on the present without understanding the root of the past you are going to be in no man's land bro.

     • Unga kumbala matha mudiathu. If you have to educate the people reading these forums nothing wrong in repeating the same details again anda again. Or at least group them in single place and give it as reference when ever new people joins, rather than simply stating ‘இதை பற்றி விரிவாக பேசி எழுதியாச்சு புதுசா ஒன்ன ஆறம்பிக்காதீங்க’. Particularly if you have some detailed statistics showing how this 10% (what ever %) of brahmins is still controlling the remaining 90%, it will be really informative. I see in many different articles stating the history in this aspect!!!

      We will enjoy all your anti brahmin, anti hindu articles as comedy show. And use only the other informative articles like fertilizer impact, koodangulam, etc.

      • //We will enjoy all your anti brahmin, anti hindu articles as comedy show. And use only the other informative articles like fertilizer impact, koodangulam, etc.//

       தம்பி ‘சீ’னிவாசா உமக்கு எவ்வளவு சொன்னாலும் புரியலங்கிறதால​தேன் வினவும் சளைக்காம​ பார்ப்பனிய​ எதிர்ப்புக் கட்டுரையா போடுது. உண்மயில​ உம்மோட​ கொமென்ட் தேன் எமக்கு கோமெடியாப் படுது. எப்படி ஒராளால​ பெர்டிலைசருக்கு எதிராவும் கூடங்குளத்துக்கு எதிராவும் எழுதறத​ சீரியசாப் படிச்சிக்கிட்டு பார்ப்பானயும் அவனோட​ ஏகாதிபத்திய​ கள்ள​ உறவையும் (மன்னிக்கோணும், இப்பல்லாம் அவா அப்பட்டமாத்தேன் உறவு வச்சுக்கறா) அம்பலப்படுத்தினா மட்டும் கோமெடியாத் தோணும். இதுக்கு எமக்கு தெரிஞ்சி ஒரே ஒரு காரணந்தேன் இருக்கமுடியும் Selective Amnesia 😛

       • Just FYI : Selective Amnesia is a common disease – with many of us !! ..let it be..

        Can any one of you send me a link where I can see what vinavu & Co has done pratically so far in below aspect

        “Or at least group them in single place and give it as reference when ever new people joins, rather than simply stating ‘இதை பற்றி விரிவாக பேசி எழுதியாச்சு புதுசா ஒன்ன ஆறம்பிக்காதீங்க’. Particularly if you have some detailed statistics showing how this 10% (what ever %) of brahmins is still controlling the remaining 90%, it will be really informative”

        • கைய்யப் புடிச்சு இழுத்தியா?
         என்ன கைய்யப் புடிச்சு இழுத்தியா?
         ஏற்கனவே அவிங்க​ ஊருக்கும் நம்ம​ ஊருக்கும் வாய்க்கா பிரச்சன​..
         என்ன வாய்க்கா பிரச்சன​?

 11. “ஐ.ஐ.டி சென்னையோ கடந்த​ 20 ஆண்டுக்காலத்தில் படிப்படியாக​ நிரந்தரத் தொழிலாளர்களைக் குறைத்துவிட்டு ஒப்பந்த​ கூலிகளைக் கொண்டு நிரப்புவதோடு மட்டுமன்றி, அந்த​ அமைப்புசாரா தொழிலாளர்களை அடிமாடு போல​ நடத்துகிறது. கல்வி தனியார்மயத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதில் இந்தியாவின் முன்னோடி நிறுவனமாக இருப்பதோடு மாணவர்களையும் மிக மோசமாக ஒடுக்கிவருகிறது. ஐஐடி மாணவர்களுக்கான கேண்டின் வசதி, ஹாஸ்டல் வசதிகள் பற்றி கேட்டால் ‘ஐஐடி ஒன்றும் தர்மாஸ்ரமமல்ல’ என்று சொல்லும் நிர்வாக”

  when I went to IIT chennai 7 years back i saw this incident:
  Since we ppl are participating from all other colleges, (many of) the private security persons have to do OVER duty – continuously more than 48 hours. the security guard in front of your hostal room (i think kodhavari hostal; not sure) was drowsy; he hardly could open his eyes; So with out his notice his supervisor came and took his pen with him. The guard told us that because of this incident he has to loose 1 day wage.

 12. //All the non-parapaniyams have been given reservations in all education/sector (not sure in IIT) for last 30 years. No one stopping them from getting the required entrance marks and joining IIT. Is there any such group of parpania professors stopping the non-brahmins entering the campus??// YES. THERE IS RESERVATION IN ADMISSION LEVEL. SCHOLOR SHIP FOR THEM AVAILABLE.(NOT ON MERIT)

 13. சாரங்கின் மூலம் மாணவர் சமூகம் பெற்றது என்ன?பெறுவது என்ன?உயர் கல்வி கற்கும் மாணவர்களில் பலர் தாய் நாட்டிற்குப் பயன்படுகிறார்களா? வாழ்வு இன்பம் துய்ப்பதற்கே என்ற கோட்பாட்டுடன்தான் அவர்கள் வாழ்கிறார்கள்.தன்னைச்சுற்றி இருக்கும் இந்த உலகம் என்ன நிலையில் இருக்கிறது .யார் காரணம் என்று சிந்திக்கவே பலர் தயாராயில்லை.போராடும் மக்களின் வாழ்னிலையை அவர்கள் அறிந்திருக்கவே இல்லை.மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் சேர்ந்து ஏழைக்குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களும் சீரழிந்து போகின்றனர்.அனேகம்பேர் தம்மை ஆளாக்கிய பெற்றோர் உட்பட குடும்பத்தையே புறக்கணித்து விடுகின்றனர்.இதைப்பார்த்து பெற்றோர்கள் வேதனையில் வெதும்பிச் சாகிறார்கள்.இது தான் சாரங் கற்றுத்தரும் கலாசாரம் ??

 14. now the central govt has announced that GATE Exam is essential for central govt jobs
  this is to stop OBC and SC/St to get into central govt jobs.since the questions for
  GATE is set by iit and iisc and results are declared by them.ie indirectly insisting to allow upper caste into the govt institutions.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க