Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !

தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !

-

கூமாபட்டி-வத்திராயிருப்பு பகுதிகளில் தலித்கள் மீது தேவர் சாதி போலீசின் கொலைவெறியாட்டம் !

 ஆனந்தன்
வண்டியில் இருப்பவர் ஆனந்தன்

பார்ப்பன பாசிச ஜெயலலிதாவின் ஆட்சி வந்து விட்டால் போலீசுக்குக் கொண்டாட்டம் தான். ஜெயலலிதாவின் ஆட்சி போலீசின் ஆட்சி. அதுபோலவே ‘அவாளுடைய’ ஆட்சியும் கூட. பார்ப்பன ஊடகங்கள் தொடங்கி ‘அவாளின்’ அனைத்து தரப்புக்கும் ஒரு நமுட்டு மகிழ்ச்சிதான். அத்தோடு இப்போது முக்குலத்தோர் சாதி வெறியாட்டமும் சேர்ந்து கொண்டு கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் அணைப் பகுதியில் நடைபெற்ற மணல் கொள்ளையை எதிர்த்து தன்னந்தனியாகப் போராடிய தலித் விவசாயி கூமாபட்டி ராமசாமியாபுரம் ராஜேந்திரன் கடந்த அக்டோபர் மாதம் 11ந்தேதி அதற்காகத் தீக்குளித்து இறந்தார். அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த அனுமதி கோரிய அவரது குடும்பத்தார் மற்றும் அந்த ஊர் மக்களை அனுமதிக்காமல் காட்டு மிராண்டித்தனமாக தடியடி தாக்குதல் நடத்தி விரட்டிவிட்டு உடலை போலீசே சிதையில் வைத்து தீ முட்டியது. இறுதி அஞ்சலிக்குச் சென்றிருந்த மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் மீதும் தடிகொண்டு தாக்கிய டி.எஸ்.பி.சக்திவேல், இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி, சப்இன்ஸ்பெக்டர் ஐயப்பன் ஆகியோர் மீது உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளிக்கப்பட்ட புகாரின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

அதற்குள் மேலும் ஒரு காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறது வத்திராயிருப்பு-கூமாபட்டி போலீசு. கூமாபட்டியை அடுத்துள்ள கான்சாபுரத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஆனந்தன். வயது 24. தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழில். கடந்த 13/05/12 அன்று கான்சாபுரத்துக்கு தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வந்த போது நடைபெற்ற தகராறில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார் ஆனந்தன். அவர் மீது காவல்துறை குண்டாஸ் வழக்குப் போட்டது. ஆனால் அந்த வழக்கு விசாரணைக் குழுவின் முன்பாக நிருபிக்க முடியாமல் தள்ளுபடியாகி விட்டது. இருந்தாலும் துடிப்பாகச் செயல்படும் ஆனந்தனின் கொட்டத்தை அடக்க போலீசு துடித்தது. ஆனந்தனைக் கண்ட இடத்தில் கைது செய்யத் தீர்மானித்து கொலை வெறியுடன் அலைந்தது கூமாபட்டி முக்குலத்து சாதிவெறி போலீசு படை.

கடந்த 14/11/2012 அன்று குடும்பத்தினருடன் அவரது வீட்டிலிருந்த ஆனந்தனை இருபது பேர் கொண்ட போலீசு படை வந்து திடீரென கைது செய்து கூமாபட்டி காவல்நிலையத்திற்கு இழுத்துச் சென்றது. மறுநாள் 15-ம் தேதி இரவு ஆனந்தனின் பெற்றோரை அழைத்து “உன் மகன் மதுரை பெரிய ஆஸ்பத்திரியில இருக்கான் போய் பார்த்துக்க” என்று கூமாபட்டி போலீசு ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் மதுரை மனித உரிமை பாதுகாப்பு மையச் செயலாளருக்கு கூமாபட்டி வழக்கறிஞர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது. ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது ஆனந்தன் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் குற்றுயிரும் கொலையுயிருமாக தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனந்தன் நம்மிடம் சொன்னது:

“நான் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் படம் போட்ட பனியன் போட்டிருந்தேன். அந்த பனியனை கழற்றச் சொன்னார் எஸ்.ஐ.சந்திரசேகர். பனியனைக் கிழித்து கீழே போட்டார், அதன்மீது எல்லா போலீசும் சிறுநீர் கழித்தார்கள். அதை எடுத்து திரும்பவும் என்னைப் போடச் சொன்னார்கள். முடியாது என்றதற்காக கடுமையாக அடித்தார்கள். இரவு முழுவதும் கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்தார்கள். மயக்கம் தெளியத் தெளிய லத்தியால் அடித்தார்கள். பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்து துவைத்தார்கள். மறுநாள் 15/11/12 மாலை 4.45 மணிவரை அடி ஓயவில்லை. எனது இரண்டு சிறுநீரகங்களும் சிதைந்து சிறுநீர் ரத்தமாக வெளியேறுகிறது. அடிவயிற்றில் உதைத்ததில் ஆசனவாய் வழியாகவும் ரத்தம் வெளியேறுகிறது.”

பின்னர் ஆனந்தன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு 3 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டிருந்தது. உள்ளுறுப்புகளில் ரத்தக்கசிவு நிற்கவில்லை. பாதுகாப்பில் இருந்த போலீசு ஆனந்தனைச் சந்தித்துப் பேச யாரையும் அனுமதிக்கவில்லை. ஆனந்தனின் உடம்பு முழுவதும் காயம் உள்ளது. லத்தி, இரும்புத்தடி கொண்டு தாக்கிய காயங்கள் உள்ளன. ஆனால் எலும்பு முறிவு இல்லை. கொடுங்காயம் விளைவிக்காமல் கொஞ்ச நாள் அவகாசத்தில் சாவை நோக்கித் தள்ளும் கொலைக்கலையை தமிழக போலீசிடம் உலகமே கற்றுக் கொள்ள வேண்டும். அடிபட்டவரை புகைப்படம் எடுக்க காவல் துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகமும் அனுமதிக்கவில்லை.

கூமாபட்டி எஸ்.ஐ.சந்திரசேகரன், கருப்பசாமி பாண்டியன், ஏட்டுக்கள் முரளி, பெரியசாமி ஆகியோர் தான் சாதி வெறி கொண்டு கீழ்த்தரமாகத் திட்டி மிருகத்தனமாக அடித்தவர்கள் என்று பதிவு செய்தார் ஆனந்தன். 17ந் தேதி மாலை 5.30 மணியளவில் ஸ்ரீவிலிபுத்துர்ர், மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போன போது ஆனந்தன் தனக்கு நேர்ந்த  கொடுமைகளை விளக்கியிருக்கிறார். மாஜிஸ்டிரேட் ஒரு பெண். அவர்தான் மதுரை மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொல்லியிருக்கிறார்.

ஆனந்தனின் அப்பா ரெங்கநாதன் விவசாயி. அம்மா மலர்விழி பி.காம். டி.கோ ஆப் பட்டதாரி. சகோதரர் ராஜேஷ், கூமாபட்டி போலீசின் கொலை வெறிக்குப் பயந்து சென்னைக்குப் போய்விட்டார்.

ஆனந்தன் மீது பல்வேறு பொய் வழக்குகளைப் போட்டு வைத்துக்கொண்டு அவரது வீட்டுக்கு கண்ட நேரங்களில் வந்து அவரது பெற்றோரை மிரட்டி வந்துள்ளது போலீசு. போலீசின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பயந்து தலைமறைவாயிருந்த ஆனந்தனை ஒப்படைக்கக் கோரி போலீசு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது.

ஆனந்தனின் அம்மா மலர்விழியைச் சந்தித்து கேட்ட போது கூமாபட்டி போலீசு அவர்களுக்கு கொடுத்து வந்த இம்சையை வேதனையுடன் விவரித்தார்.

“என்னுடைய மகன் ஆனந்தன் தென்னை ஏறும் தொழில் செய்து வந்தான். பொதுப் பிரச்சனைகளில் தலையிடுவான். போலீசு செய்யும் சட்ட விரோத செயல்களைத் தட்டிக் கேட்பான். போலீசுக்கு பயப்படமாட்டான். எதிர்த்து நிற்பான். அவன் மேல நிறைய பொய் கேசுகளை போட்டு எங்களை வந்து அடிக்கடி தொல்லை பண்ணினாங்க. என்மேல கூட போலீசு ஒரு பொய் கேச போட்டுச்சு. ஒரு பொம்பளையாளுகிட்ட நான் செல்போன் கேட்டதாகவும், அந்தம்மா தராமாட்டேன்னு சொன்ன உடனே அந்தம்மாவை கழுத்தை நெறித்து கொல்ல முயற்சி பண்ணதாகவும் பொய்கேசு போட்டு உள்ள அடச்சாங்க. நான் ஜாமீன்ல வெளியே வந்தேன். இப்பவும் என்மேல கேசு இருக்குது. போலீசு தொல்லை கொடுக்கிறதப்பத்தி டி.எஸ்.பி. கிட்ட புகார் கொடுத்ததுக்கு கூமாபட்டி எஸ்.ஐ. என்னை சாதியச் சொல்லி கேவலமாக திட்டி “உனக்கு ரெண்டு பிள்ளைகள்ல ஒன்று இல்லன்னு நினைச்சுக்கோ. என்றைக்காயிருந்தாலும் அவனுக்கு என்கையால தான் சாவு. தியாகம் செய்யிறதுக்குன்னு பிள்ளை பெத்து விட்டிருக்கியா? தேவடியாப்பிள்ளையை பெத்து விட்டிருக்க” என்று கேவலமாகப் பேசினார்.”

” 2010-ல் ஊர்த்திருவிழாவின் போது கண்ணையா எஸ்.ஐ. வண்டிய (பைக்) அன்பழகன் என்கிற பையன் தீ வச்சுட்டான். அவனப் புடிச்சி ஊர்க்காரங்க ரு.10 ஆயிரம் தெண்டம் வாங்கி எஸ்.ஐ க்கு கொடுத்துட்டாங்க. ஆனா அந்த கேச என் மகன் ஆனந்தன் மேல போட்டுட்டாங்க. தீபாவளியப்ப ஆனந்தனை எப்படியாவது பிடித்துவிடனுமுன்னு கங்கணம் கட்டி அலஞ்சது போலீசு. அதனால் அவனை நான் வெளியூருக்கு அனுப்பிவைச் சுட்டேன். தீபாவளி முடிஞ்சு மறுநாள் (14.11.12) அவன் வந்த உடனே பிடிச்சிட்டுப் போயிட்டாங்க.” என்று சொன்னார் மலர்விழி.

ஆனந்தனின் பெற்றோர்

ஆனந்தன் மீது என்ன புகார். என்ன வழக்கு என்கிற எந்த விவரமும் தெரிவிக்காமல் இழுத்துக்கொண்டு போய்விட்டார்கள். மாஜிஸ்டிரேட்டிடம் கொண்டு போவதற்கு முன் ஆனந்தனின் மாமியாரிடம் மிரட்டி 2 வெற்றுத் தாள்களில் கையொப்பம் வாங்கியிருக்கிறது கூமாபட்டி கிரிமினல் போலீசு. அதில் ஆனந்தன் குடித்துவிட்டு அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதாக புகார் எழுதிக் கொண்டது.

எதற்காக இந்த தாக்குதல். ஏன் இந்தக் கொடுமை? என்ன தவறு செய்தார் ஆனந்தன்?

மலர்விழியிடம் கேட்ட போது சொன்னார் : போலீசிடம் இருக்கும் சாதி வெறி தான் இதற்கு காரணம். கேவலம் பள்ளன் பறையனெல்லாம் போலீச எதிர்த்துப் பேசுவதா? அப்புறம் பாண்டியமாரு (தேவர் சாதி) மரியாதை என்னாவது? என்கிற வெறிதான்.

இதுதான் 2011 செப்டம்பர் 11-ல் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவுநாளன்று நடந்தது. அங்கேயும் போலீசில் பெரும்பான்மை முக்குலத்தைச் சேர்ந்தவர்கள் தான். வத்திராயிருப்பு கூமாபட்டி பகுதியிலும் அதே நிலைமை தான் என்று சொல்கிறார்கள்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தன்மானமுள்ள ஒருவன் போலீசு கையில் சிக்கினால் அந்த ஏரியா முழுவதும் உள்ள சாதி வெறி கொண்ட போலீசு மிருகங்கள் அங்கே அழைக்கப்படும். பெரிய அளவில் திட்டமிடப்பட்டால் உயர் அதிகாரிகள் கூட வருவார்கள். பரமக்குடி செந்தில்வேலன் எஸ்.பி. வந்ததைப் போல. தருமபுரி யிலிருந்து ஆஸ்ராகர்க் மதுரை தேவர் குருபூஜைக்கு அழைக்கப்பட்டதைப் போல. (அந்த நேரத்தில்தான் தருமபுரியில் தலித்களின் மீது வன்னியர்களின் கொலைவெறியாட்டம் நடைபெற்றது).

பிளவக்கல் மணல் கொள்ளைக்கு எதிராக உயிர்நீத்த தியாகி ராஜேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட அனுமதி மறுத்த போலீசு, தேவர் குருபூஜை சம்பவத்தில் செத்தவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்துக்கொண்டு கோரிப்பாளையம் தேவர் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் பழிக்குப் பழியாக கொன்றொழிப்போம் என்று பகிரங்கமாக கொக்கரிக்கவும் அனுமதித்தது.

80களில் விருதுநகர் மாவட்டம் சேத்துர்ர், சிவகிரி, வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்கள் ராயப்பன், கணபதி போன்ற நக்சல்பாரி தோழர்களால் சிவந்திருந்தது. அது மீண்டும் சிவந்து விடாமலிருக்க போலீசு இந்த வெறியாட்டம் போடுகிறது என்று கருதுவதற்கும் இடமிருக்கிறது. அத்துடன் போலீசுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஆதிக்க சாதி வெறி-குறிப்பாக முக்குலத்து சாதி வெறியும் ஒரு காரணம். இது ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு புதிய பரிணாமம்.
________________________________________________________________________
தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை
________________________________________________________________

 1. Thanks for publishing this news.Its very annoying to read this.TN police department is at the hands of Devar community.So dalits are always at the receiving ends.In most of the TN police shoot out the victims are dalits alone.I haven’t seen any action taken against caste Hindu’s who indulge in caste violence!!!Dance of Indian democracy and judiciary!!!!!

 2. அடபோங்கங்பா…தலித்கள் கல் தடுக்கி விழுந்தாலும், அது முக்குலோத்தோர் வீட்டுக்கல் அதனால்தான் தேவர் சாதி வெறியில் அப்படி பள்ளர்களையும் பறையர்களையும் தடுக்கி விடுகிறது என சொல்வீர்கள் போல..

 3. திருச்சியில் தேவர் ஜெயந்தி ஊர்வலம் சென்றமைக்காக 145 பேர் மீது வழக்கு, 61 வயது முதியவர் மீது குண்டாஸ்..அங்கு DC மற்றும் 2 AC-கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்..அதை பற்றியும் நடு நிலையோடு கட்டுரை எழுதலாமே..அவுங்க செய்தா சமூக நீதியா..?

 4. தலித்கள் எல்லாம் கல்வி, தொழிற்கல்வி கற்று நகர்புறத்திற்கு இடம் பெயர ஆரம்பித்தால் போதும்…
  எப்படி இருந்தாலும் தலித்களுக்கு பல தொழிற்திறமைகள் உண்டு (உதா: விவசாயம், தையல், செருப்பு செப்பனிடுதல்…, உடலுழைப்பு)…

  இவர்களிடத்தில் என்ன திறமை இல்லை???
  நகரமயம் சார்ந்த சமூகமாகிவிட்டால் லோக்கல்நாட்டாமைகள் எல்லாம் சிங்கி அடிக்க ஆரம்பித்து விடுவார்கள்…

  • இருக்கட்டும் பாஸ்..இவனுங்களுக்கு நம்ம இனத்தை பற்றி ஏதாவது எழுதி கொண்டே இருக்க வேண்டும்..தலித் எவன் செத்தாலும் அதுக்கு தேவர் ஜாதி தான் பொறுப்பு..நடப்பது எல்லாம் நன்மைக்கே..

 5. // போலீசுத் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஆதிக்க சாதி வெறி-குறிப்பாக முக்குலத்து சாதி வெறியும் ஒரு காரணம். இது ஜெயலலிதாவின் ஆட்சியில் ஒரு புதிய பரிணாமம். //

  போலீசு துறையில் அதிகம் இருப்பவர்கள் தலித் இனத்தை சார்ந்தவர்கள் தானே! நூற்றில் ஒரு சதவீதம் கூட தேவரினத்தவர்கள் இல்லையே! சும்மா எதாவது கதையை இட்டுகட்டி திரைக்கதையாக்கி புரட்சி என்ற மசாலாவை தூவி இது மாதிரியான குப்பைகளை எவ்வளவு நாளுக்குத்தான் கொட்டப் போகிறீர்கள்?

  • //போலீசு துறையில் அதிகம் இருப்பவர்கள் தலித் இனத்தை சார்ந்தவர்கள் தானே! நூற்றில் ஒரு சதவீதம் கூட தேவரினத்தவர்கள் இல்லையே! சும்மா எதாவது கதையை இட்டுகட்டி திரைக்கதையாக்கி புரட்சி என்ற மசாலாவை தூவி இது மாதிரியான குப்பைகளை எவ்வளவு நாளுக்குத்தான் கொட்டப் போகிறீர்கள்?//

   பாஸ், கதை இட்டுக்கட்டுவது பற்றியெல்லாம் பேசறீங்க. நீங்கதானே மள்ளர்-மல்லர் என்பது பற்றி உங்களது தேவர் தளத்தில் ஒரு சூப்பரான உண்மை கட்டுரை எழுதியது. அதைப் பார்த்தாலே தெரியுமே நீங்க எந்த அளவிற்கு உண்மை பேசுபவர் என்று! இந்த மாதிரி இட்டுக்கட்டி எழுதுவதற்கு உங்களுக்குத் தியாகு பயிற்சி கொடுத்தது மாதிரியில தெரியுது. ஏன்னா இந்த மாதிரி பச்சை உண்மையா(?) எழுதுவதில் தியாகு டாக்டர் பட்டம்ல வாங்கி இருக்கிறார். நீங்கள் அவரின் துணையுடன் மள்ளர்-மல்லர் பற்றி ஆராய்ச்சி செய்வதைப் பார்த்தாலே தெரியுதே!

  • போலீசு துறையில் அதிகம் இருப்பவர்கள் தலித் இனத்தை சார்ந்தவர்கள்….//

   அப்படியா இமலாதித்தன்?

   எனில், சில லட்சம் துருப்புகளைக் கொண்ட வெள்ளையர்கள் கோடிக்கணக்கான இந்திய மக்களை ஆண்டதெப்படி?

   கொஞ்சூண்டு எண்ணிக்கையுள்ள பார்பான்கள் மக்களை பிளவுபடுத்தி ஒடுக்கியதெப்படி?

   விரல்விட்டு எண்ணக்கூடிய முதலாளிகள் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை சுரண்டிக் கொளுத்ததெப்படி?

   எண்ணிக்கையல்ல இங்கு பிரச்சினை.

   உங்கள் திரைக்கதைதான் மசாலா இல்லாமலேயே படு பயங்கரமாக நாறுகிறது. தயவுசெய்து வேறு எங்காவது போய் இந்த குப்பையைக் கொட்டினால் நன்று.

  • // Dear ஆர்.தியாகு,
   Please try to understand the reality and write reply to that only.////

   நீங்க என்னங்க தியாகுவிடம் இப்படி யதார்த்தத்தை பேசுவது பற்றிச் சொல்லிக்கிட்டு இருக்கீங்க!. அவரிடம் தயவு செய்து இப்படியெல்லாம் கேட்காதீங்க.அது அவரைச் சிறுமைப்படுத்துவதாகி விடும்.

 6. இந்த பிற்படுதப்பட்ட 3 ஜாதிகாரங்க தொல்லைக்கு அலவே இல்ல….21ம் நூற்றாண்டுலயும் இப்படி இருகானுங்க!

  • ///இந்த பிற்படுதப்பட்ட 3 ஜாதிகாரங்க தொல்லைக்கு அலவே இல்ல….21ம் நூற்றாண்டுலயும் இப்படி இருகானுங்க!////

   அகமுடையாரைச் சொல்லாதீர்கள் நண்பரே. அவர்கள் கள்ளர் மற்றும் மறவர்களின் சதித்திட்டங்களின் உண்மைகளை உணர்ந்து விலகிக் கொண்டிருக்கிறார்கள். அகமுடையார் இனத்தைச் சார்ந்த எனது நண்பன் ஒருவன் கள்ளன், மறவர் என்ற இந்த இரு இனத்தவர்களின் அட்டூழியங்களை மனம் வருந்தி என்னிடம் சொல்லியிருக்கிறான். உண்மையில் அகமுடையார் இந்த இரு இனத்தார்களை நம்புவதும் இல்லை. இவர்களோடு இணைந்து செயல்பட சிறிது விருப்பமும் இல்லை. இவர்கள்தான் முக்குலம்..முக்குலம் என்று வெளியே படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

   • இங்கு தேவர்சாதிக்காய் பின்னுட்டம் இடுபவர்கள் எல்லோரும் முக்குலத்தோரில் ஒரு பிரிவான வாட்டாக்குடி இரணியன் மருதிருவர் பிண்ணனி கொண்டவர்களே!!

 7. போலீசின் அதிகார வர்க்க வெறியும், சாதி வெறியும் ஒன்று ஒன்று சேர்ந்து ஒரு துடிப்பான தலித் இளைஞனை வன்மம் கொண்டு தாக்கியிருக்கிறது. இந்தத் திமிர் இந்தக் காக்கி நாய்களுக்கு எங்கிருந்து வருகிறது? பார்ப்பனப் பாசிச செயாவின் போலீசு ஆட்சியும், முக்குலத்தோர் சாதி வெறியும் தான் இந்தத் திமிருக்குக் காரணம்.

  எவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்கின்றன இந்த ஓநாய்கள். இவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட வல்லவர்கள் நக்சல்பாரிகள் தான்.

 8. இரண்டயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பார்பனியதின் ஆதிக்கதால் அடிமை படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட, உழைக்கும் மக்கள் பின்பு பண்னை ஆதிக்கத்தாலும் இன்று ஆதிக்க சாதி வெறிப்பிடித்த மேல் சாதியினரின் வெறிக்கு இரையாக்கப்படுகின்றனர்.இனிமேலும் அவர்களை திருத்தி மனிதாபிமானம்,சமத்துவம்,கற்றுகொடுக்க முடியாது.இந்த சாதிவெறி அவைகளின் இரத்தத்தில் தொன்றுதொட்டு ஊறிவந்துள்ள விஷம். இனி ஆதிக்க சாதியின் இந்த கொட்டத்தை அடக்க அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் நக்சல்பாரிகளுடன் ஓர் அணியில் திரள வெண்டியதுதான் ஒரே தீர்வு.

  • //இனி ஆதிக்க சாதியின் இந்த கொட்டத்தை அடக்க அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் நக்சல்பாரிகளுடன் ஓர் அணியில் திரள வெண்டியதுதான் ஒரே தீர்வு.//

   கீழ் கண்டவற்றை தோழர் எம்.இ பாலா அவர்கள் சொன்னால் நாங்களும் சேர வசதியா இருக்கும்.

   உறுப்பினர் கட்டணம்
   புதிய ஜனநாயக இதழ் சந்தா கட்டணம்
   ஜாதிவாரியான எதிர்ப்பு பாடல் சி.டி கட்டணம்
   சாலை மறியல் போராட்ட கட்டனம்
   மனிதசங்கிலி போராட்ட கட்டணம்
   தெருகூத்து கட்டணம்
   நாடக கட்டணம்
   பி.சி.ஆர் வழக்கு போட கட்டணம்

   –அடபோங்கப்பா கையெல்லாம் வலிக்குது மற்ற எல்லாத்தையும் சேர்த்துச் சொல்லுங்க…
   மொத்தமா கொடுத்துட்டு நாங்களும் சேர்ந்துக்குறோம்…

   • தியாகு அவர்களே, நீங்கள் எல்லாம் மனித இனத்திலே சேர்க்க முடியாதவர்கள்? நக்சல்பாரி இயக்கம் என்பது கொள்கைகளுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடக்கூடியதா என்பது தெரியவில்லை? ஆனால் தயவு செய்து நீங்கள் மட்டும் அதில் சேர்ந்துவிடாதீர்கள் ? அப்புறம் அங்கும் ஜாதி பெருமை பேசி பிரிவினையை எற்படுத்திவிடுவீர்கள்?

    • தியாகு அவர்களே நக்சல்பாரிகள் உழைக்கும் மக்களுக்காக அரச பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுபவர்கள்.எளிய மக்கள் தரும் சிறிய தொகைகளை கொண்டே ஒரு வல்லரசயே எதிர்க்கும் வலிமையை விழிப்பையும் அவர்களுக்கு ஏற்படுத்த தங்கள் வாழ்வையே அர்ப்பணிப்பவர்கள். சாதி வெறியரான நீங்க என்னையும் சேத்துக்குங்க பணம் தரேன்னு சொன்னா என்னங்க அர்த்தம்?என்ன ஊர் சார் நீங்கள்?என்னதான் நீங்க உங்களை சுற்றி கவனிக்கிறீர்கள்?செய்திதாள்கள் தொலைக்காட்சி எதையாவது பார்க்கிறீர்களா?நண்பர்கள் யாராவது உங்களுக்கு இருக்கிறார்களா?ஊர்ல உலகத்துல நடக்குறது பத்தியெல்லாம் பேசிக்கொள்வீர்களா?தமிழ்ல டைப் அடிக்க தெரிவதை ஒரு தகுதியாக எடுத்துக்கொண்டு நீங்கள் எதையுமே ஏளனம் செய்து விடுவீர்களா? அநீதி கண்டும் அடுத்தவர் துயர் கண்டும் துடித்தெழுந்து போராடுவோரை போற்றவில்லை என்றாலும் இகழாதீர்.சாதியையும் மதத்தையும் மட்டுமல்ல தங்கள் குடும்பங்களையும்……….வேண்டாம் நிறைய படியுங்கள் தோழர்.

     • நக்சல்பாரிகளின் கொள்கைகள் மீது வெறுப்போ..மறுப்போ ஒரு போதும் எமக்கு இருந்ததில்லை..ஆனால் அந்த கொள்கைகளை பின்பற்றுகிறார்களா..அல்லது பிடிப்பு உள்ளதுப்போல் நடிக்கிறார்களா..என்பதுதான் பிரச்சனை…

      பரமக்குடியில் உழைக்கும் கட்டிடதொழிலாளிகள் கற்களால் அடித்துக் கொல்லப்பட்டதை பத்திரிக்கையின் வாயிலாகவோ தோழர்களின் மூலமாகவோ அறிந்திருப்பீர்கள், அவர்கள் குற்றப்பிண்ணணிக் கொண்டவர்களோ…சாதிய சங்க உறுப்பினர்களோ அல்ல..இருந்தும் அவர்கள் கொல்லப்பட்டது தேவர்சாதி என்பதால்..அதற்குபின்னால் இருந்தது தலித் அதிகார வர்க்கமே!!

      உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கல்லால் அடித்துக்கொல்லப்பட்டதை அந்த கொடூர மரணத்தை கொச்சைப்படுத்தி இகழந்து..ஆப்கானிஸ்தான் மிருங்கள் போல் நடந்துக்கொண்டவர்களை பாராட்டி அது பழிக்குபழியான செயல் என வன்மம் சேர்க்கும் சிந்தனை தோழருக்கு இருக்கலாமா..? அப்படி இருந்தால் அது சிவப்பு சிந்தனையா..?

      இப்படி உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கொடூரமாக செத்தாலும் அவர்கள் தேவர்சாதி என்பதால் அந்த சாவைக்கண்டு நீங்கள் சந்தோசப்படுகிறிர்கள் என்றால் தேவர்சாதியில் பிறந்த வாட்டாக்குடி இரணியன்,சிவராமன்,ஆம்பல் ஆறுமும் இறப்பையும் கொண்டாடுங்கள்…!! இன்னும் ஆயிரக்கணக்காண என் சொந்தக்காரன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எதிர்த்தே செத்துப்போனானே இந்த இறப்பையும் மகிழ்ந்து எழுதுங்கள்..நீங்கள் பிடித்திருக்கும் கம்னியூச கொடி மேலும் மேலும் தன் ரத்தத்தால் சிவக்க வைத்த தேவர்சாதியில் பிறந்த தோழர்கள் மரணத்தையும் ஆனந்தமாய் எழுதுங்கள்…!!!

      ஆதிக்கசாதியை எதிர்ப்பது என்பது திண்ணம் என்றால்..

      பறையர்களையும் சக்கிலியர்களையும் இழிவுபடுத்தும் பள்ளரின் ஆதிக்கத்தை எதிர்த்ததுண்டா..? குறவர்களை, குதிரை வண்ணார்களை இழிவுப்படுத்தும் பறையரின் ஆதிக்கத்தை எதிர்த்ததுண்டா..? மலம் அள்ளும் அருந்ததியரை இழிவுப்படுத்தும் சக்கிலியர் ஆதிக்கத்தை எதிர்த்ததுண்டா..?

      அம்பானிகளை எதிர்ப்பேன் ஆனால் போதீஸ் அண்ணாச்சியை எதிர்க்கமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்???

      ஒரு ரூபாய் லஞ்சமும் தவறு….ஒரு கோடி ரோபாய் லஞ்சமும் தவறு..

      • ///பரமக்குடியில் உழைக்கும் கட்டிடதொழிலாளிகள் கற்களால் அடித்துக் கொல்லப்பட்டதை பத்திரிக்கையின் வாயிலாகவோ தோழர்களின் மூலமாகவோ அறிந்திருப்பீர்கள், அவர்கள் குற்றப்பிண்ணணிக் கொண்டவர்களோ…சாதிய சங்க உறுப்பினர்களோ அல்ல..இருந்தும் அவர்கள் கொல்லப்பட்டது தேவர்சாதி என்பதால்..அதற்குபின்னால் இருந்தது தலித் அதிகார வர்க்கமே!! ////

       உண்மையில் இருவர் அடித்துக் கொல்லப்பட்டது ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயம் இல்லை. ஆனால், பிண்ணணி குறித்து சொல்லப்படுவது கொஞ்சம் ஓவராக இருக்கிறது. ஒரு பெரிய மனிதனின் புண்ணியத்தினால் வருடாவருடம் தென்தமிழகத்தில் குருபூஜை என்ற பெயரில் சாதிக்கலவரக் கொண்டாட்டத்தை அரசின் துணையுடன் நடத்திக்கொண்டிருப்பதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படிப்பட்ட நிலையில், சில பதற்றமுள்ள தடைசெய்யப்பட்ட ஏரியாப் பக்கம் போகக் கூடாது என்று கூறப்பட்ட நிலையில், சாதி உறுப்பினராக இல்லாதவர் என்று தியாகுவால் சொல்லப்படுகின்ற அந்த இருவர் ஏன் அங்கு தடையை மீறிச் சென்றார்கள்? வழிதவறிச் சென்றார்கள் என்று சொல்வதெல்லாம் சம்பவம் நடைபெற்ற பிறகு நம்மில் சிலரும்,அரசும் சொல்லக்கூடிய சமாதானப் பேச்சே அன்றி வேறு எதுவும் இல்லை. சரி அப்படி வழி தவறிச் சென்றவர்கள் அந்த ஏரியா மக்களைப் பார்த்து ஏன் திட்டி கூச்சலிட வேண்டும்? இப்படியெல்லாம் செய்பவர்கள் சாதி வெறியைத் தூண்டி அதில் குளிர்காய்பவர்கள் அன்றி வேறு யாராக இருக்க முடியும்? இவர்கள் செய்ததைப் பார்த்தும் அதை நியாயப்படுத்திப் பேசுபவர்கள் உண்மையில் இப்படிப்பட்ட வன்முறைகளுக்கு துணையாக இருப்பவர்களே!

       • // சில பதற்றமுள்ள தடைசெய்யப்பட்ட ஏரியாப் பக்கம் போகக் கூடாது என்று கூறப்பட்ட நிலையில், சாதி உறுப்பினராக இல்லாதவர் என்று தியாகுவால் சொல்லப்படுகின்ற அந்த இருவர் ஏன் அங்கு தடையை மீறிச் சென்றார்கள்? வழிதவறிச் சென்றார்கள் என்று சொல்வதெல்லாம் சம்பவம் நடைபெற்ற பிறகு நம்மில் சிலரும்,அரசும் சொல்லக்கூடிய சமாதானப் பேச்சே அன்றி வேறு எதுவும் இல்லை. //

        சில பதற்றமுள்ள தடை செய்யப்பட்ட ஏரியாப் பக்கம் போனால் அடித்துக்கொள்ளவது நியாயம் என்றால்..

        தடையை மீறி எல்லையை மீறி பிழப்புக்கு மீன் பிடிக்க போகும் தமிழ் மீனவர்கள் சிங்கள வெறியர்களால் சுட்டுக்கொள்வதும் நியாயமா…?

        //சரி அப்படி வழி தவறிச் சென்றவர்கள் அந்த ஏரியா மக்களைப் பார்த்து ஏன் திட்டி கூச்சலிட வேண்டும்? //

        வம்பு செய்ய வேண்டும் என முடிவுடன் போகின்றவன் ..வெறும் இரண்டு நபராய் ஒரு 200 குடும்பம் வாழும் ஊரை எதிர்க்க போவானா..???

        “கிருத்துதாஸ் காந்தி” என்கிற சாதிய வன்மமும் வெறியும் பிடித்த ஒரு அதிகாரியின் புற்றிலிருந்துதான் எல்லாம் கழிசல்களும் வருகிறது என யாவரும் அறிவர்..!!

       • மன்னன் எனும் புனைபெயர் கொண்டவருக்கு,

        //ஒரு பெரிய மனிதனின் புண்ணியத்தினால் வருடாவருடம் தென்தமிழகத்தில் குருபூஜை என்ற பெயரில் சாதிக்கலவரக் கொண்டாட்டத்தை அரசின் துணையுடன் நடத்திக்கொண்டிருப்பதை நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.//

        அந்த பெரிய மனிதரான தேவர்தான் அந்நிய ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்து அன்று காலணி ஆதிக்கத்தின் கர்த்தாவான் வெள்ளையர்கள் பங்குபெரும் காமன்வெல்த்தில் இந்தியா பங்கு பெற வேண்டாம் என்று பாராளுமன்றத்தில் நேரு மந்திரி சபைக்கு சொன்னார்.வலியுறுத்துனார்.

        ஆகஸ்ட்-8 போராட்டம் பக்கிரிகளின் போராட்டம் என பிர்லா மாளிகை காந்தி சொன்னதன் விளைவாக..உண்மையான தேசியவாதிகள் கேவலபடுத்தப்பட்ட பின்பு…
        இப்படி சொன்னார் தேவர் “தியாகிகளின் உயிரிலிருந்து உதித்த சுதந்திரத்தை அனுபவிக்க தெரிகிற காங்கிரஸ்க்கு, தியாகிகளை நினைத்து, வழுத்தி வாழ்த்த தெரியாமாற் போய்விடவில்லை – வாழ்த்த மனமில்லை – அந்த அளவுக்கு நன்றி கெட்டுவிட்டான் காங்கிரஸ்க்காரன் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் ஆகஸ்ட் 8-ம் நாளைத் தாண்டிக்கொண்டு, ஆகஸ்ட் 15-ம் நாளைக் கொண்டாடும் கொடுமையாகும்” என கண்ணகி இதழில் கட்டுரை எழுதினார்.

        “பாகிஸ்தான் கேட்டவனும் முட்டாள்! கொடுத்தவனும் முட்டாள்” என்று பிரசங்கம் செய்த பஸ்லுல் ஹக் பாகிஸ்தானின் உள்நாட்டு மந்திரியாக உருவெடுத்திருக்கிறார்..என அரசியல் நயவஞ்சகத்தை அப்படமாக இந்திய அப்பாவி மக்களுக்கு சொன்னவரும் அவரே !

        ஆங்கிலேயே ஆட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த V.K. கிருஷ்ண மேனன் லேபர்பார்ட்டியில் சீட் வாங்கும் அளவுக்கு வெள்ளையர்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த V.K. கிருஷ்ண மேனன் சுதந்திர இந்தியா என கூறப்படும் மந்திரி சபையில்(1957-1962) Dஎfஎன்செ Mஇனிச்டெர் ஒf ஈன்டிஅ என்று அறிவிக்க படுதல் நியாயமா..இந்த தேசம் விளங்குமா என 1956-ல் நேருவைப்பார்த்து கெட்டது இதே தேவர்தான்…!

        தேசியவாதிக்கு சாதியவாதி என நீங்கள் பெயரிட்டால் ஜாதியாவாதிகளுக்கு என்ன பெயரிடுவீர்கள்..???

        “குருபூஜை” என்பதே இவருக்கான விழா..ஆனால் அது இன்று திருடப்படுகிறது..…

        அன்று நேருவின் முதாளிகளின்நிழலுக்கும் கால் அமுக்கும் ஆட்சிக்கு..எதிராய் தேசம் முழுதும் குரல் குடுத்தவரும் தேவரே..( ஆதாரம் என்ன ? என்று தோழர்கள் கேட்கலாம்..அன்று வெளியாகிய ஹிந்து மற்றும் பார்வர்ட் பிளாக் பத்திக்கைகள் ஆதாரம்)

        V.K.Krishana Menon was accused of being involved in the Jeep scandal case of 1948.
        He headed India’s diplomatic missions to both the United Kingdom and United Nations.
        serving as Defence Minister from 1957 to 1962

        • //அந்த பெரிய மனிதரான தேவர்தான் அந்நிய ஏகாதிப்பத்தியத்தை எதிர்த்து அன்று காலணி ஆதிக்கத்தின் கர்த்தாவான் வெள்ளையர்கள் பங்குபெரும் காமன்வெல்த்தில் இந்தியா பங்கு பெற வேண்டாம் என்று பாராளுமன்றத்தில் நேரு மந்திரி சபைக்கு சொன்னார்.வலியுறுத்துனார்.///

         இவர் என்ன நேருவிற்கு சொல்ல வேண்டியிருக்கிறது? தமிழ்நாட்டில் இவர் சொன்னதும், செய்ததும்தான் இதுவரைக்கும் தமிழ்நாட்டைச் சீரழித்து, சின்னாபின்னப் படுத்திக் கொண்டிருக்கிறதே! இது போதாதா? இந்தியாவும் சீரழிய வேண்டும் என்ற நப்பாசையா? நல்ல எண்ணம், சொல் மற்றும் செயல் உள்ள பெரிய மனிதர்களால் நாட்டில் நல்லது நடந்து இருக்கிறது. நல்லது நடக்கும். ஆனால், ‘தேவர்’ என்று சொல்லப்படுகின்ற இந்தப் பெரிய மனிதரின் எண்ணத்தாலும், சொல்லாலும் மற்றும் செயலாலும் தமிழ்நாட்டிற்கு கேடுதான் நடந்திருக்கிறது. கேடுதான் நடந்து கொண்டிருக்கிறது. கீற்றுப் பதிவில் பார்த்தால் தெரிகிறதே! இவர் எப்படிப்பட்டப் பெரிய மனிதர் என்று!

        • //“குருபூஜை” என்பதே இவருக்கான விழா..ஆனால் அது இன்று திருடப்படுகிறது..…////

         ஆமாம், குருபூஜை என்பது இவருக்கு மட்டுந்தான் பட்டாப் போட்டுக் கொடுத்திருக்காங்க! இவருக்கு மட்டுந்தான் குருபூஜை நடத்தனும். மத்தவங்க எல்லாம் அவர்களுடைய தலைவர்களுக்கு குருபூஜை நடத்தக்கூடாது. அது மாபெரும் குற்றம்! இது இவர்கள் தலைவர் ‘நான்தான் மாற்று இனத்திற்கும் தலைவன். அந்த இனத்தைச் சார்ந்த ஒருவன் தலைவனாக இருக்கக் கூடாது’ என்று சொல்வது போல் இல்லையா? என்ன முட்டாள்தனமான சிந்தனை இது! சீடர்களே இப்படி என்றால், இவர்களின் தலைவர் என்று சொல்லப்படுபவர் எப்படி இருந்திருப்பார்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.
         உண்மையில், எப்படிப் பஸ்ஸில் சாதித் தலைவர்கள் பெயர் வைப்பது தடை செய்யப்பட்டதோ, அதுபோன்று இந்த குருபூஜை நடத்துவதை அரசு தடை செய்தால்தான், தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக மாறும். இது தொடர்ந்தால் தமிழ்நாட்டிற்கு இது போன்ற தொல்லைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஏனென்றால், நல்லது மற்றும் தீயது அனைத்தும் சாதீயம் சார்ந்த அரசியல்வாதிகளின் கையில்தான் உள்ளது.

      • // // ஆதிக்கசாதியை எதிர்ப்பது என்பது திண்ணம் என்றால்..

       பறையர்களையும் சக்கிலியர்களையும் இழிவுபடுத்தும் பள்ளரின் ஆதிக்கத்தை எதிர்த்ததுண்டா..? குறவர்களை, குதிரை வண்ணார்களை இழிவுப்படுத்தும் பறையரின் ஆதிக்கத்தை எதிர்த்ததுண்டா..? மலம் அள்ளும் அருந்ததியரை இழிவுப்படுத்தும் சக்கிலியர் ஆதிக்கத்தை எதிர்த்ததுண்டா..? // //

       யப்பா! புள்ள எம்பூட்டு அறிவா பேசுது. மேற்குறிப்பிட்ட சாதிகளை நீங்கள் சமத்துவமாக மதிக்கிறீர்களா? பெரிய சமத்துப் புலி போல பேசுவது.

       ம.க.இ.க வின் ஆண்ட பரம்பரையா? அடிமைப் பரம்பரையா? பாடல் ஒலிப் பேழையைக் கேட்டதுண்டா? அதைக் கேளுங்கள். சும்மா எதையும் படிக்காமல், கேட்காமல் இங்கு வந்து கண்டதையும் கழிந்து கொண்டிருக்க வேண்டாம்.

       // // அம்பானிகளை எதிர்ப்பேன் ஆனால் போதீஸ் அண்ணாச்சியை எதிர்க்கமாட்டேன் என்றால் என்ன அர்த்தம்???

       ஒரு ரூபாய் லஞ்சமும் தவறு….ஒரு கோடி ரோபாய் லஞ்சமும் தவறு..// //

       இதைத்தான் அயோக்கியத்தனம் என்பது. இலட்சம் கோடிகளைச் சொத்துகளை வைத்திருக்கும் அம்பானியும், அன்னாச்சிகளும் ஒன்றா?

       இந்தியா ஒரு அரைக்காலனிய, அரை நிலப்பிரபுத்துவ நாடு. நாம் இங்கு நடத்த வேண்டியது ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை. ஒடுக்கப்படும் வர்க்கங்கள் அனைத்தும் பொது எதிரிகளான பார்ப்பனியத்தையும், அதைக் கட்டிக்காக்கும் அரசையும், தரகு முதலாளிகளையும் எதிர்த்துப் போரிடுவதுதான் புதிய ஜனநாயகப் புரட்சி. இதில் அன்னாச்சிகள் போன்ற சிறு வணிகர்கள் அம்பானி போன்ற தரகு முதலாளிகளால் கொடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

       இவ்விசயத்தில் இருவரையும் ஒன்றாக வைத்துப் பார்ப்பது மிகப்பெரிய அயோக்கியத்தனம்.

       இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், ம.க.இ.க வின் தேர்தல் புறக்கணிப்பு ஒலிபேழைகளையும், அது தொடர்பான கட்டுரைகளையும் படிக்கவும். அதைப் படித்துவிட்டு உமது விமர்சனத்தைத் தெளிவாக வைக்கவும். எதையும் படிக்காமல் குருட்டாம்போக்கில் விவாதிப்பது அறிவுப்பூர்வமான செயல் அல்ல.

       • //ம.க.இ.க வின் ஆண்ட பரம்பரையா? அடிமைப் பரம்பரையா? பாடல் ஒலிப் பேழையைக் கேட்டதுண்டா? அதைக் கேளுங்கள். //

        இது விவாததிக்கும் இடமா..? அல்ல விற்பனையகமா…?

        ஆடி மாசம் வந்து வாங்கிக்கொள்கிறேன்…

  • 2000 years back, what was the total population of India? If Brahmins constitute 5% of TN population now after 2000 years, what was the % 2000 years back? And, were they in power then or at any point of time? What was the social setup then (Democracy or Aristocracy)? Did the power equation change during invasions from Harsha, Babar and in general Mughals, british etc? How is it possible for physically weak brahmin minority to rule “Physically strong” other caste people? And, the so-called alleged brahmin supporter Jayalalitha is the one who demolished Brahmin’s pillar of faith – Kanchi Madam…So it is easy to divert the attention from Devar to Brahmins…But it is sad that the author of the article started the article on the anti-brahmin pitch…All through the world, there have been social setup similar to what we had 2000 years back. But they changed. Today, even teh brahmins are insisting on any hierarchy or they dont get involved in any kind of violence…Just try to understand who is involved in all these…

 9. இது காலம் காலமாக நடக்கிறதுதானே? அது வேறு ஒன்றுமில்லை? பள்ளர், பறையர் எல்லோரும் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்ற வார்த்தையை சுமந்து கொண்டு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதிக்கிடு பெறுகிறார்கள் ?தாழ்த்தப்பட்டவர்கள் அரசிடமிருந்து 10௦ ரூபாய் பிச்சை பெறுகிறார்கள் என்றால் தேவர் இனத்தினர் 8 ரூபாய் பிச்சை பெறுகிறார்கள் அவ்வளவுதான். இதில் என்ன ஜாதி பெருமை வேண்டி உள்ளது? ( இட ஒதுக்கிட்டை என் பார்வையில் உரிமை என்று சொல்லமாட்டேன் ? இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது? உரிமை என்று சொன்னால் இட ஒதிக்கிடு பெரும் எல்லா ஜாதியினரும் தாழ்த்தப்பட்டவர்களே?) . இந்த மாதிரி இட ஒதுக்கிட்டை கௌரவ பிச்சையாக எடுத்த ரெண்டு தேவர் இனத்தவர் காவல் துறையில் இருக்கலாம் அவர்கள் ஜாதி வெறியோடு செயற்படுவதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை?

 10. கருப்பு
  ரொம்ப அழுகுராருபா….அடுத்தவர் துயர் கண்டும் அநீதி கண்டும் துடிப்பவரா நீங்கள்,,?? பரமக்குடியில 19 வயது இளைங்கர்கள் 3 பேர அடுச்சு கொன்னப்ப மட்டும் ஏப்பு துவண்டு போய்ட்ட….6 பேர் சிந்தாமணியில உயிரோடு எரிக்கப்பட்ட போது மட்டும் ஏப்பு துவண்டு போய்ட்ட… “அடுத்தவர் துயர் கண்டும் அநீதி கண்டும் துடிக்கும்” கருப்பு அவர்களே இனிமேல் தேவரினத்தவரை தோழர் என்று தயவு செய்து சொல்லாதிர்கள்…

 11. 3000 வருடங்களுக்கு முன் பார்பனர்களால் பிரிக்கப்பட்ட ஜாதிகளின் வீரியத்திணை இன்றும் பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது. இதில் கொடுமை என்ன வென்றால் முக்குலத்தோர் போன்ற பின் தங்கிய வகுப்பினர் தனக்கு மேல் இருக்கும் ஜாதிக்காரர்களால் தங்கள் தாழ்தப்படுவதை பற்றி அசிங்கப்படுவதில்லை. அவன் தன்னை கோயில் கருவறையின் வெளியில் நிறுத்தப்படுவதை பற்றி அவமானம் படுவதில்லை. ஆனால் தன்னைவிட தாழ்ந்த ஜாதிக்காரனை தனக்கு இணையாக பார்பதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தனக்கு கீழ் இன்னொருவன் இருக்கிறான் என்று பெருமை கொள்கிறார்கள். இதில் பறையர் தன்னை விட கீழாக பள்ளரை பார்த்து இப்படி பெருமை படுவதும் அடக்கம்.

 12. “ஒரு அடிமையிடம் நீ அடிமை என சொல் அவன் கிளர்ந்து எழுவான்” என சொன்ன அம்பெத்கர் வாக்கு பொய்த்துப்போனது…!! வெறும் போக்கிரிகளையும் ..சாதிய வன்மம் நிறைந்த அதிகாரிகளையும்,

  இந்திய தேசம் இடஓதிக்கீடு மூலமாகவும் சலுகையின் மூலமாகவும் பெற்றுள்ளது..

  62 வருட காலமாக முன்னேறத சமூகம் இனி எங்கு எப்படி முன்னேறும்??????

  இது எதிர்காலத்தில் பெரும் கலவரங்களுக்கு வழிவகுக்கும் ஓழிய..நிறந்தர தீர்வை தராது..!

  • ஐயோ தியாகு உங்களுக்காகவே இங்கே ஒரு ட்யூஷனே எடுக்க வேண்டும் போல் இருக்கிறதே…..,தமிழ் நாட்டில் கல்வி வேலைவைப்பில் 69 சதம் இட ஒதுக்கீட்டில் 18 சதம் தான் தலித்களுக்கு ஐயா மீதம் உள்ள 51 சதம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தான் அளிக்கப்படுகிறது சார்.51ஐ விட்டு விட்டு 18மேலேயே என் கொலைவெறியில் இருக்கிறீர்கள்?சமூகத்தில் எந்தெந்த சாதிகள் எதனை சதம் இருக்கிறதோ அந்த விகிதத்தில் கல்வியிலோ வேலையிலோ அந்தந்த சமூகத்தினர் இல்லாமல் பார்ப்பனர்களே 90 சதத்திற்கு மேல் இருந்தது சமூக நீதி அல்ல காரணத்தால் பல சமூகத்தினரும் போராடி வென்ற உரிமை அது.உங்களுக்கு எஸ்சிக்கு கொடுப்பது மட்டும் தவறென தெரிகிறதா அல்லது உங்களுக்கும் ரிசர்வேஷன் இருப்பது தெரியவில்லையா?

  • // “ஒரு அடிமையிடம் நீ அடிமை என சொல் அவன் கிளர்ந்து எழுவான்” என சொன்ன அம்பெத்கர் வாக்கு பொய்த்துப்போனது…!! //

   ஆமாம் பொய்த்துதான் போய்விட்டது. பார்ப்பன அடிமையாக இருந்து கொண்டு, அந்த அடிமைத்தனத்தை நினைக்காமல், வெட்கமே இல்லாமல், நான் ஆண்ட பரம்பரை, மோண்ட பரம்பரை என்று கூவும் உங்கள் விடயத்தில் அம்பேத்கர் வாக்கு பொய்த்துவிட்டது.

   அம்பேத்கர் இன்னொன்றும் கூறியிருக்கிறார் தெரியுமா?

   ” India is the only country, where the slaves are enjoying their slavery ”

   ” இந்தியாவில் மட்டும்தான் அடிமைகள், தங்கள் அடிமைத்தனத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறார்கள் “.

   இது பார்ப்பனியத்தை ( சாதிப்படிநிலை)எதிர்த்துப் போராடாத, அதை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொண்ட அனைத்து சாதிகளுக்கும் பொருந்தும். குறிப்பாக உமக்கு.

  • // 62 வருட காலமாக முன்னேறத சமூகம் இனி எங்கு எப்படி முன்னேறும்?????? //

   சாதி வெறியர்களை ஒழித்துக் கட்டாதவரை கண்டிப்பாக முன்னேறாது.

 13. வன்னியரோ தேவரோ செட்டியாரோ கோவில் கருவறைக்கு போகணும்னு ஆசை படல … இந்த பறையர்களுக்கு ஏன் இந்த ஆசை ?

  • தம்பி வினோத் சுத்த விவரம் இல்லாதவனாக இருக்கிறாயே? நீ சொன்ன (வன்னியரோ, தேவரோ, செட்டியாரோ) ஜாதியினர் கருவறைக்குள் போக ஆசைபடாமல் இருப்பதற்கு காரணம் தெரியுமா? அந்த காலத்திலும் சரி, இன்னும் நிறைய இடங்களில் சாமியே (கோவில்கள் ) இந்த ஜாதியினரின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது ? இவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் சாமி வரமாகத் தரும்? இவர்கள் நினைப்பதைத்தான் பூசாரி செய்யவேண்டும்? கோவிலில் முதல் மரியாதை அது, இது என்பதெல்லாம் இதன் வெளிப்பாடே? நீ சொன்ன ஆதிக்க ஜாதியினர் உருவாக்கியதுதான் இந்து மதம்? இந்த மதம் அழியாமல் இருக்கும்வரைதான் ஜாதி என்ற பெயரில் இவர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மீது ஆதிக்கம் செலுத்த முடியும்? இன்னும் எத்தனையோ இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத நிலை உள்ளது? என்னை இந்த ஜாதிக்காரன் மட்டும்தான் தொட வேண்டும் என்று எந்த சாமி சொன்னது? பாவப்பட்டவனாக இருந்தாலும், அழுக்கானவனாக இருந்தாலும் சாமியை தொடுவதற்கு இந்து மதத்தை தவிர மற்ற மதங்களில் தடை இல்லை? தாழ்த்தப்பட்டவர்கள் கருவறைக்குள் நுழையவேண்டும் என்று சொல்வது ஆசை இல்லை தம்பி? போக கூடாது என்று தடுக்கும் உயர் ஜாதியினரின் வார்த்தையை, போவேன் நீ என்ன செய்யபோகிறாய் என்று எதிர்ப்பது ஆகும் புரிகிறதா? சரி இந்த உயர் ஜாதி லிஸ்ட்டில் ஏன் தேவர், வன்னியர் ஜாதியை சேர்த்துள்ளாய்? அதிலும் இந்த தேவர் ஜாதியினர் உயர் ஜாதியினருக்கு கம்பை தூக்கிக்கொண்டு அடியாள் வேலை பார்த்தவர்கள்? அதனால்தான் பாதிக்கப்பட்ட சமுதாயம் என்ற முறையில் அரசாங்கம் அவர்கள் முன்னேறுவதற்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை (MBC) கொடுத்துள்ளது? உயர் சாதியினராக இருந்தால், தேவர் ஜாதியை சேர்ந்தவர்கள் இந்த இட ஒதிக்கீட்டை வேண்டாம் என்றல்லவா சொல்லியிருப்பர்கள்? உயர் ஜாதி என்று சொல்லிக்கொண்டு இட ஒதுக்கீட்டையும் பெறுவதற்கு தேவர் ஜாதியினர் அந்த அளவிற்கு மானமில்லாதவர்கள் என்று நினைத்தாயா? ரோஷக்கார ஜாதியை சேர்ந்தவர்கள் அவர்கள் ஆமா சொல்லிவிட்டேன் புரிந்துகொள்?

   • நீ சொல்லி தேவமார் எல்லாம் உயர் ஜாதின்னு நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.. வீம்புக்கு வேண்டுமானால் யார் வேண்டும் என்றாலும் யாரையும் பத்தி என்ன வேண்டுமானாலும் பேசலாம். உன் மனசாட்சிக்கு தெரியும் தேவர் என்றால் யார் என்று…நீ இப்போது வேண்டுமானால் எதிர்க்கலாம்.. எதிர் வினை என்று ஒன்று உண்டு..வெள்ளையனை எதிர்த்த எங்களுக்கு நீங்கள் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை..
    ..இப்பொழுது நீ கேட்பாய் வெள்ளையனை யார் எதிர்த்தார்கள் என்று?? உனக்கு வரலாறும் தெரியாது..

    நண்பர்களே..இந்து வெப்சைட்ட பார்க்காதிங்க…இவனுங்களுக்கும் நடக்கும் சம்பவத்திற்கும் சம்பந்தமே கிடையாது..நம்மள உசுப்பேத்தி உசுப்பேத்தி மங்குலி மாதிரி இருந்திடுவாங்க..

    • நண்பர் நெல்லை முத்து அவர்களே, எந்த சாதியினரையும் குறைத்து மதிப்பிடும் எண்ணம் எனக்கு இல்லை? ஆனால் பொதுவாக ஜாதி என்பது மனிதர்களை அடிமைபடுத்தும் ஒரு நிகழ்வு, இதில் பாதிக்கப்பட்டவர்களின் வார்த்தையில் கொஞ்சம் காரம் அதிகமாகத்தான் இருக்கும்? நீங்கள் உயர்ந்த ஜாதி என்பதை இந்த மாதிரியான விவாதங்களின் போதுதான் நீங்கள் நிருபிக்கவேண்டும்? அப்படியில்லாமல் ஒரு நான்கு தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கும் கிராமங்களில் பெருவாரியான சாதி எண்ணிக்கையில் நீங்கள் இருந்து கொண்டு அந்த மக்களை அடிமைப்படுத்தியா நீங்கள் நிருபிக்கப் போகிறீர்கள் (இவ்வளவு காலமும் நீங்கள் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது வேறு விஷயம்)?. வெள்ளையர்களை விரட்டியதை நீங்கள் வேண்டுமானால் பெருமையாக நினைக்கலாம்? ஆனால் எந்த தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்தவர்களும் அப்படி நினைக்கமாட்டார்கள்? வெள்ளையர்கள் காலத்தில் இன்று ஜாதி பெருமை பேசும் எல்லோரும் அடிமைகள்? அதில் நாங்களும் ஒரு அடிமை அவ்வளவுதான்? இன்னும் சொல்லப்போனால் அந்த அடிமைத்தனத்திலாவது எங்களோடு இருப்பவர்களோடு ஒரு சமத்துவம் எங்களுக்கு கிடைத்தது? அதில் எங்களுக்கு ஒரு திருப்தி இருக்கத்தானே செய்யும்? சொந்த நாட்டில் எங்களை அடிமைகளாக நடத்திய நம் மக்களை விட வெள்ளையர்கள் எங்களை மோசமாக நடத்திடவில்லை? இன்னும் சொல்லப்போனால் அவனுக்கு கொஞ்சம் மனசாட்சி இருக்கப் போய்தான் காந்தியடிகளின் அஹிம்சை அவனிடம் செல்லுபடியாயிற்று? சுதந்திரத்திற்காக போராடிய எத்தனையோ தலைவர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இடம்பெறவில்லை என்பதற்காக பாடப் புத்தகத்தில் நாம் படித்த காந்தியடிகள் ,திலகர் போன்ற தலைவரை தவிர யாரும் போராடவில்லை என்று அர்த்தமா? அன்று போராடிய ஒவ்வொரு மக்களிடமும் விடுதலை உணர்ச்சி இருந்தது? இதில் தேவர் ஜாதியினர் மட்டும் போராடவில்லை? அன்று போராடிய பூலித்தேவன் , வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற குறு நில மன்னர்கள் கூட நம் நாட்டை அன்னியர்கள் பிடித்துவிட்டார்கள் என்று பொங்கி எழவில்லை? வரி கட்டவில்லை என்றவுடன் பூலித்தேவர் மீது வெள்ளையர்கள் படையெடுத்த பிறகே அவர் வெள்ளையருக்கு எதிராக மற்ற சமஸ்தானங்களை கூட்டு சேர்க்க ஆரம்பித்தார்? சரியாக வரி கட்டிய வீரபாண்டிய கட்டபொம்மன் பஞ்சம் காரணமாக இடையில் வரி கட்டாததன் காரணமாக வெள்ளையர்கள் கொடுத்த நெருக்கடிக்கு பிறகே அவர்களை எதிர்த்தார்? இதில் எங்கே இருக்கிறது சுதந்திர போராட்டம்? தம்பி 8 ஆம் வகுப்பு வரலாறு படித்தது வரை வைத்துக்கொண்டு இனி பேசாதே, மேற் கொண்டு வரலாறு படி, அப்புறம் ஜாதி பெருமை பேசுவதை நீயே குறைத்துக்கொள்வாய்?

  • வாப்பா அறிவுக்கொழுந்துஅரசேஅனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகணும்னு சட்டம் போட்டு கல்லூரி ஆரம்பித்து எல்லா சாதி மாணவரையும் சேர்த்து வகுப்பு எடுத்தது,அப்புறம் அது பார்ப்பனர்க்கள் போட்ட வழக்கால் நீதிமன்ற தடையில் இருப்பது எல்லாம் எதற்கு என்று உன் சாதியில் படித்தவர்…மன்னிக்கவும் படித்த அறிவுள்ளவர் யாரிடமாவது கேட்டு தெரிந்துகொண்டு வந்து எழுதுப்பா வினோத்து.

   • இந்த சட்டம் தொடர்பாக இரு கருத்துகள் கேள்விப்படுகிறேன். ஒன்று மேலே சொன்னது போல இந்த சட்டம் கோர்ட், கேஸ் என முடங்கியுள்ளது. இரண்டாவது இது அமலில் உள்ளது, ஆனால் குறைந்த ஊதியம் காரணமாக யாரும் அர்ச்சகராக முன்வரவில்லை என்பது. இது குறித்து விளக்கம் தெரிந்தால் நலம்.

 14. இது தொடர்பாக வினவில் கட்டுரைகள் வந்துள்ளது

  தேவநாதன் பூசை செய்யலாம், ஒரு தலித்தோ – தேவரோ பூசை செய்யக்கூடாதா?
  https://www.vinavu.com/2010/02/09/hrpc-case/

  அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவோம்! மதுரையில் உண்ணாவிரதம்!!
  https://www.vinavu.com/2010/03/15/hrpc-case-2/

  ஆலயத் தீண்டாமைக்கு முடிவு கட்டுவோம் – பெரியார் சிலைக்கு அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை!!
  https://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/

  பெரியார் சிலைக்கு மாலையா? இந்து முன்னணி ரவுடித்தனம் !!
  https://www.vinavu.com/2010/10/25/ranganathan-attacked/

  மேலும் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்-தமிழ்நாடு, நடத்தும் தளம்
  http://appsa-tn.blogspot.in/

  • நன்றி. இந்த தடையாணை விலகி இவர்கள் விரைவில் அர்ச்சகர்கள் ஆக திருப்பாணாழ்வாரை வேண்டுகிறேன் (இன்று இவரது பிறந்தநாள்!)

   இந்தக் கட்டுரைகளில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ராமர், கிருஷ்ணர் ஆகியோர் தமிழ் சாமிகள் அல்ல,எனவே அவர்களை கும்பிடக் கூடாது என்று ஒருவர் பேசியது. இது சரியா, தவறா என்பது வேறு விஷயம். அதைப் பற்றி பேசுவதற்கான மேடை அல்ல இது. சரி, எல்லா கட்டுரைகளிலும் சைவத்தில் பயிற்சி பெற்ற அர்ச்சகர் படங்களையே போட்டிருக்கிறீர்களே. திருமண் தரித்த வைணவ அர்ச்சகர்களின் படங்களையும் போட்டிருந்தால் அதையும் கண் குளிர பார்த்திருப்பேன்.

  • நண்பரே, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில் கருவறை நுழைவு போராட்டம் என ஒரு போஸ்டர் பார்த்தேன். பேருந்தில் செல்லும் பொது கண்ணில் பட்டதால் நின்று படிக்க இயலவில்லை. இது எப்போதோ நடந்த போராட்டம் பற்றியும் இருக்கலாம். உங்களுக்கு ஏதாவது விவரம் தெரியுமா?

 15. இதை போன்று லாரி ஏற்றி கொள்ளப்பட்டானே மணல் தடுக்க முயன்ற தேவரின வாலிபர் நாங்குனேரி வானுமாமலை. அவர் கொலையை எந்த தலித் கண்டித்தான்.. உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?????

 16. “நான் அம்பேத்கர், இம்மானுவேல் சேகரன் படம் போட்ட பனியன் போட்டிருந்தேன். அந்த பனியனை கழற்றச் சொன்னார் எஸ்.ஐ.சந்திரசேகர். பனியனைக் கிழித்து கீழே போட்டார், அதன்மீது எல்லா போலீசும் சிறுநீர் கழித்தார்கள். அதை எடுத்து திரும்பவும் என்னைப் போடச் சொன்னார்கள். முடியாது என்றதற்காக கடுமையாக அடித்தார்கள். இரவு முழுவதும் கூமாபட்டி காவல் நிலையத்துக்குள் வைத்து என்னை நிர்வாணமாக்கி அடித்தார்கள். மயக்கம் தெளியத் தெளிய லத்தியால் அடித்தார்கள். பூட்ஸ் காலால் வயிற்றில் மிதித்து துவைத்தார்கள். மறுநாள் 15/11/12 மாலை 4.45 மணிவரை அடி ஓயவில்லை.” – Just think. Will a Brahmin ever resort to this kind of violence? Its easy to say that this is “Avaaludaya” Fascist aatchi. But the real perpetrators of violence are the people who also claim that they are backward and get quotas. You can make Brahmins a soft target since they wont retaliate and in fact they will move away from you. But think hard. What are you going to do to these violent caste people who are hell bent against Dalits? FYI: How do you define “Fascist Aatchi”? And why it doesnt fit ANY ruler?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க