Wednesday, August 13, 2025
முகப்பு பதிவு பக்கம் 730

சொத்துக் குவிப்பு வழக்கு : திரும்பவும் முதலில் இருந்து …?

6

ல்லிராணியின் சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யாவின் ராஜினாமா கடந்த ஜனவரி 17 அன்று கர்நாடக மாநில‌ அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கடந்த ஆகஸ்டு 14 அன்றே தனக்கு மிரட்டல் விடுவது மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்துவது போன்றவற்றில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டதாகவும், தனது வயது மற்றும் உடல்நிலையை காரணம் காட்டியும் ஆச்சார்யா பதவி விலகல் கடிதம் கொடுத்த போதிலும் வேறு நபர் நியமிக்கப்படும் வரை தொடருமாறு நீதிபதி மல்லிகார்ஜூனையா கேட்டுக் கொண்டார். அதற்கிணங்க அவர் பதவியில் தொடர்ந்தாலும், தற்போது தனி ஒரு குழு அமைக்கப்பட்ட பிறகு அவரது பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இனி முதலில் இருந்து ஜெயா தனது ஆட்டத்தை துவங்குவார். கன்னித் தீவு கதையின் இரண்டாம் பாகத்தை மக்கள் காணப் போகிறார்கள்.

1991 இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவின் சொத்து மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய்கள் தான். ஆனால் மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கி அவர் சேர்த்த தொகை 1996 முடிவில் 66 கோடி. எனவே இதனை விசாரிக்க உச்சநீதிமன்ற வழிகாட்டலின் பேரில் தனிநீதி மன்றம் அமைத்து விசாரணை நடைபெற்றது. 2001 இல் ஆட்சிக்கு வந்த ஜெயல்லிதா தனக்கு தொண்டை கட்டியிருக்கிறது, தமிழில் மொழிபெயர்த்தால் தான் தன்னைப் போன்ற கான்வெண்ட் தற்குறிகளுக்கு விசயம் புரியும் என்றெல்லாம் கேட்டு வழக்குக்கு வாய்தா வாங்கத் துவங்கினார். பிறகு ஏன் தன்னைப் போன்ற 24 மணி நேரம் உழைக்கும் அன்புச் சகோதரிக்கு வீட்டுக்கு கேள்வி அனுப்பக் கூடாது என நீதிமன்றத்தை கேட்டார் ஜெயா. திருச்சி விமானநிலையத்தின் அதிமுக மகளிரணி ஆட்டத்தை கேள்விப்பட்டிருந்த நீதிபதிகள் தங்களது எழுத்தர்களை அனுப்பி பதில் வாங்கினர்.

இதெல்லாம் சரிப்படாது எனக் கருதிய திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரி உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கவே 2005 இல் கர்நாடகா மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதில் இவருடைய கூட்டாளிகளான சசிகலா, இளவரசி என பலரும் இவரைப் போலவே வாய்தா வாங்கத் துவங்கினர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் முதலில் ப்ரூப் செக் பண்ணி பிழை திருத்தம் கோரினர். அதன்பிறகு தனக்கு படித்துப் பார்க்க நேரம் வேண்டும் என்றனர். சில சமயங்களில் தனது வழக்கறிஞர் வீட்டு உறவினர் இறந்த காரணத்துக்கெல்லாம் சுதாகரன் விடுப்பு கேட்டிருக்கிறார். இப்படி இவர்கள் உச்சநீதி மன்றம், கர்நாடக உயர்நீதி மன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றங்களில் கொடுத்த மனுக்களின் எண்ணிக்கை 130 இருக்கும். இடையில் இந்த விசாரணையே செல்லாது எனக் கோரி 2009 வரை விசாரணை நடக்கவொட்டாமல் செய்தனர். 2011 இல் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு தெரியாமலேயே ஜெயா அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை அனைத்து சாட்சிகளையும் முதலில் இருந்து மீண்டும் விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு செய்தது.

அடுத்து ஆச்சார்யாவை நீக்க மனு கொடுத்தார்கள். நீதிபதியே தனியார் பல்கலை ஒன்றில் டிரஸ்டியாக இருக்கிறார் என்பதால் அவருக்கு நீதிபதியாகும் தகுதியே இல்லை என பல மனுக்களை மாற்றி மாற்றி போட்டனர். ஆச்சார்யா இதெற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் கொட நாட்டுக்கு போகும் நேரத்தில் நீதிமன்றத்துக்கு வர முடியவில்லையா என நீதிமன்றத்திலேயே கேட்டார். இதனை வழிமொழிந்த இந்து பத்திரிகை, ராமதாசு, விஜயகாந்த் என அனைவர் மீதும் அவதூறு வழக்கை பதிவு செய்தார் அல்லிராணி. சோ போன்ற நபர்கள் ஆச்சார்யா மரபுப் படி குற்றவாளிக்குதான் ஆதரவாக இருக்க வேண்டும் என வாதிட்டனர். இழுத்தடிப்பு மற்றும் மிரட்டல் காரணமாக பதவி விலகுவதாகவும், இந்த போராட்டத்தில் தான் தோற்று விட்டதாகவும், தனக்கு மட்டும் 10 வயது குறைவாக இருந்தால் போராடியிருப்பேன் என்றும் கூறி விடைபெற்றார் ஆச்சார்யா.

இப்போது மீண்டும் வழக்கு துவங்குகிறது. புதிய அரசு வழக்கறிஞர்கள் குழு அனைத்து விபரங்களையும், மனு மற்றும் குற்றப்பத்திரிகைகளையும் படித்துப் பார்க்கவேண்டும். அதற்கு கொஞ்ச காலம் எடுக்கும். அதற்குள் நாடாளுமன்ற தேர்தல் வந்து விடும். அதில் நடக்கும் பகடைக்காய் ஆட்டத்தில் எந்த தரப்பையாவது தன்னை விடுவிப்பதன் மூலம் ஆதரிக்க முன்வருவார் அல்லிராணி. அதன் பிறகு ஒரு ஜவ்வு மிட்டாய். கடைசி வரை தண்டனை கிடைப்பதிலிருந்து தப்பித்து விடுவார் ஜெயா. சட்டம் ஒரு இருட்டறை என்பது உண்மையோ என்னவோ ஜெயாவை பொறுத்தவரை செருப்புக்குச் சமம்.

விஸ்வரூபம் : ” வீழ்ந்தால் விதையாக வீழ்வேன் – காலில் ! “

33

து நேற்று 31.1.2013 மதியம் மும்பையிலிருந்து வெளிவரும் மிட் டே நாளிதழில் வெளிவந்துள்ள கமலஹாசனின் பேட்டி. இது தொலைபேசியில் எடுக்கப்பட்ட பேட்டி என்பது இப்பேட்டியைப் படிக்கும்போது புரிகிறது. இந்தப் பேட்டி வெளிவந்த பின்னர் தான் அம்மாவின் சமரச அறிக்கை வெளிவருகிறது.

அதாவது இந்தப் பேட்டியைப் படித்த பிறகுதான் அம்மாவின் தாயுள்ளம் உருகியது. அப்புறம் கொதிக்கத் தொடங்கியிருக்கிறது என்று தெரிகிறது.

30 ம் தேதி இரவு என்.டி.டி.வி ஒளிபரப்பிய விவாதத்தின் போது, சோவின் முகத்தில் வழக்கமான தெனாவெட்டையும், குரலில் திமிரையும் காணவில்லை. பீதியும் அதை மறைக்க முயன்றதால் தோன்றிய கடுப்புமே இருந்தது.

“மிட் டே” பேட்டியையும் அம்மா படித்திருக்கக் கூடும். “என் திரைப்படத்தின் படச்சுருளை (சென்னையில்) கொளுத்தப் போகிறேன். பாசிசத்திடம் மண்டியிட மாட்டேன்”  என்றெல்லாம் பேட்டியில் கமலஹாசன் பேசியிருக்கிறார். ஒருவேளை ஏடாகூடமாக ஏதாவது செய்து கமலஹாசனுக்கு விளம்பரம் இன்னும் கூடிவிட்டால்? அந்த நினைப்பே திகிலூட்டியிருக்கும். விளைவுதான் அம்மாவின் அறிவிப்பு.

இந்தப் பேட்டியை மொழிபெயர்த்து வெளியிடக் காரணம் இருக்கிறது. இது வெளிவரும் இந்த நேரத்தில் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடிந்திருக்கலாம். ஜெயலலிதா உதவுவதாகச் சொன்ன பிறகு நான் ஏன் உச்ச நீதிமன்றம் போகவேண்டும் (நியூ காஸிலுக்கு – இங்கிலாந்தின் நிலக்கரி சுரங்கவளம் நிரம்பிய பகுதி – எதற்கு நிலக்கரியை தூக்கிக் கொண்டு நடக்க வேண்டும்?) என்று நேற்று இரவு கூறியிருக்கிறார் கமலஹாசன்.

முப்பதாம் தேதி காலை “வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்று வசனம் பேசியவர், அடுத்த நாள் “பாசிசத்திடம் சரணடைய மாட்டேன்” என்று பேட்டி கொடுத்தவர், 31 மாலையே அம்மாவுக்கு நன்றி தெரிவித்து விட்டாரே,  எவ்வளவு உயரத்திலிருந்து அவர் பல்டி அடித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள இந்தப் பேட்டியில் அவர் காட்டும் ‘விசுவரூபம்’ நமக்கு தெரிந்திருப்பது அவசியம்.

தனக்கு எதிராக இப்படி ஒரு பேட்டி கொடுத்திருப்பது தெரிந்தும், அதைப் படித்து கொதித்த பின்னரும் அடங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகி விட்டாரே அம்மா, அதைப் புரிந்து ரசிப்பதற்கும் இதைப் படிக்க வேண்டும்.

________________________________________________________________________________________________________________

‘It’s creative abortion’

பேட்டி கண்டவர் : சுபாஷ் கே ஜா

கேள்வி: தமிழ்நாடு உங்களை ஏன் பழி வாங்க வேண்டும்? நீங்கள் தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த நட்சத்திர நடிகர்.

கமல்: அவங்க அப்படி நினைக்கவில்லை. நான் சச்சரவு ஏற்படுத்தும் படங்கள் நிறைய எடுக்கிறேன் என்றும் என்னை அடக்கி மண்டியிட வைக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, எனது படத்தில் வரும் பயங்கரவாதிகள் அல்-கொய்தாவைச் சேர்ந்தவர்கள் என்பதை வைத்து என்னை இஸ்லாமுக்கு எதிரானவன் என்று முத்திரை குத்துகிறார்கள். நான் இந்து தீவிரவாதம் பற்றி ஹே ராம் என்ற படம் எடுத்தவன் என்பது அவர்களுக்கு நினைவில்லை. பாப்ரி மசூதி இடிக்கப்பட்ட போது அதனை குரல் எழுப்பி கண்டித்த முதல் நடிகன் நான்தான் என்பதையும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். நான் முஸ்லீம் சமுதாயத்தின் நண்பன். சொல்லப் போனால், பல பன்னாட்டு விமான நிலையங்களில் எனது பெயரை வைத்து என்னை ஒரு முஸ்லீமாக பார்த்திருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டுவதால் நீங்கள் எப்படி இஸ்லாமுக்கு எதிரி ஆகி விடுவீர்கள்? பார்க்கப் போனால், சுபாஷ் கெய்யின் பிளாக் & வொயிட், ரென்சில் டி’சில்வாவின் குர்பான் போன பல நல்ல இந்தி படங்கள் இந்திய முஸ்லீமின் அடையாள நெருக்கடியையும் பயங்கரவாதத்துடனான உறவையும் பற்றி காட்டியிருக்கின்றன.

கமல்: அதையெல்லாம் பற்றி அவர்களுக்கு கவலையே இல்லை. எனது படத்தில் ஒரு பயங்கரவாதி கூட இந்தியன் கிடையாது என்பதை கவனிக்க வேண்டும். திரைப்படத்தில் வரும் எல்லா பயங்கரவாத நடவடிக்கைகளும் ஆப்கானிஸ்தானில் நடக்கின்றன. அல்-கொய்தாவைப் பற்றி குறிப்பிடும் இடங்களுக்கு சில முஸ்லீம் சகோதரர்கள் ஆட்சேபணை தெரிவித்தார்கள், நான் அவற்றை நீக்கி விட்டேன்.

கேள்வி: அல்-கொய்தாவை பயங்கரவாத நடவடிக்கைகளுடன் இணைப்பதை ஏன் ஆட்சேபிக்க வேண்டும்?

கமல்: பகுத்தறிவு வாதத்தையா நாம் இங்கு வழிபடுகிறோம்? நான் செல்வி ஜெயலலிதாவிடம் விளக்கமளிக்க விரும்பினேன். நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அவரைச் சந்தித்து என் நிலைப்பாட்டை விளக்க முயற்சித்தேன். ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகச் சொல்லி என்னை சந்திக்க மறுத்தார். நான் உள்துறை அமைச்சரைத்தான் சந்திக்க வேண்டும் என்று சொன்னார். உள்துறை அமைச்சரும் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது என்ற அதை கருத்தைதான் சொல்லப் போகிறார். நான் அவரை சந்தித்து எனது திரைப்படம் பற்றியும், வழக்கின் நிலையைப் பற்றியும் விளக்கியிருக்கிறேன். நான் உள்துறை அமைச்சரை சந்தித்தேன் என்பது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்க வழியே இல்லை. ஜெயலலிதாவின் கவனத்துக்கு வராமல் தமிழ்நாட்டில் ஒரு இலை கூட அசைவதில்லை.

கேள்வி: இந்த பிரச்சனை ஒரு திரைப்பட வெளியீட்டைத் தாண்டிய வடிவங்களை எடுத்திருக்கிறது.

கமல்: எல்லாவற்றையும் உலகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பிரச்சனை எனது திரைப்படத்தைத் தாண்டி வெகு தூரம் போய் விட்டது என்று நினைக்கிறேன். விளைவுகளை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். விஸ்வரூபம் திரைப்படத்தின் தமிழ் பிரிண்டை கொண்டு போய் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகம் முன்பு எரிக்கப் போகிறேன்.

அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கொல்கிறார்கள். அதற்கு அப்படி ஒரு முறையான சிதையை நான் வழங்கி விட்டுப் போகிறேன். நான் பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன். இது என்னை பொருளாதார ரீதியாக முடித்துக் கட்டும் சதி. என்னைக் கொன்று போடும் சதி. நான் இன்னொரு படம் எடுக்கவே முடியாது என்ற நிலையை ஏற்படுத்தும் சதி, அப்படிப்பட்ட ஒரு நிலை என்னைப் பொறுத்தவரை சாவுக்கு நிகரானது.

நான் சொன்னது போல, இது பகுத்தறிவால் புரிந்து கொள்ள முடியாத ஒரு தாக்குதல். ஆனால், நான் அதை பகுத்தறிவுக்கு உகந்த முறையில்தான் எதிர் கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் அப்படி இல்லை என்றாலும் கலைஞர்களான நாங்கள் பகுத்தறிவுவாதிகள்.

கேள்வி: விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் வெளியிடுவதற்கான உங்கள் விடாப்பிடியான முயற்சியும், இப்போது தமிழ்நாட்டில் அடிப்படைவாத சக்திகளை எதிர்க்கும் உங்கள் போராட்டமும், திரைப்படத்தை வெளியிடுவதை தமிழ்நாடு அரசு தடை செய்திருப்பதும் பாலிவுட்டில் உங்களை ஒரு புகழ்பெற்ற போராளியாக ஆக்கியிருக்கிறது என்பதை உணர்கிறீர்களா?

கமல்: அப்படியா? இப்பவாவது நடந்ததே! (சிரிக்கிறார்). இந்த விஷயம் நம் எல்லோரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. இந்தத் தடைகளுக்கு எதிராக சிலர் குரல் கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இந்த எதிர்ப்புக் குரல்கள் எதையும் மாற்றி விடப் போவதில்லை. அவர்கள் (தமிழ்நாடு அரசு) நான் அழிந்து போகும் வரை படத்தை தாக்கப் போகிறார்கள். பிறப்பதற்கு முன்பே என் குழந்தையை கொல்வதைப் போன்றது அது. ஒரு கலையின் சிதைவு அது.

கேள்வி: அவர்கள் உங்களை ஏன் தாக்க வேண்டும்.? நீங்கள் டி.டி.எச் விஷயத்தை கையில் எடுத்ததாலா?

கமல்: அதை விட ஆழமானது இது. ஆனால் அதைப்பற்றி நாம் பேச வேண்டாம். எனது தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது.

கேள்வி: கேட்கவே கஷ்டமாக இருக்கிறதே…. அவர்களால் உங்களை அழித்து விட முடியுமா?

கமல்: அவர்கள் என்னை அழித்து விட முடியும்! நான் மிகவும் கர்வம் பிடித்த மனிதன். லாஸ் ஏஞ்சலீசில் என் திரைப்படத்தின் வெற்றிகரமான உலக வெளியீட்டை முடித்துக் கொண்டு திரும்பி வந்திருக்கிறேன். நான் கேள்விப்பட்டது வரை, இது வரை அமெரிக்காவில் வெளியான வெளிநாட்டுப் படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய படம் அது.

கேள்வி: விஸ்வரூபத்தின் இந்தி பதிப்பு எப்போது வெளியிடப்படவிருக்கிறது?

கமல்: பிப்ரவரி 1 என்று திட்டமிட்டிருக்கிறோம். வியாழக்கிழமை அன்று மும்பையில் வெளியீட்டு விழாவுக்கும் திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், படத்தை வெளியிட விடுவார்களா என்று தெரியவில்லை. என் திரைப்பட வெளியீட்டு திட்டங்கள் பெண்களால் தடுத்து நிறுத்தப்படுவது எனக்கு பழகிப் போன ஒன்றுதான்.

கேள்வி: இந்த முறை உங்கள் வெளியீட்டுத் திட்டங்களை தடுத்து நிறுத்துவதாக நீங்கள் எந்தப் பெண்ணை சொல்கிறீர்கள்?

கமல்: நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: தணிக்கைக் குழு அனுமதி கிடைத்த பிறகும் தமிழ்நாடு அரசு உங்கள் திரைப்படத்தை ஏன் தடை செய்தது?

கமல்: தமிழ்நாட்டில் தணிக்கைக் குழு தேவையில்லை என்பது தெளிவு. அவர்கள் தமிழ்நாடு அலுவலகத்தை இழுத்து மூட வேண்டியதுதான்.

கேள்வி: உங்களுக்கு பெருமளவு ரசிகர்கள் இருக்கும் மலேசியாவிலும் இந்த படம் தடை செய்யப்பட்டிருக்கிறது?

கமல்: ஆம். இந்தியாவில் இங்கு இருக்கும் எனது முஸ்லீம் சகோதரர்கள் மலேசியாவில் இருக்கும் அவர்களது முஸ்லீம் சகோதரர்களிடம் பேசியிருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபத்துக்கு எதிரான போராட்டங்களை ஆரம்பித்து வைத்த டி.டி.எச். பிரச்சனை உங்கள் திரைப்படத்துக்கான இஸ்லாமிய எதிர்ப்புகளுடன் இணைந்து கொண்டது எப்படி?

கமல்: எனக்கு அந்த கருத்தில் உடன்பாடு இல்லாவிட்டாலும், என் திரைப்படத்தின் டி.டி.எச். வெளியீடு திருட்டு வி.சி.டி. சந்தையை முழுமையாக அழித்து விடும் என்று நான் மதிக்கும் சிலர் கருதுகிறார்கள்.

கேள்வி: வட இந்திய மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளும் விஸ்வரூபத்தை டி.டி.எச்.சில் வெளியிடும் உங்கள் திட்டத்திற்கு எதிராக இருக்கிறார்கள்?

கமல்: என்னுடைய டி.டி.எச். திட்டத்தை எதிர்ப்பதன் மூலம் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் கலைத் திருடர்களுடன் சேர்ந்திருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டியது.

கேள்வி: அப்படீன்னா, கதை இன்னும் மர்மமாகிறது?

கமல்: என் காவல் துறை நண்பர்கள் ஒட்டுக் கேட்கிறார்கள் என்று நம்புகிறேன். போலீஸ்படை மதத்துக்கு அப்பாற்பட்டது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு வேளை, காக்கி நிறமே ஒரு மதம்தானோ?

கேள்வி: உங்களுக்கு நகைச்சுவை உணர்வு குறையாமல் இருக்கிறது தெரிகிறது.

கமல்: எனது வீழ்ச்சியை அனுபவித்து மகிழும் பலரைப் போல நானும் நடப்பது அனைத்தையும்  அனுபவித்து மகிழ்கிறேன்.

கேள்வி: இது சிரிக்கக் கூடிய விஷயம் இல்லை.

கமல்: நான் விளையாட்டுக்குச் சொல்லவில்லை, உண்மையிலேயே சொல்கிறேன். என் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்டாலும் நான் இதை சொல்ல முடியும்: என் சொத்து முழுவதும், எல்லாமே அடகு வைக்கப்பட்டிருக்கிறது. பிப்ரவரி 1க்கு முன்பு நிதி திரட்டி கொடுக்கா விட்டால் எனக்கு சொந்தமான அனைத்தையும் இழந்து விடுவேன்.

கேள்வி: உங்கள் வீட்டை அடகு வைத்தா உங்கள் கனவுகளுக்கு பணம் திரட்டினீர்கள்? அது பழங்கால பழக்கம் இல்லையா.

கமல்: ஆம்! அது பழங்கால பழக்கமாக இருக்கலாம். ஆனால் அதைத்தான் நான் எப்போதும் செய்திருக்கிறேன். ஏன் பழங்கால பழக்கம்? அது சத்யஜித் ரே உணர்வு. பதேர் பாஞ்சாலி எடுப்பதற்கு அவர் எல்லாவற்றையும் அடகு வைத்தார். ரே சார் தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் அடகு வைத்து பதேர் பாஞ்சாலி எடுத்த கதையை கேட்டு வளர்ந்தவன் நான். நான் இன்னும் பல படிகள் போக விரும்பினேன். சரி, இப்போது என்னை ஒரு ரே-பேன் என்று கூப்பிடலாம் (மனம் விட்டு சிரிக்கிறார்)

கேள்வி: விளையாடுகிறீர்களா, என்ன?

கமல்: ஒரு விளையாட்டு மயிரும் இல்லை. உண்மையாக சொல்கிறேன். திரைப்படம் வெளியாகா விட்டால் நான் எல்லாவற்றையும் இழந்து விடுவேன். நான் ஒரு ஓட்டாண்டியாகி விடுவேன். எந்த ஒரு தனிமனிதனும் சொத்து வைத்திருக்கக் கூடாது என்று நான் நம்புகிறேன். அது மக்களுக்காக இருக்க வேண்டும். நான் என்னவெல்லாம் சொத்து வைத்திருக்கிறேனோ அது எல்லாம் சினிமா மூலம் வந்தது. நான் சினிமாவுக்கே திரும்ப கொடுக்கிறேன். அதனால்தான் நான் அதை சினிமாவில் திரும்பக் கொட்டினேன். எனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு பிப்ரவரி 1க்குள் பணம் கொடுக்கா விட்டால், எல்லா சொத்துக்களையும் எடுத்துக் கொள்வார்கள். என் கடன்காரர்கள் எனது நிலையைப் பார்த்து பரிதாபப்படப் போவதில்லை. நான் கைது செய்யப்படலாம். அது பிரச்சனையில்லை. காந்திஜி கூட கைது செய்யப்பட்டார்.

கேள்வி: உங்கள் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது என்று உங்களுக்கு எப்படி தெரியும்?

கமல்: இதை எல்லாம் நான் முன்பே பார்த்திருக்கிறேன். நான் ஒரு ‘டேப்’ (tap) ஆட்டக்காரன்.

கேள்வி: இந்த நேரத்தில் சினிமா மீது எவ்வளவு காதலை உணர்கிறீர்கள்?

கமல்: நிறைய. எல்லா திரைப்பட தயாரிப்பாளர்களும் சம்பாதிக்கும் அத்தனையையும் சினிமாவுக்கே திருப்பிக் கொடுக்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: ஒட்டு மொத்த திரைப்படத் துறையும் உங்களுக்கு ஆதரவாக ஏன் வரவில்லை?

கமல்: அவர்களுக்கு என்னை தெரியக் கூட செய்யாது. பாலிவுட்டில் சிலர் என் பக்கம் இருக்கிறார்கள்.

கேள்வி: விஸ்வரூபம்தான் உங்கள் எதிரியா?

கமல்: இல்லை. விஸ்வரூபம் எனது குழந்தை, அரசியல்தான் எனது எதிரி. அவர்கள் என் குழந்தையை கருவிலேயே கலைக்க விரும்புகிறார்கள். கிறிஸ்துவர்களுடனும், முஸ்லீம்களுடனும், அரசியல்வாதிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தி என் குழந்தையை காப்பாற்றிக் கொள்ள வேண்டுமாம். என் படைப்புத் திறனை நான் ஏன் பாசிசத்துக்கு முன் வைக்க வேண்டும்?

கேள்வி: உங்கள் நிதி நெருக்கடி இப்படி இருக்கும் போது, உங்கள் அடுத்த படத்தை எப்படி எடுப்பீர்கள்?

கமல்: ஒரு பொது நிறுவனம் மூலம் நான் பணம் திரட்டுவேன். என்னைப் போலவே சிந்திப்பவர்களை வைத்து என் கனவுகளுக்கு பணம் திரட்டுவேன். ஆனால் நான் மண்டியிட மாட்டேன். பாசிசத்துக்கு அடிபணிய மாட்டேன்.

அனைத்து சாதி அர்ச்சகர் போராட்ட வழக்கு நிதி தாருங்கள் !

11

30.1.2013 அன்று சென்னை மெமோரியல் ஹால் அருகில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஆற்றப்பட்ட உரைகளை கீழே தொகுத்து தந்திருக்கிறோம்.

2006 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்றுவிக்கப்பட்ட 206 மாணவர்களை, அர்ச்சகர்களாக நியமிக்க கூடாது என்று மதுரை மீனாட்சியம்மன் கோயில் பார்ப்பன அரச்சகர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.

திமுக ஆட்சிக்காலத்தில் வழக்கை நடத்தக்கூடாது என்று வேண்டுமென்றே இழுத்தடித்தனர். திமுக அரசும் நடத்துவதில் தீவிரம் காட்டவில்லை. இப்போது அம்மா ஆட்சி வந்துவிட்டது.

பார்ப்பன அர்ச்சகர்களுடன் பேசி சுமுகமாக ஒரு தீர்வு காண இருப்பதாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. சுமுகத்தீர்வு என்பதன் பொருள் என்னவென்றால், சீரங்கம், மதுரை, மயிலை உள்ளிட்ட ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களை நியமிக்காமல், அவர்களுக்கு மற்ற மாரியாத்தா, காளியாத்தா கோயில்களை ஒதுக்கிவிடுவது என்பதே. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பயிற்சி முடித்த மாணவர்களை தொடர்பு கொண்டு, வழக்கெல்லாம் வேண்டாம், வேலை போட்டுத் தருகிறோம் என்று ஆசை காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்த வழக்கில் வாதி (petitioner) மதுரைக் கோயில் அர்ச்சகர்கள்; பிரதிவாதி (Respondent) தமிழக அரசு. இதில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் தலையீடு செய்து தன்னையும் வழக்கில் சேர்த்துக் கொண்டிருக்கிறது. வழக்கை மனித உரிமைப் பதுகாப்பு மையம் நடத்துகிறது

ஜனவரி 30 ஆம் தேதியன்று வழக்கின் இறுதி விசாரணை தொடங்கிவிட்டது. பார்ப்பன அர்ச்சகர்கள் சார்பில் வழக்குரைஞர் பராசரன் தனது வாதுரைகளை முன்வைக்கத் தொடங்கி விட்டார். தமிழக அரசின் சார்பில், அம்மாவின் வழக்குகளுக்கு ஆஜராகும் பி.பி.ராவ் என்ற மூத்த வழக்குரைஞர் நியமிக்கப்பட்டிருக்கிறார். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மூத்த வழக்குரைஞர் காலின் கன்சால்வேஸ் ஆஜராகிறார்.

சம்பிரதாயமா, மதச்சார்பற்ற சட்டமா (ceremonial law or secular law)  என்றால் சம்பிரதாயமே மேல்நிலை வகிக்கும். இதுதான் அரசியல் சட்டத்தின் நிலை. திமுக அரசு போட்டிருக்கும் அரசாணை, உரிய சட்டத்தின் துணை இல்லாமல் போடப்பட்டிருப்பதால் அது செல்லத்தக்கதல்லை. அவ்வாறு ஒரு சட்டமியற்ற முடிந்தால் இயற்றிக் காட்டட்டும், நான் உடைத்துக் காட்டுகிறேன். அது அரசியல் சட்டம் வழங்கும் மத உரிமைக்கு எதிரானது. எனவே செல்லத்தக்கதல்ல” என்று கூறி தனது வாதத்தை தொடங்கியிருக்கிறார் பராசரன்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 இன் கீழ் தம.து சாதி உரிமையையே இந்து மத உரிமையாக கோருகின்றனர் பார்ப்பனர்கள். அதாவது, சமூக நடவடிக்கைகளில் குற்றமாக்கப்பட்ட தீண்டாமையை, மத ரீதியில் தமது உரிமை என்று கூறுகின்றனர்.

மிகவும் கடினமான சவாலான இந்த வழக்கை பெரிதும் கஷ்டப்பட்டு இறுதி நிலைக்கு தள்ளிக் கொண்டு வந்திருக்கிறோம். வலிமையான முன்னணி வழக்குரைஞர்கள் பட்டாளம் ஒன்றை நிறுத்தி நடத்தப்பட வேண்டிய அளவுக்கு சிக்கலான சவாலான வழக்கு இது.

அப்படிப்பட்ட வழக்குரைஞர்களை நியமிக்க வேண்டுமானால், நமது தரப்பில் நியமிக்க வேண்டுமானால் பல இலட்சங்கள் தேவை. அது எமது சக்திக்கு அப்பாற்பட்டது. வாய்தாக்களுக்கு அலைந்தும், வாய்தாவை ஆட்சேபிக்க அமர்த்தப்படும் வழக்குரைஞர்களுக்கு கட்டணம் கொடுத்துமே சில இலட்சங்கள் போய் விட்டன.

இந்து சட்டத்தின் மோசடித்தன்மையை, இந்த நாட்டின் போலி மதச்சார்பின்மையை அம்பலப் படுத்துகின்ற வாய்ப்புகளை கொண்ட வழக்கு இது. கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.

இவ்வழக்குக்கு நன்கொடை தாருங்கள் என்று கோருகிறோம். நன்கொடையை அளிக்க விரும்புகிறவர்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

பணத்தை மணியார்டர், காசோலை, வரைவோலைகளின் மூலம் KANNAIAN RAMADOSS , CHENNAI என்ற பெயருக்கு எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

KANNAIAN RAMADOSS
PUTHIYA KALACHARAM,
NO.16, MULLAI NAGAR SHOPPING COMPLEX,
SECOND AVENUE, ASHOK NAGAR, CHENNAI, 600 083.
PHONE:044- 23718706.
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

நெட்பாங்க் மூலம் அனுப்ப விரும்புகிறவர்கள் கீழ்க்கண்ட கணக்கிற்கு பணம் அனுப்பிவிட்டு விவரத்தை மின்னஞ்சல் அல்லது தபால் அல்லது தொலைபேசி மூலம் தெரிவிக்கவும்.

Name: KANNAIAN RAMADOSS
Bank Name: ICICI BANK LTD
Account Number: 612801107389
IFSC Code: ICIC0006128
Branch Location: TANJORE IFSC-ICIC0006128
MICR Code: NONMICRLO
Account Type: Savings

____________________________________________________

– வினவு

 ____________________________________________________

ஆர்ப்பாட்ட செய்தித் தொகுப்பு:

தலைமை உரை :
செ.அ. சுரேசு சக்தி முருகன்,
இணை செயலாளர்,
மனித உரிமை பாது காப்பு மையம்.

40 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடைபெறும் பார்ப்பன சாதிய கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தின் தொடர்ச்சியாக கருவறையில் நிலவும் தீண்டாமைக்கு எதிராகவே இப்போராட்டம். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கு இறுதி விசாரணையில் இருக்கிறது. வழக்கினை தொடர்ந்த பார்ப்பனர்களோடு தமிழக அரசு சமரசமாக பேசிக் கொள்வதாக கூறி செய்யப்பட்டு வரும் பார்ப்பன சூழ்ச்சியினை அம்பலப்படுத்துவதற்காகவே இப்போராட்டம்.

…. 2002ல் வெளிவந்த ஆதித்தியன் வழக்கு தீர்ப்பில் குறிப்பிட்ட உட்சாதியிலிருந்து அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்திய பின்னர், 2006ல் திமுக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணையையும், இந்து அறநிலைத்துறை சட்டத்தில் திருத்தம் செய்ய அவசர சட்ட திருத்தமும் கொண்டு வந்தது. அர்ச்சகர் பயிற்சியினை 206 மாணவர்களுக்கும் கொடுத்தது.

ஆகமப்படி பார்ப்பனகள் தவிர பிற சாதிக்காரர்கள் அர்ச்சகராகி சாமி சிலையை தொட்டு பூஜைகள் செய்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, மதுரை மீனாட்சியம்மன் கோவில் சிவாச்சாரியாக்கள் அவசர சட்டத்திருத்தத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றுவிட்டனர். தடையாணை பெற்று 7 ஆண்டுகள் கடந்துவிட்டது. அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் இன்றும் அர்ச்சகராக முடியவில்லை. திமுக அரசும் வழக்கினை விரைந்து நடத்த முயற்சிக்கவில்லை. மனித உரிமை பாதுகாப்பு மையம் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை தமிழகம் முழுவதும் ஒருங்கிணைத்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக பின்புலமாக இருந்தது. அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் ரங்கநாதனை உச்சநீதிமன்ற வழக்கில் எதிர்மனுதாரராக இணைத்து வழக்கினை நடத்தி வருகின்றது. தற்பொழுது இவ்வழக்கு இறுதிவிசாரணைக் கட்டத்தில் இருக்கின்றது.

இந்நிலையில் கடந்த விசாரணையின்போது அரசு தரப்பிலிருந்து நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தீர்க்கப்பட வேண்டிருப்பது பார்ப்பனரல்லாதோருக்கு சாமி சிலையைத் தொட்டு பூசை செய்ய உரிமை இருக்கிறதா என்பதுதான். இது சொத்து தகராறோ அல்லது பணப்பிரச்சினையோ அல்ல. இது நீதிமன்றத்திற்கு வெளியில் சமரசம் செய்துகொள்ள இயலாத காரியம். 2000 ஆண்டு காலமாக பார்ப்பனீயம் இது போன்ற சூழ்ச்சிகள் மூலம் தான் தன்னை நிலைநிறுத்தி வந்துள்ளது. இப்பார்ப்பன சூதை வெல்ல அனுமதித்தால் கருவறையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க முடியாது. இன்னும் பல ஆண்டுகள் நாம் சாதி இழிவை சுமக்க வேண்டியிருக்கும்.

ரங்கநாதன்,
மாநில தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.

2006 அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை கொண்டு வந்தார்கள். 2007-2008ல் பயிற்சி முடித்தோம். 2006ல் மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆதிசிவாச்சார்யர்கள் சங்கம் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். சிவாச்சாரியார்கள் சங்கம் மற்ற சாதிக்காரர்கள் சாமி சிலையை தொட்டால் தீட்டாகிவிடும் என்கிறார்கள்…

அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்கள் பலர் பல தனியார் கோவில்களில் பூசை செய்துவர்றாங்க. தீட்டாகவில்லை. தமிழக அரசு விரைந்து வழக்கினை முடிக்க வேண்டும். மதுரை ஆதிசிவாச்சாரியார் சங்கத்துடன் பேசி சுமூக தீர்வு காணுகிறோம் என்று தமிழக அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் சென்ற மாதம் வாய்தா வாங்கி இருக்கிறார்.

. …நாங்கள் படித்த தகுதிக்கேற்ப பெரிய கோவில்களில் பணி நியமனம் வழக்கவேண்டும். காஞ்சி சங்கராச்சாரியார், தேவநாதன் போன்றோர் சாமி சிலைகளைத் தொட்டால் தீட்டில்லை, ஆனால் நாங்கள் தொட்டா தீட்டாகுமா. கோவில் கருவறையில் நிலவும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தமிழக அரசு தகுதிக்கேற்ப பணிநியமனம் செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட மனித உரிமைப் பாதுகாப்பு மைய செயலாளர் கண்ணன்

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்கப் போகிறேன் என்று கலைஞர் அனைத்து சாதி அர்ச்சகர் ஆகும் சட்டத்தை பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மாணவர்கள் அர்ச்சகராகலாம் என்று கொண்டு வந்தார். …பட்டர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியதும் கலைஞர் பின்வாங்கிவிட்டார். மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்திருக்கும் நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மைய மாணவர்களை சந்தித்து, ஒவ்வொரு ஊராகச் சென்று பிரச்சாரம் செய்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் உருவாக்கினோம்.

இவர்கள் தீண்டாமையை ஒழிக்கக் கற்றவர்கள். பயிற்சி பெற்ற மாணவர்கள் சிறுசிறு கோவில் வேலை செய்கிறார்கள். தடையாணை பெற்ற பார்ப்பனர்களிடமே வேலைப் பார்ப்பது வேதனை எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

உச்சநீதிமன்றம் பார்ப்பன சிவாச்சாரியார்களுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தால் மக்கள் மன்றம் முன் இப்பிரச்சினையை எடுத்துச் செல்வோம்.விடமாட்டோம்.

வெற்றி வேல் செழியன்,
மாநில அமைப்பு செயலாளர்,
பு.ஜ.தொ.மு

தொழிற்சங்கம் என்றால் தொழிலாளர் பிரச்சினை, சம்பள உயர்வு போராட்டத்திற்கு போவோம் என்று நினைப்பார்கள். ஆனால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தை அமல்படுத்தக்கோரி நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறேன்.

மற்ற சாதிக்காரங்க கருவறையில் போனால் சாமி வெளியேறிவிடும் என்று சொல்கிறார்கள். தேவநாதன், ஜெயேந்திரன் பண்ண அட்டூழியங்களில் கோவில் இடிந்து வீழ்ந்தல்லவா இருக்கவேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் பார்ப்பனர்களின் யோக்கியதையை பற்றி அக்கோயிலுக்கு அருகில் உள்ள சாதாரண மக்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும்.

தின்று தின்று கொழுத்த கோவில் பூஜை செய்யும் பார்ப்பனர்களை காண்ராக்டர்களிடம் வேலைக்கு விட்டால் முதுகெலும்பை உருவி தொங்க விட்டு விடுவார்கள்.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க செயலாளர் அறிவழகன்

இந்தியாவை மனுசாஸ்திரங்கள் பிடித்துக்கொண்டு ஆட்டுகின்றது. அர்ச்சகருக்கு படித்தாலும் ஆலயத்திற்குள் நுழையக் கூடாது என்னுமளவிற்கு மனுதர்மம் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற செந்தில்

பார்த்தசாரதி கோயிலில் அனைத்து சாதியினர் அர்ச்சகராகும் சட்டம் மூலம் 32 மாணவர்கள் பயின்றோம். தினமும் காலையில் நித்ய அனுஷ்டானங்கள் செய்தோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற பயிற்சி விளம்பரத்தைப் பார்த்து அர்ச்சகராகும் நோக்கில் வந்தோம். அந்த வேலையில் திருவண்ணாமலை திரௌபதி கோவிலில் பூஜை செய்து கொண்டு இருந்தேன். நாங்கள் ஒரு வருடமாக பயிற்சி பெற்றோம். மேலும் 6 மாதம் நீட்டித்தார்கள். அப்போதே சந்தேகம் வந்ததது. பயிற்சி பெற்று சான்றிதழ் வாங்க அலைய வேண்டி இருந்தது. திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய மறுத்தார்கள். காஞ்சிபுரத்தில் பதிவு செய்துள்ளார்கள் என்று கூறியும் வெகு நேரம் காக்க வைத்து தான் பதிவு செய்தார்கள். நாங்கள் அர்ச்சகராக வேண்டுமென்று முடிவளர்த்து, மாலை போட்டு போகும் போது எங்களை கேலிக்குரியவர்களாகவே பார்த்தார்கள்.

தஞ்சையில் ஒரே குருக்கள் மூன்று கோவில்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். எல்லா கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படவில்லை. எங்களுக்கு அர்ச்சகராகும் நியமன வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திரு.வி.வி.சுவாமிநாதன்,
முன்னாள் அமைச்சர்,
இந்து சமய அறநிலையத்துறை.

தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பு செய்த போது அதை எதிர்த்து போராடியதற்காக என்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். அப்போது சிதம்பரம் நகர்மன்ற தலைவராக இருந்தேன். நகராட்சி அலுவலகத்திற்கு எதிரில் உள்ள கிளை சிறையில்தான் அடைக்கப்பட்டேன். அறிஞர் அண்ணா அவர்கள் எனக்கும் மற்றவர்களுக்காகவும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதற்காகதான் காங்கிரஸ் அரசாங்கம் ஆட்சியை இழந்த்து. தமிழகத்தில் தமிழுக்காக பலபேர் போராடி உயீர்நீத்தனர்.

கோவிலில் தமிழ் போகலாம் தமிழன் போக்கூடாது என்றால் எப்படி ஏற்க முடியும். இந்தியை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டம் போல் கருவறை தீண்டாமைக்கு எதிராக மக்கள் போராட்டம் எழும் என தமிழக அரசை எச்சரிக்கிறேன். எனக்கு 87 வயதாகிறது. இத்தகைய போராட்டங்களில் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்.திமுக தலைவர் கலைஞர் அவர்கள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டத்திருத்தம் கொண்டு வந்தார். என்ன நெருக்கடியோ தெரியவில்லை சட்டமன்றத்தில் அதை நிறைவேற்றாமல் திரும்ப பெற்றுவிட்டார். திமுக அரசு செய்த தவறை அதிமுக அரசாங்கம் சரி செய்ய வேண்டும்.அதற்கு வருகின்ற சட்டமன்ற கூட்டத்தில் முழுமையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

பழக்க வழக்கம் என்ற பெயரில் கருவறையில் தீண்டாமையை எப்படி கடைபிடிக்க முடியும். அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட பிறகு பழக்க வழக்கம் என்பது சமத்துவத்திற்கு எதிராக இருந்தால் அது செல்லாது என 2002 உச்சநீதிமன்றம் ஆதித்தியன் என்ற வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது மதுரை சிவாச்சாரியர்கள் உச்சநீதிமன்றத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு தடை வாங்கியுள்ளனர். தமிழக அரசு சமுக தீர்வு என்ற பெயரில் நமது சமூக நீதியை விட்டு கொடுத்துவிடக்கூடாது. மக்களும் கருவறையில் தமிழன் நுழைய வேண்டும் என்ற போராட்டத்தை இந்தி எதிர்ப்பு போராட்டம் போல் நடக்க வேண்டும் என கூறி பேச்சை முடித்தார்.

வழக்குரைஞர் சி.ராஜு,மாநில ஒருங்கிணைப்பாளர்,
மனித உரிமை பாது காப்பு மையம்,

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 2006 திமுக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு எதிராக மதுரை சிவாச்சாரியர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை உத்த்தரவு பெற்றனர். அதன் இறுதி விசாரணை நாளை 31-1-13 அன்று வர இருக்கிறது.

பயிற்சி முடித்த மாணவர்கள் 206 பேருக்கு ஏதாவது ஒதுக்குப்புற கோவில்களில் பணி நியமனம் கொடுத்து விட்டு கருவறை தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை அப்படியே விட்டு தப்பித்து விடலாம் என தமிழக அரசு செயல்படுவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.

மக்கள் அரசின் அங்கம், நாம் உரிமைக்காக போராடினால்தான் அரசு சரியானபடி செயல்படும்.1970 பெரியார் கருவறை நுழைவு போராட்டத்தை அறிவித்த போது அன்றைய திமுக அரசாங்கம் பெரியாரை நாங்கள் கைது செய்ய மாட்டோம் என்று அர்ச்சகர் நியமனத்தில் வாரிசுரிமையை ஒழித்து சட்டம் நிறைவேற்றியது. நேராக உச்சநீதிமன்றம் சென்ற பார்ப்பனர்கள் சாதகமான உத்தரவை பெற்றனர். வாரிசுரிமையை ஒழித்து இயற்றப்பட்ட சட்டம் செல்லும் உன உச்சநீதிமன்றம் சொன்னது. அதே நேரத்தில் அர்ச்சகர் நியமனத்தில் பழக்கவழக்கம், ஆகமத்தை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூறியது. தமிழக அரசு வழக்கறிஞர் ஒத்துக் கொண்டார். பல சட்ட வல்லுனர்கள் இன்றும் இந்த தீர்ப்பு யாருக்கு சாதகம் என சொல்ல முடியாத குழப்பமான தீர்ப்பு. ஆனால் பெரியார் அன்று 1972 –ல் இந்த தீர்ப்பு பற்றி கூறும்போது ஆபரேசன் சக்சஸ், நோயாளி மரணம் என்று மிக நுட்பமாக தெளிவுபடுத்தினார். இலைமறையாக இருந்த நம்மீதான சாதி இழிவினை இந்த தீர்ப்பு பூதக்கண்ணாடி வைத்து பெரிதுபடுத்தி காட்டிவிட்டது என்றார்.

40 ஆண்டுகால போராட்டத்தின் தொடர் ஓட்டச் சுடர், இன்று நம் தலைமுறையில் நம் கையில் இருக்கிறது. அய்யா வி.வி.சாமிநாதன் அவர்கள் சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழ் உரிமையை நிலை நாட்டும் போராட்டத்திலும், கோவிலை அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போராட்டத்திலும் இறுதிவரை நம் உடன் இருந்தவர். பார்ப்பனர்கள் முதலில் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறுவார்கள், பிறகு அரசில் உள்ள அதிகாரிகள், அரசியல்வாதிகள் மூலம் வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வார்கள். இதுதான் காலம் காலமாக பார்ப்பனர்கள் செய்யும் பித்தலாட்டம்.1982-ல் நடராசர் கோவிலில் நிர்வாக அதிகாரி நியமிக்க வேண்டும் என போட்ட உத்தரவு, 2008-ல் நாங்கள் ஆறுமுகச்சாமியை தரப்பினராக சேர்ந்து பொதுக்கோவில் என்று சொல்லி வெற்றி பெற்றோம். பொதுக்கோவில் என்ற உண்மையை நாங்களா கண்டுபிடித்தோம். அரசு ஏன் செய்யவில்லை. நூற்றாண்டுகளுக்கு பிறகு இன்று உண்டியல் வைக்கபட்டுள்ளது. பலகோடி வருவாயை ஈட்டி உள்ளது.

அது போல் உச்ச நீதிமன்றத்தில் 1972-ல் நடந்த பார்ப்பன சூழ்ச்சி இன்று நடக்காது. பெரியாரின் வாரிசுகளாக இன்று சட்டம் படித்த எங்களைப் போன்றோர் இதை மக்கள் மத்தியிலும் பேசுகிறோம். உச்சநீதிமன்றத்திலும் பேசுவாம். கருவறை தீண்டாமைக்கு எதிராக இம்முறை அரசு மட்டுமல்ல, மக்கள் சார்பில் நாங்களும் வாதாட இருக்கிறோம். ஆகமத்தை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும் என உறுதியாக நாங்கள் போராடினால் பல கோயில்களை இழுத்து பூட்ட வேண்டியிருக்கும். மதுரையில் மொத்தம் உள்ள 116 அர்ச்சகரில் 28 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். கபாலீசுவரர் கோவிலில் 41 பேரில் 4 பேர்தான் முறைப்படி ஆகமம் பயின்றவர்கள். மீதி பேர்கள் உதவிக்கு போன அப்ரண்டீசுகள் தான், அப்படியே காலப் போக்கில் அர்ச்சகராகனவர்கள். திருப்பரங்குன்றத்தில் முருகன், சிவலிங்கம், பெருமாள் ஆகிய மூன்று கடவுள்களுக்கு ஒரே சிவாச்சாரியரே பூசை செய்கிறார். சிவன் பெருமாள் அர்ச்சகர் எப்படி வைணவக் கடவுளுக்கு எப்படி அர்ச்சகராக முடியும்.  முக்கியமாக ஆகமத்தில் கால பூசையை பற்றி தான் கூறுகிறது. என் பெயர், நட்சத்திரம், கோத்திரம் கூறி ஒரு அர்ச்சனை பண்ணுங்க சாமி என்ற நடைமுறையே எந்த ஆகமத்திலும் கிடையாது. கலக்சனுக்காக மாறிய ஆகமத்தை தீண்டாமையை ஒழிக்க மாற்றக் கூடாதா? கருவறையில் லைட், பேன், ஏ.சி. இதெல்லாம் எந்த ஆகமம் என அடுக்கி கொண்டே போகலாம். பார்ப்பானை தவிர பிற சாதியினருக்கு கொடிமர தரிசனம் தான், தாழ்த்தபட்டவர்களுக்கும், பஞ்சமர்களுக்கும் கோபுர தரிசனம்தான் என ஆகமம் சொல்லியது. அரசியலமைப்பு சட்டம் அதனை மாற்றி எழுதியது, என்ன ஆயிற்று? அது போல் கருவறையில் பிற சாதியினர் வந்தால் என்ன ஆகும்?

1972 சட்டம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வாரிசுரிமை அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு அமுல்படுத்தியதா என்றால் இல்லை. தமிழகத்தில் மொத்தம் 1144 அர்ச்சகர்கள் அரசு கோவில்களில் உள்ளனர். இதில் 574பேர் வாரிசுரிமைப்படி தான் இன்றுவரை பணி புரிந்து வருகின்றனர். மேலும் 411 பேர் ரெக்கமண்டேசன் லட்டரில் அர்ச்சகராக பணி நியமனம் பெற்றவர்கள். நம் மாணவர்கள் முழுமையாக ஒன்றரையாண்டு காலம் அர்ச்சகர் படிப்பில் கடும் பயிற்சி பெற்று, தீட்சையும் பெற்றனர். சான்றிதழும் பெற்றுள்ளனர். பார்ப்பனர்களின் தகுதியும், அரசின் யோக்கிதையும் இவ்வளவுதான். தாசில்தார், குரூப் ஒன் வேலை போல அர்ச்சகர் வேலை மிக சிறப்பானது அரசாங்கம் எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என நாங்கள் போராடவில்லை. கருவறை தீண்டாமை இந்துமதத்தின் உரிமையாக அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது என பார்ப்பனர்கள், இல்லாத ஆகமத்தை காட்டி உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றுள்ளனர். தீண்டாமை எந்த வடிவத்தில் யார் எங்கு கடைபிடித்தாலும் தண்டனைக்குரிய குற்றம் என முடிவு செய்யப்பட வேண்டும். வேலை பிரச்சினை அல்ல சொத்து பிரச்சினை அல்ல, நம்மானப் பிரச்சினை. பிறப்பின் சாதி இழிவை துடைக்கும் இந்த போராட்டத்தில் நாங்கள் இறுதிவரை போராடுவோம்.

அன்று பெரியார் காலத்தில் அர்ச்சகர் பணியினை ஏற்க யாரும் இல்லை. இன்று கருவறையில் தீண்டாமையை ஒழிக்க அர்ச்சகமாணவர்கள் 206 பேர் நாங்கள் இருக்கிறோம் என பார்ப்பனருக்கு சவால் விட்டு நிற்கிறார்கள். நம் காலத்தோடு கருவறைத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். அதற்கு எத்தகைய போராட்டத்தையும் நடத்த நாம் தயாராக இருக்க வேண்டும். அனைவரும் போராட ஆதரவு தரவேண்டும்.

 

விஸ்வரூபமெடுத்தார் அம்மா !

19

“சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே தடை” , என்று விசுவரூபம் படத்துக்கான தடை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா அவர்கள். திடீரென்று கூட்டப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில் (un scheduled press conference – the hindu) இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று இரவு தனது இணையப் பதிப்பில் இந்த பேட்டி குறித்த செய்தியை வெளியிட்ட இந்து நாளேடு, “சட்டம் ஒழுங்குதான் என் முன்னுரிமை” என்று தலைப்பிட்டிருந்தது. இன்று இந்துவில் இதே செய்தியின் தலைப்பு “கமலும் முஸ்லீம் தலைவர்களும் ஒப்பந்தத்திற்கு வந்து விட்டால் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் – ஜெயலலிதா” என்று மாறியிருக்கிறது. என்னத்துக்கு தேவையில்லாம அம்மாவின் கோபத்துக்கு ஆளாகணும் என்பதுதான் காரணம்.

ஆனால் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா லேசாக உண்மையைச் சொல்ல முயன்றிருக்கிறது.

“உருவாகி வரும் புயலை அம்மா கவனித்து விட்டதுதான், அவர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதற்கு காரணம். கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஜனிகாந்த், பாரதிராஜா போன்றவர்கள், நேரடியாக அரசுக்கு எதிராகப் பேசவில்லை என்ற போதிலும், ராஜ்கமல் அலுவலகத்துக்கு வந்து சேரும் திரையுலகத்தினரின் கூட்டம், அவர்களுடைய அடக்கி வைத்திருக்கும் ஆத்திரத்தையும் கமலஹாசனுக்குப் பெருகிவரும் அனுதாபத்தையும் காட்டிவிட்டது.

தாங்கள் அரசால் பாதுகாக்கப் படுவதாக, எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் எண்ணக் கூடும். ஆனால், இணையத்திலும், தெருவிலும் சராசரி குடிமக்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர். அரசின் உளவுத்துறை இதைத் தெளிவாக தனது உயர்மட்டத்துக்கு தெரிவித்து விட்டது. போலீசின் உயர் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை காலை பேசிய பின், நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதென்றும், அப்படி முடித்ததற்கான பெருமையையும் தானே தேடிக்கொள்வது என்றும் ஜெயலலிதா முடிவு செய்திருப்பார் போலத் தெரிகிறது.”

டைம்ஸ் ஆப் இந்தியாவின் தகுதிக்கு, இது கொஞ்சம் அதிகமான வீரம்தான். வரப்போவது மான நட்ட வழக்கா, அல்லது இதனை சரிக்கட்டும் விதத்தில் நாளைக்கு ஏதேனும் ஒரு அம்மா துதியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நடந்தது என்ன என்பதை சாதாரண குடிமகனுக்குப் புரியும்படி சொல்வதென்றால், “அம்மா பய்ந்துட்டாங்கோ”.

இப்படி ஏத்தி வுட்டு ஏத்தி வுட்டு அம்மாவின் உடம்பை புண்ணாக்கி விட்ட குற்றத்துக்காக நேற்று யார் யாருக்கெல்லாம் கோட்டையில் கச்சேரி நடந்ததோ நமக்குத் தெரியாது.

“சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?” என்று கேட்ட வின்னருக்குப் பிறகு, என்றென்றும் நம் நினைவில் நிற்கக்கூடிய இன்னொரு “வின்னர்” அம்மாதான்.

அம்மாவின் விளக்கங்களை கவனியுங்கள்.

விஸ்வரூபம் வெளியாக இருந்த தியேட்டர்கள் முன்பாக இசுலாமிய அமைப்புகள் நடத்தவிருந்த போராட்டங்கள் வன்முறைச் சம்பவங்களாக மாற வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தனவாம். ஒரு சம்பவத்தை அனுமதித்துவிட்டு அது வன்முறையாக மாறிய பிறகு தடுப்பதற்கு பதிலாக, சம்பவமே ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டதாம்…

“56,440 போலீசாரை, 524 தியேட்டர்களில் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியும்? இது நடைமுறையில் சாத்தியமா” என்று தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் முதல்வர். வகுத்தால் கிடைப்பது 107.7. ஒரு தியேட்டருக்கு 107.7 போலீசார். அவர்களை 3 ஷிப்டுகளாக வேறு கூறு கட்டவேண்டும்.

ரொம்ப கஷ்டம்தான். உயர்நீதிமன்றத்தில் வாதிடும்போது “சென்சார் போர்டு சர்டிபிகேட் ஊழல், போர்டு மெம்பர்களின் அப்பாயின்மென்ட்டே ஊழல்” என்று காரணங்களை அடுக்கினார் அட்வகேட் ஜெனரல். அப்புறம் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாதத்தின் போது, “இது 31 மாவட்ட ஆட்சியர்கள் போட்டிருக்கும் தடை உத்தரவு. அம்மாவுக்கும் இதற்கும் சம்மந்தமேயில்லை” என்று அடித்துப் பேசினார். ‘இப்படிப்பட்ட சில்லறை விவகாரங்களிலெல்லாம் அம்மாவை ஏன் இழுக்கிறீங்க’ என்ற தோரணையில் இருந்தது அவருடைய பதில்.

நேற்று, ‘போலீசு கணக்கை காட்டி சமாளித்து விடலாம்’ என்று போலீசு அதிகாரிகள் அம்மாவுக்கு ஐடியா கொடுத்திருப்பது போலத் தெரிகிறது.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும் சரி, முல்லைப்பெரியார் தாக்குதலுக்கும் சரி, கூடங்குளம் தடியடிக்கும் சரி.. எல்லா விவகாரங்களுக்கும் போலீசு அதிகாரிகள் என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ, அதை எந்திரக் குரலின் ஏற்ற இறக்கத்துடன் படித்து விடுவார் அம்மா.

இன்றைக்கு வேலை செய்யும் இந்த தத்துவம் பரமக்குடியில் ஏன் வேலை செய்யவில்லை? தேவர் சாதி வெறியர்களை முன்கூட்டியே கைது செய்து பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்த்திருக்கலாமே.

கூடங்குளம் அணு உலைக்கு 144 போட்டிருக்கலாமே. அவர்கள் தம் மத உணர்வுக்காக போராடவில்லை. உயிரையும் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். ஆனால்சுமார் 9 மாதங்களாக கூடங்குளம் வட்டாரம் முழுவதும் 144 போடப்பட்டுள்ளது. அணு உலையை எதிர்த்தவர்கள் மீது ராஜத்துரோகம் முதல் தேசப்பாதுகாப்பு சட்டம் வரை பாய்ச்சப்பட்டுள்ளது.

போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?

“தமிழ்நாடு சினிமா ரெகுலேசன் ஆக்ட் படி மாநில அரசு படத்தை நிரந்தரமாகவே தடுக்க முடியும்” என்று மாநிலத்தின் அதிகாரத்தை மனிஷ் திவாரிக்கு நினைவு படுத்தும் அம்மாவுக்கு, கூடங்குளம் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமை பற்றி மறந்து போனது ஏன்?

“நினைத்தால் நான் நிரந்தரமாகவே தடுத்திருக்க முடியும். ஆனால் தடுக்கவில்லை. அதிலிருந்தே தெரியவில்லையா இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லையென்று” -என மடக்கியிருக்கிறார் அம்மா. (“நெனச்சா கஞ்சா கேஸ்ல உள்ள வச்சிடுவேன்” என்ற போலீசின் குரலைப் போல இல்லை?)

மேலும் சில உண்மைகளையும் அம்மா இந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஜெயா டிவிக்கு படத்தை விற்க மறுத்த காரணத்திற்காகத்தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை அம்மா ஆணித்தரமாக மறுத்திருக்கிறார்.

“ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அந்த நிறுவனத்தில் ஒரே ஒரு பங்கு கூட எனக்கு இல்லை”  என்று ஐயந்திரிபற தெளிவு படுத்தியிருக்கிறார்.

போயஸ் தோட்டத்துக்கு உள்ளேயிருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான செருப்புகள், புடவைகள், நகைகள் ஆகியவையே தன்னுடையதில்லை என்று அம்மா தெளிவு படுத்தியிருக்கும்போது, போயஸ் தோடத்துக்கு வெளியே இருக்கும் ஜெயா டிவிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

அம்மாவுடைய கால் அளவுக்குப் பொருத்தமான செருப்புகளையும், இடுப்புக்குப் பொருத்தமான ஒட்டியாணம், கைக்கு பொருத்தமான வளையல் உள்ளிட்ட நகைகளை செய்து எடுத்துக் கொண்டு வந்து, கஞ்சா பொட்டலத்தை வைத்து எடுப்பது போல, போயஸ் தோட்டத்தில் வைத்து எடுத்தவர் நல்லம நாயுடு. ( சொத்து குவிப்பு வழக்கின் போலீசு அதிகாரி)

அதே போல, யாரோ அம்மாவின் பெயரில் ஜெயா டிவி என்று நடத்திக் கொண்டிருந்தால் அதற்கு அம்மா பொறுப்பாக முடியுமா?

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட வேண்டுமென்றே “ஜெயா டிவி” மைக்கை மட்டும் அம்மாவின் முன் வைத்திருந்தார்கள். அதற்கு அம்மா என்ன செய்ய முடியும்? நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு நிருபர் கூட அம்மாவை கேள்வியே கேட்கவில்லை. அதற்கும் கூட அம்மாவையே குற்றம் சாட்ட முடியுமா?

“வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என்று ப.சிதம்பரத்தை புகழ்ந்து கமலஹாசன் பேசியதனால் ஏற்பட்ட கோபம்தான், படத்தை தடை செய்யக் காரணமோ” என்று அவதூறு செய்திருக்கும் கருணாநிதிக்கும் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார் அம்மா. “நாட்டின் பிரதமரை கமல்ஹாசன் தேர்வு செய்ய முடியாது. 100 கோடி வாக்காளர்கள்தான் தேர்வு செய்ய முடியும் எனும்போது, நான் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?” என்று கேட்டிருக்கிறார்.

சரியான கேள்வி. சபாநாயகர் ஜெயக்குமாரின் பிறந்தநாளில், வருங்கால முதல்வர் என்று அவருடைய அடிப்பொடிகள் போஸ்டர் அடித்து ஒட்டியதுதான் அவருடைய அகால அரசியல் மரணத்துக்கு காரணம் என்று பல பத்திரிகைகள் அவதூறாக எழுதியிருந்தார்கள். அதை ஜெயக்குமாரும் நம்பியிருக்க கூடும். தன்னுடைய மரணத்துக்கு இது காரணமல்ல என்ற உண்மையை இந்த அறிக்கையைப் பார்த்து அவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அம்மாவிடம் அரசியல் பக்குவம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. “கமல் எனக்கு எதிரி அல்ல” என்று அம்மா கூறியிருப்பதாக தினமணி முதல் பக்கத்தில் கட்டம் கட்டிப் போட்டிருக்கிறது. ஆனால், “Kamalhasaan is not my rival in anyway” என்று அம்மா கூறியதாக ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது. “கமலஹாசன் என் எதிரியாகமாட்டார் – எந்த விதத்திலும்” என்றே இதனை மொழிபெயர்க்க இயலும்.

நம்முடைய மொழி அறிவுக்கும், அம்மா வெளியிட்டிருக்கும் உணர்ச்சிக்கும் இந்த மொழி பெயர்ப்பே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

கமலஹாசன் என் எதிரியாக மாட்டார் – எந்த விதத்திலும் என்று தலைப்பு போட்டிருந்தால் அம்மா மேலும் மகிழ்ந்திருப்பார் என்பதை தினமணி ஆசிரியருக்கு சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளோம்.

பின் குறிப்பு:

“அதுக்காக பத்து பேர் சத்தம் போட்டா உடனே அரசாங்கம் சரண்டர் ஆகிவிடுமா” என்ற கேள்வி எதிர்த்தரப்பினரால் எழுப்பப்படும்.

எனவே, “படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என்ற எங்கள் அச்சம் (apprehension) உண்மையானதே” என்று நிரூபிப்பதற்கான முயற்சியில் போலீசு இறங்கும். உளவுத்துறை ஒரு ஊகத்தை வெளியிடுகிறது என்றால் அப்படி நடக்க வேண்டும். நடக்காவிட்டால் நடத்தப்படும்.

இல்லையென்றால் உளவுத்துறையை அம்மா நம்புவாரா, அம்மாவைத்தான் மக்கள் நம்ப முடியுமா? அம்மாவை நம்பியவர்களுக்கு எங்களுடைய இந்த அச்சம் (apprehension) சமர்ப்பணம்.

போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !

1

அனைத்துச் சாதியினரும்
அர்ச்சகராகும் சட்டத்திற்கு குழி பறிக்காதே!
தீண்டாமையை நிலைநாட்டும் பார்ப்பன சிவாச்சாரியார்களுடன்
உச்சநீதிமன்ற வழக்கில் சமரசம் பேசாதே!

என்ற தலைப்பில் தமிழக அரசைக் கண்டித்து 30-1-2013ல் சென்னையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அறிவித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளும் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருந்தது.

அதன்படி 28.01.2013 இரவு மதுரையில் சுவரொட்டி ஒட்டுவதற்காகத் தோழர்கள் சென்றனர். சுவரொட்டிகளால் எப்போதும் நிரம்பி வழியும் சிம்மக்கல் பகுதியில், சுவரொட்டியை டூவீலரில் வைத்து விட்டு அருகிலுள்ள டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த திலகர்திடல் இன்ஸ்பெக்டர்,

“யார் இது? என்ன போஸ்டர், காட்டுங்க பார்ப்போம்” என்று கேட்டார். போஸ்டரைக் காட்டினோம். அதைப் படித்துப் பார்த்துவிட்டு

“போஸ்டர் ஒட்ட அனுமதி வாங்கியிருக்கீங்களா?”. அனுமதி வாங்கவில்லை.

“அப்படின்னா அனுமதி வாங்கிட்டுத்தான் ஒட்டனும்” என்று சொல்லிவிட்டு செல்போனில் மேலதிகாரியைக் கூட்பிட்டு சுவரொட்டி வாசகங்களைப் படித்துக்காட்டினார். திரும்பத்திரும்ப படித்துக் காட்டினார். இதை ஒட்ட அனுமதிக்கலாமா? கூடாதா என்று கேட்டு விட்டு கடைசியாக,

“ஒட்டக் கூடாது. வேண்டுமானால் நாளைக்கு என்னிடம் எழுத்து முலமாக அனுமதி வாங்கி விட்டு அப்புறம் ஒட்டுங்கள்” என்றார்.

“ஏன்சார், இவ்வளவு போஸ்டர் ஒட்டியிருக்காங்களே. இவங்களெல்லாம் அனுமதி வாங்கியா ஒட்டியிருக்காங்க?”

கூட இருந்த ஏட்டு சொன்னார். “அதெல்லாம் கல்யாணம், காதுகுத்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர். நீங்க அரசாங்கத்த கண்டிச்சுல போஸ்டர் ஒட்றீங்க.”

இன்ஸ்பெக்டர் சொன்னார்: “போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னா ஒட்டக்கூடாது அதைமீறி ஒட்டுனா நாங்க கிழிச்சுடுவோம். உங்க மேல கேஸ் போடுவோம். உங்க பேரு, அட்ரஸ், செல்நம்பர் குடுங்க”
என்று வாங்கிக்கொண்டு உறுமி விட்டுப் போனார்.

அந்தப் பகுதியில் சில சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு ஆரப்பாளையம் பஸ்நிலையம் பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து அரசரடி வரும்போது போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டிராபிக் சார்ஜென்ட் எங்களைக் கூப்பிட்டு “என்ன போஸ்டர்” என்றார். “போஸ்டர் ஒட்டக் கூடாது. இப்படி ஓரமா நில்லுங்க” என்று நிற்க வைத்துவிட்டு கரிமேடு காவல்நிலையத்துக்கு போன் செய்தார். அங்கிருந்து ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் வந்தார், டிராபிக் சார்ஜென்ட் நாங்கள் போஸ்டர் ஒட்ட வந்த விவரத்தைச் சொன்னார். அந்தப் பெண் சப் இன்ஸ்பெக்டர் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளவர். அவருக்கு எதுவுமே தெரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தார்.

போலீஸ் ஜெயலலிதாடிராபிக் சார்ஜென்ட் “இவங்கள விசாரிங்க. என்ன பேசாம நிக்கிறீங்க” என்று கேட்க அவரோ,

“சார் நான் புதுசு இதுவரை ஒரு ரைடோ, டிரெயிலோ கூட வந்ததில்லை. பழக்கமில்ல” என்று சொன்னார். சார்ஜென்ட் பேசாமல் இருக்கவே, அந்தப் பெண் “இந்த ஏரியாவுல போஸ்டர் ஒட்டக் கூடாது. போஸ்டர்ல செல்போன் நம்பரல்லாம் இருக்கா” என்று கேட்டு குறித்துக் கொண்டு போனார்.

அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தோம். அங்கே திரும்பிய பக்கம் எல்லாம் போலீஸ் காவல். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விழித்திருக்கிறார்கள். அந்த போலீஸ் போஸ்டரைப் பறித்துக் கொண்டு போய்விடும் என்பது தெரிந்திருந்ததால், மதுரைக் கல்லூரி பக்கம் போய் ஒட்டிவிடலாம் என்று போனால் அங்கேயும் இரண்டு காக்கிச் சட்டைகள் இருட்டில் குந்திக் கொண்டிருந்தனர். சந்து பொந்துகளுக்குள் சென்று போஸ்டரை ஒட்டி விட்டு திரும்பி வரும் போது இரண்டு போலீஸ்காரர்கள் போஸ்டரைக் கிழித்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் ஒட்டிய போஸ்டரை மட்டுமல்ல. அஞ்சா நெஞ்சன், தென்மண்டலத் தளபதி, மத்திய ரசாயனம் மு.க.அழகிரியின் ஜனவரி 30 பிறந்தநாள் போஸ்டரையும் தான்.

அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது. மொத்தத்தில் பாசிச ஜெயாவின் போலீசு ராஜியம் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் தீவிரமாகப் பறித்துக் கொண்டிருப்பதே உண்மை.

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, மதுரை மாவட்டக்கிளை.

மதுரை ஆதீனம் மைனர் அருணகிரியை ஆட்கொண்ட அல்லா !

114

லங்கைத் தமிழ் இஸ்லாமியப் பெண் ரிசானா நபீக் சவுதி அரசாங்கத்தால் தலைவெட்டி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடக்கும் விவாதங்களை அறிவீர்கள். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த, வெகு சிலர் மட்டுமே இந்த விவகாரத்தில் ஷரியத் சட்டத்தையும் சவுதி அரசையும் விமர்சித்து வருகிறார்கள். இவ்விவகாரத்தில் சரியான முறையில் எதிர்வினையாற்றியிருந்த மனுஷ்யபுத்திரனை, தவ்ஹீத் ஜமாத் என்ற மதவெறிக் கும்பலின் தலைவர் பி.ஜைனுலாபிதீன் வார்த்தைகளாலேயே கொலை செய்திருந்ததும், அதைத் தொடர்ந்து வினவு தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையும் வாசகர்கள் அறிந்ததே.

ஷரியத் சட்டத்தின் ‘மாண்பை’ நிலைநாட்ட களமிறங்கியுள்ள பி.ஜே கும்பல், அதற்கு ‘கலர் கலராக’ விளக்கங்களைத் தந்து வருகிறது. நக்கீரனில் மனுஷ்யபுத்திரன், ஆனந்த விகடனில் பாரதி தம்பி – உள்ளிட்டு ஷரியத் சட்டத்தை விமர்சித்தவர்களை “டேய்… மரியாதையா நேரடி விவாதத்திற்கு வாங்கடா… #$%&*#@#$…” என்று சவுதி வஹாபியம் இவர்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ள மரியாதையோடும் கண்ணியத்தோடும் கோட்டா சீனிவாசராவ் பாணியில் விவாதத்திற்கு அழைத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை மண்ணடியில் சென்ற 27.1.2013   அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  “இஸ்லாமிய சட்டமே தீர்வு” என்ற தலைப்பில் நடத்திய பொதுக்கூட்டத்திற்கு சென்று வந்தோம்.

நாங்கள் சென்றிருந்த போது கோவை ரஹ்மத்துல்லா என்பவர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சினூடாக பாரதி தம்பி, ஜோஸபின் உள்ளிட்ட பத்திரிகையாளர்களோடு சேர்த்து மனுஷ்யபுத்திரனுக்கும் மண்டகப்படி நடந்து கொண்டிருந்தது. “பாதிக்கப்பட்ட குடும்பத்தைப் பற்றி யோசித்தீர்களா மிருகங்களே….” என்றவர், “இந்த ரிசானா நபீக் என்ன பத்தினியா.?.” என்று திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

எல்லா ஆணாதிக்கப் பன்றிகளின் வாயிலிருந்தும் வருகின்ற வழக்கமான டயலாக் இது. ரிசானா நடத்தை கெட்டவளாவதற்கு குறைந்த பட்சம் ஒரு ஷேக்கின் துணையாவது தேவை என்பது ரஹ்மத்துல்லாவுக்கு தெரியாதா? அந்த ஷேக்கை கண்டு பிடித்து தண்டித்து விட்டார்களா? இத்தகைய குற்றம் செய்யும் ஆண்மகனுடைய உறுப்பை, எதைக் கொண்டு அறுப்பது என்று ஷரியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? அல்லது “குருதிப்பணம்” மாதிரி ஏதாவது அபராதம் கட்டிவிட்டு அத்தகைய மைனர் குஞ்சுகள் எஸ்கேப் ஆவதற்கு இறைவன் தன்னுடைய சட்டத்தில் வழி செய்து கொடுத்திருக்கிறானா?

தங்கள் மதத்தையே சார்ந்த பரிதாபத்துக்குரிய ஒரு ஜீவனை  ரகமதுல்லாக்களும் ஜெயினுலாபுதீன்களும் இப்படிக் குதறுவதற்கு காரணம், அவள் ஒரு பெண், அதுவும் ஏழைப்பெண், இலங்கை என்ற ஏழை நாட்டைச் சேர்ந்த ஏழை தமிழ்ப் பெண். இவர்களோ, சவூதி ஷேக்குகளின் பங்களா நாய்கள்.

ரிசானா நபீக்கை தமிழ் சீரியலில் வரும் வில்லி ரேஞ்சுக்கு சித்தரித்து, மொழி தெரியாத நாட்டில் தெற்கு வடக்கு அறியாத ஊரில்  பயங்கரமாகத் திட்டம் தீட்டி குழந்தையைக் கொன்ற கொலையாளி என்பதாக விவரித்து முழங்கிக் கொண்டிருந்த ரஹ்மத்துல்லா, ரிசானாவுக்கு அந்தக் குழந்தையைக் கொலை செய்வதற்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும் என்ற மிகச் சாதாரணமான கேள்விக்கு கூட கடைசி வரைக்கும் பதிலளிக்கவில்லை.

குழந்தைக்கு பாலூட்ட வேண்டிய கடமை ஷரியத் சட்டங்களின் படி யாருக்கு உள்ளது, வேலைக்காரிக்கா? பணக்காரப் பெண்களின் கடமைகள் என்ன, ஏழைப்பெண்களின் கடமைகள் என்ன என்று ஷரியத் சட்டத்தில் அல்லா தனித்தனியாக பிரித்து எழுதியிருக்கிறானா? எல்லாப் பெண்ணுக்கும் ஒரே சட்டம்தான் என்றால், பிள்ளைக்கு பால் கொடுக்க முடியாத தாயை அல்லவா முதலில் விசாரிக்க வேண்டும்? 3 மாதக் குழந்தைக்கு பால் கொடுப்பதற்குக் கூட ஆள் வைத்து விட்டு, ஷேக்கின் பொண்டாட்டி எங்கே போயிருந்தார்? பியூட்டி பார்லருக்கா, தொழுகை நடத்தவா?

ஆண்களின் துணையின்றி ரோட்டில் நடந்தாலே சாட்டையால் அடிக்கும் தலிபான்களை நியாயப்படுத்துகின்ற இந்த தமிழக தலிபான்கள், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண் துணையின்றி ஏழைப் பெண்களை இறக்குமதி செய்கிறார்களே வளைகுடா ஷேக்குகள், அவர்களுக்கு ஷரியத் கூறும் தண்டனை என்ன என்று தெரிவிக்கவில்லை. இப்படி பெண்களை இம்போர்ட் எக்ஸ்போர்ட் செய்யும் டிராவல் ஏஜென்சி முஸ்லிம்களுக்கு என்ன தண்டனை என்றும் கூறவில்லை.

ஒருவேளை, ஷரியத்துக்கு உண்மையாக நடந்து கொள்ள வேண்டும், (பெண்களை ஆண் துணையின்றி தனியாக வரவழைக்க கூடாது) என்ற உயர்ந்த நோக்கத்தில்தான் 70 வயது ஷேக்குகள் 13 வயது சிறுமிகளை இந்தியாவிலிருந்து நிக்கா செய்து அழைத்துப் போகிறார்களோ?

கடுகளவாவது நேர்மையோ சொரணையோ இருந்தால், இவர்கள் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

வார்த்தைக்கு வார்த்தை ரிசானா தான் கொலையாளி என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் உறுதிப் படுத்தியுள்ளதாகச் சொன்ன ரஹ்மத்துல்லா, கடைசி வரை அதன் அறிக்கையின் நகலை கூட்டத்தில் படித்துக் காட்டவே இல்லை. அதிருக்கட்டும். பிரேதப் பரிசோதனை என்கிற பெயரில் இறந்த உடலைக் கிழிக்க இஸ்லாம் அனுமதிக்கிறதா? இல்லை என்று சொல்லும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களும் உள்ளனர். உயிரோடிருப்பவர்களை வெட்டித்தான் கொல்லவேண்டும் என்று தெளிவாக கூறியிருக்கும் இறைவன், பிணங்களை அறுப்பது, தைப்பது, ஆடோப்சி ரிப்போர்ட் எழுதுவது ஆகியவை பற்றி எதுவும் சொல்லாமலிருக்க வாய்ப்பில்லை. அது குறித்து அல்லா பிறப்பித்திருக்கும் ஆணைகளையும் ரகமதுல்லாக்கள் விளக்குவது நல்லது.

அடுத்து இஸ்லாத்தை அமெரிக்கா உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இழிவாகச் சித்தரிக்கிறார்கள் என்றும், இதை அந்த அல்லாவே முன்னின்று முறியடிக்கிறாரென்றும் பேசத் துவங்கினார் ரஹ்மத்துல்லா. அமெரிக்கா நடத்திய ‘ஆய்வு’ ஒன்றின் படி தற்போது உலகில் 175 கோடி(!?) முசுலீம்கள் இருப்பதாக சொன்னார்.

இஸ்லாமியர்களில் பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கிய மொத்த மக்கள் தொகை 150 கோடி என்கிறது ஐ.நா சபையின் கணக்கு. வகாபி தீவிரவாதிகளின் கருத்துப்படி ஷியாக்கள், அகமதியாக்கள் மற்றும் சுஃபி மார்க்கத்தினர் கொன்றொழிக்கப்பட வேண்டிய காஃபிர்கள். அந்த வகையில் அளவற்ற அருளாளனான அல்லாவின் திருக்கருணையால் எப்படியும் இவர்கள் கொல்லப்பட்டு விடுவார்கள் என்பதால், இவர்களின் எண்ணிக்கையை மொத்த முஸ்லிம்களின் எண்ணிக்கையிலிருந்து கழித்திருக்க வேண்டும்.

ஆனால் ரஹ்மத்துல்லாவோ, இன்னும் இருபது ஆண்டுகளில் முஸ்லிம்களின் மக்கட்தொகை 350 கோடிகளாக உயரும் என்று சொல்ல, கூட்டம் ‘அல்லாஹு அக்பர்’ என்று கூச்சலிட்டது. நமக்கோ முல்லா ஜோக் நினைவுக்கு வந்தது.

இந்தியாவில் இன்றைக்கு சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் மதமாற்றத்தின் மூலமும் பிள்ளை பெற்றுத் தள்ளுவதன் மூலமும் சீக்கிரம் பெரும்பான்மை பலம் பெற்றுவிடுவார்கள் என்பதே இந்து முன்னணி ராம கோபாலன்ஜீக்கள் காட்டும் பூச்சாண்டி.

இந்த நச்சுப் பிரச்சாரத்தையே கொஞ்சம் பட்டி பார்த்து பாலீஷ் போட்டு ‘ஆய்வு’ அறிக்கையாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும் அவ்வப்போது வெளியிடுவது வாடிக்கை. இது போன்ற ‘ஆய்வறிக்கைகளின்’ மூலம் தான் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் இஸ்லாமியர்கள் பற்றிய ஒரு அச்சமூட்டும் பிரச்சாரமும், வெறுப்பும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அதே சரக்கை தவ்ஹீத் மேடையிலிருந்து அவிழ்த்து விட்டு, கைதட்டலும் வாங்கி விட்டார் ரஹ்மத்துல்லா.

தொடர்ந்து பேசிய ரஹ்மத்துல்லா, “இஸ்லாத்தை தவறாகச் சித்தரிப்பவர்களின் வாயிலிருந்தே அல்லா இஸ்லாத்தின் சட்டதிட்டங்களின் ‘மேன்மையைப்’ பற்றிப் பேச வைக்கிறான்” என்று சொல்லி அதற்கு சில சான்றுகளையும் கூறினார்.  “பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் இஸ்லாமியப் பெண்கள் போன்று பர்தா அணிவது மேலானது” என்று மதுரை ஆதினம் அருணகிரி சொன்னாராம். இதைச் சொன்னவுடன் நமக்கு குமட்டிக்கொண்டு வந்தாலும் கூடியிருந்த கூட்டம், அல்லாஹு அக்பர் என்று சொல்லி புல்லரித்தது.

நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, “எல்ல்…லா” புகழும் இறைவனுக்கே!

பாரதிய ஜனதா கட்சி, பெண்கள் பாதுகாப்பாக வாழ வேண்டுமானால் கண்ணியமான உடை உடுத்த வேண்டும் என்று கூறியது கூட அல்லாவின் பவர்தான் என்றார் ரஹ்மத்துல்லா. 2002 இல் குஜராத்தில் பர்தா போட்ட இஸ்லாமியப் பெண்கள் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லப்பட்டார்களே, அங்கே அல்லாவின் பவர் “கட்”டாகி விட்டதா, ஷட் டவுனா என்று கூறவில்லை.

ரஹ்மத்துல்லா பேசிய உரையில் வரிக்கு வரி தவறான தகவல்களும் வெற்றுச் சவடால்களுமே நிறைந்திருந்தன.  “25 கோடி மக்கள் தொகை கொண்ட சவுதியில் நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வருட்த்திற்கு 24 கொலைகளும் 13 கற்பழிப்புகளுமே நடக்கின்றன. இது மொத்த மக்கள் தொகையில் .0001 சதவீதம் தான்” என்றார் ரஹ்மத்துல்லா. அதிகாரப்பூர்வமாக சவுதி வெளியிட்டுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களின் படியே அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2.7 கோடி தான். இதில் சவுதி தேசத்தவர் வெறும் 1.8 கோடியினர் தான்; மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் 84 லட்சம். கூடவே ஷரியத் அமுல்படுத்தப்பட்டும் குற்றங்களின் சதவீதம் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது என்பதற்காகவே குற்றங்களின் எண்ணிக்கை விவரங்களை வெளியிடுவதை 2011-ம் ஆண்டு முதலாக சவுதி அரசாங்கம் நிறுத்தியும் வைத்துள்ளது.

இத்தகைய பொய்களையெல்லாம் ‘எதிரி’களிடமிருந்து கடன் வாங்கிக் கொண்டாவது இஸ்லாத்தின் பெருமையை காப்பாற்ற வேண்டியிருக்கிறது போலும். அதுதான் அடுக்கடுக்கான பொய்களையும், அவதூறுகளையும் கரை புரண்ட வெள்ளம் போல பேச வைக்கிறது.

தொடர்ந்து சவுதியைப் பொறுத்தவரையில் இஸ்லாமியச் சட்டங்களின் படி யாராக இருந்தாலும் தண்டனை கொடுத்து விடுவார்கள் என்ற ரஹ்மத்துல்லா, அப்படிக் குற்றங்களில் ஈடுபட்டது சவுதி இளவரசன் குடும்பமாக இருந்தாலும், உயர்ந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும் சீவிப்புடுவோம் சீவி என்றார் (இதற்கும் ஒரு அல்லாஹு அக்பர்).

ஆனால் இலட்சக் கணக்கான இராக், ஆப்கான் குழந்தைகளையும் மக்களையும் காவு வாங்கிய அமெரிக்க ஏவுகணைகளுக்கு தளம் அமைத்துக் கொடுத்து, அமெரிக்க சிப்பாய்களுக்குத் தேவையான “மேற்படி” ஏற்பாடுகளையெல்லாம் செய்து கொடுத்த சவூதி அரச குடும்பத்தினரின் தலைகளை எந்த சீப்பை வைத்து தவ்ஹீத் காரர்கள் சீவிக்கொண்டிருக்கிறார்கள் என்றோ, அல்லது அல்லா சீவ இருக்கிறார் என்றோ ரஹ்மத்துல்லா சொல்லவில்லை.

பெண்களை பர்தா போட்டு மூடியோ, கல்லால் அடித்தோ, ஆண்களின் தலையை சீவியோ, சாட்டையால் அடித்தோ தான் சவூதி போன்ற நாடுகளில் பெண்களின் கற்பு காப்பாற்றப்படுகிறது என்றால், அப்பேர்ப்பட்ட நாட்டு ஆண்களின் யோக்கியதை எப்படி இருக்கும் என்று ரஹமத்துல்லா சிந்தித்துப் பார்க்கவில்லை. சாட்டையோ வாளோ கிடைக்காமல் போனால், அந்த நாட்டுப் பெண்களின் நிலை என்ன என்பதையும் அவர் சிந்திக்கவில்லை போலும்.

அடுத்து ரிசானா விவகாரத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டங்களை விமரிசித்து எழுதிய ஜோசபின் பாபா எனும் பத்திரிகையாளரைக் குறித்துப் பேசிய ரஹ்மத்துல்லா,  அவர் கிருஸ்தவராகப் பிறந்த காரணத்தால் தான் இவ்வாறு எழுதி இருக்கிறார் என்றார். மேலும், கிருஸ்தவத்தைப் பற்றி எங்களுக்குத் தெரியாதா உங்கள் மதப் புத்தகமே ஆபாசக் குப்பை தானே என்றும் அதற்கு ஆதாரமாக பைபிளின் பழைய ஏற்பாட்டிலிருந்து கதை ஒன்றையும் குறிப்பிட்டுப் பேசினார் (இதற்கும் கூட்டத்திலிருந்து ஒரு அல்லா ஹு அக்பர்).

ஜெயினுலாபிதீன்
பி.ஜெயினுலாபிதீன்

ரஹ்மத்துல்லாவைத் தொடர்ந்து பீ.ஜே விஸ்வரூபம் விவகாரம் பற்றிப் பேசத் துவங்கினார் ஜெயினுலாபுதீன். கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் இந்தப் படத்தை வெளியிட வேண்டுமென்று பத்திரிகைகளில்  எழுதப்படுவது குறித்தும், சினிமாத்துறையினரும் அதே வகையில் கருத்துத் தெரிவித்து வருவதையும் விமர்சிக்கத் துவங்கிய பீ.ஜே,  திரைத் துறையினரைப் பற்றியும் பத்திரிகைகள் பற்றியும் நாலாந்தர மொழியில் வசைபாடத் துவங்கினார்.

பீ.ஜேவின் வாதத்தில் விஸ்வரூபம் இஸ்லாமியர்களுக்கு  எதிரானது என்பதை நிறுவும் நோக்கத்தை விட,  டைம்பாஸ் ரகத்திலான படுக்கையறைக் கிசு கிசுக்கள் மற்றும் புவனேசுவரியின் சாகசங்கள், நடிகையின் கதை போன்றவையே அதிகம் இடம் பெற்றிருந்தன. உள் விவரங்களுடன் அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். இவரை இஸ்லாமிய மார்க்க அறிஞர் என்று சொல்கிறார்கள். ஒரு “மார்க்கமான” அறிஞர்தான்.

பாரதிராஜா வீட்டினர் விபச்சாரிகளா என்று தனது வசைபாடலைத் துவங்கிய பீஜே, ஒவ்வொரு நடிகர் நடிகைகளின்  படுக்கையறையாகப் புகுந்து புறப்படத் துவங்கினார். உச்சகட்டமாக, ஸ்ருதி ஹாசனையும் கமல்ஹாசனையும் பாலியல் ரீதியில் கீழ்த்தரமான முறையில் இணைத்துப் பேசிய போது கூட்டம் புல்லரித்துப் போனது. தீப்பொறி ஆறுமுகம் போன்றோர் பொதுக்கூட்டத்தில் இப்படிப் பேசும்போது, உடன்பிறப்புகள் விசில் அடிப்பார்கள். இது தவ்ஹீத் ஜமாத்தின் கூட்டம் என்பதால், விசிலுக்குப் பதிலாக ‘அல்லாஹு அக்பர்’  என்று கூட்டம் முழங்கியது. சும்மா சொல்லக் கூடாது, இறைவன் மிகமிகப் பெரியவன்தான்!

பீ.ஜேவின் பேச்சு இணையத்தில் கேட்கக் கிடைக்கிறது. அவருடைய பேச்சைக் கேட்கும் சராசரி முஸ்லிம் இஸ்லாமிய மதவெறியன் ஆகக் கூடும். அதே பேச்சு ஒரு சராசரி இந்துவை மதவெறியன் ஆக்கும். முதலாவதாகச் சொன்னது நடக்கவில்லை என்றாலும், இரண்டாவதாகச் சொன்னது நடந்தே தீரும்.

விஸ்வரூபம் மேட்டரில் மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்தும் ஆர்.எஸ்.எஸ் காக்கி அரை டவுசர்களின் சத்தத்தை அதிகமாகக் காணோமே, என்று ஆச்சரியப்பட்டார் ஒரு நண்பர். மண்ணடி கூட்டத்துக்குப் போன பின்னர்தான் விசயம் புரிந்தது.

“நம்ம சார்பில் பி.ஜே பாய், பேசிக்கொண்டிருக்கும்போது நாமும் எதற்கு தொண்டை தண்ணியை வேஸ்ட் பண்ணவேண்டும்?” என்று ராம கோபாலன்ஜி மைக்கை ஆஃப் பண்ணியிருப்பார்.

000

குறிப்பு:

ஒரு கொள்கை என்ற அடிப்படையிலேயே மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகிய கோட்பாடுகளில் இஸ்லாமிய அமைப்புகளுக்கு நம்பிக்கை கிடையாது. அதனால்தான் சவூதியில் நடந்த ரிசானா கொலையை அவர்கள் நியாயப்படுத்துகிறார்கள். சில இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கு கண்டிக்கின்றன. தற்போது, விஸ்வரூபம் பிரச்சினையை ஒட்டி, அம்மாவின் ஆதரவும் மாநில அரசின் ஆதரவும் தங்களுக்கு இருப்பதால், மதச்சார்பற்ற சக்திகள் தங்களை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று இஸ்லாமிய அமைப்புகள் கருதுவதையே அவர்களது பேச்சும் நடவடிக்கைகளும் காட்டுகின்றன. சாதாரண முஸ்லிம் மக்களைத் தற்கொலைப் பாதைக்குள் இவர்கள் தள்ளி விடுகிறார்கள், என்று எச்சரிப்பது எங்கள் கடமை.

டெல்லி பாலியல் வன்முறை – குற்றம் : தூண்டியது யார் ?

4

டில்லியில் கும்பல் வல்லுறவுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பயனின்றி இறந்து விட்டார். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறிய போலீசின் தவறு என்ற கோணத்திலும், இக்குற்றத்துக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் என்ற கோணத்திலுமே இப்பிரச்சினை இன்று விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பான சட்டத்திருத்தங்களை சிபாரிசு செய்ய முன்னாள் நீதிபதி வர்மா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

குஜராத்திலும் மும்பையிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் வல்லுறவுக் குற்றங்களை நிகழ்த்தி அவற்றை நியாயப்படுத்தியுள்ள பாஜகவும், வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல்களை எம்.எல்.ஏ ஆக்கியிருக்கும் சமாஜ்வாதி கட்சி அமைச்சர் ஆசம்கானும், ‘பணத்துக்காக பொய் சொல்கிறார்கள்‘ என்று பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண்களை இழிவு படுத்திய ஜெயலலிதாவும் ‘வல்லுறவுக் குற்றத்துக்கு தூக்குதண்டனை விதிக்க வேண்டும்‘ என்று பேசுகின்றனர். இரவுப் பேருந்துகளை அதிகரிப்பது, இரவுப் பேருந்துகளில் ஊர்க்காவல் படையினரை நியமிப்பது போன்ற நடவடிக்கைகள் அறிவிக்கப்படுகின்றன. ‘வல்லுறவுக் குற்ற வழக்குகளை 2 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும்‘ என்று வேறொரு வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழலின் காவலர்களே ஊழல் ஒழிப்பு பேசுவது போல, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையைத் திறந்து வைத்து விட்டு, குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கான தண்டனையை அதிகரிப்பது போல, பெண்களுக்கெதிரான குற்றங்களை தூண்டுபவர்களும் குற்றவாளிகளைப் பாதுகாப்பவர்களும்தான் இன்று தண்டனை அதிகரிப்பு பற்றி பேசுகிறார்கள். மேன்மையான பாரதப் பண்பாடு என்ற பெயரிலான ஆணாதிக்க நிலவுடைமைக் கலாச்சாரம், வல்லுறவுகளை கணவன்மார்களின் உரிமையாக்கியிருக்கிறது. தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்களைத் தம் இச்சைக்குப் பயன்படுத்திக் கொள்வதை, ஆதிக்க சாதியினரின் அதிகாரமாக்கியிருக்கிறது.

கடந்த செப்டம்பரில் அரியானாவில் ஒரு தலித் பெண்ணை சாதிவெறியர்கள் 8 பேர் வல்லுறவுக்கு ஆளாக்கி, வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினர். அந்த வல்லுறவுக் காட்சியை வீடியோ எடுத்து கைபேசி மூலம் சுற்றுக்கும் விட்டனர். இதைக் காண நேர்ந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார். தலித் பெண்கள் மீதான வல்லுறவுக் குற்றங்கள் தண்டிக்கப்படுவதேயில்லை. காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் மத்திய இந்தியாவில் இராணுவமும், துணை இராணுவப் படைகளும் நிகழ்த்தும் வல்லுறவுக் குற்றங்கள் சட்டரீதியாகவே பாதுகாக்கப்பட்டு, ‘அமைதியை‘ நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக அரசால் அங்கீகரிக்கப் பட்டிருக்கின்றன.

வல்லுறவுக் குற்றத்தின் தலைநகரம் என்று கூறுமளவுக்கு டில்லி இதில் முதலிடம் வகிக்கிறது. தேசிய குற்றப்பதிவுத் துறை அளிக்கும் புள்ளிவிவரத்தின் படி 2011 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பதிவான வல்லுறவுக் குற்றங்களில் 17.6% டில்லியில் நடந்திருக்கின்றன. பதிவான குற்றங்களில் 2.46% மட்டுமே தற்போது நிகழ்ந்துள்ளதைப் போல முகம் தெரியாத குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்டவை. 97% வல்லுறவுக் குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அறிமுகமானவர்கள் அல்லது உறவினர்கள் என்கிறது இப்புள்ளிவிவரம். அது மட்டுமல்ல, வல்லுறவுக்கு ஆளானவர்களின் மூன்றில் ஒரு பங்கினர் பெண் குழந்தைகள். உண்மையில் நடைபெறும் வல்லுறவுக் குற்றங்களில் ஐம்பதில் ஒன்று மட்டும்தான் புகாராகத் தரப்படுவதாகவும் இப்புள்ளி விவரம் கூறுகிறது.

முன்னேற்றம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்க கொள்கைகள், ஏற்கனவே சாதி ஆதிக்கமும் ஆணாதிக்கமும் நிறைந்த இந்தியப் பண்பாட்டை கள் குடித்த குரங்காக்கியிருக்கின்றன. ஊடகங்கள், தொலைக்காட்சி, இணையம் ஆகியவற்றின் மூலம் பரப்பப்படும் பாலியல் வக்கிரங்கள், பெண்களைப் பயன்படுத்தி வீசியெறியத்தக்க நுகர்பொருளாக கருதும் போக்கினை வளர்த்து வருகின்றன. நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் இக்கொள்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கூவும் குற்றவாளிகள்தான் தண்டனையை தீவிரப்படுத்துவதன் மூலம் வல்லுறவுக் குற்றங்களைத் தடுக்கப்போவதாக நம்பச் சொல்கிறார்கள்.

இத்தகைய பார்வையின்றி டெல்லி சம்பவத்தை வெறும் கிரிமினல் குற்றமாக மட்டும் பார்க்க வைக்கும் வேலையினை ஊடகங்கள் செய்கின்றன. குற்றமிழைக்கும் கயவர்களை மட்டுமல்ல, அவர்களை தூண்டி விட்டு ஆதாயமடையும் சக்திகளையும் தண்டிக்க வேண்டும்.
_________________________________________________
– புதிய கலாச்சாரம், ஜனவரி – 2013
__________________________________________________

பாலியல் வன்முறையை கண்டித்து கையெழுத்து இயக்கம் !

1

திகரித்து வரும் பாலியல் வன்முறைக்கு எதிராக புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் ஜனவரி 24ம் தேதி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

டெல்லியில் கும்பல் வல்லுறவுக்கும் மிகக் கொடூரமான தாக்குதலுக்கும் ஆளாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன் இறந்து போனார். இந்த செய்தி யாவரும் அறிந்ததே. ஆனால், இதற்குப் பின் ஒட்டுமொத்த நாட்டிலும் குறிப்பாக குஜராத், மும்பை, ஆந்திரா, தமிழகம் மற்றும் பல்வேறு இடங்களில் இது போன்ற பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளன. ஆனால், இதைப் பற்றி வெளியில் பேசக் கூடிய நபர்கள், தீர்வு சொல்லக் கூடிய நபர்கள், இயக்கங்களின் வாதங்கள் எந்த வகையில் உள்ளது என்றால் இது போன்ற குற்றங்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் குற்றவாளிகளை பொதுமக்கள் மத்தியில் வைத்து தூக்கில் போட வேண்டும் என்றும் அப்படிச் செய்தால் குற்றங்கள் குறைந்து விடும்  என்றும் இந்த அரசமைப்பிற்குள்ளேயே தீர்வை தேடுகிறார்கள். இது ஒரு போதும் தீர்வை தேடித் தராது. ஏனென்றால் இதற்கு குற்றவாளிகள் மட்டுமே காரணம் என்ற கோணத்தில் பார்க்கிறார்கள்.

ஆனால் இது போன்ற குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் நம் அரசின் கொள்கைகளான புதிய பொருளாதார கொள்கைதான். தனியார்மயம், தாராளமயம், உலகமயம் பரப்பக் கூடிய கலாச்சார சீரழிவுகள்தான் இதற்கு அடிப்படை காரணமாக உள்ளன. ஏனென்றால், சினிமா, விளம்பரங்கள், இணையம் ஆகியவை திட்டமிட்டே இளைஞர்களையும் மாணவர்களையும் சீரழிக்க வேண்டும் என்ற முறையில் பரப்பப் படுகிறது. அவர்கள் சமூகரீதியாக எதையும் சிந்திக்கக் கூடாது என்ற வகையில் முதலாளிகள் இலாபவெறிக்காக ஒட்டு மொத்த மக்களையும் பலிகடா ஆக்குகிறார்கள். அந்த வகையில் இந்த பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணம். பெண்கள் காரணம், பெண்கள்தான் இதற்குப் போராட வேண்டும் என்று பார்க்காமல் ஆண்கள், பெண்கள் என்ற வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்த நாட்டுக்கும் எதிரியான புதிய பொருளாதாரக் கொள்கையை வீழ்த்தும் வகையில் அனைவரும் களமிறங்கி போராட வேண்டும்.

அந்த வகையில், இந்தப் பிரச்சனையை ஒட்டி புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகளான மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மற்றும் பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கங்களை மேற்கொண்டு வருகிறோம். இதனை ஒட்டி பிப்ரவரி மாதம் பேரணி-பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடத்தவுள்ளோம்.

இதன் ஒரு பகுதியாக திருச்சி பெரியார் ஈ.வே.ரா. கல்லூரியில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தை பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி கிளைச் செயலர் ம. சங்கத் தமிழன் தொடங்கி வைத்தார். மேலும் சட்டக் கல்லூரி கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி கிளை

விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

232

விஸ்வரூபம் படம், கமலஹாசன் சொல்லிக் கொள்வது போல ஒரு “ஸ்பை த்ரில்லர்” ஆக இருக்கப்போகிறதோ இல்லையோ, தற்போது தமிழகத்தில் அரங்கேறி வரும் கூத்துகள் கிட்டத்தட்ட அவ்வாறுதான் இருக்கின்றன.

படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் பதறியிருக்கிறார் அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன். நீதிபதி அதை ஏற்கவில்லை. எனவே இரவோடு இரவாக தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று, அவரைத் தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘இன்று காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.

நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.

“இத்திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.

“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இஸ்லாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.

தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.

“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.

“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.

அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.

32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே Application Of Mind  என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.

“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.

“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.

கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

பல இஸ்லாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.

நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.

000

1980 களில் ஷா பானு என்ற மண விலக்கு செய்யப்பட்ட ஏழை இசுலாமியப் பெண்மணி, ‘ஷாரியத் சட்டத்தின் கீழ் தனக்கு மறுக்கப்பட்ட ஜீவனாம்சத்தை, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கவேண்டும்’ என்று கோரினார். ஷாபானுவுக்கு ஆதரவாக அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சையது சகாபுதீன் தலைமையில் இஸ்லாமிய மதவெறியர்கள் வட இந்தியாவெங்கும் சாமியாடினர். இதனைக்காட்டி, இந்து மதவெறியை மிகச் சுலபமாகத் தூண்டியது ஆர்.எஸ்.எஸ்.

உடனே அதனை சமாளிப்பதற்கும், இந்துக்களின் வாக்குகளைக் கவருவதற்கும், பாபர் மசூதியின் கதவுகளை இந்துக்களுக்கு திறந்து விட்டார் ராஜீவ் காந்தி. அதன் பின்னர்தான் அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது.

“ஷா பானு விவகாரத்தில் முஸ்லிம் மதவெறியர்கள் வைத்த கொள்ளிதான், இந்து மதவெறியர்கள் அரசியலில் தலையெடுப்பதற்கு சாதகமாக அமைந்தது” என்பதை ஆய்வாளர் அஸ்கர் அலி எஞ்சினியர் தனது பல கட்டுரைகளில் விளக்கி கூறியிருக்கிறார்.

அதனை ஒத்த விபரீதம்தான் தமிழகத்தில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

000

பின் குறிப்பு:

இதனைப் படித்தவுடன் “நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? கமலின் கைக்கூலியே” என்பன போன்ற வசைகளை இஸ்லாமிய மதவெறியர்கள் தொடங்குவார்கள் என்பதை அறிவோம்.

இதுவரை தெரியவந்துள்ள கதையின்படி விஸ்வரூபம் ஒரு அமெரிக்க அடிவருடித் திரைப்படம். அது மட்டுமல்ல, தெற்காசியாவில் அமெரிக்காவின் புதிய அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு “கலைப் படைப்பு” என்றும் தெரிகிறது. அதாவது இந்திய ராம்போ. இதுதான் இப்படத்தில் நாம் எதிர்க்க வேண்டிய முக்கியமான விடயமாகத் தெரிகிறது.

படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்டியிருப்பதன் மூலம் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. ஒரு இந்திய முஸ்லிமை (கதாநாயகன் கமலஹாசன்) ரா உளவாளியாகவும், அமெரிக்க அடிவருடியாகவும் காட்டியிருப்பதுதான் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்டுள்ள பெருத்த அவமதிப்பு என்று எங்களுக்குத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அடியாளும், இசுரேலின் கையாளுமான சவூதி அரசுக்கு அடியாள் வேலை பார்க்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கு இப்படித் தோன்றாததில் வியப்பில்லை.

இப்போது  ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் பேசும் வசனங்கள், அவர்களுடைய சொந்த சரக்குகளா அல்லது மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டவையா என்பதை மட்டும் அவர்கள் சொன்னால் போதும்.

மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு யாரும் விஸ்வரூபம் படமெல்லாம் பார்க்கத் தேவையில்லை.

பேக்கரி முதலாளிக்கு ஆப்பு ! ஹூண்டாய் முதலாளிக்கு சோப்பு !!

3

தொழிலாளர்களின் உரிமைக்காக அரசே நேரடியாக தலையிட்டு முதலாளிகள் மீது வழக்கு தொடுத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா ? ஆம், வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அதிசயம் எங்கே நடந்தது என்று கேட்கிறீர்களா ? புரட்சித் தலைவி ஆட்சி செய்யும் தமிழகத்தில் இருந்து கொண்டு இது போன்ற கேள்விகளை கேட்பதே தவறு. அம்மா ஆட்சி புரியும் தமிழகத்தில் தான் முப்பது ‘முதலாளிகள்’ மீது தொழிலாளர் நலச்சட்டங்களை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது!

தொழிலாளர் நலச் சட்டப்படி குடியரசு தினத்தன்று தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுமுறை விட வேண்டுமாம். அப்படி விடுமுறை வழங்காமல் வேலை வாங்கிய முதலாளிகள் மீது தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. முதலாளிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் தொழிலாளர் நலத்துறையே நேரடியாக களத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே ‘குடியரசு’ தினத்தன்று தான் இன்னொரு விசயமும் சுதந்திரமாக நடந்துகொண்டிருந்தது. தமிழகத்திலுள்ள சிப்காட், சிறப்பு பொருளாதார மண்டல பகுதிகளிலும் வேறு பல இடங்களிலும் போர்ட், ஹூண்டாய், நோக்கியா, செயின்ட் கோபைன், பாக்ஸ்கான் போன்ற நூற்றுக்கணக்கான பன்னாட்டு கம்பெனிகளிலும் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகளின் கம்பெனிகளிலும் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வழக்கம் போல கொடூரமாக பிழிந்தெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தனர் ! அப்படியானால் தொழிலாளர் நலத்துறை எந்த முதலாளிகள் மீது நடவடிக்கை எடுத்தது ?

பேக்கரி கடை, டிபன் கடை, துணிக் கடை எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா, அந்த கடை ‘முதலாளிகள்’ மீது தான் நடவடிக்கை. இவர்கள் எல்லாம் நாட்டையும் மக்களையும் மதிக்காமல், தொழிலாளர் நலச்சட்டங்களையும் கடைபிடிக்காமல் சுதந்திர தினத்தன்று கூட கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் தொழிலாளர்களை சுரண்டிக்கொண்டிருந்ததால் தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட தொழிலாளர் நலத்துறை ஆணையர் சந்திரமோகன் உத்தரவின் பேரில் தாம்பரம் பகுதி துணை ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் உதவி ஆய்வாளர் கிளாடிஸ் ஆகியோர் தாம்பரம், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதிகளிலுள்ள பேக்கரி, டிபன் கடை, துணிக் கடைகளில் எல்லாம் அதிரடியாக ‘ஆய்வு’ நடத்தி, ஆய்வின் இறுதியில் முதலாளிகளில் பலரும் மேற்கூறிய குற்றத்தை செய்திருப்பதாக கண்டுபிடித்து அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது !

திருப்பெதும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடத்தை சுற்றி நூற்றுக்கணக்கான பன்னாட்டு கம்பெனிகள் இயங்குகின்றன. இந்த பகுதிகளில் முதலாளிகளின் பயங்கரவாதத்தை எதிர்த்து தினம் தினம் பல்வேறு தொழிற்சாலைகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்திய வண்ணம் தான் இருக்கின்றனர். ஹூண்டாயின் கொடூரமான உழைப்புச்சுரண்டலை எதிர்த்து கடந்த பத்தாண்டுகளாக ஹூண்டாய் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். பேக்கரி கடைக்கு எதிராக புகார் கொடுக்காமலே துணிகர நடவடிக்கையில் இறங்கும் தொழிலாளர் நலத்துறை ஹூண்டாய் தொழிலாளர்களை காக்க இதுவரை எந்த நடவடிக்கையிலும் இறங்கியதில்லை. அதோடு முதலாளிகளால்  கொள்ளையடிக்கப்படுகிற தொழிலாளிகள் மீதே வழக்குகளும் போடப்பட்டிருக்கின்றன.

கட்டிடத் தொழிலாளர்கள்ஹூண்டாய், நோக்கியா போன்ற பன்னாட்டு கம்பெனிகளின் லாபவெறிக்காக, குறிப்பாக மேற்கூறிய இரு நிறுவனங்களில் மட்டும் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் இயந்திரங்களில் சிக்கி இறந்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வேலை வாங்கியதாக டிபன் கடைக்காரர்களையும், பேக்கரி கடைக்காரர்களையும் கைது செய்பவர்கள் இந்திய சட்டத்தையே மதிக்காமல், அனுபவம் இல்லாத தொழிலாளிகளை எல்லாம் உற்பத்தியில் இறக்கி இயந்திரங்களுக்கு பலிகொடுக்கும் பன்னாட்டு முதலாளிகள் பக்கம் திரும்பி கூட பார்ப்பதில்லையே ஏன் ? பேக்கரி கடைக்காரர் மீது கை வைப்பதை போல நோக்கியா மீது இவர்களால் கை வைக்க முடியுமா ?

தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்டிருப்பதை போல நடிக்கும் பன்னாட்டு கம்பெனிகளின் பாதந் தாங்கியாக இருக்கும் பாசிச ஜெயாவின் அரசைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்பது எவ்வளவு பெரிய தேசத்துரோகம் என்று பாதாந்தாங்கியின் பாதந்தாங்கியான நாஞ்சில் சம்பத் வெடிக்கக்கூடும். ஏனெனில் அந்நிய முதலீடு என்கிற பெயரில் பன்னாட்டு கம்பெனிகள் கொள்ளையடிக்க பட்டுக் கம்பளம் விரித்துக்கொடுக்கும் தேசத்துரோகச் செயலை தான் இவர்கள் தேசப்பற்றாகவும், நாட்டை முன்னேற்றுவதாகவும் கருதுகிறார்கள்.

இந்த அரசுக்கு உண்மையிலேயே தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமானால் முதலில் வெளிநாட்டு நிறுவனங்களை இந்திய சட்டங்களை மதித்து நடந்து கொள்ளும்படி வலியுறுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு தொழிலாளிகளுக்கு எந்த உரிமைகளும் வழங்காமல் கொத்தடிமைகளை போல நடத்தும், அவர்களின் உயிரோடு விளையாடும் பன்னாட்டு கம்பெனி முதலாளிகளின் மனம் கோணாதபடி நடந்துகொள்ளும் இந்த ஏகாதிபத்திய அடிமை அரசு சாதாரண வியாபாரிகள் மீது தொழிலாளர்களின் உரிமைகளை பறித்ததாக வழக்கு தொடுப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

மின்வெட்டு – டெங்கு : உசிலம்பட்டி போராட்டம் !

0

மின்வெட்டு பாலா கார்ட்டூன்
னித உரிமை பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு மதுரை மாவட்டக்கிளை-உசிலம்பட்டி உட்கிளையின் சார்பாக உசிலை பேருந்து நிலையம் எதிரில் மின்வெட்டு-டெங்குவை கட்டுப்படுத்தாத அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 19.01.2013 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு உசிலை பகுதி செயற்குழு உறுப்பினர் மு.ஜெயப்பாண்டி தலைமை தாங்கினார்.

தலைமை உரைக்குப்பின் முதலில் பேசிய துணைச் செயலாளர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,

மின் உற்பத்தி, விநியோகம், விலை நிர்ணயம் அனைத்தும் தனியார் கையில் ஒப்படைக்கப்படுவதை அம்பலப் படுத்தினார். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போல காசு உள்ளவனுக்கு மின்சாரம் கிடைக்கும் இல்லாதவனுக்கு இருட்டுதான்

என்று பேசினார்.

அடுத்து பேசிய விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை வட்டாரச் செயலாளர் குருசாமி

கிராமப்புறங்களில் மின்வெட்டு கடுமையாக உள்ளதைச் சுட்டிக் காட்டினார். விவசாயத்துக்கு மானியத்தில் வழங்கப்படும் மின்சாரம் இப்போது விவசாயமே இல்லாத நிலையில் எங்கே போகிறது? மழை இல்லை, அணையில் தண்ணீர் இல்லை, விவசாயம் இல்லை. எல்லா மின் உற்பத்தி நிலையங்களும் பழுதாகியும், குறைந்தளவு உற்பத்தியும் செய்து வருகின்றன. மேலும் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் புதிய திட்டங்கள் எதுவும் இல்லாத போது மின் பற்றாக்குறையை எப்படி தீர்க்க இயலும்

என்று கேள்வி எழுப்பினார்.

உசிலை பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது காவல்துறை கடுமையான ஒடுக்குமுறையைக் கடைபிடித்து வருகிறது. எதற்கெடுத்தாலும் அபராதம் விதிப்பது அல்லது 500, 1000 லஞ்சம் கேட்பது, அபராத்தத்துக்கு ரசீது தரமறுப்பது ஆகிய திருட்டுத்தனங்களை அம்பலப்படுத்தி ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் பொறுப்பாளர் கண்ணன் பேசினார்.
புதிதாக ஆய்வாளரோ, சார்பு ஆய்வாளரோ உசிலைக்கு வந்தால் முதலில் ஆட்டோ தொழிலாளர்களிடம் தங்களது சண்டியர்தனத்தைக் காட்டுவதை வழக்கமாகக் கொண்டு உள்ளனர். இதை உடனடியாக நிறுத்தாவிட்டால் பெரிய அளவில் காவல்துறையை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டி வரும் என்று அவர் எச்சரித்தார்.

அதுபோலவே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் எதற்கும் மருந்தும் கிடையாது. சிகிச்சையும் கிடையாது, மருத்துவமும் கிடையாது என்ற நிலை உள்ளது. சாதாரண விபத்துக்கு கூட முதலுதவி செய்யாமல் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதையே உசிலை மருத்துவ மனை நிர்வாகம் வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மேலும் டெங்கு, உசிலை பகுதியில் பரவலாக உள்ளது. அண்மையில் டெங்குக்கு இரண்டு குழுந்தைகள் பலியாயினர். அந்தக் குழந்தைகளின் புகைப்படங்கள் ஆர்ப்பாட்ட பந்தலின் முன் மாலைபோட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதுபோல மின் வெட்டை அடையாளப் படுத்தும் வகையில் இரண்டு கை சிம்னி விளக்குகள் பந்தலின் முன் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

இறுதியில் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் லயனல் அந்தோணிராஜ்,

2013-ஜூன் மாதத்துக்குள் தமிழ்நாட்டில் மின் வெட்டைத் தீர்த்து விடுவேன் என்று ஜெயலலிதா சொல்வது அண்டப் புழுகு, அசல் ஏமாற்று. தமிழ்நாட்டில் 18 ஆயிரத்து 345 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, அப்பல்லோ மருத்துவமனை குழுமம், எஸ்.ஆர்.எம்.குழுமம், இந்து பாரத் குழுமம் இன்னும் பல வடநாட்டு முதலாளிகள் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதைப் பற்றி ஜெயலலிதா வாய் திறப்பது இல்லை. ஏனென்றால் இந்த மின்சாரம் தமிழ்நாட்டுக்கு ஒரு யூனிட் கூட கிடைக்காது. முதலாளிகள் தாங்கள் நிர்ணயிக்கிற கூடுதல் விலைக்கு யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம் என்று அவர்களுடன் அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. தமிழ்நாட்டின் மின்தேவை ஆண்டு தோறும் 1100 மெ.வா. அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் 5 ஆண்டுகளில் 6000 மெகாவாட் கூடுதல் தேவை இருக்கிறது. ஆனால் அதனை உற்பத்தி செய்யத் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மின் உற்பத்தியைத் தனியாரிடம் தரவேண்டும் என்பதே ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவு. மேலும் ஜெயா மத்திய அரசுடன் தமிழக உரிமைக்காகப் போராடுவதைப் போல ஒரு மாயையை உருவாக்குகிறார். இந்து மதவெறி பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு மத்திய அரசைக் கைப்பற்றும் நோக்கத்துடன் ஜெயலலிதா இவ்வாறு பேசி வருகிறார். ஆனால் தனியார் மயம். உலக மயம், மறுகாலனியாக்கம் ஆகிய கொள்கைகளில் ஜெயாவுக்கு எந்த முரண் பாடும் இல்லை. மின் வெட்டைத் தீர்ப்பேன் என்று பேசுவது 2014 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்தே பேசுவதாகும்

என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்துக்கு 3 மணி நேரம் அனுமதி வழங்கிய காவல் துறை கடைசி நேரத்தில் பகுதி தோழர்களுக்கு கடுமையான டார்ச்சர் கொடுத்து கூட்டத்தை முடிக்க வைத்தது. ஜெயாவின் போலீசு ராஜ்யம் இதுதான் என்பதை செயலர் அம்பலப்படுத்திப் பேசினார். உசிலை பகுதி முன்னாள் செ.கு.உறுப்பினர் ப.ரவி நன்றி கூறினார்.

காங்கிரசின் கங்னம் ஸ்டைல் ! வீடியோ !!

2

ன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி அவர்கள் தொண்டு செய்யும் அம்பானி முதலான கார்ப்பரேட்டுகள், மன்மோகன் சிங்கை ஆட்டுவித்து பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை உயர்த்தி சாதாரண மக்கள்  தலையில் அடிக்கும் எண்ணெய் கம்பெனி முதலாளிகள், சவுதி ஷேக்குகள் இவர்களை இணைத்துக் காட்டும் கிண்டல் வீடியோ

“கங்னம் ஸ்டைல்” என்பது தென் கொரிய பாடகர் ப்சை என்பவரின் பாப் பாடல். ஜூலை 2012ல் வெளியிடப்பட்ட அந்த பாடல் ஆண்டு இறுதிக்குள் யூ-டியூபில் 100 கோடிக்கும் மேல் பார்க்கப்பட்டிருந்தது. கங்கம் என்பது சியோல் நகரத்தின் மேட்டுக்குடியினர் வசிக்கும் பகுதி. அந்த பாடல் இந்த மேட்டுக் குடி மக்களின் வாழ்க்கை முறையை கிண்டல் செய்து எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் இந்திய அரசியல்வாதிகளும், கார்ப்பரேட்டுகளும் பொருத்தப்பட்டு மலையாளத்தில் வெளியான வடிவம் இது.

காதல் : கொலையாளிகளும் கலையாளிகளும் !

24
கமல்ஹாசன்
இனியாவது காதல் இளவரசன் பட்டத்தை வெட்கத்துடன் துறப்பாரா?
கமல்ஹாசன்
இனியாவது காதல் இளவரசன் பட்டத்தை வெட்கத்துடன் துறப்பாரா?

தாழ்த்தப்பட்டோரின் ஊரையும் கொளுத்திவிட்டு, உடைமைகளையும் பறித்துவிட்டு, சந்தடி சாக்கில் வந்தவரை ஆதாயம் என வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீக்கவேண்டும், அதன் பல்லைப் பிடுங்க வேண்டும் என ஆதிக்கசாதி வெறியர்கள் அய்ந்து நட்சத்திர விடுதியில் ரூம் போட்டு சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள். சினிமாகாரர்களையே விஞ்சும் வகையில் ‘நாடகக் காதல்’ எனப் புது ட்ரீட்மென்ட்டோடு பாமக ராமதாஸ் போன்றோர் பிலிம் காட்டவும் இறங்கிவிட்டார்கள். “டேய்! எவனாவது சாதி மாறி காதலிச்சா வெட்டுங்கடா!” என காடுவெட்டியும், கந்துவட்டியும் உருட்டுக் கட்டையோடு உலா வருகையில், “ஒரு பொண்ணும் நீயும் லவ் பண்ணா… அவள கடத்தி தருவேன், உனக்கே மண முடிப்பேன்..” என்று ‘போடா!போடியில்!’ ஸ்டெப்பு போட்ட எந்த சிம்புவும் சந்து பக்கம் கூட காணோம்! மொத்த கோடம்பாக்கத்து கும்பலுக்கும் இது பொருந்தும்.

காதலுக்கு விதவிதமாக ‘சீன்’ சொன்னவர்கள், பார்த்து காதல், பார்க்காமலே காதல் என்று காதலிலே கரைகண்டவர்கள், காதலுக்கு மெட்டு போட்டே கட்டை தேய்ந்த விற்பன்னர்கள், காதலுக்கென்றே பிறந்து வளர்ந்ததுபோல காட்டிக் கொள்ளும் கவிஞர்கள், இப்படி ஊரை உசுப்பேத்தியே காதலை வைத்து கல்லா கட்டியவர்கள் எல்லாம், ஒரு காதல் திருமணத்தை சாக்கு வைத்து வன்னிய சாதிவெறியோடு செட்டு போடாமலேயே சேரியை கொளுத்தும்போது, எட்டிப்பார்க்கவும் இல்லை, எதிர்த்துப் பேசவுமில்லை என்றால் இந்த கோடம்பாக்கத்து காரியவாதிகளை ஆதிக்க சாதிவெறிக்கு அடிக்கொள்ளிகள் என்று ஏன் சொல்லக்கூடாது? காதலுக்கு கண்ணில்லாமல் போகலாம், ஆனால் சாதி, வர்க்கம், மதம், ஆணாதிக்கம் எல்லாம் இருக்கிறது, எதார்த்தத்தில் இவைகளைக் கடந்து இரு தனிநபர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே தீர்மானித்துக் கொள்ள விரும்பும்போது, தடுக்கும் ஆதிக்க வெறியர்களை தட்டிக் கேட்டு, சமுதாயத்தை நாகரிகப்படுத்துவதுதான் சமூக அக்கறையுள்ளவர்களின் வேலை.

காதல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு வெட்டுங்கடா! என்ற கும்பலும், காதல் என்றாலே கண்ணை மூடிக்கொண்டு ஆதரிங்கடா! படத்தை ஹவுஸ்புல்லா ஓட்டுங்கடா! என்ற கும்பலும் சமூக அக்கறைக்கும், நாகரிகத்துக்கும் சம்பந்தமில்லாதவர்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது தருமபுரி தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள்.

இவ்வளவு காலம் ‘காதலை’ வைத்து வயிறு வளர்த்தோமே என்ற கூச்சநாச்சம் கொஞ்சமாவது இருந்தால், காதல் பிரச்சனையை சாக்குவைத்து ஆதிக்க சாதிவெறியை கிளப்பி வெறியாடும் அயோக்கியர்களுக்கு எதிராக ஒரு கண்டனம், இல்லை ஒரு ‘கனிவான’ அறிக்கை கூட வெளியிடாமல், எந்த ஜோடியாவது சாகட்டும், நாம் அடுத்த காதல் ‘சிச்சுவேசனை’ ‘டெவலப்’ பண்ணி காசை பார்ப்போம் என்று தன்பாட்டுக்கு காதலை வைத்து பிழைப்பு நடத்தும் இந்த கும்பல்தான், காதலை வைத்து காசு பறிப்பவர்களே ஒழிய தலித் காதலர்கள் அல்ல, என்ற உண்மையை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும். எது எதுக்கோ ‘விஸ்வரூபம்’ எடுக்கும் காதல் ‘இளவரசன்’ பழைய பட்டத்துக்கு ஏற்ற மாதிரி பாய்ந்து புரள வேண்டாம், ‘கலைஞானி’ அளவுக்காவது கத்தக்கூடாதா? உள்ளூரில் ஒன்று நடக்கும்போது வாயைத்திறக்காத இவர் குறைந்த பட்சம் காதல் இளவரசன் பட்டத்தையாவது வெட்கத்துடன் துறப்பாரா? கன்னட இனவெறியன் ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு வேண்டுகோள் விடுத்த, சூப்பர்ஸ்டார் காதலர்களை வாழ வைக்க காடுவெட்டிக்கு ஒரு ‘வாய்ஸாவது’ கொடுக்கக்கூடாதா? நத்தம் காலனி பற்றி எரியும்போது வாயைத் திறக்காமல், சத்தம் போட்டு ‘தீ..தீ..’ என்று காதலியோடு பாட்டுப்பாடி ‘டூப்பு’

போட்டால் போதுமா? படிக்கப் போகும் பெண்ணை விரட்டி, விரட்டி காதலித்து “எங்கள எல்லாம் பாத்தா புடிக்காது! பார்க்க பார்க்கத்தான் புடிக்கும்!” என்று விடலைகளை உசுப்பேத்தும் தனுஷ், அல்டிமேட், ஆக்சன் கிங், இளையதளபதி, சின்னதளபதி, காதல், திருமணம் அனைத்தையுமே விஜய் டி.விக்கு வியாபாரமாக்கிய சினேகா-பிரசன்னா இப்படி காதலை பல பரிமாணத்தில் தமிழகத்துக்கு கலக்கி கொடுத்த பெரிய பட்டியலே.. நாட்டில் காதலை முன்வைத்து ஒரு அநியாயம் நடக்கும்போது வாயை மூடிக்கொள்வது, நமக்கேன் வம்பு! என்ற பிழைப்புவாத கண்ணோட்டம் மட்டும் காரணமல்ல, திரைத்துறைக்குள்ளும் தினவெடுத்து திரியும் சொந்தசாதி அரிப்பும்தான்!

மனிதனிடமுள்ள எல்ல நற்குணங்களையும் காதல்தான் வெளிக்கொண்டு வரும்! ஆதலினால் காதல் செய்யுங்கள்! என்று மூன்று மணிநேரம் நம்மை தியேட்டரில் வைத்து வகுப்பெடுத்த இந்த ‘படைப்பாளி’ கும்பல், சாதிவெறி, காதலர்களை படுத்தும்போது உங்கள் நல்ல குணம் எந்த டிஸ்கஸனில் ‘புல்’ ஆகி இருந்தது? நாட்டில் எது நடந்தாலும் அதை வேடிக்கை பார்த்து, அதிலும் வியாபாரத்திற்கு ஒரு ‘ஒன்லைன்’ கிடைக்குமா? என்பதுதான் கோடம்பாக்கத்தின் ஒரிஜினல் கேரக்டர். சினிமாவில் பதினெட்டுபட்டியைக் கூட்டி மரத்தடியில் ‘கலப்புத் திருமணத்திற்கு’ ஆதரவு கொடுத்து ‘இதுதாண்டா இந்த நாட்டாமையோட தீர்ப்பு!” என்று சொடக்கு போடும் சரத்குமாரும், காமெடி ட்ராக்கில் கலக்கும் ’தேவர்’ கருணாஸூம் பச்சையான சாதிவெறி ரகமென்றால், மத்த பார்ட்டிகள் அவர்களுக்கே உரிய இயக்குநர் இமயம், இயக்குநர் சிகரம் என்று தனி ஆங்கிளில் சாதி பார்ப்பவர்கள்தான்.

‘என் இனிய தமிழ் மக்களே’ என்று நம்மை சினிமா டிக்கெட் வாங்க கூப்பிடும் கிராமத்து பாரதிராஜா… காதலர்களுக்காக காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் எதிராக பேசாதது ஏன்? ‘சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்!’ நாடு முழுக்க ‘வீராசாமிகள்’ கேட்கிறார்கள்! பதில் சொல்லுங்கள்! தமிழர் தாய்நிலத்தை பறித்த சிங்கள வெறியர்களையும், சிங்களச்சிகளையும் பழிக்குப் பழி வாங்க வேண்டுமென மேடை போட்டு கொட்டி முழக்கும் செந்தமிழன் சீமான்… வன்னிய சாதிவெறிக்கு தீக்கிரையான நாய்க்கன் கொட்டாய் சேரிகளுக்காக, வன்னிய ராசபக்சே ராமதாசை ஜாடையாகக் கூட கண்டிக்காத மர்மமென்ன? ஒருவேளை உங்கள் தமிழ்த்தேசத்தில் சேரிகள் சேர்த்தியில்லையோ?

வார்த்தைக்கு வார்த்தை “நான் தமிழன். தமிழ் மக்களின் வாழ்க்கையைச் சொல்லுகின்ற சினிமா தமிழ்நாட்டில் இல்லை!, நான் விவசாயி. தானே புயலால் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகளின் அவலத்தை ஆவணப்படமாக எடுத்து போராடுகிறேன்!” என்று வழக்காடிய தங்கர்பச்சான் இந்நேரம் சொந்த சாதி ஆதிக்க வெறிக்கு எதிராக உடுக்கெடுத்து “பாவிகளா! சேரிகளை கொளுத்தி சாதிக்கு படையல் போடும் உங்கள் சங்கை மிதிப்பேன்!” என்று ஆடியிருக்க வேண்டாமா? சக மனிதனை வாழவிடாத வன்னிய சாதிவெறியின் கேவலத்தை முதலில் உங்கள் பாட்டாளி சொந்தங்களுக்கு படம்பிடித்துக் காட்டுங்கள்! ஒட்டுமொத்த தமிழர்களுக்கான உலகத்தரத்தை பிறகு பார்க்கலாம்! இவர்கள் மட்டுமல்ல, கோடம்பாக்கத்துக்குள்ளேயே குட்டி அக்ரஹாரங்களும், மேலத்தெருவும், கீழத்தெருவும், காலனிகளும் ‘மெயின்டெய்ன்’ ஆகும்போது, இவர்களின் சமூக உணர்வு சாதியெல்லை தாண்டாதது ஆச்சரியமில்லை. சொந்த காலையே கழுவாத இந்த சுரணையற்றதுகள்தான் சமூகத்தை குளிப்பாட்டி கலையாக்கப் போகிறார்களாம்!

பாரதிராஜா
காதலர்களுக்காக காடுவெட்டி குருவுக்கும், ராமதாசுக்கும் எதிராக பாரதிராஜா பேசாதது ஏன்?

இதில் கவிஞர்கள் தனிரகம். வட்டார வழக்கில் அசத்துவதாக சொல்லி “ஏடி.. கள்ளச்சி.. தெரியலயா” என்று காதல் பாட்டில் ‘கள்ளப்பாட்டு’ எழுதும், சமூகப் பேரவை என்ற பெயரில் சாதிக் குழுக்குறி கொண்டாடும் கவிப்பேரரசு, ‘தமிழுக்குச் சோறு போட்டு’ சாதிக்கு குழம்பு ஊத்தும் பேர்வழி. எல்லா சாதிக்கும் காதலை கவுச்சியாகப் பாட்டெழுதினாலும், தன் வாயை மட்டும் ‘அவா’ பாஷையை கழுவாமல் வைத்திருக்கும் வாலி, சசிகலா நடராசனும் சாதிக்கூட்டணியில் கோதிக்கொண்டு “உன்னக் கொன்னா கூட தப்பேயில்ல’ என்று காதலாய் கசிந்துருகும் சினேகன், காதலை வார்த்தைகளில் வாழவைக்கும் ‘கவிப்பேரலை’ நா. முத்துக்குமார், வித்தகக்கவி விஜய், இன்னும் பல வெங்காயக் கவியெல்லாம், “சாதிமாறி காதலித்தால் வெட்டுவோம்” என்று சவால்விடும் போதும்! வடநாட்டு டான்சருக்கு குத்துப் பாட்டெழுத தெம்பிருக்கும் இந்தக் கவிராயர்களால், வன்னிய சாதிவெறி காடுவெட்டி குருவுக்கு ஒரு குத்துமதிப்பு அளவுக்காவது கண்டனம் தெரிவிக்க சாதியக் கட்டுமானம் இடம் கொடுக்கவில்லை போலும்.

இப்படி சினிமா கலைஞர்கள் மட்டுமல்ல, சினிமாவுக்கு துண்டு போட்டு நோட்டம் பார்க்கும் இலக்கியக் கும்பல்களுக்குள்ளும் ஆதிக்க சாதிவெறிக்கெதிரான ‘ஆளுமை’ பீறிடவில்லை. “வெட்கத்தைக் கேட்டால்.. என்ன தருவாய்” என்று குமுதத்தில் காதலுக்காகவே சீழ் வடிந்த தபூ சங்கரால், இராமதாசிடம் போய் காதலைக் கேட்டால் என்ன தருவாய் என்று கேட்க நேரமில்லை போலும். காதலுக்காகவே நேரம் ஒதுக்கி சிந்தித்த இந்தக் கழிசடைகள் கிடக்கட்டும். பின்தொடரும் நிழலில் கம்யூனிச அபாயத்தை எச்சரிக்கும் ‘தரமான’ படைப்பாளி, காடுவெட்டிக் குருவைப் பின்தொடர்ந்து போய் எச்சரிக்கத் தயாரா? இதுதவிர தமிழ்ப்படைப்பாளிகள் எழுத்தாளர்கள் சங்கம் என்று பெயர் வைத்துக் கொண்டு சமூக உணர்வைக் கொப்பளிக்கும் பிரபஞ்சன் வகையறாக்கள் வரை ராமதாசுக்கு எதிராக பொருள் பொதிந்த ஒரு கொட்டாவியைக் கூட விடக் காணோம்! இவர்கள் மட்டுமல்ல, காதலை கலை இலக்கியம் என பல வடிவங்களில் கடை விரித்த எந்தக் கும்பலும் காதலர்களை வழிமறிக்கும் சாதிவெறிக்கு எதிராக தெருப்பக்கம் காணோம். காதலர்கள் மேல் சாதிவெறி தீ வைக்கும்போது களத்தில் வந்து போராடாமல், எதையும் ‘வித்தியாசமாக’ வேடிக்கை பார்க்கும் இந்த வியாபாரிகள்தான் கலை வளர்க்கும் விற்பன்னர்களாம்! என்ன ‘இவற்றினைப்’ பார்க்கவே பயங்கரமாயில்லை!

_____________________________________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013

_____________________________________________________________________________________________________________

இணையத்தில் டவுன்லோட் செய்தால் 10 ஆண்டு சிறை !

1

இங்கிலாந்தில் சட்ட விரோதமாக திரைப்படங்கள், பாடல்கள், புத்தகங்களை டவுன்லோட் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை

Cartoons — ACTA in UK: 10 years in jail for 'illegal downloads'போலிகளுக்கு எதிரான வர்த்தக உடன்பாடு (ACTA), என்பது பெரிய கார்ப்பரேட் பிராண்டுகளின் ஆடைகள், மருந்துகள் போன்றவற்றை நகல் எடுத்து மலிவாக விற்பது, இணையத்தில் காப்புரிமை மீறல் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான பன்னாட்டு ஒப்பந்தம். இதை ஏற்றுக் கொண்ட நாடுகள் கடும் தண்டனைகள் வழங்குவதற்கான தேசிய சட்டங்களை இயற்ற வேண்டும். அதன்படி இங்கிலாந்து சட்டம் இயற்றியிருக்கிறது. இந்தியாவில் எப்போது?  முதலாளிகள் தங்களது வர்த்தக நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கு  இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களைத்தான் சார்ந்து நிற்கிறார்கள். உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது?

திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு !

0

திட்டமிட்டு திணிக்கப்படுகிறது செயற்கை மின்வெட்டு,

பவரை கையிலெடுத்தால் பவர் வரும்

கடலூர் பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி

கடலூர் பொதுக்கூட்டம்மிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டால், சிறுதொழில், விவசாயம், வியாபாரம் உள்ளிட்டு அனைத்து தொழில்களும் அழிந்து வருவதன் மூலம் மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக சூறையாடப்படுவதைக் கண்டித்தும், நோக்கியா, போர்டு, ஹூயுண்டாய், ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கும் சென்னையில் உள்ள ஷாப்பிங் மால்கள், நீச்சல் குளங்கள், உல்லாச விடுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்குவதை ரத்து செய்து சமச்சீர் மின்வெட்டை அமல்படுத்தக் கோரியும் ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு. ஆகிய அமைப்புகளின் சார்பில் பிரச்சார இயக்கம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கடந்த 5.1.2013 அன்று கடலூரில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர் கிளையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தி தனது உரையில், “மின்வெட்டும், மின்வெட்டால் இன்று சாதாரண மக்கள் பயன்படுத்தும் இன்வெர்ட்டர், ஜெனரேட்டர், போன்றவை விலை உயர்த்தப்படுவதும் முதலாளிகளின் லாபம் அதிகரிப்பதற்கான அரசின் கொள்கைகளின் விளைவுதான்” என்பதை விளக்கினார்.

“ஒரு ரெனால்ட்ஸ் பேனாவின் உற்பத்திச் செலவு வெறும் 70 பைசாதான். ஆனால், அதை கடையில் ரூ 10க்கு விற்கிறார்கள். கறிச் சிக்கன் என்று நாம் சாப்பிடுவது உண்மையில் கோழிக் கறியல்ல. மக்களின் உணர்ச்சிகளை தூண்டி  நுகர்வு வெறியை வளர்த்து விடுகிறார்கள். இவற்றை ஊக்குவிப்பதுதான் உலகமயமாக்கல் கொள்கை. இன்றைக்கு மின்துறையை முதலாளிகளின் சந்தைக்கும், கொள்ளைக்கும் பங்கு போட்டுக் கொள்ள அரசே உருவாக்கியிருக்கும் ஒரு ஏற்பாடுதான் டெல்லியில் உள்ள மின்வாரிய ஒழுங்குமுறை மேலாற்று வாரியம்.  வேலை. மின்சாரத் துறையின் தேவை, யாருக்குத் தர வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட புரோக்கர் கும்பல்தான் இவர்கள். தனியார் மயம், தாராள மயம், உலக மயக் கொள்கைகள்தான் இதன் ஆணிவேர். எனவே இதை எதிர்த்துப் போராடுவது ஒன்றுதான் மின்வெட்டை தீர்க்க நிரந்தரமான ஒரு வழி” என்றார்.

2 மணி நேரத்துக்கும் அதிகமான பேச்சின் போது மக்கள் ஆர்வமாக அமைதியாக குறிப்பெடுத்துக் கொள்வதை கவனிக்க முடிந்தது.

அடுத்துப் பேசிய மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ,

“கடந்த ஓராண்டுக்கு மேலாக மின் வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில், தஞ்சை மாவட்டப் பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு வருகிறார்கள். திருப்பூரில் பின்னலாடைத் தொழில் உள்ளிட்ட அனைத்து ஆயத்த ஆடை தொழில்களும் பாதிக்கப்பட்டு தெருவில் நின்று போராடுகிறார்கள். மின்சாரம் இல்லை, பற்றாக்குறை என்பது பொய். கருணாநிதியும் ஜெயலலிதாவும் வெளிநாட்டு கம்பெனிகளுடன் போட்டுக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி நமது நாட்டை சூறையாடக் காட்டிக் கொடுக்க கிளம்பி விட்ட தேசத் துரோகிகள். மன்மோகன் சிங்கும், ப. சிதம்பரமும், மான்டேக் சிங் அலுவாலியாவும் நமது நாட்டைக் காட்டிக் கொடுத்த ஒன்றாம் நம்பர் கிரிமினல்கள். இந்த ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் யாரும் தாங்கள் மின்சாரத்தை தனியாருக்கு விடப் போகிறோம் என்றா ஓட்டுக் கேட்டார்கள்? அப்படிக் கேட்டு இருந்தால் நாம் ஓட்டுப்போட்டு இருப்போமா”

என்று கேள்வி எழுப்பிய போது மக்கள் கைதட்டி வரவேற்றனர்.

“இனி மாற்று தேர்தல் பாதையல்ல, புரட்சிகர அமைப்புகளின் போராட்ட வழிமுறையே தீர்வு! இனி சட்டத்தின் ஆட்சி நடக்காது. சட்டத்தை மீறி தெருப்போராட்டங்களின் மூலம் அரசியல் அதிகாரத்தை மக்களே கையிலெடுக்கப் போராட வேண்டும்”

என்று முடித்தார்.

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழக மைய கலைக்குழுவின் நாடகமும், கலை நிகழ்ச்சியும் மக்களின் அரசியல் பார்வையை தங்களின் வாழ்க்கையின் அன்றாடம் அவலங்களுக்கும் கொடுமைகளுக்கும் காரணம் இன்றைய பொருளாதார அமைப்புதான் என்று அம்பலப்படுத்தியது.

குறிப்புகள்:

1. இப்பொதுக்கூட்டத்தில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி கட்டக்கூடாது என்று சட்டம் பேசிய போலீசு மைக்செட் போட்டவரை மிரட்டியது. பின் பு.மா.இ.மு., hrpc தோழர்கள், ‘குழாயை கழற்ற முடியாது, எல்லா கட்சிக்கும் இப்படித்தான் செய்கிறீர்களா’ என்று வாதிட்டு மற்ற தெருக்களில் அவிழ்ப்பதை நிறுத்தினோம்.

2. பொதுக்கூட்டத்தின் போது மின்வெட்டு ஏற்பட்டு மக்கள் குடியிருக்கும் தெருக்களில் அமைதியான சூழ்நிலையில் பொதுக்கூட்ட கருத்துக்கள் பகுதி மக்களிடம் வெகுவாகச் சென்றது. பகுதிப் பெண்களும், மக்களும் கணிசமாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்