Monday, August 4, 2025
முகப்பு பதிவு பக்கம் 584

டாஸ்மாக்கை தடை செய்த மேலப்பாளையூர் – நேரடி ரிப்போர்ட்

1

சிறுதொண்ட நாயனாரின் குரலில் 74 வயதுக்குரிய முதுமை இல்லை. அவர் ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். நல்லாசிரியர் விருது பெற்றவர். வரலாறு, தமிழ், பொருளாதாரம், சமூகவியல் மற்றும் காந்திய சிந்தனைகள் என்று மொத்தம் ஐந்து தனித்தனி துறைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால், ஜெயாவின் தமிழக அரசோ அவரைத் தீவிரவாதியாக இனங்காணுகிறது.

மேலப்பாளையூர் டாஸ்மாக் போராளிகள்
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்று பிணையில் வெளியில் வந்த போராளிகள் 11 பேர்.

விருதாச்சலத்தை அடுத்துள்ள மேலப்பாளையூர் டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் சிறுதொண்ட நாயனாரும் ஒருவர். சிறை சென்ற 13 பேரில் பதினோரு பேர் பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு மறுநாள் வினவு செய்தியாளர்கள் விருதாச்சலத்தில் இருந்தோம். கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் பிணை கையெழுத்திட்ட பதினோரு பேரையும் சந்தித்தோம்.

“அய்யா, நீங்க காந்திய சிந்தனைகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மக்கள் அதிகாரம் அமைப்போ டாஸ்மாக்கை மூடு அல்லது மக்களே உடைப்பார்கள் என்று அரசாங்கத்திற்கு சவால் விடுகிறது.. நீங்கள் இந்த அமைப்பில் இணைந்து போராடி சிறை சென்றுள்ளீர்கள். கேட்கவே கொஞ்சம் முரணாக இருக்கிறதே?”

”தம்பி, அரசாங்கம் என்பது என்ன? மக்கள் இல்லாமெ ஒரு அரசாங்கம் இருக்க முடியுமா? அதிகாரம் தான் இருக்க முடியுமா? இவங்க ஓட்டு வாங்க வந்த போது சாராயம் விற்பது எங்கள் லட்சியம் அப்படின்னு கேட்டா வந்தாங்க? மக்களாகிய நாங்கள் சொல்றோம்…. எனக்கு சாராயம் வேணாம்.. கடைய மூடு. நீ மூடாட்டி நாங்க மூடுவோம். அவ்வளவு தான்”

”சரிங்க.. உங்க கோரிக்கை நியாயமா இருக்கலாம். அதுக்காக முற்றுகை, உடைப்பு அப்படின்னு போகணுமா? அமைதியா ஒரு மனு எழுதிக் குடுக்கலாமே?”

“நீங்க இப்ப கேட்கறீங்க பார்த்தீங்களா? இதே கேள்விய அன்னிக்கு டி.எஸ்.பியும் கேட்டார். ஆனா… எத்தினி மனு எழுதறது, எத்தினி வருசமா குடுக்கறது? இத்தினி வருசம் நாங்க குடுத்த மனுவுக்கெல்லாம் என்னவாச்சி?…. எல்லா வகையிலும் கெஞ்சிப் பார்த்தும் வேலையாகலைன்னு தான் கடைசியா வேற வழியே இல்லாம நாங்களே இறங்கியிருக்கோம்”

”அதுக்காக அதிகாரத்தை நீங்களே கையில் எடுக்கலாமா?”

“ஏன் எடுக்கக் கூடாது? அவங்க கையில இருக்கிற அதிகாரத்த பயன்படுத்தி எடுத்து டாஸ்மாக்கை மூடியிருந்தா நாங்க ஏன் எடுக்கப் போறோம்?”

சிறுதொண்ட நாயனாரின் குரலில் தொனித்த ஆத்திரத்திற்கும் கோபத்திற்கும் பின்னே ஒரு நீண்ட கதை உள்ளது. அதைப் புரிந்து கொள்ள நாம் டாஸ்மாக்கின் விளைவுகளைப் புரிந்து கொள்ள வேண்டும் – அந்த விளைவுகளுக்கு ஒரு எடுப்பான வகைமாதிரியாக உள்ள மேலப்பாளையூரைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலப்பாளையூர்….

மேலப்பாளையூர் சாலை
மணல் கொள்ளையர்களின் டிப்பர் லாரிகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட சாலை.

விருத்தாச்சலத்திலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் உள்ள கருவேப்பிலங்குறிச்சியிலிருந்து இடது புறமாக ஒடிந்து செல்லும் சாலையில் ஆறு கிலோ மீட்டர் கரடு முரடான பாதையில் பயணித்தால் வரும் சிறு கிராமம் தான் மேலப்பாளையூர். மணல் கொள்ளையர்களின் டிப்பர் லாரிகளால் வல்லுறவுக்காளாக்கப்பட்டு சீரழிக்கப்பட்ட சாலையில் இதய நோயாளிகள் எவரும் பயணித்தால் உடனடி மரணம் நிச்சயம்.

மொத்தம் சுமார் 500 குடும்பங்கள் மட்டுமே வாழும் மேலப்பாளையூர் டாஸ்மாக்கின் தினசரி வசூல் ஒரு லட்சம். மேலப்பாளையூர் கிராமத்தினுள் நுழைந்ததும் நம்மை வரவேற்பது உடைந்த பாட்டில்களும், கிழிந்த லேபிள்களும், நசுங்கிய பிளாஸ்டிக் தம்ளர்களுமாக டாஸ்மாக்கின் கழிவுகள் தான். பேருந்து நிறுத்தத்திலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. கடையின் பக்கவாட்டில் சுமார் அரை ஏக்கர் அளவுக்கு புளிய மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. புளிய மர நிழலின் வெறுமையில் வேறு தாவரங்கள் வளராத அந்த இருண்ட அமைப்பு அதைக் குடிகாரர்கள் கூடிக் கூத்தடிக்க ஏற்றதொரு இடமாக்கியுள்ளது. அந்த மைதானத்தை ஒட்டி, டாஸ்மாக்கின் பின்புறம் சுமார் ஒரு ஏக்கர் தோட்டம் கொளஞ்சிக்கு சொந்தமாக உள்ளது.

உடைந்த டாஸ்மாக் பாட்டில்கள்
கண்ணு திரும்பின இடமெல்லாம் ஒரே உடைஞ்ச பாட்டிலுங்க

கொளஞ்சி ஒரு எளிய விவசாயி. கத்தரியும் வெள்ளரியும் வெள்ளாமை வைத்துள்ளார். நான்கைந்து கொய்யா மரங்கள் உள்ளன. சொந்த விவசாயத்தின் வருவாய் கைக்கும் வாய்க்குமே பற்றாத நிலையில் கிடைக்கும் கூலி வேலைகளுக்கெல்லாம் சென்று வருகிறார். இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கொளஞ்சியின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பம் அவருடையது. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று பொய் வழக்கில் சிறை சென்றவர்களில் கொளஞ்சியும் ஒருவர். மேலப்பாளையூரில் நம்மை வரவேற்ற போது அவருக்கு முகம் கொள்ளாத மகிழ்ச்சி.

”இந்த ஒரு மாசமா எங்க ஊருக்கே ஒரு விடுதலை கிடைச்சிருக்கு சார். தோ பார்த்தீங்களா… கண்ணு திரும்பின இடமெல்லாம் ஒரே உடைஞ்ச பாட்டிலுங்க. இப்ப எல்லாம் கொஞ்ச கொஞ்சமா மண்ணுக்குள்ளே போய்கிட்டு இருக்கு. கடைசியா ஒரு தரம் ஊரை சுத்தம் செய்ய வேண்டிய வேலை இருக்கு”

”நீங்க இதுக்கு முன்னே ஜெயிலுக்கு போயிருக்கீங்களா?”

“இல்லைங்க சார். இதான் மொதோ தரம்”

“போலீசு ஜெயிலுன்னா பயம் இல்லையா?”

கொளஞ்சி தனது வயலுக்கு அருகில்
கொளஞ்சி தனது வயலுக்கு அருகில்

“மொதல்ல பயமா தான் இருந்திச்சி.. என்னோட மகன் ஒரு பை நிறைய கொய்யா பழத்தோட ஜெயிலுக்கு வந்து என்னிய பார்த்து அழுதப்ப மனசுக்கு ரொம்ப கஸ்டமா இருந்திச்சி… ஏண்டா வந்தோம்னு கூட நினைச்சேன்.. ஆனா, திரும்ப வெளிய வந்து ஊருக்குள்ளே வந்து பார்த்தா எல்லாரும் என்ன ஏதோ கடவுள் மாதிரி பார்க்கறாங்க. நாங்க பத்து பேரு ஒரு மாசம் உள்ள இருந்து கஸ்டப்பட்டதுக்கு இந்த ஊரே இன்னிக்கு நல்லா இருக்குதுன்னா… இனிமே எத்தினி தடவ வேணாலும் ஜெயிலுக்கு போகத் தயார் சார். ஜெயிலுக்கு போனப்ப உள்ளே குடுத்த அடையாள அட்டைய பத்திரமா கொண்டாந்து உண்டியல்ல போட்டு வச்சிருக்கேன்.. நாளைக்கு நம்ப பேரப் பிள்ளைங்களுக்கு காட்டணுமில்லே?”

”உங்களோட வருமானத்த நம்பி தானே உங்க குடும்பமே இருக்குது?”

“ஆமா சார். தோ என்னோட கத்தரிச் செடிங்களோட பிஞ்சுங்க எல்லாம் கருகிப் போனிச்சி. சரியா உரம் வைக்க வேண்டிய நேரமா பார்த்து ஜெயிலுக்கு போயிட்டேன். என்னோட வெள்ளாமை எல்லாம் போச்சி. ஆனா என்ன சார்.. இன்னிக்கு ஜனங்க சந்தோசமா இருக்காங்க இல்லெ? அது போதும் சார்”

”டாஸ்மாக் உங்களை அந்தளவுக்குமா பாதிச்சிருக்கு?”

தண்ணீரை அடைக்கும் பாட்டில்கள்
பாலத்தோட வாயை ஒடைஞ்ச பாட்டிலும் பிளாஸ்டிக் தம்ளருமா அடைச்சி கிடக்கு. இதனால தண்ணி பாயாம விவசாயமே பாதிக்குது சார்

”என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க? இந்த ஊரே அழிஞ்சி போக இருந்திச்சி சார். தோ இந்த டாஸ்மாக் கடைக்குப் பின்னே இருக்கிற இந்த காவா இருக்கே… இதான் அந்தாண்ட இருக்கற பத்தாயிரம் ஏக்கர் நிலத்துக்கு தண்ணி எடுத்துப் போகிற ஒரே பாசன ஆதாரம். டாஸ்மாக்ல குடிக்கிற பயலெல்லாம் குடிச்சிட்டு பாட்டிலை ஒடைச்சி நேரே இந்தப் பாலத்துக்கு கீழ தான் போடறான். நீங்களே பாருங்க, ”

“இருக்கட்டுமே, அதுக்காக டாஸ்மாக்கை உடைக்க போறதெல்லாம் சரியா? நீங்க ஏன் அரசாங்கத்துக்கு மனு எழுதிக் கொடுத்திருக்க கூடாது?”

”என்னோட சித்தப்பா குடும்பமே இந்த கடை வந்த பின்னால குடிச்சு அழிஞ்சு போச்சு சார். ஊருக்குள்ளே போயி கேட்டுப் பாருங்க, ஒரோரு குடும்பத்திலயும் ஒரு சாவு…. அத்தினி எழவுக்கும் இந்த சாராயக் கடை தான் சார் காரணம். நாங்களும் மனு குடுத்துப் பார்த்தோம்… எவனும் கேட்கிற மாதிரி தெரியலை. அதான் ஒரு வெறில நாங்களே எறங்கிட்டோம். அப்படியும், நாங்க கடைய உடைக்கல சார். நாங்க கும்பலா போனப்ப இழுத்து பூட்டினு ஓடிட்டானுங்க. முன்னாடி போட்டிருந்த பந்தல் கூரை மட்டும் தான் ஒடைஞ்சது. இதுக்கே பொய் கேசு போட்டுட்டானுங்க”

”முதல் முறையா ஜெயிலுக்கு போயிருக்கீங்க. உள்ளே எப்படி இருந்திச்சி?”

“உள்ளயும் போராட்டம் தான். தினமும் முழக்கம் போடுவோம். அரசியல் வகுப்பு நடக்கும். சாயந்திரம் கூட்டம் நடக்கும்… யாரையாவது பேசச் சொல்லுவாங்க. நான்லாம் கூட்டமா இருந்தாலே பயப்படுவேன் – ஆனா நானே பேசினேன்… போன பின்னாடி தான் தெரிஞ்சது அங்க சாப்பாடு சரியில்லேன்னு. அதுக்கு போராடி நல்ல சாப்பாடு போட வச்சோம் – எங்களுக்கு மட்டுமில்லே எல்லாருக்கும் சேர்த்து. அங்கயே வேற வேற கேசுல வந்த கைதிங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம். எங்களைக் கையெடுத்துக் கும்பிட்டாங்க… எல்லாரும் நல்லா சாப்பிடணும் சார். நான் ஒரு சாதாரண விவசாயி.. எனக்கு வேற என்னா வேணும் சொல்லுங்க?”

”ஒரு வேளை திரும்ப டாஸ்மாக்கை திறக்க அரசாங்கம் முடிவு செய்துட்டா என்ன செய்வீங்க?”

“விட மாட்டோம் சார்.. திரும்ப ஜெயிலுக்கு போறதா இருந்தா கூட கவலை இல்ல சார்”

இந்திராணி அம்மாள்
புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியில் போலீசு பாதுகாப்போடு பாயும் சாராயம் ஆண்களுக்கு போதையையும் பெண்களுக்கு அழுகையையும் பரிசளித்துள்ளது. (இந்திராணி அம்மாள்)

கொளஞ்சியின் ஆத்திரத்தில் அநேக உண்மைகள் பொதிந்து கிடக்கின்றன. டாஸ்மாக் சரக்கை அந்த ஊர் மக்கள் குடித்தது போய், டாஸ்மாக்கே அந்த கிராமத்தைக் குடித்துத் தீர்க்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு அம்மக்களுக்கு டாஸ்மாக் மறக்க நினைக்கும் ஒரு கொடுங் கனவு. பழைய நாட்களைப் பற்றிக் கேட்டால் கண்ணீரின்றி எவராலும் பேசவே முடியவில்லை.

டாஸ்மாக்கின் பாதிப்பை இந்திராணி அம்மாளை விட வேறு எவராலும் மிகச் சரியாக விளக்க முடியாது. இந்திராணி அம்மாளின் கணவர் ஒரு குடி அடிமை – உபயம் டாஸ்மாக். வேறு வேலை எதற்கும் செல்லாமல் இருபத்தி நான்கு மணி நேரமும் போதையில் திளைப்பது ஒன்றையே வேலையாகக் கொண்டிருப்பவர். இந்திராணி அம்மாள் கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் சென்று நாளொன்றுக்கு 150 ரூபாய் சம்பாதிக்கிறார். இந்த சொற்ப வருமானத்தில் வீட்டாரின் வயிற்றைக் கழுவ வேண்டும் – அதோடு மகனையும் படிக்க வைக்க வேண்டும்.

இந்திராணி அம்மாளின் ஒரே நம்பிக்கை அவரது மகன். வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி தனது மகனை படிக்க வைத்துள்ளார். இதற்கிடையே கணவனின் குடி அவனது குடலைப் புண்ணாக்கி விட உயிரைக் காப்பாற்ற ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு வாங்கியுள்ளார். இப்போது கிடைக்கும் கூலியில் வட்டியையும் சேர்த்துக் கட்ட வேண்டும். இந்தக் கஷ்ட ஜீவனத்திற்கு இடையே மகனை சென்னைக்கு அனுப்பி எம்.பி.ஏ படிக்க வைத்துள்ளார். எப்படியாவது மகன் தலையெடுத்து குடும்பத்தை நிமிர்த்துவான் என்ற அவரது கனவில் டாஸ்மாக் பேரிடியை இறக்கியது.

பத்து நாள் விடுமுறைக்காக ஊருக்கு வந்த இந்திராணி அம்மாளின் மகன் பழைய நண்பர்களோடு சேர்ந்து உள்ளூர் டாஸ்மாக்கில் குடிக்கப் போக, அதுவே பழக்கமாக மெல்ல மெல்ல குடிக்கு அடிமையாகியுள்ளான். தாமதமாக கண்டு பிடித்த இந்திராணி அம்மாள் இடிந்து போயுள்ளார். கதறி அழுதவாறே மகனைத் தட்டிக் கேட்க மனமுடைந்த அவன் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். மீண்டும் கடனை உடனை வாங்கி மகனின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் இந்திராணி.

“எதுக்கு சார் டாஸ்மாக்கு? யாரு சார் எங்களுக்கு சாராயம் இல்லைன்னு இந்த கெவருமெண்டு கிட்டே அழுதா? நெஞ்சு வெடிக்க சொல்றேன் சார்… சாராயத்தை குடிக்க வச்சி எங்க தாலிய அறுத்தவங்களுக்கெல்லாம் நல்ல சாவே வராது சார்… இந்தக் கடைய சும்மாவெல்லாம் மூடக் கூடாது சார்… அடிச்சி ஒடைக்கணும் சார்… தமிழ் நாட்டுல எங்கயுமே சாராயக் கடை இருக்க கூடாது சார்.. ” தனது கதையை அழுகையினூடே விவரித்த இந்திராணி அம்மாளுடைய ஆங்காரத்தின் முழுப் பொருளை உடைந்து கிடக்கும் மேலப்பாளையூர் டாஸ்மாக் கடையின் ஆஸ்பெஸ்டாஸ் பந்தலின் சிதறிய துணுக்குகளைக் கேட்டால் சொல்லும்.

புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சியில் போலீசு பாதுகாப்போடு பாயும் சாராயம் ஆண்களுக்கு போதையையும் பெண்களுக்கு அழுகையையும் பரிசளித்துள்ளது.

“எங்க குடும்பத்தை பால்காரர் குடும்பம்னு சொல்வாங்க சார்… அந்தக் காலத்துல எங்களுக்கு 15 ஏக்கர் நிலம் இருந்திச்சி… எங்கப்பாவும் அண்ணனும் எல்லாத்தையும் குடிச்சே அழிச்சிட்டாங்க… இப்ப கால் காணி நிலம் கூட இல்ல. ஒரு காலத்துல நூறு பேரு எங்க வயல்ல வேலை செய்ய எங்கம்மா வரப்புல குடை பிடிச்சிட்டு ஒக்காந்திருக்கும்… இன்னிக்கு எங்கம்மா வயித்தைக் கழுவ ஆடு மேய்க்க போவுது சார்…. பார்க்க பார்க்க நெஞ்சே வலிக்குது சார்” என்கிறார் கலையரசி…

மேலப்பாளையூரில் பல குடும்பங்கள் டாஸ்மாக்கிற்கு இரத்த உறவுகளை பலி கொடுத்து விட்டு எதிர்காலத்தை இழந்து தவிக்கின்றன. சாராயத்தில் மூழ்கி மடிந்த குடும்பங்களில் மிஞ்சியவர்களிடம் எஞ்சியிருப்பது அரசாங்கத்தின் மீதான ஆழமான அவநம்பிக்கை ஒன்று மட்டும் தான். மேலப்பாளையூர் எரியக் காத்திருந்த வெயில் கால மூங்கில் காடு. ஒருவேளை மக்கள் அதிகாரம் தலையிட்டிருக்கவில்லை என்றாலும் இதே முடிவை அந்த மக்களே எடுத்திருப்பர்.

செல்லம்மாள்
“குடிச்சிட்டு எவனுக்கும் நெதானமே தெரியலை சார்…” – செல்லம்மாள்

“குடிச்சிட்டு எவனுக்கும் நெதானமே தெரியலை சார்… போதைல அர்த்த ராத்திரில வந்து கதவைத் தட்றானுவோ… வீட்டு ஆம்பளைக்கு சந்தேகம் வருமா வராதா சார்? நீ சொல்லி வந்தானா அவனா வந்தானான்னு விடிய விடிய ஒரே சண்டை தான் சார்” என்கிறார் செல்லம்மாள்.

”அம்மா, நீங்க சொல்றாப்ல.. அரசாங்கம் சாராயம் விற்குது என்னவோ சரி தான்… ஆனா, குடிக்கிறவனுக்கு எங்க போச்சி புத்தி? குடிக்கிறவன் இருக்கிற வரைக்கும் குடியை தடுக்க முடியாதுன்னு சொல்றாங்களே?” என்று அறிவு ஜீவிகளின் தரப்பை கேள்வியாக முன்வைத்தோம்.

”எவன் சொல்றது? சொல்றவன் வீட்டுல எத்தினி பொம்பளைங்க டாஸ்மாக்கால தாலி அறுத்தாங்கன்ற கணக்கை சொல்லிட்டு அப்பால பேசட்டும் சார். தோ… இந்த டாஸ்மாக் சரியா பஸ் ஸ்டேண்டு கிட்ட இருக்கு.. சாயந்திரமானா ஒரு பள்ளிக்கூடம் விட்டு பொம்பளப் புள்ளைங்க வீட்டுக்கு நடந்து போவ முடியல சார். அசிங்க அசிங்கமா பேசறானுங்க.. இடிக்கிறானுங்க. நீ சொல்றா மாதிரி பேசறவன் வீட்டு பொம்பளங்கள இந்த தெரு வழியே பொழுது சாய நடந்து போக நாலஞ்சி நாளைக்கு அனுப்பிட்டு பொறவு அதே மாதிரி சொல்றானா பாக்கலாம்… குடியானவனெல்லாம் பூமிய வித்துக் குடிச்சே அழிஞ்சி போனான் சார்.. காலனிக் காரங்க துணி மணியக் கூட வித்துக் குடிக்கிறாங்க சார்… நீயே வேணா போய்க் கேட்டுப் பாரு சார்”

மேலப்பாளையூர் வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதி. காலனி ஊருக்கு வெளியே உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியோ வன்னியர் சங்கமோ பெரியளவில் அரசியல் ரீதியில் வளராத காரணத்தால் சொல்லிக் கொள்ளும் படியான சாதி மோதல்கள் ஏதும் இல்லை. இரண்டு சாதி மக்களின் பொருளாதய வாழ்வில் சொல்லிக் கொள்ளும் படியான ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லை. மோதல்களோ முரண்பாடுகளோ இல்லையென்றாலும் விலகியே இருந்த ஊரையும் சேரியையும் ஒன்றாக இணைத்துள்ளது டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்.

சிறை சென்றவர்களில் வேல்முருகன் காலனியைச் சேர்ந்தவர். எமது செய்தியாளர்கள் சிறை சென்றவர்கள் மற்றும் அவர்களோடு போராட்டக் குழுவினர் என்று சுமார் 25 பேரை கருவேப்பிலங்குறிச்சியில் வைத்து ஐந்துக்கு பத்து அளவுள்ள ஒரு சிறிய அறையில் சந்தித்தது. ஒருவரை ஒருவர் நெருக்கி அமர்ந்திருந்த அந்தச் சிறிய அறையில் எல்லோராலும் முக மலர்ச்சியோடு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார் வேல் முருகன். அவர் தனது அனுபவங்களைச் சொல்லச் சொல்ல அந்தச் சிறிய அறையினுள் கைதட்டல்கள் எழுந்தவாறே இருந்தன.

வேல் முருகனுக்கு எந்த அரசியல் முன் அனுபவமும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பை இந்தப் போராட்டத்திற்கு முன் அவர் கேள்விப்பட்டது கூட கிடையாது. அவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். மூத்த மகளைத் திருமணம் முடித்துக் கொடுத்து விட்டார். அடுத்த பெண்ணுக்கு 17 வயது, கூலி வேலைக்குச் செல்கிறார் –நாள் கூலி 150 ரூபாய். மூன்றாவதும், நான்காவதும் பெண்கள்; படிக்கிறார்கள். ஐந்தாவதாக ஒரு பையன், அவனும் படிக்கிறான். வேல்முருகன் கூலி வேலைக்குச் சென்று 300 ரூபாய் சம்பாதிக்கிறார் – அவரது மனைவியும் கூலி வேலைக்குச் சென்று 150 ரூபாய் சம்பாதிக்கிறார்.

வேல்முருகன் சம்பாதித்த காசு அனைத்தையும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசாங்கத்துக்கு மொய்யாக வைத்து விடுவதை பல வருட வாடிக்கையாக வைத்திருப்பவர். மனைவி மற்றும் மகளின் சம்பாத்தியத்தில் தான் குடும்பமே நடக்கிறது. வீட்டுக்கு சல்லிக் காசு கூட தராமல் போதையிலேயே சதா காலமும் மிதப்பவர் என்பதால் அவருக்கு ஊரிலும் குடும்பத்திலும் எந்த மரியாதையும் இல்லை. டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம் நடந்த அன்றும் அவர் போதையில் தான் இருந்துள்ளார்.

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின் அன்று (கோப்புப் படம்)
டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தின் அன்று (கோப்புப் படம்)

டாஸ்மாக்கில் குடித்து விட்டு போதையில் போராட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு தனது ஒரே ஊர்க்காரர்களை போலீசு அரட்டி மிரட்டுவதைக் கண்டதும் ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

”அந்த போதையோடயே யோசிச்சி பார்த்தேன் சார்.. இந்த கருமம் பிடிச்ச குடியால வீட்லயும் மரியாதை இல்ல… ஊர்லயும் மரியாதை இல்ல.. அட, இந்தக் கடை இருக்கிறதால தானே குடிச்சி நாசமா போனோம்னு தோணிச்சி.. நேரா போயி போலீசுகாரன் கிட்ட ஒழுங்க கடைய எடுங்கன்னு கத்துனேன். நம்பளையும் தூக்கி வேனுக்குள்ள ஒக்கார வச்சிட்டாங்க. சரி உள்ற போயிட்டு வருவோமேன்னு நானும் ஒக்காந்துட்டேன்”

”சரி உள்ளே போயி போதை தெளிஞ்ச பின்னாடி எப்படி இருந்திச்சி?”

”கையெல்லாம் ஒரே நடுக்கம்… நமக்கு போதை போடலைன்னா ஸ்டெடியாவே இருக்க முடியாதே… தம்ளர்ல தண்ணி ஊத்தி குடிக்க கூட முடியலை… ரொம்ப நாளுக்கப்புறம் குடிக்காம இருந்ததாலே வயித்து வலி வந்திடுச்சி…”

“எப்படி சமாளிச்சீங்க?”

“நான் எங்க சமாளிச்சேன்… கூட இருந்தவங்க தான் வேற வழி இல்ல முருகா…. எப்படியாவது சமாளிச்சிக்கோ அப்படின்னு சொன்னாங்க… முதல்ல சாப்பாடே எறங்கல… அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட ஆரம்பிச்சேன்.. இவங்க டாஸ்மாக் போராட்டம் பத்தி தினமும் பேசுவாங்க.. அதையெல்லாம் இனிமே குடிக்கவே கூடாதுன்னு முடிவு பண்ணேன்… தோ, உள்ள போயி இன்னி வரைக்கும் குடிக்கவே இல்ல சார். இப்பத்தான் பொண்டாட்டி மதிக்கிறா… குடிகார நாயின்னு கேவலமா பாத்த ஊர்க்காரனெல்லாம் இப்பத் தான் சார் மதிச்சி பேசறான்”

”ஜெயில், போலீசெல்லாம் பயமா இல்லையா?”

டாஸ்மாக் போராளிகள்
விருத்தாச்சலம் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்படும் டாஸ்மாக் போராளிகள் (கோப்புப் படம்)

“இன்னாத்துக்கு பயம் சார்? எனக்கு இப்ப வெளிய தான் பயமா இருக்கு. பழைய கூட்டாளிங்க திரும்ப குடிக்க வச்சிருவாங்களோன்னு பயமா இருக்கு… ஆனா இனிமே நான் சத்தியமா குடிக்க மாட்டேன் சார்.. இப்ப நான் மத்தவங்க கிட்டயும் குடிக்காதீங்கன்னு சொல்ல ஆரம்பிச்சிருக்கேன்…”

“சரி… திரும்ப டாஸ்மாக் திறந்தா குடிப்பீங்களா?”

“சார்.. பக்கத்துல சோத்தை போட்டு குழம்பை ஊத்தி வச்சிட்டு சாப்பிடுவியான்னு கேட்டா எப்டி சார்? ஆனா நான் திரும்ப டாஸ்மாக் திறக்க விட மாட்டேன் சார்.”

”அது சரி… ஆனா அரசாங்கம் போலீசை அனுப்பி டாஸ்மாக்கை திறக்க வச்சா என்னா செய்வீங்க?”

“உயிரே போனாலும் விட மாட்டேன் சார்… போய் குறுக்கால படுத்துக்குவேன்.. போலீசு என் கழுத்தை மெறிச்சி சாவடிச்சிட்டு போயி திறக்கட்டும்.”

வேல்முருகன் பேசப் பேச அந்த அறையினுள் கைதட்டல் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது… சாதி வேற்றுமைகளை வர்க்கப் போராட்டத் தீயில் வெந்து கருகும் ஆச்சர்யம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. மதமாய்ச் சேர்வோம், மொழியாய்ச் சேர்வோம், இனமாய்ச் சேர்வோம் என்ற முயற்சிகள் தோற்றுப் போன காலத்தில் வர்க்க அணி சேர்க்கையின் வெற்றியை சத்தமின்றிச் சாதித்துள்ளது மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்.

மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் என்பது மக்கள் அதிகாரம் அமைப்பு கீழிருந்து புத்தம் புதிதாக உருவாக்கிய போராட்டமன்று. மக்கள் அதிகாரம் அங்கே செல்லும் போதே அந்தக் கிராமம் காய்ந்த சருகுகளோடு எரியக் காத்திருந்த மழை காணாத வனமாயிருந்தது. சொல்லப் போனால், அந்தப் பகுதிக்கே போராட்டங்களோடு மிக நெருங்கிய தொடர்புகளுண்டு. போராட்ட வெற்றிகளை ருசித்துப் பழகியவர்கள் அம்மக்கள்..

அரசாங்கத்தை நம்பாதே – அதிகாரத்தைக் கையிலெடு

கார்மாங்குடி ஆற்று மணல் கொள்ளை எதிர்ப்பு
ம.உ.பா மைய வழக்கறிஞர்களின் தலைமையில் வெகுண்டெழுந்த மக்களின் போராட்டம் மணல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டியது (கோப்புப் படம்)

மேலப்பாளையூரின் பக்கத்து கிராமம் தான் கார்மாங்குடி. பக்கத்தில் ஓடும் வெள்ளாற்றின் மணலை பல ஆண்டுகளாகத் அரசின் உதவியோடு திருடி விற்ற ஆற்று மணல் கொள்ளைக் கும்பலின் கொட்டத்திற்கு முடிவு கட்டிய வீரம் செறிந்த போராட்டத்தின் குவிமையமாக இருந்தது கார்மாங்குடியும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களும். பல ஆண்டுகளாக அரசுக்கு மனுப் போட்டும் மணல் கொள்ளையர்களின் கொட்டம் முடிவுக்கு வராத நிலையில், வேறு சில ஓட்டுக் கட்சிகளும் போராட்டம் என்கிற பெயரில் ஏமாற்றி வந்த நிலையில் அந்தப் பகுதி மக்களுக்கு உண்மையான போராட்டம் என்றால் என்னவென்பதை அறிமுகம் செய்தனர் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள்.

ம.உ.பா மைய வழக்கறிஞர்களின் தலைமையில் வெகுண்டெழுந்த மக்களின் போராட்டம் மணல் கொள்ளைக்கு ஒரு முடிவு கட்டியது. அரசாங்கத்தை நம்பாமல் அதிகாரத்தைக் கையிலெடுப்பது ஒன்றே கனிம வளத் திருட்டைத் தடுக்கும் ஒரே வழியென்பதை தமிழ்நாட்டுக்கு உணர்த்தினர் கார்மாங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள்.

மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டங்கள் வெற்றி பெற்ற நிலையில், தமது பிற பகுதிக் கோரிக்கைகளுக்காக அம்மக்கள் தன்னிச்சையாக போராடத் துவங்கினர். கார்மாங்குடி கற்றுக் கொடுத்த பாடத்தை நன்கு உணர்ந்திருந்த சுற்று வட்டாரப் பகுதி மக்கள் தமது பிற பிரச்சினைகளிலும் அதைப் பிரயோகித்தனர். அந்த வகையில் மேலப்பாளையூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்த போராட்டம் சூடு பிடித்தது. இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினரின் ”மூடு டாஸ்மாக்கை” இயக்கமும் துவங்க இரண்டும் கைகோர்த்துக் கொண்டன.

டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டம்
மேலப்பாளையூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்த போராட்டம் சூடு பிடித்தது. (கோப்புப் படம்)

“மூடு டாஸ்மாக்கை” இயக்கத்தின் பிரச்சாரம் சூடு பிடித்து வந்த நிலையில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் டாஸ்மாக் உடைப்புப் போராட்டத்தின் காட்சிகள் செய்தித் தொலைக்காட்சிகளின் மூலம் மேலப்பாளையூர் மக்களை அடைகிறது. சாராயக் கடை எதிர்ப்பு போராட்ட களத்தில் தாம் மட்டும் தனித்திருக்கவில்லை என்பதை உணர்ந்த மக்கள் அம்மாணவர்களைத் தனித்து விடவும் தயாராக இல்லை – முற்றுகைப் போராட்டத்திற்கான நாளாக ஆகஸ்டு 4-ம் தேதியைக் குறித்தனர்.

தேதி குறித்த நாளில் அலையெனத் திரண்ட மக்கள் வெள்ளத்தைக் கண்டு சாராயக் கடையை மூடி விட்டு ஓட்டம் பிடித்தனர் டாஸ்மாக் அதிகாரிகள் – அன்று மக்களின் ஆவேசத்திற்கு ஆஸ்பெஸ்டாஸ் பந்தல் மட்டுமே அகப்பட்டது. பந்தல் உடையும் வரை காத்திருந்த போலீசு போராட்டத்தின் முன்னணியாக இருந்தவர்களையு, வழக்கறிஞர் ராஜு உள்ளிட்டு 14 பேரை கடையையே உடைத்ததாகச் சொல்லி பொய் வழக்கில் கைது செய்தது. ஆண்கள் கைதாவதைக் கண்ட ஊர்ப் பெண்கள் ஒன்பது பேர் தாமும் கைதாக முன்வந்தனர்.

மேலப்பாளையூர் டாஸ்மாக் மூடப்பட்டது
அதிகார வர்க்கம் இன்று வரை மேலப்பாளையூர் டாஸ்மாக் கடையைத் திறக்க முடியாமல் கை பிசைந்து நிற்கிறது.

போராட்டத்தின் முன்னணியினரைக் கைது செய்தாலும், ஊர் மக்களின் ஆத்திரத்தின் மேல் தண்ணீர் தெளித்து அடக்க முடியாத . கடைசியாக கிடைத்த தகவலின் படி மேலப்பாளையூரில் கடையே திறக்க முடியாது என்று முடிவு செய்து பக்கத்தில் உள்ள வள்ளியத்திற்கு கடையைக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளனர். இப்போது வள்ளியத்தில் வெப்பம் பரவி வருகிறது – அந்த ஊர் மக்களும் உள்ளே நுழைய முயற்சிக்கும் சாராய அரக்கனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார்கள்.

சாராயம் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் நாசகார விளைவுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை… “அரசாங்கமே ஸ்கெட்ச்சு போட்டு மக்களுக்கு சுலோ பாய்சன் மாதிரி சாராயத்தை ஊத்தி சாவடிக்குது சார். சாராயம் குடிச்சி செத்தவன் சாவுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சாவுக்கெல்லாம் கலெக்டர், டி.எஸ்.பி, எஸ்.பி மேல எப்.ஐ.ஆர் போடனும்” என்கிறார் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரும், தமிழ்க விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவருமான நந்தகுமார். மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்களில் நந்தகுமாரும் ஒருவர்.

“டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசின் நலத் திட்ட உதவிகள் எல்லாம் செய்யப்படுகின்றன என்றும், இதை மூடி விட்டால் ஏழை மக்கள் பயன்பெறும் நலத் திட்ட உதவிகளுக்கு நிதி இல்லாமல் போய் விடும் என்றும் சொல்றாங்களே?”

“என்ன சார் நலத் திட்டம்? இலவசம் குடுக்கிறதைத் தானே சொல்றீங்க? ஒரு குடும்பத்துக்கு தர்ற மிக்ஸி, கிரைண்டர், இலவச சைக்கிள் எல்லாம் கூட்டிப் பார்த்தா ஐயாயிரம் வருமா? இந்த ஐயாயிரமும் அஞ்சு வருசத்துக்கான கணக்கு. இங்க ஒவ்வொருத்தனும் கூலிய வாங்கின கையோட அப்படியே தினமும் முன்னூறு ரூபாய்க்கு டாஸ்மாக்குக்கு மொய் வைக்கிறான். ஒரு மாசத்துக்கு ஒன்பதாயிரம் கணக்கு வருது… அப்ப வருசத்துக்கு எவ்வளவு, அஞ்சி வருசத்துக்கு எவ்வளவுன்னு நீங்களே கணக்குப் போட்டு பார்த்துக்கங்க… அதெல்லாம் சும்மா சார்.. எங்க தாலியறுத்துட்டு இலவசம் தாங்கன்னு யாரு அழுதா?”

”அப்ப அரசாங்கம் இலவசங்கள் ஏதும் தரக் கூடாதுன்னு சொல்றீங்களா?”

“முதல்ல இலவசம்னு சொல்லாதீங்க சார்.. இதெல்லாம் அவன் அப்பன் வீட்டு காசிலேர்ந்தா தர்றான்? எல்லாம் மக்கள் காசு தானே? என் பிள்ளைக்கு நான் உழைச்சி சோறு போடறேன்… நீ எனக்கு பிச்சையும் போட வேண்டாம் – சாராயத்த ஊத்தி தாலி அறுக்கவும் வேணாம்… நாங்களே விளைய வச்ச நெல்ல குடோன்ல போட்டு புளுக்க வச்சிட்டு எங்களுக்கே இலவசம்னு தர்றான்… நாங்க என்ன பிச்சைக்காரங்களா?”

”சரி உங்க போராட்டத்தை அரசாங்கம் எப்படி எதிர் கொள்கிறது?”

“எங்களை பிரிச்சி விட்டு மோத வைக்கலாம்னு பார்க்கறான் போலீசு.. .நாங்க ஜெயில்லேர்ந்து ஜாமீன்ல வெளிய வந்த உடனே அம்பேத்கர் சிலைக்கு மாலை போடப் போனோம். சாதிப் பிரச்சினை வரும்னு சொல்லி தடுக்கறான் போலீசு… அவர் எந்த சாதியா வேணும்னாலும் இருக்கட்டுமே… அவர் ஒரு பெரிய தலைவர்… இந்த நாட்டுக்கே தலைவர்… அப்படின்னா எங்களுக்கும் தானே அவர் தலைவர்? போலீசுகாரன் வேணும்னு மக்கள் மோதிக்கணும்னு இப்படிச் செய்யறான்”

”அடுத்த கட்டமா என்ன செய்யப் போறீங்க?”

”மேலப்பாளையூர்ல டாஸ்மாக் இல்ல. இனிமே திறக்க விடவும் மாட்டோம். சுத்து வட்டாரத்திலயும் திறக்க விடமாட்டோம்… அடுத்து எங்களோட அடிப்படை பிரச்சினைகள் நிறைய தீராம இருக்கு.. அதுக்கெல்லாம் போராடனும். நீங்களே பார்த்திருப்பீங்க.. இங்க சாலை வசதி சரியில்லை.. அப்புறம் பக்கத்துல அம்பிகா சுகர் மில் காரன் விவசாயிகளோட 40 கோடி ரூபாய பாக்கி வைச்சிருக்கான்.. அதை போராடி வாங்கனும்… ஏரிகளை எல்லாம் ஆக்கிரமிச்சு வச்சிருக்கான் ரியல் எஸ்டேட்காரன், அதை மீட்கனும்… நிறைய செய்ய வேண்டி இருக்குங்க”

மேலப்பாளையூரில் பற்றிய நெருப்பு அத்தனை சீக்கிரத்தில் அணையப் போவதில்லை… மக்களே அதிகாரத்தை ஏந்துவதன் வெற்றிக் கதையை கம்பீரமாய் உலகுக்கு அறிவித்து நிற்கிறது மேலப்பாளையூர்… தமிழகத்தின் முன்னுதாரணமான இந்தப் பகுதியின் வெற்றிக் கதைகளை வாசகர்களுக்கு கண்டு கேட்டுச் சொல்ல வினவு எப்போதும் தயாராக இருக்கும்….

– வினவு செய்தியாளர்கள்

மதுரையில் நீதித்துறை ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

4

நீதிபதிகள் நாடாளும் மன்னனும் அல்ல!
வழக்கறிஞர் அடங்கிப் போகும் அடிமைகளும் அல்ல!

ன்பார்ந்த வழக்கறிஞர்களே! பொதுமக்களே! வணக்கம்.

காவிரி, முல்லைப்பெரியாறு, ஈழம், உரிமையியல்-குற்றவியல் சட்ட திருத்தங்கள், காவல் துறை அராஜகங்கள் என மக்களை பாதிக்கக் கூடிய அனைப்பு பிரச்சனைகளுக்கும் வழக்கறிஞர்கள் களம் இறங்கிப் போராடியுள்ளோம். போராட்டங்கள் அனைத்தும் பல மாதங்கள் வருமானங்களை இழந்து, இளம் வழக்கறிஞர்கள் பட்டினி கிடந்து நடத்தப்பட்டவை. இப்போராட்டப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகத்தான் சாதாரண மக்களை மிகவும் கடுமையாக பாதித்த ஹெல்மெட் பிரச்சனைக்கும் மதுரை வழக்கறிஞர் சங்கம் 40 நாட்கள் தொடர்ந்து போராடியது.

ஹெல்மெட் கட்டாயம்! டாஸ்மாக் அரசின் விருப்பமா?

hrpc40x30_oster_10-9-2015jpg_Page1கடந்த ஜூலை 1 முதல், இரு சக்கர வாகன ஓட்டிகள், மற்றும் பின்னால் அமர்ந்து செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும், அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை பறிமுதல் செய்ய வேண்டும். உரிமம் இல்லையென்றால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ தரச்சான்றிதழ் பெற்ற ஹெல்மெட்டையும், பில்லையும் காண்பித்தால்தான் பறிமுதல் செய்யப்பட்டதைப் பெறமுடியும் எனக் கறாராக உத்தவிட்டார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களின் மீது வழக்குகள் போடப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் ஹெல்மெட் கடைகளுக்கு மக்கள் படையெடுத்தனர். விலையோ 1500, 2500 என எகிறியது. ஒரு குடும்பத்திற்கு ரூ 5,000 – ரூ 7,000 செலவானது. மக்கள் பணமின்றி, தரமான ஹெல்மெட் இன்றி பதறினர். இதை நீதிபதி கிருபாகரனிடம் சொன்னால், “யானை வாங்க காசிருக்கிறது, அங்குசம் வாங்க காசில்லையா?” என நக்கலடித்தார். சூழ்நிலையைப் பயன்படுத்தி காவல்துறை கல்லா கட்டியது.

தமிழகத்தில் சுமார் 1,70,00,000 இருசக்கர வாகனங்கள் உள்ளன. பின்னால் உட்கார்ந்து செல்வோர் அணி மொத்தம் 4 கோடி ஹெல்மெட் தேவை. சந்தையில் 10 கோடி ஹெல்மெட் இருந்தால்தான் மக்கள் தரமான ஹெல்மெட்டை வாங்க முடியும். விபத்திலிருந்து மக்களைக் காப்பதுதான் நீதிமன்றத்தின் நோக்கம் என்றால், முதலில் விபத்துகளுக்கு மூலகாரணமான மோசமான சாலைகளை சரிசெய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். ஆனால், இவையிரண்டும் அரசு அதிகாரிக், ஆளும் கட்சியினர், காண்டிராக்டர்கள், கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளையுடன் சம்பந்தப்பட்டவை. அவர்களைத் தொடக்கூட நீதிமன்றத்திற்கு தைரியம் இல்லை. ஊழல் வழக்கு நிரூபிக்கப்பட்ட மந்திரிகளின் சொத்தைக் கூட பறிமுதல் செய்ய முடிவதில்லை. ஆனால், வாகன பறிமுதல், உரிமம் ரத்து என்று சாதாரண மக்களுக்கு எதிராக எந்த சட்டத்திற்கும் உட்படாத சர்வாதிகாரத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இது ஹெல்மெட் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடியும், போலீசும் மக்களைக் கொள்ளையடிக்கவே வழிசெய்தது. எனவேதான், மதுரை வழக்கறிஞர் சங்கம் நீதிபதி கிருபாகரனின் இந்த மக்கள் விரோதத் தீர்ப்பை எதிர்த்துப் போராடியது.

இவ்வாறு, மக்களுக்காக 6,000 மதுரை மாவட்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சேர்ந்து நடத்திய போராட்டத்தில் முன்நின்ற மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரு தர்மராஜ், செயலர் திரு ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீதுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்து சிறையில் அடைத்து, வழக்கறிஞர் உரிமத்தை ரத்து செய்வதாக மிரட்டுகிறது சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்ற அவமதிப்பு ஒரு சார்பானதா?

நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருந்ததற்காக பல்லாயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் உள்ளன. ஏற்கனவே, இதை நீதிமன்றத்தில் சொல்லி வேதனைப்பட்டார் கிருபாகரன். அரசியல் கட்சித் தலைவர்கள், சாதித் தலைவர்கள் விழாக்களுக்கு செல்லக் கூடாதென உத்தரவிட்டார். அவரது உத்தரவு எள்ளளவும் மதிக்கப்படவில்லை. நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கிருபாகரன் எடுக்க வேண்டியதுதானே?

கடந்த அறுபது வருடங்காள நீதிமன்ற உத்தரவை மீறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது அரசு. எத்தனை அதிகாரிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது? ஏன், நீதிபதி குன்கா தீர்ப்பிற்கு எதிராக தமிழகம் வன்முறை களமாக்கப்பட்டதே? அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் வெளிநாட்டிற்குச் சுற்றுலா சென்று விட்டார்களா? பிரசார்ந்த பூன் மீதான அவமதிப்பு வழக்கு இன்றுவரை தூங்கக் காரணம், நீதிபதிகளுக்கு எதிராக அவர் வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை உள்ளது என்பதனால்தானே? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து உட்பட, அலகாபாத், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலர் ஊழல் பேர்வழிகள் என்று சொன்ன உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜூ மீது நடவடிக்கை எடுக்க நீதித்துறை துணிவுள்ளதா?

தீர்ப்பை விமர்சிக்கக் கூடாதா?

காவிரி, முல்லைப்பெரியாறு, அணு உலை, மீத்தேன், கல்விக் கொள்ளை, கார்ப்பரேட் கொள்ளை என நீதிமன்றங்கள் பல்வேறு பிரச்சனைகளில் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. தில், காவேரி, முல்லைப்பெரியாறு தீர்ப்புகளை மதிக்காத கர்நாடக, கேரள அரசுகள் மீது உச்சநீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது? கட்டணக் கொள்ளையடிக்கும் தனியார் பள்ளி முதலாளிகள் மீது சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? ஆனால், கூடங்குளம் மக்களுக்கு எதிரான தீர்ப்பு மட்டும் கடுமையாக அமலாக்கப்படும்.

மக்களைப் பாதிக்கும் தீர்ப்புகளை ஜனநாயக நாட்டில் எல்லோரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். 10% வரை ஊழல் செய்து பணம் சேர்க்கலாம், தவறில்லை என்ற தீர்ப்பை விமர்சிக்காமல் இருக்க முடியுமா? கருத்துரிமை, விமர்சன உரிமை என்பது ஜனநாயகத்தின் பிரிக்க முடியாத அங்கங்கள். யாரும் கேள்வி கேட்க முடியாத அதிகாரம், ஊழல்-முறைகேடுகளைத்தான் உருவாக்கும்.

நீதிபதிகள் தேர்வு – மாபெரும் மோசடி

கீழமை நீதிமன்றத்தில் தேர்வாவது பரீட்சை மூலம் நடக்கிறது. சிலர் படித்தும், பலர் செல்வாக்கிலும் வருகிறார்கள். ஆனால், உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்வு முழுக்க கள்ளத்தனமாகவே நடக்கிறது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் 75% பேர் வாரிசு, அரசியல்-சாதி, செல்வாக்கு, பணம், லாபியிங் செய்து வந்தவர்கள்தான். இப்படி பதவிக்கு வந்தவர்கள் இன்று எல்லா முறைகேடுகளிலும் ஈடுபடுகிறார்கள். இதை எவராவது மறுக்க முடியுமா? இப்படிப்பட்டவர்களின் தீர்ப்புகள் எப்படி இருக்கும்? இதில் முதற்கட்டமாகவே சில நீதிபதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளோம். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் எழுத்துபூர்வமாகவே தாக்கல் செய்யப்படும்.

பெட்டி வாங்குவது மட்டுமல்ல ஊழல். ஓய்வு பெற்ற பிறகு அரசு சன்மானங்களைப் பெறுவதற்காகவே அரசின் முறைகேடுகளை ஆதரித்து தீர்ப்பு வழங்குகிறார்கள் நீதிபதிகள். இவையும் ஊழல்தான். அணு உலைக்கு ஆதரவாக தீர்ப்பு கொடுத்த நீதிபதி ஜோதிமணிக்கு பசுமைத் தீர்ப்பாப் பதவி, ஊழல் நீதிபதி சொக்கலிங்கத்துக்கு பசுமை தீர்ப்பாயம். சிங்காரவேலுக்கு தனியார் பள்ளி கட்டண கமிட்டி. இதில் சிங்காரவேலு வசூல் செய்யாத தனியார் பள்ளிகளே இல்லை. பதவிக்காலம் முடிந்ததும் வைகுண்டராஜனின் டி.விக்கு வேலைக்குச் செல்லும் நீதிபதி வெங்கட்ராமன் தனது பணிக்காலத்தில் எப்படி யோக்கியமாய் இருந்திருப்பார்? இதுதவிர உயர்நீதிமன்ற ஊழியர்கள் நியமனம் முழுக்க நீதிபதிகளின் உறவினர்கள், சாதிக்காரர்களுக்கே வழங்கப்படுகிறது. இதில் சட்டமோ, விதிமுறையோ என்றுமே பின்பற்றப்பட்டதில்லை. ஆனால், இந்த யோக்கியர்கள் சொல்கிறார்கள் மக்கள் சட்டத்தை கடைப்பிடிக்காவிட்டார் சிறை என்று.

அனைத்துக் கொள்ளையின் பங்காளிகளாக… நி(நீ)தி அரசர்கள்!

தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்து வரும் கனிம வளக் கொள்ளைக்கு விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடுத்த வழக்கில் முதலில் அனைத்துக் கொள்ளைகளையும் விசாரிக்கச் சொன்ன தலைமை நீதிபதி கவுல், அடுத்து கிரானைட்டை மட்டும் விசாரிக்கச் சொல்லி உத்தரவை மாற்றுகிறார். காரணம் ஆற்று மணல், தாதுமணல் மாபியாக்கள் ஆட்சி மேலிடத்திற்கு நெருக்கமானவர்கள். இடைத்தேர்தல் மோசடிகள், அரசுப் பணத்தில் ஆளும் கட்சி விளம்பரங்கள், புதிய தலைமைச் செயலகம் மூடப்பட்டது உள்ளிட்ட வழக்குகளில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றுக் கொள்ளும் வகையில்தான் தலைமை நீதிபதி தனது பணிகளைச் செய்து வருகிறார். ஊழல் நீதிபதிகள் குறித்து ஆதாரத்துடன் புகார் சொன்னாலும், உண்மைதான் என்ற ஏற்றுக் கொண்டு நான் என்ன செய்ய முடியும் என்கிறார். ஆனால், ஆட்சியாளர்கள் சொன்னபடி ஊழல் நீதிபதிகளுக்கு பசையான துறைகளை ஒதுக்கி ஊழலுக்குத் துணைபோகிறார். பசையான கனிமவளத்துறைக்கு நீதிபதிகளுக்குள் அடிதடியே நடக்கிறது. கூடுதலாக தனது சாதி நீதிபதிகள் ஆலோசனைப்படிதான் நடக்கிறார். இக்கூட்டணியை உள்ளிருந்து வழிநடத்துகிறார் நீதிபதி இராமசுப்பிரமணியன்.

நீதிபதிகள் குற்றம் செய்தாலும் கேட்கக் கூடாதாம்! ஜெயிலாம்!

சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கை என்பதாகச் சொல்லப்பட்ட இந்திய நீதித்துறை இன்று லஞ்சம்-ஊழல் மலிந்ததாக மாறி அரசு-போலீசுடன் இணைந்து மக்களை ஒடுக்கும் அமைப்பாக மாறிவிட்டது. அம்பானி, டாடா, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள், நோக்கியா, கோகோ கோலா, ஸ்டெர்லைட் முதலான கார்ப்பரேட் நிறுவனங்கள், ஊழல் அரசியல்வாதிகள், அரசு-காவல்துறை உயரதிகாரிகள், நடிகர் சல்மான்கான் போன்ற பணக்கார கிரிமினல்களுக்கு சேவை செய்வதே தங்களின் பணி என்று அறிவிக்காத குறையாய் செயல்படுகின்றன நீதிமன்றங்கள். இதுதவிர, மாஜிஸ்திரேட், முன்சீப் முதல் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலரும் தனிப்பட்ட முறையில் லஞ்சம்-ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்துக்கள் சேர்ப்பது, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது, அரசுக்கு சாதகமாக உத்தரவுகள் வழங்கி பணி ஓய்வுக்குப் பின் பதவிகள் பெறுவது என பல்வேறு சமூக விரோத-குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், அதிகாரிகள், அரசியல்வாதிகள் போல நீதிபதிகளும் லஞ்சம்-ஊழலில் ஈடுபடுவது அனைவரும் அறிந்ததே. அரசியல்வாதிகளுக்கு விசாரணையாவது உண்டு. ஆனால், நீதிபதிகள் செய்யும் குற்றங்களைத் தண்டிக்க சட்டமே இல்லை என்பதுடன், குற்றங்களை வெளியில் சொன்னால் சொன்னவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்.! ஆக, நீதிபதிகள் லஞ்சம் வாங்குவதை, காமக் களியாட்டங்கள், பாலியல் சுரண்டல்களில் திளைப்பதை, ஆளும் கட்சி, அரசு-போலீசுக்கு சாதகமாக உத்தரவுகள் வழங்குவதை நீங்கள் நேரடியாகப் பார்த்தாலும், உரிய ஆதாரங்கள் இருந்தாலும் நீங்கள் அதை இரகசியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் சொன்னனால் உங்களுக்கு ஜெயில்தான். இதனால்தான் நீதிபதிகளின் குற்றங்களை ஊடகங்கள் வெளியிட மறுக்கின்றன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு மாறாக நீதிபதிகளுக்கு வழங்கப்படும் இந்த அதிகாரங்கள் சாரத்தில் சர்வாதிகாரம் தவிர வேறென்ன?

ஊழல் நீதிபதிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

கடந்த 65 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல், அதிகார மீறல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள். இதில் மிகவும் கேவலமாக நடந்து, குற்றம் நிரூபணமாகிய கீழமை நீதிமன்ற நீதிபதிகள் சிலர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நிலை என்ன? என்றாவது ஒரு நீதிபதி மீது லஞ்சம்-ஊழல் குற்றத்திற்கு வழக்கு, விசாரணை நடந்ததுண்டா? இல்லை நீதிபதிகள் அனைவரும் யோக்கியர்களா?

மக்களுக்கு எதிராக தயங்காமல் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகளுக்கு சட்ட பாதுகாப்பு எதற்கு? குற்றவாளி என்று தெரிந்தாலும் பாராளுமன்றம் மூலம் மட்டுமே நீதிபதிகளை நீக்க முடியும். ஊழல் பாராளுமன்றம் மூலம் இது சாத்தியமா?

அரசியல்வாதிகளாவது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களுக்கு கூழைகும்பிடு போட வேண்டும். நீதிபதிகள்-அதிகாரிகளுக்கு அதவும் இல்லை. நீதிபதிகள் மக்களுக்கு பொறுப்புடையவர்களாக ஆக்கப்பட வேண்டும். நீதிபதிகள் தங்களின் குற்றங்களுக்கு தண்டிக்கப்படும் நிலை உருவாக்கப்பட வேண்டும். அதற்குத்தான் வழக்கறிஞர் போராட்டம்.

எனவே வழக்கறிஞர் பேரணியில் அனைத்து மக்களும் பங்கேற்பீர்!  பேரணி முடிவில் ஊழல் நீதிபதிகள் பட்டியல் வெளியிடப்படும்.

பாராளுமன்றமே, உச்சநீதிமன்றமே!

  • சென்னை உயர்நீதிமன்ற ஊழல் நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க குழு அமைத்திடு!
  • அவமதிப்பு வழக்கு, சிறை மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்!
  • நீதிபதிகள் குற்றங்களைத் தண்டிக்க உரிய சட்டம் வரும்வரை போராடுவோம்!

“நீதித்துறை ஊழலே அனைத்து ஊழலின் பாதுகாவலன்”

நீதித்துறை ஊழல் ஒழிப்புப் பேரணி – ஆர்ப்பாட்டம்

நாள் : 10-09-2015 வியாழன் காலை 10.00 மணி

பேரணி துவங்கும் இடம் : மாவட்ட நீதிமன்றம், மதுரை
ஆர்ப்பாட்டம் : காந்தி சிலை, உயர்நீதிமன்றம், மதுரை.

700 madurai

தகவல்

அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள் – தமிழ்நாடு

ஊழல் நீதிபதிகள் மீதான புகார் தெரிவிக்க
மதுரை வழக்கறிஞர்கள் சங்கம்
தொலைபேசி எண் : 0452- 2537120

பா.ஜ.க – ரன்வீர் சேனா கொலைகாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் !

0

”நான் அவர்கள் மேல் ஆத்திரமாக இருந்தேன். எதற்காக நூறு ரூபாய் மதிப்புள்ள துப்பாக்கித் தோட்டாக்களை இவர்கள் மேல் நான் வீணாக்க வேண்டும்? என்னிடமிருந்த அரிவாளைப் பயன்படுத்துவதே மேல். அந்த ஐந்து பேரின் தலைகளை அரிவாளால் சீவியெறிந்தேன்” – சந்தகேஷ்வர் சிங்.

”அட.. நீங்க பழுத்த மாம்பழங்களை அடிக்க மா மரத்தின் மேல் கம்பை வீசுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பழங்களும் விழும், சில காய்களும் கூட விழலாம். பழத்தை விட்டு காயை விழ வைத்ததற்காக உங்களை தண்டிக்கவா முடியும்? அதே மாதிரி தான்.. எங்க ஆளுங்களை இளைஞர்களைக் கொல்லத் தான் அனுப்பினோம்… அவங்க அந்த வேலையைப் பார்க்கும் போது சில குழந்தைகளும் கூட செத்திருக்கலாம். இதுக்கெல்லாம் தண்டிக்கவா முடியும்? அப்படியே தண்டிக்கனும் என்றாலும், அதுக்காக சம்பளத்தையா பிடித்தம் செய்ய முடியும்?” – ரவீந்திர சவுத்ரி

”எங்க ஆளுங்களை அனுப்பும் போது 36 இன்ஞ்ச் வயிறு இருந்தா போட்டுத் தள்ளுங்கன்னு சொல்லி தான் அனுப்பினோம். அது ஆணோ பெண்ணோ… ஒரு வேளை பெண்ணா இருந்தா அவ வயித்திலேர்ந்து எதிர்காலத்தில பிள்ள பூச்சி எதாவது பிறந்து நக்சலைட்டா ஆயிடுமில்லே?” –சைலேந்திர வாத்சாயன்.

https://www.youtube.com/watch?v=E9b3rP079PY

யார் இவர்கள்? எதைப் பற்றிப் பேசுகிறார்கள்?

கடந்த ஆகஸ்டு 17-ம் தேதி தில்லி பத்திரிகையாளர் மன்றத்தில் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் அனிருத் பஹால். தெஹல்கா பத்திரிகையைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும், தற்போது கோப்ரா போஸ்ட் என்கிற இணைய பத்திரிகையை நடத்தி வருபவருமான அனிருத் பஹால், ஸ்டிங் ஆபரேஷன்களின் தந்தை என்று அறியப்படுபவர்.

1994-ம் ஆண்டிலிருந்து 2000-மாவது ஆண்டு வரை பீகார் மாநிலத்தில் நிலபிரபுக்களின் தனியார் குண்டர் படையான ரன்வீர் சேனா நிகழ்த்திய ஆறு மோசமான படுகொலைச் சம்பவங்களில் நீதி மன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷன் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்காகவே பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் அனிருத் பஹால்.

பீகார் மாநிலத்தின் சார்த்துரா(1995), பதனி டோலா(1996), லக்‌ஷ்மன்பூர் பதே (1997), இக்வாரி (1997), சங்கர் பிகா (1999), மியான்பூர் (2000) ஆகிய ஆறு இடங்களில் நடந்த கொடூரமான தாக்குதல்களில் சுமார் 144 தலித்துகள் ரன்வீர் சேனாவால் படுகொலை செய்யப்பட்டனர். ரன்வீர் சேனா தோற்றுவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை சுமார் 300க்கும் மேற்பட்ட தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

Murli-Manohar-Joshi_1
முரளி மனோகர் ஜோஷி

ரன்வீர் சேனா நிகழ்த்திய படுகொலைகளில் ஆறு சம்பவங்களே மேலே பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தப் படுகொலைகள் தொடர்பான சில வழக்குகளில் கீழமை நீதிமன்றம் குற்றவாளிகளைத் தண்டித்தாலும், உயர்நீதிமன்றத்தில் நடந்த மேல் முறையீடுகளின் போது குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே, “போதிய சாட்சிகள்” இல்லாத காரணத்தால் விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளை சந்தித்து ’ரன்வீர் சேனா குறித்து திரைப்படம் இயக்கவுள்ளதாகவும், அதற்கான தகவல்கள் தேவை’ என்கிற முகாந்திரத்தில் அணுகும் கோப்ரா போஸ்ட் நிருபர்கள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தமது ‘சாதனைகள்’ குறித்து பீற்றிக் கொள்வதை இரகசிய கேமராக்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்திய ராணுவத்தால் ’கழித்துக் கட்டப்பட்ட’ நவீன ஆயுதங்கள் இராணுவ உயரதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர்களின் மூலம் தமக்கு கிடைத்ததென்று இந்த ஸ்டிங் ஆபரேஷனின் போது இரகசிய கேமராவின் முன் தெரிவித்துள்ளனர் ரன்வீர் சேனாவின் குண்டர்கள். மேலும் தங்கள் மேலான வழக்கு விசாரணைகள் நீர்த்துப் போவதற்கு பாரதிய ஜனதாவின் முரளி மனோகர் ஜோஷி உதவினார் என்றும், இந்தி மாநிலங்களைச் சேர்ந்த வேறு சில கட்சிகளும் தங்களுக்கு உதவினர் என்றும் தெரிவித்துள்ளனர்.

ரன்வீர் சேனா: சுருக்கமான வரலாறு

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இமயத்தின் அடிவாரத்தில் அமைந்த டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதியில் அமைந்த நக்சல்பாரி கிராமத்தில் 1967-ம் ஆண்டு வசந்தத்தின் இடி முழக்கம் ஒலித்தது மார்க்சிய லெனினிய இயக்கம். பல நூற்றாண்டுகளாக நிலபிரபுக்களின் ஆதிக்கத்தின் கீழ் அழுந்தி வந்த ஏழை விவசாயிகள் கம்யூனிஸ்டு புரட்சியாளர்களின் தலைமையில் அணி திரண்டு அதிகாரத்தையும் நிலத்தையும் பறித்தெடுத்தனர். நக்சல்பாரி எழுச்சி என்று பின்னர் அழைக்கப்பட்ட இந்நிகழ்வுகள் இந்திய வரலாற்றில் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக மா.லெ கட்சியை அடையாளம் காட்டியது.

நக்சல்பாரி எழுச்சி அதிர்வு இந்தியாவெங்கும் அறுபதுகளின் இறுதியில் எதிரொலித்தது. பீகார் அப்போது எரியக் காத்திருந்த வறண்ட வனமாக இருந்தது. காலம் காலமாக ஜமீந்தார்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த ஏழை விவசாயக் கூலிகள் தமக்கான தருணத்தை எதிர்பார்த்துக் கிடந்தனர். நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து பற்றிப் படர்ந்து வரும் கிளர்ச்சியை ஒடுக்குவதோடு கூடவே தணிக்கும் நடவடிக்கைகளிலும் இந்திய ஆளும் வர்க்கம் உடனடியாக இறங்கியது.

பெயரளவிலான நிலச் சீர்திருத்தத்தை முன்வைத்தது ஆளும் வர்க்கம். இந்த நிலச் சீர்திருத்தம் பழைய ஜமீந்தார்கள் மட்டும் கோலோச்சிக் கொண்டிருந்த பீகாரில் பிற ஆதிக்க சாதியினரான குர்மி, ராஜ்புத், பூமிஹார், யாதவ் போன்றோரிடம் நிலத்தையும் அதிகாரத்தையும் குவித்தது. மக்களைக் கசக்கிப் பிழிந்த ஜமீந்தாரி முறை ஏட்டளவில் அகற்றப்பட்டிருந்தாலும், எதார்த்தத்தில் இப்புதிய ஆதிக்க சக்திகளில் அதே நிலப்பிரபுக்கள் வேறு பெயர்களில் தொடர்ந்தனர். ஜமீந்தார்களின் கீழே நூற்றாண்டுகளுக்கும் மேலாக நசுங்கிக் கிடந்த தலித் கூலி விவசாயிகள் இப்போது ஆதிக்க சாதி நிலப்பிரபுக்களின் கையில் சிக்கினர்.

முறையான கூலி கிடையாது, ஒப்புக் கொள்ளப்பட்ட வேலை நேரம் கிடையாது, இன்ன வேலை என்கிற வரையறை கிடையாது, உரிமை கிடையாது – உழைப்பதற்கான கைகளையும் கால்களையும் தவிற வேறு உடமைகளும் கிடையாது என்பது தான் தலித் மக்களின் அன்றைய நிலை. மேற்கு வங்கத்தில் எழுந்த நக்சல்பாரி இடி முழக்கம் இந்தியாவெங்கும் பரவிய போது பீகாரில் உரிமைகள் அற்ற கூலித் தொழிலாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக அது மாறியதில் வியப்பில்லை.

தங்களின் நியாயமான உரிமைகளுக்காக மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் சென்டர் (MCC), இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா.லெ – விடுதலை) போன்ற நக்சல்பாரி கட்சிகளின் தலைமையில் திரண்டனர் கூலி விவசாயிகளான தலித் மக்கள். காலங்காலமாக தங்கள் கால்களில் மண்டியிட்டுக் கிடந்த மக்களின் எழுச்சியைக் கண்டு உள்ளம் குமுறினர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பணக்கார விவசாயிகள். இம்மக்களின் எழுச்சியை குண்டாந்தடிகளாலும், துப்பாக்கி முனையிலும் ஒடுக்கி விட முடியும் என்று கணக்குப் போட்டனர்.

துவக்கத்தில் ஜமீன்தார்கள் மற்றும் குறுநில மன்னர்கள் பராமரித்து வந்த ’லத்தியால்’ என்ற ஆயுதந் தாங்கிய குண்டர் படையைக் கொண்டு மக்களை ஒடுக்கினர். எனினும், நக்சல்பாரி கொரில்லாக்களின் பதில் தாக்குதலுக்கு முன்னால் ஜமீந்தார்களின் பழைய வகைப்பட்ட குண்டர் படை சிதறுண்டு போனது. இந்நிலையில் ஒவ்வொரு சாதியின் நிலவுடமைத் தலைமையும் தமக்கேயான குண்டர் படைகளை அமைக்கத் துவங்கினர். சன்லைட் சேனா, சவர்ண விடுதலைப் படை, பிரம்மரிஷி சேனா, குவேர் சேனா, கங்கா சேனா என்று பீகார் மாநிலம் நெடுக ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆயுதம் தாங்கிய குண்டர் படைகள் அமைக்கப்பட்டன.

ஒரு மையமான கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய நக்சல்பாரிகளின் மக்கள் படையைத் தனித் தனியாக எதிர் கொண்ட இவர்களை சீக்கிரமே ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தனர் புரட்சியாளர்கள். எண்பதுகளில் ஏழை தலித் கூலி விவசாயிகளின் உரிமைக் குரல் ஒரு தீர்மானகரமான நிலையை அடைகிறது. நக்சல்பாரிகளின் தலைமையில் அணிதிரண்டு நின்ற மக்களின் நியாயமான கோரிக்கைகளில் பல நிறைவேற்றப்பட்டது. கூலி நிர்ணயம் போன்ற கோரிக்கைகளைத் தவிர்த்துக் கொள்ள முடியாது என்று அஞ்சிய ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள், அவற்றை தங்களது தேர்தல் வாக்குறுதிகளாக்கிக் கொண்டன.

உழைக்கும் தலித் மக்களின் தன்னம்பிக்கையான நிலை தொடர்வது தமது இருப்பையே அசைத்துப் போட்டு விடும் என்று ஆதிக்க சாதிகள் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த தொன்னூறுகளில் தான் ரன்வீர் சேனா உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே ஆதிக்க சாதி நிலச்சுவாந்தார்களின் சார்பாக இயங்கி வந்த தனியார் ஆயுத கும்பல்கள் சிலவற்றை பிரம்மேஷ்வர் சிங் என்பவர் ஒன்றிணைத்து அதை ரன்வீர் சேணாவாக 1994-ம் ஆண்டு அறிவிக்கிறார்.

ரன்வீர் சேனா : நிலப்பிரபுக்களின் ஆதிக்க சாதிவெறிப் படை மட்டும் தானா?

ரன்வீர்-சேனா-பிரம்மேஷ்வர்-சிங்
பிரம்மேஷ்வர் சிங்

ரன்வீர் சேனா தனது தோற்றத்திலேயே இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டிருந்தது. முதலில், ஏழை கூலி விவசாயிகளான தலித் மக்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவது, அடுத்து இம்மக்களின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடி வந்த நக்சல்பாரி புரட்சியாளர்களை ஒழித்துக் கட்டுவது. தனது முதலாவது நோக்கத்தை அடைவதற்காக அடுத்து வந்த ஆறாண்டுகளில் ஆடிய இரத்த தாண்டவம் இந்தியாவின் போலி ஜனநாயக கோவணத்தை முற்றாக உருவியெறிந்தது.

1996-ம் ஆண்டு ஜூலை 11-ம் நாள் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பதனி டோலாவில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய மக்களின் மேல் ரன்வீர் சேனா குண்டர் படை தாக்குதல் நடத்தி சுமார் 23 பேரை கொன்று போட்டது. இறந்தவர்கள் அனைவரும் தலித்துகள். பதனி டோலாவில் தலித்துகளைக் கொன்று விட்டுத் தப்பும் வழியில் சோனே நதியில் படகோட்டிகளாக இருந்த மீனவர்கள் ஐந்து பேரின் தலைகளை வெட்டி வீழ்த்திச் சென்றனர் அக்காட்டுமிராண்டிகள்.

பதனி டோலா தக்குதலைத் தொடர்ந்து, உடனடியாக சுமார் 33 மூன்று பேரின் பெயர்களோடு முதல் தகவல் அறிக்கையை மாநில போலீசு பதிவு செய்கிறது. பின்னர் மார்ச் 24, 2000-ம் ஆண்டில் மேலும் 65 பேரின் பெயர்களையும் வழக்கில் சேர்க்கிறது. 2010-ம் ஆண்டு ஆரா மாவட்ட கீழமை நீதிமன்றம் மூவருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்குகிறது. பின்னர் இவ்வழக்கு குற்றவாளிகளால் மேல் முறையீடு செய்யப்பட்டு 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பாட்னா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ‘போதிய சாட்சியங்கள்’ இல்லை என்று விடுவிக்கிறது. பதனி டோலா தாக்குதலை வழிநட்த்தி முன்னின்று செயல்படுத்திய சந்தகேஷ்வர் சிங்கை தனது ஸ்டிங் ஆபரேஷனின் ஒரு பகுதியாக சந்தித்துள்ளது கோப்ரா போஸ்ட் பத்திரிகை.

எந்தக் குற்றவுணர்ச்சியும் இன்றி கேட்பவர் இரத்தம் உறைந்து போகும் வண்ணம் தனது தலைமையில் செய்யப்பட்ட படுகொலைகளைப் பற்றி சந்தகேஷ்வர் விவரித்துள்ளான். சாட்சியங்களும் ஆதாரங்களும் தேசத்தின் ’மனசாட்சிக்கு’ முன் ஒரு பொருட்டே இல்லை என்று நீட்டி முழக்கும் நீதி மன்றங்களைக் கொண்டதொரு நாட்டில் நாம் வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சொல்லிக் கொள்ளப்படும் தேசத்தின் மனசாட்சி எனப்படுவது யாதெனில், தாகம் தணிக்க பலி கேட்கும் இரத்தக் காட்டேரி தானென்பதை சந்தகேஷ்வர் வாழ்ந்து நிரூபிக்கிறார்.

இந்த வழக்கில் சாட்சிகள் உண்டு, ஆதாரங்கள் உண்டு, ஏன் ஒப்புதல் வாக்குமூலமே இப்போது இருக்கிறது – அப்பாவிகள் யாகூப் மேமனனையும் அப்சல் குருவையும் கொன்று போட்ட அந்த ‘தேசப்பற்று மிக்க அவசரம்’ எங்கே? ரன்வீர்சேனா கொலகாரனின் வாக்குமூலம் வெளியாகி நாட்கள் பல கடந்து விட்டது; எங்கோ பீகாரின் மூலையில் சர்வ சுதந்திரமாகத் திரியும் இந்தக் குற்றவாளிகளை யார் தண்டிக்கப் போகிறார்கள்?

ரன்வீர் சேனா - ஆதிக்க சாதியின் கொலைப் படை
ரன்வீர் சேனா – ஆதிக்க சாதியின் கொலைப் படை

சந்தகேஷ்வர் மட்டுமின்றி, லக்‌ஷ்மன்பூர் பதே படுகொலைகளின் மூளையான சித்தநாத், இக்வாரி படுகொலைகளின் சூத்திரதாரி அரவிந்த் குமார் சிங், மியான்பூர் படுகொலைகளை முன்னின்று நடத்திய ப்ரமோத் சிங், லக்‌ஷ்மன்பூர் பதே படுகொலைகளில் சம்பந்தப்பட்ட இன்னொரு கொலையாளியான போலா சிங், ரவீந்திர சவுத்ரி ஆகியோரையும் கோப்ரா போஸ்டின் நிருபர் சந்தித்துள்ளார். ஒவ்வொருவரும் வெவ்வேறு வார்த்தைகளில் தாம் முன்னின்று நடத்திய படுகொலைகளை பெருமிதத்தோடு விவரித்துள்ளனர்.

ஒவ்வொரு முறை தலித்துகள் கொல்லப்படும் போதும் முதலில் ஒரு சிலரின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கும் உள்ளூர் போலீசு, சில ஆண்டுகள் கழித்து வேறு பலரின் பெயர்களையும் முதல் தகவல் அறிக்கையில் சேர்த்துள்ளது. குற்றம் இழைத்தவர்களோடு குற்றம் இழைக்காதவர்களையும் சேர்த்து நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை நீர்த்துப் போகச் செய்துள்ளது. ஆதிக்கசாதிக் கொலைவெறியர்களுக்கு இவ்வாறாக மறைமுக உதவி செய்தது தவிர, சம்பவம் நடக்கும் போது தாக்கப்படும் தலித் மக்களிடம் இருந்து தகவல் கிடைத்தால் பாராமுமகாய் இருந்து நேரடியாகவும் உதவியுள்ளது.

ஐபத்பூர் என்ற இடத்தில் நடந்த படுகொலைகளில் முஷார் என்கிற தலித் சாதி மக்கள் எழுவரை ஒன்பது பேர் கொண்ட ரன்வீர் சேனா கூட்டம் பட்டப் பகலில் பலரும் பார்த்திருக்க கொன்று போட்டது. இந்த சம்பவத்தை முன்னின்று நடத்திய சித்தநாத் பேசுகையில், கொலைகள் அனைத்தும் கான்பத் பகுதி காவல் நிலையத்திற்கு வெகு அருகாமையிலேயே நடந்தது என்று தெரிவித்துள்ளார்.

ஏன் பெண்களையும் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்று கேட்டதற்கு சித்தநாத் அளித்த பதில் இதயம் கொண்ட எவரையும் அசைத்துப் பார்த்து விடும் :

”இந்தியாவில, நம்ம மதத்தை பொருத்த வரைக்கும் நீங்க வயசானவைனைக் கொன்னா பாவம் சின்ன வயசுக்காரனைக் கொன்னா பாவமில்லைன்னு சொல்றதில்ல. நம்ம சட்டங்களும் கூட சின்னப் பையனைக் கொன்னா 20 வருச்ம் ஜெயில்னோ, கிழவனைக் கொன்னா ரெண்டு வருசம் ஜெயில்னோ, குழந்தையைக் கொன்னா 50 வருசம் ஜெயில்னோ சொல்றதில்ல”

இந்த விளக்கத்திற்கு கூடுதலாக இறந்தவர்கள் ஒவ்வொருவரும் தலித்துகள். ஆதிக்க சாதி வெறியர்களைப் பொறுத்தவரை இம்மக்கள் தங்கள் கைகளால் கொல்லப்படுவதற்காக இறைவனால் படைக்கப்பட்டவர்கள். உயிரோடு இருந்தால் தமக்கு அடங்கி நடக்க வேண்டும். கூலி கேட்க கூடாது. உரிமை கேட்க கூடாது. மானமும் சுயமரியாதையும் தலித்துகளுக்கு இருக்க கூடாது. பார்ப்பன சனாதன மதம் ஆதிக்க சாதியினருக்கு உத்திரவாதம் செய்து கொடுத்துள்ள இந்த பிறப்புரிமைகள் கேள்விக்குட்படுத்தப்படும் போது கொன்று போடுவதில் எந்தத் தவறும் இல்லை என்பதே இவர்களை இயக்கும் நீதி.

பதனி-டோலாஇந்தி பேசப்படும் மாநிலங்களில் போலீசு, அரசு அதிகாரிகள், நீதித் துறை என்று அரசின் ஒவ்வொரு அங்கத்திலும் ஆதிக்க சாதித் திமிர் விரவிக் கிடக்கின்றது. தங்களுக்கு பிறப்புரிமையாக இந்து மதம் அளித்தவொன்றைக் கேள்விக்குட்படுத்தியவர்கள் என்பதாலேயே தலித்துகளைக் கொன்ற ரன்வீர் சேனா குண்டர் படையிடம் அணுக்கமாக நடந்து கொண்டுள்ளனர்.

1994-ம் ஆண்டு தொடங்கி 2000-மாவது ஆண்டு வரை ரன்வீர் சேனா பீகாரின் குறுக்கும் நெடுக்குமாக நிகழ்த்திக் காட்டிய இரத்த வெறியாட்டத்திற்கு கட்சிகளைக் கடந்து ஆதிக்க சாதித் தலைவர்கள் உதவினர். இராணுவத்திற்கென்றே முத்திரையிடப்பட்ட இலகுரக இயந்திரத் துப்பாக்கிகள் (LMG) ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் போன்ற கொலைக் கருவிகள் மிக எளிதாக எப்படிக் கிடைத்தது?

சித்தநாத் தன்னிடம் நடந்த போலீசு விசாரணையின் போது ஆயுதங்கள் எப்படிக் கிடைத்தது என்று கேட்கப்பட்டதாகவும், அதற்கு முன்னாள் பிரதமர் சந்திரசேகரே உதவி செய்தார் என்று தான் விசாரணை அதிகாரியிடம் குறிப்பிட்டதையும் நினைவு கூர்ந்துள்ளார். தலித்துகளைக் கொன்று தீர்ப்பது தேசத்தின் நலனுக்கானது என்பதால் பிரதமராக இருந்த ஒருவரே தங்களுக்கு உதவியுள்ளார் என்றும் தான் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். இந்த சந்திரசேகர்தான் யோக்கியர் துக்ளக் சோவின் மனங்கவர்ந்த நேர்மையாளர்.

இந்தி மாநிலங்களின் பிற ஆதிக்க சாதிக் கட்சிகளையும் விட பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்களும் உள்ளூர் வட்டாரத் தலைவர்களும் ரன்வீர் சேனாவோடு நேரடியாக கைகோர்த்துள்ளனர். ரன்வீர் சேனாவின் படுகொலைகளை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அமீர் தாஸ் தலைமையிலான கமிட்டி நிதிஷ்குமார் பதவியேற்றவுடன் விசாரணை முடியும் முன்பே கலைக்கப்பட்டுள்ளது. நீதியரசர் அமீர் தாஸிடம் விசாரணையின் போது அவர் எதிர் கொண்ட அரசியல் தலையீடுகள் தொடர்பாக கோப்ராபோஸ்ட் பத்திரிகை கேள்வியெழுப்பியுள்ளது.

முரளி மனோகர் ஜோஷி, சுஷீல் குமார் மோடி, சி.பி தாக்கூர், ஷிவானந்த் திவாரி போன்றோர் விசாரணைகளின் போது தலையிட்டனர் என்பதை உறுதி செய்கிறார் நீதியரசர் அமீர் தாஸ். மேலும், படுகொலைகளைப் பற்றி விசாரித்து வந்த நேர்மையான போலீசு அதிகாரி ஒருவர், முரளி மனோகர் ஜோஷி தன்னை தொடர்பு கொண்டு தான் சொல்வது போல் கேட்க வேண்டுமென்றும், அல்லது தாங்கள் பதவிக்கு வந்த பின் உண்டு இல்லை என்று செய்து விடுவோம் என்றும் மிரட்டியதாக தனது தலைமையிலான விசாரணைக் கமிஷனில் வாக்குமூலமாகவே பதிவு செய்ததைக் குறிப்பிட்டுள்ளார் அமீர் தாஸ்.

தென்னிந்தியாவைப் போல் ஓரளவுக்கு கூட பார்ப்பனிய எதிர்ப்பு சீர்திருத்தப் பாரம்பரியம் இல்லாத இந்தி மாநிலங்களில் தான் பார்ப்பனிய சாதி வெறி அதன் முழு பரிமாணத்தில் தன்னை வெளிக் காட்டிக் கொள்கிறது. தலித்துகள் என்பதால் அவர்கள் ஆதிக்க சாதியினர் வாழும் சுற்றுப்புறத்தில் உள்ள மரம் மட்டை செடி கொடி போன்ற அஃறிணைகளைப் போல் நடத்தலாம் என்கிற பார்ப்பனிய கண்ணோட்டம் ரன்வீர் சேனா நிகழ்த்திய படுகொலைகளுக்கான மனத் தயாரிப்பை அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். எனினும், அம்மக்கள் தாம் வாழ்ந்த சூழலின் மேல் எந்தக் கட்டுப்பாடோ உரிமையோ அற்று இருந்தார்கள் என்பதே அந்த ஒடுக்குமுறைக்கான மையமான காரணமாக விளங்கியது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு ஆதாரமான இந்த சொத்துடைமை பற்றிய கேள்விக்கு விடையளித்ததாலேயே மா.லெ இயக்கங்கள் இன்று வரை அம்மாநிலங்களில் உயிர்ப்போடு செயல்பட்டு வருகின்றன.

நக்சல்பாரி புரட்சியாளர்களின் பதிலடிகள் மற்றும் தமக்குள்ளேயே இருந்த அதிகாரப் போட்டி மற்றும் குழுச் சண்டைகளின் விளைவாக இரண்டாயிரமாவது ஆண்டிலிருந்து ரன்வீர் சேனாவின் செல்வாக்கு மங்கத் துவங்கியது. 1994-ல் பூமிஹார் சாதியின் சார்பாக உருவாக்கப்பட்ட ரன்வீர் சேனாவுக்கு இணையாக மற்ற சாதிகளைச் சேர்ந்த ஆயுதமேந்திய குண்டர் படைகளும் செயல்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் தாக்கூர், குர்மி, யாதவ் என்று ஒவ்வொரு ஆதிக்க சாதியைச் சேர்ந்த குண்டர் படைகளும் ரன்வீர் சேனாவோடு நாய்ச்சண்டையில் ஈடுபட்டன.

ஒருகாலத்தில் ஒன்றாக இருந்து தலித் மக்களை கொன்று குவித்தவர்களிடையே ஆதிக்க சாதிகளிலேயே அதிக ஆதிக்க உரிமை கொண்ட ஆண்ட பரம்பரை யார் என்ற கேள்வி எழுந்ததைத் தொடர்ந்து பரஸ்பர கழுத்தறுப்புச் சண்டைகள் உக்கிரமடைந்தன. ஒருவேளை தொழில்நுட்ப சாத்தியங்களால் அன்புமணியின் 2016 கனவுலத்திற்குள் நுழைந்தால் நமக்கும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணும் வாய்ப்பு கிடைக்கலாம். இந்த நாய்ச்சண்டைகளின் விளைவாக 2003-ம் ஆண்டு பீகாரின் கசாப்புக்காரன் என்று இழிபுகழ் பெற்ற ரன்வீர் சேனாவின் தலைவன் ப்ரமேஷ்வர் சிங் கைது செய்யப்பட்டான்.

ரன்வீர் சேனா மூலம் தலித்துக்களைக் கொல்வதில் ஜோஷியும், சாதாரண 'இந்துக்களின்' மூலம் முசுலீம்களை கொல்வதில் மோடியும் சரியான கூட்டாளிகள்
ரன்வீர் சேனா மூலம் தலித்துக்களைக் கொல்வதில் ஜோஷியும், சாதாரண ‘இந்துக்களின்’ மூலம் முசுலீம்களை கொல்வதில் மோடியும் சரியான கூட்டாளிகள்

சுமார் ஒன்பதாண்டுகள் சிறையில் கழித்த பிரமேஷ்வர் சிங்கின் மேலான வழக்குகள் ஒவ்வொன்றும் “போதிய சாட்சிகள்” இல்லை என்று நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன. 2012 ஏப்ரல் மாதம் பிணையில் வெளிவந்த பிரம்மேஷ்வர், அதே ஆண்டு மே மாதம் சொந்தமாக அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்தான். எனினும், “மாற்றம் முன்னேற்றம்” பாணியிலான கனவுகள் ஏதும் ஏற்பட வாய்ப்புக் கொடுக்காமல் அடையாளம் தெரியாத ஆறு தோழர்களால் அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பிரம்மேஷ்வரன் பிரம்மனிடமே அனுப்பி வைக்கப்பட்டான்.

தற்போது கோப்ரா போஸ்டின் ஸ்டிங் ஆபரேஷன் மூலமாக வெளியாகியிருக்கும் குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலங்கள் நமக்கு தெளிவாக சில விஷயங்களை உணர்த்துகின்றன.

இந்நாட்டின் சட்டம், நீதி மற்றும் அரசின் ஒவ்வொரு துறையும் தமக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து வழுவியுள்ளது மட்டுமின்றி எதிர்நிலை சக்திகளாக மாறி மக்களைக் கொல்லும் கருவிகளாகியுள்ளன. இந்தக் குற்றவாளிகளை நீதி மன்றங்களில் தண்டிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டன என்பதோடு, இவர்கள் விடுவிக்கப்பட்டு ஆதிக்க சாதித் திமிரில் இருந்து ஒரு மயிரளவுக்கும் கூட குறையாமல் இருந்து வருகிறார்கள் என்ற உண்மை அதைத் தான் நிரூபிக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் அறிவாளிகள் அரவிந்த நீலகண்டன் போன்ற ஜந்துக்கள் அம்பேத்கர், தலித் பாசம் என்று நடிப்பதையும் அதற்கு இந்து ஞானமரபு ,மதம் வேறு, மதவெறி வேறு போன்ற ‘தத்துவ விளக்கங்களை’ எழுதும் உத்தம எழுத்தாளர்களையும் இங்கே சேர்த்துப் பாருங்கள். இவர்களின் மனங்கவர்ந்த முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்கள் அங்கே தலித்துக்களின் இரத்தம் குடிக்கும் விலங்குகளாக வெளிப்படையாக இருக்கின்றனர்.

இந்நிலையில் இவர்களை சட்டம் நீதி மற்றும் அரசினால் எந்த வகையிலும் தண்டிக்க முடியாது என்ற காரணத்தால் பிரம்மேஷ்வர் சிங் என்ற தனி நபருக்கு அடையாளம் தெரியாத ஆறு தோழர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஒரு எதிர்நிலைக் கட்டமைவாக இந்தச் சமூகம் மொத்தத்தின் மீதும் அமுக்குப் பேய் போல் அழுத்திக் கொண்டிருக்கும் சாதி என்கிற நிறுவனத்திற்கும் வழங்க வேண்டும் – அது சமூகத்தின் மேல் அக்கறை கொண்ட ஜனநாயக சக்திகள் மற்றும் உழைக்கும் மக்கள் அனைவரின் கூட்டுறவால் மட்டுமே சாத்தியம்.

–    தமிழரசன்.

மேலும் படிக்க:

ஸ்டேசனில் டாஸ்மாக் – மதுவிலக்கிற்கு குறுக்குவழி !

2

“இத்தனை காவலர்கள் எதற்காக அங்குமிங்கும் அலையணும், பேசாம டாஸ்மாக் சரக்கு முழுவதையும் அந்தந்த ஏரியா போலீஸ் ஸ்டேசன்ல வச்சி விக்கலாமே, கலவரக்காரர்களிடமிருந்து குடிமகன்களையும், சரக்கையும், கஜானாவையும் ஒண்ணா பாதுகாத்து விடலாமே” என்று ஃபேஸ் புக்கில் ஒரு நண்பர் எழுதியிருப்பது ஆனந்த விகடனில் வெளிவந்திருக்கிறது.

2சும்மா சொல்லக்கூடாது. “எறக்கத்துல பிரேக்கடிச்சா மாதிரி” என்னா தத்துவம்?

அம்மா இந்த திட்டத்தை மட்டும் அறிவிச்சி, ஸ்டேசன் வாசல்ல ‘டாஸ்மாக்’ னு பச்சை போர்டு மாட்டிட்டாங்கன்னா, அப்புறம் போலீசுக்கு பொற்காலம்தான்.!

குடிமகன் கிட்டே குவாட்டரைக் கொடுத்திட்டு “இதுதான் ஆஃப்” னு அடிச்சுப் பேசி கல்லா கட்டலாம்.

பார்ல குத்து மதிப்பா மாமூல் வாங்குற ‘அநீதி’க்கு முடிவு கட்டி, ஆம்லெட்டுக்கு இவ்வளவு, ஆஃப் பாயிலுக்கு இவ்வளவுன்னு பர்சன்டேஜ் போட்டு உக்காந்த இடத்திலிருந்தே வசூல் பண்ணலாம்.

சரக்கடிச்சி மட்டையான குடிமகன்களை அப்டியே லாக் அப்ல அள்ளிப்போட்டு, சகல விதமான கேசுகளையும் அவன் தலையில எழுதி கணக்கு காட்டிரலாம்.

ஸ்டேசன் வாசல்லியே டூ வீலர் ஸ்டாண்டு வச்சி, அங்ஙனயே ஒரு கான்ஸ்டபிளைப் போட்டு, வண்டிய ஸ்டார்ட் பண்ற குடிமகன்களை ஊதச்சொல்லி ஊதச்சொல்லி மடக்கிடலாம்.

சேல்ஸ் டார்கெட் அச்சீவ் ஆகலைன்னு கலைக்டர் கோவப்பட்டா, ஸ்டேசன் வாசல்ல “மென் அட் ஒர்க்” னு போர்டு வச்சி, எல்லா பயலையும் டாஸ்மாக்குல நொழஞ்சிதான் வெளியே போயாகணும்னு திருப்பி விட்டுறலாம்.

இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம்! நம்ம அறிவுக்கு எட்டுனது இவ்ளோதான்.

“நாளைலேர்ந்து ஸ்டேசன்லதான் டாஸ்மாக்”குன்னு அம்மா மட்டும் அறிவிக்கட்டும். அப்புறம் பாருங்க.

எப்பேர்ப்பட்ட குடிகாரனுக்கும் ரெண்டே நாள்ல போதை தெளிஞ்சிடும்.

அப்புறம் தனியா மதுவிலக்கு சட்டம், மதுவிலக்கு போலீசு, போராட்டம், தடியடி எதுவும் தேவையில்லை.

கடை பக்கம் ஒரு பய வரமாட்டான்.

சமூகப் பொருளாதார சாதி வாரிக் கணக்கெடுப்பு: தீவிரமடையும் வறுமை !

13

சமூகப் பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு: தீவிரமடையும் வறுமைக்குத் தீர்வு என்ன?

ந்தியா வேகமாக முன்னேறுகிறது; அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும்  அடுத்த நிலையில் உள்ள இந்தியா வல்லரசாகப் போகிறது என்றெல்லாம் ஆட்சியாளர்கள் வாப்பந்தல் போட்டாலும் உண்மை நிலை வேறாக இருக்கிறது. 1947 போலி சுதந்திரத்துக்குப் பின்னரும் கிராமப்புறங்களில் குறிப்பிடும்படியான வளர்ச்சி எதுவுமில்லை; இன்னமும் வறுமையிலும் ஒடுக்கப்பட்ட நிலையிலும்தான் கிராமப்புற மக்கள் வாழ்கின்றனர். – இந்த உண்மைகளை அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு மெய்ப்பித்துக் காட்டியுள்ளது.

சமூக, பொருளாதார, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
‘வளர்ச்சி’யின் மறுபக்கம் : 10.69 கோடி கிராமப்புறக் குடும்பங்களுக்கு சொந்தமாக துண்டு நிலம் கூட இல்லை. தினக்கூலிகளாகப் பிழைப்பை நடத்தும் இவர்கள் குடிசை வீடுகளில் வறுமையில் உழல்கின்றனர்.

கடந்த 2011 முதலாக நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் ஒரு பகுதியை கடந்த ஜூன் 3-ம் தேதியன்று மைய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் காலனிய ஆட்சிக் காலத்தில் 1934-ம் ஆண்டில் சமுக பொருளாதார சாதிவாரியிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர், நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ள இந்த முதலாவது சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு, இந்திய மக்களின் அவலமான வாழ்க்கை நிலைமைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

ஐந்தாண்டு திட்டங்கள், ஊரக வளர்ச்சித் திட்டங்கள், மக்கள்நல மேம்பாட்டுத் திட்டங்கள், வறுமை ஒழிப்புத் திட்டங்கள் முதலான எவையும் நாட்டு மக்களின் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. காந்தியம், போலி சோசலிசம், சமூக நீதி, இட ஒதுக்கீடு, தனியார்மய – தாராளமய – உலகமயமாக்கம் – என எல்லா கொள்கைகளும் தோற்றுப்போவிட்டதையே நாட்டு மக்களின் வாழ்க்கை நிலைகள் இடித்துரைக்கின்றன. ஆனால் ஆட்சியாளர்களோ, இந்தியாவில் வறுமை குறைந்து, வளம் பெருகி, வல்லரசாக வளர்ந்து கொண்டிருப்பதாகப்  புள்ளவிவர சதவீதக் கணக்கு காட்டி சதிராடிக் கொண்டிருக்கின்றனர்.

இச்சமூக பொருளாதார  சாதிவாரிக் கணக்கெடுப்பின் வாயிலாக அதிகாரத்தில் எந்தெந்த சாதிகளுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்ற உண்மை வெளியாகி, அதனால் ஆதிக்க சாதிகளுக்கிடையே முரண்பாடும் மோதலும் வெடிக்கலாம் என்பதால் ஆளும் வர்க்கமும் பா.ஜ.க. அரசும் கிராமப்புற சமூக பொருளாதார நிலைமை பற்றிய விவரங்களை மட்டுமே வெளியிட்டுள்ளன. சாதிவாரிக் கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிடவில்லை. இதைக் கண்டிக்கும்  சமூக நீதி பேசும் பல்வேறு ஓட்டுக் கட்சிகள், சாதிவாரிக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இதர பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்த வேண்டுமென்று கோருகின்றன. இதன் மூலம் இக்கட்சிகள் தமது வாக்கு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கின்றன தவிர, இக்கணக்கெடுப்பின் மூலம் அம்பலமாகியுள்ள நாட்டு மக்களின் சமூக பொருளாதார அவலநிலையை மாற்றியமைப்பதற்கான எந்த திட்டத்தையும் அவை முன்வைக்கவில்லை.

சமூக, பொருளாதார, சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு
வறுமையின் கோரம் : நாட்டின் 4.08 லட்சம் குடும்பத்தினர் குப்பை சேகரித்து பிழைக்கின்றனர். 6.68 லட்சம் குடும்பங்கள் பிச்சை எடுத்துதான் வாழ்க்கையை ஓட்டுகின்றன.

இக்கணக்கெடுப்பின்படி, இந்திய நாட்டில் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறம் – என இரண்டையும் சேர்த்து மொத்தம் 24.39 கோடி குடும்பங்கள் வாழ்கின்றன. இதில் 17.91 கோடி – அதாவது 73 சதவீதக் குடும்பங்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றன. கிராமங்களில் உள்ள 21.53 சதவீத குடும்பத்தினர் – அதாவது 3.86 கோடிப் பேர் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவராவர். இவர்களில் பெரும்பாலோருக்குச் சொந்தமான வீடு கூட இல்லாமல் தொடர்ந்து வறிய நிலையிலேயே இருத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, கிராமப்புறங்களிலுள்ள 49 சதவீத குடும்பங்கள் ஏழ்மை நிலையில் உள்ளன. கிராமப்புறத்தின் 10.69 கோடி குடும்பங்களுக்கு சொந்தமாகத் துண்டு நிலம்கூட இல்லை. தினக்கூலிகளாகப் பிழைப்பை நடத்தும் இவர்கள் குடிசை வீடுகளில் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி வாழ்கின்றனர். கிராமப்புறங்ககளில் வெறும் 3 சதவீத அளவிலான குடும்பங்களில் மட்டுமே, குடும்பத்தில் ஒருவர் பட்டப்படிப்பு படித்துள்ளனர். ‘ஒளிரும் குஜராத்’தில் 72 சதவீத குடும்பங்கள் மிகக் குறைந்த கல்வி பெற்றவர்களாகவே உள்ளனர்.

இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், நாட்டின் 4.08 லட்சம் குடும்பத்தினர் குப்பை சேகரித்து பிழைக்கின்றனர். 6.68 லட்சம் குடும்பங்கள் பிச்சை எடுத்துத்தான் வாழ்க்கையை ஓட்டுகின்றன. டெல்லியில் மட்டும் 3 லட்சம் பேர் குப்பை பொறுக்கிப் பிழைக்கின்றனர்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 1 கோடியே 67 ஆயிரத்து 849 குடும்பங்களில் 42.47 சதவீதக் குடும்பங்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். கிராமப் புறங்களில் 55.58 சதவீதக் குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமப்புறத்திலுள்ள 78.08 சதவீத குடும்பங்களில் அதிகம் சம்பாதிக்கும் உறுப்பினருக்கு ரூ. 5000 க்கும் குறைவாகத்தான் வருவாய் உள்ளது.  இது தேசிய சராசரியான 74.5 சதவீதத்தை விட அதிகமாகும். குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்கள் அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. தமிழக கிராமங்களில் ஒட்டுமொத்தமாக 56 சதவீதக் குடும்பங்களுக்கு சொந்தமாக நிலம் இல்லை. இது தேசிய சராசரியான 38.27 சதவீதத்தை விட மிகவும் அதிகம். நிலமில்லாமல், கூலி வேலை செய்து பிழைக்க வேண்டிய நிலையிலுள்ள ஏழைகள் அதிகமான மாநிலங்களில் தமிழகம்தான் முதலிடம் வகிக்கிறது.

இந்தக் கணக்கெடுப்பின் முடிவுகள் வெளியான அதேநேரத்தில் , இந்தியாவில் பல லட்சம் டாலர் சொத்துக்களை உடைமையாகக் கொண்டுள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 2013-ல் 1.96 லட்சத்திலிருந்து 2014-ல் 2.5 லட்சமாக அதிகரித்துள்ளது என்று “வெல்த் எக்ஸ்” என்ற நிறுவனம் கடந்த ஜூன் 8 அன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “நியூ வேர்ல்டு வெல்த்” என்ற அமைப்பானது, புனே நகரில் மட்டும் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 317 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. 2014-ல் இந்தியாவில் 600 கோடிக்கு மேல் சொத்துக்களைக் கொண்டுள்ள பெரும் பணக்காரர்கள் 8595 பேர் என்றும், அவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ 50 லட்சம் கோடி என்றும் அது குறிப்பிடுகிறது. கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் உழைப்பைக் கொடூரமாகச் சுரண்டி வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பிடுங்கி, சமூக அடுக்கின் உச்சியிலுள்ள மேட்டுக்குடி கும்பலிடம் குவித்ததன் விளைவாக அம்பானி, மிட்டல், சாங்வி, அசிம் பிரேம்ஜி, பலோன்ஜி ஷபர்ஜி மிஸ்த்திரி ஆகிய ஐந்து பெரும் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 5,23,897 கோடி ரூபாயாக ஊதிப்பெருத்துள்ளது. இத்தகைய புள்ளிவிவரங்கள் மலைக்கும் மடுவுக்கான ஏற்றத்தாழ்வை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

இதை மேலும் தீவிரமாக்கும் வகையில், ஏற்கெனவே பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளதோடு, ரூ 7,525 கோடிக்கு மறைமுக வரியை மோடி அரசு சாமானிய மக்களின் மீது திணித்துள்ளது. நாட்டின் கோடானுகோடி மக்கள் வறுமையில் பரிதவிக்கும்போது அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பை வழங்காமல், நேரடிப் பணப்பட்டுவாடா திட்டத்தின் மூலம் அவர்களைச் சந்தைச் சூதாட்டத்தில் சிக்க வைக்கிறது. அரிசி, மண்ணெண்ணெய் முதலான அத்தியாவசியப் பொருட்களுக்கான மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் போடப்படும் என்று இதற்காகவே ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு திட்டங்களை மோடி அரசு திணித்துவருவதோடு, இதனை வளர்ச்சிக்கான பாதையாகச் சித்தரிக்கிறது.

இந்த ‘வளர்ச்சி’ யாருக்கானது என்பதை இந்தப் புள்ளி விவரங்களே  காட்டும்போது, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனப்படும் இந்தப் பேரழிவுப் பாதையை அனைத்து ஓட்டுக்  கட்சிகளும் ஒரே குரலில் ஆதரித்துக் கூப்பாடு போட்டுவருவது எத்தகையதொரு மோசடி!

– மனோகரன்
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________

திருச்சி, கோவை: மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !

0
இன்ஸ்பெக்டர் மணிவர்மன்

7. கோவை

ந்தியத் தொழிலாளி வர்க்கம் கொஞ்சமேனும் அனுபவித்துக் கொண்டிருக்கும் உரிமைகளை மொத்தமாக கருக்கும் விதமாக முதலாளித்துவ எடுபிடி சுயமோகி நார்சிஸ்ட் மோடி அரசு தயாரித்துள்ள தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவைக் கண்டித்து பு.ஜ.தொ.மு கடும் பிரச்சாரம் செய்து வருகிறது. அதன் அங்கமாக அந்த சட்ட நகல் எரிப்புப் போராட்டம் தமிழகமெங்கும் செப்.2 வேலை நிறுத்தத்தன்று நடத்தப்பட்டது.

அதிலும், தொழிலாளி வர்க்கத்தின் எதிரிகளான பி‌.எம்‌.எஸ் மற்றும் ஐ‌.என்‌.டி‌.யு‌.சி ஆகிய ஆளும் வர்க்கக் கட்சிகளின் நேரடிக் குழந்தைகளான தொழிற்சங்கங்களை நிராகரித்து இந்த கயவாளிகளுக்கு அங்கீகாரம் தேடித் தரும் போலிகளின் சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி ஆகிய துரோகச் சங்கங்களை புறக்கணித்து உண்மையான பாட்டாளி வர்க்க தொழிற்சங்கத்தின் கீழ் தொழிலாளிகள் அணிதிரள வேண்டும் என்ற கோரிக்கையுடன் பரப்புரையை துவங்கினோம்.

இதே உள்ளடக்கத்துடன் துண்டுப் பிரசுரங்களும் சுவரொட்டிகளும் கடந்த 10 நாட்களாக கோவை முழுக்க பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு ஆலை வாயில்களிலும் ஷிப்ட் கூட்டங்களிலும் ஏராளமான சுவர்களில் எண்ணிலடங்கா கரங்களில் இணையதளத்தில் என பல வடிவங்களில் பரப்புரை செய்தன.

நாம் எதிர்பார்த்தது போலவே மத்திய அரசின் நயவஞ்சகமான ரூ 20,000 குறைந்த பட்ச ஊதியம் என்ற பித்தலாட்ட அறிவிப்பை காரணம் காட்டி பி‌.எம்‌.எஸ் வேலை நிறுத்ததிலிருந்து விலகியது. போலிகளின் சங்கங்களான துரோகக் கூட்டணி சி‌.ஐ‌.டி‌.யு மற்றும் ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி இதனைப் பற்றி வாயே திறக்கவில்லை. இந்த கள்ள மவுனிகள் இன்று இந்த நிமிடம் வரையிலும் கூட்டு நடவடிக்கை குழுவில் (JAC – Joint Action Committee) BMS மற்றும் INTUC உடன் மிக இணக்கமான முறையில் இருந்து வருகிறார்கள். விமர்சனமோ கண்டனமோ ஒன்றும் கிடையாது. இப்படி, எதிரிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு இவர்கள் தொழிலாளி வர்க்கத்துக்கு செய்யும் துரோகம் என்பது மிக மிக அருவெறுப்பூட்டும் ஆபாசமானது. தொழிலாளிகளின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதை மிக நேர்த்தியாக ஒரு கடமையாகவே இந்த ஆளும் வர்க்க “அப்பரசண்டிகள்” செய்து வருகிறார்கள்.

தொழில் நகரமான கோவையில் போலிகளின் தாக்கமும் சாதனைகளும் பல. ஏகப்பட்ட மில்களை மூடியது, தொழிற்சங்கப் போராளிகள் உருவாகுகையிலேயே கருச் சிதைவு செய்தது, தியாகிகளை கொச்சைப் படுத்துவது என பல ‘வரலாற்றுச் சிறப்பு மிக்க’ செயல்களை செய்து கொண்டும் இருக்கின்றனர்.

‘ஒரு கம்யூனிஸ்ட் கட்சி. தொழிற்சங்கங்களை அடித்தளமாக கொண்ட கட்சி. தனது அடித்தளமே ஆட்டம் காணும் வகையில் ஒரு அறிவிப்பை அரசாங்கம் செய்கையில் அனுமதி வாங்கி இப்படி ஒரு மொண்ணையான ஆர்ப்பாட்டம் செய்வதா’ என்று ரயில் மறியலுக்கு மிச்சமிருக்கும் ஆளும் வர்க்க சங்கமான INTUC பண்ணையார்களை அழைத்திருக்கிறார்கள். அவர்கள், “நீயே போயி பண்ணிக்கோ போ” எனக் கூறியதும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்து விட்டு தமது மாதர் சங்கத்தினரையும் வாலிபர் சங்கத்தினரையும் ரயில் மறியலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர்.

இப்படி பகீரத பிரயத்தனம் செய்து 11 மத்திய சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். இவர்களின் இந்த நிலைமைக்கும், இவர்களிடம் உள்ள தொழிலாளிகளின் இந்த அரசியலற்ற நிலைமைக்கும் முழுக் காரணமும் இவர்களது ஓட்டுச் சீட்டு அரசியலும் மார்க்சிய-லெனினியம் அற்று போன தலைமையும் தான்.

இந்நிலைமையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் கோவை காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தின் எதிரே நடைபெற்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா எரிப்புப் போராட்டம் 12 பெண் தோழர்களை உள்ளிட்ட 170 தொழிலாளர்களின் பங்களிப்போடு சிறப்பாக நடந்தது.

காலை 10 மணி ஆர்ப்பாட்டத்துக்கு பத்து உளவுப் பிரிவு இரண்டு போலீஸ் வாகனங்களுடன் எட்டரை மணியிலிருந்தே தேவுடு காத்துக் கொண்டிருந்தார் சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் மணிவர்மன். இந்த மணிவர்மன் வேலாண்டி பாளையத்தில் உள்ள பெஸ்ட் தொழிலாளர் போராட்டத்தில் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு தொடர்ச்சியாக போட்டு நீதிமன்றமே வழக்கை திருப்பியனுப்பி மூக்கறுபட்டவர்.

தோழர் ரங்கசாமியின் கணீர்க் குரலில் முழக்கங்களோடு துவங்கிய ஆர்ப்பாட்டம் வெகுமக்களின் பார்வையில் சிறப்பாக இருந்தது.

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
முழக்கம்

முழக்கத்தின் இரண்டாவது ரவுண்டில் சட்ட மசோதாவை தீயை பற்ற வைத்து எரியும் நிலையில் தோழர்கள் வெளியே கொண்டு வர, மணிவர்மனும் உளவுப் பிரிவு ராஜேசும் தாவிவந்து கையிலேயே அணைக்க நம் தோழர்கள் அதை கிழிக்க மிச்சமிருப்பதை பொறுக்கி எடுத்துக் கொண்டு சென்றனர் கடமை தவறாமல். சரி, ஜெயாவுக்கு சாம்பார் வாளி தூக்கி, சரக்கை காவல் காத்து, மக்களிடம் சாணியடி வாங்கிய பெருமை மிகு பாரம்பரியத்துக்கு சொந்தக் காரர்கள் அல்லவா..? இந்த சப்பைக் காயம் அவர்களை எப்படி சோதிக்கும். கையிலிருந்து நகலை பிடுங்கியவுடன், மேலும் தோழர்கள் ஆக்ரோஷமாக முழக்கமிடத் துவங்கினர்.

தோழர் சரவணன்,

‘ஆலைகள், சாலைகள் தனியாருக்கு
ரயில்வே காப்பீடு தனியாருக்கு
கல்வி, மருத்துவம் தனியாருக்கு
வங்கி, மின்சாரம் தனியாருக்கு
எல்லாத் துறையும் தனியார் என்றால்,
மயிரப் புடுங்கவா அரசாங்கம்…
மயிரப் புடுங்கவா அரசாங்கம்…’

என முழக்கமிட, இன்ஸ்பெக்டர் மணிவர்மன் உடனடியாக வந்து ‘மயிரை புடுங்க முடியாவிட்டாலும், மைக்கையாவது புடுங்குவோம் நாங்கள்’ என புடுங்கிக் காட்டினார்.

தோழர்கள் அப்போதும் நிறுத்தாமல் முழக்கமிட்டுக் கொண்டே இருந்தனர். உடனடியாக வண்டிகளை வரவைத்து கைது செய்யத் துவங்கினார்கள். இரண்டு பேருந்துகள் இரண்டு ஜீப்புகள் ஒரு மினி வேனும் சென்ற பின்பு வேறு வண்டியில்லாமல் ரோட்டில் சென்ற ஒரு கால்டாக்ஸியை மடக்கி “ஐயா, கூப்புடுறாங்க..!” என்ற வழக்கமான டயலாக்கை பயன்படுத்தி அவரை பயன்படுத்தினார்கள்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தொழிலாளிகளை ஆவாரம் பாளையத்தில் உள்ள சி.‌எம் திருமண மண்டபத்தில் அடைத்தார்கள். தொழிலாளிகள் தமக்கே உரிய ஒழுங்கோடு உடனடியாக பிளக்ஸ் கொடிகளை கட்டுதல், நாற்காலிகளை ஒழுங்கமைத்தல் என சிறிது நேரத்தில் அரங்குக் கூட்ட ஏற்பாடுகளை முடித்தனர்.

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
பு.ஜ.தொ.மு கோவை மாவட்டத் தலைவர் குமாரவேலு

சட்ட நகல் எரிப்புப் போராட்டத்துக்கு தலைமை தாங்கிய பு.ஜ.தொ.மு கோவை மாவட்டத் தலைவர் குமாரவேலு அதன் தொடர்ச்சியாக அரங்குக் கூட்டத்திற்கும் தலைமை தாங்கினார்.

சி‌.எஸ்‌.டபிள்யு மில் செயலாளர் தோழர் முருகேஷ், பங்கஜா மில் செயலர் கோபால், எஸ்‌.ஆர்‌.ஐ தோழர் கனகராஜ், சி‌.ஆர்‌.ஐ கிளைத் தலைவர் தோழர் மூர்த்தி, மண்டல சங்க தோழர் நடராஜ், ஜெகநாதன், மாவட்ட அமைப்பாளர் தோழர் கோபி, மாவட்டக் கமிட்டி உறுப்பினர் தோழர் நித்தியானந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர் கவியரசு, தோழர் சரவணன் குழுவினர் பேச்சினிடையே பாடிய அமைப்புப் பாடல்கள் கூட்டத்தினருக்கு உற்சாகமான ஊக்க மருந்தாக இருந்தது.

[நோட்டீசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

உணவு இடைவேளைக்கு பின்னர், தொகுப்புக் கண்டன உரையாற்றிய மாநில துணைத் தலைவர் விளவை இராமசாமி, போராட்டத்தின் முக்கியத்துவத்தையும் சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி & ஐ‌.என்‌.டி‌.யு‌.சி, பி‌.எம்‌.எஸ் துரோகக் கூட்டணியை விவரித்தார்.

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
தோழர் விளவை ராமசாமி

கடந்த 50 ஆண்டுகளாக கோவையில் தொடர்ச்சியாக பொருளாதாரப் போராட்டங்கள் நடத்திய காரணத்தால் தொழிலாளி வர்க்கம் போராட்ட உணர்வை இழந்து விட்டது. இப்பொழுது பொருளாதார போராட்டம் கூட நடத்த முடியாத அளவுக்கு பலவீனமாகி விட்டனர் தொழிலாளிகள்.

ஆனால், தொழிலாளி வர்க்கத்தின் உள்ளே போராட்ட ஆற்றல் உறைந்து கிடக்கிறது. அதனை இனங் கண்டு தட்டியெழுப்ப அரசியல் உணர்வோடு செயல்படுகின்ற தொழிற்சங்கங்கள் எதுவும் கோவையில் கிடையாது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி களத்துக்கு வந்தவுடன் தான் இந்த சில ஆண்டுகளாகத் தான் அரசியல் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அரசியல் போராட்டம் நடத்த துப்பில்லாதவர்கள் தான் ‘தொழிலாளிகள் சரியில்லை. தொழிலாளிகள் வருவதில்லை’ எனப் பழியை போடுகிறார்கள்.

கோவையில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக அரசியல் போராட்டங்கள் நடந்திருந்தால் இந்நேரம் தொழில் நகரமான கோவை இந்த தொழில் மசோதாவுக்கு எதிரான போராட்டத்தை இந்தியா முழுவதும் கவனிக்கத்தக்கதாக மாற்றியிருக்கும். ஆகையினால், தொழிலாளி சரியில்லை என்ற புற நிலைமை அப்படித்தான் இருக்கும். நமது அக நிலைமையால் தான் அதனை மாற்ற வேண்டும். இரும்பு இரும்பு என எத்தனை முறை சொன்னாலும் இரும்புதான். அதனை தொழிலாளி கை வைத்தால் தான் பம்பாக மாறும்.”

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
தினத்தந்தி செய்தி

ஆறு மணிக்கு விடுவிக்கப்பட்டவுடன் காவல் துறை செலவில் நாம் அரங்கு மற்றும் உணவு தேநீருடன் அரங்குக் கூட்டம் போட்டதையும் சென்னையில் நடைபெற்ற போராட்ட அனுபவங்களையும் தோழர் விளவை இராமசாமி கூறினார்.

கோவை பு.ஜ.தொ.மு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதா எரிப்பு
காவல் துறை செலவில் நாம் அரங்கு மற்றும் உணவு தேநீருடன் அரங்குக் கூட்டம் போட்டதையும் சென்னையில் நடைபெற்ற போராட்ட அனுபவங்களையும் தோழர் விளவை இராமசாமி விளக்கிக் கூறினார்

பின்னர் அனைவரும் கலைந்து சென்றோம்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

கொசுறு : இந்தப் போராட்டத்தை ஒட்டி நாம் ஒட்டியிருந்த சுவரொட்டிகளில் பாரதப் பிரதமர் மோடியை மிகவும் தரக் குறைவாக (முதலாளிகளின் காலை நக்கிப் பிழைக்கும் பி‌ஜெ‌பி மோடி கும்பல்) புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி விமர்சித்திருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கமிஷனர் விஸ்வநாதனிடம் பாஜக வழக்குரைஞர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள்.

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

8. திருச்சி

31-08-2015 அன்று மாலை 4 மணிக்கு பு.ஜ.தொ.முவின் இணைப்பு சங்கமான திருச்சி, பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பாக UNIT-2ல்,  திருச்சி பெல் ஆலை வாயில் கூட்டம்செப்.2 அகில இந்திய வேலை நிறுத்தம் பற்றியும், தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்ட தொகுப்பு மசோதாவை தீயிட்டு கொளுத்துவோம் என்ற மைய முழக்கத்தை விளக்கியும் வாயிற்கூட்டம் நடைபெற்றது.

இவ்வாயிற் கூட்டத்திற்கு பாய்லர் பிளன்ட் ஓர்கர்ஸ் யூனியன் உதவித் தலைவர் (பு.ஜ.தொ.மு) தோழர்.பொன்னுசாமி, தலைமை தாங்கினார்.

அவர் பேசுகையில், “ஆகஸ்ட் 22-ல் நடந்த P.F மற்றும் கேண்டீன் தேர்தலில் எங்களுக்கு வாக்களித்த உங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மோடி தலைமையில் உள்ள மத்திய அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி தொழிலாளர் வர்க்கத்தை அடிமைப்படுத்த நினைக்கிறது. தொழிலாளி வர்க்கம் விழிப்புணர்வு பெற்று இச்சட்ட மசோதாவை முறியடிக்க புரட்சிகர சங்கத்தில் அணிதிரள வேண்டும்” என்றார்.

பு.ஜ.தொ.மு வின் மாநில பொதுச்செயலாளர் தோழர்.சுப.தங்கராசு கண்டன உரையாற்றி பேசுகையில், “செப்-2 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும், தொழிலாளர் நலச் சட்டம் திருத்தப்பட்டு அதனை சட்ட தொகுப்பாக மாற்றியதை ஏன் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்பதின் அவசியத்தை உணர்த்தி பேசினார்.

அரசியல் ஓட்டுகட்சிகளின் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத தொழிற்சங்கங்கள் 11ம் சேர்ந்து 12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட போவதாக அறிவித்துள்ளனர். ஆனால் நாம் ஒரே அரசியல் கோரிக்கையான முதலாளித்துவ பயங்கரவாத அரசை தூக்கியெறிந்து, தொழிலாளர் நலச்சட்டத் திருத்த மசோதாவை நீக்க வேண்டும். இல்லையேல் அதனை தீயிட்டு கொழுத்துவோம் என்றார்.

திருச்சி பெல் ஆலை வாயில் கூட்டம்சட்டத்திருத்த மசோதா தன்னை புதிய வழிகாட்டும் நெறிமுறை எனக் கூறுக்கொள்கின்றது. இம்மசோதாப்படி இனி பி.எஃப், ஈ.எஸ்.ஐ, போனஸ் சட்டப்படி கிடையாது என்கிறது, போராடி பெற்ற 44 சட்டங்களை பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக நீக்குகிறது. பி.எஃப் பணத்தை பங்குச் சந்தையில் போட்டு சூதாடி முழுவதுமாக ஏப்பம் விட துடிக்கிறார்கள். 1926-ம் ஆண்டு முதல் போராடி பெற்ற 44 சட்டங்களை ஆயிரம் ஆயிரம் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, தியாகம் செய்து பெற்ற சட்டங்களை ரத்து செய்து முதலாளிகளுக்கு படையல் போட துடிக்கிறார் மோடி.

பட்ஜெட் போடுவதற்கு முன்பு முதலாளிகள் சங்கத்தை சந்திக்கும் நிதிமந்திரியும், பிரதம மந்திரியும், தொழிற்ச்சங்க தலைவர்களை அழைத்து நமது கோரிக்கை என்ன என்பது பற்றி கேட்கக்கூட நேரமில்லை என்கிற அளவுக்கு முதலாளிகளுக்கு உழைக்கிறார்கள். காங்கிரசின் ஐ.என.டி.யூ.சி.யும், பா.ஜ.க-வின் பி.எம்.எஸ்-ம் வேறுவேறு இல்லை, இருவருக்கும் ஒரே கொள்கை முதலாளிகளுக்கு சேவை செய்வது.

மேலும் உலக வர்த்தகக் கழகம் (WTO) எனும் உலக அரசின் உத்தரவுக்கு ஆடுகிறது மத்திய மாநில அரசுகள். 1994 ஒப்பந்தம் கையெழுத்தாகி அன்று முதல் இந்தியாவின் இறையாண்மை கேள்விக் குறியானது. உதாரணமாக மின்சாரம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது. 24 மணி நேரமும் விநியோகிக்கின்றனர். மொத்த விநியோகத்தில் 3 ல் 2 பங்கு பணக்காரர்களுக்கு ஒரு பங்குதான் பெருமான்மை மக்களுக்கு. மொத்தத்தில் விவசாயிகளுக்கும் சாதாரண மக்களுக்கும் பற்றாக்குறை.

கடந்த 5 ஆண்டுகளில் முதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற 5 லட்சம் கோடி ரூபாயை திருப்பி தர முடியாது என கூறிவிட்டனர். இதற்க்கு எந்த ஜப்தி நடவடிக்கையும் இல்லை. மாறாக மக்கள் 5 ஆயிரம் 10 ஆயிரம் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் உடனே ஜப்தி நடவடிக்கைகள் என மிரட்டுகிறார்கள்.

திருச்சி பெல் ஆலை வாயில் கூட்டம்தனியார்மயம் உலகமயம் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்றார்கள் உதாரணமாக நோக்கியா, ரூ 650 கோடி மூலதனமாகப் போட்டு ரூ 21,500 கோடிக்கு இந்திய அரசுக்கு வரி கட்டாமல் மோசடி செய்து ஏமாற்றி ஆலை மூடல், வேலை பறிப்பு என அடுத்தடுத்த தாக்குதலை நடத்தியும் எதையும் கண்டுகொள்ளவில்லை மத்திய அரசு.

வேலை வாய்ப்பை பெருக்கவும் பொருளாதாரத்தை உயர்த்தவும் பொதுத்துறை உருவானது. அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதா என்றால் இல்லை. நிலைமை இவ்வாறிருக்க அரசு துறைகளை ஒழிக்க துடிக்கிறது மோடி அரசு.

சமீபத்திய என்.எல்.சி போராட்டம் குறித்து தலாளிகளின் நலன்களுக்காக மட்டுமே செயல்படும் மோடி என்.எல்.சி பிரச்சனையில் தலையிட முடியாது என கூறிவிட்டார்.

பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூடு டாஸ்மாக்கை என போராடினர். போலீசு மிருகங்கள் அவர்களை அடித்து மண்டையை பிளந்தனர். மீண்டும் போராட்டம் தொடர்கிறது. அரசு-அதிகார வர்க்கம் முதலாளிகளின் கைக்கூலி ஏஜென்டாக செயல்படுகிறது. இந்நிலையை ஒழிக்க வேண்டுமென்றால் புரட்சிதான் தீர்வு. சுரண்டலை ஒழித்து மக்களை மகிழ்விக்கும். பு.ஜ.தொ.மு வில் இணையுங்கள் . செப்-2 பு.ஜ.தொ.மு நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று வெற்றியடைய செய்யுங்கள் என பேசினார்.

தொழிலாளர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை நின்று பேச்சை கேட்டனர். “நீங்கள் பேசுவதிலிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டோம்” என தோழரிடம் கை குலுக்கி ஆதரவை தெரிவித்தனர்.

02-09-2015 அன்று தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா 2015-ஐ தீயிட்டுக் கொழுத்துவோம்! என்கிற தலைப்பில் திருச்சி மரக்கடை இராமகிருஷ்ணா தியேட்டர் பகுதியில் காலை 10மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.திருச்சி தொழிலாளர் சட்ட தொகுப்பு மசோதா எரிப்புஇந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர் ராமசாமி தலைமை தாங்கினார். தனது உரையில், “12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய அளவில் 11 மத்திய தொழிற்சங்கங்கள் இணைந்து செப்டம்பர் 2-ல் வேலை நிறுத்தத்தை நடத்தி கொண்டிருக்கின்றன. எந்தக் கட்சிகள் பல ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைப் படுத்தினார்களோ அவர்களுடைய தொழிற்சங்கங்களிடமே கூட்டணி வைத்து அந்தக் கட்சிகளிடமே கோரிக்கை வைத்து கெஞ்சுவதும் போராடுவதும் வாடிக்கையாக வைத்து தொழிலாளர் வர்க்கத்திற்கு துரோகம் செய்கிறார்கள்.

ஆனால் பு.ஜ.தொ.மு மட்டும்தான் ஆளுகின்ற அரசையும் துரோக தொழிற்சங்கங்களையும் அம்பலப்படுத்தி உழைக்கும் மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதற்க்கான போராட்டத்தை முன்னெடுக்கின்றது. எனவே பு.ஜ.தொ.மு போன்ற புரட்சிகர தொழிற்சங்கத்தில் அணிதிரள வேண்டும்” என தனது உரையை நிறைவு செய்தார்.

கண்டன உரையாற்றிய சிவகங்கை பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர்.நாகராஜ்  பேசும்போது, “இந்திய வரலாற்றில் சென்னை பின்னிஆலை தொழிலாளி வர்க்கம் 1919 ல் இரத்தம் சிந்தி போராடியதன் விளைவாக ஆங்கிலேயரிடம் தொழிலாளர் நலஉரிமைகளை பெற்றது. ஆனால் இன்று 44 வகையான தொழிலாளர் நலச்சட்டங்களையும் பன்னாட்டு முதலாளிகளுக்காகவும், தரகு முதலாளிக்காகவும் திருத்துகின்றது இந்த மோடி அரசு. புதிய பொருளாதாரக் கொள்கைகள் நாட்டை முன்னேற்றும், வேலைவாய்ப்பை பெருக்கும் என்று ஆளும்வர்க்கம் சொன்னது. ஆனால் நாட்டை முன்னேற்றவில்லை.

கேம்பஸ் இண்ட்ர்வியூ மூலம் மாணவர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டுகின்றனர் . இந்த அரசுக் கட்டமைப்பு தானே வகுத்த விதிகளை கூட செயல்படுத்த முடியாமல் தோற்றுபோய் திவாலாகிப் போயிருக்கிறது. இந்நிலையில் தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. காங்கிரசின் ஐ.என்.டி.யு.சி, பி.ஜே.பியின் பி.எம்.எஸ்-ம் எப்படி தொழிலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக செயல்படுவார்கள். இவர்களிடம் கூட்டணி வைத்துதான் துரோகம் செய்கிறார்கள் போலிகம்யூனிஸ்டுகள். இத்தகைய ஓட்டு கட்சிகளின் போலி தொழிற்சங்கங்களை புறக்கணித்து பு.ஜ.தொ.மு வில் இணைந்து மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும்” என உரையை முடித்தார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய திருச்சி மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் தோழர் காவிரிநாடன் பேசுகையில் தங்கம் செய்யாததை சங்கம் செய்யும் என்பதை வலியுறுத்தி இன்றைய போராட்டம் தனிப்பட்ட தொழிலாளிகளுக்கானது அல்ல. ஒட்டுமொத்த உழைக்கும் மக்களுக்கான போராட்டம் என்பதை எளிமையாக விளக்கி பேசினார்.

“பல நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்கின்ற மோடி அங்குள்ள முதலாளிகளுக்கு சவால் விடுகின்றார். நீங்கள் உங்கள் அதிஷ்டத்தை சோதிக்க விரும்பினால் இந்தியாவிலேயே தொழில் தொடங்கிப்பாருங்கள் என்கிறார். அதற்கு தோதாக காலனியாதிக்க காலத்தில் இருந்து தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற 44 நலச்சட்டங்களையும் சுதந்திர இந்தியாவில் கார்ப்ரேட் , பன்னாட்டு நிறுவனங்களுக்காக காவு கொடுக்கப்படுகின்றன.

துரோக தொழிற்சங்கங்களின் கட்சிகள் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் தொழிலாளர் விரோத சட்டங்களை நிறைவேற்றுகின்றனர். அப்புறம் எப்படி தொழிலாளி வர்க்க நலனுக்காக செயல்படமுடியும்.

இன்று நடக்கும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் போலிகம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கம் உள்ளிட்டு 11 தொழிற்சங்கங்கள் கலந்து கொள்கின்றன. பி.எம்.எஸ்,  ஐ.என்.டி.யூ.சி தொழிற்சங்களின் கட்சிகள் மறுகாலனியாக்க கொள்கைகளை முற்றுமுழுதாக ஏற்றுகொண்டு அமுல்படுத்துபவை. அவர்களுடன் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.சி.ஐ.டி.யு, ஏ.இ.சி.சி.டி.யு வும் ஒட்டுண்ணி போல் ஒட்டிக்கொண்டு எதிரிகளை காப்பாற்றுகின்றனர். எனவே தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகளையும் அதனை பாதுகாக்கும் இந்த அரசமைப்பையும் அடித்து நொறுக்காமல் தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்த முடியாது” என தனது உரையை முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆர்ப்பட்டத்தின் இடையிடையே தொழிலாளர் நலச்சட்டம் திருத்தப்படுவதற்கு எதிராக விண்ணதிர முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய மைய கலைகுழுவின் புரட்சிகர பாடல்கள் குழுமியிருந்த மக்களுக்கும், தோழர்களூக்கும் புரட்சிகர உணர்வூட்டியது.

திருச்சி தொழிலாளர் சட்ட தொகுப்பு மசோதா எரிப்பு
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய மைய கலைகுழுவின் புரட்சிகர பாடல்கள்

இறுதியாக சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் முத்துக்கருப்பன் நன்றிவுரையாற்றினார்.

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி கிளை.
தொடர்புக்கு: தோழர்.சுந்தரராசு. பேச: 8903042388.

 

அச்சத்தைக் கைவிடு ! துணிந்து போராடு !

1

“அச்சத்தைக் கைவிடு! துணிந்து போராடு!‘” – உதவிப் பேராசிரியர் விக்ரமின் கலகக்குரல்

10-vikram-battle-cryல்விக்குச் சற்றும் தொடர்பில்லாத கிரிமினல் மாஃபியா கும்பல்களால் நடத்தப்பட்டுவரும் தனியார் கல்லூரிகளில், நிர்வாகத்தின் கொத்தடிமைத்தனத்தையும் அட்டூழியங்களையும், குண்டர்களின் அச்சுறுத்தலையும் அக்கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களால் எதிர்க்க முடியுமா? நிர்வாகத்தை எதிர்த்தால் வேலை பறிபோய் விடும் என்பதோடு, தமது உயிருக்கும்கூட உத்திரவாதம் இல்லை என்ற அச்சத்தின் பிடியில் ஆசிரியர்கள் இருத்தப்பட்டுள்ள நிலையில் இது சாத்தியமாகுமா? முடியும் என்று தனது போராட்டத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார், விஜயகாந்த் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிய விக்ரம்.

விஜயகாந்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொடங்கி பேராசிரியர்கள் வரையில் அனைவருக்குமே, மூன்று மாதங்களுக்கு ஒருமுறைதான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பேராசிரியரே ஆனாலும் நிர்வாகம் ஏவும் எடுபிடி வேலைகள் எதுவானாலும் தட்டாமல் செய்தாக வேண்டும். முக்கியமாக, கல்லூரிக்கு மாணவர்களை சேர்க்கும் புரோக்கர்களாகவே ஆசிரியர்களை மாற்றியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். ஆண்டுதோறும் அண்ணா பல்கலையில் நடைபெறும் பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்களிடம் ஆசிரியர் என்ற அடையாளத்தை மறைத்து, தெருவில் நின்றுகொண்டு நோட்டீசு விநியோகிக்க வேண்டும். குறிப்பிட்ட மாணவர்களின் பெயர்களும் தொலைபேசி எண்களும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். விற்பனைப் பிரதிநிதிகளைப் போல அவர்களை நேரில் சந்தித்து சோப்பு போட்டாக வேண்டும். ஆண்டுக்கு இரண்டு மாணவர்களை ஆசிரியர்கள் தமது சொந்தப் பொறுப்பில் கல்லூரியில் சேர்த்துவிட வேண்டும். தவறும்பட்சத்தில் தானாகவே விலகல் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு கல்லூரியிலிருந்து வெளியேறிவிட வேண்டும்.

வேலையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், இவற்றையெல்லாம் சகித்துக்கொள்ளத்தான் வேண்டுமென்ற மனநிலையில்தான் பெரும்பாலான ஆசிரியர்கள் விஜயகாந்த் கல்லூரியில் பணியாற்றுகின்றனர். ஆனால், விக்ரமோ நிர்வாகத்தின் அடாவடித்தனங்களைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்டார். எடுபிடி வேலைகளைச் செய்ய முடியாதென மறுத்தார். கட்டணக் கொள்ளைக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களை வெளிப்படையாக ஆதரித்து நின்றார். இவரது இத்தகைய நடவடிக்கைகள் கல்லூரி நிர்வாகம் பராமரித்து வரும் பண்ணையார்தனத்தைக் கேள்விக்குள்ளாக்கியது.

இந்நிலையில், கல்லூரி நிர்வாகத்தின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்துவதற்கான வாய்ப்பாக கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் பயன்படுத்தினார் விக்ரம். விழா மேடையில் அமர்ந்திருந்த கல்லூரி முதலாளி விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, சிறப்பு விருந்தினர் இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் மாதவன் நாயர் ஆகியோரை உலுக்கிப் போடும் விதத்தில், “மாணவர்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதோடு, பேராசிரியர்களை கொத்தடிமைகளைப் போல நடத்தும் இக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது அவமானம்” என்று தனியொருவராய் நின்று கலகக் குரலெழுப்பினார். நூற்றுக்கணக்கான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இருந்த இவ்விழாவில் எழுந்த அவரது கலகக் குரல் நிச்சயம் அவர்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பியிருக்கும். இதனால் அவரை விழா அரங்கிலிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தியது, கல்லூரி நிர்வாகம்.

இந்த கலகத்தால் பெருத்த அவமானத்துக்கும் பீதிக்கும் ஆளான கல்லூரி நிர்வாகம், அதுவரையில் நிறுத்தி வைத்திருந்த அவரது சம்பள பணத்தை மறுநாளே பட்டுவாடா செய்தது. “கல்லூரியிலிருந்து நீங்களே விலகிச் சென்றுவிடுங்கள்” என ஜென்டில்மேனாக சமரச நாடகமாடியது. மறுபுறமோ, “அவர் அடிக்கடி உணர்ச்சிவசப்படக்கூடியவர்” என்ற அவதூறைப் பரப்பி, அவரது கலகத்தைச் சிறுமைப்படுத்த முயன்றது.

தனியொருவராக நின்று போராடியதன் வரம்பு காரணமாக, விக்ரம் தனது விலகல் கடிதத்தைக் கொடுத்தார். இதனையடுத்து அவரது பட்டச் சான்றிதழ்களைத் திருப்பிக் கொடுத்த நிர்வாகம், விக்ரம் அக்கல்லூரியில் வேலை பார்த்து வந்ததற்கான பணிச் சான்றிதழைத் தராமல் இழுத்தடித்தது. இந்நிலையில் அச்சான்றிதழைப் பெறுவதற்காக கடந்த ஜூலை 15 அன்று கல்லூரிக்குச் சென்ற விக்ரமை, அவர் கல்லூரியிலிருந்து வீட்டிற்குக் கிளம்பிச் சென்ற சமயத்தில், உள்ளூர் குண்டர்களை ஏவி, நடுரோட்டில் வழிமறித்து தாக்கியது, கல்லூரி நிர்வாகம். தாக்குதல் தொடுப்பவர்கள் யார் என அவர் அடையாளம் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக அவரது கண்ணாடியைப் பறித்து உடைத்த அக்கும்பல், அவரது செல்போனையும் பறித்து உடைத்தது. இது கல்லூரி நிர்வாகத்தால் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தாக்குதல் என்பதற்கான ஆதாரங்கள் இவை.

இத்தாக்குதல் குறித்து கல்லூரி நிர்வாகத்தின் மீது அவர் கொடுத்த புகாரைத் தட்டிக்கழிக்க முயன்ற போலீசோடு போராடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதல் மற்றும் புகார் குறித்த தகவல்கள் செய்தி ஊடகங்களுக்கு பேட்டியாகக் கொடுக்கப்பட்டது. தனது கட்சிக்காரனைக் கோபத்துடன் விஜயகாந்த் அடித்ததை ஏதோ சர்வதேசப் பிரச்சினை போல ஊதிப்பெருக்கி வெளியிடும் ஊடகங்கள், விக்ரம் மீதான தாக்குதல் பற்றிய தகவலைத் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்தன. தொழிலாளர் பிரச்சினையில் எந்தவொரு முதலாளியும் இன்னொரு முதலாளியை விட்டுக் கொடுப்பதில்லை என்பதற்கு இந்த இருட்டடிப்பு இன்னொரு சான்று.

தனியார், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சங்கம் அமைக்கக்கூட உரிமையில்லாமல் இருந்துவரும் நிலையில், கல்லூரி முதலாளிகளின் அட்டூழியங்களை தட்டிக்கேட்ட முடியும் என்பதைத் தனது கலகத்தின் மூலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறார், உதவிப் பேராசிரியர் விக்ரம். இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தனியார் கல்லூரி ஆசிரியர்களும் ஊழியர்களும் தமது அச்சத்தைக் கைவிட்டு சங்கமாக அணிதிரண்டு போராடத் துணிய வேண்டும். அச்சமற்ற போராட்டங்களின் மூலம்தான், தனியார் கல்லூரி கொள்ளைக் கும்பலின் கொட்டத்தை அடக்கி, ஆசிரியர்கள் தமது உரிமைகளையும், சுயமரியாதையையும் நிலைநாட்டிக் கொள்ளமுடியும்.

-கலைமதி
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________

முக்கியமான கட்டுரை – மாணவரை அடிமையாக்கும் சதி !

2
mumbai-iit-in-solidarity-with-apsc-4
சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட தடையை எதிர்த்து மும்பை ஐ.ஐ.டி மாணவர் போராட்டம் – கோப்புப் படம்

லிங்க்தோ கமிட்டி பரிந்துரைமாணவர்களை அரசியலற்ற தக்கை மனிதர்களாக்கும் ஏகாதிபத்திய செயல்தந்திரத்தின் ஒரு பகுதி

.ஐ.டி நிர்வாகத்தால் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் தடை செய்யப்பட்ட போது தடையை நியாயப்படுத்தி ஆதித்யா ரெட்டி என்ற சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஆர். எஸ். எஸ்-ன் ஆர்கனைசரில் கட்டுரைகள் எழுதினார். அதில் கேரள உயர்நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காண்பிக்கிறார். இதையே பத்ரி போன்ற இந்துத்துவ தாராளவாதிகளும் இன்னபிற ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவிகளும் எடுத்துரைக்கின்றனர். இத்தீர்ப்புக்கு தடைக்கும் நேரடியாக சம்பந்தமில்லை என்பது ஒருபுறம்.

மறுபுறம் இந்துத்துவ கும்பல் 2006-லிருந்து சட்டரீதியாக முற்போக்கு மாணவர் இயக்கங்கள் மீது நடத்தும் தாக்குதல்களை நியாயப்படுத்த இத்தீர்ப்பையும், லிங்க்தோ கமிட்டி பரித்துரைகளையுமே மேற்கோள் காண்பிக்கின்றனர். வலதுசாரிகள் இதைப் பிடித்து தொங்குவதற்கு காரணம் என்ன?

அதே போல சில ஆண்டுகளுக்கு முன்னர் மாணவர் சங்கம் என்றாலே ஒவ்வாமையோடு அணுகிய கல்வி நிறுவன நிர்வாகங்கள் சமீபகாலமாக மாணவர் சங்க தேர்தல்களை நடத்துவதற்கும் ஒரு பின்னணி இருக்கிறது.

apsc-solidority-protest-usmania-unversity
சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடையை எதிர்த்து மோடி உருவ பொம்மையை எரிக்கும் ஐதராபாத் உஸ்மானியா பல்கலை மாணவர்கள் – கோப்புப்படம்

2006-ல் மனித வள மேம்பாட்டுத்துறை அனைத்துக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில் உச்சநீதிமன்ற ஆணைப்படி கல்வி நிறுவனங்களில் நடத்தப்படும் மாணவர் சங்கத் தேர்தல்களை லிங்க்தோ கமிட்டி பரிந்துரைப் படி மட்டுமே நடத்துவதை உறுதி செய்ய வலியுறுத்தியது. 2006-ம் ஆண்டிற்கு முன் மேற்குவங்க மற்றும் கேரள கல்வி நிலையங்களிலும் ஜே.என்.யு விலும் நடைமுறையிலிருந்து வந்த சுதந்திரமான, ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்ட மாணவர் சங்க தேர்தல்களுக்கு இப்பரிந்துரை சாவு மணியடித்தது.

அதே நேரம் அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், உயர்கல்வி நிறுவனங்கள் போன்றவை தனியார்மயமாக்கப்பட்டு கொள்ளைக்கு திறந்து விடப்படுவதால் ஏற்படும் மாணவர் எழுச்சியை ஒழித்துக் கட்ட ஒரு எளிய வழியை ஆளும் வர்க்கம் கண்டுபிடித்தது. அதனால் தான் அனைத்து அரசுக் கல்வி நிறுவனங்களிலும் மாணவர் சங்கத் தேர்தலை லிங்க்தோ பரிந்துரைப்படி நடத்துகின்றனர். இந்த திடீர் ‘ஜனநாயகக்’ காதலின் பின்னே இரண்டு விதமான நலன்கள் ஆளும் வர்க்கத்திற்கு கிடைக்கிறது

  1. மாணவர்கள் அரசியல் மயமாவதைத் தடுத்து அவர்களை சமூக உணர்வற்ற, நாட்டுப்பற்றற்ற தக்கை மனிதர்களாக்குவது
  2. அரசு உயர்கல்வி நிறுவனங்களை அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கும் போது அதனை அமுல்படுத்தும் கமிட்டிகளில் மாணவர் பிரதிநிதித்துவத்தை அனுமதிப்பதன் மூலம் அரசாங்க அதிகாரிகள், பேராசிரியர்களோடு மாணவர்களையும் பங்குதாரராக்குவது; இதில் மாணவப் பிரதிநிதியும் பங்காளியாக இருக்கும் போது மாணவ சமூகம் இக்கொள்ளையை தட்டிக்கேட்கும் தார்மீக உரிமையை இழந்து விடும் என்பது அவர்கள் கணிப்பு.

லிங்க்தோ கமிட்டி பரிந்துரையின் சதித்தனத்தால் பாதிப்புக்குள்ளான ஜே.என்.யு மாணவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பரிந்துரைக்கெதிராக போராடிவருகின்றனர்.

லிங்க்தோ கமிட்டி உருவான பின்புலம்

rayf iit protest (3)
சென்னை ஐ.ஐ.டி அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட தடையை எதிர்த்து சென்னை பு.மா.இ.மு போராட்டம் – கோப்புப்படம்

கேரளாவில் 2000-ம் ஆண்டுகளில், உயர்கல்வியில் தனியார்மயம் புகுத்தப்படுவதை எதிர்த்தும் சுயநிதிக் கல்லூரிகளுக்கு எதிராகவும் பல்வேறு இடங்களில் மாணவர் போராட்டங்கள் வெடித்தன. அவற்றை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு, போலீசைக் கொண்டு கொடூரமாக ஒடுக்கியது.

அதே காலகட்டத்தில், மாணவர் சங்கத் தேர்தல்கள் நடைபெற்ற பல இடங்களில், SFI-க்கும், மாணவர் காங்கிரஸுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இவற்றைக் காரணம் காட்டி கேரள பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கல்லூரி முதல்வர்கள், மாணவர் சங்க முன்னணியாளர்களைப் பழிவாங்க ஆரம்பித்தனர். அவ்வாறு, சோஜன் ஃப்ரான்சிஸ் என்ற மாணவர் சங்க உறுப்பினரை, ’குறைவான வருகைப் பதிவு’ என்ற காரணத்தைக் காட்டி தேர்வு எழுதவிடாமல் தடுத்தனர். அவர் (SFI மூலம்) கேரள உயர்நீதிமன்றத்தை அணுகினார். அதனை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மாணவர்களுக்கு விரோதமான தீர்ப்பு ஒன்றினை அளித்தது. அந்தத் தீர்ப்பின் சாரம் பின்வருமாறு:

  • கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஒழுங்கை நிறுவ முதல்வர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வரைமுறையற்ற அதிகாரம் தேவை. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை (’Code of Conduct’) அந்தந்த கல்லூரி முதல்வர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
  • மாணவர்களை சமூக விரோத செயல்பாடுகளில் (அரசியலில்) இருந்து பிரித்து, படிப்பதற்கு மட்டுமான இடமாக கல்லூரிகளை மாற்ற வேண்டும். ஏனென்றால், கல்லூரி என்பது மாணவர்களின் கல்விக்கான இடமேயன்றி அரசியல் நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல.
  • அரசியலமைப்புச் சட்டம் அனுமதித்துள்ள கருத்துரிமை, சங்கம் சேரும் உரிமைகளுக்கு (பிரிவு 19(1)(a) & 19(1)(c)) எதிரானது எனக்கூறி கல்லூரி முதல்வர்கள் தீர்மானித்த நடத்தை விதிகள் அமுல்படுத்தப்படுவதை மறுக்கமுடியாது. மாறாக 19(1)(g) மற்றும் 30(1) ஆகிய பிரிவுகளின்படி கல்வி முதலாளிகளும், சாதிமத சங்கங்களும் சுமுகமாக கல்லூரி நடத்த (கொள்ளையடிக்க) உதவும் முகமாகத்தான் அவர்களே வகுக்கும் இந்த நடத்தை விதிகள். எனவே மாணவர் சோஜன் ஃப்ரான்சிஸை தேர்வு எழுத அனுமதிக்காத முதல்வரின் நடவடிக்கை சரியானது என தீர்ப்பு வழங்கியது.

iitm-apsc-ban-rsyf-vmm-demo-posterசிறுபான்மையினர் நடத்தும் பல்வேறு கல்லூரிகளில், கேரளப் பல்கலைக்கழக சிண்டிகேட்டால் அங்கீகரிக்கப்பட்ட மாணவர்சங்க அமைப்புச் சட்டத்தை (Students Union Constitution) மதித்துக் கடைப்பிடிக்காமல் (presidential form of election – direct method), வேறுவிதமாக தேர்தல்கள் நடத்தப்பட்டன (parliamentary form of election – indirect method). இவ்வாறு பல்கலைக்கழக மாணவர் அமைப்புச்சட்டத்தின்படி தேர்தல் நடத்தாததற்கு எதிராக கேரளப் பல்கலைக்கழகம், கேரள உயர்நீதி மன்றத்தை அணுகியது.

இவ்வழக்கில், எதிர்த்தரப்பாக கல்லூரி முதல்வர்களின் சங்கமான The Council of Principals of College in Kerala (முதல்வர்கள் கவுன்சில்) ஆஜரானார்கள். இவ்வழக்கில் எதிர்த்தரப்பிற்கு சாதகமாக தீர்ப்பளித்த உச்சநீதி மன்றம், எந்த முறையில் மாணவர் தேர்தலை affiliated கல்லூரிகள் நடத்த வேண்டும் என்பது பற்றி பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானிக்க உரிமையில்லை எனக் கூறி 2004-ல் சிண்டிகேட்டின் பல்லைப் பிடுங்கியது.

இதற்கெதிராக பல்கலைக்கழகம் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு தாக்கல் (Special Leave Petition) செய்தது. கேரளாவில் மாணவர் சங்கத் தேர்தல்கள் அரசியல்மயமாகி இருப்பதால் ஏற்படும் ஆபத்தைப் பற்றிய பெருமாள் கமிட்டியின் அறிக்கையையையும், சோஜன் ஃப்ரான்ஸிஸ் வழக்குத் தீர்ப்பையும் மேற்கோள்காட்டி முதல்வர்கள் கவுன்சில் சில பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்தில் வைத்தது. அப்பரிந்துரைகள் பின்வருமாறு:

  1. தற்போது நடைமுறையில் இருக்கும் நேரடித் தேர்தல் நடைமுறையை நீக்கி, அதனிடத்தில் பாராளுமன்ற முறையிலான தேர்தல் முறையை அமல்படுத்துவது. அதாவது, மாணவர்களே நேரடியாக மாணவர் சங்கத்திற்கான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைக்கு பதிலாக, ஒவ்வொரு வகுப்பும் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலம் மாணவர் சங்க நிர்வாகிகளை நியமிப்பது.
  2. தேர்தல்களில் போட்டியிடும் மாணவர்கள் சில அடிப்படையான ஒழுக்க நெறிகளுக்கு உட்பட்டவர்களாகவும், கல்வித் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். முதலாண்டு மாணவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் குறைந்தபட்சம் 80% வருகை (attendance) பதிவாகி இருக்க வேண்டும்; அனைத்துப் பாடங்களிலும் தேறி இருக்க வேண்டும்.
  3. கல்லூரி வளாகத்திற்குள் எந்தவொரு அரசியல் நடவடிக்கையும் அனுமதிக்கப்பட மாட்டாது. வகுப்பறையினுள் ஆர்ப்பாட்டங்கள், பிரச்சாரங்கள், கலகம் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது. முதல்வரின் அனுமதி இல்லாது எந்தவொரு கூட்டமும் வளாகத்தினுள் நடத்தப்படக்கூடாது. கல்லூரிச் வளாகத்திலோ, வாயில்களிலோ, மதிற் சுவர்களிலோ, கொடிகள், போஸ்டர்கள், பேனர்கள் ஆகியவை அனுமதிக்கப்பட மாட்டாது. ஒரு வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அவ்வகுப்பு மாணவர்கள் தவிர மற்ற எவரும், அவ்வகுப்பாசிரியரின் அனுமதியின்றி உள்ளே நுழையக்கூடாது.
  4. கல்லூரி முதல்வரின் அனுமதியின்றி, எந்தவொரு மாணவர் அமைப்பும் வெளியார் யாரையும் கல்லூரிக்கு வரும்படி அழைக்கக் கூடாது
  5. மாணவர்களால் கல்லூரியின் சொத்திற்கு ஏதேனும் சேதம் நேரிட்டால்: சேதம் ஏற்படுத்தியவர் யார் என அடையாளம் தெரிந்தால் அந்த மாணவரிடமிருந்தே வசூலிக்கப்படும்; சேதம் ஏற்படுத்தியது ஒரு குறிப்பிட்ட மாணவர் அமைப்பில் உள்ள மாணவர்கள் என்று சந்தேகம் இருக்கும்பட்சத்தில், அம்மாணவர் அமைப்பிடமிருந்து வசூலிக்கப்படும்; சேதம் விளைவித்தவர்களை அடையாளம் காண முடியாத பட்சத்தில், ஒட்டுமொத்த மாணவர் சங்கத்திடமிருந்து சேதத்திற்கான வசூலிக்கப்படும்;
  6. பொதுச்சொத்திற்கு சேதம் நேரிடும்பொழுது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் சேதத்திற்கான தொகையை மதிப்பீடு செய்வார்; அத்தொகையை கல்லூரி முதல்வர் மேற்கண்ட வழிகாட்டுதலின்படி சம்பந்தப்பட்ட மாணவர்(கள்) அல்லது அமைப்பிடமிருந்து வசூலிப்பார்
  7. முதல்வர் அல்லது அதற்காக அதிகாரமளிக்கப்பட்ட ஆசிரியரிடமிருந்து முன் அனுமதி பெறாமல், கல்லூரி வளாகத்திற்குள் செல்பேசி அனுமதிக்கப்பட மாட்டாது. அவ்வாறு அனுமதி பெறாமல் கொண்டுவரப்படும் செல்பேசிகளை பறிமுதல் செய்ய ஆசிரியர்களுக்கு அதிகாரம் உண்டு; தேவையானால், அம்மாணவர்களின் பெற்றோர்களையோ / பாதுகாவலர்களையோ (Guardians) அழைத்து அந்த செல்பேசிகள் ஒப்படைக்க ஆசிரியர்களுக்கு அதிகாரம் உண்டு.
  8. கிரிமினல் வழக்கு பதியப்பட்ட அல்லது இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர் எவரும் கல்லூரி வளாகத்தினுள் நுழைய அனுமதி இல்லை
  9. ஆசிரியர்களும் அலுவலர்களும் கல்லூரி வளாகத்திற்குள் எந்தவொரு அரசியல் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளக்கூடாது; வேலைநிறுத்தம் அல்லது கலவரத்தைத் தூண்டும் ஆசிரியர் அல்லது அலுவலர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி வளாகத்திற்குள்ளோ, நுழைவு வாயிலிலோ ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
  10. ஒரு குறிப்பிட்ட நாளில், அமைதியான முறையில் கல்வி கற்கும் நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்று ஒரு கல்லூரியின் முதல்வர் முடிவு செய்யும் பட்சத்தில், கல்லூரிக்கு விடுமுறை அளிக்க முதல்வருக்கு அதிகாரம் உண்டு
  11. கல்லூரி வளாகத்திற்குள் எந்தவொரு கிரிமினல் நடவடிக்கை நிகழ்ந்தாலும் அது உடனடியாக போலீசுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும். போலீஸ் சூப்பரின்டன்டண்டின் நேரடிக் கண்காணிப்பில் அவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும்
  12. கல்லூரி அட்மிஷனுக்கான நிபந்தனைகள், நடத்தை விதிகள் ஆகியவை விண்ணப்பப் படிவத்திலேயே தரப்பட வேண்டும். கல்லூரி அட்மிஷன்போதே மாணவர்களும் பெற்றோர்களும், நிபந்தனைகள்/ நடத்தை விதிகளை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் கையொப்பம் இட வேண்டும்.
  13. மேற்கண்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் சில ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படலாம். அவ்வாசிரியர்கள் இப்பணியை எந்தவொரு பக்கச்சார்பும் இன்றி, மாணவர்கள்-கல்வி நிறுவனங்களின் நலனைக்கருத்தில் கொண்டு நிறைவேற்ற வேண்டும். இவ்வழிமுறையை சரியான முறையில் கடைப்பிடிக்காதவர்கள் மீது தகுந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்.
  14. மாணவர்களின் பாரதூரமான ஒழுங்கீனம் பற்றிய தகவல் ஆசிரியருக்குத் தெரியவரும் பட்சத்தில், அதனை உடனடியாக ரிப்போர்ட் செய்ய வேண்டும். அவ்வாறு ரிப்போர்ட் செய்யத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
  15. ஒவ்வொரு நிறுவனத்திலும் குறை தீர்ப்பதற்கான செயல்முறை நிறுவப்படவேண்டும். அச்செயல்முறையில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட தகுதி வாய்ந்தவர்கள் ஈடுபடுத்தப்படலாம். மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் ஏதேனும் சர்ச்சை இருந்தால் அதனைத் தீர்த்து வைப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. மாணவர்கள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும்போது, அதுகுறித்த மேல்முறையீட்டை விசாரிக்கும் அதிகாரமும் இவர்களுக்கு உண்டு.
protest iit a (3)
சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள் போராட்டம் – கோப்புப் படம்

மேலும் இதைப் பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சிந்தனைக் குழாம்கள் அடங்கிய ஒரு கமிட்டியை அமைக்கவும் பரிந்துரை செய்தது. அதுதான் முன்னாள் தேர்தல் ஆணையர் லிங்க்தோ தலைமையிலான லிங்க்தோ கமிட்டி. இந்த லிங்க்தோ கமிட்டியின் உறுப்பினர்களைக் கவனித்தாலே இதன் ஏகாதிபத்தியத் தொடர்பு அம்பலப்பட்டுவிடும். Centre for Political Studies (CPS), Centre for Policy Research (CPR), National Institute of Educational Planning and Administration (NIEPA), Association of Indian Universities (AIU) போன்ற ஏகாதிபத்தியக் கைக்கூலி நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் சிந்தனைக்குழாம்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளே இதன் உறுப்பினர்கள். இவர்கள் தயாரித்த அறிக்கையின் பரிந்துரைகளைப் பின்பற்றித்தான் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் சங்கத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் 2005-ல் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, லிங்க்தோ கமிட்டி பரிந்துரைப்படி பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகள், மற்றும் பிற உயர்கல்வி நிறுவனங்களில் தேர்தல்களை நடத்தும்படி உத்தரவிட்டு நவம்பர் 2006-ல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது.

லிங்க்தோ கமிட்டியின் மாணவர் விரோத – சமூக விரோதப் பரிந்துரைகள்

  • வயது வரம்பு: அனைத்து மாணவர்களுக்கும் வாக்குரிமை உள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிட வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளநிலை: 22, முதுநிலை: 25, முனைவர்: 28. இது பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளால் உயர்கல்விக்குள் நுழைவதற்கு முன்னால் கல்விப்புலத்தில் நீண்ட இடைவெளியோடு வரும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தேர்தலில் போட்டி போடுவதிலிருந்து தடுக்கிறது.
  • வருகை மற்றும் தேர்ச்சி: தேர்தலில் போட்டியிட 75% வருகையை கட்டாயமாக்கியுள்ளது. மேலும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களும் ஏதாவது ஒரு பாடத்தில் அரியர் வைத்திருப்பவர்களும் போட்டியிடத் தகுதியற்றவர்கள். வயது வரம்பு, வருகை மற்றும் தேர்ச்சி ஆகிய மூன்று மையமான தகுதிகளும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சங்கத் தலைமைக்கு வருவதை தடுத்து பார்ப்பன மற்றும் மேட்டுக்குடி மேலாண்மையை மீண்டும் நிறுவுவதற்காகவெ கொண்டுவரப்பட்டுள்ளது.
  • திரும்பப் போட்டியிடும் உரிமையைப் பறித்தல்: ஒரு மாணவன் தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் கவுன்சிலராக இருமுறையும் மத்தியக் குழுவுக்கு (Central Panel) ஒருமுறையும் மட்டுமே போட்டியிட முடியும். இதனால் அனுபவம் வாய்ந்த மற்றும் அற்பணிப்புடன் கூடிய மாணவத் தலைவர்களை மாணவர் சங்கங்கள் கொண்டிருப்பதைத் தடுக்கிறது. ஒவ்வொரு முறையும் அனுபவமற்ற புதுப்புதுத் தலைவர்களை மத்தியக் குழுவுக்கு நிறுத்தும் போது, அவர்களால் கல்விநிறுவனங்களின் செயல்பாடுகள் பற்றிப் புரிந்து கொண்டு அதற்கேற்றாற்போல செயல்பட இயலாமல் போகிறது. இதனால் மாணவர் சங்கப் பிரதிநிதிகள் பங்கெடுக்கும் கல்வி நிறுவன நடவடிக்கைகளில் கூட மாணவர் நலன் சார்ந்த தீர்மானங்களை எடுக்கத் தெரியாமலோ திராணியற்றோ நிர்வாகத்தின் கைப்பாவையாக மாறுவதும் / வெறும் கைநாட்டாக செயல்படுவதும் நடக்கிறது. இன்னொருபக்கம் SFI, AISA போன்ற நாடாளுமன்றப் பாதையை பின்பற்றும் போலிகளால் மாணவர்களிடமிருந்து தலைவர்களை வளர்த்தெடுப்பதும் சாத்தியமற்றுப் போகிறது. இதற்கு ஈடாக மாணவர்களிடம் தலைமைப் பண்பை வளர்க்க தொழில்முறை நிறுவனங்கள் மூலம் ட்ரெயினிங் வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என லிங்க்தோ பரிந்துரைகிறது.
  • மாணவ அரசியலை ’அரசியல் நீக்கம்’ செய்தல்: தேர்தலின் போது அரசியல் கட்சித் தலைவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிப்பதை லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைகள் தடை செய்கிறது. இந்த கமிட்டி உருவாக்கப்பட்டதன் நோக்கமே மாணவர்களை அரசியலற்றவர்களாக ஆக்குவது தான்.
  • தகுதி: போட்டியிடும் பிரதிநிதிகள் குற்றச்செயல்களுக்காக தண்டிக்கப்பட்டவராகவோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவராக இருக்ககூடாது; வகுப்பிற்கு வராததும் வகுப்பைப் புறக்கணிப்பதும் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியை இழக்கச் செய்யும் என லிங்க்தோ கமிட்டி கூறுகிறது. பொதுவாக அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மாணவர் விரோத நடவடிக்கைக்கு எதிராக நடக்கும் மாணவர் போராட்டங்களை குற்றசெயல்களாகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைப்பதாகவும் குற்றஞ்சாட்டி மாணவர் சங்கப் பிரதிநிதிகள் மீது கிரிமினல் வழக்குகள் போடுவதும் கல்லூரி நிர்வாகம் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. இப்படி வழக்கு உள்ள மாணவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடை செய்வதன் மூலம் நிர்வாகத்தின் எதிரிகள் சங்கத்தின் தலைமைக்கு வருவதை தடுத்து நிறுத்துகிறது.
  • குறைக் கேட்புப் பிரிவு (Grievance Redressal Cell): லிங்க்தோ பரிந்துரைக்கும் முன்னர் ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும் மாணவர்களால் உருவாக்கப்பட்ட மாணவர் சங்க அரசியலமைப்புச்சட்டத்தின் அடிப்படையில் தான் தேர்தல்கள் நடத்தப்பட்டன (உதா. JNU). இந்த சட்டப்படி மாணவர்களின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் ஆணையம் தான் தேர்தலை நடத்தும். இதில் கல்லூரி நிர்வாகம் தலையிடவோ அல்லது அதன் மீது எந்த அதிகாரத்தையும் செலுத்தவோ முடியாது. தேர்தல் முடிந்த பின் தேர்தல் ஆணையம் பட்டியலை நிர்வாகத்திடம் ஒப்படைக்கும். நிர்வாகம் மாணவர் பிரதிநிதிகளை அங்கீகரிக்கும். இது தான் நடைமுறை. ஆனால் லிங்க்தோ பரிந்துரைப்படி ஒவ்வொரு கல்லூரி நிர்வாகமும் குறை கேட்புப் பிரிவை உருவாக்கவேண்டும்.இது தான் மாணவர் தேர்தல்களை கண்காணிக்கும். இது மாணவர் டீன் தலைமையில், ஒரு பேராசிரியர், ஒரு நிர்வாகி மற்றும் இரண்டு மாணவர்களை உள்ளடக்கியது. இவர்கள் தான் தேர்தல் ஆணையத்தைக் கூட கட்டுப்படுத்துவார்கள். தேர்தலின் போது ஏதாவது ஒரு மாணவர் அல்லது மாணவர் அமைப்பு இவர்கள் நடத்தை விதிகளைக் கடைபிடிக்கவில்லை என புகாரளித்தால், அவர்களின் பிரதிநிதித்துவத்தை ரத்து செய்ய இவர்களுக்கு அதிகாரம் உண்டு. தேர்ந்தெடுத்த மாணவர் சங்கத்தைக் கூட இவர்கள் கலைக்க முடியும். இந்த அமைப்பின் நடவடிக்கை மேல் மாணவன் புகாரளிக்க முடியாது. ஏனென்றால் அமைப்பிற்கு மேலே உள்ள சகல அதிகாரங்களும் குவிக்கப்பட்ட கல்லூரி முதல்வரைத் தவிர யாராலும் கட்டுப்படுத்த முடியாத அமைப்பிது. இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் சங்கங்கள் தனது உரிமைகளை இழந்து நிர்வாகத்தின் தயவில் மட்டுமே செயல்படும் அவல நிலைக்குத் தள்ளியுள்ளது.

லிங்க்தோவுக்கு எதிரான JNU மாணவர்களின் போராட்டம்

lyngdoh  committee (6)
லிங்கத்தோ கமிட்டி பரிந்துரைகளை எதிர்த்து புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் போராட்டம்

JNUSU-க்கு என தனியாக அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. அது மிகவும் ஜனநாயகத் தன்மை உள்ளதோடு மட்டுமன்றி கல்வி நிறுவன நிர்வாகத்தால் தலையிட முடியாத அளவு சுயாதிகாரம் படைத்ததாக இருந்தது. 2007 வரை இதனடிப்படையில் தான் ஜெஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் நடந்தப்பட்டது. இத்தேர்தலில் லிங்க்தோ பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி Youth for Equality என்ற அமைப்பு நீதிமன்றத்திற்கு சென்று தடையாணையைப் பெற்றது. இது இடஒதுக்கீட்டுக் கெதிராக போராட்டம் நடத்திய சாதி இந்து மாணவர்களின் அமைப்பு.

அப்போது தேர்தலை எப்படியாவது நடத்த வேண்டும் என்பதற்காக SFI, AISA போன்றவை லிங்க்தோவை ஆதரித்தது. JNUSU அரசியலமைப்புச் சட்டத்தை கைவிட்டு, லிங்க்தோ பரிந்துரைப்படி GRC யை உருவாக்கப் போராட்டம் நடத்தியது. லிங்க்தோ கமிட்டியை வரவேற்றுப் பாராளுமன்றத்தில் பேசியனர் போலி மார்க்ஸிஸ்டுகள். இதன் தொடர்ச்சியாக இந்தியா முழுவதும் லிங்க்தோவை அமுல்படுத்தக் கோரி இயக்கத்தையும் ஆரம்பித்தது.

லிங்க்தோ பரிந்துரைப்படி தேர்தல் நடத்தப்பட்டதும் ஓரிரு ஆண்டுகளிலேயே அதன் சதித்தனத்தை ஜெஎன்யு மாணவர்கள் புரிந்துகொண்டனர். உச்சநீதிமன்றத்தில் லிங்க்தோ கமிட்டிப் பரிந்துரைக்கெதிராக 2009 – இல் இவர்கள் வழக்கு தொடுத்தனர். மாணவர் சங்கத் தேர்தல்களில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமையில்லை என இரண்டு பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியதோடு வழக்கை அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு மாற்றியது.

SFI, AISA போன்ற போலிகளின் சந்தர்ப்பவாதத்திற்கும் பிழைப்புவாதத்திற்கும் எதிராக The New Materialist, DSU, AISF உட்பட பல அமைப்புகள் சேர்ந்து Joint Front Against Lyngdoh என்ற அமைப்பை உருவாக்கி லிங்க்தோவை முழுவதுமாக நீக்கக் கோரி போராடி வருகின்றனர். தற்போது தங்கள் பிழைப்புவாதத்தின் முதல் பலிகடாக்களான SFI, AISA போன்றவையும் சுயவிமர்சனமேற்று தங்களையும் இந்த அமைப்பில் இணைத்துக் கொண்டுள்ளது. JNUSU மற்றும் வலதுசாரி ABVP, YFE தவிர மற்ற அனைத்து மாணவர் அமைப்புகளும் நாடுமுழுக்க மாணவர்களை அணிதிரட்டி லிங்க்தோவுக்கு எதிராக போராடுகிறது.

lyngdoh  committee (5)
லிங்கத்தோ கமிட்டி பரிந்துரைகளை எதிர்த்து புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள் போராட்டம்

லின்டோ கமிட்டி பரிந்துரையின் முக்கியமான நோக்கங்கள்:

இந்த பரிந்துரைகள் வெறும் மாணவர்களின் உரிமைகளை மறுப்பது; ஆசிரியர்களைக் கண்காணிப்பது; கல்லூரி நிர்வாகத்தின்/ முதல்வரின் யதேச்சதிகாரத்தை நிறுவுவது; அதன் மூலம் தரகு அதிகார வர்க்கங்கள் தனது பொருளாதார சுரண்டலை நிலை நிறுத்திக் கொள்வது என்பதாக மட்டும் குறுக்கி புரிந்து கொள்ளக் கூடாது. லிங்க்தோ கமிட்டியின் மூலமே ஏகாதிபத்தியத்தின் நலனிலிருந்து ஆரம்பிக்கிறது. கேரளாவில் கிருஸ்தவ மிஷனரிகளும் ஆதிக்க சாதி இந்து (நாயர்கள்) சங்கங்களும் பல கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றது. குறிப்பாக கிருஸ்தவ கல்லூரிகளில் ரெவெரண்ட் ஃபாதர்களே முதல்வர்களாக உள்ளனர்.

பெரும்பாலும் வத்திக்கனுக்கு வேண்டியவர்களே கிருஸ்தவ நிறுவனங்களில் உயர்பதவிகளைப் பெற முடியும் என்பது தான் இன்றுவரை உள்ள நிலைமை. 1970 களின் தொடக்கத்தில் இச்சிறுபான்மை கல்லூரிகளின் முதல்வர்கள் ஏழுபேர் (அதில் ஃபாதர்கள் 3 பேர், இஸ்லாமியக் கல்லூரி முதல்வர் ஒருவர் மற்றும் மூன்று சாதி இந்து சங்கங்கள் நடத்தும் கல்லூரி முதல்வர்கள்) சேர்ந்து சொசைட்டீஸ் சட்டப்படி The Council of Principals of College in Kerala என்ற முதல்வர்களின் சங்கத்தை ஆரம்பித்தனர். இந்த சங்கத்தின் ஒரே நோக்கம் ”கல்லூரி வளாகங்களை அரசியலற்றதாக்குவது” என அவர்களே அறிவித்துக்கொண்டனர். ”1970 களில் இப்படி ஒரு சங்கத்தின் தேவை என்ன?” என்று நாம் நினைக்கலாம்.

lyngdoh  committee (4)அக்காலகட்டத்தில் தான் நக்சல்பாரி எழுச்சி, இந்தி எதிர்ப்புப் போராட்டம் போன்றவற்றின் தாக்கத்தால் அரசியல்மயமான மாணவர்கள் ஆளும் வர்க்கத்திற்கெதிரான போர்க்குணமிக்க போராட்டங்களை முன்னின்று நடத்தினர். ஒவ்வொரு கல்வி நிறுவனமும் போராளிகளின் உற்பத்திசாலையாக மாறியது. இம்மாணவர் எழுச்சி உருவாக்கிய அரசியல் அலை பரந்துபட்ட மக்களிடம் ஏற்படுத்திய தாக்கம் பார்ப்பனியத்தையும் ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்கத்தையும் ஒருங்கே நிலைகுலையச் செய்தது என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மாணவர் எழுச்சியைத் தடுப்பதன் மூலம் மட்டுமே தனது பொருளாதார நலனை தக்க வைக்க முடியும் என ஏகாதிபத்தியமும் தரகு அதிகாரவர்க்கமும் நினைக்கிறது.

மாணவர்களை ”அரசியல் நீக்கம்” செய்து அதன் மூலம் இளைஞர்களை அரசியலற்ற தக்கை மனிதர்களாக உருவாக்குவதன் மூலம் வருங்காலத் தலைமுறையையும் மொத்த சமுதாயத்தையும் எதிர்ப்பறியதாவர்களாக மாற்றி ஏகாதிபத்திய தரகு அதிகார வர்க்கம் தனது மேலாண்மையை நிலை நிறுத்திக் கொள்வது என்றதொரு பரந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் முதல்வர்களின் சங்கத் தலைமையில் ”அரசியலற்ற கல்லூரி வளாகங்களை” உருவாக்க தொடர்ந்து பல பிரச்சாரங்களும் கருத்தரங்கங்களும், வழக்குகளும் நடத்தப்பட்டன.

இவர்களின் 40 வருடக் கூட்டு முயற்சியின் பலனைத் தான் லிங்க்தோ கமிட்டி பரிந்துரை மூலம் அறுவடை செய்துள்ளனர். இதைத் தான் நாம் மறுகாலனியாக்கம் என்று சொல்கிறோம். அதாவது ஒட்டு மொத்த நாட்டையும் மறுகாலனியமாக்கும் ஏகாதிபத்தியங்களின் போர்தந்திர திட்டத்தின் ஒரு பகுதியே லிங்க்தோ கமிட்டி நடவடிக்கை.

லிங்க்தோவை ஒழித்துக் கட்டிவிட்டால் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் மீட்டெடுக்கப்படுமா?

      மேற்குவங்கம், கேரளா தவிர பிற மாநிலங்களில் இன்றுவரை கல்வித்துறையில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் என்னென்ன என்று கூட அறிந்திராதவர்களாகத் தான் மாணவர்கள் இருக்கிறார்கள். SFI போன்ற சங்கங்களும், சில முற்போக்கு மாணவர்களும் கூட லிங்க்தோவை அமுல்படுத்துவதால் ஏதோ தங்கள் பிரச்சனைகளை நிர்வாகத்திடம் பேசுவதற்கான தளம் கிடைக்கும் என நம்புகின்றனர். அப்படி ஒரு தளம் கிடைத்தாலும் அதை மாணவர் சமுதாயத்தின் நன்மைக்காக பயன்படுத்துவது எப்படி சாத்தியமாகும்?

lyngdoh  committee (3)கல்வித்துறையை மட்டுமன்றி கட்டிடங்களையும் மாணவர்களையும் சேர்த்தே தரகு ஏகபோக முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் போது அதற்கு ஒப்புதல் கொடுக்க மாணவப் பிரதிநிதிகளும் தேவைப்படுகிறார்கள். லிங்க்தோவை அமுல்படுத்தக் கூறுவது நமக்கு நாமே சவக்குழி தோண்டுவதற்கு ஒப்பானது. கல்வியை தனியார்மயமாக்கி தாராளமயமாக்கப்பட்டபின் கல்வித்துறையின் அங்கங்களான அரசின் கல்விக்கொள்கை, கல்வி அமைச்சகம், நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்களின் கலாச்சாரம், வேலை வாய்ப்பு சந்தை என ஒவ்வொன்றும் அழுகிப் புழுத்து நாறுகிறது; கல்வித்துறையே மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் சிந்திக்கும், செயல்படும் தன்மை படைத்த மாணவர் சமூகம் லிங்க்தோ பரிந்துரை வழங்கும் வரம்பிற்குள் இந்த அமைப்பிற்குள் சென்று அடிப்படை கட்டுமான வசதிக்காகவும், தன்னுடைய பொருளாயத பிரச்சனைகளுக்காகவும் இந்த திவாலான அமைப்பின் அங்கமாகி தீர்வைத் தேட முடியுமா? லிங்க்தோவை ஒழித்துக் கட்டிவிட்டு மாணவர்களே சங்கமாகத் திரண்டு அந்தந்த கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கைகளை வைத்து போராடி நமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள முடியுமா?

lyngdoh  committee (2)காசிருப்பவனுக்கே தரமான கல்வி என்பது அரசின் தாரக மந்திரமான பின்; அரசு-தனியார் கூட்டு என்ற பெயரில் அரசு கல்வி நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட பின்; அரசு-தனியார் கல்விநிலையங்கள் கல்வியியல் செயல்பாடுகளிலிருந்து பிறழ்ந்து ’திறனற்ற தக்கை இளைஞர்களை’ உருவாக்கும் கொத்தடிமைக் கூடங்களாக மாறியபின்; அரசு-தனியார் கல்வி நிறுவனங்களை லஞ்ச லாவண்யத்தாலும் ஊழலாலும் சீரழித்து, திறமையான இளைஞர்களை கூட ‘தகுதியற்றவன்’ என முத்திரை குத்தி வேலைவாய்ப்பு சந்தையிலிருந்து விசிறியடிக்கிறார்கள்.

இச்சூழலில் இக்கல்விநிறுவனங்களில் தண்ணீரில்லை, பெஞ்சில்லை, கட்டணம் ஏறி விட்டது, கோப்புகள் நகரவில்லை, அரசு ஒதுக்கிய நிதியை பட்டுவாடா செய்யவில்லை, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதில்லை எனப் போராடுவது எவ்வளவு அபத்தமானது? ஒட்டுமொத்த கல்வித்துறையும் திவாலாகி தீர்க்கமுடியாத சிக்கலுக்குள் மூழ்கிவிட்டபின் ஜனநாயக சிந்தனையுள்ள மாணவர்களும் பேராசிரியர்களும் மக்களும் ஒன்றுசேர்ந்து கல்வித்துறையை கையிலெடுப்பது தானே சரியானது.

lyngdoh  committee (1)நாம் கற்றுக் கொடுக்க மாணவர்கள் தேவை; நமக்கு கற்றுக் கொடுக்க ஆசிரியர்கள் தேவை; நாம் ஆய்வு செய்ய ஆய்வகங்கள் தேவை; இதற்கு செலவிடப்படும் பணம் மக்கள் வரிப்பணம்; இந்த கல்வியியல் செயல்பாடுகளில் கல்வியமைச்சரின் வேலை என்ன? எதற்கு துணைவேந்தர்? எதற்கு பதிவாளர்? கற்றுக் கொடுக்கவேண்டிய பேராசிரியர்கள் ஏன் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை ஒடுக்கும் கங்காணிகளைப் போன்ற நிர்வாகிகளாகிறார்கள்? எதற்காக இந்த செயலிழந்த கல்வித்துறை கடல்கிழவனைப் போல பொதுமக்களின் முதுகில் சவாரிசெய்கிறது?

நம்மை ஒட்ட உறிஞ்சி, ஊழலில் திளைத்து, கல்வித்துறையை கொள்ளைத் துறையாக மாற்றியுள்ள இந்த அட்டைப் பூச்சிகளை ஒழித்துக் கட்டுவோம்! மாணவர்கள்-ஆசிரியர்கள்-பொதுமக்களின் கமிட்டிகளைக் கட்டி ஒவ்வொரு கல்லூரியையும் கையிலெடுத்து நடத்துவோம்! கல்வித்துறையை ஜனநாயகமானதாக்குவோம்! கல்வியியல் செயல்பாடுகளுக்கான தளமாக கல்வி நிறுவனங்களை உருவாக்குவோம்! நம் தாய்நாட்டின் அறிவுத்துறையை மீட்டெடுப்போம்!

கல்பர்கி கொலையை நியாயப்படுத்தும் அயோக்கியவாதி சாரு !

3
அஅஅஅஅ
கன்னட அறிஞர் கல்பர்கி
கன்னட அறிஞர் கல்பர்கி

ன்னட மொழியின் ஆய்வறிஞர் எம்.எம். கல்பர்கி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 30-ம் தேதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை, 30.08.2015) இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அவர் வீட்டுக் கதவை காலை 9 மணி அளவில் தட்டியிருக்கின்றனர். கதவை திறந்து பார்த்த கல்பர்கியின் மார்பிலும், தலையிலும் சுட்டு விட்டு தப்பியோடி இருக்கின்றனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கல்பர்கி தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தர்வாட் மாவட்டத்தை சேர்ந்தவரான கல்பர்கி இந்துத்துவ சக்திகளையும், லிங்காயத் சாதிவெறியர்களையும் கடுமையாக எதிர்த்து நின்றவர்.

கல்பர்கியின் மரணத்துடன் ஒப்புநோக்கத்தக்க வேறிரண்டு மரணங்கள் மராட்டிய மாநிலத்தின் பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த பன்சாரே ஆகியோருடையது.

கல்பர்கியின் கொலைக்கு காரணமானவர்களை யூகிக்க எந்த சிரமத்தையும் வைக்கவில்லை இந்து மதவெறியர்கள். இந்து மதத்தை விமர்சித்தீர்கள் என்றால் நாயின் சாவை ருசியுங்கள் என்று பந்த்வால் தாலுக்காவின் பஜ்ரங்க் தள நிர்வாகி புவித் ஷெட்டி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ‘அடுத்தது நீங்கள் தான் கே.எஸ். பகவான்’ என்று இன்னொரு பேராசிரியரையும் குறிவைத்துள்ளார்.

12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் உருவாக்கிய வீரசைவம் அல்லது லிங்காயத் மதக்கொள்கை இந்து மதத்தின் கொள்கைகள் மற்றும் வழிபாட்டு முறைக்கு மாறான ஒன்று என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார், கல்பர்கி. பவுத்தம், சமணம், சிரமணம், சார்வாகம் மற்றும் சீக்கியம் போன்று பசவரின் வீரசைவமும் பார்ப்பனீயத்தின் வேதங்களையும், சாதியமைப்பையும் நிராகரித்தது. பசவர் ஓரிறைக் கோட்பாட்டை கொண்டவர்; உருவ வழிபாட்டை நிராகரித்தவர். பசவரின் கொள்கைகளை ஏற்று அவரது புது சமயத்தில் இணைந்தவர்களே லிங்காயத்துகள்.

பசவரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பார்ப்பனர்களும் இருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்தனர். அவர்களுக்கிடையில் திருமண உறவும் சாத்தியமானது.காலப்போக்கில் லிங்காயத்துகளை பார்ப்பனீயம் உள்வாங்கியது. அய்யா வைகுண்டரை உட்கவர்ந்தது போல பசவரையும் உட்செரித்து கொண்டது. மதச்சார்பற்ற தேர்தல் அரசியல் கட்சிகளின் வெற்று வாக்குறுதிகளால் சோர்வுற்றிருந்த மக்களிடம் இந்து ராஷ்டிர கனவை விதைத்து போலியான தேசியக் குறிக்கோள் ஒன்றை காட்டியது ஆர்.எஸ்.எஸ். பின்னர் அதன் நிர்மாணத்துக்கு பிற்பட்ட மற்றும் தலித் மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சிக்கியவர்கள் தான் கர்நாடகத்தின் லிங்காயத்துகள்.

கல்பர்கி தனியொரு இயக்கமாக லிங்காயத்துகள் பார்ப்பனமயமாதலை விமர்சித்து வந்தார். பசவரின் வச்சனா (இசை கவிதை) கவிதைகளை ஆய்வு செய்த கல்பர்கி, பசவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவிக்கும் இடையே பாலியல் உறவு இருக்கவில்லை என்று கூறினார். சிவ பக்தரான பசவர் முன்பு சிவன் தோன்றி தனக்கு ஒரு பாலியல் துணை கேட்டதாகவும், பசவரால் ஏற்பாடு செய்ய முடியாமல் போன நிலையில் அவருடைய மனைவியே சிவனுக்கு உதவ முன்வந்ததாகவும் வீரசைவ புராணக் கதை கூறுகிறது. லிங்காயத்துகளின் இன்னொரு திருஉருவான சென்னபசவர் ஒரு செருப்பு தைக்கும் தலித் தொழிலாளிக்கும் பசவரின் தங்கைக்கும் பிறந்தவர் என்றார்.

அஅஅஅஅ
கல்பர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் – பார்ப்பனிய பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட அறிஞர்கள்!

கல்பர்கியின் இந்த ஆய்வு முடிவுகள் 1989-ல் வெளியான உடனே லிங்காயத்துகளிடமிருந்து எதிர்ப்பு வலுத்தது. எழுத்தாளர் பெருமாள் முருகனை மிரட்டியது போல கல்பர்கிக்கும் நெருக்குதல் கொடுத்து அவருடைய நூலின் மேற்குறிப்பிட்ட பகுதிகளை நீக்கம் செய்தனர். லிங்காயத் சாதிவெறியர்களுக்கு பணிந்ததை தான் மேற்கொண்டதொரு அறிவுத்துறை தற்கொலை என்று வருணித்தார், கல்பர்கி.

கல்பர்கி தந்திரோபயமாக பின்வாங்கினாலும் லிங்காயத்துகளின் பார்ப்பனமயமாதலை தொடர்ந்து விமர்சித்தார். பா.ஜ.க.வின் வருகையுடன் இந்துத்துவத்தின் பிடியில் லிங்காயத்துகள் சிக்கியதும் அவர்களின் எதிர்வினைகளில் பண்பு ரீதியான மாற்றம் ஏற்படத் துவங்கின. குழந்தை பிராயத்தில் கடவுள் சிலையின் மீது சிறுநீர் கழித்து அதற்கு சக்தி இருக்கிறதா என்று சோதனை செய்ததாக கூறிய மறைந்த கன்னட எழுத்தாளர் யூ. ஆர். அனந்தமூர்த்தியின் கூற்றை மேற்கோள் காட்டி பேசியதற்காக கடந்த ஜூன் மாதத்தில் அவரது வீட்டிற்கு வந்து கல்லெறிந்து ஆர்ப்பாட்டம் செய்து மிரட்டி விட்டு சென்றுள்ளனர் விசுவ ஹிந்து பரிசத் அமைப்பினர். இவர்களின் கரம் இந்த கொலையின் பின்னணியில் இருப்பது இப்போது அனைவரும் அறிந்த ஒன்றாகி விட்டது

எனினும் கொன்ற அந்த இருவரை மட்டுமே பிடிக்க 6 சிறப்புக் குழுக்களை அமைத்து தேடுகிறது கர்நாடக அரசு.சீசரை கொன்று விட்டு கண்ணீர் விட்ட புரூட்டஸை போல கல்பர்கியின் கொலையாளிகளை உருவாக்கிய சித்தாந்தத்தின் பிரதிநிதிகளான எடியூரப்பாவும், ஜெகதீஷ் செட்டரும் அவரின் இறுதி ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். புரூட்டஸ் பக்கம் நின்ற சின்னா என்ற இழிந்த கவிஞனை போல சாரு நிவேதிதா என்ற தமிழ் போர்னோ எழுத்தாளன் கல்பர்கியின் கொலையை கொண்டாடியுள்ளார். அதாவது மக்களோடு சேர்ந்து பழகி அவர்களது வாழ்க்கையை அறிந்து கொண்ட ஒரு எழுத்தாளர் இப்படி மக்களின் மத நம்பிக்கைகளை இழிவு படுத்தக் கூடாதம். அப்படி எழுதினால்  அந்த முட்டாள் எழுத்தாளர் விளைவுகளை சந்திக்க வேண்டுமாம்

பார்ப்பனியம் எனும் சிறுபான்மை ஆதிக்க சாதியினரின் வர்ணாசிரமக் கொடுமைகளை பெரும்பான்மை மக்களின் அதாவது ‘இந்துக்களின்’ நம்பிக்கை என்று நியாயப்படுத்துவது ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் அரதப் பழசான தந்திரம். இதுதான் சாரு எனும் அயோக்கிய முட்டாள் “மக்களை” புரிந்து கொண்டிருக்கும் இலட்சணம். இப்படித்தான் மோடி முதல் இலக்கிய கேடி சாரு வரை தலித் மற்றும் சிறுபான்மை மக்களை கொன்றொழிப்பதை வெளிப்படையாக ஆதரித்து வருகிறார்கள். அடிப்படையில் பார்ப்பனியக் கொடுங்கோன்மைகளை எதிர்த்த கல்பர்கிதான் மக்களை நேசித்தவர் அல்லது மக்களின் நிம்மதிக்காக பாடுபட்டவர். அத்தகையை நல்லவரை கொன்ற இந்துமதவெறியர்களும் அதை பொது மக்களின் நம்பிக்கையை இழிவுபடுத்தியதன் எதிர்விளைவு என்று நியாயப்படுத்தும் சாரு முதலான கூட்டம்தான் மக்களை வெறுப்பவர்கள்.

கல்பர்கி கொலையை எதிர்த்து போராட்டம்
கல்பர்கி கொலையை எதிர்த்து போராட்டம்

இன்னும் சில ‘முற்போக்காளர்களோ’ கல்பர்கியின் கொலையை கருத்துரிமைக்கு வந்த சோதனை என்று பேசுகிறார்கள். பெருமாள் முருகன் பிரச்சினைக்கும் அப்படித்தான் பேசினார்கள். இதுவும் ஒரு வித சரணாகதிதான். அதாவது பார்ப்பனியத்தையோ, கொங்கு வேளாளக் கவுண்டர் சாதிவெறியையோ எதிர்ப்பதற்கு துப்பற்று இப்படி கருத்துரிமை என்று பேசுவதால் ஆதாயம் கருத்துரிமைக்கு அல்ல. மாறாக சாதிவெறியர்களும், மதவெறியர்களும்தான் இந்த கருத்துரிமை போரில்  தமது கொலைவெறி மறைக்கப்படுவது குறித்து எக்காளச் சிரிப்பில் திளைக்கிறார்கள். வன்னிய சாதிவெறி என்று சொல்லாமல் பொதுவில் சாதிவெறி என்று சொல்லி இளவரசன் மரணத்திற்காக சோகம் கொண்ட தமிழினக் குழுக்களின் அணுமுறையும் இப்படிப்பட்டதே.

இவையெல்லாம் சேர்ந்து இந்துமதவெறியர்களின் வெளிப்படையான தாக்குதல்களை அதிகரிக்கப்பதற்கே உதவியிருக்கிறது. பேராசிரியர், ஆய்வறிஞர், பழங்கன்னட இலக்கிய ஆய்வாளர், கல்வெட்டு அறிஞர் என்று பன்முக ஆளுமை தன்மை கொண்ட கல்பர்கி கொலைசெய்யப்பட்டது எத்தகைய ஒரு இழப்பு! இந்துமதவெறியர்களை மறைமுகமாகக் கூட எதிர்ப்பதற்கு துப்பற்ற எண்ணற்ற படைப்பாளிகளை இலக்கியத்திலும், திரைத்துறையிலும் கொண்டிருக்கும் தமிழ் இலக்கிய உலகம் இது குறித்து கொஞ்சமாவது வெட்கப்படுமா?

கல்பர்கி இழப்புக்கு பதிலடி தருமாறு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவோம்! பார்ப்பனியத்திற்கு பாடைகட்ட  தமிழகத்தை தயார் படுத்துவோம்!!

– சம்புகன்.

நீதித்துறை ஊழலுக்கெதிராக களமிறங்கிய மதுரை வழக்கறிஞர்கள்

4

நீதித்துறை ஊழலுக்கெதிராக களமிறங்கிய மதுரை வழக்கறிஞர்கள்!

துரை உயர்நீதிமன்றத்தில் கடந்த 02-09-2015 அன்று நீதித்துறை லஞ்சம் – ஊழல் ஒழிப்பு கண்டன பொதுக்கூட்டம் மதுரை மாவட்ட, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களால் நடத்தப்பட்டது.

நீதித்துறை ஊழல் - மதுரை பொதுக்கூட்டம்மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, வில்லவன்கோதை, சின்னராஜா, கருணாநிதி, கனகவேல், எழிலரசு, நெடுஞ்செழியன், அருண் அய்யனார், மதுரை வழக்கறிஞர் சங்கச் செயலர் ஏ.கே.ராமசாமி, தலைவர் தர்மராஜ், வழக்கறிஞர் லஜபதிராய் ஆகியோர் கண்டன உறையாற்றினர்.

பேசிய வழக்கறிஞர்கள் அனைவரும் உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஊழலில் திளைத்து, ஒட்டு மொத்த நீதித்துறையும் அரசின் தொங்கு சதையாக மாறிவிட்டதை அம்பலப்படுத்தினர்.

நீதித்துறை ஊழல் - மதுரை பொதுக்கூட்டம்கூட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.வரும் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறவுள்ள நீதித்துறை லஞ்சம் – ஊழல் ஒழிப்புப் பேரணிக்கு தென்மாவட்ட வழக்கறிஞர்கள் அனைவரும் வருமாறு வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.

கீழ்க்கண்ட பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

 

நீதித்துறை லஞ்சம் – ஊழல் ஒழிப்புப் போராட்டம்

கண்டன பொதுக்கூட்டம்

நாள்: 02-09-2015 காலை : 10.00 மணி இடம்: உயர்நீதிமன்ற வாயில், மதுரை

அன்பார்ந்த நண்பர்களே,

ஹெல்மெட் பிரச்சனையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்துப் போராடியதற்காக மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் திரு.தர்மராஜ், செயலர் திரு.ஏ.கே.ராமசாமி ஆகியோர் மீது தானே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 24-08-2015-அன்று நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் முன்பு ஆஜராகச் சொன்னது.

மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் அவர்கள் மதுரை வழக்கறிஞர் சங்கத்துக்காக ஆஜராகி “நீதிபதி கிருபாகரன் தீர்ப்பில் ”சட்டவிரோதமாக வாகனத்தை, ஆர்.சி.யை பறிமுதல் செய்ய உத்தரவிட்டதற்கு எதிராக சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது; தற்போது தலைமை நீதிபதி கோரியதன்பேரில் போராட்டம் முடிக்கப்பட்டு நீதிமன்றம் நடக்கிறது. எனவே நீதிமன்ற அவமதிப்பை முடியுங்கள்” எனக் கோரினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், “தலைவர் தர்மராஜ், செயலர் ஏ.கே.ராமசாமி ஆகியோரை கோட்டு, கவுனை முதலில் கழட்டுங்கள்” எனச் சொல்லி கழட்ட வைத்தனர்.

“மதுரையில் நடந்த சம்பவத்திற்கு, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்துங்கள், எனக்கு 73 வயதாகிறது, உடலில் பல நோய்கள் உள்ளது, அலைய முடியாது” என்று பேச முயன்ற திரு.ஏ.கே.ராமசாமி அவர்களைப் பேசவே அனுமதிக்காததுடன்,

“வழக்கைத் தவிர வேறு எதுவும் பேசக்கூடாது, இது பொதுமேடை அல்ல” என்று சொல்லி, நான்கு வாரம் வாய்தா தர மறுத்து 16-09-2015-ல் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.

கறார் கந்தசாமிகளின் யோக்கியதை என்ன?

நீதிமன்றத்தில் சட்டப்படி நடக்க வேண்டுமென கறாராகப் பேசும் நீதிபதி சி.டி.செல்வம்தான் வழக்கறிஞர்களால் கிரானைட் செல்வம், சூட்கேஸ் செல்வம் எனச் செல்லமாக அழைக்கப்படுபவர். கிரானைட் மாபியாக்களிடம் பெட்டி வாங்கிக் கொண்டு கடந்த 2013-ல் பல்லாயிரம் கோடி கொள்ளையடித்த கிரானைட் திருடர்களுக்கு ஜாமின் வழங்கியதுடன், அரசு , உச்சநீதிமன்றம் செல்வதாகச் சொன்னவுடன், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வரும்வரை ஏற்கனவே உள்ள, இனி வரும் எந்த வழக்கிலும் கிரானைட் திருடர்களை கைது செய்யக் கூடாதெனச் சொல்லி உத்தரவிட்டார்.

வழக்கறிஞர்களுக்கு உபதேசிக்கும் இவர்தான், தனது தம்பிக்கு எதிரான வழக்கை தானே விசாரித்துத் தீர்ப்பளித்தார். இதை எதிர்த்த சவுக்கு சங்கர் என்பவரின் இணையதளத்தை முடக்கி, சங்கரை விரட்டி, விரட்டி கைது செய்ய வைத்தார்.

அடுத்து நீதித்துறையின் அப்துல்கலாம் அய்யா டாக்டர்.தமிழ்வாணன் அவர்கள். இவர் மீது பல பாலியல் புகார்கள் உள்ளது. தற்போது மதுரை ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கிய உப்புமா பல்கலையில் லட்சரூபாய் கொடுத்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

பவர்புல்லான பார் கவுன்சில் நிர்வாகிகள் வந்தால் இவரது நீதிமன்றத்தில் உத்தரவு நிச்சயம். இந்த உப்புமா கம்பெனிதான் மதுரை வக்கீல் சங்கத்தை மிரட்டுகிறது.

நீதிபதிகளா? ஆளும் கட்சி எடுபிடிகளா?

Sasi-perumal-posterசமீபத்தில் இறந்த சசி பெருமாளை மரணத்தை எடுத்துக் கொள்வோம். உயர் நீதிமன்றமும் அவரது மரணத்துக்குக் காரணம் என்ற உண்மையை யாரேனும் மறுக்க முடியுமா?

சட்டத்தின் மீதும், நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை வைத்து மூன்றாண்டு காலம் சசிபெருமாள் போராடினார். உண்ணாமலைக் கடை டாஸ்மாக்கை அகற்ற வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே உயர்நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்து விட்டது. விதியை மீறி நெடுஞ்சாலைகள், பள்ளிகள் அருகில் அமைக்கப்பட்டிருக்கும்கடைகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு எதையும் தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்பது எல்லா நீதிபதிகளுக்கும் தெரியும். மதுரை வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கும் நீதிபதிகள், டாஸ்மாக் விவகாரத்தில் ஒரு இடத்தில் கூட அரசுக்கு எதிராகநீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.

சசி பெருமாள் உயிர் துறந்த பிறகாவது, தன்னுடைய குற்றத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருக்கிறதா? சசி பெருமாளை மரணத்துக்குத் தள்ளிய அரசைக் கண்டித்து உயர்நீதிமன்றம் ஒரு வார்த்தையாவது பேசியதா? சசி பெருமாளின் மரணத்துக்குப் பின்னராவது, சட்டவிரோதமான கடைகள் அனைத்தையும் மூடுமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியதா? எதுவும் இல்லை.

அரசமைப்புச் சட்டத்தின் விதி 47, “மதுவிலக்கை அமல்படுத்துவது அரசின் கடமை” என்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் மீதான நம்பிக்கையை விட, அரசு அதிகாரத்துடனும் ஆளும் கட்சியுடனும் அனுசரித்துப் போவதால் கிடைக்கக்கூடிய ஆதாயங்களின் மீதுதான் நீதிபதிகளுக்கு நம்பிக்கை இருக்கிறது. பணம் வாங்குவது மட்டும் ஊழல் அல்ல.அரசு, போலீசுடன் ஒத்துழைத்து நீதிபதிகள் போவதுதான் மிகப்பெரிய அறம் கொன்ற, ஊழல் மலிந்த செயலாகும். குறிப்பாக மாஜிஸ்ட்ரேட்டுகள் உள்ளூர் போலீசின் எடுபிடிகளாகவே இருக்கிறார்கள்.உயர்,உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உயர் காவல்துறை, அரசின் கூட்டாளிகளாகவே உள்ளனர்.

கொள்ளையின் பங்காளிகளாக………………….நிதி அரசர்கள்….!

ஆற்று மணல், கிரானைட், தாது மணல் கொள்ளை வழக்குகளைக் கையாண்டநீதிபதிகள் பலர் கனிமவளக் கொள்ளையர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார்கள். “இந்த தீர்ப்புகள் பற்றி சகாயம் குழு விசாரணை நடத்த வேண்டும்” என்றுமுன்னாள் நீதிபதி சந்துருநாளேடு ஒன்றில் கட்டுரை எழுதிய பின்னரும் நீதிபதிகள் யாருக்கும் கோபம் வந்ததாகத் தெரியவில்லை. மாறாக, “முழுதும் நனைந்தவனுக்கு முக்காடு எதற்கு” என்று வெளிப்படையாகவே இறங்கிவிட்டார்கள்.

மதுரையில் கடந்த டிசம்பர், 2014-ல் கிரானைட் கொள்ளைக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ராஜா சென்னையில் ஜூலை மாதம் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகத் தீர்ப்பளிக்கிறார். ஆகஸ்டு மாதம் மதுரைக்கு வந்த இந்த நீதிபதிக்கு மீண்டும் கனிமவளத்துறையே ஒதுக்கப்படுகிறது. வைகுந்தராசனின் கனிம வளக்கொள்ளை தொடர்பாக பேடி குழு அளித்த பரிந்துரையை அப்படியே நிராகரித்து, வினோத் குமார் சர்மா என்ற தமிழே தெரியாத பஞ்சாப் மாநில ஒய்வு பெற்ற நீதிபதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப் படுகிறார். 9 மாதங்களாக கனிமவளத்துறை என்ற ஒரு துறையை ஒரு குறிப்பிட்ட நீதிபதிக்கு மட்டுமே ஒதுக்கித் தந்திருப்பவர், சட்டத்தின் ஆட்சி பற்றி பெரிதும் கவலைப்படும் தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல்தான்.

  • கிரானைட், தாதுமணல், ஆற்றுமணல் கொள்ளைகளில், நீதிபதிகள் தனபால், வேலுமணி, கர்ணன், ராஜேந்திரன், பி.என்.பிரகாஸ் உள்ளிட்ட பலரும் திருடர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளார்கள்.
  • நீதிபதி தனபாலின் மருமகள் “தனது கணவர் நீதிமன்றம் செல்லாமலே சட்டவிரோதமாக பலலட்சம் சம்பாதிக்கிறார், தன்னைக் கொடுமைப்படுத்துகிறார்கள்” என்று சொல்லித் தொடுத்த வழக்கில் ஊழல் நீதிபதி தனபாலுக்கு ஆதரவாக வழக்கைத் தள்ளுபடி செய்கிறார் நீதிபதி நாகமுத்து.
  • 22,000 கோடி கொள்ளையடித்த நோக்கியா கம்பெனியிடம் பெட்டி வாங்கிக் கொண்டு ஸ்டே கொடுக்கிறார் நீதிபதி ராஜேந்திரன்.
  • நீதிபதிகள் பி.என்.பிரகாஸ், வைத்தியநாதன் ஆகியோர் சாதி பார்த்தே தீர்ப்பளிக்கின்றனர்.
  • நீதிபதி மணிக்குமார் மீது பாலியல் புகார் உள்ளது.
  • இன்னும் நீதிபதிகள் பி.ஆர்.சிவக்குமார்,வாசுகி, விமலா உள்ளிட்ட பலர் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளது.
  • சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் நடக்கும்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கினார் நீதிபதி அருணா ஜெகதீசன்.
  • ஆற்றுமணல் கொள்ளைக்கு எதிராக சென்றமாதம் ஆவேசமாகப் பேசிய நீதிபதி சுதாகர் அடுத்த வாய்தாவில் பதுங்குகிறார்.
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து ஊழல்பேர்வழி என்று நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சொல்கிறார். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டியதுதானே?
  • நீதிபதி கங்குலி மீது பாலியல் புகார். நீதிபதி சதாசிவம், கே.ஜீ.பாலகிருஷ்ணன், முன்னாள் சட்ட அமைச்சர் மூத்த வழக்கறிஞர் சாந்திபூசன் சொன்ன 8 ஊழல் இந்திய தலைமை நீதிபதிகள் மீது யார் நடவடிக்கை எடுப்பது?

நீதிபதிகள் தங்கள் மனதை தொட்டுச் சொல்லட்டும்.மேற்சொன்ன விபரங்கள் உண்மை இல்லையா? கீழமை நீதிமன்றங்களிலிருந்து, உயர்,உச்சநீதிமன்றம்வரை பல நீதிபதிகள் லஞ்சம், ஊழல், பாலியல் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களா? இல்லையா? இவர்கள் மீது கடந்த 65 ஆண்டுகளாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இக்குற்றங்களை சாதாரண மக்கள் செய்தால், விட்டுவிடுவோமா?

இதில் மிக முக்கிய பிரச்சனை ஒரு கீழ்நிலை அதிகாரி லஞ்சம் வாங்கும்போது அது அந்தத் தனிநபரின் குற்றமாக முடிந்து விடுகிறது. ஆனால் ஒரு உயர், உச்சநீதிமன்ற நீதிபதிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்பெழுதும்போது, அந்தக் குற்றமே சட்டமாகி விடுகிறது. அந்தத் தீர்ப்பைக் காட்டி சட்டபூர்வமாகவே கொள்ளையிடும் வாய்ப்பு எல்லோருக்கும் திறந்து விடப்படுகிறது.

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் காவலன் என்று கூறிக்கொள்ளும் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள், தங்கள் சொந்த ஆதாயத்துக்காக தமிழ் மண்ணையும் தமிழ் மக்களின் உரிமைகளையும் சூறையாடுவதுடன்,நீதித்துறை, வழக்குரைஞர் தொழிலுக்குரிய மாண்பையும் சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அம்பலப்படுத்துவதுதான் அரசியல் சட்டம், நீதித்துறையின் மாண்பைக் காப்பதாகும்.

இனித் தயங்குவதில் பயனில்லை. வழக்கு எங்களுக்குப் பொருட்டல்ல. இது தொடக்கம்தான். அடுத்தடுத்து நீதித்துறை ஊழலுக்கு எதிரான எங்களது போராட்டக்களம் ஒட்டுமொத்தத் தமிழகம், இந்தியா என விரிவடையும். ஊழல் நீதிபதிகள் பட்டியலும் விரைவில் வெளியிடப்படும்.

இவண்:
அனைத்து வழக்கறிஞர் சங்கங்கள்,
மதுரை மாவட்ட உயர்நீதிமன்றங்கள்.

கருப்பின மக்களுக்கு அமெரிக்கா ஒரு காட்டுமிராண்டி நாடு

2
Protestors scuffle with police during a protest at the Ferguson Police Department in Ferguson, Missouri, October 13, 2014. Hundreds of protesters converged in the pouring rain on the Ferguson, Missouri, police department on Monday as they launched another day of demonstrations over the August killing by police of an unarmed black teenager. REUTERS/Jim Young (UNITED STATES - Tags: CRIME LAW CIVIL UNREST) - RTR4A14U

ந்தியாவில் ‘இப்பல்லாம் யாரு சாதி பாக்கிறார்கள்’ என்று சொல்லிக்கொள்வதன் மறுபுறம் சாதி வெறி தலைவிரித்து ஆடுவதைப் போலவே, மிக முன்னேறிய நாகரீக நாடு என்று பீற்றப்படும் அமெரிக்காவில் இனவெறி என்பது கடந்தகால அத்தியாயம் என்ற பிரமையை பெர்குசன் பகுதியில் நடந்து வரும் சம்பவங்கள் உடைத்து வருகின்றன.

Protestors scuffle with police during a protest at the Ferguson Police Department in Ferguson, Missouri, October 13, 2014. Hundreds of protesters converged in the pouring rain on the Ferguson, Missouri, police department on Monday as they launched another day of demonstrations over the August killing by police of an unarmed black teenager. REUTERS/Jim Young (UNITED STATES - Tags: CRIME LAW CIVIL UNREST) - RTR4A14U
அக்டோபர் 13, 2014 அன்று பெர்குசனில் நடந்த கண்டன போராட்டம்

அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்திற்கு உட்பட்ட செயின்ட் லூயிஸ் பகுதியில் அமைந்துள்ள பெர்குசன் நகரத்தைச் சேர்ந்த 18 வயதே ஆன மைக்கேல் ப்ரௌன் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 9 அன்று தனது பாட்டி வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது டேரன் வில்சன் என்கிற வெள்ளையின வெறி போலீசு அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சென்ற ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிறு அன்று மைக்கேல் ப்ரௌனின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. வெள்ளை இனவெறியை எதிர்த்தும், தொடர்ச்சியாக நடக்கும் படுகொலைகளுக்கு நீதி வழங்க கோரியும், படுகொலை குற்றவாளிகளை விடுவிக்கும் அமெரிக்க நீதித்துறையை விமர்சித்தும் அமைதிப் போரணி நடத்தப்பட்டது.

அமைதிப் பேரணியில் டைரோன் ஹாரிஸ் என்ற 18 வயதே ஆன கருப்பின இளைஞர், சீருடை அணியாத போலீசாரால் சுடப்பட்டு, படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹாரிஸ் போராட்டக்காரர் இல்லையெனவும், இரு கிரிமினல் கும்பலுக்கு இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும், அதை கண்காணிக்ச் சென்ற சீருடை அணியாத போலீசார் மீதும், அவர்களது வாகனத்தின் மீதும் ஹாரிஸ் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதனால் தாங்கள் திருப்பி சுட்டதாகவும் போலீஸ் கூறியுள்ளது. இதை ஹாரிசின் தந்தை மறுத்துள்ளார். தமது மகன் மைக்கேல் ப்ரௌன் படித்த அதே பள்ளியில் படிப்பதாகவும், அவர் கிரிமினல் இல்லையெனவும் கூறியுள்ளார்.

மேலும் சில கருப்பின இளைஞர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டதாகவும் கருப்பின இளைஞர்களை கைது செய்துள்ளது போலீசு. ஆனால், பிரமாணம் காப்பவர்கள் அமைப்பினர் இராணுவத்தைப் போல சீருடை, தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட கனரக ஆயுதங்களை தரித்துக் கொண்டு, பேரணியுடன் வந்துள்ளனர். இவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை.

அமைதியாக நடந்து கொண்டிருந்த பேரணி இவ்வகையில் வன்முறையாக மாறியதால், பெர்குசனில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அவசரநிலை ஒடுக்குமுறைகளுக்கு பயந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டுவிடவில்லை. மறுநாள் திங்களன்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலை எண் 70-ல் மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டங்களில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மூன்று நாட்களுக்கு பிறகு அவசரநிலை விலக்கிக் கொள்ளப்பட்டது.

“நாங்கள் கருப்பராக இருப்பதுடன், போராட ஒன்று கூடி இருப்பது – அது அமைதியான வழிமுறையாக இருந்தாலும், போலீசாருக்கு ‘அச்சத்தை’ ஏற்படுத்துகிறது; அதனாலேயே போலீசார் எங்கள் அமைதிப் போராட்டங்களைக் கூட மிருகத்தனமாக ஒடுக்குகின்றனர்” என்று போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

மைக்கேல் ப்ரௌன் படுகொலையை தொடர்ந்து, கருப்பின மக்கள் காலங்காலமாக அனுபவிக்கும் இனவெறி ஒடுக்குமுறைகள் அவர்களிடம் கோபத் தீயை மூட்டியுள்ளது.

மிசௌரி மாகாணம் மட்டுமின்றி அமெரிக்க நாடெங்கிலும் இனவெறிக்கு எதிராகவும், கொலைகார போலீசு அதிகாரியை தண்டிக்க கோரியும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன. முதலில் பிரச்சனையை மூடி மறைக்க முயன்ற போலீசு, போராட்டக்காரர்கள் மீது இராணுவ ரீதியான – மிருகத்தனமான ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. போராட்டக்காரர்கள் மட்டுமின்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் பரவி கருப்பின மக்களுடன், வெள்ளையினத்தை சேர்ந்த ஜனநாயகவாதிகளும், நிறவெறி எதிர்ப்பாளர்களும் கைகோர்த்தனர். விவகாரம் கைமீறிப் போய் தேசிய, சர்வதேசிய அளவில் இனவெறிக்கு எதிரான போராட்டங்களும், போலீசுக்கு எதிரான விமர்சனங்களும் கிளம்பத் துவங்கிய பின், வழக்கு எஃப்.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன், இனவெறி பிரச்சனை தொடர்பாக நீதித்துறை விசாரணையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவில் தலித்துகள், இஸ்லாமியர்கள் மீதான படுகொலைகள் நிகழும் போது, காவல்துறை முதலில் குற்றங்களை பதிவு செய்யவே மறுக்கும்; மக்கள் கிளர்ந்தெழுந்து போராடத் துவங்கிய பின்னர் வழக்குகள் பதிவு செய்யப்படும். அவ்வழக்குகளும் பின்னர் நீர்த்துப் போக வைக்கப்பட்டு இறுதியில் மாட்சிமை பொருந்திய நீதிமன்றங்களால் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள். இந்நிலைமை நம்நாட்டில் மட்டுமல்ல; உலகில் ஜனநாயகத்தை நிலைநாட்டும் புனிதப் பணியை செய்துவரும் அமெரிக்க செர்க்கத்திலும் இதே நிலைதான். தேசங்கள் மாறினாலும் ஒடுக்கப்படுபவர்களின் மீதான ஒடுக்குமுறைகள் மாறுவதில்லை.

சென்ற நவம்பர் மாதம் செயின்ட் லூயிசின் பெருநடுவர் மன்றத்தால் (Grand Jury) டேரன் வில்சன் குற்றவாளி அல்ல என்றும், தற்காப்புக்காகவே அவர் மைக்கேலை சுட்டார் என்றும் விடுவிக்கப்பட்டார். நடுவர் மன்றம் ஒருவரை குற்றவாளியென தீர்மானிக்க 12 நடுவர்களில் 9 பேர் உடன்பட வேண்டும் என்பதுடன், நடுவர் மன்றம் ஒன்பது வெள்ளை இனத்தவர்களையும், மூன்று கருப்பினத்தவர்களையும் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இம்முடிவு பெர்குசனில் போராட்டத் தீயை மீண்டும் பற்றவைத்தது. பெர்குசன் நகர போலீசு அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். அமெரிக்க அரசமைப்பு தோல்வியடைந்துள்ளதை மீண்டுமொரு முறை நிருபிப்பதாக போராட்டகாரர்கள் தெரிவித்தனர். இப்போராட்டங்களை போலீசும், சிறப்பு பயிற்சி பெற்ற தேசிய படையினரும் மிருகத்தனமாக நசுக்கினர்.

இப்பகுதியில் முன்னர் வெள்ளை இனவெறி பயங்கரவாதக் குழுவான கூ க்ளக்ஸ் கிளான் செல்வாக்கு மிகுந்திருந்தது. தற்போதோ பழைய கூ கிளக்ஸ் கிளான், நியோ நாஜிகள் போன்ற வெள்ளை இனவெறி பயங்கரவாதிகள் கன்சர்வேட்டிவ் சிட்டிசன் கவுன்சில், பிரமாணம் காப்பவர்கள் போன்ற கவுரவமான பெயர்களில் இயங்கி வருகிறார்கள்.

பிரமாணம் காப்பவர்கள் (Oath Keepers) என்ற பெயரில் அமெரிக்காவின் அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்களாக தம்மை அறிவித்துக் கொண்டு, முற்றிலும் வெள்ளையின உறுப்பினர்களை கொண்டு இயங்கி வருகின்றனர். தேசபக்தி முகமுடி அணிந்துள்ள இந்த வலதுசாரி நிறவெறி அமைப்பில் முன்னாள், இன்னாள் இராணுவத்தினரும், போலீசாரும் உறுப்பினர்களாக உள்ளனர். அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில், இவ்வமைப்பு ஆயுதமேந்தி வர அனுமதிக்கப்படுகிறது. இவர்கள் அரச படைகளிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்காக தாங்கள் அணிவகுத்து வருவதாக கூறிக்கொண்டாலும், போராடும் மக்களை அச்சுறுத்தவும், சினமூட்டி பிரச்சனையை தூண்டும் வகையிலுமே அணிவகுப்பை நடத்துகின்றனர்.

இதனிடையே மைக்கேல் ப்ரௌன் படுகொலை, இனவெறி தொடர்பாக விசாரித்த அமெரிக்க நீதித்துறை (Departmant of Justice), மிசௌரி மாகாண காவல் துறையும், நீதித்துறையும் கருப்பின மக்களின் சிவில் உரிமைகளுக்கு எதிராகவும், பாரபட்சமாக நடந்து கொள்வதையும் கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிக்கையின் கணக்கீட்டின் படி அமெரிக்காவில் இந்த ஆண்டு மட்டும் சுமார் 716 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 184 பேர் கருப்பினத்தை சேர்ந்தவர்கள். போலீசாரால் கொல்லப்பட்ட 149 ஆயுதமற்றவர்களில் (நிராயுதபாணிகள்) 56 பேர் கருப்பினத்தை சேர்ந்தவர்கள்.

போலீசுக்கு கட்டற்ற சுதந்திரம் வழங்கி மக்கள் மீது அடக்குறையை கட்டவிழ்த்து விடும் ஜனநாயகத்தின் தேவதூதுவனாக தன்னை பறைசாற்றிக்கொள்ளும் அமெரிக்க அரசின் யோக்கியதை அம்மக்களிடமே அம்பலமாகி வருகிறது.

  • மார்ட்டின்

தமிழகமெங்கும் மோடியின் தொழிலாளி விரோத மசோதா எரிப்பு !

0

1.  ஆவடி

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற
தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்!

ஆவடியில் ஆர்ப்பாட்டம் – மசோதா தீயிடப்பட்டது!

மோடி கும்பல் முன்வைத்துள்ள தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவானது தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற கொடுஞ்செயல் என்பதால் இந்த மசோதாவை செப்டம்பர் 2 அன்றுதீயிட்டுக் கொளுத்துவதென புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அறைகூவல் விடுத்தது.

ஆவடியில் மசோதா தீயிடப்பட்டது!
ஆவடியில் மசோதா தீயிடப்பட்டது!

இதனை அடுத்து திருவள்ளூர் மேற்கு மாவட்டக் குழு சார்பில் ஆவடியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தலைமையில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது. சுமார் 400 தொழிலாளர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் விண்ணதிர முழக்கமிடப்பட்டது.

பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் கண்டன உரையாற்றினார். “தொழிலாளர் நலச்சட்டங்களை ஒழித்துக்கட்டி இந்திய தொழிலாளி வர்க்கத்தை பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்திய தரகு முதலாளிகளின் இலாபவெறிக்கு பலியிடுவதை மட்டும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை; அரசுக் கட்டமைப்பு முழுவதும் தனது பொறுப்பு என்று சொல்லிக்கொண்டதற்கு எதிர்நிலை சக்தியாக மாறி விட்டது” என்று அமபலப்படுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் தலைமையில் சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்த முயன்ற போது அதனை பாய்ந்து தடுத்தது, போலீசு.

இதனை எதிர்பார்த்த தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு-வின் இணைப்புச் சங்கம் செயல்படுகின்ற முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் ஆலை எதிரில் மசோதாவை தீயிட்டுக் கொளுத்தினர்.

முன்னதாக முருகப்பா குழுமத்தின் மற்றொரு ஆலையான டியூப் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் வாயிலிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.

2. ஒசூர்

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்!

சொல்லிவைத்த மாதிரி ஆர்.எஸ்.எஸ்.-பி.ஜே.பி.யின் பரிவாரங்களில் ஒன்றான பி.எம்.எஸ். அகில இந்திய வேலைநிறுத்தத்தில் இருந்து விலகிக் கொண்டது. மோடி அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச கூலியை உயர்த்தப் போவதாக மோடி அரசின் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஒரு வதந்தியைத் திட்டமிட்டே பரப்பியுள்ளனர். இந்த சதித்தனங்கள் எல்லாம் நேர்மையான அரசியல் நோக்கர்கள் எதிர்ப்பார்த்த ஒன்றுதான்.

இவ்வாறு ஐ.என்.டி.யு.சி., பி.எம்.எஸ்.-டன் போலி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் கூட்டணி வைத்து வேலை நிறுத்தம், போராட்டங்களில் பங்கேற்பதும், அவை போராட்டம் தீவிரமாக போகும் போது விலகிக் கொள்வதும் வழக்கமானது. இந்த உண்மை நன்கு தெரிந்துதான், போலி கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் (ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ.) இந்த சங்கங்களுடன் கூட்டணி வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன.

‘தொழிலாளர்களின் உரிமைப் பறிப்பு மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான நில அபகரிப்புச் சட்டம், மோட்டார் சட்டத் திருத்தம் போன்ற அனைத்தையும் எதிர்த்து, ஆளும் வர்க்கத்தின் கோடாரிக் காம்பு போன்ற பி.எம்.எஸ்.-ஐ.என்.டி.யூ.சி.யுடன் சேர்ந்து முறியடிக்க முடியும்’ என கருத்தை உருவாக்குவது, இந்த ஆளும் வர்க்கத்தின் புதிய அடக்குமுறைகளின் பால் தொழிலாளர்களின் கண்ணோட்டத்தை சுருக்கி, நெருக்கி காட்டுவதற்குத்தான் என்பதை நாம் உணரவேண்டும். போராட்ட உணர்வை மழுங்கடிப்பதற்குதான் என்பதையும் உணரவேண்டும். வர்க்க உணர்வை மழுங்கடிப்பதுதான்!

தங்களது முதுகில் குத்திய பி.எம்.எஸ்.-ன் துரோகத்தைக் கண்டித்து, சி.பி.எம்.மின் தீக்கதிர் ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். தனது தலையங்கத்தில் பி.எம்.எஸ்.சின் இந்தத் துரோகத்தை துரோகம் என்று கூட சொல்லாமல், தகவலாக சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

இந்தியத் தொழிலாளர்கள் மீதும் உழைக்கும் மக்கள் மீதும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடுத்துள்ள மோடி அரசுக்கு எதிரான போராட்டத்தில் பி.எம்.எஸ்-ஐ.என்.டி.யூ.சி.யுடன் கூட்டு வைக்கக் காரணம், ஆளும் வர்க்கத்திற்கு எந்த நெருக்கடியும் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையுணர்வுதான். ஆளும் வர்க்கப் பாசம்தான்! இந்த போலி கம்யூனிஸ்டுகள் இந்த அகில இந்திய வேலை நிறுத்தத்தை அறிவித்தன் மூலம், தொழிலாளியின் தோழன் என்று காட்டிக் கொள்ள முயற்சிக்கின்றன. இந்த பச்சையான துரோகத்தை தொழிலாளி வர்க்கம் திரைகிழித்து முன்னேறும்!

இந்த துரோகத்தையும் மோடி அரசின் தொழிலாளர் சட்டத் தொகுப்புத் திருத்தப்படுவதையும் எதிர்த்து அடையாளப் போராட்டங்களின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்திவிடமுடியாது என்பதை உணர்த்தும் வகையிலும் ஒசூர் தொழிற்பேட்டையில் பு.ஜ.தொ.மு. பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம் என்று முழங்கி வருகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஒசூர் நகரில் பு.ஜ.தொ.மு. தலைமையில் தொடர்ச்சியான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

  • லேலாண்டு தொழிற்சாலை முன்பு வாயில் கூட்டம், முழக்கமிட்டு நடத்தினர்.
  • பத்தளப்பள்ளியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து பேருந்து நிறுத்தத்தில் எழுச்சிகரமான தெருமுனைக் கூட்டம் நடத்தினர்.
  • சின்ன எலசகிரி பகுதியில் அனைத்து மக்களுக்கும் உணர்த்தும் வகையில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தினர்.

இந்தப் பிரச்சாரங்களின் மூலம் ஒசூரின் மூலை முடுக்குகளிலெல்லாம் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இவ்வியக்கத்தின் முக்கியத்துவம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், பல ஆலைகள் முன்பாக இந்த வேலை நிறுத்தத்தை தொழிலாளர் அதிகாரத்துக்கான போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டிய அவசியத்தையும் பிழைப்புவாத தொழிற்சங்கங்களின் தலைமையைப் புறக்கணிக்கக் கோரியும் பிரச்சாரம் செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செப்டம்பர் 2-ம் தேதி,

தொழிலுறவு சட்டத் தொகுப்பினை தீயிட்டுக் கொளுத்துவோம்! தீ பரவட்டும்!!

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைக் காவு கொடுக்கின்ற
தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவைத்
தீயிட்டுக் கொளுத்துவோம்!

என்ற முழக்கத்துடன் ஒசூரில் ஊர்வலம், சட்டத் தொகுப்பு நகல் எரிப்பு, ஆர்ப்பாட்டம் நடத்தி பு.ஜ.தொ.மு. தோழர்கள் கைது ஆனார்கள்.

  • ndlf-set-fire-to-modi-labour-law-amendments-hosur-5தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது சட்டத் தொகுப்பு மசோதா!
  • முதலாளிகளது காலை நக்கிப் பிழைக்கின்ற பி.ஜே.பி. – மோடி கும்பலுக்கு பதிலடி கொடுப்போம்!
  • துரோகக் கூட்டணியான பிழைப்புவாத தொழிற்சங்கங்களது தலைமையை விரட்டியடிப்போம்!
  • செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டமாக முன்னெடுப்போம்!
ஒசூர் பு.ஜ.தொ.மு ஊர்வலம்
ஊர்வலத்திற்கு பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமை தாங்கினார்

ஆகிய முழக்கங்களை முன்வைத்து பு.ஜ.தொ.மு. தலைமையில் செப்டம்பர் 2 காலை 10 மணியளவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தோழர்கள் பாகலூர் சாலையில் உள்ள சங்கீத் ஆடிடோரியம் அருகில் இருந்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலத்திற்கு பு.ஜ.தொ.மு.வின் மாநில துணைத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமை தாங்கினார். ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி அலுவலகம் முன்பாக வந்த போது போலீசு தோழர்களைக் கைது செய்ய முயற்சித்தது. அப்போது தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவைத் தீயிட்டுக் கொளுத்துவோம் என்று முழக்கமிட்டபடியே சட்டத் தொகுப்பு படிவங்களைத் தீயிட்டுக் கொளுத்தினர். போலீசு தோழர்களைக் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

***

இந்த வேலை நிறுத்தத்தை “அடையாளப் போராட்டமாக” முடக்க விரும்பிய பிழைப்புவாதத் தொழிற்சங்கங்கள் ஒசூரில் மூன்று இடங்களில் ‘போராட்ட’த்தை நடத்தின.

ராம் நகரில் TVS-ன் வளப்புப் பிராணியான INTUC தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஊறுகாய் போல ஒத்துழைப்புக்கு சி.ஐ.டி.யூ. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அணிதிரட்டப்பட்ட பல தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ 15,000 வாங்கித்தருவதற்காக கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வந்ததாக சில தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அடுத்து, இரயில் நிலையம் முன்பாக “இரயில் மறியல்” என்ற அடையாளப் போராட்டத்திற்காக AITUC சங்கத்தினர், தளி எம்.எல்.ஏ.வின் ஆட்கள் காலை 10 மணி முதல் காத்திருந்தனர். இவர்கள் காத்திருந்தது இரயிலுக்காக மட்டுமல்ல, மேக்கப் மன்னன் தளி இராமச்சந்திரனுக்காக. இரயில் வரும் நேரமறிந்தவுடன் ராமச்சந்திரனும் வந்தார். ‘இரண்டையும்’ சந்திக்கவிடாமல் அதாவது இரயிலை மறிக்கவிடாமல் போலீசு “தடுத்ததால்” கைது செய்யப்பட்டார்.

இவ்விரண்டு கோஷ்டிகளிடமும் ஒட்டமுடியாத சி.பி.எம். தனித்து விடப்பட்டதால் அவர்கள் காந்தி சிலை அருகில் அனாதையாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.

இந்த அடையாளப் போராட்டங்களுக்கு கூட அடி அறுத்துவிட்டது பி.எம்.எஸ். இந்த அசிங்கத்தின் அடையாளம் கூட தெரியாத படி, எல்லா சுவரொட்டிகளிலும் பி.எம்.எஸ். பெயர் இடம்பெற்றுள்ளது. அதாவது, பி.எம்.எஸ்.-ன் துரோகத்தை துரோகம் என்று ஏன் இவர்களால் கருத முடியடிவில்லை. காரணம், இவர்கள் தொழிலாளர்களை ஏமாற்றுகின்ற வகையில் அடையாளத்திற்கு போராட்டம் செய்வதால்தான்!

பி.எம்.எஸ் துரோகம்
இந்த அசிங்கத்தின் அடையாளம் கூட தெரியாத படி, எல்லா சுவரொட்டிகளிலும் பி.எம்.எஸ். பெயர் இடம்பெற்றுள்ளது.

கார்ப்பரேட் முதலாளிகளின் அடியாளான மோடி அரசினால் தொழிலாளர் வர்க்கத்தின் மீது தொகுக்கப்பட்டுவரும் பெரும் தாக்குதலை எதிர்த்து முறியடிக்க வேண்டியது இன்று அவசிய அவசரக் கடமையாக உள்ளது. அவ்வாறு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை எனில் தொழிலாளர்கள் இந்த அரசுக்கு எதிரான தீர்மானகரமான போராட்டத்தில் இறங்கிவிடுவர் என்று அஞ்சுகின்றன ஆளும் வர்க்கங்கள்! இந்த போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் கடமையை போலி கம்யூனிஸ்டுகள் தலைமையிலான AITUC, CITU, FITU போன்ற தொழிற்சங்கங்கள் செய்து வருகின்றன. இதன் மூலம் தொழிலாளி வர்க்கம், வர்க்க உணர்வு பெற்றுவிடாமல் தடுத்துவிடலாம் என்று பகல்கனவு காண்கின்றன.

உண்மையில், அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்கள் மோடி அரசின் தாக்குதலை பொருளாதார ரீதியான தாக்குதலாக மட்டுமே சுருக்கிப் புரிந்து வைத்துள்ளனர். அமைப்பு சாரா பல கோடி தொழிலாளர்களுக்கு மோடி அரசின் தாக்குதல் பற்றி எதுவும் தெரியாது. தங்களுக்கு இன்னின்ன உரிமைகள் இருக்கின்றன என்று கூடத் தெரியாது. இந்தச் சூழலில், தொழிலாளர்களுக்கு மோடி அரசின் அடக்குமுறைகளின் பரிமாணத்தை உணர்த்தி, அவர்களை அணிதிரட்டும் கடுமையான பணி தொழிலாளி வர்க்கத்தின் முன்னே காத்துக் கிடக்கிறது. இந்தச் சூழலில் அடையாளப் போராட்டங்கள் மூலம் தொழிலாளர் உணர்வை மழுங்கடிக்க செய்யும் பிழைப்புவாத சங்கங்களின் துரோகத்தை அம்பலப்படுத்துவதும் அவசியமான பணியாக உள்ளது.

இந்தத் துரோகத்தை திரைகிழித்து தொழிலாளர் வர்க்கத்தை அணி திரட்டுவது மட்டுமல்ல, கார்ப்பரேட் முதலாளிகளின் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க தொழிலாளர் வர்க்க அதிகாரத்தை ஒவ்வொரு ஆலையிலும் ஒவ்வொரு தொழிற் பேட்டியிலும் நிலைநாட்டாமல் பு.ஜ.தொ.மு. ஓயப்போவதில்லை! இந்திய கார்ப்பரேட் முதலாளிகளும் அதன் அடிவருடிகளும் அந்த நாளுக்காக காத்திருக்கட்டும்!

தகவல்,

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஒசூர்.

3. கோத்தகரி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி மார்க்கெட் ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு சட்டத் தொகுப்பு நகல் தீயிட்டு எரிக்கப்பட்டது.

காலை 11.00 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் – நகலெரிப்பு போராட்டத்திற்கு சங்க உறுப்பினர்கள், வாகனப்பிரிவு தோழர்கள் திரளாக கலந்துக் கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர் சுப்பிரமணி (வாகனப்பிரிவு தலைவர்) முன்னிலை வகிக்க பொருளாளர் தோழர்.விஜயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மத்திய பி.ஜே.பி. மோடி அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்தும், தொழிலாளி வர்க்க உணர்வின் எழுச்சியாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டச் செயலர் தோழர் பாலன் கண்டன உரையாற்றினார்.

அவரது உரையில் “தொழிலாளர்களுக்கு எதிராக காங்கிரஸ்-பி.ஜே.பி. உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் முதலாளிக்கு வாலாட்டுகின்றன. ஓட்டுக்கட்சிகளின் தொழிற்சங்கங்களின் தொழிலாளி வர்க்கத்திற்கு துரோகமிழைக்கின்றன. எனவே அவற்றை புறக்கணித்து புரட்சிகர சங்கங்களில் அணிதிரள வேண்டும்” என்றார்.

மக்கள் அதிகாரம் சார்பாக தோழர் ஆனந்தராஜ் ஆற்றிய உரையில், “போராடுகின்ற தொழிலாளர்களையும் மதுவுக்கு எதிராக போராடும் மாணவர்களையும் போலீசை வைத்து ஒடுக்கும் அரசு மக்களுக்கு எதிரானது. அதனை முறியடிக்க மக்கள் தாங்களே அதிகாரத்தை எடுக்க வேண்டும்” என்று அறைகூவினார்.

இறுதியில் தோழர் ராஜா நன்றியுரையாற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல் –
பாலன்,
நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்,
கோத்தகிரி

4. புதுச்சேரி

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைக் காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம்! – புதுச்சேரியில் மறியல்

labour-law-bill-ndlf-protest-puduvai-01

தொழிலாளர்களே,

  • தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கிறது சட்டத் தொகுப்பு மசோதா!
  • முதலாளிகளது காலை நக்கிப் பிழைக்கின்ற பிஜேபி – மோடி கும்பலுக்கு பதிலடி கொடுப்போம்!
  • துரோகக் கூட்டணியான பிழைப்புவாத தொழிற்சங்கங்களது தலைமையை விரட்டியடிப்போம்!
  • செப் – 2 வேலை நிறுத்தத்தை தொழிலாளி வர்க்கத்தின் அதிகாரத்துக்கான போராட்டமாக முன்னெடுப்போம்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து செப்டம்பர் – 2 அன்று காலை 10.00 மணிக்கு புதுச்சேரி நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள இந்திராகாந்தி சிக்னலில் தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

ஏற்கனவே பகுதியில் உள்ள போலி சங்கங்களான சி.பி.ஐ, சி.பி.எம், சி.பி.ஐ (எம்.எல்) உடன் வி.சி.க தொழிற்சங்கமும் இணைந்து நாம் தேர்வு செய்திருந்த இடத்தையும் உள்ளிட்டு நகரின் முக்கியமான 11 இடங்களில் கூட்டாக மறியல் செய்வதாக அறிவித்து இருந்தன. எனவே, நேரடி நிலைமைகளை அவதானித்து அவர்களது மறியலுக்கு முன்னரோ பின்னரோ நாம் போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. அவர்கள் மொத்தமே 50 பேருடன் அப்போராட்டத்தை அரைமணி நேரத்திற்குள்ளாகவே நடத்தி முடித்து கைதாயினர்.

புதுச்சேரி பு.ஜ.தொ.மு சட்டத் தொகுப்பு மசோதா தீவைப்பு
தொழிலாளர்களின் உரிமையைக் காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

அவர்களின் கைதுக்குப் பின் நமது போராட்டம் 10.45 க்குத் தொடங்கியது. போராட்ட இடமான இந்திராகாந்தி சிக்னலில் நாலாபுறங்களில் இருந்து தோழர்கள் குவிந்து சிக்னலில் விண்ணதிரும் முழக்கங்களுடன் தொழிலாளர்களின் உரிமையைக் காவு கொடுக்கின்ற தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. தொடர்ந்து அரைமணி நேரத்திற்கும் மேலாக முழக்கங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது.

போலிசோ கைது செய்யும் முடிவில் கூட இல்லை. “நீங்கள் இப்படியே கூட கலைந்து செல்லலாம்” என பேசிப் பார்த்தனர்.

“நாங்கள் எங்களது உரிமையை நிலைநாட்ட வந்துள்ளோம். கைதுக்கு அஞ்சவில்லை, தயாராக இருக்கிறோம்” என்று சொன்னவுடன் கைது செய்தது போலிசு.

கைது செய்து நம்மைக் கொண்டு சென்ற இடத்திலும் சாலையில், நமது முழக்கங்கள் தொடர்ந்த வண்ணம் இருந்தது. ஏற்கனவே நமக்கு முன்னால் மறியல் நடத்திய வி.சி.க மற்றும் போலி கம்யூனிஸ்டு சங்கங்களை அங்கே கொண்டு வந்திருந்தது. போலிசின் வழக்கமான நடைமுறைகளுக்குப் பின் வெளியில் வந்த போலி கம்யூனிஸ்டு சங்க தலைவர்கள் நின்று நமது முழக்கத்தின் வீச்சைக் கண்டு ஒதுங்கி நின்றனர். சி.பி.ஐ(எம்.எல்)-ன் சோ.பாலசுப்ரமணியன் அவர்கள் மட்டும், “காம்ரேட், உங்களது ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்று கை கொடுத்து சென்றார். அவர்கள் 11 இடங்களில் நடத்திய மறியலின் ஒட்டுமொத்த அணிதிரட்டலை விட நமது தோழர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது என்பதில் இருந்தே போலி கம்யூனிஸ்டுகளுக்கு தொழிலாளர்கள் மத்தியில் உள்ள ‘செல்வாக்கை’ புரிந்து கொள்ள முடிந்தது.

கைதாகி தோழர்கள் அடைக்கப்பட்ட இடத்தில், “நமது சங்கத்தை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அழைத்துப் பேசியதில் நாம் உணர வேண்டியது என்ன? அப்துல் கலாம் மரணம், உண்மையில் நாட்டுக்கு இழப்பா?” என்பதை விளக்கும் வகையில் உரை நிகழ்த்தப்பட்டது. தோழர்கள் உணர்வுபூர்வமாக கேட்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செப்டம்பர் – 2 அகில இந்திய வேலை நிறுத்தத்தை ஓட்டுக் கட்சி சங்கங்கள் அடையாளப் போராட்டமாக நடத்திய வேளையில், ஒட்டு மொத்த தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைக் காவு கொடுக்கின்ற சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவது மட்டுமல்லாது, இந்த ஒட்டு மொத்த அரசுக் கட்டமைப்பும் உழைக்கும் மக்களுக்கான தனது கடமைகளை ஆற்ற முடியாமல் தோற்றுப் போய், மக்களுக்கு எதிராக செயல்படுகின்றது. மொத்தத்தில் அரசுக் கட்டமைப்பு ஆளும் தகுதியிழந்து போய்விட்டது. உரிமைக்காகப் போராடிய காலம் இன்று இல்லை. மாறாக, அதிகாரத்தைக் கையிலெடுக்கும் வகையில் போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதற்கான அறைகூவலாய் அமைந்தது இந்தப் போராட்டம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்:

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.
தொடர்புக்கு: தோழர். பழனிசாமி. 9597789801.

5. சிறீபெரும்புதூர்

தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை காவு கொடுக்கின்ற, தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதாவை தீயிட்டுக் கொளுத்துவோம் என்ற தலைப்பில் செப்டம்பர் – 02, திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்காக பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை இரவோடு இரவாக போலீசு கிழித்தது.

இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன் காலை 6 மணி முதல் 8 மணி வரை தொழிலாளர்கள் மத்தியில் பிரசுரம் வினியோகித்தோம். ஆர்ப்பாட்ட இடத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர் திரு. பாலு, “ஆர்ப்பாட்டம் சரியாக 9 மணிக்குள் முடிக்க வேண்டும்” என திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்.

மேலும் ஆர்ப்பாட்டத்திற்கான பேனரை விரிக்க முற்பட்டபோது, அதில் “தீயிட்டுக் கொளுத்துவோம்” என்ற வாசகம் வன்முறை தூண்டுகிற விதமாக இருக்கிறது என கூறி பேனரை வைக்கக்கூடாது எனவும், அவ்வாறு பேனரை வைப்பது என்றால் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு என வாய்மொழியாக கூறி, ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்வதற்கான வேலையில் ஈடுபட்டார்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய மாவட்டச் செயலாளர் தோழர் சிவா, “ஒரு சாதாரண ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு ஆயிரத்து எட்டு விதிகளை போடுகிறது. தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை அழிக்கின்ற முதலாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் தொழிலாளிகள் எடுக்க கூடாது என்பதை, அவர்களின் அடியாள் படையான போலீசு ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணித்து வருகிறது.” என்றார்.

அடுத்து கண்டன உரையாற்றிய மாநிலத் தலைவர் தோழர் அ.முகுந்தன், “இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு முன்னே நாம் எப்படி நடத்த வேண்டும் என்று போலீசு தீர்மானிக்கிறது. இந்த ஜனநாயகத்தின் யோக்கியதை என்ன என்பதை அவர்களுடைய செயலின் மூலம் உணர்ந்தினார்கள். மேலும் நாங்கள் முதலாளிகளின் அடியாள்தான் என்பதை நிரூபித்து காட்டினார்கள். தொழிலுறவு சட்டத் தொகுப்பு மசோதா கொண்டு வந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்” என்பதை சுருக்கமாக பேசினார்.

ஆர்ப்பாட்டத்தை அங்கங்கே நின்று கவனித்த தொழிலாளர்களை போலீசு விரட்ட முயன்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாகன ஒட்டுநர் சங்கம் மற்றும் வேலூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேரந்த கிளைச் சங்க தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் குழைந்தைகள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம், தொடர்புக்கு 88075 32859

6. கும்மிடிப்பூண்டியில் மோடி மசோதா எரிப்பு – படங்கள்

பள்ளித் தலமனைத்தும் ‘பார்’ செய்குவோம் !

2

மிழக மக்கள் நலன் மீது மயிரளவும் அக்கறை இல்லாத, வக்கிரமான மனோநிலையைக் கொண்டதுதான் பாசிசத் திமிர் பிடித்த ஜெ.கும்பல் என்பதை நிரூபித்துக் காட்டுவதற்கு இரு நிகழ்வுகள் சாட்சியமாக அமைந்துள்ளன.

பள்ளிக்கூடம் என்றால் அரசுக்கு செலவு, அதனால் அரசுப் பள்ளிகளை மூடு! டாஸ்மாக் என்றால் அரசுக்கு வருமானம், எனவே டாஸ்மாக் கடைகளை தெருவெங்கும் திற! – என்பதுதான் ஜெ.கும்பலின் கொள்கையாக இருக்கிறது. இதன்படி, மாணவர் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி தமிழகமெங்கும் 1200 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மூட ஜெ. அரசு திட்டமிட்டுள்ளது. அப்பள்ளிகளில் படித்துவரும் ஏழை மாணவர்களின் கதி இனி என்னவாகும் என்று தெரியவில்லை.

12-schools-to-wine-shopதனியார் பள்ளிகளில் மட்டுமே தரமான கல்வி கிடைக்கும், ஆங்கிலம் படித்தால் மட்டுமே அறிவாளியாக முடியும் என்ற தவறான நம்பிக்கையை தனியார் கல்வி வியாபாரிகள் ஏற்படுத்தியிருப்பதும், அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததும்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவுக்குக் காரணம். இதைச் சீரமைக்க வக்கற்ற ஜெ. அரசு, மறுபுறம் பார்ப்பன வெறியோடு அரசுப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை திட்டமிட்டே ஒழித்து, ஆங்கிலவழிக் கல்வியைத் திணித்து வருகிறது.

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையையும் அடாவடித்தனத்தையும் தமது சொந்த அனுபவத்தின் வாயிலாக உணரத் தொடங்கியுள்ள மக்கள், படிப்படியாக அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். தனியார் பள்ளிகள் மீதான மோகம் மக்களிடம் குறைந்து வரும் இந்த நேரத்தில்தான் அரசுப் பள்ளிகளை வக்கிரமாக மூடச் சொல்கிறது ஜெ.கும்பல்.

1200 அரசுப் பள்ளிகளை இழுத்து மூடச் சொல்லும் ஜெ. அரசு, மறுபுறம் தமிழகத்திலுள்ள 6,800 டாஸ்மாக் கடைகள் போதாதென்று, சென்னை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் மாவட்டத் தலைநகரங்களிலும் எலைட் (உயர்தர) சாராயக் கடைகளைத் திறந்துள்ளது. வருவாய் போதவில்லை என்று இப்போது தமிழகத்தின் 226 வட்டங்களிலும் தலா இரண்டு கடைகள் வீதம் 552 எலைட் சாராயக் கடைகளை ஜூலை 30-ம் தேதிக்குள் திறக்க அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. மேட்டுக்குடியினர் தயக்கமின்றி வாங்கிச் செல்வதற்கு வசதியாக ஷாப்பிங் மால்களிலும் சாராயத்தை விற்பனை செய ஏற்பாடு செய்துள்ளது. இந்தியாவிலேயே சாராயத்தின் மூலம் அதிக வருவா ஈட்டும் அரசாக முன்னணியில் நிற்கும் ஜெ. அரசு, குடிகெடுக்கும் டாஸ்மாக் மூலம் அரசுக்குக் கிடைக்கும் ரூ 30,000 கோடி வருவாயை 32 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு தீர்மானித்து, மாவட்ட ஆட்சியர்களே இவற்றை நேரடியாகக் கண்காணித்து செயல்படுத்த வேண்டுமென்று கெடுபிடி செய்கிறது.

டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் பெருகிவரும் நிலையில், ஓட்டுக்கட்சிகளே மதுவிலக்கைச் செயல்படுத்தக் கோரிவரும் சூழலில்தான் தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜெ. அரசு திமிராக சாராயக் கடைகளைத் திறந்து கொண்டிருக்கிறது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் பள்ளிகள், கோயில்கள் அருகேயுள்ள சாராயக் கடையை அகற்ற வேண்டுமென உயர் நீதிமன்றம் ஆணையிட்ட பின்னரும், கல்நெஞ்சம் கொண்ட ஜெ. அரசு அக்கடையை மூடாததைக் கண்டித்து செல்பேசி கோபுரத்தின் மீதேறி போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் கடந்த ஜூலை 31 அன்று போராட்டக் களத்திலேயே உயிரிழந்துள்ளார்.

ஏழை மாணவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறித்து, 1200 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு தெருவெங்கும் சாராயக் கடைகளைத் திறந்து வைக்கும் வக்கிரம் பிடித்த ஜெ. கும்பலின் பாசிச ஆட்சியை இன்னமும் சகித்துக் கொண்டிருக்கத்தான் முடியுமா?
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________

மறுகாலனியாக்கத்திற்காக மாற்றப்படும் அரசுக் கட்டமைப்பு

0

அரசு: அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 4

மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும் அரசுக் கட்டமைப்பு

னியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாத கட்டுமானச் சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து – சரியாகச் சொன்னால் மேல்நிலை வல்லரசுகளின் உலக மேலாதிக்கத்திற்கான, சர்வதேசியமயமாகி பிரம்மாண்டமாகப் பெருகிவிட்ட நிதிமூலதனம் மற்றும் தேசங்கடந்த தொழில் கழகங்கள் மற்றும் அவர்களின் அடிவருடிகளான இந்தியப் பெருமுதலாளிகளான தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் ஆகியோரின் தடையற்ற சுரண்டலுக்கான, நமது பணம், நமது உழைப்புச் சக்தி, அரசு சொத்துக்கள், நாட்டின் இயற்கை வளங்கள் ஆகியவற்றை பகற்கொள்ளையடிப்பதற்கான இந்த மறுகாலனியாதிக்க கொள்கைகளும் திட்டங்களும் புகுத்தப்பட்ட 1991-ம் ஆண்டிலிருந்து – கடந்த இருபது ஆண்டுகளில், இவற்றின் இந்த நோக்கங்களுக்கு அடிபணிந்து அப்படியே நிறைவேற்றும் வகையில் அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் ஆகியவைகளின் பாத்திரம், கட்டமைப்பு, செயல்படும் முறைகள் ஆகியவையெல்லாம் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன.

மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் புகுத்தப்படுவதற்கு முன்பு, அன்னிய மூலதனத்தின் மீதான தேசிய அரசுகளின் அதிகாரம் கேள்விக்கிடமற்றது என்றும், இந்த அதிகாரம் தேசிய இறையாண்மையின் பிரிக்கவொண்ணாத அங்கம் என்றும் சொல்லப்பட்டது. நடைமுறையில் இது முழு அளவில் இல்லை; நவீன காலனிய கொள்கைகளுக்கு ஏற்ப அரைகுறையாகவே இருந்தது. இந்த அதிகாரத்தின் அடிப்படையில்தான் ஏகாதிபத்திய நிறுவனங்களின் சொத்துடைமைகளை முன்பு இந்திய அரசு நாட்டுடைமை ஆக்கியது. ஏகாதிபத்திய தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு தொழில்களை அழிக்கின்ற வகையிலான முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், உள்நாட்டு அரசியலில் தலையிடுவதையும் தடுக்க தனிச் சிறப்பான சட்டங்களை இயற்றியது. (அன்னியச் செலாவணியை நெறிப்படுத்தும் சட்டம், ஏகபோக கட்டுப்பாடு வர்த்தக நடவடிக்கைகள் சட்டம் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டுகள்)

ஆனால், இன்று மறுகாலனியாதிக்க கொள்கைகள் புகுத்தப்பட்டதிலிருந்து அதன் தேவைக்கேற்ப அரசின் கட்டுமானமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. நிதி தாராளமயமாக்கல் மற்றும் மூலதனக் கணக்கு தாராளமயமாக்கல் என்ற ‘சீர்திருத்தங்கள்’ மூலம் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைக்கு மட்டும் சேவை செய்யும் பணிப்பெண்ணாக அரசின் பாத்திரமும் சட்டதிட்டங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசங் கடந்த தொழிற்கழகங்கள் எப்படியெல்லாம் விரும்புகிறார்களோ அப்படியெல்லாம் நமது நாட்டின் இயற்கை வளங்களையும், அரசு சொத்துக்களையும் மக்களின் உழைப்புச் சக்தியையும், பொதுத்துறையையும் பகற்கொள்ளையடிப்பதற்கான கருவியாக, ஆயுதமாக அரசின் கட்டுமானமும் சட்டதிட்டங்களும் மாற்றப்பட்டு வருகின்றன. அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலகமேலாதிக்கத்திற்கு அடியாளாகச் செயல்படும் வகையில் இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும் இராணுவத்தின் பாத்திரமும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

எனவே, நாம் வழக்கமாகச் சொல்லும் முதலாளித்துவ போலி ஜனநாயக வகைப்பட்ட அரசு, அரசியல் கட்சிகள், தேர்தல் முறைகள் ஆகியவற்றின் பாத்திரம், கட்டமைப்பு, செயல்பாடுகள் எல்லாம் மறுகாலனியாதிக்க காலகட்டத்தில் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. தேசிய அரசுகள், தேசிய இறையாண்மை கொண்ட அரசுகள் என்பவையெல்லாம் தகர்க்கப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சியை அமல்படுத்தும் கருவியாகவே இந்திய அரசு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

காலனியாதிக்க எதிர்ப்புக் கட்டத்தின் மிச்சசொச்சங்களாகவும், வளர்முக நாடான இந்தியாவின் அரைகுறை இறையாண்மையானது சர்வதேச நிதி மூலதனத்திற்கு அன்று உருவாக்கி வைத்திருந்த தடைக்கற்களாகவும் இருந்த விதிமுறைகள், சட்டங்கள் ஆகியவை தகர்க்கப்பட்டு, அந்த இடத்தில் புதிய விதிமுறைகள் – சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. உலக மேலாதிக்க அரசாக உருவாக்கப்பட்டிருக்கும் உலக வர்த்தகக் கழகத்தின் கைப்பாவையாக, இந்திய அரசின் கட்டமைப்பு மாற்றப்பட்டு வருகின்றது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் பெரும்பான்மை மக்களின் அரசியல் கோரிக்கைகள் மற்றும் பொருளாதாரத் தேவைகள் தொடர்பான சட்டங்களை இயற்றவோ திட்டங்களைத் தீட்டவோ இல்லாமல், சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைக்கு ஆடுவதாகவே அரசு மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது.

பழைய உள்ளடக்கத்தையும்கூட இழந்துவரும் போலி ஜனநாயகம்!

தேர்தல் அறிக்கை சடங்கு
2014 நாடாளுமன்றத் தேர்தலையொட்டித் தமது தேர்தல் அறிக்கையை வெளியிடும் பா.ஜ.க. : சம்பிரதாயச் சடங்கு

மறுகாலனியாதிக்கத்தின் விளைவாக, இறையாண்மையை முற்றிலுமாக இழந்து வருகின்ற இந்தியாவில், பழைய முறையிலான முதலாளித்துவ போலி ஜனநாயகமே கூடத் தனது உள்ளடக்கத்தை முற்றிலுமாக இழந்து வருகின்றது. அனைத்து மக்களுக்கும் வாக்குரிமை என்பது மட்டுமே ஜனநாயகத்திற்கான அளவுகோலாக மாற்றப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்கள் வழியே தனியார்மயம், தாராளமயக் கொள்கைகளை நிறைவேற்றிக்கொள்ள சட்டபூர்வமாக நியாயம் தேடிக் கொள்ளவே ஆளும் வர்க்கங்கள் தேர்தல்களை இன்று நடத்துகின்றன.

முதலாளித்துவ போலி ஜனநாயகத்தின் வர்க்க சாராம்சம் – வர்க்க உள்ளடக்கம் மாறாமல் இருக்கும்போதே (அதில் கூட தேசங்கடந்த தொழில்கழக முதலாளிகள் மற்றும் சர்வதேச நிதிமூலதனக் கும்பல்கள் மற்றும் அவர்களின் இளைய பங்காளிகளாக உள்ள தேசங்கடந்த தரகு அதிகார வர்க்க முதலாளிகளின் பலம் அதிகமாக உள்ளதுடன் அவர்கள் ஆதிக்கத்திலும் உள்ளனர். நிலப்பிரபுக்களின் எண்ணிக்கையும் பலமும் பங்கும் மிகக் குறைந்ததாகவே மாறிவிட்டது) அரசு எந்திரம், அரசாங்கம், அரசியல் கட்சிகள் ஆகியவைகளின் கட்டுமானம், பாத்திரம், பணிகள், சட்டதிட்டங்கள் எல்லாம் மாற்றப்பட்டு அதற்கேற்ப ‘ஜனநாயக தேர்தலின்’ நோக்கமும் அதில் மக்களின் பாத்திரமும் வெட்டிச் சுருக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளன.

எனவே, எந்தக் கட்சி அல்லது கூட்டணி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசை மறுகாலனிய சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும்தான் பயன்படுத்த முடியும். வேறு எந்த வகையிலும் பயன்படுத்த முடியாத வகையிலும், அத்தகைய தன்மையிலும்தான் கட்டப்பட்டிருக்கின்றது. மறுகாலனியாதிக்கம் என்ற சட்டகத்திற்குள் நின்று கொண்டு சில சீர்திருத்தங்கள் செய்யலாம்; மக்களுக்குச் சில சலுகைகள், மானியங்கள், இலவசங்கள் வழங்கலாம்; முற்றாக, எதிரான கொள்கைகளை அமல்படுத்த முடியாது; அமல்படுத்த முயற்சிப்போர் தூக்கியெறியப்படுவார்கள்.

நாடாளுமன்ற ஜனநாயகம் என்ற வேலிக்கு வெளியே நிற்கின்ற நக்சல்பாரி புரட்சியாளர்களால் மட்டும்தான், இந்த அரசு எந்திரத்தை தகர்த்தெறிந்து, மறுகாலனியாதிக்கத்தை தூக்கியெறிந்து நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் உண்மையாக சேவை செய்கிற ஒரு புதிய அரசமைப்பை, புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க முடியும். ஆகையால், வாக்களிக்கும் உரிமை என்பது ஆக மிகக் கொடூரமான மறுகாலனியாதிக்க வடிவிலான ஆதிக்கத்தையும் சுரண்டலையும் மக்கள் மீது திணித்து அமல்நடத்த, எந்தக் கட்சி அல்லது கூட்டணிக்கு அதிகாரம் கொடுக்கலாம் என்பதைத் தீர்மானிப்பதற்கான உரிமை மட்டுமே.

தேர்தல் அரசியல் என்பது காந்தியம், சோசலிசம், தாராளவாதம், சமூகநீதி என்று வெவ்வேறு கொள்கை பேசும் கட்சிகளுக்கிடையிலான மோதலாக இனிமேலும் இல்லாமல் போய்விட்டதால், சில நட்சத்திர தலைவர்களுக்கிடையிலான போட்டியாகவும், கட்சிகளுக்கிடையிலான விளம்பரப் போராகவும், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற நட்சத்திரங்களால் விளம்பரப்படுத்தப்படும் சந்தைப் பொருளாகவும் விலைக்கு வாங்கப்படும் பண்டமாகவும் ஓட்டுச்சீட்டு அரசியல் மாற்றப்பட்டு விட்டது.

மறுகாலனியாக்கத்துக்கு நியாயம் தேட மட்டுமே தேர்தல்!

கே.வி காமத், முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, நரேந்திர மோடி
ஓட்டுக்கட்சித் தலைமை மக்களின் பிரதிநிதிகளாக இல்லாமல், கார்ப்பரேட் முதலாளிகளின் ஏஜெண்டாக மாறிப் போனது. கே.வி காமத், முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா ஆகியோருடன் நரேந்திர மோடி. (கோப்புப் படம்)

இன்று எல்லா முதலாளித்துவ அரசியல் கட்சிகளும், சீர்திருத்தவாத, போலி கம்யூனிச, போலி புரட்சிகர கட்சிகள் அனைத்தும் நேரடியாகவோ, சுற்றி வளைத்தோ மறுகாலனியாக்கத்திற்குச் சேவை செய்கின்ற கட்சிகளாகவே மாறிவிட்டன; கொள்கைகள், இலட்சியங்கள், நோக்கங்கள் என்று எதுவும் இக்கட்சிகளுக்கு கிடையாது. கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கு அடியாளாக வேலை செய்யும் எஸ் பாஸ்” ஆட்களாக மாறிவிட்டன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இன்னின்ன கொள்கைகள்,வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துவோம்; இவ்வாறு வேலையின்மையைப் போக்குவோம்; விலைவாசியைக் குறைக்க இன்னின்ன நடவடிக்கைகள் எடுப்போம் என்று நாட்டுநலன், மக்கள் நலனை முன்னிறுத்துகின்ற கொள்கைகளோ, வளர்ச்சித் திட்டங்களோ, பொருளாதாரத் திட்டங்களோ எதுவும் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இல்லை; தப்பித் தவறி சிலவற்றை அவர்கள் குறிப்பிட்டாலும், அதெல்லாம் ‘வாக்காளர்களைக் கவர வேண்டும், மற்றபடி செய்யப் போவதில்லை’ என்று முடிவெடுத்துக் கொண்டுதான் குறிப்பிடுகிறார்கள்.

பெல்லாரி இரும்புச் சுரங்க வயல்
இயற்கை வளக் கொள்ளைக்கு எடுப்பான உதாரணமாக விளங்கும் பெல்லாரி இரும்புச் சுரங்க வயல் (கோப்புப் படம்)

“சும்மா ஒரு சம்பிரதாயத்திற்குத்தான் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறோம்; யார் இதைப் படித்து நினைவில் வைத்துக் கொண்டு கேட்கப் போகிறார்கள். அப்படியே கேட்டாலும் சமயத்திற்கு தகுந்த ஒரு சாமர்த்தியமான பதிலைச் சொல்லிக் கொள்ளலாம்” என்று உள்மனதில் கருதிக் கொண்டுதான் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். ஒரே கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வேறுபட்ட இலவசங்கள், முரண்பட்ட வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கைகள் இதைத்தான் காட்டுகின்றன. மேலும், “எப்படி மாற்றி பித்தலாட்டம் செய்தாலும் ஒன்றும் ஆகிவிடாது; நமக்கு ஓட்டு கிடைக்கும், அந்த அளவுக்கு மக்கள் இளிச்சவாயர்கள், ஏமாளிகள்” என்று மக்களை மிகவும் மலிவாக, இழிவாக, அற்பர்களாகவே இவர்கள் கருதுகிறார்கள்.

நமது வரிப்பணம், அரசு சொத்துகள், நாட்டின் இயற்கை வளங்கள், பொதுத்துறைகள், மக்களின் உழைப்பாற்றல் ஆகியவற்றை கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்கவும் இவர்களின் இலாப வேட்டைக்காக விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள், குட்டி முதலாளிகள், ஆதிவாசிகள் ஆகியவர்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பலாத்காரமாகப் பறித்துக் கொண்டு, அவர்களை நகர்ப்புற உழைப்புச் சந்தைகளை நோக்கி விசிறியடிப்பதிலும், அங்கு இந்த கார்ப்பரேட் முதலாளிகள் அவர்களைக் கொடூரமாகச் சுரண்டிக் கொள்ளை இலாபமடிக்கவும் கொள்கை முடிவெடுத்து, சட்டபூர்வமாக அரசு எந்திரத்தை ஒரு கருவியாக பயன்படுத்திச் சேவை செய்யும் கொள்கையில் மட்டும் எல்லாக் கட்சிகளும் ஓரணியில் நிற்கின்றனர். கார்ப்பரேட் முதலாளிகள்தான் ஊழலுக்கான ஊற்றுக்கண் என்ற உண்மையையும் ஊழலைவிட பகற்கொள்ளையில் இவர்கள் அடிக்கும் பணம் பன்மடங்கு அதிகம் என்ற உண்மையையும் வெளியில் சொல்லாதிருப்பதிலும் இவர்கள் ஓரணியில் இருக்கின்றனர். இந்தச் சேவையை யார் சிறப்பாக செய்வது என்று போட்டி போட்டுக் கொள்கின்றனர்.

கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்க சேவை செய்து, அதற்கு சேவைக் கட்டணமாக (அதாவது இலஞ்சமாக) ஒரு கவளத்தை (யானைக்கு கவளம் கவளமாக, அதாவது பெரிய பெரிய உருண்டையாகத்தான் உணவளிப்பார்கள். அதில் ஒரு கவளத்தை எடுத்துப் போட்டால் பல்லாயிரக்கணக்கான எறும்புகளுக்கு தீனியாகும் என்பார்கள்) தாங்கள் எடுத்துக் கொண்டு கொழுக்கலாம் என்பதற்காக மட்டுமே தேர்தலில் நிற்கிறார்கள்; இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தில் கார்ப்பரேட் யானைகளின் வயிற்றுக்குள் போன பல கவளங்கள் போக ஒரு கவளத்தைத்தான் கருணாநிதி, ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா, சோனியா குடும்பத்தினர் ஆகியோர் பங்கிட்டுக் கொண்டனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான போட்டி காரணமாகவோ, கட்சித் தலைவர்களின் குடும்ப சண்டை, கோஷ்டி சண்டை காரணமாகவோ இந்த இலஞ்சம் அம்பலமானால், அதைப் பயன்படுத்தி, வாய்ப்பிழந்த எதிர்கட்சி கூப்பாடு போடுவதும், பின்னர் இந்த இலஞ்சம் – முறைகேடுகளை சொல்லி, அடுத்த தேர்தலில் பதவிக்கு வந்து காஞ்ச மாடு கம்பங் கொல்லையில் புகுந்த மாதிரி பதவியிலிருந்த கட்சிக்காரர்களைவிடப் பன்மடங்கு சம்பாதிப்பதும், அதற்கடுத்த தேர்தலில், பழைய கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்து இவர்களைவிட பன்மடங்கு கூடுதலாகக் கொள்ளையடிப்பதும் – என மாற்றி மாற்றி கோடீசுவர அயோக்கியன்கள் கொள்ளையடிப்பதற்கான சாதனமாகவே தேர்தல் இருக்கின்றது. எனவே, ஓட்டளிப்பது, வாக்குரிமை என்பது நமது பணத்தைக் கோடிகோடியாகச் சுருட்டிக் கொள்ள எந்த கோடீசுவர அயோக்கியனைத் தேர்ந்தெடுப்பது, எந்த கபட வஞ்சகனை முதல்வராக்குவது என்பதற்கான உரிமை மட்டுமே!

முதலாளிகளாகும் அரசியல்வாதிகள்.. அரசியல்வாதிகளாகும் முதலாளிகள்!

கிராமப்புறத் தொழிலாளர்கள்
நகர்ப்புறம் சார்ந்த கூலியுழைப்புச் சந்தையில் விசிறியடிக்கப்பட்ட கிராமப்புறத் தொழிலாளர்கள் (கோப்புப்படம்)

சட்டமன்றத் தேர்தலுக்காக ஒரு தொகுதியில் குறைந்தது ஐந்து கோடி ரூபாய்கள் செலவு செய்யத் தயாராக இருக்கின்றவனை மட்டும்தான் எல்லாக் கட்சிகளும் வேட்பாளராக நிறுத்துகின்றன. எழுதப்படாத ஒரு விதியாகவே இது செயல்படுத்தப்படுகின்றது. ஒரு தேர்தலுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவு செய்யும் தகுதியுள்ள கோடீசுவரன் யோக்கியனாக இருக்க முடியாது என்பதும் யோக்கியன் எவனும் இப்படிப்பட்ட கோடீசுவரர்களாக முடியாது என்பதும் எல்லோருக்கும் தெரிந்த ஓர் உண்மை. அவன் ஐந்துகோடியை முதலீடு செய்வதே சில பத்து கோடி ரூபாய்களைக் கொள்ளையடிக்கலாம் என்பதற்காகத்தான்.

மேலும், ஏற்கெனவே ஓரிடத்தில் குறிப்பிட்டபடி, முதலாளிகளே அரசியல்வாதிகளாகவும் அரசியல்வாதிகளே முதலாளிகளாகவும் மாறி, இணைந்து ஒரு ஒட்டுரக முதலாளித்துவ பிரிவு உருவாகியுள்ளது. எனவே, இவர்களைப் பொருத்தவரையில் தனியார்மயம் – தாராளமயம் என்ற மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் ஓர் அரசியல் கொள்கையாக அன்றி, சொந்தக் கொள்கையாகவே ஆகியுள்ளது. தரகு அதிகார வர்க்க முதலாளிகளான பஜாஜ், மல்லையா, அனில் அம்பானி ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற்றிருக்கிறார்கள். கருணாநிதி போன்றோரின் குடும்பம் ஒரு தரகு அதிகார முதலாளித்துவ குடும்பமாக மாறியுள்ளது போன்றவை சில எடுத்துக் காட்டுகள்; இன்று இவர்களின் வாரிசுகள் அரசியலில் பெருமளவு நுழைந்துள்ளனர்.

பல்வேறு தொழில், சேவைத்துறைகளை கண்காணிக்கவும் நெறிப்படுத்தவும் அமைக்கப்படுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் இந்த முதலாளிகளே இடம் பெறுகின்றனர். எடுத்துக்காட்டாக, கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் என்ற தனியார் விமானக் கம்பெனியின் முதலாளி விஜய் மல்லையா சிவில் விமான போக்குவரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் ஒருவர். தகவல் ஒலிபரப்புத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவில் லோக்மத் பத்திரிகை குழுமத்தின் முதலாளி விஜய் தொரிதா ஓர் உறுப்பினர். தரகு அதிகாரவர்க்க முதலாளிகள் பலரின் கம்பெனி விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராகவும் வழக்குரைஞராகவும் செயல்பட்ட சிதம்பரம்தான் பின்னர் நிதியமைச்சராக நியமனம் பெற்றார்.

எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழுகின்ற மக்களையும், தற்கொலைக்குத் தள்ளப்படும் விவசாயிகளையும் இன்னும் பிற உழைக்கும் மக்களையும், கோடீசுவரர்களாக இருக்கும் 234 எம்.எல்.ஏ.க்களும் சட்டமன்றமும் அமைச்சரவையும் வாழ வைக்கும் என்று நம்பி ஓட்டு போடுவது மிகப் பெரிய ஏமாளித்தனம்! இதனை உரிமை என்று சொல்வது ஆக மிகப் பெரிய பித்தலாட்டம்!

(தொடரும்)
________________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2015
________________________________

முந்தைய பகுதிகள்

  1. அரசு : அனைவருக்கும் பொதுவானதோ ஜனநாயகமானதோ அல்ல !
  2. மக்கள் ஜனநாயகமா, கோடிசுவரர்களின் ஆட்சியா ?
  3. அரசு:அனைவருக்கும் பொதுவானதோ, ஜனநாயகமானதோ அல்ல! – 3

மேலப்பாளையூர் டாஸ்மாக் எதிர்ப்பு போராளிகள் பிணையில் விடுதலை !

1

மேலைப்பாளையூர் டாஸ்மாக் கடை ஒழிப்பு போராட்டம் – சிறை சென்றவர்கள் பிணையில் விடுதலை

மூடு டாஸ்மாக்கை மூடு! நிறுவு மக்கள் அதிகாரத்தை!
மூடு டாஸ்மாக்கை! குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே! தடுக்க வரும் போலீசிற்கு அஞ்சாதே! மக்கள் அதிகாரத்தை நிறுவு!

எனும் மக்கள் அதிகாரம் அமைப்பின் முழக்கத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த ஜூலை மாத 4-ம் தேதியன்று கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கருவேப்பிலங்குறிச்சி அருகில் உள்ள மேலைப்பாலையூர் டாஸ்மாக் கடை பூட்டி போராட்டம் செய்தபோது மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ உட்பட 13 முன்னணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலைப்பாலையம் டாஸ்மாக்கை இழுத்து மூடும் போராட்டம்
மேலைப்பாலையம் டாஸ்மாக்கை இழுத்து மூடும் போராட்டம் (கோப்புப் படம்)

இவர்களில் ராஜூ, மற்றுமொரு தோழர் தவிர 11 பேருக்கு உயர்நீதிமன்ற ஜாமின் பெற்று கடந்த 31-08-2015 அன்று மாலையில் பிணையில் விடுதலையாகினர்.

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட முன்னணியாளர்கள் அனைவரும் வெளியே வந்தவுடன் 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் சிறைவாசலில் குவிந்து முழக்கமிட்டு வரவேற்றதுடன் அனைவருக்கும் புத்தாடை உடுத்தி மாலை அணிவிக்கப்பட்டது. மாலை 6.45 மணியளவில் பாலக்கரையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்நிகழ்ச்சியினை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்களும், தோழர்களும், பத்திரிகையாளர்களும் குவியத் தொடங்கினர். விண்ணதிரும் முழகத்துடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

அப்போது போலீசு பட்டாளத்துடன் வந்திறங்கிய விருத்தாசலம் போலீசு ஆய்வாளர் செந்தில்குமார் “ஏய்! யாரும் இங்க கூட்டமா நிக்க கூடாது. அம்பேத்கர் உனக்கு இன்னா புடுங்கினாரு. இங்கு வந்து சிலைக்கு மாலை போடுறீங்க, கோஷம் போடாதே” என்று மிரட்டி, “கலைந்து போகவில்லை என்றால் உங்கள் மீது சட்டம் ஒழுங்கு சீர்குலைவுன்னு கேஸ் போட்டு மீண்டும் உள்ளே தள்ளிடுவேன். பெயில் ஆர்டரை-டிஸ்மிஸ் பண்ணிடுவேன்” என்று மிரட்டினர்.

இந்த சலசலப்புக்கு அஞ்சாமல் மக்களுடன் தோழர்களும் முழக்கமிட்டு மாலை அணிவித்தனர். இதன் பின் அங்கிருந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கச் செல்ல முயன்றபோது, “நடந்து போகக்கூடாது போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக கேஸ் போட்டு விடுவேன்” என்றார் செந்தில்குமார்.

மேலைப்பாலையம் டாஸ்மாக்கை இழுத்து மூடும் போராட்டம்
மேலைப்பாலையம் டாஸ்மாக்கை இழுத்து மூடும் போராட்டம் (கோப்புப் படம்)

இதன்பின் ஆத்திரமடைந்த உறவினர்களும், தோழர்களும், “ஏன்யா நாங்க இனி உன்னை கேட்டுத்தான் மூச்சு விடணும், நடக்கணும், சாப்பிடணும், ஆயி இருக்கணுமோ? நீ என்ன விருத்தாசலத்தையே விலைக்கு வாங்கிட்டியா? நாங்க உன் அடிமையா? அல்லது பக்கத்து நாட்டின் அகதிகளா? பயங்கரவாதிகளா? அப்படித்தான் செய்வோம் உன்னால் முடிந்தால் பார்” என்று நடக்கத் தொடங்கினர்.

திட்டமிட்டு சண்டை வாங்கி நிகழ்ச்சியை சீர்குலைத்து மீண்டும் தோழர்களை சிறையில் தள்ள வேண்டும் என்கிற சதித்திட்டத்துடனே வந்து அது நிறைவேறாமல் போனதால் பாலக்கரையில் நான்கு புறமும் சுத்திக்கொண்டே அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார். இவரது சேட்டைகளை பார்த்து பொதுமக்கள் “ச்சீ இவர் இன்னும் இங்கிருந்து போகலையா” என்று எரிச்சலடைந்தனர்.

இதன்பின் நீதிமன்ற வளாகத்திலுள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கருவேப்பிலங்குறிச்சி கடைவீதியில் வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சைமூர்த்தி தலைமையில் ஊர் பொதுமக்கள் அணிதிரண்டு விடுதலையானவர்களை வரவேற்று மாலை அணிவித்து, கதராடை போர்த்தி, வெடிவெடித்து முழக்கமிட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர்.

மேலைப்பாலையம் டாஸ்மாக் போராளிகள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட போது
மேலைப்பாலையம் டாஸ்மாக் போராளிகள் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்ட போது (கோப்புப் படம்)

இரவு 9.15 மணி மேலப்பாலையூர் பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சசிக்குமார் தலைமையில் ஊர் மக்கள் கூடி வெடிவெடித்து வரவேற்றனர். அங்கிருந்து தலித் பகுதியில் கைது செய்யப்பட்ட தலைவர்களுடன் வெடிவெடித்து முழக்கமிட்டபோது சுமார் 200 பேர் ஆண்களும், பெண்களும், மாணவர்களுமாய் திரண்டு விட்டனர்.

இங்கு சுமார் அரை மணிநேரம் நிகழ்ச்சி நடந்தது.

வெல்லட்டும்! வெல்லட்டும்!
மக்கள் அதிகாரம் வெல்லட்டும்

வருகுது பார்! வருகுது பார்!
மேலப்பாலையூர் டாஸ்மாக்கடையை பூட்டிக் காட்டி
மக்கள் அதிகாரத்தை நிறுவிய
வெற்றி பெற்ற படையணி
வருகுது பார்! வருகுது பார்!

வருக வருக வருகவே
டாஸ் மாக்கடை ஒழிப்பு போராட்டத்தில்
சிறை சென்ற போராளிகளே
சிறையில் பூத்த மலர்களே
போராளிகளே தோழர்களே
தன்மானம் காத்த தலைவர்களே
வருக! வருக! வருகவே!

எனும் முழக்கமிட்டு,

“அவர்கள் சிறைக்கு சென்ற தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் கற்றுக்கொண்டு வழி நடப்போம். மேலும் வெள்ளாற்று மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய நாம் இப்போது டாஸ்மாக்கையும் ஒழித்து கட்டியுள்ளோம்.

மேலப்பாலையூர் டாஸ்மாக் போராளிகள்
மேலப்பாலையூர் டாஸ்மாக் போராளிகள்

வெள்ளாற்று கரையோரம் உள்ள இந்த மண் சுயநலம், காரிய வாதம், பிழைப்பு வாதத்தை தூக்கி எறிந்து போலிசின் பொய் வழக்கு, சிறை அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் போராடி மக்கள் அதிகாரத்தை நிறுவிய வரலாற்றை படைத்துள்ளது” என்று பேசியபோது மக்கள் கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

அதேபோல் கிரனூரில் தே.மு.தி.க ஒன்றிய செயலாளர் திரு ராஜவன்னியன் கிராம மக்கள் புடை சூழ வெடி முழக்கத்துடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இரவு 10.30 மணிக்கு பவழங்குடியில் போராட்டத்தில் முன்னிலை வகித்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சிறுதொண்ட நாயனார் மற்றும் தெய்வக்கண்ணு, ராஜேந்திரன் ஆகியோரை வாகனங்களில் தெருவெல்லாம் வலம் வந்து ஆர்ப்பரிக்க வெடிவெடித்து முழக்கத்துடன் வீடுவரை அழைத்துச் சென்று அவர்களின் தியாகத்தையும், வருங்காலத் தலைமுறையினர் கற்றுக்கொண்டு சமூகத்திற்காக போராட வேண்டும் என்று உணர்த்தப்பட்டது.

மக்கள், “இனி இவ்வட்டாரத்தில் டாஸ்மாக் இருக்கக் கூடாது” என்று உறுதி ஏற்றனர். ஒவ்வொருவர் வீட்டிலும் பெண்கள் கூடி சிறை சென்றவர்களின் நெற்றியில் வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் குடிகாரர்கள். இவர்கள் போராட்டம் நடந்த அன்று போதையோடுதான் போலிசிடம் தகராறு செய்தனர். “நான் குடிகாரன்தான், நானே சொல்றன், எங்க ஊருக்கு இந்தக் கடை வேணாம் மூடு! எங்க வீட்டுக்கு பக்கத்தல இருக்கறதால நாங்க மூணுவேளையும் குடிக்கிறோம், குடும்பமே அழியுது” என்று பேசியவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஆனால், அவர்களோ சிறைக்கு சென்ற பின் மாற்றப்பட்டு சிறையில் பார்க்க வந்த மனைவியிடம் “இனி நான் குடிக்கமாட்டேன். குடும்பத்தை பொறுப்போடு பார்ப்பேன். இனி என்னை குடிகார கணவன் என்று சொல்லாதே, எனக்கு அசிங்கமாக உள்ளது. இங்கு தோழர்களும், வக்கீல்களும் ரொம்பவே மாத்திட்டாங்க. நாங்கள் திருந்திட்டோம், மாறிட்டோம்” என்று கண்ணீருடன் அன்போடு பரிமாறிக்கொண்டனர்.

ஆம்! குடிகாரர்கள், அடங்காதவர்கள், ரவுடிகள் என்று தூற்றப்பட்டவர்கள் இன்று பொறுப்புள்ள மனிதர்களாக இதோ மக்கள் அதிகாரத்தின் போராளிகளாக மாறியுள்ளனர். மக்கள் அதிகாரம் நிறுவப்பட்டு வருகிறது.

“குடியை ஒழிக்க முடியாது, குடிகாரனை திருத்த முடியாது, எவனும் திருந்தமாட்டான், எதுவும் முடியாது. எவனும் சரியில்லை” என்று வெட்டி பேச்சு பேசுபவர்களுக்கு இது பதிலடி மட்டுமல்ல “போராடினால் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுவேன் போராட்டத்தை சீர்குலைத்து நசுக்குவேன்” என்று உளறும் போலீசு, ஆர்.டி.ஓ, நீதிபதி உள்ளிட்ட அதிகார வர்க்கத்தை கேள்வி எழுப்பி மக்கள் அதிகாரத்தை நிறுவும் தருணம் தொடங்கி விட்டது.

தோற்று போனது அரசு அதிகாரம்! இதோ வருகுது மக்கள் அதிகாரம்!

இவண்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மாவட்டம்
8110815963