22 கேரட் சுத்தமான மோசடி!
கார்ப்பரேட் தங்க நகைக் கடைகளின் மோசடியை நடுத்தெருவுக்கு இழுத்து வந்த
தருமபுரி நகை தொழிலாளர்களின் போராட்டம்!
எங்களிடம் ஒரு லட்ச ரூபாய் நகை வாங்கினால் அதை 10,000 ரூபாய்க்கு உங்களிடமிருந்து திரும்ப வாங்குவோம்! – மோசடியே எங்கள் ஆதாரம்!
தங்கமயில், மலபார், ஏ.வி.ஆர் போன்ற கார்ப்பரேட் நகைக் கடைகள், “செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை”, “தங்கமான மனசு, தங்கமான ஜுவல்லர்ஸ்”, “தங்கம் வாங்க, தங்க மயிலுக்கு வாங்க” போன்ற கவர்ச்சிகரமான வாசகங்களை பிரச்சாரம் செய்தும், நடிகர்-நடிகைளை வைத்து விளம்பரங்கள் செய்தும் மக்களை ஏமாற்றி கவர்ந்திழுக்கின்றன. இந்தியாவின் ‘வருங்கால ஜனாதிபதி’ பனாமா புகழ் அமிதாப் கூட இந்த விளம்பர தூதர்களில் ஒருவர்!
இவர்களின் வரவால் எல்லா நகரங்களிலும் உள்ள பாரம்பரிய பொன், வெள்ளி நகை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களும் உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்துள்ளனர். இந்த கார்ப்பரேட் நகைக் கடைகளை எதிர்கொள்வது எப்படி எனத் தெரியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில், தருமபுரியில் இயங்கிவரும் தங்க மயில் என்ற கார்ப்பரேட் நகைக்கடையின் மோசடிக்கு எதிராக மக்கள் அதிகாரம் மற்றும் அப்பகுதி மக்களின் போராட்டம் முன்னுதாரணமாக நடைபெற்றது.
மக்களை ஏமாற்ற கடை அலங்காரம்!
தருமபுரியில் இயங்கிவரும் தங்க மயில் கார்ப்பரேட் நகைக்கடை பலவித மோசடிகளை செய்து தங்க நகை வியாபாரம் செய்து வருகிறது. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்று பொய்யான விளம்பரங்களைத் தாண்டி நகைகளில் ஈயத்தைக் கலந்து எடைக்கூட்டி விற்பனை செய்து வருகிறது. இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட மக்கள் அண்மையில், ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளனர்.
5 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி நகரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தங்க மயிலில் 20 பவுன் நகை வாங்கியுள்ளார். அதன் பிறகு சென்ற ஆண்டு தனது குடும்ப செலவுகளுக்காக ஐ.சி.ஐ.சி வங்கியில் அந்த நகைகளை அடகு வைத்துள்ளார் தனது பொருளாதார நெருக்கடியால் வாங்கியக் கடனை கட்ட முடியாமல் போனது. இதனால், இந்த நகைகளை விற்று கடனடைக்க முடிவு செய்த சங்கர், தருமபுரி பொன் – வெள்ளி நகை தொழிலாளர் சங்கத்தை அணுகியுள்ளார். இந்த நகைகளை சிறு நகைகளாக மாற்றி விற்றுவிட முயற்சித்த போதுதான் முனேகால் பவுன் (16.25%) ஈயத்தை கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், கொதிப்படைந்த சங்கர், சங்கத்திற்கு முழு ஒத்துழைப்புத் தருவதாகவும் தனது நகைக்கான முழு தொகையை தங்கமயில் நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தருமாறும் கோரிய வகையில் தருமபுரி பொன்-வெள்ளி நகை தொழிலாளர்கள் சங்கம், மக்கள் அதிகாரத்தின் உதவியுடன் அக்கடை முன்பாக போராட்டத்தில் இறங்கியது.
அருவெறுப்பூட்டும் ஒரு நகை விளம்பரம்!
முன்னதாக, சங்கத்தின் சார்பாக சென்று அந்த நிறுவனத்தின் மோசடியை அம்பலப்படுத்தி, நகைக்கான தொகையை கேட்டுள்ளனர். இந்நிறுவனம் அறிவித்துள்ள தரச்சான்றிதழின் படி, “எங்களிடம் வாங்கிய தங்க நகைகளை மாற்றும் போது அன்றைய மார்க்கெட் விலையில் 1% கழித்து மாற்றம் செய்து கொள்ளலாம்”, “எங்களிடம் வாங்கிய தங்க நகைகளை விற்று காசோலையாக பெற விரும்பினால், அன்றைய மார்க்கெட் விலையில் 3% கழித்து காசோலை வழங்கப்படும்” என்று அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் படி ரூ.4,11,666 தரவேண்டியுள்ளது. ஆனால், நகையின் சுத்தத்தை (பியூரிட்டி) கணக்கில் கொண்டு அசுத்தங்கள் போக மதிப்பிட்டு ரூ.1,04,462 மட்டுமே தரமுடியும் என்று கூறியது. நகை எப்படி அசுத்த நகையானது, எப்படி ஈயம் கலந்துள்ளது என்ற நகைத் தொழிலாளர் சங்கத்தினரின் கேள்விக்கு பதிலளிக்காமல் இழுத்தடித்து வந்தது தங்கமயில் ஜுவல்லர்ஸ்.
நகைத் தொழிலாளர் சங்கத்தினர் தொழில் தெரிந்து வைத்துள்ளதால், அக்கடையிடன் மோசடியை தொழில் நுணுக்கத்துடன் தொழில் நுட்ப விவரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளனர். இருந்தும் தங்கமயில் ஜுவல்லர்ஸ் தனது திருட்டுத்தனத்தை மறைக்கவே முயன்றது.
இந்த நிறுவனத்தின் இத்தகைய மோசடிகளை பலர் மூலம் நகை தொழிலாளர் சங்கத்தினர் அறிந்து வைத்திருந்தாலும் இது நாள் வரை இதனை எதிர்த்துக் கேட்க உறுதியான வாடிக்கையாளர்கள் இல்லை என்று இருந்தனர். இன்று சங்கர் உறுதியாக ஒத்துழைப்பு கொடுத்தும், இந்த நிறுவனத்தை ஆட்டவோ அசைக்கவோ முடியவில்லை. இவ்வாறு பகிரங்கமாக அம்பலப்படுத்தப்பட்ட பின்னரும், இந்த நிறுவனம் இவ்வளவு திமிராக இருப்பதற்கு காரணம் என்ன?
ஈயத்தைக் கலந்து விற்பது என்ற மோசடி மட்டுமல்ல, தங்க நகைக்குள் வெள்ளி கம்பிகளை வைப்பது, சிறிய நகைகளுக்கு செய் கூலி, சேதாரம் என்று அதிக தொகை வசூலிப்பது போன்ற பல மோசடிகளை செய்து வருகின்றன இந்த கார்ப்பரேட் நகைக் கடைகள். ஆனால், தங்க நகையில் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்யும் மோசடிகளை விசாரிக்க முறையான அமைப்புகள் இல்லை. அப்படியே இருந்தாலும், சங்கருக்கும் தருமபுரி தங்க நகை தொழிலாளர் சங்கத்திற்கும் ஏற்பட்ட நிர்கதியான நிலைதான் ஏற்படும். காரணம், அரசும் போலீசும் நுகர்வோர் மன்றங்களும் ஊழல் மயமாகி இவர்களுக்கு பக்க பலமாக உள்ளன. சட்டங்களும் இவர்களுக்கு சாதகமாக உள்ளன. இதனை நன்கு உணர்ந்த தங்க நகை தொழிலாளர் சங்கம் மக்கள் அதிகாரத்தின் உதவியை நாடி, அக்கடையின் முன்பாக போராட்டத்தில் இறங்கியது.
குறைந்த சதவிகித சேதாரம், செய்கூலி இல்லை என நடிகைகளை வைத்து கூறும் தங்கமயில் நகைக்கடை விளம்பரம்
மக்கள் அதிகாரம் தோழர்கள், நகை தொழிலாளர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி 21.03.2016 அன்று கடையை முற்றுகையிட்டனர். இதுநாள் வரை திமிராக பேசிவந்த நிறுவனம், மக்கள் அதிகாரம் தோழர்கள் வந்திருப்பதை அறிந்ததும், பணிந்து வந்தது. இந்நிறுவனத்தின் மோசடியை நகை தொழிலாளர் சங்கத்தினர் கோபத்துடன் அம்பலப்படுத்தினர். தனது கார்ப்பரேட் மூளை, நரித்தனமான வாதங்களை முன்வைத்து திசைத் திருப்பப் பார்த்தது தங்கமயில் ஜுவல்லர்ஸ். தொடர்ந்து திசைத் திருப்ப முயற்சித்தால், அடுத்தக் கட்டமாக போராட்டமாக வெடிக்கும் என உணர்ந்த இந்நிறுவனம், இறுதியில் உரிய தொகையை ஒப்படைக்க ஏற்றுக்கொண்டது.
ஆனால், தனது மோசடிகளை மறைக்கும் விதமாக, போலீசை கொண்டு அச்சங்கத்தினரை மிரட்டுவது, கொலை மிரட்டல் விடுப்பது போன்ற ஈனத்தனமான வேலைகளில் தங்கமயில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
மக்கள் அதிகாரமோ அல்லது தருமபுரி பொன்-வெள்ளி நகை தொழிலாளர் சங்கமோ பாதிக்கப்பட்ட சங்கருக்கு உரிய இழப்பீடு வாங்கித் தருவதை மட்டும் நோக்கமாகக் கொண்டு செயல்படவில்லை. இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற வகையிலேயே செயல்பட்டு வருகின்றனர். அன்றாடம் பல கூலி ஏழை மக்கள்தான் இந்த கார்ப்பரேட் நகைக்கடைகளால் ஏமாற்றப்படுகின்றனர். இவர்கள் எல்லோருக்கும் இந்த மோசடிகளும் இவற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளும் முழுமையாக தெரியாது.
குறிப்பாக, தங்கமயில் போன்ற கார்ப்பரேட் நகைக் கடைகள் தருமபுரியில் கால்பதித்த பின்னர்தான் தருமபுரியில் பாரம்பரியமாக தொழில் செய்துவரும் 400க்கும் மேற்பட்ட நகை தொழிலாளர்களும் இவர்களிடம் பணி புரியும் 800க்கும் மேற்பட்ட உதவியாளர்களும் தொழில் நொடிந்து வாழ்விழந்துள்ளனர். இன்று 50-க்கும் குறைவானவர்களே இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர். தனது வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து சிறுக சிறுக பணம் சேர்த்து, நகை வாங்கும் பல உழைக்கும் மக்கள் இந்த நிறுவனங்களிடம் தங்களது உழைப்பின் பெரும் பகுதியை இழந்து விடுகின்றனர்.
மற்றொருபுறம், ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் நாள் தோறும் தங்கம் விலையேற்றம் என்பது இந்த கார்ப்பரேட் நகைக் கொள்ளையர்களுக்குதான் வசதியாக உள்ளது. இவை தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்ளையின் விளைவு. இந்த மோசடி நிறுவனங்களை வளர்ப்பதைத்தான் அரசு தனது கொள்கையாக கொண்டுள்ளது. நேர்மை, நாணயம், தொழில் சுத்தம் போன்ற வார்த்தைகள் அனைத்தையும் இந்தக் காரப்பரேட் நிறுவனங்களும் அரசும் மதிப்பிழக்க செய்துவிட்டன! எனவே தங்கத்தை வைத்து திருடும் இந்த கார்ப்பரேட் திருடர்களை போலிசும் நீதிமன்றமும் தண்டிக்காது. மக்கள் அதிகாரத்தை கையிலெடுப்பது ஒன்றே தீர்வு! தரும்புரி தங்க மயிலிடமிருந்து ஒரு ஏழைத் தொழிலாளியை மக்களை திரட்டி காப்பாற்றிய மக்கள் அதிகாரம் அதற்குத் துணை நிற்கும்!
தூக்கு போடும் விவசாயியிடம் மோடி: ஐயா, ஒரு நிமிடம் பொறுங்கள்! தயவு செய்து கிசான் சௌதா ஆப்-ஐ தரவிறக்கம்செய்யுங்கள். பிறகு நீங்கள் ஃசெல்பி கூட எடுத்து வெளியிடலாம்!
(விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கும், தனியாருக்கும் தாரை வார்த்து வருகிறது மோடி அரசு. அரசின் விவசாய விரோதக் கொள்கைகளால் விவசாயிகள் நாடெங்கும் தற்கொலை செய்கிறார்கள். இந்த நிலையில் மோடியோ செல்ஃபிக்கள் நடமாடும் டிஜிட்டல் உலகத்தில் கோலேச்சுகிறார். விவசாயி தூக்கில் தொங்குகிறார்.)
நன்றி: Rebel Politik by Arun
கிசான் சௌதா ஆப் – கேலிச்சித்திரம்
——————————————-
முதலாளித்துவச் சந்தையின் சுதந்திரம்!
வீடற்ற மக்கள் – மக்களற்ற வீடுகள்
வாடகை நகரம் – ஜப்தி செய்யப்பட்ட வீடுகள்
முதலாளித்துவ சந்தையின் சுதந்திரம்!
——————————————-
கேள்வி: ஒரு போர்க் கைதிக்கும், ஒரு வீடற்ற நபருக்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில்: ஜெனிவா ஒப்பந்தத்தின் படி எந்த ஒரு போர்க்கைதிக்கும் உணவு, இருப்பிடம், மருத்துவ வசதிகள் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும்.
வீடற்ற மக்களின் நிலை
——————————————-
இணையத்தை பற்றி ஆப்ரகாம் லிங்கன்
“இணையத்தில் ஒருவரின் படத்தை போட்டு கூடவே ஒரு மேற்கோளையும் சேர்த்து விட்டால் உங்களைப் போன்ற அப்பாவிகள் அதை உண்மை என்றே நம்புகிறீர்கள்!”
– ஆப்ரகாம் லிங்கன்
(முன்னாள் அமெரிக்க அதிபர்)
தோற்றம் 1809 மறைவு 1865
இணையத்தை பற்றி ஆப்ரகாம் லிங்கன்
வினவு கேலிச்சித்திரம் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரங்கள்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் கருணாஸ், சரத்குமார் உள்ளிட்டோர் போட்டியிடுவது மட்டுமல்ல, அ.தி.மு.கவின் முழுப் பிரச்சாரமே தமிழகத் திரையுலக நட்சத்திரங்களால் நடத்தப்படுகிறது. இதிலிருந்து அடுத்த ‘அம்மா’ ஒருவர் உருவாகலாம், அது விந்தியாவாகக் கூட இருக்கலாம். ஆளும்கட்சி என்பதால் அ.தி.மு.கவில் நடிகர்கள் அதிகம் இருப்பினும் தி.மு.க, பா.ஜ.க கூட முடிந்த வரை இழுத்துப் போடுகிறார்கள். விஜயகுமார், கங்கை அமரன் முதலானோர் பா.ஜ.கவில் சங்கமித்திருக்கின்றனர். காங்கிரசிலோ குஷ்பு, நக்மா முக்கியமான தலைவர்களாக முன்னிறுத்தப்படுகின்றனர். நடிகர் விஜய் உள்ளிட்டோர் தமது அரசியல் பிரவேசம் குறித்து ஒரு திட்டத்தை வைத்திருக்காமல் இல்லை. ரஜினி ஓய்ந்து போனாலும் பா.ஜ.க இன்னும் தீவிரமாக அவரை இழுத்துப் போட முயல்கிறது.
இப்படி சினிமா உலகம் பின்னே அரசியல் உலகம் ஓடுவது பொதுவில் சமூகத்தின் சீரழிவாக மட்டுமல்ல அரசியல் உலக ஆண்டைகளின் பாசிச நாயகர்களாகவும் இவர்களே உருவெடுக்கிறார்கள். மக்கள் முன்னே நடிப்பவர்களை வைத்து மக்களை ஏமாற்றி பிறகு அதே மக்களை ஒடுக்கவுமே இந்த நட்சத்திர உலகம் பெரும் மூலதனத்துடன் களமிறக்கப்படுகிறது. அதன் உலகைப் பற்றி பேசுகிறது 12 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்த புதிய கலாச்சாரம் கட்டுரை!
– வினவு
திரைஉலகம் : பொய் நாயகர்களின் நாற்காலிக் கனவுகள்
“கனவுத் தொழிற்சாலைகள்” என்று சினிமாத்துறையை அதன் இளைய பங்காளியான செய்தி ஊடகம் செல்லமாகச் சித்தரிப்பது உண்டு. கனவுகள் என்னும் சரக்குகளை உற்பத்தி செய்து விற்கிறது ”சினிமா உலகம்” என்ற பொருளில் அப்படிச் சொல்லப்படுகிறது.
ஆனால் வெறுமனே பொழுது போக்கிற்கான சரக்குகளை உற்பத்தி செய்து விற்பதோடு இந்தச் சினிமாவும் செய்தி ஊடகமும் நின்று விடுவதில்லை. ஒட்டு மொத்தச் சமூகத்தையும் ஒருவித மயக்கத்திலும் ஒரு பெரிய இளைஞர் கூட்டத்தை ஒருவித போதையிலும் தள்ளுவதன் மூலம் ஆதாயம் அடைவது தான் சினிமா, செய்தி ஊடகம் இரண்டினது குறியாக இருக்கிறது.
எந்தவிதப் பொது அறிவோ, அரசியல் அறிவோ, சமுதாய அறிவோ இல்லாத தார்மீக ஒழுக்கமற்ற, பண்பாடற்ற, சமூக மதிப்பீடற்ற வெத்துவேட்டு சினிமா நாயகர்களை (ஹீரோக்களை) சகலகலா வல்லவர்களாகச் சமூகத்தில் உலவ விடுவதே சினிமா, செய்தி ஊடகம் இரண்டினது வியாபார உத்தியாக உள்ளது.
சினிமா நாயகர்களைப் பொருத்த வரை அவர்கள் படங்களில் பேசும் வசனத்துக்கோ வாயசைக்கும் பாடல்களுக்கோ, காட்டும் முகபாவங்களுக்கோ, சில சமயம் அவர்களின் குரலுக்கும் முகங்களுக்கும் தோற்றங்களுக்குமோ கூட அவர்கள் சொந்தக்காரர்கள் அல்ல. இருந்தாலும் ஒட்டுமொத்தச் சமுதாயத்துக்கும் வழிகாட்டும் தலைவனாகத் தன்னை நினைத்துக் கொண்டு சினிமாவில் தான் பேசிய வீர வசனங்கள் எல்லாம் தனக்கே சொந்தமான, நிஜமானவை தாம் என்பதைப் போலப் பீற்றிக் கொள்கிறார்கள். தாங்கள் வெளியே காரில் பவனி வந்தால் இரு புறமும் மக்கள் திரண்டு நின்று மலர் தாவி வரவேற்க வேண்டுமென்று எதிர் பார்க்கிறார்கள் இந்தக் கனவுலக நாயகர்கள். சினிமாச் சந்தையில் இரண்டு மூன்று படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றவுடன் அவற்றின் நாயகர்கள் தங்களை வருங்கால முதலமைச்சர்கள் என்று பாவித்துக் கொள்கிறார்கள். தேர்தல் என்று வந்தால் தங்கள் படங்களை வெற்றி பெறச் செய்த ரசிகர்கள் மட்டுமல்ல, அவற்றைக் கண்டு களித்த மக்கள் கூடத் தங்களையோ, தாங்கள் கைகாட்டும் கட்சியையோ ஆதரித்து வெற்றிபெறச் செய்வார்கள் என்று கனவு காண்கிறார்கள்.
சினிமாத்துறையில் நுழையும் எல்லோரும் எப்படிப்பட்ட எண்ணங்களோடு அடியெடுத்து வைக்கிறார்கள்? ஆரம்பத்தில் எதற்காக ஏங்குகிறார்கள் என்பதற்கு மிகச் சமீபத்திய எடுத்துக் காட்டு, தொடர்ந்து மூன்று பெரிய வசூல் சாதனைப் படங்களில் நடித்த “இளம்புயல்” என்று செய்தி ஊடகம் கொஞ்சும் நடிகர் தனுஷ்.
இவரைப் பேட்டி எடுக்கப்போன செய்தியாளர் அந்தச் சூழல் குறித்து எழுதுகிறார். ”வீட்டில் நடிகர் தனுஷின் அறையில் பேச்சிலரின் அறைக்கான சகல இலக்கணங்களையும் பார்க்க முடிகிறது. படுக்கையில் குட்டி ஸ்பீக்கர்கள், கட்டியணைத்துக் கொள்ள சற்றே பெரிய சைஸ் பொம்மை, வீடியோகேம் கேட்ரிட் ஜூகள் இறைந்து கிடக்க, குட்டித்திரை இணைந்த சோனி டிஸ்க்மேனில் ஒரு படம் ஃப்ரீஸ் செய்யப்பட்டிருந்தது. அறை தாறுமாறாக இருந்தது.”
இந்த நிருபர் ”பேச்சிலரின் அறைக்கான இலக்கணம்” என்று வரையறுத்திருப்பதைப் பாருங்கள். ஒரு பழைய தோள் பையில் தனது உடைகள், பாடப் புத்தகங்கள், சோப்பு சீப்பு கண்ணாடி பவுடர் எல்லாம் வைத்துப் பூட்டி அதற்கு மேல் ஒரு கிழிந்த தலையனை பாயைச் சுருட்டி வைத்து விட்டு காலையில் வகுப்புக்கும் மாலையில் பகுதிநேரக் கூலி வேலைக்கும்போகும் அரசு விடுதி மாணவர்களும் பேச்சிலர்கள் தாம் என்பது ஏனோ இவருக்குத் தெரியவில்லை.
இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க… தனுஷிடம் இருக்கும் ”ஹைடெக் அயிட்டங்கள்,” அவரது விருப்பங்களைப் பற்றி செய்தியாளர் கேட்கிறார். “ஜீன்ஸ் பிடிக்கும். அதில் ’லீவைஸ்’ அப்புறம் ’லீ’, ஷர்ட்டில் ’ப்ரோவோக்’ ‘ஸோட்’, இப்போ ஒட்டற கார் ’ஸ்கார்பியே’ பிளாக் கலர். ஆனா கனவுக் கார் மிட்ஷூபிஸி ’பஜேரோ’ கூலர்ஸ்னா ’ரேபான்’ ரால்ட் லாரேன். காலுக்கு ’நைகி’யின் ஷாக்ஸ் மாடல். வாட்ச்: ஜியோர் டானோ. செல்போன் இரண்டு: சோனி எரிக்ஸன் பி-800 மற்றும் டி-610.
தனுஷ் சொல்வது கோடிக்கணக்கான இளைஞர்களுக்குப் புரியவே புரியாது. தனுஷ் வகையறாக்கள் நமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் வேறு உலகத்தினர். நுகர்வு வெறிபிடித்தவர்கள். இங்கே கிழிந்த பிளாஸ்டிக் பையைத் தைத்துக் கூரையாக வேய்ந்து சாக்கடையோரம் வாழும் மனிதர்கள், கஞ்சித்தொட்டி வரிசையில் நிற்கும் மனிதர்கள் உள்ள சமுதாயத்தில் இப்படி நுகர்வு வெறிபிடித்து அலைவது சமூகக் குற்றமெனக் கருதாதவர்கள். தனுஷ் வகையறாக்களின் தரிசனத்துக்குக் காத்துக் கிடக்கும் செய்தியாளர்களோ வேறுவகைக் குற்ற உணர்வுக்கு ஆளாகிக் கிடக்கிறார்கள். “தனுஷ் கசங்கிய துணிபோல சோர்ந்திருக்கிறார் (”இன்னிக்கு பாட்டு சீன்ஸ் எடுத்தாங்க அதான்”) தமிழகத்தின் மிகப் பிசியான 21 வயது இளைஞரின் இரவு ஓய்வைக் கலைத்த குற்ற உணர்வுடனே சந்தித்தார் செய்தியாளர்” என்கிறது அவரது பத்திரிக்கை.
சினிமாவில் நுழையும்போது தனுஷ் வகையறாக்கள் உழைப்பதெல்லாம் பணம் புகழ் பெறுவதற்குத்தான். ஒரளவு இலாபம் தரக் கூடிய ஒன்றிரண்டு படங்களில் நடித்ததும் நாயக நடிகர்கள் இவற்றைப் பெற்றுவிடுகிறார்கள். பிறகென்ன? எந்தத் தகுதியும், திறமையும் இல்லாத (இதை ஒரு போதும் அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை) நாயக நடிகர்கள் தீடிரென்று ஏராளமான பணமும், பிரபலமும் வந்து குவிந்ததும் அவர்களே பிரமித்துப் போகிறார்கள். ஒன்று கடவுள் கடாட்சத்தால் இவையெல்லாம் தனக்கு வந்து சேர்ந்ததாக மூட நம்பிக்கை கொள்கிறார்கள். அடுத்து, மேலும் மேலும் முன்னேறுவதற்கான அதிர்ஷ்டமும் திறமையும் ஏதோ அதீத சக்தியும் தனக்கு இருப்பதாக ஒரு பிரமையில் ஆழ்ந்து போகிறார்கள். எனவே, பணம், புகழுக்கு அடுத்து அரசியல் பதவி என்னும் அதிகாரத்தை எட்டிவிட எத்தனிக்கிறார்கள்.
சினிமாத்துறையில் முன்னணி நாயகர்களாக உள்ளவர்கள் சினிமாவில் ஒரு நீண்ட காலத்துக்குத் தன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ளவே சினிமாவுக்கு வெளியே ஒரு தோற்றத்தையும் ரசிகர்மன்ற அமைப்பையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். சினிமாவில் மட்டுமல்ல, நிஜத்திலும் தாம் நல்லவர்கள், வல்லவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக தம்மிடம் குவிந்துள்ள கறுப்புப் பணத்தில் ஒரு சிறு அளவு செலவிடுகிறார்கள். ஒரு அரசியல் கட்சியைப் போலவே தமது ரசிகர் மன்றங்களை முறைப்படுத்தி இயக்குகிறார்கள்.
ஏற்கெனவே அரசியலைவிடச் செய்தி ஊடகத்துக்கும் சினிமாவுக்கும் இடையிலேதான் நெருக்கமான உறவு இருக்கிறது. குறிப்பாக விஜய், பிரசாந்த முதல் இளம் வரவுகளான சிம்பு, தனுஷ் வரையிலான வாரிசு நடிகர்களின் அப்பன்மார்கள் நேரடியான அவர்களின் மக்கள் தொடர்பு அதிகாரிகளாகவே செயல்படுகிறார்கள். இவர்கள் சினிமா பாத்திரங்களைத் தெரிவு செய்வது, பணவரவு செலவுகளைக் கவனிப்பதோடு நின்று விடுவதில்லை. தமது வாரிசுகளைப் பற்றிய துணுக்குச் செய்திகளைச் செய்தி ஊடகம் மூலமாகப் பரவ விடுவதிலிருந்து ரசிகர் மன்றங்களைக் கட்டி நிர்வகிப்பது வரை முக்கியப் பங்காற்றுகிறார்கள்.
சினிமாவுக்கு வெளியே நல்லவன், வல்லவன் என்கிற தோற்றத்தை முன்னணி நடிகர்கள் ஏற்படுத்தில் கொள்ளவும் அதைத் தக்க வைத்துக் கொள்ளவும் சினிமாவுக்கும் செய்தி ஊடகத்துக்கும் உள்ள நெருக்கமான உறவு பயன்படுத்தப்படுகிறது. ஏழைகளுக்கு மருத்துவ வசதி பள்ளி மானவர்கள், ஊனமுற்றவர்கள், கைம்பெண்களுக்கு உதவி, இலவசத் திருமணங்கள், அன்னதானங்கள் முதலமைச்சரின் திட்டங்களுக்கு உதவித் தொகை போன்ற சிறு அளவிலான ’சமூகத் தொண்டு’ செய்தி ஊடகத்தால் ஊதிப் பெருக்கித் தரப்படுகிறது.
எம்.ஜி.ஆர். காலத்திலேயே வெள்ள நிவாரணம், போர் நிதி போன்றவை பொய்யாக அறிவிக்கப்பட்டு, உண்மையில் ஈடேறாத பல செய்திகளை வெளியிட்டு அவருக்கு வள்ளல் தோற்றம் தருவதில் பத்திரிக்கைகள் முக்கியப் பங்காற்றின. இப்போது தனது ஆரம்ப காலச் சகபாடியாக இருந்து நலிந்து போன சினிமாக்காரனை நினைவு வைத்துக் கொண்டு நிதி உதவி செய்வது, எதிரே வரும் ஏழைகளுக்கு நூறோ இருநூறோ “தர்மம்’ வழங்குவது போன்று செய்திகளை வெளியிட்டு சினிமா நாயக நடிகர்களுக்கு வள்ளல் தோற்றம் உருவாக்கப்படுகிறது.
எம்.ஜி.ஆரைப் போல, சினிமாப் பிரபலத்தோடு வெளியே வள்ளல் தோற்றமும், வலுவான ரசிகர் மன்றமும் உருவாக்கி விட்டால் அரசியலில் குதித்து மாநில முதலமைச்சர் பதவியையே பிடித்துவிட முடியும் என்று முன்னணி நடிகர்கள் கனவு காண்கிறார்கள். இப்படிக் கனவு கண்டவர்கள் வரிசையில் சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி.ராஜேந்திரன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்றவர்கள் ஏற்கனவே மண்ணைக் கவ்விய அனுபவம் உண்டு. பாக்கியராஜும், சத்தியராஜும் எம்.ஜி.யாரைப் போல வேஷங்கட்டிக் கொண்டு ’டூப்ளிகேட் எம்.ஜி.ஆராக’த் திரை தோன்றினாலே போதும் அவரைப் போல வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பினார்கள். கடைசியில் கோமாளிகளைப் போல முடிந்து போனார்கள்.
இருந்தபோதும், மிதமிஞ்சிய கறுப்புப் பணமும் புகழும் சேர்த்துவிட்ட மிதப்பில் திளைக்கும் முன்னணி நடிகர்களின் அடுத்த குறியாகப் பதவி ஆசை தொற்றிக் கொள்கிறது. வெறும் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட மசாலாப் படங்களில் இருந்து சற்று விலகி ’சூப்பர் ஸ்டார்’ தகுதிக்கான எம்.ஜி.ஆர் பாணி படங்களைத் திரும்பத் திரும்ப எடுக்கிறார்கள். ஆபாசக் கூத்துக்கள், பெண்களைக் கவரும் ”செண்டிமெண்டு”களோடு அநீதியை எதிர்த்துப் போராடும் ஹீரோ சூரத்தனங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக, எம்.ஜி.ஆரின் ரசிகர்களான முதிர்ப் பாட்டிகளைக் கவருவதற்காகப் பொறுக்கிகளின் தலைவனாக – போலீசு அதிகாரியாக இருந்தால் கூட கிரிமினல் பொறுக்கிக்குரிய பண்புகளுடன் – சினிமாவில் வேடங்கட்டிக் கொள்கிறார்கள்.
பிறகு சினிமாவுக்கு நெருக்கமான செய்தி ஊடகம் மூலமாக தனது அரசியல் ஆசையை வதந்தி போலப் பரவ விடுகிறார்கள் செய்தியாளர்களின் கேள்விக்கு மழுப்பலாகப் பதில் சொல்கிறார்கள். ஆனால், சினிமாவில் ஏழை எளிய மக்களுக்காக வீரவசனம் பேசும்போது அரசியல் நெடி வீசச் செய்கிறார்கள். அப்புறம் போட்டி நடிகர்களுக்கு எதிராக அனல் பறக்கும் சவால் விடுகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த், ஜெயலலிதாவை மறைமுகமாகத் தாக்குகிறார்; கேலி கிண்டல் செய்கிறார்; குத்திக் காட்டுகிறார். ஜெயலலிதாவைப் போன்ற அகம்பாவம் பிடித்த வில்லிப் பாத்திரத்தைப் படைக்கிறார். விஜயகாந்த் ரஜினிகாந்துக்கு சவால் விடுகிறார். ரஜினியைக் குறிவைத்து நக்கலான கருத்து தெரிவிக்கிறார்.
அரசியலுக்கு வருவார்களா இல்லையா என்ற ஊக நிலையிலேயே வைத்திருப்பதும் கூட சில காரணங்களுக்காகத் தான். நாயக நடிகனின் படத்தைப் பார்க்கும் ரசிகனுக்குக் கூட மனதில் இருத்தி நினைவில் வைத்துக் கொள்ளும் விஷயம் எதுவும் சினிமாவில் இல்லை. அரசியல்வாதியோ, சினிமாக்காரனோ தொடர்ந்து செய்தி ஊடகத்தில் ஏதாவது ஒரு வகையில் பெயர் அடிபட்டுக் கொண்டே இருக்கவேண்டும். அப்படித் தான் இவர்கள் மக்கள் மனதிலும் ரசிகர் மனதிலும் பதிக்கிறார்கள். தனது அரசியல் நுழைவை ஒரு நெகிழ்வான நிலையிலேயே நடிகர் வைத்திருப்பதும் அவனுக்கு ஆதாயம் தான்.
மேலும் ”துணிந்து” அரசியலில் குதித்து விட்டால் நாயக நடிகனது செல்வாக்கு இவ்வளவுதான் என்று தெரிந்துவிடும். அப்படி எதுவும் நடந்து விட்டால் உள்ளதும் போச்சு நிலையில் அரசியலில் இருந்து துரத்தப்படுவதோடு சினிமாவுக்கும் திரும்ப முடியாது. இதற்குத்தான் அரசியல் நுழைவைக் குறித்துத் திட்டவட்டமாகப் பேசமறுக்கின்றனர். நீரில் இறங்காமல் கானல் நீரிலேயே நீச்சல் கற்றுக் கொள்ளக் கனவு காண்கிறார்கள் இந்தச் சூரப்புலிகள்.
இன்னொன்று. தனது உண்மையான செல்வாக்கு இதுதான் என்று தெரிந்து விட்டால், அரசியல் நுழைவு என்ற பூச்சாண்டி காட்டியே அதிகாரத்திலுள்ளவர்களிடம் பேரங்கள் பேசி, ஆதாயம் அடையமுடியாது.
“இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்று ரஜினி காலங்கடத்திக் கொண்டிருக்கக் கூடாது. இரண்டு திராவிடக் கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டன. ஏற்கெனவே உள்ள தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைமையும் மக்களை ஈர்க்கக் கூடியவையாக இல்லை. எனவே, முற்றிலும் ஒரு புதிய தலைமையாக மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ரஜினி அவர் உடனடியாக அரசியலில் குதிக்கவேண்டும்” என்று பசிதம்பரம், ஆர்.எம்.வீரப்பன் போன்ற அரசியல் அனாதைகளும், சினிமாக்காரர்களும் அழைக்கிறார்கள்.
ஜெயலலிதாவை தமிழக மக்கள் ஒதுக்கிவிடும் பட்சத்தில், மாற்று ஏற்பாடாக ரஜினியை வைத்துத் தமது சாதி நலன்களைக் காத்துக் கொள்ளலாம் என்று ”சோ” முதலிய பார்ப்பனச் சாணக்கியர்கள் அவரிடம் ஒதிக் கொண்டே இருக்கிறார்கள். ரஜினி ஒரு தேசியவாதி என்பதால் காங்கிரசும், அவர் ஒரு ஆன்மீகவாதி என்பதால் பா.ஜ.க.வும் தத்தம் பக்கம் இழுப்பதற்கு முயன்றுவருகிறார்கள். 1996 தேர்தலுக்குப் பிறகு தான் ”வாய்ஸ்” கொடுத்தால் மக்கள் அப்படியே கவிழ்ந்து விடுவார்கள் என்று நம்பினார். 2001 தேர்தலில் ரஜினி கொடுத்த வாய்ஸ்” செல்லாக் காசாகிப் போனபிறகு அரசியலில் குதிப்பது குறித்து ஊசலாட்டமாகவே இருக்கிறார்.
2000-ஆம் ஆண்டில் வெளிவந்த “சிம்மாசனம்” படத்தைத் தொடர்ந்து அரசியல் வாடை அதிகமாக வீகம் காட்சிகளையும், வசனங்களையும் அடுத்தடுத்த படங்களில் விஜயகாந்த் புகுத்தி வருகிறார் .”அரசியலுக்கு வர்றதுன்னா நேரடியா வருவேன். சிலபேர் மாதிரி இப்ப அப்பன்னு இழுத்துக்கிட்டு இருக்க மாட்டேன்.” என்று நரசிம்மா படத்தில் வசனம் பேசுகிறார்.
அடுத்து வந்த ”ராஜ்ஜியம்” படத்தில், புதிதாக உருவாக்கப்பட்ட கறுப்பு, சிகப்பு, மஞ்சள் கொடியைத் துக்கிக் கொண்டு எல்லா ஊர்களிலும் பெரும் கும்பலோடு ஊர்வலங்கள் நடத்திக் காட்டுகிறார். அதற்கடுத்து, ”ரமணா”வில் ஊழலை எதிர்த்துத் தலைமறைவு இயக்கம் கட்டி, குற்றவாளிகளைத் தண்டிக்கிறார். கடைசியாக வந்த ”தென்னவ”னில் தேர்தல் தில்லுமுல்லுகளை ஒழிக்க முயன்று முதல்வர் பதவியைப் பிடிக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வருகிறார். இதெல்லாம் அரசியலில் குதிப்பதற்கான தயாரிப்புக்களாகவே உள்ளன.
இப்படி அரசியல் நுழைவு பற்றிய தனது நிலையை ஊகமாகவும், வதந்தியாகவும், கிசுகிசுவாகவும் வைத்திருப்பதே மக்களை மதியாது அவமானப் படுத்துவதாகும். அரசியலில் நுழைவது என்றால் தமது கொள்கை, இலட்சியத்தை பகிரங்கமாக அறிவித்துச் செயல்படுவதுதான் நேர்மையானதும் மக்களுக்குப் பொறுப்பானதும் ஆகும். ஆனால், இவர்களது வசனம், பாடல், நடிப்பிலிருந்து மக்களாகவே இவர்களின் கொள்கை –இலட்சியங்களை பொறுக்கி எடுத்துத் தெரிந்து கொள்ளும் படி விட்டுவிடுகிறார்கள். கொள்கை விளக்கமளிக்கும் பொறுப்பை ரசிகர் மன்றத் தலைவர்களிடம் விட்டுவிடுகிறார்கள்.
வழக்குரைஞர், மருத்துவர், பொறியியலாளர் என்று மற்றபிற தொழில் செய்பவர்கள் அரசியலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ளும்போது சினிமாக்காரர்கள் மட்டும் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்க் கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு கணிசமானகாலம் அரசியல் அனுபவத்தோடு பதவிக்கு வருகிறார்கள். ஆனால், நாயக நடிகர்களோ சினிமாவில் இருந்து ஒய்வு பெறும்வரை அதன் சொகுசுகளை அனுபவித்துவிட்டு, சினிமாவில் இருந்து ஒய்வு பெறும்போது திடீரென்று அரசியலில் குதித்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள மக்கள் மீதுள்ள கரிசனையென்று நடிக்கிறார்கள். தாங்கள் அரசியலில் குதிக்கும் நாள்வரை மக்களைப் பாதிக்கும் எந்த ஒரு பிரச்சினைக்காகவும் போராடுவதை விடுங்கள் – குரல்கொடுப்பதும் கிடையாது.
மக்கள் மிகவும் கரிசனப்படுவதாக நடிக்கும் இந்த ’அரசியல்’ நடிகர்கள் எல்லாம் பிற்போக்கு, சமூக விரோத, ஜனநாயக விரோத, பாசிஸ்டுகளாகவே இருக்கிறார்கள். பொதுவான மனிதாபிமான, தேசப்பற்று – தீவிரவாத எதிர்ப்பு – அதேசமயம் வன்முறை வெறியாட்டத்துக்கு ஆதரவு, அரசியலற்றவாதம் போலீசு அதிகார வர்க்கத்துக்கு வக்காலத்து வாங்குவது போன்றவைதான் அரசியல் நடிகர்களின் கண்ணோட்டமாக இருக்கிறது.
எந்தத் தொழில் செய்பவருக்கும் சொந்த அரசியல் கண்ணோட்டம் வைத்துக் கொள்ளவும், அரசியலில் ஈடுபடுவதற்கும் உரிமை உண்டு என்றாலும், ஏற்கெனவே எம்.ஜி.ஆர். ஜெயலலிதா போன்ற சேடிச (பிறர் துன்பத்தைப் பார்த்து இன்பங்காணும் குணம்) வக்கிர, பாசிச ஆட்சியாளர்களின் கொடுர ஆட்சியை அனுபவித்துள்ள போதும், மீண்டும் அவர்களின் மறுஅவதாரங்களையும் தமிழக மக்கள் அதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டுமா?
Protesters attend a demonstration against the Trans-Pacific Partnership (TPP) on the beach near the hotel where the TPP meeting is being held in Lahaina, Maui, Hawaii July 29, 2015. The protesters tried to break a world record by having more than two hundred people blow conch shells at once. REUTERS/Marco Garcia - RTX1MCTU
அமெரிக்காவின் காலனியாகிறது இந்தியா !- பாகம் 2
‘உயிர்காக்கும் மருந்துகளைத் தடுக்கும் மோடி அரசு’ எனும் சென்ற கட்டுரையில் ‘இந்திய உள்நாட்டு கம்பெனிகள் மலிவுவிலை பதிலீட்டு மருந்துகளைத் தயாரிப்பதற்கு இனி கட்டாய உரிமம் வழங்கப்பட மாட்டாது’ என பா.ஜ.க மோடி கும்பல் அமெரிக்காவிற்கு தன்னிச்சையாக உறுதிமொழி வழங்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருப்பீர்கள்.
இந்த உறுதிமொழியின் வாயிலாக புற்றுநோய், எய்ட்ஸ், காசநோய் போன்ற கொடிய நோய்களுக்கு எதிரான இன்றியமையாத மருந்துகள் மக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதத்தில் 30-03-2016 அன்று வெளிவந்த செய்தி மோடி அரசின் மற்றுமொரு சதித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.
இந்திய மக்களின் ஆரோக்கியத்தை அமெரிக்காவிடம் அடகு வைத்திருக்கும் மோடி அரசு
இந்தியாவில் மலிவுவிலை மருந்துகளைத் தயாரிப்பதற்கான கட்டாய உரிமத்தை நிறுத்துவதற்காக, இந்திய காப்புரிமைக் கழகத்தின் அதிகாரிகளுக்கு, அமெரிக்க-காப்புரிமை-மற்றும்-வணிகமுத்திரை-அலுவலகம் (United States Patent and Trademark Office) பயிற்சி வழங்கியிருப்பதை எல்லைகள்-அற்ற-மருத்துவர்கள் (Doctors without Borders-Medicines Sans Frontieres-MSF) அமைப்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறது.
இந்திய அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்க-இந்திய வர்த்தகப் பேரவை (USIBC-United States India Business Council) பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளின் நிதி ஆதாரத்தோடு செயல்படுபவை என்று MSF அமைப்பு தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட USIBC- அமைப்பு இந்தியாவிற்கு பயிற்சி அளிப்பது குறித்த தகவலை மேலும் அறிந்து கொள்வதற்காக இந்திய காப்புரிமைக் கழக ஜெனரல் ஓ.பி. குப்தாவை வலைவீசி தேடியும் கிடைக்கவில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
அதிகாரியும் மக்கள் மன்றத்தில் பதில் சொல்லவில்லை; அம்பத்தாறு இஞ்சு அரசன் மோடியும் பதில் சொல்லவில்லை. அப்படியானால் இவர்களின் மெளனத்தின் பின்னணி தான் என்ன? அமெரிக்காவின் நலன்களுக்கு ஏற்ப அறிவுசார் சொத்துடைமைச் சட்டத்தை (Intellectual Property Rights) பகிரங்கமாக மக்கள் மீது ஏவத்துடிக்கும் தீவிரமான மறுகாலனியாதிக்க காலத்தில் உயிர்காக்கும் மருந்துகளின் மீதான இவ்வளவு பெரிய சதித்தனம் ஏன் சத்தமேயின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது?
இதை விளக்குவதற்கு எல்லைகளகற்ற மருத்துவர்கள் கூட்டமைப்பின் தெற்காசிய தலைவர் லீனா மெங்கானேய், ‘ஏன் இந்தியா கொஞ்சமாவது முதுகெலும்பை காட்ட வேண்டிய தேவையிருக்கிறது?’ எனும் தலைப்பில் விளக்கியவற்றை சற்று கவனத்தில் கொள்வோம்.
பொதுசுகாதாரம், மருந்துகள் மக்களுக்கு கிடைக்கப்பெறுதல் (Accessibility of Medicines) மற்றும் அறிவுசார் சொத்து ஆகியவற்றில் இந்தியா தன் இறையாண்மையை இழந்தால் மருந்தின் வீரியத்திற்கு கட்டுப்படாத எலும்புருக்கி நோய் (Drug-Resisted Tuberculosis), எய்ட்ஸ், பூஞ்சைத்தொற்று நோய்கள் மற்றும் தொடுதலினால் பரவாத நோய்களான புற்றுநோய், சீறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு, சர்க்கரை நோய், கண்புரை, அல்சைமர் ஆகியவற்றை எதிர்த்து இந்தியா இனிமேல் போராட முடியாது என்கிறார் லீனா. இதற்கு எடுத்துக்காட்டாக இந்திய பொதுசுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கடந்த பத்தாண்டுகளில் முதன்முதலாக டி.பி நோய்க்கான பெடாகுயிலைன் எனும் புதிய மருந்தை பெறுவதிலும் மக்களுக்கு வழங்குவதிலும் நெருக்கடிகளை சந்தித்துவருவதாக தெரிவிக்கிறார். மேற்படி இந்த டி.பி. மருந்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் கம்பெனி காப்புரிமை பெற்று வைத்திருக்கிறது. இதனால் இந்தியாவில் டி.பி. எதிர்ப்பு திட்டம் முடங்கும் நிலைக்கு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி இந்தியா, மருந்துகளின் மீதான தன் உரிமையையும் இறையாண்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்கிறார். பன்னாட்டு மருத்துவக் கம்பெனிகள் மருந்துகளுக்கு ஏகபோகஉரிமை (Monopoly) மற்றும் விலக்குரிமை (Exclusivit) கோருவதை இந்தியா தடுக்க வேண்டும் என்கிறார்.
லீனா மெங்கானேய் சொல்வதைப் போன்று இந்தியா தன் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? முதலாளித்துவ அறிவுஜீவிகளிடம் முதலில் இந்தக் கேள்வியை முன்வைப்போம். ஏனெனில் இவர்கள் தான் உலக வர்த்தக கழகத்தின் காட் (GATT-General Agreement on Trade and Tariff) மற்றும் காட்ஸ் (General Agreement on Trade and Servicies) ஒப்பந்தத்தையும் ஆரத்தழுவி வளர்ச்சி என்றும் வாய்ப்பு என்றும் வாய்பந்தல் போட்டவர்கள்! இவர்களின் ஆராய்ச்சியின் படி உலக வர்த்தக கழகத்தின் உறுப்பு நாடாக இருக்கும் இந்தியா, 2001 தோகா சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதன் மூலமாக TRIPS ஒப்பந்த விதிகளை ஏற்றுக்கொண்ட நாடாக இருக்கிறது. இந்த TRIPS ஒப்பந்த விதியைக் காட்டி, பதிலீட்டு மருந்துகளை தயாரிக்கும் பொருட்டு இந்தியா, உலகவர்த்தகக் கழகத்தில் இன்னேரம் அமெரிக்காவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம் என்கிறார்கள்.
டி.பி.பி ஒப்பந்தத்தில் சேர்ந்துள்ள பசிபிக் பெருங்கடல் பகுதியைச் சேர்ந்த 12 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள்
ஒருவேளை இந்தியா, அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் பசிபிக்கடல் கடந்த நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தில் (TPP-Trans Pacific Partnership) கையெழுத்திட்டிருந்தால் அமெரிக்கா இந்தியாவின் மீது திணித்திருக்கிற தாக்குதலை உலகவர்த்தகக் கழகத்தாலோ, காட்டு மற்றும் காட்ஸ் ஒப்பந்த விதிகளாலோ தடுத்து நிறுத்த முடியாது! அமெரிக்கா இனிமேல் இதற்கு அடிபணியாது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
அதாவது உலகவர்த்தகக் கழகம், காட்டு, காட்ஸ் ஒப்பந்தகளின் சகாப்தம் மறுகாலனியாக்கத்தால் தீவிரமாக்கப்பட்டு TPP-யால் காலாவதியாகப் போகின்றன. முதலாளிகள் சொல்கிற இருநாடுகள் (Bilateral) மற்றும் பலநாடுகளுக்கிடையேயான (Multi-lateral) தடையற்ற வாணிப சுதந்திர ஒப்பந்தம் (Free Trade Agreement) எனும் சுரண்டல் முறைக்குப் பதிலாக அமெரிக்க மேல்நிலை வல்லரசின் கீழ் பலநாடுகள் நேரடியாக சுரண்டப்படுவதற்கான மறுகாலனியாதிக்கத்தின் தீவிர நிலை அமலுக்கு வருகிறது.
இதில் உலகின் 40% பொருளாதாரத்தை அமெரிக்கா நிரந்தரமாக சுரண்டுவதற்கான திட்டம்தான் TPP. இத்திட்டத்தின் கீழ் பசிபிக்கடல்-கடந்த (Trans Pacific) பதினோரு நாடுகளின் (ஆஸ்திரேலியா, புரூனை, கனடா, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்சிகோ, நியுசிலாந்து, பெரு, சிங்கப்பூர், வியட்நாம்) பொருளாதாரம் அமெரிக்காவின் கீழ் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறது. பசிபிக்கடல் கடந்த நாடுகளைப்போலவே ஐரோப்பிய ஒன்றியத்தை சுற்றிவளைக்க TPPயின் அதே சரத்துகள், Transatlantic trade and investment partnership (TTIP) எனும் ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதாவது உலகை மேல்நிலை வல்லரசான அமெரிக்கா தனது நேரடி பங்கீட்டிற்கு தயார் செய்கிறது.
TPPயில் பங்கேற்கும் நாடுகள், இந்த ஒப்பந்த சரத்துகள் குறித்து தன் நாட்டு பாராளுமன்றத்திலோ, பத்திரிக்கைகளிலோ வேறு எங்கும் விவாதிக்கக் கூடாது எனச் சொல்கிறது இந்த ஒப்பந்தம். கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாக நடைபெற்று வந்த இந்த ஒப்பந்த சரத்துகள் குறித்த பேச்சுவார்த்தை விக்கிலீக்ஸ் மூலமாக கடந்தவருடம் (2015) அக்டோபர் மாதம் அம்பலப்படுத்தப்பட்டது. மேலும் கடந்த பிப்ரவரி 4 2016-ல் TPP ஒப்பந்தம் பதினோறு நாடுகளால் கையெழுத்தாகியிருக்கிறது.
கையெழுத்தான நாடுகளிலேயே டி.பி.பி ஒப்பந்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை. டி.பி.பி.யின் சரத்துகள், மக்களை வெகுண்டு எழ வைக்கும் என்பதால் தான் காதோடு காது வைத்து பேசுகின்றனர். ஆனால் இந்தியா டி.பி.பி.யில் கையெழுத்திட்டதா இல்லையா என்று நமக்கு தெரியவில்லை. ஆனால் டி.பி.பி.யின் சரத்துகள் பதிலீட்டு மருந்துகள், அறிவுசார் காப்புரிமை சட்டங்கள் விசயத்தில் மோடி கும்பலின் ரகசிய வாக்குறுதியால் அமல்படுத்தப்பட்டிருப்பதன் மூலம் இந்தியா அமெரிக்காவின் டி.பி.பி ஒப்பந்தக் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருப்பது தெரியவந்திருக்கிறது!
இது ஒருபுறமிருக்க அமெரிக்கா கொண்டுவந்திருக்கும் டி.பி.பி.யில் இந்தியா சேர்ந்தாலும் சேராவிட்டாலும் பிரளயமான பேரழிவை இந்தியா சந்திக்க நேரிடும் என்பதை வரவு-செலவு ஆய்வை வைத்துக்கொண்டே தேசபக்தி ஆர்.எஸ்.எஸ் மோடி கும்பலின் கூச்சலையும் கள்ள மவுனத்தையும் ஒருசேர உடைத்துப் பார்க்க உதவுகிறார் மலேசிய பேராசிரியர் பிரதிஸ் குமார் சாகு.
இவரது கட்டுரையின்படி டி.பி.பி உறுப்பு நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் மொத்த வணிக மதிப்பு 2014-ன் படி 152 பில்லியன் டாலர்களாகும். இதில் ஏற்றுமதி 78 பில்லியன் டாலர்களாகவும் இறக்குமதி 74 பில்லியன் டாலர்களாகவும் இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் வணிக உபரி ஆண்டொன்றுக்கு 4 பில்லியன் டாலர்களாக இருக்கிறது. ஒரு வேளை இந்தியா டி.பி.பி ஒப்பந்ததத்தில் கையெழுத்திடாவிட்டால் இந்த நாடுகளுடனான 190 மில்லியன் டாலர்களுக்கான ஏற்றுமதி வர்த்தகத்தை இந்தியா இழக்க நேரிடும். அதிகபட்சமாக அமெரிக்க சந்தையில் 94 மில்லியன் டாலர் இழைப்பையும், மலேசிய சந்தையில் 36 மில்லியன் இழைப்பையும் சந்திக்க நேரிடும். குறிப்பாக ஐவுளித்துறை, கரிம வேதியியல் பொருட்கள், இரும்பு கனிம வளங்கள், வாகனம், புகையிலைப் பொருட்கள், காலணிகள், பாதுகாப்பு கையுறைகளுக்கான இந்திய ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்படும்.
அமெரிக்க சந்தையில் மட்டும் இந்தியா ஆண்டொன்றுக்கு ஐவுளித்துறையில் 56 மில்லியன் டாலர் இழப்பையும், கரிம வேதியியல் பொருட்களுக்கான சந்தையில் 5.5 மில்லியன் டாலர் இழப்பையும் இயந்திர உபகரணங்கள் ஏற்றுமதியில் 5 மில்லியன் டாலர் இழைப்பையும் சந்திக்கும். இது இந்தியா அமெரிக்கா கொண்டுவரும் டி.பி.பி ஒப்பந்தத்தில் சேராவிட்டால் ஏற்படும் பொருளாதர நுகத்தடியாகும்.
இந்தியா ஒருவேளை டி.பி.பி ஒப்பந்தத்தில் சேர்ந்தால் டிபிபி உறுப்பு நாடுகளுடன் செய்யும் ஏற்றுமதி வர்த்தகம் ஆண்டொன்றுக்கு 5.3 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும். ஆனால் இறக்குமதி வர்த்தகமோ ஆண்டொன்றுக்கு ஏற்றுமதியை விட 10.4 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும். அதாவது இந்தியா டி.பி.பி.யில் கையெழுத்திட்டால் நிகர வர்த்தகப் பற்றாக்குறையாக 5.1 பில்லியன் டாலரை ஆண்டொன்றுக்கு சந்தித்து மேற்கொண்டு கடனாளியாக வேண்டும். அமெரிக்க மட்டுமில்லாது ஜப்பான், சிங்கப்பூர், மலேசியாவுடனும் இந்தியா மிகப்பெரும் வர்த்தகப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.
டி.பி.பி கூட்டம் நடந்த ஹவாயில் அதற்கு எதிரான போராட்டம்
அமெரிக்க மேல்நிலை வல்லரசு ஒரு நாட்டின் மீது செலுத்தும் நுகத்தடியை இந்த கணக்கு துல்லியமாகக் காட்டுகிறது. இந்தியா இதிலிருந்து தப்புவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்றால் இல்லையென்றே உதட்டை பிதுக்குகின்றனர். ஏனெனில் முதலாளிகளே மெச்சிக்கொள்கிற அனைத்து வணிக ஒப்பந்தங்களையும் அமெரிக்காவின் டி.பி.பி ஒப்பந்தம் நடைமுறையில் இரத்து செய்வதால் இந்தியா அமெரிக்காவின் காலனியாக இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதைத்தாண்டி டி.பி.பி.யின் சரத்துகளுக்குள் உள்ளே போனால் அது ஏற்படுத்தப் போகும் அழிவுகள் எத்தகையது என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.
டி.பி.பி.யின் அபாயங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல. அமெரிக்க மக்களுக்கும் சேர்த்துதான். நாடு என்பதன் பெயரில் அமெரிக்க பெருமுதலாளிவர்க்கம் தான் மேல்நிலைவல்லரசாக ஆளும் வர்க்கமாக இருக்கின்றனர். சுரண்டப்படுவதில் அமெரிக்க பாட்டாளிக்கும் இந்திய பாட்டாளிக்கும் வேறுபாடு இல்லையென்ற வகையில் நோயாளியின் இரத்தம் மற்றும் மயிரில் உள்ள புரதப்பொருள் கூட பன்னாட்டு மருத்துவ கம்பெனிகளின் காப்புரிமைக்குள் வந்துவிடுகிறது. ஒரு நாட்டின் தாவர விலங்கின வகைகளும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களுக்குள் வந்துவிடுகிறது. குறிப்பாக டி.பி.பி ஒப்பந்த சரத்துகள் பாரிஸ் சுற்றுப்புறச் சூழல் மாநாட்டு ஒப்பந்தத்தை கேலிக்கூத்தாக்கி முதலாளிகள் என்றால் இனி அமெரிக்க முதலாளிகள் மட்டுமே என்றளவிற்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றன. அமெரிக்கா இந்தியா சூரிய ஒளி தகடுகள் தயாரிப்பதை காட்ஸ் ஒப்பந்தத்தை வைத்தே எளிதில் முறியடித்துவிட்டது என்றால் டி.பி.பி.யின் அறிவுசார் சொத்துரிமை, வணிக மற்றும் பதிப்புரிமை குறித்த சரத்துகள் முன்வைக்கும் தீர்மானங்கள் கொண்டுவரும் இழப்புகள் கற்பனைக்கு எட்டாதவை.
இவை உருவாக்கப் போகும் பேரழிவுகள் தெரிந்துதான் இந்திய காப்புரிமை கழக தலைமை அதிகாரி ஓ.பி குப்தா மாயமாகிப்போனார்; மோடி கும்பல் அமைதி காக்கிறது. அமெரிக்க வர்த்தகப் பேரவைக்கு யாருக்கும் தெரியாமல் ரகசிய வாக்குறுதி கொடுக்கிறது. இந்திய ஊடகங்கள் இதுகுறித்து வாயசைக்க மறுக்கின்றன. மாறாக விராட் கோலி, தோனியின் தாடி மயிர் குறித்து அங்கலாய்க்கின்றன.
நம் நாட்டு மக்களும் தான் எதிர்நோக்கும் தாக்குதல் என்ன வகையிலானவை என்ற விழிப்புணர்வின்றி இருத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒன்று குடி அல்லது கிரிக்கெட் பார் அல்லது பாரத் மாதா கி ஜே சொல்லு என்று மக்களின் தண்ணுணர்வும் காயடிக்கப்பட்டு வண்புணர்வு செய்யப்பட்ட நிலையில் இந்திய மக்கள் இருத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் உலகப்பொருளாதாரத்தை வாரிச்சுருட்டி மூன்றாம் உலக நாடுகளை காலனியாக்கும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் டி.பி.பி பகற்கொள்ளை நம் வீட்டு வாசற்படியை முட்டிக்கொண்டு முகத்திற்கு நேராக நின்று கொண்டிருக்கிறது!
மக்கள் வாழ்வாதாரத்தை காவு வாங்கும் கொலைகார ராம்கி நிறுவனத்தை விரட்டியடிப்போம்!
விருதுநகர் மாவட்டம் அ.முக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் நெல், கடலை, வெள்ளரி, துவரை, தட்டங்காய் செடி, காய்கறிகள் என முப்போகமும் விளையும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட விவசாயங்கள்.
2006-ம் ஆண்டு அ.முக்குளம் அருகில் “ராம்கி ஆற்றல் மற்றும் சுற்றுச் சூழல்” என்கிற பெயரில் மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை தொடங்கப்பட்டு. இதன் பாதிப்பை உணரத் தொடங்கிய மக்கள் ராம்கி ஆலையால் பாதிப்பு என முறையிட்டும், கிராமப் பஞ்சாயத்திற்கு வரி செலுத்தவில்லை எனவும் முறையிட்டனர். அதன் அடிப்படையில் 26-06-2013-ல் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 04-07-2013-ல் ராம்கி நிறுவனத்தால் விவசாயம் மற்றும் மக்களுக்கு அபாயம் என சீல் வைக்கப்பட்டது. ஆனால், சட்டத்தின் ஓட்டையினுள் புகுந்து ஆலை மீண்டும் இயங்கத் தொடங்கியது.
அதன்பிறகு மருத்துவக் கழிவுகளை எரிப்பதனால் வெளிப்படக் கூடிய “பையாக்ஸின்” “பியூரான்” வாயுக்களால் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, சுவாசக் கோளாறு, கால்நடைகள் சாவு, விவசாய மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது.
100-க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்தும் அதிகார வர்க்கம் செவிசாய்க்கவில்லை. தீர்வு கிடைக்காமல் துவண்டு போன மக்கள் அதன் பிறகு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தொடர்பு கிடைத்து போராடத் துவங்கினர்.
இதன்படி 03-04-2016 அன்று அ.முக்குளம் கிராமத்தின் கொலைகார ராம்கி நிறுவனத்தை மூடுமாறு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் துவங்கியதும் சசிக்குமாரின் கவிதை வரிகளை முக்குளத்தின் அருண்குமார் எழுச்சிகரமாக வாசித்து போராட்டம் துவங்கியது.
அதன் பிறகு அ.முக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அன்பு வீரா தனது கண்டன உரையில் ராம்கி நிறுவனத்தால் விவசாயம் பாதிக்கப்படுவதையும், கழிவுகள் உருவாக்கத்தில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருப்பதையும் குறிப்பிட்டு, புதிதாகத் தொடங்கியுள்ள ராம்கியின் “தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மென்ட்” நிறுவனம் ஏகாதிபத்திய அமெரிக்காவின் மின்னணுக் கழிவுகளை விவசாய பூமியின் புதைக்கும் திட்டத்தை அம்பலப்படுத்தினார்.
போபால் விஷவாயுக் கழிவுகளை அகற்றும் பணியை ஜபல்பூர் உயர்நீதிமன்றம் ரூ 117 கோடிக்கும், ஆண்டு பராமரிப்பிற்கு ரூ 15 இலட்சமும் என ராம்கி நிறுவனத்திடம் அந்தப் பணியைக் கொடுத்ததன் அபாயங்களை அம்பலப்படுத்தியதோடு, பிரேசில் நாட்டு ஒப்பந்தத்தை மீறி “நாட் நியூஸ் குட்ஸ்” என்ற பெயரில் உலக நாடுகளின் கழிவுகள் முதலாளிகளின் சந்தைக்காக இங்கு அனுப்பப்படுவதையும், வெளிநாட்டுக் கழிவுகளைக் கொட்ட தகுதியான நாடாகவே நமது நாட்டை ஓட்டுப் பொறுக்கிகள் வைத்துள்ளனர். ஆதலால், ஓட்டுப் போட்டு ராம்கியை விரட்ட இயலாது. ஆளும் அருகதை இழந்த இந்த அரசுக் கட்டமைப்பிற்கே பூட்டு போட்டு மக்கள் அதிகாரத்தை தங்கள் கையில் எடுப்பதே தீர்வு என்பதை உணர்த்தும் விதமாகப் பேசினார்.
அ.முக்குளத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் முருகேஸ்வரி கண்டன முழக்கங்கள் எழுப்பினார்.
இறுதியாக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வாஞ்சிநாதன் எழுச்சிகரமான விண்ணதிரும் முழக்கங்களை எழுப்பி கண்டன உரையைத் துவங்கினார்.
அ.முக்குளம் கிராமப் பஞ்சாயத்தில் இதுவரையில் முறையாக அனுமதி வாங்கவில்லை. விதியை மீறி 12 போர்கள் ராம்கி நிறுவனத்தில் போடப்பட்டுள்ளதையும், விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்பையும் விளக்கியதோடு, ராம்கி நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர் ராம்கியின் லாபத்திற்காகவே என்பதை அம்பலப்படுத்தினார்.
திருச்சுழியில் அதிகாரிகள் அனைத்து கிராம மக்கள் மற்றும் ராம்கி நிறுவன அதிகாரிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய போது 194 பேர் கலந்து கொண்ட முன்னர் நடந்த கூட்டத்தை 350 பேர் நிறுவனத்திற்கு ஆதரவு என்ற மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ராம்கி நிறுவனத்திற்கு ஆதரவாக அறிக்கை கொடுத்ததையும் அரசும், அதிகாரிகளும் மக்களுக்கானவர் அல்ல அவர்கள் ராம்கியின் கையாட்கள் என்பதை எடுத்துரைத்தார்.
12 கிராமங்கள் ராம்கி நிறுவனத்தை இழுத்து மூடுமாறு தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் செவிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததையும், அரசியல் சட்டம் சரத்து 21-ன்படி மக்களின் வாழ்வுரிமையை பறிக்கும் உரிமை அரசுக்குக் கிடையாது என்பதை மக்களுக்கு விளக்கினார்.
மேலும் திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை அருகில் இதேபோன்று ஆலையில் இரண்டு ஆடு இறந்ததற்காக அந்த நிறுவனம் மூடப்பட்டதையும், ஆனால் இங்கு 100-க்கு மேற்பட்ட மக்கள் இறந்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை ராம்கி நிறுவனத்தின் கைக்கூலிகள்தான் என அம்பலப்படுத்தினார்.
மருத்துவக் கழிவு ஆலையை மூடாமல் 200 ஏக்கர் பரப்பளவில் எலக்ட்ரானிக் கழிவுகளை கொட்டும் புதிய நிறுவனத்திற்கு அரசே ஆதரவாக இருந்து மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிப்பதோடு, அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், நீதிமன்றமும் முக்கூட்டு களவாணிகளாக மாறி மக்களுக்கு எதிராக செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.
இதற்கெல்லாம் ஓட்டுப் போடுவதால் தீர்வு இல்லை. அரசுக் கட்டமைப்பிற்கு எதிராக “மக்கள் போராட்டம்தான் தீர்வு” என்பதை விளக்கியதோடு அடுத்த கட்ட போராட்டத்தையும் அறிவித்தார்.
இப்படியான புரட்சிகர அரசியலை அறிந்திராத அந்தப் பகுதி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் புதிய நம்பிக்கை பெற்று கொலைகார ராம்கியை விரட்டியடிக்க அடுத்தகட்ட போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.
இறுதியாக அ.முக்குளத்தைச் சேர்ந்த அன்பு வீரா நன்றியுரை கூறினார்.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
வெல்லட்டும் ! வெல்லட்டும் !
கொலைகார ராம்கிக்கு
எதிரான போராட்டம் வெல்லட்டும் ! வெல்லட்டும் !
ஊடகங்களின் செல்வாக்கு என்ன ? கருத்துக் கணிப்பு பாகம் 2
எஸ்.ஆர்.எம் பல்கலை நிறுவனம் மாபெரும் வருமானத்தை தரும் பெரு உற்பத்தியாக மாறிய போது பாரிவேந்தர் பச்சமுத்து மகிழ்ச்சியடைந்தாலும் ஒரு வருத்தம் அவருக்கு இருக்கவே செய்தது. எவர் வீட்டு பணமோ இவ்வளவு இருக்கும் போது எங்களுக்கு எவ்வளவு என்று பெரும் கட்சிகள் மட்டுமல்ல, முகவரியே இல்லாத அனாமதேயக் கட்சிகள் கூட அன்னாரை சந்தித்து மாமுல் வாங்கி வந்தனர். தனது தொழிலுக்கு இது பாதுகாப்புதான் என்றாலும் இதற்கு முடிவே இல்லையா என்று யோசித்த வேந்தருக்கு உதித்த யோசனைதான் கட்சி ஆரம்பிப்பது!
அப்படி “இந்திய ஜனநாயகக் கட்சி” ஆரம்பித்து கூடவே புதிய தலைமுறை பத்திரிகை, தொலைக்காட்சி, புது யுகம் என்று அம்பானி போல ஆட்சியை விரிவுபடுத்தினார் பாரிவேந்தர். எழுத்தாளர்களுக்கு விருது, திரை நட்சத்திரங்களுக்கு பாராட்டு – கவனிப்பு என்று தொழில் சுத்தமாக போன பிறகு தனது கல்வித் தொழிலை இந்திய அளவில் கொண்டு போக பா.ஜ.கவுடன் நெருங்கினார். மோடி கூட்டத்திற்கு மட்டுமல்ல, தேர்தலுக்கே ஸ்பான்சர் அளித்தார். அதில் முக்கியமானது தொலைக்காட்சி மூலம் பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவாளர்களான அற்பங்கள் பலரை விவாத வித்வான்களாக்கி அரசியல் என்றாலே அது பா.ஜ.க பார்ப்பது போலத்தான் என்று மாற்றினார்கள்.
அதே போல அ.தி.மு.க – ஜெயலலிதாவை அண்டிப் பிழைக்கும் தமிழ் ஊடக வழக்கப்படி மழை வெள்ளத்தின் போது கூட அரசை கண்டிக்காமல் மயிலிறகு வருடலை வாசித்தார்கள். புதிய தலைமுறை மாலனோ ஜெயா கட்சி கூட்டத்தில் நடக்கும் குத்தாட்டங்களைப் போல அம்மாவுக்கு தாளம் போட்டார். இருப்பினும் பொதுவில் புதிய தலைமுறை தொலைக்காட்சி என்றாலே நடுநிலைமை என்றொரு மூட நம்பிக்கை இங்கே நிலவுகிறது. அதன் செல்வாக்கு என்ன என்பதற்கு இந்தக் கேள்வியை முன்வைத்தோம்.
மொத்தம் 29 சதம் மக்கள் அதை ஏதோ ஒரு கட்சி சார்பு என்றே குறிப்பிட்டிருக்கின்றனர். 18 சதமானோர் எந்தக கட்சி சார்பு என்று தெரியாது என்றும், 52,8 % பேர்கள் கட்சி சார்பற்றது என்றும் தெரிவித்திருக்கின்றனர். ஆக சரிபாதிப்பேர்கள் மட்டும் புதிய தலைமுறையை கட்சி சார்பற்றது என்று குறிப்பிடுவது அந்த தொலைக்காட்சியின் பெயர் பெரிதும் ரிப்பேராகி வருவதையே காட்டுகிறது. கட்சி சார்பு என்று குறிப்பிட்டவர்களில் கிட்டத்தட்ட 13 சதம் பேர்கள் பாரிவேந்தரின் ஐ.ஜே.கே என்றும், 8%பேர்கள் அ.தி.மு.க என்றும், 4.5 % பேர்கள் பா.ஜ.க என்றும் குறிப்பிட்டிருப்பதும் முக்கியமானது. பார்வையாளர்கள் முட்டாள்கள் இல்லை என்பது இந்த கேள்வியில் தெரிய வருகிறது. இதே கேள்வி மட்டும் புதிய தலைமுறை ஆரம்பித்த முதல் வருடத்தில் கேட்டிருந்தால் கட்சி சார்பற்றது என்பதே அதிகம் வந்திருக்கும். தற்போது அது மாறி வருகிறது.
மெரினாவில் இரண்டு இளைஞர்கள் தங்களை எஸ்.ஆர்.எம் ஊழியர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு இந்தக் கேள்விக்கு எங்களிடமே கேட்கிறீர்களே என்று சிரித்தனர். எது சரி என்று கருதுகிறீர்களோ அதை டிக் செய்யுங்கள் என்றதும் சிரித்துக் கொண்டே ஐ.ஜே.கேவிற்கு போட்டனர். கடைசிக் கேள்விக்கும் நம்ப முடியாது என்ற பதிலை அளித்தனர். ஒருவர் தன்னை ஏதோ ஒரு தொலைக்காட்சி செய்திப் பிரிவில் பணியாற்றுபவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஏறக்குறைய இதே பதில்களை அளித்தார். ஆக அங்கே வேலைபார்ப்பவர்களுக்கே புதிய தலைமுறை நடுநிலைமையானதில்லை என்பதை பொதுவெளியில் ஒத்துக் கொள்ளுகிறார்கள்.
புதிய தலைமுறை தொலைக்காட்சி எந்தக் கட்சி சார்பானது?
அ.தி.மு.க 8.0%
பா.ஜ.க 4.6%
தி.மு.க 3.7%
பச்சமுத்துவின் ஐ.ஜே.கே 12.7%
கட்சி சார்பற்றது, 52.8%
தெரியாது 18.2%
_____________________________________
தேர்தல்களில் வாக்களிப்பதை மக்கள் எப்படி தீர்மானிக்கிறார்கள் என்பது பொதுவில் தெரிந்த ஒன்றுதான். அந்தந்த காலப் பிரச்சினைகள், கட்சி சார்பு, தலைவர் மதிப்பு, ஊடகங்களின் கருத்துருவாக்கம் அனைத்தும் சேர்ந்தே தீர்மானிக்கின்றன. எனினும் அதைக் குறிப்பிட்டு கேட்கும் போது 80% பேர்கள் நானே தீர்மானிப்பான் என்றார்கள். பதில்களில்இதைத்தான் டிக் செய்வார்கள் என்றாலும் அதன் சதவீதம் எவ்வளவு இருக்கும் என்பதை அறிய விரும்பினோம். அதே நேரம் குடும்பம் தீர்மானிக்கும் என்பதை 6%பேர்களும் அதில் பெண்கள் கணிசமானோர், தலைவர்கள் என்று 6%பேர்களும் கூறியிருந்தனர். ஆக இந்த செல்வாக்கில் ஊடகங்களின் பங்கு வெறும் 1.7% என்பது முக்கியமானது. மக்கள் கருத்தை அவர்களே மட்டும் தீர்மானிக்கவில்லை என்பது உண்மையானாலும் ஊடகங்களை விட தலைவர்கள் மூன்று மடங்கு அதிகமாக மக்களை பாதித்திருக்கின்றனர் என்றால் ஊடகங்களின் செல்வாக்கு குறித்து ஒரு மதிப்பீட்டுக்கு வரலாம். எதுவுமில்லை என்று 5.8 சதமானோர் கூறியிருப்பது அவர்களுக்கு வாக்களிப்பில் ஆர்வமில்லை என்பதைக் காட்டுகிறது.
உங்கள் ஓட்டு எந்தக் கட்சிக்கு என்பதை யார் தீர்மானிப்பார்கள் ?
நான் 80.1 %
குடும்பம் 6%
தலைவர்கள் 6.3%
ஊடகங்கள் 1.7%
எதுவுமில்லை 5.8%
_____________________________________
எந்த சர்வேயிலும் ஜால்ரா என்ற ‘பண்பாடற்ற’ வார்த்தை இடம் பெறவே பெறாது. ஆயினும் ஜால்ரா அடிப்பதில் தமிழக பத்திரிகைகள் சாதனை படைப்பதால் வேண்டுமென்றே இந்த வார்த்தையை வைத்தோம். மேலும் இதைப் பார்த்து யாராவது கோபத்துடன் ஏன் ஜால்ரா என்று போட்டீர்கள், நீங்கள் தி.மு.கவா என்று கேட்பார்கள், அவர்கள் எத்தனை பேர் என்று பதியவும் விரும்பினோம். இறுதியல் இரண்டு அ.தி.மு.க பொறுப்பில் உள்ளவர்களைத் தாண்டி 1001 பேர்கள் ஏன் என்று கேட்கவில்ல மட்டுமல்ல, டக்கென்று டிக் செய்யவும் செய்தார்கள்.
ஜால்ரா அடிப்பதில் பல பத்திரிகைகள் இருந்தாலும் தினமணி, தினத்தந்தி, குமுதம், தமிழ் இந்து போன்ற நான்கு ஜால்ராக்களைத்தான் குறிப்பிட்டிருந்தோம். 15% மக்கள் தெரியாது என்று கூறியதைப் பார்த்தால் அவர்கள் இந்த பத்திரிகைகளை படிப்பதில்லை, அறிவதில்லை என்றும் சொல்லலாம். 41% மக்கள் எதுவுமில்லை என்று கூறியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் தினமலர், சோ, கல்கி வகையறாக்களை குறிப்பிட்டார்கள். எனினும் இந்த 42% போக பாதிக்கும் மேற்பட்ட மக்கள் ஊடக ஜால்ராவை ஒரு உண்மையாக அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சர்குலேஷன் குறைவினால் குமுதம் 3%, தமிழ் இந்து 2.7% என்று இருந்தாலும் இவர்கள் மற்ற பத்திரிகைகளை விட ஜால்ராவில் குறையுள்ளவர்கள் என்பதல்ல. அதே நேரம் சர்குலேஷன் குறைவாக இருந்தாலும் தினமணி கிட்டத்தட்ட 12% பெற்றதைப் பார்த்தால் வைத்தி மாமவின் அம்மா சஷ்டிக் கவசப் புராணம் வீண் போகவில்லை எனலாம். ஒரு சதவீத மக்கள் அனைத்து பத்தரிகைகளும் ஜால்ராக்கள்தான் என்கின்றனர். இறுதியாக தினத்தந்தி மட்டும் 24% அதாவது கால்பங்கு பெற்று முதலிடத்தில் உயர்ந்து நிற்கிறது.
ஆக தமிழ் நாளிதழ்களில் மட்டுமல்ல அம்மா ஜால்ராவிலும் அதுவே நம்பர் ஒன்!
அ.தி.மு.க-விற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிக்கை எது ?
தினமணி 11.9%
தினத்தந்தி 24.2%
குமுதம் 3.1%
தமிழ் இந்து 2.7%
எதுவுமில்லை 40.9%
தெரியாது 16.3%
அனைவரும் 0.9%
_____________________________________
இந்தக் கேள்வி சர்வேயில் இடம்பெறவில்லை. மாறாக ஆனந்த விகடனில் எதைப் படிப்பீர்கள் என்ற அடுத்த கேள்வியை தவிர்த்தோர் மற்றும் பதிலளித்தோர் எவ்வளவு என்பதை அறியவே இதை தொகுத்திருக்கிறோம். தவிர்த்தவர்களை ஏன் என்று கேட்ட போது அவர்கள் ஒரு முறை கூட விகடனை வாங்கியவர்கள் இல்லை என்று தெரிந்தது. கிட்டத்தட்ட இவர்களுக்கு விகடன் என்ற பத்திரிகையே தெரியாது எனலாம். பதிலளித்தோர் பலரும் கூட ஏதோ ஒரு முறை அல்லது சில முறை படிப்பவர்களே அதிகம். இறுதியில் 60% பேர் விகடனை அறியாதவர்கள் என்றும், 40% பேர்கள் அறிந்தவர்கள் என்று வருகிறது. பாரம்பரிய பத்திரிகையின் வீச்சு கிட்டத்தட்ட பாதிப்பேருக்கு மட்டும் போயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
ஆனந்த விகடன் குறித்த கேள்வியைத் தவிர்த்தோர், பதிலளித்தோர்
பதிலளித்தோர் 39.9%
தவிர்த்தோர் 60.1%
_____________________________________
6% பேர்கள் விகடனில் படங்களை விரும்பி பார்க்கிறார்கள் என்பதோடு சினிமாவும், சாப்பாடு – மருத்துவ செய்திகளும் கிட்டத்தட்ட சம அளவில் 34%பேர்கள் விரும்புகிறார்கள். முந்தைய காலத்தில் இந்தப் படிப்பு விருப்பம் என்பது தீனி செய்திகளை விட சினிமா அதிகம் இருந்திருக்கும். தற்போதைய நுகர்வு கலாச்சார பரவலுக்கேற்ப தீனியும் சினிமாவோடு போட்டி போடுகிறது. மொத்தத்தில் அரசியல் செய்தி கால் பங்குதான் என்பதால் இனி விகடன் குழுமம் தனது மொத்த பத்திரிகைகளையும் டைம்பாஸ் போல மாற்றிவிட்டால் போதும்!
விகடனில் விரும்பிப் படிப்பது
சினிமா 34.2%
படங்கள் 6%
உணவு / மருத்துவம் 33.9%
அரசியல் 25.9%
_____________________________________
அடுத்தது முக்கியமான கேள்வி. தேர்தல் சூட்டில் முக்கிய இடத்தை வகிக்கும் ஊடகங்களின் கருத்துக் கணிப்புகளை கிட்டத்தட்ட 70% மக்கள் நம்பமாட்டேன் என்கிறார்கள். 30% பேர்கள் மட்டுமே நம்புகிறார்கள். இது உண்மையென்றால் கருத்துக் கணிப்புகளின் யோக்கியதையையும் நாம் அறியலாம். வினவு குழு கருத்துக் கணிப்பு எடுக்கும் போதே கணிசமானோர் நீங்கள் எந்த டி.வி, உங்கள் பொருளாதார நோக்கம் என்ன, நீங்களே டிக் செய்து கொண்டு பொய்யாகத்தானே போடுவீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள்.
பல மாணவர்கள், இளைஞர்கள் கனிவாக,”ஏண்ணா இப்படி வெயிலில் அலைகிறீர்கள்? நீங்களே டிக் செய்து கொடுக்கலாமல்லவா?” என்று அன்பாகவும் கேட்டார்கள். சர்வேக்களுக்கு தொண்டர்கள் சப்ளை செய்யும் ஒருவரோ நாம் பரஸ்பரம் தொடர்புபடுத்திக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தலாம் என்றார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? தமிழக ஊடகங்கள் எடுக்கும் சர்வேக்களை அவர்களது செய்தியாளர்கள் எடுக்கும் பட்சத்தில் அது அவர்களே பாதிக்குமேல் டிக் அடிப்பதாக இருக்கும். இதை பல்வேறு ஊர்ப்பகுதிகளில் உள்ள செய்தியாளர்கள் கூறியிருக்கிறார்கள். அடுத்து தொழில்முறை கம்பெனிகள் என்னதான் தரத்தையும், சோதனையும் செய்தாலும் அங்கும் இந்த அவர்களே டிக் செய்வது கணிசமாக இருக்கும். இதற்கு மேல் எடிட்டரின் மேசையில் அந்த புள்ளிவிவரங்கள் வெட்டி சேர்க்கப்பட்டு மாறும். இப்படித்தான் சென்ற பாராளுமன்ற தேர்தலில் வைகோ அவர்கள் விருதுநகரில் வெல்வார் என சர்வே ரிசல்ட் வந்தது. ஆகவே கருத்துக் கணிப்புகள் யார், எங்கே, எப்போது எடுக்கிறார்கள், ஈடுபடுபவர்கள் யார், அவர்களது ஊதியம் என்ன என்று பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளோடு தொடர்புடையது. இதைத்தாண்டி ஊடகங்களின் கட்சி சார்பு தனி.
ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்பை நம்புவீர்களா?
நம்புவேன் 30.9%
நம்பமாட்டேன் 69.1%
_____________________________________
முந்தைய கேள்வியோடு தொடர்புடைய கேள்வி இது. ஊடகங்கள் எடுக்கும் கருத்துக் கணிப்பிற்கு காரணம் உண்மை நிலவரத்தை வாசகர்களுக்கு அறியத் தருவது என்பதை 28% பேர்கள் மட்டுமே நம்புகிறார்கள். இது கிட்டத்தட்ட மேற்கண்ட கேள்வியின் நம்புவேன் என்ற 31%-த்தோடு ஒத்துப் போகிறது. 18% பேர்கள் கட்சி சார்புதான் காரணம் என்று கூறியிருப்பது தமிழக ஊடகங்களை செருப்பால் அடித்ததற்கு சமம். 11%பேர்கள் அரசு விளம்பரம் என்றும் 43%பேர்கள் பரபரப்பு விற்பனைக்கு என்றும் கூறியிருக்கிறார்கள். பரபரப்பு விற்பனை கூட வாசகரை உணர்ச்சிகரமாக உசுப்பி விட்டு பணத்தை சுரண்டுவதுதான்.
ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்பிற்கு காரணம்
கட்சி சார்பு 18.0%
அரசு விளம்பரம் 10.9%
பரபரப்பு விற்பனை 42.8%
உண்மை நிலவரம் 28.3%
_____________________________________
நமது கருத்துக் கணிப்பில் இதுவும் ஒரு முக்கியமான கேள்வி. தமிழக ஊடகங்களில் கணிசமானவை இன்று முதலாளிகளுக்கு சொந்தம். விரைவில் அம்பானியின் தொலைக்காட்சி தமிழில் வர இருக்கும் நிலையில் மக்கள் என்ன கருதுகிறார்கள்?
முதலாளிகள் தொலைக்காட்சி நடத்தினால் நேர்மையாக இருக்காது என்று 84% மக்கள் உறுதியாக தெரிவித்திருக்கிறார்கள். 13%பேர்கள் நேர்மையாக இருக்கும் என்று தெரிவித்தார்கள். அவர்களிடம் கேட்ட போது, உழைப்பினால் உயர்ந்த அம்பானி போன்ற முதலாளிகள் டி.வி நடத்தினால் உண்மையாக இருக்கும் என்றார்கள். எனினும் ஊடகங்களின் சார்புத்தன்மை, நம்பகத்தன்மை போன்றவற்றை ஒரு முதலாளி எப்படி காலி செய்ய முடியும் என்பதை பெரும்பான்மை மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியது. ஆக பச்சமுத்துவின் புதிய தலைமுறை, வைகுண்டராஜனின் நியூஸ் 7, அம்பானியின் புதிய டி.வி அனைத்தும் நேர்மையாக இருக்காது என்பதே தமிழக மக்களின் தீர்ப்பு!
அம்பானி, பச்சமுத்து, வைகுண்டராஜன் போன்ற முதலாளிகள் ஊடகங்களை நடத்தினால் நேர்மையாக இருக்குமா?
இருக்கும் 12.7%
இருக்காது 84.2%
தெரியாது 3.1%
_____________________________________
இறுதியாக கேட்கப்பட்ட இந்தக் கேள்வியில் ஒரு விசயம் இருக்கிறது. வேண்டுமென்றே கட்சி சார்பான டி.விக்களை மட்டும் இதில் இடம் பெறவைத்தோம். அதில் மக்கள் எதை நம்புகிறார்கள், நம்பவில்லை என்பதை அறிவது நமது விருப்பம்.
45% மக்கள் எதையும் நம்பவில்லை என்றதோடு ஏன் மற்ற தொலைக்காட்சிகளை போடவில்லை என்று சிலர் கோபத்தோடு கேட்கவும் செய்தார்கள். சன் டிவி பொதுவாக இருந்தாலும் அது தி.மு.க சார்பாகவே இருப்பதும் மக்களுக்குத் தெரியும். இருப்பினும் தமிழ் மக்களை சன் தொலைக்காட்சி ஆரம்பத்திலிருந்தே மசாலா தொடர்கள் – நிகழ்ச்சிகள் மூலம் நெருக்கமாக வைத்திருப்பதால் கிட்டத்தட்ட 40% மக்கள் அதை நம்புவதாக தெரிவித்தார்கள். சன் மற்றும் கலைஞர் டிவியின் கூட்டுத்தொகையோடு ஒப்பிடும் போது ஜெயா டி.வி 7.5% பெற்றிருப்பது குறைவுதான். ஆனால் கேப்டன் டி.வி 4.7 பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சன், ஜெயா, கலைஞர் போன்ற தொலைக்காட்சிகள் வணிக நோக்கில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதால் பொதுவான மக்களே அவற்றை பார்ப்பதுண்டு. அப்படி எதுவுமில்லாமலேயே ஐந்து சதவீதம் பேர் கேப்டன் டீ.வியை நம்புவது ஆச்சரியமானதுதான். ஒருவேளை சமீப காலமாக ஜெயா எதிர்ப்பு நிகழ்ச்சிகள், மக்கள் கருத்துக்களை மற்ற தொலைக்காட்சிகளை விட கேப்டன் டி.வி காட்டியது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.
கீழ்க்கண்ட தொலைக்காட்சிகளில் எதை ஓரளவு நம்பலாம்?
சன் டிவி 39.5%
கலைஞர் டிவி 2.9%
ஜெயா டிவி 7.5%
கேப்டன் டிவி 4.7%
எதுவுமில்லை 45.3%
_____________________________________
கருத்துக் கணிப்புகள் அனைத்தும் கருத்துத் திணிப்புகள்தான் என்றால் அது மிகையல்ல. அ.தி.மு.க அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதை குறிப்பிடும் தி இந்து நாளிதழ் அதற்கான இணைய சர்வே கேள்வி பதிலை எப்படி வைத்திருக்கிறது?
இது ஜெயலலிதாவின் அ) தன்னம்பிக்கை ஆ) சரியான வியூகம் இ) அதீத நம்பிக்கை.
கவனியுங்கள் மூன்று பதில்களுமே நேர்மறையான முடிவோடு தொடர்புடையவை. தன்னம்பிக்கை என்பது ஜெயாவின் உறுதியான பண்பையும், சரியான வியூகம் என்பது ஜெயாவின் சாணக்கிய அறிவையும், அதீத நம்பிக்கை என்பது ஒரு வீரனின் கடும் இலட்சிய உறுதியையும் குறிப்பதோடு தொடர்புடையவை.
அனைத்து தொகுதிகளிலும் ஜெயா போட்டியிடுவது அ) சர்வாதிகார போக்கு ஆ) தவறான வியூகம் இ) பணத்தின் மேல் நம்பிக்கை என்றும் இருக்கலாம் அல்லவா?
புதிய தலைமுறை எடுத்த சர்வேயில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது? என்ற கேள்வியை எடுத்துக் கொள்வோம். முதலில் சட்டம் ஒழுங்கு என்று மக்கள் எதைக் கருதுகிறார்கள்? தடியடி, துப்பாக்கி சூடு, போராட்டத்தை ஒடுக்குவது, சிறைக்கு அனுப்புவது இவற்றைக் கூட நடுத்தர வர்க்க மக்கள் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்குரிய சாட்சியாகவே கருதுகிறார்கள். ஜெயா ஆட்சியில் ஊர்வலங்களே நடக்காது, போராட்டம் இல்லாமல் அமைதியாக இருக்கும் என்று கருத வைப்பதின் மூலம் என்ன உண்மை தெரிய வரும்?
அல்லது அந்தக் கேள்வியையே மக்கள் போராட்டத்தை எந்தக் கட்சியின் ஆட்சி கடுமையாக ஒடுக்கும்? என்று கேட்கலாம் அல்லவா?
ஆகவே ஊடகங்கள் செய்திகளை தெரிவிப்பதிலிருந்து, கருத்து – கண்ணோட்டங்களை வெளியிடுவது வரை அவை யாருக்கு சார்பாக இருக்கும் என்பதை மறைக்க முடியாது. வினவு நடத்திய இந்த பிரம்மாண்டமான கருத்துக்கணிப்பும் அதைத்தான் நிறுவுகிறது.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆசிரியர்கள், தமது மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை கண்டித்து துணைவேந்தர் அலுவலகம்
ஜே.என்.யு. மாணவர் போராட்டம்: பார்ப்பன பாசிசத்துக்குப் பதிலடி!
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் இப்படியொரு பதிலடி கிடைக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் எதிர்பார்க்கவில்லை. நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், சர்வதேசப் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், அறிவுத்துறையினர், பத்திரிகையாளர்கள் ஆகியோரில் தொடங்கி எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைவரிடமிருந்தும் சீறி வரும் கண்டனங்களால் தனிமைப்பட்டிருக்கிறது மோடி அரசு.
ஜே.என்.யு. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏ.பி.வி.பி. சங்கத்தின் நிர்வாகிகளே மோடி அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து வெளியேறியிருக்கின்றனர். தனது நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு பா.ஜ.க.-வினர் மேற்கொள்ளும் முயற்சிகள், அவர்களுக்கே புதிய சிக்கல்களை உருவாக்கி, உடும்பு வேண்டாம், கையை விடு” என்ற நிலைக்கு அவர்களைத் தள்ளியிருக்கின்றன.
ஜே.என்.யு. மாணவர் போராட்டம்: பார்ப்பன பாசிச கொழுப்புக்கு செருப்படி!
மோடி என்ற பாசிசக் கோமாளியின் மீது பந்தயம் கட்டியது முட்டாள்தனமோ?” என்று ஆளும் வர்க்கமே சிந்திக்கும் அளவுக்கு இந்த ஆட்சி சந்தி சிரித்துவிட்டது. மதவெறி அரசியல் மூலம் வாக்குகளைப் பெற முடியாது என்பதால், சப் கா சாத், சப் கா விகாஸ்” (அனைவருடனும் முன்னேற்றம், அனைவருக்குமான முன்னேற்றம்) என்றெல்லாம் மோசடி செய்து மக்களை நம்ப வைத்த மோடி மஸ்தானால் வாக்களித்த எதையும் வரவழைக்க முடியவில்லை.
பொருளாதாரம், வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட அனைத்திலும் தோல்வி. மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்டு அப் இந்தியா என்று புதுப்புது படங்களுக்குப் பூசை போடப்படுகிறதேயொழிய, ஒரு படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஒற்றைச்சாளர முறை, நான் தான் அனைத்தையும் முடிவு செய்வேன்” என்பன போன்ற சவடால்களால், இந்த அரசுக் கட்டமைவுக்கு அப்பாற்பட்ட மாபெரும் சக்தி போலத் தன்னைக் காட்டிக் கொண்ட மோடியை நம்பிய பன்னாட்டு, இந்நாட்டு பெரு முதலாளிகள் ஏமாந்து விட்டார்கள்.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆசிரியர்கள், தமது மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்டுள்ள அரசு பயங்கரவாதத்தை கண்டித்து துணைவேந்தர் அலுவலகம்
முதலாளிகளின் நிலை இதுவென்றால், மக்களைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அப்பட்டமான மக்கள் விரோதக் கொள்கைகளால் குறுகிய காலத்தில் எல்லாத் தரப்பு மக்களின் வெறுப்பையும் ஈட்டியிருக்கிறார் திருவாளர் மோடி. நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை” என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள். சுவச் பாரத், யோகாசனம், மன் கி பாத்” போன்ற சுயவிளம்பர கேலிக்கூத்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் பல்லிளிக்கின்றன.
தான் 56 அங்குல மார்பு கொண்ட ஆண்மகன் என்றும் மன்மோகன் சிங்கிடம் வாலாட்டுவதைப் போல பாகிஸ்தான் தன்னிடம் வாலாட்ட முடியாதென்றும் தேர்தல் பிரச்சாரத்தில் வெறியூட்டிய மோடி, நவாஸ் ஷெரிபைச் சந்தித்து விருந்துண்டு திரும்பிய சூட்டில், பதான்கோட்டில் தாக்குதல் நடக்கிறது. 56 அங்குல மோடி பிரதமரான பின்னர்தான் பாக். இராணுவம் 52 முறை எல்லை தாண்டி வந்திருக்கிறது” என்று மோடியைக் கேலி செய்கிறது ஆம் ஆத்மி கட்சி. எதிரில் இருப்பவர்கள் பேச மாட்டார்கள் என்ற உத்திரவாதம் இருக்கும் மேடைகளிலெல்லாம் பொளந்து கட்டும் மோடி, பத்திரிகையாளர்களையும் நாடாளுமன்றத்தையும் கண்டு நடுங்குகிறார்.
மொத்தத்தில், பொருத்தமான இயக்குநர் மட்டும் இருந்தால், மோடியைக் கதாநாயகனாக வைத்து சாப்ளினின் கிரேட் டிக்டேட்டர்” படத்தையொத்த ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும்.
…
ஜே.என்.யு. மாணவர்கள் மீதான தாக்குதலையும், அதில் சங்கப் பரிவாரத்தினர் காட்டும் வெறித்தனத்தையும் கண்டு, மோடி அரசு மிகவும் வலிமையான நிலையில் இருந்து கொண்டு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருதிவிடக் கூடாது. கல்வி நிறுவனங்கள் முதல் அரசு நிறுவனங்கள் வரையிலான அனைத்தையும் இந்துத்துவமயமாக்குவதும் சமூகத்தைப் பிளவுபடுத்துவதும்தான் மோடி அரசின் நோக்கம் என்ற போதிலும், தங்கள் தோல்வியை மறைக்கும் பொருட்டும், பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் பொருட்டும், மென்மேலும் இத்தகைய நடவடிக்கைகளைச் சார்ந்திருக்கும் நிலைக்கு பாரதிய ஜனதா தள்ளப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் காணத்தவறக் கூடாது.
கண்ணைய்யா குமாரை விடுதலை செய்யக் கோரி 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் திரண்டு டெல்லியில் நடத்திய பேரணீ
உ.பி.-யில் நாடாளுமன்ற நாற்காலிகளை வெல்வதற்கு லவ் ஜிகாத்” என்ற முஸ்லிம் எதிர்ப்புப் பொய்ப் பிரச்சாரத்தையும், முசாஃபர்நகர் கலவரத்தையும் பயன்படுத்தினர். லவ் ஜிகாத் என்பதே சங்கப் பரிவாரம் திட்டமிட்டு நடத்திய நாடகம் என்பது பின்னர் அம்பலமானது. மாட்டுக் கறியை வைத்து தூண்டப்பட்ட மதவெறி பல முஸ்லிம்களின் உயிரைக் காவு கொண்டது. பின்னர் அக்லக் வீட்டில் இருந்தது ஆட்டுக்கறிதான் என்று அம்பலமானது. இந்து என்ற துருப்புச்சீட்டு செல்லாது என பிகார் தேர்தல் காட்டியது.
அரசியல் சார்பற்றவர்கள் என்று கருதப்படும் இலக்கியவாதிகள், அறிவுத்துறையினர், அறிவியலாளர்கள் என சுமார் 400- க்கும் மேற்பட்டவர்கள் தமது விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர். சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன. உள்நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் சிரிப்பாய்ச் சிரித்துத் தனிமைப்பட்ட பின்னரும், தங்களது நடவடிக்கைகளை சங்கப் பரிவாரத்தினர் நிறுத்திக் கொள்ளவில்லை. காரணம் அவர்களது பார்ப்பன வெறி என்பது மட்டுமல்ல, அரசியல்ரீதியில் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்களுக்கு வேறு வழி இல்லை.
அறிவியலுக்குப் புறம்பான மூட நம்பிக்கை களையும், மதவெறி, சாதிவெறி, தேசவெறி பிடித்த கருத்துக்களையும் ஆரோக்கியமான விவாதத்தின் மூலம் மற்றவர்களை ஏற்கச் செய்வது என்பது அவர்களுக்குச் சாத்தியமில்லை. அதனால்தான் வரலாற்று ஆய்வு மையம், பாடத்திட்டக் குழு, திரைப்படக் கல்லூரி, உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமது ஆட்களைத் திணிக்கிறார்கள். இந்துத்துவ பாசிசத்தைக் கேள்விக்குள்ளாக்கும் நபர்களை வெளியேற்றுகிறார்கள், தாக்குகிறார்கள், கொலை செய்கிறார்கள். தபோல்கர் முதல் வெமுலா வரையிலானோரின் படுகொலைகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவையே.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார்
துணை தலைவர் ஷெஹ்லா ரஷித்
பொதுச் செயலாளர் ராம நாகா
உமர் காலித்
ஆனந்த் பிரகாஷ் நாராயணன்
அபராஜிதா
அஷுடோஷ் குமார் யாதவ்
அநிர்பன் பட்டாச்சார்யா
ஐ.ஐ.டி. சென்னையில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். ஐ.ஐ.டி. சென்னை என்பது ஒரு பார்ப்பனக் கோட்டை. இந்துத்துவ சார்பு அமைப்புகள்தான் அங்கே எண்ணிக்கையில் அதிகம். பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதில் மிகச் சிறுபான்மையினர். எனினும், இந்துத்துவத்தையும் மோடி அரசின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தி அவர்கள் நடத்திய கூட்டங்களைப் பார்ப்பனக் கும்பலால் கருத்துரீதியாக எதிர்கொண்டு முறியடிக்க இயலவில்லை. காரணம், கருத்துரீதியாக அவர்கள் தரப்பில் நியாயம் இல்லை. அவ்வாறு கருத்துப் போராட்டம் நடத்தும் ஜனநாயக வழி முறையில் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை. எனவேதான் ஸ்மிருதி இரானிக்கு மொட்டைக் கடிதம் போட்டு நடவடிக்கை எடுக்க வைத்தார்கள்.
மற்றவர்களுக்குக் கல்வியை மறுத்ததன் மூலம் தமது அறிவின் மேன்மையை நிலைநாட்டிக் கொண்ட பார்ப்பனர்கள்” என்று இந்தியாவைப் பற்றிய ஆய்வில் குறிப்பிடுவார் கார்ல் மார்க்ஸ். அது ஐ.ஐ.டி. பார்ப்பனர்களுக்கும் பொருந்தும். மற்றவர்கள் பேச அனுமதிக்கப்படாத, எதிர்க்கேள்விகள் எழுப்பப்படாத மேடைகளில் சண்டப்பிரசண்டம் செய்யும் மோடிக்கும் பொருந்தும்.
ரோகித் வெமுலா விசயத்தில் நடந்ததென்ன? சென்னை ஐ.ஐ.டி.-யைப் போலவே ஐதராபாத் பல்கலைக்கழகமும் பார்ப்பன, ஆதிக்க சாதியினரைப் பெரும்பான்மையாக கொண்ட இடம்தான். முசாஃபர்நகர் பாக்கி ஹை” என்ற ஆவணப்படத்தையோ, யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டிக்கும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் கருத்தையோ பார்ப்பனக் கும்பல் தனது வாதத்திறமை மூலம் எதிர் கொள்ளவில்லை. மாறாக, தமது அதிகாரத்தின் துணை கொண்டு ரோகித் வெமுலாவைக் கொன்றார்கள். தற்போது ஜவகர்லால் நேரு பல் கலைக்கழகத்தில் நடந்து கொண்டிருப்பது இவற்றின் தொடர்ச்சி.
…
ஜே.என்.யு. என்பது 1969-இல் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம். அறிவுத்துறையினரை நிறுவனமயமாக்கும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட மற்ற உயர்கல்வி நிறுவனங்களைப் போன்றதுதான் இதுவும் என்றாலும், மற்ற உயர்கல்வி நிறுவனங்களில் இல்லாத அளவிலான கருத்துச் சுதந்திரமும் விவாத சுதந்திரமும் அங்கே அனுமதிக்கப்பட்டிருப்பதும், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்துமான மாணவர்களைத் திட்டமிட்டே சேர்க்கின்ற ஒரு நிறுவனமாக இருப்பதும் இதன் தனித்தன்மைகள். அது மட்டுமல்ல, மாணவர் சங்கத்தினருக்கு மற்ற பல்கலைக் கழகங்களில் இல்லாத பல உரிமைகளும் நிர்வாகத்தில் பங்கும் உள்ளது.
”நான் விவசாயிகளின் எதிரி இல்லை, நான் தலித் மக்களின் எதிரி இல்லை, நான் கார்ப்பரேட் கையாள் இல்லை” என்று ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டிற்குள் மக்களுக்குத் தன்னிலை விளக்கம் அளிக்கும் நிலைக்கு ஆளான கேடுகெட்ட ஒரு பிரதமரை மக்கள் முதன்முறையாகப் பார்க்கிறார்கள். ”
ஆண்டுதோறும் அங்கே மாணவர் சங்கத் தேர்தல் முறையாக நடக்கிறது என்ற போதிலும், அதில் ஆர்.எஸ்.எஸ். சார்பு ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற முடிந்ததில்லை. பாரதிய ஜனதா தோன்றுவதற்கு முன்னர் டெல்லியில் ஜனசங்கம் செல்வாக்கு செலுத்திய காலத்திலும், வட இந்தியா முழுவதும் இந்து மதவெறிக்கு ஆட்படுத்தப்பட்ட அயோத்தி கலவர காலத்திலும், மத்தியில் வாஜ்பாயி ஆட்சி செலுத்திய காலத்திலும், தற்போது மோடி வெற்றி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும், அதாவது எந்தக் காலத்திலும் காவிக்கோமாளிகள் அங்கே வெற்றி பெற்றதில்லை.
தங்களுடைய மதவெறிக் கருத்துக்களை பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரச்சாரம் செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் இருந்த போதிலும், இந்துத்துவக் கருத்துகள் அங்கே செல்வாக்கு பெற முடிந்ததில்லை. அதேபோல, முஸ்லிம் மாணவர்கள் அங்கே கணிசமாக இருந்தபோதிலும் அவர்கள் இசுலாமிய மாணவர் அமைப்பில் சேருவதில்லை. அறிவியல் கண்ணோட்டமும் ஜனநாயக விழுமியங்களும் செல்வாக்கு செலுத்தும் இடங்களில் ஆர்.எஸ்.எஸ். மட்டுமல்ல, எந்த மதவாத அமைப்பும் காலூன்ற இயலாது என்பதற்கு ஜே.என்.யு. ஒரு எடுத்துக்காட்டு.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டுபிடித்து விட்டனர் என்பதற்கு விநாயகரே சான்று என்று பேசும் அறிவாளியை பிரதமராக வைத்திருக்கும் கட்சி, ரோமில்லா தாபர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களிடம் பயின்ற மாணவர்களைத் தன் பக்கம் எப்படி ஈர்க்க முடியும்? அவசரநிலைக் காலத்தில் இந்திராவை உள்ளே வராதே என்று தடுத்து நிறுத்திய பாரம்பரியம் கொண்ட மாணவர்களை, சீக்கியர் படுகொலையின்போது சீக்கிய மக்களை வளாகத்தினுள் அடைக்கலம் தந்து பாதுகாத்த மாணவர்களை, பாபர் மசூதி இடிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்த மாணவர்களை சங்கப் பரிவாரம் எப்படித் தன் பக்கம் ஈர்க்க முடியும்? முடியாது என்பது பா.ஜ.க.வினருக்கும் தெரியும்.
ஜே.என்.யு.வில் பயின்று வெளியே வருபவர்கள் அதிகார வர்க்கம் முதல் ஊடகங்கள் வரை பல்வேறு இடங்களிலும் பொறுப்புகளிலும் அமர்ந்திருப்பதும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பலால் கட்டோடு வெறுக்கப்படும் மதச் சார்பின்மை, கடவுள் மறுப்பு, கலப்பு பொருளாதாரம், ஜனநாயகம்” என்பன போன்ற கோட்பாடுகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டவர்களாகவும் இருப்பதும், இந்தப் பல்கலைக்கழகம் தலைநகரமான டில்லியிலேயே இருப்பதும் பார்ப்பனப் பாசிசக் கும்பலுக்கு சகிக்க முடியாததாக உள்ளது.
ஆர்.எஸ்.எஸ். இந்து தேசியத்தை மறுத்து நிற்கும் மாணவர்களை வன்மத்தோடு வேட்டையாடும் தாக்குதலில் தளபதியாகச் செயல்படும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மனித வளத்துறை மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி மற்றும் டெல்லி போலீசு ஆணையர் பாஸி.
எனவே, பாபர் மசூதியை இடித்ததைப் போல, ஜே.என்.யு. வை மூடுவது என்பதுதான் அவர்களது நோக்கம். அந்த இலக்கை நோக்கியதுதான் மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதல்.
…
ஜே.என்.யு.வில் சில மாணவர்கள் அப்சல் குருவுக்கு நினைவுநாள் கடைப்பிடித்ததாகவும், அதில் இந்தியாவைத் துண்டு துண்டாக்குவோம், பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதாகவும், இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகள் உள்ளே நடந்ததற்கு வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் சொல்லி சில வீடியோ காட்சிகளை ஜீ டிவி” என்ற ஆங்கிலத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பிறகு அதே வீடியோவை, டைம்ஸ் நௌ’’, நியூஸ் எக்ஸ்” போன்ற ஆங்கிலத் தொலைக்காட்சிகளும் இவர்களைச் சார்ந்த இந்தி தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாகக் காட்டி, ஜே.என்.யு. மாணவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் என்பதைப் போன்றதொரு பொதுக்கருத்தை திட்டமிட்டே உருவாக்கின.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள் பிளாஸ்டிக் சர்ஜரியைக் கண்டுபிடித்து விட்டனர் என்பதற்கு விநாயகரே சான்று என்று பேசும் அறிவாளியை பிரதமராக வைத்திருக்கும் கட்சி, ரோமில்லா தாபர் போன்ற வரலாற்று ஆய்வாளர்களிடம் பயின்ற மாணவர்களைத் தன் பக்கம் எப்படி ஈர்க்க முடியும்?
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜே.என்.யு. மாணவர்களுக்கு டிவிட்டர் மூலமாக லஸ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார். அவர் பேசி முடிப்பதற்குள் அந்த டிவிட்டர் கணக்கே போலியானதென்று அம்பலமானது. இருப்பினும் ஜே.என்.யு. வளாகத்துக்குள் போலீசு நுழைந்தது; விடுதிகளுக்குள் புகுந்து சோதனை போட்டது. குறிப்பிட்ட சில மாணவர்களின் பட்டியலை வைத்துக்கொண்டு அவர்களைத் தேடியது. கன்னையா குமாரைக் கைது செய்தது. கன்னையா குமார் மட்டுமின்றி, டெல்லி பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் கிலானியும் அப்சல் குரு நினைவு நாளை ஒட்டிப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதற்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். அடுத்த சில நாட்களுக்குள்ளேயே ஆர்.எஸ்.எஸ். அரங்கேற்றிய மோசடி நாடகம் அம்பலமாகத் தொடங்கிவிட்டது.
அப்சல் குரு நினைவு நாள் கூட்டம் என்பது தற்போது முதன் முறையாக நடப்பது அல்ல. கடந்த 3 ஆண்டுகளாக ஜே.என்.யு.வில் மட்டுமல்ல, டில்லியிலும் நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் அப்சல் குரு மீது போடப்பட்டது பொய்வழக்கு என்ற குற்றச்சாட்டில் தொடங்கி அந்த தீர்ப்பே அநீதியானது என்பது வரையிலான விமரிசனங்களை இப்போது நாம் விவரிக்கப் போவதில்லை. ஜே.என்.யு.வில் முறையாக அனுமதி பெற்று நடைபெறவிருந்த அப்சல் குரு நினைவு நாள் கூட்டத்திற்கு, ஏ.பி.வி.பி. தூண்டுதலின் பேரில் பல்கலைக்கழக நிர்வாகம் கடைசி நேரத்தில் தடை விதித்தது. தடையைக் கண்டித்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே நடத்தப்பட்ட பேரணியின் மீது ஏ.பி.வி.பி. காலிகள் தாக்குதல் தொடுத்து ஆத்திரமூட்டியிருக்கின்றனர். ஆத்திரமடைந்த காஷ்மீர் மாணவர்கள் எதிர் முழக்கம் எழுப்பியிருக்கின்றனர்.
இதையெல்லாம் ஏ.பி.வி.பி.யினர் முன்கூட்டியே திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதும், ஜீ தொலைக்காட்சியினரையும் அழைத்து வந்து படம் பிடித்திருக்கிறார்கள் என்பதும் பின்னர் தெரியவந்திருக்கிறது. அது மட்டுமல்ல; ஏ.பி.வி.பி. யினரின் ரவுடித்தனத்தைக் கண்டித்து பிப்ரவரி 11-ஆம் தேதியன்று ஜே.என்.யு. மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இவர்கள் படம் பிடித்திருக்கின்றனர். கன்னையா குமாரின் ஆர்ப்பாட்ட வீடியோவில், பாகிஸ்தான் வாழ்க, இந்தியாவைத் துண்டாக்குவோம்” என்பன போன்ற முழக்கங்களை ஒட்ட வைத்து தயாரிக்கப்பட்ட மோசடி வீடியோவைத்தான் ஜீ டிவி, டைம்ஸ் நௌ உள்ளிட்ட தொலைக்காட்சிகள் ஒளிபரப்பியிருக்கின்றன.
இந்த மோசடியை இந்தியா டுடே தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்திய பின்னரும், வெட்கமே இல்லாமல் மோடி அரசு மாணவர்கள் மீதான தனது தாக்குதலை தொடர்ந்தது. நாத்திகரும் இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவருமான உமர் காலித் என்ற மாணவருக்கு ஜெய்ஷ்-இ-முகம்மது” என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும் அவரும் ராம் நாகா, அநிர்பன் போன்ற சில மாணவர்களும் தலைமறைவாகி விட்டதாகவும் வதந்தியைப் பரப்பியது. இவற்றை மறுதலித்து உமர், அநிர்பன் ஆகிய மாணவர்கள் தாமாக முன்வந்து கைதாகினர்.
மோடி அரசின் எல்லாப் பொய்களும் உடனுக்குடன் அம்பலமானது மட்டுமல்ல, வேண்டுமென்றே இந்தப் பொய்களைப் பரப்பி, ஜே.என்.யு. மாணவர்களுக்கெதிரான பொதுக்கருத்தை உருவாக்கிய தொலைக்காட்சி சானல்களும் சேர்ந்து அம்பலமாகின. ஜீ டிவி பத்திரிகையாளர் விசுவ தீபக் இதனை எதிர்த்து அறிக்கை விட்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். இந்து வெறி மோடி அரசுக்கு கைக்கூலி வேலை செய்த அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோரை சக பத்திரிகையாளர்கள் (மரபை மீறி) முதன் முறையாகப் பெயர் சொல்லி அம்பலப்படுத்தினர். நானும் தேசத்துரோகி’’தான் என்று கட்டுரை எழுதினார் பிரபல பத்திரைகையாளர் ராஜ்தீப் சர் தேசாய். மொத்தத்தில் மோடி அரசுடன் சேர்ந்து அதற்குத் துணை போன ஊடகங்களும் அம்மணமாகின.
ஆட்டுக்கறியை மாட்டுக்கறி என்று கூறி தாத்ரியில் அக்லக் என்ற முதியவரைக் கொலை செய்தது போல, லவ் ஜிகாத் என்று பொய் பிரச்சாரம் செய்து உ.பி.யில் கலவரத்தை தூண்டியது போல, மாலேகானில் குண்டு வைத்து விட்டு இசுலாமியர்கள் மீது பழி போட்டதைப் போல, நள்ளிரவில் பாபர் மசூதிக்குள் ராமன் சிலையைத் கொண்டு வந்து வைத்ததைப் போல – ஜே.என்.யு. விவகாரமும் ஒரு திருட்டுத்தனம்தான் என்பது முற்று முழுதாக அம்பலமாகிவிட்டது.
…
ஜே.என்.யு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து மார்ச் 3, 2016 அன்று சென்னை – வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்.
கையும் களவுமாகப் பிடிபட்ட கிரிமினல்களுக்கு வீராவேசமாகப் பேசுவது ஒன்றுதானே தற்காப்பு? நாடாளுமன்றத்தில் சாமியாடினார் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி. அவரது பேச்சின் வீடியோவை வெளியிட்டு, சத்யமேவ ஜெயதே” என்று டிவிட்டரில் அதனைப் பாராட்டியிருந்தார் மோடி. ஆனால், இரானி பேசியவை அனைத்தும் அசத்தியம்” என்பதை ரோகித் வெமுலாவின் தாயார் முதல் இரானி மேற்கோள் காட்டிப் பேசிய அனைவரும் அடுத்த நாளே அம்பலப்படுத்தினர்.
‘ஆதாரபூர்வமாக’ ஜே.என்.யு.வை அம்பலப்படுத்த முயன்ற ராஜஸ்தான் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஞானதேவ், இரவு 8 மணிக்கு மேல் ஜே.என்.யு.-வில் மாணவ, மாணவிகள் நிர்வாண நடனம் ஆடுவதாகவும், 50,000 எலும்புகள், 3,000 ஆணுறைகள், 10,000 சிகரெட் துண்டுகள் அன்றாடம் குப்பையில் வீசப்படுவதாகவும் புள்ளி விவரங்களை வெளியிட்டார். பார்ப்பன பாசிஸ்டுகளின் ‘அறிவுத்திறன்’ கண்டு உலகமே வயிறு வலிக்கச் சிரித்தது.
மொத்தத்தில் ‘புனிதம்’ என்றும் ‘விவாதத்துக்கு அப்பாற்பட்டது’ என்றும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்த அனைத்து விசயங்களையும், புரட்டி எடுப்பதற்கான வாய்ப்பைத் தமது சொந்த நடவடிக்கைகளின் மூலம் அனைவருக்கும் வழங்கியிருக்கிறது பார்ப்பன பாசிசக் கும்பல்.
அரசியல் சட்டம், ஒருமைப்பாடு , தேசபக்தி, நீதிமன்றத் தீர்ப்பு போன்ற விவகாரங்களில் இதுநாள் வரை எச்சரிக்கையாக சட்ட வரம்புக்குள் நின்று பேசிக்கொண்டிருந்த அறிவுத்துறையினரும் இந்துவெறி அரசியலுக்குப் பயந்து அடக்கி வாசித்துக் கொண்டிருந்த எதிர்க்கட்சிகளும் தமது வரம்பைத் தாண்டி வந்து பார்ப்பன பாசிசத்தை விமரிசிக்கின்றனர்.
‘தேசியம்’ என்ற சொல்லுக்குள் இந்து தேசியத்தை ஒளித்து வைத்துக் கொண்டு, மாணவர்களை ‘தேசத் துரோகிகள்’ என்று மிரட்டியது ஆர்.எஸ்.எஸ். எது தேசம், எது தேசத்துரோகம்?”, தேசியத்தை வரை யறுப்பதற்கு நீ யார்? என்று பல கோணங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
மகிஷாசுரனுக்கு நினைவுநாள் கொண்டாடு கிறார்கள் ஜே.என்.யு. மாணவர்கள்” என்ற ஸ்மிருதி இரானியின் குற்றச்சாட்டுக்கு, ஆம், அப்படித்தான் கொண்டாடுவோம். மகிஷாசுரன் மட்டுமல்ல, இராவணனுக்கும் மகாபலிக்கும் கொண்டாடுவோம். இது அசுர மரபு” என்று பல முனைகளிலிருந்து பதிலடி வருகிறது.
முன்னாள் இராணுவ அதிகாரிகளை வைத்து மாணவர்களுக்கு எதிராக தேசபக்தக் கூச்சல் எழுப்புகிறது சங்கப் பரிவாரம். தேசபக்திக்கு ராணுவம்தான் அத்தாரிட்டியா, இந்த நாட்டின் விவசாயி, தொழிலாளி, மாணவர்கள் போன்ற நாங்களெல்லாம் தேசமில்லையா?” என்று திருப்பியடிக்கிறார்கள் மாணவர்கள்.
உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை விமரிசிப்பதும் அரசியல் சட்டத்தை விமரிசிப்பதும் எப்படி தேசத்துரோகமாகும்? ஏன் விமரிசிக்கக் கூடாது?” திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்து நாடாளுமன்றத்திலேயே அண்ணாதுரை பேசவில்லையா?”, காஷ்மீருக்கு விடுதலை என்ற கருத்தை முன்வைப்பது எப்படித் தவறாகும்?” என்பன போன்ற கேள்விகள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் இன்று எழுப்பப்படுகின்றன.
இந்து மதவாத, தேசியப் பூச்சாண்டிகளைத் தாக்கி தகர்ப்பதற்கான வாசலை எதிரிகளே திறந்து விட்டிருக்கின்றனர். தேசியம், ஒருமைப்பாடு, முதலாளித்துவ கருத்து சுதந்திரம், ஜனநாயகம், சுதந்திரமான ஊடகங்கள், சட்டத்தின் ஆட்சி” போன்ற கருத்துகள் அனைத்தையும் பாட்டாளி வர்க்க அரசியல் பார்வையிலிருந்து தெளிவுபடுத்தவும், அம்பலப்படுத்துவதற்குமான வாய்ப்பை எதிரிகளே வழங்கியிருக்கின்றனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான பார்ப்பன பாசிசத்தின் தாக்குதலைக் கண்டித்து நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்களைத் திரட்டிப் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சென்னையில் நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
ஜே.என்.யு. வளாகத்தில் நிலவும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் காரணமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டிருக்கக்கூடிய ஜனநாயக மயக்கத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் கதவைத் தட்டும் பாசிசக் காட்டுமிராண்டிகள் கலைத்து விட்டனர். காஷ்மீர், மணிப்பூர், சட்டிஸ்கரிலிருந்து உங்களைப் பிரித்துப் பாதுகாக்கின்ற சுவர் ஏதும் இல்லை” என்ற உண்மையை பாசிஸ்டுகள் அவர்களுக்கு உணர்த்துகின்றனர்.
ஜே.என்.யு. அராஜகம் நீதிமன்றத்தின் மீதான அறிவுத்துறையினரின் மயக்கத்தையும் கலைத்து விட்டது. நீதிமன்ற வளாகத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும் கன்னையா குமார் தாக்கப்பட்டார். உச்சநீதி மன்ற எச்சரிக்கைக்குப் பின்னரும் மீண்டும் கன்னையா தாக்கப்பட்டார். உச்சநீதி மன்றம் அனுப்பிய மூத்த வழக்கறிஞர் குழு தாக்கப்பட்டது. தாக்கிய ரவுடி வக்கீல்கள் வெற்றி ஊர்வலம் நடத்தினர். நாங்கள்தான் தாக்கினோம்” என்று வீடியோவில் பேட்டி கொடுத்தனர். இவ்வழக்கு விசாரிக்கப்படும்போது உச்சநீதி மன்றத்துக்குள்ளேயே காவி வக்கீல்கள் கலகக் குரல் எழுப்பினர்.
இத்தனைக்குப் பிறகும், தனது அதிகாரம் செல்லுபடியாகாத கிழட்டு நாட்டாமையைப் போல” அமர்ந்திருக்கிறது உச்சநீதி மன்றம். சர்தார்ஜி ஜோக்குகளைத் தடை செய்வது குறித்த பொதுநல வழக்கை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது உச்சநீதி மன்றம். ஆனால், நீதித்துறையையே அச்சுறுத்தும் இந்த நடவடிக்கைகள், சர்தார்ஜி விவகாரத்தை விட முக்கியமானவை என்று நீதிபதிகளுக்குப் புரியவில்லை போலும்!” என்று மூத்த வழக்கறிஞர்கள் வெளிப்படையாக நீதி பதிகளை விமரிசிக்கிறார்கள்.
பொதுக்கருத்தின் நிர்ப்பந்தம் காரணமாக டில்லி உயர்நீதி மன்றம் கன்னையாவுக்கு நிபந்தனைப் பிணை வழங்கியுள்ள போதிலும், தேச பக்தி, கருத்து சுதந்திரம் போன்றவை பற்றி அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் பார்ப்பன பாசிசத்தின் கருத்துகளை அடியொற்றி இருக்கின்றன. மொத்தத்தில், அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள், தங்களை அம்பலப்படுத்திக் கொள்ளும் போக்கில், இந்த கட்டமைப்பின் எல்லா உறுப்புகளையும் அம்பலப்படுத்தி வருகிறார்கள்.
அத்வானி, ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் வீழ்த்தி மோடி பிரதமர் நாற்காலியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த தருணத்தில், ‘காரவன்’ என்ற இணைய இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. குஜராத்தைச் சேர்ந்த சங்கப் பரிவாரத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டதாக அக்கட்டுரை கூறுகிறது. நாங்கள் என்ன செய்வது, சிவலிங்கத்தின் தலையில் உட்கார்ந்து விட்டது இந்தத் தேள். கையால் எடுத்துப் போடவும் முடியாது. செருப்பால் அடிக்கவும் முடியாது” என்றாராம் அந்த முதியவர்.
அடிபடுவதற்கு வாட்டமான இடத்தில் இருக் கிறது தேள். நமக்கென்ன தயக்கம், செருப்பை எடுப்பதற்கு!
சர்வதேச மோசடியில் ஈடுபட்ட இந்திய பெரும்புள்ளிகள்
; அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா பச்சன், DLF நிறுவனர் வி.கே.சிங் மற்றும் உறவினர்களில் 9 நபர்கள், அதானியின் சகோதரர் வினோத் அதானி நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
பனாமா நாடு
பனாமா என்றதும் அட்லாண்டிக் பெருங்கடலையும் பசிபிக் பெருங்கடலையும் இணைக்கும் பனாமா கால்வாய் நினைவுக்கு வரும். முதலாளிகளுக்கு பனாமா என்றதும் பணமா என்றே பொருள் தரும். பனாமா கால்வாயின் புகழுக்கு போட்டியாக பனாமா நாடும் உலகெங்கிலும் உள்ள திருட்டு பணத்தை, ஊழல் சொத்தை, வரி ஏய்ப்பு வருமானத்தை பத்திரமாக பாதுகாக்கும் தொழிலுக்கு பெயர் பெற்றது.
உலகெங்கிலும் பறந்து சென்று இந்தியாவின் புகழை பரப்பி வரும் மோடிஜியின் பணிக்கு பனாமாவும் துணை நிற்கிறது. ஆம் நண்பர்களே, சென்ற வருடம் ஸ்விட்சர்லாந்தில் உள்ள HSBC Geneva ஜெனிவா வங்கியில் 1,100 இந்தியர்களின் கள்ளக் கணக்குகளும் கருப்புப் பணமும் அம்பலத்திற்கு வந்தன. அது ஜெனிவா லீக்ஸ் என்றால் இந்த வருடம் பனாமா லீக்ஸ். பனாமா லீக்ஸில் அலங்கரிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை ஐநூறுக்கும் மேல்.
வரியற்ற சொர்க்கம் என்று அழைக்கப்படும் பனாமா நாடு வட அமெரிக்கா மற்றும் தென்னெமரிக்காவை இணைக்கும் மத்திய அமெரிக்காவில் உள்ளது. இந்நாட்டில் செயல்படும் மொசாக் பொன்செகா Mossack Fonseca, எனும் புகழ் பெற்ற சட்ட மற்றும் முதலாளிகளுக்கு சேவை செய்யும் நிறுவனத்தின் அலுவலக ஆவணங்களை வைத்து இந்த ஊழல் வெளியே பீறியிருக்கிறது. இந்த நிறுவனம்தான் உலகெங்கிலும் உள்ள முதலாளிகள், அதிகாரிகள், பணக்காரர்கள், அரசியல் தலைவர்களின் பணத்தை பதுக்கி வைக்க பினாமி நிறுவனங்களை துவக்கி பராமரித்து வரும் திருப்பணியினைச் செய்கிறது. பினாமி நிறுவனங்களை ஆரம்பிப்பதை ஒரு தொழிற்சாலை உற்பத்தி போலவே அந்நிறுவனம் செய்து வருகிறது.
ஒரு நபர் இந்நிறுவனத்திற்கு கட்டணத்தையோ கமிஷனையோ வெட்டினால் அவருக்காக உலகெங்கிலும் உள்ள வரியற்ற மற்றும் வரிச் சலுகை நாடுகளில் நிறுவனங்களை துவக்கி சொத்துக்கள், வருமானத்தை காப்பாற்ற இவர்கள் ஏற்பாடுகளையும், பராமரிப்புகளையும் செய்வார்கள். ஸ்விஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை சேமிக்க முடியுமென்றால் பனாமாவில் நேரடி வங்கிக் கணக்கு ஆரம்பிக்க முடியாது. அதற்கு பதிலாக பனாமாவில் ஏதாவது ஒரு உப்புமா கம்பெனி ஆரம்பித்து அதில் ஆ யிரம் ரூபாய் முதலீடு போட்டு கம்பெனியின் வங்கிக் கணக்கில் நீங்கள் பில்லியன் கணக்கில் பணத்தை போட்டு வைக்கலாம். இந்த திருட்டு பனாமா பாணி ஸ்பெஷல்.
உலக ஊடக வரலாற்றில் மிக அதிக எண்ணிக்கையிலான ஊழல் கசிவு செய்திகளை பனாமா லீக்ஸ் கொண்டிருக்கிறது. இதற்காக வாஷிங்டனில் உள்ள சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர் கூட்டியக்கத்தின் மூலம் 80 நாடுகளைச் சேர்ந்த நானூறு செய்தியாளர்கள் – நூறு ஊடக நிறுவனங்கள் பனாமா லீக்ஸ் புலனாய்வில் பங்கேற்றனர். இந்தியாவில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடும் இதில் பங்கேற்றது. கடந்த ஒரு வருடமாக இந்த புலனாய்வு நடவடிக்கைகள் நடந்து வந்தன.
பனாமாவின் மொசாக் பொன்செகாவின் வாடிக்கையாளர்களில் உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் பலர் உண்டு. சர்வதேச காலபந்து சம்மேளனங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த டாமியானி, எஜினியோ பிகரிடோ போன்றோரும் இந்த திருட்டு பண பதுக்கலில் உள்ளவர்களே!
மோசக் பொன்சேகா
மொசாக் பொன்செகா நிறுவனத்திதன் பணி என்ன ? பனாமா நாட்டின் சட்டப் பணி நிறுவனமாக பதிவு செய்து கொண்டிருக்கும் மொசாக் பொன்செகா உலகெங்கிலும் உள்ள பினாமி, அனாமதேய நிறுவனங்களை உருவாக்குகிறது. இந்த அனாமதேய நிறுவனங்களின் மூலம் அதன் உரிமையாளர்களின் பண பரிவர்த்தனைகள், ஒப்பந்தங்கள், வர்த்தக நடவடிக்கைகள் அனைத்தும் திரைமறைவாக செய்ய முடியும். இதற்காகவே உலகெங்கும் 35 நாடுகளில் அலுவலகங்களை வைத்துக் கொண்டு மொசாக் பொன்செகா நிறுவனம் செயல்படுகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான அனாமதேய நிறுவனங்களை உருவாக்கி, விற்பனை செய்து, மேலாண்மையும் செய்து வருகிறது மொசாக் பொன்செகா. சூரிச், இலண்டன், ஹாங்காங் போன்ற முக்கியமான நாடுகள் – நகரங்களில் கூட மொசாக்கின் வரி ஏய்ப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன.
ஒரு தனிநபர் குறைந்த பட்சம் ஆயிரம் டாலர் அல்லது 66,290 ரூபாயை அளித்தால் மோசாக் நிறுவனம் ஒரு அனாமதேய நிறுவனத்தை வாங்கித் தரும். இதனினும் அதிகமாக கட்டணம் செலுத்தினால் போலி இயக்குநர்களை நியமிப்பது, வாடிக்கையாளர் விரும்பும் நபர்களுக்கு பங்குகளை மாற்றித் தருவது அனைத்தையும் ஏற்பாடு செய்கிறது இந்த மாமா கம்பெனி.
மொசாக்கை அம்பலப்படுத்திய இந்த பனாமா லீக்ஸ் எப்படி நடந்தேறியது? ஒரு அனாமதேய ஆர்வலர் மூலம் ஜெர்மன் பத்திரிகையான Süddeutsche Zeitung-க்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது. அதில் மொசாக் பொன்செகா நிறுவனத்தின் அலுவலக ஆவணங்கள் பல்லாயிரக் கணக்கில் இருந்தது தெரிய வந்தது. கணினி மொழியில் சொன்னால் டேட்டாக்களின் அளவு 2.6 டெராபைட்ஸ் ஆகும். இந்த ரகசிய தகவல்களை அளித்தவர் பதிலுக்கு பணமோ அல்லது எந்த நிதி சார்ந்த இலாபத்தையும் எதிர்பார்க்காமல், தன் பாதுகாப்பை மட்டும் உறுதி செய்து கொண்டார்.
அதன்படி உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளின் பிரபலங்கள் இந்நிறுவனத்தின் மூலம் சொத்துக்களை பதுக்கி, பிதுக்கி, விரித்து கல்லா கட்டுகின்றனர். அதில் ரசியா அதிபர் புதினுக்கு நெருக்கமானவர்கள், சீன அதிபர், சவுதி மன்னர் குடும்பம், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், கால்பந்து வீரர் மெஸ்ஸி, லிபிய அதிபர் இறந்து போன கடாஃபி உள்ளிட்டு பலர் உண்டு. மேலும் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் வண்டவாளங்கள் சந்திக்கு வந்திருக்கின்றன. அதில் வெளிநாடுகளில் இவர்களது கள்ள – பினாமி நிறுவனங்கள், அறக்கட்டளைகள், ட்ரஸ்ட்டுகள், போன்றவற்றை மொசாக் பொன்செகா நடத்தி வருகிறது. இந்தியன் எக்ஸ்பி
ரஸ் நாளேட்டுக்கு கிடைத்த 36,000 கோப்புகள் மற்றும் 234 இந்தியர்களது கடவுச்சீட்டுக்களை வைத்து இந்த புலனாய்வை அந்நாளேடு நடத்தியிருக்கிறது. அதன் படி 300-க்கும் மேற்பட்ட முகவரிகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்து சோதித்திருக்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
பனாமா பேப்பர் அம்பலப்படுத்திய சர்வதேச ஊழல் பட்டியல்கள்
இந்த ஆவணங்களின் படி மொசாக் பொன்செகா நிறுவனம் கிரமமாக உலக பணக்காரர்களின் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை வரி ஏய்ப்பு இதர மோசடிகளுக்கு வசதியாக மேலாண்மை செய்வது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. கசிய வந்த ஆவணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஐந்து இலட்சம் ஆகும். அவை மின்னஞ்சல், பிடிஎஃ.ப், புகைப்படக் கோப்புகள் மற்றும் மொசாக் நிறுவனத்தின் டேட்டா பேசில் உள்ள சுருக்கமான செய்திகள் ஆகும். இந்த விவரங்களின் காலம் 1970 முதல் 2016 வரை ஆகும்.
அந்த பட்டியலில் உள்ள சில இந்திய முதலைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருக்கிறது.
ஐஸ்வர்யா ராய்
“எதிர்காலத்தில் நான் அன்னை தெரசாவாக ஆவேன்” என்று உலக அழகிப் போட்டியில் கிளிசரின் கண்ணீர் சிந்தும் சடங்கை உறுதிப்படுத்திய ஐஸ்வர்யா, பிரிட்டீஷ் விர்ஜீன் தீவுகளில் இருக்கும் ஆமிக் பார்ட்னர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குநராகவும், பங்குதாரராகவும் இருக்கிறார். இவரது தந்தை கிருஷ்ண ராய், தாய் விரந்தா கிருஷ்ணா ராய், சகோதரர் ஆதித்யா ராய் அனைவரும் அந்த உப்புமா கம்பெனியில் இயக்குநர்களாக 2005-லிருந்து இருக்கிறார்கள். 2008-ல் இந்தக் கம்பெனி கலைக்கப்படுவதற்கு முன்னர் ஐஸ்வர்யா ராய் மட்டும் இயக்குநரிலிருந்து பங்குகள் வைத்திருக்கும் பங்குதாரராக மாற்றப்பட்டார்.
அமிதாப் பச்சன்.
ஐஸ்வர்யா ராயின் மாமனாரும், பிரபல இந்தி நட்சத்திரம் மற்றும்‘ஜனகன மண – பணம்’ புகழ் அமிதாப் பச்சன் அவர்கள் பஹாமா மற்றும் பிவிஐ British Virgin Islands பகுதியில் நான்கு கப்பல் கம்பெனிகளில் இயக்குநராக இருந்தார். இவை 1993-ம் ஆண்டில் செட்டப் செய்யப்பட்ட நிறுவனங்கள். இந்நிறுவனங்களின்ன் சான்றளிக்கப்பட்ட கூட்டு மூலதனம் ஐயாயிரம் முதல் ஐம்பதாயிரம் டாலர் வரை இருந்தாலும் அவர்களின் வர்த்தகம் பல மில்லியன் டாலர்களைத் தாண்டும்.
சமீர் கெகிலத்
இந்தியாபுல்ஸ் எனும் நிறுவனத்தின் முதலாளியான சமீர் கெகிலத் இலண்டனில் மூன்று முக்கியமான சொத்துக்களை வாங்கியிருக்கிறார். இதற்கான பரிவர்த்தனைகளை கர்னால், தில்லி, பஹாமாஸ், ஜெர்ஜி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் – ஊர்களில் இருக்கும் அவரது குடும்ப நிறுவனங்கள் மூலம் நடந்திருக்கின்றன. இலண்டனில் இருக்கும் அந்த சொத்துக்கள் தற்போது குடியிருப்பு மற்றும் ஓட்டல் கட்டுமானத் திட்டங்களாக முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை 2012 அக்டோபரில் ஏற்படுத்தப்பட்ட சமீர் கெகலத்தின் குடும்ப ட்ரஸ்ட் மூலம் கவனித்துக் கொள்கிறார்கள்.
கே.பி சிங்
டி.எல்.எஃப் நிறுவனரான சிங், 2010-ம் ஆண்டில் தனது மனைவி இந்திராவை கூட்டாளியாக சேர்த்துக் கொண்டு பிரிட்டீஷ் விர்ஜின் தீவுகளில் ஒரு கம்பெனியை வாங்கியிருக்கிறார். மேலும் 2012-ம் ஆண்டில் மகன் ராஜிவ் சிங் மற்றும் மகள் பியா சிங் மூலம் இரண்டு கம்பெனிகள் நிறுவப்பட்டன. இம்மூன்று நிறுவனங்களின் மதிப்பு சுமார் பத்து மில்லியன் டாலரைத் தாண்டும். இந்திய மதிப்பில் 66,24,54,500 ரூபாய் ஆகும். கே.பி.சிங்கின் ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் இத்தொழிலில் இருப்பதாக தெரிகிறது.
சர்வதேச மோசடியில் ஈடுபட்ட இந்திய பெரும்புள்ளிகள்: அமிதாப் பச்சன், DLF நிறுவனர் வி.கே.சிங், ஐஸ்வர்யா பச்சன், அதானியின் சகோதரர் வினோத் அதானி. நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
இவர்களின்றி அப்பல்லோ டயரின் நிறுவனர், அதானி குழுமத்தின் கவுதம் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானி, அரசியல்வாதிகளான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஷிஷீர் பஜோரியா, தில்லி லோக்சத்தா கிளையின் தலைவரான அனுராக் கேஜ்ரிவால் ஆகியோரும் இந்த வெளிநாட்டு திருட்டுக் கம்பெனிகளின் மூலம் தமது சொத்துக்களை பதுக்கி வருகின்றனர்.
இறந்து போன மும்பை தாதாவான இக்பால் மிர்ச்சியும் பட்டியலில் உண்டு. பல முகவரிகள் ஏதோ ஒரு இடத்தை குறிப்பது உண்மையென்றாலும் அதன் உரிமையாளர்களை வெளிப்படுத்தாமல் மறைத்து வைத்திருக்கின்றன.
இப்படி சில முதலாளிகளும், பிரபலங்களும் மட்டும் வெளிநாட்டில் பினாமி கம்பெனிகளை உருவாக்கி சொத்துக்களை பாதுகாக்கவில்லை. இந்தியாவில் நடக்கும் பல்வேறு வணிக நடவடிக்கைகள் – கிரிக்கெட் அணிகளை விலைக்கு வாங்கியது உட்பட – இத்தகைய வெளிநாட்டு பினாமி கம்பெனிகளின் பண பரிவர்த்தனைகளோடு தொடர்பில் இருக்கின்றன. இவர்களில் சிலர் சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறையின் கண்காணிப்பிலும் இருந்திருக்கின்றனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிகளின் படி 2003-க்கு முன்பு வரை ஒரு இந்தியக் குடிமகன் இந்திய பணத்தை சுதந்திரமாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியாது. பிறகு 2003-ம் ஆண்டில் அதை மாற்றி வருடத்திற்கு 25,000 டாலர் வரை எடுத்துச் செல்லலாம் என்றும் தற்போது அதை வருடத்திற்கு 2,50,000 டாலர் (1,65,60,612 ரூபாய்) என்று மாற்றியிருக்கிறார்கள். எனினும் இந்தப் பணத்தை வைத்து ஒரு தனிநபர் வெளிநாடுகளில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாமே அன்றி அந்த நிறுவனத்தையே வாங்கவோ நிர்மாணிக்கவோ முடியாது. பனாமா லீக்ஸ் ஊழலின் படி உள்ள கள்ள நிறுவனங்கள் அனைத்தும் இந்திய சட்டப்படியே சட்ட விரோதமானவைதான். 2013-ஆகஸ்டில்தான் இந்தியர்கள் – தனிநபர்கள், வெளிநாடுகளில் மூலதனம் இடுவது வெளிநாட்டு நேரடி முதலீட்டு சாளரத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டது. பனாமா ஊழல் அதற்கும் முற்பட்டவை.
இதன் மூலம் அழுகி வரும் முதலாளித்துவத்தின் இருண்ட முகம் உலக மக்களின் முன் அம்பலப்பட்டு போயிருக்கிறது. மொசாக் பொன்செகா நிறுவனத்தின் ஆவணங்கள் படி உலகில் உள்ள பெரும் வங்கிகள், சட்ட நிறுவனங்கள், சொத்துக்களை மேலாண்மை செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் சர்வதேச அளவில் பிரபலங்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், கால்பந்து சங்க நிர்வாகிகள், மோசடிக்காரர்கள், போதை பொருள் கடத்துபவர்கள் அனைவரது சொத்துக்களை இரகசியமாக மேலாண்மை செய்யப்படுவது தெரிய வருகிறது. இப்படி முதலாளிகளும் அவர்களின் உலகைச் சேர்ந்தோரும் ஏன் திருட்டுத்தனமாக பணத்தை பதுக்க வேண்டும்?
முதலாளித்துவ உற்பத்தி முறையில் தனிநபர்கள் மேலும் மேலும் சமூக சொத்துக்களை சுவீகரிப்பது நடந்து கொண்டே இருக்கும். சுரண்டலின் வரம்பு குறைய குறைய, ஏதுமற்ற மக்களின் வாங்கும் திறன் குறைய குறைய முதலாளிகளின் இலாபம் குறைகிறது. அதை குறையாமல் பார்த்துக் கொண்டால்தான் இலாபம் எனும் பகாசுர பசி அடங்கும் என்பதால் முதலாளிகள் எல்லாவிதமான திருட்டுத்தனங்களிலும் இறங்குகிறார்கள். அமெரிக்க வீட்டு வசதி கடன் நெருக்கடி முதல் கிரீஸ் நாடு திவாலானது வரை அதன் சமீபத்திய சாதனைகள் பெரும் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆளும் வர்க்கங்களுக்கு ஏற்படுத்தி வருகின்றன.
அதன் தீர்வுகளில் ஒன்றாகாத்தான் இந்த பனாமா மோசடிகளை ஏற்பாடு செய்து நிதியை அமுக்குகின்றனர். தற்போதைய மோசடி விவரங்களில் ரசிய அதிபர் புதின் நண்பர், சீன அதிபர் வட்டாரங்களை குறிவைத்து மேற்கத்திய ஊடகங்கள் பேசுகின்றன. மேலும் பட்டியலில் உள்ள இங்கிலாந்து கேமரூன் கூரூப் ஆட்களையெல்லாம் பி.பி.சியோ இன்ன பிற மேற்கத்திய ஊடகங்களோ பேசுவதில்லை. அவர்கள் திரும்பத் திரும்ப புடின், கடாபி, சிரிய அதிபர் அசாத் என்றே பேசுகிறார்கள். ஒரு வகையில் இந்த அம்பலப்படுத்தல் அமெரிக்காவிற்கு ஆதரவான முறையில் எதிர்நாடுகளை குறிவைத்து இருக்கலாம். இதனால் அமெரிக்கா, ஐரோப்பிய முதலாளிகள் சைவப் புலி என்பதல்ல. ஊழலைப் பொறுத்த வரை முதலாளிகள் அல்லது ஏகாதிபத்திய நாடுகளின் முரண்பாடுகளுக்கேற்பவும் வெளியே வரலாம். மேலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் சட்டப்பூர்வமாகவே கொள்ளையடிப்பதற்கும், பதுக்கி வைப்பதற்கும் நிறைய ஏற்பாடுகள் இருப்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
எது எப்படியோ இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பனாமா ஊழல் அக்மார்க் தேசபக்தர்களின் யோக்கியதையை சந்திக்கு கொண்டு வந்து விட்டது. கருப்புப் பணத்தை கொண்டு வர மோடி, உச்சநீதிமன்றங்களின் சவால்கள், சபதங்களின் உண்மை முகத்தை பனாமா காட்டுகிறது. சென்ற தேர்தலில் மோடிக்கு ஸ்பான்சர் செய்த அதானி குழுமம், காங்கிரசுக்கு நெருக்கமான டி.எல்.எப் அனைத்து வகை முதலாளிகளும் எப்படி நம் நாட்டு மக்கள் பணத்தை திருட்டு வழிகளில் கடத்திச்சென்று பதுக்குகின்றனர் என்பதை பனாமா தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. அடுத்த குடியரசுத் தலைவர் அமிதாப், மோடி விமானப் பயணத்தின் நிரந்தரக் கூட்டாளி அதானி போன்ற செய்திகளைப் பார்க்கும் போது பனாமா ஊழல் குற்றவாளிகளை விசாரிப்போம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி சொல்வது அயோக்கியத்தனமானது.
ஜர்கன் மோசக், ரமோன் ஃபோன்சிகா
தமிழகத் தேர்தலில் அம்மா, அண்ணி, விஜயகாந்த், வைகோ என்று அக்கப் போர்களையே பரபரப்பு செய்திகளாக கடத்திக் கொண்டிருக்கும் போது இந்த அமைப்பின் யோக்கியதை என்ன என்பதை பனமா முகத்தில் அறைந்து காட்டுகிறது. இராமநாதபுரத்தில் சூரிய ஒளி மின்தகடுகள் திட்டத்திற்காக தமிழக மக்களின் பணத்தை பிக்பாக்கெட் அடிக்கும் அதானி குழுமம் அதை பனாமாவில் கொண்டு போய் வட்டிக்கு விடுகிறது. இங்கே அம்மா முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் கட்டிங்கும், கமிஷனும் கொடுக்கிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் விற்பனையை எப்படியாவது தொடர வேண்டும் என்று அ.தி.மு.க அரசு வெறியாக இருப்பதற்கும், அதன் பொருட்டு இன்றும் தேசத்துரோக வழக்கு தொடுப்பதற்கும் மது தயாரிப்பு பணம் பெருமளவு சேருவதையும் அது பனாமா போன்ற வரியில்லா சொர்க்கங்களில் பாதுகாக்கப்படுவதையும் யார் மறுக்க முடியும்?
ஓட்டுக்கு ஆயிரம், இரண்டாயிரம் என்று அ.தி.மு.க ஏற்பாடு செய்ய, டாஸ்மாக்கை மூடியே தீர வேண்டும் என மக்கள் அதிகாரம் உறுதியுடன் போராடுகிறது. தேர்தல் அரசியல் ஒரு ஏமாற்று என்பதை பனாமா ஓங்கி உ ரைக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?
(ஏப்.4, 2016 மாலை 15.30-க்கு வெளியானது, ஏப்.4,2016 இரவு 21.45க்கு அப்டேட் செய்யப்பட்டது)
‘பார் புகழும்’ இப்பரத கண்டத்தில் ஊழலுக்கு எதிராக சவுண்டுவிடுவதுதான் இப்பொழுது அரசியல் பேஷனாக இருக்கிறது. யாரிடமும் கைநீட்டி இலஞ்சம் வாங்காதவன்தான் ஆளத் தகுதி வாய்ந்தவன்” என அறிவிக்கும் அளவிற்கு நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் இலஞ்சம், ஊழல் குறித்த பாமரத்தனமான கருத்துகள் முளைவிட்டு வருகின்றன. அப்படிபட்டதொரு நிலையில், தலையாரி முதல் தலைமைச் செயலர் வரை, கவுன்சிலர் தொடங்கி கலெக்டர், அமைச்சர்கள் ஈறாக, அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் கொள்ளையில் ஈடுபடும் அரசு மற்றும் பொது ஊழியர்களைப் பாதுகாக்கும் அரசாணையொன்றை கடந்த பிப்ரவரியில் வெளியிட்டு, நல்லவர்களையெல்லாம்” திடுக்கிட வைத்திருக்கிறது அம்மா அரசு. வரலாற்றில் இதற்கு முன்பாக இப்படிபட்டதொரு அரசாணை எங்காவது, எப்பொழுதாவது வெளியாகியிருக்கிறதா எனக் கூறுமளவிற்கு கட்டுரையாளருக்கு வரலாற்று ஞானம் கிடையாது. அதேசமயம், சொத்துக் குவிப்பு வழக்கால் தான் அனுபவிக்க நேர்ந்த ‘துயரங்கள்’, தன்னையொத்த மற்ற கொள்ளையர்களுக்கும் வந்துவிடக் கூடாது என்ற பரந்த எண்ணத்தில் இந்த ஊழல் பாதுகாப்பு அரசாணையை அம்மா கொண்டுவந்திருக்கலாம் எனக் கருத இடமுண்டு.
—
பார்ப்பன ஜெயா 2011-இல் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததில் ஆ.ராசா, கனிமொழிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 2ஜி வழக்கிற்கு முக்கியப் பங்குண்டு.
கருணாநிதியின் குடும்ப ஆட்சியையும், ஊழல் ஆட்சியையும் ஒழித்துக் கட்டக்கூடிய உத்தமியாக ஜெயாவைத் தமிழக மக்கள் முன் நிறுத்தி, அச்சட்டசபை தேர்தலில் வெற்றியை வாரிச் சுருட்டியது தமிழகப் பார்ப்பனக் கும்பல்.
தி.மு.க. பதவிக்கு வந்தால், ஆட்சியை நடத்திச் செல்லும் போக்கில் ஊழல், கொள்ளையில் ஈடுபடுவார்கள் என்றால், ஜெயாவோ தனது ஆட்சியே கொள்ளை தான், அதிகார முறைகேடுகளின் மூட்டைதான் என வாழ்ந்து காட்டி வருபவர். அதோடு, அடித்த கொள்ளையைப் பார்த்துக் கொள்” எனப் பகிரங்கப்படுத்தவும் தயங்காதவர். 1991-96 ஆட்சியில் நடந்த வளர்ப்பு மகன் திருமணம், 2001-06 ஆட்சியின் பொழுது மிடாஸ் சாராய ஆலைக்குத் திறப்பு விழா நடத்தியது, இப்பொழுது சென்னை-வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள 11 திரைகளைக் கொண்ட லக்ஸ் திரையரங்கை வளைத்துப் போட்டது என ஜெயா-சசி கும்பல் பகிரங்கமாக நடத்தியிருக்கும் கொள்ளைக்கும், அதன் வழியாகக் குவித்து வைத்துள்ள சொத்துக்களுக்கும் உதாரணங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.
லக்ஸ் திரையரங்கை ஜாஸ் சினிமாஸ் என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது; அந்த நிறுவனத்தின் பூர்வாசிரம நாமம் ஹாட் வீல்ஸ் இஞ்ஜினியரிங் பிரைவெட் லிமிடெட். ஹாட் வீல்ஸ் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களுள் ஒன்று. ஜெயா-சசி கும்பல் வாங்கிக் குவித்த இலஞ்சப் பணத்தைப் புழக்கத்தில் விடுவதற்காக அவர்களால் தொடங்கப்பட்ட லெட்டர் பேடு நிறுவனம்தான் ஹாட் வீல்ஸ்; அதன் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்” என்று நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார்.
ஆள் மாறாட்டம் போல பெயர் மாறாட்டம் செய்யப்பட்டுள்ள ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில் சசிகலாவும் இளவரசியும் கலந்து கொண்டிருப்பதும்; அந்நிறுவனத்தின் தலைவராக இளவரசியும், அந்நிறுவனத்தின் இயக்குநர்களாக இளவரசியின் மருமகன் கார்த்திகேயனும், சசிகலாவின் மருமகன் சிவகுமாரும் நியமிக்கப்பட்டிருப்பதும்; இந்த மருமகன்கள் இருவரும் ஜெயா-சசிக்குச் சொந்தமான மிடாஸ் சாராய ஆலையிலும் இயக்குநர்களாக இருப்பதும் சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு வெளிவந்துள்ளன.
ஜெயா-சசி கும்பலால் மிரட்டி வளைத்துப் போடப்பட்ட சென்னை – வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் அமைந்துள்ள லக்ஸ் திரையரங்கின் உட்புறத் தோற்றம்.
லக்ஸ் திரையரங்கம் வெறும் ஒரு கோடி, இரண்டு கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்தக் காலத்து சினிமா கொட்டகை அல்ல. அந்த அதிநவீனமான திரையரங்குகளின் மதிப்பு 600 முதல் 1,000 கோடி ரூபாய் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. தான் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்று வருவதாகக் கூறி வருபவர், ஜெயா. சசியோ, அந்த ஒரு ரூபாய் சம்பளக்காரியை அண்டிப் பிழைப்பவர். இப்படிபட்ட பின்னணி கொண்டவர்கள் 1,000 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட திரையரங்கை வாங்குவது எப்படி சாத்தியமானது என்பது தீவிரமான விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று. ஆனால், அம்மா மீதான விசுவாசம் காரணமாகவோ அல்லது
அம்மாவைச் சந்தேகித்தால் என்ன வழக்குப் பாயுமோ என்ற அச்சம் காரணமாகவோ தமிழக ஊடகங்களும், நாணயஸ்தர்களும் இப்பிரச்சினையைக் காணாதவாறு கண்ணை மூடிக்கொண்டார்கள்; அல்லது தி.மு.க. மட்டும் யோக்கியமா எனக் கேட்டுத் தங்களின் நடுநிலை தவறாத் தன்மையைப் பறைசாற்றிக் கொண்டார்கள்.
ஜெயா-சசி கும்பல் அத்திரையரங்கை விலைக்கு வாங்கியதுகூட வர்த்தக நாணயத்தோடு நடைபெறவில்லை. வணிக வரித்துறை மற்றும் போலீசைக் கொண்டு அத்திரையரங்கு நிறுவன முதலாளிகளை மிரட்டி, கட்டப் பஞ்சாயத்து முறையில் இச்சொத்து எழுதி வாங்கப்பட்டிருக்கிறது. இது போலவே, சென்னை வடபழனியில் அமைந்துள்ள விஜயா ஃபோரம் மாலில் கட்டப்பட்ட திரையரங்குகள் செயல்படுவதற்கான உரிமம் வழங்குவதிலும் சிக்கல்களை ஏற்படுத்தி, அதனையும் வளைத்துப் போட முயன்றது ஜெயா-சசி கும்பல். ஆனால், லக்ஸ் திரையரங்கம் சுருட்டப்பட்டது வெளியே வந்ததைத் தொடர்ந்து தற்காலிகமாகப் பின்வாங்கிக் கொண்டது.
1991-96 கால ஆட்சியில் (கொடநாடு) எஸ்டேட்டுகளும், (பையனூர், சிறுதாவூர்) பங்களாக்களும், நிலங்களும் வளைத்துப் போடப்பட்டன என்றால், இந்த மூன்றாவது அத்தியாயத்தில் தமிழகமெங்கும் திரையரங்குகள் குறி வைக்கப்படுகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கு உச்சநீதி மன்ற விசாரணையில் இருந்துவரும் நிலையில், அது குறித்தெல்லாம் சிறிதும் அச்சமின்றி மேலும்மேலும் சொத்துக்குவிப்பு நடந்து வருகிறது என்பது ஜெயா கும்பல்
நீதிமன்றங்களைச் சோளக்காட்டு பொம்மை அளவிற்குக்கூட கருதவில்லை எனக் காட்டுகிறது.
—
‘‘இந்த ஆட்சி 40 பர்செண்ட் ஆட்சி” எனப் பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள் பகிரங்கமாக சுமத்திய குற்றச்சாட்டின் வழியாகவோ, உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமியின் தற்கொலை வழியாகவோ, ஆவின் பால் கலப்பட ஊழல் வழியாகவோ, லக்ஸ் திரையரங்கம் வழியாகவோ, அ.தி.மு.க. ஆட்சியில் 25 துறைகளில் நடந்த ஊழல்கள் குறித்து கவர்னரிடம் கொடுக்கப்பட்ட பட்டியல் வழியாகவோ அம்மா ஆட்சியின்‘ஒப்பிலா’த் தன்மையைப் புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் பொட்டில் அடித்தாற் போல புரிய வைத்தது வெள்ள நிவாரணத்தில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர். அப்படி அம்பலமான பிறகும்கூட அம்மாவின் ஊழல் திருவிளையாடல் நிற்கவேயில்லை. என்னை உங்களால் என்ன செய்துவிட முடியும் என்ற அகங்காரத்தோடு, அகப்பட்டதையெல்லாம் திருடிக்கொண்டு ஓடும் கன்னக்கோல் கொள்ளையர்களைவிடக் கேவலமாக, ஆட்சியின் இறுதிக் கட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த எட்டு பல்கலைக்கழகங்கள் கடந்த சில மாதங்களாகவே தலையில்லாத முண்டங்களாக, அதாவது துணை வேந்தர்கள் இன்றி இயங்கி வந்தன. இதற்குக் காரணம் அப்பதவிகள் 6 கோடி ரூபாய்க்கு மேல் விலை பேசப்படுவதாகவும், பேரம் இன்னும் படியாததால்தான் துணை வேந்தர்கள் அறிவிக்கப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பரிந்துரைகளின்படித் துணை வேந்தர்களை நியமிக்க உத்தரவிடக் கோரி கல்வியாளர் அனந்த கிருஷ்ணன் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இவ்வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில், அதனை முந்திக்கொண்டு நான்கு பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமிக்கப்பட்ட அறிவிப்புகள் கவர்னர் மாளிகையிலிருந்து இரவு நேரத்தில் வெளியிடப்பட்டன.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கே.பாஸ்கரின் குறிப்பிடத்தக்க தகுதி, அவர் தமிழக ஆளுநர் ரோசய்யாவுக்கு நெருக்கமானவர் என்பதுதான். தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள தங்கசாமி, ஓ.பன்னீர் செல்வத்தின் நெருங்கிய உறவினர்.
ஒரு கல்லூரியின் முதல்வராக நியமிக்கப்படுவதற்குக்கூடத் தகுதியில்லாதவர் எனக் கூறப்படும் வள்ளி, அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 10 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியைக் கடாசிவிட்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பேராசிரியர் முருகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நியமிக்கப்பட்டவர்களின் கல்வி மற்றும் பணித் தகுதியே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.
இந்த நியமனங்கள் ஒருபுறமிருக்க, அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் 112 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கு, பதவி ஒன்றுக்கு ரூ.35 இலட்சம் என நிர்ணயிக்கப்பட்டு வசூல் வேட்டை தொடங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சுமத்தியுள்ளன. காசு கொடுத்தவனுக்கு சீட்டு என்பதை உறுதி செய்வதற்காகவே, அப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் முறைகேடான மாற்றங் களை அ.தி.மு.க. அரசு செய்திருக்கிறது. மேலும், சுகாதாரத் துறையில் 1,200 பணியிடங்களையும், செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அலுவலர்களை யும், கால்நடைத் துறையில் காலி பணியிடங் களையும் நேரடியாக நியமிப் பது என்ற போர்வையில் வசூலுக்கான வாசல் திறந்துவிடப்பட்டிருப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ஜெயாவால் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழக அரசு செய்தித் துறையின் முன்னாள் செயலர் ராஜாராம்.
இந்த முறைகேடுகள், அதிகார அத்துமீறல்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வண்ணம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தனது விசுவாசிகள், கட்சிக்காரர்கள் என 11 பேரை ஒரே சமயத்தில் உறுப்பினர்களாக்கி, அத்தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனத்தை அ.தி.மு.க.வின் கிளையாக்கிவிட்டார், ஜெயா. முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது ஜெயா போட்ட ஹெராயின் வழக்கில் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டவரும், சுதாகரனின் உறவினருமான ஓய்வு பெற்ற நீதிபதி ராமமூர்த்தி; தமிழக அரசின் தலைமை வழக்குரைஞராக இருந்து பின்னர் டி.என்.பி.எஸ்.சி. தலைவராக நியமிக்கப்பட்ட நவநீதகிருஷ்ணணுக்குக் கைத்தடியாக இருந்தவரும், சொத்துக் குவிப்பு வழக்கை கவனித்து வந்தவருமான வழக்குரைஞர் முத்துராஜ், கரை வேட்டி கட்டாத அ.தி.மு.க. தொண்டர் எனப் பெயரெடுத்த செய்தித் துறையின் செயலராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள முக்கியமான விசுவாசிகள்.
—
கடந்த ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகம் எந்தளவிற்குச் சீரழிக்கப்பட்டிருக்கிறது என்பதை இடைக்கால நிதிநிலை அறிக்கையும், மின்சார வாரியத்தில் ஏற்பட்டுள்ள நட்டமும் எடுத்துக் காட்டுகின்றன. அ.தி.மு.க. பதவியேற்றபொழுது ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடியாக இருந்த தமிழக அரசின் கடன், இந்த ஐந்தாண்டுகளில் மேலும் 1,47,000 கோடி ரூபாய் அதிகரித்து, 2,47,031 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது. இத்துணைக்கும் கடந்த ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க. அரசு எந்தவொரு உற்பத்தித் திட்டத்திலும் முதலீடே செய்யவில்லை; மேலும், வரி உயர்வு, பேருந்து மற்றும் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு ஆகிய பொருளாதாரத் தாக்குதல்களின் மூலம் மக்களிடமிருந்து 1,57,000 கோடி ரூபாய் பிடுங்கிக் கொண்டிருக்கிறது. இதன் பிறகும் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருக்கிறதென்றால், பிடுங்கப்பட்ட வரிப் பணமும், வாங்கப்பட்ட கடனும் கரைந்து போனதற்குக் காரணம் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கமிசன் மற்றும் கொள்ளை.
இந்தப் பகற்கொள்ளைக்குப் பலியான துறைகளுள் முதன்மையானது தமிழக மின்சார வாரியம். தமிழகத்தை மிகைமின் மாநிலமாக மாற்றிவிட்டேன் என்ற ஜெயாவின் மோசடியான சுயதம்பட்ட அறிவிப்பின் பின்னே வாரியம் மொட்டையடிக்கப்பட்டு, கடனாளி நிறுவனமாக மாற்றப்பட்டிருப்பது மறைக்கப்பட்டிருக்கிறது. கமிசன் அடிப்பதற்காகவே தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்கள் பல்வேறு விதிமுறைகளை மீறிப் போடப்பட்டு, மின் வாரியம் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, சூரிய ஒளி மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.5.84 என்ற விலையில் வாங்க வேண்டும் என மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியிருப்பதற்கு மாறாக, அதானி குழுமத்திட மிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.7.01 விலையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைச்சரிவைத் தொடர்ந்து ஃகுஏகு எனப்படும் எரி பொருளைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு யூனிட் மின் சாரத்தை ரூ.4.27-க்கு விற்க முன்வந்துள்ள நிலையில், அதனைப் புறக்கணித்துவிட்டு இந்த எரி பொருளைப் பயன்படுத்தும் தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை நிலைக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.6.55-க்கு விலைக்கு வாங்கி வருகிறது, மின்சார வாரியம். தனியார் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு அதிக விலை கொடுப்பதற்காக, அவர்களிடமிருந்து ஒரு மெகாவாட்டுக்கு ரூ.15 இலட்சம் கையூட்டுப் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், மின்சார வாரியத்தை தனது கொள்ளைக்கான காமதேனுவாகக் கருதி நடத்தியிருக்கிறது, ஜெயா-சசி கும்பல்.
திட்டத்தில் கமிசன் அடிப்பதல்ல, கமிசனுக்காகவே திட்டங்கள் என்பதுதான் அம்மா ஆட்சியின் கொள்கை. கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்திய சகாயம் குழுவில் இடம் பெற்றிருந்த மதுவை மாவட்ட வேளாண் இயக்குநர் ஜெய சிங் ஞானதுரை, தான் ஓய்வு பெற்றுச் சென்ற நாளில் ஆற்றிய உரையில், வேளாண்துறை அமைச்சர் அக்ரி.
கிருஷ்ண மூர்த்தி கடந்த 26.01.2015 அன்று இரவு என்னை செல்பேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார். விவசாயிகளுக்கு வழங்குவதற்கான நுண்ணூட்டச் சத்துக்கள் தமிழக அரசின் வேளாண் துறையில் கிலோ ரூ. 60 என்ற விலையில் கிடைக்கிறது. ஆனால், இதே நுண்ணூட்டச்சத்து உரத்தை தனியாரிட மிருந்து கிலோ ரூ.120 என்ற விலையில் வாங்கும்படி அவர் என்னைக் கட்டாயப்படுத்தினார். அதற்கான உத்தரவில் நான் கையெழுத்திடவில்லை என்றால் எனதுபணியிடமாற்ற ஆணையில் கையெழுத்திடப் போவதாக மிரட்டினார். என்னை சென்னைக்கு இடமாற்றம் செய்வதற்கான ஆணையையும் அவர் படித்துக்காட்டினார். அதன் பின் பிப்ரவரி முதல் வாரத்தில் அமைச்சரின்உதவியாளர்என்னைதொடர்புகொண்டு அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி என்னிடம் பேச விரும்புவதாக தெரிவித்தார். ஆனால், நான் பேச மறுத்துவிட்டேன்” என நடந்ததைக் கூறியிருக்கிறார். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்; தமிழகம் கடந்த ஐந்தாண்டுகளில் 1,40,000 கோடி ரூபாய் கடனுக்குள் எப்படித் தள்ளப்பட்டது என்பதை இந்த உரை நமக்குப் புரிய வைக்கிறது.
தமிழக மக்களின் மீது இந்த ஐந்தாண்டுகளில் ஏற்றப்பட்டுள்ள 1,40,000 கோடி ரூபாய் கடன் போயஸ் தோட்டத்தில் ரொக்கமாகவும், சொத்துப் பத்திரங்களாகவும் பதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதான் தமிழக மக்கள் முன்னுள்ள, செய்து முடிக்க வேண்டிய மாபெரும் கடமையாகும். அதற்குச் சட்டமன்றத் தேர்தலும், நீதிமன்றங்களும் பயன்படாது என்பதை ஜெயா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் போக்கிலிருந்தே யாரும் புரிந்து கொள்ள முடியும்.
“மாற்றம் ஒன்றே மாறாதது” என்பது தத்துவ உலகில் ஒரு பிரபலமான வாக்கியம். இயற்கை அல்லது இந்த உலகம், எப்போதும் ஏதோ ஒரு முறையிலும் மாறிக்கொண்ட இருக்கும், மாறாதது எதுவுமில்லை என்பதை விளக்குகிறது அந்த வாக்கியம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் “மாற்றம்” என்ற வார்த்தை இப்போது வானாளவ பேசப்படுகிறது. ஆனால் அந்த மாற்றம் குறித்து பேசும் கட்சிகளும், கூட்டணிகளும் ஒட்டுப் பொறுக்கி அரசியலின் முடை நாற்றத்தை அல்லது இந்த போலி ஜனநாயகத்தின் அழுகுணி ஆட்டத்தை மறைக்கவே முடியாது என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றனர்.
தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்றாக தமிழகத்தில் எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியாதா, இவர்களுக்கு மாற்று கிடையாதா, மாறி மாறி இவர்களையே ஆட்சியில் அமர்த்த வேண்டுமா என்பதை மாபெரும் தத்துவ ஞானக் கேள்வியாக டி.வி நிலைய வித்வான்கள் விவாதம் என்ற பெயரில் படுத்தி எடுக்கின்றார்கள்.
அ.தி.மு.கவில் அவர் பெயர் ஜெயலலிதா! தே.மு.தி.க-வில் அவர் பெயர் பிரேமலதா!
இரண்டு கட்சிகளுக்கு மாற்று என்று பேசுபவர்கள் அனைவரும் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான உத்தியாக இந்த டயலாக்கை அடிக்கடி எடுத்து விடுகிறார்கள் என்று சொல்லப்படுவதை நாம் நிராகரிக்க முடியாது. அவர்களில் சில அப்பாவிகளாக இருந்தாலும் தாம் என்ன பேசுகிறோம், யாருக்கு பயன்படுகிறோம் என்ற தன்னறிவு இன்றி ஊடகங்கள் கட்டியமைத்திருக்கும் பொதுப்புத்தியில் சரவண பவன் பாணியில் இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்று கேட்கிறார்கள்! ஆகவே இந்த மாற்று வைபவத்தில் புதிய ருசியை தேடும் ஒரு நுகர்வுக் கலாச்சார தேடலும் இருக்கிறது. அந்த தேடலை விளம்பரங்கள் வழி நிறுவனங்கள் கற்றுக் கொடுப்பதைப் போல அரசியல் தேடலை ஊடகங்கள், அறிஞர்கள், பிரபலங்கள் என்று பலர் கற்றுக் கொடுக்கின்றனர்.
தி.மு.க – அ.தி.மு.க தலைமை அலுவலகங்களில் ஒன்றரை அல்லது இரண்டே கால் சீட்டுகளுக்காக போலி கம்யூனிஸ்டுகள் இவ்வளவு காலம் தவம் கிடந்தாலும், அதிலும் போயஸ் தோட்டத்தில் “இன்னைக்கு முடிஞ்சு போச்சு, நாளைக்கு வாங்க” என்று தெருவுக்கு விரட்டியடிக்கப்பட்டிருந்தாலும் குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதை மறைத்து விட்டு “மாற்றம்” குறித்து மார் தட்டுகிறார்கள். அந்த மார்பு, சந்தர்ப்பவாதம் எனும் டி.பியால் இன்றைக்கோ நாளைக்கோ காத்திருக்கிறது என்றாலும்.
அவருடைய பிறந்த நாளுக்கு அம்மா அவர்கள் வீடு தேடி வாழ்த்து தெரிவிக்கும் அளவுக்கு அம்மா கம்யூனிஸ்டாக இருந்த தா.பாண்டியனது கட்சி கூட இன்றைக்கு “மாற்று” குறித்து பேசுகிறது. தொகுதி பிச்சைக்காக போயஸ் தோட்டத்தில் தவம் கிடக்கவோ இல்லை அணி வகுக்கவோ சென்ற நல்லக்கண்ணுவைக் கூட பலர் முதலமைச்சராக முன்மொழிகிறார்கள். எளிமையாக வாழும் ஒருவர் பாசிஸ்டாக ஆடும் ஒருவரின் அரண்மனைக்குச் சென்று அம்மா தாயே ஒன்றோ இரண்டோ பாத்து போடுங்கமா என்று கேட்பதை வைத்து அந்த எளிமையின் பொருள் என்ன? என்று எந்த கனவானும் சீமாட்டியும் கேட்பதில்லை.
வைகோவைப் பொறுத்தவரை அவரது அபிமானி ஜூனியர் விகடன் திருமாவேலனாலேயே கேலி செய்யப்படும் முக்தி நிலையை அடைந்து விட்டார். வி.சி திருமாவளவனோ கேப்டன் அணி என்று அழைப்பது கவுரக்குறைச்சல் இல்லை என ஆண்டைகளின் மண்டப ஓரத்தில் பரிதாபமாய் நிற்கிறார். அடங்க மறு அத்து மீறு, திருப்பி அடி எல்லாம் மூப்பானர் காலத்தில் தேர்தல் ஜோதியில் கலந்து எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவராக வாழ்த்தி இன்று தே.மு.தி.க எனும் கோமாளிக் கட்சியில் கரைந்து நிற்கிறது.
ஆக மாற்று பேசும் இந்த யோக்கியவான்கள் எவரும் கடந்த காலத்திலேயே யோக்கியமாக எதையும் செய்ய வில்லை என்பதோடு இன்று அவர்கள் முன்னிறுத்தும் கேப்டன் அணியிலேயும் அதே அயோக்கியத்தனத்தையே இலட்சியமாக முன்னிறுத்துகிறார்கள்.
இறுதியில் இத்தனை இலட்சிய மாற்றுக்களையும் சுமந்து கொண்டு விஜயகாந்த், முதல்வர் கனவில் என்ன பேசுவதென்று தெரியாமல் விழிக்கிறார். மைத்துனர் சதீஷோ, மக்கள் நலக் கூட்டணியின் கட்சிகள் கேப்டனை முதல்வராக ஏற்றதால் வைகோ, திருமா, கம்யூனிஸ்டு தலைவர்கள் அனைவருக்கும் பதில் மொய்யாய் அமைச்சர் பதவிகளை அன்புடன் அளிக்கிறார். இதையெல்லாம் செய்ய வேண்டியது தமது கடமை என்று அந்த கடமையே கூனிக்குறுகுமளவு உருகுகிறார்.
கல்லூரியைக் காப்பாற்றவும், கல்யாண மண்டபத்தை இடித்தவர்களை பழிவாங்கவும் அரசியலுக்கு வந்த விஜயகாந்துக்கு, கூடுதலாக லியாகத் அலிகான் வசனங்களுக்கு கைதட்டும் மக்கள் தன்னையும் ஒரு ஆளாக ஏற்கக்கூடும் என்று நினைத்திருக்க கூடும். இருப்பினும் ஒரு கட்சி நடத்துவது எவ்வளவு பெரிய சித்திரவதை என்பதையும் அவர் இக்காலத்தில் கண்டிப்பாக உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் பேரம், மரியாதை சந்திப்பு, கிங், மேக்கர், போன்ற வார்த்தைகள் அதிகம் அவரைச் சுற்றி வந்தன. இடையில் அவரது மனைவி, மைத்துனர் அடங்கிய கிச்சன் கேபினட் தே.மு.தி.கவின் கடிவாளத்தை கையிலெடுத்தது.
தே.மு.தி.க என்ற கட்சியின் பெயரே நல்ல நாளில் மூகூர்த்த நேரத்தில் மூன்று பெயர் கொண்ட சீட்டில் ஒன்றை தெரிவு செய்து முடிவு செய்யப்பட்ட ஒரு தரித்திரம். இந்த கின்னஸ் சாதனைக்கு போட்டியாக இந்த தேர்தலிலும் பங்குனி உத்திரத்தில்தான் மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை இவர்கள் பதம் பார்த்து கூட்டணி அமைத்தார்கள். சில அப்பாவித் தோழர்கள் பகத்சிங் நினைவு தினமென்று ஸ்டேட்ஸ் போட அதை காலி செய்தது இந்த பங்குனி உத்திர பஞ்சாங்க ரிலீஸ்.
விஜயகாந்த் கூட கொஞ்சம் யதார்த்தமாக இருக்கூடிய ஆள் என்பதால்தான் ஜெயாவை எதிர்த்து அவர் பேசுவதும், அ.தி.மு.க ஆதரவு ஊடகங்களை அவர் எள்ளை நகையாடுவதுமாய் இருக்கிறது. இருப்பினும் தி.மு.க – அ.தி.மு.க எனும் இருபெரும் கட்சிகளில் சேர்ந்து ஆளாக வாய்ப்பில்லாத அண்ணன்கள், வள்ளல்கள், ரவுடிகள், ரியல் எஸ்டேட் தரகர்கள், அரசியல் நாட்டாமைகள் பலரும்தான் தே.மு.தி.க எனும் விபத்துக் கட்சியின் தூண்கள். அதில் பண்ருட்டி முதல் மைஃபா பாண்டியராஜன் வரை பல பெருச்சாளிகள் இருந்தனர். பிறகு அந்தப் பெருச்சாளிகளில் சிலர் தே.மு.தி.கவின் ரிசல்டைக் காட்டி அ.தி.மு.க கோட்டையில் தங்களை நல்ல விலைக்கு விற்றுக் கொண்டார்கள்.
தே.மு.தி.க பிசினைஸை கவனித்துக் கொள்ளும் பிரேமதலா!
தனது கட்சிக்காரர்கள் அனைவரும் இப்படித்தான், அவர்கள் செலவழிப்பது ‘அதை’ எதிர்பார்த்துத்தான் என்பது விஜயகாந்துக்கும் தெரியும். சென்ற பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவோடு கூட்டணி வைத்து பின்பு மோடி பதவிப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சியில் முன் சீட்டு பாஸ் கிடைக்க வில்லை என்று பொன்னாரோடு காய் விட்ட கோபத்தில் இருந்தவர்தான் கேப்டன். அவரைப் பொறுத்தவரை வீட்டுக்கு வந்தவரை உபசரிக்க வேண்டும், மற்றவர் வீட்டுக்கு போனாலும் நன்றாக உபசரிக்கப்படவேண்டும். அதானியைக் குளிப்பாட்டும் மோடி குரூப், கேப்டனை குளிப்பாட்டினால் ரிடன்ஸ் கம்மி என்று வரம்பிட்டுக் கொண்டதை அறியுமளவு விஜயகாந்துக்கு அரசியலும் தெரியாது, அறவியலும் புரியாது.
இடையில் அவர் எந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும் என்ற முடிவை அண்ணி பிரேமலாதா எடுத்துக் கொண்டார். யோகா தினத்தில் ஆசனங்களை செய்யாமல் விஜயகாந்த திணறிய போதும் சரி, கூட்டத்தில் உளறும் போதும் சரி, பிழை திருத்தும் பொறுப்பை எடுத்துக் கொண்டார் பிரேமலதா. எனினும் அவர் விஜயகாந்தைப் போல கொஞ்சமாவது யதார்த்தமாக இருப்பவரல்ல. அதாவது பரம்பரை பாசிஸ்டுக்குரிய அத்தனை பண்புகளும் அவருக்குண்டு. அ.தி.மு.கவில் அவருக்கு பெயர் ஜெயலலிதா. தே.மு.தி.கவில் அவரது பெயர் பிரேமலதா.
“தமிழகத்தின் வசந்த காலமே, எங்கள் விழாக் கோலமே, தமிழ் வீரமங்கையே, புரட்சி அண்ணியே” என்று தே.மு.தி.கவினர் தமிழகமெங்கும் ஏதோ ஒரு நம்பிக்கையில் செலவழித்து தட்டியோ பிளக்ஸோ வைக்கின்றனர். உடல்நிலை காரணமாகவோ இல்லை ரிமோட் கண்ட்ரோல் அண்ணி காரணமாகவோ இந்த தேர்தலில் விஜயகாந்தின் நகைச்சுவை பேச்சுக்களை நாம் அதிகம் கேட்க முடியாது என்பதால் அண்ணிதான் தே.மு.தி.கவின் நட்சத்திர பேச்சாளர்.
கூட்டிக் கழித்து சொன்னால் பிரேமலதா என்பவர் யார்? மக்களின் உரிமையான ஜனநாயகம் என்பது தனது கைப்பையில் இருக்கும் ஏ.டி.எம் கார்டு போலவும், அதிகாரம் என்பது தனது காலில் இருக்கும் செருப்பு போலவும் கருதுகின்றவர். மக்கள் சப்தமிடாமல் கையேந்தினால் தனது கார்டை போட்டு கொஞ்சம் பணம் கொடுப்பார். சத்தம் போட்டால் செருப்பால் அடிப்பார். இந்த உலகில் இருக்கும் எதுவும் சீமாட்டி மனது வைத்தால் மட்டுமே மக்களுக்கு கிடைக்கும் என்ற ராயல் சீமாட்டியின் பார்வை அப்படியே பிரேமலதாவுக்குப் பொருந்துகிறது. மக்களை அடி முட்டாள்களாகவும், அடிமைகளாகவும் கருதுவதில் அம்மாவையே விஞ்சிவிட்டார் அண்ணி. அவரது பேச்சின் சில பகுதிகளைக் கேளுங்கள்!
“இப்போதே தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக பெரிய பெரிய வெளிநாட்டுக் கம்பெனிகளிடம் பேசியிருக்கிறோம்” என்கிறார். இது உண்மையென்றால் இந்த பேரத்திற்காக எவ்வளவு வாங்கியிருக்கிறார் என்று போலிக் கம்யூனிஸ்டு தொழிற்சங்கத்தில் இருக்கும் தோழர்கள் அதுவும் நமது அருமைக்குரிய அண்ணன் மாதவராஜ் போன்றோர் கேட்பார்களா? அப்படிக் கேட்டால் தா.பா-நல்லக்கண்ணு-இராமகிருஷ்ணன் வகையறாக்கள் அதற்கு வெளி என்றால் பிரபஞ்சம், கம்பெனி என்றால் காலக்ஸி, பேச்சு என்றால் லேகியம், என்று ஒரு பதிலை வைக்க மாட்டார்களா என்ன?
“பொங்கலுக்கு ஒரு வாரம் விடுப்பு, ஜல்லிக் கட்டை மீண்டும் நடத்துவோம், ரமணா படத்தைப் போல ஊழல் ஒழிப்புப் படை, இறுதியில் கேப்டன் ஆட்சிக்கு வந்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.35”க்கு கொடுப்பாராம். இவையெல்லாம் தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கோட்டை பதவியை குறிவைத்து அண்ணி முழங்கிய போர்ப்பறைகள். முகமது பின் துக்ளக் அல்லது லூயி போனபர்ட் போன்ற வரலாற்றின் கைப்புள்ளைகளை இங்கே நிஜத்தில் காண்கிறோம்.
பெட்ரோல் விலை, மின்கட்டணம் உள்ளிட்டு பல்வேறு சேவைகள், கட்டணங்கள் அனைத்தும் ஒழுங்கு முறை ஆணையங்கள் எனப்படும் முதலாளிகள், அதிகாரிகள் அடங்கிய அரசாங்கங்களுக்கு அப்பாற்பட்ட நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகின்றது. கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் தனியாருக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சட்டபூர்வமாகவே தாரைவார்க்கப்பட்டு மக்கள் நலன் சமாதியாகும் காலத்தில் இப்படி பச்சையாக பொய்யுரைக்க முடியுமென்றால் அதை என்னவென்று சொல்வது?
எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் விஜயகாந்த் சட்டசபைக்கு போனாரா, பேசினாரா என்று ஜெயாவின் பாசிசத்தை சிறந்த ஆட்சி நிர்வாகம் என்று ஏற்றுக் கொண்ட அறிவுஜீவி அடிமைகள் கேட்கிறார்கள். ஆனால் ஒரு எதிர்க்கட்சி என்ற முறையில் தே.மு.தி.க என்ன போராட்டத்தை நடத்தியிருக்கிறது?
கோவன் கைதைக் கண்டித்த அறிக்கையைத் தாண்டி தமிழகத்தில் ஒரு டாஸ்மாக் கடையைக் கூட இவர்கள் ஏன் உடைக்கவில்லை? பெட்ரோல் விலை உயர்வைக் குறைப்பதற்கு முன்னால் அதை உயர்த்திய அரசை, மோடி கட்சியை எதிர்த்து இவர்கள் ஏன் சுண்டுவிரலை கூட அசைக்கவில்லை?
ஊழலுக்கு ரமணா படை அனுப்புவதற்கு முன்னால் ஆண்டாள் அழகர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கமால் டிமிக்கி கொடுத்ததையும், எதிர்த்துக் கேட்ட பேராசிரியர்களை ஆள் வைத்தும் அடித்தார்களே அந்த கல்லூரி ஓனரை பெண்டு கழட்ட படை அனுப்புவாரா அந்த அண்ணி?
ஜல்லிக்கட்டு நடத்துவதை உச்சநீதிமன்றம் சமாதியாக்கிய நிலையில் பிரேமலதா என்ன செய்வார்? கேப்டனை அனுப்பி உச்சநீதிமன்றத்தில் குண்டு போடுவாரா? இல்லை பாசிச ஜெயாவை விடுவித்த குமாரசாமியைக் கண்டித்து ஒரு கூட்டத்திலாவது பேசுவாரா ? பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பால் உள்நாட்டில் மூடுண்ட தொழில்களும் வேலையிழந்த தொழிலாளிகளும் வாழும் நாட்டில் இன்னும் எத்தனை பேர் தாலியை அறுக்க இவர்கள் பன்னாட்டு முதலாளிகளை அழைக்கிறார்கள்?
தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு மாற்று என்ற பெயரில் ஜெயா எதிர்ப்பு வாக்குகளை உடைக்கும் பணி இருப்பது உண்மை என்றாலும், மக்கள் நலக்கூட்டணியோ இல்லை அவர்கள் தூக்கிச் சுமக்கும் கேப்டன் அணியோ தி.மு.க – அ.தி.மு.க கட்சிகளை விட கேவலமான முறையில் இருப்பது உண்மையில்லையா?
மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கை துவங்கி, இந்துத்துவ சார்பு வரை அனைத்து பீடைகளையும் விருதுகளாக அழகு காட்டும் கேப்டன் கட்சிதான் மாற்று என்றால் ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கூண்டோடு தற்கொலை செய்து கொள்ளலாம்.
ஜே.என்.யு வளாகத்தில் வினவு குழுவினர் பார்த்த மாணவர் விடுதி அறைகளிலேயே அந்த அறை வித்தியாசமாக இருந்தது. அங்கே புத்தகங்கள் கலைந்து கிடக்கவில்லை. படுக்கை வாரிச்சுருட்டி போடப்பட்டிருக்கவில்லை. மேசையின் மீது பேனாக்கள் சிதறிக் கிடக்கவில்லை. தரை சுத்தமாக பெருக்கித் துடைக்கப்பட்டிருந்தது. பயன்பாட்டுக்கு அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே அந்த அறையில் இருந்தன. அந்த அறை மிக நேர்த்தியாகவும் எளிமையாகவும் இருந்தது. அந்த அறையில் குடியிருந்தவர் பெயர் ஷிங்லாய். மணிப்பூர் மாநிலத்தின் நாகா இன மக்கள் பிரிவைச் சேர்ந்தவர் அவர்.
வட இந்தியர்கள் உங்களிடம் எப்படிப் பழகுகிறார்கள்?
எங்களை வினோதமாக பார்ப்பார்கள். சிலர் தங்களுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்வார்கள். ’சிங்க்கிஸ்’ என்று கேலியாக அழைப்பார்கள். எல்லாரும் அப்படித் தான் என்று சொல்லி விடமுடியாது. ஆனால், அநேகமானோர் அப்படித் தான். முதலில் எனக்கு ஆத்திரமாக வந்தது. ஒரு கட்டத்தில் சண்டைக்குப் போகலாமா என்று கூட யோசித்திருக்கிறேன். பின்னர் நாட்கள் செல்லச் செல்ல ஒன்றை புரிந்து கொண்டேன்.
இவர்களுக்கெல்லாம் இந்தியா என்பது ஒரு முனையில் பஞ்சாபில் துவங்கி பெங்காலில் முடிகிறது.. இன்னொரு முனையில் உ.பி-யில் துவங்கி மஹாராஷ்டிராவில் எங்கோ முடிந்து விடுகிறது. இது ஒரு கண்ணுக்குத் தெரியாத எல்லைக் கோடு. இதற்கு வெளியே இருப்பவர்களை அவர்கள் இந்தியர்களாகவே கருதிக் கொள்வதில்லை. ஒரு கட்டத்தில், எனது தேசியத்தன்மை குறித்து நானே நீண்ட விளக்கங்கள் கொடுத்து புரியவைக்க வேண்டிய அவசியத்தை “சிங்க்கீஸ்” ரத்து செய்து விட்டதை உணர்ந்து அமைதியடைந்தேன். இப்போதெல்லாம் அப்படிக் கூப்பிடுபவர்களை நோக்கி என்னால் புன்னகைக்க முடிகிறது. நீங்கள் கூட ஒரு ’மட்ராஸீ’ தானே?
இங்கே எழுப்பப்பட்ட கோஷங்கள் குறித்த உங்கள் கருத்து எதுவாக இருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது. அதே போல் தான் இந்தியா என்கிற இந்த ஏற்பாட்டைக் குறித்து உங்கள் கருத்தையும் அனுமானிக்க முடிகிறது. எனினும், நீங்கள் ஏதும் சொல்ல விரும்புகிறீர்களா?
இந்தியா என்பது ஒரு கேலிக்கூத்தான நகைச்சுவை (Farce). இந்தியா என்பது சாவர்கருடையது. சங்பரிவாரங்களுடையது. எங்களுடையது அல்ல. நாங்கள் மாடும் பன்றியும் தின்கிறவர்கள், இந்தியை வெறுக்கிறவர்கள். தேசியம் குறித்து அவர்கள் பீற்றிக் கொள்ளும் எந்தக் கற்பிதங்களின் கீழ் எங்களை அடைக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
இதைத் தான் வேற்றுமையில் ஒற்றுமை என்கிறார்கள் அல்லவா? இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் நாமெல்லாம் இந்தியர்கள் என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றல்லவா பாட புத்தங்கள் நமக்குக் கற்பித்துள்ளன?
சரி. மங்கோலிய முகமும் உடலும் கொண்ட எனது தோற்றத்தை விடுங்கள். உணவுப் பழக்கம் குறித்து சொன்னேன். அதற்கும் மேலே எங்கள் சமூகத்தில் சாதி கிடையாது. எங்கள் திருமணங்களில் வரதட்சிணை கிடையாது. கணவனும், பிள்ளைகளும் தின்றது போக எஞ்சியதைத் தின்பதே ஒரு குடும்பப் பெண்ணுக்கு அழகு என்கிற பைத்தியக்காரத்தனங்கள் எங்களிடம் இல்லை. பெண்களுக்கு எங்கள் சமூகத்தில் அளிக்கப்பட்டிருக்கும் இடம் மிகவும் தனித்துவமானது. ஒரு குடும்பத்தின் தீர்மானங்களை எடுப்பதில் மட்டுமல்ல, எங்களது சர்ச்சுகளிலும், சமூக இயக்கங்களிலும் பெண்களின் குரலுக்கு முக்கியமான இடமுள்ளது. எங்களது பொருளாதார வாழ்வு வேறுபட்டது. எமது விவசாய முறை வேறு. இப்படிச் சொல்லத் துவங்கினால் நாள் முழுவதும் சொல்லிக் கொண்டே போகலாம். நீங்கள் என்ன செய்திருக்கிறீர்களென்றால், ஒரு கோட்டைக் கிழித்து அதற்கு உள்ளே இருப்பவர்கள் அத்தனை பேரும் இந்தியர்கள் என்கிறீர்கள். இறைவனின் கருணையால் உங்கள் கோடு துணைக் கண்டத்துக்குள்ளே மட்டும் கிழிக்கப்பட்டிருக்கிறது. ஸ்காண்டிநேவிய காகாசியர்களும் ஆப்ரிக்க கருப்பர்களும் நல்வாய்ப்பாக தப்பித்துக் கொண்டார்கள்.
நாகாக்களின் தனித்துவம் குறித்து உங்களிடம் அதிக பெருமிதம் தெரிகிறது. நாகாக்கள் வெளிநபர்கள் குறித்த அச்சம் அல்லது வெறுப்பு கொண்டவர்கள் (Xenophobic) என்று சொல்லப்படுவது உண்மையா?
பழைய காலங்களில் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது நிச்சயமாக இல்லை
என்றால் நாகாக்களிடையே கலப்புத் திருமணங்கள் உள்ளதா – குறிப்பாக குக்கி இனத்தவருடன்?
வட கிழக்கு மாணவர்களின் போராட்ட காட்சி. படம் நன்றி The Hindu
நிறைய உள்ளது. நாகா குக்கி இனத்தவரிடையே மட்டுமல்ல, சிலர் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த மைத்தாய் இனத்தவரோடும் கூட திருமண உறவை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். நாங்கள் பழங்குடி இனத்தவர்கள். எட்ட நின்று பார்க்கும் போது கொஞ்சம் கரடு முரடாகத் தெரிவோம். பழகிப் பாருங்கள் உங்களுக்கே புரியும். நாகா மக்கள் யாரையும் எளிதாக நம்பி விடுவார்கள். ஒரு தமிழராக இருந்தாலும் எங்கள் நாகா பெண்ணை காதல் திருமணம் செய்வதை நாங்கள் தடுக்க மாட்டோம். எங்கள் பெண்ணை அவர் துன்புறுத்தாமல் மகிழ்ச்சியோடு வைத்திருக்கும் வரை அந்தக் குடும்ப விவகாரத்தில் தலையிடவும் மாட்டோம். ஆனால், நீங்கள் திருமணம் செய்யப் போவது சுதந்திரமான சிந்தனைகள் கொண்ட நாகா பெண் என்பதை மறந்து விடாதீர்கள். அவள் ஒரு அன்பான அடிமையாக இருக்க மாட்டாள். இந்தியர்களால் எங்கள் பெண்களை சமாளிக்க முடியாது என்பதே எனது புரிதல்… சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்.
ஒரு குடும்பத்தின் அங்கமாகவும் சமூகத்தின் அங்கமாகவும் நாகா பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சம உரிமை குறித்து குறிப்பிட்ட ஷிங்லாய், பல்வேறு சமூக அமைப்புகள் பெண்களாலேயே முழுவதுமாக நடத்தப்படுகின்றது என்பதையும் குறிப்பிட்டார். குறிப்பாக நாகா தாய்மார்கள் சங்கத்திற்கு அவர்கள் சமூகத்தில் உள்ள செல்வாக்கைப் பற்றியும் குறிப்பிட்டார்.
வேறுபாடுகள் பற்றிக் குறிப்பிட்டீர்கள். உங்களது விளையாட்டுக்களைப் பற்றிச் சொல்லுங்கள். கிரிக்கெட் பார்ப்பதுண்டா? இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடும் போது உங்களுக்கு அந்தப் பரபரப்பு இருக்குமா?
கிரிக்கெட்டா? அது மந்த புத்திக்காரர்களின் விளையாட்டு. அதனால் தானோ என்னவோ இந்தியர்களுக்கு அது மிகவும் பிடிக்கிறது. நாங்கள் கிரிக்கெட் பார்ப்பதும் இல்லை. விளையாடுவதும் இல்லை. அதே போல இந்தியாவின் மற்ற விளையாட்டு வெற்றிகளையும் தோல்விகளையும் உங்களைப் போல் உணர்வுப் பூர்வமாக அல்லாமல் ஒரு விளையாட்டு என்கிற அளவில் மட்டுமே பார்க்கிறோம். எங்கள் விளையாட்டுக்கள் மல்யுத்தமும் வில்வித்தையும் தான். இப்போது மேற்கத்திய கலாச்சார தாக்கத்தினால் கால்பந்தாட்டம் பரவலாக விளையாடப்பட்டு வருகிறது. வாலிபால் மற்றும் பாஸ்கட்பால் கூட நிறைய பேரால் விளையாடப்படுகின்றது. பொதுவாக எங்கள் விளையாட்டுக்கள் உடல் வலிமையைச் சார்ந்ததாகவே இருக்கும்
ஆம்.. நாகா தற்காப்புக் கலை பற்றிய காணொளித் துண்டு ஒன்றைப் பார்த்திருக்கிறோம். கொடூரமான அசைவுகள் கொண்டதாக இருந்த நினைவு.
சரி தான். அலங்காரமான அசைவுகளும் நுணுக்கங்களும் குறைவாகவே இருக்கும்.. நேரடியாக உயிரைப் போக்கும் அசைவுகள் கொண்டதாகவும் இருக்கும். எங்களது பாரம்பரிய மல்யுத்தமும் அப்படித்தான்.. புள்ளிகள் எடுப்பதை விட எதிராளியின் எலும்பு இணைப்புகளை முறித்துப் போடுவதற்கு தான் வீரர்கள் முனைவார்கள். நண்பரே… நாங்கள் வேட்டைக்காரர்கள்… எங்களது சண்டைக் கலைகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பீர்கள்? ஆனால் அதெல்லாம் சில பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கதை. இப்போது நிறைய மாறியுள்ளது.. எங்களது தற்காப்புக் கலைகள் விளையாட்டின் அம்சங்களை நிறைய உள்வாங்கி இருக்கிறது.
உங்கள் பொழுது போக்கு பற்றிச் சொல்லுங்கள். பாலிவுட் சினிமாக்கள் பார்ப்பதுண்டா?
இந்தி சினிமாக்களை நாங்கள் விரும்புவதில்லை.. மொழி புரியாது என்பது ஒரு காரணம்.. அடுத்து பாலிவுட் சினிமாக்களில் காட்டப்படும் காதல், குடும்பம் போன்ற உணர்ச்சிகள் குமட்டலை ஏற்படுத்துவதாக இருப்பது இன்னொரு காரணம். மற்றபடி ஹாலிவுட் சினிமாக்களும் இப்போது சமீபத்திய சில ஆண்டுகளாக கொரிய சினிமாக்களும் தான் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.
இந்தி தெரியாது என்றா சொல்கிறீர்கள்? உங்கள் மாநில கல்வித் திட்டத்தில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுவதாக அல்லவா கேள்விப்பட்டோம்?
இந்தி திணிப்புக்கு எதிராக டெல்லி பல்கலைகழகத்தில் வடகிழக்கு மாணவர்கள் நடத்திய போராட்டம்!
ஆம் எட்டாம் வகுப்பு வரை இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள். ஆனால், அது இந்தி மொழியில் ஆனா ஆவன்னா அளவுக்கு மேல் தெரிந்து கொள்ளப் பயன்படாது. எங்கள் மொழியின் கட்டுமானமே இந்திய மொழிகளுக்கு நேர் எதிரானது. எனவே எத்தனை ஆண்டுகள் படித்தாலும் அந்த மொழியே எங்கள் நாக்குக்கு விரோதமானது தான்
சரி, நாகா சமூகத்தில் உள்ள சொத்துடைமை மற்றும் விவசாய முறை பற்றி சொல்லுங்கள். உங்கள் சமூகத்தில் தனிச்சொத்துடைமை இல்லை என்று சிலர் குறிப்பிடுவது உண்மையா?
முற்றிலும் அப்படிச் சொல்ல முடியாது… எங்களிடம் நான்கு வகையான சொத்துடைமை வடிவங்கள் உள்ளன. ஒவ்வொரு தனிநபருக்கும் தனியே சொத்து உண்டு. அது போக குடும்பத்திற்கான சொத்து, இனத்திற்கான (Clan) சொத்து மற்றும் கிராமத்திற்கான சொத்துக்களும் இருக்கின்றன.
குழப்பமாக இருக்கிறது. இதில் கிடைக்கும் வருமானம் எப்படி பகிர்ந்து கொள்ளப்படுகின்றது?
அதைப் புரிந்து கொள்ள நீங்கள் முதலில் எங்களது விவசாய முறையைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது விவசாயம் இடம்மாறும் சாகுபடி (Shifting Cultivation) என்று அழைக்கப்படுகின்றது. உதாரணமாக, எங்கள் கிராமத்தைச் சுற்றிலும் பத்து மலைகள் இருக்கின்றது என்று வைத்துக் கொள்ளுங்கள்.. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மலையை சாகுபடிக்காக எங்கள் கிராம கவுன்சில் தேர்ந்தெடுக்கும். இது பிப்ரவரி மாதம் நடக்கும். தேர்தெடுக்கப்பட்ட மலையில் உள்ள மரங்கள் மற்றும் களைகளை தீயிட்டு எரிப்போம். முதல் மரத்தை வெட்டும் உரிமை கிராமத் தலைவருக்கே உண்டு. மரங்கள் எரிந்து சாம்பல் பரவிய பின், ஜூன் மாதம் விதைப்போம் ஆகஸ்டில் ஒரு முறை களையெடுப்போம். இடையில் ஜூலை மாதம் தொடங்கி பருவ மழை பொழியத் துவங்கும். செப்டெம்பர் இறுதியிலிருந்து நவம்பருக்குள் அறுவடை முடிந்திருக்கும்..
எங்களது விவசாயத்தில் பெரும்பாலும் நெல் சாகுபடிக்கு முதன்மையான இடம் உண்டு. அது தவிர வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளும் சாகுபடி செய்வோம். அறுவடை செய்த பின் விளை பொருட்களை ஊரில் பொதுவான இடத்தில் சேமித்து வைப்போம். சிலருக்கு நிலம் இருக்கும். சிலருக்கு நிலம் இருக்காது.. நிலம் வைத்துள்ளவர்கள் தங்களது சொந்த நிலத்தில் உழைத்தது போக கிராம நிலத்திலும், இனத்திற்கான நிலத்திலும் உழைக்க வேண்டும். நிலமற்றவர்கள் நிலவுடைமையாளர்களின் நிலங்களின் வேலை செய்வதோடு பொது நிலங்களிலும் வேலை செய்வார்கள். அறுவடை முடிந்த பின் விளைச்சல் எல்லோருக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும். நிலவுடைமையாளர்களுக்கு மற்றவர்களை விட கொஞ்சம் கூடுதல் பங்கு கிடைக்கும். எனினும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிகப் பெரியளவில் ஏற்றத்தாழ்வுகள் இருக்காது.
இந்த முறையினால் தான் எங்கள் சமூகத்தில் ஊட்டச்சத்துக் குறைபாட்டையோ, ஏழைகளையோ, பிச்சையெடுப்பவர்களையோ பசியால் வாடுபவர்களையோ நீங்கள் காண முடியாது. எங்கள் உணவு முறை தனிச்சிறப்பானது.. பரந்து விரிந்த காடு எங்களுக்கு இருக்கிறது.. அதன் ஒவ்வொரு மரத்தின் இலைகளையும், பட்டைகளையும், வேரையும், எதற்காக எப்போது தின்ன வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும். பிரதான உணவான அரிசியோடு சேர்த்து நிறைய பச்சை இலைகளுக்கும், இறைச்சிக்கும் இடமுண்டு. மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் விருப்பமான அசைவ உணவுகள். வேட்டையில் காட்டுப் பன்றிகளும், எருமைகளும் நிறைய கிடைக்கும்..
நாகா சமூக அமைப்பு பற்றிச் சொல்லுங்கள்.
நாகா ஒரு இனக்குழுச் சமூகம். ஒவ்வொரு கிராமத்துக்கும் கிராமத் தலைவர் இருப்பார். அவருக்கு வழிகாட்டுவதற்காக ஒரு கிராம கவுன்சில் இருக்கும். இந்தக் கவுன்சிலின் அதிகாரம் தான் உச்சபட்சமானது. அதே போல் நாங்கள் இனத்தால் ஒன்று என்றாலும் எங்களிடையே பல்வேறு மொழிகள் உள்ளன. கிட்டத்தட்ட 40 மொழிகள் நாகா மக்களிடையே உள்ளன. எங்கள் பக்கத்து கிராமத்தவர்கள் பேசும் மொழி எனக்குப் புரியாது. என்றாலும் எங்கள் அனைவரையும் மொழியால் இணைப்பது ஆங்கிலம் தான். தொன்னூறு சதவீதம் பேர் ஆங்கிலம் எழுத பேச படிக்கத் தெரிந்தவர்கள் தான்.
விவசாய முறை பற்றிச் சொன்னீர்கள். இத்தனை ஆண்டுகளாக இந்த விவசாய முறையில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவே இல்லையா? உலகமயமாக்கத்தின் தாக்கம் எதுவுமே இல்லையா?
நிறைய தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. நான் குறிப்பிட்ட விவசாய முறை இப்போதும் உள்ளடங்கிய பகுதிகளில் பின்பற்றப்படுகின்றது. ஆனால், தற்போது நகரங்களின் தாக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய முறையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பலரும் பழங்கள், பூக்கள் போன்ற பணப்பயிர்களை விளைவிக்கின்றனர். முன்பெல்லாம் நாங்கள் அரிசிக்காக யாரையும் எதிர்பார்க்க மாட்டோம். இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நாகா வாழ்க்கையில் பணம் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. வசதி வாய்ப்புகளை எதிர்பார்ப்பவர்கள் அதிகரித்துள்ளனர். பல நாகா இளைஞர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள்… இங்கே சீன உணவகங்களில் நீங்கள் பார்க்கிறவர்கள் எல்லாம் சீனர்கள் அல்ல, வடகிழக்கு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தான். நாங்கள் மேற்கே வருவதைப் போல பீகாரிகள் கிழக்கே வருகிறார்கள். விவசாய கூலிகளாகவும், இன்னபிற வேலைகளிலும் பீகாரிகள் அதிகரித்து வருகிறார்கள்.
உலகமயமாக்கலுக்குப் பின் பணத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டீர்கள்.. அதன் பின்விளைவுகள் பற்றிச் சொல்லுங்கள்.
எங்கள் கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை. அங்கே திருட்டு என்பதை நாங்கள் முன்பெல்லாம் கேள்விப்பட்டதில்லை. எங்கள் வீடுகளுக்கு பூட்டுக்கள் கிடையாது. இப்போதும் கூட உள்ளொடுங்கிய கிராமங்களில் பூட்டாத வீடுகளைப் பார்ப்பீர்கள். அங்கே உள்ள கடைகளில் கடைக்காரர்கள் இருக்கமாட்டார்கள். நீங்களாகவே பணத்தை வைத்து விட்டுத் தேவையான பொருளை எடுத்துப் போகலாம். கேட்பதற்கு ஏதோ உட்டோபிய நகரத்தைப் பற்றிய வர்ணனை போல் தோன்றுகிறதல்லவா? ஆனால் இவையெல்லாம் உண்மைகள். இதோ உங்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கிறாரே இந்த தோழர் இதையெல்லாம் நேரடியாகவே பார்த்திருக்கிறார். ஆனால்.. இப்போது நகரங்களுக்கு அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலைமை மாறி வருகிறது. திருட்டு அதிகரித்திருக்கிறது. பணம் தன்னோடு சேர்த்து பேராசையையும், களவையும் அழைத்து வந்துள்ளது.
சரி, அடுத்த கேள்வி. எங்கள் பகுதியில் இந்துத்துவர்கள் கிருத்துவ மதமாற்றத்தின் அபாயங்களைப் பற்றிச் சொல்வதற்கு வட கிழக்கு இந்தியாவையே உதாரணமாக காட்டுவார்கள்..
அப்படியா? எந்த மாதிரியான அபாயங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்?
நாகா பிரிவினைவாத அமைப்புகளுக்கு துப்பாக்கி சப்ளையே சர்ச்சுகளின் மூலம் தான் நடக்கிறதாமே? கிருத்துவ மதத்திற்கு மாறி விட்டால் தேசத்தையே மதிக்காத போக்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்று விடும் என்பதற்கு நாகா பிரிவினைவாத அமைப்புகளே உதாரணம் என்கிறார்கள்
ஏசுவே.. ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதி தங்களுக்குச் சொந்தமில்லாத தேசிய கற்பிதங்களை ஏன் மதிக்க வேண்டும்? இதில் மதம் எங்கே வந்தது? நாகா விடுதலை இயக்கங்கள் துப்பாக்கிகளுக்காக சர்ச்சுகளை ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சர்ச்சுகளை அவர்கள் ஆயுதங்களுக்காக சார்ந்திருந்தார்களென்றால் எப்போதோ வீழ்த்தப்பட்டிருப்பார்கள். நாங்கள் பெரும்பான்மையாக சி.என்.ஐ (தென்னிந்தியாவில் சி.எஸ்.ஐ) சர்ச்சுகளைச் சேர்ந்தவர்கள்.. கணிசமாக கத்தோலிக்கர்களும் உள்ளனர். விடுதலை இயக்கங்களின் பால் சர்ச்சுகளுக்கு அனுதாபம் உள்ளதே தவிர நேரடியாக கீழே இறங்கி ஆயுதங்களை கைமாற்றி விடுமளவிற்கு அவர்கள் முட்டாள்கள் அல்ல. ஏனெனில், இந்தியா முழுவதும் அவர்களுக்கு சொத்துக்களும், இன்னபிற நலன்களும் உள்ளன. எங்களை ஆதரிக்கப் போய் அவற்றையெல்லாம் இழப்பதற்கு சர்ச் என்பது முட்டாள்களின் கூடாரமா என்ன?
மற்றபடி நாகா வாழ்வில் கிருஸ்தவத்தின் பங்கு என்ன?
கிருஸ்தவம் அறிமுகமாவதற்கு முன் நாங்கள் இயற்கை வழிபாட்டாளர்களாக இருந்துள்ளோம். கிருஸ்தவம் நாகா சமூகத்திற்கு அறிமுகமான போது எங்களது கலாச்சார அடிப்படைகளை பெரிதும் மாற்றாமல் பல அம்சங்களை உட்செறித்துக் கொண்டது. உதாரணமாக எங்கள் பாரம்பரிய வழக்கங்கள், விழாக்கள்.. மற்றபடி மற்ற பகுதிகளில் சர்ச்சின் செல்வாக்கு எப்படியோ அப்படித்தான். பிறப்பு முதல் இறப்பு வரை சகலமும் சர்ச்சோடு பிணைந்தே இருக்கும்.
கடந்த இருபதாண்டுகளாக எல்லா மதங்களிலும் அதிதீவிர தூய்மைவாத போக்கு தலையெடுத்து வருகின்றது.. இசுலாத்தில் வஹாபியப் போக்கு, இந்துத்துவத்தின் எழுச்சி.. கிருஸ்தவத்தில் பெந்தெகொஸ்தேவினர் உள்ளார்கள்.. வட கிழக்கில் நாகாக்கள் இடையே பெந்தெகொஸ்தேவினரின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?
பெந்தெகொஸ்தே என்று மட்டும் சொல்ல முடியாது.. பொதுவாகவே இவாஞ்சலிஸ்ட் வகைப்பட்ட கிருஸ்தவ சபைகள் மெல்ல மெல்ல செல்வாக்குப் பெற்று வருகின்றன. கத்தோலிக்கர்களிடையே கூட ப்ரெஸ்பெடீரியன் என்ற ஒரு பிரிவு செல்வாக்கு பெற்று வருகின்றது. இவர்களை கத்தோலிக்க பெந்தெகொஸ்தே என்று சொல்லலாம். இவர்கள் யாருக்கும் பதிலளிக்கவோ கணக்குக் காட்டவோ தேவையில்லை. இவர்களைப் பொறுத்தவரை தங்களை கடவுளுக்கு நிகரான ஞானிகளாகவும் எதிரே அமர்ந்திருப்போரெல்லாம் சாத்தானுக்கு நிகரான பாவிகளாகவும் கருதிக் கொள்கிறார்கள். இவர்கள் எதிர்காலத்தில் ஆபத்தான சக்திகளாக வளர்வதற்குரிய எல்லா தகுதிகளையும் கொண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கின்றது – அதே நேரம் நான் பைபிள் சொல்லும் படைப்புக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கடவுள் மனிதனுக்கு மூளையைக் கொடுத்திருப்பதே எது சரி எது தவறு என்று பகுத்தறிவதற்காகத் தான். உழைக்காமல் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டு மட்டும் இருந்தால் சாப்பாட்டு மேசை நிறைந்து விடுமா என்ன?
சரி, இந்திய அரசோடு நாகா போராளி இயக்கங்கள் செய்து கொண்டுள்ள அமைதி ஒப்பந்தம் குறித்து சொல்லுங்கள்.
அதை அமைதி ஒப்பந்தம் என்று அழைக்க முடியாது.. இப்போதைக்கு அது அமைதி ஒப்பந்தத்திற்கான ஒரு வரைவுச் சட்டகம் தான். இந்தச் சட்டகத்துக்குள் இந்திய அரசு சொருகப் போவது ஒரு நாகாவின் புகைப்படத்தையா அல்லது மோடியின் புகைப்படத்தையா என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. மேலும், நீங்கள் ஒன்றை கவனிக்க வேண்டும்.. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பிரதமர் அல்ல. பிரதமரின் முன்னிலையில் ஒரு அதிகாரி தான் கையெழுத்திட்டிருக்கிறார். ஒருவேளை மோடியே கையெழுத்திட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்
நீங்கள் மோடியின் மேல் நம்பிக்கையோடு இருப்பதாகத் தெரிகிறதே..
நிச்சயமாக நாங்கள் நம்பிக்கையோடு இருக்கிறோம்.
ஜே.என்.யு வளாகத்தில் மோடிக்கு இப்படி ஒரு ஆதரவா? அதுவும் ஒரு நாகா இளைஞர் மோடியை ஆதரிப்பதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது…
பலமாகச் சிரிக்கிறார்.. மோடி ஆதரவு என்பதை அப்படியே இந்துத்துவ ஆதரவு என்று புரிந்து கொள்ளப் போகிறீர்கள். இந்துத்துவ பாசிசம் என்கிற கருத்தியலில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.. ஆனால், இதில் குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒரு விசயம் இருக்கிறது. இதே காங்கிரஸ் அரசாங்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள் நாங்கள் மெனக்கெட்டு நாகாக்கள் என்பவர்கள் யார் தெரியுமா? என்பதில் ஆரம்பித்து நாங்கள் தனித்துவமானவர்கள் என்பதை புரியவைக்க மொத்த கதையையும் விளக்க வேண்டும். அவர்கள் எல்லா கதைகளையும் கேட்டு விட்டு, கடைசியில்.. ‘இத்தனை வேற்றுமைகள் இருந்தாலும் நாமெல்லாரும் இந்தியர்கள் தானே’ என்பார்கள்.. மீண்டும் வேறு விதமாக புரியவைக்க மெனக்கெட வேண்டும்.. இந்துத்துவ சக்திகளிடம் அந்த சங்கடங்கள் இல்லை.. ‘ஏய், இதோ பார் நாங்கள் மாடு தின்போம், எங்களிடம் சாதி இல்லை’ என்று மட்டும் சொன்னால் போதும். ‘அட, இது பாரதிய கலாச்சாரம் இல்லையே’ என்று கதையின் விடுபட்ட பகுதிகளை அவனே நிரப்பிக் கொள்வான். இந்திய தேசியம் என்பதற்கு அவர்கள் சொல்லும் எந்த வரையறைக்குள்ளும் நாங்கள் இல்லாதிருக்கும் ஒரே தகுதி போதும் நாங்கள் இந்தியர்கள் அல்ல என்று அவர்கள் ஏற்றுக் கொள்வதற்கு. ’நாங்கள் இந்தியர்களில்லை. கெடு வாய்ப்பாக எங்கள் நிலத்தின் மீது நீங்களே கோடு கிழித்து இந்தியாவாக்கி விட்டீர்கள். என்ன செய்யலாம் சொல்லுங்கள்’ என்று நேரடியாக விசயத்திற்குப் போய் விடலாம். சொல்லப் போனால் இந்துத்துவம் அதிகாரத்தில் இருப்பது பொதுவான நோக்கில் தீமையானது என்றாலும், பிரிவினை உரிமை கோரும் மக்களின் பணிகளை அவர்கள் சுலபமாக்குகிறார்கள்.
JNU – வளாகத்தில் இயங்கும் டி.எஸ்.யூ எனும் மாணவர் இயக்கத்தின் சுவரொட்டி!
சரி நாகா – குக்கி மோதல்கள் குறித்து சொல்லுங்கள்?
நாகா குக்கி மோதல்கள் மட்டுமல்ல.. வடகிழக்கில் உள்ள இனக்குழுக்களுக்கு இடையே சண்டைகள் உள்ளேயே நடக்கும் மோதல்கள் மொத்தமும் இந்திய உளவுத்துறையின் ஏற்பாடு தான். சமீபத்தில் இந்திய இராணுவ உயரதிகாரி ஒருவர் வெளிப்படையாகவே பேட்டியளித்துள்ளார். அதில், ‘நாங்கள் நாகாக்களின் நிலங்களில் திட்டமிட்ட ரீதியில் குக்கி இனத்தவரைக் குடியமர்த்துவதில் வெற்றி பெற்றுள்ளோம். இனி நாகாக்கள் விடுக்கும் சவாலை குக்கி இனத்தவரே எதிர்கொண்டு விடுவார்கள்’ என்றுள்ளார். ஆனால், நாகா குக்கி மோதல்கள் இப்போது பழங்கதைகள் ஆகிவிட்டன. நாங்கள் அந்த கசப்பான நினைவுகளை மறக்கத் துவங்கி விட்டோம். சமீபத்தில் கூட ஒரு குக்கி இளைஞன் இராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நாகா கவுன்சிலைச் சேர்ந்தவர்கள் தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினார்கள்.
முழுக்க முழுக்க இந்திய அரசின் சதி மட்டும் தான் காரணமா? நீங்கள் எந்த வகையிலும் பொறுப்பில்லையா?
அந்த மோதல்களுக்கு ஏற்பாடு செய்து களம் அமைத்துக் கொடுத்தது இந்திய உளவுத்துறை என்றாலும் நாங்கள் இருவருமே அந்தச் சூழலுக்குப் பலியாகிப் போனோம். இப்போது நிதானமாக வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது மிகவும் வெட்கமாக உணர்கிறேன். குறுகிய இனப் பெருமைக்காக எதிரிக்கு எதிராக பிளவுபட்டு நின்று மோதிக் கொண்டு செத்து மடிந்திருக்கிறோம் என்பது அவமானகரமானது.. ஆனாலும், வரலாறு வரலாறு தானே? இனிமேல் நடந்தவற்றைத் திருத்தி எழுதவா முடியும். கடந்த காலங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு மேலே செல்ல வேண்டியது தான்.
மைத்தாய் இனத்தவரோடு உங்கள் உறவு எப்படி உள்ளது. குறிப்பாக ஐரோம் சர்மிளாவின் போராட்டம் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள். நாகா இனத்தவர்கள் ஐரோம் சர்மிளாவிற்கு பெரியளவில் ஆதரவளித்து களமிறங்கியதாக தெரியவில்லையே?
நாகா குக்கி இனத்தவர்கள் பழங்குடியினர்.. நாங்கள் மலைவாசிகள். எங்களுக்குள் சமூக அமைப்பில் இருந்து பல அம்சங்கள் ஏறத்தாழ ஒத்துப் போகும். ஆனால், மைத்தாய் சமவெளி மக்கள். இவர்கள் பெங்காலி வகைப்பட்ட இந்து மதத்தின் செல்வாக்குக்கு உட்பட்டவர்கள். மைத்தாய்களிடையே சாதி உள்ளது. சரியாக சொல்லப் போனால், இத்தனை ஆண்டுகளாகியும் மைத்தாய் மக்கள் எங்களை தீண்டத்தகாதவர்களாகவே நடத்துகிறார்கள். எங்களுக்குள் கலப்புத் திருமணங்கள் மிக அரிதாகவே நடக்கின்றன. குக்கிகளைப் போல் அன்றி மைத்தாய் மக்களிடம் நாங்கள் நெருங்குவதற்கான சமூக வாய்ப்புகளே குறைவு தான். ஐரோம் சர்மிளா ஒரு மைத்தாய் என்றாலும் அவரது போராட்டத்தை நாங்கள் அனுசரணையாகவே பார்க்கிறோம். இருந்தாலும், அவருக்கு இந்தியா முழுவதும் கிடைத்திருக்கும் கவனத்தை எங்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்காக பயன்படுத்தவில்லை என்கிற் வருத்தம் எங்களுக்கு உண்டு.
மைத்தாய் இனத்தவரோடு இணைந்து போராட்டங்கள் நடக்கின்றனவா?
இல்லை. நாங்கள் இன்னும் எமது பழைய கசப்புணர்வுகளை மறக்கவில்லை.
சற்று முன்பு தான் சொன்னீர்கள், எதிரிக்கு எதிரே இணைந்து போராடாமல் உள்ளடிச் சண்டைகளின் பாதிப்பு குறித்து. இவ்வளவு ஒற்றுமையின்மைகளை வைத்துக் கொண்டு உங்கள் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்றா கருதுகிறீர்கள்?
முடியாது என்பதே தர்க்கரீதியாக நடைமுறை ரீதியாக கிடைக்கும் விடை. மட்டுமின்றி எங்களது வரலாற்று அனுபவங்களும் அதே விடையைத் தான் தருமின்றன. எனினும், எதார்த்தமான களநிலவரம் நாங்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டு எங்களுக்குள் அடித்துக் கொள்வதாகத் தான் உள்ளது. இது எங்களுக்கு மட்டுமல்ல, வலுவான எதிரியை எதிர்த்து போராடும் ஒடுக்கப்படும் பிரிவினர் ஒவ்வொருவரும் இவ்வாறு பிரிந்தே கிடக்கிறார்கள். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கூட அப்படித்தான் இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை இடதுசாரிகள் எழுச்சி பெற்று போராடும் பிரிவினர் அனைவரையும் ஒன்றிணைப்பது தான் நினைத்துப் பார்க்கக் கூடிய ஒரு தீர்வாக நம் கண் முன்னே இருக்கிறது.. அதுவரை என்ன செய்வது?
காட்ஸ் ஒப்பந்தம்:அரசுக் கல்வியைத் தூக்கிலிடுகிறார் மோடி! பாகம் -2
கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தார் நாட்டுத் தலைநகர் தோகா-வில் நடந்த உ.வ.க.வின் நான்காவது அமைச்சர்கள் மாநாட்டில், ஏழை நாடுகளுக்கு வளர்ச்சியைக் கொண்டு வரப் போவதாகச் சொல்லிக் கொண்டு தோகா வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்பட்டது. உண்மையில், இது ஏழை நாடுகளை ஏகாதிபத்தியங்கள் விரித்த வலையில் சிக்க வைக்கும் தந்திரமாகிப் போன நிலையில், உ.வ.க.வில் வர்த்தகத்தோடு சேவைத் துறைகளையும் சேர்க்கும் காட்ஸ் ஒப்பந்தம் இறுதியாக்கப்பட்டது. இதனையடுத்து, முந்தைய காங்கிரசு கூட்டணி அரசு இந்தியக் கல்வித் துறையை காட்ஸ் ஒப்பந்தத்தின் கீழ் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குத் திறந்துவிடும் முன்மொழிதல்களை உ.வ.க.விடம் அளித்து, அது குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தத் தொடங்கியது.
ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் கடந்த ஆண்டு டிசம்பர் 15 முதல் 19 வரை நடந்த உ.வ.க.வின் பத்தாவது அமைச்சர்கள் மாநாட்டில் கல்வி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அம்மாநாட்டில் கல்வி குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்ற போதும், மோடி அரசு கல்வித் துறையை காட்ஸ் பேச்சு வார்த்தைகளிலிருந்து விலக்கிக் கொள்ளவுமில்லை.
பேராசிரியர் அனில் சடகோபால் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆற்றிய இவ்வுரை நைரோபி மாநாட்டிற்கு முன்னதாக நடைபெற்ற ஒன்றாகும். இதனை மனதிற்கொண்டு வாசகர்கள் இக்கட்டுரையை வாசிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
– புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு
கடந்த 2005-ஆம் ஆண்டில், அன்று ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசு உலக வர்த்தகக் கழகத்தில் கல்வித் துறை சார்பாக சில முன்மொழிதல்களை வழங்கியது. அவற்றை வருகின்ற டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி நைரோபியில் நடைபெறும் உலக வர்த்தகக் கழக மாநாட்டிற்கு முன்னதாக இந்தியா திரும்பப் பெறாவிட்டால், அவற்றை இந்தியா இனித் திரும்பப் பெறவே முடியாது; அவற்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என நிர்பந்திக்க உலக வர்த்தகக் கழகத்திற்கு உரிமை உண்டு.
பேராசிர்யர் அனில் சடகோபால்.
விவசாயிகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் வழங்கி வரும் மானியங்களை இரத்து செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் முன்மொழிதல்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட தோகா சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஆரம்பித்து இன்று வரை உலக வர்த்தகக் கழகத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் இழுபறியாக விவாதிக்கப்படுவதால், இதுவரை 2005 முன்மொழிதல்கள் குறித்து இறுதி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. ஆனால், வரும் டிசம்பர் 15 கூட்டத்தில் தோகா சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்தாலும், முடிவடையாவிட்டாலும் உலக வர்த்தகக் கழகத்தில் நிலுவையில் உள்ள அனைத்து முன்மொழிதல்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அறிவிக்கப்படும். அவற்றின் மீது அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காட்ஸ்-இல் கல்வித்துறையை ஒப்படைக்காமல் இருக்க முடியுமா என்று கேட்டால், நிச்சயமாக முடியும் என்று சொல்வேன். 2003-ஆம் ஆண்டிலேயே ஒட்டுமொத்த ஆப்பிரிக்க யூனியனும் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டன. காட்ஸிடம் கல்வித்துறையை ஒப்படைத்தால், அது ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளின் கல்வியையே சாகடிப் பதற்குச் சமம் எனக் கூறி நிராகரித்துவிட்டன. அது போல, இங்கிலாந்து உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் காட்ஸிடம் கல்வியை ஒப்படைக்க மறுத்துவிட்டன. ஆக, உலக வர்த்தகக் கழகத்தில் தமது நாட்டுக் கல்வித்துறையை ஒப்படைக்க 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மறுத்துவிட்ட நிலையில், இந்தியா ஒப்படைக்க முன்வந்தது. 2005-ஆம் ஆண்டு உலக வர்த்தகக் கழகத்தில் நமது நாட்டு கல்வியை அடகு வைத்தது, மிகவும் இரகசியமாக, நாடாளுமன்றத்துக்கே கூடத் தெரியாத வண்ணம் திட்டமிட்டு முடிக்கப்பட்டது.
மேலும், காட்ஸிடம் கல்வியை ஒப்படைக்கும் விதிகளின் ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து முதல் ஆறு அம்சங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும் குறைந்தபட்ச வசதியும் இருந்தது. ஆனால், அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் முழு சரணடைவையே இந்தியா தேர்ந்தெடுத்துள்ளது. ஆனால், கல்வியை காட்ஸ் உடன் இணைக்கச் சம்மதித்துள்ள சீனா, இதில் பல விதிவிலக்குகளைத் திறமையுடன் பயன்படுத்திக் கொண்டது. இதன்படி, சீனா இந்தியாவில் முதலீடு செய்யலாம்; ஆனால், இந்தியா சீனாவில் முதலீடு செய்ய இயலாது.
தந்திரமாக எழுதப்பட்டுள்ள காட்ஸ் ஆவணத்தின் புதிரை விடுவிப்பது சிரமமாயினும், அதன் இரண்டு விதி களைப் பற்றிக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். அதில் தேசியத் தன்மையோடு நடத்துதல்” எனும் (National Treatment) பிரிவு முக்கியமானது.
புதிய தாராளவாதத்தின்” மொழிப்படி இது அந்தந்த நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட இருக்கும் பிரிவு என நினைத்தால், அது தவறானதாகும். மாறாக, இப்பிரிவு அதற்கு நேரெதிரான அம்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தேசியத் தன்மையோடு நடத்துதல் என்பதன்படி, கல்வி உட்பட அனைத்து சேவைத் துறைகளிலும் அதன் உறுப்பு நாடுகள் புதிதாகத்திட்டம், கொள்கைகளை வகுக்கும் போதோ அல்லது நிதி ஒதுக்கீடு செய்யும் போதோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சமமான ஆடுகளத்தை” (level playing field) வழங்க வேண்டும். நமது அரசியலமைப்பு அனைத்து மக்களையும் சமத்துவத்தோடு அணுக வேண்டும் என்கிறது. ஆனால், அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதேசமயம், கார்ப்பரேட் துறைகளுக்கு இச்சமத்துவத்தை வழங்க நமது அரசு ஒப்புக் கொண்டுள்ளது. நமது அரசியலமைப்பின் மதிப்பீடுகள் எப்படித் தலைகீழாய் மாறியுள்ளன என்பதை இதன்மூலம் கண்கூடாகப் பார்க்கலாம்.
உதாரணமாக, தங்களது நூலகத்தை அனைத்து மாணவர்களுக்கும் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்த அல்லது நவீனப்படுத்த சென்னைப் பல்கலை கழகத்திற்கோ அல்லது சென்னை ஐ.ஐ.டி.க்கோ மத்திய அரசு 50 கோடி ரூபாய் கொடுத்ததென்றால், சமமான ஆடுகளத்தை வழங்குதலின்படி அதே தொகையை வெஸ்டிங் ஹவுஸ், மைக்ரோசாஃப்ட், சுசூக்கி போன்ற கார்ப்பரேட்டுகளின் கல்விநிறுவனங்களுக்கும் வழங்க வேண்டும். அதைமீறிச் சமமான ஆடுகளத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கவில்லையென்றால், மத்திய மற்றும் மாநில அரசின் எந்த கல்வி நிறுவனங்களுக்கும் நிதி உதவியோ அல்லது மானியமோ வழங்கக் கூடாது. இப்படி அனைத்து அரசு கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வந்த வளர்ச்சி நிதியோ அல்லது பல்கலைக் கழக மானிய நிதியோ நிறுத்தப்பட்டால், அவையனைத்தும் வணிகமயமாக்கலை, இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையைப் பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். ஆக, கல்வி நிறுவனங்கள் தனியார்மயமாவதோடு மட்டுமல்லாமல், அனைத்துப் படிப்புகளும் இலாபத்தை முன்வைக்கும் சுயநிதிப் படிப்பாக மாற்றப்படும்.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பான மசோதாவை எதிர்த்து அனைத்திந்திய ஜனநாயக மாணவர் அமைப்பின் சார்பாக டெல்லியில் நடத்தப்பட்ட பேரணி. (கோப்புப் படம்)
மற்றொரு பிரிவு, உள்நாட்டுக் கட்டுப்பாடு” (Domestic Regulation). இச்சொற்றொடரை உள்நாட்டில் தொழில் செய்வதற்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான சுதந்திரம் என மேம்போக்காகப் புரிந்துகொண்டால், அது தவறு. மாறாக, உள்நாட்டில் உருவாக்கப்படும் சட்டம் அல்லது கொள்கைகள் எவ்விதத்திலும் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தில் மூக்கை நுழைத்து தொந்தரவு செய்வதாக இருக்கக் கூடாது என்கிறது. காட்ஸின் “வர்த்தகக் கொள்கை பரிசீலனை இயங்குமுறை’’யானது (TPRM- Trade Policy Review Mechanism)டிவுகளை எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் எச்சரிக்கும். இவர்கள் நாடாளுமன்றத்தின் வாயிலில் உட்கார்ந்து, அவையின் விவாதங்களை உற்று நோக்கி காட்ஸிற்கு எதிரான கொள்கைகளை நாடாளுமன்றம் வகுக்காதவாறு பார்த்துக்கொள்வார்கள். காட்ஸிற்கு எதிராகச் செயல்படமாட்டோம் என உறுதியளித்திருப்பதால், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பில்லை; மீறி நடந்தால், அதை ஒழுங்குபடுத்த ஐ.ஆர்.ஏ. என்கிற தன்னாட்சி கொண்ட ஒழுங்குமுறை ஆணையம் கடிவாளத்தைப் பிடித்துக்கொள்ளும். இவ்வமைப்பு இந்திய நாடாளுமன்றம் அல்லது அதன் உறுப்பினர்கள் என யாருக்கும் கட்டுபட்டதல்ல. மாறாக, உலக மூலதனம் அல்லது அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கு மட்டுமே கட்டுபட்டது.
இதன்படி, பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய மருத்துவக் கவுன்சில், ஏ.ஐ.சி.டி.இ., இந்திய பார் கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்விக் குழு போன்றஉயர் கல்விக்கான ஒழுங்குமுறை மற்றும் மானியக்குழு உறுப்புகள் அனைத்தும் கலைக்கப்பட்டு, தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அமைக்கப்படும்.
தற்போது பா.ஜ.க அரசு கொண்டுவர இருக்கும் ஆறு மசோதாக்களும் காட்ஸிற்கு சேவை செய்யும் இலக்குடன் இருப்பவை. இதில் ஐ.ஆர்.ஏ.வை நிறுவுவதும் அடங்கும். இந்திய அரசியலைப்புச் சட்டத்திற்கு வெளியே சட்ட அங்கீகாரத்துடன் செயல்பட இருக்கும் இந்த ஐ.ஆர்.ஏ. மிகவும் அபாயகரமானது.
இப்படி அறிவின் மீது தாக்குதல் நடத்துவது மிகவும் மோசமானதாகும். ஏனெனில், நாம் உலக மூலதனம் உருவாக்கிய காட்ஸிற்கு எதிராக அவர்களின் போர் மண்டலத்திற்குள் இருந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். ஏற்கனவே பொறியில் வசமாக மாட்டிக்கொண்டதால், அங்கிருந்து கொண்டு இது பிரச்சினை அல்லது அது பிரச்சினை என்று கூக்குரலிட்டுக் கொண்டிருக்க முடியாது. ஆனால், தொடர்ச்சியாகப் போரட வேண்டியிருக்கிறது.
தற்போது வரவிருக்கிற புதிய கல்விக்கொள்கை மேற்கூறிய பின்னணியில் இருந்துதான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு சிறிய உதாரணம் போதும், அதுதான் திறன்மிகு இந்தியா” திட்டம். திறமைக்குப் பஞ்சமில்லாத நாட்டில் கொண்டுவரப்படும் திட்டங்களுக்கு இதுபோன்ற பெயரின் தேவை என்ன?
இந்தியா உலகின் மிகப்பெரிய திறன்மிகு உழைப்புச் சக்தியாக மாறும்” எனக் கூறி வரும் மோடி, இதை எப்படிச் சாத்தியப்படுத்தப் போகிறார்?
அரசுங்க கல்லூரியில் சேருவதற்குப் பெரும் எண்ணிக்கையில் காத்திருக்கும் பெற்றோர் மற்றும் மாணவர்கள். (கோப்புப் படம்)
பெரும்பான்மையான இந்தியக் குழந்தைகளைக் கல்வியிலிருந்து விலக்கி வைக்கும் பொருட்டு இது சாத்தியமாகிறது. திறமை என்பது கல்வியின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகும், ஆனால், கல்வியிலிருந்து திறனைப் பிரிக்கும் பொழுது அது திறன்மிகு உழைப்புச் சக்தி’’யாக, மோடியின் புதிய திட்டமாக உருவாகிறது. சாதி மற்றும் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து வரும் குழந்தைகளை ஐந்தாம் வகுப்பிற்கு மேல் செல்லவிடாமல், கல்வியை அவர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு அவர்களைப் பட்டறை வேலை, மின் பழுது பார்க்கும் வேலை அல்லது குறைந்த சம்பளம் கொண்ட தூய்மை இந்தியா” பணிக்குத் தேவைப்படும் திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்கும் முயற்சியே இத்திட்டம்.
மோடி குறிப்பிடுகிற இது போன்ற திறன்மிகு உழைப்புச் சக்திகள்” மிகவும் அபாயகரமானவை. ஏனெனில், திறன் படைத்த உழைப்பாளிகளுக்குச் சிந்திக்க, வினவ, மறுக்க அல்லது வாதிடக் கூடிய வழிமுறை குறித்துத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், அறிவியல்பூர்வமற்ற, கேள்வி கேட்க வழிவகையற்ற கல்வியை மட்டுமே இவர்கள் பெறப்போவதால், எக்கேள்விக்கும் இடம் கொடுக்காத, கூழைக் கும்பிடு போடும் ஏகாதிபத்தியத்திற்குத் தேவையான திறனை மட்டுமே இவர்கள் பெற்றிருப்பார்கள். அதேபோல, உங்களைப் போன்ற பலதுறைகளில் சிறந்து விளங்கும் அறிவாளிகளும் அவர்களுக்குத் தேவை. ஆனால்,சிலிகான் வேலி” போன்ற அவர்களின் ராஜாங்கத்தில் கேள்வியே கேட்காத, எல்லாவற்றிற்கும் வளைந்து போகக் கூடிய அவர்களின் கலாச்சார நெளிவு சுளிவு” தெரிந்த அடிமைகள் மட்டுமே பல இலட்சம் ரூபாய் சம்பளத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மிகப்பெரிய காங்கிரசைக் கண்டுகூட பயப்படாத பிரிட்டிஷ் அரசாங்கம் பகத் சிங் உள்ளிட்ட 12 பேரைப் பார்த்துதான் பயந்தது. அதேபோல, சிறிய அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தின் செயல்பாடுகள் ஒட்டு மொத்த ஐ.ஐ.டி. நிர்வாகம் மற்றும் மத்திய மனித வளத் துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியது. ஆகையால், நபர்களின் எண்ணிக்கை ஒன்றும் பெரிதில்லை; மாறாக, மக்களின் விடுதலைக்குப் போராடத் தேவையான விருப்பமும் துணிவும் முக்கியமானது.
வகுப்புவாதம் ஏகாதிபத்தியத்தின் ஓர் அங்கம். இந்த சமூகத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் உலக மூலதனம் தனக்கு எதிராகப் போராடவிடாமல் உழைக்கும் மக்களைத் தடுக்கிறது. சாதி, மத வகுப்பு வாதக் கலவரங்களின் மூலம் பன்முகத் தாக்குதல்களை நடத்தி இந்தியாவைப் பிரிப்பதால், அனைவரும் சேர்ந்து போராட வேண்டிய போராட்டத்தில் மக் களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைச் செய்கிறது. ஆகையால், சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் உலக மூலதனத்தின் அடியாள் என்பதை எளிதில் அறியலாம்.
டிசம்பர் மாதம், நைரோபியில் தோகா சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவதற்குள் நாம் உயர்கல்வியை காட்ஸிலிருந்து விடுவிக்க வேண்டும். தோகா சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்தாலும், தோல்வியுற்றாலும் உலக மூலதனம் மேலுமொரு புதிய உத்தியைத் தயாரித்துள்ளது. நைரோபி கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சங்கள் காட்ஸின் மூலம் நிறைவேற்றப்படும், ஏற்றுக்கொள்ளாத அம்சங்கள் டிசா’’ (TiSA – Trade in Services Agreement) என்கிற பொறியின் மூலம் நிறைவேறும். டிசா-வின்படி தோகா சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு தடங்கல் ஏற்பட்டால், உலகம் முழுதும் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு மூலதனம் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியனின் பரிந்துரைப்படி விசுவாச நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் மூலம் காட்ஸை விடக் கடுமையான டிசா அமல்படுத்தப்படும்.
பாகிஸ்தான் மற்றும் தைவானை உள்ளடக்கிய 45-க்கும் மேற்பட்ட நாடுகள் டிசா என்ற புதிய அடிமை சாசனத்தில் கையொப்பமிட இருக்கின்றன. சமீபத்தில் இதன் அபாயங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதால்தான், இதைப் பற்றி ஓரளவிற்கேனும் அறிந்து கொள்ள முடிகிறது. டிசா அமல்படுத்தப்பட்டு ஐந்தாண்டுகள் முடியும்வரை இதன் அம்சங்களை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தக் கூடாது என்கிற முன்நிபந்தனையுடன்தான் இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. டிசா-வைப் பற்றி நாடாளுமன்றம், அதன் உறுப்பினர்கள், எதிர்க் கட்சியினர், நீதித் துறையினர், ஊடகங்கள் யாரும் பேச முடியாது; அந்த அளவிற்கு முற்றிலும் இரகசியமாகவும், ஜனநாயகமற்ற முறையிலும், மக்களுக்கு அபாயகரமானதாகவும் டிசா விளங்கும். பிறகு டிசா-வில் கைச்சாத்திட்ட நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அதை உலக வர்த்தகக் கழகத்திடம் ஒப்படைக்க முன்வருவார்கள். இதற்கு முன்னுதாரணமாக டி.டி.ஐ.பி.யில் (TTIP- Transatalantic Trade and Investment Partnership) முன்மொழிந்துள்ள அம்சங்கள் பலவற்றை உலக வர்த்தகக் கழகம் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தும் சூழல் உள்ளது.
இறுதியாகச் சொல்வதென்றால், இன்றைக்கு இந்தியாவில் குறைந்த பட்சம் 400 அரசு உதவி பெறும் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன; அரசின் நிதி உதவியால் இயங்கும் கல்லூரிகள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன; தரம் வாய்ந்த பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எஸ்.சி., ஐ.ஐ.ஐ.டி., போன்றவை உள்ளன. இவையனைத்தும் இந்தியக் குடிமக்களுக்கு உரியதாகும். இக்கல்விப் புலங்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் மௌனம் சாதிக்கிறார்கள்.
இவர்களின் மௌனம் கலைக்கப்பட்டு, குறைந்தபட்சம் 10 சதவீதத்தினராவது நமக்கு இழைக்கப்பட்ட அல்லது இழைக்கப்படவிருக்கும் அநீதிக்கு எதிராகக் குரலெழுப்பினால் போதும், சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் இந்தியாவின் வல்லமை படைத்த எஜமானர்கள் தங்களது நிகழ்ச்சி நிரலை மீள்பார்வை செய்ய முன்வருவார்கள்; அதன்பிறகு இச்செய்தி வாஷிங்டன் டி.சி. மற்றும் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கியின் தலைமையகமான நியூயார்க்கிற்குத் தெரியவரும். ஆப்பிரிக்க யூனியன் காட்ஸை நிராகரிக்க முடியுமென்றால், இந்தியாவால் ஏன் முடியாது? கண்டிப்பாக முடியும். நமது ஒட்டுமொத்த உயர்கல்வியும் விலைபோவதை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவோம்.
மக்கள் அதிகாரத்தின் திருச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இரயிலில் திரும்பிய போது தோழர்கள் சிலர் களைத்துப் போயிருந்தாலும் அரசியல் விவாதங்கள், பிரச்சார அனுபவங்கள், தோழர்கள் ஆன கதை, உறவினர் எதிர்ப்பு என்று பல்வேறு அனுவபங்களை பகிர்ந்து கொண்டு வந்தனர்.
அரசியல் அறிமுகம், பாலியல் வன்முறை, திருமண முறை, சொந்த வாழ்க்கை என்றெல்லாம் பேசிய பெண் தோழர்களை மாநாட்டிற்கு புதிதாக வந்த ஒரு வந்த நண்பரின் மனைவி வியப்புடனும் விருப்பத்துடனும் பார்த்தார். தோழர் ஒருவர் மாநாட்டு அனுபவத்தையும் குறை நிறைகளையும் கேட்டுக்கொண்டு வந்தார். ஒவ்வொருவரும் தன் கருத்துக்களை பதிய வைக்கும் போது தற்செயலாக தோழர் கவியழகன் தனது அனுபவங்களை சொல்ல ஆரம்பித்தார். அது மாநாட்டிலிருந்து அவரது சொந்த கிராமத்திற்கு பயணித்தது.
மாதிரிப் படம்…
மாநாட்டில் தொழிலாளி நாகராசுவின் வாழ்க்கை கதையை கேட்டு கூட்டத்தில் அழாதவர் யாரும் கிடையாது. கிராமத்துல நூறு வயசுல இறந்தாலும் துக்கத்துக்கு வர்ரவங்க துக்கம் தொண்டைய அடைக்க அழுவதைப் பார்த்திருப்போம். அது இறந்தவருக்கான கண்ணீர் மட்டும் கிடையாது. தன்னோட வாழ்க்கையில நடந்த வேதனையான சம்பவத்துக்காகவும் தான். அதுபோல மக்களின் அழுகையும் கண்ணிரும் திருப்பூர் அனுப்புராப்பாளையம் நாகராசுக்கு நடந்த கொடுமைக்காக மட்டும் அல்ல. மாநாட்டுக்கு வந்த அனைவர் வாழ்க்கையிலும் குடிபழக்கத்தால் ஏதோ ஒரு பாதிப்பு இருந்திருக்கும். அந்த உண்மையை சோகத்துடன் பகிர்கிறது தோழர் கவியழகனின் குடும்பக் கதை.
“மாநாட்டுல பேசின திருப்பூர் நாகராசு தொழிலாளியின் கதைக்கும் எனக்கும் எந்த வேறுபாடும் இல்லை” என ஆரம்பித்தவர் தொடர்ந்து சொல்ல முடியாமல் சில கனம் அமைதியாக ரயில் ஓட்டத்தில் கடந்து செல்லும் மரங்களையே வெறிக்க பார்த்தார். கேட்டுக் கொண்டிருந்த தோழர்கள் அமைதியாகினர்.
ஒரு தோழர் அதிர்ச்சியில் சீட்டில் இருந்து எழுந்து விட்டார். யாருக்கும் மேற்கொண்டு பேச முடியவில்லை. குடியால் மக்கள் படும் துயரம் புரிந்துதான் போராட்டம். ஆனாலும் நெருப்பு சுடுமென்று தெரிவதற்கும் சுட்ட பிறகு வரும் வலியுடன் கூடிய வேதனைக்கும் உள்ள வேறுபாடு அப்போது உணரப்பட்டது. தோழர் கவியழகனோடு நெருக்கமாக பணியாற்றும் தோழர்களுக்கு கூட அந்தக் கதை தெரியாது.
“1992-வது வருசம் எனக்கு நாலு வயசு. எனக்கு மூத்தவங்க ரெண்டு அக்கா ஒரு அண்ணன், நான் கடைக்குட்டி. வாரிசு ஒருத்தராவது இருக்கணுமுன்னு அண்ணன மட்டும் உயிரோட விட்டுட்டு எங்க மூணு பேருக்கும் விஷத்த கொடுத்துட்டாங்க அம்மா. அக்கா ரெண்டு பேருக்கும் விஷமுன்னு தெரியும். எனக்கு என்னனு தெரியல கசந்துச்சு. குடிக்க முடியல. ஆனா அம்மா விடல வாய புடிச்சுகிட்டு ஊத்துனாங்க.”
“கொஞ்சம் முழுங்கிருப்பேன்னு நினைக்கிறேன். அம்மாவ தள்ளி விட்டுட்டு பக்கத்து வீட்டுக்கு ஓடிட்டேன். மருத்துவமனைக்கி தூக்கிட்டு போற வழியிலேய ஒரு அக்கா இறந்துருச்சு. அம்மாவும் இன்னொரு அக்காவும் மருத்துவமனையில சேத்தப்புறம் இறந்துட்டாங்க. நான் மட்டும் பொழைச்சிகிட்டேன்” என்று கூறிக்கொண்டிருந்தவர் விளையாடி கொண்டிருந்த ஒரு குழந்தையை நெஞ்சோடு அணைத்தபடி அமைதியானார்.
“அப்பாவுக்கு என்னையும் அண்ணனையும் அனாதையா ஆக்கிட்டோமுங்கற கவலையை விட அம்மாவ கொன்னுட்டொமுங்கற குற்ற உணர்வுதான் அதிகமா இருந்துச்சு. முன்னயை விட மொடா குடிகாரனா மாறினாரு. சாராய கடைக்கு தான் போனது போக எங்களையும் அனுப்பி வாங்கி வரச்சொல்லி குடிக்க ஆரம்பிச்சாரு.”
“அப்ப எனக்கு விவரம் தெரியாத வயசு. அப்பா சாராயம் வாங்கிட்டு வர சொல்லுவாரு வாங்கி கொடுப்பேன். எனக்கு கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பாரு. சாராயத்த வாங்கிக் கொடுக்குறதுக்காக அப்பாவ யூஸ் பன்னிக்க ஆரம்பிச்சேன். சாராயம் வாங்கி வரசொல்லி கொடுக்கும் காசுல மிச்சத்தை எதாவது வாங்கித் திங்கிறதுக்கு உதவும்கிறதுதான் அப்ப என்னோட கனவு”.
“அண்ணன் கொஞ்சம் வெவரம் தெரிஞ்ச வயசுல இருந்ததால ரொம்பவும் பாதிக்கப்பட்டான். அம்மா, அக்காங்க நெனப்புல அவனால இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியல. படிப்புல கவனம் செலுத்த முடியல, சேர்க்கை சரியில்ல, அவனும் ஒரு குடிகார தொழிலாளியா இன்னைக்கி அத்தன செறமபட்டுட்டு இருக்கான். அண்ணன் உடம்புல இல்லாத நோயே கிடையாது. அப்பா எடத்துல இன்னைக்கி அண்ணன். எல்லா வகையிலயும். குடிகாரனால் வரும் பாதிப்புல இதுதான் பெருசுன்னு தோணுது. குடும்பத்தோட அழகா கட்டுமானம் இப்படி மூர்க்கமா கொலைஞ்சு போனா அந்த வீடு கண்டிப்பா ஒரு மனநோயாளி இல்லேன்னா பைத்தியக்கார குடும்பமாத்தான் இருக்கும். வாழ்க்கையில இதுக்கு மேல சோகத்தை பாக்க முடியாதுங்கிறது இப்பத்தான் எனக்கு தோணுது”.
கதையை முடித்ததும் அவர் ஒரு கணம் கண்களை மூடினார். காற்றைக் கிழித்துக் கொண்டு ஓடிய ரயிலின் சடசடப்பு சத்தத்தை மீறி ஒரு அமைதி அங்கே குடிகொண்டிருந்தது.
– சரசம்மா
(உண்மைச் சம்பவம், பெயர் – அடையாளம் மாற்றப்படிருக்கிறது.)
கடந்த பிப்ரவரி 14, 2016 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் திருச்சியில் டாஸ்மாக் ஒழிப்பு மாநாடு நடத்தினோம். அதில் கலந்து கொண்டு பேசிய மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ, நிர்வாகக்குழு உறுப்பினர் தோழர். காளியப்பன், மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், டாஸ்மாக் பணியாளர் சங்க செயலாளர் தோழர். தனசேகரன், உதவும் கைகள் அமைப்பின் ஆனந்தியம்மாள், நாகர் கோவிலைச் சேர்ந்த வாள்வீச்சு வீரர் டேவிட் ராஜா ஆகியோர் மீது 124A (தேசத்துரோகம்), 504, 505 – 1B இ.த.ச ஆகிய பிரிவுகளின் கீழ், சுமார் ஒன்றரை மாதத்திற்குப் பின், 26.03.2016 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இம்மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் சிலரைக் குறிப்பிட்டு, ஒன்றாம் வகுப்பு மாணவி பாரதி, ஐந்தாம் வகுப்பு மாணவி காவ்யாஸ்ரீ ஆகிய சிறுமிகளையும் இவ்வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இது அப்பட்டமான அரசியல் சட்ட மீறல் மட்டுமல்ல, மாபெரும் மனித உரிமை மீறலுமாகும்.
மூடு டாஸ்மாக் மாநாட்டில் பேசியவர்கள்
மூடு டாஸ்மாக்கை எனப்பாடிய கோவன் தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அலைகள் எழுந்தன. அவரை போலீசுக்காவலில் விசாரிக்கக் கோரிய மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அதற்கு எதிரான மேல்முறையீட்டையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தில்லி ஜே.என்.யு மாணவர் கண்ணையா குமார் மீதும் அவருக்கு ஆதரவாகப் பேசிய ராகுல்காந்தி, யெச்சூரி, கேஜ்ரிவால் ஆகியோர் மீதும் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போராடும் மக்களுக்கு எதிராக போலீசு இத்தகைய கடும் சட்டப்பிரிவுகளை முறைகேடாகப் பயன்படுத்துகிறது. தேசத்துரோக சட்டப்பிரிவை ரத்து செய்யக்கோரி நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், டாஸ்மாக்கை மூடு என்று பேசியதற்காக, எங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டின் கோரிக்கையான டாஸ்மாக்கை மூடுவது என்பதைப் பரிசீலிக்காமல் பேசியவர்களை மிரட்டுவது, ஒடுக்குவது என்பது, டாஸ்மாக்கால் ஆதாயம் அடையும் சாராய முதலாளிகளுக்கும் ஊழல் ஆட்சியாளர்களுக்கும் ஆதரவாகச் செயல்படுவதாகும். இதனால் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து நாங்கள் பின்வாங்கப்போவதில்லை. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். இதுபோன்ற பொய்வழக்கு, சிறை, என்ற அசுறுத்தல்கள் மூலம் , டாஸ்மாக்குக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்க முடியாது.
தேர்தல் ஆணையத்தின் ஜனநாயக விரோத செயல்களை கண்டிக்கிறோம்.
தேர்தல் ஆணையம் சாதாரண மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் பறிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. கல்யாண வீட்டில் மைக்செட் போடுவதற்கு கூட என்னைக் கேட்டுத்தான் போட வேண்டும் என்கிறது பறக்கும் படை. தேர்தலோடு தொடர்பில்லாத டாஸ்மாக் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தடுப்பதும் சுவர் எழுத்தை அழிப்பதும் விதிமீறல் வழக்கு போடுவேன் என்று மிரட்டுவதும் சிறு வியாபாரிகள் சாதாராண நடுத்தர மக்களை குற்றவாளிகள் போல கண்காணிப்பது. பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்றவை எல்லாம் நேர்மையாக தேர்தல் நடத்தப்பட போவதுபோல காட்டும் நாடகமே.
மாற்றுக்கருத்தை பேச அனுமதிப்பதும், ஒருவரின் தவறை சுட்டிக்காட்டி விமர்சிப்பதும் தான் ஜனநாயகம். ஆனால் தேர்தலுக்கு தொடர்பில்லாத பிரச்சாரங்களைக்கூட தேர்தல் அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. இந்தப் புகாரை தேர்தல் ஆணையர் திரு.ராஜேஷ் லக்கானி பரிசிலிக்கவே மறுக்கிறார். இது ’ஜனநாயகத் தேர்தல்’ நடத்துவதாகக் கூறும் தேர்தல் ஆணையத்தின் சர்வாதிகாரப் போக்காகும்.
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை நேர்காணல்
தன்மீது யாரும் புகார் கூறாத போதே தனது காரை பரிசோதனைக்கு உட்படுத்தும் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, சிறுதாவூர் பங்களாவில் பெரும் பணத்துடன் கண்டெய்னர் லாரிகள் நிற்கின்றன என்று புகார்கள் எழுந்த பின்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஓட்டுக்கட்சிகளின் வார்டு மெம்பர் முதல் மந்திரி வரை உள்ளவர்களின் ஊழல் பணம் எந்த இடத்தில் எந்த பினாமியிடம் உள்ளது என்பது தெரிந்தும் பறக்கும் படை நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரிடம் 30000 கோடி வரை போயஸ் தோட்டத்தாய் ‘விசாரிக்கப்பட்டு’ எழுதி வாங்கப்படுவதாக நாடு முழுவதும் செய்திகள் வந்த போதும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ஜெயலலிதா அரசின் மாவட்டச் செயலாளர்கள் போல செயல்பட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் தற்போதும் மாவட்ட ஆட்சியர்களாக , தேர்தல் அதிகாரிகளாக உள்ளனர். இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?
அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் நாணயத்தின் இருபக்கங்கள் என்பது ஊரறிந்த உண்மை. தேர்தலுக்கு முன்புவரை லஞ்ச ஊழலில் திளைத்த அதிகாரிகள்தான் இன்றைய தேர்தல் அதிகாரிகள் என்பதை மக்களை முட்டாள்களாக கருதுவதாகும்.
தமிழத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடிநோயாளிகளை வைத்துக்கொண்டு, டாஸ்மாக் கடையை மூடாமல் நேர்மையான தேர்தலை நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் சொல்வது மிகப்பெரிய மோசடியாகும்.
மக்கள் அதிகாரம் என்றைக்கும் இந்த அமைப்பு முறையிலான தேர்தலில் பங்கேற்காது. காரணம், இது தேர்தல் அமைப்பு முறையே தோற்றுப்போனது. இது உண்மையான ஜனநாயமும் இல்லை. அரசுக் கட்டமைப்பு முழுவதும் அதற்கு விதிக்கப்பட்ட கொள்கைகளை, விதிமுறைகளை கடைபிடிக்காது அவற்றை மீறுகிறது. மக்களுக்கு வேண்டாத சுமையாகிப்போனதுடன் எதிர்நிலை சக்தியாக மாறி நிற்கிறது. ஆற்று மணற்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாதுமணற்கொள்ளை, தனியார்கல்விக் கொள்ளை, சுற்றுச்சூழல் கேடு, என அனைத்தும் இந்த அரசு அதிகார கட்டமைப்பில் சட்டத்தை, விதிமுறைகளை மீறியே நடத்தப்படுகின்றன. நீதிமன்றமும் இவற்றை தடுக்காது இத்தகைய குற்றவாளிகளை பாதுகாக்கிறது. பாதிக்கப்படும் மக்கள் போராடினால் போலீசு பொய் வழக்குப் போட்டு அடக்குமுறை செலுத்துகிறது. நீதிமன்றம் போலீசின் இத்தகைய அடக்குமுறைகளை கண்டிக்காது போலீசோடு உடன்படுகிறது. ஒட்டுமொத்த மக்களுக்கும் நாட்டுக்கும் எதிராக மாறியுள்ள இந்த அரசுக் கட்டமைப்பை அகற்றும் போராட்டத்தில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்பதுதான் மக்கள் அதிகாரத்தின் கொள்கை நிலைபாடு. இந்த அரசுக் கட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கையும் மதிப்பும் இழந்துவிட்டார்கள். யார் வந்தாலும் எதுவும் செய்ய முடியாது என அதை தங்கள் மொழியில் பேசுகிறார்கள். தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு நிர்வாக அமைப்பு இருக்க வேண்டும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
தோழமையுடன் சி.ராஜு, வழக்கறிஞர்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
”ஊடகங்கள் எம்மை வேட்டையாடுகின்றன (Witch Hunt), அவர்கள் நோக்கங்களுக்குத் தேவையானபடி எங்கள் தோழர்களை தவறாக சித்தரிக்கிறார்கள் (Profiling), நாங்கள் ஊடகங்களால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுகின்றோம் (Media Trial)” என்பதை ஜே.என்.யு-வில் நாங்கள் சந்தித்த மாணவர்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.
ஜே.என்.யு. மாணவர்கள்
எனினும், ஜே.என்.யு விவகாரத்தில் ஊடகங்களின் போக்கு முதல் நான்கைந்து நாட்களுக்குப் பின் (பிப்ரவரி மாதத்தின் மத்தியிலிருந்து) மெல்ல ஒரு மாற்றம் ஏற்படத் துவங்கியிருந்தது. குறிப்பாக “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று மாணவர்கள் கோஷமிட்டதாக ஜீ நியூஸ், டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் மற்றும் அனேக இந்தி செய்தித் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட காணொளித் துண்டு போர்ஜரி செய்யப்பட்ட ஒன்று என்பதை ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி அம்பலப்படுதிய பின் ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்களின் அணுகுமுறை ஓரளவுக்கு மாறியது.
பாரதிய ஜனதாவுக்கு ஜீ டீ.வி சொம்பு தூக்கித் திரிந்ததைச் சகிக்க முடியாமல் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர் விஷ்வ தீபக், தனது வேலையை ராஜினாமா செய்தார். ராஜ்தீப் சர்தேசாய், சகரிகா கோஷ், சேகர் குப்தா போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆதரவான நிலையெடுத்தனர்.
ஜே.என்.யு மாணவர்கள் தங்களுக்குச் சாதகமாக ஊடகங்களின் ஒரு பிரிவு திரும்பியிருப்பதை நம்பிக்கையோடு பார்க்கிறார்கள். இந்த முறை மோடி மிகத் தவறான இடத்தில் தவறான நேரத்தில் தவறான முறையில் கைவைத்து விட்டார் என்று நினைக்கிறார்கள். தங்களது போராட்டப் பாரம்பரியத்தைப் பற்றிய முன்யோசனையின்றி அசட்டுத் துணிச்சலோடு செயல்பட்டு விட்டார் என்று கருதுகின்றனர்.
இந்துத்துவ கும்பலோ இதற்கு நேர் எதிரான கோணம் ஒன்றை முன்வைக்கின்றது. ஜே.என்.யுவின் தயாரிப்புகளே அறிவுத்துறையிலும், பத்திரிகை துறையிலும் முக்கியமான பல இடங்களை கைப்பற்றி வைத்திருப்பதாகவும், அவர்களைக் கொண்டு தங்களுக்குச் சாதகமான செய்திகளை வரவழைத்துக் கொள்கிறார்களென்றும் சொல்கிறார்கள். தேசியம் உள்ளிட்ட விசயங்களில் தாம் முன்வைக்கும் கருத்தை ஏற்காத சிறுபான்மையான பத்திரிகையாளர்களை ஊடக விபச்சாரிகள் (Prestitutes) என்று வசைபாடுகின்றது இந்துத்துவ கும்பல்.
எப்படியிருப்பினும் ஜே.என்.யு விவகாரத்தை முன்வைத்து ஊடகங்களிடையே மிகத் தெளிவான பிளவு ஒன்று ஏற்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. இந்தப் பிளவு ஜே.என்.யு விவகாரத்தைத் தொடர்ந்து வெளிப்படையாகத் தெரியத் துவங்கியுள்ளது என்றாலும், இது தனித்துவமான நிகழ்வல்ல. இந்தப் பிளவிற்கு கடந்த சில ஆண்டுகளில் அரசியல் அரங்கில் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவே இந்தப் போக்கை நாம் கருத வேண்டும்.
…
ஜே.என்.யு விவகாரத்திற்கு பின்பு என்று சொல்ல முடியாவிட்டாலும், சமீப காலமாக முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவு மோடி மற்றும் பாரதிய ஜனதா கும்பலை ஓரளவு விமர்சன கண்ணோட்டத்தோடு அணுகுகின்றன. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மீட்பராக கருதி காலில் விழுந்த ஒருவரை ஏன் இன்று விமர்சிக்க வேண்டும் என்கிற கேள்வி நம்முன் வருகிறது.
ஒருவேளை முதலாளித்துவ ஊடகங்களில் ஒரு பகுதியினர் ’திருந்தி’ விட்டனரா?
நாம் ஒரு ஏழு மாதங்களுக்குப் பின் செல்வோம். அப்போது தேசிய ஊடகங்களின் மிக முக்கிய பேசு பொருளாக இருந்தது ஷீனா போரா கொலை வழக்கு. தனது சொந்த மகளையே கொன்று விட்டார் என இந்திராணி முகர்ஜி என்பவரின் மீது போலீசார் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்திராணி முகர்ஜி ஒரு மேட்டுக்குடி சீமாட்டி மட்டுமின்றி தில்லி மற்றும் மும்பையின் ’பார்ட்டி கலாச்சார’ உலகில் புழங்கும் பெரும் புள்ளியுமாவார். அவரது கணவர் ஒரு ஸ்டார் தொலைக்காட்சியின் முன்னாள் தலைமைச் செயல் அலுவலர்.
இந்திராணியும் அவரது கணவரும்
சென்ற ஆகஸ்டு மாத முதல் வாரம் துவங்கி தொடர்ந்து தேசிய அளவிலான செய்தித் தொலைக்காட்சிகளின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நேர அடுக்கு (Prime time slot) இந்திராணி முகர்ஜிக்காக ஒதுக்கப்பட்டது. அவருடைய கதையில் விறுவிறுப்புகளையும், கவர்ச்சியையும் தேடிய ஊடகங்கள் ஆலாய்ப்பறந்து கொண்டிருந்தன.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் மட்டும் சுமார் ஒன்பது முறை வணிக முக்கியத்துவம் வாய்ந்த நேர அடுக்குகள் இந்திராணி முகர்ஜிக்காக ஒதுக்கப்பட்டன. அது தவிரஅந்தக் கொலை வழக்கே முக்கியத்தும் பெற்ற பேசு பொருளாக இருந்தது. டைம்ஸ் நவ் தொலைக்காட்சி பேசி விட்டுத் தூர எறிந்த இந்திராணியின் கதைகளைக் கைப்பற்ற மற்ற தொலைக்காட்சி சேனல்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது.
அதே காலகட்டத்தில் தான் (ஆகஸ்ட் 17ம் தேதி) கோப்ரா போஸ்ட் என்கிற புலனாய்வு இணையதளம் தனது இரகசியப் புலணாய்வு (Sting Operation) ஒன்றை வெளியிட்டது. வட இந்தியாவில் பதனி டோலா, லக்ஷ்மண்பூர் பதே போன்ற இடங்களில் தலித்துகளைக் கொன்று ரத்த வெறியாடிய ரண்வீர் சேனா என்கிற நிலபிரபுத்துவ மாஃபியா கும்பலைச் சேர்ந்த, படுகொலைகளை நேரடியாக முன்னின்று நடத்தியவர்கள் கோப்ராபோஸ்டின் இரகசிய கேமராவுக்கு அளித்திருந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் வெளியாகியது.
ரண்வீர் சேனா தலைவர் பிரம்மேஷ்வர் சிங்
அதில் தங்களது செயல்களுக்கு உள்ளூர் பாரதிய ஜனதா தலைவர்களில் இருந்து தேசிய தலைவர்கள் வரை உதவி செய்தனர் என்கிற விவரங்களும் இடம் பெற்றிருந்தன. ரண்வீர் சேனா ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு. பாரதிய ஜனதாவோ தற்போது மத்தியில் அதிகாரத்தில் இருக்கும் கட்சி.
எதார்த்தமாக பார்த்தால் இந்த சூழலில் என்ன நடந்திருக்க வேண்டும்? பாரதிய ஜனதாவை இந்த ஊடகங்கள் உண்டு இல்லை என்று கிழித்தெறிந்திருக்க வேண்டும். ஆனால், தலித் படுகொலைகளுக்கு மிக அப்பட்டமாக பாரதிய ஜனதா தலைவர்கள் உதவி செய்துள்ளார்கள் என்பது ஆதாரத்தோடு அம்பலமான அந்த வாய்ப்பை எந்த ஊடகங்கமும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இன்றைக்கு கன்னையா குமாருக்கும், ஜே.என்.யுவிற்கும் அனுசரணையான செய்திகளை வெளியிடுவதாக சொல்லப்படும் ஊடகங்களும் கூட அன்று பாரதிய ஜனதாவை அம்பலப்படுத்துவதற்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பைப் புறக்கணித்து விட்டு இந்திராணி முகர்ஜியின் மலிவான கதைதகளை தேடி வெளியிட்டு வந்தன.
கடந்த சில ஆண்டுகளாக தேசிய ஊடகங்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தன?
2 ஜி அலைக்கற்றை ஊழல் – நிலக்கரி ஒதுக்கீட்டு ஊழல் – காங்கிரசே ஊழல் – அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு – ஜன்லோக்பால் வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும் – ராம்தேவின் கருப்புப் பண எதிர்ப்பு – இந்தியாவின் பிரச்சினைகளுக்கெல்லாம் ஊழலும் கருப்புப் பணமுமே காரணம் – இதை ஒழிக்கப் போவது யார்? அன்னா ஹசாரேவுக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையே முட்டல் மோதல் – மோடி என்கிற் மீட்பரின் வருகை – மோடியும் பாரதிய ஜனதாவும் அளித்த வாக்குறுதிகள் – தேர்தலில் மோடியின் வெற்றியை முன் அனுமானித்தல் மற்றும் அவருக்கு சொம்பு தூக்குதல் – மோடியின் வெற்றி –முசாபர் பூர் கலவரம் – தாத்ரி கொலை – மாட்டுக்கறி சாப்பிடுவது தேச விரோதமா, அநாச்சாரமா? – தில்லியில் பாரதிய ஜனதா வெற்றியை முன் அனுமானித்தல் – கேஜ்ரிவால் பதவியேற்றதும் அவரைக் கிண்டல் செய்தல் – பீகாரில் பாரதிய ஜனதா வெற்றியை முன் அனுமானித்தல் – லாலு, நிதிஷ் வென்றதும் லாலுவின் பழைய ஊழல்கள் நினைவுக்கு வருவது – ரோஹித் வேமுலா – ஜே.என்.யு – சியாச்சின் பனிச்சரிவு – தேச பக்தியின் மகாத்மியங்கள்!
பல்வேறு திருப்பங்களோடு சென்று கொண்டிருக்கும் மேற்படி திரைக்கதையில் இடையிடையே “-” இந்த குறி வரும் இடங்களில் பாடலோ அல்லது கிளுகிளுப்புக் காட்சிகளோ இடம் பெற்றால் தான் பார்வையாளர்களுக்கு அலுப்பில்லாமல் இருக்கும். எனவே அவற்றை பாலிவுட் கிசுகிசு, ஹிர்திக் ரோஷனின் மனமுறிவு, கரிஷ்மா கபூரைக் கொடுமைப்படுத்தும் கெட்ட கணவன், விராட் கோலிக்கும் தோனிக்கும் இடையே நடக்கும் லடாய்கள், இந்திராணி முகர்ஜி, சல்மான் கானின் சமீபத்திய காதல் போன்றவற்றை இட்டு நிரப்பி விடுகிறார்கள்.
இப்படியாகச் சென்று கொண்டிருந்த முதலாளித்துவ செய்தித் தொலைக்காட்சிகளின் பயணத்தை இந்துத்துவ பாசிசம் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு குலைத்துள்ளது. தேசியம் குறித்த விவாதங்களிலும் சரி மற்றும் மாட்டுக்கறி போன்ற கலாச்சார விசயங்களிலும் சரி – தாம் முன் வைக்கும் கோணத்திற்கு கொஞ்சம் மாற்றிப் பேசும் பிரிவினரின் மேல் கொலை வெறியோடு விழுந்து பிடுங்கும் இந்துத்துவ கும்பல், அவர்கள் தங்களுடைய எதிரணியை நோக்கி நெட்டித் தள்ளுகின்றனர்.
தாராளவாத ஜனநாயக விழுமியங்களுக்குப் பழகிய முதலாளித்துவ ஊடகங்களின் ஒரு பிரிவினருக்கு மோடியின் பொருளாதாரக் கொள்கைகளோடு எந்த முரண்பாடுகளும் இல்லை. உலகமய பொருளாதாரக் கொள்கைகளை அமல்படுத்துவதற்குத் தேவையான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டுமென்பதிலோ, ஏகாதிபத்திய மூலதனச் சேவையிலோ மோடி ஈடுபடுவதில் இவர்களுக்கு ஒத்த கருத்து தான் உள்ளது.
2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி மூலதன உலகிற்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் வாக்குறுதிகளாகவே தேங்கி நிற்கின்றன. ஜி.எஸ்.டி மசோதா போன்ற பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை அவரே விரும்பும் வேகத்தில் அமலாக்குவதற்கு ராஜ்யசபா தடையாக நிற்கின்றது. ஏகாதிபத்திய பொருளாதாரக் கொள்கை எனும் முட்டையை இந்துத்துவ ஓட்டுக்குள் ஒளித்து கொண்டு வருவது என்கிற இந்துத்துவ கும்பலின் உத்தி பாராளுமன்ற முட்டுச் சந்துக்குள் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. இறுதியாக எஞ்சியதெல்லாம் இந்துத்துவ ஓட்டுக்குள் இருக்கும் கூ முட்டை தான்.
ஊடக அரங்கம்
இந்தப் பின்னடைவுகளை மறைத்துக் கொள்ள தோற்றுப் போன பாசிஸ்டின் வெறியோடு கலாச்சார அரங்கில் தமது பாசிச செயல்பாடுகளை இந்துத்துவ கும்பல் முடுக்கி விட்டுள்ளது. எந்த வகையில் முதலாளிய உலகிற்குக் கொடுதிருந்த பொருளாதார வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்திருப்பதால், கலாச்சார அரங்கை கைப்பற்றுவதன் மூலம் சமூகத்தை பிளவுபடுத்தி இந்து ஓட்டு வங்கியை உத்திரவாதப்படுத்திக் கொள்ளும் முனைப்பின் விளைவு தான் ரோஹித் வேமுலா, ஜே.என்.யு, மாட்டுக்கறி உள்ளிட்ட விசயங்களில் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் வெறியாட்டம்.
முதலாளிய ஊடகங்களின் தாராளவாத ஜனநாயகப் பிரிவினருக்கோ ஆர்.எஸ்.எஸ் கும்பலின் போங்காட்டம் எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. பரீட்சையில் மதிப்பெண் வாங்கும் பொறுக்கி மாணவனென்றால் கூட சகித்துக் கொள்ளத் தயாராக இருக்கும் இவர்கள் தேர்வில் முட்டை மதிப்பெண் வாங்கிய பொறுக்கி மாணவனாக மோடியைக் காண்கிறார்கள். அதனடிப்படையில் இருந்தே தங்களது விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இந்தப் பிரிவினரின் (என்.டி.டீ.வி, சி.என்.என், ஹெட்லைன்ஸ் உள்ளிட்ட தாராளவாத ஜனநாயகப் பிரிவினர்) மெல்லிய முனகல்களை போர்க்குரலாக மாற்றிய பெருமை திருவாளர் மோடியையும் அவரது சமூக வலைத்தள அடிமைகளையே சாரும்.
இந்தியா எதிர்கொண்டு நிற்கும் சகல நோய்களுக்கும் தீர்வாக பரிந்துரைக்கப்பட்ட குஜராத்தின் 56 இன்ச் அகல மார்பு கொண்ட தாது புஷ்டி லேகியம், லாட்ஜ் மருத்துவர் கொடுக்கும் மருந்தைப் போல் சரியான நேரத்தில் கைகொடுக்கவில்லை என்பதை இரண்டாண்டுகளுக்கு முன் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்திருந்த நடுத்தர வர்க்கத்தின் ஒரு பிரிவினர் உணர்ந்துள்ளனர். வளர்ச்சி வேண்டுமென்றால் கொஞ்சம் ’அப்படி இப்படி’ இருந்தால் கூட பரவாயில்லை என்று பரந்த மனதோடு ப்ரவீன் தொகாடியா, சாமியாரிணி ப்ராச்சி, யோகி ஆதித்யநாத் போன்றவர்களைக் கூட ஓராண்டுகளுக்கும் மேலாக சகித்துக் கொண்டிருந்தவர்கள் இவர்கள்.
வங்கிக் கணக்கில் பத்து லட்சம் லட்சியம், சம்பளதாரர்களுக்கு வரிமான வரி விலக்கு நிச்சயம் என்கிற இவர்களின் இன்பக் கனவுகளின் மேல் கோதாவரி படுகையில் அம்பானி தோண்டியெடுத்த கழிவுகளைக் கொட்டியுள்ளார் மோடி. இவர்களுக்கு இப்போது புதிய லேகியம் தேவைப்படுகின்றது. ஆங்கிலத் தொலைக்காட்சிகளின் வாடிக்கையாளர்களில் ஒரு குறிப்பிடத்தக்க பிரிவினரான இவர்கள் இப்போது வெளிப்படையாகவே நேரங்கெட்ட நேரமாகப் பார்த்து ‘குஜராத் லேகியம்’ காலை வாரிவிட்டதென முனகத் துவங்கி விட்டனர்.
தங்களது வாடிக்கையாளர்களான நடுத்தர வர்க்கத்தினரின் ஒரு பிரிவினரிடையே தோன்றி வளரத் துவங்கியிருக்கும் அதிருப்தி மற்றும் மோடியின் தோல்விகளால் மெல்ல அதிகரித்து வரும் மூலதன உலகத்தின் அதிருப்தி இவ்விரண்டோடு சேர்த்து தாராளாவாத ஜனநாயகம் வழங்கும் விமர்சன சுதந்திரத்தின் மேல் இந்துத்துவ பாசிஸ்டுகள் தொடுத்திருக்கும் கொலைவெறித் தாக்குதலும் சேர்கிறது. இந்தப் பின்னணியில் இருந்து தான் முதலாளிய ஊடகங்களின் ஒரு பிரிவு ஜே.என்.யு விவகாரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக எடுத்துள்ள நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
எனினும், இந்த விமர்சனங்களோடு கூடவே புதிதாக ஒரு மீட்பரை களமிறக்குவதற்கான கதவுகளை ஊடகங்கள் மூடி விடவில்லை.
ராஜ்தீப் சர்தேசாய்
ட்விட்டரில் மோடியை மிகத் தீவிரமாக விமர்சிக்கும் ராஜ்தீப் சர்தேசாய், அதே கையோடு ஆம் ஆத்மி கட்சியின் கீச்சுகளைப் பகிரவும் செய்கிறார் என்பது தற்செயலானது அல்ல. வாடிக்கையாளர்களை ஏமாற்றிய பழைய லேகியத்திற்கு பதிலாக எதிர்காலத்தில் புதிய லேகியத்தை சந்தைப்படுத்துவதற்கும் அதன் மூலம் தங்களது டி.ஆர்.பிக்களை தக்கவைத்துக் கொள்வதற்குமான கதவையும் திறந்தே வைத்துள்ளனர், எதிர்காலத்தில் புதிய லேகியத்திற்கு கிராக்கி ஏற்படும் போது அப்படியொன்றை ஊருக்கு முன் கடைபரப்பி டைம்ஸ் நவ் தொலைக்காட்சி கைப்பற்றி வைத்திருக்கும் முதலிடத்தில் அமர்வது இதன் பின்னே உள்ள சந்தை நலன்.
ஊடகங்களின் சந்தை நலன் ஒருபுறம் இருக்க, பொருளாதார அரங்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் மறுகாலனியாக்க செயல்பாடுகள் சமூகத்தில் வர்க்கப் பிளவை மேலும் மேலும் கூர்மையடையச் செய்கின்றது. கலாச்சார அரங்கில் புகுத்தப்படும் பாசிச செயல்திட்டங்கள் அந்தப் பிளவை மேலும் ஆழமாகவும் அகலமாகவும் ஆக்குகின்றது. கொஞ்சம் முற்போக்கான தாராளவாத ஜனநாயகத்தின் பின்னே மறுகாலனியாக்க பொருளாதார தத்துவங்களை ஒளித்துக் கொள்ளும் வாய்ப்பை மோடி பறித்துள்ளார். மோடியை விமர்சிப்பதும், பாரதிய ஜனதாவின் கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட எந்த நடவடிக்கைகளை எதிர்ப்பதும் தேசவிரோதமாக’ நிலைநாட்டப்பட்டுள்ளது. ’மறுகாலனிய வளர்ச்சியும்’ ‘பாசிச இந்துமயமாக்கமும்’ கைகோர்த்துள்ள நிலையில் இரண்டில் ஒன்றை ஏற்றுக் கொண்டு மற்றொன்றை மட்டும் எதிர்க்க முடியும் என்று நம்புகிறவர்கள் ஒன்று அம்பலமாகிறார்கள் அல்லது இந்துத்துவ கும்பலாம் ஒட்டுமொத்தமான எதிர்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
தற்போதைக்கு முற்போக்குப் பாத்திரம் ஏற்றுக் கொண்டுள்ள முதலாளிய ஊடகங்களில் உள்ள ஒரு பிரிவினர் பொருளாதார விசயங்களின் மோடியின் கருத்தை ஏற்றுக் கொள்கிறவர்களாகவே உள்ளனர். சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பிளவு அதிகரிக்கும் வேகம், பாசிசத்தின் முன்னெடுப்புகளைப் பொருத்து எதிர்காலத்தில் அவர்கள் எந்தப் பக்கம் நிற்பார்கள் என்பது முடிவாகும்.
அவர்களது முடிவை மோடி எதிர்மறையில் துரிதப்படுத்தும் போது புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் நேர்மறையிலேயே நிர்பந்திக்க வேண்டும்.