Thursday, July 17, 2025
முகப்பு பதிவு பக்கம் 561

“லவ் ஜிகாத்” – திரைக்கதை, வசனம், டைரக்சன் ஆர்.எஸ்.எஸ்.

2
பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்
முசுலீம்களால் ஜாட் சாதி பெண்களுக்கு ஆபத்து என்ற பொய்யைப் பரப்பிய ஆர்.எஸ்.எஸ்., ஜாட் சாதிவெறியர்களோடு இணைந்துகொண்டு நடத்திய முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம் பெண்ணும் குழந்தையும். (கோப்புப் படம்)

டந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சற்று முன்னதாக, ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் ஜாட் சாதிவெறியைத் தூண்டிவிட்டு உத்திரப்பிரதேசத்தின் முசாஃபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில்ஏழை முசுலீம்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிட்ட கலவரத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான முசுலீம் குடும்பங்கள் அதுவரை தாம் வாழ்ந்துவந்த கிராமங்களிலிருந்து துரத்தப்பட்டு, சொந்த மாநிலத்திலேயே அகதிகளாக்கப்பட்டனர். தேர்தலை மனதில் வைத்து நடத்தப்பட்ட இந்தக் கலவரம் உ.பி.யின் மேற்கு மாவட்டங்களில் ஜாட் சாதியினருக்கும் முசுலீம்களுக்கும் இடையே அதுவரை நிலவி வந்த சமூக நல்லிணக்கத்தை உடைத்துப் போட்டு, ஆழமான பிளவை ஏற்படுத்தியது.

முசுலீம் இளைஞனான ஷாநவாஸ், ஜாட் சாதியைச் சேர்ந்த சச்சினின் சகோதரியைக் காதலிக்கிறான் என்று, பாலியல் தொந்திரவு செய்கிறான் என்று ஷாநவாஸையும் சச்சினின் சகோதரியையும் தொடர்புபடுத்தி பரப்பபட்ட வதந்திகளைப் பயன்படுத்திக் கொண்டு, ஜாட் சாதிவெறி யைத் தூண்டிவிட்டு இந்தக் கலவரத்தை நடத்தி முடித்தது, ஆர்.எஸ்.எஸ். ஷாநவாஸ் ஜாட் சாதிவெறியர்களால் கொல்லப்பட, பதிலுக்கு ஜாட் சாதியைச் சேர்ந்த சச்சின், கவுரவ் என்ற இரு இளைஞர்கள் முசுலீம் கும்பலால் கொல்லப்பட்டனர். தனிப்பட்ட கொலை, அடிதடியாக முடிந்துபோயிருக்க வேண்டிய பிரச்சினையொன்றை, முசுலீம் இளைஞர்களால் ஜாட் சாதி பெண்களுக்கு ஆபத்து என ஆர்.எஸ்.எஸ். ஊதிப் பெருக்கி, இதனை இன்னொரு முசுலீம் பயங்கரவாத நடவடிக்கையாக, “லவ் ஜிகாத்” என முத்திரை குத்தியது.

இந்தக் கலவரமும், அதனைத் தொடர்ந்து பல்வேறு தளங்களில் நடந்த முசுலீம் எதிர்ப்பு பிரச்சாரமும்தான் உ.பி.யில் பா.ஜ.க. 71 நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது. அது மட்டுமின்றி, ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களின் வாக்குகளைப் பெறுவதற்கும், ஆதிக்க சாதிவெறியை முசுலீம்களுக்கு எதிரான இந்து மதவெறியாக மடை மாற்றுவதற்கும் ராமனை விட, முசுலீம்கள் குண்டு வைக்கிறார்கள் எனப் பீதியூட்டுவதை விட, லவ் ஜிகாத் – முசுலீம் இளைஞர்களால் இந்துப் பெண்களுக்கு ஆபத்து, சாதி கௌரவத்திற்கு ஆபத்து என்ற பிரச் சாரம் – அதிகப்பயன் தருவதையும் கண்டுகொண்டது ஆர்.எஸ்.எஸ்.

ஷாலு கலீம் தம்பதியினர்
லவ் ஜிஹாத் – என ஆர்.எஸ்.எஸ். பரப்பிவரும் பொய்யையும் அவதூறையும் அம்பலப்படுத்தித் திருமணம் செய்துகொண்ட ஷாலு – கலீம் தம்பதியினர்.

இப்படியான சூழ்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல்களும் முடிந்து உ.பி.யில் பெரும்பாலான தொகுதிகளை பா.ஜ.க. கைப்பற்றி வெற்றிக் கொண்டாட்டங்களை நடத்திக் கொண்டிருந்த வேளையில்,உ.பி.யின் மீரட் பகுதியிலுள்ள சாரவா கிராமத்தில் வசித்துவரும் ஜாட் சாதியைச் சேர்ந்த ஷாலு என்ற இளம் பெண், உல்தான் கிராமத்தைச் சேர்ந்த கலீமும் அவரது நண்பர்களும் தன்னைக் கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தியதோடு, மதம் மாறுமாறு வலுக்கட்டாயப்படுத்துவதாகவும் குற்றஞ்சுமத்தி போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கலீமும் அவரது ஐந்து நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

ஷாலு-கலீம் விவகாரம் எரிகிற நெருப்பில் எண்ணெயை எடுத்து ஊற்றியது போல ஆனது. உள்ளூர் இந்திப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் ஷாலு அளித்த புகாரையும் கலீம் கைது செய்யப்பட்டதையும் லவ் ஜிகாத் மிகப் பெரும் அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதற்கான ஆதாரங்களாகக் காட்டிப் பீதியுட்டின. இதற்காகவே காத்திருந்ததைப் போல, “இந்து சகோதரிகள், மகள்கள் பாதுகாப்பு இயக்கம்” மற்றும் “மீரட் பாதுகாப்பு இயக்கம்” என்ற பெயர்களில் புதிதுபுதிதான இந்து மதவெறி அமைப்புகளை உருவாக்கி, அப்பாவி இந்துப் பெண்களை முசுலீம் காமுகர்களிடம் இருந்து காப்பாற்றக்கோரும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, முசுலீம் வெறுப்புப் பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது, ஆர்.எஸ்.எஸ்.

ஷாலு-கலீம் விவகாரம் மேற்கு உ.பி.யில் அடுத்த கலவரத்திற்கு இட்டுச் சென்றுவிடக்கூடிய முறுகல் நிலையைத் தோற்றுவித்த நிலையில், ஷாலு, தான் புகார் கொடுத்த மூன்றாவது மாதத்தில் -கடந்த ஆண்டு அக்டோபர் 2014-இல் உள்ளூர் மாஜிஸ்டிரேட் கோர்ட்டில், கலீம் மீது தான் கொடுத்த புகார் தவறானது என வாக்குமூலம் அளித்ததோடு, தானும் கலீமும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், இதனை விரும்பாத தனது தந்தை நரேந்தர் தியாகி தன்னை வலுக்கட்டாயப்படுத்தி கலீம் மீது புகார் கொடுக்கச் செய்ததாகவும், இதற்காக உள்ளூர் பா.ஜ.க. பிரமுகர் தனது தந்தைக்குப் பணம் கொடுத்ததாகவும் உண்மையைப் போட்டு உடைத்து, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதித்தனத்தையும், புளுகுணித்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.

பாதிக்கப்பட்ட முஸ்லீம் பெண்
முசுலீம்களால் ஜாட் சாதி பெண்களுக்கு ஆபத்து என்ற பொய்யைப் பரப்பிய ஆர்.எஸ்.எஸ்., ஜாட் சாதிவெறியர்களோடு இணைந்துகொண்டு நடத்திய முசாஃபர் நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம் பெண்ணும் குழந்தையும். (கோப்புப் படம்)

“எனது பெற்றோர்களின் விருப்பத்திற்கு எதிராக நான் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் உறுதியோடு இருப்பதால், அவர்கள் என்னைக் கொல்லத் துணியக்கூடும்” என நீதிபதியிடமே வாக்குமூலம் அளித்த அவர், வீட்டைவிட்டு வெளியேறி அரசின் இல்லத்தில் தங்கினார். ஷாலு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கலீம் 2015 ஏப்ரலில் பிணையில் விடப்பட்டு, பின்னர் அலகாபாத் உயர்நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். 2015 டிசம்பரில் ஷாலுவும் கலீமும் திருமணம் செய்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் முகத்தில் கரியைப் பூசினர்.

ஷாலு-கலீம் விவகாரத்தை உள்ளூர் அளவில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய தனித்ததொரு சதிச் செயலாகக் கருதி ஒதுக்கித் தள்ளவிட முடியாது. லவ் ஜிகாத் குறித்து கோப்ரா போஸ்ட், குலைல் என்ற இரு இணைய தள இதழ்கள் நடத்திய “ஆபரேஷன் ஜூலியட்” என்ற இரகசியப் புலனாய்வில், இந்த நச்சுப் பிரச்சாரம் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. தலைமையின் ஆசியோடும், ஒப்புதலோடும் நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்தப்படும் மற்றொரு இந்துத்துவா திட்டம் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

கோப்ரா போஸ்ட் இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் சிசுபால் குமாரும், குலைல் இதழைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷாஸியா நகரும் தம்மை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் என்றும், ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் காட்டிக்கொண்டு, உ.பி. புதானா சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராகப் போட்டியிட்ட உமேஷ் மாலிக், முசாஃபர் நகர் பா.ஜ.க. எம்.எல்.ஏ சுரேஷ் ராணா, முசாஃபர் நகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட சஞ்ஜய் அகர்வால், வி.ஹெச்.பி ஊழியர் ராதே ஷ்யாம், கிருஷ்ண சேனா கட்சியின் நிறுவனர் சிவகுமார் ஷர்மா, கேரளாவில் இருந்து செயல்படும் இந்து ஒற்றுமை மன்றத்தின் தலைவன் ரவீஷ் தந்த்ரி உள்ளிட்ட பலரைச் சந்தித்து, ஏறத்தாழ ஒரு வருட காலம் இந்த இரகசியப் புலனாய்வை நடத்தி, ஆதாரங்களைச் சேகரித்து, அதனைப் பல மணி நேரங்கள் ஓடக்கூடிய காணொளி பதிவுகளாக வெளியிட்டுள்ளனர். இந்து மதவெறியர்கள் இந்த இரகசியப் புலனாய்வில் அளித்திருக்கும் சுயவாக்கு மூலங்கள், “லவ் ஜிகாத்” என்ற பெயரில் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் திட்டமிட்ட சதியின் மூலம் நடத்தப்பட்டவை என்பதை அம்பலப்படுத்தியுள்ளன.

பா.ஜ.க அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்
கோப்ரா போஸ்ட், குலைல் இணைய இதழ்கள் நடத்திய இரகசியப் புலனாய்வில் லவ் ஜிஹாத் என்ற போர்வையில் தாங்கள் நடத்திய சதிகளை ஒப்புக்கொண்ட மைய அரசின் விவசாயத் துறை இணை அமைச்சர் சஞ்ஜீவ் பல்யான் (இடது) மற்றும் உ.பி. மாநில பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ராணா.

முசாஃபர் நகர் பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேஷ் ராணா, “சாதாரணமாக நடக்கிற மதமாற்றத் திருமணத்தைக் கலைக்க நாங்கள் இசுலாமிய இளைஞர்கள் மீது பாலியல் வல்லுறவு அல்லது கடத்தல் வழக்கைப் போட வைப்போம். எங்களின் இத்திட்டத்திற்குச் சம்மதிக்க மறுக்கும் இந்து பெண்களை ஏதாவதொரு விதத்தில் ஒப்புக்கொள்ள வைப்போம்; அப்படியும் சம்மதியாமல் முரண்டு பிடிப்பவர்களுக்கு இரண்டு அறைவிட்டால் போதும், அப்பெண்கள் அடிக்கு பயந்து உடனே சம்மதித்து விடுவார்கள். பிறகு அவர்களாகவே போலீசு நிலையம் சென்று, கடத்தல் மற்றும் கற்பழிப்பு புகாரைப் பதிவு செய்வார்கள்” எனத் தங்களது நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறான்.

கேரள இந்து ஒற்றுமை மன்றத்தின் தலைவன் ரவீஷ் தந்த்ரி, “முசுலீம்களைத் திருமணம் செய்து கொண்டு மதம் மாறிய பெண்கள், தமது கணவன்மார்களுடன் இப்பிரச்சினை தொடர்பான வழக்கை சந்திப்பதற்காக நீதிமன்றத்துக்கு வரும்போது, உங்கள் பெற்றோர் தரப்பிற்கு ஆதரவாகப் பேசவேண்டும்; மேலும் உன் கணவனை விட்டுவிட்டு, நாங்கள் சொல்லும் நபரைத் திருமணம் செய்ய வேண்டும்; இல்லையென்றால், நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்பொழுதே கொலை செய்துவிடுவோம்” என மிரட்டுவோம் எனக் கூறியிருக்கிறான்.

பா.ஜ.க.வின் முசாஃபர்நகர் நகராட்சித் தேர்தலில் போட்டியிட்ட சஞ்ஜய் அகர்வால், “இசுலாமிய இளைஞர்கள் “லவ் ஜிகாத்” என்ற பெயரில் நமது பெண்களைத் தூக்கிச் செல்கிறார்கள்; இந்தத் தெருவில் வசிக்கும் இந்த இந்துப்பெண்ணை குறிப்பிட்ட இசுலாமிய இளைஞன் கடத்திச் சென்றுவிட்டான். அதனால் நாம் லவ் ஜிகாத்திற்கு எதிராகப் போராட வேண்டும் எனத் தேர்தல் கூட்டங்களில் பேசுவதன் மூலம் முசுலீம்கள் மீதான வெறுப்புணர்வை இந்துக்களிடம் விதைப்பேன்” என வாக்குமூலம் அளித்திருக்கிறான்.

லவ் ஜிகாத் எனும் நச்சுப் பிரச்சாரத்தை இந்தியாவெங்கும் எடுத்துச் செல்வதற்கு ஏற்ப இந்த அமைப்புகளின் வலைப் பின்னல் உ.பி.யின் முசாஃபர்நகர், மீரட்டில் ஆரம்பித்து மேற்கு வங்கம், கர்நாடகத்தின் மங்களூர் மற்றும் கேரளத்தின் காசர்கோடு, எர்ணாகுளம் வரை காணப்படுவதையும்; சித்தாந்த ரீதியாகப் பெண்களின் மனதை மாற்ற ஆலோசனை மையங்கள், ஹெல்ப்லைன்கள் செயல்படுத்தப்படுவதையும் இந்த இரகசியப் புலனாய்வு அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ்.- இன் லவ் ஜிகாத் சதி தமிழகத்தை எட்டிப் பார்க்கவில்லை என்றாலும், அதற்கு இணையான ஒன்றை, நாடகக் காதல் என்ற பெயரில் வன்னியர், கவுண்டர், தேவர் சாதிவெறி அமைப்புகள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக நடத்தி வருகின்றன. உ.பி.யில் ஜாட் சாதிவெறியை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியாக மாற்றுவதில் வெற்றி கண்டுள்ள ஆர்.எஸ்.எஸ்.-க்குத் தமிழகத்திலும் அதே உத்தியைப் பயன்படுத்தி மதவெறிக் கலவரங்களை உருவாக்குவதற்கு, இந்த நாடகக் காதலும் ஆதிக்க சாதி அமைப்புகளும் அடித்தளமாக அமையும்.

காலனிய காலக் கட்டத்தில் பசு வதைத் தடுப்பு, போலி சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தான் எதிர்ப்பு, இட ஒதுக்கீடு எதிர்ப்பு, ராமர் கோவில், காஷ்மீர், மாட்டுக் கறி – எனத் தனது இந்துத்துவா திட்டங்களைக் காலச் சூழல்களுக்கு ஏற்ப செயல்படுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ்.-இன் இன்னொரு மதவெறி பாசிசத் திட்டம்தான் லவ் ஜிகாத். முன்னவற்றைப் போலவே லவ் ஜிகாத்தும் சதிகளும், புளுகுகளும், அரை உண்மைகளும் நிறைந்தது என்பதை கோப்ரா போஸ்ட், குலைல் இணைய இதழ்கள் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருப்பதைத் தேசிய ஊடகங்களும் போலீசுத்துறையும் மட்டுமல்ல, நீதிமன்றங்களும்கூட ஒரு பொருட்டாகக் கருதாமல் ஒதுக்கித் தள்ளிவிட்டன.

குஜராத் படுகொலை குறித்த தெகல்காவின் புலனாய்விற்கு என்ன கதி நேர்ந்ததோ, அதே நிலை லவ் ஜிகாத் குறித்த இரகசியப் புலனாய்விற்கும் நேரிட்டிருப்பது, இந்த நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ்.இன் பொய்களுக்கும் சதிகளுக்கும் அவதூறுகளுக்கும் தரும் முக்கியத்துவத்தை, விளம்பரத்தை, உண்மைக்கும், நியாயத்திற்கும், பார்ப்பன பாசிசத்திற்கு எதிரான போராட்டத்திற்கும் தருவதில்லை என்பதை மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

– அன்பு

புதிய ஜனநாயகம் மார்ச் 2016

கெயில் தீர்ப்பு : ராமன் பாலத்துக்கு நீதி ! விவசாயி நிலத்துக்கு அநீதி !!

0

கெயில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு: ராமன் பாலத்துக்கு நீதி!
விவசாயிகளின் நிலத்துக்கு அநீதி!!

ளியவர்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம்தான் என முதலாளித்துவ ஊடகங்களாலும், அறிவுத் துறையினராலும் முன்னிறுத்தப்படும் அந்த இரட்சகன் ஒரு பசுத்தோல் போர்த்திய புலி என்பதை எரிவாயு குழாய் பதிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மீண்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது. தமிழகத்தின் மேற்கே அமைந்துள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்று முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களையும், அவ்வூர்களைச் சேர்ந்த 5,842 சிறு விவசாயிகளை நேரடியாகவும், பல்லாயிரக்கணக்கான மக்களை மறைமுகமாகவும் பாதித்து, அவர்களின் நிகழ்கால சேமிப்புகளையும், எதிர்கால வாழ்க்கையையும் ஒருசேர நிர்மூலமாக்கவுள்ள இத்தீர்ப்பில், தேசிய நலனின் முன்னே விவசாயிகளின் உணர்ச்சிகளுக்கெல்லாம் இடங்கொடுக்க முடியாது” என ஞான உபதேசம் செய்திருக்கிறார்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

gail-sc-verdict-1
கெயில் குழாய் செல்லும் பாதை.

தமிழகத்தின் மேற்கு மாவட்ட விவசாயிகள் கொச்சியிலிருந்து பெங்களூருக்கு குழாய் வழியாக இயற்கை எரிவாயுவை எடுத்துச் செல்லும் கெயிலின் (இந்திய எரிவாயுக் கழகம்) திட்டத்தை முற்றிலுமாக நிராகரிக்கவில்லை. தங்களின் கிராமம், வயல்வெளிகள், பயிர்கள், கிணறுகள், வீடுகள், பசுமாட்டுக் கொட்டகைகள், கோழிப் பண்ணைகள் ஆகியவற்றை அழித்துக் குழாய்களைப் பதிப்பதற்குப் பதிலாக, அக்குழாய்களை மாற்றுப் பாதையில் – நெடுஞ்சாலை வழியாக கெயில் நிறுவனம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. இதைக் கோரும் உரிமை விவசாயிகளுக்கும் கிடையாது, தமிழக அரசுக்கும் கிடையாது -எனக் கட்டளையிட்டுள்ள உச்சநீதிமன்றம், கேரளாவைப் போல, கர்நாடகாவைப் போல தமிழ்நாடும் இத்திட்டத்தால் பலன் பெற வேண்டாமா?” என பேரம் பேசி, அதற்கு 136 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் வாழ்க்கையைப் பலியிட்டிருக்கிறது.

கொச்சி-குட்டநாடு-பெங்களூரு-மங்களூரு குழாய் திட்டம் 2011-ஆம் ஆண்டு முடிவில் அன்றைய காங்கிரசு கூட்டணி அரசால் இறுதி செய்யப்பட்டு, அதற்குத் தமிழக மற்றும் கேரள மாநில அரசுகளின் ஒப்புதலும் பெறப்பட்டது. கொச்சியிலிருந்து கோழிக்கோடு வழியாக கர்நாடகாவின் மங்களூருக்கும், கொச்சியிலிருந்து பாலக்காடு, கோவை, சேலம், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கும் இயற்கை எரிவாயுவைக் கொண்டு செல்லும் இத்திட்டத்தின் மொத்த தூரம் 1,104 கி.மீ. இதில் முக்கிய எரிவாயு தடத்தின் (–Main PipeLine) நீளம் மட்டும் 893 கி.மீ. எரிவாயுவைக் கொண்டு செல்லுவதற்கு கேரளாவில் 501 கி.மீ. தூரத்திற்கும், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் 310 கி.மீ. தூரத்திற்கும், கர்நாடகாவில் 60 கி.மீ. தூரத்திற்கும் குழாய்கள் பதிக்க வேண்டும்.

இதற்கு கேரளாவின் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம், திரிசூர், எர்ணாகுளம், பாலக்காடு மாவட்டங்களிலும், கர்நாடகாவின் தட்சிண கன்னடா, சாம்ராஜ்நகர், மாண்டியா, பெங்களூரு மாவட்டங்களிலும் விவசாயிகளிடமிருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனாலும், தமிழகத்தின் ஏழு மாவட்ட விவசாய நிலங்களில் குழாய்
களைப் பதிப்பதற்குத்தான் கெயில் முண்டிக்கொண்டு நிற்கிறது.

இத்திட்டத்தை தமிழக விவசாயிகளைப் போலவே, கேரள, கர்நாடகா மாநில விவசாயிகளும் எதிர்த்து நிற்கின்றனர். அமெரிக்க தரத்தில் இத்திட்டத்தை மேற்கொண்டாலும், எங்கள் நிலங்களில் குழாய் களைப் பதிப்பதை அனுமதிக்க மாட்டோம்” என அவ்விவசாயிகள் கூறுவதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. கேரள விவசாயிகளின் எதிர்ப்பால் கொச்சி-மங்களூரு குழாய் பதிப்பு திட்டம் முந்தைய காங்கிரசு ஆட்சியிலேயே கைவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவருகின்றன. உண்மை இவ்வாறிருக்க, தமிழக விவசாயிகள் மட்டும்தான் இத்திட்டத்தின் மதிப்பு தெரியாமல் எதிர்த்துக் கொண்டு நிற்பதாக உச்சநீதி மன்றம் கூறியிருப்பது கடைந்தெடுத்த பொய்.

gain-sc-verdict-4
விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதிக்கப்படுவதை எதிர்த்து தருமபுரி மாவட்டம் ஏலகிரியிலும் (வலது) கேரளாவின் காசர்கோடு பகுதியிலும் விவசாயிகள் நடத்திய முற்றுகைப் போராட்டங்கள். (கோப்புப் படங்கள்)

விளைநிலங்களில் இரண்டு அடி விட்டமுள்ள குழாய்கள் ஒரு மீட்டர் ஆழத்தில் பதிக்கப்பட்டு, குழாய் செல்லும் இருபுறமும் சேர்த்து 66 அடி அகலம் கொண்ட நிலப்பகுதியை கெயில் நிறுவனம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். நிலத்தின் பட்டாவைத் தனது பெயருக்கு மாற்றிக் கொள்ளவில்லை என்றும், அந்தக் குறிப்பிட்ட நிலப் பகுதியின் அனுபோக உரிமையை மட்டுமே பெற்றிருப்பதாகவும், மீதமுள்ள நிலப்பகுதியில் பட்டாதாரர்கள் விவசாயம் செய்து கொள்ள உரிமையுண்டு எனத் தேன் தடவிய வார்த்தைகளில் இந்தக் கையகப்படுத்தலை கெயில் நிறுவனமும், மைய அரசும், உச்சநீதி மன்றமும் நியாயப்படுத்தியுள்ளன.

கெயில் குறிப்பிடும் இந்த அனுபோக உரிமை விளைநிலங்களைப் புறக்கடை வழியாக முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும் நயவஞ்சகம் நிறைந்தது. குழாய் செல்லும் பாதை விளைநிலத்தை இரண்டு துண்டுகளாக்கி, அதனை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் தென்னை, மா, பலா, புளி போன்ற மரப் பயிர்களைத்தான் விவசாயிகள் தமது வருமானத்திற்கு நம்பியிருக்கும் நிலையில், அப்படிபட்ட வேர்கள் ஆழமாகப் பூமியினுள் ஊடுருவிச் செல்லும் எந்தவிதமான மரப் பயிர்களையும் குழாய் செல்லும் பாதைக்கு அருகே பயிர் செய்யக் கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறது, கெயில் நிறுவனம். நிலத்தைக் கையகப்படுத்தும்பொழுதே, அத்தகைய ஒரு இலட்சத்திற்கு அதிகமான மரப் பயிர்களை கெயில் நிறுவனம் அழித்துவிட்டது. மரப் பயிர்கள் மட்டுமின்றி, குழாய் செல்லும் பாதையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கூடாது; கிணறுகள் இருந்தால் அவை மூடப்படும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறது, கெயில்.

‘‘தனது நிலத்தில் காய்ப்பு கொடுக்கும் 240 தென்னை மரங்கள் இருந்ததில், குழாய் அமைப்பதற்காக 120 தென்னை மரங்களை வெட்டப்பட்டு அழிக்கப்பட்டதையும்; குழாய் செல்லும் பாதையில் இருந்த ஆழ் துளைக் கிணறும் தூர்க்கப்பட்டுவிட்டதால், மீதமிருந்த தென்னை மரங்களும் போதிய நீர் பாய்ச்ச முடியாமல் அழிந்து போனதையும்” வேதனையோடு விவரிக் கிறார், விவசாயி ஒருவர்.

குழாய் செல்லும் பாதைக்கு அருகே வண்டி செல்லும் பாதை அமைக்கக் கூடாது; தண்ணீரை ஒருபுறத்திலிருந்து இன்னொரு gain-sc-verdict-5புறத்திற்கு எடுத்துச் செல்லும் பாத்திகளை அமைக்கக் கூடாது; நீர்க் குழாய்களைப் பதிக்கக்கூடாதென கெயில் விதித்திருக்கும் நிபந்தனைகள், நிலத்தைத் தரிசாகப் போடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு விவசாயிகளைத் தள்ளியிருக்கிறது நிலத்தின் அனுபோக உரிமையை 99 வருடங்களுக்கு எடுத்துக் கொண்டுள்ள கெயில், அதன் மூலம் இந்த தலைமுறையை மட்டுமல்ல, எதிர்வரும் சந்ததியினரையும் நிலத்திலிருந்து அப்புறப்படுத்திவிட்டது.

சமையல் எரிவாயுவைச் சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ள முன்வர வேண்டும் எனப் பொதுமக்களுக்கு உபதேசிக்கும் அரசு, விவசாயிகளின் நிலத்திற்கு சந்தை மதிப்புபடி நட்ட ஈடு தரவில்லை. மாறாக, நிலத்தின் அனுபோக உரிமையை மட்டுமே எடுத்துக் கொள்கிறோம் என்ற சந்துக்குள் ஒளிந்துகொண்டு, நிலத்தின் வழிகாட்டும் மதிப்பில் வெறும் 10 சதவீதத்தை மட்டுமே விவசாயிகளுக்கு நட்ட ஈடாக அளித்திருக்கிறது. இதன்படி கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜி என்ற விவசாயிக்குக் கிடைத்த நட்ட ஈடு வெறும் 13 ரூபாய்தான். அடிமாடுகளைக்கூட எந்தவொரு விவசாயியும் இந்த விலைக்கு விற்க முன்வரமாட்டான் எனும் நிலையில் சட்டம், போலீசைக் கொண்டு விவசாயிகளை அச்சுறுத்தி, இந்த அபகரிப்பை நடத்தி முடித்திருக்கிறது, கெயில்.
1962-இல் இயற்றப்பட்ட பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் குழாய் பதிப்புச் சட்டத்தின் கீழ்தான் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இச்சட்டம் குழாய் பதிக்கப்பட்டுள்ள நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிப்பதோடு, குழாய்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை பட்டாதாரரின் மீது சுமத்தி அவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கும் அதிகாரத்தை கெயிலுக்கு அளிக்கிறது. அவ்வழக்குகளில் விவசாயிதான் தன்னைக் குற்றமற்றவராக
நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். தவறினால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையும் இச்சட்டத்தின்படி அளிக்க முடியும். இச்சட்டம் குற்றம் சுமத்துபவர்தான் குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்ற இயற்கை நீதிக்கு எதிரானது மட்டுமல்ல, தடா, பொடா போன்ற பாசிச சட்டங்களுக்கு இணையானது. இந்தச் சட்டரீதியான அச்சுறுத்தல் வழியாக விவசாயிகளைக் குழாய்களைக் காவல் காக்கும் சம்பளமில்லாத செக்யூரிட்டிகளாக மாற்றிவிட்டது, கெயில்.

எழுபது சதவீத விவசாயிகளின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் நிலங்களைக் கையகப்படுத்த வேண்டும் எனப் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் விதி இருந்தாலும், அதனை ஒதுக்கிவைத்துவிட்டு விவசாயிகளின் நிலங்களைக் கையகப் படுத்துவதற்காகவே மைய அரசின் சில சட்டங்களுக்குப் புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அப்படி விலக்கு அளிக்கப்பட்ட சட்டங்களுள் ஒன்றுதான் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் குழாய் பதிப்பு சட்டம். அதனால் இச்சட்டத்தின் கீழ் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு விவசாயிகளின் ஒப்புதலையும் பெறத் தேவையில்லை; நிலத்தை இழப்பதால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் அக்கறை கொள்ளத் தேவையில்லை என்ற சட்டரீதியான ஏற்பாட்டைப் பயன் படுத்திக்கொண்டுதான் தமிழக விவசாயிகளின் நிலத்தின் மீதான உரிமையை மறுத்து தீர்ப்பளித்திருக்கிறது, உச்சநீதி மன்றம்.

gain-sc-verdict-6
விவசாய நிலங்களில் பதிக்கப்பட்ட எரிவாயுக் குழாய் வெடித்துச் சிதறியதால் பாதிக்கப்பட்ட ஆந்திராவைச் சேர்ந்த நகரம் கிராமத்தின் ஒரு பகுதி (இடது) மற்றும் உடல் வெந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் அக்கிராமவாசி.

‘‘ராமர் பாலத்தின் மீது மைய அரசு கைவைத்தால் எங்களிடம் வாருங்கள்” என சுப்பிரமணிய சுவாமியின் இந்து உணர்வுக்கு ஆறுதல் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், கெயில் வழக்கிலோ விவசாயிகளின் உணர்ச்சி களுக்கு இடங்கொடுப்பது வாக்குவங்கி அரசியல் என எகத்தாளத்தோடு எடுத்தெறிந்து பேசுகிறது.

குழாய் பதிக்கும் பாதையை மாற்றியமைத்தால் இத்திட்டத்திற்காக ஏற்கெனவே செலவழிக்கப்பட்ட 600 கோடி ரூபாய் பாழாகிவிடும் என முதலைக் கண்ணீர் வடிக்கிறது, கெயில். ஆனால், மைய அரசோ சேது சமுத்திர திட்டத்திற்காக ஏற்கெனவே செலவழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் களைப் பற்றியெல்லாம் அக்கறை கொள்ளாமல், அத்திட்டத்தின் பாதையை மாற்றி அமைக்கத் திட்டமிட்டு வருகிறது. உழைக்கும் விவசாயிகளைக் காப்பதைவிட ஒரு அற்பமான மணல் திட்டைக் காப்
பதைக் கடமையாகக் கருதும் உச்சநீதி மன்றத்தின், மைய அரசின் இந்து உணர்ச்சி, வாக்கு வங்கி அரசியலைவிட மோசமானது.
மகாராஷ்டிரத்தில் மகாநகர் கேஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் மஹிம்-தாசிர் எரிவாயு திட்டமும், குஜராத்தில் அதானி நிறுவனத்தால் இயக்கப்படும் அகமதாபாத்-பகோதரா மற்றும் காந்திநகர்-சார்கட்ஜ் எரிவாயு திட்டமும், உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் செயல்படுத்தி வரும் எரிவாயுத் திட்டமும் நெடுஞ்சாலை வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படுகின்றன. கொச்சி – குட்டநாடு – பெங்களூரு – மங்களூரு எரிவாயுத் திட்டத்தின் முதல் பகுதியான புத்துவைப்பீ-கலமசேரி எரிவாயு குழாய் இணைப்பு கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் அகமதாபாத்-பரோடா நெடுஞ்சாலையில் 500 கி.மீ. தூரத்திற்கு எரிவாயு குழாய்களை ஓ.என்.ஜி.சி., இந்தியன் ஆயில் உள்ளிட்ட மைய அரசு நிறுவனங்கள் பதித்துள்ளன. உண்மை இவ்வாறிருக்க, எரிவாயுக் குழாய்களை நெடுஞ்சாலையில் பதிப்பது மிகுந்த ஆபத்தானது எனப் பூச்சாண்டி காட்டி வருகிறது, கெயில்.

எரிவாயுவை விளைநிலங்களின் வழியாக எடுத்து வருவது ஆபத்து குறைவானது என்ற கெயிலின் வாதம் சொத்தையானது என்பதை ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள நகரம் கிராமத்தில் பதிக்கப்பட்ட எரிவாயுக் குழாய்கள் வெடித்துச் சிதறிய விபத்து நிரூபிக்கிறது. இந்த விபத்தில் 18 பேர் இறந்துபோனதோடு, 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பு கொண்ட பகுதியில் இருந்த வீடுகள், மரங்கள், பயிர்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை எடுத்துச் செல்வதன் பின்னுள்ள நோக்கம் குறைந்த ஆபத்து என்பதல்ல; மாறாக, கெயிலின் இலாபம். நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் செல்வதென்றால், நிலத்தைக் கையகப்படுத்துவதற்கும், பதிக்கப்பட்ட குழாய்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்கும், விபத்து ஏற்பட்டால் நட்ட ஈடு வழங்குவதற்கும் அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். விளைநிலங்கள் வழியாக எடுத்துச் செல்வதன் மூலம் தனது இந்தச் சுமைகள் அனைத்தையும் விவ
சாயிகளின் தலையில் சுமத்திவிட்டு, அதனை நியாயப்படுத்துவதற்குத் தேசிய நலன், தொழிற்சாலை, வேலைவாய்ப்பு, வளர்ச்சி – என விதவிதமான பொய்களைக் கவர்ச்சிகரமான முறையில் அடுக்கிக் கொண்டே போகிறார்கள்.

gail-sc-verdict-2இந்த எரிவாயுத் திட்டம் நிறைவடைந்தால், உரத் தொழிற்சாலைகளும், மின் உற்பத்தி நிலையங்களும், அவற்றைச் சார்ந்த தொழிற்சாலைகளும் பலனடைவதோடு, வீடுகளுக்கும், தள்ளுவண்டி கடைகளுக்கும் எளிதாக எரிவாயு கிடைக்கும் எனப் படம் காட்டுகிறார்கள், பொருளாதார நிபுணர்கள். உர மானிய வெட்டு, எரிவாயு மானிய வெட்டு, மின்சார மானிய வெட்டு, கூலி வெட்டு என ஒருபுறம் மக்களின் மீது இடியை இறக்கிவிட்டு, இன்னொருபுறம் உரமும், எரிவாயுவும், மின்சாரமும் அபரித
மாகக் கிடைக்கும் எனப் பேசுவது அயோக்கியத்தனமானது.

பொதுத்துறை நிறுவனமான கெயிலின் 30 சதவீதப் பங்குகள் தனியாரின் கைகளில் இருக்கும்நிலையில், அதன் வியாபார நடவடிக்கைகளில் பொது நலன் என ஒன்று இருக்கவே முடியாது. அப்படி பொது நலன் இல்லாத ஒன்றுக்காக விளைநிலங்களைக் கைப்பற்ற முடியாது என்பதற்காகவே, ஒவ்வொரு கார்ப்பரேட் நடவடிக்கையின் மீதும் தேச நலன், வளர்ச்சி என்ற சல்லாத் துணி போர்த்தப்படுகிறது. விவசாயிகளின் உணர்ச்சிகளுக்கு இடங்கொடுக்காத உச்சநீதி மன்ற நீதிபதிகளின் உள்ளத்திலோ கார்ப்பரேட் முதலாளிகளின் விசுவாசம்தான் நிரம்பிக் கிடக்கிறது.

ஆளுங்கும்பலின் இந்த மோசடிகளையெல்லாம் விவசாயிகள் புரிந்துகொண்டு வருகிறார்கள். அதனால்தான், மேற்கு மாவட்ட விவசாயிகள் பெட்ரோலியம் மற்றும் தாதுப் பொருட்கள் குழாய் பதிப்புச் சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் எனக் கோருகிறார்கள். இதனைச் சாதிப்பதற்கு விவசாயிகள் தமது சொந்த பலத்தையும் தமிழக மக்களின் ஆதரவை
யும் பெறுவதைத் தவிர வேறு மாற்று வழி எதுவும் கிடையாது.

ஜெயாவின் கபட நாடகம்

2011-ஆம் ஆண்டு இறுதியில் கொச்சி-பெங்களூரு எரிவாயு குழாய் திட்டத்திற்கு அப்பொழுது மைய ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு ஒப்புதல் தந்தவுடனேயே, அதனை எவ்வித மறுப்புமின்றித் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த ஒப்புக் கொண்டதோடு, 2012 மே மாதத்தில் கெயில் திட்டத்தை ஆதரித்து சட்டமன்றத்திலேயே உரையாற்றினார், ஜெயா. கெயில் நிறுவனத்தின் நிலம் கையகப்
படுத்தும் நடவடிக்கைகளை எதிர்த்து நின்ற விவசாயிகளை ஒடுக்குவதற்கு போலீசையும் மாவட்ட நிர்வாகத்தையும் அனுப்பி வைத்தது, அவரது அரசு. நெடுஞ்சாலை ஓரத்தில் எரிவாயுக் குழாய்களைப் பதிப்பது சாத்தியமற்றது; திட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் அன்றைய தலைமைச் செயலர் தேவந்திர நாத் சாரங்கி.

விவசாயிகள் போலீசின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி ஒடுங்கிப் போய்விடவில்லை. அவர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்குத் தடையாணை பெற்றனர். உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இணங்க சென்னையில் நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் கெயிலின் திட்டத்தை நெடுஞ்சாலைக்கு மாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர். விவசாயிகளின் உறுதியாலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு மாவட்ட விவசாயிகளின் வாக்குகளைப் பெற வேண்டுமென்ற சுயநலத்தாலும் பின்வாங்கிய ஜெயா அரசு, விளைநிலங்களுக்குப் பதிலாக நெடுஞ்சாலை ஓரமாகக் குழாய்களைப் பதிக்குமாறு கெயிலுக்குக் கட்டளையிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக
அரசின் ஆணையை ரத்து செய்து, குழாய்களை விளைநிலங்களில் பதிக்க கெயிலை அனுமதித்தது உயர்நீதி மன்றம். உயர்நீதி மன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு தொடுத்த வழக்கில்தான் உச்சநீதி மன்றம் கெயிலுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

உச்சநீதி மன்றத்தில் கெயிலுக்கு எதிராகத் தமிழக அரசு தொடுத்திருந்த மேல்முறையீட்டு வழக்கு இறுதி விசாரணைக்கு வந்த நாளன்று, தமிழக அரசு நியமித்திருந்த மூத்த வழக்குரைஞர் ராகேஷ் திவேதி வாதிடுவதற்கு கோர்ட்டுக்கே வரவில்லை. வக்கீல் வராமல் போனதைத் தமிழக அரசும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோருவதற்கு பெரிய வக்கீல் கூட்டத்தையே உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைத்த ஜெயா, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வுரிமை சம்மந்தப்பட்ட வழக்கில் வாதிடுவதற்கு நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஆஜராகாமல் ஒளிந்து கொண்டதைக் கண்டும் காணாமல் விடுகிறார் என்றால், இதனைத் தற்செயலானதாகக் கருத முடியாது. சொத்துக் குவிப்பு வழக்கு
தனக்குச் சாதகமாக முடியும் வரை உச்சநீதி மன்றத்தையும், மைய அரசையும் பகைத்துக் கொள்ளக் கூடாதென்ற ஜெயாவின் சுயநலம் இதற்கு காரணமாக இருக்கக் கூடும்.

இப்படி விவசாயிகளின் முதுகில் குத்தியிருக்கும் ஜெயா, உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார். இது, சட்டமன்றத் தேர்தலை மனதில் நிறுத்தி ஜெயாவால் அரங்கேற்றப்படும் இன்னொரு நாடகமே!

– செல்வம்

புதிய ஜனநாயகம் மார்ச் 2016

வாழவைக்கும் ஊழலுக்கு ஜே !

2
ஊழல் முறைகேடுகள்
இனி, எந்த அரசு ஊழியர் மீதும புகார் வந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படாது என்பதால், ஊழல் குற்றம் சாட்டுவோர் மீதான அவதூறு வழக்குகளும், முத்துக்குமாரசாமி போன்றோரின் தற்கொலைகளும்தான் அதிகரிக்குமே தவிர, ஊழலை பொறுத்தவரை அது அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிடும்

வாழவைக்கும் ஊழலுக்கு ஜே! – ஜெயலலிதாவின் புதிய அரசாணை

“வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்பது தமிழ் மக்களின் காதில் புளித்துக் கிடக்கும் அடுக்குமொழி வசனங்களில் ஒன்று. அவ்வசனத்தில் சிறியதொரு திருத்தம் செய்து, வீழ்வது நானாக இருந்தாலும் வாழ்வது ஊழலாக இருக்கட்டும்” என்று புதியதொரு வசனத்தை வழங்கி யிருக்கிறார் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதித் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் ஜெ., “நான் பட்ட துன்பத்தை எதிர்காலத்தில் ஒரு டவாலி கூட அனுபவிக்கக் கூடாது” என்று தாயுள்ளத்துடன் சிந்தித்து, பிப்ரவரி 2-ஆம் தேதியன்று ஒரு அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார்.

ஊழல் முறைகேடுகள்
இனி, எந்த அரசு ஊழியர் மீது புகார் வந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படாது என்பதால், ஊழல் குற்றம் சாட்டுவோர் மீதான அவதூறு வழக்குகளும், முத்துக்குமாரசாமி போன்றோரின் தற்கொலைகளும்தான் அதிகரிக்குமே தவிர, ஊழலை பொறுத்தவரை அது அதிகாரப்பூர்வமாக ஒழிக்கப்பட்டுவிடும்

அம்மா போட்டிருக்கும் புதிய அரசாணை, இனி ஒரு கலெக்டர் ஆபீசு டவாலியின் மீது ஊழல் குற்றத்துக்காக வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென்றாலும், அரசின் கருத்தைக் கேட்காமல், அப்படி ஒரு வழக்கைப் பதிவு செய்யவோ, விசாரிக்கவோ கூடாது” என்று ஊழல் தடுப்பு – கண்காணிப்பு ஆணை யத்துக்குத் தடை விதிக்கிறது. அதாவது, இலஞ்சம் கேட்ட சப்-இன்ஸ்பெக்டரை இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மறைந்திருந்து லபக் என்று பிடித்தனர்” என்று எப்போதாவது தினத்தந்தியில் செய்தி வருமே, அப்படிப்பட்ட ‘கெட்ட’ செய்திகள் இனி வரவே வராது.

ஒரு அரசு ஊழியருக்கு எதிராக ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்குநரகத்திடம் (Directorate of Vigilanceand Anti Corruption – DDVAC) நீங்கள் புகார் செய்தால், அந்தப் புகார் அங்கிருந்து கண்காணிப்பு ஆணையத்துக்கு (Vigilince commission) அனுப்பப்பட வேண்டும். கண்காணிப்பு ஆணையம் அந்தப் புகாரை அரசுக்கு (அதாவது சம்பந்தப்பட்ட துறைக்கு) அனுப்பி, அவர்களுடைய ஒப்புதலைப் பெற்று, அதன் பின்னர்தான் ஊழல் புகார் மீது வழக்கே பதிவு செய்ய வேண்டும் என கூறுகிறது, இந்த அரசாணை.

சுருக்கமாகச் சொல்வதானால், ஒரு தாசில்தார் ஆபீசு குமாஸ்தாவுக்கு எதிராக நீங்கள் விஜிலென்சில் புகார் கொடுத்தால், அது தலைமைச் செயலருக்குப் போய், மாவட்ட ஆட்சியர் வழியாக சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு வந்து சேரும். ஏட்டுக்கு எதிரான புகார் என்றால் இன்ஸ்பெக்டரிடம் வரும். இவர்களிடம் கருத்து கேட்டு, அதன் பின்னர்தான் நட வடிக்கை எடுக்கப்படும். அவர்கள் என்ன கருத்து சொல்வார்கள், என்ன விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளக்கத் தேவையில்லை.

மதுவிலக்குத் துறை டாஸ்மாக் கடையை நடத்திக் கள்ளச்சாராயத்தை ஒழித்திருப்பது போலவே, இந்த அரசாணையும் ஊழலை ஒழித்து விடும்.

இனி, எந்த அரசு ஊழியர் மீது புகார் வந்தாலும் வழக்கு பதிவு செய்யப்படாது என்பதால், ஊழல் குற்றம் சாட்டுவோர் மீதான அவதூறு வழக்குகளும், முத்துக்குமாரசாமி போன்றோரின் தற்கொலைகளும்தான் அதிகரிக்குமே தவிர, ஊழலைப் பொருத்தவரை அது அதிகாரபூர்வமாக ஒழிக்கப்பட்டுவிடும்.

அம்மாவின் தீர்ப்பு
தனக்கு உச்சநீதி மன்றத்தில் விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அனைவரையும் ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பெழுதிவிட்டார், ஜெயா.

இந்த அரசாணை அநீதியானது என்று சிலர் கருதலாம். ஆனால், நீதியை நிலை நாட்டும் பொருட்டும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்கவும்தான் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதனை விளங்கிக்கொள்ள இவ்வரசாணை பிறப்பிக்கப்பட்டதன் பின்புலத்தைத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எத்தகைய ஊழல் பேர் வழிகளாக இருந்தாலும், அவர்கள் மீது இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இயலாத வண்ணம் சில சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது இலஞ்சப்புகார் வந்தால், அதற்கு முகாந்திரம் உள்ளது என்று கருதி தலைமைச் செயலரோ அல்லது மத்திய அரசின் அமைச்சரவைச் செயலரோ அனுமதி கொடுத்தால் மட்டும்தான் அவர்கள் மீது விசாரணையே நடத்த முடியும் என்ற நிலைமை இருந்தது.

இதற்கு எதிராக வினீத் நாராயண் என்பவர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு இப்படி ஒரு சிறப்பு சலுகை வழங்கக் கூடாது; அவர்கள் மீது இலஞ்சப் புகார் வந்தால் ஊழல் கண்காணிப்புத் துறை (Central Vigilance Commision) உடனடியாக விசாரணை நடத்தலாம்; அதற்கு யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை என 1997-இல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்குப் பின்னரும் அதிகார வர்க்கத்தைப் பாதுகாக்கும் நோக்கில், மத்திய அரசின் இணைச்செயலர் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியில் உள்ள அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டுமானால், மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும்” என்றொரு விதியை 2003- இல் உருவாக்கியது வாஜ்பாய் அரசு. இந்த விதி, அரசமைப்பின் உறுப்பு 14 கூறுகின்ற ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கோட்பாட்டுக்கு எதிரானது; ஒரு அரசு ஊழியரின் பதவி அல்லது தகுதி காரணமாக அவர் எந்தவித சிறப்புச் சலுகையும் பெற முடியாது. எல்லா ஊழல் அலுவலர்களும் சமமாகத்தான் நடத்தப்படவேண்டும். அவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக் கூடாது” என்று உச்ச நீதி மன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மே, 2014-இல் தீர்ப்பளித்தது.

இருந்த போதிலும், இந்தத் தீர்ப்புக்கு இணங்கத் தமிழக அரசு தனது சட்டத்தைத் திருத்தவில்லை. தமிழக அதிகாரிகளுக்கு ஊழல் வழக்குகளில் காட்டப்பட்டிருந்த சலுகை அப்படியே நீடித்தது. தமிழக அரசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தொடர்ந்தார் வழக்கறிஞர் புகழேந்தி.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் அரசு அலுவலர்களுக்கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதைக் கணக்கில் கொண்டு, பொருத்தமான சட்டத் திருத்தத்தைக் கொண்டு வருகிறோம்” என்று ஜெ. அரசின் தலைமை வழக்குரைஞர் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி கவுலிடம் மீண்டும் மீண்டும் உறுதியளித்தார். அக்டோபர் 2015-இல் இதையே ஒரு பிரமாணப் பத்திரமாகவும் ஜெ. அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து வந்திருப்பதுதான் அம்மாவின் இந்த அரசாணை.

ஊழல் வழக்குகளைப் பொருத்தவரை பியூனுக்கும் கலெக்டருக்கும் ஒரே சட்டம்தான் – பாரபட்சம் காட்டக் கூடாது என்றது உச்சநீதிமன்றம்.

பாரபட்சம் கூடாது, அவ்வளவுதானே! கலெக்டருக்கு என்ன சட்டமோ அதுதான் பியூனுக்கும் என்று மாற்றிவிடுகிறோம். கலெக்டர் மீது ஊழல் வழக்கு தொடர வேண்டுமானால் அரசு அனுமதி தேவை என்பதைப் போலவே, டவாலி மீது வழக்கு தொடர வேண்டுமென்றாலும் அரசு அனுமதி தேவை என்று திருத்தி விட்டோம். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலை நாட்டி விட்டோம். இந்த அரசாணை அரசமைப்பின் உறுப்பு 14-ஐ மீறியிருப்பதாக யாரும் குறை சொல்ல முடியாது” என்று நீதிமன்றத்தை எள்ளி நகையாடுகிறது ஜெயலலிதா அரசு.

தனக்கு உச்சநீதி மன்றத்தில் விடுதலை கிடைக்கிறதோ இல்லையோ, தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் முதல் அமைச்சர் வரை அனைவரையும் ஊழல் வழக்குகளிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பெழுதிவிட்டார், ஜெயா.

– தொரட்டி

புதிய ஜனநாயகம் மார்ச் 2016

டாஸ்மாக் எழவு நாட்டில் தேர்தல் திருவிழாவா ?

1

நீங்களும் வாங்க… இந்தச் சனியனை ஒழிக்க !
மூடு டாஸ்மாக்கை ! பொதுக்கூட்டம் – பாகம் 2

shutdown-tasmac-virudhai-meeting-poster-1

விருத்தாசலம் வானொலி திடலில் 27-3-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் க. இளமங்களம் தப்பாட்ட குழுவினரின் இசை முழக்கத்துடன் பொதுக்கூட்டம் துவங்கியது.

தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,

விருத்தாச்சலம் மூடு டாஸ்மாக்கை பொதுக்கூட்டம்
தோழர் கணேசன் உரை

தமிழகத்தில் இன்று ஒரு திருவிழா களைகட்டத் தொடங்கி இருப்பதாக அனைத்துப் பத்திரிகைகளும் எழுதுகின்றன. அதுதான் ’தேர்தல் திருவிழா, ஜனநாயகத்திருவிழா’. இது யாருக்கானது? தமிழக மக்களுக்கானதா? ஒரு ஊரில் சாவு நடந்துவிட்டால் அந்த ஊரில் எவ்வளவு முக்கியமான விழா என்றாலும் அந்த சாவை எடுத்துவிட்டுத்தான் மறு வேலையைப் பற்றி யோசிப்பார்கள். டாஸ்மாக் சாராயத்தால் தமிழகமே எழவு வீடுபோல் உள்ளது. அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் திருவிழா களைகட்டுகிறது என்றால் இது வக்கிரமானது இல்லையா?

சுமார் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் குடிநோயாளிகளாக உள்ளனர். நடுத்தர வயது ஆண்கள் மட்டுமல்ல, பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளும் குடித்து சீரழிகிறார்கள் என்றால் அதற்கு காரணம் டாஸ்மாக். ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மீதும் ஏவப்பட்டுள்ள அணு ஆயுதம்தான் டாஸ்மாக். இந்த மிக முக்கியப் பிரச்சனையைப் பற்றி பேசாமல் தேர்தல் ஒரு கேடா?

டாஸ்மாக் சாராயத்தால் குடிநோயாளிகளான தமிழக மக்கள் சிந்திக்க முடியாத அடிமைகளாகி வருகிறார்கள். இளம் வயதில் விதவையான பெண்கள், தந்தையை இழந்த பிள்ளைகள், பெற்றோர் இருவரையும் இழந்து அனாதையான குழந்தைகள் என ஒரு சமூகமே சீரழிவதற்கு காரணமான டாஸ்மாக் கடையை மூடாமல் எப்படி நேர்மையான நியாயமான தேர்தலை நடத்த முடியும்? ?

shutdown-tasmac-virudhai-meeting-19நியாயமான தேர்தல் என்று இவர்கள் சொல்வது இல்லாத கடவுளை இருப்பதாக காட்ட முயற்சிப்பது போன்றது. கடந்த முறை இந்த ஆணையம் நடத்தி வைத்த தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருடர்கள் ஐந்தாண்டுகள் நாட்டை கொள்ளையடித்தார்களே அப்போது இந்த தேர்தல் ஆணையம் எங்கே போயிருந்தது.

எந்தக் கட்சியும் யோக்கியமான கட்சி இல்லை. அனைத்து வேட்பாளர்களும் அயோக்கியர்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் மக்களுக்குத் தெரிந்த இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, அதே மக்களிடம் நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், நியாயமான தேர்தல் நடைபெற ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள் என்று உபதேசம் செய்கிறது.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு கேமரா என்று அராஜகம் செய்வது தேர்தல் ஆணையம்தான். இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்படுவது சாதாரண மக்களும், சிறு வணிகர்களும்தான். கல்யாணம் உள்ளிட்ட தங்களுடைய நல்ல காரியங்களுக்கு மக்கள் எடுத்துச் செல்லும் பணத்தையும், சிறு வணிகர்கள் வியாபாரத்திற்காக எடுத்துச் செல்லும் பணத்தையும் பறிப்பதைத்தவிர தேர்தல் ஆணையம் வேறு என்ன செய்கிறது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டுமென்றால் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் வைத்துள்ள பணத்தை அவர்கள் பதுக்கி வைத்துள்ள இடத்தில் போய் பறிக்க வேண்டும். இதற்கு துப்பில்லை. ஜனநாயகமான தேர்தல் என்று சொல்லும் தேர்தல் ஆணையம்தான் உண்மையில் ஜனநாயகத்தின் விரோதியாக உள்ளது. தேர்தல் நடத்தை விதியைக் காரணம் காட்டி சாதாரண மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிக்கிறது.

உழைக்கும் மக்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள். கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் நடந்து வருகிறதே அதனால் நமக்கு என்ன பயன். இந்த தேர்தலுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம். தேர்தலில் ஓட்டுப்போட்டால் கல்விக் கட்டணத்தை குறைக்க முடியுமா? விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? அல்லது மத்திய மாநில அரசுகள் இந்த நாட்டை கூறுபோட்டு விற்பதைத்தான் தடுக்க முடியுமா?

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேரை அக்கல்லூரி நிர்வாகம் பகிரங்கமாக படுகொலை செய்தது. இதில் அனைத்துக்கட்சி அரசியல்வாதிகள், போலீசு கான்ஸ்டபிள் முதல் கலெக்டர் வரை, மருத்துவக் கல்லூரி முதல்வர் முதல் துணை வேந்தர் வரை அனைவரும் கூட்டுக்கிரிமினல்கள் என்பதும் அனைவருக்கும் தெரிந்த உண்மை. எஸ்.வி.எஸ் பிரச்சனையில் மட்டுமல்ல ஒட்டுமொத்த கல்வித்துறையுமே இப்படி கிரிமினல் துறையாகத்தான் உள்ளது. கல்வித்துறை மட்டுமல்ல, ஆற்று மணற்கொள்ளை, இயற்கை வளங்களை சூறையாடுவது, கார்ப்பரேட் முதலாளிகளுக்காக விவசாய நிலங்களை பறித்து விவசாயிகளை பட்டினிப் போட்டுக்கொள்வது அனைத்தும் இந்த அரசுதான். இப்படி நாட்டிலுள்ள எந்தப் பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்ல முடியாதது மட்டுமல்ல, இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணமே இந்த அரசுதான்.

இதையெல்லாம் எதிர்த்துக்கேட்டால் தேசத்துரோகி. அதுதான் இன்று டெல்லி ஜே.என்.யு வில் நடக்கிறது. பார்ப்பன மதவெறி பாசிஸ்டுகள் யாரை கை காட்டுகிறார்களோ அவர்கள் எல்லாம் தேசதுரோகிகள்தான். ஜே.என்.யு விற்கும் நமக்கும் என்ன சம்மந்தம், டாஸ்மாக்குக்கும், பார்ப்பன பாசிசத்திற்கும் என்ன சம்மந்தம் என்று நினைக்காதீர்கள். டாஸ்மாக்கை எதிர்த்தால் தமிழ்நாட்டில் தேசத்துரோகி. டாஸ்மாக்கிற்கு எதிராகப் பாடிய தோழர் கோவன் மீது தேசத்துரோக வழக்கு. பார்ப்பனியத்தை எதிர்த்தால் அவர்கள் யாராக இருந்தாலும் தேசதுரோகி.

பார்ப்பனிய எதிர்ப்புக் கோட்டையான பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் சென்னை ஐ.ஐ.டியில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தை தேசவிரோத அமைப்பு என்று சொல்லி தடைசெய்தார்கள். அதை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள், ஜனநாயக சக்திகள் நாடெங்கும் போராட்டம் நடத்தியதால் வேறு வழியின்றி பின்வாங்கினார்கள். ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அத்தகைய நிலை இல்லாததால் தலித் மாணவர் ரோகித் வெமுலாவை தூக்கிலேற்றினார்கள். இன்று ஜே.என்.யு வில் பார்ப்பன பாசிஸ்டுகள் வாலாட்டுகிறார்கள்.

தேசபக்தி பேசும் ஆர்.எஸ்.எஸ் –பிஜேபி யின் உண்மை முகம் என்ன? shutdown-tasmac-virudhai-meeting-14முஸ்லீம்கள் என்றாலே தேசவிரோதிகள், பயங்கரவாதிகள், நாட்டை துண்டாடி விடுவார்கள், கிருத்துவர்கள் இந்துக்களை எல்லாம் மதம் மாற்றி விடுவார்கள் என்று பீதியூட்டுகிறார்களே, இவர்கள் யோக்கியதை என்ன? குண்டு வைப்புகளில், மதக்கலவரங்களை தூண்டி படுகொலைகள் நடத்துவதில் ஆர்.எஸ்.எஸ் யை விஞ்சியர்கள் நாட்டில் உண்டா? தலித்துக்கள், பெண்கள் ஆகியோர்களின் எதிரி ஆர்.எஸ்.எஸ். உழைக்கும் மக்களை சாதிகளாக, மதங்களாக கூறுபோட்டு கொல்பவர்கள் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பிதான். உடுமலை சங்கர் வரை நடக்கும் ஆதிக்க சாதிப் படுகொலைகளின் மூலவேரே இந்த பார்ப்பனியம்தான். ‘முஸ்லீம்கள், கிருத்தவர்கள் அல்லாத அனைவரும் இந்துக்கள். இந்திதான் தேசிய மொழி, நாம் அனைவரும் இந்தியர்கள்’ என்று இவர்கள் கட்டியமைக்க விரும்பும் இந்து தேசியத்தை இந்திய தேசம் என்று திணிக்கிறார்கள். இதை முறியடிக்க வேண்டும்.

ஒரு பக்கம், கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக நாடே மறுகாலனியாக்கப்படுகிறது. உள்நாட்டு – பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை கூட்டிக்கொடுக்க அடிமை சேவை செய்யும் பார்ப்பன பாசிஸ்டுகள், மறுப்பக்கம் நாட்டை பார்ப்பனியமயமாக்கும் தங்கள் கனவை நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறார்கள். அதற்கு தடையாக இருக்கும் யாராக இருந்தாலும் அவர்களை தேசத்துரோகியாக்கி விடுவார்கள். உயர்கல்வி நிறுவன மாணவர்கள் பார்ப்பனியத்தையும், நாட்டை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதையும் எதிர்க்கிறார்கள். அதனால்தான் அக்கல்வி நிறுவனங்களை தேசவிரோதிகளின் கூடாரம் என்கிறார்கள். ஏ.பி.வி.பி நச்சுப் பாம்பை உயர்க்கல்வி நிறுவனங்களில் நுழைத்து பார்ப்பனியமயமாக்க துடிக்கிறார்கள். இதையெல்லாம் மூடிமறைக்கத்தான் தேசபக்தி வேடம் போடுகிறார்கள். ஆனால் உணமையில் இந்த ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பார்ப்பன கும்பல்தான் தேசதுரோக கூட்டம்.

இறுதியாக, தமிழ்சமூகத்தை டாஸ்மாக் போதை சீரழிக்கிறது என்றால், ஒட்டுமொத்த நாட்டையும் பார்ப்பனிய தேசபக்தி போதை அபாயமாக சூழ்ந்திருக்கிறது. டாஸ்மாக் ஆதரவுக் கட்சிகளும் தனித்துவிடப்பட்டிருக்கிறது. பார்ப்பனிய அரசியல் படையான பி.ஜே.பியும் தனித்து விடப்பட்டிருகிறது. இவர்களை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்ட வேண்டும்.

ஜனநாயகத்தின் திருவிழா என்று கொண்டாடப்படும் இந்தத் தேர்தல் நாம் அன்றாடம் அனுபவிக்கும் டாஸ்மாக் பிரச்சனை, பார்ப்பனிய கொடுமை உள்ளிட்ட எந்த பிரச்சனையாவது தீர்க்கப் போகிறதா? இல்லை. இது நமக்கான தேர்தலும் அல்ல, இது ஜனநாயகமும் அல்ல. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமைகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல். நடப்பது பணநாயகம். நம்முடைய வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாத இந்த தேர்தல் மாயாஜாலத்திற்கு நாம் ஏன் மயங்க வேண்டும்? நெருக்கடியில் சிக்கி, தோற்றுப்போன,திவாலாகி, மக்களுக்கு எதிராக மாறிப்போன இந்த அரசுக்கட்டமைப்பை தகர்த்தெரிவதும் மாற்றாக மக்கள் அதிகாரத்தை நிறுவுவதும்தான் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வு என்கிறது மக்கள் அதிகாரம். அந்த மக்கள் அதிகாரத்தில் பங்கேற்போம்”

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

நீங்களும் வாங்க.. இந்தச் சனியனை ஒழிக்க ! விருதையைக் கலக்கிய பொதுக்கூட்டம்

1

நீங்களும் வாங்க… இந்தச் சனியனை ஒழிக்க !
மூடு டாஸ்மாக்கை ! பொதுக்கூட்டம்

shutdown-tasmac-virudhai-meeting-poster-1

விருத்தாசலம் வானொலி திடலில் 27-3-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணியளவில் க. இளமங்களம் தப்பாட்ட குழுவினரின் இசை முழக்கத்துடன் பொதுக்கூட்டம் துவங்கியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

shutdown-tasmac-virudhai-meeting-02தோழர் முருகானந்தம், விருத்தாசலம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தனது தலைமை உரையில் “மக்கள் அதிகாரம் துவங்கிய நோக்கம் இந்த அரசு கட்டமைப்பு தோற்றுவிட்டது. நம்மை ஆளும் அருகதை இழந்துவிட்டது. கல்வி, மருத்துவம் முதல் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதாக சொல்லும் காவல்துறை, நீதித்துறை வரை அனைத்தும் யோக்கியதை அற்று போய்விட்டது என்பது.

அனைத்து ஓட்டுக் கட்சிகளும் சி.எம். ஆனதும் டாஸ்மாக்கை மூடுவதாக சொல்கிறார்கள். அவர்கள் யாரும் தங்களை டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அவர்களால் டாஸ்மாக் போராட்டத்தில் எத்தனை வழக்கை சந்தித்தார்கள், எத்தனை முறை சிறை சென்றார்கள் என கூற முடியாது.

ஆனால் மக்கள் அதிகாரம் தொடங்கிய நாள் முதல் போராடி வருகிறது. பல ஊர்களில் டாஸ்மாக்கை அடித்து நொறுக்கி எமது தோழர்கள் சிறையிலிருந்தனர். இன்று தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் போராட்டம் என செய்து வருகிறது. பல வழக்குகளை சந்தித்து வருகிறது.

இன்று மக்களை நேர்மையாக ஓட்டு போட சொல்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள். இதுநாள் வரையில் கிரானைட், மணல்கொள்ளையில் கூட்டாக செயல்பட்ட இந்த அதிகாரிகள் நேர்மையை பற்றி பேசுவது கேவலம். இவர்கள் எப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள்” என்கிற கேள்வியுடன் கூட்டத்தை துவங்கி வைத்தார்.

பஞ்சமூர்த்தி, வெள்ளாற்று பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்

shutdown-tasmac-virudhai-meeting-04“கார்மாங்குடி, காவலக்குடி, மணல் குவாரியை மக்கள் அதிகாரத்தின் மூலம்தான் மூடினோம். அதாவது தினமும் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்தவர்களை தடுத்து நிறுத்தினோம். தினமும் 1 லட்சம் ரூபாய் மக்கள் பணத்தை திருடும் மேலப்பாளையூர் டாஸ்மாக்கை மூடிக் காட்டினோம். அந்த ஊரில் இன்று பலர் குடியை நிறுத்தி விட்டதாக சொல்கிறார்கள்.

இதெல்லாம் ஓட்டு கட்சிகள் மூலம் சாத்தியமில்லை, மக்கள் அதிகாரத்தை எடுப்பதன் மூலம் தான் சாத்தியம்.

தோழர் தனசேகரன் , மக்கள் அதிகாரம் உறுப்பினர்

“நான் விஜயமாநகரத்தில் கோழி கறிக்கடை வைத்துள்ளேன். எனக்கு டாஸ்மாக்கால் தினமும் 500 ரூபாய் வருமானம் வருகிறது.

கடந்த வருடம் ஸ்கூல் பையன் ஒருவன் முதல் மதிப்பெண் பெற்றதற்கு பார்ட்டி வைத்து குடிக்கிறான். முன்பெல்லாம் சாக்லெட் தான் தருவார்கள். இந்த சம்பவம் என்னை பெரிதும் பாதித்தது. என் வருமானம் போவது பற்றி எனக்கு கவலையில்லை டாஸ்மாக்கை மூடியை தீர வேண்டும்.

நான் மக்கள் அதிகாரம் சார்பாக பிரச்சாரத்திற்கு போன போது நீயே குடிகாரன் என ஒருவன் சொன்னான். ஆம் நான் குடித்தேன், அது பிப்ரவரி 14 சிறப்பு மாநாடு வரை இப்போது குடிப்பதில்லை சிறந்த மனிதனாக இருப்பதாக உணர்கிறேன். ஆகையால் கூட்டத்திற்கு வருவது மட்டுமல்ல மூடவும் வருவேன்.

இந்த இழிவான டாஸ்மாக் நடத்தும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நெய்வேலி அனல் மின்நிலையம் கட்ட எங்களை 50 வருடம் முன் வெளியேற்றி இங்கு (விஜயமாநகரம், புதுகூரைப்பேட்டையில்) குடியேற்றினார்கள். இப்போது வரை பட்டா இல்லை. இவர்கள் எப்படி ஓட்டு கேட்டு வருகிறார்கள் என்பது தான் தெரியவில்லை. நல்ல ரத்தம் ஓடுபவர்கள் ஓட்டு ஏன் போட வேண்டும் என கேளுங்கள். அது உங்கள் சொந்தக்காரனாக இருக்கட்டும் யாராக இருக்கட்டும்.”.

புலவர் சிவராமசேது 

shutdown-tasmac-virudhai-meeting-09“திருக்குறளில் வள்ளுவன் அரசு என்பது எப்படி இருக்க வேண்டு்ம் என சொல்லியிருக்கிறார். அதில் அரசன் குற்றம் செய்யாதவனாகவும் மக்களை குற்றத்திற்கு தள்ளாதவனாக இருக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார். இந்த அரசு மக்களை போதையில் மூழ்க செய்கிறது இது அரசாக இருக்க தகுதியற்றது.

இந்த போதை முன்பு கள்ளு, இன்று பிராந்தி, விஸ்கி. இதில் மூழ்குபவர்களை அவர்கள் தாய் கூட மதிக்க மாட்டார்கள். மது போதை எல்லா குற்றங்களையும் தன்னுடன் அழைத்து வருவதால் இது மிகப்பெரிய குற்றம் என்கிறார் திருவள்ளுவர். குடித்தவன் பொய் சொல்கிறான், திருடுகிறான், கொலை செய்கிறான், பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறான். இப்படி வள்ளுவர் சொன்ன பல்வேறு உதாரணங்கள் இன்று மெய்யாகி வருகின்றன.

அரசால் செய்யப்படும் எந்த திட்டங்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதற்கு மாறாக இந்த அரசு தனக்கு தகுதியற்ற குடிபோதையை உருவாக்கி மக்களை நோயாளிகளாக்கி மோசமான நிலைக்கு தள்ளுகிறது. அறிஞர் அண்ணா மது போதையில் வரும் வருமானத்தை குஷ்டம் வந்தவன் கையில் இருக்கும் வெண்ணெய் போன்றது என்றார். அவர் பெயரில் ஆளும் அரசு இந்த வெண்ணெயை நக்குகின்றது. இந்த நிலையை மாற்ற, குடிபோதை இல்லாத ஊராக உருவாக்க மக்கள் அதிகாரம் களமிறங்கியுள்ளது. அதற்கு என் வாழ்த்துக்கள்.”

இதற்கிடையே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் 50 பேர் பூவனூர் கிராமத்தில் இருந்து 10 கி.மி பேரணியாக பொதுக்கூட்ட தி்டல் நோக்கி வந்து சேர்ந்தனர். அவர்களை கூட்டம் கைத்தட்டலுடன் வரவேற்றது.

ஆனந்தியம்மாள், சென்னை

நீங்களும் வாங்க இந்த சனியனை ஒழிக்க இந்த முழக்கமே அருமையாக உள்ளது. மக்கள் அதிகாரம் என்பது மற்ற கட்சிகள் போல அல்ல, நாட்டுக்காக போராடக் கூடியவர்கள். இந்த அமைப்பில் அனைவரும் சமமாக நடத்தப்படுவது என்னை பெரிதும் ஈர்க்கிறது.

நான் ஒரு தப்பும் செய்யவில்லை. என் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். இதற்கு நான் அஞ்சவில்லை.

திருச்சி மாநாட்டில் இரண்டு லட்சம் பெண்கள் தாலியறுத்து இருக்கிறார்கள் என்று சொன்னேன் இது பொய்யா?

நான் நடைப்பயணம் செய்த போது என்னிடம் புலம்பிய குரல்களை பதிவு செய்தேன். மிக்சி கிரைண்டர், பேன் விலை சில ஆயிரங்கள் கூட கிடையாது. ஆனால் ஐந்தாண்டுகளாக எங்க வீட்டு ஆம்பள டாஸ்மாக்கில் குடித்து அழித்து பல லட்சங்கள் என்ற விபரத்தை சொன்னேன்.

வேறு என்ன செய்து விட்டேன். மாணவர்களை குடிக்க வைக்க அரசா? படிக்க வைக்க அரசா? என கேட்டேன்.

உங்கள் குடுமி எங்கள் கையில், ஓட்டு கேட்டு வரும்போது பார்த்துக் கொள்கிறொம். 1947-க்கு முன்பு வெள்ளைகாரர்கள் விடுதலைக்காக போராடியவர்கள் மீது போடப்பட்ட தேசத்துரோக சட்டம் இன்று என் மீதும் பாய்ந்தது.

இந்த வழக்கிற்காக பெருமைப்படுகிறேன். இந்த மதுவை ஒழிக்க மக்கள் அதிகாரத்தால் தான் முடியும். மதுவை ஒழிப்போம் என்ற எங்கள் குரல் மது ஒழியும் வரை ஓயாது”

அருள், மக்கள் அதிகாரம் உறுப்பினர்

“மக்கள் அதிகாரத்தை கிராமங்கள் தோறும் சென்று பலப்படுத்த வேண்டும். இந்த அரசை தூக்கியெறிய வேண்டும்.”

சிறு தொண்ட நாயனார், ஓய்வு, தலைமை ஆசிரியர்

shutdown-tasmac-virudhai-meeting-13“எவன் ஒருவன் மற்றவர்களை கெடுக்கிறனோ அவன் தானாகவே அழிந்துவிடுவான். இது திருவள்ளுவர் சொன்னது. இந்த அரசு அப்படிதான் அழிந்து வருகிறது. இந்த அரசு நிதானத்தோடு இல்லை, உச்சாங்கிளையில் நின்று கொண்டு இன்னும் மேலே ஏறப் பார்க்கிறது விழுந்து சாக போகிறது.

மனிதனிடமிருந்து பிரியக் கூடிய கார் பங்களா உடமை அல்ல. வள்ளுவர் சொன்ன உடைமை என்பது பண்புடமை, அறிவுடமை, அடக்கமுடமை, அது இன்று நம்மிடம் இல்லை. அதற்கு நம் அரசு காரணமாக உள்ளது. நாம் பலியாகக் கூடாது நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

எனக்கு 77 வயதாகிறது கார் மோட்டர் சைக்கிள் இல்லை. தினம் தோறும் பேருந்தில்தான் பவழங்குடியிலிருந்து விருத்தாசலம் வருகிறேன.குடித்து விட்டு என் பக்கத்தில் உட்கார்ந்தால் குடலை பிரட்டுகிறது. குடித்தவன் போதையில் கிடக்கும் போது செத்தானா தூங்குறானா தெரியல, ஈ மொய்க்கிறது. வாயில் வாந்தியோடு கிடக்கிறான். இதை பார்த்தவன் டாஸ்மாக் கடைக்கு போகாமல் இருப்பானா?

திருக்குறளை படிங்க முடியலன்னா வாங்கி தலையில் வைத்து தூங்குங்க. என்றைக்காவது படிப்போம் என ஆதங்கத்தோடு இந்த சமுதாயத்தை பழாக்கும் டாஸ்மாக்கை முடிவு கட்ட வேண்டும்”.

தெய்வக்கண்ணு, உழவர் மன்றத் தலைவர்

shutdown-tasmac-virudhai-meeting-15“இப்ப இருக்குற முதலமைச்சர் சாராயம் விக்குறாங்க. இன்று நிறைய பேர் குடிக்காக வேலை செய்கிறார்கள், சொத்தை விற்று குடிக்கிறார்கள். எங்க ஊர்ல ஒருத்தன் நான் இரண்டு ஏக்கர வித்து குடிப்பேன் என சவால் விடுகிறான். அவனா சம்பாதித்தான். ஒரு சென்டு நிலம் அவனால வாங்க முடியுமா? குடி எங்க கொண்டு போய் விடுது.

வண்டி ஆக்சிடெண்ட் ஆயிட்டுது, உள்ள இருக்கிறவன் புழைச்சானான்னு பார்க்கல, வாங்கிட்டு வந்த சாராய பாட்டில் உடைஞ்சிதான் செக் பண்றான்.

வயல்ல அறுப்பு அறுத்தா உள்ள வெறும் பாட்டிலா கிடக்குது. காலை கிழிச்சிட்டு 300 செலவு பண்ணி வைத்தியம் பார்ததேன். மூணு நாள வெளிய எங்கேயும் போகல.

இந்த நாடு எப்படி முன்னேறும். உன்னை இந்த உயரத்தில் வைத்த மக்களுக்கு இதுதான் நீ செய்வதா? இது பற்றி நாங்க எதுவும் பேசக்கூடாதா? கேட்கக்கூடாதா? என்ன சட்டம் இங்க இருக்குது.

இது மட்டுமா குடிக்க தண்ணி இல்லய்யா, பச்ச தண்ணிய காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு.  உன்னை காவிரிதாய் என்கிறார்கள். காவிரியை கொண்டு வந்தாயோ இல்லையோ எங்க ஊரில் கடல் நீரை பூமிக்கடியில் கொண்டு வந்துவிட்டாய். தண்ணி கேன் கூட நீ வாங்கிட்ட இனிமேல் அதுவும் கிடையாது என மறுக்கும் காலம் வரப்போவது. அப்புறம் மூத்திரத்தை புடிச்சுதான் குடிக்கணும்.

அரசாங்கம் நீர்நிலைகள பாதுகாக்கணும். டாஸ்மாக்கை மூடியே தீரனும்.

நாங்க மேலப் பாளையூர் கடையை மூடி கடலூர் சிறையில் ஒரு மாதம் இருந்தோம். தினமும் உள்ளேயே வக்கீல் அய்யாவோட கூட்டம் நடத்துவோம். பாட்டு பாடுவோம். பேசறதுக்கு எங்களுக்கு எந்த பயமும் இல்ல. எத்தனை வழக்கு போட்டாலும் பரவாயில்ல. ஓட்டு போட்டு உன்ன தேர்ந்தெடுத்ததுக்கு எங்கள் விவசாயம் தான் அழிந்தது”

(தோழர் கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,வழக்கறிஞர். சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம் – உரைகள் அடுத்த பதிவில் இடம்பெறுகின்றன)

இறுதியாக, மக்கள் கலை இலக்கியக் கழகம் மையக் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்

தேசத்துரோகி யாரெனக் கேட்டால்…

0

தேசத்துரோகி யாரெனக் கேட்டால்

NuclearScreamதோ கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியாவின் இறையாண்மையை ஒரேயடியாக முடித்துவிடும் சதித்தனத்தில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு. மன்மோகன் சிங் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அணு விபத்து இழப்பீடு சட்டம், இந்தியாவிற்கு அணு உலைகளை விற்கும் ஏகாதிபத்திய நிறுவனங்களை விபத்திற்கும் இழப்பீட்டிற்கும் நேரடியாகப் பொறுப்பாக்காமல், சுற்றி வளைத்து மூக்கைத் தொட்டது. அதாவது, இந்திய அரசு அணு உலையை விற்ற நிறுவனத்துடன் இழப்பீடு குறித்துத் தனியாக ஒப்பந்தம் போட்டிருந்தால் மட்டுமே அவற்றைப் பொறுப்பாக்க முடியும் என அணு உலைகளை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களைத் தப்ப வைக்கும் நோக்கில் நைச்சியமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது.

இப்படிபட்ட விதி இருப்பதைக்கூட ஏற்றுக்கொள்ள மறுத்துவந்த அமெரிக்க ஏகாதிபத்தியம், அணுவிபத்து இழப்பீடு குறித்த சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, அதற்குப் பொருத்தமாக உள்நாட்டு சட்டத்தைத் திருத்த வேண்டும் என இந்திய அரசை நிர்பந்தித்து வந்தது. இது குறித்து அமெரிக்காவுடன் இரகசியப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்த மோடி, அணு விபத்துகளுக்கு அணு உலையை விற்கும் நிறுவனங்களைப் பொறுப்பாக்கக் கூடாது” எனக் கடுமையான நிபந்தனைகளைக் கொண்ட சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்வதாக சர்வதேச அணுசக்தி கழகத்திடம் கடந்த மாதம் ஒப்புக்கொண்டு விட்டது. மன்மோகன் சிங்கின் இழப்பீடு சட்டத்திற்கு எதிராகப் பெருங்கூச்சல் போட்ட பா.ஜ.க.தான், காதும் காதும் வைத்தாற்போல இந்தக் கயமைத்தனத்தை நடத்தி முடித்திருக்கிறது.

அணு உலைகளே கூடாது என நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்துவரும் வேளையில், அணு விபத்து ஏற்பட்டால், விபத்திற்குப் பொறுப்பான ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு தரகு முதலாளித்துவ நிறுவனங்களிடம் இந்திய அரசோ மக்களோ இழப்பீடு கேட்கக்கூட முடியாது என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மோடி, தேசத்துரோகத்தில் மன்மோகன் சிங் உள்ளிட்ட அனைவரையும் விஞ்சிவிட்டார்.

இதுவும் போதாதென்று, கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதிவரை நடைபெற்ற உலக வர்த்தகக் கழகத்தின் பத்தாவது மாநாட்டில் விவசாய மானியம் தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்திலும் கையெழுத்திட்டிருக்கிறது, மோடி அரசு. அத்தீர்மானம் சில விதிவிலக்குகள் தவிர, உணவுப் பொருட்களுக்கு வழங்கப்படும் ஏற்றுமதி மானியத்தை ஏழை நாடுகள் 2018-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக ரத்து செய்துவிட வேண்டும்; விவசாயிகளிடமிருந்து உணவுப் பொருட்களைக் கொள்முதல் செய்வது; அவற்றை ரேஷன் கடைகளின் மூலம் விநியோகிப்பது ஆகியவை தொடர்பாக விரைந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிவுக்கு வர வேண்டும் எனக் கோருகிறது.

ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் நோக்கம், பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தானியத்தை இந்தியாவின் தலையில் கட்டுவதும், இந்திய விவசாயத்தையும் உணவுத் தற்சார்பையும் அழிப்பதும்தான். பொது விநியோகம், நெல் கொள்முதல் ஆகியவை ஏழைகளின், விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினை. அவற்றை ஏகாதிபத்தியங்களின் நிபந்தனைக்கு உட்படுத்துவதென்பது விவசாயத்தையும், மக்களின் உயிரையும் முற்றுமுழுதாகப் பலியிடுவதன்றி வேறல்ல.

இந்திய மக்களின் உணவு உரிமை மட்டுமின்றி, அவர்களின் கல்வியுரிமையும் ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைக்கப்பட்டிருக்கிறது. காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்தியக் கல்வித் துறை சேர்க்கப்பட்டிருப்பதை விலக்கிக் கொண்டு, அதிலிருந்து வெளியேற வாய்ப்பிருந்தும், கல்வித் துறையைப் பன்னாட்டு கல்வி வியாபாரிகளுக்குத் திறந்துவிடுவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து நடத்த ஒப்புக்கொண்டிருக்கிறது, மோடி அரசு.

இப்போது தெரிகிறதா, டில்லி ஜே.என்.யு. மாணவர்கள் மீதான தாக்குதல் தன்னுடைய துரோகத்தை மறைப்பதற்கு மோடி அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கும் சதியென்று!

– தலையங்கம்

புதிய ஜனநாயகம் மார்ச் 2016

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 3

0

புதுச்சேரி

பேசுவது தேசபக்தி! செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது!
பார்ப்பன பாசிச பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!

மார்ச்-23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங் நினைவு தினம்! தனது 23 வயதில் நமது நாட்டு விடுதலைக்காக தூக்கு மேடை ஏறிய மாவீரன்! தாய் நாட்டிற்காகவும், தேசப்பற்றுக்காகவும் இளம் வயதில் தனது மரணத்தையே விடுதலைப் போராட்டத்திற்கான உந்து சக்தியாக மாற்ற, தூக்கு மேடைக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி கொண்ட மாவீரன் தான் உண்மையான ஹீரோ என்பதை உணர்த்தும் வகையிலும், முதலாளித்துவ சுரண்டல் அமைப்பை ஒழிப்பதும், மதவெறி பாசிச சக்திகளின் வெறியாட்டங்களை முறியடித்து மக்கள் வர்க்கமாக ஒன்றுபட வேண்டும் என்ற அவரது எழுத்துக்களும், அரசியல் நிலைப்பாடுகளும், வாழ்க்கையும் இன்றைய அரசியல் சூழலில் நாம் வரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலும், முதலாளித்துவ சுரண்டலை பாதுகாக்கும் வகையில், மக்களை வர்க்கமாகச் சேரவிடாமல் தடுக்கும் பார்ப்பன பாசிச பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம் என அறைகூவும் வகையிலும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு புதுச்சேரியின் முக்கிய சாலைச் சந்திப்பான ராஜா திரையரங்கம் அருகில் நடத்தப்பட்டது.

march-23-puthuvai-posterஆர்ப்பாட்ட்த்திற்கு புதுச்சேரி பு.ஜ.தொ.மு மாநிலத் தலைவர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். புதுச்சேரி பு.ஜ.தொ.மு திருபுவனை கிளைத் தலைவர் தோழர் சங்கர் மற்றும் புதுச்சேரி பு.ஜ.தொ.மு மாநில இணைச் செயலாளர் தோழர் லோகநாதன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர்.

march-23-puthuvai-demo-3இந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்காக கடைவீதிகள், வீடுகள், பேருந்துகளிலும், இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தின் மூலம் கிராமப் புறங்களில் வாகனங்களில் கொடி கட்டிக் கொண்டு மெகா போன் மூலமாகவும் பிரச்சாரங்கள் கொண்டு செல்லப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் போது பரவலாக ஆதரித்தனர்.

march-23-bhagat-singh-2ஆர்ப்பாட்டத்தில் தலைமையுரையாற்றிய தோழர், “தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டு வீசியதால் தூக்கிலிடப்பட்டார் என்பது மட்டும் தான் பரவலாக சொல்லப்படுகிற விசயம். அவர் எதற்காக குண்டு வீசினார் என்பது பொதுவாக எந்த கட்சிகளும் சொல்வதில்லை. கேளாத செவிகள் கேட்கட்டும் என்று சொல்லி, எந்த உயிர்ச்சேதமும் நிகழாவண்ணம் குண்டு போட்டு, ஒட்டு மொத்த நாட்டின் கவனத்தைத் தனது பக்கம் இழுத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கொண்டு வந்த சட்ட மசோதாவை எதிர்த்து, தொழிலாளர்களின் உரிமைகளையும், அதற்கெதிரான போராட்டங்களையும் நசுக்குவது தான் சட்ட மசோதாவின் உண்மையான நோக்கம் என்பதை அம்பலப்படுத்தி, அதற்கெதிராகத் தொழிலாளி வர்க்கம் போராட உணர்வூட்டினார். இந்திய விடுதலையில் காந்தி போன்ற தலைவர்கள் சொல்லும் சுயராச்சியம் என்பது நாட்டின் ஒட்டு மொத்த மக்களுக்கான விடுதலையாக இருக்காது. அது முதலாளிகளுக்கான விடுதலையாகத் தான் இருக்கும். முதலாளித்துவ சுரண்டலை ஒழிக்கும் வகையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தை தூக்கியெறிந்து, ஒட்டுமொத்த அரசியல் அமைப்பையே மாற்றும் வகையில் புரட்சியின் மூலம் தான் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் விடுதலை சாத்தியம் என்று அன்று பகத்சிங் வார்த்தைகள் இன்றைய தொழிலாளர்களின் நிலைமைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்பதை நம்மால் அனுபவ பூர்வமாக உணர முடியும். எனவே, முதலாளித்துவத்தின் சுரண்டல் முறையை தகர்க்கும், புரட்சி ஒன்று தான் நமது உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி. இதை உணர்த்திய பகத்சிங்கின் வாரிகளாய் களத்தில் இறங்குவோம்” என்றார்.

march-23-bhagat-singh-1திருபுவனை கிளைத் தலைவர் தோழர் சங்கர், பகுதியில் உள்ள தொழிலாளர்களின் நிலையை விளக்கியதுடன், “இன்று பெயரளவிலான சட்டங்கள் இருக்கும் போது, பல்வேறு போராட்டங்களுக்குமிடையே நமது உரிமைகளில் சிலவற்றை வென்றெடுக்கிறோம். ஆனால், தற்போது ஆலை வளாகம் முழுவதும் கேமிரா கொண்டு தொழிலாளர்களைக் கண்காணிக்கும் நிலையில், தொழிற்பேட்டைகளில் சிறப்பு போலிசு நிலையங்கள், தொழிலக உளவு போலிசு என மோடி அரசு கொண்டு வந்து ஆலைக்கு உள்ளேயும், ஆலைக்கு வெளியேயும் உரிமைகளுக்காகப் போராடும் தொழிலாளர்களை மோப்பம் பிடித்து வேட்டையாடும் நிலை உருவாகும். இந்த அபாயகரமான சூழலை நாம் புரிந்து கொண்டு பகத்சிங் காட்டிய பாதையில் உரிமைகளை வென்றெடுக்க புரட்சிப் பாதையில் அணிதிரள வேண்டும் என்று அறைகூவினார்.

அடுத்து, மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன், தனது உரையைத் துவங்குவதற்கு முன்னே, தேர்தல் அதிகாரி, “அனுமதி வாங்கிய நேரம் கடந்து விட்ட்து. எனவே, கூட்டத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும்” என்று கூறினார். “ஆர்ப்பாட்டம் காலதாமதமாகத் தான் தொடங்கப்பட்ட்து. அதனால், சிறிது நேரத்தில் முடித்துவிடுகிறோம்” என்று சொன்னவுடன் பின்வாங்கிய அதிகாரி, அருகில் நின்றிருந்த போலிசிடம், கூட்டத்தை முடிக்கச் சொல்லி ஏவி விட்டார். அருகில் நின்றிருந்த உளவுப் பிரிவு போலிசோ, “இவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வர்களாச்சே, ஓட்டுப் போடாதேன்னு சொல்வாங்களே, இவங்களுக்கு எப்படி அனுமதி கொடுத்தனர்?” என்று தன்பங்குக்கு போலிசை கொம்பு சீவி விட்டார். இந்நிலைமைகளால், அவரது உரையை அரைகுறையாகவும், சுருக்கமாகவும் முடிக்க நேர்ந்தது.

march-23-puthuvai-bannerதோழர் தனது உரையில், “இன்று தொழிலாளர் சட்டங்கள் பல இருந்தும், தொழிலாளர்கள் உரிமைகளற்றவர்களாக ஒடுக்கப்படுகின்றனர். இந்த லட்சணத்தில் மோடி அரசு, தொழிலாளர் சட்டங்களை ஒழிப்பதோடு மட்டுமல்லாது, 24மணிநேர ஷாப்பிங் மால்கள் கொண்டு வருவதன் மூலம் சிறுவணிகர்களையும் ஒழிக்க திட்டமிட்டுள்ளது. இங்கு போத்தீஸ் போன்ற வணிக நிறுவனங்களில் அதிகபட்சமாக பெண்கள் தான் வேலை செய்கின்றனர். அவர்கள், தனது வேலை நிலைமை காரணமாக தொடர்ந்து நின்று கொண்டே இருக்க வேண்டிய நிலை உள்ளது. 24 மணிநேர ஷாப்பிங் மால்கள் வந்தால், இரவு நேரங்களிலும் அதிக அளவில் பெண்கள் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படும், அவர்களின் வேலை நிலைமைகளால் கருப்பை இறக்கம் போன்ற உடல்ரீதியாக பிரச்சினைகளால் பாதிப்புகள் அதிகமாகும். இதன் மூலம் சமூகமே நோயுற்ற சமூகமாக மாறும் அபாயத்தில் தள்ளி வருகிறது மோடி அரசு.

march-23-puthuvai-demo-5தொழிலாளர்கள், சிறுவணிகர்கள் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். ஆனால், இந்த நிலைமைகளை எல்லாம் மறைத்து மக்களை தேர்தல் மயக்கத்தில் ஆழ்த்தி வருகிறார்கள் ஓட்டுக் கட்சிகள், ஊடகங்கள். தேர்தல் துறை அதிகாரிகளோ, நேற்றுவரை லஞ்ச, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு விட்டு, இன்று யோக்கியர்கள் போல வலம் வருவதும், ஜனநாயகம் என்ற பெயரில் பேச்சுரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறித்து, ஆட்டம் போடுவதும் கேலிக்கூத்து. ஒருபுறம் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வு சூறையாடப்படுவதும், மறுபுறம், ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவதும், இருக்கின்ற அரசு மக்களுக்கானது அல்ல என்பதும், நமக்கான உரிமைகளைப் பெற இந்த முதலாளித்துவ சுரண்டல் அமைப்பை ஒழித்து மக்களுக்கு உண்மையான ஜனநாயக உரிமைகளைப் பெறும், புதிய ஜனநாயக அரசை நிறுவ பகத்சிங் வழியில் போராடுவோம்.” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியில் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.

தொடர்புக்கு, செல்: 9597789801

கோவை

march-23-kovai-10பேசுவது தேசபக்தி, செய்வது நாட்டை மறுகாலனியக்குவது !
பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ். கும்பலை விரட்டியடிப்போம்!

என்கின்ற முழக்கத்தின் அடிப்படையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த சி-2 காவல் நிலையத்திலும் தேர்தல் அலுவலர் அலுவலகத்திலும் அனுமதி கடிதம் 14-03-2016 தேதியன்று பு.ஜ.தொ.மு சார்பாக கொடுத்திருந்தோம்.

சி-2 காவல் நிலையத்தில் “எங்களிடம் மனு கொடுக்கவேண்டாம் தேர்தல் அலுவலகத்தில்தான் கொடுக்கவேண்டும்” என்று கூறினர். “தேர்தல் அலுவலகத்திலும் தருகிறோம் உங்களுக்கும் தருகிறோம்” என்று கூறி மனுவை கொடுத்துவிட்டு வந்தனர்.

march-23-kovai-09

march-23-kovai-07மார்ச் 21-ம் தேதி தேர்தல் அலுவலரை சந்தித்து கேட்டபோது, “தேர்தல் சம்மந்தம் இல்லாதவைகளுக்கு காவல் துறைதான் அனுமதி கொடுக்கணும்” என்று கூறிவிட்டனர். பின்னர் C-2 காவல் நிலைய அதிகாரியை தொடர்புகொண்டதுக்கு அரசையோ, அரசியல் தலைவர்களையோ விமர்சிக்காமல் நடத்திக் கொள்ளுங்கள் என்று நிபந்தனையோடு வாய் மொழி அனுமதி கொடுத்தனர்.

மார்ச் 23 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் திலீப், மாவட்ட செயலாளர் தலைமை தங்கினார்.

தோழர் கோபிநாத் தனது கண்டன உரையில் தொழிலாளி வர்க்கத்துக்காக உயிர்நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு காலனி ஆதிக்கத்திக்கு எதிராக போராடிய  தியாகிகளின் நினைவு நாளில் அவர்களுடைய செயலை நாமும் பின்பற்ற வேண்டும் என்று சபதம் ஏற்போம் என்று பேசினார்.

தோழர் சித்தாத்தர் (மக்கள் கலை இலக்கியக் கழகச் செயலாளர்) தனது உரையில், “பார்ப்பன பாசிசத்தை அடியோடு அழிக்கும் வரை உழைக்கும் மக்களுக்கு விடிவு பிறக்காது” என்று பேசினார்.

march-23-kovai-01நீலகிரி மாவட்டம் செயலாளர் தோழர் பலன் பேசுகையில் நாட்டை மறுகாலனியாக்கதுடிக்கும் மோடியரசை கண்டித்து பேசினார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் உமா பார்ப்பனிய மோடி அரசு மாணவர்களை எப்படி ஒடுக்குகிறது என்பதையும் JNU மாணவர் போராட்டத்தையும் விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தோழர் விளவை இராமசாமி உரை:

தொழிலாளர் விரோத சட்டங்கள் நிறைவேற்றுவதை கண்டித்து வெள்ளையர்கள் காலத்தில் பாராளுமன்றத்தில் குண்டு வீசினார் பகத்சிங். குண்டு விழுந்தவுடன் காங்கிரஸ் தலைவர்கள் மோதிலால் உள்பட அனைவரும் நாற்காலிகளுக்குள் பதுங்கினார். கையில் துண்டுப் பிரசுரங்களோடு தோழர்கள் நிற்கிறார்கள். வெள்ளைக்கார போலீசு இவர்களைக் கைது செய்ய அஞ்சுகிறது. நம்மீது குண்டுகளை வீசினால் என்ன செய்வது என பம்மினார்கள். உடனே பகத்சிங் “பயப்படாமல் வந்து எங்களைக் கைது செய்யுங்கள், துண்டுப்பிரசுரங்கள் மட்டும் உள்ளது” எனக் கூறி கைதாகினார்.

march-23-kovai-0623 வயது இளைஞன் இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் பிரதிநிதியாய் களத்தில் நின்றார். தனது தந்தை வெள்ளைத் துரைமார்களிடம் பேசி சமரசம் செய்கிறேன் என தந்தைப்பாசம் காட்ட உடனே ஒரு கணமும் யோசிக்காமல் அதனைக் கடுமையாக மறுத்து தந்தையே எனது நேசம் நாட்டின் மீது உள்ளது. அதற்கு ஊறு விளைவிக்கும் எதனையும் நான் ஏற்க மாட்டேன் எனக் கம்பீரமாக முழங்கினார்.

நாடு முழுவதும் பகத்சிங், ராஜகுரு சுகதேவ் தூக்கிலிடப்படுவதை எதிர்த்துப் போராட்டங்கள் வீறு கொண்டு எழுந்தன. நம் தமிழகத்திலும் தந்தை பெரியார் பகத்சிங் விடுதலைக்கு குரல் கொடுத்தார். மக்கள் எழுச்சியை கண்டு மிரண்ட வெள்ளை அரசு ஒரு நாள் முன்னதாகவே தூக்கிலிட ஆயத்தம் செய்கிறது. அப்பொழுதும் பகத்சிங், “நான் தூக்கு மேடை ஏறத் தயார். தோழர் லெனின் எழுதிய அரசும் புரட்சியும் எனும் நூலை படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனோடு பேசிக் கொண்டிருக்கிறான். சற்றுப் பொறுங்கள்” என்றார். தனது வாழ்வின் இறுதி நிமிடங்களில் கம்யூனிஸ்டு நெஞ்சுறுதியை நிலை நாட்டினார்.

“இதோ இந்தியப் புரட்சியாளன் தூக்கு மேடை ஏறும் இறுதி நிமிடங்களை காணும் பாக்கியம் உங்களுக்கு கிடைத்து உள்ளது. எனது கால்களைப் பார்த்துக் கொள்ளுங்கள். கால்கள் துவண்டு போகாது. எனது கண்களை பார்த்துக் கொள்ளுங்கள் கண்ணீர் சிந்தாது. இன்குலாப் ஜிந்தாபாத்” என வீர முழக்கமிட்டு தனது தியாகத்தால் சாவை வென்றார்.

march-23-kovai-04

கடந்த 50 ஆண்டு காலமாக வழிகாட்டிய முன்னோடிகள் பிழைப்புவாதிகளாக மாறியதால்தான் தொழிலாளி வர்க்கம் உணர்வில் பின்தங்கி உள்ளது. இதே கோவையில் இப்போது எட்டு தொழிலாளர்கள் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்கள். பிரிக்கால் எச்‌.ஆர் ராய் ஜே. ஜார்ஜ் தொழிலாளர்களை கம்பெனியில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளார்கள். தொழிலாளி வர்க்கம் அதன் இயல்பிலேயே அதன் இருப்பிலேயே புரட்சிகரமானதாக உள்ளது. வழிகாட்டிகள் தான் புரட்சிகரமானவர்களாக இல்லை

march-23-kovai-08பிரிக்கால் வனிதா மோகன் சிறுதுளி அமைப்பை வைத்து கோவை மக்களை ஏமாற்றி வருகிறார். கோவை முதலாளிகள் நம்மை முட்டாளாக்கிக் கொண்டுள்ளார்கள். நொய்யல் நதி என்பது நம் பெருமை. கோவையின் அழகு நொய்யல் நதி. நொய்யல் நதியின் வருகையை எதிர்பார்த்து காவிரித்தாய் காத்திருப்பாளாம். என்னவென்று, எனது பெரியமகள் ஏன் இன்னும் வரவில்லை என்று ஏங்கியிருப்பாளாம். அந்த நொய்யலை நாசம் செய்தது யார் ? கோவை முதலாளிகள் தான். இப்போது நாசம் செய்துவிட்டு நாடகமாடுகிறார்கள். வருகின்ற மார்ச் 26-ம் தேதி நொய்யல் என் உயிர் மூச்சு என்ற பெயரில் ஒரு பித்தலாட்டத்தை அரங்கேற்ற உள்ளார்கள். அதனை கோவைத் தொழிலாளி வர்க்கம் அம்பலப்படுத்த வேண்டும். ஏனென்றால் பிரிக்கால் வனிதா மோகன் நொய்யலுக்கு நூறு ரூபாய் எனும் பெயரில் பொது மக்களிடமும் வெளி நாட்டிலும் சிறுதுளி அமைப்பின் சார்பில் நன்கொடை திரட்டி முண்டந்துறை ஆற்றில் தடுப்பனை நீர்த் தேக்கத்தின் கரையில் தாமிரா ரிசார்ட் எனும் பெயரில் உலகத் தரம் வாய்ந்த சொகுசு விடுதி கட்டி உள்ளார். வனிதா மோகன் வாங்கியுள்ள பண்ணை நிலங்களுக்கு நொய்யல் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளவும் நதி நீர்ப்பாதுகாப்பு எனும் பெயரில் நாடகமாடுகிறார்.

march-23-kovai-02வனிதா மோகனால் வாங்கப்பட்ட தீர்ப்பினால் பாதிக்கப்பட்டு கோவைச் சிறையில் ஆயுள் தண்டனை பெற்று தண்டனை அனுபவித்து வரும் எட்டு தொழிலாளர்கள் நமது வர்க்கம். நமது வர்க்கத்தை பழிவாங்கிய கோவை முதலாளிகளின் அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எதிர்க்க வேண்டும்.

கோவை முதலாளிகளின் கூட்டாளிகள்தான் ஈஸா யோகா மையம். இன்று வரை ஈஸா யோக மையத்துக்கு இருபத்தி நாலு மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகத்தை யார் ஆண்டாலும் சரி, ஜெயாவோ கருணாவோ ஈஸா யோகா மையத்துக்கு போகும் மின்சாரத்தை நிறுத்த முடியவில்லை. நொய்யல் நதியில் நீராதாரப் பகுதிகளில் ஒன்றான நீலியாற்றையே ஜக்கி வாசுதேவ் தனது மடத்துக்கு திருப்பி விட்டுள்ளான். இதனைக் கேட்பதற்கு எவனும் தயார் இல்லை. ஈஸா யோகா மையத்தின் சீடர்களாக கோவையின் எழுத்தாளர்கள் மரபின் மைந்தன் முத்தையா, நாஞ்சில் நாதன் போன்றவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். அதே போல் காருண்யா பல்கலைக் கழகம், சின்மயா வித்யாலயம் போன்றவைகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஆக்கிரமித்து நொய்யல் நதியை அதன் நீராதாரத்தை நாசமாக்கி வருகிறார்கள்.

march-23-kovai-03கோவை முதலாளிகள் தங்கள் சமூக விரோத சட்ட விரோத காரியங்களை மறைக்க மக்கள் முன்னாள் வேறு ஒரு நாடகமும் போடுகிறார்கள். இரட்டை ஆயுள் தண்டனை போன்றவைகளையும் கண்டு கோவைத் தொழிலாளி வர்க்கம் கோபம் அடையாமல் சாந்தப்படுத்த, தொழிலாளி வர்க்கம் தன் உணர்வில்லாமல் ஒன்று திரளாமல் தடுக்க இன்னொரு காரியமும் மாதாமாதம் செய்து வருகிறார்கள். பாபநாசம் சினிமா வசனகர்த்தா எழுத்தாளர் ஜெயமோகனை அழைத்து வந்து கீதை வகுப்பும் நடத்துகிறார்கள். கோவையின் எல்லா அரசியல் கட்சிகளையும், எல்லா ஓட்டுக் கட்சி தொழிற்சங்கங்களையும் மேற்படி கொள்ளையர் கூட்டம் ஜீரணித்து விட்டது. இவர்களுக்கு கட்டுப்படாமல் போராடிக் கொண்டிருப்பது பு.ஜ.தொ.மு மட்டும் தான். எனவேதான் நமக்கு எதிராக பொய் வழக்குகள் போட்டு, சிறையில் தள்ளி மிரட்டுகிறார்கள். இது ஒரு வகையில் நம்மைக் கண்டு மிரண்டு போய் உள்ளார்கள் என்பதற்கு சாட்சி. நாம் மேலும் மேலும் போராடினால் கோவைத் தொழிலாளி வர்க்கம் நம் பின்னால் வரும்.

march-23-kovai-05கொடைக்கானலில் இயங்கி வந்த இந்துஸ்தான் யூனி லீவர் கம்பெனி மிகப் பிரம்மாண்டமானது. இந்துஸ்தான் லீவர் கம்பெனியோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நம் எதிரிகளான கோவை முதலாளிகள் தூசு போலத்தான். அப்படிப்பட்ட இந்துஸ்தான் லீவர் கம்பெனியை தொழிலாளர்கள் போராடி வென்றுள்ளார்கள் ஆண்டுக்கு 30,000 கோடி பிஸினஸ் செய்கிறவன், விளம்பரத்துக்கு மட்டும் ஐயாயிரம் கோடி செலவு செய்பவன் இந்துஸ்தான் லீவர்.

இந்துஸ்தான் லீவர் தேர்மா மீட்டர் ஆலை 1983-ல் தொடங்கப்பட்டது. இதன் பிரதான இடுபொருள் (மெர்குரி) பாதரசம். இது விஷம் காற்றில் கலக்கும் பொது மக்களுக்கு பாதிப்புகளை உண்டாக்கும் தலைமுறை தாண்டியும் அதன் பாதிப்புகள் தொடரும்.

march-23-kovai-04பாதரச கழிவையும், கண்ணாடி கழிவையும் வளாகத்தில் கொட்டி வைத்து பாம்பாறு வழியாக வெளியேற்றி அது வைகை நதியில் சேர்ந்து மீன்கள் வழியாக மனிதர்களை பாதித்தது பாதரச நச்சு. தொழிலாளர்களும் மக்களும் போராடவே பிரச்சினை வெளியில் வந்தது. 1300 கிலோ பாதரசத்தை ஆற்றில் விட்டதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டது. 400 கிலோ மண்ணில் கலந்திருப்பதாக சொன்னது. இந்தப் போராட்டம் பல்வேறு வகைகளில் நடக்க கடைசியில் இந்துஸ்தான் லீவர் கம்பெனியை இறங்கி வந்து தொழிலாளர்களுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது எதை காட்டுகிறது என்றால் தொழிலாளர்கள் போராடினால் வெல்ல முடியும் என்பதை தெளிவாக்குகிறது.

மோடி சர்க்கார் வீழ்த்த முடியாததல்ல. மறுகாலனியாக்கம் ஒன்றும் பலமானதல்ல என்பதை டெல்லி ஜே.என்‌.யு மாணவர்கள் நிரூபித்துக் காட்டி வருகிறார்கள். ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தரை எதிர்த்து மாணவர்கள் அவனது அறையை சூறையாடி நாட்டுக்கு முன்மாதிரியாக உள்ளார்கள். ரோஹித் வேமுலாவுக்காக தொழிலாளர் வர்க்கமும் குரல் கொடுக்க வேண்டும்.

சமூகத்தின் அனைத்து வர்க்கங்களுக்கும் தலைமை தாங்கும் ஆற்றல் உடையது தொழிலாளி வர்க்கம். நவீன உற்பத்தியில் அது வகிக்கும் இடத்தில் வரலாறு இந்த வாய்ப்பை தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கியுள்ளது. வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற பகத்சிங் நினைவு நாளில் சபதமேற்போம்”

மக்கள் அதிகாரம் தோழர் சூர்யா தோழர் பகத்சிங் நினைவுநாளில் மறுகாலனியாக்கத்துக்கு எதிராக நாம் போராடவேண்டியத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 2

0

திருச்சி

காதிபத்திய எதிர்ப்புப் போராளி தோழர் பகத்சிங் நினைவு நாளான மார்ச் – 23 அன்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கங்களான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளார்கள் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவை இணைந்து “பேசுவது தேச பக்தி, செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது! பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

march-23-trichy-posterஆர்ப்பாட்டத்திற்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் தோழர் சுந்தரராசு தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி யின் விதேசிக் கொள்கையை அம்பலப்படுத்தும் வகையில் சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் ராஜா கண்டன உரை நிகழ்த்தினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக சிறப்புரையாற்றிய தோழர் கோவன் பேசுகையில்…..

தோழர் கோவன்
தோழர் கோவன்

“ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நமது முன்னோர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ் –ன் மூதாதையர்கள் அன்னிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடவில்லை. மாட்டுக்காக போராடினார்கள். ‘கோமாதா தான் தாய். கோமாதா தான் தெய்வம். மாட்ட பாதுகாக்கனும்’ என்று தேசவிடுதலைப் போராட்டத்தை திசை திருப்பினார்கள். எனவே இவர்களுக்கும் தேசவிடுதலைப் போராட்டத்துக்கும் தேசபக்திக்கும் துளியும் சம்மந்தமில்லை என்பதுதான் கடந்த கால வரலாறு.

‘பாரத்மாதாகி ஜெய்! என்று யாரெல்லாம் சொல்லவில்லையோ அவர்களெல்லாம் தேசவிரோதி’ எனச் சொல்கிறான். அவனது தேசத் துரோகத்தை மறைப்பதற்கு இப்படி பேசுகிறான்.

மோடி அரசின் தேசத் துரோக நடவடிக்கைகள் ஏராளம்.

அணுஉலை என்பது மற்ற மின்சாரம் தயாரிக்கும் முறைகளை விட பாதுகாப்பு குறைவானது. நம்ம நாட்டுல நீர், காற்று, குப்பைகள் போன்ற மாற்று எரிசக்திகள் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும். ஆனால், அணு உலைகள் தயாரித்து விற்கும் பன்னாட்டு கம்பெனிகளின் லாபத்துக்காக இந்தியாவில் அணு உலைகள் அமைக்கப்படுகின்றன. அதற்கு வழிவகுக்கு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் துவங்கிய இந்த வேலையை இப்போது வேகமாக அமுல்படுத்தும் வேலையில் பி.ஜே.பி-ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஈடுபட்டு வருகின்றது.

போபாலில் மெத்தில் ஐசோ சயனைடு வாயுவை கசியவிட்டு ஒரே இரவில் 30,000 மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதையொத்த பாதிப்புகளை உருவாக்க காத்திருக்கின்றன அணுஉலைகள். ஆனால், ‘அணுஉலை மூலம் பாதிப்பு ஏற்பட்டால் நட்ட ஈடு தரமுடியாது’ என்று அணுஉலையை சப்ளை செய்கின்ற பன்னாட்டு கம்பெனிகள் சொல்கின்றன. இதனை ஏற்றுக்கொண்டு சர்வதேச அணுசக்தி கழகத்தில் நடந்த பேச்சுவார்த்தை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளார் மோடி. அதன்படி, ‘அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் நட்டஈடு தரமுடியாது. வேண்டுமானால் இந்திய மக்களின் வரிப்பணத்தில் இருந்து எடுத்துக்கொள்ளலாம்.’ ஆகவே, நட்டத்தையும் – இழப்பையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் மோடி. இந்த நடவடிக்கைக்கு கையெழுத்து போட்டது தேசபக்தி நடவடிக்கையா? இது ஒரு அப்பட்டமான தேசத்துரோகம் இல்லையா?

இந்த தேசதுரோகத்தை மூடிமறைக்கத்தான் அவர்கள் குரலை மேலே எழுப்பி உச்ச குரலில் தேசபக்தி என்று பேசுகின்றார்கள்.

march-23-trichy-meeting-1அது மட்டுமல்ல கென்யாவில் நைரோபியில் நடந்த (WTO) உலக வர்த்தக கழகத்தின் மாநாட்டில் ‘உங்கள் நாட்டில் கொடுக்கப்படும் மானியங்கள் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்ற நிபந்தனையை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. ரேசனில் அரசு  போடும் இலவச ரேசன்அரிசியை நம்பி உயிர்வாழும் மக்களுக்கு அதையே வாய்க்கரிசியாக மாற்றுவதற்கு, ரேசன் மானியத்தை ரத்து செய்து, 2018-க்குள் ரேசன் கடையை மூடிவிடுவதாக மோடி கையெழுத்திட்டுள்ளார். இது என்ன தேசபக்தி நடவடிக்கையா? இதற்கு பெயர்தான் வல்லரசு நாடா? என் நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு, அரைகுறை உணவுக்கும் வேட்டு வைத்துவிட்டு என்ன தேசபக்திய பத்தி பேசுற நீ ! நீ செய்யக்கூடிய இந்த வேலைக்கு பெயர் தேசத்துரோகம் இல்லையா? அவனுடைய தேசத்துரோகத்தை மூடிமறைப்பதற்குதான் எங்களை தேசத்துரோகியென முத்திரை குத்துகின்றான்.

இவர்களின் துரோகத்தை மூடி மறைக்க செயற்கையான பகையை உருவாக்குவது, அவனோடு சண்டைபோட வைப்பது என்கின்ற வகையில் உருவாக்கப்பட்ட எதிரிதான் இசுலாமியர்கள். நாளை நீங்களும் எதிரியாகலாம். பாசிஸ்ட்டுகள் என்று சொல்லப்படும் ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களை எதிரியாக்கினான். பின் தொழிலாளிகளை, கம்யூனிஸ்ட்டுகளை எதிரியாக்கி நரவேட்டையாடினான். அதுபோலத்தான் இன்று இசுலாமியர்களை தேசத்துரோகி என்கிறான். அதே நேரத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட இசுலாமிய நாடுகளுடன் கைக் குலுக்குகிறான். விருந்து சாப்பிடுகின்றான்.

march-23-trichy-meeting-2 நம்ம தமிழ் நாட்டுல இந்து முன்னணிக்காரன் வீட்டில குண்டுவெடிச்சா அங்குள்ள இசுலாமியர்கள் மீது பழிபோடுவது, இறுதி விசாரணையில் குண்டுவைத்தது இந்து மக்கள் கட்சி பிரமுகர், இந்துமுன்னணி பிரமுகர், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் என அம்பலப்பட்டு போவதுதான் நடக்கின்றது. இவர்களே குண்டுவைத்துவிட்டு இசுலாமியர்கள் மீது பழியைப் போட்டு பெரும்பான்மை இந்துக்களின் ஓட்டை பெறுவது என்ற குறுக்கு வழியைதான் கடைபிடிக்கின்றார்கள்.

அப்படித்தான் உ.பி-யில் முசாபர்நகர் படுகொலை நடந்தது. லவ் ஜிகாத் என்ற நிகழ்வை நடத்தி இந்துப் பெண்களை இசுலாமிய இளைஞர்கள் மயக்கி கவர்ந்து செல்கின்றார்கள் என்ற பொய்யைச் சொல்லி அதன் மூலமாக 40-க்கும் மேற்பட்ட இசுலாமியர்களை படுகொலை செய்தார்கள் அதன்பின் உ.பி தேர்தலில் 70-க்கும் மேற்பட்ட இடங்களை பி.ஜே.பி கைப்பற்றியது.

இன்று தமிழகத்தில் கூட்டணிக்கு செல்ல யாரும் தயாரில்லை. தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் வடமாநிலத்தில் குண்டு வைத்தது போல் இங்கும் குண்டுவைத்தால் வெற்றி பெற்றுவிடலாம். அதன் பிறகு மக்கள் நலக் கூட்டணியாவது, அய்யாவோட, அம்மாவோட கூட்டணியாவது. ஒரே கூட்டணி நாம்தான் என்ற கனவில் உள்ளனர். குண்டு வைப்பது அவர்களுக்கு ஒரே ஒரு எளிமையான வழி. அதனைப் பயன்படுத்தி பொது எதிரியை சித்தரிப்பதும் அதனை வைத்துக்கொண்டு ஆட்சியைப் பிடிப்பதும் நடக்கின்றது.

march-23-trichy-meeting-6இது எப்படி அம்பலப்பட்டு போனது என்றால் முசாபர் நகரில் குண்டுவைத்த காவி பயங்கரவாதிகளை கண்டறிய ஜே.என்.யு மாணவர்கள் தங்களை முன்னாள் மாணவர்கள் என்றும் நாங்களும் ஆர்.எஸ்.எஸ், சங்கபரிவார அமைப்பை சார்ந்தவர்கள் தான் என பத்திரிகையாளர்கள் போல உ.பி மாநிலத்தின் எம்.எல்.ஏ சுரேஷ் ரானா என்பவரிடம் பேட்டிக்கண்ட போது அவன் சொல்கிறான். ‘லவ் ஜிகாத் என்பது நாங்கள் உருவாக்கிய அமைப்புதான். நாங்கள் தான் சாலு என்கின்ற இந்துப் பெண்னை சலீம் என்கிற இசுலாமிய இளைஞன் மிரட்டி கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய முயன்றதாக சலீம் மீது தாக்குதல் நடத்தினோம், படுகொலையை நடத்தியதும் நாங்கள் தான்’ என ஒப்புக்கொண்டான். இதனை பதிவு செய்து ஊடகங்களில் வெளியிட்டனர் ஜே.என்.யு மாணவர்கள். அப்படித்தான் முசாபர் நகர் கலவரத்தை திரையிட்டனர் ஜே.என்.யு மாணவர்கள்.

அதை திரையிட்டதற்காக ரோகித் வெமுலா கொலை செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பு என்ற வட்டத்துக்குள் தனது வரம்பை நிறுத்திக் கொள்ளாமல், சாதி ரீதியாகவும்- மத ரீதியாகவும் மக்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற ஆத்திரத்தில் ரோகித் வெமுலா இப்பிரச்சினையில் தலையிட்டார். பண்டாரு தாத்தேத்ரேயா, ஸ்மிருதி ராணி ஆகிய பி.ஜே.பி எம்.பி.க்களின் மிரட்டல், சித்திரவதையால் ரோகித் கல்லூரியை விட்டு விரட்டப்பட்டார். அதன் பின்னும் சும்மா இல்லாமல் உளவியல் ரீதியாக டார்ச்சர் செய்தார்கள். அதன் பிறகுதான் ரோகித் தற்கொலை செய்து கொண்டார். தொகுப்பாக பார்க்கும் போது ஆர்.எஸ்.எஸ் காவி கும்பலை அம்பலப்படுத்தியதற்காக கொல்லப்பட்டிருக்கிறார்.

இப்படிதான் மாட்டுகறி வைத்திருந்ததாக கூறி ஒரு இஸ்லாமிய முதியவரான அக்லக் என்பவரை கொலை செய்தது, இந்துத்துவ கும்பல். அவரது மகன் சங்க பரிவார கும்பலால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையிருமாய் மருத்துவமனையில் கிடக்கின்றார். இப்பிரச்சனையை ஆய்வு செய்தபோது அங்கிருந்தது மாட்டுகறி அல்ல ஆட்டுக்கறி என்பது நிரூபணமானது. இப்போது சொல்லுங்கள் செத்துப் போனவரை உயிரோடு கொடுக்க முடியுமா? என மக்கள் கேட்கின்றனர். இறந்து போன முதியவரின் மகள்கள் இருவருக்கும் அவ்வூரில் உள்ள இந்துக்கள் இணைந்து திருமணம் செய்து வைத்துள்ளனர். மக்களுக்கு மதம் வேறாக இருந்தாலும் ஒரு தாய் பிள்ளையாக வாழ்ந்து வருகிறோம் என நிருபித்துள்ளனர்.

ஹரியானாவில் மாட்டு தோலை உரித்த குற்றத்திற்காக இரு இளைஞர்களை அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்கள். மதம் – சாதி மாறி காதலித்தால் வெட்டி கொல்கிறார்கள். தற்போது கூட உடுமலைபேட்டையில் சங்கர் என்கிற தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பசுமாட்டுக்கும் காளைமாட்டுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் கும்பல். இந்த கும்பல் தான் மதம் – சாதி மாறி காதலித்த தம்பதிகளை வெட்டி கொல்கிறார்கள். விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட மனிதர்களுக்கு கொடுப்பதில்லை.

மராத்வாடா பல்கலைகழகம், தமிழகத்தில் கோவை கலவரம், ஹரியானாவில் ஹூண்டாய் தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்க என எல்லா வகையிலும் தாழ்த்தப்பட்ட மக்களை அடியாளாக பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல் தான் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை வெட்டி கொல்கிறார்கள். எனவேதான், ‘நான் பிறக்கும் போது இந்துவாக பிறந்தேன். சாகும் போது இந்துவாக சாக மாட்டேன்’ என முழங்கியதோடு மட்டுமல்ல ஆயிரக்கணக்கான மக்களுடன் பௌத்த மதத்தை தழுவினார் அம்பேத்கர். இவரை தூக்கிக் கொண்டு விழா நடத்தும் பார்பன தேச துரோகிகள் தான் தாழ்த்தப்பட்ட மக்களை வெட்டி கொல்கிறார்கள். யாரெல்லாம் ஆர்.எஸ்.எஸ்-ஐ எதிர்க்கிறோர்களோ அவர்கலெல்லாம் தேச துரோகிகள் என முத்திரை குத்தப்படுகிறார்கள்.

வெள்ளைக்காரன் ஆட்சி தொடங்கி இன்று வரை காட்டிக் கொடுப்பதும், கூட்டிக்கொடுப்பதும் தான் ஆர்.எஸ்.எஸ்-ன் தொழிலாக உள்ளது. இத்தகைய வஞ்சக சதிகளுக்கு எதிராக அன்றே ராஜகுரு, சுகதேவ், பகத்சிங் போன்ற எண்ணற்ற தியாகிகள் போராடியுள்ளனர். அவர்களின் பாதையிலே செல்வதின் மூலமே நாம் மக்களுக்காக அதிகாரத்தை நிலை நாட்ட முடியும். தேசத் துரோகிகளாகவும் ஒட்டுமொத்த சமூகத்திற்கே அச்சுறுத்தலாகவும் உள்ள பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப் பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதை இல்லை. நாடு மீண்டும் அடிமையாவதையும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்ன பாசிசத்தையும் முறியடிக்க வேத பார்ப்பனிய எதிர்ப்பை மரபாகக் கொண்ட தமிழ் பாரம்பரியத்தின் படைகளாக இயங்குவோம்” என தனது உரையை முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இடையிடையே பாடப்பட்ட மக்கள் கலை இலக்கியக் கழக மையக்கலைக் குழுவின் புரட்சிகர பாடல்கள் குழுமியிருந்த மக்களுக்கு புரட்சிகர உணர்வை ஊட்டியது. பறை இசையோடு போடப்பட்ட விண்ணதிரும் முழக்கங்களும் உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை தாங்கள் தான் நிலைநாட்டி கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தும் வகையில் இருந்தது.

இறுதியாக ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தோழர். கோபி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்த ஆர்ப்பாட்டதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி.
தொடர்புக்கு: 8903042388

சென்னை

பேசுவது தேசபக்தி: செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது !
பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம் !

march-23-chennai-meeting-02புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களின் சார்பாக, மேற்கண்ட தலைப்பின் கீழ் பூந்தமல்லி அருகிலுள்ள குமணன் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில் இன்றைய தேர்தல் கூட்டணி (சூதாட்ட) நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டிய அவசியத்தை விளக்கினார். குறிப்பாக, மத்திய பட்ஜெட் ‘விவசாயிகளுக்கான பட்ஜட்’ என புளுகிக்கொண்டு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் ஈவிரக்கம் இல்லாமல் பறிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு-பன்னாட்டு முதலாளிகளுக்கு அள்ளிக்கொடுப்பதையே நோக்கமாகவும், அதன் மூலம் நாட்டையே அடமானம் வைக்கும் சதித்தனத்தைப் பற்றி அம்பலப்படுத்தவோ, எதிர்த்து போராடவோ யாரும் இல்லாத நிலையில் நாட்டை மறுகாலனியாக்கப்படுவதிலிருந்து தடுக்க நக்சல்பாரிகளின் வாரிசுகளாகவும், பகத்சிங்கின் வாரிசுகளாகவும் களமிறங்கவேண்டியதன் அவசியத்தை உணரவேண்டும் என வலியுறுத்தினார்.

தோழர் சிவா
தோழர் சிவா

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம.சி. சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார். அவர் தனது கண்டனவுரையில் பா.ஜ.க ஆட்சிபொறுப்பேற்றபிறகு இந்து மதவெறி பாசிசத்தை அதிதீவிரமாக அரங்கேற்றி வருவதையும். சமீபத்தில் சென்னை IIT-யில் துவங்கி, ஹைதராபாத், டெல்லி வரையிலான மாணவர்கள் மீது நடத்தப்பட்ட ஒடுக்குமுறையையும் அம்பலப்படுத்தி பேசினார். இத்தகைய சூழ்நிலையில் சி.பி.ஐ- சி.பி.எம். போலி கம்யூனிஸ்டுகளோ மக்களை அணிதிரட்டி போராடுவதற்கு மாறாக சாதாரண ஓட்டுக்கட்சிகளைவிட கீழ்தரமாக கூட்டணி அமைத்துக்கொண்டு பிழைப்புவாதத்தை நடத்திவருகிறது என்பதை நையாண்டித்தனமாக அம்பலப்படுத்தி பேசியபோது மக்கள் கரவோசை எழுப்பி ஆமோதித்தனர்.

தோழர் சுதேஷ்குமார்
தோழர் சுதேஷ்குமார்

நான்கு மாவட்டங்களிலிருந்தும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்த்னரோடு 400-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்து மதவெறி பாசிசத்திற்கு எதிராகவும், திராவிட தமிழ் பாரம்பரியத்தை உயர்த்திப்பிடிக்கும் வகையிலும் விண்ணதிர கண்டன முழக்கமிட்டனர்.

இறுதியாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும், ஆர்ப்பாட்டத்தையொட்டி பிரச்சாரம் செய்த தோழர்களுக்கும், ஒளி, ஒலி அமைத்தவர்களுக்கும் நன்றி தெரிவித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் தோழர் சொ.செல்வகுமார் நிறைவு செய்தார்.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம், திருவள்ளூர் (கிழக்கு, மேற்கு), வேலூர் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 8807532859, 9445389536, 9445368009, 9994386941

 

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 1

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 1

0
மார்ச் 23 திண்டிவனர் பு.மா.இ.மு

பகத்சிங் நினைவுநாளில் ஒழியட்டும் மறுகாலனியாக்கம் – தொகுப்பு 1

மார்ச்-23 பகத்சிங் நினைவுநாள்; பகத்சிங் நினைவு நாள் - ஓசூர் 2016
மறுகாலனியாக்க எதிர்ப்புத் தினம்!
ஓங்கட்டும் நாட்டுப்பற்று! ஒழியட்டும் மறுகாலனியாக்கம்!

1. கிருஷ்ணகிரி

‘’பேசுவது தேசபக்தி, செய்வது நாட்டை மறுகாலனியாக்குவது! பார்ப்பன பாசிச பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பலை விரட்டியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் கிருஷ்ணகிரியில், மார்ச் 23 பகத்சிங் நினைவு நாளன்று புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

பு.ஜ.தொ.மு தோழர் அசோக்குமார் தலைமை வகிக்க தோழர் இரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினார். உரையில், தொழிற்சாலைகளில் நிரந்தர தொழிலாளர்களை ஒழித்து விட்டு காண்டிராக்ட் முறையை அமல்படுத்த வெறியாய் இருக்கும் மோடி அரசாங்கத்தை அம்பலப்படுத்தினார். 20 தொழிலாளர்களுக்கு மேல் காண்டிராக்ட் முறையில் ஈடுபடுத்தப்பட்டால் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்கிற உச்சவரம்பை 100-ஆக உயர்த்துவதன் மூலம் லைசென்ஸ் இல்லாமலேயே பல காண்டிராக்ட்டுக்களை வைத்துக் கொள்ளவும் சதிகள் தயாராகி வருவதை சுட்டிக்காட்டினார்.

மேலும் இரவுப் பணிகளில் பெண் தொழிலாளர்களை ஈடுபடுத்த வசதியாக கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தயாராகி வருவதன் மூலம் அவர்களை மேலும் சுரண்டுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதை விளக்கினார். அதோடு மட்டுமின்றி ஆட்டோமொபைல், ஜவுளி, ஐ.டி மற்றும் ஐ.டி சார்புத் தொழில்கள், காலணி தயாரிப்பு, எலெக்ட்ரானிக்ஸ் போன்ற தொழில்களை அத்தியாவசியப் பணிகள் சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டு தொழிலாளர் உரிமையை பறிக்க திட்டமிட்டிருப்பதையும் புரிய வைத்தார்.

இதுபோன்ற அடுக்கடுக்கான தாக்குதல்கள் தொழிலாளர்கள்மீது ஏவப்பட்டுவரும் நிலையில் தொழிலாளர்கள் விழிப்புற்று இத்தாக்குதலை முறியடிக்கும் வகையில் போராட்டத்தை கட்டியமைக்க முன்வரவேண்டும் என்றார். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற நாட்டை மறுகாலனியாக்கும் பொருளாதார, அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துச் செல்லுகின்ற பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் கும்பல் அதை மறைப்பதற்கு தற்போது தேசபக்தி என்கிற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

இந்திய நாட்டின் உள்நாட்டு தொழில்வளம் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து வருகிறார்கள். கடந்த பிப்ரவரி மாதம் கூட சூரிய ஒளி மின் தயாரிப்பில் உள்நாட்டு நிறுவனங்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகின்ற உரிமையை அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆதரவாக உலக வர்த்தகக் கழகம் பறித்த போது அமைதி காத்தது, மோடி அரசு. அணு உலை விபத்து ஏற்பட்டால் அணு உலை அமைக்கின்ற நிறுவனங்கள் அதற்கு பொறுப்பேற்று நட்ட ஈடு தரத் தேவையில்லை என்கிற ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா, ரசியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாட்டு நிறுவனங்களுக்கு இந்த நாட்டு மக்களை அடமானம் வைத்தது மோடி பரிவாரம்!

தேசத் துரோகிகளாகவும், ஒட்டுமொத்த சமூகத்துக்கே அச்சுறுத்தலாகவும் விளங்குகின்ற பார்ப்பன இந்துமதவெறி பாசிச கும்பல் நாட்டுப்பற்று குறித்தோ, தியாகம் குறித்தோ பேசுவதற்கு கிஞ்சித்தும் அருகதையற்றது. காலனியாதிக்க காலத்தில் விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் காட்டிக் கொடுத்த பாரம்பரியம் அவர்களுடையது. ஆங்கிலேயக் காலனி ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு தியாகியான மருது சகோதரர்கள் – திப்பு சுல்தான் – பகத்சிங்கின் பாரம்பரியம் நமது பாரம்பரியம்.

பார்ப்பன மதவெறியைத் திரைகிழித்த புத்தர்-பூலே-அம்பேத்கர்-பெரியாரின் மரபு நம்முடையது. வேதமத பார்ப்பனிய எதிர்ப்பு நமது தமிழ் மரபு. திராவிட – தமிழ் பாரம்பரியத்தை படைக்கலனாக ஏந்துவோம்! படையெடுத்து வருகின்ற ஆரிய – பார்ப்பனக் கும்பலை விரட்டியடிப்போம்! என்று அறைகூவிப் பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பள்ளிச் சிறார்களான சிறுமி நக்சல்பாரி மற்றும் ஓவியா இருவரும் “அந்த வீரன் இன்னும் சாகவில்லை..” எனும் புரட்சிகர பாடலை எழுச்சியோடு பாடினர். இறுதியாக, தோழர் ராஜி நன்றியுரையாற்றினார். மேலும், அங்கேயிருந்த ஆட்டோ ஓட்டுனர்கள் , கடைகாரர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கூடிநின்று கவனித்துச் சென்றனர்.

படங்களை பெரிதாக பாரக்க அழுத்தவும்:

  • தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்.
    தொடர்புக்கு : 9788011784.

_________________

2. விருத்தாசலம்march23-viruthachalam_rsyf-(1)

பள்ளி மாணவர்கள் மத்தியிலும் கல்லூரி இளைஞர்களிடமும் மற்றும்  உழைக்கும் மக்களிடத்தில் கிராமத்திலும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. திரு கொளஞ்சியப்பார் அரசு கலைக்கல்லூரி மாணவர்களிடத்தில் பிரசுரம் கொடுத்து பகத்சிங் நினைவு நாளை மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக நாம் ஏன் கடைபிடிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்யப்பட்டது. 1947 க்கு முன் ஒரு ஏகாதிபத்தியம் (இங்கிலாந்து) நம்மை நாட்டை கொள்ளையடித்தான். அந்த காலனியாக்கத்தை எதிர்த்து போராடினான் தோழன் பகத்சிங். இன்று பல பன்னாட்டு கம்பெனிகள் நம் நாட்டை கொள்ளையடிக்கிறார்கள். இந்த மறுகாலனியாக்கத்தை எதிர்த்து  நாமும் போராட வேண்டும் என மாணவர்களிடம் பரப்புரை செய்யப்பட்டது.

பெரியவடவாடி கிராமத்தில் பு.மா.இ.மு கிளைச் செயலர் வீரச்செல்வன் தலைமையில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது கூட்டத்தில் விருத்தாசலம் பகுதி பு.மா.இ.மு இணை செயலர் மணிவாசகம் பேசுகையில் ஓட்டு போடுவதால் நமக்கான பிரச்சனைகள் எதுவும் தீராது, போராட்டம் மூலமாகதான் தீர்க்க முடியும் என்பதை விளக்கி பேசினார்.  சிதம்பரம் பகுதி அமைப்பாளர் தோழர் மணியரசன் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்காக செல்போனில் ஆபாசம், சாராயக்கடை என்று நம்மை திசைமாற்றிவிட்டு நாட்டையே கொள்ளையடிக்கிறார்கள், இதற்கு முடிவுகட்ட வேண்டும் என்றால் புரட்சிகர அமைப்புதான் தீர்வு என்றார்.

விருத்தாசலம் பகுதி  செயலர் கதிர் பேசுகையில் மறுகாலனியாக்க எதிர்ப்பு தினமாக ஏன் கடைபிடிக்க வேண்டும்? இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் சிலர் பணத்துக்காக கொலை செய்கிறார்கள், கல்வி, மருத்துவம், தண்ணீர் அனைத்தும் வியாபார பண்டமாகிவிட்டது, விவசாயிகள் விளைநிலத்தை விட்டே வெளியேற்றப்படுகிறார்கள், பொதுத்துறை அனைத்தும் தனியார் மயமாக்கப்படுகிறது அன்று காலனியாக்கத்துக்கு எதிராக போராடிய பகத்சிங் பாதையில் நாமும்களம் இறங்குவோம் அப்போதுதான் நாம் உரிமைகளை மீட்க முடியுமே தவிர தேர்தல் பாதை அல்ல புரட்சி பாதைதான் அந்த பாதையில் திரள்வோம் என்று அறைகூவினார்.

அதேபோல் பூவனூர் கிராமத்தில் இரண்டு இடத்திலும், மாத்தூர் பகுதியில் இரண்டு இடத்திலும் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது, பூவனூர் கிராமத்தில் செயலர் கணேஷ், இ.செ கார்த்தி மற்றும் மாத்தூரில் கல்லூரி மாணவர் ஜெயபாண்டி தலைமைதாங்கி பேசினார். தெருமுனை கூட்டங்களை திரளான மக்கள் திரண்டு பார்த்தனர். மாணவர்கள், இளைஞர்கள் விட்டேத்தியாக திரியும் இந்த காலத்தில் இப்படி இளைஞர்கள் சமூக உணர்வுடன் நாட்டுப்பற்றுடன் செயல்படுவதாக கூறி பகுதி மக்கள் வரவேற்றனர்.

படங்களை பெரிதாக பாரக்க அழுத்தவும்:

  • தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விருத்தாசலம்

______________________

3. திண்டிவனம்மார்ச் 23 திண்டிவனர் பு.மா.இ.மு

திண்டிவனத்தில் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி, மற்றும் அண்ணா பொறியியல் கல்லூரி, நுழைவு வாயில்களில்  23.03.2016 அன்று பிரசுரம் வினியோகிக்கப்படடு வாயிற்கூட்டம் நடத்தப்பட்டது.

மாணவர்கள் பிரசுரத்தை வாங்கி ஆர்வத்துடன் படித்தனர். கல்லூரி பேராசிரியர்களும் தோழர்கள் வினியோகம் செய்யும் போது முன்வந்து வாங்கி படித்துவிட்டு மாணவர்களுக்கு இது போன்ற தலைவர்களை எடுத்துக் கூறுங்கள் என்று உற்சாகப்படுத்தினர்.

அண்ணா பொறியியல் கல்லூரியில் ஏற்கனவே JNU பிரசுரம் கொடுக்கப்பட்டது. அதை நினைவுகூர்ந்த மாணவர்கள் பலர் பகத்சிங் நினைவுநாள் பிரசுரத்தையும் ஆர்வத்துடன் வாங்கி படித்தனர்.

படங்களை பெரிதாக பாரக்க அழுத்தவும்:

  • தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திண்டிவனம்.         

இந்துத்துவத்தை அம்பலப்படுத்தும் 17 நூல்கள் – அறிமுகம்

11
hindu nationalism
’இந்து’ தேசியம்

1. இந்துத்துவத்திற்க்கு எதிராக 5 நூல்கள் – விடியல் பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடு!

vidiyal bagavath geetha
இந்திய வரலாற்றில் பகவத்கீதை

i. இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ்
தமிழில் – கே.சுப்ரமணியன்
இந்தியர்களின் மனக்கட்டமைப்பில் பகவத்கீதையின் பார்ப்பனியம் எவ்வாறு தத்துவம், தனிநபர் மற்றும் அரசியல் ஆகிய கூறுகளின் வழி உள்வாங்கப்பட்டுள்ளது என்பதைத் துணிச்சலுடன் கூறும் ஆய்வு நூல்.

_____________________________________

vidiyal RSS danger
ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம்

 

 ii.ஆர்.எஸ்.எஸ் ஓர் அபாயம் விடுதலை கே.இராசேந்திரன்

இந்துத்துவ அரசியலின் போலிப் பரப்புரைகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தும் நூல், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூலம் பார்ப்பனியத்தை சூத்திரர்களிடமும், தலித்துகளிடமும் கொண்டு சேர்க்கும் தந்திரத்தை விவரிக்கும் நூல்.

_________________________

vidiyal Science
அறிவியலா? அருஞ்செயலா?

iii. அறிவியலா? அருஞ்செயலா?
ப.பிரேமானந்து, தமிழில் சிங்கராயர்

150 வகையான தெய்வீக மோசடிகள் மற்றும் அற்புதங்களின் மோசடியை அறிவியல் வழி விளக்கும் நூல், மூட நம்பிக்கைகளுக்கும் கடவுள் – மதத்துக்கும் உள்ள தொடர்பை எளிய கேள்விகளின் மூலம் புரிய வைக்கும் முயற்சி.

_____________________________________

vidiyal Parpaniyathin vettri
பார்ப்பனியத்தின் வெற்றி

iv.பார்ப்பனியத்தின் வெற்றிபாபா சாகேப் பி.ஆர்.அம்பேத்கர்

இன்றளவும் அதிகார வர்க்கமாக உள்ள பார்ப்பனியத்தை அடையாளம் காண, அதன் அஸ்திவாரத்தைப் புரிந்து கொள்வது அவசியம். மனுதர்மமே பார்ப்பனியம் என்னும் வரலாற்றைப் அம்ப்லப்படுத்தும் ஆய்வு நூல். இத்தகைய புரிதல் இல்லாமல் பார்ப்பனிய ஒழிப்பின் தேவை ஆழ்மனதில் பதியாது.

________________________________

vidiyal pen yen adimaiyanala
பெண் ஏன் அடிமையானாள்?

v. பெண் ஏன் அடிமையானாள்?தந்தை பெரியார்.

நவீன கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளும், 33 விழுக்காடு இட ஒதுக்கீடும் பெண்களை விடுதலை செய்யப் போதுமானவையா? சமூக அடிக்கட்டுமானத்தில் மாற்றங்கள் இல்லாமல் பெண் விடுதலை சாத்தியமா? மதம், பண்பாடு போன்றவற்றை ஏற்றுக் கொண்டு அணுகுவது சரியா? 80 ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பிக்கப்பட்டு இன்றும் பெண்களால் வாசிக்கப்பட வேண்டிய பெரியாரின் புரட்சிகரக் கருத்துப் பெட்டகம்.

இந்துத்துவத்திற்க்கு எதிராக 5 நூல்கள் – விடியல் பதிப்பகத்தின் சிறப்பு வெளியீடு!

முழுத்தொகுப்பு விலை: ரூ.300.00

வெளியீடு: விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் – 641015,
தொலைபேசி – 0422-2576772, 9789457941
மின்னஞ்சல் முகவரி: vidiyal@vidiyalpathippagam.org

_____________________________________________________________

education communally future
கல்வி
வகுப்புவாதம்
எதிர்காலம

2. கல்வி வகுப்புவாதம் எதிர்க்காலம்:

இனவாத வெறுப்பை உருவாக்கி ஆரிய நாகரிகத்தை நிலை நிறுத்தும் திட்டத்திற்காக நாஜிக்கள் ஒட்டுமொத்த கல்வித்திட்டத்தையும் மாற்றினர். இந்திய நாஜிக்களான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க கல்வியை காவிமயமாக்கும் திட்டங்களை விளக்கும் சிறுநூல்.

விலை: ரூ. 20.00
வெளியீடு: இந்திய மாணவர் சங்கம், தமிழ் மாநிலக்குழு.

_________________________________

 

 

 

 

rss politics
ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல்

 

 

 

 

 

 

 

 

3. ஆர்.எஸ்.எஸ். சின் அரசியல் – சி.சொக்கலிங்கம்

பண்பாட்டுக் காவலர்களாக பசப்பித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சின் ‘தேசபக்தி’ வேடத்தையும், அந்நிய, உள்நாட்டு மேட்டுக் குடிகளின் நலன்களே அவர்களின் கோசங்கள் என்பதையும் ஆதாரத்தோடு நிறுவும் சிறு நூல்.

விலை: ரூ.25.00
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை.

______________________________________

bigotry and cow flesh
மதவெறியும் மாட்டுக்கறியும் – ஒர் ஆவணத் தொகுப்பு

4. மதவெறியும், மாட்டுக்கறியும் (ஓர் ஆவணத் தொகுப்பு)தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், கி.வீரமணி, டி,என்.ஜா

மாட்டிறைச்சியைக் கொண்டு இந்துத்துவத்தை திரைகிழிக்கும் பெரியார், அம்பேத்கர் கட்டுரைகளும், புனிதப் பசுவின் புனைகதைகள் வழி மகாபாரதத்தின் மாபாதகர்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தும் டி.என்.ஜா வின் வரலாற்று வழி பார்வைகள், பார்ப்பனர் நடத்திய பசுவதையை மறுக்க முடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தும் பகுதிகள் அடங்கிய ஒரு தொகுப்பு.

விலை: ரூ 30.00
வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு, சென்னை – 7.

____________________________________

another name violent sangparivar
வன்முறையின் மறுபெயரே சங்கபரிவார்க் கும்பல்

 

 

 

 

 

 

 

  5. வன்முறையின் மறுபெயரே சங்பரிவார்க் கும்பல் – தொகுப்பாசிரியர் கி.வீரமணி

சங்பரிவார்க் கும்பல் தாமே கலவரத்திற்கு வித்திட்டுவிட்டு, மற்றவர்கள் மீது பழிப்போட்டு மக்களிடையே கலவரத்தை உருவாக்கும் சம்பங்களின் ஆவணமாக இந்நூல்.

விலை: ரூ 35.00
வெளியீடு: திராவிடர் கழக வெளியீடு.

________________________________________

 

sanskrit domination
சமற்கிருத ஆதிக்கம்

6. சமற்கிருத ஆதிக்கம் (ஆய்வுக் கட்டுரைகள் தொகுப்பு) – பதிப்பாசிரியர் கி.வீரமணி

சமூகத்தில் சமற்கிருத மயமாக்கலை திணிப்பதன் மூலம், பார்ப்பன – இந்துத்துவ மேலாதிக்கத்தை நிறுவத் துடிக்கும் காலம் காலமாக இந்துத்துவ முயற்சிகளை மதம், வழிபாடு, இசை, ஆடல் இன்னும் பிற வழிகளில் வாலாட்டும் சமஸ்கிருதமயத்தை ஆய்வு நோக்கில் எடுத்துரக்கும் 22 கட்டுரைகளின் தொகுப்பு.

விலை: ரூ 110.00
வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு, சென்னை – 7.

________________________________

 

 

 

 

 

agamangal block tamil
தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா?

 

 

 

 

7. தமிழுக்கு ஆகமங்கள் தடையாகுமா? – தமிழண்ணல்

”பார்ப்பனர்களை விடப் ‘பார்ப்பனியம்’ என்ற பகுத்தறிவுக்கும் உயரிய உலகியலுக்கும் நாகரிகத்திற்கும் பொருந்தாத கோட்பாடுகள், பார்ப்பனரல்லாதாரிடமே இன்று மேலோங்கிக் காணப்படுகின்றன..” என்று புதிய பார்ப்பனர்களையும் புரட்டிப்பொட்டு வழிபாட்டு உரிமை வழி பார்ப்பன ஆக்கிரமிப்பை பகுத்துக் காட்டும் நூல்.

விலை: ரூ 25.00
வெளியீடு: தமிழ்த்துவ வெளியீடு, மதுரை – 20.
_______________________________

 

 

 

hindu a illusion
ஹிந்து மாயை

 

8. ஹிந்து மாயை – சு. அறிவுக்கரசு

இந்து – இந்தியா என்ற பார்ப்பன நூலில் இறுக்கப்படும் சமுதாயத்தின் பழைய வரலாற்று விவரங்களை விவாதத்திற்கு வைத்து எளிய நடையில் உண்மைகளை விழிப்படைய வைக்க எழுதப்பட்ட 14 கட்டுரைகளின் தொகுப்பு.

விலை: ரூ 11.00
வெளியீடு: நாம் தமிழர் பதிப்பகம், சென்னை – 5.

 _______________________________

 

 

 

hindu nationalism
’இந்து’ தேசியம்

 

 

 

 

9. இந்து தேசியம் – தொ.பரமசிவன்

காஞ்சி மடமே ஆட்டைய போட்ட இடம்தான், காஞ்சி மடம் மட்டுமா? இந்து மதமே இரவல் பெயர்தான்… என பல வரலாற்று, இலக்கியச் செய்திகளின் வழி பார்ப்பன தேசியத்தை பாடாய் படுத்தும் நூல் தொகுப்பு.

விலை: ரூ 130.00
வெளியீடு: கலப்பை, சென்னை – 26.

___________________________

 

 

 

 

india toward what
இந்தியா எதைநோக்கி?
ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி – இந்துத்துவா10. இந்தியா எதை நோக்கி?

10.ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி – இந்துத்துவா
ராமச்சந்திர குஹா, லீனா ரெகுநாத், தினேஷ் நாராயணன், வெங்கிடேஷ் இராமகிருஷ்ணன்.

தொகுப்பும் மொழியாக்கமும் – செ.நடேசன்

அசிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமல்ல, மோடியின் தேவையான நேரத்து மவுனங்களும் கூட பல பிரிவாக பிரிந்து நின்று மக்களின் பன்முகத் தன்மை வாய்ந்த சமூகப்பரிமாணத்தை திட்டமிட்டு சிதைத்து அழிக்கும் சமகால இந்துத்துவ பாசிசத்தை, அதன் அபாயத்தை எச்சரிக்கும் நூல்.

விலை: ரூ 150.00
வெளியீடு: எதிர், பொள்ளாச்சி.

 _____________________________

 

 

liberal tamil oppose manudarmam
மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்கு தமிழ் மரபு

 

 

 

 

 

 

11. மநு தர்மத்திற்கு எதிரான முற்போக்குத் தமிழ்மரபு – சி.இளங்கோ

பார்ப்பன மனு கொடுங்கோண்மைக்கு எதிராக காலந்தோறும் போராடிய பெளத்த – சமண மரபுகள் தொடங்கி தமிழக பக்தி மரபு, சித்தர் மரபு வரை உள்ள எதிர்ப்புக்குரலை அளவிட்டுக்காட்டும் நூல். காலனிய சீர்திருத்த இயக்கங்கள், பாரதிதாசன், திரு.வி.க, பெரியார், சிங்காரவேலர் வரை வர்க்கப் போராட்டத்தின் முற்போக்கு மரபையும் குறிப்புகளாக பதிவு செய்கிறது இந்நூல்.

விலை: ரூ 50.00
வெளியீடு: அலைகள் வெளியீட்டகம், சென்னை – 24.

____________________

face communal need talk
வகுப்புவாதத்தை எதிர்கொள்ள கருத்தாயுதம்

12. வகுப்பு வாதத்தை எதிர் கொள்ள கருத்தாயுதம் – பாலகோபால்

ஆந்திரப் பிரதேச சிவில் உரிமைக் கழக(APCLC)ப் போராளியான டாக்டர் பாலகோபால் எழுதியுள்ள 36 தலைப்புகளில் ஆன கட்டுரைகளின் தொகுப்பு. இந்துவெறி பாசிசத்துக்கு எதிராக சகல தரப்பு மக்களும் போராட வேண்டிய அவசியத்தை கால நியாயத்தோடு எடுத்து வைக்கிறது இந்நூல். இந்துப் பாசிசம் சுரண்டலுக்கும், அடக்குமுறைகளுக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களுக்கு பெரும் ஆபத்தானது என்ற வர்க்கக் கண்ணோட்டத்தின் வழியாக இந்துப் பாசிசத்தின் சுரண்டும் வர்க்க அரசியல் நோக்கத்தையும் அம்பலப்படுத்துகிறது இந்நூல்.

விலை: ரூ 250.00
வெளியீடு: சிந்தன் புக்ஸ், சென்னை – 86.

 _______________________

babar and ramar need in poor india?
பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும், இராமர் கோவிலும்

 

 

 

 

 

 

13. பட்டினி இந்தியாவில் பாபர் மசூதியும் இராமர் கோயிலும் – பேராசிரியர் வெ.சிவப்பிரகாசம்

அம்பானிகள், அதானிகள், டாட்டாக்கள், பிர்லாக்கள் இவர்களின் கங்காணிகளாக இருந்து ஆளும் காவிக்கும்பலின் வரலாற்று மோசடிகளையும், அதன் வழி வழியான பொய்ப் பிரச்சாரங்களையும் பட்டியலிட்டு கோயிலை வைத்து பார்ப்பன கும்பலின் அரசியல் மேலாதிக்கத்தை சமகால ஏராளமான அரசியல் குறிப்புகளுடன் ஆய்வு செய்து இந்துத்துவத்தை பிரித்து மேய்கிறது ஆசிரியரின் எளிய நடையுன் கூடிய இந்நூல்.

விலை: ரூ 160.00
வெளியீடு: கலாம் பதிப்பகம், சென்னை – 4.

______________________________

நூல்கள் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367

மற்றும் நூல்களை வெளியிட்டிருக்கும் பதிப்பகத்தார், அரசியல் – முற்போக்கு நூல்களை விற்பனை செய்யக்கூடிய தமிழகத்தின் அனைத்து கடைகளிலும் இந்நூல்கள் கிடைக்கும்.

_________________________________

உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு

9
Pharmaceutical tablets

இந்தியாவிற்கு எதிராக பாஜக மோடி அரசு அமெரிக்காவுடன் இரகசிய ஒப்பந்தம்!

Pharmaceutical tablets ந்திய மக்களின் உயிரோடு விளையாடும் பொருட்டு ‘இனி மேல் உயிர் காக்கும் மலிவுவிலை பதிலீட்டு (Generic Versions) மருந்துகளைத் தயாரிக்கும் உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு கட்டாய உரிமம் வழங்கமாட்டோம்’ என மோடியின் பாஜக அரசு  அமெரிக்காவுடன் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

அமெரிக்க-இந்திய வர்த்தக கூட்டமைப்பு (USIBC-United States Indian Business Council), அமெரிக்க வணிக பிரதிநிதியத்திடம் (USTR-Unites States Trade Representative) சென்ற பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்தியா மலிவு விலையில் மருந்துகளை உள்நாட்டில் தயாரிப்பதற்கு கட்டாய உரிமம் இனி வழங்காது என அமெரிக்காவிற்கு தனிப்பட்ட முறையில் உறுதியளித்திருப்பதாக தெரிவிக்கிறது.

மார்ச் ஒன்பதாம் தேதி அமெரிக்க ஊடகங்களால் வெளிவந்த இந்த செய்தி, இந்திய ஊடகங்களால் எங்கும் விவாதிக்கப்படவில்லை. மோடி அரசின் இந்த சதிச் செயல் இந்திய அரசாங்கத்தால் இதுவரை ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

மலிவு விலையில் இந்தியா மருந்து பொருட்களை உற்பத்தி செய்வதால் அமெரிக்க-பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் வறுமையில் வாடுவதாகவும் இரண்டு வருடங்களாக தம்பி மோடியின் நடவடிக்கைகளை பெரியண்ணனின் USIBC அமைப்பு தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் உள்நாட்டில் மருந்து பொருட்கள் மேற்கொண்டு தயாரித்தால் அமெரிக்கா பொருளாதாரத் தடை போடுவதற்கும் வாய்பிருப்பதாகச் சொல்கிறது USIBC அமைப்பு.

மேற்படி மோடி அரசு இந்திய நாட்டு மக்களுக்கு தெரியாமல் அமெரிக்காவிற்கு வழங்கியிருக்கும் இந்த உறுதிமொழியின் விளைவுகள் என்னவென்பதை பார்ப்பதற்கு பதிலீட்டு மருந்துகள் குறித்து சில விசயங்களைக் கவனிப்போம். காய்ச்சலைக் குணப்படுத்தும் பாராசிட்டமால் மாத்திரை உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இதை அசிட்டாமினாஃபென் எனவும் அழைப்பர். இதன் முறையான வேதியியல் பெயர் N-(4-ஹைட்ராக்சிபினைல்)-அசிட்டமைடு என்பதாகும். இந்த வேதியியல் மூலக்கூறை ஆய்வகங்களில் பல்வேறு நாடுகள் தன் சொந்த செலவில் தயாரித்து மக்களின் நோய் தீர்க்க முடியும். ஆனால் இந்த பாராசிட்டமால் மாத்திரையை பல்வேறு கம்பெனிகள் டோலோ-650, கால்பால், மெட்டாசின் என்று தங்கள் பிராண்டு பெயர்களை வைத்துக்கொண்டு அதற்கு காப்புரிமை பெற்றுக்கொண்டு சந்தையில் கொள்ளை இலாபத்திற்கு விற்றுக் கொண்டிருக்கிறது. இக்கொள்ளையை உலக வர்த்தகக் கழகத்தின் 1994-ம் ஆண்டு வெளிவந்த ‘அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் (TRIPS-Trade Related aspects of intellectual property rights)” எனும் ஒப்பந்தம் சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது.

உலகவர்த்தகக் கழகத்தின் உறுப்பு நாடுகளாக இருக்கும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகள் ஒருவேளை உள்நாட்டிலேயே பாராசிட்டமால் மாத்திரைகளை தயாரித்து மக்களுக்கு வழங்கும் எனில் TRIPS ஒப்பந்தத்தின்படி அந்நாடு தயாரித்த பாராசிட்டமால் மாத்திரை டோலோ-650, மெட்டாசின் போன்ற கம்பெனி பிராண்டுகளின் பதிலீட்டு மருந்தாகவே கருதப்படும். இத்தகைய பதிலீட்டு மருந்துகளை ஒரு நாடு தன் சொந்த செலவில் தானகவே தயாரித்து கொண்டாலும் பன்னாட்டு மருத்துவ கம்பெனிகளின் காப்புரிமையின் படி சொத்துரிமை திருட்டாகவே கருதப்படும்.

Modi fail (4)
அமெரிக்கா சென்ற மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம், செப், 2015.

எனினும் மூன்றாம் உலக நாடுகளின் கொடிய வறுமையும், கொள்ளை நோய் தாக்குதல்களும் ஒட்டு மொத்த சந்தைக்கான வாய்ப்பையே சிதறடித்துவிடும் என்பதற்காக 1994-TRIPS ஒப்பந்தத்தில் ஏழைநாடுகள் பதிலீட்டு மருந்துகளை உற்பத்தி செய்வதற்கான கட்டாய உரிமம் குறித்த சரத்துகள் சேர்க்கப்பட்டிருந்தன. இதன்படி இந்தியா போன்ற ஏழைகள் அதிகம் வாழும் நாடுகள் கொள்ளை நோய்களின் பொருட்டோ, அவசரக் காலங்களிலோ கட்டாய உரிமத்தைப் பயன்படுத்தி பன்னாட்டு கம்பெனிகளின் காப்புரிமைகளைத் தாண்டி பதிலீட்டு மருந்துகளை தயாரிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

இந்தவகையில் இந்தியா முதன்முதலில் 2012-ம் ஆண்டு, புற்றுநோய் மருந்தை மலிவு விலையில் தயாரிப்பதற்காக முதல் கட்டாய உரிமத்தை பயன்படுத்தியது. இதற்கு முன்பாக ஜெர்மனியின் பன்னாட்டு மருத்துவக் கம்பெனியான பேயர் (Bayer) Nexavar எனும் பிராண்டு பெயரில் புற்றுநோய் மருந்தை சந்தையில் விற்றுவந்தது. இந்த Nexavar  மருந்து சிறுநீரகப் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் மற்றும் தொண்டைப் புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆனால் இந்தியர் ஒருவர் பேயர் கம்பெனியின் புற்றுநோய் மருந்தை வாங்க வேண்டுமென்றால் மாதம் ஒன்றிற்கு மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டும். இத்தொகை இந்திய உயர்வருவாய் பிரிவினராலும் கூட தாக்குப்பிடிக்க முடியாத ஒன்றாகும். எஞ்சியிருக்கும் 80% மக்களின் நிலை? ஆனால் நெக்சவரின் வேதியியல் பெயரான சோராபினிப் எனும் மூலக்கூறை எந்த நாடும் தன் சொந்த செலவில், சொந்த ஆராய்ச்சியில் கண்டுபிடித்துக்கொள்ள முடியும். மலிவான விலையில் மக்களுக்கும் வழங்க முடியும். இந்தியா இந்த வகையில்தான் 2012-ல் புற்றுநோய்க்கான பதிலீட்டு மருந்தை தயாரித்துக் கொள்ள முடிந்தது.

மேலும் இந்தியா இப்படி தயாரித்துக்கொண்ட பதிலீட்டு மருந்துகளை எக்காரணம் கொண்டு எந்தவொரு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக் கூடாது எனச் சொல்கிறது TRIPS ஒப்பந்த விதி! இந்த விதியால் மலிவு விலையில் எய்ட்ஸ் நோய்க்கான மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்து ஏழை ஆப்ரிக்க நாடுகளுக்கு வழங்குவதை பன்னாட்டு மருந்து கம்பெனிகள் தடுத்து நிறுத்தியிருக்கின்றன. தென் ஆப்ப்ரிக்காவிற்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் வழக்கு தொடுத்திருப்பதை கட்டுரையாளர் கேரி லீச் “முதலாளித்துவம்- ஒரு கட்டமைக்கப்பட்ட மக்கட் படுகொலை (Capitalism- A structural genocide)” எனும் தனது புத்தகத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

தற்பொழுது இந்தியாவைப் பொறுத்தவரை 2012-ல் இருந்து கட்டாய உரிமத்தை பயன்படுத்தி மலிவு விலையில் புற்றுநோய் மருந்துகளைத் தயாரிப்பதை பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகள் எதிர்த்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாகத்தான் மோடி அரசு சத்தமேயில்லாமல் மலிவு விலையில் உயிர்காக்கும் மருந்துகளை தயாரிக்கும் கட்டாய உரிமத்தை இனி பயன்படுத்தமாட்டோம் என அமெரிக்காவிற்கு ரகசியமாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

பா.ஜ.க மோடி அரசு அமெரிக்காவிற்கு வழங்கிய இந்த ரகசிய வாக்குறுதி உலகநாடுகளை ஏன் அமெரிக்க மக்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது என கட்டுரையாளர் ஸ்ரீவித்யா ராகவன் இந்து ஆங்கிலே நாளேட்டில் 21-03-2016 அன்று எழுதிய கட்டுரையில் தெரிவிக்கிறார்.

சான்றாக ஆனானப்பட்ட அமெரிக்காவிலேயே மக்கள் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் கொள்ளை இலாபத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் நிற்கதியாக நிற்பதை எடுத்துக்காட்டுகிறார். அமெரிக்காவின் கீலீடு கம்பெனி விற்கும் சோவால்டி மருந்து (வைரஸ் எதிர்ப்புயிரி) அமெரிக்க மக்களின் வாங்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாக இருப்பதால் மக்கள் வீதிகளில் இறங்கி போராடியிருக்கிறார்கள். அமெரிக்க செனட் சபையிலேயே முதலாளித்துவத்துவத்தை ஆதரித்துப் பேசிய கோமான்களே இத்தகைய மருத்துவக் கம்பெனிகளின் வரைமுறையற்ற கொள்ளையைத் தடுக்க வேண்டுமென எதிர்குரல் எழுப்பியிருப்பதை பதிவு செய்திருக்கிறார் ஸ்ரீவித்யா ராகவன்.

capitalism (1)அமெரிக்க மக்களே அமெரிக்காவை எதிர்த்து அடிப்படையான இன்றியமையாத உயிர்காக்கும் மருந்துகளின் விசயத்திற்காக போராடி வரும் பொழுது மோடியின் பாஜக கும்பல் இந்திய மக்களுக்கு எதிராக ரகசியமாக அமெரிக்காவிற்கு சம்மதம் தெரிவித்திருப்பதை வேறு எந்த வகையில் விளக்க முடியும் என்று தெரியவில்லை. அதை வாசகர்களாகிய நீங்களே முடிவு செய்யுங்கள். ஆனால் இந்த செய்தி வெளிவந்த காலத்தில் தான் ஆர்.எஸ்.எஸ், ஏபிபிவி கும்பல் பல்கலைக்கழகம், மக்கள் கூடும் பொதுஇடங்கள், ஊடகங்கள், பத்திரிக்கைகள் என ஒரு இடம் விடாமல் தேசத்துரோகி என்று நாட்டு மக்களை முத்திரை குத்திக் கொண்டிருந்தார்கள். போலீசு, அரசு எந்திரத்தின் உதவியோடு மக்களைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். இதற்கு என்ன பதில்?

மோடி கும்பலின் தேசத்துரோகம் இத்தோடு நிற்கப்போவதுமில்லை. மருத்துவ உலகின் விதிகளின்படி ஒருநாட்டில் நடைபெறும் மருத்துவ பரிசோதனை முடிவுகள் (Clinical Trails), நோயைத் தீர்ப்பதற்காக உலகிங்கெலும் பகிர்ந்துகொள்ளப்பட்டதுதான் வரலாறாக இருந்தது. ஆனால் உலக வர்த்தகக் கழகத்தின் காட்ஸ் ஒப்பந்தம் இந்த அத்தியாவசிய தேவையைக் கூட வணிக நோக்கில் மாற்றியமைக்கிறது. இதன்படி மருத்துவ பரிசோதனை தரவுகள் இனி நாடுகளுக்கிடையே மருத்துவமனைகளுக்கிடையே பகிரப்படாது. அவை ஒவ்வொன்றும் பன்னாட்டுக் கம்பெனிகளின் சொத்துக்களாக கருதப்படும் வகையில் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தை அமல்படுத்துவதில் மோடி அரசு முனைப்பாக இருக்கிறது.

மோடி அரசு கொண்டு வரும் அறிவுசார் சொத்துடமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இனி இந்தியனின் குடலைக்கூட நரசிம்ம அவதாரம் எடுத்து அமெரிக்க கம்பெனிகள் இரத்ததுடன் பிய்த்துக்கொண்டு மாலையாக போடலாம். மோடியின் ஆர்.எஸ்.எஸ் சங்கப்பரிவாரக் கும்பல் குஜராத்தில் கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைக் கிழித்து இதை நடைமுறையில் செய்து காட்டியிருக்கிறார்கள். இந்தவகையில் பார்ப்பன பாஜக கும்பலின் தேசபக்தியின் எல்லை எதுவென்பதை நாம் அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறோம். இனி தேசம் குறித்து இவர்களை இனியும் பேச அனுமதிக்காமல் வரலாற்றிலிருந்து இந்தக் கும்பலை தூக்கி எறிய வேண்டியதுதான் தேசத்தைக் காக்கும் மக்களின் ஒவ்வொருவரது கடமையாக இருக்கமுடியும்!

(குறிப்பு- இக்கட்டுரையின் தொடர்ச்சியாக மோடி அரசு ஏன் அமெரிக்காவுடன் உள்நாட்டு மருந்துக் கம்பெனிகளுக்கு கட்டாய மருத்துவ உரிமம் வழங்கமாட்டோம் என்பதை இரகசியமாக நிறைவேற்றினார்கள் என்பதை அடுத்த பதிவில் விளக்குகிறோம்).

– இளங்கோ

செய்தி ஆதாரங்கள்:

குரங்கு வாலில் கட்டப்பட்ட நாடு – கேலிச்சித்திரங்கள்

1
bharath mathaki jei

jharkand hangingகாளைமாடுகளை விற்கும் இரண்டு முஸ்லீம் வியாபாரிகள், ஜார்க்கண்டில் அடித்துக் கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவன் மாட்டு வியாபாரியின் மகன்,13 வயதுச் சிறுவன்.
கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவன் உள்ளூர் கோமாதா பாதுகாப்பு பேரவையின் உறுப்பினர். இதை ஏதோ மாடு திருட்டு, ரவுடிகள் மோதல் என்பதாக போலிசும், இந்துத்துவ ஆதரவு ஊடகங்களும் திசைதிருப்பி வருகின்றனர். தாத்ரிக்கு அடுத்தபடியாக ஆர்.எஸ்.எஸ் நடத்திய நரபலி!

கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi

___________________________________

bharath mathaki jeiகுரங்கு கையில் சிக்கிய பூமாலை கேள்விப்பட்டிருப்பீர்கள்! குரங்கு வாலில் கட்டப்பட்ட நாட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

கார்ட்டூன் நன்றி: Tanmaya Tyagi

_______________________

migrantsஐரோப்பாவில் கொல்லப்படும் அகிதிகள்!

‘Migrants in Europe’ by Vasco Gargalo
கார்ட்டூன் நன்றி: cartoon movement

_________________________

பேஸ்புக் – வினவு கேலிச்சித்திரம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள் – இணையுங்கள்!

ஊடகங்களின் செல்வாக்கு என்ன ? கருத்துக் கணிப்பு பாகம் 1

3
ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு
சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை
ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு
கருத்துக் கணிப்பிற்காக தயாரிக்கப்பட்ட கேள்வித் தாட்கள், அட்டைகள், பேனாக்கள்……

தேர்தல் பரபரப்பை அறுவடை செய்யும் ஊடகங்கள் அடிக்கடி கருத்துக் கணிப்புகள் நடத்துகின்றன. அவற்றின் நம்பகத்தன்மை என்ன? பொதுவில் ஊடகங்கள் உருவாக்கும் அல்லது ஆதரிக்கும் கருத்துக்களை மக்கள் எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? பொதுவான சமூக அரசியல் நடைமுறைகளில் இவற்றுக்கான பதில்களை தேட முடியுமென்றாலும் நேரடியாக மக்கள் சொல்வதிலிருந்தே அதே மக்கள் ஊடகங்கள் குறித்து அறிவதோடு ஏற்கவும் செய்வார்கள்.

ஆகவே ஒரு கருத்துக் கணிப்பு நடத்த முடிவு செய்தோம். குறைந்தது ஆயிரம் பேர் என்ற இலக்குடன். கேள்விகள் எளிமையாகவும் குறைவாகவும் இருப்பின் மக்களை அதிகம் சந்திக்கலாம் என்றாலும் கேள்விகள் பதினைந்தைத் தொட்டது.

பொதுவில் கருத்து தெரிவிப்பது என்றாலே செயற்கையாக, பொதுப்புத்திக்கு ஏற்ப பேசுவதை ஊடகங்களோ, டி.வி நிலைய விவாத வித்வான்களோ மட்டுமல்ல மக்களையும் அப்படி பயிற்றுவித்திருக்கிறார்கள். எனினும் ஒரு கேள்வியில் அப்படி பதிலளித்தாலும் மறுகேள்வியில் அவர்களை உண்மையில் பதிலளிக்க வைக்க வேண்டும் என்று பல்வேறு கோணங்களில் இக்கேள்விகள் தயார் செய்யப்பட்டன. இதில் வரும் சில கேள்விகள் – அவற்றில் இடம் பெறும் வார்த்தைகள் எந்த கணிப்பிலும் இருக்காது. ஏன் என்பதற்கு சம்பந்தப்பட்ட கேள்விகளில் விளக்கமளித்திருக்கிறோம்.

இறுதியில் இரண்டு நாட்கள் கேள்விகளுக்கான ஆய்வு, இரண்டு நாட்கள் மக்களிடம் சென்று கணிப்பு நடத்தியது, அனுபவத்தை தொகுக்க ஒரு நாள், விவரங்களை கணினியில் உள்ளீடு செய்ய ஒரு வாரம், அலசலுக்கு சில நாள் என கிட்டத்தட்ட இரு வாரம் எடுத்துக் கொண்டோம்.

மக்கள் குவிந்திருக்கும் சென்னை மெரினா கடற்கரை மற்றும் எலியட்ஸ் கடற்கரையிலும் கணிப்புகள் எடுக்கப்பட்டன. மெரினாவில் அண்ணா சமாதி முதல் காந்தி சிலை வரை கிட்டத்தட்ட 800 பேர்களிடமும், எலியட்ஸில் சுமார் 200 பேர்களிடமும் இந்த கணிப்புகள் திரட்டப்பட்டன.

மக்களே டிக் செய்யும் வண்ணம் கட்டங்களுடன் இருந்த கேள்வித்தாளை யாரெல்லாம் சுயமாக செய்கிறார்களோ அவர்களிடம் கொடுத்து விட்டு இயலாதவர்களுக்கு உதவினோம். அந்த வகையில் முக்கால் பங்கு மக்களே டிக் செய்தார்கள். சர்வேயை எடுக்கும் நிறுவனம் ஏதோ ஒரு மீடியா ரிசர்ச் கம்பெனி என்ற பெயரில் தோழர்கள் பங்கேற்றார்கள்.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு
சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை

இந்த கணிப்பில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்கள் – மாணவர்களே கிட்டத்தட்ட 37 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக நடுத்தர வயதினர் 33 சதவீதம் பேர். ஆண், பெண் பாலினப் பிரிவினையை பொறுத்த வரை 70, 30 என்று இருக்கிறது. மொத்த கணிப்பில் ஒரு திருநங்கையும் பங்கேற்றார். கருத்துக் கணிப்பு என்றதும் மக்களுக்கு தயக்கம் இருந்தது. மாணவர்கள் அனைவரும் எந்த தயக்கமின்றி உடனே படிவத்தை படித்து நிரப்பி அளித்தனர். நடுத்தர வயதினர் பல்வேறு கேள்விகளைக் கேட்டு – எதற்கு கணிப்பு? உங்களுக்கு என்ன இலாபம், எந்த டி.விக்கு எடுக்கிறீர்கள், மறைமுகமாக எந்த கட்சிக்கு ஆதரவு என்று கண்டுபிடிக்கிறீர்களா? – என்ற விசாரணைக்கு பிறகு ஒத்துக் கொண்டனர்.

மக்கள் தொடர்பில் அனுபவம் உள்ள தோழர்கள் இந்தப் பிரச்சினைகளை திறம்பட கையாண்டு மறுத்தவர்களையும் பங்கேற்க வைத்தனர். இல்லையேல் இலக்கினை அடைந்திருக்க முடியாது. கிராமப்புறத்தைச் சேர்ந்த மக்களும், ஒரு சில முஸ்லீம்களும் பயத்துடன் மறுத்தனர். நாங்கள் அணுகிய பெண்களில் கணிசமானோர் தயங்கினர். மொத்த சர்வேயில் 40க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்றனர். அவற்றில் பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உண்டு. சிலர் குடும்பத்துடன் வந்திருந்தாலும் தயக்கமின்றி பங்கேற்றனர். ஒரு பெண் மட்டும் கணவன் வருவதற்குள் படிவத்தை நிரப்ப வேண்டும் என்று அவசரப்படுத்தினார்.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்புகருத்துக் கணிப்பு எடுக்கப்பட்ட மக்கள் – 1003 பேர்.

ஆண்கள் 697 – 69.5% , பெண்கள் 305 – 30.4%, மூன்றாம் பாலினம் 1 – 0.1%

_____________________

வயது – விவரம்

18 முதல் 25 வரை ஆண் 233 – 23.2% பெண் 135 – 13.5% மொத்தம் 36.7%

26 முதல் 35 வரை ஆண் 233 – 23.2% பெண் 95 – 9.5% மொத்தம் 32.7%

36 முதல் 45 வரை ஆண் 117 – 11.6% பெண் 46 – 4.6% மொத்தம் 16.2

46க்கு மேல் ஆண் 114 – 11.4% பெண் 29 – 2.9% மொத்தம் 14.3%

மொத்தம் 1003

________________________________

பங்கேற்ற மக்களிடம் வேலை விவரத்தை சரியாக விசாரித்து வாங்கினாலும் அவர்களது சொந்த ஊர், மாவட்டத்தை துல்லியமாக பதிவு செய்ய முடியவில்லை. வேலையைத் பொறுத்த வரை மாணவர்கள் 19 சதவீதமாகவும், மாத ஊதிய வேலை செய்வோர் 41%மாவகும், சிறு தொழில் செய்வோர் 21%மாகவும், இல்லத்தரசிகள் 12 சதவீதமாகவும் இருக்கின்றனர். இதன்றி கூலி வேலை செய்வோம், உதிரித் தொழில் செய்வோர், வியாபாரம் செய்வோர் குறைவாக 4% பேர்கள் இருந்தனர். இந்தப் பிரிவினர் கடற்கரைக்கு வரும் வாய்ப்பே குறைவு என்பதால் இவர்கள் இங்கே அதிகமில்லை.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு
3.3% பேர் விவரங்கள் தெரிவிக்கவில்லை.

வேலைப்பிரிவினை விவரம்

மாணவர்கள் ஆண் 122 – 12.2% பெண் 65 – 6.5% மொத்தம் 18.7%

மாத ஊதிய வேலை செய்வோர் ஆண் 329 – 32.8% பெண் 83 – 8.3% மொத்தம் 41.1%

சிறு தொழில் ஆண் 187 – 18.6% பெண் 27 – 2.7% மொத்தம் 21.3%

இல்லத்தரசி பெண் 115 – 11.5%

இதர பிரிவுகள் ஆண் 37 – 3.7% பெண் 4 – 0.4% மொத்தம் 4.1%

3.3% பேர் தெரிவிக்கவில்லை.

_____________________________________

தொலைக்காட்சியில் மக்கள் விரும்பிப் பார்ப்பது பொழுது போக்கு நிகழ்ச்சிகள்தான். அவற்றையும் கிரமமாக பார்க்குமளவு மக்களை வாழ்க்கையும் வேலை நேரமும் அனுமதிப்பதில்லை. ஆகவே அவர்கள் கிடைக்கும் நேரத்தில் எதை பார்க்கிறார்கள் என்றே இதை எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் செய்திகளைப் பார்ப்போர் 41% என்று வந்தாலும் அவர்களில் பெரும்பாலானோர் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதில்லை. சாப்பிடும் போது சன் டி.வியின் பிரைம் செய்தி போன்ற முக்கியமான செய்தித் தொகுப்புகளை பார்ப்பதையே அப்படி குறிப்பிடுகிறார்கள். மற்றபடி ஏதாவது பரபரப்பு செய்திகள் வந்தால் செய்தி சேனல்களை என்ன ஏதுவென்று பார்ப்பதுண்டு. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் திரைப்படம் முதலிலும், ரியாலிட்டி ஷோக்கள் இரண்டாவது இடத்திலும் சீரியல்கள் மூன்றாம் இடத்தில் இருக்கின்றன. அதன்படி அழுகை தொடர்கள் முன்பிருந்தது போல சிகரத்தில் இல்லை.

ரியாலிட்டி ஷோக்களைப் பொறுத்த வரை அமெரிக்க வார்ப்படங்களை தமிழில் அறிமுகம் செய்த விஜய் டி.வியையே எல்லா சானல்களும் பின்தொடர்கின்றன. சிறிது காலத்தில் இவையும் மக்களுக்கு அலுக்கும் போது ரியாலிட்டி ஷோக்களில் கொஞ்சம் ஆக்சன் சேர்த்து அடிதடி என்று காட்டுவார்களா தெரியவில்லை.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு1) தொலைக்காட்சியில் நீங்கள் விரும்பிப் பார்ப்பது எந்த நிகழ்ச்சி?

சீரியல் 14.3%

திரைப்படம் 22.3%

ரியாலிட்டி ஷோ 19.1%

செய்தி நிகழ்ச்சிகள் 41.1%

தொலைக்காட்சி பார்க்காதோர் 3.2%

தொகுப்பாக: பொழுது போக்கு நிகழ்ச்சிகளை பார்ப்போர் 55.7%

செய்திகளைப் பார்ப்போர் 41.1%

நாளிதழ்களில் பல்வேறு பிரிவுகளில் – முதன்மைச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், வணிகச் செய்திகள், இலவச இணைப்புகள் – தலைப்புகள் வருகின்றன. ஒரு சிலரே அரசியல், முதன்மைச் செய்தி, விளையாட்டு பிரிவுகள் ஏன் இல்லை என்று கேட்டனர். தள்ளு வண்டியில் கடலை வியாபாரம் செய்யும் ஒரு தொழிலாளி விளையாட்டு செய்திகள் மட்டும் விரும்பிப் படிப்பேன் என்றார். ஓட்டுக் கட்சிகளின் சவடால் மற்றும் ஊடகங்களின் ஜால்ரா காரணமாக அப்படி மாறியதாக அவர் தெரிவித்தார். இங்கே நாளிதழ்களில் எதை விரும்பிப் படிப்பார்கள் என்பதைத் தாண்டி அவர்கள் அத்தனை பேரும் தினமும் தினசரி வாங்குபவர்கள் இல்லை.

அவர்கள் ஏப்போதாவது அல்லது ஓரளவுக்கு செய்தித்தாட்கள் படிக்கும் போது இந்த வாசிப்பு விருப்பம் எப்படி இருக்கிறது என்பதை நாம் அறியலாம். வழக்கம் போல சினிமா முதன்மையாக இருக்கிறது. நடுப்பக்க கட்டுரைகள் என்று கட்டம் போட்டிருந்தாலும் மக்களைப் பொறுத்த வரை அரசியல் செய்திகள், முதன்மைச் செய்திகள், அலசல்கள் அனைத்திற்கும் அதை டிக் செய்தனர். நாங்கள் கேட்டுப் பார்த்த வரை நடுப்பக்க கட்டுரைகளை படிப்போரும், தொடர்ந்து படிப்போரும் மிகக் குறைவு. குற்றச் செய்திகள் குறித்த கட்டத்தில் “கொலை, கற்பழிப்பு செய்திகள்” என்றே போட்டிருந்தோம். பலரும் அதை ஆர்வத்துடன் டிக் செய்தார்கள். ராசிபலனையும் அப்படி டிக் செய்வதிலிருந்து நமது தினசரிகள் என்ன விதமான விழிப்புணர்வுப் பங்கை ஆற்றுகின்றன என்பதை நினைத்து ‘பெருமைப்’ படலாம்.

news_interest_read2. நாளிதழ்களில் விரும்பிப் படிப்பது எது?

ராசிபலன் 13.5%
சினிமா 24.6%
குற்றச் செய்திகள் 12.8%
நடுப்பக்க கட்டுரைகள் 24.6%
இதரவை 5.5%

நாளிதழ் படிக்க மாட்டேன் 18.8%

___________

ஆன்மீகச் செய்திகளுக்கு ஒரு நாளிதழ் புகழ் பெற்றது என்பது பொதுவான வரையறையின் படியே நல்ல அங்கீகாரமில்லை. நமது நாளிதழ்களின் ஆன்மீகச் செய்திகளில் திருத்தல வரலாறு, நேர்த்திக் கடன், அறியாத அம்மன்கள், அற்புதக் கதைகள் போன்றவற்றையே சுற்று முறையில் திரும்பத் திரும்ப அச்சிட்டு இம்சிக்கிறார்கள். தமிழகத்தில் உலா வரும் சமையல் குறிப்புகளுக்கும் இதுதான் விதி என்றால் ஆன்மீகத்திற்கு இது இன்னும் கூடுதலாக பொருந்துகிறது. நாட்டில் என்ன நடக்கிறது, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை விட ஆன்மீக ஃபேன்டசியில் இன்புறுவது உலகில் எங்கும் இல்லாத ஒன்று. இந்த இழி புகழில் தினத்தந்தி முதலிடத்திலும், தினமலர் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. தி இந்து, தினமணி மூன்றாம், நாலாம் இடங்களில் இருப்பதற்கு காரணம் மொத்த சர்குலேஷனில் அவர்களின் இடத்தை ஆன்மீகத்திலும் பிரதிபலிக்கிறார்கள். ஆனாலும் வைத்தியின் தினமணியை விட மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஆன்மீகத்தில் முந்துகிறார் என்பதால் தி இந்துவின் ஆன்மீக இலவச இணைப்பு ஆசிரியர் பெருமைப்படலாம்.

தமிழகத்தைப் பொறுத்த வரை அரசியும், அரசியைப் போற்றிப் பிழைக்கும் புலவர்களும் (மீடியா) எவ்வழியோ அவ்வழிதான் குடிமக்களும் என்பதற்கிணங்க ஆன்மீகம் கொடிகட்டிப் பறக்கிறது. ஜெயா-சசி கும்பல் பிரபலப்படுத்திய யாகங்கள், யாருமறியாத கோவில்கள், நேர்த்திக் கடன்கள், கஜமுக யாகங்கள் என்பதிலிருந்து அம்மாவைப் பார்க்க, மனு கொடுக்க, வேட்பாளர் தெரிவுக்கு என அ.தி.மு.க கூடராமே நல்ல நாள், முகூர்த்தம், எம கண்டம் பார்த்து தனது அடிமைத்தனத்தை காட்ட வேண்டியிருக்கும் போது தினசரிகளும் இந்த அசட்டுத்தனத்தை கடைவிரிப்பது கல்லா கட்டுவதற்கு உதவுகிறது. அதே நேரம் ஆன்மீகத்தை படிப்பதில்லை என்று ஐந்தில் ஒரு பங்கினர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு3. ஆன்மீக செய்திகளுக்கு எந்த நாளிதழ் புகழ் பெற்றது?

தினமலர் 18.8%
தி இந்து 7.2%
தினமணி 2.2%
தினத்தந்தி 38.5%
இதர 13.4%
ஆன்மீகம் படிக்காதவர்கள் 19.9%

__________________

நாட்டு நடப்புகளை மக்கள் முதன் முறையாக எந்த வழியாக அறிகிறார்கள் என்பது ஒரு முக்கியமான கேள்வி. ஆனாலும் அன்றாடம் செய்திகளை அறிந்து கொள்வோர்கள் கால் பங்கினர் கூட இருக்கமாட்டார்கள். காரணம் செய்திகளை வாசிக்குமளவு நேரமும், சமூக சூழலும் மக்களுக்கில்லை. எனினும் அவர்கள் தெரிவித்த பதிலின் படி புதிய ஊடகமான வாட்ஸ் அப் முப்பது சதவீதமும், தொலைக்காட்சி 40% இருக்கும் போது நாளிதழ்கள் 12.3% மட்டுமே செய்திகளை அறிவிப்பதில் பங்களிக்கிறது. நாளிதழ்கள் வாங்கினாலும் அதில் செய்திகளை படிப்போர் முந்தைய கேள்வியின்படி கால்பங்கினர் எனும் போது இந்த கேள்வியைச் சேர்த்து பார்த்தால் மூன்று சதவீதம் பேரே செய்திகளை தினசரிகளில் படிக்கிறார்கள் என்றாகிறது. அதே போல தொலைக்காட்சிகளில் 40 சதவீதம் பேர் செய்திகளை பார்க்கிறார்கள் என்ற முந்தைய கேள்வியை இதில் பொருத்தினால் 15 சதவீதம் பேரே மொத்த எண்ணிக்கையில் தொலைக்காட்சி செய்திகளை படிக்கிறார்கள் என்றாகிறது. தமிழகத்தின் அச்சு ஊடகம் மற்றும் சானல்களின் டி.ஆர்.பி மகிமை வலிமை எல்லாம் இந்த கால்பங்கினைத் தாண்டாது என்பதே உண்மை.

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு4. செய்திகளை நீங்கள் முதன்மையாக தெரிந்து கொள்வது எதில்?

வாட்ஸ் அப் / பேஸ் புக்: 31.7%

நாளிதழ்கள்: 12.3%

தொலைக்காட்சி: 39.3%

நண்பர்கள்: 6.7%

செய்திகளில் ஆர்வமில்லை: 10%

___

செல்பேசிகளில் வாட்ஸ் அப் பயன்பாடு 30% பேர்களிடம் இல்லை என்பதோடு, வாட்ஸ் அப்பில் அதிகம் பார்க்கப் படுவது நொறுக்குத் தீனி வகையறாக்கள்தான். செய்திகளை 39%-ம் பேர் பார்க்கிறார்கள் என்பது அதிகமும் பரபரப்பு செய்தி, காமடி செய்தி வகைகளைச் சார்ந்தே இருக்கின்றன. ஆக இங்கும் செய்திகளை பார்ப்போர் உண்மையில் கால் பங்கினராகவே இருக்கின்றார்கள். இறுதியில் நாளிதழ், தொலைக்காட்சி, வாட்ஸ் அப் அனைத்திலும் முக்கால் பங்கு மொக்கைகளாகவும், கால் பங்கு பயனுள்ளவைகளாகவும்தான் நுகரப்படுகின்றன. தொழில் நுட்பம் மாறினாலும் தினத்தந்தியின் ஆண்டியார் பாடுகிறார் வாட்ஸ் அப்பில் கவுண்டமணி, வடிவேலு மீம்ஸ்ஸாக அவதாரம் எடுக்கின்றன அவ்வளவே!

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு5. வாட்ஸ் அப் பயன்பாடு

பயன்படுத்துபவர்கள்: 69.3%

பயன்படுத்துவதில்லை: 30.7%

___

ஊடகங்களை நம்பலமா? வினவு கருத்துக் கணிப்பு6. வாட்ஸ் அப்பில் நீங்கள் விரும்பி பார்ப்பது?

ஜாலி வீடியோ: 33.6%

மீம்ஸ்: 11.5%

கவர்ச்சி: 1.6%

செய்திகள்: 39.2%

இதர: 14.1%

_______________________________

செய்தி ஊடகங்களில் செல்வாக்கு இதுதான் என்றால் அதில் அட்வைசாலேயே சித்திரவதை செய்யும் பிரபல செய்தியாளர்களின் செல்வாக்கு என்ன? தி இந்து நாளிதழின் நடுப்பக்க கருத்து கந்தசாமிகளில் சமஸே அதிகம் கருத்துரைக்கிறார், காரணம் அவர் தானே ஆசிரியர் என்ற முறையில் முடிவு செய்கிறார்! ராகுல் காந்தி முதல், ஒபாமா வரை சகலருக்கும் ஆலோசனைகளை அள்ளி விடும் இவர், கொலைகாரர்கள் நினைத்தால்தான் சமாதானத்தை கொண்டு வர முடியும் என்று கொலைகாரர்களுக்கும் அட்வைசு சொல்பவர். ஏதோ சில கட்டுரைகளுக்கு தனது மின்னஞ்சல் ஆயிரக்கணக்கான மடல்களால் நிரம்பி வழிகிறது என்று சமஸ் சொல்வது உண்மை என்றாலும் தமிழக மக்களிடம் இவரது அறிமுகம் என்ன?

பலர் சமஸ் என்றால் என்ன என்றார்கள். சிலர் கோன்பனேகா குரோர் பதி பாணியில் ஏதோ ஒன்றை டிக் செய்வோம் என்று அடித்தார்கள். சில மாணவர்களோ சமஸ் என்பவர் யார் என்பதை படிவத்தை நிரப்பி கொடுக்கும் போதாவது சொல்லுங்கள் என்று வற்புறுத்தினார்கள். காரணம் இந்தப் பேரே அவர்களுக்கு அன்னியமாக இருக்கிறது, நமக்கு சமஸின் கொள்கை போல. பத்திரிகையாளர் என்று எட்டு சதமானோர் கூறியிருப்பதே பெரிய விசயம்தான்.

samas_know7. சமஸ் என்பவர் யார்?

இயக்குனர் : 2.4%

ஜோசியர் : 1.2%

தொழிலதிபர் : 3.2%

பத்திரிக்கையாளர் : 8.4%

தெரியாது : 84.8%

__________________________

தொலைக்காட்சியின் வீச்சுக்கேற்ப பாண்டேவை சுமார் 33%பேர்களுக்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் மற்ற பிரபல நிகழ்ச்சிகளை இவர்தான் நடத்துகிறார் என்று கூட்டுத் தொகையில் சுமார் 11 சதவீதம் பேர் தெரிவித்திருப்பதைப் பார்க்கும் போதும், பாண்டே யார் என்று தெரியாது என 55% தெரிவித்திருப்பதாலும் தந்தி டி.வியின் தலைமை செய்தியாசிரியர் ரொம்பவும் பெருமைப் பட்டுக் கொள்ள முடியாது. மேலும் இந்த படிவத்தில் மற்ற பிரபலமான நிகழ்ச்சிகளை நடத்துபவர்களை கணிசமானோர் கண்டுபிடித்துவிட்டு, சந்தேகத்தின் பலனை ஆயுத எழுத்திற்கு வழங்கியிருப்பதையும் கூற வேண்டும். இறுதியாக பாண்டே பெயர் பார்த்து ஆயுத எழுத்தை டிக் செய்த சிலர் பாண்டேவைத் திட்டவும் செய்தனர்.

கணிப்பில் பங்கேற்ற ஒரே திருநங்கை, பாண்டேவை அவர் மொழியில் திட்டினார். மத்தவங்க மறைமுகமாக ஜெயலலிதாவை ஆதரிக்கும் போது இவர் வெளிப்படையாக கொ.ப.சேவாக முதுகு சொறிகிறார் என்றார் அவர். ஈரோட்டிலிருந்து வந்த ஒரு விவசாயி “தந்தி டி.வி.யை சென்னையின் குப்பைக் கிடங்கு” என்றார். மற்றுமொருவர் தான் போகோ சானல் கூட பார்ப்பேன், ஆனால் விவாதங்களை பார்க்க மாட்டேன் என்றார்.

rengarajpondey_program8. ரங்கராஜ் பாண்டே நடத்தும் நிகழ்ச்சி?

கொஞ்சம் நடிங்க பாஸ் : 3.6%

சொல்லுங்கண்ணே சொல்லுங்க: 2.3%

நீயா நானா? : 5.3%

ஆயுத எழுத்து: 33.4%

தெரியாது: 55.4%

_________________________

தொடரும்..

அடுத்த பாகத்தில் இடம்பெறும் கேள்விகள்:

புதிய தலைமுறை தொலைக்காட்சி எந்தக் கட்சி சார்பானது?

உங்கள் ஓட்டு எந்தக் கட்சிக்கு என்பதை யார் தீர்மானிப்பார்கள் ?

அ.தி.மு.க-விற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கை எது ?

ஆனந்த விகடனைத் தெரியுமா?

விகடனில் விரும்பிப் படிப்பது

ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்பை நம்புவீர்களா?

கருத்துக் கணிப்பிற்கு காரணம்

அம்பானி, பச்சமுத்து, வைகுண்டராஜன் போன்ற முதலாளிகள் ஊடகங்களை நடத்தினால் நேர்மையாக இருக்குமா?

__________________________

எது தேசத் துரோகம் ? தோழர் ராஜு, பேரா சாந்தி – உரை

0

எது தேச துரோகம்? வழக்கறிஞர் ராஜு உரை

எது தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்!

____________________________

எது தேசதுரோகம்? பேராசிரியர் சாந்தி உரை!

து தேசம்? எது துரோகம்? ஜே.என்.யூ மாணவர் – பேராசிரியர் போராட்டத்தை ஆதரித்து மார்ச் 3, 2016 என்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் சாந்தி ஆற்றிய உரை! பாருங்கள் – பகிருங்கள்!

நீதிமன்றத்தில் ரவுடி அர்ஜுன் சம்பத்தை விரட்டிய வழக்கறிஞர்கள் !

1

ரவுடி அர்ஜூன் சம்பத்டந்த 2006-ம் வருடம் ஸ்ரீரங்கம் பெரியார் சிலையை உடைத்ததற்காக இந்து மக்கள் கட்சி எனும் கூலிப்படை மீது, டிசம்பர் 7-ம் தேதி அன்று தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் மத கலவரத்தை தூண்டியதற்காக வழக்கு போடப்பட்டு, அதன் விசாரணை திருச்சி முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கின் குற்றவாளியும் இந்து மக்கள் கட்சி கூலிப்படை தலைவருமான அர்ஜுன் சம்பத், இன்று வழக்கு விசாரணை முடித்து வந்தபோது நீதிமன்ற வளாகத்த்திற்குள்ளாகவே மதவெறியைத் தூண்டி மத கலவரத்தை தூண்டும் வகையில் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்ததோடு உடன் வந்த ரவுடிகள் 15 பேரும் முழக்கமிட்டனர். முக்கியமாக தமிழகத்தில் பெரியார் சிலைகள் இருக்காது என ஊளையிட்டனர்.

இதனை காவல் துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். உடனே மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் சங்கர்,ஆதிநாராயணமூர்த்தி ,மனோஜ் குமார்,செபஸ்டியன் ஆனந்த்,நெடுஞ்சேரலாதன் உள்ளிட்டவர்களுடன் வழக்கறிஞர்கள் கென்னடி,பிரபு, ராமசந்திரன்,பழனியப்பன், உள்ளிட்டோர் அர்ஜூன் சம்பத் மற்றும் இதர ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்ற வளாகத்திற்குள் முழக்கமிட்டனர். அதன் பிறகு சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்து மக்கள் கட்சியை தடை செய், காவி பயங்கரவாதி அர்ஜுன் சம்பதின் பிணையை இரத்து செய்., பெரியார் பிறந்த மண் இது, பார்ப்பனிய பிசாசே வெளியேறு என்று முழக்கமிட்டவாரே மாவட்ட அமர்வு நீதி மன்ற காவல் நிலையம் மற்றும் மாவட்ட அமர்வு நீதிபதி ஆகியோரிடம் நடந்த சம்பவத்தை விளக்கி புகார் மனு அளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறினர்.

மாவட்ட அமர்வு நீதி மன்ற நீதிபதி குமரகுரு மற்றும் கண்டோன்மென்ட் காவல் உதவி ஆணையர் அசோக் குமார் ஆகியோர் இன்று மாலைக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டத்தை தள்ளி வைத்துள்ளனர்.

படங்களை பெரிதாக பார்க்க அழுத்தவும்:

தகவல் : மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி கிளை,
பேச 9487515406