Friday, May 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 541

கபாலி நெருப்பா கருப்பா சொல்லுடா !

8
காபாலி
காபாலி
காபாலி

காதுகள் அமைதியை நாடினாலும், கண்கள் ஓய்வை தேடினாலும் கபாலியின் கசமுசா விடுவதாயில்லை. முன்னோட்டம், பாடல், வியாபாரம், பரவசம், புண்ணியம் என்று வெளியாவதற்கு முன்னர் எத்தனை வார்த்தைகள், காட்சிகள், உருவகங்கள்? தினமும் கொலையும், கொள்ளையும் கூப்பாடு போடும் தமிழகத்தில் கபாலியின் கொண்டாட்டம் எதைக் காட்டுகிறது? ரஜினியை வைத்து பெரு நிறுவனங்கள் திட்டமிட்டு நடத்தும் ஆக்கிரமிப்பு வணிகம்தான் கபாலி என்றாலும் இம்முறை இயக்குநர் ரஞ்சித்தின் ‘தலித்திய’ ஃபிளேவர் அதற்கோர் ‘தத்துவ’ தரிசனத்தை வேறு அளிக்கிறது.

முதலில் வியாபாரம்!

“வியக்க வைக்கும் கபாலி வியாபாரம், எகிறும் கபாலி வியாபாரம், எந்திரனையே மிஞ்சும் கபாலி வியாபாரம், ஜிவ் என்று ஏறும் காபாலி வியாபாரம்” என்று மணி, மலர், லொட்டு, லொசுக்கு வரை ஊடகங்கள் அனைத்தும் ஏதோ இந்தியாவுக்கே உலக லாட்டரியில் முதல் பரிசு விழுந்தாற் போல ஒரு பில்டப்பு. சூதாட்டமும், ஏமாற்றமும் அடிப்படையாக இருக்கும் லாட்டரி போலத்தான் ரஜினி வியாபாரமும்! இடையில் “லிங்கா வதந்தியால் கபாலி வியாபாரம் பாதிப்பா?” என்ற எதிர்மறை தலைப்பில் கண்களை இழுத்துப் போட்டு பிசினஸ் அடி பின்னுது என்று கொல்கிறார்கள்!

லிங்கா விநியோஸ்தர்கள் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவித்த நிலையை மக்கள் பலரும் ஏதோ ஒரு மொக்கை ரஜினி படத்தின் தோல்வி என்று மட்டும் பரிதாபப்பட்டார்கள். உண்மையில் கருப்பில் விற்பனையாக வழியில்லாமல் போனதே அந்த பிச்சைப் போருக்கு காரணம். அதாவது ரசிகர்கள் இந்த இழவுக்கு ஒயிட்டே ஜாஸ்தி, இதுல கருப்புன்னா நாஸ்தி என்று புறக்கணித்ததன் விளைவுதான் லிங்காவின் மரணம்.

“திரைத்துறை வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்காவில் மட்டும் எட்டு கோடி ரூபாய்க்கு கபாலி படம் வியாபாரம் ஆகியுள்ளது. இதுகுறித்து வருமான வரிச் சோதனை நடைபெற்றாலும் கவலையில்லை. ஆனால் இதுதான் உண்மை” என்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. இதே உண்மையை கொஞ்சம் புலம்பலும், எரிச்சலுமாய் ஆளவந்தானில் சொன்னார். அது உலகநாயகன் தாணுவை தாளித்தது. தற்போது ரஜினி எனும் பிராண்டை வைத்து தாளிப்பதால் எப்படியும் கலைப்புலியின் வீட்டிலோ வங்கி லாக்கரிலோ பணத்தை அடுக்க அண்ணாசாலை எல்.ஐ.சியையே கட்ட வேண்டியிருக்கும். மேலதிகமாக சென்ற தேர்தலுக்கு ரஜினி வீடு தேடி மோடி வந்ததால் வருமானவரிச் சோதனை இங்கே எட்டிக் கூடப் பார்க்காது என்பதும் தாணுவுக்கும் தெரியும். என்ன இருந்தாலும் வைகோ ஈழத்தின் விடிவெள்ளியாக இருந்த காலத்திலேயே இந்திய அமைதிப் படையின் கொலை வரலாற்றை தியாகமாக படம் எடுத்து பிசினஸ் செய்த பெருச்சாளியல்லவா அவர்!

தமிழ்நாட்டு உரிமை மட்டும் சுமார் 80 கோடி இருக்கலாம் என்று இந்து முதல் தினமலர் வரை மதிப்பிடுகின்றன. சாட்டிலைட் உரிமையுடன் சேரும் போது அது 120 கோடியாகுமாம். பிறகு பிற மாநில உரிமை, வெளிநாட்டு உரிமை, ஆடியோ, ரிங்டோன் போன்ற சில்லறைகளையும் சேர்த்தால் வியாபாரம் 200 கோடியைத் தாண்டுமாம். 132 கோடியில் தயாரான எந்திரன் 179 கோடியை வசூலித்தது என்றால் அதை விட குறைவான செலவில் தயாரிப்பான கபாலி எந்திரனை வசூலில் மிஞ்சுமாம். அப்படி மிஞ்சவைப்பதற்குத்தான் இந்த கொஞ்சல், கெஞ்சல், அரிப்பு, சொறி  எல்லாம். சரி, எந்திரன் தயாரிப்புச் செலவில் ஏதோ ரோபோ, அனிமேஷனுக்கு நிறைய செலவாயிருக்கும் என்று நம்பினால் நீங்கள் இன்னும் நம்பியாரைப் பார்த்து பயப்படும் கருப்பு வெள்ளை கால அப்பாவி ரசிகராக இருக்கலாம். அந்த செலவில் 45 கோடி ரஜினி அவர்கள் கை,காலை அசைத்தற்கு அருளப்பட்ட காணிக்கை மட்டுமே. லிங்காவின் இது 60 கோடியாக எகிறியதும், பிறகு படத்தை வெளியிட்டவர்கள் பிச்சை எடுப்போமென வெடித்தார்கள்.

தற்போது கபாலி நேரடியாக தமிழிலும், மொழி மாற்றி தெலுங்கு, இந்தி, மலேயா மொழிகளில் மொத்தம் 4000 திரையிடல்களில் காட்டுவார்களாம். எந்திரனது திரையிடல் 3000 என்பதால் இது சாதனையாம். இதில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களில் ஒரு எண்பது இலட்சம் பேர் தலைக்கு ரூ.100 மொய் எழுதினால்தான் அந்த 80 கோடி வசூல் வரும். ஆனால் ரஜினி படத்தை திரையரங்கிலயே பார்த்து ரசிக்கும் வண்ணம் வாழ்க்கையோ, நேரமோ, பணமோ இல்லாதவர்கள்தான் இங்கே அதிகம். அதனால்தான் சாட்டிலைட் உரிமை 40 கோடிக்கு அவர்களுக்காக வாங்கப்படுகிறது. இதன்படி கபாலி அனேகமாக அம்மா தொலைக்காட்சியில் வெளியாகி தமிழக மக்களின் சந்தோஷத்தை விளம்பரங்களாக வாங்கி கல்லா கட்டலாம். இல்லை சன்னா, மதரா என்போது இ ப்போது தெரியாது. இருப்பினும் தேர்தலில் வாக்களித்துவிட்டு கன்டெயினர் ஜனநாயகம் பற்றி வாய் திறவேன் என்று பம்மிப் பதுங்கி கபாலி சென்ற விதத்தைப் பார்த்தால் ஜெயா டி.விதான் சேட்டிலைட்டின் ஏகபோகமாக இருக்கலாம்.

திரையரங்குகளில் முதல் மூன்று நாட்களில் இந்தப்படத்தை அதிகபட்சம் 15 இலட்சம் பேர் பார்க்கலாம். (600 திரையரங்கு, தினம் ஐந்து காட்சிகள், சராசரியாக 500 இருக்கைகள்) அடுத்த வாரம் சுமார் 5 முதல் பத்து இலட்சம் பேர் பார்க்கலாம். இவையெல்லாம் அதிகபட்சம் என்பதை கணக்கில் கொண்டால். அந்த 80 கோடி ரூபாயை இந்த 20 – 25 இலட்சம்  பேர் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதை வகுத்தால் ஒருவர் 400 முதல் 500 ரூபாய் வரை செலவழிக்க வேண்டும். மல்டி பிளக்ஸ் கட்டணம் ரூ.120  என்றால் மற்ற திரையரங்குகளில் இவை 100, 80,70 என்று வரும். சராசரியாக ரூ.100தான் அதிகாரப்பூர்வ கட்டணம் என்றால் அந்த எண்பது கோடியில் 20 கோடிதான் வரும். அதுவே நான்கந்து மடங்கு பணத்தை ரசிகர்கள் பிளாக்கில் தந்தால்தான் கபாலி 80 சியை கிராஸ் ப்ண்ணுவார்.

தாணு இந்தப் படத்தை வெளியிட அம்பானி அல்லது ஈராசுக்கு எவ்வளவு விற்கிறார், அவர்கள் விநியோகஸ்தர்களுக்கு எவ்வளவு விற்கிறார்கள், விநியோகஸ்தர்க்ள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களின் முதலீடு போக அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டால் நாம் முன்னர் சொன்ன அந்த 400 ரூபாய் இருமடங்காய் மாறும்.

இல்லை என்பவர்கள் சென்னையின் புறநகர் திரையரங்கு அல்லது தமிழக நகர அரங்கு ஒன்றில் அந்த மூன்று நாட்களும் சென்று ரசிகர்களிடம் விசாரியுங்கள்.  டிக்கெட்டுகளை வாங்கிப பாருங்கள். அதில் கட்டணமே இருக்காது. நெருப்பில்லாமல் புகையாது போல கருப்பில்லாமல் கபாலி கடைத்தேறாது!

இதுதாண்டா கபாலியின் கருப்பு வியாபாரம்!

இது போக நிறுவனங்கள் சில கபாலியின் விளம்பர புரவலர்களாக 40 கோடி ரூபாயை வழங்குகின்றன. ஏர் ஏசியா நிறுவனம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு ரசிகர்களை முதல் காட்சிக்கு சுமந்தவாறு பறக்கிறதாம். விமானத்தின் வெளியே ரஜினியின் உருவம் வரையப்பட்டு அதுவும் உலக விமான வரலாற்றிலையே முதல் முறையாம். ரைட்டு, ரைட் சகோதரர்கள் இருந்தால் அதே விமானத்திலிருந்து குதித்திருப்பார்கள். தமது கண்டுபிடிப்பு எத்தகைய அற்பத்தனங்களுக்கு பயன்படுகிறது என்று.

தினுசு தினுசாக மக்களை ஏமாற்றி டாப் அப் முதல் இணையம் வரை கட்டணம் வாங்கும் ஏர்டெல் நிறுவனம் கபாலி சிம்கார்டுகளை வெளியிடுகிறதாம். ஒரு படத்திற்கு கட்டணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஒரு படத்தை காட்டும் புகழ் பெற்ற பி.வி.ஆர் மல்டிபிளக்ஸ் நிறுவனமோ இந்தியா முழுவதும் மூன்று மொழிகளில் மிக அதிக காட்சிகளாக கபாலியை காட்டுகிறதாம். பாவம் அந்த தினங்களில் கபாலியின் நண்பர் மோடி தனது ஃபோட்டோக்களை எதிர்பார்த்து தினசரிகளை புரட்ட வேண்டியிருக்கும். இது போக கபாலி டிஜிட்டில் போஸ்டர்களை விற்கும் உரிமையையும் பி.வி.ஆர் பெற்றிருக்கிறதாம். காட்பாரிஸ் சாக்லெட் நிறுவனம் தனது 5 ஸ்டாரை சூப்பர்ஸ்டாரின் சாக்லெட்டாக சந்தைப்படுத்துமாம். அமோசான் நிறுவனம் கபாலி பொம்மை, சாவி, அருணாக் கயிறு போன்றவற்றை விற்குமாம். முத்தூட் நிதி நிறுவனமோ கபாலி ரஜினியின் உருவம் தாங்கிய தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிடுமாம். வி.எஸ் மருத்துவமனை நிறுவனமும் படத்தயாரிப்பாளரோடு ஒப்பந்தம் போட்டுள்ளதாம். அது என்ன எழவென்று தெரியவில்லை. ஆக மொத்தம் சிம்கார்டு முதல் ஆன்லைன் அண்டர்டேக்கர் புக்கிங் வரை அல்லாம் கபாலிமயம்!

ரஜினியை எப்படியாவது அரசியலுக்கு இழுத்து வந்து தமிழகத்தை கலக்க வேண்டுமென்ற பா.ஜ.கவின் வெறியை வைத்துப் பார்த்தால் காந்தி நோட்டில் கூட கபாலி குந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இரண்டாவதாக அரசியல்….

பாலி முன்னோட்டம், பாடலைக் கேட்டு நெருப்புடா, பருப்புடா என்று தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பில்லாத மலச்சிக்கல்காரர்கள் படுத்தி எடுக்கிறார்கள். மலேசியாவில் தோட்ட வேலைக்குச் சென்ற தமிழ் மக்களை அடிமையாக நடத்தும் ஆண்டைகளை டான் ஆக ரஜினி நாக் அவுட் செய்வதுதான் கதையாம். இதில் ஒடுக்கப்பட்டோர், ஆண்டை, அடிமை, புரட்சி, எல்லாம் இருப்பதால் முன்னாள் புரட்சியாளர்கள், புரட்சியிலிருந்து ஓய்வு பெற்றோர், சினிமா வழியாக புரட்சி வராதா என்று காத்துக் கொண்டிருக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள், அரசியலில் ஆண்டைகளிடம் சரண்டைந்து விட்டோம் – கலைத்துறையிலாவது ஹீரோ ஆக வாய்ப்பிருக்கிறதா என்று மனப்பால் குடிக்கும் தலித்தியவாதிகள் வரை பலரும் இயக்குநர் ரஞ்சித்தே வெட்கப்படும் வண்ணம் புரட்சி பொழிப்புரைகளை கொட்டி வருகிறார்கள்.

டப்பிங் நேரத்தில் ஒலிப்பதிவு அறையில் தன்னைத் தவிர எந்த இயக்குநரையும்  அனுமதிக்காத ரஜினி இம்முறை மணிரத்தினத்திற்கு அடுத்ததாக ரஞ்சித்தை அனுமதித்தார் என ரஞ்சித்தே கொஞ்சுகிறார் என்றால் கெலித்தது ஆண்டையா, அடிமையா?

மலேசியாவுக்கு செல்லும் சினிமா நட்சத்திரங்களை அழைத்து உபசரித்து காசு கொடுத்து, லொகேசன் காட்டி, பைனான்ஸ் செய்யும் பெருமக்கள்தான் தோட்ட முதலாளிகளின் அணிவரிசையில் உள்ளவர்கள். இன்னும் அங்கே தொழிலாளிகளா இருக்கும் உழைக்கும் மக்கள்தான் இத்தகைய மேன்மக்கள் செய்யும் படத்தை பார்க்கப் போகும் பார்வையாளர்கள். கத்தி படமோ கபாலி படமோ மக்களிடம் வளர்ந்து வரும் போராட்ட அரசியலை பணம் பண்ணுவதற்காக படம் பண்ணலாம். ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை கலையில் புரட்சி செய்வது சேர்ப்பது எல்லாம் ஒரு வணிக உத்தியாக என்றோ நிலைபெற்றுவிட்டது. அதனால்தான் நேரடியாக முதலாளிகள் நடத்தும் ஊடகங்கள், தொலைக்காட்சிகள் வரை தம்மை நடுநிலைமை என்று காட்டிக் கொள்வதன் காரணம் அது ஒரு வெற்றிகரமான பிசினஸ் என்பதால்தான்.

இது தெரியாமல் நெருப்பு, பருப்பு என்று சுய இன்பம் செய்பவர்கள் தங்களது வாழ்வில் புரட்சியோ, கிளர்ச்சியோ, பிரச்சாரமோ செய்ய வேண்டாம் என்று பாதுகாப்பாக முடிவு செய்து விட்டு அதை ஆன்லைனிலும், ஆர்ட்டிலும் செய்து பார்த்து விர்ச்சுவல் புரட்சியாளர்களாக காட்டிக் கொள்ளும் ரசனையாளர்கள்.

மெட்ராஸ் பட வெற்றிக்கு பிறகு தன்னார்வ நிறுவனங்கள் மூலம் தமிழகம் முழுவதும் அரங்க கூட்டங்களில் பேசிய இயக்குநர் ரஞ்சித், 90 களில் திருமாவளவன் மற்றும் வி.சி.க-வினர் பேசிய தலித்திய அரசியலை பேசினார். அதாவது “தலித்துக்கள் அரசியலில் என்ன செய்ய வேண்டும் என்று தலித்துக்களே பார்த்துக் கொள்வார்கள்” என்று பொங்கினார். அதைக் கேட்டால் இன்று திருமாவோ இல்லை தலித்தியத்தின் ஆதி பிரச்சாரகரான ரவிக்குமாரோ நாணத்துடன் சிரிப்பார்கள். கபாலி படத்திற்கு பிறகு ரஞ்சித்தே அப்படிப்பட்ட நாணச் சிரிப்பு சிரிப்பார். ஏனெனில் நாணயத்தை (சுயமரியாதை) விட நாணயம் (பணம்) பெரிதல்லவா!

பிறகு ரஜினி எனும் ஆண்டையை வைத்து, ஏர்டெல், அமோசான், பி.வி.ஆர், முத்தூட் போன்ற முதலாளிகளை வைத்து மலேசிய தொழிலாளிகளின் விடுதலையை பெற்றுத் தந்து அதையே 200 கோடி ரூபாயில் பிசினெஸ் செய்து, இன்னபிறவெல்லாம் பார்த்தால் அவர் வெட்கப்படாமல் வெடிக்கவா முடியும்?

நம்மைப் பொறுத்தவரை கபாலி எனும் பிசினஸ் தமிழக மக்களின் உழைப்பை பிளாக்கில் வாங்கி நடக்கும் குற்றம் என்கிறோம். இணையத்தில் கபாலி வெளியாகவே கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடும் கபாலி தயாரிப்புக் குழுவினர், அதே போல தமிழகமெங்கும் பிளாக்கில் விற்க கூடாது என்று முன்கூட்டியே வழக்கு போடுவார்களா?

ஆகவேதான் இந்த கபாலி நெருப்பு இல்லடா, கருப்புடா!

இந்தியாவில் மரண தண்டனை இன்னுமொரு மனுநீதி !

0

ந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்த ஒரு ஆய்வை டில்லி, தேசிய சட்டப் பல்கலைக் கழகம் நடத்தியிருக்கிறது. சாதி, மத ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இவர்களது பின்புலம் என்ன, கல்வித்தகுதி என்ன, நீதி மன்றத்தில் இவர்களது வழக்கு எப்படி நடத்தப்பட்டது, போலீசு இவர்களது வழக்கை எப்படி விசாரித்தது, அந்தக் கைதிகளுடைய சிறை வாழ்க்கை எப்படி இருக்கிறது – என்பன போன்ற பல்வேறு விசயங்களை இக்குழு ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. ஜுலை 2013-ல் தொடங்கி ஜனவரி 2015 வரையிலான காலத்தில் நாடு முழுவதும் உள்ள தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும் அவரது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து இந்த ஆய்வை நடத்தியிருக்கிறது இந்தக் குழு.

death-row-convicts-1இந்தியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் 385 பேரில் 61.6% பேர் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்கள். 23% பேர் பள்ளிக்கூட வாசலையே மிதிக்காதவர்கள். மொத்தத்தில் சுமார் 85% மரண தண்டனைக் கைதிகள் கல்வியறிவற்றவர்கள். 385 கைதிகளில் 241 பேர் இதற்குமுன் எந்தக் குற்றத்துக்காகவும் கைது செய்யப்பட்டவர்கள் அல்ல. இந்த கொலைக் குற்றம்தான் அவர்களது முதல் குற்றம். பதின் பருவத்தில் குற்றம் செய்தவர்களும் தூக்கு தண்டனைக் கைதிகளாக உள்ளனர். தமது வயதை நிரூபிப்பதற்கு பல கைதிகளுக்கு பிறப்புச் சான்றிதழே இல்லை.

கைதிகளில் ஆகப்பெரும்பான்மையினரது குடும்பத்தினருக்கு கைது செய்யப்பட்ட விவரமே சொல்லப்படவில்லை. “ஒரு கையெழுத்து போட்டு விட்டு போய்விடலாம் என்று சொல்லி போலீசு கூப்பிட்டது. தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை விட்டு விட்டு வந்தேன். அப்புறம் நான் வீட்டையே பார்க்கவில்லை” என்று குழுவிடம் கதறி அழுதிருக்கிறார், அகிரா என்ற பெண். பெரும்பாலான கைதிகளின் கதை இப்படித்தான் இருக்கிறது என்று சொல்கிறது குழு.

death-row-convicts-caption-1போலீஸ் தங்களை சித்திரவதை செய்து வெள்ளைத்தாளில் கையெழுத்து வாங்கிக் கொண்டது என்றும், சோடிக்கப்பட்ட சாட்சிகள், தடயங்களின் அடிப்படையில்தான் தாங்கள் தண்டிக்கப்பட்டிருப்பதாகவும் 82.6% கைதிகள் கூறியதாக இக்குழு குறிப்பிடுகிறது. ஒவ்வொரு கைதியும் தாங்கள் எத்தனை நாள் என்னென்ன வகையில் சித்திரவதை செய்யப்பட்டோம் என்று விவரித்திருக்கின்றனர்.

கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தப்படும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் ஒரு வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என்பது உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கின்ற அடிப்படை உரிமை. ஆனால், தாங்கள் விசாரித்த வகையில் 169 பேருக்கு வழக்கறிஞர் இல்லை. போலீஸ் விசாரணைக்கு இடையில் வழக்கறிஞரைப் பார்க்கும் உரிமை 97% பேருக்கு வழங்கப்படவில்லை. எனவே, சித்திரவதைக்கு உள்ளானவர்கள் அதை வெளியில் சொல்வதற்கான வாய்ப்பு கூட இல்லை.

தனக்காக வாதாடிய வழக்கறிஞரை நீதிமன்ற அறைக்கு வெளியே சந்தித்ததே இல்லை என்று 76.7% கைதிகள் கூறியிருக்கின்றனர். சுமார் 75% கைதிகள் விசாரணை நடைபெற்ற நாட்கள் பெரும்பாலானவற்றில் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு கொண்டுவரப்படவே இல்லை. வழக்கின் விசாரணையில் என்ன நடக்கிறது என்பதே தங்களுக்குப் புரியவில்லை என்றும் நீதிபதியும் வக்கீல்களும் தங்களுக்குள் பேசிக்கொள்வதை தூரத்திலிருந்து பார்க்க மட்டுமே தங்களால் முடிந்தது என்றும் பல கைதிகள் கூறியிருக்கின்றனர்.

death-row-convicts-reportஅரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கூறியிருந்த போதிலும், விசாரணை நீதிமன்றங்கள் கடந்த 15 ஆண்டுகளில் 1500 மரண தண்டனைகளை வழங்கியிருக்கின்றன. சித்திரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலம் என்பதில் தொடங்கி பலவிதமான முறைகேடுகள் நிரம்பிய போலீசின் விசாரணையை அப்படியே அங்கீகரித்துத்தான் இத்தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 95% மரண தண்டனை தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. அரிதினும் அரிதான என்று சொல்லிக் கொண்டாலும், நடைமுறையில் அது பின்பற்றப்படுவதில்லை.

நீதிமன்றம் குறிப்பாக உத்தரவிடாத வரையில் மரண தண்டனைக் கைதிகளை தனிமைச் சிறையில் வைக்க கூடாது என்பது சட்டம். இருந்த போதிலும் இந்தக் கைதிகள் தனிமைச் சிறையில்தான் வைக்கப்படுகிறார்கள். உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ரத்து செய்யும் வரை இந்த தண்டனையை அவர்கள் அனுபவிக்கிறார்கள்.

இறுதியாக, இந்தக் குழு கூறியிருக்கும் முக்கியமான விவரம் என்ன தெரியுமா? தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருப்பவர்களில் 76% பேர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முஸ்லிம்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். 74.1% பேர் மிகவும் ஏழைகள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்களில் 94% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் இசுலாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆகியோரை எடுத்துக் கொண்டால் அவர்களில் 94% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் – என்று கூறுகிறது இந்த அறிக்கை.

000

death-row-convicts-caption-2“மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு கொடிய குற்றத்தை செய்தவர்கள் என்ன சாதியாக இருந்தாலென்ன, என்ன மதமாக இருந்தாலென்ன, ஏழையாக இருந்தாலென்ன, பணக்காரனாக இருந்தாலென்ன, இதெல்லாம் கூடவா சாதி, மத பேதம் பார்ப்பது?” என்று சிலர் இதைக் கேட்டவுடன் கொதித்தெழுவார்கள். அந்த சிலரில் பலர், பாரதிய ஜனதாக் கட்சியினராகவோ, அல்லது கட்சியில் இல்லாத போதிலும், இயல்பாகவே அத்தகைய கண்ணோட்டத்தை கொண்டிருக்கும் சமூகத்தின் மேல்தட்டுப் பிரிவினராகவோ இருப்பார்கள்.

தூக்கு தண்டனைக் கைதிகள் அனைவரும் குற்றமே செய்யாதவர்கள் என்பது நமது வாதமல்ல. அவர்கள் இத்தகைய குற்றங்களை இழைப்பதற்கான அரசியல், சமூகச் சூழலில் இருத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதுடன், பலர் பொய்வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும், சட்ட ரீதியாகத் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில்தான் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் அறிக்கையிலுள்ள விவரங்கள் காட்டுகின்றன.

கேள்வியை இப்படி திருப்பிப் போடுவோம். பார்ப்பன – ‘உயர்’ சாதியினரும் மேட்டுக்குடி வர்க்கத்தினரும் தூக்கு தண்டனையில் சிக்காமலிருப்பது ஏன்? ஏனென்றால், அவர்கள் தமது சொந்தக் கைகளால் கொலை முதலான ‘கொடுஞ்செயல்களை’ செய்வதில்லை. போலீசுக்கோ கூலிப்படையினருக்கோ அத்தகைய பணிகளை ‘அவுட் சோர்ஸ்’ செய்து விட்டு, வெள்ளைக் காலர் குற்றங்களை மட்டும் தமக்கென ஒதுக்கிக் கொள்கிறார்கள்.

தூக்கு தண்டனைக் குற்றவாளிகளுடைய குற்றச் செயல்களுக்கு அவர்களுடைய கல்வியறிவின்மை ஒரு காரணமாக இருக்கிறது என்றால், வெள்ளைக் காலர் குற்றவாளிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு குற்றமிழைப்பதற்கு கல்வியறிவு முக்கியக் கருவியாகப் பயன்படுகிறது. ‘கீழ்சாதி’ கொலைக் குற்றவாளிகளைப் போல உணர்ச்சி வயப்பட்டு இவர்கள் குற்றமிழைப்பதில்லை. அறிவுபூர்வமாகவும் நிதானமாகவும் குற்றங்களைத் திட்டமிடுகிறார்கள்.

death-row-convicts-2ஒரு வீட்டைக் கொள்ளையடிப்பது, ஒரு நபரை அல்லது குடும்பத்தைக் கொலை செய்வது என சிறிய இலக்குகளை இவர்கள் வைத்துக் கொள்வதில்லை. சீட்டுக் கம்பெனி மோசடி முதல் பங்குச் சந்தை மோசடி, ஆன் லைன் டிரேடிங் முதலான கலர் கலரான குற்றங்கள் மூலம் கோடிக்கணக்கானோரைக் கொள்ளையடித்து தற்கொலைக்குத் தள்ளுகிறார்கள்.

இவர்களைத் ‘தனிப்பட்ட’ ஆதாயத்துக்காக கொலை செய்யும் குற்றவாளிகளாகச் சட்டம் கருதுவதில்லை. அம்பானி, அதானி, எஸ்ஸார், டாடா போன்றவர்கள் தனிநபர்கள் அல்ல. அவர்கள் கார்ப்பரேட் கம்பெனிகளின் தலைவர்கள். கம்பெனி என்ற ‘பொது’ நிறுவனத்தை தனிநபராக கருத முடியாது என்பதால், அவர்களது செயல்கள் தனிநபர்களின் கிரிமினல் குற்றங்களாக கருதப்படுவதில்லை. மாறாக, இலாபமீட்டுதல் என்ற நியாயமான நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளாகவே சட்டத்தால் பார்க்கப்படுகின்றன. அதனால்தான் ஆயிரக்கணக்கான பேரைத் தற்கொலைக்குத் தள்ளும் நில ஆக்கிரமிப்பு முதல் சீட்டுக் கம்பெனி மோசடி வரையிலான குற்றங்களை ஆயுள் தண்டனை, மரண தண்டனை போன்ற கடும் தண்டனைக்குரிய குற்றங்களாக சட்டம் கருதுவதில்லை.

வேறு வார்த்தைகளில் சொல்வதாயின், சமூகத்துக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தினால் அங்கீகரிக்கப்படுகின்றன. அங்கீகரிக்கப்படாத நிலையிலும் மென்மையாகவே தண்டிக்கப்படுகின்றன. கொலை, கொள்ளை, வல்லுறவு போன்ற குற்றங்களைத் தூண்டுகின்ற விளம்பரங்கள், ஊடக காட்சிகள், சாதி மதவெறிப் பிரச்சாரங்கள் போன்றவை தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, கொலை, கொள்ளை, வல்லுறவு போன்ற குற்றங்களை இழைக்கின்ற தனி நபர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அதிலும்கூட உழைக்கும் வர்க்கத்தினர், ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் சிறுபான்மை மதத்தினர் ஒரு தலைப்பட்சமாக தண்டிக்கப்படுகிறார்கள்.

நேரடி சாட்சியங்களே இல்லாத வழக்கில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். குல்பர்க் சொசைட்டி படுகொலையின் சூத்திரதாரிகள் முதல் மேலவளவு கொலைகாரர்கள் வரை யாருக்கும் மரண தண்டனை விதிக்கப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமமல்ல என்பதை இவை காட்டுகின்றன. தனிநபர் குற்றங்கள் தண்டிக்கப்படுவதும், சமூக குற்றங்கள் அங்கீகரிக்கப்படுவதும், சட்டமே சமமாக இல்லை என்பதை விளக்குகின்றன. சட்டம் சமமாக இருக்க முடியும் என்று கருதுவது ஏமாளித்தனம் என்பதைத்தான் மரண தண்டனைக் குற்றவாளிகள் குறித்த இந்த ஆய்வு தெளிவு படுத்துகிறது.

– மணி
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !

0

மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா என பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்து அவிழ்த்துவிட்டிருக்கும் திட்டங்களைக் கேள்விப்பட்டுள்ள நமக்கெல்லாம், அவரின் கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் “மிஷன்-2016” என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவது அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முன்னவற்றைப் போல இந்த நடவடிக்கை குறித்து பா.ஜ.க. அரசும் பெரிய அளவில் தம்பட்டம் அடித்துக் கொள்வதுமில்லை. காரணம், இதுவொரு போலீசு நடவடிக்கை; சொந்த நாட்டு மக்கள் மீது ஏவப்பட்டுள்ள போர் நடவடிக்கை.

“சத்தீஸ்கர் மாநிலத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாட்டிற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள மாவோயிஸ்டுகளையும், அவர்களுக்கு ஆதரவான பழங்குடியினரையும் 2016-ஆம் ஆண்டின் இறுதிக்குள் மாநிலத்தை விட்டே விரட்டியடிப்பது அல்லது அழித்தொழிப்பதுதான் மிஷன் 2016-இன் நோக்கம்” என பஸ்தார் போலீஸ் ஐ.ஜி. கல்லூரி அறிவித்திருக்கிறார்.

மோடியின் காட்டு வேட்டை
அரசுப் படையினரால் கும்பல் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட பெத்தகேலூர் கிராமத்தைச் சேர்ந்த பதின்வயது சிறுமி (இடது – முகம் மறைக்கப்பட்டுள்ளது). அருகில் அரசுப் படையினரால் தாக்கப்பட்ட சிறுமியின் அத்தை

இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக சி.ஆர்.பி.எப். துணை இராணுவப் படை, சத்தீஸ்கர் மாநிலப் போலீசு மட்டுமின்றி, ஜன் ஜாக்ரான் அபியான், சமாஜிக் ஏக்தா மன்ச், விகாஸ் சங்கர்ஷ் சமிதி, நாக்ரிக் ஏக்தா மன்ச் என்ற பெயர்களில் இயங்கிவரும் குண்டர் படைகளும் இறக்கிவிடப்பட்டு, பழங்குடியின மக்கள் வசித்து வரும் பகுதி முழுவதும் அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதற்கு அப்பால், பழங்குடியின மக்கள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தவும் தயாராகி வருகிறது, பா.ஜ.க. அரசு.

கனிம வளங்களும் பழங்குடியின மக்களும் நிறைந்திருக்கும் சத்தீஸ்கர், ஜார்கண்டு மாநிலங்களில் கடந்த பத்தாண்டுகளாகவே ஒரு உள்நாட்டுப் போரை அறிவித்து நடத்திவருகிறது, மைய அரசு. முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு இந்த மாநிலங்களின் வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மாவோயிச பயங்கரவாதம் தடையாக இருப்பதாகக் கூறி, காட்டு வேட்டை என்ற பெயரில் அம்மாநில பழங்குடியின மக்கள் மீது போர் தொடுத்தது. அச்சமயத்தில் சல்வா ஜுடும் என்ற சட்டவிரோத குண்டர் படை உருவாக்கப்பட்டு, முதுகுத்தண்டை சில்லிடச் செய்யும் அடக்குமுறைகள் பழங்குடியின மக்கள் மீது ஏவப்பட்டன.

அக்காட்டு வேட்டை நடவடிக்கையின்போது பல்லாயிரக்கணக்கான பழங்குடியினர் தங்களது கிராமங்களிலிருந்து விரட்டப்பட்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர். சிறை, சித்திரவதை, பாலியல் வல்லுறவு, போலி மோதல் கொலைகள் என நடந்த அரசு பயங்கரவாத அட்டூழியங்களைத் தட்டிக் கேட்ட, அம்பலப்படுத்திய அறிவுத்துறையினர் மாவோயிஸ்டுகளின் அனுதாபிகளாக முத்திரை குத்தப்பட்டனர்.

புகழ்பெற்ற குழந்தை மருத்துவரும் பி.யு.சி.எல். என்ற மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவருமான பினாயக் சென் தேசத் துரோக வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். காந்தியவாதியான ஹிமான்ஸு குமாரின் ஆசிரமம் இடித்துத் தள்ளப்பட்டது. இதன் மூலம் காட்டு வேட்டைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களை அடக்கிவிட முடியும் என எதிர்பார்த்த மன்மோகன் சிங் அரசு மேலும் மேலும் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுப் போனது.

காட்டுவேட்டைக்கு எதிராக நாடெங்கும் பரவலாக எழுந்து எதிர்ப்பின் காரணமாக, சல்வா ஜுடும் அமைப்பைக் கலைக்குமாறு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம். தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட பினாயக் சென் விடுதலை செய்யப்பட்டார்.

சோனி சோரி
முகத்தில் இரசாயனக் கலவை ஊற்றப்பட்ட நிலையில் சோனிசோரி.(கோப்புப்படம்)

மன்மோகன் சிங் அரசு காட்டுவேட்டையிலிருந்து சற்றுப் பின் வாங்கியதை, கனிம வளங்களைக் கொள்ளையிடக் காத்திருத்த பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய தரகு முதலாளிகளும் ஏற்றுக் கொள்ள மறுத்தனர். அக்கும்பல், காங்கிரசு அரசு செய்யத் தவறியதை, செய்து முடிக்காமல் பாதியில் நிறுத்தியதைச் செய்து முடிப்பதற்காகவே மோடியை பிரதமர் பதவியில் அமர்த்தியது.

காங்கிரசு அரசு நடத்திய காட்டு வேட்டையை, மோடியும் பா.ஜ.க. அரசும் மிஷன் 2016 என்ற பெயரில் தொடர்ந்தும், முன்னைக் காட்டிலும் தீவிரமாகவும் நடத்தத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, உச்சநீதி மன்றத்தால் தடை செய்யப்பட்ட சல்வா ஜுடும், இப்பொழுது, ஜன் ஜாக்ரான் அபியான், சமாஜிக் ஏக்தா மன்ச், விகாஸ் சங்கர்ஷ் சமிதி, நாக்ரிக் ஏக்தா மன்ச் என்ற பெயர்களில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. மேலும், சட்டீஸ்கர் மாநில அரசு “துணைப் படைகள் சட்டம்” என்றொரு கருப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, அதன் மூலம் மாவட்ட ரிசர்வ் படை என்ற அரசு பயங்கரவாத அமைப்பை உருவாக்கி, அதில் சல்வா ஜுடும் அமைப்பில் செயல்பட்டு வந்த குண்டர்களைச் சேர்த்து, அவர்களைச் சட்டபூர்வ போலீசாக்கிவிட்டது. மக்கள் விரோத, சட்டவிரோத அமைப்பாக அம்பலப்பட்டுப் போன சல்வா ஜுடுமை, மோடி கும்பல் சட்டபூர்வமாக்கிவிட்டது.

மிஷன்-2016 தொடங்கப்பட்ட நான்கே மாதங்களில் 70 போலி மோதல் கொலைகள் பஸ்தரில் நடந்துள்ளன. பெக்தபள்ளி, சின்ன கேலூர், பெத்த கேலூர், கண்டேம், பர்கிச் செரு, நேந்த்ரா, பெத்த பாரா, மான்ஹெம் ஆகிய கிராமங்கள் தாக்கப்பட்டு, பழங்குடியின மக்களின் அற்ப உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டு, அவர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன.

இந்த அட்டூழிங்களை அம்பலப்படுத்திப் போராடி வரும் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஆசிரியரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரான சோனி சோரியின் முகத்தில் அபாயகரமான இரசாயனக் கலவை வீசப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இவர் மட்டுமின்றி, ஜக்தல்பூர் பகுதியில் இயங்கிவரும் “ஜக்லக்” என்ற பெண் வழக்கறிஞர் குழு, போலீசின் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண்களுக்காக 40-க்கும் மேற்பட்ட வழக்குகளை நடத்திவருகிறது. இதனால், இக்குழுவைச் சேர்ந்த வழக்குரைஞர்களை சட்டீஸ்கர் மாநிலத்தை விட்டே வெளியேறிமாறு போலீசே நிர்பந்தம் கொடுத்துவருகிறது.

மேலும், பத்திரிக்கையாளர்கள் மாலினி சுப்ரமணியம், பேலா பாட்டியா ஆகியோர் அச்சுறுத்தப்பட்டு, அந்த மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மனித உரிமை செயல்பாட்டாளரும் மருத்துவருமான சாய்பால் ஜனா, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பழங்குடியின மக்கள், மாவோயிஸ்டுகள், ஜனநாயக மற்றும் மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்புகளை அரசு பயங்கரவாதத்தை ஏவி நசுக்குவதன் மூலம் பிர்லா, ஜின்டால், வேதாந்தா, அதானி, ஜி.எம்.ஆர். உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய தரகு முதலாளிகளும் சட்டீஸ்கர் மாநிலத்தின் கனிம வளங்களைத் தடையின்றிக் கொள்ளையடிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது, மோடி-ராமன் சிங் கும்பல்.

குறிப்பாக, “ஹஸ்தியோ அரந்த்” வனப்பகுதியில், அதானியின் நிறுவனத்திற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் இயங்குவதற்குத் தடையாக இருக்கும் சட்டங்களை ரத்து செய்யும் நோக்கில், அவ்வனப்பகுதி மீது பழங்குடியினருக்கு எவ்வித உரிமையும் கிடையாது; அங்கு சுரங்கம் தொடங்க கிராம சபையின் அனுமதி தேவையில்லை என்று கடந்த ஜனவரி 8 அன்று ஒரு அரசாணையை சட்டீஸ்கர் பா.ஜ.க. அரசு வெளியிட்டிருக்கிறது. பல லட்சம் கோடி ருபாய் மதிப்புள்ள தங்கச் சுரங்கம் வெறும் 12 சதவீத ராயல்டிக்கு வேதாந்தா நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

பஸ்தார் பகுதியில் புதைந்து கிடக்கும் கனிம வளங்களைக் கொள்ளையிடத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்துப் பழங்குடியின மக்கள் போராடுகிறார்கள் என்றால், தஞ்சை பகுதி விவசாயிகள் தமது நிலங்களைப் பாதுகாத்துக் கொள்ள மீத்தேன் திட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். எனவே, இன்று பஸ்தார் பகுதி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் காட்டுவேட்டை, மிஷன் -2016 நடவடிக்கைகள், நாளை தஞ்சை பகுதி விவசாயிகளை நோக்கியும் திரும்பக் கூடும். பஸ்தாரும் தஞ்சையும் தூரப் பிரதேசங்களல்ல, பஸ்தார் பழங்குடியின மக்களும் தஞ்சை விவசாயிகளும் வேறு வேறானவர்கள் அல்ல என்பதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

– அழகு
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

வழக்கறிஞர் போராட்டத்திற்கு தோள் கொடுக்கும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் !

1

ந்தியாவில் எங்கும் இல்லாத கருப்புச் சட்டம் தமிழகத்தில் மட்டும் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற தலைமை (அ)நீதிபதியாக பணியாற்றிவரும் எஸ்.கே கவுல் என்பவர் வழக்கறிஞர்கள் சட்டம் 1961 பிரிவு 34(1)-ல் வழக்கறிஞர்களுக்கு எதிராக புதிய சட்டத்திருத்தத்தை இயற்றியுள்ளார்.

trichy-rsyf-solidarity-with-lawyers-01வழக்கறிஞர்கள் கோரிக்கைக்காக நீதிமன்ற வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டம் நடத்தினால், நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சித்தால், நீதிமன்றத்திற்குள் உரத்த குரலில் வாதிட்டால், கையை நீட்டி நீதிபதிகளிடம் பேசினால் இந்த புதிய விதிகளின்படி எவ்வித கேள்வியும் இன்றி, வழக்கறிஞர்கள் தொழில் செய்ய நீதிபதிகளே நேரடியாக தடை விதிக்கலாம் என்பது இச்சட்டமாகும்.

இச்சட்டம் வருவதற்கு முன்பு, வழக்கறிஞர்கள் நீதிமன்ற அவமதிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அம்மாநிலத்தில் உள்ள பார் கவுன்சிலே அதனை விசாரித்து நடவடிக்கை எடுக்கும். ஆனால் தற்பொழுது, பார் கவுன்சிலிடம் அதிகாரத்தை பறித்து, வழக்கறிஞர்களை நீதிபதிகளின் கொத்தடிமைகளாக மாற்றுவதற்கே இந்த புதிய சட்ட விதிகளை எஸ்.கே கவுல் இயற்றிள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, உயர்நீதிமன்ற ஊழல் நீதிபதிகளின் பட்டியலை வெளியிட்டு, அம்பலப்படுத்தி போராடியதற்காக வழக்கறிஞர்கள் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். போராடிய மக்கள் மீது வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராடிய வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் பெண் வழக்கறிஞரை வீடியோ எடுத்ததை கண்டித்து போராடிய வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழி இருக்க வேண்டும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற பல போராட்டங்களை நடத்தியதன் காரணமாக இதுநாள் வரையிலும் தமிழகத்தில் 43 வழக்கறிஞர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அது தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும், கர்நாடகாவிலும் நடந்து வருகின்றன.

trichy-rsyf-solidarity-with-lawyers-15இவ்வாறு நீதித்துறையையும், அதிகார வர்க்கத்தையும் கேள்விக்குள்ளாக்கும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவே இந்த கருப்புச் சட்டத்தை எஸ்.கே கவுல் இயற்றியுள்ளார்.

இந்த கருப்புச் சட்டத்தை எதிர்த்து, இச்சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழக வழக்கறிஞர்கள் அனைவரும் கடந்த ஒரு மாத காலமாக நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம், இரயில் மறியல் போராட்டம், நகல் எரிப்புப் போராட்டம் ஆகியவற்றை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக 12-07-2016 அன்று காலை 11 மணி அளவில் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் ஆகிய புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் இச்சட்டம் எதிர்கால வழக்கறிஞர்களான சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாலும், வழக்கறிஞர்களின் இப்போராட்டத்தை ஆதரித்து திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தலைமையில் பேரணியாக வந்து இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். பு.மா.இ.மு சட்டக்கல்லூரி கிளை தோழர்களும், சக மாணவர்களும் ஒவ்வொரு வகுப்பாக சென்று இச்சட்டத்தின் பாதிப்பை விளக்கி வகுப்புகளை புறக்கணித்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறைகூவினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பருவத் தேர்வு முடிந்து கல்லூரியை திறந்த இரண்டாவது நாளில் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மாணவர்கள் வெளியில் வந்தனர். வெளியில் வந்த மாணவர்களிடம், “இந்த கருப்புச் சட்டம் அமலுக்கு வந்தால் வழக்கறிஞர் தொழிலை நாம் சுதந்திரமாக செய்ய முடியாது. நமது கருத்துரிமை பறிபோகும். வழக்கறிஞர்கள் நீதிபதிகளின் நிரந்தர கொத்தடிமைகளாக மாற்றப்படுவார்கள். மேலும் இச்சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாகவும் உள்ளது. இது நமது பிரச்சனை. நமது வாழ்வாதார பிரச்சனை. ஆகையால் இதற்கு நாம் தான் போராட வேண்டும்” என்று பு.மா.இ.மு சட்டக் கல்லூரி கிளை அமைப்பாளர் வசந்த் மாணவர்களிடம் விளக்கிப் பேசி இப்பேரணி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

பின்னர் வழக்கம் போல் காவல் துறையினர் கல்லூரியை சூழ்ந்து கொண்டு பேரணியாக சென்ற மாணவர்களிடம், “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டனர். அதற்கு மாணவர்கள், “வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்திற்கு செல்கிறோம்” என்று கூறினர். “கல்லூரியில் இருந்து அவ்வளவு தூரம் நடந்து செல்ல வேண்டாம், உங்களுக்கு நாங்கள் வாகனங்களை ஏற்பாடு செய்து தருகிறோம். அதில் சென்று மனித சங்கிலி போராட்டத்திற்கு கலந்து கொள்ளுங்கள்” என்று மாணவர்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல் நைச்சியமாக பேசி, மாணவர்களின் பேரணியை மக்கள் மத்தியில் பிரச்சாரம் ஆகிவிடாமல் தடுக்க முயற்ச்சித்தனர்.

அதற்கு ஒரு மாணவர் “பேரணியாக சென்றால் தான் எங்களது போராட்டம் மக்களுக்கு தெரியும்” என்று கூறி காவல்துறையின் நரித்தனத்தை அம்பலப்படுத்தும் வகையில் பதில் கூறினார். பின்னர் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள், விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக சென்று, வழக்கறிஞர்களின் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டும், நீதிமன்றத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

“நீதிபதிகள் மன்னர்களும் அல்ல!
வழக்கறிஞர்கள் அடிமைகளும் அல்ல!!”

என்று மாணவர்கள் கோசங்களை எழுப்பியது, பொது மக்களை வியந்து பார்க்க செய்தது. பின்னர் பேரணியாக வரும் வழியில் பொது மக்கள் அனைவரிடத்திலும் பிரசுரங்களை விநியோகித்தும், இப்போராட்டத்திற்கு பொது மக்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்று கூறினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாணவர்களின் பேரணி நீதிமன்றத்திற்கு வந்த பிறகு நீதிமன்ற வாசலில்

வாபஸ் வாங்கு வாபஸ் வாங்கு!
கருப்புச் சட்டத்தை வாபஸ் வாங்கு!

வெளியேறு வெளியேறு!,
நீதிபதி கவுலே,
தமிழகத்தை விட்டு வெளியேறு!

வெல்லட்டும்… வெல்லட்டும்!
வழக்கறிஞர் போராட்டம்
வெல்லட்டும்… வெல்லட்டும்!

துணை நிற்போம்… துணை நிற்போம்!
வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக
தோளோடு… தோளாக..
துணை நிற்போம்… துணை நிற்போம்!

என்ற விண்ணதிரும் முழக்கங்களுடன் 15 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

trichy-rsyf-solidarity-with-lawyers-16பின்னர் பு.மா.இ.மு சட்டக் கல்லூரி கிளை அமைப்பாளர் வசந்த், “இந்த கருப்புச் சட்டத்தை வாபஸ் வாங்கும் வரை சட்டக் கல்லூரி மாணவர்கள் இறுதி வரை வழக்கறிஞர்களுக்கு துணை நிற்போம்” என்றும், “தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்களும் இப்போராட்டத்தை நடத்த வேண்டும்” என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பேரணியாக வந்த மாணவர்களுக்கு திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் பாக்கெட்டுகளும், மதிய உணவும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இறுதி நிகழ்ச்சியாக, மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு தந்து கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
திருச்சி.
99431-76246.

போலி கம்யூனிஸ்டுகளின் தேர்தல் தோல்வி : கழுதை கட்டெறும்பானது !

5

சட்டமன்றத் தேர்தல்களில்போலி கம்யூனிஸ்டுகளின் தோல்வி: கட்டெறும்பானது கழுதை!

மிழகத்தில் மூன்றாவதுஅணி என்ற பெயரில் அழைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி மற்றும் விஜயகாந்த் கட்சி, வாசன் கட்சி ஆகியன இணைந்த கூட்டணியானது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவமானகரமான முறையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி கம்யூனிஸ்டுகள் இத்தேர்தலில் வெறும் 0.8 சதவீத வாக்குகளைப் பெற்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டார்கள். வாழ்ந்து கெட்ட குடும்பத்தைப் பார்த்து அனுதாபப்படுவதைப் போல போலி கம்யூனிஸ்டுகளின் இந்தக் கேவலமான தேர்தல் தோல்வியையும் மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்து போயுள்ளதையும் கண்டு முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் உள்ளிட்டு பலரும் பரிதாபப்பட்டு அங்கலாய்ப்பதோடு, ஆலோசனைகளையும் கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

cpi-cpm-kickedஆனால் போலி கம்யூனிஸ்டுகளோ, தே.மு.தி.க.- மக்கள்நலக் கூட்டணியின் செயல்திட்டங்களை மக்களிடையே கொண்டுசெல்ல போதுமான அவகாசம் இல்லாததால்தான், தமிழக சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்குத் தோல்வி ஏற்பட்டது என்று நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று சாடுவதைத் தவிர, தமிழக மக்கள் தமக்கும் தமது கூட்டணிக்கும் ஏன் வாக்களிக்க வேண்டுமென்பதற்கான மாற்றுத் திட்டத்தை இப்போலி கம்யூனிஸ்டுகளால் முன்வைக்க முடியவில்லை. எங்களது கூட்டணித் தலைவர்கள் மீது எவ்வித ஊழல் குற்றச் சாட்டுகளும் இல்லை என்று கூறுவதுதான் மாற்று அணிக்கான தகுதியா? இது ஒரு தகுதி என்றால் ஆட்சிக்கு வராதவர்கள் எல்லோருமே ஊழலற்றவர்கள்தான்.

தேர்தல் ஆணையம் என்பது ஜெ. கும்பலின் எடுபிடி என்று நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இதர எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தபோது, ஜெ.யின் நிரந்தர விசுவாசியான தா.பாண்டியனின் வலது கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயகத்தைக் காப்பது என்ற பெயரால் அங்கே போட்டியிட்டது. இப்போது நாங்கள்தான் உண்மையான மாற்று என்றால், அதை மக்கள் நம்புவார்களா? இத்தனை காலமும் தி.மு.க.- அ.தி.மு.க. என்று மாறிமாறி கூட்டணி வைத்துவிட்டு, இரண்டு பேருமே ஊழல் கட்சிகள் என்று இப்போதுதான் கண்டுபிடித்ததைப் போல போலி கம்யூனிஸ்டுகள் சொன்னால், அதைப் பார்த்து மக்கள் சிரிக்க மாட்டார்களா? எல்லாவற்றுக்கும் மேலாக, வலது கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தளி ராமச்சந்திரனை வேட்பாளராக நிறுத்திவிட்டு ஊழலை ஒழிக்கப் போகிறோம் என்றால், அதை மக்கள் நம்புவார்களா?

தமிழகத் தேர்தலில் கண்டெய்னர் விவகாரம் சந்தி சிரித்தபோது சி.பி.எம். கட்சி வாயே திறக்கவில்லை. கோடிக்கணக்கான ரொக்கப் பணத்துடன் ஒரு கண்டெய்னர் வெளியில் போகும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பற்றிய விவரங்களைக்கூட சி.பி.எம். கட்சியின் வங்கி ஊழியர் சங்கம் மக்களிடம் முன்வைக்கவில்லை. அதற்கு முன்னதாக சிறுதாவூர் கண்டெய்னர் விவகாரம் அம்பலமானபோது, “சிறுதாவூர் பங்களாவில் ஜெயலலிதா பணம் பதுக்கி வைத்திருப்பதாகக் கூறுபவர்கள், அதைப் பறிமுதல் செய்து தேர்தல் ஆணையத்திடம் கொடுக்க வேண்டியதுதானே! அப்படி அவர்கள் 5 கோடி பிடித்தார்கள் என்றால், அதில் ஒரு கோடியை கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நன்கொடையாகக் கொடுத்துவிட்டு ரசீது பெற்றுச் செல்லட்டும்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் அளவுக்கு வலது கம்யூனிஸ்டுத் தலைவர் தா.பாண்டியனின் ஜெ. விசுவாசம் கரைபுரண்டது. அதனால்தான் தனது பதவியேற்பு விழாவில் அவருக்கு முன்வரிசையில் அம்மா இடம் ஒதுக்கினார். இப்படிப்பட்ட பேர்வழிகளைத் தலைவர்களாகக் கொண்ட போலி கம்யூனிஸ்டுகள் தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் எதைச் சாதிக்கப் போகிறார்கள்?

cpi-cpm-mile-stonesதமிழகம் மட்டுமல்ல, 34 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ‘இடதுசாரி’களின் கோட்டையாகச் சித்தரிக்கப்பட்ட மே.வங்கத்தில் 2011-இல் 62 இடங்களைப் பெற்ற போலி கம்யூனிஸ்டு கூட்டணி, இம்முறை 32 இடங்களை மட்டுமே பெற்று மீளமுடியாத தோல்வியைச் சந்தித்துள்ளது. இக்கூட்டணியின் வாக்கு சதவீதம் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் 24 சதவீதமாகத் தேய்ந்து விட்டது. இன்று மே.வங்கத்தில் 44 இடங்களைப் பெற்று பிரதான எதிர்கட்சியாக காங்கிரசு மாறிவிட்டது. போலி கம்யூனிஸ்டுகளோ மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

மே.வங்கத்தில் கடந்த ஐந்தாண்டுகளாக திரிணாமுல் காங்கிரசு குண்டர்கள் 200-க்கும் மேற்பட்ட இடதுசாரி கட்சிகளின் ஊழியர்களைப் படுகொலை செய்துள்ளார்கள் என்று கூறுகிறார்கள் சி.பி.எம். தலைவர்கள். எனில், இத்தனை ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதைக் கண்டு மக்கள் அனுதாபப்பட்டு வாக்களித்திருக்க வேண்டுமே! ஆனால், முந்தைய தேர்தலைவிட இடதுசாரி கூட்டணிக்கு மேலும் வாக்குகள் சரிந்துகொண்டே போகிறதே! எந்தப் பெரிய கட்சியும் தேர்தல் கூட்டணி கட்ட முன்வராமல், தமிழகத்தில் ஒரு உதிரிக்கட்சி நிலைக்குத் தரம் தாழ்ந்து போய்விட்டதே! கேரளா, மே.வங்கம், திரிபுரா தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் தேர்தலில் தனித்து நின்று சொந்த செல்வாக்கில் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியாத நிலைக்கு அக்கட்சி வீழ்ச்சியடையக் காரணம் என்ன?

இந்தியாவில் சமூக மாற்றத்தை ஏற்படுத்த சொந்தக் காலில் நின்று மக்களைத் திரட்டி ஒரு புரட்சியைச் சாதிக்கும் நோக்கத்தில் இப்போலி கம்யூனிஸ்டுகள் ஒருக்காலும் கட்சியைக் கட்டவேயில்லை. கம்யூனிசத்தின் அடிப்படைகளை முற்றாகக் கைகழுவிவிட்டு, நிலவுகின்ற அரசியலமைப்பு முறையைக் கட்டிக்காத்து, இன்னுமொரு ஓட்டுக் கட்சியாக செயல்படும் வகையில்தான் போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் திட்டமும் நடைமுறையும் இருந்து வருகிறது. எங்களது பாதை ரஷ்யப் பாதையுமல்ல, சீனப் பாதையுமல்ல; இது இந்தியப் பாதை என்றும், நமது மண்ணுக்கேற்ப மார்க்சியத்தை வளர்த்தெடுத்து படிப்படியாகத்தான் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்றும் கூறிக் கொண்டு கம்யூனிசத்தின் அடிப்படைகளை முற்றாகக் கைகழுவியதோடு, சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் வழிகாட்டுதல்களையும் இப்போலி கம்யூனிஸ்டுகள் அறவே புறக்கணித்தனர்.

cpi-cpm-makkal-nala-koottaniகாந்தி – காங்கிரசுக்குள் முற்போக்குகளைத் தேடி ஆதரவளித்த இவர்கள், போலி சுதந்திரத்துக்குப் பிறகு நேருவை சோசலிஸ்டாகத் துதிபாடி ஆதரித்தனர். அதன் பிறகு அன்றைய சோவியத் ஒன்றியத்தின் அணியிலிருந்த இந்திரா காந்தியின் வெளிநாட்டுக் கொள்கை முற்போக்கானது, உள்நாட்டுக் கொள்கைதான் பிற்போக்கானது என்று விமர்சனத்துடன் ஆதரவளித்தனர். அதைத் தொடர்ந்து, முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவக் கட்சிகளுடன் சேர்ந்து ஒரு ஐக்கிய முன்னணி, அதனுடன் எல்லா இடதுசாரி சக்திகளையும் இணைத்து இடதுசாரி ஜனநாயக முன்னணி; பிறகு அதையே புரட்சிகர மக்கள் ஜனநாயக முன்னணியாக மாற்றி புரட்சியைச் சாதிப்பது என்ற திட்டத்துடன் எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் முற்போக்கைத் தேடிக் கூட்டணி கட்டி சட்டமன்ற – நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டனர்.

நக்சல்பாரி இயக்கம் தீவிரவாதப் பாதையில் செல்கிறது; இது இந்திய மண்ணின் யதார்த்த நிலைமைக்குப் பொருந்தாத பாதை; நாடாளுமன்றத்தின் மீது மக்களுக்குப் பிரமை உள்ளது; எனவே தற்போதைக்கு நடைமுறைக்குச் சாத்தியமான நாடாளுமன்றப் பாதையில் சென்று, படிப்படியாக அதை அம்பலப்படுத்தி புரட்சியைச் சாதிக்கப் போவதாகக் கூறினார்கள். ஆனால் இந்தப் ‘புரட்சிப் பாதை’யில் இக்கட்சிகள் பயணப்பட்டு சாதித்தது என்ன? நாடாளுமன்றப் பாதையில் சென்று எதையும் சாதிக்க முடியாது என்பதற்கு அவர்களே சாட்சியமாகிப் போனார்கள். சட்டமன்ற – நாடாளுமன்றப் பாதை எனும் சட்டகத்தில் சிக்கிக் கொண்டுவிட்ட பிறகு, நாயினும் தரம் தாழ்ந்து போவதைத் தவிர வேறு வழியுமில்லாமல் போய் அக்கட்சிகளும் செல்லாக்காசாகிவிட்டன.

இதே நாடாளுமன்றப் பாதையில் செல்லும் பிற ஓட்டுக் கட்சிகள்கூட தமது சமூக ஆதரவை ஏதாவதொரு வகையில் தக்கவைத்துக் கொள்ளும்போது, இக்கட்சிகளால் தமது சமூக ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ளக்கூட முடிவதில்லை. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் ஆளும் வர்க்கங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்கைக்கு எதிரான மாற்றுக் கொள்கையோ, திட்டங்களோ இப்போலி கம்யூனிஸ்டு கட்சிகளிடம் இல்லை. இதே கொள்கைகளை ‘மனிதமுகம்’ கொண்டதாக, மக்களைக் கடுமையாகப் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டுமென்பதுதான் போலி கம்யூனிஸ்டுகள் கூறும் மாற்றுக் கொள்கை. இந்த ‘மனிதமுகம்’ என்பது, மே.வங்கத்தின் சிங்கூர் – நந்திகிராமத்தில் போராடிய மக்கள் மீது பயங்கரவாதத்தை ஏவி ஒடுக்குவதுதான் என்று சந்திசிரித்துப் போய்விட்டது.

போலி கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கங்கள் தோற்றத்தில் பெரியதாக இருந்தாலும், பொருளாதாரவாத அடிப்படையில் கட்டப்பட்ட அச்சங்கங்களின் பலம் தேர்தலில் ஓட்டுக்களாக மாறுவதில்லை. அரசியல் பிரச்சினைகளில் தலையிட்டு அரசியல் போராட்டங்களை நடத்த முன்வராத இப்பொருளாதாரவாத செக்குமாட்டுத்தனமும் சந்தர்ப்பவாத தேர்தல் கூட்டணியும் அவர்களது கடந்தகால செல்வாக்கையும் அரித்துத் தின்றுவிட்டது. அவர்களது வர்க்கப் போராட்ட அமைப்புகளும் செயலற்று முடங்கிப்போய்விட்டன.

சட்டமன்ற – நாடாளுமன்றத்தில் ஒரு சில சீட்டுக்களைப் பெற்று அரசு சன்மானங்களையும் சலுகைகளையும் பொறுக்கித் தின்பது, தமது பதவிகளைக் காட்டி அரசு அலுவலகம், போலீசு நிலையம், தொழிற்சங்கங்களில் புரோக்கர் வேலை செய்து தொழில் அமைதியைக் காத்து ஆதாயமடைவது என்பதுதான் அவர்களின் அன்றாட நடைமுறையாகிப் போய்விட்டது. இதுவும் போதாதென்று இதர ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போலவே இப்போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் ஊழல் – மோசடிகளில் ஈடுபட்டு பிழைப்புவாதிகளையும் புரோக்கர்களையும் கொண்ட கோடீசுவரக் கட்சிகளாக மாறிவிட்டன.

தமது சுய அழிவுப்பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டு கட்சிகள் தொலைக்காட்சி ஸ்டுடியோக்களில்தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதை வைத்துதான் தாங்களும் ஒரு கட்சி என்று இவர்களால் விளம்பரப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதுவும் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் நமக்குத் தெரியவில்லை.

கொசுறு:

அண்மையில் தே.மு.தி.க.வின் 14 மாவட்டச் செயலாளர்கள், விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அக்கடிதம், தே.மு.தி.க.வின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. “2005 முதல் 2016 வரை கட்சி நிதி, நன்கொடை, தேர்தல் நிதி, வேட்பாளர் கட்டணம் – என 500 கோடி ரூபாய்க்கு மேல் கிடைத்த பணம் என்னவானது? கட்சிக்கு வரும் நன்கொடைகளை டிரஸ்ட் பெயரில் வாங்கினீர்கள். அந்த டிரஸ்டில் இருப்பது விஜயகாந்த், பிரேமலதா, மச்சான் சுதீஷ் ஆகிய மூன்று பேர் மட்டும்தான்” என்று அம்பலப்படுத்தும் இந்தக் கடிதம் இப்போது ஊடகங்களில் பரபரப்பாகியுள்ளது.

இப்பேர்ப்பட்ட விஜயகாந்தைத்தான் கறைபடியாத கரம் என்று விளம்பரப்படுத்தி, இவரை முதலமைச்சராக்கி ஊழலற்ற ஆட்சி நடத்தப்போவதாகப் போலி கம்யூனிஸ்டுகள் கதையளந்தார்கள். இதை நம்பி தமிழக மக்கள் வாக்களித்து, தப்பித் தவறி விஜயகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சராகியிருந்தால், விஜயகாந்தும் பிரேமலதாவும் மச்சான் சுதீஷும் தமிழ்நாட்டையே தமது குடும்ப டிரஸ்டுக்குப் பட்டா போட்டுக் கொண்டிருப்பார்கள். முத்தரசனும் ராமகிருஷ்ணனும் அதற்கு சாட்சி கையெழுத்து போட்டிருப்பார்கள். நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

– மனோகரன்
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் போலீசைப் புதைக்க கூட நாதியில்லை !

0
Master
வீர் சிங்கின் படத்துடன் அவரது மகன்கள். இனி இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறி என்கிறார், வீர் சிங்கின் தந்தை.

காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் ராணுவ வீரரின் உடலை பொது இடத்தில் வைத்து எரியூட்ட ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்திரபிரதேசம் பரிசாபாத் மாவட்டத்தின் நக்லா கேவல் கிராமத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் வீர் சிங். இவர் துணை இராணுவப் படையான மத்திய ரிசர்வ் போலிசு படை சி.ஆர்.பி.எஃப் வீரர் .காஷ்மீரில் பணியாற்றி வந்தார். கடந்த வாரம் இந்திய ஆக்கிரமிப்பு படையினரை குறிவைத்து காஷ்மீர் போராளிகள் நடத்திய தாக்குதலில் இவர் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் சொந்த கிராமத்திற்கு எடுத்துவரப்பட்ட இவரது உடலை பொது இடத்தில் வைத்து எரியூட்டவும் அங்கு ஒரு நினைவு சின்னம் எழுப்பவும் அக்கிராம ஆதிக்க சாதியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இச்செய்தி ஊடகங்களில் வெளிவந்தால் தலைகுனிவு ஏற்படும் என்ற நிலையில் மாவட்ட நிர்வாகம் பல சுற்று பேச்சுவார்த்தை நடத்தி இறுதி சடங்கு செய்ய ஆதிக்க சாதியினரிடம் அனுமதி பெற்றுள்ளது. பொது இடத்தில் 10 X 10 என்ற அளவில் இடத்தை பயன்படுத்திகொள்ள ‘கருணையுடன்’ அனுமதி வழங்கியுள்ளனர் ஆதிக்க சாதியினர்.

“என் மகன் நாட்டை பாதுகாக்க உயிரிழந்துள்ளான். ஆனால் அவனுக்கு இறுதி சடங்கு செய்ய நம் மக்களே இடம் தர மறுக்கிறார்கள்.” என வேதனையுடன் குறிப்பிடுகிறார் வீர் சிங்கின் தந்தை. இவர் ரிக்சா இழுக்கும் தொழிலாளி.

காஷ்மீர் விவகாரத்தில் தேசிய வெறி கிளப்பும் 24 மணி நேர ஊடகங்களும், தேசபக்தர்களும் இச்செய்தியை எளிதாக கடந்து சென்றுவிட்டார்கள். உள்ளூர் ஆதிக்க சாதிவெறி பயங்கரவாதிகளின் மறைமுக கூட்டாளிகள் இவர்கள். முகநூல்களில் தேசவெறி கிளப்பிவிடும் மேட்டுகுடிகளோ அல்லது நாட்டு வளத்தை அனுபவிக்கும் அம்பானி அதானிகளின் பிள்ளைகளோ ராணுவத்தின் சிப்பாய் வேலைக்கு செல்வதில்லை. அப்படி சென்றாலும் அதிகாரிகளாக பசையுள்ள பதவிகளுக்கு தான் விண்ணப்பிக்கவே செய்கிறார்கள். புதிய பொருளாதார கொள்கைகளின் விளைவாக கிராமப்புறங்களில் விவசாயம் நலிந்து வருவதும், நகர்ப்புறத்து கூலி வேலையின் மீதான வெறுப்பு காரணமாக வேறு வழியின்றி ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இராணுவ ஆள் சேர்ப்புக்கு செல்கின்றனர். மற்றபடி பாரதமாதாவின் மீது கொண்ட பற்று கராணமல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. கிராமத்தில் 500 சதுர அடி கொண்ட ஒரு அறை வீட்டில் தான் வீர் சிங்கின் குடும்பம் வசித்துவருதாகவும், அவரது வீர் சிங்கின் சம்பளத்தை நம்பி தான் இவர்களது குடும்பம் இருப்பதாகவும் பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி தேர்வு செய்யப்பட்டவர்களை பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடும் சத்தீஸ்கர், தண்டகாரண்யா பகுதி பழங்குடிகளை ஒடுக்கவும், காஷ்மீர், மணிப்பூர், ஈழம் என தனது ஆக்கிரமிப்பு பணிகளுக்கும் பயன்படுத்திக்கொள்கிறது இந்திய ஆளும் வர்க்கம். இதைத்தான் ஏழைகளுக்கு எதிராக ஏழைகளை ஏவிவிடும் போர் என வர்ணிக்கிறார் எழுத்தாளர் அருந்ததிராய். பொருளாதார நோக்குடன் வேலைக்கு சேரும் இளைஞர்கள் ராணுவத்தின் அறமற்ற செயலுக்கு பழகிப் போகிறார்கள், கூடவே மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். தன் தந்தை ஊரில் வயலில் வேலை செய்துகொண்டிருக்க தண்டகாரண்ய பழங்குடியின் நிலத்தை ஜிண்டாலுக்காக பிடுங்கிக்கொண்டிருப்பார் துணை இராணுவப் படையில் பணியாற்றும் ஒரு இளைஞர். இதுவே அவ்விளைஞர் ஒரு அதிகாரியாக இருக்கும் போது இக்குறைந்தபட்ச மன உறுத்தல் கூட இருக்காது என்பதற்கு அலெக்ஸ் பால் மேனன் உள்ளிட்டு பல அதிகாரிகள் சான்றாக இருக்கிறார்கள். கண்முன்னால் சக ஒடுக்கப்பட்ட மக்கள் அரச படைகளால் சிதைக்கப்பட்டாலும் மவுனமாக அரசின் பக்கம் நின்று தங்கள் பணியை காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் தேசபக்தியைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் ஓநாய் அர்னாப் கோஸ்வாமி காஷ்மீர் போராட்டம் குறித்த கலந்துரையாடலில் கொல்லப்பட் இந்த தலித் வீரரைக் குறிப்பிடுகிறார் – தலித்தாக இல்ல, தேசபக்தராக. அந்த விவாதத்தில் பங்கேற்ற காஷ்மீர் அறிஞர்கள், பத்திரிகையாளர்களைப் பார்த்த “இந்த வீரனை கொன்று விட்டீர்களே” என்று கொலை வெறியில் கத்தினார். ஆனால் அந்த வீரனை அடக்கம் செய்யக் கூட இந்த நாட்டில் நாதியில்லை என்பது அர்னாப்புக்கு தெரியாத ஒன்றல்ல. ஏனெனில் இவர்களைப் போன்ற தேசபக்தி உதார் உள்ளவர்கள் ஒருக்காலும் தேசத்திற்காக சாகமாட்டார்கள். அதற்குத்தான் இராணுவம் என்ற பெயரில் இத்தகைய ஏழைகளை கூலிப் படைகளாக இராணுவத்தில் அமர்த்திக் கொள்கிறார்கள். ஏழைகள் – தலித்துக்களைப் பொறுத்தவரை எல்லையில் மட்டுமல்ல, நாட்டிற்குள்ளேயேயும் மரணம்தான்.

இந்த உண்மை புரியும் போது இராணுவத்தின் ஏழை வீரர்கள் இந்திய அரசு பக்கம் நிற்கமாட்டார்கள், இந்திய மக்கள் பக்கம் நிற்பார்கள். அப்போதுதான் உண்மையான தேசபக்தியை இந்த தேசம் உணரும்.

– ரவி

மேலும் படிக்க:

கார்கள் – கல்வி – செல்ஃபி – கைது – கேலிச்சித்திரங்கள்

0
கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் "கல்வி கற்பது உரிமை" என்று முழங்கவும் செய்கிறார்கள்!

கார்கள்: மாயையும் உண்மையும்!

கார்கள்: மாயையும் உண்மையும்!
கார்கள்: மாயையும் உண்மையும்!

கார்ட்டூன் நன்றி: Andy Singer

———————————————————-

காருக்காக வேலையா, வேலைக்காக காரா?

காருக்காக வேலையா, வேலைக்காக காரா?
காருக்காக வேலையா, வேலைக்காக காரா?

காரில் ஒரு உரையாடல்: காரோட்டுவதை நான் வெறுக்கிறேன். ஆனாலும் வேலைக்கு செல்வதற்கு அது தேவைப்படுகிறது!

அலுவலகத்தில் ஒரு உரையாடல்: இந்த வேலையை நான் வெறுக்கிறேன். ஆனாலும் கார் வாங்கிய கடன் தவணையை கட்டுவதற்கு இந்த வேலை தேவைப்படுகிறது.!

கார்ட்டூன் நன்றி: Andy Singer

————————————————————–

கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் “கல்வி கற்பது உரிமை” என்று முழங்கவும் செய்கிறார்கள் !
கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் "கல்வி கற்பது உரிமை" என்று முழங்கவும் செய்கிறார்கள்!
கல்வியை பறித்துக் கொண்டே அவர்கள் “கல்வி கற்பது உரிமை” என்று முழங்கவும் செய்கிறார்கள்!

நன்றி: Right to Education by Khalid Cherradi

—————————————————————

பயங்கரத்தின் செல்ஃபி

பயங்கரத்தின் செல்ஃபி
பயங்கரத்தின் செல்ஃபி

 

ஐ.எஸ் பயங்கரவாதிகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 800க்கும் மேற்பட்ட மக்களை உலகெங்கும் கொன்றிருக்கின்றனர்.

கார்ட்டூன்: மெக்சிகோவைச் சேர்ந்த Antonio Rodríguez
நன்றி: Cartoon Movement

———————————————————————-

எகிப்தில் பத்திரிகையாளர்களின் நிலை!

எகிப்தில் பத்திரிகையாளர்களின் நிலை!
எகிப்தில் பத்திரிகையாளர்களின் நிலை!

எகிப்தைப் பொறுத்தவரை ஒரு பத்திரிகையாளராக பணிபுரிவது மிகவும் அபாயகரமானது. சமீபத்தில் அல் ஜசீரா தொலைக்காட்சியின் இரு பத்திரிகையாளர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்றொரு தொலைக்காட்சி நடத்துநர் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்.

கார்ட்டூன்: மொராக்கோவின் Ghamir Ali
நன்றி: Cartoon Movement

 

வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.

ஆர்.எஸ்.எஸ். இன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன் !

21

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன், “தான் பதவி நீட்டிப்பு கோரப் போவதில்லை; செப்டம்பரில் தனது பதவிக் காலம் முடிந்த பிறகு, ஆசிரியப் பணிக்குத் திரும்பச் செல்லவிருக்கிறேன்” என அறிவித்ததையடுத்து, இந்தப் பிரச்சினைக்கு மங்களம் பாடிவிட்டன, ஊடகங்கள். ஆனால், இப்பிரச்சினையின் பின்னே புதைந்து கிடக்கும் அபாயங்கள் இனிதான், அதன் முழு பரிமாணத்தோடு வெடிக்கவிருக்கின்றன.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்.

பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி அவற்றுக்கு நாமம் போடும் விசயத்தில் இந்தியத் தரகு முதலாளிகள் மல்லையாவை விஞ்சியவர்கள். கடன்களை மறுசீரமைப்பது என்ற பெயரில் கடனைத் திரும்பக் கட்டாமலேயே தந்திரமாக இழுத்தடித்து வந்த தரகு முதலாளிகளுக்கும், அதற்குத் துணை நின்ற வங்கி நிர்வாகம் மற்றும் நிதியமைச்சகம் ஆகியவற்றுக்கும் கிடுக்கிப்பிடி போட்டு, சொத்தை விற்று கடனைக் கட்டுமாறு செய்தார் ரகுராம் ராஜன். இதன் விளைவாகத்தான் ஊரறிந்த சி.ஐ.ஏ. ஏஜெண்டும், ஆளும் வர்க்கத்தின் பங்களா நாயுமான சுப்பிரமணியசாமி, ரகுராம் ராஜன் அமெரிக்க குடியுரிமை வைத்திருப்பவர் என்றும் இந்தியா மீது விசுவாசமில்லாதவர் என்றும் ஏசினார்.

அம்பானி, அதானி, நிதின் கட்கரி ஆகிய தரகு முதலாளிகளின் அறிவிக்கப்படாத கணக்குப் பிள்ளையான ஆர்.எஸ்.எஸ்.-இன் குருமூர்த்தி, சு.சாமி போல பச்சையாகவும் கொச்சையாகவும் தாக்காமல், ரொம்பவும் ஆதாரபூர்வமாக விமரிசிக்கும் தோரணையில், ரகுராம்ராஜனின் அணுகுமுறை காரணமாக உள்நாட்டுத் தொழில்கள் நசிந்து விட்டதாக குற்றம் சாட்டினார்.

முஸ்லிம்களைக் காட்டிலும் அதிகமாக ரகுராம் ராஜன் மீது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெறுப்பைக் கக்குவதைப் பார்த்து, அவர் ஒரு இடதுசாரி சார்பு பொருளாதாரக் கொள்கையாளரோ என்று யாரும் சந்தேகப்படவேண்டாம். அவர் புதிய தாராளவாதக் கொள்கையின் தீவிர ஆதரவாளர்தான். எனினும், பொதுத்துறை வங்கிகளை உங்கள் விருப்பம் போலக் கொள்ளையடிப்பதை அனுமதிக்க இயலாது என்று இந்தியப் பெரு முதலாளிகளிடம் சொன்னார் ரகுராம் ராஜன். ஒரு வரியில் சொன்னால், இதுதான் அவர் செய்த மாபெரும் தேச விரோதக் குற்றம்.

வட்டி வீதத்தை யார் தீர்மானிப்பது?

“வங்கி வட்டி வீதத்தைக் குறைக்க மறுத்ததன் மூலம் ராஜன் இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்துவிட்டதாகவும்; இதனால் வேலை வாய்ப்புகள் உருவாவது தடைபட்டுப் போனதாகவும்; சிறுதொழில்களுக்குக் கடன் கொடுப்பதற்காக மோடி அரசு கொண்டு வந்த முத்ரா வங்கித் திட்டம் முடங்கிப் போனதாகவும்” ரகுராம் ராஜன் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியிருக்கிறார் குருமூர்த்தி. சுவாமியால் தேசத் துரோகியாகக் காட்டப்பட்ட ராஜனை வளர்ச்சியின் எதிரியாக்கி நிறுத்துகிறார், குருமூர்த்தி.

இந்தியத் தரகு முதலாளிகளின் கைக்கூலிகள்: சுப்பிரமணிய சுவாமி (இடது) மற்றும் எஸ்.குருமூர்த்தி.
இந்தியத் தரகு முதலாளிகளின் கைக்கூலிகள்: சுப்பிரமணிய சுவாமி (இடது) மற்றும் எஸ்.குருமூர்த்தி.

மோடி அரசு கொண்டு வந்திருக்கும் முத்ரா வங்கித் திட்டம் என்பது, சிறு தொழில்களுக்கு நேரடியாகக் கடன் கொடுக்கும் திட்டமல்ல. மாறாக, சிறு தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கொடுக்கின்ற நிதி நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம்தான் அது. கந்து வட்டிக் கும்பலுக்கு கடன் கொடுக்க முட்டுக்கட்டை போடுகிறாரே என்பதுதான் மார்வாடிக் கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியினரின் குமுறல்.

வங்கி வட்டி வீதத்தை ராஜன் குறைக்க மறுத்துவிட்டார் எனச் சொல்லப்படும் குற்றச்சாட்டும்கூட, உண்மைக்குப் புறம்பானது. கடனுக்கு வட்டி எவ்வளவு என்பதைக் கடன் கொடுக்கும் வங்கி தீர்மானிப்பதா, கடன் வாங்கும் தரகு முதலாளிகள் தீர்மானிப்பதா? கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1.50 சதவீதம் அளவிற்கு வட்டியைக் குறைத்து, தற்பொழுது அதனை 6.50 சதவீதமாக நிர்ணயித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. ஆனால், மோடி அரசும் தரகு முதலாளிகளும் அதனை 4 சதவீதமாகக் குறைக்க வேண்டும் எனக் கோரியதற்குத்தான் ராஜன் உடன்பட மறுத்துவிட்டார்.

“உங்களின் சேமிப்பை இந்தியாவிலுள்ள ஏதாவதொரு பாதுகாப்பான வங்கியில் 4 சதவீத வட்டியில் டெபாசிட் பண்ண முன் வருவீர்களா?” எனக் கேட்டுத் தரகு முதலாளிகளின் கோரிக்கையை ஒதுக்கித் தள்ளிய ராஜன், வங்கி சேமிப்புகளிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு வாழ்க்கையை நடத்தும் பொதுமக்களையும் ரிசர்வ் வங்கி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

தொழிலாளர்களின் பி.எஃப். வட்டியைக் குறைத்து, அவர்கள் வயிற்றிலடிக்கும் மோடி தேசபக்தராம். முதலாளிகள் வாங்கும் கடனுக்கு வட்டியைக் குறைத்தால், சேமிப்புகள் மூலம் கிடைக்கும் வட்டியில் வாழ்க்கை நடத்தும் முதியவர்களின் நலன் பாதிக்கப்படும் என்று சொல்லும் ராஜன் தேசவிரோதியாம்! இந்தியாவைப் பற்றித் தெரியாதவராம்!

cartoon1பொருளாதாரத் தேக்கம் நிலவும் காலத்தில் வங்கி வட்டியைக் குறைப்பதன் மூலம் பணப் புழக்கத்தை ஏற்படுத்தி, அதன் வழியாக வளர்ச்சியைக் கொண்டுவர முடியும் என்று நம்பச்சொல்கிறது மோடி கும்பல். ஆனால், இந்த வழியானது ஒட்டுமொத்த நாட்டையும் புதைகுழிக்குள் இழுத்துச் செல்லும் வழி என்பதை அமெரிக்காவில் 2008-இல் வெடித்த சப்-பிரைம் கடன் நெருக்கடி உணர்த்தியிருக்கிறது. சப்-பிரைம் நெருக்கடி வெடிப்பதற்கு முன்பாக அமெரிக்காவில் வங்கி கடனுக்கான வட்டி 0% சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தையும், அவ்வட்டி குறைப்பால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பொருளாதார ஏற்றம், 2008-இல் உடைந்து உலக நாடுகள் அனைத்தையுமே புதைசேற்றுக்குள் தள்ளியதையும், கணிசமான அமெரிக்க மக்கள் ஓட்டாண்டிகளாகித் தெருவிற்கு வந்ததையும், அதிலிருந்து மீண்டு வர முடியாமல் உலகமே தத்தளிப்பதையும் நாம் அனுபவித்து வருகிறோம்.

அந்தப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி இந்தியப் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் திவாலாகிவிடாமல் தப்பித்துக் கொண்டதற்கு, பணக் கொள்கை மீது ரிசர்வ் வங்கிக்கு இருந்த கட்டுப்பாடுகள்தான் காரணம். ரிசர்வ் வங்கியின் கையில் உள்ள இந்த அதிகாரத்தைப் பறித்துவிட வேண்டும் என்பதுதான் மோடி அரசின் விருப்பம்.

வாராக் கடன் என்ற புற்றுநோய்

வங்கிகள் கொடுத்திருக்கும் கடனுக்கான வட்டி 60 நாட்களுக்கு மேல் செலுத்தப்படாமல் இருந்தால், அவற்றை வாராக் கடனாக வரையறுக்க வேண்டும் என்கிறது, வங்கிகளின் நிர்வாக விதி. இந்திய வங்கிகளில், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் இப்படிபட்ட வாராக் கடன் எவ்வளவு இருக்கிறது என்பது நீண்ட காலமாகவே மர்மமாக இருந்துவந்த நிலையில், அந்த இரகசியத்தை வங்கிகளின் சொத்து குறித்த நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம்  உடைத்து வெளிக்கொண்டு வந்தார், ரகுராம் ராஜன்.

கடந்த அக்டோபர் 2015 தொடங்கி டிசம்பர் 2015 முடியவுள்ள காலாண்டு அறிக்கையில், வங்கிகள் தங்களிடம் நான்கு இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வாராக் கடன் இருப்பதாகக் கணக்குக் காட்டின. ஆனால், ராஜன் எடுத்த நடவடிக்கையின் விளைவாக வங்கிகளின் அடுத்த காலாண்டு அறிக்கையில் (ஜன.2016 – மார்ச் 2016) வாராக்கடன் ஏறத்தாழ 6 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இருப்பது தெரியவந்தது. வெறும் மூன்று மாத இடைவெளியில் வங்கிகளின் வாராக் கடன் 50 சதவீதம் அதிகரித்து ஆறு இலட்சம் கோடி ரூபாயைத் தொட்டிருப்பது அசாதாரணமானது மட்டுமல்ல, குற்றப் புலனாய்வு விசாரணைக்கும் உரியது.

தமது நிறுவனங்களின் சொத்துக்களை விற்றாவது கடனை அடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தரகு முதலாளிகள் (இடமிருந்து) அனில் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சசி ரூயா.
தமது நிறுவனங்களின் சொத்துக்களை விற்றாவது கடனை அடைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தரகு முதலாளிகள் (இடமிருந்து) அனில் அம்பானி, கௌதம் அதானி மற்றும் சசி ரூயா.

இந்த வாராக் கடன்களில் பெரும்பகுதி இந்தியத் தரகு முதலாளிகளுக்குத் தரப்பட்டு நிலுவையில் இருப்பவை என்பது ஏற்கெனவே அம்பலமான உண்மை. இந்தியாவின் முதல் பத்து பெரு நிறுவனங்கள் வங்கிகளுக்குத் திருப்பித் தர வேண்டிய கடன் தொகை 7.5 இலட்சம் கோடி என்றும், இதில் சரிபாதி வாராக் கடனாக இருப்பதாகவும் குறிப்பிடுகிறது, “கிரெடிட் சுயிஸ் இந்தியா” என்ற அமைப்பு. இந்த வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்படாமல், மோசமான கடன்கள் என வகைப்படுத்தப்பட்ட கடன்களின் நிலுவையையும் சேர்த்தால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன்களின் விளைவாக பொதுத்துறை வங்கிகள் திவால் நிலையின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருப்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.

வங்கிகளிடமிருந்து 1,21,000 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், அதற்கு ஆண்டு வட்டியாக 8,299 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், அந்தக் குழுமத்தின் வரி விதிப்புக்கு முந்தைய ஆண்டு விற்று முதல் வரவே 9,848 கோடி ரூபாய்தான். இது போல ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் இன்ஃபராஸ்டர்க்சர், ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனங்களும் வட்டி கட்டக்கூடிய அளவிற்கு வருமானம் ஈட்டுவதில்லை எனக் கூறப்படுகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்ல, எஸ்ஸார், அதானி, ஜே.பி. எனப் பல குழுமங்களின் நிலையும் இதுதான்.

வங்கியில் வீட்டுக் கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களோ, விவசாயக் கடன் வாங்கிய குடியானவனோ, கல்விக் கடன் வாங்கிய பெற்றோரோ கடனைத் திருப்பிச் செலுத்தாவிட்டால், அவர்கள் வீட்டுக்குக் குண்டர்களை, போலீசை அனுப்பி, சொத்துக்களை ஜப்தி செய்யும் வங்கி நிர்வாகங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அசலை, வட்டியைக் கட்டாமல் திட்டமிட்டே ஏய்ப்பது தெரிந்தும், அவர்கள் வாங்கிய கடன்களுக்கான தவணையை, கெடுவைத் தள்ளிவைத்து தில்லுமுல்லு செய்து வருகின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கடனைக் கொடுப்பதிலும், அதனை வசூலிக்காமல் கெடு காலத்தைத் தள்ளிவைத்து கடனை மறுசீரமைப்பதிலும், கடன்களைத் தள்ளுபடி செய்வதிலும் வங்கி நிர்வாகத்திற்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையே இருந்துவரும் கிரிமினல் தொடர்பைத்தான் ரகுராம் ராஜன் தனது நடவடிக்கைகள் மூலம் துண்டித்துவிட முயற்சித்தார்.

வங்கிகள் தமது கடன்கள் அனைத்தையும் மார்ச் 2017-க்குள் ஒழுங்கமைப்பு செய்து, அவற்றை வசூலிக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும்; நிலுவையில் உள்ள கடன்களின் கெடு தேதிகளைத் தள்ளிவைத்து மறுசீரமைப்பு செய்யக் கூடாதென்றும் உத்தரவிட்ட ராஜன், கடனைக் கட்டாமல் ஏய்த்துவந்த கார்ப்பரேட் நிறுவனங்களைத் தமது சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்க வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கினார்.

இதன் காரணமாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் 60,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும்; எஸ்ஸார் குழுமம் 50,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்;கௌதம் அதானி குழுமம் 6,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; டாடா நிறுவனம் இங்கிலாந்திலுள்ள 17,400 கோடி ரூபாய் சொத்துக்களையும்; ஜே.பி. குழுமம் 24,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; லான்கோ குழுமம் 25,000 கோடி ரூபாய் சொத்துக்களையும்; வீடியோகான் குழுமம் 9,000 கோடி ரூபாய் பெறுமான சொத்துக்களையும் விற்றுக் கடனைக் கட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

தரகு முதலாளிகள்: அரசின் செல்லப்பிள்ளைகள்

swamy2இந்தியத் தரகு முதலாளிகள் இப்படிபட்ட நெருக்கடிகளை இதற்கு முன் சந்தித்ததேயில்லை. அக்கும்பல், தனது பிறப்பிலிருந்தே, குறிப்பாக நாடு ‘சுதந்திர’மடைந்த பிறகு, அரசின் செல்லப்பிள்ளைகளாகவே வளர்க்கப்பட்டனர். மூலதனம் தொடங்கி இயற்கை வளங்கள் வரையில், மானியம் தொடங்கி வரிச் சலுகை வரையில் அனைத்தும் அவர்கள் விரும்பியபடியே அரசாலும், ஆளும் வர்க்க கட்சிகளாலும் செய்து கொடுக்கப்பட்டன.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அரசு முறைகேடான சலுகைகளை வழங்கி ஊட்டி வளர்க்கக் கூடாது. மாறாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்திற்கு உட்பட்டு, சந்தையில் போட்டியிட்டு தொழிலை நடத்த வேண்டும்; இல்லையென்றால் மூடிவிட்டுச் சென்றுவிட வேண்டும் என்கிறார் ராஜன். மேலும், இந்திய தரகு முதலாளிகளுக்கும் இந்திய அரசிற்கும் இடையேயான இந்த நெருக்கமான உறவுதான் இந்தியா எதிர்கொள்ளும் மிகப்பெரும் அபாயம் என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.  இந்த அணுகுமுறைதான் இந்தியத் தரகு முதலாளிகளையும், அவர்களது பாதுகாவலர்களான ஆளும் வர்க்கக் கட்சிகளையும் ஆத்திரம் கொள்ளச் செய்திருக்கிறது.

கிராமப்புறங்களில் இரட்டை டம்ளர் உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளை, சாதிய பழக்கவழக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குபவர்களைப் பார்த்து,  “தம்பி ஊருக்குப் புதுசா?” என ஆதிக்க சாதிவெறியர்கள் கேட்பது வழக்கம். அதுதான் ராஜன் விவகாரத்திலும் நடக்கிறது. ராஜன் இந்திய அரசிற்கும் தரகு முதலாளிகளுக்கும் இடையேயான கள்ளக்கூட்டை, செல்லப்பிள்ளைத்தனத்தைக் கேள்விக்குள்ளாக்கியவுடன், “ராஜன் இந்தியாவைப் புரிந்து கொள்ளவில்லை; அவர் திறமையான பொருளாதார நிபுணராக இருக்கலாம். ஆனால், இந்தியப் பொருளாதார நிபுணர் அல்ல” என ஆர்.எஸ்.எஸ். கும்பல் தரகு முதலாளிகளைக் காப்பாற்றும் விசுவாசத்தோடு  ராஜனை வசைபாடியது.

அரசின் கட்டுப்பாட்டிலிருந்து பொதுத்துறை நிறுவனங்களை விடுவித்து, அரசின் ஆதரவின்றி சுயேச்சையாக சந்தையில் போட்டியிடச் செய்ய வேண்டும் என நியாயவாதம் பேசிய தரகு முதலாளித்துவக் கும்பல், தனக்கென்று வரும்பொழுது தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறது. ஒருபுறம் தங்களின் தொழிலுக்கும், இலாபத்திற்கும் அரசின் பாதுகாப்பு, நிதியுதவிகளைக் கோரும் இவர்கள், இன்னொருபுறமோ எந்தவொரு சட்டமும், அரசு நிறுவனமும் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாதென்றும் கோருகிறார்கள்.

மையப் புலனாய்வுத் துறை (சி.பி.ஐ.), மைய தணிக்கைத் துறை (சி.ஏ.ஜி.), மைய ஊழல் ஒழிப்புத் துறை (சி.வி.சி.) ஆகிய மூன்று “சி”க்களும் இந்தியாவை நிர்வகிக்க அனுமதிக்கக்கூடாது என்றார், வங்கிக் கடனை ஏப்பம் விட்டிருக்கும் அனில் அம்பானி. இதனை அப்படியே வழிமொழிந்தார் மைய அமைச்சரும் தரகு முதலாளியுமான நிதின் கட்கரி. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் வருமான வரி விதிப்பைக் கைவிட வேண்டும் என்கிறார், சு.சாமி. காங்கிரசு அரசு கொண்டு வந்த முன் தேதியிட்டு வருமான வரி வசூலிக்கும் விதியை ஆட்சிக்கு வந்தவுடனேயே ஊறுகாய் பாட்டிலுக்குள் போட்டு அடைத்தது, மோடி அரசு.

வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்டச் சொன்னால், பொருளாதாரத் தேக்கம் நிலவுகிறது என நிதியமைச்சரே தரகு முதலாளிகளுக்காக வக்காலத்து வாங்குகிறார். இந்தப் பொருளாதார தேக்கம் நிலவும் நேரத்தில்தான், டிராக்டர் கடன் வாங்கிய தஞ்சை விவசாயி பாலனிடமிருந்து கடனை வசூலிக்க போலீசை ஏவியது வங்கி நிர்வாகம். கல்விக் கடனைக் கட்டாத மாணவர்கள் வங்கி வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் போட்டியிட முடியாது என உத்தரவிட்டது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. ஆனால், பல்லாயிரம் கோடிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்டு வரும் தரகு முதலாளிகளோ, அரசால் சலுகை அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றனர். இந்தக் கூட்டுக் களவாணித்தோடு ஒத்துப்போக மறுத்த ராஜனைத்தான் தேசத் துரோகி என முத்திரை குத்துகிறது, ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

மோடியின் ‘சாதனைகளை’ப் புட்டுவைத்த ராஜன்

“மேக் இன் இந்தியா” திட்டத்தை அறிவித்துள்ள மோடி, இந்தத் திட்டம் இந்தியாவை உலகின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக மாற்றக் கூடிய மந்திரக்கோல் எனக் காட்டி வருகிறார். அதாவது, கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து பிடிக்கும் கதையாக, இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில்களைத் தொடங்க போட்டி போடுமென்றும்; அப்படித் தொடங்கப்படும் தொழிற்சாலைகளின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்து, சர்வதேச சந்தையில் சீனாவின் இடத்தை இந்தியா பிடிக்கும் என்றும் ஒரு மல்டி கலர் கனவை இறக்கிவிட்டார், மோடி.

தமது பி.எஃப் பணத்தை முடக்கத் திட்டமிட்ட மோடி அரசின் சதியை எதிர்த்து போர்க்குணமிக்கப் போராட்டம் நடத்திய பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள்.(கோப்புப்படம்)
தமது பி.எஃப் பணத்தை முடக்கத் திட்டமிட்ட மோடி அரசின் சதியை எதிர்த்து போர்க்குணமிக்கப் போராட்டம் நடத்திய பெங்களூரு ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள்.(கோப்புப்படம்)

கார்ப்பரேட் ஊடகங்களும், முதலாளிகளும் இதை வைத்து ஆதாயம் பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்பில் மோடியின் இந்தத் திட்டத்தை வாராது வந்த மாமணி போல புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்த சமயத்தில், ரகுராம் ராஜன் இந்த திட்டத்தின் ஓட்டைகளைப் புட்டு வைத்தார். சப்-பிரைம் கடன் நெருக்கடியால் ஏற்பட்ட பொருளாதார தேக்கத்திலிருந்து உலக நாடுகள் இன்னமும் மீண்டுவர இயலாத நிலையில், இந்தியாவை உலகின் ஏற்றுமதி மையமாக மாற்றுவது சாத்தியமே இல்லாத ஒன்று எனக் கூறிய ராஜன், உலகச் சந்தைக்காக உற்பத்தி செய்வதற்கு மாறாக, உள்நாட்டு சந்தைக்காக உற்பத்தி செய்யும் “இந்தியாவிற்காகத் தயாரிப்போம்” (மேக் ஃபார் இந்தியா) திட்டத்தைத் தொடங்குமாறு கூறி, இது ஒன்றுதான் பொருளாதாரத்தை முன்னேற்ற சாத்தியமான வழி என்றும் விளக்கி, இந்து தேசியவாதக் கும்பலின் மூக்கை உடைத்தார் ‘அந்நியர்’ ராஜன்.

2015-16 ஆம் ஆண்டு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் ( ஜி.டி.பி.) 7.2 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பதாகவும், இதுவொரு உலக சாதனை என்றும் மோடி கும்பல் தம்பட்டம் அடித்தபொழுது, ரகுராம் ராஜன், “குருடர்கள் தேசத்தில் ஒற்றைக் கண் உள்ளவன்தான் அரசன்” என நக்கலடித்து, மோடி கும்பலின் ஓட்டாண்டித்தனத்தை அம்பலப்படுத்தினார்.

இதுவொரு பொருளாதரப் புள்ளிவிவர மோசடி எனப் பல பொருளாதார நிபுணர்கள் மோடி அரசின் பித்தலாட்டத்தனத்தை அம்பலப்படுத்தியபொழுது, ரகுராம் ராஜன், “தனியொரு மனிதனின் வருமானத்தை எடுத்துக் கொண்டால், இந்தியா இன்னமும் உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இருப்பதை உணர வேண்டும்” என்றார்.

சாட்டையடி போல விழுந்த ரகுராம் ராஜனின் நக்கலால் ஆத்திரப்பட்ட அருண் ஜெட்லியும், நிர்மலா சீதாராமனும், அவர் எல்லை மீறிப் பேசுவதாக எச்சரித்தபொழுது, ராஜன், “எனது வார்த்தைகளால் பார்வையற்றவர்கள் மனது புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறி, பார்ப்பன பாசிச திமிர் பிடித்த ஆர்.எஸ்.எஸ். கும்பலை நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் நிலைக்குத் தள்ளினார்.

மோடியை வலிமையான தலைவர் என்றும், அவரது அரசு வலிமையான அரசு என்றும் பார்ப்பனக் கும்பல் கொண்டாடியபொழுது, “வலிமையான அரசுகள் மக்களுக்கு வளமையைத் தருவதில்லை” எனப் பதிலடி கொடுத்த ராஜன், அதற்கு இட்லரை உதாரணமாகக் காட்டி, “வலிமையான தலைவரான இட்லர் ஜெர்மனியைத் திறமையாகவும் உறுதியோடும் அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றதோடு, சட்டத்தின் ஆட்சிக்கும் தேர்தலுக்கும் முடிவு கட்டியதை” நினைவூட்டினார்.

ஸ்டார்ட்-அப் இந்தியா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சகிப்புத்தன்மையும், கருத்து முரண்பாடுகளும் அவசியம் எனக் குறிப்பிட்ட ராஜன், “கருத்துக்களின் மோதலுக்கு இடம் இல்லையென்றால், பொருளாதாரம்கூடத் தேக்கம் அடைந்துவிடும்” எனக் கூறி, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் இந்து மதவெறித்தனத்தை இலைமறை காயாகக் குத்திக் காட்டினார்.

தரகு முதலாளிகள் வட்டியைக் குறைக்க வேண்டும் என விடாப்பிடியாக நிர்பந்தம் கொடுத்தபொழுது, “நாங்கள் யாருக்கும் தீபாவளி போனசு வழங்குவதில்லை” என அவர்களை வாரிய ராஜன், “இந்திய முதலாளிகள் சவால்களை எதிர்கொள்வதில்லை. நல்ல காலங்களில் இலாபத்தை அறுவடை செய்து கொள்ளும் அவர்கள், மோசமான தருணங்களில் வங்கிகளால் தூக்கிவிடப்படுகிறார்கள்” என உண்மையை உடைத்து, அவர்களின் ஒட்டுண்ணித்தனத்தை நாறடித்தார்.

பார்ப்பனக் கும்பலின் இரட்டை வேடம்

“அதிகார வர்க்கத்தை அரசியல் தலையீடின்றி, சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். திராவிடக் கட்சிகள் அப்படி அனுமதிக்காததால்தான் தமிழகம் குட்டிச் சுவராகிவிட்டதாக” அங்கலாய்த்துக் கொள்வதும் புலம்புவதும் பார்ப்பனக் கும்பலின் வழக்கம். அவர்களின் அளவுகோலின்படி ராஜன் அரசியல் தலையீட்டுக்கு அடிபணிய மறுத்தார்; சுதந்திரமாக முடிவுகளை எடுத்தார். ஆனால், பார்ப்பனக் கும்பலோ அப்படிச் செயல்பட்டவரை அநாகரிகமாகவும் பொறுக்கித்தனமாகவும் தாக்குகிறது. ராஜன் மட்டுமல்ல, தேர்தல் கமிசன், நீதிமன்றங்கள் போல அரசியல் தலையீடின்றிச் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட ரிசர்வ் வங்கியும்கூட, மோடி அரசின் கைப்பாவையாக, இந்தியத் தரகு முதலாளிகளின் எடுபிடியாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் அக்கும்பலின் உள்நோக்கம்.

சப்-பிரைம் நெருக்கடியையடுத்து, தமது வங்கிச் சேமிப்புகளைத் திரும்பப் பெறுவதற்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரிலுள்ள வங்கி வாசலில் காத்து நிற்கும் பொதுமக்கள். (கோப்புப்படம்)
சப்-பிரைம் நெருக்கடியையடுத்து, தமது வங்கிச் சேமிப்புகளைத் திரும்பப் பெறுவதற்காக இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரிலுள்ள வங்கி வாசலில் காத்து நிற்கும் பொதுமக்கள். (கோப்புப்படம்)

குறிப்பாக, மைய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியைச் சேர்ந்த ஏழு அதிகாரிகளைக் கொண்ட கூட்டுக் கமிட்டிதான் நாட்டின் பணக் கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டதாக இயங்கி வருகிறது. எனினும், இக்கமிட்டி எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யும் அதிகாரம் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ராஜனைத் தனது வழிக்குக் கொண்டு வருவதில் மண்ணைக் கவ்விய மோடி கும்பல், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த ரத்து அதிகாரத்தையே ரத்து செய்ய முயன்றது.

ராஜன் தனியார்மயத்தை ஆதரிக்கும் பொருளாதார நிபுணர்தான். அவர் விதிகளின்படி விளையாடச் சொன்னார். அவ்வளவே. பாசிஸ்டுகளின் அதிகாரத்திற்கு எதிராக நின்று, உண்மையைத் துணிந்து கூறினார். மிக முக்கியமாக பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்புகளைக் காப்பதற்காக அவர் மோடி அரசை எதிர்த்து நின்றார். இவ்வாறு உண்மையைப் பேசுபவர்களையும், தம்மை எதிர்த்து நிற்பவர்களையும் பார்ப்பன பாசிசக் கும்பல் நேர்மையாகவோ, நாகரிகமாகவோ எதிர் கொண்டதில்லை என்பதற்கு நிகழ்கால வரலாற்றிலும், கடந்த கால வரலாற்றிலும் பல உதாரணங்கள் உண்டு.

ராஜன் ஆர்.எஸ்.எஸ். கும்பலிடம் தோற்றுப் போய் வெளியேறவில்லை. தரகு முதலாளிகளின் கொள்ளைக்கு ஏதுவாக வங்கிப் பெட்டகத்தைத் திறந்து வைப்பதே அந்தக் கும்பலின் நோக்கம் என்ற உண்மையை பொதுவெளியில் அம்பலமாக்கி, எச்சரித்துவிட்டு பிறகுதான் முடிவை அறிவித்திருக்கிறார்.

“ராஜனைவிட வேறு திறமையான இந்தியர்கள் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பி, அவரைவிடத் திறமையான, நாணயமான நிபுணரை ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப் போவது போல சீன் போட்டு வருகிறது, ஆர்.எஸ்.எஸ். கும்பல். ஆனால், மோடி ஆட்சியில் மத்தியப் பல்கலைக்கழகங்கள், கல்வி, கலாச்சார, வரலாற்று ஆய்வு நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் பேர்வழிகளின் யோக்கியதையைப் பாரக்கும்போது, ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளும் எத்தகைய அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

– திப்பு
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

நரேந்திர மோடியின் சவடால்களும் சலாம்களும்

0

சென்னை-வடபழனியிலுள்ள கமலா திரையரங்குக்குப் போனால், காலஞ்சென்ற அத்திரையரங்கின் உரிமையாளர் பல்வேறு அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், நடிகர் -நடிகையுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதை சுவரெங்கும் தொங்கவிட்டு, தன்னை அதிமுக்கியப் பிரமுகராக விளம்பரப்படுத்திக் கொண்டதை யாரும் பார்க்கலாம். அவருக்கும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு, ஏதோ சர்வதேசத் தலைவராகிவிட்டதைப் போல காட்டிக் கொள்ளும் பிரதமர் மோடிக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.

அணுசக்தி விநியோகக் குழும காமெடி
அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் இணைய சீனா முட்டுக்கட்டை போடுவதாகவும், எனவே சீனப்பொருட்களை இந்தியர்கள் புறக்கணிக்க வேண்டுமென்றும் டெல்லி – ஜந்தர்மந்தரில் இந்துசேனா நடத்தும் ஆர்ப்பாட்டம்.

ராவ் பகதூர், திவான் பகதூர் – என தனது விசுவாசக் கைக்கூலிகளுக்கு அன்று வெள்ளைக்காரன் பட்டம் கொடுத்ததைப் போல, மோடி கும்பலின் சுயவிளம்பர அற்பத்தனத்தைப் புரிந்து கொண்ட அமெரிக்க வல்லரசும், மோடியை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தில் உரையாற்ற வைத்து, அதற்குப் பலத்த கைதட்டல் கொடுத்து வரவேற்று, மோடிக்குப் பிடித்த செல்பியை பல அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருடன் நின்று எடுத்துக் கொள்ள வைத்துவிட்டு, காயலாங்கடைக்கு அனுப்ப வேண்டிய தனது 6 அணு உலைகளை ரூ.2.8 லட்சம் கோடிக்கு இந்தியாவின் தலையில் கட்டியுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரலில் அமெரிக்க இராணுவத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் இந்தியாவுக்கு வந்தபோது, இந்தியத் துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (LEMOA) போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கும் போதெல்லாம், பதவி முடிவடையும் சமயத்தில் அதிபராக உள்ளவர் சர்வதேச அளவில் சில ஒப்பந்தங்களைப் போட்டு சாதனை புரிந்துவிட்டதாகக் காட்டிக் கொள்வதென்பது வாடிக்கை. இதன்படியே ஒபாமாவும், “அமெரிக்காவின் முக்கியமான இராணுவக் கூட்டாளி” என்ற தகுதியை இந்தியாவுக்கு அளித்து, “21-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டுள்ள உலகக் கூட்டாளிகள் -1” எனும் தலைப்பிட்ட இந்திய – அமெரிக்கக் கூட்டறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளார். ஒபாமாவின் இந்த அறிக்கை இன்னும் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக, ஏவுகணைத் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டுக் கூட்டமைப்பில் (MTCR) இந்தியா உறுப்பு நாடாக இணையவும், அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியா இணைவதற்கும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

இவற்றைக் காட்டி, மோடியின் ஆட்சியில் இந்தியா, அமெரிக்காவின் முதன்மை ராணுவக் கூட்டாளியாகிவிட்டதைப் போலவும், அமெரிக்க வல்லரசு தனது அரசியல்-ராணுவக் கூட்டாளியான பாகிஸ்தானை முற்றாக ஓரங்கட்டிவிட்டதைப் போலவும், இனி பாகிஸ்தானும் சீனாவும் வாலாட்ட முயற்சித்தால், அவற்றை நசுக்கத் தயாராக உள்ளதைப் போலவும் உதார்விட்டு மோடி கம்பெனி கூத்தாடியது. தன்னை துணிச்சலான பிரதமராகக் காட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் கடந்த ஏப்ரலில் இந்தியாவின் தர்மசாலாவில் சீன எதிர்ப்பாளர்கள் நடத்திய ஒரு கருத்தரங்கில் பங்கேற்க, சீனாவிலிருந்து பிரிவினை கோரும் உய்குர் பிராந்தியத்தின் தலைவர்களுள் ஒருவருக்கு மோடி அரசு விசா வழங்கி, சீனாவுக்குப் பதிலடி கொடுக்கத் துணிந்துவிட்டதாக மோடி கம்பெனி தண்டோரா போட்டது. பின்னர், விசா வழங்கிய மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீனா எச்சரிக்கை விடுத்ததும், நகரம் திரைப்படத்தில் உதார் விட்டு காலில் விழும் வடிவேலு காமெடியைப் போல, உடனே மோடி அந்தர் பல்டி அடித்து விசாவை ரத்து செய்துவிட்டார்.

சீன அதிபரை நேரில் சந்தித்த மோடி
சீன அதிபரை நேரில்சந்தித்து, அணுசக்தி விநிகிப்பாளர் குழுவில் இந்தியாவை இணைக்க ஆதரவு தருமாறு கோரும் மோடி.

அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியா இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தாலும், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடுட்டுள்ள நாடுகள் மட்டுமே அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG)உறுப்பினராக முடியும். ஆனால், இந்தியா இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மேலும், அனைத்து நாடுகளும் ஒருமித்து ஆதரவளித்தால் மட்டுமே இக்குழுவில் ஒரு நாடு உறுப்பினராக முடியும். இதனால், இக்குழுவில் இந்தியா உறுப்பினராக வாய்ப்பே இல்லாதபோதிலும், அமெரிக்கா ஆதரவளித்து விட்டதால் இனி யாரும் தடுக்கவே முடியாது போலவும், இக்குழுவில் இணைவதன் மூலம் இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அமெரிக்கா அங்கீகரித்துவிட்டதைப் போலவும், இது மோடியினுடைய வெளியுறவுக் கொள்கையின் வெற்றியாகவும் மோடி கும்பல் கூசாமல் புளுகியது. அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NSG) இந்தியாவை இணைக்க சாத்தியமேயில்லை என்று தெரிந்திருந்தபோதிலும், கோயபல்சு ஊடகங்களைக் கையில் போட்டுக் கொண்டு ஏதோ மகத்தான சாதனை புரிந்துவிட்டதைப் போல இந்த நாடகத்தைத் திறமையாக நடத்தியது.

அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (NPT) ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததைக் காட்டி, 48 நாடுகள் கொண்ட இந்தக் குழுவில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பதற்கு சீனா, நியூசிலாந்து, அயர்லாந்து உள்ளிட்டட சில நாடுகள் ஆட்சேபம் தெரிவித்தன. மேலும், இந்தியாவைச் சேர்ப்பதாக இருந்தால், இதேபோல விண்ணப்பித்துள்ள பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டுமென சீனா உள்ளிட்ட சில நாடுகள் கோருகின்றன. அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவில் (NPT) இந்தியா இணைவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதேயன்றி, இந்தியாவை அதில் உறுப்பினராக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. மாறாக, மோடி அரசுதான் இக்குழுவிலுள்ள நாடுகளிடம் தன்னையும் உறுப்பினராக்கக் கெஞ்சிக் கொண்டிருந்தது. ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுத்தது என்பதைப் போலத்தான் இந்தக் காமெடியும் நடந்தது.

இந்திய அரசின் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் சீனாவுக்குப் பறந்தார். ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. உடனே தாஷ்கண்ட் நகரில் நடந்த ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்ற சீன அதிபரை நேரில் சந்தித்து சலாம் போட்டு, ஜூன் 23 அன்று தென்கொரியத் தலைநகர் சியோலில் நடக்கும் அணுசக்தி விநியோகிப்பாளர் குழுவின் கூட்டத்தில் இந்தியாவை இணைக்க ஆதரவு தருமாறு மோடி கெஞ்சினார்.

ஆனால் அக்கூட்டத்தில் இந்தியாவை உறுப்பினராக்கும் நிகழ்ச்சிநிரலே இல்லை. மேலும், சீனா உள்ளிட்ட 7நாடுகள் இந்தியாவை இணைப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்தன. இந்தியாவுடன் “பிரிக்” கூட்டமைப்பில் உள்ள பிரேசில்கூட இந்தியாவை ஆதரிக்கவில்லை. வாய்வழியாக ஆதரவு தெரிவித்த நாடுகளும் கூட்டத்தில் கைவிரித்துவிட்டன. ஆனாலும் குப்புற விழுந்தாலும்இன்னும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதையாக, இக்குழுவில் இந்தியாவை உறுப்பினராகச் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்த இக்குழுவின் உயர்நிலைக் கூட்டம் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கப் போகிறது என்று மீண்டும் இந்தக் கோமாளிக் கூத்தை மோடி கும்பலும் கோயபல்சு ஊடகங்களும் நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த குழுவில் சேர மோடி அரசு முட்டிமோதிய கூத்தை காங்கிரசு, ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கேலி செய்து, இது மோடி அரசின் வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய தோல்வி என்று பரிகசிக்கின்றன. இதுவரை இந்தியா கண்டிராத அற்பத்தனமான சுயதம்பட்டக் கோமாளி என்று மோடிக்கு சிறப்பு விருது கொடுக்க வேண்டியதுதான் இனி பாக்கியிருக்கிறது.

– குமார்
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

கோக் குடித்தால் மகிழ்ச்சியா, வறட்சியா ? – கேலிச்சித்திரம்

0
தேர்தல்: நான் இருப்பதிலேயே குறைவான தீயவருக்கு வாக்களித்தேன்!

தேர்தல்: வாக்காளர்களின் செயல்தந்திரம்

தேர்தல்: வாக்காளர்களின் செயல்தந்திரம்
தேர்தல்: வாக்காளர்களின் செயல்தந்திரம்

நான் எப்போதும் வாக்களிக்க விரும்பாத வேட்பாளர் வெற்றி பெறுவதை தடுக்க, நான் வாக்களிக்க விரும்பாத வேட்பாளருக்கு வாக்களித்தேன்!

நன்றி: political cartoons ஓவியர்: RJ Matson

——————————————————————–

 

தேர்தல்: நான் இருப்பதிலேயே குறைவான தீயவருக்கு வாக்களித்தேன்!

தேர்தல்: நான் இருப்பதிலேயே குறைவான தீயவருக்கு வாக்களித்தேன்!
தேர்தல்: நான் இருப்பதிலேயே குறைவான தீயவருக்கு வாக்களித்தேன்!

நன்றி: Political Cartoons ஓவியர்: Joe Heller

——————————————————–

 கோக் குடித்தால் மகிழ்ச்சியா, வறட்சியா?

கோக் குடித்தால் மகிழ்ச்சியா, வறட்சியா?
கோக் குடித்தால் மகிழ்ச்சியா, வறட்சியா?

நன்றி: Cartoon by Carlos Latuff

 

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.

இணையுங்கள்:

நிறைவேறாத கனவு – கவிதை

0
அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - நாவல்

நிறைவேறாத கனவு

அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் - நாவல்
அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம் – நூல்

நிறைவேறாத கனவு
என்னவாகிப் போகிறது?

வெயிலில் காய்ந்து சுருங்கும்
திராட்சையைப் போல்
உலர்ந்து போகிறதா?

அல்லது
ஒரு புண்ணைப் போல
சீழ்பிடித்துப்
பின் மறையுமோ?
கெட்டுப்போன
மாமிசத்தைப் போல
நாற்றமடிக்குமோ?

அல்லது
பாகு நிறைந்த
இனிப்பைப் போல்
சர்க்கரை பூத்துப் போகுமோ?

லாஞ்ஸ்டன் ஹுக்ஸ்
லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ்

ஒருவேளை
கனமான ஒரு சுமை போல
தளர்ந்து
தொங்கிப் போய்விடும்
போலிருக்கிறது!

அல்லது
கனவு
வெடிக்குமா?

லாங்ஸ்டன் ஹ்யூக்ஸ், அமெரிக்கா

தமிழாக்கம்: இந்திரன்,
கவிதை இடம் பெற்றுள்ள நூல்: “அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்”

புதிய கலாச்சாரம், நவம்பர்’ 2000.

எச்சரிக்கை ! வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை !

1

ந்த அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் தோல்வியடைந்து விட்டன என்பதை முரசறைந்து கூறும் அளவுக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன என்ற போதிலும், தமிழகத்தைப் பொருத்தவரை ஜெயலலிதாவின் தேர்தல் வெற்றிதான் இதற்குத் தலையாய சான்று. சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் “மூடு டாஸ்மாக்கை!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் கடைகளை மூடுவதற்கான போராட்டங்களை நடத்தியபோது, தேர்தல் நேரத்தில் அப்போராட்டங்கள் தேவையற்றவை என்று சிலர் எண்ணினர்.

amangalam-shutdown-tasmac-protest-14படிப்படியாக கடையை மூடுவதாக வாக்குறுதியளித்த ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்தார். கடை திறந்திருக்கும் நேரத்தை இரண்டு மணி நேரத்தைக் குறைப்பதாக அறிவித்தார். அது பொய் என்பது அன்றைய தினமே அம்பலமானது. “தற்போது 500 கடைகளை மூடியிருப்பதாகச் சொல்வதும் பொய். மக்கள் கடுமையாகப் போராடிய இடங்களிலும், விற்பனையாகாத இடங்களிலும் சேர்த்து சுமார் 81 கடைகள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன” தினமலர் நாளேடு கூறுகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் லஞ்சம் வசூலிக்கும் அதிகார வர்க்கமும் போலீசும், தத்தம் வட்டாரத்தில் உள்ள கடைகள் மூடப்படுவதை எதிர்க்கிறார்கள் என்ற உண்மையையும் இந்தச் செய்தி அம்பலமாக்கியிருக்கிறது.

இனி மதுவிலக்கு கோரும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? அடுத்த தேர்தலுக்காக 5 ஆண்டுகள் காத்திருந்து, இன்னும் சில லட்சம் இளைஞர்கள் போதை அடிமைகளாக மாறுவதை வேடிக்கை பார்க்க வேண்டுமா? அல்லது சசி பெருமாளைப் போல நீதிமன்றத்தை நம்பி உயிர் துறக்க வேண்டுமா? மக்கள் நேரடியாக களத்தில் இறங்கி கடைகளை மூடுவது ஒன்றுதான் தீர்வு என்பதையே ஜெயலலிதாவின் ஒரு மாத கால ஆட்சி நமக்கு மீண்டும் வலியுறுத்திச் சொல்கிறது.

மாறாக, இது புதிய ஆட்சி போலவும், புதிய துவக்கம் போலவும், கடந்த 5 ஆண்டு அசிங்கங்கள் மற்றும் அராஜகங்களின் தொடர்ச்சி அல்ல என்பது போலவுமான ஒரு தோற்றத்தை ஏற்படுத்த ஜெயலலிதாவின் ஊடக அடிமைகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகளை கேலிக்குரியதாக்கும் வகையிலான நிகழ்வுகளை அ.தி.மு.க. அரசே அன்றாடம் அரங்கேற்றுகிறது.

தன்னுடைய ஊழல் நோக்கத்துக்காக தமிழகத்தின் மொத்த மின் தேவையில் மூன்றில் ஒரு பங்கினை தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து, மின்வாரியத்தை மீளாக்கடனில் தள்ளியிருக்கும் ஜெ. அரசு, “தமிழ்நாடு மின் மிகை மாநிலமாகிவிட்டது” என்று பச்சையாகப் புளுகுகிறது. கூலிப்படை கொலைகளும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், கொள்ளைகளும் தமிழகமெங்கும் தலைவிரித்தாடுகின்றன. வினுப்பிரியா என்ற பெண்ணுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் கொடுக்கப்போன அவரது தந்தையிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு நடவடிக்கையும் எடுக்காத போலீசின் குற்ற நடத்தை காரணமாக அந்தப் பெண் தற்கொலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். ஆனால், தனது தலைமையில் காவல்துறையின் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் அமைதிப்பூங்காவாகத் திகழ்வதாக கூச்சமேயில்லாமல் பேசுகிறார் ஜெயலலிதா.

படிப்படியாக மதுவிலக்கு என்ற அறிவிப்பு மட்டுமல்ல, இந்த அரசு வாய்திறந்து பேசுவது அனைத்துமே பொய் என்று தெளிவாகத்தெரிகிறது. ஜெ. கும்பல் பொதுச்சொத்துகளையும் அரசுக் கருவூலத்தையும் கொள்ளையிட்டு, தமிழகத்தை நிதி நெருக்கடியிலும் கடனிலும் தள்ளியிருப்பதால், வரவிருக்கும் நாட்கள் இன்னும் கொடிதாக இருக்கும். இந்த அரசமைப்பில் நம்பிக்கை வைத்து முறையிட்டோ, அன்றி ஆட்சி மாற்றத்துக்காக காத்திருந்தோ, நீதி பெறுவது சாத்தியமில்லை என்ற உண்மையை, அ.தி.மு.க. ஆட்சி என்று அழைக்கப்படும் இந்தக் குற்றக்கும்பல், தனது சொந்த நடவடிக்கைகளின் மூலம் வெகு விரைவில் மக்களுக்குப் புரிய வைக்கும்.
_______________________________
புதிய ஜனநாயகம், ஜூலை 2016
_______________________________

நந்தினியைக் கொன்ற டாஸ்மாக்கை மூடு – மக்கள் போராட்டம்

0

பட்டினப்பாக்கம்-சீனிவாசபுரம் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரி மக்கள் போராட்டம்

டாஸ்மாக் – தமிழக மக்களின் வாழ்வில் பற்றியெரியும் பிரச்சனை. அம்மாவின் ஐந்நூறு கடைகள் மூடும் நிகழ்வு இதன் சீற்றத்தை சிறிதளவும் குறைக்கவில்லை என்பதையே பெருகி வரும் குற்ற சம்பவங்கள் எடுத்துக்காட்டி வருகின்றன. அதற்கோர் எடுப்பான உதாரணம்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட ஆசிரியை நந்தினியின் மரணம் அல்லது அம்மா டாஸ்மாக்கின் மற்றுமோர் சாதனை.

pattinapakkam--tasmac-struggle-10அந்தி மறைந்து இருள் மெல்ல சூழத்துவங்கியிருந்தது, ஆசிரியை நந்தினி தன் சம்பள பணத்தை எடுத்து வர ஏடிஎம் சென்றிருந்தார் தன் சொந்த இருசக்கர வாகனத்தில்; துணைக்கு தோழி ஒருவரை அழைத்துக்கொண்டு. ஏ.டி.எம் செல்ல எதற்கு துணை? தமிழகத்தில் ஏ.டி.எம் மட்டுமல்ல பணமும், பள்ளி கல்லூரியும், குடி போதைக்கு அடிமையான ஆண்களும் அடங்கிய அனைத்து இடங்களிலும் டாஸ்மாக் இருப்பது விதி. அதுவும் கடல் சென்று மீன் பிடித்து கரை திரும்பும் உழைக்கும் மீனவர்கள் உழைப்பையும், அலுப்பையும், அவர்தம் இல்லக் களிப்பையும் அள்ளிச்செல்ல அமைந்திருந்தது அந்த டாஸ்மாக் கடை. இடம் பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம்.

பணம் எடுத்து திரும்புகையில் குடிவெறியால் கொள்ளையர்களாக்கப் பட்டவர்களின் கைகளில் பணமும், கால்களில் துரத்தி சென்ற ஆசிரியையின் வாகனமும் சிக்க ஆசிரியை நிலைகுலைந்து விழுந்ததில் அந்த இடத்திலேயே மரணமடைந்தார்; தோழி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பணத்துடன் தப்பியவர்கள் வழியில், குடிபோதை ஏறி இழந்துப்போன மதியில் முதியவர் ஒருவரையும் இடித்து உயிரைப் பறித்தனர்.

pattinappakkam-tasmac-struggle-01இந்த சம்பவங்களை கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொள்ள உழைக்கும் மக்கள் ஒன்றும் காக்கி உடை அணிந்திருக்கும் காவலர்கள் அல்ல. விரட்டி சென்று ஒரு திருடனைப் பிடித்து உடனடியாக தண்டனையும் கொடுக்கத்துவங்கினர். ஆனால் சட்டம்தான் தன் கடமையை செய்யவேண்டுமென்று காக்கி உடை அணிந்தவர்கள் அந்த திருடனை மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர். தப்பியவனை இன்னமும் தேடி வருகின்றனர்.

இம்மாதிரி குற்றங்கள் நடப்பது இது முதல் முறையுமல்ல; இந்த குற்றங்களுக்கு மூலகாரணம் ஓடிப்போனவனையொத்த திருடர்களும் அல்ல. கடந்த 2008-ம் ஆண்டு முதலே அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டாஸ்மாக்தான் என்கின்றனர் பகுதியை சார்ந்தவர்கள்.

pattinapakkam--tasmac-struggle-0721 வயதிலே டாஸ்மாக்கால் கணவனை பறிகொடுத்து, அடுத்தடுத்து அக்காமார்களின் கணவர்களையும் டாஸ்மாக்கிற்கு காவு கொடுத்து ஏராளமான இன்னல்களை அனுபவித்திருக்கும் ஆக்னஸ் என்ற பெண்மணிதான் 2008-லிருந்தே இந்த போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.

முதலில் அரசு பள்ளிக்கூடத்திற்கு மிக அருகாமையில் இருந்தது இந்த டாஸ்மாக் கடை. பொதுமக்கள் இந்தக்காரணத்தைக் அதிகமாக போராடி வரவே பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிட்டு டாஸ்மாக்கை அங்கேயே நடத்தி வருகிறது அரசு. மாணவர்களின் கல்வியை விட முக்கியமானது டாஸ்மாக் என்ற போதிலே மக்கள் உணர்ந்துக் கொண்டனர் இந்த அரசு யாருக்கானது என்று. அதே போதில் மக்களின் போராட்டம் முன்னைவிட பன்மடங்கு பெருக போலீசை நிரந்தரமாக டாஸ்மாக் வாசலில் குடியமர்த்தியது.

pattinappakkam-tasmac-struggle-02தினமும் காலையில் வேலைக்கு கிளம்பி வரும் போலீசு குடிகாரர்களை ஒழுங்குபடுத்தி கூட்டத்தை முறைப்படுத்தி அனைவருக்கும் சண்டை சச்சரவு இல்லாமல் சரக்கு கிடைப்பதையே தனது முழுநேரத்தொழிலாக கொண்டிருந்ததை பகுதி மக்கள் வெறுப்புடன் நம்மிடம் பகிர்ந்துக்கொண்டனர். நாள் ஆக, ஆக போலீசின் முறைப்படுத்துதலில் டாஸ்மாக் விற்பனையில் சென்னைப்பகுதியில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது அந்த டாஸ்மாக்.

அதன் வீறுநடையின் வேகத்தில் கொல்லப்பட்ட ஆசிரியை நந்தினியின் மரணம் பொதுமக்களை கிளர்ந்தெழ செய்துவிட்டது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு இன்னபிற குற்றங்களுக்கு காரணமான இந்த டாஸ்மாக் கடையை உடனே இழுத்து மூடவேண்டுமென களத்தில் குதித்து விட்டனர் பகுதிவாழ் உழைக்கும் மக்கள்.

நேற்றைய முன்தினம் (07-07-2016) இருவர் தீக்குளிக்கவும் முயன்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக 08-08-2016 அன்று டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராடியுள்ளனர். இம்முறை இவர்களுடன் களத்தில் மக்கள் அதிகாரமும், பெண்கள் விடுதலை முன்னணியும் கரம் கோர்த்துள்ளன. ஆசிரியை நந்தினியின் மறைவுக்கு மறுநாளிலிருந்து பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இன்று வரை கடை திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் நேற்றைய தினம் கடைக்கு பத்தடி தொலைவிலே நாற்காலி போட்டு அமர்ந்துக் கொண்டு, “முடிந்தால் கடையை திறந்து பார்” என கூறி பொதுமக்களுடன் ஆக்னஸ் அம்மா போராடியுள்ளார்.

pattinappakkam-tasmac-struggle-05அதே நேரத்தில் நான்கு அடுக்கு போலீசு பாதுகாப்பும், நான்கு அடுக்கு பேரிகாடு பாதுகாப்பும் கொடுத்து பொதுமக்களிடமிருந்து தன் பொக்கிசத்தை காத்துக்கொண்டுள்ளது ஜெயா அரசு. “கண்ணுக்கெதிரே கொலை நடந்திருப்பினும் கடையை மூடமாட்டோம் கடையை மூடவும் விடமாட்டோம்” என போலீசு மல்லுக் கட்டிக்கொண்டு நிற்க அவர்களை வீழ்த்தி எப்படியும் கடையை மூடியேக் காட்டுவோம் என்றவாறு மக்கள் எதிர்த்து நின்றுக் கொண்டுள்ளனர்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆதரவளிக்காத நிலையில் மக்கள் அதிகாரமும், பெண்கள் விடுதலை முன்னணியும் இவர்களுடன் கரம் கோர்த்திருப்பதில் பெரிதும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளனர் இப்பகுதி மக்கள். ஆனால் மக்கள் அதிகாரம் இணைந்ததன் விளைவாக கூடுதலாக நான்கு பேருந்து போலீசை கொண்டு வந்து நிரப்பியுள்ளது போலீசு. அதோடு மக்கள் அதிகாரத்தின் போராட்ட பாணியை பற்றி போராடுவர்களிடையே கூறி பயமுறுத்த முனைந்துள்ளது. ஆனால் அதில் பயப்படாமல் உற்சாகமாகிப் போன உழைக்கும் மக்களோ மக்கள் அதிகாரத்துடன் இறுக பிணைந்துக்கொண்டுள்ளனர். இம்முறை எப்படியேனும் மூடியேத்தீருவோம் என்பதோடு மட்டுமல்லாமல் இல்லை என்றால் மூடியேக்காட்டுவோம் என்று அதிகாரத்தை கையிலெடுக்கவும் ஆயத்தமாகி வருகின்றனர்.

pattinappakkam-tasmac-struggle-04டாஸ்மாக் கடைக்குப்  பக்கத்தில் பத்தடி தள்ளி வட்டமாக நாற்காலிகளை போட்டு மக்கள் அதிகாரம் மருது, பகுதி போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஆக்னஸ் அம்மா இன்னும் சில மக்கள் அதிகார, பகுதி வாழ் மக்கள் உரையாடிக் கொண்டிருக்கின்றனர். ஐந்தாம் நாளாக தொடரும் பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி உழைக்கும் மக்களின் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தின் காலை நேரக்காட்சி இது.

அதே வேளையில் கருவாடு விற்க சென்றுக் கொண்டிருப்பவர்களையும் கறாராக சோதித்து, டாஸ்மாக் கடையை சுற்றி ஐந்தடுக்கு பேரிகார்டு பாதுகாப்பு போட்டு, அதிரடிப்படையின் அணிவகுப்பை ஒழுங்குப்படுத்தி பொதுமக்களுக்கு எதிராக போர் தொடுக்க தொந்தி வயிற்றுக்கு தொடர்பில்லாத வேலைகளை செய்து கொண்டிருந்தது போலீசு.

pattinappakkam-tasmac-struggle-03மணி 9 ஐ கடந்தது. அறிவித்திருந்தபடி போராட்டம் துவங்கியது. சாவகாசமாக எழுந்து தங்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு அப்படியே போஸ்டர், முழக்கம் சகிதமாக டாஸ்மாக்கை நோக்கி நகர்ந்தனர் போராட்டக்குழுவினர். ஊரில் உள்ள ஒட்டுமொத்த பெண்களும் அவர்கள் பின் அணிதிரள மிரண்டு போன போலீசு தங்கள் கைகளையே சங்கிலியாக்கி போராடுபவர்களை தடுத்தி நிறுத்தியது.

இருப்பினும் தங்கள் கோரிக்கைகளை முழக்கமாக்கி அதை காற்றிலும், பல ஊடக நேரலை காணொளியிலும் பரப்பியவாறு இருந்தனர் போராடிய பொதுமக்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆக்னஸ் அம்மா, “இரண்டு உயிர் போன பிறகும், நான்கு நாட்களாக போராட்டம் நடத்திய போதும்கூட கடையைமூட அரசு தயாராக இல்லை. எத்தனை உயிர் போனாலும் அதைப் பற்றி துளி கூட கவலைப்படவில்லை. கடையை மூடும் வரை நாங்களும் விடப்போவதில்லை, மக்களுக்காக இருப்பதாகச் சொன்ன எந்த கட்சியும் எங்களுக்காக வரவில்லை. பெண்கள் நாங்கள் தொடர்ந்து உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். துணிச்சல் இருந்தால் இங்கு வந்து போராட்டம் நடத்தி கடையை மூடுங்கள்” என்றார்.

pattinapakkam--tasmac-struggle-11மேலும், “மக்கள் உயிருக்கு, இந்த ஊரில் எந்த பாதுகாப்பும் இல்லை, ஆனால் ஊரை அழிக்கிற மதுக்கடைக்கு இத்தனை பாதுகாப்பு, நாங்கள் போராட்டம் நடத்தும் போது எங்களை கைது செய்தாலும் கூட நாங்கள் போராட்டத்தைக் கைவிடத் தயாராக இல்லை. இந்த தொடர்போராட்டம் தொடரும்” என்று முழங்கினார்.

ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க அனுமதித்ததையே தான் வழங்கும் அதிகபட்ச ஜனநாயகம் என்பதை உணர்த்தும் வகையில் காவல்துறை தன் கைவரிசையை காட்டத்துவங்கியது. போராடுபவர்களின் மன உறுதியை உரமாக்கி உறுதி படுத்தும் வண்ணம் தரதர வென இழுத்துச் சென்று கைது செய்யத் துவங்கியது போலீசு. ஓயமாட்டோம், அஞ்சமாட்டோம், இழுத்து மூடு டாஸ்மாக்கை போன்ற முழக்கங்கள் போராட்டக்காரர்களின் குரல்வளையிலிருந்து இடைவிடாது வெளிப்பட உடலோ கொடூரமாக தாக்கும் போலீசின் பிடிக்கெதிராக போராடி கொண்டிருந்தது. அடிதடி, தள்ளுமுள்ளு என்ற போலீசின் தாக்குதலின் முடிவில் ஆக்னஸ் அம்மாவை தவிர மற்ற அனைவரும் கைதாக்கப் பட்டனர்.

pattinappakkam-tasmac-wlf-struggle-1தாங்கள் எந்த தவறும் செய்யாதபோதும், தாங்கள் எந்த பொதுச்சொத்தையும் சேதப்படுத்தாதபோதும், தாங்கள் எந்த வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக நடந்துக் கொள்ளாதபோதும் போலீசு தங்களை கைது செய்வதை வன்மையாக கண்டித்து வண்டியில் ஏற மறுத்து சாலையிலே அமர்ந்து விட்டார். “எத்தன உசிரு போனாலும் அந்த அம்மாவுக்கு டாஸ்மாக் வருமானம்தான் முக்கியமா?” என்று கேள்வி எழுப்பி தன் எதிர்ப்பை தொடர்ந்து காட்டியவாறு சாலையில் அமர்ந்துவிட்டார்.

நெற்றியில் வியர்வையை வழித்துக்கொண்டு சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட போலீசு இம்முறை மூர்க்கத்தனமாக ஆக்னஸ் அம்மாவை அப்புறப்படுத்த முயன்றனர். பத்து பெண் போலீசார் பிடித்து இழுத்து தூக்கியதில் அந்த அம்மா அங்கேயே மயங்கி விழுந்தார். மயங்கியதை வெளியில் காட்டாமல் வாகனத்தில் கிடத்தி போராட்டக்களத்தை விட்டு விரைந்து வெளியேறி வெற்றிக்கொடி நாட்டிவிட்டோம் என நினைத்துக் கொண்டது போலீசு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆனால் ஆக்னஸ் அம்மா கைதான செய்தியறிந்த பொதுமக்களோ போராட்ட இடத்தை விட்டு வெளியேறாமல் நீண்ட நேரம் ஊடகங்கள் முன்னிலையில் போலீசாரின் இல்லாத தன்மானத்தை தட்டியெழுப்பி வெளிக்கொண்டு வரும் வகையில் அர்ச்சித்துக் கொண்டிருந்தனர். ஆக்னஸ் அம்மாவை விடுதலை செய்யவேண்டுமென்ற வேட்கை இருந்தாலும் முறையான ஒருங்கிணைப்போ, முறைப்படுத்தும் தலைமையோ இல்லாத காரணத்தால் அங்கேயே நீண்ட நேரம் நின்றுக் கொண்டிருந்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் வந்தது செல்ஃபி கூட்டம். கடைக்கு பத்தடி தூரத்திலேயே நின்று கொண்டு ஊடகங்களையும், போலீசையும் ஆள்விட்டு அழைத்தனர் பா.ஜ.கவினர். போராட்டத்துக்கு சற்றும் பொருத்தமில்லாத உடைகளை அணிந்துக்கொண்டு செயற்கை கொண்டை, முகப்பூச்சு, அலங்காரங்களுடன் அவாள்கள் சிலரும் அடுத்தடுத்த வர்ணங்களை சார்ந்த சிலரும் நின்றுக் கொண்டிருந்தனர்.

பா.ஜ.க-வின் செல்ஃபி போராட்டம்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கூடவே அழைத்து வந்திருப்பர் போல தினமலர் போன்ற பத்திரிகைகள் புதிதாக மைக்குடன் வந்து தள்ளுமுள்ளுவை ஏற்படுத்தியது. நமக்காக போராட வந்துள்ளனர் என நம்பி பகுதி மக்கள் அவர்களிடம் செல்ல சனாதன தர்மத்தினர் சத்தம் போட்டனர். “எதுவும் பேசக்கூடாது, பின்னாடி நில்லு, போய் உங்க ஆளுங்களை கூட்டிட்டு வந்து எங்க பின்னாடி நில்லுங்க” என அதட்ட துவங்கினர்.

தங்களுக்கே புரியாத வண்ணம் ‘போராட்டம் இது போராட்டம், பா.ஜ.கவின் போராட்டம்’ என முழக்கம் போட்டனர். வாய்தான் இதை சொல்லிக்கொண்டிருந்ததே தவிர உடலும், உள்ளமும் சுற்றி வளைத்து படம் பிடிக்கும் கேமிராவில் தங்கள் முகம் பதியவேண்டுமென்பதற்காக முன்னோக்கி, பின்னோக்கி, எட்டிப்பார்த்து, வளைந்து நெளிந்துக் கொண்டிருந்தது. பின்னர் போலீசு செல்லமாக கண்டிக்க அடுத்த ஓர் அடி கூட எடுத்து வைக்காமல் யூ டர்ன் அடித்து நிழலுக்கு ஒதுங்கினர்.

போராட்டம் நடத்தப்பட வேண்டிய டாஸ்மாக் பின்புறம் இருக்க புகைப்படம் எடுக்கும் ஊடகங்களை முன்புறம் வைத்துக்கொண்டு யாரும் எதிர்க்காமலேயே புறமுதுகிட்டு ஓடத்துவங்கினர். இப்போதுதான் பகுதி மக்களுக்கு புரிந்தது இவர்கள் போட்டோ எடுக்க வந்த குரூப் என்று. சற்றும் தாமதியாமல் இவர்களுடன் இருக்கையிலே சாலையில் அமர்ந்துவிட்டனர்.

இது ஏதடா வம்பாகிவிட்டது என சாலையில் அமர்ந்தவர்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டு அவர்களை எழுப்பி – போலீசு கத்துவதற்கு முன்பாகவே – சமாதானம் செய்து கடையை விட்டு ஐம்பதடி தள்ளி சென்று அடுத்தகட்ட அறிவிப்பான சாகும் வரை உண்ணாவிரதத்தை அறிவித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தை முடித்துக்கொண்டனர் அரைக்காக்கியின் காவி வேட்டி பிரிவினர்.

அதற்கு பிறகும் அவர்களின் அட்டகாசம் தொடர்ந்தது மகளிர் அணியினருடன் செல்ஃபி, போராடும் மக்களுடன் செல்ஃபி என மோடியின் மானத்தை காப்பாற்றிவிட்டனர் காவிகள். அப்போது பரிதாபமாக, “அந்த அம்மாவ (ஆக்னஸ் அம்மா) விடச்சொல்லி சொல்லுங்கமா” என கேட்ட பகுதி மக்களிடம், “அதெல்லாம் சொல்லிட்டோம், சாயந்திரம் ஆறு மணிக்கு வந்துருவாங்க” என ஏறெடுத்தும் பார்க்காமல் எகத்தாளமாக சொல்லிவிட்டு தங்கள் கட்சிப்பணியில் கையில் ஆண்ட்ராய்டு கேமராவுடன் மூழ்கினர் பகுதி பா.ஜ.கவினர்.

ஆனால் உணமையில் ஆக்னஸ் அம்மாவை தவிர மற்றவர்களை மயிலாப்பூர் சமூக நலக்கூடத்திலும், ஆக்னஸ் அம்மாவை தனியாக E1 காவல் நிலையத்திலும் வைத்துள்ளது போலீசு. மக்கள் அதிகாரத்தை சார்ந்த ஒரு தோழருக்கு கைமூட்டு விலகிவிட்டிருந்தது. அவருக்கு மருத்துவம் பார்க்க கூட அனுமதி மறுத்துக்கொண்டிருந்தது போலீசு. ஆக்னஸ் அம்மாவை ரிமாண்ட் செய்ய திட்டமிட்டிருக்கின்றனர்.

வெட்ட வெட்ட வீரியமாக வளர்வதில் பொதுமக்களின் போர்க்குணமும், போராட்டத்தன்மையும் முதன்மையானது. அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு அணிதிரள்கிறது பட்டினப்பாக்கம் – சீனிவாசபுரம் பகுதி. அவர்களின் குரல் சொல்வது இதையே, மீண்டும் தொடருவோம், மூடப்பட்ட கடை திறக்கப்பட்டால்! மீளாமல் தொடருவோம் பாதுகாப்பு அளிக்கப்பட்ட கடை நிரந்தரமாக மூடும் வரை!

வினவு செய்தியாளர்கள்,
சென்னை

மதன் ‘காணாமல்’ போனார் ! பச்சமுத்துவுக்கு அரசு பாதுகாப்பு !!

7
நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.

ம் வாரிசுகளை மருத்துவர்களாக்கிப் பார்த்து விடுவதென்கிற லட்சியவெறியோடு வாழ்ந்துவரும் திடீர்ப் பணக்காரர்களும், அரசு உயரதிகாரிகளும் கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். எஸ்.ஆர்.எம். முதலாளி ‘பாரிவேந்தர்’ பச்சமுத்து தனக்கும் வேந்தர் மூவீஸ் மதனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவித்திருப்பதால், அடுத்த ஆண்டு தம் பிள்ளைக்கு மெடிக்கல் சீட் வாங்க யாரிடம் இலட்சங்களைக் கொடுப்பது என்பதே அவர்களுடைய கவலை.

இந்த ஆண்டு மதனிடம் துண்டு சீட்டு வாங்கியவர்களின் கதை கந்தலாகிவிட்டது. 102 பேரிடம் வாங்கிய பணத்தை வேந்தரிடம் ஒப்படைத்து விட்டதாகக் கடிதத்தில் எழுதியிருக்கிறார் மதன். பணம் கொடுத்தவர்கள் பச்சமுத்துவின் வீட்டு வாசலில் நின்று சத்தம் போடவே, அவர்களிடமிருந்து பாரி வேந்தரைக் காப்பாற்ற அவருடைய வீட்டுக்கு மட்டுமின்றி, தெருவுக்கே காவல் நிற்கிறது புரட்சித் தலைவியின் காவல்துறை. பாவத்தைத் தொலைப்பதற்கு காசிக்கு போவது என்பதற்குப் பதிலாகப் பணத்தைத் தொலைத்தவர்களெல்லாம் மதனைத் தேடி காசிக்குக் கிளம்பி விட்டார்கள்.

நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.
நன்கொடை, கட்டணக் கொள்ளை வழியாகக் கிடைத்த கருப்புப் பணத்தைக் கொண்டு வளர்ந்து நிற்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்.

தனக்கும் வேந்தருக்குமிடையிலான கூட்டை விளக்கமாக விவரித்துள்ள மதன், கடந்த 8 ஆண்டுகளாகத் தன்னால்தான் எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் இருக்கைகள் நிரம்பியது என்பதாகவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட மாணவர் பட்டியலை வேந்தருக்கு அனுப்பியிருப்பதாகவும் தனது ‘தலைமறைவு’க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய ஜனநாயகக் கட்சி பிகாரில் போட்டியிடுவதற்கும், தமிழகத்தில் பா.ஜ.க. மாநாட்டை பாரி வேந்தர் நடத்திக் கொடுத்ததற்கும் எங்கிருந்து பணம் வந்தது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார். வேந்தரின் பல்வேறு ’தொழில்’களுக்கு வலக்கரமும் இடக்கரமும் மதன் தான் என்பதை அவரது கடிதம் தெளிவாக்குகிறது.

“மதன் தற்போது எழுதியிருக்கும் கடிதத்தை நம்ப வேண்டாம்” என்றும், “வேந்தர் மூவீஸுக்கும் பாரி வேந்தருக்கும் தொடர்பில்லை” என்று சிறிது காலத்துக்கு முன்னர் மதனே வெளியிட்டிருக்கும் அறிக்கையை நம்புமாறும் மக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் பாரி வேந்தர் என்று கூறப்படும் பச்சமுத்து.

பச்சமுத்துவுக்கும் மதனுக்கும் இடையிலான உறவு என்ன என்பது புலனாய்வு செய்து கண்டுபிடிக்கும் அளவுக்குக் கடினமானதல்ல. இந்த தொழிலின் நெளிவு சுளிவுகளை அறிந்தவரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரின் தந்தையுமான பா.ம.க. ராமதாஸ், வேந்தரை நோக்கி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
“எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 2005-ஆம் ஆண்டு முதல் எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது? இதற்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளின் விடைத்தாட்கள், சேர்க்கப்பட்ட மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் உள்ளிட்டவற்றை வெளியிட பச்சமுத்து தயாரா?”

கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் 'உண்மையை' உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி.
கல்விக் கொள்ளையன் பச்சமுத்துவின் ‘உண்மையை’ உடனுக்குடன் தரும் புதிய தலைமுறை தொலைக்காட்சி.

இந்த எளிய கேள்விக்கு ஒருக்காலும் பச்சமுத்துவால் பதிலளிக்க முடியாது. கல்வித் தகுதியோ திறமையோ இல்லாத ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள், பல்வேறு முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்த திடீர் பணக்காரர்கள் போன்றோரின் குலக்கொழுந்துகளுக்கு எஞ்சினீயர் என்றும் டாக்டர் என்றும் பட்டம் கட்டி சமூகத்தில் இறக்கி விடுவதுதான் பச்சமுத்து போன்றோர் ஆற்றிவரும் சமூகத்தொண்டு. ஆம்னி பேருந்துகளுக்கு டிக்கெட் ஏற்றும் புரோக்கர்களைப் போல, சுயநிதிக் கல்லூரிகளுகளுக்கு மாணவர்களைச் சேர்த்து விடுவதையும் புரோக்கர்கள்தான் செய்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி வழங்கும் தனியார் நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் இவ்வாறான ஏஜெண்டுகள் தாம் முக்கிய பங்காற்றுகின்றனர் என்பது யாரும் அறியாத இரகசியம் அல்ல. கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் வடநாட்டில் இருந்து ஆள் பிடிக்கும் ஏஜெண்டுகளிடையே நடந்த மோதல், கொலை வரை சென்ற விவகாரம் ஊடகங்களில் அம்பலமாகியுள்ளது.

தமது பிள்ளைகளுக்கு இடம் பிடிக்க பெற்றோர்கள் மதனைப் போன்ற ஏஜெண்டுகளிடம் இலட்சங்களையும், கோடிகளையும் கொட்டித் துண்டுச் சீட்டு வாங்குவதும், அந்தத் துண்டுச் சீட்டின் அடிப்படையில் கல்லூரியில் இடங்களைப் பிடிப்பதும் எல்லோரும் அறிந்த உண்மைகள் தாம். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரியல் எஸ்டேட் தொடர்பான கட்டப் பஞ்சாயத்துகளில் ஈடுபட்டிருந்த மதன், தனது ‘தொழிலின்’ இன்னொரு பகுதியாக கல்லூரிகளுக்கு மாணவர்களைப் பிடித்துக் கொடுக்கும் ஏஜெண்டாக செயல்பட்டு வந்திருக்கிறார். சீட்டுகளை நிரப்பும் கலையில் மதன் கைதேர்ந்தவராக இருந்த காரணத்தினால்தான் பச்சமுத்து தன் இதயத்திலேயே அவருக்கு சீட்டு போட்டுக் கொடுத்திருக்கிறார்.

ஜூன் 2013-இல் மருத்துவ மாணவரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பச்சமுத்துவின் வீடு, மகன்கள், மருமகன்களின் வீடு, கல்லூரிகள், வேந்தர் மூவிஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ‘’அது கல்லூரியே அல்ல, மீன் மார்க்கெட். ஒவ்வொரு கோர்ஸையும் கூவிக்கூவி விற்கிறார்கள்” என்று அன்றைய நாளேடுகளில் பெற்றோர்கள் பலர் காறி உமிழ்ந்திருக்கிறார்கள்.

ஆனால் திருவாளர் பச்சமுத்துவோ, “எங்கள் கட்டணங்கள் வங்கி மூலம் மட்டுமே வசூலிக்கப்படுகின்றன. பணமாக எந்தத் தொகையும் வசூலிக்கப்படுவதில்லை. எஸ்.ஆர்.எம். கல்லூரி பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, என்னைப்போல் கையெழுத்திட்டு மதன் மோசடி செய்துள்ளார். இந்த மோசடியில் இருந்து தப்பிக்கவே மதன் தற்போது தற்கொலை நாடகம் ஆடுகிறார்” என்று ஒரு அறிக்கை விட்டு, அதை உலகம் நம்பிவிடும் என்று எதிர்பார்க்கிறார்.

தமிழகத்தின் மூ...த்த பத்திரிகையாளரான மாலன்தான் கருப்புப்பண கிரிமினல் பேர்வழியான பச்சமுத்து நடத்தும் புதிய தலைமுறை வாராந்திர பத்திரிகையின் ஆசிரியர்.
தமிழகத்தின் மூ…த்த பத்திரிகையாளரான மாலன்தான் கருப்புப்பண கிரிமினல் பேர்வழியான பச்சமுத்து நடத்தும் புதிய தலைமுறை வாராந்திர பத்திரிகையின் ஆசிரியர்.

“எங்கள் கல்வி நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி, முறைகேடான முறையில் அப்பாவி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களையும் ஏமாற்றி சுமார் பல கோடி ரூபாய் பெற்றுள்ளார். அவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், கட்சியிலிருந்து கடந்த 25.2.2016 அன்றிலிருந்து விலக்கப்பட்டு விட்டார்” என்கிறார் பச்சமுத்து.

மதனுக்கும், எஸ்.ஆர்.எம். குழுமத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறும் பச்சமுத்து, எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பணம் ரூ.200 கோடியை மதன் மோசடி செய்துவிட்டதாக புகார் செய்திருக்கிறாரே, அந்த ரூ.200 கோடி பணம் எங்கிருந்து வந்தது? பிப்ரவரி 25-ஆம் தேதிக்குப் பின்னர்தான் அத்தனை பணமும் மதனால் வசூலிக்கப்பட்டதா? இப்படியொரு மோசடியில் ஈடுபட்ட காரணத்துக்காகத்தான் மதன் நீக்கப்பட்டார் என்றால், அதனை அன்றைக்கே பகிரங்கமாக அறிவிக்காதது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கு பச்சமுத்துவால் ஒருபோதும் பதிலளிக்க முடியாது.

***

மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் உள்ளிட்ட 22 கல்வி நிறுவனங்கள் கொண்ட நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காட்டாங்கொளத்தூரில் ஏரிகளையும், புறம்போக்கையும் வளைத்து 250 ஏக்கர் பரப்பளவில் வளைக்கப்பட்டிருக்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகம்,  டில்லி, அரியானா, சிக்கிம், இலங்கை என விரிந்திருக்கும் கிளைகள், 500-க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம். ஆம்னி பேருந்துகள், கருப்புப் பணத்தைப் புரட்டுவதற்குத் தோதாக வேந்தர் மூவீஸ் – என விரிந்துள்ளது பச்சமுத்துவின் சாம்ராச்சியம். பா.ம.க. ராமதாசின் கணக்குப்படி, இந்த சாம்ராச்சியத்தின் மதிப்பு ரூ.20,000 கோடி. இந்த சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ள புதிய தலைமுறை தொலைக்காட்சி, விரிவுபடுத்திக் கொள்ள இந்திய ஜனநாயகக் கட்சி.

பாரி வேந்தர் என்ற பச்சமுத்துவின் வலது, இடது கரமாக இருந்த மதன்.
பாரி வேந்தர் என்ற பச்சமுத்துவின் வலது, இடது கரமாக இருந்த மதன்.

கடந்த இருபது ஆண்டுகளில் தனியார்மயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கியதற்குப் பின்னால் தங்களது கள்ளப்பணம் அல்லது கருப்புப் பணத்தை முடக்குவதற்கும் பெருக்குவதற்கும், யாரும் நெருங்கி விட முடியாத சில சுவிஸ் வங்கிகளை இந்த திடீர்ப் பண முதலைகள் உள்நாட்டிலேயே உருவாக்கியிருக்கிறார்கள். மடங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் ஆகியவைதான் அத்தகைய சுவிஸ் வங்கிகள்.

பிறக்கும்போதே வாயில் சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவர் வேந்தர். அதாவது, கல்விக் கொள்ளையைத் தொடங்கும்போதே அதனை எதிர்த்து யாரும் குரல் எழுப்பத் தயங்கும் வண்ணம் புதிய தலைமுறை தொலைக்காட்சியையும் களத்தில் இறக்கியவர். மதன் பச்சமுத்துவின் வணிகத்துக்கு அடியாள் என்றால், புதிய தலைமுறை என்பது கருத்துலகின் அடியாள். அந்தத் தொலைக்காட்சி ஊழலில் ஈடுபட்டுக்கொண்டே நல்லொழுக்கம் பேசுவதை, ஒரு நுண்கலையாகவே வளர்த்து, அதற்கு நடுத்தர வர்க்கத்தை ரசிகர்களாகவும் ஆக்கியிருக்கிறது.

மதன் விவகாரம் வெடித்தவுடன், நல்லொழுக்கத்தின் உறைவிடமாக நடுத்தர வர்க்கத்தினரால் நம்பப்படுகின்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முதலாளி பச்சமுத்துவா இப்படி என்று அதிர்ச்சியுற்றவர்கள் எத்தனை பேர்? தரமான கல்வி நிறுவனமாகத் தன்னைக் காட்டிக்கொண்ட எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரியிலா 62 இலட்சம் ரூபாய்க்கு மெடிக்கல் சீட் விற்கப்பட்டது என்று கொதித்து எழுந்தவர்கள் எத்தனை பேர்?

2013-இல் பச்சமுத்துவின் வீடு, கல்லூரிகள், வேந்தர் மூவிஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. அச்சமயத்தில், ‘’அது கல்லூரியே அல்ல, மீன் மார்க்கெட். ஒவ்வொரு கோர்ஸையும் கூவிக்கூவி விற்கிறார்கள்” என்று அன்றைய நாளேடுகளில் பெற்றோர்கள் பலர் காறி உமிழ்ந்தார்கள்.
2013-இல் பச்சமுத்துவின் வீடு, கல்லூரிகள், வேந்தர் மூவிஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சி உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்து கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது. அச்சமயத்தில், ‘’அது கல்லூரியே அல்ல, மீன் மார்க்கெட். ஒவ்வொரு கோர்ஸையும் கூவிக்கூவி விற்கிறார்கள்” என்று அன்றைய நாளேடுகளில் பெற்றோர்கள் பலர் காறி உமிழ்ந்தார்கள்.

மதன் வழியாக வேந்தருக்குப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள்தான் கொதித்து எழுந்தார்களேயன்றி, மருத்துவக் கல்வியின் தரம் வீழ்ந்துபட்டதே என்று யாரும் கொதித்தெழவில்லை. கோடிக்கணக்கில் கருப்புப் பணத்தை வாங்கிக் கொண்டு டாக்டர் பட்டத்தை விற்பனை செய்த பச்சமுத்துவை எந்தக் கட்சியும் (பா.ம.க. தனது சொந்த நோக்கத்துக்காகக் குற்றம் சாட்டியதைத் தவிர) குற்றம் சாட்டவில்லை. இட ஒதுக்கீட்டினால் மருத்துவக் கல்வியின் தரம் வீழ்ச்சியடைவது குறித்து அங்கலாய்க்கும் அவாள்கள் யாரும் இவாளைப் பற்றி மூச்சு விடவில்லை. ஊடக உலகில் புதிய தலைமுறையின் போட்டி தொலைக்காட்சிகளும் கூட, பச்சமுத்துவைத் தீண்டவில்லை. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் மட்டும்தான் குமுறினர். அவர்கள் யாரும் மதன் வீட்டைத் தேடிப் போகவில்லை, பச்சமுத்து வீட்டு வாசலில்தான் குவிந்தனர்; என்ற போதிலும் பச்சமுத்துவின் மீது போலீசு வழக்கு பதிவு செய்யவில்லை, கைது செய்யவுமில்லை.

இதற்கெல்லாம் என்ன பொருள்? நடுத்தர வர்க்கம் அதிர்ச்சியடையும்படி எதுவும் நடந்துவிடவில்லை என்பதுதான் பொருள். மருத்துவப் படிப்பு விற்கப்படுவது நடுத்தர வர்க்கத்துக்குத் தெரியும். அது அவர்களுக்குப் பிரச்சினையில்லை. கல்வியோ, மருத்துவமோ, குடி தண்ணீரோ காசு கொடுத்து வாங்குவதில் தவறில்லை; ஆனால், அது தரமாக இருக்கவேண்டும், தங்களுக்குக் கட்டுப்படியாகிற விலையில் இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய கவலை. ஏழைகளுக்கு அது கட்டுப்படியாகாதே என்பது குறித்து அவர்களுக்குக் கவலை இல்லை. உயர்நிலைப் பள்ளி முதல் மெடிக்கல் சீட் வரை இட ஒதுக்கீடு காரணமாகத் தரம் வீழ்ச்சியடைவது மட்டும்தான் பார்ப்பன ‘உயர்’சாதியினரின் கவலையேயன்றி, பணத்தினால் தரம் வீழ்ச்சியடைவது பற்றியோ, அறம் வீழ்ச்சியடைவது பற்றியோ அவர்களுக்குக் கவலை இல்லை.

பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ, அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது
பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ, அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது

கட்சிகள் இந்த விவகாரத்தைப் பேசாமலிருக்க காரணம், கல்வி வள்ளல்கள்  எல்லா கட்சிகளிலும் நிறைந்திருக்கிறார்கள் என்பதுதான். வலது, இடது கம்யூனிஸ்டு கட்சிகளைப் போன்றோர், தொலைக்காட்சி ஸ்டுடியோ விளக்கொளியில்தான் உயிர் தரித்திருக்கின்றனர் என்பதால், அவர்கள் பச்சமுத்துவை விமரிசிப்பது என்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதில்லை.
மற்றபடி, அ.தி.மு.க. அரசு பச்சமுத்துவைப் பாதுகாப்பது குறித்து நாம் வியப்படைய ஏதுமில்லை.  அமைச்சர்களும், அல்லக்கை அதிகாரிகளுமே யோசிக்க முடியாத கோணத்திலிருந்தெல்லாம் ஜெயலலிதாவுக்கு முட்டுக் கொடுப்பது, ஜெயலலிதாவுக்கு எதிரான குறிப்பான குற்றச்சாட்டுகள் வரும்போதெல்லாம் அவற்றைப் பொதுவான தத்துவஞான பிரச்சினையாக மாற்றி, நடுநிலையில் நின்று அம்மாவுக்குச் சொம்படிப்பது, தமிழகத்தின் பொதுவெளியில் வெறுத்து ஒதுக்கப்பட்டிருந்த பார்ப்பனிய சிந்தனையையும் நபர்களையும் குளிப்பாட்டி நடுவீட்டில் அமரவைத்து, அவர்களை மதிக்கத்தக்கவர்களாக மாற்றுவது போன்ற நயமான நடவடிக்கைகள் காரணமாகவும், உரியவர்களுக்கு உரிய முறையில் சீட் ஒதுக்கித் தரும் பச்சையான நடவடிக்கைகள் காரணமாகவும் பச்சமுத்து ஜெயா அரசால் பாதுகாக்கப்படுகிறார்.

அச்சு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளோ இப்படி ஒரு பிரச்சினை நடந்தது போலவே காட்டிக் கொள்ளாமல் தொழில் தருமம் காத்து வருகின்றன. சாதிக்கட்டுப்பாட்டை விட உறுதியான கட்டுப்பாடு இது. போலியான ஆவேசம் காட்டிய ஊடகங்களும், “மதனின் கள்ளக்காதல் தொடர்புகள், நடிகைகளுடனான கிசுகிசுக்கள்” என்று பிரச்சினையைக் கிளுகிளுப்பான திசைக்கு மாற்றிவிட்டன.

மதன் தலைமறைவு என்ற செய்தியே பொய்யானது என்றும், அவர் கொல்லப்பட்டிருக்க கூடும் என்றும் ஒரு செய்தி உலவுகிறது. பாரி வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, பாரதிய ஜனதாவின் உறுதியான கூட்டாளியாகையால், வியாபம் ஊழல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கெல்லாம் என்ன நடந்து வருகிறதோ அதுதான் மதனுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

ரவுடிகள் வள்ளல்கள் ஆவதைப் போல, பச்சமுத்து கருப்புப் பணம் சேர்ந்தவுடன் பாரி வேந்தர் ஆனால்.
ரவுடிகள் வள்ளல்கள் ஆவதைப் போல, பச்சமுத்து கருப்புப் பணம் சேர்ந்தவுடன் பாரி வேந்தர் ஆனால்.

மதன், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு பாரி வேந்தருக்குப் பயன்பட்ட ஒரு அடியாள். தொழில் முறையில் பார்த்தால் வேண்டியபடி காரியத்தை முடித்துக் கொடுக்கும் ஒரு தரகன். இதே வேலையைக் கருத்துலகில் செய்வதற்கு, அதாவது ஒழுக்கக்கேட்டை ஒழுக்கமாகச் சித்தரிப்பது, திருட்டைத் திறமையாக காட்டுவது, விவாதத்தில் உள்ள பிரச்சினையின் மையப்பொருளைத் திசை திருப்புவது போன்ற கருப்பை வெள்ளையாகக் காட்டும் வேலைகளைச் செய்வதற்குத்தான் கொழுத்த ஊதியத்தில் அறிவுத்துறை அடியாட்களைத் தமது ஊடகங்களில் நியமித்திருக்கிறார் வேந்தர்.

இந்த ஊடக அடியாட்கள் கழுத்தில் தாம்புக்கயிறு சங்கிலியும் பிரேஸ்லெட்டும் அணிந்து, மதனைப் போல ஆபாசமாகத் தோன்றுவதில்லை. மதனிடம் பணம் கொடுத்து துண்டு சீட்டில் ரசீது வாங்கி வந்த அறவுணர்ச்சிமிக்க, யோக்கிய நடுத்தர வர்க்கத்தினரைப் போலத் தோற்றம் தருகிறார்கள். அந்த வர்க்கத்தின் அசட்டுத்தனமான அறச்சீற்றத்தையும், சாமர்த்தியமான இரட்டை வேடத்தையும் அறிவுபூர்வமான மொழிக்கு மாற்றி விவாதம் நடத்துகிறார்கள்.

இந்த நெறியாளர்கள் தங்களுடைய வாய் சாமர்த்தியத்தின் மூலம் ஜெயலலிதாவின் கண்டெயினரையே மறைக்கும் மாஜிக் நிபுணர்கள். தரகனின் முதல் தகுதியே வாய் சாமர்த்தியம்தானே ! மதனும்கூட சாமர்த்தியசாலிதான். ஆந்திராக்காரனையும், அசாம்காரனையும் ஒரு துண்டு சீட்டை நம்பி 62 இலட்சத்தை கொடுக்க வைத்திருக்கிறாரே! அப்படிப்பார்த்தால் அவரை விடத் திறமைசாலிகள் ஊடக அடியாட்கள்.  62 இலட்சத்துக்கு மெடிக்கல் சீட்டை விற்பனை செய்யும் ஒரு நபரை யோக்கியன் என்றும், அவருக்கு யோக்கியப் பட்டம் கொடுக்கும் தங்களை நடுநிலையாளர்கள் என்றும் மக்களை நம்ப வைத்திருக்கிறார்களே!

***

குறிப்பு:
இக்கட்டுரை அச்சுக்குப் போகும்போது மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, சத்யசாயி மருத்துவக் கல்லூரி போன்ற நிறுவனங்களில் ரெய்டு நடத்திய வருமான வரித்துறையினர், சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் கைப்பற்றியிருப்பதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன. உச்ச நீதிமன்றத்தின் “நீட்” தேர்வு உத்தரவு காரணமாக மெடிக்கல் சீட் கிடைக்காத மாணவனின் தந்தை ஒருவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு நிர்வாகத்திடம் கேட்டு, பணம் கிடைக்காத காரணத்தினால் புகார் செய்ததைத் தொடர்ந்துதான் இந்த ரெய்டு நடந்திருப்பதாகச் செய்தி கூறுகிறது.

எஸ்.ஆர்.எம். மெடிக்கல் சீட்டுக்குப் பணம் கொடுத்து ஏமாந்ததாக அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதன்படி பச்சமுத்துவின் வீட்டில் தொடங்கி கல்லூரி, தொலைக்காட்சி உள்ளிட்ட எல்லா இடங்களிலும் ரெய்டு நடந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதிலிருந்தே தெரியவில்லையா, வேந்தர் ரொம்ம்ம்ப நல்லவர் என்று!

– தமிழரசன்

புதிய ஜனநாயகம், ஜூலை 2016

வழக்கறிஞர்களுக்கு ஆதரவாக வட தமிழக தொழிலாளர் போராட்டம்

1

“நீதிமன்ற பாசிசத்துக்கு எதிரான வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிப்போம். கருப்புச் சட்டங்களை வீழ்த்துவோம்!” என்கிற தலைப்பின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக, பூந்தமல்லி அருகிலுள்ள குமணன் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ndlf-demo-against-judicial-fascism-01ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் விகந்தர் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில்.,

“தமிழகத்தில் நடைபெற்றுவரும் வழக்கறிஞர்களின் போராட்டத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்திருக்ககூடும். இருந்தபோதிலும், வழக்கறிஞர்கள் போராடுவது சரியா? தவறா? என்பன போன்ற பல கருத்துக்கள் மக்கள் மனதில் நிலவிவருகிறது. அவற்றிற்கு விடை அளிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமையும்.

தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராடுகிறார்களே! அவர்களுடைய கோரிக்கைதான் என்ன? உயர்நீதிமன்றம் கொண்டு வந்திருக்கும் வழக்கறிஞர் சட்டப்பிரிவு 34(1)-ல் சட்டத்திருத்தத்தை திரும்பபெற வேண்டும் என்பதுதான் வழக்கறிஞர்களுடைய போராட்டத்துக்கான காரணம். உயர்நீதிமன்றம் கொண்டுவந்துள்ள சட்டதிருத்தம் என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்து பார்த்தால் வழக்கறிஞர்களுடைய போராட்டம் சரியா? தவறா? என்பதை கண்டறிய முடியும்.

ndlf-demo-against-judicial-fascism-03சட்டத் திருத்தத்தின் வாயிலாக சொல்லக்கூடிய விஷயங்கள் என்ன என்று பார்த்தால்…

  • நீதிபதிகள் பெயரை பயன்படுத்தி வழக்கு தொடுப்பவரிடம் பணம் வசூலிக்க கூடாது!
  • நீதிபதிகளை தரக்குறைவாக பேசக்கூடாது!
  • ஆதாரமில்லாமல் நீதிபதிகள் குறித்து அவர்களது உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பக்கூடாது!
  • நீதிமன்ற ஆவணங்களை திருத்தக் கூடாது!
  • நீதிபதிகளை கெரோ செய்யக்கூடாது!
  • நீதிமன்ற வளாகத்திற்குள் முழக்க அட்டை பிடிக்கவோ, ஊர்வலமாக செல்வதோ கூடாது!
  • குடித்துவிட்டு நீதிமன்றத்திற்குள் வரக்கூடாது!

மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்களின் வழக்காடும் உரிமையை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பறிக்கின்ற அதிகாரம் நீதிபதிகளிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ndlf-demo-against-judicial-fascism-02ஜனநாயக உரிமைகளுக்காக போராடுபவர்களையும், குடிகாரர்களையும் ஒன்றுசேர்த்து பார்க்கமுடியுமா? வழக்கறிஞர்களின் போராட்ட குணம் என்பது புதிதல்ல. மிகப் மிகப் பாரம்பரியமானது. காவிரி, முல்லைப் பெரியாறு, ஈழ இனப்படுகொலை, என பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக 2009-ல் இந்திய அரசின் துணையோடு சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்களை படுகொலை செய்தபோது தமிழகமே கொந்தளித்தது. அப்போது இந்திய அரசை கண்டித்து நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். அந்தப் போராட்டத்தை முறியடிக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் நாம் மறந்து விட முடியாது. வழக்கறிஞர் போராட்டம் வலுவடைவதைக் கண்டு, போலிசை ஏவி ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது தமிழக அரசு. அந்த காலகட்டத்திலும் வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டோம். அதே அடிப்படையில் தான் இப்போதும் வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளிக்கிறோம்” என ஆர்ப்பாட்டத்தின் பின்னணியை விளக்கினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தனது உரையில்,

மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன்
மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் ஆர்ப்பாட்ட உரை

“வழக்கறிஞர் சட்டம் 1961 பிரிவு 34(1)-ல் திருத்தம் செய்துள்ளதன் மூலம் வழக்கறிஞர்களின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது. 18 பட்டி நாட்டாமைகளைப்போல நடந்து கொள்கின்றனர் நீதிபதிகள். இதுதான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படுகிற நீதிமன்றத்தின் நடவடிக்கை. வழக்கறிஞர் தவறு செய்தால் பார் கவுன்சில் தான் முன்னர் நடவடிக்கை எடுக்கும். பார் கவுன்சிலின் அதிகாரத்தைப் பறித்து தற்போது நீதிபதிகளே இதைக் கையிலெடுத்துள்ளனர். புகார் கொடுப்பது நீதிபதி விசாரிப்பது நீதிபதி. தண்டனையளிப்பதும் நீதிபதி. இது தான் அவர்களின் ஜனநாயகம்! என்ன ஜனநாயகம் இது? இது ஜனநாயக நாடா?

மன்னராட்சி போல உள்ளது. கேள்விக்குறி போல் முதுகு வளைந்து கிடக்கும் ஜெயா அமைச்சர்களைப் வழக்கறிஞர்கள் இருக்க வேண்டுமென நீதிபதிகள் கருகிறார்கள்.

ரயில் மறியல், உண்ணாவிரதம், நீதிமன்ற புறக்கணிப்பு என தொடர்ந்து வழக்கறிஞர் போராட்டம் நடத்திய பின்னர், இப்போது வாருங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்கிறார்கள் நீதிபதிகள். சட்டத்திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க மாட்டார்களாம். 05 நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்துவார்களாம். முதலில் சட்டத்திருத்ததை திரும்பப் பெறு பின்னர் பேசலாம் என்கிறார்கள், வழக்கறிஞர்கள். அரசாணை வெளியிடப்பட்டபின் நடவடிக்கை எடுக்க மாட்டோம் எனக் கூறுவது ஏமாற்று வேலை. இது ஒரு ஜனநாயகப் படுகொலை.

நீதிபதிகள் யோக்கியமானவர்களா?

ndlf-demo-against-judicial-fascism-13குடித்துவிட்டு வழக்காடக்கூடாது என்கிறார்களே, இப்படிச் செய்பவர்கள் யாரென்று தெரியாதா? அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?

நீதிபதிகள் என்ன உத்தமர்களா? கடவுள் தான் பெரிய சக்தி என்கிறார்களே அதுக்கும் மேலேயா?

அயோக்கியத்தனத்தில் ஈடுபடுபவர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், நீதிபதிகள் என் ஆதாரபூர்வமாக குற்றச்சாட்டுகள் இருந்தும் அதன் மீதான நடவடிக்கை இல்லை. தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பெண் நீதிபதியே புகார் கொடுத்துள்ளார்.

நிதி கொடுத்தால் நீதி கிடைக்கும் என்பது தமிழகத்தில் பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்படவில்லையா? வரலாற்றுப் புகழ் பெற்ற ஜெயாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் “ தனி நபர் சொத்து சேர்ப்பது தவறா?” என கேட்கவில்லையா? “மாருதி தொழிலாளர் போராட்டம், இந்தியாவுக்கு அவமானம்” என ஒரு நீதிபதி கூறவில்லையா? உச்சநீதிமன்ற நீதிபதிகள் 14 பேர் லஞ்சம் வாங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் சாந்திபூஷன் வெளிப்படையாக குற்றச்சாட்டு வைத்தாரே? இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? வைகுண்டராஜன், பிஆர்பி போன்றோர், தமிழக கணிம வளங்களை கொள்ளையடிக்க துணை போனவர்கள் அல்லவா இந்த நீதிபதிகள்?

ndlf-demo-against-judicial-fascism-05ஜே.என்.யு மாணவர் தலைவர் கன்னையா குமார் பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாலும், ஆர்.எஸ்.எஸ் குண்டர்களாலும் தாக்கப்பட்ட போது வேடிக்கை பார்த்தவர்களல்லவா இவர்கள். இவர்கள் தான் கோர்ட்டுக்குள் கொடி பிடிக்கக்கூடாது, கோஷம் போடக்கூடாது என உத்தரவிடுகிறார்கள். 10 பெண்களை அரைகுறை ஆடையுடன் நடனமாட வைத்து பார்த்து ரசிக்கிறார்கள் நீதிபதிகள் என பெண் வழக்கறிஞர்கள் புகார் கொடுத்தார்களே? அதன் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்களா? இந்த அயோக்கியர்கள் தான் தன்னை பற்றி பேசக்கூடாது என்கிறார்கள்.

தமிழக வழக்கறிஞர்கள் மீதான வன்மம் என்ன?

மறுகாலனியாக்க நடவடிக்கைகள மிகத் தீவிரமாக செய்து வருகிறார் மோடி. 8 துறைகளில் 100% அந்நிய மூலதனத்துக்கு அனுமதியளித்துள்ளது மோடி அரசு. இதை எதிர்த்துமக்கள் போராடக்கூடாது என்பதற்காக இந்து மதவெறியை தூண்டுகிறது. சமஸ்கிருதமயமாக்கத்துக்கெதிரான போராட்டம், தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டுமென்ற போராட்டம், ஈழ இனப்படுக்கொலைக்கெதிரான போராட்டம், சர்வதேச சமூகம் தலையிட வேண்டும், ஐ.நா தலையிட வேண்டுமென்றெல்லாம் தமிழக கட்சிகள் / அமைப்புகள் பேசிக்கொண்டிருந்த போது ராஜபக்சேவை தண்டிக்க நூரம்பர்க் போன்ற விசாரணை நடத்த வேண்டுமென குரல் கொடுத்தவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். அனைத்து பிரிவு உழைக்கும் மக்களுக்காகவும் போராடியவர்கள் தமிழக வழக்கறிஞர்கள். இது அரசியல் ரீதியானப் போராட்டம். தமிழகக் காவல்துறையின் ஒடுக்குமுறைக்கெதிராக முன்வரிசையில் நிற்பவர்கள் வழக்கறிஞர்கள்.

ndlf-demo-against-judicial-fascism-10மிகச் சமீபத்தில் ஆந்திராவில் வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் இணைந்து தான் போராடினார்கள். இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் தமிழக வழக்கறிஞர்கள் நடத்துவதைப்போல அரசியல் ரீதியான போராட்டங்கள் வழக்கறிஞர்கள் நடத்துவதில்லை. மற்ற மாநிலங்களில் நீதிபதிகள் – காவல்துறை – வழக்கறிஞர்கள் இந்த முக்கூட்டணியில் தான் தீர்ப்புகள் எழுதப்படுகிறது.

பு.ஜ.தொ.மு ஏன் இந்த போராட்டத்தை ஆதரிக்கிறது?

எங்களுக்கும் நீதிபதிகளுக்கும் தனிப்பட்ட முரண்பாடா? அல்லது எங்களது தொழிற்சங்க ரீதியான வழக்குகளில் நீதிபதிகள் ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டர்கள் என்பதற்காகவா?

இல்லை.

எந்த வர்க்கம் ஒடுக்கப்பட்டாலும் அதற்காக குரல் கொடுப்பது எங்களது கடமை. இந்த பாசிசத்தாக்குதலுக்கு எதிராக மட்டுமல்ல, இந்துமயமாக்கலுக்கு எதிராகவும், தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கைகளினால் உழைக்கும் மக்கள் சுரண்டப்படும் போதும் அதற்கெதிராக குரல் கொடுப்பதும், களத்தில் நின்று போராடி வீழ்த்துவதும் ஒரு புரட்சிகர அமைப்பின் பணி என்ற வகையிலே தான் வழக்கறிஞர் போராட்டத்தை ஆதரிக்கிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா
காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா நன்றியுரை

இந்த அரசுக் கட்டமைப்பு ஆளத்தகுதியிழந்து தோற்றுபோய் விட்டது. இனிமேலும் இந்த அரசமைப்புக்குள்ளேயே நின்று இதற்கு தீர்வு தேட முடியாது. மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்வது தான் தீர்வு. தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும் அதிகாரமுள்ள மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். அப்படி ஒரு அமைப்பை நிறுவும்போது நீதிமன்ற சர்வாதிகாரத்துக்கு முடிவு கட்ட முடியும். அதற்காக உழைக்கும் மக்கள் ஓரணியில் திரள வேண்டும்” என்று அறைகூவினார்.

இறுதியாக, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தையொட்டி பிரச்சாரம் செய்த தோழர்களுக்கும், ஒளி, ஒலி அமைத்தவர்களுக்கு நன்றி தெரிவித்து  நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்ட முழக்கம்

ndlf-demo-against-judicial-fascism-19ஆதரிப்போம் ஆதரிப்போம்!
நீதிமன்ற பாசிசத்துக்கெதிரான
வழக்கறிஞர் போராட்டத்தை
ஆதரிப்போம் ஆதரிப்போம்!

நீதிபதிகளை ஆண்டைகளாகவும்
வழக்கறிஞர்களை அடிமைகளாகவும்
மாற்றத் துடிக்குது நீதிமன்றம்

தமிழ் மொழியில் வழக்காட
இந்தித் திணிப்புக்கெதிராக
ஈழப்படுகொலைக்கெதிராக
காவிரி – பெரியாறு உரிமை மீட்க
இயற்கை வளங்களைப் பாதுகாக்க
ஊழல் நீதிபதிகளுக்கு எதிராக
போராடியவர்கள் வழக்கறிஞர்கள்

ndlf-demo-against-judicial-fascism-14போராடும் வழக்கறிஞர்களுக்கு
வாய்ப்பூட்டு போடவே
அடிமைகளாக நடத்தவே
வழக்கறிஞர் சட்டத்திருத்தம்

துணை நிற்போம்! துணை நிற்போம்
சட்டத்திருத்ததுக்கு எதிராக
வழக்கறிஞர்கள் நடத்துகின்ற
போராட்டத்தில் துணை நிற்போம்!

உத்தமர்களா உத்தமர்களா
ஆற்றுமணல் தாதுமணல்
நிலக்கரி, கிராணைட் உள்ளிட்ட
இயற்கை வளங்களை சூறையாடும்
தேசத்துரோகிகளை பாதுகாக்கும்
நீதிபதிகள் உத்தமர்களா?

ndlf-demo-against-judicial-fascism-11உரிமைக்காக போராடிய
மாருதி தொழிலாளிகளுக்கும்
கோவை பிரிக்கால் தொழிலாளிகளுக்கும்
லார்டுகள் கொடுத்த தீர்ப்பு என்ன?

அழுகி நாறுது அழுகி நாறுது
ஜனநாயகத்தின் கடைசி புகலிடம்
நீதிமன்றமே அழுகி நாறுது

முறியடிப்போம்! முறியடிப்போம்!
ஜனநாயகத்துக்கெதிரான
நீதிமன்ற கருப்புச் சட்டங்களை
முறியடிப்போம்! முறியடிப்போம்!

தீர்வு இல்லை! தீர்வு இல்லை!
நிலவுகின்ற கட்டமைப்புக்குள்
தீர்வு இல்லை தீர்வு இல்லை

கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
தேர்ந்தெடுக்கவும், திருப்பியழைக்கவும்
மக்களுக்கு அதிகாரமுள்ள
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 8807532859, 9444461480, 9445368009, 9994386941