Thursday, February 5, 2026
கௌரி லங்கேஷ்க்கு இரண்டு தெரிவுகள் இருந்தது. ஒன்று வசதியான வாழ்க்கைப் பாதை. இன்னொன்று அநீதிக்கு எதிராக போராடும் கடினமான பாதை. இரண்டாவதை துணிந்து தேர்ந்தெடுத்தார்.
இந்தியாவிற்கு ‘சுதந்திரம்’ கிடைத்து 79 ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், எட்டு வயது குழந்தையை ஆதிக்கச் சாதியினரின் கழிவறையை சுத்தம் செய்ய வைப்பதும், தண்ணீர் பானையை தொட்டதற்காக மரத்தில் தொங்கவிட்டு அடித்ததும் சாதியக் கொடூரத்தின் உச்சமாகும்.
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதை விடுத்து பள்ளிகளை கார்ப்பரேட்மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதுதான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?
யார் அவர்கள்? நகரங்களின் அழகில் அடித்துச் செல்லப்பட்டு காலத்தின் போக்கில் கரை ஒதுங்கியவர்கள்! நகர்ப்புற வாழ்க்கையின் விளிம்புகளில் பாடப்படும் யாரையும் அவ்வளவு எளிதில் தொந்தரவு செய்துவிடாத ஓர் அமைதியான நாதியற்ற பாடல்! மங்கலான விடியல் பொழுதுகளில், நகரங்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் முதலாளித்துவத்தின் விருந்துகளில் சிந்திய கழிவுகளைத் துடைப்பவர்கள்! நவீனமயத்தின் கண்களில் அகப்பட்டுவிடாமல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மலக்குழிகளின் மனித இணைப்புகள்! ஒப்பந்ததாரர்களின் இலாபத்திற்கு இதமளிக்க எவ்வித பாதுகாப்புமின்றி எரியூட்டப்படுபவர்கள்! முதலாளித்துவச் சுரண்டலின் இழைகளில் மிக்க கவனமாக இறுக்கி...
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட 2021-ஆம் ஆண்டு தவிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளாகவே, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
10 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன என்பது கடந்து போகும் செய்தி அல்ல. அது பட்டியலின மக்களின் உரிமைகள் எப்படிக் கேட்பாரற்று பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு முக்கிய சான்று.
பெண் சிசுக்கொலை நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கருக்கொலையாக பரிணமித்திருப்பதைப் போல, வரதட்சணையின் பரிமாணமும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப மாறியுள்ளது.
அம்பேத்கர் பல்கலை: மாணவர்களுக்கு விடுதி வசதியை மறுக்கும் பல்கலை நிர்வாகம் https://youtu.be/SPvqhwbsPJA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கோபி - சுதாகரை அச்சுறுத்தும் சாதிவெறியர்கள் Society Paavangal | தோழர் சங்கர் - தோழர் பிரகாஷ் https://youtu.be/5_LDqyKS8v8 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ரித்திஷ் மற்றும் அவரது நண்பர் மீது நடத்தப்பட்ட சாதிய கும்பல் தாக்குதலை கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
ஜனவரி 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரையிலான ஒன்றரை ஆண்டில் 21,175 பெண்கள், 1,954 சிறுமிகள் என மொத்தமாக 23,129 பெண்கள் ம.பி-யில் காணாமல் போயுள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சம்பவத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூரையிலிருந்து கற்கள் விழுவதாக மாணவர்கள் ஆசிரியர்களிடம் எச்சரித்திருந்தனர். ஆனால் அவர்கள் அதை அலட்சியம் செய்துள்ளனர்.
தேசியக் கல்விக் கொள்கையில் சொல்லப்பட்டிருப்பது போல மூடநம்பிக்கைகளை அறிவியலுடன் இணைக்கும் வகையிலேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அண்மை பதிவுகள்