Wednesday, August 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 480

இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !

2

வம்பர் புரட்சியின் நூறாண்டு இது. ரசியாவில் 1917 -ல் நடந்த புரட்சி என்பது பூவுலகில் முதல் முறையாக உழைக்கும் மக்களின் அரசை நிறுவியது. அதிகாரத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு பேசப்படும் அத்தனை நலத்திட்டங்களுக்கும் சோவியத் அரசுதான் முன்னோடி. அங்கே மருத்துவத்துறையில் மக்களுக்கான சுகாதாரம் என்பது எப்படி நடைபெற்றது என்பதை பார்ப்போம்.

நோய் தடுப்பு, தகுதி பெற்ற மருத்துவர்கள் மூலம் உயர்ந்த சிகிச்சை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் ஆகிய இரண்டு அடிப்படைகளை சோவியத் மருத்துவம் கொண்டிருந்தது.

உலகிலேயே முதல்முறையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல், அறுவை சிகிச்சை வரை அனைத்துமே இங்கு இலவசம் தான். ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் இருந்தன. தேவைக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தன.

இலவச மருத்துவத்தின் மூலம் கொடுக்கிற காசுக்கேற்ற வைத்தியம் என்ற ஏற்றத் தாழ்வை ஒழித்துக் கட்டியது சோவியத் அரசு. விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஆம்புலன்சாக பயன்படுத்தப்பட்டன. பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் இதன் பிறகு மருத்துவத்தை இலவசமாக்கின.

அனைத்து வகையான இலவச மருத்துவ உதவிகளையும் பெறும் உரிமை (சோவியத் சட்டத்தின்படி சோவியத் குடிமக்கள் மட்டுமின்றி சோவியத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது) முதியவர்களுக்கான ஓய்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தவற்றுள் ஒரு சில மட்டுமே, இன்னும் பல்வேறு அடிப்படை உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டிருக்கின்றன.

இந்த உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும், இந்த உரிமைகளை மக்களிடமிருந்து பிறர் பறிக்க முடியாதவாறும், அப்படி பறிக்க எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனைகளையும் சோவியத் சட்டங்கள் உறுதி செய்தன.

ஆலைத்தொழிலாளருக்கான மருத்துவ வசதிகள்

ஆலைகள் கம்யூனிச சித்தாந்தங்களின் கோட்டை என்று கருதப்பட்டன. இது மட்டுமன்றி ஒவ்வொரு ஆலைகளுமே உடல்நலம் பேணும் மருத்துவமனைகளாக மாற்றப்பட வேண்டுமென்பதே சோவியத்தின் முக்கிய குறிக்கோளாக இருந்தது.

மருத்துவ வசதிகள் என்றதும் நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பது என்று கருதாமல் வேலை, ஓய்வு, கலாச்சார வளர்ச்சி என்ற எல்லா அம்சங்களையுமே மருத்துவத்தின் அங்கமாகக் கருதினர். ஏனெனில் ஏற்றத்தாழ்வான சமூகத்தின் மனநலத்தை பாதிக்கும் அம்சத்தை கலையால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்ற புரிதல் அவர்களுக்கு இருந்தது.

நோயாளிகளின் நோயின் தன்மையைப் பொருத்து கீழ்க்கண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

  • புற நோயாளிகள் மருத்துவமனை
  • பரிசோதனை வசதிகள் கொண்ட மருத்துவமனை
  • காச நோய் மற்றும் பாலியல் சிகிச்சை தொடர்பான மருத்துவமனை
  • பல் நோக்கு வசதிகள் கொண்ட மருத்துவமனை
  • பல்கலைக்கழக மருத்துவமனை
  • காச நோய்க்கான சிறப்பு மருத்துவமனை
  • சிறப்பு இரவு நேர காச நோய் மருத்துவமனை

இரவு நேர காச நோய் மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவும், உறங்கும் வசதிகளும் செய்து தரப்பட்டன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் 60 படுக்கைகள் வரை இருந்தன. நோயின் தன்மையைப் பொருத்து ஒவ்வொருவருக்கும் இலகுவான சில வேலைகள் தரப்பட்டன; 6 முதல் 7 மணி நேரம் வேலை செய்து பின்னர் ஓய்வெடுத்துக் கொள்ள வசதிகள் செய்யப்பட்டன.

ஆலைகளுக்கு வேலை செய்யப்போகும் தொழிலாளர்கள் இது போன்ற இடங்களில் குளியலறை வசதிகள் செய்து தரப்பட்டன. நோய்த்தடுப்பூசிகளும் இங்கே போடப்பட்டன. தொழிலாளிகள் இங்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ளலாம். இதற்கென்று சிறப்பு மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டனர்.

ஆலை வளாகத்துக்குள் இருந்த வெவ்வேறு உற்பத்திக் கூடங்களில் பெரும்பாலும் பெண் மருத்துவர்கள் பணியில் ஈடுபட்டனர். முதலுதவி அளிப்பது இவர்களின் பிரதான வேலையாகும். ஆலை மருத்துவர்களின் பரிந்துரைகளின் பேரில் சோதனைகள் செய்து ஒவ்வொருவரைப் பற்றியும் தரவுகளைப் பராமரிப்பது இவர்களின் பணியாகும். முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளாதவர்களைப் பற்றிய தகவல்களும் ஆலை மருத்துவருக்குத் தெரிவிக்கப்படும். அடிக்கடி நோய்வாய்ப்படும் தொழிலாளிகள் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவர்.

மருத்துவர்கள் மட்டுமல்லாது ஆலை நிர்வாகக் குழுவும் மருத்துவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்வார்கள். நோயின் தன்மை அதிகரிக்கும் பட்சத்தில் வேலை செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு சிறப்பு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

நோய்க்கான சிகிச்சை மட்டுமன்றி மனநல ஆலோசனைகளும் கூடுதலாகத் தரப்பட்டன. நோயினின்று தற்காத்துக் கொள்ளும் ஆலோசனைகளும் மருத்துவர்களால் வழங்கப்பட்டன.

குழந்தைகள் மற்றும் இளையோருக்கான சிகிச்சை

குழந்தைகளுக்கான மருத்துவம் என்பது சிகிச்சை என்பதை தாண்டி பல்வேறு வகைகளில் விரிவடைந்திருந்தது. குழந்தைகள் நல மையத்தில் தொடங்கி, திறந்த வெளிப் பள்ளிகள் மற்றும் கோடை கால சிறப்பு முகாம்கள் வரை மருத்துவப் பராமரிப்பு நீண்டிருந்தது.

இவற்றின் தரம் இங்கிலாந்தில் உள்ள உயர்வகுப்பினர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்டு வந்த உறைவிடப்பள்ளிகளின் தரத்திற்கு இணையாக இருந்தது.  இன்னும் சொல்லப்போனால் அதைவிட மேம்பட்ட வழிகளில் செழுமையடைந்திருந்தது.

கம்யூனிஸ்டுகளின் முதலாவது அகிலத்தில் உரையாற்றிய மார்க்ஸ், கம்யூனிச சமூகத்தில் தாய் சேய் நலப் பராமரிப்புகளின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை சோவியத்தில் கண்கூடாக நிறைவேற்றியது.

மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டிருந்து குழந்தைகள் நல மையங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பு மருத்துவமனையோடு எளிதில் தொடர்பு கொள்ளும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தன.  சிகிச்சைக்குக் கொண்டு வர முடியாத குழந்தைகளுக்கு வீட்டிலேயே சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. குழந்தை வளர்ப்பு மையங்களும், குழந்தைகள் நல மையங்களும் ஒருங்கே இணைக்கப்பட்டிருந்தன.

சோவியத் சமூகத்தின் சமூக மயமாக்கப்பட்ட உடல் நலம் என்ற நூலின் ஆசிரியர் திருமதி. ஆலிஸ் ஃபீல்டு குறிப்பிடுகையில், 1931 -ம் ஆண்டு மாஸ்கோ நகரத்தில் மட்டும் 35 குழந்தைகள் நல மையம் அமைந்திருந்தது. இவையனைத்திலும் பால் பொருட்கள் எந்நேரமும் கிடைக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரும் மையத்திலும் ஒரு வருடத்திற்கு 7,000 குழந்தைகள் வரை பயனடைந்தனர். அங்கிருந்த மருத்துவ அதிகாரிகள் 40,000 முறை பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களைப் பொருத்தவரை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டன. ஒன்று நிரந்தரமாக இயங்குபவை மற்றொன்று தற்காலிக நோக்கங்களுக்காக இயங்குபவை. 1927 முதல் 1932 வரை சோவியத்தில் இயங்கி வந்த குழந்தைகள் மையங்கள் குறித்த புள்ளிவிவரம்.

குழந்தைகள் மையங்களில் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை
(ஆயிரங்களில்)
வருடம்
1927-28 1931 1932
நகரம் 34 129 263
கிராமம்
         நிரந்தரமானவை 2.5 103 329
        தற்காலிகமானவை 101 1426 3501

 

பிறந்து ஒரு மாதம் மற்றும் இரண்டு மாதமான குழந்தைகள் அங்கே அனுமதிக்கப்பட்டன. மூன்று வயதிலிருந்து அதிகபட்டம் ஐந்து வயது வரை இங்கே அவர்கள் பராமரிக்கப்பட்டனர். உள்ளே அனுமதிக்கப்படும் குழந்தைகள் பிரத்தியேகமான சோதனைக்குட்படுத்தப்பட்டு ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் குழந்தைகள் தாயுடன் வீட்டிற்குத் திருப்பியனுப்பப்பட்டு கூடவே ஒரு மருத்துவரும் அனுப்பி வைக்கப்படுவார்.

அந்த மருத்துவர் அங்கே சென்று அந்தக் குழந்தைக்குச் சிகிச்சை அளிப்பதோடு மட்டுமன்றி அந்தக் குழந்தை பிறந்த இடம், பெற்றோரின் உணவுப்பழக்கம் உள்ளிட்ட தகவல்களைச் சேமித்து வருவார். உடல் நிலை சரியான பின் அந்தக் குழந்தை பராமரிப்பு மையத்திற்குள் அனுமதிக்கப்படும்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தையாக இருக்கும் பட்சத்தில் அந்தக் குழந்தையின் தாய் ஒரு நாளைக்கு மூன்று முறை தாய்ப்பாலூட்ட அனுமதி உண்டு. குழந்தைகள் வயதை வைத்து மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு பராமரிக்கப்படுவர். சிறந்த உணவுகள், சுகாதாரமான சூழ்நிலை மற்றும் குழந்தைகளை சுயசார்புள்ள சோவியத் குடிமக்களாக மாற்றும் பொறுப்பை அங்கு உள்ள நிர்வாகிகள் உறுதிசெய்வார்கள்.

இளைஞர், இளம்பெண்களுக்கு என்று சிறப்புத் திட்டங்கள் சோசலிச ரஷ்யாவில் வகுக்கப்பட்டன. குறிப்பாக குடியுரிமைச் சட்டம் குறித்த வகுப்புக்கள் பரவலாக எடுக்கப்பட்டன. ஆண் பெண் பாகுபாடின்றி வகுப்புக்கள் அனைவருக்கும் சரிசமமாக வகுப்புக்கள் எடுக்கப்பட்டன.

இளைஞர், இளம்பெண்களிடையே போதைப்பொருள், மதுப்பழக்கம் குறித்த பிரச்சாரங்கள் பரவலாக எடுத்துச்செல்லப்பட்டன. உடற்கல்வி மற்றும் மனவளம் குறித்த வகுப்புக்கள் மாதந்தோறும் எடுக்கப்பட்டன. வருடாந்திர வகுப்புத் திட்டங்களும் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டன.

பெண்களுக்கான மகப்பேறு கால மருத்துவ சேவைகள்

ஐரோப்பாவிலுள்ள இதர நாடுகளைக் காட்டிலும் சோவியத்தில் தான் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகமாகும். தாய்-சேய் நலத்திட்டத்திற்கென்று சோவியத் யூனியனில் சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட்டது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கென்று பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன.

1929 -ம் ஆண்டு வாக்கில் குழந்தைகள் பிறப்பு விகிதம் (1,000 பேர் கொண்ட மக்கள் தொகையில் ) 38.6 சதவீதமாகவும் அதே நேரத்தில் இறப்பு விகிதம் 20.6 சதவீதமாகவும் குறைந்தது.

பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன. அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர்.

இன்றைக்கு பல்வேறு நாடுளில் இருக்கும் சுகாதாரத் துறையின் முன்னோடியே சோவியத் அரசாங்கம்தான். இன்றும் கூட அமெரிக்காவில் ஊதியத்துடன் கூடிய பிரசவ கால விடுமுறை என்பது சட்டப்பூர்வமாக இல்லை. காப்பீடு மூலமே சிகிச்சை பெற முடியும் என்பதால் பல அமெரிக்க மக்கள் நோயோடு சாவை எதிர்நோக்கி இருக்கும் அவலத்தை மைக்கேல் மூரின் சீக்கோ ஆவணப்படம் அம்பலப்படுத்தியது.

நவம்பர் புரட்சி ஒன்றில்லாமல் இந்த உலகம் கடைத்தேற வழியில்லை!

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சீர்காழி : பயிர்க் காப்பீட்டிற்கு பகவானிடம் கேட்கச் சொன்ன கலெக்டர் !

0

சீர்காழி தாலுகா மாதனம் தொடக்க வேளாண்மை வங்கிக்கு உட்பட்ட பச்சைபெருமாநல்லூர், மகாராஜபுரம், உமையாள்பதி ஆகிய வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட விவாசாயிகள் பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி மாதனம் தொடக்க வேளாண்மை கடன் சங்கம்(லிட்) முன்பு 26.10.2017 வியாழன் அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது தனது கண்டன உரையில் தோழர் ரவி “பச்சைபெருமாநல்லூர், மகாராஜபுரம், உமையாள்பதி ஆகிய கிராமங்களில் விவசாயிகள் பயிர்காப்பீடு பதிவு செய்தும் இதுவரை காப்பீடு வழங்கப்படவில்லை. குறிப்பாக பச்சைபெருமாநல்லூர் கிராம விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு இது வரை அறிவிக்கவும் இல்லை. இது தொடர்ப்பாக நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அவர்களிடம் விவசாயிகள் மனுக்கொடுத்து காப்பீடு வழங்க கேட்டபோது என்னால் ஒன்றும் செய்ய முடியாது. கடவுளிடம் தான் சொல்ல வேண்டும் என்றார்.

சீர்காழி வட்டாட்சியர் பாலமுருகனிடம் மனுகொடுத்து முறையிட்டபோது ஆவன செய்வதாக சொன்னார். தொடக்க வேளாண்மை கடன் சங்க செயலர் மேகவண்ணனிடம் கேட்டபோது எங்களுக்கு தெரியாது என்கிறார். மூன்று மாதமாக அரசு அலுவலகங்களில் அலைந்தும் பயனில்லை இதற்கெல்லாம் காரணம் கடவாசல் வேளாண்மை விரிவாக்க அலுவலர் சுரேஷ் சம்மந்தபட்ட அலுவலகத்தில் கணக்கை கொடுக்காதது தான் என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே பச்சை பெருமாநல்லூர் உள்ளிட்ட கிராமத்திற்கு உடனடியாக பயிர் காப்பீடு வழங்க வேண்டும்! இல்லையென்றால் இதே இடத்தில் தொடர் போராட்டத்தை அறிவித்து நடத்துவோம்” என்று எச்சரித்து கண்டன உரையை நிறைவு செய்தார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி பேசுகையில்; “உடனடியாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும். அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் மக்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மூன்று மாத காலமாக போராடியும் காப்பீடு தர மறுக்கிறது இந்த அரசு. விவசாயிகள் சாகுபடிக்கு இன்னும் புதுமணியாற்றில் இதுவரை தண்ணீர் விட மறுக்கிறார்கள். இந்த அரசு கட்டமைப்பு மக்களுக்கு எதிராக மாறிவிட்டது ஆகையால் அனைத்து கிராமங்களிலும் மக்கள் கமிட்டி அமைப்போம், அதிகாரத்தை கையில் எடுப்போம்” என்று கூறி முடித்தார்.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் வட்ட அமைப்பாளர் தோழர் ஸ்டாலின் பேசுகையில்  “மூன்று மாத காலமாக  மாதனத்தை சுற்றியுள்ள ஐந்து கிராமங்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக விவசாயிகள் பலமுறை போராடியும் பலன் இல்லை. இந்த அரசு கட்டமைப்பு தோற்றுவிட்டது அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் உள்ள பிரச்சனை பற்றிதான் ஊடகங்களில் விவாதம் நடக்கிறது மக்களை பற்றி கவலை இல்லை” என்று கூறினார் .

போலீசும் மக்கள் போராட்டங்கள் எங்கு நடந்தாலும் மக்களை போராட விடாமல் தடுப்பதும், கந்து வட்டிகாரனுக்கு மாமா வேலை பார்ப்பதும், அரசு அதிகாரிகளைப் பாதுகாப்பதும், அவர்கள் கொள்ளை அடித்து வைத்திருக்கும் சொத்தை காவல் காக்கவும் தான் செய்கிறார்கள். மக்களை பாதுகாக்க வக்கற்ற இந்த அதிகார வர்க்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும். மக்கள் நாம் அனைவரும் அமைப்பாக இருந்தால்தான் இவர்களின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க முடியும்.   ஆகையால் ஒன்றுசேர்ந்து கிராமம்தோறும் மக்கள் அதிகாரத்தினை நிறுவுவோம்” என்று கூறி முடித்தார்.

இறுதியாக தோழர் வீரசோழன் நன்றியுரை கூறி முடித்தார். இப்போராட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சீர்காழி.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விருதை – நெல்லிக் குப்பத்தில் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி

0

தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி  சார்பாக விருத்தாசலம், நெல்லிக்குப்பம் கோட்டங்களில் கொடியேற்று விழா!

மிழக அரசின் மின் துறையில் மத்திய சங்கங்கள், திராவிட, சாதிய சங்கங்கள் என கணக்கற்ற வகையில் பல சங்கங்கள் இருந்தாலும், அத்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் உரிமை பறிப்புகளையோ, லஞ்சம், ஊழல் முறைகேடுகளையோ, மின் துறைச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் திணிக்கப்படும் கார்ப்பரேட் கொள்கைகளையோ எதிர்த்து முறியடிக்க திராணியற்ற சங்கங்களாகவே உள்ளன.

மின் துறையில் உள்ள மிகப்பெரிய சங்கமான சி.ஐ.டி.யூ. சங்கத்தின் சமரசப் போக்குகளால் அதிகரித்து வரும் வேலைப் பளு, ஊதியப் பிரச்சினை போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் கூட தீர்க்கப்படாத நிலையில் கடந்த 19.03.2017 அன்று பு.ஜ.தொ.மு. இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி தொழிற்சங்கம் கடலூர் மின் வட்டத்தில் கொடி அறிமுகத்துடன் உதயமானது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 25.09.2017 அன்று நெல்லிக்குப்பம் கோட்டத்திலும், 10.10.2017 அன்று விருத்தாசலம் கோட்டத்திலும் கொடியேற்று விழா நடத்தப்பட்டது

நெல்லிக்குப்பம் கோட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் கடலூர் மாவட்டப் பொருளாளர் தோழர் ஜோதிபாசு தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் கொடியேற்றி துவக்க உரையாற்றினார்.

புஜதொமு இணைப்பு சங்கமான நெல்லிகுப்பம் லோட்டே மிட்டாய் ஆலைத் தொழிலாளர்கள் சங்க செயலாளர் தோழர் கந்தசாமி, தமிழ்நாடு புஜதொமு மாநில இணைச் செயலாளர் தோழர். பழனிசாமி, புதுச்சேரி புஜதொமு மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

விருத்தாசலம் கோட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணியின் கடலூர் மாவட்டத் தலைவர் தோழர் சண்முகம் தலைமையில் கொடியேற்று விழா நடந்தது. விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ஸ்ரீதர் அவர்கள் கொடியேற்றி துவக்க உரையாற்றினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மற்றும் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

பஞ்சப்படியைக் குறைக்கும் மின்வாரியத்தைக் கண்டிப்பது, வேலைப்பளுவற்ற ஊதிய உயர்வைப் பெறுவது, ஊதிய உயர்வுப் பிரச்சினையை திசைதிருப்ப பணியிட மாற்றம் என்ற நிர்வாகத்தின் தந்திரத்தை முறியடிப்பது, 30,000 -த்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை, தற்போதுள்ள ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஐ.டி.ஐ. – டிப்ளமோ படித்த அப்ரண்டீஸ் முடித்த இளைஞர்கள் மூலம் நிரப்பி, மக்களுக்கான சேவையைத் தொய்வின்றி நடத்த நிர்வாகத்தை வலியுறுத்திப் போராடுவது ஆகிய கோரிக்கைகளை விளக்கி தோழர்கள் உரை நிகழ்த்தினர்.

மின் துறையில் அதிகரித்து வரும் வேலைப்பளு, ஊழியர்கள் பற்றாக்குறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் தொழிலாளர்கள் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; அவை அரசின் மக்கள் விரோதக் கொள்கையுடன் இணைந்தது. மக்கள் பிரச்சினைகளுடன் இணைந்தது. மேலும், இதை எதிர்கொள்ள தொழிலாளர் ஒற்றுமை என்பது மட்டுமல்ல, உழைக்கும் மக்களுடன் இணைந்த வர்க்க ஒற்றுமை தான் தேவை என்பதை பல்வேறு உதாரணங்களுடன் தோழர்கள் தங்களது உரையில் விளக்கினர்.

மின் துறையில் உள்ள பிரச்சினைகளை, இலவச மின்சாரம், மீட்டர் பொருத்துவது என்பன போன்ற விவசாயிகள் பிரச்சினையுடன் இணைத்துப் பேசியது தொழிலாளர் மத்தியில் அல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.

எனவே, மின் துறையில் உள்ள பிரச்சினைகளை, உழைக்கும் வர்க்கப் பிரச்சினைகளோடு இணைத்துக் கொண்டு செல்லும் அரசியல் போராட்டங்கள் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்பதை தொழிலாளர்கள் தெளிவு பெறும் வகையில் அமைந்தது இந்த கொடியேற்று விழா நிகழ்ச்சிகள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 95977 89801

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

புதுச்சேரி – பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் !

0

பேருந்து கட்டண உயர்வு : மக்களை அழிக்கின்ற நாசவேலையில் பேடியும் – ‘சாமி’ களும் ஒண்ணு!

ந்த ஆண்டு தீபாவளி புதுச்சேரி மக்களுக்கு இரட்டைக் கசப்பை அளித்திருக்கிறது. தீபாவளி வெடிகளின் சத்தத்தில் எவ்வித முன்னறிவிப்பின்றி திருட்டுத்தனமாக பேருந்து கட்டணத்தை 100% அளவிற்கு உயர்த்தியிருக்கிறது நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரசு அரசு. தீபாவளி செலவுகளின் கலக்கத்திலும், பண்டிகையின் இறுக்கத்திலும் இருந்த மக்கள், அடுத்த நாள் தங்களது அன்றாட வேலைக்காக பேருந்தில் ஏறிய பின்னர் தான் கட்டணக் கொள்ளை இடியாய் இறங்கியது.

புதுச்சேரியின் கவர்னராக ஆர்.எஸ்.எஸ் -ன் அடியாள் கிரண்பேடி கவர்னராக பதவியேற்ற போது அவருக்கு ஒளிவட்டம் போட்ட ஊடகங்களும், கட்சிகளும் இன்று அதிகாரத்துக்கான நாய்ச் சண்டையைப் பற்றித்தான் பக்கம் பக்கமாகப் பேசி வருகிறார்கள். இந்த அதிகாரச் சண்டையில் மக்களின் பிரச்சினைகளை பற்றிப் பேசுவதற்கு கவர்னருக்கும், முதல்வருக்கும் நேரமில்லை.

கோப்புகளில் கையொப்பமிடாமல் தேக்கி வைத்திருக்கிறார் என்று அமைச்சர் கந்தசாமியும், முதல்வர் நாராயணசாமியும் சொல்வதும், எவ்வித கோப்புகளும் வரவில்லை என்று கிரண்பேடி சொல்வதும் என சிறுபிள்ளை விளையாட்டாய் மாறிப் போயுள்ளது புதுச்சேரி அரசு. ஆனால் இப்படி மக்கள் பிரச்சினைகளை வைத்து விளையாடும் இவர்கள், தனியார் பஸ் முதலாளிகளின் கோரிக்கையை ஏற்று, மக்களைக் கொள்ளையடிக்க ஓரணியில் நின்று அனுமதி அளித்துள்ளனர்.

இந்த தீவட்டிக் கொள்ளையை எதிர்த்து அனைத்து ஓட்டுக் கட்சிகளும் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தின. ஆளும் காங்கிரசின் கூட்டணிக் கட்சியான  திமுக, தங்களை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்தது தவறு எனவும், அதைத் திரும்பப் பெற்று, தங்களுடன் கலந்தாலோசித்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என  மனு கொடுத்து ‘கூட்டணி தர்மத்தை’ நிலை நாட்டிக் கொண்டது.

மக்களின் எதிர்ப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும், கூட்டணியில் பிளவு ஏற்படுவது போன்ற சலசலப்புக்கள் ஆட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதால், கூட்டணிக் கட்சியையும், பிற கட்சிகளையும் சமாளிக்கும் வகையில் ஒரு குழு அமைத்து மூன்று மாதத்திற்குள் முடிவெடுத்து கட்டண உயர்வை அறிவிப்பது என அறிவித்துள்ளது காங்கிரசு அரசு.

எனவே, காங்கிரசு அரசு அறிவித்த பஸ் கட்டண உயர்வு ரத்து என்பது தற்காலிகமே! நிரந்தர ரத்து செய்ய வீதியில் இறங்குவோம்! என்ற முழக்கத்தின் கீழ் 25.10.2017 அன்று மாலை 06.00 மணிக்கு புதுச்சேரியின் மையப் பகுதியான சுதேசி காட்டன் மில் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி புஜதொமு தலைவர் தோழர். சரவணன், தலைமை தாங்கினார். புஜதொமு பொருளாளர் தோழர். செல்லக்கண்ணு கண்டன உரையாற்றினார்.

தலைமையுரையில், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்காமல் அதிகாரச் சண்டையிடும் முதல்வரும், கவர்னரும் மக்களைச் சுரண்டுவதிலும், முதலாளிகளுக்குச் சேவை செய்வதிலும் ஒரே அணியாக செயல்படுவதை அம்பலப்படுத்திப் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ்.-ன் சொம்பாக செயல்படும் கிரண்பேடி, மக்களை நேரில் சந்தித்து ஆய்வு நடத்துவது, இரவில் வாகனத்தில் சுற்றுவது போன்ற சில்லரை நடவடிக்கைகளையே சாதனைகளாக மார்தட்டிக் கொள்கிறார். அரசின் பல்வேறு துறை ஊழியர்கள் பல மாதங்களாக ஊதியமின்றி இருப்பதைப் பற்றியோ, டெங்குவால் கொத்து கொத்தாக மக்கள் சாவதைப் பற்றியோ பேச மறுக்கிறார்.

மோடியோ, புல்லட் ரயில் மக்களுக்கான திட்டம் என சரடு விடுகிறார். அவரைப் பொறுத்தவரை விமானத்தில் பயணிப்பவர்கள் தான்  மக்கள். ஏனெனில் புல்லட் ரயில் கட்டணம் என்பது விமானக் கட்டணத்திற்கு நிகரான கட்டணம். இதைத்தான், இங்கு கிரண்பேடியும் செய்ய நினைக்கிறார் என தோழர் செல்லக்கண்ணு தனது கண்டன உரையில் அம்பலப்படுத்தினார்.

போலீசு உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் கட்டண உயர்வு ரத்து செய்யப்பட்ட பின் ஆர்ப்பாட்டம் எதற்கு என்று கேள்வி எழுப்பிய நேரத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கட்டண உயர்வு ரத்து தற்காலிகம் தான் என்பதையும், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் வாழ்வை சீர்குலைப்பதாக உள்ளது எனவே, அந்தப் பிரச்சினைகளுடன் பஸ் கட்டண உயர்வையும் இணைத்து வீதியில் இறங்கிப் போராடும் போது மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும் என்ற வகையில் நடந்த ஆர்ப்பாட்டம் அங்கு நின்றிருந்த மக்கள், தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடர்புக்கு: 9597789801

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மோடி : பொது அறிவு வினாடி வினா – 5

டப்பு அரசியல் செய்திகளை படிக்கிறோம். அதை தொடர்ந்து நினைவு வைத்திருக்க முடியுமா? மோடி குறித்து ஒரு வினாடி வினா தயாரித்தால் அதில் வரலாறு, பொருளாதாரம், தலைவர்கள் வரலாறு என்று நிறைய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் மோடியின் கருத்துக்கள் பல பழம்பெருமை மற்றும் தற்பெருமை சார்ந்து தயாரிக்கப்படுவதால் பல பொய்களாக சிரிக்கின்றன. எனினும் நமக்கு அவை ஒரு அறிவுப் பயிற்சியைக் கொடுக்கும். முயன்று பாருங்கள்!

“மெர்சல்” படத்தில் தவறான விவரங்களை கூறிவிட்டார்கள், பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று பாஜக-வின் தமிழக தலைவர்கள்அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என்று மிரட்டினார்கள். சரி, பிரதமர் மோடி சொன்ன பொய்களுக்காக  ஆட்சியை நீக்கலாமா? இந்த வினாடி வினாவில் ஓரிரு பொய்களைத்தான் தந்திருக்கிறோம். அவற்றின் பட்டியல் மிகப்பெரியது!

வினாடி வினாவில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!

 

தனக்கு திருமணமாகிவிட்டது, மனைவியின் பெயர் யசோதாபென் என்பதை எந்த ஆண்டுத் தேர்தல் பிரமாண பத்திரத்தில் மோடி முதன் முறையாக குறிப்பிடுகிறார்?

2013 –ம் ஆண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மோடி ஒரு வரலாற்றுப் பொய்யை வெளியிட்டார்? அது என்ன?
(இத்தகவல் பொய் என்பதற்கு மொரார்ஜி தேசாயின் சுயசரிதையும், வீடியோ ஆதாரமும் இருந்தன. பிறகு மோடி அந்தப் பொய்யை பேசுவதில்லை.)

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் ஒரு ரூபாய், அமெரிக்காவின் ஒரு டாலருக்கு இணையாக இருந்ததாக 2013 ஜூலையில் அகமதாபாத் பொதுக்கூட்டத்தில் மோடி குறிப்பிட்டார். உண்மையில் அப்போது ரூபாய் மதிப்பு என்ன?

“இப்படி பொய் மேல் பொய் சொல்லும் ஒரு பிரதமரை எங்காவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? என ஆவேசமடைந்த முதல்வர் யார்?
(இந்த முதல்வரின் மாநிலத்திற்கு மத்திய அரசு 1.8 லட்சம் கோடி ரூபாய் கொடுத்ததாக மோடி பொய் சொன்னதற்காக ஆவேசப்பட்டார் அந்த முதல்வர்.)

2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழகத்தில் 41% வாக்காளர்கள் பா.ஜ.கவிற்கு ஆதரவளிப்பதாக கருத்துக் கணிப்பை வெளியிட்ட பத்திரிகை எது?

2014 தேர்தலின் போது பீகாரில் உரையாற்றி மோடி, பீகாரிகள் அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வென்றவர்கள் என்று சொன்னார். உண்மையில் அலெக்சாண்டர் இந்தியாவில் எந்தப் பகுதி வரை வந்தார்?

2014 தேர்தலில் கோயிலை விட கழிப்பறைதான் முக்கியம் என பேசிய மோடி, குஜராத் அரசு சார்பாக வல்லபாய் பட்டேல் சிலை வைக்க ஒதுக்கிய தொகை என்ன?

2014 தேர்தலில் “எல்லாராலும் குஜராத்தை உருவாக்கி விட முடியாது. அதற்கு 56 அங்குல மார்பு தேவைப்படுகிறது” என்ற ‘புகழ்’ பெற்ற வாக்கியத்தை மோடி எந்த மாநிலத்தில் பேசினார்?

2014-ம் ஆண்டில் தி இந்து ஆசிரியராக இருந்த சித்தார்த்த வரதராஜன் (தற்போது தி வயர் நிறுவனர்) நீக்கப்பட்டதற்கு கீழ்க்கண்டவற்றில் ஒன்று மட்டும் தவறானது. அது எது?

2011-ம் ஆண்டில் மோடியை பிரதமர் பதவிக்கு சிபாரிசு செய்தவர் யார்?

2014 ஏப்ரல் பாராளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் பா.ஜ.க கூட்டணிக்கு எத்தனை சதவீதம் கிடைக்கவில்லை?

கின்னஸ் சாதனையில் மோடி எதற்காக இடம் பெற்றார்?

_____________

கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி !

2

நெல்லையில் குடும்பமே தீயில் கருகி பலி ! கந்துவட்டியை கட்டுப்படுத்தாத அரசுதான் குற்றவாளி !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருதை – சிதம்பரம். தொடர்புக்கு – 97888 08110.

***

கடனை கட்டாதே கந்துவட்டிக்கு எதிராக கலகம் செய் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை – 91768 01656.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பாஜக-வைப் பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள் !

1

காராஷ்டிரா, மத்தியப் பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான இராஜஸ்தான், சத்தீஸ்கரிலும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்து தணிந்திருக்கின்றன.

இராஜஸ்தான் மாநிலத்தில், மார்க்சிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தின் தலைமையில் நடந்த போராட்டம், 20 மாவட்டங்களில் அரசை முற்றிலும் முடக்கி, குறிப்பிடத்தக்க வெற்றியைச் சாதித்திருக்கிறது. உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், கடையடைப்பு போன்ற வழமையான போராட்ட வடிவங்களோடு நின்றுவிடாமல், ஆயிரக்கணக்கான விவசாயிகள் அரசின் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்டு, அங்கேயே சமைத்துச் சாப்பிட்டுத் தங்களது கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றும் வரை 14 நாட்கள் தொடர்ந்து போராடினர்.

ராஜஸ்தான் மாநிலம் சிகார் நகரில் விவசாயிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அம்மாநில பா.ஜ.க. அரசு செத்துப் போய்விட்டதென அறிவித்து, இறுதிச்சடங்கு நடத்தப்படுகிறது.

இந்தப் போராட்டத்தின் மையமாக இருந்த சிகார் மாவட்டத்தை மற்ற மாவட்டங்களோடு இணைக்கும் சாலைகள் அனைத்திலும் நூற்றுக்கணக்கான தடையரண்களை அமைத்து, அந்தப் பகுதியை மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்து துண்டித்ததன் மூலம் போராடும் விவசாயிகள் மீது அரசு தனது படைகளை ஏவி தாக்குதல் தொடுக்க முடியாதபடி தடுத்தனர். இது மட்டுமன்றி, பா.ஜ.க. அரசை நிர்பந்திக்கும் வகையில் மாநிலம் முழுவதும் இலட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வது, சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வது, மாடு விற்கத் தடைச் சட்டத்தை விலக்கிக் கொள்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் இந்தப் போராட்டம்  நடைபெற்றது.

உரம், பூச்சிக் கொல்லி மருந்து, டீசல் போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால், “அச்செலவை ஈடுகட்டும் வகையில் விளைபொருட்களின் விலை அதிகரிப்பதில்லை” எனக் கூறுகிறார், உத்தாராம் தோர் என்ற விவசாயி,

வங்கியில் தான் வாங்கிய கடனைச் செலுத்த இயலாததால், தனது சொத்துக்களை ஜப்தி செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறார், சேவாராம் என்ற விவசாயி.

முன்பெல்லாம் விவசாயிகள் பண நெருக்கடியில் இருந்தாலோ அல்லது வறட்சியின் காரணமாகப் பயிர்கள் கருகிப் போனாலோ, அவர்கள் முதலில் தங்களது மாடுகளை விற்றுப் பிரச்சினையைச் சமாளிப்பார்கள். ஆனால், இன்றோ மாடுகளை வாங்குவதற்கு வணிகர்கள் யாரும் முன்வருவதில்லை.

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் திரண்டுள்ள இந்து மதவெறிக் குண்டர்கள் மாடுகளை வாங்கிச் செல்பவர்களைத் தாக்கிப் பணம் பறிப்பதோடு, அடித்துக் கொலையும் செய்கின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மாநில அரசு செயல்படுவதால் மாட்டுத் தரகர்கள் யாரும் மாடுகளை வாங்கி விற்க முன்வருவதில்லை. இதன் காரணமாக விவசாயிகள் தமது பண நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

அது மட்டுமன்றி, பால் வற்றிப் போன மாடுகளைப் பராமரிக்க முடியாமல், அவற்றை விவசாயிகள் அவிழ்த்து விடுவதால், அவை வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை மேய்ந்துவிடுகின்றன. மாடுகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாக்க பகல், இரவு என எல்லா நேரத்திலும் ஒருவர் வயலில் காவல் காக்க வேண்டிய நிலைமை உருவாகி வருகிறது.

பால் வற்றிப் போன மாடுகளைப் பராமரிப்பதே விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக மாறிப் போயிருக்கும் நிலையில், மாநில அரசோ, பராமரிக்கப்படாமல் திரியும் மாடுகளின் உரிமையாளர்களைக் கண்டறிந்து தண்டிக்கப் போவதாக மிரட்டுகிறது. இது விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதன் காரணமாக, மாடு விற்பதைத் தடை செய்யும் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இப்போராட்டத்தின் மையமாக இருந்தது.

சதிஷ்கர் மாநிலம் – காங்கேர் நகரில் நடந்த விவசாயிகளின் சாலை மறியல்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு முதலில் செவி சாய்க்காத அரசு, போராட்டத்தை முடக்குவதற்கு போராட்டம் நடைபெற்ற மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பித்ததுடன், அனைத்து வகையான போலீஸ் படைகளையும் குவித்து விவசாயிகளை அச்சுறுத்தியது. அதுமட்டுமன்றி, செல்போன் சிக்னல்களை முடக்கியதுடன், இணையதள சேவையை முடக்கியது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல விவசாயிகளின் உறுதியான போராட்டத்திற்கு சமூகத்தின் மற்ற பிரிவு மக்களிடமிருந்தும் ஆதரவு பெருகத் தொடங்கியது.

மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., ஆகிய நடவடிக்கைகள் விவசாயிகளையும், வணிகர்களையும், சமூகத்தின் எல்லாப் பிரிவு மக்களையும் ஒருசேரப் பாதித்துள்ளதால், விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் சமூகத்தின் அனைத்துத் தட்டுக்களைச் சேர்ந்த மக்களும் அவர்களோடு கைகோர்த்து அரசுக்கெதிராகக் களமிறங்கினர்.

வணிகர் சங்கங்கள், பால் விநியோகிப்பாளர்கள் சங்கம், நகர போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கம், டெம்போ உரிமையாளர்கள் சங்கம், சத்துணவுப் பணியாளர் சங்கம்  என 50-க்கும் மேற்பட்ட சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர் என அனைத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். அது மட்டுமன்றி, மாநிலம் தழுவிய அளவிற்குக் கடையடைப்பை நடத்தி, விவசாயிகளின் போராட்டத்திற்கு வலு சேர்த்தனர்.

விவசாயிகளின் போராட்டத்தின் முன் பணிந்து போவதைத் தவிர வேறு வழியில்லாத நிலையில், வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க. அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தி, 20,000 கோடி ருபாய் அளவிற்கு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறது.

சத்தீஸ்கரில் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக 2100 ருபாய் நிர்ணயிக்க வேண்டும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் போராட்டம் நடந்தது.

போராட்டத்தின் மையமாக இருந்த ராஜ்நந்கோன் மற்றும் கவர்தா மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, விவசாய சங்கத் தலைவர்களும்,  அம்மாநில முதல்வர் ராமன் சிங்கின் வீட்டை முற்றுகையிடச் சென்ற 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர். போலீசின் தொடர் அடக்குமுறை, கைதுகளின் காரணமாக சத்தீஸ்கரில் விவசாயிகள் போராட்டம் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது.

விவசாயிகளின் கோரிக்கைகள், பகுதிப் பிரச்சினையாகவோ, மாநிலப் பிரச்சினையாகவோ இல்லாமல், நாடு தழுவிய பிரச்சினையாக உருவெடுத்திருப்பதை இப்போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன. மேலும், இராஜஸ்தான் விவசாயிகளின் போராட்டமும், அதில் கிடைத்த வெற்றியும், விவசாயிகள் அரசிடம் கெஞ்சிக் கொண்டிராமல், ஆளுங்கும்பலை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே வெற்றியை ஈட்ட முடியும் என்பதை எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, அய்யாக்கண்ணு உள்ளிட்ட தமிழக விவசாய சங்கத் தலைவர்களும், அமைப்புகளும் தமது போராட்ட முறையை, வடிவங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துவிட்டதை இனி யாரும் மறுத்துவிட முடியாது. ஏனென்றால், பாரம்பரிய விவசாயத்தை ஒழித்துக்கட்டி, விவசாயிகளை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தும் நோக்கத்தில் செயல்படும் அரசுகளை எதிர்த்து, அதாவது விவசாயிகளின் பரம வைரிகளாக மாறிப்போன அரசுக் கட்டமைவை எதிர்த்து நாம் களத்தில் நிற்பதால், அதற்கு ஏற்ற வகையில் போராட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

-கதிர்

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மோடியின் நர்மதா அணை பிரகடனம் : சதிகாரன் புத்திசாலி ! சகிப்பவன் குற்றவாளி !!

1

“சதிச் செயல் செய்தவன் புத்திசாலி, அதைச் சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!”- மோடியின் நர்மதா அணை பிரகடனம்

“சர்தார் சரோவர் அணையைக் கட்டுவதற்கு எழுந்த தடைகளைப் போல உலகில் வேறு எந்தவொரு திட்டத்துக்கும் இவ்வளவு இடைஞ்சல்கள் ஏற்பட்டிருக்காது. இந்தத் திட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. எனினும், இத்திட்டத்தை முடிக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அதன்படி தற்போது அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.”
– இது, கடந்த செப்டெம்பர் 17 ஆம் தேதி அன்று குஜராத்தில் நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை நாட்டிற்கு ‘அர்ப்பணித்து’ மோடி ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

138 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் சரோவர் அணைக்கட்டத் தனது பிறந்தநாளில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி

இந்த அணைக்கட்டின் பிரம்மாண்டம்  காரணமாகப் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களும், விவசாயிகளும் தாம் பிறந்து, வளர்ந்து, பிழைத்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர் என்பது உலகமே அறிந்த உண்மை. இந்த அணைக்கட்டால் யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ, யார் அகதிகளாகத் துரத்தப்பட்டார்களோ, அவர்களைத்தான் சதிகாரர்கள் எனக் குற்றஞ்சுமத்துகிறார், மோடி. காரணம், அவர்கள் அணைக்கட்டுக்கு எதிராகப் போராடினார்களாம். சொந்த பூமியை விட்டு, நிலத்தைவிட்டு வெளியேறு என அரசு உத்தரவிட்டவுடன், யாராவது எதிர்ப்புத் தெரிவிக்காமல் மூட்டைமுடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிடுவார்களா?

சரோவர் அணைக்கட்டுக்கான நிதியுதவி 1985 -ஆம் ஆண்டு உலக வங்கியிடமிருந்து பெறப்பட்டு, 1987 -ஆம் ஆண்டில் இதன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இக்காலகட்டத்தில்தான், இதற்கு எதிராக மத்தியப்பிரதேசம், குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில், அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் வாழும் கிராமப்புற மற்றும் பழங்குடியின மக்கள், நர்மதா பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பின் கீழ் அணிதிரண்டு, சமூக ஆர்வலர் மேதா பட்கர் தலைமையில் போராடத் தொடங்கினர். இவ்வியக்கம் இந்த அணைக்கட்டு குறித்து முன்வைத்த உண்மை விவரங்களைப் பரிசீலித்து, அதன் அடிப்படையில்தான் அணைக்கட்டிற்கு வழங்கி வந்த நிதியுதவியை இரத்து செய்தது, உலக வங்கி.

இதன் பின்னர் உள்நாட்டு முதலீடுகளைக் கொண்டு அணை கட்டும் வேலை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், வெளியேற்றப்படும் மக்களின் நிவாரண மற்றும் மறுவாழ்வுக்கான வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படாததைச் சுட்டிக்காட்டி, 1995 -ஆம் ஆண்டு அணை கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தது உச்சநீதி மன்றம்.

இந்த இடைக்கால தடை 1999 -ஆம் ஆண்டில் விலக்கிக் கொள்ளப்பட்டு, கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன. மேலும், அணையின் உயரத்தையும் 49 மீட்டரில் இருந்து 85 மீட்டர், அதன் பின்னர் 121 மீட்டர் எனத் தடாலடியாக உயர்த்திக்கொண்டே சென்றது அரசு. அணைக்கட்டின் உயரம் அதிகரிக்கப்பட்டதற்கு ஏற்ப பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. 121 மீட்டர் உயரத்தோடு திருப்தி அடையாத குஜராத் அரசு, மோடி அம்மாநில முதல்வராக இருந்த சமயத்தில் அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்தவேண்டும் எனக் கோரியதை, அப்போதைய மத்திய அரசு (காங்கிரசு) நிராகரித்தது. 2014 -ஆம் ஆண்டு  மோடி பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த பதினேழாவது நாளில் அணையின் உயரத்தை 138 மீட்டராக உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இந்த சர்தார் சரோவர் அணையின் நீர்பிடிப்புப் பகுதிக்காக, சுமார் 13,542 ஹெக்டேர் வனப் பகுதியும், 12,869 ஹெக்டேர் பொதுநிலமும், 11,279 ஹெக்டேர் விளைச்சல் நிலமும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாக அரசு வெளியிட்டிருக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலப்பகுதிகள் மத்தியப் பிரதேசம், மராட்டியம், குஜராத் உள்ளிட்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 245 கிராமங்களை உள்ளடக்கியவை. இக்கிராமங்களில் வசித்த சுமார் 2.5 இலட்சத்திற்கும் அதிகமானோர் அணை கட்டுவதற்காக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மறுகுடியேற்றம் மற்றும்  மறுவாழ்வு உதவிகளைச் செய்து தருவதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக்காட்ட ம.பி., குஜராத் மற்றும் மராட்டிய மாநில அரசுகள் முயற்சித்துள்ளன. இதனைக் கடந்த 2005 -ஆம் ஆண்டு, உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டிச் சாடியிருக்கிறது.

பாதிக்கப்பட்ட 245 கிராமங்களில் 193 கிராமங்களைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 40,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், வெறும் 18,346 குடும்பங்களை மட்டும் கணக்கில் காட்டியிருக்கிறது ம.பி. அரசு. கணக்கில் காட்டப்பட்ட குடும்பத்தினருக்கும்கூட முழுமையான இழப்பீடு கொடுக்கப்படவில்லை. வழங்கப்பட்ட நிவாரணங்களிலும்கூட மிகப்பெரும் முறைகேடுகள் நடந்திருக்கின்றன.

பழங்குடியின மக்கள், தங்களுக்கு இழப்பீடாகப் பணம் தேவையில்லை என்றும் நிலம்தான் வேண்டும் என்றும் கோரினர். ஆனால், பெரும்பான்மையானவர்களுக்கு இன்றளவும் நிலம் ஒதுக்கப்படவில்லை.

மறுகுடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இடங்களில் குடிநீர், மின்சாரம், சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்தித் தரப்படவில்லை. கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் ஒதுக்கப்படவில்லை.  மேலும் ம.பி.யில் ஒதுக்கப்பட்ட மறுகுடியிருப்புப் பகுதிகளில் 78 இடங்கள் வசிப்பதற்குத் தகுதியற்றவை என விசாரணைக் கமிசன்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இவ்வளவுக்குப் பிறகும், பாதிக்கப்பட்ட மக்களைச் சதிகாரர்கள் எனச் சாடுவதற்கு மோடியின் நாக்கும் மனமும் கூசவில்லை. பழங்குடியின மக்களுக்கு எதிராகத் தீர்ப்பெழுதிய உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கைகளும் நடுங்கவில்லை.

***

நர்மதா பாதுகாப்பு இயக்கம் இத்திட்டத்தைக் கைவிடக் கோரி 1987 ஆம் ஆண்டு தொடங்கி, கடந்த முப்பது ஆண்டுகளாகப்  போராடி வருகிறது. அவ்வியக்கத்தினர் மும்பை, டெல்லி உள்ளிட்டுப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, உண்ணாவிரதம் எனப் பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தியிருப்பதோடு, தமது கிராமங்கள் நீரில் மூழ்கிய பின்னும் அங்கிருந்து வெளியேற மறுத்து, உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்கள் எவையும் இரகசியமாகவோ, சதித்தனமாகவோ நடந்தவையல்ல. சட்டத்தின் அனுமதி பெற்று நடைபெற்றவைதான்.

சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு இதுவரை நிவாரண, மறுவாழ்வு உதவிகள் வழங்கப்படாததைக் கண்டித்து மத்தியப்பிரதேசம் – போபால் நகரில் நர்மதா பாதுகாப்பு இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும் மேதா பட்கர்.

இந்தத் திட்டம் இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப்  பறித்து, அவர்கள் அகதிகளாக்குகிறது என்ற அடிப்படையில் இத்திட்டத்திற்குத் தடை கோரி போடப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம், அதனை வெறும் நிவாரணத்திற்கான வழக்காகச் சுருக்கிக் கொண்டுதான் பல்வேறு தீர்ப்புகளை அளித்திருக்கிறது.

அணையின் உயரத்தை 85 மீட்டருக்கு உயர்த்திக் கொள்ள அனுமதியளித்த உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நர்மதா பாதுகாப்பு இயக்கம் 2000-ஆம் ஆண்டில்  தொடுத்த வழக்கில், “வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம், மறுவாழ்வு வழங்குவது குறித்து மட்டுமே தாம் இனி தலையிடப் போவதாகவும், அணை கட்டுவதை நிறுத்தி வைக்க உத்தரவிடப் போவதில்லை” என்றுதான் நீதிபதிகள் மனச்சாட்சியின்றித் தீர்ப்பை எழுதினர்.

அணையின் உயரத்தை அதிகரித்துக் கொள்ள அனுமதித்து உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குற்றத்துக்காக எழுத்தாளர் அருந்ததி ராய் மீது தானே வலிய வந்து அவதூறு வழக்குத் தொடுத்தனர் உச்சநீதி மன்ற நீதிபதிகள். அவர்கள் தொடுத்த வழக்கை அவர்களே விசாரித்து, அருந்ததி ராய்க்கு ஒரு நாள் சிறைத் தண்டனையும், 2,000 ரூபாயும் அபராதமும் விதித்தனர். இந்த அபராதத்தைச் செலுத்தத் தவறினால், மூன்று மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தக் கட்டைப் பஞ்சாயத்து தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற அருந்ததி ராயையே சிறைக்கு அனுப்பியது மூலம், அணைக்கட்டு தொடர்பான தமது தீர்ப்புகளை விமர்சிக்க யாரும் துணியக்கூடாது என்ற அச்சுறுத்தலைக் கட்டவிழ்த்துவிட்டது உச்சநீதி மன்றம்.

இந்த அணைக்கட்டு, குஜராத் மாநில விவசாயிகளுக்கும் கட்ச் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் பெரும் பயன் அளிக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்து,  பழங்குடியின மக்கள் அவர்களது கிராமம், நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை நியாயப்படுத்தி வருகிறார், மோடி. ஆனால், தண்ணீரை எடுத்துச் செல்லும் கால்வாய்களில் வெறும் 30% மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

அருணாச்சல பிரதேசத்திலும் வடகிழக்கிந்திய மாநிலங்களிலும் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட அணைக்கட்டுக்களின் கட்டுமானத்தை நிறுத்தக்கோரி நர்மதா பாதுகாப்பு இயக்கத்தின் தலைமையில் அசாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

அவையும் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயன்தரும் வகையில் அமைக்கப்படாமல்,  பெரும்பாலும் தொழிற்பேட்டைகள் மற்றும் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சதி மூடிமறைக்கப்பட்டு, வாழ்வாதாரத்திற்காகப் போராடிய மக்கள் சதிகாரர்களாகக் காட்டப்படுகின்றனர்.

ஆளுங்கும்பலே கூறிவரும் சட்டம், தர்மத்திற்கு உட்பட்டு, முப்பது ஆண்டுகளாகச் சளைக்காமல் போராடிய பிறகும் கிடைத்த பலன் இதுதான் எனும்போது, பொதுமக்கள் தமது வாழ்வாதாரத்தையும் வாழ்வுரிமையையும் பாதுகாத்துக் கொள்ள இந்தச்  சட்டத்தை மதித்து ஏன் போராட வேண்டும் என்ற கேள்வி தவிர்க்கவியலாமல் எழுந்து நிற்கிறது.

குறிப்பாக, பார்ப்பன பாசிசக் கும்பல், சட்டப்பூர்வமாகவும், சட்டத்தை மீறியும் மிகக் கொடூரமான பொருளாதாரத் தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் மக்கள் மீது ஏவிவரும் வேளையில், மேற்கண்ட கேள்வி மிகுந்த  முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில், நடுத்தர வர்க்க அறிவுத்துறையினர் சட்டம், ஜனநாயகம், நீதிமன்றம் எனப் பம்மாத்து செய்து, இந்தக் கேள்வியைப் புறந்தள்ளிவிட முயலுவது நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதற்குச் சமமானதாகும்.

-கந்தன்
-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெர்சல் : பா.ஜ.க -வை கண்டிக்கும் மக்கள் – வீடியோ

3

ஜி.எஸ்.டி. குறித்த வசனத்தை மெர்சல் திரைப்படத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று தமிழிசை சௌந்திரராஜன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும்  எச்.ராஜா (எ) ஹரிஹர ராஜா சர்மா ஆகிய பாஜக தலைவர்கள் வரிந்துகட்டி வந்தனர். மிரட்டியும் வந்தனர். பிறகு மக்கள் எதிர்ப்பு அதிகம் ஆனதும் பஞ்சாயததை முடித்துக் கொண்டதாக கூறினர்.

இது குறித்து சென்னையில் மெர்சல் திரைப்படம் ஓடும் திரையரங்குகளில் சென்று மக்களைச் சந்தித்தோம். கேளுங்கள்!

– வினவு செய்தியாளர்கள்.

_____________

இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அனிதாக்களை 5 -ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடும் நவோதயா பள்ளிகள் !

6

த்திய அரசின் நவோதயா பள்ளிகளுக்குத் தடையில்லா சான்று வழங்கும்படித் தீர்ப்பளித்திருக்கிறது உயர்நீதி மன்ற மதுரைக் கிளை. சொன்ன நீதிபதி பா.ஜ.க. -வின் பொது சிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசியவராம். நியாயத்தையும் தர்மத்தையும் வாட்சப் வழியே மட்டும் கற்றுணர்ந்த பலர் இந்த தீர்ப்பை கொண்டாடித் தீர்க்கிறார்கள். நவோதயா இல்லாததால்தான் தமிழக கல்வித் தரம் நாசமாய்ப் போய்விட்டதென அம்பிகள் எல்லோரும் ஃபார்வேர்டு மெசேஜ் வழியே புகாரளிக்கிறார்கள். பெருங்குடிகாரன் ஏதோ ஒரு சரக்கு கிடைத்தால் போதும் என தவிப்பது போல, சுயசிந்தனையற்ற மக்கள் பலர் சி.பி.எஸ்.சி.,  நீட், நவோதயா எனக் கிடைக்கும் எல்லா வழியில் இருந்தும் பாபவிமோசனம் பெற்றுவிடலாமென நம்பி, அவற்றை வெறித்தனமாக ஆதரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நவோதயா பள்ளி

மிகப் பலரை வசீகரித்த ஒரு அம்சம் நவோதயாவில் இந்த ஆண்டு +2 படித்து நீட் தேர்வெழுதிய 14000 சொச்சம் பேரில் 7000 பேர் இந்தியா முழுக்க மருத்துவம் படிக்கத் தேர்வாகியிருக்கிறார்கள் எனும் தகவல். இதில் எத்தனை பேர் எம்.பி.பி.எஸ். ஆவார்கள் என்பது தெரியவில்லை. ஆனாலும், 580+ பள்ளிகளில் இருந்து 7000 டாக்டர்கள் எனும் மந்திர எண் மிடில்கிளாசுக்கு உச்சகட்ட கிளுகிளுப்பூட்டுகிறது.

நவோதயா பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மட்டுமே உண்டு. 5-ஆம் வகுப்பு வரை மற்ற பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி நவோதயா பள்ளிகளில் சேரவேண்டும். சராசரியாக நூறில் இருவர் தேர்வாகிறார்கள். தமிழகத்தில் 10 இலட்சம் மாணவர்கள் ஒவ்வோர் வகுப்பிலும் பயில்கிறார்கள். (5 ஆம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை இன்னும் கணிசமாக இருக்கும்) ஒப்பீட்டளவில் மிக அதிக அளவு நகர்ப்புற மாணவர்களைக் கொண்ட மாநிலம் இது. அவர்களின் பெற்றோர்கள் பலர் இனி நவோதயாவை ஒரு வெறித்தனமான இலட்சியமாக வரித்துக்கொள்வார்கள். அதற்கான தயாரிப்பு இரண்டாம், மூன்றாம் வகுப்பிலேயே துவங்கும். இப்போது பத்தாம் வகுப்பு மாணவர்களும் 12-ஆம் வகுப்பு மாணவர்களும் வதைமுகாம்களுக்கு ஒப்பான சூழலில் வாழ்கிறார்கள். பள்ளியில் கூடுதல் வகுப்பு, 10-ஆம் வகுப்பு என்றால் 2 மணி நேரத்துக்கும் குறையாத டியூஷன், 12-ஆம் வகுப்பு எனில் குறைந்தது 3 பாடங்களுக்கு டியூஷன். இப்போது நீட் பயிற்சி கூடுதலாக இணைய இருக்கிறது.

+2 முடித்தால் நீட் பயிற்சி மையம்! ஆரம்பப்பள்ளி சிறார்க்கு நவோதயா பயிற்சி மையம்!

இப்போது வரைக்கும் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பது ஆரம்பப் பள்ளி வகுப்பு சிறார்கள்தான். இனி 10, 11, 12-ஆம் வகுப்பு குழந்தைகளின் பெற்றோர்களைப் போல, 4, 5-ஆம் வகுப்பு பெற்றோர்களும் பெரும் பதட்டத்துக்கு ஆட்படுவார்கள். இது ஒன்றும் மிகையான அனுமானமல்ல. என் அனுபவத்தில் இந்த காலகட்டத்தில்தான் (10, 12-ஆம் வகுப்பு) பெற்றோர்களால் பிள்ளைகளும், பிள்ளைகளால் பெற்றோரும் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். காரணம், பொதுத்தேர்வு, அந்த மதிப்பெண் மூலம் மட்டுமே தெரிவு செய்ய முடிகிற உயர் கல்வி வாய்ப்புக்கள். நவோதயா இந்தப் போட்டியை இன்னும் அடிமட்டத்துக்குக் கொண்டுபோய் ஐந்தாம் வகுப்பையே உச்சகட்ட போட்டியுள்ள களமாக மாற்றும்.

நாமக்கல் பள்ளி ( மாதிரிப்படம்)

ஏற்கனவே உயர்கல்வி போட்டித் தேர்வு பயிற்சி மையங்கள் ஆண்டுக்கு 25 ஆயிரம் கோடி கல்லா கட்டுகின்றன. நீட் அதனை 1 இலட்சம் கோடியாக உயர்த்தவிருக்கிறது. இதில் ஆரம்பப்பள்ளியிலேயே நுழைவுத்தேர்வு எனில், என்ன ஆவார்கள் குழந்தைகள்..? ஒருவனுக்கு இலட்ச ரூபாய் பரிசு என அறிவித்துவிட்டு, பல இலட்சம் பேரிடம் கோடிகளில் பணம் பிடுங்கும் லாட்டரி வியாபாரம் போல மத்திய அரசு நவோதயாவைத் துவங்கியிருக்கிறது. ஆனால், இங்கே பரிசு தரப்போவது மத்திய அரசு, லாட்டரி வியாபாரத்தைத் தனியார் பயிற்சி மையங்கள் செய்யும்.

எதிர்கால வாழ்வுக்குக் காலணாகூடச் சேமிக்காமல், சக்திக்கு மீறி கடன் வாங்கி பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர்கள் பலர் இங்கிருக்கிறார்கள். வீட்டில் ரேஷன் அரிசியில் சமைப்பார்கள் என்பதால், மதிய உணவு கொண்டுவராத மெட்ரிக் பள்ளி பிள்ளையை நான் பார்த்திருக்கிறேன் (அந்த வறுமையிலும் அவர்கள் ஆண்டுக்கு 30 ஆயிரம் கட்டி மகளைப் படிக்க வைக்கிறார்கள்).

தமது ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை பிள்ளைகளின் பள்ளிக் கட்டணமாகச் செலுத்திவிட்டு, மிச்ச பணத்தில் அவல வாழ்வு வாழும் குடும்பங்களைக் கொஞ்சம் மெனக்கெட்டால் உங்களாலும் பார்க்க இயலும். குடிசைப் பகுதியில் இருந்து வருவதால் தம் வீட்டு முகவரியை சொல்லக் கூச்சப்படும் குழந்தைகள் பலரைச் சந்தித்திருக்கிறேன், (அவர்கள் தனியார் பள்ளிகளில் பயில்கிறார்கள்). பள்ளிகளில் கண்டறியப்படும் கற்றல் குறைபாடு கொண்ட மற்றும் நுண்ணறிவுக் குறைபாடு கொண்ட சிறார்கள் குறித்துப் பெற்றோர்களிடம் பேசக்கூட முடிவதில்லை. தம் பிள்ளைகளால் மற்ற பிள்ளைகளைப் போல படிக்க முடியாது என்பதை அனேகப் பெற்றோரால் ஏற்கவே முடிவதில்லை.

நான் சந்தித்த ஒரு தாய் தான் அணிந்திருந்த எல்லா நகைகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டதாகச் சொன்னார். வேண்டுதல் ஒன்றுதான், மகன் பத்தாம் வகுப்பில் (அவர்) சொல்லிக்கொள்ளும்படியான மதிப்பெண் வாங்க வேண்டும்.

தான் எதிர்பார்த்த மதிப்பெண் தன் மகளுக்கு +2வில் வராத நிலையில், நண்பர் ஒருவர் என்னிடம் சொன்ன வாக்கியம், “நாங்கள் (எங்கள் மகளால்) ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். உறவினர்களை எதிர்கொள்ள அவமானமாய் இருக்கிறது; அதனால் தொலைபேசியைக்கூட எடுக்க மனமில்லை.” மிட் டேர்ம் தேர்வில் 3 பாடங்களில் தேர்ச்சியடையாத ஒரு மாணவரது அப்பா, “இவன் அடுத்த பரீட்சையிலயும் இப்படி மார்க் எடுத்தா, நாங்க (பெற்றோர் இருவரும்) தற்கொலை பண்ணிக்கிறதைத் தவிர வேற வழியில்லை” என மகன் முன்னாலேயே அழுகிறார்.

தனியார் பள்ளியில் டிஜிட்டல் வகுப்பு

இவையெல்லாம் மிகையான எதிர்வினைகளாக தோன்றலாம். ஆனால், பெருந்தொகையான பெற்றோரின் மகிழ்ச்சி, கவலை, வெற்றி, தோல்வி, நம்பிக்கை, அவமானம் என சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாகப் பிள்ளைகளின் மதிப்பெண் இருக்கிறது. அதுதான் வெற்றிகரமான பள்ளி எனக் கருதப்படுபவற்றை நோக்கிப் பெற்றோர்களை ஓடவைக்கிறது. அப்படியான ஒரு பள்ளியில் தன் குழந்தையைச் சேர்க்க எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கும் பெற்றோர்கள் இங்கே மிகமிக அதிகம். குழந்தைகள் தற்கொலையைக் கேள்விப்பட்டதில்லை, நவோதயா அதைக் கொண்டுவரும்!

இந்த களச்சூழலில் இருந்து நவோதயாவைப் பாருங்கள். மாவட்டத்துக்கு ஒரு பள்ளி. அதில் அதிகபட்சம் வகுப்புக்கு 50 பேர் என்று வைத்தாலும் தமிழகம் முழுக்க 1500 பேருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தோராயமாக 10 லட்சம் பேர் இருக்கும் இடத்தில் அதிக கற்றல் திறன் கொண்ட 1500 பேரைப் பொறுக்கி எடுத்து, அவர்களுக்கு உச்சபட்ச வசதிகளைக் கொடுத்து அவர்களை இன்னும் திறமையாகத் தேர்வெழுதும் மாணவர்களாக உருவாக்கப் போகிறார்கள்.

ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்ற தனியார் பள்ளி உணவு விடுதி

குறைந்தபட்சம் பள்ளிக்கல்வி செலவில் 6 இலட்சம் ரூபாயை மிச்சம் பிடிக்கவும், அதன் பிறகான கல்லூரி செலவில் இன்னும் அதிகம் மிச்சம் பிடிக்கவும், ஒரு வெற்றிகரமான பெற்றோராக தம்மை நிரூபிக்கவும் உள்ள பெரும் வாய்ப்பு நவோதயா பள்ளி சீட்டுக்களுக்கான ரேஸ்தான். ஆகவே, தமிழக மிடில்கிளாஸ் ஒரு வெறித்தனமான முனைப்போடு, தம் பிள்ளைகளை ஆரம்பப்பள்ளியிலேயே நவோதயா நுழைவுத்தேர்வுக்கு தயார் செய்யும். அமைச்சர்கள் தம் அதிகாரத்தின் கடைசித் துளியையும் சுவைக்க விரும்புவதுபோல, இவர்கள் நவோதயா சீட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பார்கள்.

அந்தக் கனத்தைச் சுமக்கப்போவது, நவோதயா பள்ளி என்றால் என்னவென்றே தெரியாத சிறார்கள். இனி ஆறாம் வகுப்பு மாணவர்களை 4 பிரிவில் அடக்கலாம்.

  • நவோதயாவை அறிந்திராத குழந்தைகள்,
  • அறிந்திருந்தாலும் அதனை அணுகவியலாத குழந்தைகள்,
  • அணுகித் தேர்வாகாத பிள்ளைகள்,
  • நவோதயா பிள்ளைகள்.

இது திறமை அடிப்படையிலான தீண்டாமை!

இதுவரை, நகரம் – கிராமம் என இருந்த பிரிவினை, சற்றே மாறி அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்றானது. பிறகு தனியார் பள்ளி – நாமக்கல் பள்ளி என்றானது. அது இப்போது மாநில பாடம் – சி.பி.எஸ்.சி என்று இருக்கிறது. இனி அது நவோதயா – ஏனையை பள்ளிகள் என்று ஆகப்போகிறது. ஒரு பிரிவு மாணவர்களை மேம்பட்டவர்களாகக் காட்டி இன்னொரு பிரிவினரைத் தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளுவது இங்கே பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது.

அந்தப் பிளவை இன்னும் கூர்மைப்படுத்த நவோதயா மோகத்தால் முடியும். 14,000 பேரில் 7000 பேரை மருத்துவம் போன்ற உயர்படிப்புக்கு அனுப்ப முடிகிற ஒரு பள்ளியை ஒரு தொழிற்சாலையாகவே கருத முடியும்.  முழுக்க புத்திசாலிகளால் நிறைந்திருக்கும் பள்ளி அடிப்படையில் தவறானது. கற்றல் குறைபாடு உள்ள சிறார்களைக்கூட ஒரு பள்ளி கூடுமானவரை நிராகரிக்கக்கூடாது.

கல்விப் புலத்தில் நிலவும் வர்க்க ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அனிதா

நடைமுறை சிரமங்கள் இருக்கட்டும். நவோதயா போன்ற ஒரு பள்ளியை அரசே நடத்துவது அறமற்ற செயல். குடிநீரும், கழிப்பறையும் இல்லாத பள்ளிகள், போதுமான ஆசிரியர்கள் இல்லாத ஏராளமான பள்ளிகளை நாடுமுழுக்க வைத்துக்கொண்டு, அதில் படிக்கும் குழந்தைகளுக்கும் வாய்ப்பளிக்கிறோம் என பாசாங்கு செய்து நுழைவுத்தேர்வு வைப்பது உச்சகட்ட வக்கிரம். எல்லா வசதிகளோடு ஒரு சில குழந்தைகளை அரசே படிக்க வைப்பதும், ஏனைய இலட்சக்கணக்கான சிறார்களைப் பிச்சைக்காரர்களைப் போலக் கிடைப்பதை வாங்கிக்கொள்” எனப் படிக்க வைப்பதும் அநீதி என்பது உங்களுக்குப் புரியவில்லையா? 90 மார்க் இல்லை என்பதற்காக உங்கள் பிள்ளையை வராண்டாவில் உட்காரவைத்தால் ஒத்துக்கொள்வீர்களா?

எல்லா திட்டங்களையும் குறை சொல்கிறோம் என உடனடியாக தேசபக்தர்கள் எதிர்வினையாற்றுவார்கள். அவர்களுக்குப் பதிலளிக்க பல உதாரணங்களைக் கொடுக்க இயலும். வடசென்னையில் டான்பாஸ்கோ சபையின் பாலிடெக்னிக் மற்றும் ஐ.டி.ஐ. செயல்படுகிறது. பல இடங்களில் உள்ள டான்பாஸ்கோ பள்ளிகளில் படிப்பவர்களில் பத்தாவது தேறாதவர்கள் அல்லது குறைவான மதிப்பெண் பெற்று 12 ஆம் வகுப்பு படிக்க ஆர்வமில்லாதவர்கள் படிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் அது.

தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள பூவத்தூர் கிராமப் பள்ளியில் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வில் 2 மாணவர்கள் மட்டும் தோல்வியடைந்தார்கள். அவர்கள் இருவரும் போதிய நுண்ணறிவுத்திறன் இல்லதவர்கள். கடுமையான குறைபாடு உள்ளவர் ஒரு பாடத்தில் மட்டும் தேறினார். ஓரளவு குறைபாடு உள்ளவர் ஒரே பாடத்தில் மட்டும் தோல்வியடைந்தார். அந்த மாணவர்கள் நிச்சயம் தோல்வியடைவார்கள் என்பதை அறிந்தேதான் அந்தத் தலைமை ஆசிரியர் தேர்வுக்கு அனுமதித்திருக்கிறார். ஒரு தலைமை ஆசிரியராக 100% தேர்ச்சியை  தெரிந்தே இழந்து சிறு தோல்வியை சந்தித்திருக்கிறார். ஆனால், அந்த இரு மாணவர்களுக்கும் இது மகத்தான் வெற்றி இல்லையா!

நவோதயா பள்ளிகள் கல்வித்துறையை மேம்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. அதிக நவோதயா பள்ளிகளைக் கொண்ட உ.பி. கல்வித்தரத்தில் கடைசியிலும் கடைசி படியில் இருக்கிறது.

அனிதாக்கள் இனி ஐந்தாம் வகுப்பிலேயே ஒழிக்கப்படுவார்கள்!

அனிதா போன்ற எளிய மாணவர்களை உயர்கல்வி வாய்ப்பில் இருந்து விரட்டிவிடுவதற்கான பல திட்டங்களை அரசு பல தளங்களில் இருந்தும் செயல்படுத்துகிறது. ஆரம்பப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களையே நியமிக்காமல் இருப்பது, நீட் தேர்வு, ஐந்து, எட்டாம் வகுப்புக்களுக்குப் பொதுத்தேர்வு, உயர்கல்வி உதவித்தொகை குறைப்பு, பல்கலைக் கழகங்களுக்கான நிதியை வெட்டுவது என்பவை எல்லாமே பாமர மக்கள் உயர்கல்வி பயில்வதை நிறுத்தும் பல்வேறு உத்திகள்தான்.

நவோதயா என்பது அத்தகைய நடவடிக்கைகளின் காஸ்ட்லி வெர்ஷன். அதன் மூலம் ஒரு தரப்பு மக்களுக்கு போதையூட்டி, இன்னொரு தரப்பு பிள்ளைகளை இலாயக்கற்றவர்கள் என முத்திரை குத்தி ஒதுக்குவதே அதன் நோக்கம். இப்போது மாநில பாடத்திட்டம் மட்டமானது என மாணவர்களும் பெற்றோர்களும் நம்புவது போல, நவோதயா வந்தால் மற்ற பள்ளிகள் மட்டம் என மக்களும் மாணவர்களும் நம்புவார்கள். அவர்கள் நம்பிக்கையை 6 ஆம் வகுப்பிலேயே கொன்றுவிட்டால், 12 ஆம் வகுப்பில் அனேகமாக போட்டியே இருக்காதில்லையா?

ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிப்பது என்பது மலிவான கூலிகளை உற்பத்தி செய்யும் நுட்பம். மிக அதிக அளவு மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலங்களில் (தமிழகம், கேரளா) அடிமட்ட வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. அங்கெல்லாம் வேலைக்கு வருவது ஏழைகளின் உயர்கல்விக்கு வாய்ப்பு குறைவாக உள்ள மாநில இளைஞர்கள்தான்.

அரசுப் பள்ளிகளை முற்றிலுமாக அழித்தொழிக்க எல்லா வேலைகளையும் செய்யும் இந்த அரசாங்கம், நவோதயா எனும் பெயரில் அரசுப் பள்ளிகளை கொண்டுவர இத்தனை முனைப்பாக இருப்பதில் இருந்தே அதன் பின்னால் ஒரு மோசமான உள்நோக்கம் இருப்பதை உணர இயலும். குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச்செல்வதைத்தான் நவோதயா செய்யும். அது உங்கள் குழந்தைகளை ஒன்றும் செய்யாமல் போகலாம். ஆனால், யாரோ  ஒருவரின் பிள்ளைகளை உளவியல்ரீதியாகக் கொல்லத்தான் போகிறது. யாரோ ஒரு குழந்தை கொல்லப்படுவதை உங்களால் இயல்பாக கடந்து போக இயலும் என்றால், நவோதயாவை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லை என்றால், இந்த நவோதயா எனும் கல்வித் தீண்டாமைக்கு எதிரான உங்கள் குரலை பதிவுசெய்யுங்கள்.

-வில்லவன்

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கந்து வட்டி தற்கொலைகள் : குற்றவாளிகள் யார் ? கருத்துக் கணிப்பு

0

சக்கிமுத்து குடும்பத் தற்கொலையை பார்த்து தமிழகம் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. அந்தக் குழந்தை கையில் தின்பண்டத்துடன் தீயில் வேகும் காட்சி இப்போதைக்கு நம்மை விட்டு அகலாது. இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் தொலைக்காட்சிகள் முதல் நடுப்பக்க கட்டுரைகள் வரை பேசப்படுகின்றன.

நீட் அனிதா தற்கொலையின் போது அந்த மாணவி ஏன் வேறு படிப்பை தெரிவு செய்யவில்லை, அவளது தாழ்வு மனப்பான்மைக்கு கவுன்சிலிங் கொடுத்திருக்க வேண்டும், தரமான கல்வி – தேர்வு பயிற்சிக்கு தமிழகம்  தயாராக வேண்டும் என்று துக்க வீட்டில் சேட்டு கல்யாண விருந்தின் சரி தவறுகளை பீறாய்ந்தார்கள் பாஜக, அதிமுக மற்றும் கேரியருக்கு கொலை வெறியோடு வாரியராக அலையும் நடுத்தர வர்க்க அறிஞர்கள்.

கந்து வட்டிக்கும் அதே பீறாய்தல் தொடர்கிறது. இசக்கி முத்து ஏன் கடன் வாங்கினார், விரலுக்குத் தகுந்த வீக்கமாக செலவை அமைத்துக் கொள்ள வேண்டும், அறியாமை, குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடாமை, ஆன்மீக எண்ணம் குறைதல் … இப்படி சில பல விட்டைகளை பாஜக, அதிமுக மற்றும் கருத்து கந்தசாமி – காயத்ரிக்கள் இறைத்து வருகின்றனர்.

இசக்கி முத்துவின் முடிவுக்கு தள்ளிய கலெக்டர், காவலர்கள் மீது பலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர். கந்து வட்டி தடைச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும் என்கின்றனர். அவ்வளவுதானா?

“தி இந்து” கட்டுரை ஒன்றில் (25.10.2017) தெரியவரும் ஒரு செய்தியைப் பார்ப்போம். தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் கந்து வட்டி கொடுமையால் மட்டும் சுமார் 823 பேர் தற்கொலை செய்ததாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. படித்தவர்கள் அதிகம் உள்ள குமரி மாவட்டத்திலும் கூட இந்த மரணங்கள் நிகழ்வதாக கந்துவட்டிக்கு எதிரான பிரச்சார இயக்கத்தின் அமைப்பாளர் ரவி கூறுகிறார்.

இந்தியா ஒரு ஏழை நாடு. எல்லா ஏழை நாடுகளிலும் கடன் இல்லாமல் மக்கள் வாழ்க்கை இல்லை. குறிப்பாக 90 -களுக்குப் பிறகு உலகமயமாக்கத்தின் வருகைக்கு பிறகு கடன் என்பது  மிகவும் அதிகரித்து வருகிறது. கல்வி, மருத்துவம், வேலை ஆகியவற்று மக்கள் கடன் வாங்கியே முயற்சிக்கிறார்கள். அன்றாடம் சுமார் 500 ரூபாய் வருவாய் பெறும் ஒரு குடும்பம் தனது குழந்தைகளின் ஆண்டு கட்டணத்திற்காகவும், அவ்வப்போது வரும் பெரும் நோய்கள் சிகிச்சைகளுக்காகவும் பெருந்தொகையை கடனாக வாங்க வேண்டியிருக்கிறது. துண்டு துக்காணி நகைகளை கடன் வைப்பது முடிந்ததும் வேறு வழியின்றி கந்து வட்டிக்காரர்களிடம்தான் சரணடைய வேண்டியிருக்கிறது.

தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசு பள்ளிகளில் படித்தால் எதிர்காலம் இல்லை என்பது மிகத்தீவிரமாக மக்களிடம் உறுதியடைந்திருக்கிறது. தனியார் கல்வியை அறிமுகம் செய்து மிகத்தீவிரமாக அமல்படுத்தி வரும் அரசு அன்றி இதில் மக்களை எப்படிக் குற்றம் சாட்ட முடியும்?

தலையில் அடிபட்ட ஒரு நபரை அருகாமை தனியார் மருத்துவமனையில் அவசரம் கருதி சேர்க்கிறார்கள். முதல்வர் காப்பீட்டுத் திட்டம் இருந்தாலும், அதில் எந்தெந்த மருத்துவமனைகளுக்கு எந்தெந்த சிகிச்சைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பது மக்களுக்கு தெரியாது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தலை சிகிச்சை வராது எனும் போது உயிரைக் காப்பாற்றும் பொருட்டு வேறு அரசு மருத்துவமனைகளுக்கு போக முடியாது. வேறு வழி? கடன்தான்.

அரசு பேருந்துகளில் ஐயாயிரம் ரூபாய் தற்காலிக சம்பள வேலைக்கே சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும். ஏன் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் அறிஞர்கள், அந்த இளைஞர்கள் வேறு வழியின்றியே அதை கொடுக்கிறார்கள், அப்படிக் கொடுத்தாலும் அந்த வேலையில் நிம்மதியோ இல்லை உத்திரவாதமான வருமானமோ இல்லை என்பது தெரியாது.

பள்ளி இறுதி கல்வி முடித்த பிறகு பிள்ளைகள் ஆசைப்படும் கல்வியை அளிக்கவோ, இல்லை குடும்பத்தின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் கனவுடன் கடன் வாங்கி பொறியியல் கல்லூரியில் சேர்வது என்பது பெற்றோர்களுக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

இதன்றி நுகர்வுக் கலாச்சாரம், திருமணங்கள். திருமணத்திற்கு குறைந்தபட்சமாக செலவு செய்வதாக இருந்தாலும் ஓரிரு இலட்சம் இன்றி சாத்தியமில்லை. நடுத்தர வர்க்கத்தை பொறுத்த வரை வங்கி, அலுவலக கடன்கள் மூலம் வீடு, கார், நிலம் வாங்குகிறார்கள். பிறகு அதற்கே தமது ஆயுளை தாரை வார்க்கிறார்கள்.

சாதாரண மக்களுக்கு அந்த வங்கி, அலுவலக வாய்ப்பில்லை. கட்டிட வேலை மற்றும் திருப்பூரில் தொழிலாளியாக பணியாற்றிய இசக்கி முத்துவுக்கு ஐசிஐசிஐ வங்கியிலோ, இல்லை ஸ்டேட் வங்கியிலோ கடன் வாங்குவது குறித்து கனவு கூட  காண முடியாது.

மோடியின் பணமதிப்பழிப்பு, பொருளாதார வீழ்ச்சி, ஜி.எஸ்.டி வரி தாக்குதல் காரணமாக உழைக்கும் மக்கள் அடைந்துள்ள துயரம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்த தீபாவளிக்கு கடன் வாங்கித்தான் குழந்தைகளுக்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று இலட்சக்கணக்கானோர் தமிழகத்தில் கருதவில்லையா?

பிறகு அரசின் நலத்திட்டங்கள், சான்றிதழ்களுக்கு தர வேண்டிய லஞ்சம். நூறு நாள் வேலைத்திட்டத்தின் சம்பளத்தைக் கூட முழுசாக பார்க்க முடியாத நாடு இது. அதை வங்கியில் போட்டாலும் அந்தக் கழிவு கொடுத்துத்தான் ஆக வேண்டும். இது போக விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, ஆட் குறைப்பு என்று நமது மக்களை அச்சுறுத்தும் ஆயுதங்கள் ஏராளம்.

கந்து வட்டி கும்பலின் நெட்வொர்க்கில் தொந்தி வளர்க்கும் காவல் துறையை கூண்டோடு ஒழிக்காமல் கந்து வட்டிக் கும்பலை எப்படி ஒழிக்க முடியும்? இந்த வலைப்பின்னலில் ஓட்டுக் கட்சிகளின் வட்டார பிரமுகர்களும் உண்டு. அதிமுக எனும் கொள்ளைக் கூட்டத்தின் ஆட்சியில் கந்து வட்டிக் கும்பல்கள் இன்னும் வீரியமாக செயல்படுகின்றன என்பதை மிகவும் சாதாரண உண்மையில்லையா?

பொருளாதாரத்தில் ஏழ்மை, வருமானமோ வாழ்க்கைக்கு போதுமானது அல்ல, கடனோ கந்து வட்டியில் மட்டும்…. பிறகு இசக்கி முத்து சாகாமல் என்ன செய்வார்?

கந்து வட்டி தற்கொலைகளுக்கு காரணமான குற்றவாளிகள் யார்?

  • மோடியின் பொருளாதாரக் கொள்கை
  • அதிமுகவின் ஊழல் நிர்வாகம்
  • மாமுல் போலீசின் குற்றம்
  • மக்களுக்கு கடன் கொடுக்க மறுக்கும் வங்கிகள்
  • கல்வி-சுகாதாரம் தனியார் மயம்
  • மக்களின் அறியாமை

காரணங்கள் பல இருக்கலாம் என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட மூன்று பதில்கள் வரை நீங்கள் தெரிவு செய்யலாம்.

வாக்களியுங்கள்!

_____________

சமூகத்தின் உண்மை நிலைமை அறியும் இந்தக் கருத்துக் கணிப்பு உங்களுக்கு பயனளித்ததா? உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை
ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

GST… GST… போலோ பாரத்…மாதாகி ஜெ…! ம.க.இ.க புதிய பாடல் !

7

டந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது ஆளும் வர்க்கங்கள் மோடியை மீட்பராக முன்னிறுத்தின. மூன்றாண்டு ஆட்சிக்கு பின்னர் இந்த மீட்பரால் நாட்டு மக்கள் அடைந்து துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல.

மோடியின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. போன்ற பொருளாதாரத் தாக்குதல்களால் அனைத்து தரப்பு மக்களும் மோடி மீதும் பாஜக ஆட்சியின் மீதும் கடும் கோபத்தில் உள்ளனர். மோடியின் கோட்டையாக சொல்லப்பட்ட குஜராத்திலேயே லட்சக்கணக்கான வணிகர்கள் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை கண்டித்து போராட்டம் நடத்தினர். இன்று மோடிக்கும், அமித்ஷாவுக்கும் கடும் எதிர்ப்பு அங்கே நிலவுகிறது.

மெரினா போராட்டத்திற்கு பின்னர் பாஜக -விற்கு ஜென்மப் பகையாளியாக உள்ள தமிழகத்தில் ஜி.எஸ்.டி. எதிர்ப்பு பற்றி சொல்லத் தேவையில்லை.

மெர்சல் படத்தில் ஒருவரியை நீக்கச் சொல்லி வாய்திறந்த பாஜக -வுக்கு எல்லா தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் தங்களின் காலுக்கு கீழே தாங்களே குழிதோண்டும் வேலையை தமிழக பாஜக மேலும் தீவிரமாக செய்து கொண்டிருக்கிறது. பணமதிப்பழிப்பின் போது வரிசையில் நின்று இறந்தார்கள் மக்கள். ஜி.எஸ்.டியின் போது வாழ்வை இழந்து விட்டு எங்கு போவது என்று தவிக்கிறார்கள்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்த பாடல் உழைக்கும் மக்களின் குரலாய் முழங்குகிறது.

பாடலை பருங்கள்… நண்பர்களுடன் பகிருங்கள்….

பாடல் வரிகள் :

ஜி.எஸ்.டி .. ஜி.எஸ்.டி – போலோ
பாரத் மாதா கி ஜெய்
நாடெங்கும் ஜி.எஸ்.டி
போட்டான் பாரு பி.ஜே.பி
பிச்சைக்காரன் காசைப் பிடுங்கி
பீட்சா திங்கிறார் மோடிஜி

குச்சி மிட்டாய் குருவி ரொட்டி
குழம்பு சட்டிக்கும் ஜி.எஸ்.டி
பத்து ரூவா ஆயிடிச்சி
நாயர் கடை சாயா டீ
நாப்கினுக்கும் வரி கேக்குறான்
காறித்துப்புறா பொண்டாட்டி

ஆஸ்திரேலியா டென் பர்சென்ட்
அமெரிக்கா எய்ட் பர்சென்ட்
அம்பத்தாறு இன்ச் மோடிஜி
அடிச்சார் இருபத்தெட்டு பர்சென்ட்
தங்க பிஸ்கெட் மூணு பர்சென்ட்
திங்கிற பிஸ்கெட் எட்டு பர்சென்ட்
பர்கர் பீட்சா ஃபைவ் பர்சென்ட்
இட்லி தோசை பதினெட்டு பர்சென்ட்
ஆட்டையப் போடும் வித்தையிலே
மோடி ரொம்ப இன்டெலிஜென்ட்

கடலை மிட்டாய் தீப்பெட்டியை
கொளுத்தி விட்ட மோடிஜி
கைத்தறிய விசைத்தறிய
கழுத்தறுத்த மோடிஜி
வரி வரியா மக்கள் முதுகில்
சாட்டையடி ஜி.எஸ்.டி – இப்போ
அம்பானிக்கும் அதானிக்கும்
மோடிஜிதான் ஜிகிடிஜி

தண்ணி நாங்களே வாங்கிக்கணும்
வேலை நாங்களே தேடிக்கணும்
கல்வி காசுக்கு வாங்கிக்கணும்
ரோட்டுக்கும் டோலு கட்டிக்கணும்
வைத்தியம் நாங்களே பண்ணிக்கணும்
வரியும் கரெக்டா கட்டிக்கணும்
எல்லா நாங்களே பாத்துக்கணும் – உன்னை
கெவர்மென்டுன்னு வேற ஒத்துக்கணும்

சர்க்கஸ் குரங்கு சைக்கிள் ஓட்டினா
பாக்குறவன் தலையில ஜி.எஸ்.டி
தப்படிச்சி டான்ஸ் ஆடினா
ஸ்டெப்புக்கு ஸ்டெப்பு ஜி.எஸ்.டி
சாவு வீட்டில் சாமியானா
செத்தவன் கட்டணும் ஜி.எஸ்.டி
கத்தி என்னுது மூஞ்சி உன்னுது
மோடிக்கு எதுக்கு ஜி.எஸ்.டி?

ஒரே தேசம் ஒரே வரி
வந்தே மாதரம் – வழிப்பறி
செக்போஸ்ட் இல்ல சிக்னல் இல்ல – பணம்
எல்லாம் டெல்லிக்கு டெலிவரி
மாநில உரிமைக்கு மார்ச்சுவரி
திஸ் இஸ் – ஒருமைப்பாட்டு கொத்துக்கறி!

பாடல், இசை, தயாரிப்பு: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
வீடியோ ஆக்கம் வினவு
_______________________

இந்த பாடல் வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா!
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள் !

7
ஜெயாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சாக்கில் மிக்சர் பன்னீரை வளைத்துப் போட்டுக் கொண்ட

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதற்கு வேறு ஒரு கோணத்திலும் பொருள் இருக்கிறது. செத்தாலும் ஜெயலலிதா, ஜெயலலிதாதான்.

தான் உயிர் வாழ்ந்த காலம் வரையில், ஜனநாயகத்தின் கவுரவமிக்க பதவிகள் என்று கூறப்படும் அனைத்தின் மீதும் காறித்துப்பியது மட்டுமல்ல, அப்படித் துப்பினால் துடைத்துக் கொள்வதற்கும் அதனை சகஜமாக எடுத்துக் கொள்வதற்கும் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், கவர்னர், மத்திய அமைச்சர்கள், நீதிமன்றம், ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரையும் பழக்கப்படுத்தி வைத்திருந்தவர் ஜெயலலிதா. இப்போது கல்லறையிலிருந்தும் அம்மா காறித்துப்புவதையும் மேற்படி கனவான்களின் முகத்தில் எச்சில் வழிந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.

ஜெயா மரணம் குறித்து சசிகலாவை விசாரிப்பதற்கு முன், அரசு அதிகாரிகளை விசாரிக்கக் கோரும் டி.டி.வி. தினகரன்

இட்லி விவகாரம் மன்னார்குடி மாபியாவைத் தாக்கும் என்று பா.ஜ.க. குருநாதர்கள் எதிர்பார்த்திருக்கக் கூடும். மாறாக, அது எடப்பாடி-பன்னீர் கும்பல் மீது பூமராங்காகத் திரும்பியிருக்கிறது. “அப்போலோ மருத்துவமனையில் நடந்தது என்ன? ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு அமைச்சர்களைக்கூட அனுமதிக்காதது ஏன்?” என்று டி.டி.வி. தினகரனிடம் ஒரு தொலைக்காட்சி சானலில் கேள்வி எழுப்ப, அவர் சொன்னார்: “உங்கள் கேள்வி நியாயமானது. ஆனால், இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியே அல்ல. முதலமைச்சரை யார் சந்திக்கலாம், சந்திக்கக் கூடாது என்று முடிவு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள், தலைமைச் செயலர், சுகாதாரத்துறை செயலர், முதல்வரது தனிச் செயலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், முதலமைச்சர் பன்னீர், மருத்துவமனையின் நிர்வாகிகள் ஆகியவர்கள்தான். இவர்கள் அனைவரும் அப்போலோவில்தான் இருந்தார்கள். அவர்களிடம்தான் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவேண்டும். தாங்கள் முதல்வரை பார்க்க முயன்றதாகவும் சசிகலா தடுத்துவிட்டதாகவும் அவர்கள் சொல்லட்டும், அப்புறம் என்னிடம் வந்து கேளுங்கள்” என்றார்.

அக்யூஸ்டு – 1 : கதாநாயகி, அக்யூஸ்டு – 2 : வில்லி என்கிற விசித்திரக் கதை !  

சசி குடும்பத்தைக் கொலைக்கஞ்சாத கொடியவர்களாகவும், ஜெயலலிதாவைப் பரிதாபத்துக்குரிய பலிகடாவாகவும் சித்தரிப்பதன் மூலம் தங்களுடைய திருட்டுத்தனங்களை மறைத்துக் கொள்ளலாம், அரசியல் ஆதாயமும் தேடலாம் என்பது எடப்பாடி, பன்னீர் கும்பல் மற்றும் அவர்களை இயக்கும் சங்க பரிவாரங்கள் தயாரித்திருக்கும் திரைக்கதை. இது துக்ளக் குருமூர்த்தியின் சொந்த சரக்கல்ல. இருபது ஆண்டுகளுக்கு முன்னரே அவரது குருநாதர் சோ உருவாக்கித் தந்த சரக்கு.

1991 – 96 ஆட்சிக்காலத்தில் அன்புச் சகோதரிகள் அடித்த கொட்டத்தின் விளைவாக மக்களின் கோபத்துக்கு ஆளாகி, ஆட்சியிழந்து, வழக்குகளால் அச்சுறுத்தப்பட்ட சூழலில், அவற்றிலிருந்து ஜெயலலிதாவை அரசியல்ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் காப்பாற்றும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்ட  கதை இது. போயஸ் தோட்டத்தில் இருந்து கொண்டே, தனக்குத் தெரியாமல் மன்னார்குடி மாபியா பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஒரு கதையை மக்கள் நம்பச் செய்வதற்குத்தான் சசிகலாவுடனான ஊடல், கூடல் நாடகங்களை ஜெயலலிதா அரங்கேற்றினார். பல்வேறு கிசுகிசு செய்திகள் மூலம் இந்தக் கதைக்கு நம்பகத்தன்மை ஏற்படுத்தும் வேலையைப் பார்ப்பன ஊடகங்கள் சிரமேற் கொண்டு செய்தன.

ஜெயாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தும் சாக்கில் மிக்சர் பன்னீரை வளைத்துப் போட்டுக் கொண்ட பிரதமர் மோடி

இந்த தந்திரத்தையே கொஞ்சம் வேறு விதமாகச் செய்தார் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. -வுக்கு உள்ளேயே பல கோஷ்டிகளைப் பராமரிப்பதன் மூலம், குற்றங்களுக்கான பொறுப்பை அவர்கள் மீது தள்ளிவிட்டு, தன்னைத் தவறுகளுக்கு அப்பாற்பட்ட புனிதனாகக் காட்டிக்கொள்வது என்பது எம்.ஜி.ஆர். கடைப்பிடித்த உத்தி. “ஐயா நல்லவர், தர்மப்பிரபு ; கணக்குப்பிள்ளைதான் அயோக்கியன்” என்ற நிலப்பிரபுத்துவ அடிமைக் கருத்தியலில் ஊறியிருந்த தனது வாக்குவங்கிக்குப் பொருத்தமான திரைக்கதையாக இது எம்.ஜி.யாருக்குப் பயன்பட்டது.

கோடிக்கணக்கான மக்களின் வாயில் புகுந்து புறப்பட்ட ஒரே காரணத்தினால் உண்மையாக மாறிவிட்ட இந்த வதந்தியையே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வாதமாக நீதிமன்றத்தில் வைத்தார் ஜெயலலிதா. தனக்கும் சசிகலா பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்ற ஜெயலலிதாவின் வாதத்தை எள்ளி நகையாடித் தூக்கியெறிந்தார் நீதிபதி குன்ஹா. ஊழல் சொத்துக்கு பினாமியாகப் பயன்படுத்துவதற்காக அல்லாமல் வேறு எந்த உயர்ந்த நோக்கத்துக்காகவும் நீங்கள் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் தங்க வைத்துக் கொள்ளவில்லை என்று குன்ஹாவை வழிமொழிய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது உச்சநீதி மன்றம்.

ஒருபுறம் குன்ஹாவின் அசைக்க முடியாத தீர்ப்பு, இன்னொருபுறம் குமாரசாமியின் அபத்தமான உளறல்கள் என்ற கிடுக்கிப்பிடியில் சிக்கியிருந்தார் ஜெயலலிதா. தீர்ப்பைத் தள்ளிப்போட இயலுமேயன்றி, ஜெயலலிதாவைக் குற்றத்திலிருந்து விடுவிக்கவியலாது என்ற இக்கட்டில் சிக்கியிருந்தது உச்சநீதி மன்றம். செத்துப்போவது ஒன்றைத் தவிர சிறைத் தண்டனையிலிருந்து தப்புவதற்கு வேறு வழியில்லை என்பதுதான் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஜெயலலிதா எதிர்கொண்டிருந்த சூழல்.

அம்மாவை அப்போலோவுக்கு அனுப்பிய சூழல்!

செப். 22 ஆம் தேதியன்று அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கான சூழலைப் பற்றியும், டிசம்பர் – 5 ஆம் தேதி வரை அவருக்கு மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சையைப் பற்றியும் நீதிபதி ஆறுமுகசாமி கமிசனை விசாரிக்கச் சொல்லியிருக்கிறது எடப்பாடி அரசு. இதுதான் அந்தச் சூழல்.

இந்தச் சூழல் அ.தி.மு.க.வினர் அறியாததல்ல. அதனால்தான், நம் அனைவரின் பாவங்களுக்காகவும்தான் சின்னம்மா சிலுவை சுமக்கிறார் என்றும், அம்மாவுக்காகத்தானே சின்னம்மா சிறையில் இருக்கிறார் என்றும் உருக்கமாக மிரட்டல் விடுக்கிறார் தினகரன். அதனால்தான் ஜெயலலிதாவை யாரும் பார்க்கவில்லை என்று சீனிவாசன் சொன்னால், எல்லோரும் பார்த்தோம் என்று வேறு சில அமைச்சர்கள் பேசுகிறார்கள்.

அப்பல்லோ மருத்துவமனைக்கு வெளியே, ஜெயாவின் உடல்நிலை குறித்து பேட்டியளிக்கும் ஜெயா-சசி கும்பலின் முன்னால் ஏஜண்ட் வெங்கய்யா நாயுடு

“நேற்று வரை சின்னம்மா காலில் விழுந்து கிடந்தவன்தானே நீ?” என்ற வசனத்தையும், “நீங்கள்தான் முதல்வராயிற்றே. அப்போலோவில் நீங்கள் அம்மாவைப் பார்ப்பதைத் தடுப்பதற்கு உங்களை விட பெரிய ஆள் அங்கே யார் இருந்தார்கள்?” என்ற வசனத்தையும் ஒரே நேரத்தில் பன்னீரை நோக்கிப் பேசுகிறார் தினகரன். முதல் வரி உண்மை. இரண்டாவது வரி சட்டப்படி உண்மை.

“சசிகலாவை மீறி பன்னீரோ வெந்நீரோ உள்ளே போயிருக்க முடியுமா?” என்பதல்ல கேட்கப்படவேண்டிய கேள்வி. அவ்வாறு மீறிப் போகவேண்டும் என்று யாரேனும் மனதாலும் நினைத்திருப்பார்களா என்பதுதான் விசயம்.

அப்போலோவில் என்ன நடந்திருக்கும் என்பது ஊகிக்கக் கடினமானதல்ல. அடி முதல் நுனி வரை அங்கே நடந்தது அனைத்தும் முறைகேடுதான். காவிரி பிரச்சினை தொடர்பாக அதிகாரிகள் அமைச்சர்களுடன் ஜெ. நடத்தியதாக கூறப்படும் ஆலோசனையில் தொடங்கி கைரேகை, கையெழுத்து உள்ளிட்ட அனைத்துமே பித்தலாட்டம்தான்.

இந்த பித்தலாட்டங்கள் அனைத்தும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளரான ‘மணல்’ ராமமோகன ராவ், சுகாதாரத்துறை செயலரான மாட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன், டி.ஜி.பி. உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், இசட் பிளஸ் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரிகள், கவர்னர், ஜெயாவின் டில்லி கணக்குப் பிள்ளைகளான வெங்கையா நாயுடு, ஜெட்லி, கவர்னர், அருமை நண்பர் மோடி, அப்போலோ நிர்வாகம் ஆகிய அனைவரின் ஒத்துழைப்புடன்தான் அரங்கேறியிருக்கின்றன.

ஜெயா இட்லி சாப்பிட எபிசோட்டின் கதாசிரியர் சீனிவாசன்

அன்று இது குறித்து கேள்வி எழுப்பிய தி.மு.க. தலைவர் கருணாநிதியை அ.தி.மு.க. மட்டுமின்றி, பார்ப்பன ஊடகங்களும் வசை பாடின. சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியவர்கள் கைது செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியினர் எனப்படுவோரில் பலர், அப்போலோ வாசலில் நின்று கொண்டு பேட்டியளித்து இந்தப் பித்தலாட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கினர்.

ஜெயலலிதா உயிருடன் இருக்கிறாரா, சுய நினைவுடன் இருக்கிறாரா என்பது அவர்களது சொந்தப் பிரச்சினையோ, அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரமோ அல்ல. இருந்த போதிலும், இது குறித்து டிராபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்ததன் மூலம் சென்னை உயர்நீதி மன்றமும் இந்த மோசடி நாடகம் தொடர அனுமதித்தது.

கவர்னர் இட்லி, மோடி இட்லி, ஜெட்லி இட்லி கடைசி இட்லிதான் சீனிவாசன் இட்லி!

அரசமைப்பின் அத்தனை நிறுவனங்களும், ஆகப்பெரும்பான்மையான ஊடகங்களும் இந்த முறைகேட்டுக்கு ஏன் துணை போயின? சசிகலாவின் மீதான பயமா? சசிகலாவுக்கு பன்னீர் பயப்படலாம், மோடியும் ஜெட்லியும் கவர்னரும் ஏன் பயப்படவேண்டும்?

ஏனென்றால், இது வெறும் பயம் குறித்த பிரச்சினை அல்ல. நடந்த முறைகேடுகள் அப்போலோவில் திடீரென்று உருவானவையும் அல்ல. அமைச்சர்கள், அதிகாரவர்க்கம், மைய அரசு, நீதித்துறை, ஊடகங்கள் உள்ளிட்ட அனைவரும் ஜெயலலிதாவின் முறைகேடுகளுக்குப் பழகியவர்கள். அவற்றை அங்கீகரித்தவர்கள், நியாயப்படுத்தியவர்கள். அந்த முறைகேடுகளுள் ஒன்றுதான் சசிகலாவின் அதிகாரம்.

ஆகவே, விசாரிக்கப்பட வேண்டியது, ஜெயலலிதாவின் கீழ் சட்டத்தின் ஆட்சி எப்படி செத்துப்போனது என்பதுதானே தவிர, ஜெயலலிதா எப்படி செத்துப்போனார் என்பதல்ல. ஏற்கனவே கேட்பாரின்றி நடைபெற்று வந்த முறைகேடுகளின் இயல்பான தொடர்ச்சிதான் அப்போலோவில் அரங்கேறியிருக்கிறது.

அப்போலோவிற்குச் செல்வதற்கு முந்தைய நாட்களில், தலைமைச் செயலகத்துக்கு வராமலேயே ஜெயலலிதா வந்ததாகக் காட்டி வெளியிடப்பட்ட புகைப்படங்களும், பங்கேற்றதாகக் கூறப்பட்ட திறப்புவிழா நிகழ்ச்சிகளும் போட்டோஷாப் செய்து வெளியிடப்பட்டவை என்று அம்பலமான பின்னரும், கவர்னர் முதல் தலைமைச்செயலர் வரையிலான அனைவரும் அந்த மோசடிக்குத் துணை நிற்கவில்லையா? இந்த திறப்பு விழா இட்லிகள், திண்டுக்கல் சீனிவாசனின் இட்லிக்கும் முந்தையதில்லையா?

பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஆலோசகர்கள் என்ற பெயரில் ஷீலா பாலகிருஷ்ணனும், ராமானுஜமும் அரசாங்க முடிவுகள் அனைத்தையும் எடுத்தார்களே, அது சசிகலாவின் அதிகாரத்துக்கு இணையான அதிகார முறைகேடில்லையா? வளர்ப்பு மகன் திருமணத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் எடுத்த சாம்பார் வாளிகள், இட்லி கதையில் சேராதவையா?

ஆர்.கே. நகர் வாக்குச்சாவடியொன்றில் வாக்காளர் எண்ணிக்கைக்கு மேல் வாக்குகள் பதிவான பின்னரும், தேர்தலை ரத்து செய்யாமல் அம்மா பெற்றது வெற்றிதான் என்று தேர்தல் ஆணையம் சாதித்ததே, அது சீனிவாசன், சி.ஆர்.சரஸ்வதி முதலானோர் எடுத்துவிட்ட இட்லி கதையைக் காட்டிலும் அருவெறுப்பானதில்லையா?

கன்டெயினர் கருப்புப் பணம் 520 கோடியை, வங்கிப் பணம்தான் என்று சாதித்ததே மோடி அரசு, அந்தக் கன்டெயினரை விடவா பெரியது சீனிவாசனின் இட்லி?

சென்ற சட்டமன்றத் தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கு வாழ்த்துக் கூறினாரே பிரதமர் மோடி, அந்த வெற்றியும் சீனிவாசனின் இட்லியும் வேறு வேறானவையா?

எம்.ஜி.ஆர். சமாதியிலும், அரசாங்க சிற்றுந்துகளிலும் காணப்படுவது இரட்டை இலை அல்ல என்று ஜெ. அரசு சொன்ன இட்லிக் கதையை நம்பி ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தார்களே மாண்புமிகு நீதியரசர்கள், அவர்களை திண்டுக்கல் சீனிவாசனுக்கு இணையான அப்பாவிகள் என்று மதிப்பிடுவது பொருட்குற்றமாகுமா?

அம்மாவை மரணத்துக்குத் தள்ளிய சட்டத்தின் ஆட்சி!

அம்மாவின் உடல்நிலை சீர்குலையக் காரணம் பெங்களூரு சிறைவாசம்தான் என்று எழுதி குன்ஹாவை ஒரு அக்யூஸ்டாகவே ஆக்கியது தினமணி. ராம் ரகீமின் ஆட்கள் சிர்சாவில் நடத்திய கலவரத்துக்குப் பொறுப்பு தீர்ப்பு வழங்கிய நீதிபதிதான் என்று கூறிய அமித் ஷாவின் பேச்சுக்கும் தினமணி தலையங்கத்துக்கும் வேறுபாடும் இருக்கிறதா?

தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்று குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராகத் தமிழ்த் திரையுலகம் நடத்திய போராட்டத்துக்கும், சிர்சாவில் ராம் ரகீமின் பக்தர்கள் செய்த காலித்தனத்துக்கும் வேறுபாடு உண்டா?

மொத்தத்தில் சட்டத்தின் ஆட்சி என்று சொல்லப்படுவதை லேசாக நிலைநாட்டினாலும் அது அம்மாவின் உடம்புக்கும் உள்ளத்துக்கும் எப்போதும் ஒத்துக்கொண்டதில்லை. சட்டவிரோதக் கும்பலின் சர்வாதிகாரம்தான், அம்மாவின்  ஆரோக்கியத்துக்கும் அரசியலுக்கும் எப்போதுமே உகந்ததாக இருந்திருக்கிறது.

சசிகலாவைப் பொருத்தவரை, அக்காவின் நலனுக்கு எது உகந்ததோ அதை மட்டுமே செய்து பழகியவர். அதனால்தான் சட்டவிரோத கும்பலாட்சியை உத்திரவாதப் படுத்துவதன் வாயிலாக, அக்காவின் உடல்நலத்தை இத்தனை நாளும் அவர் பேணி வந்தார்.

மற்றபடி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தப் பாடுபடுவதாக, சசிகலா எந்த கவர்னர் மாளிகையிலும் சத்தியப் பிரமாணம் செய்ததில்லை. அவ்வாறு அரசமைப்பு சட்டத்தின் மீது சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மத்திய மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும், கவர்னர், நீதியரசர்கள் முதலானோரும்தான். சட்டமீறலை இனம் கண்டு தண்டிப்பதுதான் நோக்கமென்றால், விசாரிக்கப்பட வேண்டியவர்கள் இவர்கள்தான்.

ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணத்தை கண்டுபிடிப்பது மட்டுமே கமிசனின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், சட்டமீறல்கள் மூலம் அக்காவின் ஆரோக்கியத்தைப் பேணியது மட்டுமின்றி, அந்த சேவைக்காக இன்று சிறையில் இருக்கும் தியாகியான சசிகலாவை ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பொறுப்பாக்குவது உண்மைக்கு எதிரானது. நீதிக்கும் புறம்பானது.

-மருதையன்

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

பெல்லட் குண்டு : கண்ணில்லாத என் மகனின் கனவுகள் பொசுங்கிவிட்டன !

0

“இடது கண்ணால் அவன் பார்க்க முடியாது. பார்ப்பதற்கு நன்றாக இருப்பது போல தோன்றும் அவனது இன்னொரு கண்பார்வையும் கூட பெல்லட் குண்டுகள் பார்வை நரம்பை சிதைத்து விட்டதால் இனி மங்கிவிடும். இது ஒரு கையறு நிலை” என்று மாணவன் மைசார் மீரை ஆய்வு செய்த ஸ்ரீநகரைச் சேர்ந்த ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் (SMHS) மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறுகிறார்.

அக்டோபர் 14 –ம் தேதி மாநகரின் நொவ்காம் பகுதியில் நடைபெற்ற போராட்டங்களுக்கிடையே 10–ம் வகுப்பு மாணவரான மீர் சிக்கிக்கொண்டான். அவனது மாமா பாசிர் அகமது கூற்றின் படி, ஒரு காவல்காரர் நேரடியாக பெல்லட் குண்டுகளால் மீரைத் தாக்கினார். பெல்லட் குண்டுகள் அவரது முகத்தைக் காயப்படுத்தின, கண் இமைகளை நொறுக்கின மற்றும் குருதிப்போக்கை ஏற்படுத்தின. மீர் இப்போது முழுமையான பார்வைக்குறைப்பாட்டின் வாயிலில் நிற்கிறான்.

மீரைத் தவிர, நவாப் பஜாரை சேர்ந்த சோனு மற்றும் சான்போராவின் டஃபெயில் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மேலும் ஒன்பது பேர் கண் காயங்களுடன் அதே நாளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

எப்படியானாலும் மீரைப் போன்ற பாதிக்கப்பட்டவர்களின் நிலைமை சிறு அளவில் மட்டுமே ஊடக கவனத்தைப் பெற்றது. பெல்லட் குண்டுகளை முற்றிலும் தடை செய்ய வேண்டுமென்று சென்ற ஆண்டு பரப்புரை நடத்திய ஜம்மு காஷ்மீர் குடிமை சமூக கூட்டணியிடமிருந்து (JKCCS) இம்முறை எவ்விதமான எதிர்வினையும் இல்லை. பேரளவிலான மனித இழப்புகள் இருந்த போதிலும் பெல்லட் குண்டுகள் பயன்படுத்துவதை மாநில அரசாங்கம் ஆதரிப்பதுடன் காஷ்மீரின் புதிய நெறிமுறையாகவும் இது மாறிவிட்டது. பெல்லட் குண்டு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக குறைந்தபோதிலும் இது தான் நிலைமை.

ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியான புர்ஹான் வானி 2016 -ம் ஆண்டு ஜூலை மாதம் கொல்லப்பட்டது மாநிலத்தில் ஒரு பெரும் எழுச்சியைத் தூண்டியது. மருத்துவமனையின் பதிவுகளின்படி அதன் பிறகு பெல்லட் குண்டுகளால் இரு கண்களும் பாதிக்கப்பட்ட 75 -வது நபர் மீர்.

“எனது மகன் ஒரு அரும்பு போல இருந்தான். கண்பார்வையற்ற ஒருவனாக அவன் வாழ நேருமோ என்று கற்பனை செய்ய கூட நான் அஞ்சுகிறேன்” என்று மீரின் தந்தை முஹம்மது ரம்சன் “தி வயரிடம்” கூறினார்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஆயுதமாக பெல்லட் துப்பாக்கிகளை 2010 -ம் ஆண்டு அரசு அறிமுகப்படுத்தியது. போராட்டக்காரர்களுக்கெதிராக பாதுகாப்புப்படையினரின் முதற்கட்ட ஆயுதங்களாக அவை இன்று காஷ்மீரில் மாறிவிட்டன. பள்ளத்தாக்கிலுள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்களின் கண்களை அவை பறித்துக்கொண்டன. கண் மருத்துவத்துறையால் கடந்த 13 மாதங்களில் நடத்தப்பட்ட சிகிச்சைக்குப் பிறகும் சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 1,091 பேர் ஒன்று பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ பார்வையை இழந்துவிட்டனர்.

மருத்துவமனையின் பதிவுகளின் படி பாதிக்கப்பட்ட 1,091 பேரில் 171 பேர்களுக்கு காயமடைந்த கண்ணில் பார்வை பறிபோய்விட்டது. இரண்டு கண்களில் காயமடைந்த 76 பேரில் 50 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை முற்றிலும் இல்லை. இன்னொரு கண்ணின் குறைந்தபட்ச பார்வைத்திறனும் 10 – 40 விழுக்காடு வரை மட்டுமே இருக்கிறது. மேலும் காயத்தின் கடுமை காரணமாக பாதிக்கப்பட்ட 20 பேருக்கு ஒன்று அல்லது இரண்டு கண்களும் அகற்றப்பட்டன.

பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு எழுச்சியின் போது குறைந்தது 100 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 15,000 பொதுமக்கள் பெல்லட் குண்டுகளால் தங்களது கண்களில் காயமடைந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம் தெரிவித்தது.

படுகொலைகள் மற்றும் காயங்களை ஏற்படுத்தும் அளவிற்கு பலப்பிரயோகம் செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிவதற்கு மாவட்ட அளவிலான சிறப்பு புலனாய்வு குழுவை (SIT) உருவாக்க இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெஹ்புபா முஃப்தி இந்த ஆண்டு ஜனவரி 10 -ம் தேதி மாநில சட்டமன்றத்தில் அறிவித்தார். அறிவிப்பு வந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் விசாரணைப் பற்றி அரசாங்கத்திலிருந்து ஒருவார்த்தை கூட இதுவரை இல்லை.

பெல்லட் குண்டுகளால் பார்வை பறிக்கப்பட்டவர்களுக்கு இலவசக் கல்வியையும் வேலை வாய்ப்பையும் அளிப்பதாக முதலமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதியும் கூட இதுவரை செயல்படுத்தப்படவில்லை. பார்வையிழந்தவர்களுக்கு வழங்குவதாக அறிவித்த 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையில் கூட வெறும் 34 பேருக்கு அதுவும் 1 லட்சம் மற்றும் 2 லட்சம் ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஒருவருக்கும் வேலை ஏதுவும் கிடைக்கவில்லை.

இந்தப் பிரச்சினைகளுக்கு கவலை தெரிவித்த அம்னெஸ்டி இண்டர்நேஷனல் பெல்லட் துப்பாக்கிகளை முழுமையாக தடை செய்யுமாறு செப்டம்பர் 23 ம் தேதி அழைப்பு விடுத்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தற்காக பயன்படுத்தப்படும் என்று மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களால் கூறப்பட்ட பெல்லட் துப்பாக்கிகளே காஷ்மீர் மக்களின் கண்பார்வை இழப்பிற்கும், படுகொலைக்கும் காரணம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கடுமையாக சாடியது.

“பள்ளிக்கூடம் செல்லும் சிறார்கள் ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழந்துவிட்டனர் … மேலும் கல்லூரி மாணவர்களும் மேற்ப்படிப்பிற்கான அவர்களது கனவுகளை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது. இளைஞர்களும் குடும்ப பொறுப்பாளர்களும் குடும்பங்களுக்கு தாங்கள் சுமையாகிவிட்டதாக கூறுகின்றனர்” – பாதிக்கப்பட்டவர்களின் பயங்கரமான நிலைமையை அந்த அறிக்கை வெளிக்கொணர்ந்தது. தொடர்ச்சியான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பார்வையை மீண்டும் பெறவில்லை என்பதை அது மேலும் அழுந்தக் கூறியது. பாதிக்கப்பட்டவர்களில் சிலரது கண்களில் இன்னும் பெல்லட் குண்டுகள் புதைந்திருப்பினும் அவற்றை அகற்றுவது மருத்துவமுறைப்படி மிகவும் ஆபத்தானது.

அம்னஸ்டி இன்டர்நேஷனலின் அறிக்கை வெளிவந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, தெரு ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்காக புதிதாக தயாரிக்கப்பட்ட 21,000 சுற்றுகள் நெகிலித் தோட்டாக்களை காஷ்மீருக்கு அனுப்பியதாக மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) அக்டோபர் 8 ம் தேதி தெரிவித்தது. மேலும் பெல்லட் குண்டுகளை விட இது ஆபத்து குறைவானது என்றும் கூறியது.

கடந்த ஆண்டை விட எண்ணிக்கை மிகக்குறைவாக இருந்தபோதிலும் கண் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் வந்துக்கொண்டிருப்பதாக SMHS மருத்துவமனையில் ஒராண்டிற்கு மேலாக பெல்லட் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வரும் மூத்த கண் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.

காஷ்மீரில் பலரது வாழ்க்கையை பெல்லட் குண்டுகள் அழித்துவிட்டிருக்கின்றன. பெல்லட் குண்டினால் தாக்கப்பட்ட பின்னர் கண்பார்வையை மீண்டும் பெறுவது என்பது நிச்சயமல்ல. மேலும், நீண்ட கால சிகிச்சை நோயாளி மற்றும் அவரது குடும்பத்தை உடல் மற்றும் பணரீதியாக சோர்வடையச் செய்கிறது” என்று அந்த மருத்துவர் தி வயரிடம் கூறினார். அனைத்து காயங்களும் இயல்பில் பார்வையை “முடக்குகின்றன”. அதுவே மருத்துவத்துறையின் படி காட்சி புலம் 20 பாகைக்கு குறைவாகவும், பார்வைக்குறைபாடு 6/60-க்கு குறைவாகவும் இருக்கும் நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் “மருத்துவரீதியாக பார்வையற்றவர்கள்” என்று வரையறுக்கப்பட்டுள்ளதாக மேலும் கூறினார்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான டேனிஷ் இராஜப் ஜாட் ஸ்ரீநகரின் இரெயினவரியைச் சேர்ந்தவர். ஜூலை 17, 2016 அன்று பாதுகாப்பு படையினரால் அருகிலிருந்து சுடப்பட்ட குண்டுகள் அவரது முகம் மற்றும் கண்களில் இரத்தக்கசிவை ஏற்படுத்தின. அந்தத் துப்பாக்கிச்சூட்டின் தாக்கம் மிகவும் வலுவானது. ஒரு முழு குண்டும் அவரது இடது கண்ணில் துளைத்து சிக்கியிருந்ததால் கண்ணை நீக்க வேண்டியிருந்தது. விளைவாக குடும்பப்பொறுப்பை தன்னந்ததனியாக சுமந்த அந்த 24 வயதான இளைஞர் வேலையிழந்தார். ஓராண்டிற்குப் பின்னரும் டேனிஷிற்கு நடப்பதற்கு இன்னும் துணை வேண்டும்.

“என் வலது கண்ணில் சற்று பார்வை இருந்தது. ஆனால் மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னர் அதுவும் போய்விட்டது. இப்போது என் கண்களுக்கு முன்னால் ஒரு நிழலை மட்டும் என்னால் பார்க்க முடிகிறது” என்று டேனிஷ் கூறினார். அவருக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்கப்பட்டது. டேனிஷுடைய இடது கண் குழியில் ஒரு செயற்கைக்கண் பொருத்தப்பட்டிருக்கிறது. அவரது வலது கண்ணிலும் கூட மீண்டும் பார்வை வரும் என்று மருத்துவர்கள் நம்பவில்லை.

பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்டவர்களின் நிலைமையைப் பார்த்த பின்னர் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதைத் தடைச்செய்யக் கோரி ஜம்மு காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கம் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஒருவேளை இந்த ஆயுதம் தடை செய்யப்பட்டால் நேரடியாக சுடுவது மட்டுமே தங்கள் முன்னே இருக்கும் ஒரே வாய்ப்பு என்றும் இன்னும் அது கூடுதலான உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருக்குமென்றும் மத்திய ரிசர்வ் படை பதில் கூறியது. பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவது “தவிர்க்க முடியாதது” என்று நீதிமன்றமும் அதை நியாயப்படுத்தியது.

உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்வதை இத்தீர்ப்பு கட்டாயப்படுத்தியது. வழக்கு விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் காஷ்மீரில் போராட்டம் ஒவ்வொரு முறை வெடிக்கும் போதும் பாதுகாப்புப்படையின் பெல்லட் குண்டுகளால் புதிய பலி எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படுகிறது

“எங்களைப் பற்றி யாரும் எதுவும் பேசாதிருப்பது அச்சமூட்டுகிறது. அரசாங்கம் எங்கள் நிலைமைக்கு பொறுப்பாளியாக இருந்தாலும் மக்களும் எங்களை மறந்துவிட்டனர்” என்று புல்வாமாவின் கரீமாபாத்தைச் சேர்ந்த 22 வயதான அதில் ரெஹ்மான் கூறினார். அவரது இரண்டு கண்களிலும் ஜூன் மாதம் ஏற்பட்ட காயங்கள் கல்லூரியில் இருந்து வெளியேறும்படி அவரைக் கட்டாயப்படுத்தியது. இரு வாரத்திற்கொருமுறை பரிசோதனைக்காக மருத்துவமனைக்குச் செல்கிறார்.

“என் வாழ்க்கை இப்போது இப்படி ஆகிவிட்டது. நான் ஒரு ஆசிரியராக வேண்டுமென்று விரும்பினேன் ஆனால் இந்த பயங்கரம் என் கனவை நசுக்கிவிட்டது” என்று ரஹ்மான் தி வயரிடம் கூறினார். “நாங்கள் எதிர்கொண்ட பயங்கரத்திற்கு என்றைக்குமான குறைந்தபட்ச நினைவூட்டலாக பார்வையற்ற இந்த நிலைமை இருக்கும். இல்லையா? ”

(டை செய்யப்பட பெல்லட் குண்டுகளால் காசுமீர் மக்களின் பற்றியெரியும் விடுதலை தாகத்தை தணிக்க இந்திய அரசு துடிக்கிறது. ஆயிரக்கணக்கான சாவுகள். நூற்றுக்கணக்கில் கண்பார்வை பறிப்பு. காஷ்மீர் மக்களின் கண்பார்வையைப் பறிப்பதுடன் பொருளாதார ரீதியாக பெரும் சுமையை அவர்கள் மேல் சுமத்துகின்றன பெல்லட் குண்டுகள். “தி வயரில்” வெளி வந்த கட்டுரையின் தமிழாக்கம் இது.)

தமிழாக்கம்: சுந்தரம்

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

இந்தியாவில் இலவச மருத்துவம் ஒரு ஏமாற்று – ஆதாரங்கள் !

0

வினவு குறிப்பு: மெர்சல் படத்தில் இந்தியாவில் இலவச மருத்துவம் இல்லையென பொய்யான விவரத்தை சொன்னார்கள் என்று குதிக்கும் பாஜக – பண்டாரங்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். இங்கே அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை எடுப்பதற்கு அரசே காப்பீட்டுத் திட்டங்களை வழங்கியிருக்கின்றது. ஆனால் அதன் இலட்சணம் என்ன? அரசு மருத்துவமனை எனும் போது அங்கே எதற்கு காப்பீடு? அந்தக் காப்பீட்டுப்பணம் அரசால் வழங்கப்பட்டாலும், அதை பறித்துக் கொண்டு போவது யார்? தனியார் மருத்துவமனைகள் இந்தக் காப்பீட்டு தொகை போக அதிக தொகை கேட்டு வாங்குகிறார்கள். இறுதியில் மக்கள் இலவசம் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கிறார்கள். அந்தக் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கும், அதை அமல்படுத்துவதற்கும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகள்! இதுதான் இலவச மருத்துவத்தின் இலட்சணம்! தொலைக்காட்சிகளின் விவாதங்களை நடத்தும் பத்திரிகையாளர்களும்,கலந்து கொள்ளும் அறிஞர்களும் இந்தக் கட்டுரையின் விவரங்களை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தேசிய சுகாதார காப்பீடு திட்டம் இருந்தபோதும் இந்தியாவின் ஏழைகள் ஏன் இன்னமும் செலவு செய்கிறார்கள்?

ருத்துவமனை சேர்க்கைக்கான செலவுகள் 2004 மற்றும் 2014 -ம் ஆண்டு இடைவெளியில் 10 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தாலும் இராஷ்ட்ரிய ஸ்வஸ்த்யா பீமா யோஜனா (RSBY) காப்பீடு திட்டம் என்னவோ மாறாமல் அப்படியே தான் உள்ளது.

ஏழைகளுக்கான சுகாதார நிதிச்சுமையை உலகின் மிகப்பெரிய அரசாங்க சுகாதார காப்பீடு திட்டம் குறைக்கவில்லை என்றும் இந்திய ஏழைகள் தங்களது கைக்காசை போட்டுதான் செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்றும் சமூக அறிவியல் மருத்துவம் (Social Science Medicine) என்ற சஞ்சிகையில் வெளிவந்த புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் மருத்துவ காப்பீட்டை இந்த திட்டம் அளிக்கிறது. இத்திட்டத்தில் 15 கோடி மக்கள் இணைந்துள்ளனர். நாளொன்றிற்கு நகர்ப்புறங்களில் 33 ரூபாய்க்கும் கிராமபுரங்களில் 27 ரூபாய்க்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்களாக இந்திய அரசு வரையறுக்கிறது. ஆயினும் இத்திட்டம் உள்நோயாளிக்கான மருத்துவம் என்ற அளவில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

உடல்நலன் தொடர்பான செலவினங்களினால் கடனிலும் ஆழ்ந்த வறுமையிலும் வாடும் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. உடல்நலத்திற்காக கைச்செலவு செய்யும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய 50 நாடுகளில் இந்தியா 6-வது இடத்தை பிடித்திருப்பதாக 2017, மே 8 அன்று வெளியான இண்டியாஸ்பென்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசாங்க காப்பீடு திட்டம் இருந்தபோதிலும் ஏழைகள் ஏன் இன்னும் செலவு செய்கிறார்கள்? குறைந்த அளவிலான சேர்க்கை, பற்றாக்குறையான மருத்துவ காப்பீடு மற்றும் புறநோயாளிக்கான மருத்துவ செலவுகளை RSBY-ல் சேர்க்காதது போன்றவையே காரணங்களாக அந்த ஆய்வு சொல்லுகிறது.

ஒட்டுமொத்தமாக போடும் கைக்காசில் புறநோயாளிகளுக்கான மருத்துவ செலவு மட்டுமே 65.3 விழுக்காடு இருப்பதாக 2016 -ம் ஆண்டு புரூக்கிங்ஸ் அறிக்கை கூறுகிறது. ஆனால் இவை RSBY -ல் சேர்க்கப்படவில்லை.

RSBY -ல் 2010 -ம் ஆண்டுக்கு முன்னர் சேர்ந்தவர்களின் புறநோயாளிக்கான மருத்துவ செலவுகள் 23% வீதத்தில் அதிகரித்ததற்கான அடிப்படையான காரணம் இது தான் என்று கூறிய அந்த ஆய்வு மார்ச் 2012 வரையிலான காப்பீடு திட்டத்தை மதிப்பீடு செய்தது.

மேலும் 2004 மற்றும் 2014 -ம் ஆண்டுகளுக்கு இடையே மருத்துவமனை சேர்க்கை செலவினம் 10 விழுக்காட்டிற்கும் மேலாக அதிகரித்துள்ள போதிலும் RSBY-ன் காப்பீடு திட்டம் மாற்றப்படாமல் அப்படியே தான் உள்ளது.

சுகாதார “பரிசோதனை” முயற்சி :

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஏப்ரல் 2008 -ம் ஆண்டு RSBY -ஐ அறிமுகப்படுத்தியது. வலுவான பொது சுகாதார உட்கட்டமைப்பை வழங்குவதில் தோல்வியுற்ற பின்னர் காப்பீடு திட்டங்களுடன் “பரிசோதனை” முயற்சியில் இறங்க அரசு முடிவு செய்தது என்று RSBY வலைத்தளம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள நோய்களையும் RSBY உள்ளடக்கியிருக்கிறது மேலும் மருத்துவ செலவினங்களுடன் 100 ரூபாய் போக்குவரத்து செலவையும் சேர்த்தே அது வழங்குகிறது. அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளன.

பதிவீட்டின் போது 30 ரூபாயை பயனாளிகள் செலுத்துகின்றனர். மாநில மற்றும் மத்திய அரசுகளால் மீதமுள்ள காப்பீடு தொகை செலுத்தப்படுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வறுமைக்கோட்டிற்கு கிழே உள்ள குடும்பங்கள் மட்டுமே RSBY -ல் பதிவு செய்யப்படலாம்.

இந்தியாவில் உள்ள 707 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 460 மாவட்டங்களை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கிழே உள்ள 40 விழுக்காட்டினர் இன்னமும் சேர்க்கப்படவில்லை :

தகுதி (காப்பீட்டிற்காக) பெற்ற 5.9 கோடி குடும்பங்களில் 3.63 கோடி (61%) குடும்பங்கள் RSBY –ல் சேர்க்கப்பட்டன. இருப்பினும் இதன் தாக்கம் தெரிய வேண்டுமெனில் பெரும்பகுதியான ஏழை மக்களை இதில் சேர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்தியாவின் பொது சுகாதார அறக்கட்டளையான இந்திய சுகாதார பொது நிறுவனத்தை (IIPH) சேர்ந்தவரும் ஆய்வாசிரியர்களில் ஒருவரான அனுப் கரண் கூறினார்.

“RSBY திட்டத்தில் அதிக மக்களை சேர்த்துள்ள சத்தீஸ்கர் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஏழைகளுக்கான உள்நோயாளி மருத்துவ செலவில் சில வகையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்” என்று கரண் கூறினார்.

உடல்நலம் மற்றும் கல்விக்குறியீடுகளில் மோசமாக இருக்கும் அஸ்ஸாம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் 50 முதல் 60 விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

35 விழுக்காட்டினர் மட்டுமே RSBY-ஐ அறிந்துள்ளனர் :

RSBY -ஐ பற்றி பெரும்பாலான மக்களுக்கு தெரியாதது மிகக்குறைவான சேர்க்கைக்கு ஒரு இன்றியமையாத காரணம் என்கிறது அந்த ஆய்வு.

தகுதிவாய்ந்த குடும்பங்களில் 35 விழுக்காட்டினர் இத்திட்டத்தை அறிந்திருக்கவில்லை என்று மும்பையில் இருக்கும் டாடா சமூக அறிவியல் நிறுவனம் 2013 -ம் ஆண்டு நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. பதிவு செய்யப்பட 15 கோடி பேரில் 1.4 கோடி பேர் (9.94%) கூட மருத்துவமனைக்கு செல்லவில்லை என்று மேலும் அது கூறுகிறது.

அதனால் “ஏழைகளுக்கு திட்டத்தின் நலன்களை விளக்கும் தேவை இருக்கிறது” என்று கரண் கூறினார்.

செலவுகள் அதிகரிக்கிறது ஆனால் திட்டம் மாறவில்லை :

ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 30,000 ரூபாய் காப்பீடு போதாது என்கிறார் கரண்.

மருத்துவமனைக்கான 2014 -ம் ஆண்டு சராசரி செலவு கிராமிய இந்தியாவில் 14,935 ரூபாயாகவும் மற்றும் நகர்ப்புறத்தில் 24,435 ரூபாயாகவும் இருந்ததாக தேசிய மாதிரி மதிப்பாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2014 -ம் ஆண்டு முடிவடைந்த பத்தாண்டில் மருத்துவமனையின் செலவு கிராமப்புற பகுதிகளில் 10.1 விழுக்காடும் நகர்ப்புற இந்தியாவில் 10.7 விழுக்காடும் அதிகரித்தது. ஆனால் RSBY -ன் காப்பீடு தொகை ஒன்பது ஆண்டுகளாக அப்படியே உள்ளது.

பொது அறுவை சிகிச்சைக்கான செலவுகள் :

அடிவயிற்று அறுவை சிகிச்சைக்கு 2,469 – 41,087 ரூபாய், கருப்பை நீக்கத்திற்கு 4,124 – 57,622 ரூபாய் மற்றும் குடல்வால் சிகிச்சைக்கு 2,421 – 3,616 ரூபாய் என்று பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையின் 2013 -ம் ஆண்டு ஆய்வு கூறுகிறது.

“திட்டத்தின் பற்றாக்குறையான வரம்பு சில குடும்பங்களை RSBY திட்டத்திற்கு வெளியே மருத்துவமனை சேவைகளை நாடுவதற்கு வழிவகுத்திருக்கலாம்” என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. உள்நோயாளி மருத்துவத்திற்காக கைக்காசை செலவு செய்யும் குடும்பங்களில் தோராயமாக 9 விழுக்காட்டினர் சராசரியாக 30,000 ரூபாய் செலவு செய்வதாக கூறுகிறது. ஆண்டிற்கு சராசரியாக 75,000 – 80,000 ரூபாய் வரை செலவு பிடிப்பதாக 2012 -ம் ஆண்டு கணக்கெடுப்புத் தரவு கூறுகிறது.

புறநோயாளிக்கான மருத்துவத்தையே ஏழை மக்கள் விரும்புகின்றனர் :

மருத்துவமனை சேர்க்கையற்ற புறநோயாளிக்கான மருத்துவ பராமரிப்புச்செலவை RSBY செலுத்துவதில்லை. இது பொதுவாக மருத்துவரின் ஆலோசனைக் கட்டணம், மருந்துகள் மற்றும் மருத்துவ பயன்பாட்டு செலவுகள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

இருப்பினும் சுகாதாரத்திற்கான ஒட்டுமொத்த கைச்செலவினில் 63.5% புறநோயாளிக்கான மருத்துவ செலவுகள் தொடர்பானதாக இருக்கிறது. வறுமைக்கோட்டிற்கு கிழே வாழும் குடும்பங்களின் சுமையைக் குறைப்பதாக சொல்லும் ஒரு திட்டத்தில் தவற விடப்பட்ட ஒரு அடிப்படையான காரணி இதுவாகும்.

அதுமட்டுமல்லாமல் நடைமுறைக் காரணி ஒன்றையும் இது தவற விடுகிறது.

“பொதுவாக புறநோயாளிக்கான மருத்துவத்தையே ஏழைகள் விரும்புகிறார்கள். ஏனெனில் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லாததால் ஊதிய இழப்பிற்கு அது வழிவகுக்காது என்பதால் தான்” என்கிறார் கரண்.

ஏழை மக்களுக்கு கொடுக்கப்படும் மோசமான சிகிச்சை :

மருந்துகளுக்கான பணத்தை மருத்துவமனையில் RSBY செலுத்துகின்ற போதிலும் பல (தனியார்) மருத்துவமனைகள் இந்த சேவைகளை வழங்க மறுக்கின்றன. மேலும், சிலநேரங்களில் (காப்பீட்டிற்கு வெளியே) தேவையற்ற சில சிகிச்சைகளுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. எனவே மருத்துவமனைகளுக்கான ஒழுங்குமுறை அவசியம் என்று கரண் கூறினார்.

ஏழை நோயாளிகளுக்கு நெருக்கமாக (தனியார்) மருத்துவமனைகள் இருப்பதில்லை. இது மருத்துவ உதவியை நாடி ஏழை நோயாளிகள் வருவதைத் தடுக்கின்றன. “பல மருத்துவமனைகள் RSBY -ன் தாமதமான பணமளிப்பு நடவடிக்கை உள்ளிட்ட நிர்வாக கோளாறுகளால் நோயாளிகளை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன” என்று IIPH -ன் ஆய்வு தெரிவிக்கிறது.

பணமில்லா பரிமாற்ற சேவைக்காக RSBY பயனாளிகளுக்கு சூட்டிகை அட்டைகள் வழங்கப்படுகிறது. கைரேகைகள் மூலம் அவை சரிபார்க்கப்படுகின்றன. ஆயினும் இரண்டு காரணங்களுக்காக அந்த அட்டைகள் பயன்படுத்தப்படுவதில்லை.

ஒன்று நோயாளிகள் நிராகரிக்கப்படுகிறார்கள் அல்லது அவற்றின் பயன்பாடு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளால் நிராகரிக்கப்படுகிறது. இரண்டு, மருத்துவமனைகளால் வழங்கப்படும் சேவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று பெரும்பாலான பயனாளிகளுக்குத் தெரியவில்லை என்று வெளிநாடு மேம்பாட்டு நிறுவனத்தின் 2014 -ம் ஆண்டு ஆய்வு கண்டறிந்தது. நோயாளியின் வீட்டிற்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைக்கும் இடையிலான தொலைவும் பயனாளிகளை மட்டுப்படுத்தும் காரணியாகும்.

திட்டத்தை பயனுள்ளதாக்குவது எப்படி?

சேர்க்கையை அதிகரிப்பதும் காப்பீட்டில் சேர்க்கப்பட்ட மக்களுக்கு புரிதலை கொடுப்பதும் RSBY -ன் செயலூக்கத்தை அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு சில பரிந்துரைகளை கூறுகிறது.

புறநோயாளிக்கான மருத்துவ செலவுகளை குறிப்பாக நீடித்த நோய்களுக்கான செலவுகளை காப்பீடு உள்ளடக்க வேண்டும் என்றும் அந்த ஆய்வின் ஆசிரியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வியட்நாம் அரசு நடத்தும் கட்டாய உடல்நல காப்பீடு கொள்கையை கவனியுங்கள். புறநோயாளிக்கான மருத்துவ செலவினங்களையும் உள்ளடக்குவதற்கான சீர்திருத்தம் 2002 -ம் ஆண்டு செய்யப்பட்டது. மருத்துவமனைகளில் நேரம் செலவாகினும் கைச்செலவை இது குறைத்தது. இது வேலையிழப்பு ஏற்படுவதையும் பள்ளிக்கூட விடுப்பு எடுப்பதையும் குறைத்தது குறிப்பிடத்தக்கது.

கைச்செலவு செய்வதைக் குறைப்பதற்காக சுகாதார வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அண்டை நாடுகளான இலங்கையும் தாய்லாந்தும் தங்களது சுகாதாரப் பாதுகாப்பு முறையை அனைவரையும் உள்ளடக்கும் விதமாக பலப்படுத்தியுள்ளன.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆயினும் சுகாதாரத்தில் வங்கதேசம், நேபாளம், கானா உள்ளிட்ட ஏழை நாடுகளை விட மோசமாகவே இருக்கிறது. சுகாதார குறியீட்டில் 154 -வது இடமே இந்தியாவிற்கு. ஏனைய நாடுகளை ஒப்பிடும் போது சுகாதாரத்திற்காக இந்தியா மிகக்குறைவாகவே செலவிடுகிறது.இந்நிலையில் கூரை ஏறி கோழி பிடிக்கத்தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா? என்ற கதையாக வல்லரசுக்கனவு வேறு.

மேலும் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி