Wednesday, August 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 481

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் ! மின்னூல்

0

ரலாற்றில் தீபாவளி பண்டிகைக்கு பல கதைகள் உண்டு. அவற்றில் பெரும்பாலானவை அசுரர்களுக்கு எதிராக ‘இந்து’ மத ‘பெருந்தெய்வங்கள்’ நடத்திய யுத்தங்களையும் அதன் பொருட்டே மக்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் விளக்குகின்றன. வட இந்தியாவில் ‘இந்துக்களிடம்’ இருக்கும் நம்பிக்கையை பயன்படுத்தி இராவண வதம் (இராவண பொம்மை எரிப்பு) கொண்டாடப்படுகின்றது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு பழங்குடி மக்கள் இராவணன் தங்களது முன்னோர், தெய்வம் என்பதால் எரிக்க கூடாது என போராடி வருகின்றனர்.

இந்த உண்மை ஒரு விசயத்தை எடுத்துரைக்கின்றது. தீபாவளியின் கதை கூறும் சமூகவியலின் படி இந்தியாவில் இருந்த பூர்வகுடி பழங்குடி மக்களை வென்ற கதைகளே இப்படி பண்டிகைகளாக கொண்டாடப்படுகின்றன. அந்த மக்கள் அசுரர்கள், தஸ்யூக்கள், நாகர்கள், திராவிடர்கள், அரக்கர்கள் என பல பெயர்களின் அழைக்கப்படுகின்றனர். இந்த வரலாற்று செய்திகளையும் நடப்பு போராட்டங்களையும் விளக்கும் கட்டுரைகள் இத்தொகுப்பில் இருக்கின்றன.

இதன்றி நவீன முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சரத்தின் படி மக்களிடம் பொருட்களை கொண்டு திணிப்பதற்குரிய பண்டிகையாகவும் தீபாவளி மாறி வருகின்றது. அதன் பொருட்டே “போனசை” இத்தினத்தில் கொடுக்கிறார்கள். எனினும் தொழிலாளிகளோ இல்லை பொது மக்களோ ஜி.எஸ்.டி, விலைவாசி உயர்வு, பணமதிப்பழிப்பு காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தீபாவளியை கொண்டாடும் மனநிலையில் இல்லை. குழந்தைகளுக்காக எதோ கொஞ்சம் கொண்டாடுவதைத் தாண்டி பண்டிகைக் காலத்திற்குரிய மகிழ்ச்சியில் மக்கள் இல்லை.

அதே நேரம் முற்போக்கு பண்பாட்டினை கொண்டிருப்போர் கூட தீபாவளியை கொண்டாடும் வழக்கத்திற்கு மாறி வருகின்றனர். அதையும் ஆய்வு செய்கின்றது ஒரு கட்டுரை.

தீபாவளி குறித்த இத்தொகுப்பு ஒரு ஆவணமாக உங்களுக்கு பயன்படுமென்று நம்புகிறோம்.

தோழமையுடன்
வினவு

நரகாசுரன் அந்தக் கால நக்சலைட்!

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்
  • சிவகாசி தொழிலாளிகளுக்கு தீபாவளி உண்டா ?
  • ஜெய் ராவணா! ஜெய் சம்பூகா! ஜெய் சூர்ப்பனகா! ஜெய் மகாபலி!
  • முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ?
  • தீபாவளி: பதிவுலக முற்போக்காளர்களின் ஊசலாட்டம்!
  • நரகாசுரன் அந்தக் கால நக்சலைட் !
  • ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
  • இவர்களுக்கு இல்லை தீபாவளி
  • புதுதில்லி – மஹிசாசுரனை போற்றுவதில் என்னடா குற்றம் ?
  • நன்றி நரகாசுரன்…!
  • இந்துத்துவக் கோட்டையான உ.பி-யில் மக்களின் இராவண லீலா !
  • நடப்பவைகளை சகிக்க மாட்டேன் – நான் நரகாசுரன் !
  • இராவணனை எரிக்காதே ! மராட்டிய பழங்குடி மக்கள் போராட்டம் !
  • தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !
  • Diwali For whom – By Whom – Against Whom?

பதினைந்து கட்டுரைகள் – 117 பக்கங்கள் – அழகிய வடிவமைப்பில் – மின் நூல் விலை ரூ. 20.00

20.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Emailvinavu@gmail.com

இந்நூலின் கட்டுரைகள் வினவு தளத்தில் ஏற்கனவே வெளியாகியுள்ளன.

 

டெங்கு மரணங்கள் : உசிலையில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம் !

0

யிரக்கணக்கான மக்களுக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையிலும் அவற்றை மறைப்பதிலேயே எடப்பாடி அரசு குறியாக உள்ளது. செயலற்ற அரசை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் “தொடரும் டெங்கு மரணம்!! குற்றவாளி யார்? கொசுவா? அரசா?”-என்ற தலைப்பில் 19.10.2017 அன்று போடியில்  மாலை 5:00 -மணிக்கு மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு தோழர் பா.ஜோதிபாஸ் தலைமையேற்றார்.இதில் கண்டன உரையாற்றிய மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பா.மோகன் மக்களை காக்க துப்பில்லாத அரசை அம்பலப்படுத்தி பேசினார்.மேலும் ஆர்ப்பாட்டத்தின் இடையே புரட்சிகர பாடல்கள் பாடபட்டது. மக்கள் அதிகாரம் தோழர்கள் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் கூட்டத்தின் முடிவில் இந்த ஆர்ப்பாட்டம் தற்போதய சூழலில்  அவசியமானது என தோழர்களிடம் கூறி சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தேனி மாவட்டம்.

***

தனித் தனி பிரச்னைகளுக்கு தனித் தனி தீர்வு சாத்தியமில்லை
அரசியல்
அக்கிரமங்களுக்கு அராஜகங்களுக்கு முடிவு காட்டும் போராட்டங்கள் தேவை

துரை மாவட்டம், உசிலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு கடந்த 21.10.2017 அன்று மாலை சுமார் 4:00  மணியளவில் மக்கள் அதிகார தோழர்கள் தெருமுனைப் பிரச்சாரத்தை தொடங்கினர்.

தோழர். குருசாமி அவர்கள் தலைமையில் பிரச்சாரம் தொடங்கியது. பின் வத்தலக்குண்டு சாலையிலும், தேனி சாலையிலும் நடந்தேறியது. தோழர் குருசாமி  பேசுகையில். “எடப்பாடி மற்றும் பன்னீரின் கூட்டு மோசடிகளை” வெட்ட வெளிச்சமாக்கினார்.  “ஜெயா எப்படி செத்தால் நமக்கு என்ன…. டெங்கு தொடர் மரணங்கள் தான் குறையுமா அல்லது நம் வீட்டில் உலை தான் கொதிக்குமா ?” போன்ற கேள்விகள் மக்களை உலுக்கின. அரசை, அரசு அதிகாரிகளை விமரிசனம் செய்ய பயப்படும் மக்களுக்கு தோழர்களின் பேசசுக்கள் உணர்வூட்டின.

பின்னர் தோழர் ஆசை அவர்களின் எழுச்சி கொண்ட பேச்சு வீரியமாக வெடித்தது. பாஜக மற்றும் மோடியின் சதித் திட்டங்களையும், மக்கள் விரோத நடவடிக்கைகளையம் பட்டியலிட்டார். மக்களை சிந்திக்க விடாமல், சிந்தனையை மழுங்கடிக்கும் ஊடகங்களை  “கேடு கெட்ட ஊடகங்கள்” எனச் சாடினார். “பாஜக பேசுவது தேச பக்தி…செய்வது தேச துரோகம்” என்பதை தோழர்கள் பகிரங்கப் படுத்தினர்.

ஊழலில் ஊறி ஊரெங்கும் நாறி… மக்களை முட்டாள்களாக்கும் இந்த கட்டமைப்பை தூக்கி  எறிய உத்வேகம் கொடுத்தனர். இந்த நாற்றமடிக்கும் கட்டமைப்பில் ஒரு நல்லவரை முதல்வராகத் தேர்ந்தெடுக்க நம்மை நிர்பந்திப்பது…. அழுகிய மீன் கூடையில் நல்ல மீனைத் தேடும் முட்டாள்தனம் எனப் புரிய வைத்தனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
உசிலம்பட்டி.

____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெர்சலால் டென்சனான ஹெச் ராஜா – கருத்துக் கணிப்பு

6

ஹெச். ராஜாஅல்லது எச்.ராஜா என்று அழைக்கப்படும் ஹரிஹர ராஜா சர்மா இன்றைய தேதிக்கு தமிழகத்தில் அதிகம் வெறுக்கப்படும் நபரா?

“மெர்சல்” திரைப்படத்தில் வரும் காட்சிகளால் பாஜக-வின் தமிழக எடுபிடிகள் வெறுப்பானார்கள். அந்த வெறுப்பில் பெரும் வெறுப்பான ராஜா அன்றாடம் வன்மத்தோடு துப்பி வருகிறார். நடிகர் விஜய், ஜோசப் என்ற பெயரை மறைத்து வாழும் கிறித்தவர் என்றதோடு அவரது ஆதார் அட்டையின் புகைப்படத்தையும் ( உண்மையில் இது வாக்காளர் அடையாள அட்டை) வெளியிட்டுள்ளார். ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும் ஆதார் அட்டை அரசிடமிருந்து இந்த ஆளுக்கு எப்படிவந்தது? இதை வெளியிட என்ன ஒரு வக்கிரம் இருக்க வேண்டும்?

இதைக் கண்டு அனைவரும் கொதித்தெழுந்துள்ளனர். ராஜாவின் இளைய பங்காளியான அர்ஜுன் சம்பத்தோ இன்னும் வன்மமாக நடிகர் விஜய் தனது மனைவியையை மதம் மாற்றித் திருமணம் செய்தார் என்றெல்லாம் கள் குடித்த காட்டெருமை போல (எருமைகள் மன்னிக்க) கத்தி வருகிறார்.

இவர்களுடைய வாதப்படி கிறித்தவரான நடிகர் விஜய், இந்து கோவில்களுக்குப் பதில் மருத்துவமனைகள் வேண்டும் என்று கூறக்கூடாதாம். அதையே நீட்டித்தால் நடிகர் நாசர் இந்துவாக நடிக்க கூடாது, முசுலீமான ஷகிலா ஐயராத்து பெண்ணாக நடிக்க கூடாது என்று கூட சொல்வார்கள்!

பாபர் மசூதியை இடித்த இந்த ஞானசீலர்கள் தங்களைப் போன்றே மற்ற மதத்தவரும் வெறியாக இருப்பார்கள் என்று கருதுகிறார்கள். இன்னும் அதிகாரிகள், அமைச்சர்கள், போலீசு, இராணுவம் என்று எல்லா இடத்திலும் சிறுபான்மை மதத்தவர் வரக்கூடாது என்பதே இவர்கள் பின்பற்றும் எழுதப்படாத விதி.

ராஜாவின் குற்றங்கள் இத்தோடு முடியவில்லை. மோடியை அவன் இவன் என்று பேசும் வைகோ தமிழ்நாட்டில் நடமாடமுடியாது என்றார். ஊடக சந்திப்பில் இவரை மடக்கி கேட்டால் அந்த செய்தியாளரை தேசத்துரோகி என்றார்.

பெரியார், வழக்கறிஞர் அருள்மொழி, தி.க வீரமணி, சுப.வீரபாண்டியன், மனுஷ்யபுத்திரன் ஆகியோரை இழிவாகவும் ஆபாசமாகவும் பேசியதோடு அவர்களை தண்டிப்பதற்கான சட்டப்பிரிவுகளையும் கூறியிருக்கிறார். இது குறித்து வினவு தளத்தில் ஒரு வீடியோவே இருக்கிறது.

தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் முசுலீம்களை விமரிசிக்காதது ஏன் என்று கூகிள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை கூறுவது போன்ற செய்திப் படத்தை வெளியிட்டார். அது அப்பட்டமான பொய் என்பது தெரிந்த பிறகும் அதை தனது டிவிட்டர் பக்கத்தில் நீக்காமல் வைத்திருந்தார். மெர்சல் படத்தில் பொய், பொய் என்று கத்தும் இந்த ஜீவராசி இதை பொய் என்று தெரிந்தே கூறுகிறது என்றால் இது என்ன மாதிரியான டிசைன்?

தமிழக பாஜக மற்றும் ‘சங்கி’ பரிவாக் கும்பலின் தொண்டர்கள் இத்தகைய அடாவடி அரசியல் செய்யும் தலைவர்களை மாபெரும் சண்டைக்காரர்கள் என்று நம்புவதோடு உசுப்பேற்றியும் வருகிறது. இதன் மூலம் கோஷ்டி மோதல்களைத் தாண்டி தான் ஒரு ‘அப்பப்பாடக்கராக’ வர முடியும் என்று ராஜா மட்டுமல்ல, நாராயணன், சீனிவாசன், அர்ஜின் சம்பத் என்று பல்வேறு டிசைன்கள் பிதற்றி வருகின்றன.

ஆனால் தமிழக மக்களிடம் இந்தக் கூட்டம் மேலும் அம்பலமாகி வருவதையே மெர்சல் படத்தின் விவாதம் சுட்டிக்க காட்டுகிறது. விரைவில் தமிழத்தில் எந்த இடத்திலும் பாஜக கம்பம் பறக்க கூடாது என்ற நிலையை தமிழக மக்கள் ஏற்படுத்துவார்கள். அதை தாமதிக்க கூடாது என்றே பாஜக கூட்டம் தீயா…ய் வேலை செய்கிறது.

எனினும் எச்.ராஜாவின் இந்த இந்துமதவெறிப் பிரச்சாரம் ஓரளவுக்கு பார்ப்பன – ‘மேல்சாதி’ நடுத்தர வர்க்கத்திடமும் எடுபடலாம். அந்த செல்வாக்கும் இனி இருக்காது என்பதை நோக்கி பாஜக பீடை நடை போடுகிறது.

நமது கணிப்பு சரிதானா? ஹெச் ராஜா குறித்து மக்கள் மனநிலை என்ன? வாக்களியுங்கள்!

பதில்களில் ராஜாவுக்கு ஆதரவாக நான்கும், எதிர்ப்பாக ஐந்தும் இருக்கின்றன. எனவே ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களை தெரிவு செய்யலாம். அதே நேரம் எதிர்ப்பை விட ஆதரவு ஒன்று குறைவாக இருப்பதால் நீங்கள் நான்கு பதில்களை மட்டுமே தெரிவு செய்ய முடியும்!

  • சிறந்த தேசபக்தர்
  • அவரெல்லாம் ஒரு ஆளுன்னு… வாயில் வந்துரப் போகுது
  • தமிழக மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர்
  • தென்னாட்டு கோட்சே
  • வாயில் வசை வந்தாலும் மனசில நல்லவரு
  • அரசியல்வாதியாக பணியாற்ற தடை விதிக்க வேண்டும்
  • இவரு பேசப்பேசத்தான் பாஜக வேகமாக அழியும்
  • கிறித்தவ முஸ்லீம் இடதுசாரி சதியால் கெட்டபெயர் வாங்கும் நல்லவர்
  • இந்துமதக் காவலர்

_____________

இந்த கருத்துக் கணிப்பு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டெங்கையும் “டெட்பாடி” அரசையும் ஒழிப்பது எப்படி ?

0

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கும்பகோணம் மகாமகம் விழாவில், நெரிசலில் சிக்கி, மிதிபட்டு முப்பதுக்கும் மேற்பட்டோர் இறந்து, நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வேளையில், அது பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையின்றி, ஜெயாவும் அவரது தோழி சசிகலாவும் மகாமகக் குளத்து “ஜலத்தை” எடுத்து ஒருவர் தலையில் இன்னொருவர் ஊற்றிக்கொண்டு “புனித” நீராடினார்கள்.

அதே அக்கிரமம் எடப்பாடி அரசிலும் தொடர்கிறது. டெங்கு நோய் தாக்கி ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் வேளையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார் எடுபிடி எடப்பாடி.  நிலவேம்பு கசாயத்தை ஊற்றிக் கொடுப்பதைக்கூட, அமைச்சர்களை வரவழைத்து, சால்வை போர்த்தி வாழ்த்திப் பேசி, கட்சி விழாவாக நடத்துகிறார்கள், இந்த அருவெறுக்கத்தக்க பிறவிகள்.

நிலவேம்பு கசாயத்தை ஊற்றிக் கொடுப்பதைக்கூட, அமைச்சர்களை வரவழைத்து, சால்வை போர்த்தி வாழ்த்திப் பேசி, கட்சி விழாவாக நடத்துகிறார்கள், இந்த அருவெறுக்கத்தக்க பிறவிகள்.

அமைச்சர்களும் அதிகாரிகளும் தரும் வியாக்கியானங்களில் பொய்யும் முட்டாள்தனமும் மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிக் கூண்டிலேற்றும் திமிர்த்தனமும் வாய்க்கொழுப்பும் வழிகின்றன. “காய்ச்சல் கண்டவுடனேயே அரசு மருத்துவமனைக்கு வராமல், சோம்பேறித்தனமாக கடைசி நேரத்தில் வருகிறார்கள். அதுதான் இறப்புக்குக் காரணம்” என்கிறார், ஆர்.கே.நகர் இலஞ்சக் குற்றவாளி விஜய பாஸ்கர்.

சேலம் மாவட்டத்தில் டெங்குவால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு, “அது பெரிய மாவட்டம் அல்லவா” என எகத்தளமாக பதில் அளிக்கிறார், உணவுத் துறை அமைச்சர் காமராஜ்.

டெங்குவுடன் வேறு பல நோய்த்தொற்றுகளும் இணைந்து வருவதுதான் பிரச்சினையின் தீவிரத்தை அதிகப்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை, கழிவுநீர்க் கால்வாய் பராமரிப்பு இல்லை, மலைமலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற ஊழியர்கள் இல்லை – இதுதான் தமிழகமெங்கும் நாம் காணும் நிலை. ஆனால், “டெங்குவைப் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசுக்கள் நன்னீரில்தான் வளரும்” என்ற ஒரு விசயத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு, பொதுச் சுகாதாரத்தை சீர்குலைத்து வரும் சுகாதாரத் துறையும் ஊராட்சித் துறையும் பொதுமக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் நோட்டீஸ் கொடுக்கின்றன. வீடு சுகாதாரமாக இல்லையென்றால், ஆறு மாதம் சிறை, ஒரு இலட்சம் அபராதம் எனப் பொதுமக்களை அச்சுறுத்துகிறது எடப்பாடி அரசு.

மதுரை மாநகராட்சியோ குப்பைகளை அகற்றுவதற்குப் பொதுமக்கள் மீது வரி விதிக்க முடிவு செய்கிறது.

ஜூன் மாத இறுதியிலேயே தமிழகத்தைத் தாக்கத் தொடங்கிய டெங்கு காய்ச்சல், அக்டோபர் மாதத்தில் நாளொன்றுக்கு பத்து, பதினைந்து பேரைச் சாகடிக்கும் கொள்ளை நோயாக வீரியமடைந்திருக்கிறது. “கொசுக்களின் பெருக்கம் அதிகமாகத் தொடங்கும் ஜூலை மாதத்தில், சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை உள்பட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து கொசு ஒழிப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு தொடர்பான திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும். இந்த ஆண்டு அப்படியான ஒருங்கிணைந்த ஆய்வுக்கூட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை” என அம்பலப்படுத்தியிருக்கிறது, ஜூனியர் விகடன்.

டெங்கு காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த குளித்தலையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி பூஜாவின் உடலை திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட போராட்டம்

இந்த நான்கு மாதங்களில் வேறென்ன நடந்தது? எடப்பாடியோடு பன்னீரைக் கூட்டி வைக்கும் புரோக்கர் வேலை பார்த்தது பா.ஜ.க. அரசு. பா.ஜ.க.வும் எடுபிடி அரசும் இணைந்து மக்கள் போராட்டங்களை முனைப்பாக ஒடுக்கினர். தரமான மருத்துவர்களை உருவாக்கப் போகிறோம் என்ற பெயரில் நீட் தேர்வைத் திணித்து அனிதாவைச் சாகடித்த பா.ஜ.க., கொசு ஒழிப்பு மாநிலத்தின் வேலை என்று திமிராகப் பதில் சொல்கிறது. உள்ளாட்சித் துறைக்கு மைய நிதியிலிருந்து தர வேண்டிய 4,000 கோடி ரூபாயை தராமல் வைத்துக்கொண்டு, “உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்தவில்லை?” எனத் தனது அடிமையிடம் கேள்வி கேட்கிறது.

தனது அலட்சியத்தால் மக்களை அகால மரணத்திற்கு தள்ளிவரும் இந்த எடுபிடி அரசு, தன் குற்றத்தை மறைக்க, நிலவேம்புக் குடிநீர் விநியோகம், கொசு ஒழிப்புக்கு 16 கோடி ரூபாய், டெங்கு சிகிச்சையைக் காப்பீடு திட்டத்தின் கீழ் கொண்டுவருவது என நாடகம் நடத்துகிறது. மறுபுறம் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையையும், மரணமடைந்தோரின் எண்ணிக்கையையும் குறைத்துக் காட்டுகிறது. மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், இறந்துபோனதாகவும் பொய்ப்பதிவுகளைத் தயாரிக்கச் சொல்கிறது.

எடப்பாடி கக்கூசுக்குப் போனால்கூட, அவருக்குப் பின்னால் ஒரு பெரும் போலீசு படை பாதுகாப்புக்காகப் போகிறது. தமிழக மக்களைத் தொற்று நோயிலிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டமைப்போ சீரழிந்து கிடக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் களத்துக்குச் செல்லும் ஊழியர் பணியிடங்கள் பல வருடங்களாக காலியாக உள்ளன. 5,000 மக்கள்தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருந்த நிலைமை மாறி, 25 ஆயிரம் பேருக்கு ஒருவர் என்றாகிவிட்டது. பரவிக்கொண்டிருப்பது டெங்குவில் என்ன வகை என்ற குழப்பம் நிலவுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கொசு உள்ளிட்டு நோய் பரப்பும் பூச்சியினங்களை ஆய்வு செய்யும் பூச்சியியல் துறை இதனை ஆய்வு செய்து கூறியிருக்க வேண்டும். அது பெயர்ப்பலகை அமைப்பாகச் சுருங்கிக் கிடக்கிறது.

ஒருபுறம் செயலின்மை, இன்னொருபுறமோ ஊழல்! மேடவாக்கம் அருகேயுள்ள ஒட்டியம்பாக்கம் பஞ்சாயத்தில் கடந்த நான்கு மாதங்களில் கொசு ஒழிப்புக்காக மட்டும் 43 ஆயிரம் செலவழித்திருப்பதாகக் கணக்கு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால், ஊரில் ஒருமுறைகூட கொசு மருந்து அடிக்கவில்லை என்கிறார்கள், அக்கிராம மக்கள். இப்படித் தமிழகமெங்கும் கொசு ஒழிப்பு என்ற பெயரில் எத்தனை நூறு கோடி ஊழல் நடந்திருக்கும்? கொசு ஒழிப்பு மருந்திலிருந்து காய்ச்சலுக்குக் கொடுக்கப்படும் மருந்து வரை அனைத்திலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி இல்லாததால் ஒரே படுக்கையில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 4 சிறுவர்களுக்கு சிகிச்சையளிக்கும் அவலம்.

அரசுக் கட்டமைப்பு இப்படியென்றால், தனியார் மருத்துவமனைகள், தீபாவளி காலத்து ஆம்னி பஸ் கொள்ளை போல இதனைப் பயன்படுத்துகிறார்கள். பரிசோதனைகள் என்ற பெயரில் பல ஆயிரங்களைக் கறக்கிறார்கள். காப்பாற்றுவது கடினம் என்ற நிலை வந்துவிட்டால், ஈவிரக்கமின்றி நோயாளிகளை அரசு மருத்துவமனைக்குத் தள்ளிவிடுகிறார்கள். கொள்ளைநோய் பரவிவரும் இந்தச் சூழலில், தனியார் மருத்துவமனை ஒவ்வொன்றும் டெங்குவுக்கு இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிடவேண்டும். கொள்ளையிடும் மருத்துவமனைகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, காப்பீடு திட்டங்களின் வழியாக, அவர்களின் கல்லாபெட்டியை நிரப்பிக் கொள்ளும் ஏற்பாட்டை செய்து கொடுக்கிறது, எடப்பாடி அரசு. இந்த அயோக்கியத்தனத்தில் தங்களுக்கும் பங்குண்டு என்று உரிமை பாராட்டிக் கொள்கிறார், தமிழிசை.

ஒரு கொள்ளைநோயில் சிக்கி, பிஞ்சுக்குழந்தைகள் கொத்துக்கொத்தாக மடிந்து வரும் நிலையிலும் சுகாதாரத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊராட்சிகள், நகராட்சிகள் உள்ளிட்ட இந்த அரசின் எல்லா உறுப்புகளும் இரக்கமே இல்லாத வழிப்பறிக் கும்பலாக நடந்து கொள்வதை நாம் காண்கிறோம். இதற்கு எடப்பாடி தலைமையிலான கும்பல் தலைமை தாங்குகிறது. இந்தக் கும்பலின் ஆட்சியைப் பாதுகாத்து வருகிறது மோடி அரசு. சுகாதாரக்கேடு, அசுத்தமான குடிநீர், ஊட்டச்சத்தின்மை போன்ற காரணங்களால், பல்வேறு விதமான நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகி நொந்துபோன உடல் மீது டெங்கு தாக்கியிருக்கும் நிலையை ஒத்த சூழல் இது.

செங்கோலை கன்னக்கோலாகப் பயன்படுத்தும் எடப்பாடி அரசும், அதன் பாதுகாவலனான மோடி அரசும், அருகதையே இல்லாத இந்த அரசமைப்பின் துணையுடன் மக்களைத் துயரத்தில் தள்ளி வருகின்றன. இவர்களை ஒழிப்பது எப்படி என்பதுதான் நம் முன் உள்ள கேள்வி. சென்னை பெருவெள்ளப் பேரழிவு, வறட்சி, டாஸ்மாக், இப்போது டெங்கு.

ஏ.டி.எஸ். வகை கொசுக்களை ஒழித்தால் டெங்குவைக் ஒழித்துவிட இயலும். இவர்களுடைய அதிகாரத்தை ஒழிப்பது எப்படி என்ற கேள்விக்குத்தான் மக்கள் விடை தேடவேண்டும்.

-புதிய ஜனநாயகம், அக்டோபர் 2017

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அந்த கொலைக்களத்திற்குப் பெயர் பணிமனை !

4

அரசு அன்றே கொல்லும்!

அந்த கல்லறைக்கு பெயர்
ஓய்விடமாம்
அந்த கொலைக்களத்திற்குப் பெயர்
பணி மனையாம்!

தினம், தினம்
செத்துப்பிழைத்த தொழிலாளர்கள்
இப்போது
செத்தே போய்விட்டார்கள்.

எந்நேரமும்
இடிந்துவிழ காத்திருந்த கட்டிடத்தில்
கண்மூட அனுமதித்த
அந்த கொலைகாரர்கள்
சொல்கிறார்கள்
இது விபத்து!

நசுங்கிய
தொழிலாளர் ரத்தத்தில்
உறைந்திருக்கும்
உலுத்துப்போன மண்ணும்
அரசின் கோரம் பார்த்து
வெளிறிக் கிடக்கிறது.

விடிந்ததும்
நீங்கள் குடும்பத்துடன்
தீபாவளி கொண்டாட
விடிய விடிய
கண்களை தீய்த்துக்கொண்டு
கால்களை எரித்துக்கொண்டு
பத்திரமாக இறக்கிவிடும்
அரசுப் போக்குவரத்து தொழிலாளிகள்
இதோ,
உருத்தெரியாமல் கிடக்கிறார்கள்.

எப்படி செத்தார்கள்
என்ற அவலத்தை அல்ல
எதனால் செத்தார்கள்?
யாரால் செத்தார்கள்?
என்ற கொடூரத்தை
தண்டிக்க வேண்டி
இடிபாடுகளுக்கிடையே
நம்மை அழைக்கின்றன
உறங்க மறுக்கும்
ஓட்டுநர்களின் விழிகள்.

எப்படி வாழ்கிறார்கள்
என்பதை கண்டுகொள்ளாதவர்கள்,
இப்படியா செத்தார்கள்!
என இரக்கப்படுவதில்
என்ன நியாயமிருக்கிறது!

தேவை,
மரணத்தின் மீதான இரக்கமில்லை
விளைவித்தவர்களின் மீதான ஆத்திரம்.
சாவு விசாரிப்பது
சடங்காபிமானம்
வாழ்வை விசாரிப்பதுதான்
உண்மையான
மனிதாபிமானம்.

எந்தச் சூழலில்
தொழிலாளி வேலை செய்கிறான்
என்பது
எத்தனை பேருக்கு தெரியும்?

கட்டாயம்
அரசுக்கு தெரியும்
அய்யோ பாவம்!
என நடிக்கும்
அதிகாரிகளுக்கு தெரியும்.

இயங்காத வைப்பர்கள்
எடுபடாத விளக்குகள்
பிடி கொடுக்காத பிரேக்குகள்
சரிப்படாத கியர் பாக்சுகள்
உருப்படாத டயர்கள்

இத்தனையோடும் போராடி
மக்களை காத்தவர்கள்
அதிகாரவர்க்கத்துடன் போராடி
தன்னை இழந்திருக்கிறார்கள்.

உதவாக்கரை நிர்வாகத்தின்
ஒவ்வொரு விளிம்பிலும் தப்பித்த
தொழிலாளர்களுக்கு
கடைசி நிறுத்தம்தான் சாவு,
ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட
மரணக்கூண்டில் தான் அவர்களின் வாழ்வு!

இற்று விழக்கூடிய
இப்படி ஒரு கட்டிடத்தில்
ஒரு நிமிடம் படுப்பார்களா
இந்த
ஆட்சியாளர்களும்
அதிகாரிகளும்,

இவர்களின் கழிப்பறைக்கும்
நாய்களுக்கும் கூட ஏ.சி.
நாற்பது தொழிலாளர்கள்
படுத்துறங்க ஒரே ஒரு மின்விசிறி.

தன்னை விழாமல்
தற்காத்துக்கொள்ள
கட்டிடத்திற்க்கு கிடைத்த
ஒரே ஆதரவு,
வெளியேற திசை தேடி
முதுகெலும்பில் கசிந்தோடிய
தொழிலாளர் வியர்வையின்
ஈரப் பசை.

தெரிந்தே மவுனமாய்
காத்திருந்து கொன்றது
அந்தக்கால கட்டிடமா
அரசாங்க கட்டமைப்பா!

உருவகப்படுத்தவே
முடியாத அளவுக்கு
கொடூரமானது அதிகாரவர்க்கம்.

இரக்கமற்ற கொள்ளையர்க்கு
இசட் ப்ளஸ்,
உறக்கமற்ற தொழிலாளிக்கு
உயிரும் மைனஸ்.
சாவினும் கொடியது
ஆளும் வர்க்கம்.

தொழிலாளி என்றால்
அவர்களுக்கு பிணத்திற்கு சமம்
இந்த அரசமைப்பு
சாவுக்கு சமம்.

இற்றுவிழக் காத்திருப்பது
கட்டிடம் அல்ல,
இந்தக் கட்டமைப்பு!

மண்ணில் கலந்த தொழிலாளர்களே..
கண்கள் நனைகிறோம்
இதயம் எரிகிறோம்…

மாற்றத்திற்க்கான அரசியல் பயணத்தின்
நடத்துனர்களாய்,
ஓட்டுனர்களாய்
தலைமுறையை மாற்றுவோம்
உங்களுக்கான அஞ்சலியை
அர்த்தமுள்ளதாக்குவோம்!

– துரை. சண்முகம்

( நாகை மாவட்டம் பொறையாறில், பணிமனை இடிந்து அரசுப் போக்குவரத்து தொழிலாளர் 8 பேர் பலி! )

_____________

இந்த கவிதை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

9 தொழிலாளிகளை விட நான்கு பசுக்களே முக்கியம் – தினமலர் வக்கிரம்

1

நாகை பேருந்து தொழிலாளர்கள் 9 பேர் பணிமனை இடிந்து 20.10.2017 அன்று காலை கொல்லப்பட்டனர். இது அடுத்த நாள் 21.10.2017 அன்று அனைத்து தினசரிகளிலும் வெளிவந்தது. பல நாளேடுகள் இந்த செய்தியை தமது சுவரொட்டி விளம்பரத்தில் தெரிவித்திருந்தன. தினமலரோ அதை தெரிவிக்காததோடு பசு மாடுகள் தீவிபத்தல் இறந்த செய்தியை வெளியிட்டிருந்தது. பசுக்களை விட மனிதர்கள் முக்கியமல்ல என்பது பார்ப்பனியத்தின் கொள்கையன்றி வேறென்ன?

கேலிப்படம் : வேலன்

இணையுங்கள்:

_____________

இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நாகை – 9 பேருந்து தொழிலாளிகளைக் கொன்றது யார் ?

1

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

பத்திரிகை செய்தி

20.10.2017 அதிகாலை 4 மணியளவில் நாகை மாவட்டத்தில் உள்ள பொறையார் பேருந்து பணிமனை ஓய்வறையின் மேற்கூரை இடிந்து விழுந்து உறங்கிக் கொண்டிருந்த அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 9 பேர் கோர மரணமடைந்தனர். மேலும் பல தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர். தீபாவளிக்கு சிறப்புப் பேருந்து இயக்குவதற்காக பகல் இரவு பார்க்காமல் மக்களின் நலனிற்காக அயாரது உழைத்த தொழிலாளர்களின் இந்த மரணம் என்பது நம்மை எல்லோரையும் வேதனையும் அளிக்கும் துயரமிக்கதாக உள்ளது. மரணமடைந்தத் தொழிலாளர்களது குடும்பத்தினருக்கு புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தப் பேருந்து பணிமனை என்பது 1943 – ம் ஆண்டு கட்டப்பட்டது. அன்றைக்கு தனியார் முதலாளிகள் போக்குவரத்துத் துறையை தங்கள் வசம் வைத்திருந்த போது கட்டப்பட்டது. இன்று வரை இது புதுப்பிக்கப்படாமல் பழுதடைந்த நிலையிலேயே இருந்துள்ளது. இந்த விபத்திற்கு காரணமான அதிகாரிகளின் அலட்சியத்தையும், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்க முயற்சிக்கும் தமிழக அரசின் நடவடிக்கையையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு ஒரு கட்டிடத்தின் மேற்கூரை இடிந்துவிழுந்து தொழிலாளர்கள் இறந்துவிட்டதை நாம் மேலோட்டமாகப் பார்க்க முடியாது. இது ஏதோ ஒரு பேருந்து பணிமனையில் இருக்கும் ஒரு விசயம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கின்ற பெரும்பாலான அனைத்து பேருந்து பணிமனைகளும் இந்த நிலையில்தான் இருக்கின்றன.

பேருந்து பணிமனையில் தொழிற்சாலை ஆய்வாளர்கள் நேரில் சென்று பார்வையிடுவதில்லை. தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருகின்ற போக்குவரத்துத் துறை போன்ற இடங்களில் எக்காரணம் கொண்டும் இந்த அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. அமைச்சர்கள் சொல்லுவதையே அறிக்கையாக தருகின்றனர். பேருந்து பணிமனைகளில் இந்த அவலக் கதைகளை போக்குவரத்துத் தொழிலாளர்களிடம் விசாரித்தால் சொல்வார்கள். பேருந்தையே ஒழுங்காகப் பராமரிப்பதை சோதிக்காத அதிகாரிகள், பணிமனையின் நிலைமையை சோதிக்கவா போகிறார்கள் என்று தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இது மட்டுமல்ல, இலாப நோக்கத்தையே குறியாகக் கொண்டுள்ளனர். தொழிலாளர் நலன் குறித்து பேசவே முடியாது. தீபாவளிக்கு பல பேருந்துகள் மோசமான நிலையிலும் இயக்குவதற்கே சிரமமான நிலையிலும் இருந்தாலும் தொழிலாளர்கள் ஓட்டுவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். இரண்டு சிப்ட் ஓட்டகட்டாயப்படுத்தப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஓடிய வண்டியை ஓட்ட கூடாது என்ற விதியை அரசே மதிப்பது கிடையாது. இப்படி கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்கள் பல இடங்களில் கொசுக்கடியிலும் குளிரிலும்தான் உறங்குகின்றனர். இப்படி தொழிலாளர்களை ஈவிரக்கமின்றி பிழிந்தெடுக்கும் டிப்போ மேனேஜர்கள் பணிமனையில் அவலநிலை குறித்து சிறிதும் கவலைப்படுவதில்லை. இது தொழிலாளர்கள் தங்கியிருக்கும் நவீன அடிமைக் கூடங்களாகத் திகழ்கின்றன என்றால் மிகையல்ல.

போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் இந்த அலட்சியத்திற்கு முக்கியக் காரணம், இந்தத் துறையில் மலிந்து கிடக்கும் ஊழலும், இந்தத் துறையை மொத்தமாக தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் சதித்திட்டமும்தான்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஒய்வறையின் மேற்கூரை இடிந்துவிழுந்த இந்த விபத்து மட்டுமல்ல, நடப்பில் ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளும் இதே போல குத்துயிரும் கொலையுயிருமான நிலையிலேயே ஒடிக்கொண்டிருக்கின்றன. தற்போது ஓடிக்கொண்டிருக்கும் அரசுப் பேருந்துகளில் 50% மேலானவை காலவதியானவை. காலாவதியான பேருந்துகள் மாற்றாமல் ஒட்டுவதால் விபத்துகள் அதிகரித்துள்ளன; பொதுமக்கள் இறப்பது என்பது அன்றாட கதையாகிவிட்டது. ஒருகால் உங்கள் பகுதியில் சில விபத்துகள் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது அல்லது நடக்காமல் இருக்கிறது எனில் அதற்கு முக்கியக் காரணம் நீண்ட அனுபவம் மிக்க போக்குவரத்துத் தொழிலாளர்களின் தியாகமும் அற்பணிப்பும்தான். பல தொழிலாளர்கள் தங்களது சொந்த செலவில் பேருந்துகளை சரி செய்து ஒட்டி வருகின்றனர். இதனால்தான் அரசுப் பேருந்துகள் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

பேருந்துகளில் அவலநிலை மட்டுமல்ல, சென்ற மாதம் 7 -ம் தேதியன்று கோவை மாவட்டத்தில் சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து 7 பேர் ஒரு பெண்மணி மரணமடைந்ததைப் பலரும் அறிவோம். இந்த அவலத்திற்கும் இந்த அரசின் அலட்சியம்தான் முதன்மையான காரணமாக உள்ளது.

தீபாவளிக்குக் கூடுதல் பேருந்துகளை அரசு இயக்குவதற்குப் பதிலாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பேருந்துகளையும் நகரப் பேருந்துகளையும் தான் தடம் மாற்றி இயக்குகிறது. இவையெல்லாம் தனியார்மயமாக்கத்தை இலக்காகக் கொண்டுள்ளன; மக்களை அரசு கைகழுவிவிட்டதைக் குறிக்கின்றன.

மொத்தமாக, போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் அரசின் சதித்திட்டத்தின் ஒரு வெளிப்பாடாகத்தான் பேருந்து பணிமனை, பேருந்துகள், பேருந்து நிலையங்களில் நிலவும் அவலநிலைக்கு முக்கியக் காரணமாக உள்ளன. இரண்டாவது, இதில் நடக்கும் பெரிய அளவிலான ஊழல் முக்கியப் பங்காற்றுகிறது.

எனவே, பணிமனையை பராமரிக்காத அதிகாரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு உரிய நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என புதிய ஜனநாயகத்தொழிலாளர் முன்னணி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,

சுப. தங்கராசு,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

_____________

தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெர்சல் : ஒரு மசாலா மெசேஜ் உண்மை பேசுமா ?

42

மெர்சல் படம் வசூல்ல ஏறக்குறைய வெற்றிதான்னு ஊடக விமர்சகர்கள் சொல்றாங்க. ரசிகர்களைப் பொருத்தவரை ஏற்கனவே தெரிஞ்ச மசலான்னாலும், மெசேஜ் ஸ்ட்ராங்கா இருக்குன்னு ரசிக்கிறாங்க. படத்துல மருத்துவ உலகின் ஊழல், பிரச்சினைகளை மக்கள் பார்வையில சொல்றதாலா பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க. அதுல ஆங்காங்கே மத்திய, மாநில அரசு மீது விமர்சனம் வருவதால கொஞ்சம் தைரியமா படம் பேசுதுன்னு அவங்க நினைக்கிறத புரிஞ்சுக்குறோம்.

ஆனால் மருத்துவத்துல பிரச்சினைன்னு காட்டுறதும், தீர்வுன்னு சொல்றதிலும் சில விமர்சனங்களை உங்கள் முன்னாடி வைக்கிறோம்.

படத்தோட இறுதிக் காட்சியில கோர்ட்டு முன்னாடி விஜய் பேசுற சீன் வரும். அதுல “7% ஜி.எஸ்.டி வரி வாங்குற சிங்கப்பூர்ல மருத்துவத்தை இலவசமா மக்களுக்கு தர முடியுறப்போ, 28% ஜி.எஸ்.டி வாங்குற நம்ம அரசாங்கத்தால ஏன் இலவசமாக மருத்துவத்த தர முடியலை” -ன்னு விஜய் கேட்கிறார். இது நியாயமான கேள்விதானேன்னு மக்கள் சந்தோஷப்படுறாங்க. அந்தப் படி பாத்தா பாஜக தலைவருங்களுக்கு எரிச்சல் வந்துதானே ஆகணும்?

படத்துல மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் குறை சொல்லப்படுவதை கண்டிப்பதாக பாஜக தமிழிசை பொங்குறாரு. ஒருவேளை போன 2014 பாராளுமன்றத் தேர்தல்ல மோடி தமிழகத்திற்கு வந்த போது நடிகர் விஜய் கோவை விமான நிலையத்தில் காத்திருந்து பார்த்தவர்தானேன்னு ஒரு இளக்காரம் தமிழிசைக்கு இருக்கலாம்.

ஆனா இந்த சிங்கப்பூர் ஜி.எஸ்.டி விவகாரத்தை தமிழிசையும் அலசுறாரு. அதாவது சிங்கப்பூர்ல 80% மக்கள் வரிகட்டுவதாகவும், இங்கேயும் அப்படி கட்டுவதற்கு (பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி) மோடி அரசு முயற்சிக்கும் போது இப்படி விமர்சிக்கிறார்களேன்னு அவரும் நியாயம் பேசுராறு.

தமிழிசையும், நடிகர் விஜயும் சிங்கப்பூர் நாட்டை ஒத்துமையா ஆதரிக்கிறாங்க!

இப்ப விசயத்துக்கு வருவோம். படத்தில பேசுற விஜயும் சரி, வெளியே பேசுற தமிழிசையும் சரி இரண்டு பேருமே சிங்கப்பூரை ஆதரிச்சு பேசுறாங்க! அதுல அவங்களுக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனா நம்மளப் பொறுத்த வரைக்கும் அவங்க இரண்டு பேரோட கருத்துமே அதாவது சிங்கப்பூர் ஏதோ ஒரு ஆசிய சொர்க்கம்ங்குற கருத்து தவறுங்கிறதோடு, உண்மையை உங்களுக்கும் சொல்றோம்.

சிங்கப்பூர்ல இலவச மருத்துவம்னே ஒண்ணு கிடையாது. நம்மூரு ஆரம்ப சுகாதார நிலையம் மாதிரி சிங்கப்பூர்ல அரசாங்கத்தோட பாலி கிளினிக்னு ஒண்ணு இருக்கு. அங்க போனா ஒரு சராசரி கட்டணத்தை வசூலிப்பாங்க. அத குறைவும்னு சொல்ல முடியாது. அதிகம்னு சொல்ல முடியாது. ஆனா நிச்சயம் இலவசம்னு ஒண்ணும் கிடையாது. நம்மூரு நிலவரத்த வைச்சு பாத்தா அந்த குறைஞ்ச கட்டணம் ஒரு சராசரிக் கட்டணும்னு சொல்லலாம். ஆதாரம் கேட்குறவங்க, “ஹெல்த்கேர் சிஸ்டம் இன் சிங்கப்பூர்னு” விக்கிபீடியாவுல தேடிப்பாருங்க.

இலவசம் இல்லேங்கிறது மட்டுமில்ல, எல்லா சிகிச்சைக்கும் ஒரே மாதிரியான கட்டணமும் கிடையாது. நோய்க்கு தகுந்த மாதிரி கட்டணமும் கூடும் குறையும். ஏன் இப்படி இலவசமாக கொடுக்கலியேன்னு கேட்டா, பொது சுகாதரத்துறையின் நிதி ஒதுக்கீட்டை அப்படி காலி பண்ண முடியாதுன்னு சிங்கப்பூர் அரசாங்கம் ஆரம்பத்திலேயே முடிவு எடுத்திருக்காம்.

அதிகம் செலவு பிடிக்கிற சிகிச்சைன்னு வந்தா சிங்கப்பூர்ல கொஞ்சம் மானியம் கொடுக்கிறாங்க. ஆனா குறைவான செலவு சிகிச்சைன்னு வந்தா அங்க மானியமே கிடையாது. அதாவது ஒரு சாதாரண காய்ச்சல், சளி, வயிற்று வலின்னு அரசோட பாலி கிளினிக் போனீங்கன்னா தனியார் மருத்துவமனை மாதிரியான கட்டணத்தையே வசூலிக்கிறாங்க. அதுக்கு டிஸ்கவுண்டு கிடையாது.

அப்புறம் அங்க சம்பளத்துல மருத்துவத்துக்குன்னு கண்டிப்பா ஒரு தொகையை பிடிப்பாங்க. அந்த தேசிய காப்பீட்டுத் திட்டத்தோட பேரு Medisave மெடிசேவ். அந்த தொகையை வெச்சு அந்தந்த ஊழியரோட குடும்பம் மருத்துவ செலவுக்கு பயன்படுத்திக்கலாம். இது இந்தியாவிலும் இருக்கு, அமெரிக்காவிலும் இருக்குது. ஆனா எங்கேயும் இது நிச்சயமா இலவசம் கிடையாது. ஏன்னா உங்க சம்பளத்துல இருந்து மாதாமாதம் ஒரு தொகையை பிடிச்சுகிட்டு தேவை வரும்போது அதை நீங்க செலவழிக்கலாம்கிறது எப்படி இலவசமாகும்?

சிங்கப்பூரில் இலவச மருத்துவம்கிறது ஒரு வடிகட்டிய பொய்!

மெடிஷீல்டுன்னு (Medishield) இன்னொன்னு காப்பீட்டு திட்டமும் அங்க இருக்கு. ஆனா இதை வெச்சு ஒரு நோயை சிகிச்சை செய்ய முடியாது. தொகை பத்தாது. இன்னும் மெடிஷீல்டு லைஃப்ன்னு ஒரு காப்பிடும், எல்டர்ஷீல்டுன்னு முதியோருக்கு ஒரு காப்பீடும் அங்க இருக்கு. அதே நேரம் இந்த காப்பீட்டுத் திட்டத்துல மிகவும் அபாயகரமான நோய்கள், சிகிச்சைகள் எல்லாம் மறைமுகமாக தவிர்க்கப்பட்டிருக்கு. அப்படிப் பாத்தீங்கன்னா சிங்கப்பூர் குடிமகனுக்கு அப்படி ஒரு நோயோ பிரச்சினையோ வந்தா அவர் அதிகம் காசு செலவழிச்சே ஆகணும்,

சிங்கப்பூர்ல நிறைய தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் இருக்குது. அங்க வெளிநாட்டு நோயாளிகள், வசதியான சிங்கப்பூர் குடிமக்களுக்கு அதிக கட்டணத்துல சிகிச்சை பாக்குறாங்க. சிங்கப்பூர் குடிமக்கள், இந்த தனியார் மருத்துவமனைகளில் ஒரளவுக்கு கட்டணத்துல தள்ளுபடி பெறலாம்னாலும், மொத்தத்துல இங்க கட்டணம் அதிகம்தான். ஆனா நம்ம தமிழ்நாட்டுல இருந்து ஒரு தொழிலாளி அங்க பிழைக்கப் போய் பெரிய நோய் வந்தா அவருக்கு இங்கே மானியம், தள்ளுபடி எதுவும் கிடையாது. ஏன்னா அவர் ஒரு ஃபாரினர்.

சிங்கப்பூரோட மொத்த தேசிய வருமானத்துல இருந்து 1.6% -த்தை பொது சுகாதரத்துறைக்கு ஒதுக்குறாங்க. இந்தியாவுல 1.4% ஒதுக்குறாங்க! புள்ளி இரண்டை வெச்சு மட்டும் சிங்கப்பூர் தரமானது இல்லீங்க.

இப்டி காஸ்ட்லியான சிங்கப்பூர் மருத்துவத்தைத்தான், உலக சுகாதார நிறுவனம் 2000-ம் ஆண்டின் கணக்குப்படி ஆறாவது ரேங்கில் வைச்சுருக்கு. ஒருக்கால் மருத்துவம் இலவசமாகவும் தரமாகவும் கொடுத்து சாதனை படைச்ச நாடுன்னா அது கியூபாதான். சிங்கப்பூர் இல்லை.

அடுத்து தமிழிசை சொல்ற சிங்கப்பூர்ல 80% மக்கள் வரி கட்டுற இலட்சணத்தை பார்ப்போம். சிங்கப்பூருங்கிறது வளைகுடா மாதிரி பிழைக்க வந்த மக்களோட உழைப்புல வாழ்ற நாடு. அதனால் சிங்கப்பூர் குடிமக்களுக்கு கொஞ்சம் வசதி, வாய்ப்பு இருக்கலாம். ஏன்னா சிங்கப்பூர்ல மத்த நாட்டுல இருக்குற மாதிரி சட்டப்படியான குறைந்த பட்ச கூலின்னே ஒண்ணு கிடையாது. இந்தியாவுல கூட குறைந்த பட்ச கூலி இவ்வளவு கொடுக்கணும்னு சட்டம் இருக்கு. பீகாருல ரூ 160 -ன்னும், கேரளாவுல ரூ 750 -ன்னும் அந்த தொகை மாறுபடுது. இன்னும் விவசாய தொழிலாளிகளுக்கும் இந்தியா முழுவதும் சட்டப்படி இவ்வளவு கொடுக்கணும்னு இருக்கு.

உலகத்திலேயே அப்படி ஒரு சட்டம் இல்லாத நாடுன்னு சொன்னா அது சிங்கப்பூர்தான். 2014-வது வருசத்துலதான் துப்புறவுத் தொழிலாளிகளுக்கு 1000 -ம் டாலரும்னு, செக்யூரிட்டி வேலைக்கு மாதம் 1,100 டாலரும்னு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. இது போக மத்தவங்களுக்கு முதலாளிங்க எவ்வளவு கம்மியா சம்பளம் கொடுத்தாலும் அதை யாரும் தட்டிக் கேக்க முடியாது.

சிங்கப்பூரோட ஒரு டாலருங்கிறது இந்திய ரூபாயில 48 ரூபாய் வரும். ஒரு சாதாரண காய்ச்சலுன்னு இந்த தொழிலாளிங்க அரசோட பாலி கிளினிக் போனா குறைஞ்சது 30 டாலராவது செலவாகும்கிறாங்க. அதாவது இந்திய மதிப்பில் 1,400 ரூபாய் செலவழிக்கணும்.

பெப்சி தொழிலாளிங்க ஸ்ட்ரைக் நடந்தப்போ, விஜயோட கவலை மெர்சல் ஷூட்டிங் பத்தித்தானே ஒழிய, தொழிலாளர் ஊதிய்ம் பற்றி அல்ல!

மெர்சல் படம் ஷூட்டிங் நடக்கும் போது பெப்சின்னு சினிமா தொழிலாளி சங்கம் ஸ்ட்ரைக் பண்ணாங்க. அவங்க கோரிக்கை என்னங்க? மூணு வருசத்துக்கு ஒரு முறை சம்பளத்த கூட்டணும்னு விதி இருக்கும் போது இன்னும் ஏன் கூட்டலை, இப்ப விக்கிற விலைவாசியில குறைஞ்ச சம்பளத்துல வேலை பார்த்து ஓட்ட முடியுமா, எல்லா நாளும் சினிமா வேலை கிடைக்காத போது கம்மியான சம்பளம் நியாயமா – இதுதான் அவங்க கோரிக்கை.

ஆனா சினிமா முதலாளிங்க இதுக்கு ஒத்துக்கல! தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் இருக்குற நடிகர் விஷாலு, எங்களுக்கு பெப்சி சங்கமே தேவையில்லை, வெளிய இருந்து தொழிலாளிகளை ஏற்பாடு பண்ணிக்கிறோம்னு மிரட்டுனாரு. வேலை நிறுத்தம்தான் தமிழில் எனக்கு பிடிக்காத வார்த்தைன்னு ரஜினிகாந்த் சொன்னாரு, இப்ப தளபதின்னு பேரு போட்டுறுக்குற விஜய் அப்ப வாயைத் திறக்கவே இல்லை. ஏன்னு யாராச்சும் கேட்டீங்களா?

சிங்கப்பூருல தொழிலாளிக்கு சட்டப்படி சம்பளம் இல்லேங்குற மாதிரி அங்க முதலாளிக்கு சட்டப்படியே வரியே கட்டவேண்டாம்கிற அளவுக்கு ஏகப்பட்ட சலுகை கொடுத்திருக்காங்க. அதனாலதான் வெளிநாட்டுல இருக்குற பல பண முதலைங்க சிங்கப்பூருலயும் கொஞ்சம் சொத்துக்களை மாத்தி வெச்சிருக்காங்க. நிறைய பேரு செட்டிலாகியிருக்காங்க. இது தொடர்பா எங்க வினவு தளத்துல நிறைய கட்டுரைங்க இருக்குது, படிச்சுப் பாருங்க!

பெப்சி தொழிலாளிகளுக்கு எதிராக நடிகர் விஷால்!

இந்தியாவுலயும் மறைமுக வரியை அதிகம் போட்டு மக்கள் மேல சுமத்துற மோடி அரசு, முதலாளிகளுக்கான நேரடி வரியை ரொம்பவே குறைச்சுட்டாங்க. இதைத்தான் சிங்கப்பூரு மாதிரி இங்கயும் மோடி முயற்சிக்கிறாருன்னு தமிழிசை சொல்றாங்க. தளபதி விஜயும் சிங்கப்பூருல இலவச மருத்துவம்னு அடிச்சு விடுறாரு!

ஆக இவங்க இரண்டு பேருக்கும் சிங்கப்பூரு மேட்டருல கருத்து வேறுபாடு கிடையாது. சரி, சாதாரண விக்கிபீடியா மேட்டர் அறிவு கூட இல்லாம இயக்குநர் அட்லி இப்படி ஒரு வசனத்தை ஏன் சேத்தாருன்னு உங்களுக்கு தோணலாம்.

7 சதவீத சிங்கப்பூருல மருத்தவம் இலவசம்னா, 28 சதவீத வரி கேக்குற இந்தியாவுல முடியாதான்னு ஒரு வாட்ஸ் அப் வதந்தியை பார்த்திருப்பாரு. நம்ம மக்கள் பலர் சிங்கப்பூரோட போக்கு வரத்து, வேலைக்கு போனவங்கங்கிறதால இங்க சிங்கப்பூர்னா ஒரு மரியாதை இருக்கு. அத வெச்சு அந்த மேட்டர் பொய்யா வந்தாலும் நம்ம ஆளுங்க அத உண்மைன்னு நம்புறாங்க. ஆனா ஒரு படத்தோட இயக்குநரும், நடிகரும் அத நம்புறாங்கன்னா இவங்களோட அறிவு, அரசியல், மேட்டரெல்லாம் என்ன லெவல்ல இருக்கும்கிறத நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!

ஜி.எஸ்.டி-யை வெச்சு இந்த படத்துல தைரியமாக பாஜகவை எதிர்க்கிறாங்க-கிறது உண்மையா?

ஃப்ரோ, இன்னி தேதிக்கு பாஜக-காரனே ஜி.எஸ்.டி-யை எதிர்த்துப் பேசறான். துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹான்னு ஏகப்பட்ட பேரு ஜி.எஸ்.டி சரியில்லேன்னு பேசுறாங்க. மத்தபடி எல்லா மக்களும், கட்சிகளும் ஜி.எஸ்.டியை கட்டி உரிச்சு உப்புக் கண்டம் போட்டு புதைக்கிறதுக்கு காத்திருக்காங்க. ஒரு தீப்பெட்டி வாங்குனாலும், தீபாவளி பட்டாசு வாங்கினாலும் ஜி.எஸ்.டி வரியால பாதிக்கப்படாத ஆளே எங்கேயும் இல்லை.

விஜயோட சினிமா உலகமும் கூட அந்த வரி அதிகம்னு சொல்லி பேசுனாங்களா இல்லையா? மத்தவங்களுக்கு எப்படியோ எங்களுக்காச்சும் குறைக்கணும்னு கமல்ஹாசன் கூட பணிவா பேட்டி கொடுத்தாருல்ல! மத்தபடி இந்த படம், ஜி.எஸ்.டி வரி கொடுமையானதுன்னோ, மக்களை வதைக்கிதுன்னோ, மோடி அரசு மக்களை ஒடுக்குதுண்ணோ சொல்லலை! இவ்வளவு வரி வாங்குறீங்களே, மருத்துவத்தை இலவசமாக கொடுக்கலாம்லன்னு கெஞ்சுது! அவ்வளவுதான். மக்களே ஜி.எஸ்.டி வரியே சாதாரண மக்களைப் பிழிந்து திரட்டப்படுற ஒரு கொள்ளை. அதை வாங்குற அரசாங்கத்த கண்டிக்காம, அதுல இருந்து இலவசம் கேப்பானா எவனாவது?

இன்னிக்கு பாத்தீங்கன்னா தமிழ்நாடே டெங்குவால பீதியில உறைஞ்சு போயிருக்கு. செத்தவங்களோட கணக்கை குறைக்கிறதுலதான் அரசாங்கம் கருத்தா இருக்கு. இதுக்கு முன்னாடி சிக்கன் குனியா, மலேரியா, காலரா, மூளைக் காய்ச்சல்னு சீசனுக்கு ஒரு வியாதியில நம்ம மக்கள் பட்ட கஷ்ட்டம் கொஞ்ச நஞ்சமில்லீங்க.

ஈழத்துலயோ, காஷ்மீரிலயோ, ஈராக்கிலயோ போரின் ஒடுக்குமுறையால வீட்டுக்கு ஒரு இழப்பு இருக்குங்கிற மாதிரி, தமிழகத்துல வீட்டுக்கு வீடு ஒரு மருத்துவ கஷ்டம் ரொம்பவே இருக்கு. இதுல முதல் கஷ்டம் பணம், அடுத்து அரசு மருத்துவமனையில வசதி இல்லாதது, பிறகு மருத்துவருங்க செய்யுற தவறுகள்னு பட்டியல் போடலாம்.

மெர்சல் படத்துல அப்பா விஜய் மீசை, வீபூதி வேட்டி சகிதமா “மதுரைக்கு போகாதடி” பாட்டு கெட்டப்புல இருக்காரு. அவரோட கிராமத்துல தீ விபத்துல பாதிக்கப்பட்ட குழந்தைங்கள காப்பாத்த முடியல. உடனே பஞ்சாயத்து கூடி விஜய் தலைமையில மருத்துவமனை கட்ட முடிவு செய்து தாய்மார்களெல்லாம் நகைகளை கழட்டி தாராங்க. கொஞ்சம் வசதியான கிராமம்தான் போல இருக்கு. ஏன்னா தற்கொலை செஞ்சுகிட்ட நீட் அனிதா வீட்ட பாத்தீங்கன்னா குடிசையும், மண்தரையும்தான் இருக்கு. சரி, சினிமான்னா கொஞ்சம் ரிச்சாத்தான் இருக்கணும் போல.

இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

அந்த புதிய மருத்துவமனைக்கு டாக்டராக வந்த வில்லன்கள் இரண்டு பேரு விஜய ஏமாத்தி ஆஸ்பத்திரியை கைப்பத்துறாங்க. விஜயும் அவரது மனைவியும் கொல்லப்படுறாங்க. இரண்டு குழந்தை விஜயும் பிரிஞ்சு ஒண்ணு ஐஞ்சு ரூபா டாக்டராகவும், இன்னொன்னு மாஜிக் கலைஞராகவும் மாறிடுறாங்க.

கடைசியில இரண்டு பேரும் சேந்து வில்லன பழிவாங்குறாங்க. அதுல இலவச மருத்துவமனை இல்லாம மக்கள் கஷடப்படுறத, பாரின் டூயட் கால்ஷீட் போக இருக்குற கேப்புல காமிக்கிறாங்க, பேசுறாங்க.

ஒரு ஆட்டோ டிரைவரோட மகளுக்கு விபத்து ஏற்படுறத வாயில இருந்து, மண்டையில இருந்து ரத்தம் பீறிட்டு வர்றதையெல்லாம் கொடூரமாக காட்டுறாங்க! ஏன்னா நாம்ம மருத்துவர்களோட வில்லத்தனத்தை கொடூரமா புரிஞ்சுக்கணும்ல, அதுக்குத்தான்.

அந்த ஆட்டோ டிரைவர் மகளை கொன்ன தனியார் மருத்துவமனை புரோக்கர், ஆம்புலன்ஸ் டிரைவர், பி.ஆர்.ஓ, டாக்டர் அத்தனை பேரையும் மேஜிக் விஜய் பிடிச்சு வித்தியாசமா கொல்றாரு. இப்படி படம் முழுக்க மருத்துவருங்க வில்லனா காட்டப்படுறாங்க.

ஒரு நோயால மரணமோ, பாதிப்போ எது இருந்தாலும் மக்கள் முதல்ல கோபப்படறது மருத்துவருங்க மேலதான். ஆனா மருத்துவருங்க மேல மட்டும் கோபப்பட்டு பிரோயஜனம் இல்லை.

தமிழ்நாட்டிலயோ இல்லை இந்தியாவிலயோ ஏன் உலகத்துலயோ பெரிய பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைங்கள கட்டி வெச்சு கொள்ளையடிக்கிறவங்களெல்லாம் மிகப்பெரும் நிறுவனங்களாகவோ இல்லை முதலாளிகளாகவோதான் இருக்காங்க. அப்பல்லோ பிரதாப் ரெட்டி மாதிரி ஒரு சில டாக்டருங்கதான் முதலாளிகளா இருக்காங்க. இவங்களும் டாக்டர் தொழிலை வெச்சு ஆஸ்பத்திரி கட்டலை. அரசு சலுகை, மானியம், வங்கி கடன் வசதி, பங்கு சந்தை இப்டித்தான் கட்டுனாங்க.

மெர்சல் படத்துல ரெண்டு சீனுக்கு ஒருவாட்டி எம்ஜிஆரைக் காட்டுறாங்க. அவருக்கு அப்புறம் நான்தான்னு காட்ட விஜய் நினைச்சிருக்கலாம். தலைவா படத்துக்கு அவர் கொடநாட்டுக்கு ஓடிப்போய் தவமிருந்தும் “அம்மாவை” பாக்க முடியாம படத்துல இருந்த பஞ்ச் டயலாக்கையெல்லாம் பட்டி டிங்கர் பாத்து தூக்குனது தனிக் கதை!

ஆனா அந்த எம்ஜிஆர்தான் தனது அடியாளுங்க மத்த அபிமானிங்க பலருக்கு சுயநிதிக் கல்லூரி துவங்கவும், மருத்துவமனைகள் கட்டவும் ஏராளமான அரசு நிலத்தை இலவசமாகவோ இல்லை மலிவு விலை குத்தகையாகவோ கொடுத்தாரு.

மியாட் மருத்துவமனை மோகன்தாஸ், ராமச்சந்திரா மருத்துவமனை உடையாரு, ஜெப்பியார் கல்லூரின்னு இதுல ஆதாயம் அடைஞ்சவங்க நிறைய பேரு! இதுல ஜேப்பியாரும், உடையாரும் சாராயம் ஓட்டுனவங்கன்னு உலகத்துக்கே தெரியும்.

இப்படி மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

1990-களில் இருந்தே நம்ம நாட்டுல பொது சுகாதாரத்தை அரசு கழுவிட்டு தனியாருக்கு தாரை வாக்கணும்னு முடிவு பண்ணீட்டாங்க. அதுதான் உலகவங்கி, உலக வர்த்தக கழகத்தோட ஆணை.

அதே மாதிரி தனியார் மருந்துக் கம்பெனிகள் அதுல உள்நாடு-வெளிநாடு இரண்டுமே அடிப்படை மருந்துகளுக்கு அதிக விலை வெச்சு கொள்ளையடிக்கிறாங்க. மத்திய அரசோட ஐடிபிஎல்-ங்கிற மருத்து நிறுவனமோ இல்லை கிங் மருந்து ஆராய்ச்சி நிறுவனமோ இப்பவா அப்பவான்னு சாகுற நிலைமையிலதான் இருக்கு.

அரசு மருத்துவமனைகள்ள பல வசதிகளை தனியார் சேவைன்னு மாத்திட்டாங்க. அங்கேயும் போதுமான மருத்தவருங்களோ, நர்சுங்களோ கிடையாது. நீட் வந்ததுக்கு பிறகு அரசு மருத்துவமனைங்கள்ள வேலை பாக்க புது டாக்டரே வரமாட்டாங்க!

நோயளிகளுக்கு தங்களோட மருந்துகளை எழுதணும்னு தனியார் மருந்துக்  கம்பெனிகள் டாக்டருகளுக்கு, பணமாவோ, சொத்தாவோ, இல்லை வெளிநாடு சுற்றுலாவோ பரிசா அளிக்கிறாங்க. அதுமாதிரி எல்லா சோதனைகளுக்கும் மருத்துவர்களுக்கு கமிஷன் உண்டு. அவன் கொடுக்குறாங்கிறதால இவன் எழுதுறான்.

அங்க அடிக்காம இவன திருத்த முடியுமா சொல்லுங்க! கூட்டிக் கழிச்சுப் பாத்தா நம்ம நாட்டுல மருத்துவத்துறையில் இருக்கும் தனியார் மயத்தை ஒழிக்காம, பன்னாட்டு நிறுவனங்களோட மருந்து ஏகபோகத்தை மறுக்காம நம்ம அரசு மருத்துவமனைகளை எப்படி காப்பாத்த முடியும்? சொல்லுங்க!

மியாட்டுல போய் விஜய் இந்த படத்தோட வசனத்த பேசுனாருன்னு வையுங்க, அப்புறம் எம்ஜிஆரே ஆவியா வந்து அடிப்பாரு!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், அமைச்சர்கள் அத்தனை பேரும் அரசு மருத்துவமனையிலதான் சிகிச்சை பெறணும்னு சொல்லுற விஜய் அதையே நடிகர்கள், பத்திரிகை துறையினர், தனியார் முதலாளிகள்னு சொல்ல மாட்டேங்குறாரு!

ரஜினியோ இல்லை விஜயகாந்தோ தும்முனாலும் துவண்டாலும் சிங்கப்பூர் போவாங்கன்னா அதை தளபதி விஜய் கண்டிக்க மாட்டாரா? இல்ல அவருதான் தன்னோட நோய்களுக்கு ஜிஎச்சுக்கு போவாரா?

மாசத்துக்கு 1500 ரூபாய் ஊதியம் வாங்குற ஒரு இந்தியக் குடிமகன், மருத்துவர் கிட்ட ஐஞ்சு ரூபா கொடுக்குறதே அதிகம்ணு சொல்ராறு விஜய். சரிங்க ஆபிசர், அதே மாதிரி உங்க படத்துக்கு முதல் நாளுல ரசிகருங்க ஐநூறு, ஆயிரம்ன்னு கொட்டிக் கொடுக்குறதும், இல்லேன்னா சட்டபூர்வமாகவே மல்டிபிளக்சுல 160 ரூபாயும், மத்ததுல 120-ம் கொடுக்குறத மட்டும் சரியா? இல்லை இந்தியக் குடிமகன் 1500 ரூபாய் வாங்குறதால இனி விஜய், அஜித், ரஜனி, கமல் அத்தனை பேரும் ஒரு  படத்துக்கு ஐயாயிரம் ரூபாய் வேணாம், ஒரு ஐம்பது இலட்சத்தை மட்டும் வாங்கிப்பாங்களா?

இல்லை லாஜிக்க மாத்திப் போட்டா ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறவன் டாக்டருக்கு ஐஞ்சு ரூபா கொடுக்குறது நியாயமனா, கோடிகளில் சம்பளம் வாங்குறவன் இலட்சக் கணக்குல ட்ரீட் மெண்ட் எடுக்குறது நியாயம்ணு வருதா இல்லையா?

ஐயா, அந்த காலத்துல நடிகருங்க தங்களோட மார்க்கெட்டுக்கு ஒரு சென்டிமென்ட் டச்சு கொடுக்குறதுக்குண்ணே, மூணு சக்கர சைக்கிள், இஸ்திரிப் பெட்டி, கல்வி உதவித் தொகை, பிரியாணி சாப்பாடுன்னு கொடுப்பாங்க. இப்ப சமூக வலைத்தளங்களோட காலத்துல இப்பிடி பிசிக்கலா பொருளா கொடுக்கணும்னு அவசியமில்லே.

கமல்ஹாசன் டிவிட்டரில் கருத்தால தானம் கொடுக்குற மாதிரி, விஜய் மாதிரி எல்லா நடிகருங்களும் படத்துல மெசேஜ் கொடுக்குறாங்க. இது இஸ்திரிப் பெட்டியை விட   ஒரு போராளி பில்டப்பை கொடுக்குது. அதனால்தானே கபாலியில ரஜினியை கூட ஒரு சமூகப் போராளின்னு தூக்கிச் சுமந்தாங்க சிலபேரு! சைக்கிள் செலவும் மிச்சம், சைக்கிள் கேப்புல நடிகருங்க போராளியாவும் ஆகலாம்.

ஹாலிவுட்டுலேயே இப்பல்லாம் வில்லன்னா கார்ப்பரேட் கம்பெனிங்களையும், முதலாளிகளையும் காட்ட ஆரம்பிச்சாட்டங்க! அப்பதான் மக்களோட சிந்தனையில படத்தை ஓட்ட முடியும். அது இப்ப தமிழ் சினிமாவுக்கும் வந்தாச்சு. மத்தபடி இந்த மசாலாவை மெசேஜ்னு சொல்லி நம்மள நாமே ஏமாத்துனா, இங்க டெங்கு நோய் ஏன் நம்மள கொல்லாது சொல்லுங்க!

_____________

இந்த சினிமா விமர்சனம் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

இந்திய – தமிழக நதிகள் : பொது அறிவு வினாடி வினா – 4

சென்ற வினாடி வினாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி. பதினான்கு கேள்விகளுக்கும் சரியான பதில்களை ஆறு நண்பர்கள் சொல்லியிருக்கின்றனர். பிறகு 13, 12, 11, 10 வரை சரியான பதில்களை சராசரியாக பத்து முதல் இருபது பேர் வரை கண்டுபிடித்தனர். கணிசமான நண்பர்கள் ஐந்து கேள்விகள் வரை சரியான பதில்களை சொல்லியிருந்தனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்! மறுமொழிகளில் ஆலோசனை வழங்கிய நண்பர்களுக்கும் நன்றி!

இந்த பகுதியில் இந்திய, தமிழக நதிகள் குறித்து கேட்கிறோம். முயன்று பாருங்கள்!

கீழ்க்கண்ட நதிகளில் காவிரியின் துணையாறு எது?

(விடைக்கான விடுகதை: இந்த ஆறுக்கும் டாலர், ஜக்கி வாசுதேவ், வானவில்லுக்கும் என்ன தொடர்பு?)

நொய்யல் ஆறு
உப்பாறு
கடனா நதி
மணிமுத்தாறு

கீழ்க்கண்ட நதி – மாவட்ட பெயர்களில் எது பொருத்தமற்றது?

(விடைக்கான விடுகதை: ஐயா, தேயிலை நீரில் உப்பு போடலாமா?)

தேனி மாவட்டம் – வெண்ணாறு
கடலூர் மாவட்டம் – கோமுகி
திருச்சி மாவட்டம் – பாம்பாறு
கோயம்பத்தூர் மாவட்டம் – அமராவதி

முல்லைப் பெரியாறு அணை எந்த ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது?

(ஜான் பென்னிகுயிக்கின் சீரிய முயற்சியால் கட்டப்பட்ட இந்த அணையின் முதல் கட்டுமானம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது.)

கி.பி 1895
கி.பி 1795
கி.பி 1755
கி.பி 1859

சிவசமுத்திரம் அருவி எந்த நதியில் அமைந்திருக்கிறது?

(இந்த அருவிப் பகுதியில் இருக்கும் நீர்நிலை மின்சார நிலையம், 1902-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இது ஆசிய நாடுகளின் மூத்த நீர்நிலை மின்சார நிலையங்களில் ஒன்று. இன்றும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இந்நிலையம் ஆரம்பத்தில் கோலார் தங்க வயல் தேவைகளுக்கு பயன்பட்டது. இப்போது கோலார் தங்க வயல் மூடப்பட்டுவிட்டது. இந்த அருவி இரண்டு பாதையில் பிரிந்து செல்வதால் இடையில் இருக்கும் தீவுப் பகுதியில் சிவசமுத்திர நகரம் அமைந்திருக்கிறது.)

காவிரி
கிருஷ்ணா
நர்மதா
கோதாவரி

மாஞ்சோலை தேயிலை தொழிலாளர் போராட்டத்தோடு தொடர்புடைய நதி எது?

(இந்த நதிக் கரையில்தான் ஊதிய உயர்வு கேட்டு 1999 ஆம் ஆண்டு சூலை 23 அன்று  தேயிலைத் தொழிலாளர் நடத்திய பேரணியின் போது காவல்துறையினர் நடத்திய தடியடி படுகொலையில் 17 பேர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்கள் பல சாதி மதங்களைச் சார்ந்தவர்கள். இருந்தும் முதலாளி வர்க்கத்துக்கெதிரான இந்தத் தொழிலாளிகளின் போராட்டத்தை, திசை திருப்பி, சாதிப் பிரச்சினை என்று அரசியலாக்கினார் அன்றைக்கு பதவியில் இருந்த கருணாநிதி.)

தாமிரபரணி
மணிமுத்தாறு
சேர்வலாறு
வைகை

சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கர் எந்த நதியோடு தொடர்புடையவர்?

(இந்த நதியில் கட்டப்பட்ட 30 அணைகளில் சர்தார் சரோவார் அணைதான் மிகப்பெரியது ஆகும். 1979 முதல் 2008 வரை இவ்வணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணைக்காக தமது சொந்த கிராமங்களில் இருந்து 18,346 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டன என்று அரசு கூறினாலும், எண்ணிக்கை இதைப் போல இரண்டு மடங்கு இருக்கும் என்கிறார் மேதா பட்கர்.)

நர்மதா
கோதாவரி
கிருஷ்ணா
மகாநதி

இந்தியா – பாக் நாடுகள் எந்த ஆண்டில் சிந்து நதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?

(2016-17 –ம் ஆண்டுகளில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போதாக பாஜக அரசு மிரட்டியது. ஆனால் சிந்து நதியின் வெள்ள நீரை தேக்கி வைக்குமளவு இந்தியாவில் அணைகள் இல்லை என்பதால் இந்த ரத்து என்பது வெறும் உதார்தான் என்று நீர்வளத்துறை நிபுணர்கள் கூறினர். பாக் எதிர்ப்பு அரசியலில் மக்களிடம் ஒரு வெத்து வேட்டு வீரத்தை காண்பிக்க மோடி அரசு இப்படி பேசியது.)

1960
1970
1965
1957

காவிரி தோன்றும் தலைக்காவிரி பகுதி எந்த மலையில் அமைந்திருக்கிறது?

(இந்த மலையில் இருக்கும் காஃபித் தோட்டங்கள் பிரபலமானவை. அனேக பணக்காரர்களுக்கும் முதலாளிகளுக்கும் இங்கே தோட்டங்கள் உண்டு. சிக்மகளூரில் இருக்கும் புதாங்கிரி மலைப் பகுதிக்கு அடுத்து இந்தியாவிலேயே அதிகம் காபி உற்பத்தி செய்யப்டுவது இப்பகுதியில்தான்.)

குடகு மலை
முதுமலை
கல்வராயன்
ஆனைமலை

இராஜஸ்தானில் எந்த நதிக்கு அருகில் ஆஜ்மீர் நகரம் அமைந்திருக்கிறது?

(கி.பி 12-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த நகரம் ஆரவல்லி மலைகளால் சூழப்பட்டது. சூஃபி தர்காக்களும், புராதான கோவில்களும், கோட்டைகளும் இந்நகரில் உள்ளன. ராஜஸ்தானில் ஐந்தாவது பெரிய நகரமாக விளங்கும் அஜ்மீரில் 2011 சென்சஸ் கணக்குப்படி 5,42,580 மக்கள் வாழ்கின்றனர்.)

லூனி
யமுனை
சட்லஜ்
சிந்து

பிரம்ம்புத்ரா நதியின் நீளத்தில் (2,900 கி.மீ) பாதி நீளத்தைக் (1465) கொண்டிருக்கும் நதி எது?

(இந்தியாவில் மட்டும் ஓடும் நதிகளில் கங்கைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நதி இதுதான். இந்நதி எட்டு மாநிலங்களில் பாய்கிறது.)

கோதாவரி
நர்மதா
கிருஷ்ணா
யமுனை

உத்திரப்பிரதேச தலைநகரமான லக்னோ எந்த நதிக்கரையில் அமைந்திருக்கிறது?

(1857 முதல் இந்திய சுதந்திரப்போரில் லக்னோ நகரம் ஒரு முக்கியமான மையாமாக இருந்தது.)

கோம்தி
கங்கை
யமுனை
கண்டக்

இந்தியாவில் எந்த நதி மிகப்பெரும் சமவெளிப் படுகையை உருவாக்கியிருக்கிறது?

(இச்சமவெளியில்தான் ஆரியர்களின் பிற்காத வேத நாகரீகம் எழுந்தது. வருணாசிரமத்தின் ஆரம்ப கால மையம் இதுதான். அதன் பொருட்டே இப்பிராந்தியத்தில் பார்ப்ப்பனியத்தை எதிர்த்து புத்த, ஜைன மதங்களும் எழுந்தன.)

கங்கை
சிந்து
பிரம்மபுத்ரா
நர்மதா

மத்தியப் பிரதேசத்தின் இந்திரா சாகர் அணை எந்த நதியில் அமைந்திருக்கிறது?

(அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அவரது பெயர் கொண்ட இந்த அணை 1984-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு அணையின் முதன்மைப் பகுதி 1992-ம் ஆண்டில் முடிக்கப்பட்டது. தமிழகத்து அம்மா பெயர் பல திட்டங்களுக்கு வைக்கப்பட்டது போல அன்று இந்திரா பெயர் பலவற்றுக்கு சூட்டப்பட்டது. கொள்ளளவின் படி இந்த அணைதான் இந்தியாவில் மிகப்பெரியது.)

நர்மதா
யமுனா
கிருஷ்ணா
சம்பல்

ஹிராகுட் அணை எந்த நதியில் கட்டப்பட்டிருக்கிறது?

(இந்த அணை 1957-ம் ஆண்டில் நேருவால் திறக்கப்பட்டது. இந்த அணைக் கட்டுமானத்தால் ஒன்றறை இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, 22,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.)

மகாநதி
கிருஷ்ணா
நர்மதா
கோதாவரி

 

 

டெங்கு : ஒழிப்பது எப்படி? அக்டோபர் 2017 மின்னூல்

0

இந்த இதழில் வெளியான கட்டுரைகள் :

1. டெங்கையும் “டெட்பாடி” அரசையும் ஒழிப்பது எப்படி?

டெங்கு நோய் தாக்கி ஒவ்வொரு நாளும் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் வேளையில், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறார் எடுபிடி எடப்பாடி.

2. அப்போலோ இட்லிக்கு முந்தைய இட்லிகள்!

கல்லறையிலிருந்தும் அம்மா காறித்துப்புவதையும் மேற்படி கனவான்களின் முகத்தில் எச்சில் வழிந்து கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம்.

3. அர்ச்சக மாணவர்களுக்கு அநீதி: இது தமிழ்ச் சமூகத்தின் தன்மானப் பிரச்சினை!

கேரள மாநிலத்தில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குப் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் 36 பேரை நியமித்திருக்கிறது.

4. தகுதி இருந்தால் விண்ணப்பித்துக் கொள்!

5. யானையைப் பானைக்குள் அடைக்கத் தடையில்லை!- இதுதான் அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு

ஆகமத்தின் உதவியுடனேயே அர்ச்சகர் பதவியைப் பெற்றுவிடலாம் என்று சிந்திப்பது, பார்ப்பனியத்துக்கு மனித முகம் வழங்குவதற்கும், இந்த அரசமைப்புச் சட்டத்துக்கு ஜனநாயக முகப்பூச்சு அணிவிப்பதற்கும் மட்டுமே பயன்படும்

6. “சதிச் செயல் செய்தவன் புத்திசாலி, அதைச் சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி!”- மோடியின் நர்மதா அணை பிரகடனம்

7. 150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்:மூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும் வரலாற்றில் மூலதனத்தின் இடமும்

மூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது.

8. நவோதயா பள்ளிகளை வரவேற்போம்! அனிதாக்களை 5-ஆம் வகுப்பிலேயே தூக்கிலிடுவோம்!!

குழந்தைகளை வெறும் போட்டியாளர்களாக உருவாக்கும் இன்றைய முதலாளித்துவ சமூகத்தை, இன்னும் கொடூரமான எல்லைக்கு இட்டுச் செல்லும். குழந்தைகளை உளவியல்ரீதியாகக் கொல்லும்.

9. பா.ஜ.க.வைப் பணிய வைத்த ராஜஸ்தான் விவசாயிகள்!

அரசைப் பணியவைக்கும் போராட்டங்களை நடத்துவதன் மூலம்தான் கோரிக்கைகளை ஓரளவாவது நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதை ராஜஸ்தான் விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தமிழக விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும்

10. மோடியின் பணமதிப்பழிப்பு: எஸ்கேப் ஆகிறார் குருமூர்த்தி!

மோடியின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையை ஆதரித்து எழுதியும் பேசியும் வந்த குருமூர்த்தி, சென்னை பொருளாதார மையத்தில் ஆற்றிய உரையில் பல்டியடித்துவிட்டார்.

11. அரசு மருத்துவமனைகள் விற்பனைக்கு… மோடியின் அடுத்த தாக்குதல்!

இந்தியாவெங்கிலும் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலுள்ள மூன்று முக்கிய பிரிவுகளைத் தனியார் வசம் ஒப்படைக்கும் மோடி அரசின் முடிவு, ஒட்டகம் கூடாரத்தினுள் மூக்கை நுழைத்த கதையாகவே முடியும்.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

ஒசூர் பாகலூர் அரசு மருத்துவமனையை திருத்திய மக்கள் போராட்டம் !

1

மக்கள் அதிகாரத்தின் அதிரடி நடவடிக்கை :

சுகாதாரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியது பாகலூர் ஆரம்ப சுகாதார நிலையம் !

சூரில் அடுத்துள்ள பாகலூர் பகுதியில் கடந்த 12.10.2017 அன்று டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அம்பலபபடுத்தி “எதிர் கட்சித் தலைவர்களே, ஊடகங்களே, செயலற்ற அரசுதான் மக்களின் மரணத்திற்கு காரணம்! டெங்கு, மலேரியா பிரச்சினைக்கு தீர்வு காண பேசுங்கள்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தினை கவனித்துச் சென்ற பகுதிவாழ் மக்கள் அங்குள்ள அரசு சுகாதார மருத்துவமனையை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

அதன்படி 14.10.2017 அன்று மக்கள் அதிகாரம் தலைமையில் தோழர்களும், ஆர்வலர்களும், உள்ளூர் விவசாயிகள் பொதுமக்கள் என 20 பேர் கொண்ட குழு  பாகலூர் மேம்படுத்தபட்ட அரசு சுகாதார நிலையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் நேரத்திற்கு வருவதில்லை, பல நோய்களுக்கு மருந்து இல்லை, ஒழுங்காக மருத்துவம் பார்ப்பதில்லை என்ற பொதுமக்களின் குற்றசாட்டுகள் இருந்தன. ஆனால், ஆய்வுக்கு சென்ற போது மருத்துவமனைதான் டெங்கு கொசுக்களின் உற்பத்தியிடம் போல காட்சியளித்தது.

உடனடியாக ஊடகங்களுக்கு அழைப்புக் கொடுத்துவிட்டு மருத்துவமனையின் உள்ளே சென்ற போது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களிடம் “நாய் கடி, பாம்பு கடிக்கு மருந்து இருக்கிறாதா” என்று கேட்ட போது, அந்த மருத்துவர்கள், “இருக்கிறது என்று பொய் சொன்னார்கள்”, எங்கே காட்டுங்கள் என்று கேட்டவுடன் அமைதியாகிவிட்டனர். “செடிகொடிகள் அதிகமாக வளர்ந்து புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இவை எல்லா இடங்களிலும் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி இருக்கிறது இதனை சுத்தம் செய்து மருந்து அடிக்க வேண்டும் என்று இல்லாமல் அலட்சியமாக செயல்படுகிறீர்கள், நோயாளிகளை தொட்டு கூடப் பார்ப்பதில்லை, பார்வையாலேயே மருந்து மாத்திரைகளை பொதுவாக கொடுக்கிறீர்கள்”  என்று சொல்லி கேட்டோம். இதற்கு நாங்கள் பொறுப்பு அல்ல, இன்சார்ஜை கேளுங்கள் என்று நிறுத்திக் கொண்டார்கள்.

இன்சார்ஜ்க்கு போன் செய்தவடன் 30 நிமிடத்தில் வந்தார். அவர் மருத்துவர் சுகன்யா. அவரிடம் நாங்கள் மக்கள் அதிகாரம் சார்பாக வந்துள்ளதை அறிமுகப்படுத்திக்கொண்டு, ”மருத்துவமனை புதர்கள் மண்டியும் கொசுக்கள், கழிவுகள் என சுகாதார சீர்கேடாக உள்ளது, மருத்துவர்களின் பணி நேரம் காலை 8 மணிக்கு வந்து மாலை 4 மணி. ஆனால்  11 மணிக்கு வந்து மதியம் 1.30 மணிக்கு கிளம்பிவிடுகிறார்கள்” என்று மருத்துவமனையின் அவலத்தை அடுக்கிக் கொண்டிருக்கும் போது, “நான் மருத்துவ விடுப்பில் இருந்தேன், நீங்க எப்போது வந்தீர்கள்,  நீங்கள் கூறுவது எதுவும் உண்மையல்ல” என்றார். “நாங்கள் உள்ளூர்காரர்கள், மருத்துவமனை எப்படி இயங்குகிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும்” என்றதும், “அதற்கு முன்பு இருந்தது மாதிரி இப்போது இல்லை சிஸ்டம் எல்லாம் மாறியிருக்கிறது” என்றார்.

“எப்படி இரண்டு நாளில் சிஸ்டம் மாறியிருக்க முடியும். ஸ்வச் பாரதமுனு சொல்லுகிறீர்கள் அதன் யோக்கியதை இங்கு வந்து பார்த்தால் தெரிகிறது. கிராமப்புற கழிவுகளில் உற்பத்தியாவதை விட இந்த மருத்துவமனையில் தான் கொசு அதிகமாக உற்பத்தியாகிறது. அதனை நாங்கள் வீடியோ எடுத்துள்ளோம் பார்க்கிறீர்களா?” என்றதும், “நாங்கள் என்ன சார் செய்வது, பீ.டி.ஓ கிட்ட பல முறை பேசியிருக்கோம்” என்றார்.

“அப்படியெல்லாம் நீங்க முயற்சி பண்ணதா தெரியவில்லை, வாங்க காட்டுகிறோம்” என்று மருத்துவமனை அவலங்களைச் சுற்றிக்காட்டினோம். தவறு செய்பவர்கள் தெரியாமல் செய்தால், அவர்களைத் திருத்தலாம். இந்த மருத்துவரோ, மருத்துவமனை சுகாதாரமாக இருக்கிறது என்று அப்பட்டமாக, மக்கள் மத்தியில் சொல்லியவராயிற்றே இந்த மருத்துவர். கழிவறையை காண்பித்து, “பாருங்கள் எவ்வளவு அசிங்கமாக உள்ளது” என்றதும், “பொது மக்கள் வெளியில் இருந்து வந்து கலீஜ் (அசிங்கம்) பண்ணிட்டு போகிறார்கள் நாங்கள் என்ன சார் பண்ண முடியும்” அபாண்டமாக பொய் கூறினார். ஆத்திரப்பட்ட உள்ளூர் மக்கள், “அப்படியெல்லாம் பொது மக்கள் யாரும் மருத்துவமனைக்கு வந்து அசிங்கம் செய்வதில்லை, இது பாழடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை நீங்கள் யாரும் பராமரிப்பது இல்லை, உங்க தவறை நீங்கள் மறைத்துக்கொண்டு பொது மக்கள் மேலே பழிபோட்டு அவங்கள நீங்க இழிவுபடுத்தாதீங்க” என்றனர் ஆவேசமாக.

ஊசி போடும் அறையின் பக்கத்தில் புதர் மண்டியிருந்ததைக் காட்டி, செடிகளைத் தட்டிய போது குபு குபு வென கொசுக்கள் கூட்டமாக பறந்தன, மருத்துவமனை வளாகத்திலேயே ஒரு லோடு தேங்காய் மட்டை கொட்டி வைக்கப்படிருந்தது. அதிலும் தண்ணீர் தேங்கி கொசுப் புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. சில மட்டைகளை கொசுக்கள் மூடியிருந்தன. அவ்வளவு கொசுக்கள். இதனைக் காண்பித்து “தேங்காய் மட்டையில் தண்ணீர் தேங்கினால் ஏ.டி.எஸ் கொசு உற்பத்தியாகும் என்று ஊருக்கெல்லாம் சொல்றீங்க ஆனால் நீங்க வேலை பார்க்கிற இந்த மருத்துவமனையை எப்படி வைத்துள்ளீர்கள்” என்று கேள்வி எழுப்பியதும் “இதெல்லாம் ஒன்றும் பிரச்சனையல்ல அது ஏ.டி.எஸ் கொசு கிடையாது அது நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகும் அதெல்லாம் எடுக்க சொல்லி ஊழியர்களிடம் எச்சரித்து இருக்கோம்” என்று மழுப்பலாகப் பேசினார். “கொசு வராதுனு சொன்ன பிறகு ஏன் மேடம் எடுக்க சொல்றீங்க, நீங்க பொய் பேசுறதுக்கு ஒரு அளவே இல்லையா” என்று ஒரு முதியவர் திட்டினார். “இதே உங்க வீட்டில் இப்படி கிடந்தா எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு சும்மாவாக இருப்பீங்களா? உடனே கம்பளைன்ட் கொடுத்து நடவடிக்கை எடுக்க செய்வீர்கள் உங்கள் வீடு போல இந்த மருத்துவமனையை பாருங்கள்” என்று மக்கள் கண்டித்தனர்.

சிறிதும் நேர்மையோ மக்கள் தொண்டு என்ற சிந்தனையோ இல்லாத இந்த மருத்துவர் சுகன்யா, பேசிக்கொண்டிருக்கும் போதே, போலீசுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தார். முந்தைய நாள் ஆர்ப்பாட்டத்தின் போதே, மக்களைத் திரட்டி அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்ததால், போலீசும் பொதுமக்களுக்கு சல்யூட் அடித்துவிட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தது.

இதன் பிறகு வேறு வழியில்லாமல், சம்பந்தப்பட்ட நபரை அழைத்து அந்த தேங்காய் மட்டைகளை எடுக்க செய்தார். அது ஏறக்குறைய ஒரு குடோன் போல் இருந்தது, சில லாரிகளில் அள்ளிச்சென்றனர். பொதுமக்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் சுட்டிக்காட்டிய குறைகள் எல்லாவற்றையும் நாங்கள் சுத்தம் செய்துவிடுகிறோம் என்று சொல்லி மருந்து அடிப்பவர்களை வரவழைத்தார். கழிவறைகளை இடித்து தரைமட்டம் செய்வதற்கு ஜெ.சி.பி வரவழைத்தார். மருந்துகளும் வந்து இறங்கியது. மதியம் 1.30 க்கு சென்றுவிடக்கூடிய மருத்துவர்கள் மாலை 4.30 மணி வரை  இருந்தார்கள். இதற்கு முன்னால் ஆம்புலன்ஸ் எங்கே என்று கேட்டால் சூளகிரியில் இருக்கிறது இங்க இல்லை என்ற இதே மருத்துவர், மக்கள் அதிகாரம் ஆய்வை முடிப்பதற்க்குள் இந்த மருத்துவமனைக்கு உரிய இரண்டு ஆம்புலன்ஸ்களும் மருத்துவமனை வாசலில் நிறுத்தி வைத்துள்ளனர். ஒரு மூட்டை மருந்துகள் வந்து இறங்கியுள்ளது. நாய் படம் போட்டு நாய்கடி மருந்து கிடைக்கும் என போர்டு மாட்டினர். மருத்துவமனை சுத்தம் செய்வதை துரித வேகத்தில் தொடங்கியது. இவற்றை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். மக்கள் அதிகாரம் பிரச்சனையைக் கையில் எடுத்த பிறகு தான் ஒரு தீர்வு கிடைத்துள்ளது என்று அந்த பகுதிவாழ் மக்கள் தோழர்களின் கரம் பிடித்து நன்றி தெரிவித்தனர். நெகிழ்ந்து பாராட்டினர்.

டெங்கு கொசுவை உற்பத்தி செய்வதே மருத்துவமனையாக இருக்கிறது என்பது இந்த ஆய்வில் உணரமுடிந்தது. இந்த அரசு, சுகாதாரத்தை வளர்ப்பதைவிட டெங்குவை வளர்க்கிறது; சுகாதாரக் கேட்டை வளர்க்கிறது. மண்டிகிடக்கும் புதர்களாக, புழுக்கள் நெளியும் சாக்கடைகளாக அரசு மருத்துவமனைகள் திகழ்கின்றன. மேலும், இந்த அரசுக் கட்டமைப்பு கொசுக்களோடு சேர்த்து மக்கள் சேவை என்ற எண்ணமற்ற, மக்களின் வரிப்பணத்தில்தான் வாழ்கிறோம் என்ற நன்றி உணர்ச்சியற்ற, மருத்துவம் என்பது சேவை என்ற சுரணையற்ற, பொய்களை அப்பட்டமாக பேசுகின்ற, அதிகாரத் திமிர் பிடித்த மருத்துவர்களையும் அதிகாரிகளையும் உருவாக்கியுள்ளது. டெங்குக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாக விஜய பாஸ்கர் போன்ற அமைச்சர்கள் பேசுவதெல்லாம் அப்பட்டமான பொய், வடிகட்டிய பொய்.

இன்று மக்கள் அதிகாரம் மேற்கொண்ட இந்த அதிரடி ஆய்வு மருத்துவமனையை சுத்தம் செய்துள்ளது. இந்த அரசுக் கட்டமைப்பை சுத்தம் செய்ய முடியாது, துடைத்தெறிய வேண்டும். அதற்கு மக்கள் அதிகாரம்தான் தீர்வு என்பதை மக்களும் உணர்ந்து வருகிறார்கள்…!

தகவல்:
தோழர்.காந்தராஜ்,பகுதி ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
பாகலூர் பகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம்.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

வேட்டு வைத்த மோடி ! – கேலிப்படம் !

0

மோடி தீபாவளி – கேலிப்படம் !

கேலிப்படம் : வேலன்

இணையுங்கள்:

_____________

இந்த கேலிச்சித்திரம் உங்களுக்கு பிடித்திருக்கிறது?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

தீபாவளி : நாள் முழுக்க உழைச்சும் உடம்புல ஒண்ணும் ஒட்டலயே !

1

இவர்களுக்கில்லை தீபாவளி! படக்கட்டுரை

மோடியின் ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு, பணமதிப்பழிப்பு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு  காரணமாக இன்று எந்த பண்டிகைகயும் கொண்டாடத்தக்கதாக இல்லை. ஒருவாரம் முன்பிருந்தே ஆரம்பிக்கும் தீபாவளி கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் இந்தவருடம் மிகவும் குறைவான  கொண்டாட்டங்களே காணப்பட்டன.

ஆனாலும் மக்கள் “ஆட்சியாளர்கள் யாரும் சரியில்லை, ஒருத்தனும் யோக்கியன் இல்லை…” என்று சொன்னாலும், தேர்தல் நாளில் வரிசையில் நின்று எப்படி வாக்களிக்கிறார்களோ அதுபோல தீபாவளியும் இன்று ஒரு பழக்கத்தால் கொண்டாடப் படுகிறது. ஆனாலும் இந்த சம்பிரதாயமான கொண்டாட்டம் கூட இல்லாமல் பல லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்களில் சிலர் பேசுகின்றனர். இந்த நேர்காணல் தீபாவளி அன்று சென்னை நகரின் சில பகுதிகளில் எடுக்கப்பட்டது.

ரவி, கோடம்பாக்கத்தில் கரும்புச்சாறு கடை வைத்திருப்பவர்.

தீபாவளி நமக்கு எல்லாம் இல்ல… பசங்களுக்கு தான். போன வருசத்தை விட இந்த வருஷம் எல்லா பொருளும் வெல அதிகம். வேல செஞ்சா தான எதுனா வாங்கி குடுக்க முடியும்.”

செல்வி, பெரியார் நகர் துப்புரவு தொழிலாளி.

எனக்கு அஞ்சும் பொண்ணுங்க. புருஷன் ஒரு குடிகாரன். இருக்குற பொண்ணுங்கள கட்டிக்கொடுக்கணும். நா… வேலைக்கு வந்தா தான் பொழப்பு ஓடும். இதுல எங்க தீபாவளி கொண்டாடுறது. வெறும் ரூ.6,000 சம்பளம். இத வச்சிக்கிட்டு இன்னா பண்றது. இதுக்கே நான் கான்ராட்டு தொழிலாளி தான். எங்கள நிரந்தரம் பண்ண சொல்லி பல போராட்டம் பண்ணிட்டோம், ஒன்னும் ஆகல. எப்ப நிரந்தமா வேலை கெடக்கிதோ அது தான் எனக்கு தீபாவளி.”

சுரேஷ்குமார், துப்புரவு தொழிலாளி.

தீபாவளி கொண்டாடுறதுக்கு எல்லாம் எங்க நேரம் இருக்கு. காலைல இருந்து இந்த குப்பைய வாரிகிட்டு இருக்கேன். ஒன்பது மணிக்கு வாங்கி வச்ச இட்லி. இப்ப மணி பதினொன்னு ஆகுது. இன்னும் சாப்படல. இது தான் எங்க பொழப்பு. நான் வாங்குற சம்பளத்துக்கு தீபாவளி ஒரு கேடா? என்னால என் புள்ளைங்களுக்கு பட்டாசு வாங்கி தர முடியல. என் தம்பி தான் வாங்கி தந்தான். நாள் முழுக்க ஒழச்சாலும் ஒன்னும் ஒட்டலையே!”

ருக்கு, வள்ளுவர் கோட்டம் அருகே 20 ஆண்டுகளாக பூ வியாபாரம் செய்பவர்.

“ இன்னா கொண்டாட சொல்ற. மோடி வந்து எல்லாத்துக்கும் டேக்சு போட்டுட்டாரு. யாரும் பூ கூட வாங்க வர மாட்றாங்க. வந்தாலும் வெலைய கேட்டுட்டு போயிடறாங்க. இன்னிக்கு விக்கிற வெலவாசிக்கு ஒருகிலோ கறி எடுத்து துன்ன முடில. தோ… காய் கொழம்பு சாப்ட்டுன்னு கீறேன். எல்லா காலமும் ஒழப்பு…ஒழப்பு தான். என்னிக்கு கண்ணா மூடுரனோ அது தான் எனக்கு ரெஸ்ட்.”

பார்த்திபன், அகத்தி கீரை விற்பனையாளர்.

“விடிய காத்தால கொல்லைல இருந்து எடுத்துட்டு வந்தது.. இத அதிகமா கோசாலைக்கு தானமா கொடுக்க சேட்டுங்க தான் வாங்குவாங்க. நம்மாளுங்க ஏதாவது வைத்தியத்துக்கு தான் வாங்குவாங்க. இன்னைக்குள்ளே இதை வித்துடனும். இல்லனா வீணா போய்டும். இது வித்துட்டாலே எங்களுக்கு தீபாவளி தான்.”

சிவக்குமார், மாநகரப் போக்குவரத்து கழக தொழிலாளி.

எந்த ஒரு பண்டிகையும் மகிழ்ச்சியா இருக்கத் தான். ஆனா இன்னைக்கு நெலம அப்படி இல்ல. அதனால் நமக்கு இன்னைக்கு தீபாவளி இல்ல. மத்த மக்கள் மகிழ்ச்சி தான் எங்களோட மகிழ்ச்சி.

ராஜேந்திரன், சைக்கிள் கடை.

“எந்த பண்டிகையா இருந்தாலும் உழைப்பது தான் எனக்கு மகிழ்ச்சி. தோ… இன்னிக்கு வந்தேன். இந்த சைக்கிளுக்கு பஞ்சர் போடுறேன். இன்னொரு சைக்கிள ரெடி பன்னிட்டேன். எந்த நாளா இருந்தாலும் என் கட தெறந்து இருக்கும். இதை விட வேறென்ன பண்டிகை எனக்கு வேணும்.”

சுப்ரமணியன், புதினா – கொத்தமல்லி விற்பவர்.

“சம்பாதிக்கிற பணம் வாடகை கொடுக்கவும், குடும்ப செலவுக்கும் தான் இருக்கு. இதுல தீபாவளிய எப்படி கொண்டாடுறது. எனக்கு ரெண்டும் பொண்ணு தான். இன்னிக்கு வேல இருந்தா வர வருமானத்த கொண்டு பசங்களுக்கு ஏதாவது வாங்கி தரலாம்னு வந்தேன். வேலை இல்லாததால இப்ப சும்மாவே திரும்பி போறேன். இனிமே தான் யார்கிட்டயாவது ஒரு 500 ரூபா கடன் கேட்டு பார்க்கணும்”.

ஏழுமலை, இருபது ஆண்டாக இளநீர் விற்பனை செய்து வருபவர்.

“நாம என்ன அரசாங்க வேலையா செய்யுறோம். கையெழுத்து போட்டு சம்பளமும் போனசும் வாங்கி கொண்டாடுறதுக்கு. மழையானாலும், வெயிலானாலும் வேலைக்கு வந்தா தான் சோறு.”

பொன்னம்மாள், சைதாப்பேட்டை மார்கெட்டில் பூ, தோரணம் விற்பவர்.

“ நேத்துலாம் கீர வித்தேன். இன்னிக்கு எங்கயும் கீரை கெடக்கல. இந்த பூவும் தோரணமும் தான் கெடச்சது. இதை வித்தா தான் எனக்கு சோறு.”

ஆட்களிளில்லாத சைதாப்பேட்டை மார்க்கெட்டில் வாடிக்கையாளரின் வரவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்  பாட்டிகள்.

இவர்களுக்கு இல்லை தீபாவளி !

-வினவு செய்தியாளர்

_____________

இந்த புகைப்படக் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கமல்ஹாசனின் பகிரங்க மன்னிப்பு – கருத்துக் கணிப்பு

1

தீபாவளிக்கு ஒரு புயல் கரையைக் கடக்கும் என்றார்கள். அந்தப் புயல் கரையைக் கடக்கவில்லை. ஆனால் வாரா வாரம் திருவாளர் கமல்ஹாசன் அவர்கள் “என்னுள்ளே மையம் கொண்ட புயல்” தொடரை ஆ.விகடனில் வெளியிடுகிறார்.

ஒருத்தருக்குள்ளே மையல்தான் வரும். புயல் வருவதாக இருந்தால் ஏதோ சில பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டு பாரதூரமான முடிவுகளை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கும். கமல் அப்படிப்பட்டவர் இல்லை. அவர் சாதரணமாக நடந்தாலே கண்ணி வெடிக்குரிய சோதனைகள் மாதிரி செக் பண்ணிவிட்டுத்தான் உலவ விடுகிறார்கள் அவரது அணியினர்.

கமலைப் போன்றவர்களின் புயலை புரளி என்பதா, இல்லை புதிரா என டிவிட்டர் துவங்கி ஃபேஸ்புக் வரை அவ்வ்ப்போது ஆய்வுகள் நடக்கின்றன. நடக்கட்டும்! செயலுக்கு வழியில்லாத போது சிதறல்களே மாபெரும் ஆய்வுகளாவதில் தவறில்லை!

மேற்படி புயல் தொடரில் மூன்றாமாவது பாகத்தில் அன்னார் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டதாக ஒரு செய்தி வெளியானது. என்னவாம்?

பணமதிப்பழிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டபோது, மோடி கருப்பு பணத்தை ஒழிக்கப்போகிறார் என்று நம்பி அதை ஆதரித்தவர்கள் பலர். அவர்கள் பெரும்பான்மை மக்கள்.

இது மோசடி என்று தெரிந்தும், இதை எதிர்த்துப் பேசினால், கருப்பு பண பேர்வழி என்ற முத்திரையை மோடி நம் மீது குத்தி விடுவார் என்று பயந்து வரவேற்றவர்கள் பலர்.

ரஜனிகாந்த் முதல் பல கருப்பு பண நட்சத்திரங்களும் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

முதல் நாளன்றே இதனை எதிர்த்து, இதன் நோக்கத்தை அம்பலப் படுத்தியவர்கள் சிலர். அவர்கள் ஆய்வாளர்கள் மற்றும் இடதுசாரிகள்.

அன்று கமல் இதை ஆதரித்தார்.

பணமதிப்பழிப்பு அறிவிக்கப்பட்ட சில மாதங்களிலேயே அதனால் அழிந்தவர்கள் கருப்பு பண பேர்வழிகள் அல்ல, சாதாரண மக்களும் அவர்களுடைய சிறு தொழில்களும்தான் என்பது உலகத்துக்கே வெளிச்சமாகிவிட்டது.

போனமாதம் (செப் 22 ஆம் தேதியன்று) பணமதிப்பழிப்பு பற்றி கேட்டபோது, உரிய ஆதாரம் இல்லாமல் அதனை விமரிசிக்க முடியாது என்று பதிலளித்தார் கமலஹாசன். ஸ்வச் பாரத், பண மதிப்பழிப்பு போன்ற நடவடிக்கைகளின் நோக்கம் நேர்மையானது என்று மோடிக்கு சான்றிதழ் வேறு கொடுத்தார்.

தினத்தந்தி, தினகரன், நக்கீரன், ஜுவி படிக்கின்ற சராசரித் தமிழர்கள் மட்டுமின்றி, நம்மாள் செய்வது சரியில்லை என்று அவாளுக்கே புரியத்தொடங்கிய காலத்திலும் கமலுக்கு இந்த உண்மை புரியவில்லையாம். உலக சினிமா, உலக கவிதை, இலக்கியமெல்லாம் படிக்கும் இந்த ஞானிக்கு பொருளாதார அறிஞர்கள் சிலர் தொலைபேசியில் சொன்ன பிறகுதான் மேட்டரே புரிந்ததாம்.

அதற்குப் பிறகுதான் கமலின் இந்த மன்னிப்பு. தான் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி மோடியையும் மன்னிப்பு கேட்குமாறு சிபாரிசு செய்திருக்கிறார் கமல். இதுதான் மிகப்பெரிய கேலிக்கூத்து.

ஐயா, செல்லாத நோட்டு விவகாரத்தில் செத்தவர் எத்தனை, வியாபாரத்தை இழந்தவர் எத்தனை பேர், வேலைகளை விட்டு துரத்தப்பட்டவர் எத்தனை பேர் என்பதை உலகமே அறியும். ஆழ்வார்ப்பேட்டையில் இருந்து டவிட்டரிலும், தனது கிச்சன் கேபினட் மூலமாக  உலகையும் பார்க்கும் கமல் அவர்களுக்கு அது தெரியாததில் வியப்பில்லை.

முக்கியமாக ஹிட்லர் கூட ஒரு ஹாய் மன்னிப்பு என்று கேட்டால் பெருந்தன்மை என ஆசிரியப்பா பாடும் வல்லமை கொண்ட கமல்ஹாசனின் அரசியல் அறிவு, பிரவேசம் குறித்து யோசித்தால் டெரராக இருக்கிறது.

விடுங்கள்!

கமல்ஹாசனின் அந்த பகிரங்க மன்னிப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்? வாக்களியுங்கள்

  • நேர்மையான மன்னிப்பு
  • டேமேஜ் ஆன இமேஜை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி
  • கோழைத்தனம் பாதி சந்தர்ப்பவாதம் பாதி
  • நேர்மையில்லைதான், இருந்தாலும் மன்னிப்பு கேட்டிருக்கிறாரே

_____________

இந்த கருத்துக்கணிப்பு உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

உளுந்தூர் பேட்டையில் டெங்கு : போராட்டமில்லாமல் ஆரோக்கியம் வருமா ?

0

உளுந்துர்பேட்டை பேருராட்சி ஆணையருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !

மிழகத்தில் டெங்குகாய்ச்சலால்  பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்கள் குழைந்தைகள் என 400-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக பலவேறு ஊடக செய்திகள் கூறுகின்றன. அரசோ இந்த எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்கு தீயாய் வேலை செய்கிறது.  சுகாதார சீர்கேட்டால் நோய் தீவிரமடைந்துள்ளது, தமிழக மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் உளுந்துர்பேட்டை, திருக்கோயிலூர், திருவெண்ணைநல்லூர் ஆகிய பகுதிகளில் மருத்துவமனை அதை சுற்றியுள்ள உட்பகுதி, நகரம் முழுவதும் டெங்குவின் பாதிப்பை விளக்கி 5,000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது. உளுந்துர்பேட்டை நகரை சுற்றியும் கழிவுக் கொட்டப்படுகிறது. அரசு மருத்துவமனை சுற்றியும் சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளது. இந்திரா நகர் பகுதிகளில் சாக்கடை நீர் தெருக்களில் ஓடுகிறது, பேருந்து நிலையமும் பின்புறமும் மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

சட்டமன்ற அலுவலகம் அருகாமையில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. உளுந்துர்பேட்டை கள்ளக்குறிச்சி ரோட்டின் அருகில் நகரத்தின் கழிவுகள் கொட்டபடுகிறது. நகரத்தின் அருகாமையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி உள்ளது 180 மாணவர்கள் தங்கியுள்ளனர். விடுதியைச் சுற்றிலும் குளம்போல் நீர்தேங்கியுள்ளது. விடுதிஅருகாமையில் சாக்கடை ஓடுவதால் அம்மாணவர்களுக்கு நோய் தோற்றும் அபாயம் உள்ளது .

இந்த பதிப்பு அனைத்தையும் மனுவாக தயாரித்து   16-10-2017 அன்று காலை 12 மணியளவில்  மக்கள் அதிகாரம் உளுந்துர்பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் அரிகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து முழக்கம் போட்டுகொண்டு பேருராட்சி அலுவலம் வரை ஊர்வலமாக சென்று பேருராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.

மனுவை ஏற்றுக்கொண்டு மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார், ஆணையர். நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இன்னும் அதிகபடியான மக்களை திரட்டி முற்றுகையிடுவோம் என்பதை மக்கள் அதிகாரம் சார்பாக  தெரிவிக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்.
விழுப்புரம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி