Saturday, August 16, 2025
முகப்பு பதிவு பக்கம் 785

எக்சிட் போல்! என்ன நடக்கும்?

18

 

வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் இரண்டு நாள் இருக்கையில் நேற்றும், இன்றும் ஊடகங்கள் வெளியிட்டிருக்கும் வாக்குச்சாவடி கருத்துக் கணிப்புகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்? தமிழகத்தைப் பொறுத்தவரை இது குதிரைப்பேர வர்த்தகத்திற்கான முன்னறிவிப்பாக, தயாரிப்பாக இருக்குமோ?

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - மேற்கு வங்கம்
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்திற்கு இந்தப் பிரச்சினை இல்லை. எல்லா வாக்குச்சாவடி கணிப்புகளும் திரிணாமூல் காங்கிரஸ் நான்கில் மூன்று பங்கு வெற்றி பெறும் என்பதை தெரிவித்திருக்கின்றன. மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 50 முதல் 60 தொகுதிகளும், மம்தாவின் கூட்டணிக்கு 220 முதல் 230 தொகுதிகளும் கிடைக்குமெனத் தெரிகிறது. 34 ஆண்டுகால சி.பி.எம் கூட்டணி ஆட்சி மிகுந்த சோகத்தோடு முடிவுக்கு வருகிறது.

இன்றும் கூட சி.பி.எம் அணிகளுக்கு சீனத்தையும், கியூபாவையும் கம்யூனிச நாடுகளாக காட்டி நம்பிக்கையை வளர்க்க முனையும் அந்த கட்சி உள்நாட்டில் மேற்கு வங்கத்தை காட்டி நம்பிக்கை ஊட்டி வந்தது. இனி அந்த ஒரே நம்பிக்கையும் இல்லை எனும் போது ‘தோழர்கள்’ என்ன செய்வார்கள்? பன்னாட்டு நிறுவனங்கள் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து இடது சாரிகள் நடத்த வேண்டிய போராட்டத்தை மம்தா நடத்தினார். இடதுசாரிகள் அதை ஒடுக்கினார்கள்.

அரசாங்கம், போலீசு என அனைத்தையும் கட்சி எந்திரமாக்கி, ஆயுதம் ஏந்திய வன்முறை தொண்டர்-குண்டர் கும்பல் மூலம் மாநிலத்தை ஆண்டு வந்த சி.பி.எம் மீது மேற்கு வங்க மக்களுக்கு அளவில்லாத கோபம் இருந்தது. சிங்கூர், நந்திகிராம் போராட்டங்கள் மற்றுமொரு முக்கிய காரணம். எனினும் சின்ன சின்ன விசயங்களுக்கெல்லாம் பெரிய அளவில் உணர்ச்சி வசப்படும் மம்தா பானர்ஜி போன்ற ‘வீராங்கனையே’ இத்தகைய ‘சித்தாந்த’ அமைப்பு பலம் உள்ள மார்க்சிஸ்ட் கூட்டணியை வீழ்த்தப் போதுமானவர் என்பது சி.பி.எம்மின் தரத்தைக் காட்டுகிறது.

மம்தாவைத் தவிர சொல்லிக்கொள்ளும் அளவு தலைவர்கள் இல்லாத, இருக்கும் தலைவர்களும் காங்கிரசு பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் மம்தாவின் ஆட்சி எப்படி இருக்குமென்பதை யூகித்துக் கொள்ளலாம். இது குறித்து அடுத்த வாரம் விரிவாக எழுதுகிறோம். எனினும் தோழர்களுக்கு முன்கூட்டியே ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நக்கீரன் எக்சிட் போல்
நக்கீரன் எக்சிட் போல் - தமிழ்நாடு

தமிழகத்தைப் பொறுத்த வரை நக்கீரன் அளித்திருக்கும் எக்சிட் போல் கணிப்பின் படி தி.மு.க கூட்டணிக்கு 137 இடங்களும் ( தி.மு.க – 84, காங்கிரசு – 24, பா.ம.க – 19, வி.சி – 6, முஸ்லீம் லீக் – 3, மூ.மு.க – 1 ), அ.தி.மு.க கூட்டணிக்கு 89 இடங்களும் ( அ.தி.மு.க – 73, தே.மு.தி.க – 7, கொ.இ.பே – 1, சி.பி.எம் – 5, சி.பி.ஐ – 2, ம.ம.க – 1 ) கிடைக்குமாம். 8 தொகுதிகள் இழுபறியாம். அதில் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியும் அடக்கம் என்ற மகிழ்ச்சியான செய்தியும் உண்டு.

கருத்து கணிப்புக்கு கடினமான மாநிலம் தமிழ்நாடு என்பதை இந்திய அளவு ஊடகங்களே ஒப்புக்கொண்டிருக்கின்றன. அவர்களே அப்படி தவறாக கணித்து மூக்குடைபட்டவர்கள் என்பதோடு, டெல்லியிலிருந்து கொண்டு தமிழ்நாட்டை பார்க்கும் வழக்கம் உள்ளவர்கள் என்பதால் தமிழக மக்களின் உள்ளக்கிடக்கையை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. அதனால் நக்கீரன் முடிவுகள் கேள்விக்கிடமற்றவையா?

இதுவரை வந்த தேர்தல்கள் எல்லாம் நக்கீரன் முடிவுகளோடு துல்லியமாக ஒத்துப்போயின என்றும் கூறுகிறார்கள். இப்படித்தான் சென்ற  பாராளுமன்றத் தேர்தல் போது பா.ம.க வும், “நாங்கள் இருக்கும் கூட்டணிதான் ஜெயிக்கும்” என்று சொல்லி மூக்குடைபட்டார்கள். மற்ற ஊடகங்களெல்லாம் எப்படி கருத்துக் கணிப்பு நடத்தின என்பதை முழுமையாக வெளியிடும். நக்கீரன் ரிசல்ட்டை மட்டுமே வெளியிடும். எத்தனை பேரை சந்தித்தார்கள், வாக்கு விகிதம் எத்தனை என்பதெல்லாம் தெரியாது.

மேலும் கொழும்பிலிருந்து எழில், டெல்லியிலிலுந்து சிந்துஜா என்று நக்கீரனில் வரும் கட்டுரைகளை படிக்கும் போதெல்லாம் அப்படி இரு நிருபர்கள் அந்தந்த இடங்களில் இருக்கிறார்களா என்று சந்தேகம் வரும். அது போல போயஸ் தோட்டம், கோபாலபுரம், சி.ஐ.டி காலனி வீடுகளில் நக்கீரன் நிருபர்கள் கூட இருந்து பார்த்தது போலவும் எழுதுவார்கள். அந்த அளவுக்கு நக்கீரனின் பார்வைகள் உலகமெங்கும் பரிந்து விரிந்து கிடக்கின்றன.

தி.மு.க ஆதரவு உள்ள நக்கீரன் நிறையவே அனுபவவாதப் பார்வையோடுதான் தேர்தலை அணுகியிருக்கும். இரண்டையும் வைத்துப் பார்த்தால் நக்கீரன் கணிப்புகள் ஒரு சார்பானது, அறிவியல் பூர்வமற்றது என்று ஆகிறது. எனினும் சில நேரம் அனுபவப் பார்வை சரியாகவும் இருக்கலாம். இரண்டு கூட்டணிகளில் ஏதோ ஒன்று வெற்றி பெறவேண்டும் என்பதால் குருட்டுப் பூனை விட்டத்தில் குறி பார்த்து பாயலாமே?

நக்கீரன் கணிப்பு சரியென்று வைத்துக் கொண்டால் என்ன நடக்கும்?

தி.மு.கவிற்கு 84 இடங்களும், அ.தி.மு.கவிற்கு 73 இடங்களும் கிடைக்கும் என்றால் இது தி.மு.கவிற்கு இனிய செய்தி அல்ல. அ.தி.மு.க கூட்டணிக்கு 89 இடங்களோடு காங்கிரசு, பா.ம.கவை கூட்டினால் மெஜாரிட்டி கிடைக்கும். இது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும், ஸ்பெக்ட்ரம் ஊழல், கனிமொழி கைது என்று தி.மு.க கூட்டணி முரண்படுவதற்கான நேரம் வந்தால் இதுவும் நடக்கலாம். ஆனாலும் பணபலத்தில் வல்லவர்களான தி.மு.க தலைமை தனது கூட்டணி கட்சிகளையே விலை கொடுத்து வாங்கியோ, மந்திரி பதவி கொடுத்தோ சரிக்கட்ட முயலும். காங்கிரசைப் பொறுத்த வரை வெற்றி பெறும் 24 நபர்களும் குறைந்த்து 24 கோஷ்டிகளாக இருப்பதால் விலைக்கு வாங்குவது சுலபம். பா.ம.கவைப் பொறுத்தவரை சுயமரியாதை துளியும் இல்லாத கட்சி என்பதால் எதிர்காலத்தில் அ.தி.மு.கவோடு போகாது என்பதற்கு உத்திரவாதமில்லை.

மேலும் பா.ம.கவிற்கு 19 தொகுதிகள் என்பது ஒரு ஜாக்பாட் பரிசுதான். அதன் ஆதாயத்தை அதிக பட்சம் கறப்பதற்கு ராம்தாஸ் முயல்வார். எனினும் இந்த கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதோ, கட்சியை உடைப்பதோ சிக்கலான விசயமல்ல. மொத்தத்தில் காங்கிரசு கட்சியின் தலைமை, அதன் கோஷ்டிகளின் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றை பார்க்கும் போது தி.மு.க ஆட்சி என்பது தினசரி திகிலோடு நடக்கவே வாய்ப்பிருக்கிறது.

நக்கீரன் கணிப்புபடி தே.மு.தி.கவிற்கு 7 தொகுதிகள்தான் என்பது நிச்சயம் மகிழ்ச்சியடைய வேண்டிய விசயம். இதன்படி இன்று வைகோவிற்கு நடந்தது நாளை விஜயகாந்திற்கும் நடக்கலாம். எப்படியோ தமிழகத்தை கவ்வியிருக்கும் சில அபயாங்களில் ஒன்றாவது இந்த தேர்தலோடு  முடிவுக்கு வந்தால் அது நல்ல விசயம்தான். விஜயகாந்த் கட்சியினரும் தி.மு.கவால் மலிவான விலைக்கு வாங்கப்படக் கூடியவர்கள்தான். அதே நேரம் அ.தி.மு.கவிற்கு குறைவான சீட்டுகள் இருப்பதால் ஆட்சி அமைக்க வாய்ப்பு வந்தால் இந்த வீணாப் போனவர்களுக்கு பிழைப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

நக்கீரன் கருத்துப்படி காங்கிரசுக்கு 24 தொகுதிகள் கிடைக்கும் என்பது சற்று அதிகம் என்றுதான் தோன்றுகிறது. இதனால் நாம் தமிழர், சீமான் போன்ற தமிழின ஆர்வலர்களின் பரப்புரைக்கு கிடைத்த வெற்றி என நினைத்து விடாதீர்கள். எந்தப் பரப்புரையின்றியுமே காங்கிரசு இப்படித்தான் தோற்றிருக்கும். இருப்பினும் தி.மு.க, அ.தி.மு.கவிற்கு அடுத்த படியாக மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தில் இருப்பதால் இந்த கருமாதிக்கு போன கட்சி துரதிர்ஷ்டவசமாக வரும் ஆட்சியில் முக்கியத்துவம் பெறும். மேலும் ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற கத்தியை வைத்தே 63 இடங்களை வாங்கிய காங்கிரசுக் கட்சி, கூட்டணி ஆட்சியிலும் அதிக பட்ச ஆதாயங்களை அடைய முனையும். டெல்லிக்கு அடிமைகளாகிவிட்ட தி.மு.கவினர் இதை எதிர்த்து ஒன்றும் செய்ய இயலாது.

ஒருவேளை டெல்லித் தலைமையின் முடிவுக்கு மாறாக காங்கிரசுக் கட்சி எம்.எல்.ஏக்களை கட்சி மாற வைப்பது ஒன்றும் பெரிய விசயமல்ல. ஆனால் அந்த தைரியம் தி.மு.கவிற்கு இருக்குமா என்பதுதான் சந்தேகம். நக்கீரன் கருத்துப்படி கொங்கு வேளாளர் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்பது நிச்சயம் நல்ல விசயம்தான். இந்த ஆதிக்க சாதி கட்சியும் இந்த தேர்தலோடு மங்களம் பாடி புதைக்கப்படும்.

நக்கீரன் கணிப்புப் படி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஐந்து இடங்களும், வலது கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு இடமும் கிடைக்குமாம். தோழர்கள் மேற்கு வங்க தோல்வியையே ஜீரணிக்க முடியாத நிலையில் இருக்கும் போது தமிழக முடிவு குறித்து அவர்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை.

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - தமிழ்நாடு
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - தமிழ்நாடு

அடுத்து சி.என்.என் – ஐ.பி.என் எக்சிட் போல் கணிப்பை பார்ப்போம். தமிழகத்தை சற்றும் அறியாத இந்த டெல்லி கம்பெனியின் கருத்துப்படி அ.தி.மு.க கூட்டணிக்கு 120 முதல் 132 இடங்களும், தி.மு.க கூட்டணிக்கு 102 முதல் 114 இடங்களும் கிடைக்குமாம். ஹெட்லைன்ஸ் டுடே கணிப்பின் படி மேற்கண்ட முடிவுகள் கிட்டத்தட்ட அதே தொகுதிகளில் நேர்மாறாக இருக்கிறது. அதாவது தி.மு.கவிற்கு மயிரிழை பெரும்பான்மையும், அ.தி.மு.கவிற்கு மயிரிழை தோல்வியும் எனச் சொல்கிறது.

சி.என்.என் மதிப்பிட்டீன்படி தி.மு.க கூட்டணிக்கு 44 சதமும், அ.தி.மு.க கூட்டணிக்கு 46 சத வாக்குகளும் கிடைக்குமாம். இதன்படி இரண்டு சதவீதம்தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

இந்தக் கணிப்பு உண்மையெனக் கொண்டால் தமிழகத்தில் நிச்சயம் குதிரைப் பேரம் தீவிரமாக நடக்கும். சிறு கட்சிகளின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த விலையில் வாங்கப்படுவதற்கான முயற்சி தீவிரமாக நடைபெறும். கவர்னர் வழியாக காங்கிரசுக் கட்சி என்ன நிலை எடுக்கும், பணபலத்தில் கோலேச்சும் தி.மு.கவோடு காங்கிரசு என்ன உறவைக் கொண்டிருக்கும் என்பது ஒரு கேள்வி. மேலும் அ.தி.மு.கவும் பணபலத்தில் ஒன்றும் ஏழையல்ல என்பதோடு, காங்கிரசோடு சேர்வதற்கு எப்போதும் காத்துக் கொண்டிருக்கும் கட்சிதான்.

இதன்படி எம்.எல்.ஏக்களை பாதுகாக்கும் பணியும், பறிக்கும் பணியும் மிகத்தீவிரமாக நடைபெறும். எல்லாக் கட்சி தலைவர்களும் ஊடகங்களில் மிகுந்த கவனிப்பை பெறுவார்கள். திரைமறைவு பேரங்கள், கிசுகிசுக்கள், சவடால்கள், பரபரப்பு செய்திகள் என்று  தேர்தலில் இல்லாத காட்சிகள் திகிலோடு நடந்தேறும். ஆள்பிடிப்பதில் வல்லவர் அழகிரியா, செங்கோட்டையனா என்று போட்டி நடக்கும். மன்னார்குடி குடும்பமும், கோபாலபுரம் குடும்பமும் கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற போட்டியில் இறங்கும்.

ராமதாஸ், விஜயகாந்த், திருமா, ராமகிருஷ்ணன், தா.பாண்டியன் போன்றோரெல்லாம் மிகுந்த முக்கியத்துவம் உடைய தலைவர்களாக ஊடகங்களில் வலம் வருவார்கள். ஜூனியர் விகடன் அ.தி.மு.க அணிக்கும், நக்கீரன் தி.மு.க அணிக்கும் இல்லாத செய்திகளை பயங்கரமாக அள்ளி விடுவார்கள். இடையில் கனிமொழி கைது விவகாரமும் வரப்போவதால் ஜூனியர் விகடனுக்கு கொண்டாட்டம்தான்.

இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் வாக்களித்த மக்களின் ஜனநாயக கடமை உணர்வு குறுகிய நேரத்திலேயே மரித்து விடும். மக்களும் விறுவிறுப்பான அரசியல் செய்திகளை டி.வி சீரியல் போக பார்த்து விட்டு அடுத்த வேலைக்கு சென்றுவிடுவார்கள்.

மற்றபடி இப்படித்தான் நடக்குமா என்பதை வரும் 13-ம் தேதி உறுதி செய்து கொள்ளலாம். அதுவரை காத்திருப்போம்.

சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - கேரளா - அஸ்ஸாம்
சி.என்.என். ஐ.பி.என் - எக்சிட் போல் - கேரளா - அஸ்ஸாம்

கேரளாவிலும் இரு கூட்டணிகளுக்கும் மயிரிழை வெற்றிதான் கிடைக்குமென்று மாறுபட்ட கணிப்புகள் கூறுகின்றன. அப்படி வரும் பட்சத்தில் கேரளாவிலும் பிரச்சினைதான். அஸ்ஸாமில் மட்டும் காங்கிரசு சிறு அளவு பெரும்பான்மையோடு வெற்றி பெரும் என்று கூறுகிறார்கள்.

ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மேற்கு வங்கத்தில் மம்தாவின் வெற்றியைத் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி என்பது திரிசங்கு நிலைதான். குறிப்பாக தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிலை வரும்போது நடக்கும் காட்சிகளை நினைத்துப் பார்த்தால் இப்போதே உற்சாகமாக இருக்கிறது. தேர்தலில் அதிக அளவு வாக்களித்த மக்களின் ஜனநாயகத்திற்காக பெருமைப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் இந்த குழப்பமான முடிவு காரணமாக “என்னய்யா ஜனநாயகம்” என்று நொந்து கொள்வார்கள், ஆக இதுதான் போலி ஜனநாயகம் என்று மக்களிடம் நாம் மீண்டும் உறுதி செய்வதற்கு இந்த தொங்குநிலை சட்டமன்றமும் உதவி செய்யும்.

ஒரு வேளை தி.மு.கவோ, இல்லை அ.தி.மு.கவோ தனிப்பெரும்பான்மை பிடித்து ஆட்சியைப் பிடித்தால் முன்னெப்பொதும் இல்லாத அளவு ஊழல்களும், திரை மறைவு வருமானங்களும் கொடிகட்டிப்பறக்கும் என்பது உறுதி. இதை விட்டாலத் அடுத்த தேர்தலில் எல்லாம் இப்படி தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதால் கிடைத்ததை எல்லாம் அதிவேகமாகச் சுருட்டுவார்கள். ஆக தொங்கு நிலை என்றாலும் சரி, தனிப்பெரும்பான்மை என்றாலும் சரி, தமிழக மக்களுக்கு விமோச்சனம் இல்லை.
___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

தேர்தல் 2011

உலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழைகள்!

ஒரு தலைப்பட்சமே அடிப்படையாக – ஜெயதி கோஷ்

நகர சுத்தி தொழிலாளர்கள்
திருநெல்வேலி நகர சுத்தி தொழிலாளர்கள் படம்-பிரன்டலைன்

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மேற்கொள்ளப் படும் நடிவடிக்கைகள் யாவும் சமூகத்தில் பாரபட்சமாக நடத்தப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டுள்ள நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகத்தான் என பெரும்பாலான மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.  அதற்கு வைக்கப்படும் வாதம் யாதெனில் சந்தையின் சக்தியென்பது காலம் காலமாக இருந்து வரும் சமூக கட்டுப்பாடுகளையும், உடைத்தெறிந்து குறிப்பாக பாலின வேறுபாட்டினால் நீண்டகாலமாக மறுக்கப்பட்ட வாய்ப்புக்களை பெற்று தருகிறது என்பதாகும்.

துரதிருஷ்டவசமாக இந்தியாவில் யதார்த்தம் என்பது அது போலன்றி மிகவும் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.  தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக சொல்லப்படும் பெரிய அளவிலான முதலீடுகள், அதனுடைய சக்தியினால் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபடும் உற்பத்தி சார்ந்த வேலை வாய்ப்புக்கள் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், இருக்கும் போக்கிலிருந்து மாறவில்லை என்பதுடன், பிடிவாதமாக முதலாளித்துவ நலன் சார்ந்தே உள்ளது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்திய கார்ப்பரேட் முதலாளிகளைப் பொறுத்தவரை முறைசார்ந்த, அல்லது முறைசாராத அனைத்து பணிகைளயும் குறைந்த கூலிக்கு வெளியில் கொடுத்து வாங்குவது என்ற முறை கடைபிடிக்கப் படுவதை சொல்லலாம்.  குறிப்பிட்ட எண்ணிக்கையை மிகுதிப்படுத்தும் அத்தகைய நடவடிக்கையில் கார்ப்பரேட் முதலாளிகளின் உற்பத்தி செலவினம் பெருமளவில் குறைகிறது என்பதோடு, உற்பத்தியில் இருக்கிற அபாயங்களை பல சாதாரண தொழிலாளர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிற சிறிய பிரிவுகளிடம் தள்ளிவிடுவதற்கும் அது உதவியாக உள்ளது.

இந்தியாவில் வெற்றிகரமான பொருளாதார நடவடிக்கைகள் என்பது, பெரிய அளவில் அங்கீகரிக்கப்படாத, முறைசாரா தொழிலாளர்களின் உழைப்பினால் கிடைக்கக் கூடிய மறைமுக உதவிகளைச் சார்ந்தே இருக்கிறது. அதிகமான பணிகளை வெளியில் கொடுத்து வாங்குவதால் நிர்ணயிக்கப்பட்ட செலவினம் என்பது கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பெருமளவில் குறைகிறது.

உதாரணத்திற்கு இந்தியாவில் கணினி மென்பொருள் தொழிலில் சர்வதேசங்களோடு ஒப்பிடுகையில் மலிவான கூலிக்கு திறமையானவர்கள் கிடைப்பதால், அதன் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

மேலும் குறிப்பிடத்தக்கவாறு செலவின குறைப்பு என்பது ஒவ்வொரு அலுவலகத்திலும் சுத்தப்படுத்துவது, அலுவலகப் பராமரிப்பு, போக்குவரத்து, காவல்/பாதுகாப்பு பணிகள், அலுவல் முடிந்தபின் நடைபெறும் இதர பணிகள், உணவு சமைத்தல், வழங்கல் போன்ற அனைத்து பணிகளும் வெளியில் சிறு சிறு குழுக்களிடம் கொடுப்பதால் ஏற்படுகிறது. பெரும்பாலும் இவை மிகக் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் பணிவாங்கும் சிறிய நிறுவனங்களில் கொடுக்கப்படுகிறது.  இதில் தொழிலாளர்களுக்கான பணி பாதுகாப்பு உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பும் இல்லை.  இத்தகைய குறைந்த சம்பள பணியாளர்கள் மூலமான செலவின குறைவு இல்லாதிருந்தால் சிறிய கணினி மென்பொருள் நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மிகுந்த சிரமப்பட நேரிடும்.  இதே நிலை உற்பத்தியில் இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் புதிய நிறுவனங்களுக்கும் பொருந்தி வரும் உண்மையாகும்.

கார்ப்பரேட் பிரிவில் இத்தகைய நேரடி மற்றும் மறைமுக செலவின குறைப்பு என்பதில் குறைந்த சம்பளத்திற்கு சில சமூக தன்மைகளை வைத்து தொழிலாளர்களை தீர்மானித்து திறம்பட கையாள்வதில் இந்திய முதலாளிகள் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.  சாதி மற்றும் இனத்தின் வழியான பாகுபாடு காட்டும் தன்மை என்பது இந்தியாவில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இந்திய சமூகத்தில் உள்ள இந்த பிரத்யேக சாதி ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மலிவான தொழிலாளர்களை முடிவு செய்கின்றனர்.

பல்வேறு ஆய்வுகளிலிலிருந்து சமூக பிரிவினை என்பது வறுமையோடு தொடர்புடையதாக இருக்கிறது என்பதும், அதன் காரணமாக பணியும், சம்பளமும் சமூக பிரிவுகளில் மிகவும் ஏற்றத் தாழ்வாக அமைகிறது என்பதும் தெரியவருகிறது.  தேசிய மாதிரி ஆய்விலிருந்து குறைவான கூலிக்கு வேலையாட்கள் என்பது பொதுவான சாதி இந்து மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் பெரும்பாலும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர், பட்டியலிடப்பட்ட இனத்தவர், இஸ்லாமியர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் (இந்த வரிசையில்) ஆகியோரே அதிகமாக உள்ளனர் என்பது தெரியவருகிறது.  இது பெரும்பாலும் கல்வியறிவு குறைவினாலும், திறமையின் அளவுகோலாலும் தீர்மானிக்கப் படுகிறது என்பதுடன், கல்வியறிவு பெறுவதிலும் சமூகத்தில் மிகுந்த பாகுபாடுகள் உள்ளது.

அத்தகைய சாதிவாரியான வேறுபாடுகள் என்பது ஊரக மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு சந்தைகளில் நிலவுகிறது.  உதாரணத்திற்கு டெல்லி போன்ற பொருளாதாரத்தில் சிறந்த வளர்ச்சி பெற்ற மாநகராட்சியில் கூட தலித் பணியாளர்களுக்கு வேலை வழங்குவதில் பாகுபாடு கடைப்பிடிக்கப்படுவதுடன், அவர்கள் தான் பெரும்பாலும், மீள முடியாத குறைந்த கூலி பணிகளில் நியமிக்கப் படுகின்றனர்.  உற்பத்தியில் கூட இவையெல்லாம் அத்தியாவசிய பணிகள் அதாவது குப்பை பெருக்குபவர்கள், சுமைப்பணியாளர்கள், கட்டிட பணியாளர்கள், கடைகளில் விற்பனை உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்பவர்கள் ஆகிய தொழிலாளர்கள்.  தொடர்புகளின் மூலம் இத்தகைய குறைந்த திறனுள்ள வேலைகளுக்கான ஆட்கள் தேர்வில் வெகு காலமாக இருந்துவரும் சாதிய பாகுபாடு என்பது பிரதான பங்கு வகிப்பதுடன், அவர்களிடம் இருக்கும் ஏழ்மையை பயன்படுத்தி குறைந்த கூலிக்கான ஆட்கள் தேர்வு என்பது மேற்கொள்ளப்படுகிறது.  இந்த சமூக அமைப்பில் அவர்களுக்கான வருமானம் ஈட்டல் என்பதில் உள்ள அவசியத்தினால் அவர்கள் குறைந்த கூலிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

அதேபோல் ஊரக இந்தியாவில் சாதிய நடைமுறை வழக்கங்களினால் உள்ளூரில் மிகக் குறைந்த கூலிக்கு அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட சாதியினரை வேலைக்கு முதலாளிகளிடம் அமர்த்தும் பழக்கம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது.  திரு கன்ஷ்யாம் ஷா என்பவர் எழுதியுள்ள ஊரக இந்தியாவில் தீண்டாமை என்ற புத்தகத்தில் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் (சத்தீஸ்கர் உட்பட) ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஒரிஸ்ஸா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் தீண்டாமை அதிக அளவில் இருந்து வருகிறது என்பதும், இங்குள்ள பெரிய அளவிலான சமூக பழக்க வழக்கங்களினால் தாழ்ந்த சாதியினர் மற்றும் தலி்த் பிரிவினரின் பொருளாதார முன்னேற்றம் என்பது கட்டுப்படுத்தப் பட்டு அதன் காரணமாக அவர்கள் கடுமையான நிபந்தனைகளுடனான மிகக் குறைந்த கூலிக்கு தமது உழைப்பை விற்க வேண்டி நேருகிறது.

இந்த ஆய்வில் 73 சதவீத கிராமங்களில் தலித் மக்கள் தலித் அல்லாதவர்கள் வீட்டில் நுழைய முடியாது என்பது தெரியவருகிறது.  70 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் தலித் அல்லாதவர்களுடன் அமர்ந்து உண்ண முடியாது.  64 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் பொதுவான கோவில்களில் நுழைய கூடாது. 36 சதவீத கிராமங்களில் தலித்துக்கள் கடைகளில் நுழைய கூடாது.  ஏறக்குறைய இந்த ஆய்வு மேற்கொண்ட கிராமங்களில் 3ல் ஒரு பங்கு கிராமங்களில் உற்பத்தி பொருட்களை வாங்கி பொதுவாக பயன்படுத்தும் பொருட்களை விற்கும் பணியில் தலித்துக்கள் வியாபாரிகளாக செயல்படுவதை அனுமதிப்பதில்லை என தெரியவருகிறது.  இத்தகைய பழக்க முறைகளினால் தலித்துக்கள் தங்களின் விருப்பப்படி சம்பாதிக்கும் முறையை தேர்வு செய்து கொள்ள முடிவதில்லை என்பதால் கூலி உயரும் காலங்களில் கூட மலிவான கூலி வேலைக்கு அவர்கள் ஆட்பட நேரிடுகிறது. இந்தியாவில் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை கண்டுகொண்டிருக்கும் சூழலிலும் இத்தகைய வழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

ஆனால் முக்கியமாக இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் அத்தகைய பழக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதோடல்லாமல், பொருளாதாரம் ஓரிடத்தில் குவியும் நடவடிக்கைக்கு அடிப்படையாகவும் அது இருக்கிறது என்பதுதான்.  மற்றொரு வார்த்தைகளில் சொல்வதானால், இந்தியாவில் முதலாளித்துவம் என்பது, குறிப்பாக உலகளாவிய சமீபத்திய  சூழலில், ஏற்கனவே இருந்து வந்த தற்போதும் இருக்கிற சாதிய பாகுபாடுகளை பயன்படுத்தி தாழ்த்தப்பட்டவர்களை தமது சொந்த நலனுக்காக தள்ளி வைப்பதும், அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி மிகக் குறைந்த கூலிக்கு அழைப்பதுமான போக்கில் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது.

எனவே சமூக பிரிவினைகள் என்பது பொருளீட்டும் நடவடிக்கையில் சுதந்திரமாக இல்லை.  மாறாக கூடுதலாக பணி வாங்குவதும், குறைந்த கூலிக்கு அதிக ஆட்கள் கிடைக்கும் வண்ணம் வழக்கத்தை அதிகரிக்கும் விதமாகவும் உள்ளது.

இதேமாதிரியான பாகுபாடு பார்க்கும் பழக்கம் என்பது பாலினத்திற்கேற்பவும் வேறுபடுவது கண்கூடான ஒன்று.  பெண்களிடம் வேலை வாங்குவது என்பதில் வெளிப்படையாக இந்த நான்கு முரண்பாடுகள் தென்படுகிறது.  கூலி வழங்கப்படும் தொழிலாளி, குறைந்த கூலி வழங்கப்படும் தொழிலாளி, கூலி மறுக்கப்படும் தொழிலாளி மற்றும் வேலை மறுக்கப்படும் தொழிலாளி என்பதாகும்.   வேலைவாய்ப்பு அதிகரித்து, வேலையின்மை என்பது குறையும் போது, அல்லது கூலி பெறுபவர் எண்ணிக்கை அதிகரித்து கூலி பெறாதவர்கள் எண்ணிக்கை குறையும் போது ஏற்படுகிற இது ஒரு முரண் நிலையாகும்.

ஊரக பெண்களைப் பொறுத்தவரை அவர்களின் வழக்கமான வேலை என்பது அதிகரித்து வருவதுடன் குறிப்பாக வீட்டு வேலைகள் மற்றும் உற்பத்தி சார்ந்த வேலைகளில் முக்கியமாக குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யும் நிலை என்பது ஏற்படுகிறது.  உற்பத்தி என்பதைப் பொறுத்தமட்டில் சமீபத்திய பல பெரிய நிறுவனங்கள் தமது உற்பத்தி சங்கிலியில் அது சார்ந்த பணிகளை சிறிது சிறிதாக வெளியில் கொடுத்து வாங்கும் தன்மையினால், வீட்டிலிருந்து கொண்டே குறைந்த கூலிக்கு வேலை செய்வது என்பது பெண்களிடம்  அதிகரித்திருக்கிறது.

ஆனால் ஏற்றுமதி சார்ந்த வேலைகளில், சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மண்டலங்களில் கூட ஊரக இந்தியாவில் பெண்களை வேலைக்கு அமர்த்துவது என்பது மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது.  இதன் நடுவில் ஊரக இந்தியாவில் சம்பளத்திற்கு வேலை கிடைப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பெண்களிடம் விவசாயம் சாராத சுய வேலை வாய்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது.

இந்த பொருளாதார வளர்ச்சி காலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் சம்பளம் என்பது 1993-94-லிருந்து 2004-05-க்கு இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் சிறிது கூடியிருக்கிறது.  ஆனால் அதே சமயம் தேசிய தனிநபா் வருவாய் என்பது பெண்களை விட மிக அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கிறது (ஊரக பட்டதாரிகள் மற்றும் கிராமத்து படிக்காத பெண்கள்),  உண்மையான சம்பளம் என்பது குறைந்திருக்கிறது.  இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான சம்பள வித்தியாசம் என்பது அதிகரித்துள்ளதுடன், உலகிலேயே இங்குதான் அதிகமாக உள்ளது.

பொதுப் பணிகள் என்பது மிகுதியாக குறைந்த கூலி வாங்கும் பெண்களை சார்ந்து இருக்கிறது.  மாதிரி நிர்வாகி என்று செயல்பட வேண்டிய அரசுத் துறை பணிகளில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு என்பது இன்னும் குறைவாகத்தான் உள்ளது.  அத்தியாவசிய பொதுப்பணிகள் என்பது நிச்சயமற்ற ஒப்பந்த முறையில் குறைந்த கூலி மற்றும் பயன்களுக்கு பெண்களை வேலைக்கமர்த்தும் போக்குதான் நீடிக்கிறது.

இது பள்ளிக் கல்வி போன்ற அரசுப் பணியில் அப்பட்டமாக தெரிகிறது. (அதாவது பகுதிநேர ஆசிரியர்கள் நியமனத்தினால்)  அதே போல் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து (அங்கன்வாடி மற்றும் சமூக நலப்பணிகள்) சார்ந்த பணிகளில் பெண்கள் பகுதி நேர பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் என்பது ஒன்று வந்தபின் தான் இத்தகைய பாலின வேறுபாடுகள் என்பது குறைந்துள்ளது ஊரகப் பணிகளில் இந்த திட்டம் செயல்படுவதை பார்க்கும் போது தெரிகிறது.  சுய வேலைவாய்ப்பில் பெண்களுக்கான நிபந்தனைகள் என்பது, சம்பளத்திற்கான பணியில் உள்ள நடத்தைப் பாங்கினை சிரமப்படுத்தும் விதமாக உள்ளது.  வருமானம் தொடர்பான குறைந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் பெண்களின் விவசாயம் சாராத சுய வேலைவாய்ப்பு தீர்மானிக்கப்படுகிறது என்ற போதிலும் அந்த குறைந்த பட்ச எதிர்பார்ப்பினை கூட பூர்த்தி செய்வதில்லை என்பதுதான் யதார்த்த நிலையாக உள்ளது. தொழில்துறையிலும், சிறு வணிகத்துறையிலும் உயர் வருவாய் என்பது ஏற்பட்டுள்ள போதிலும், ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் போதிய வருவாய் ஈட்டும் வாய்ப்பு என்பது குறைவாக இருப்பதால், சுயவேலை வாய்ப்பு என்பது சிரமத்துடன் கொண்டுசெல்லும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளது.

குறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேலோங்கியிருந்தாலும், வீட்டு வேலைகள் சார்ந்த பணிகளில், அது பெருவாரியாக ஒரு வேலைக்கு ஒரு கூலி என்று இருப்பதால், குறிப்பாக பெண் தொழிலாளர்களின் வருமானத்தின் பெரும்பகுதி இத்தகையதே என்பதால், அந்த தொழிலிலும், அதனால் வரும் இந்த கூலியும், பெரிய நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறது என்று தேசிய மாதிரி கணக்கெடுப்பு எடுத்த ஆய்வும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் வெளிப்படுத்துகிறது.

அது போல் பெண் தொழிலாளர்களின் பணிக்கு கூலியே கொடுப்பதில்லை என்பதும் அதிகமாகி வருகிறது.ஏனென்றால் பெண்கள் நலனுக்காக ஒதுக்கப்படும் செலவினங்கள் குறைக்கப்படுவதும், அல்லது தனியார் மயமாக்கப்படல், அல்லது வலுவிழந்த பொது சொத்துக்கான கட்டுமானம், மனைகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின் கிடைப்பதற்கான கால நீடிப்பு ஆகும் வகையில் உள்ள பற்றாக்குறை கட்டுமான வசதியும், அல்லது தெளிவாக சொல்லப் போனால், நல்ல நோக்கமுள்ள பல திட்டங்கள் கூட (உதாரணம்- வன அழிப்பு) பாலினம் சார்ந்ததாக உள்ளது என்பதுமே ஆகும்.

மீண்டும் இந்த பாலின வேற்றுமை தற்போதும் இருந்து கொண்டு இருக்கிறது என்பது அச்சாரமான குறிப்பு என்பதோடு மட்டுமின்றி, (இந்தியாவில் இந்த நிலைப்பாடு மேல்மட்டத்திலும் எடுக்கப்படுகிறது) இது மூலதன குவிப்பிற்கான வழிமுறையில் பிணைந்துள்ளது. எனவே, தற்போதைய வளர்ச்சி, நிலவி வரும் சமூக வேற்றுமையை உடைப்பதற்கு பதில் அதனை சார்ந்திருந்தே வளர்ச்சி பற்றிய கருத்தை முன்னெடுத்து செல்லப்படுகிறது.

_________________________________________________________________

– நன்றி: ஃபிரண்ட்லைன், கட்டுரையாளர் – ஜெயதி கோஷ்

தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உலகின் நம்பர் 1 பயங்கரவாதி!

14

பின்லேடன் இருப்பும், மரணமும் யாருக்காக?

மே 2-ம் தேதி. அதிகாலை நேரம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இரண்டு மணிநேர பயண தூரத்தில் உள்ள அபோதாபாத் நகரத்தில் இருக்கும் காக்கூல் இராணுவ பயிற்சி மையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அந்த பெரிய கட்டிடத்தை நான்கு உலங்கு வானூர்தியில் வந்த 79 அமெரிக்க சீல்(seals) படையினர் தாக்குகின்றனர். நாற்பது நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படும் அந்த சண்டையின் இறுதியில் தமது இலக்கைத் தாக்கியழித்து விட்டு அமெரிக்க வீரர்கள் ‘வெற்றியுடன்’ திரும்புகின்றனர்.

அதற்குச் சற்று நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் பாரக் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வலை வீசித் தேடி வந்த உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் நடந்த சண்டையில் கொன்று விட்டனர் என்று தெரிவிக்கிறார். அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்ற பயங்கரவாதிக்கான நீதியை வழங்கி விட்டதாகவும், ஆனாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போர் தொடரும் என்றும் அறிவிக்கிறார்.

அதைத் தொடர்ந்து இந்த விசயம் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. உலகத்தின் நாகரீக சமூகத்திற்கே ஆகப் பெரிய சவாலாக விளங்கிய படுபயங்கரமான தீவிரவாதி கொல்லப்பட்டதை உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடின. ஆனால், இவர்களுக்கும் முன்னதாக இந்த ‘நரகாசுரவதத்தைக்’ கொண்டாடத் துவங்கியது அமெரிக்கர்கள் தான். செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர். தேசிய வெறி முழக்கங்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் திரளான மக்கள் ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர். புனிதப் போராளியான ஒசாமா பின்லேடனுக்கு சொர்கத்தில் இடம் நிச்சயம் என்று சொல்கின்றனர். வசதியான வீட்டுப் பிள்ளையான ஒசாமா, இசுலாத்தையும் இசுலாமியர்களையும் காப்பதற்காகவே தனது சுகவாழ்க்கையைத் தியாகம் செய்து காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார் என்று இவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்கா என்றாலே இசுலாமிய எதிர்ப்பு என்பது பட்டவர்த்தனமாக நடந்து வரும் வேளையில் ஒரு சராசரி முசுலீம் கூட பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து வருந்துவார் என்பதில் ஆச்சரியமில்லை. அதைத் தவறாக எண்ணவேண்டிய அவசியமும் இல்லை.

பொதுவில் அமெரிக்காவின் இந்த சாகச நடவடிக்கையைப் போற்றிப் புகழும் ஊடகங்களை விடுத்துப் பார்த்தால், வெகு சில அமெரிக்க எதிர்ப்பு ஊடகங்களிலோ இது மொத்தமும் பெரிய மோசடியென்கிறார்கள். ஒசாமா பின்லேடன் ஏற்கனவே மரணமடைந்து விட்டாரென்றும், இப்போது அமெரிக்கா சொல்வதே பச்சையான பொய் என்றும் சொல்கின்றனர். சர்வதேசப் பெருமந்தம் என்கிற பெரும்  பொருளாதாரப் புதைகுழியிலும் ஆப்கான் போர் என்கிற இராணுவரீதியிலான புதைகுழியிலும் மீளமுடியாமல் சிக்கியிருக்கும் அமெரிக்கா, அதிலிருந்து  மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், எதிர்வரும் தேர்தலுக்குள் சரிந்து போன தனது செல்வாக்கை நிமிர்த்தும் முகமாகவே பராக் ஒபாமா இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஒசாமா பின்லேடனை அமெரிக்கத் தயாரிப்பு என்று ஒப்புக் கொள்ளும் சிலரும் கூட, அவரால் அமெரிக்கா படுபயங்கரமான பாதிப்புக்குள்ளாகி விட்டதைப் போன்றும், அவர் அமெரிக்காவுக்கு தீர்க்க முடியாத ஒரு பெரும் சவாலாக விளங்கினார் என்றும் இப்போது படாதபாடெல்லாம் பட்டு அமெரிக்கா அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

இந்த அம்சங்களை நாம் தனித்தனியே பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முடியாது. ஒசாமா யாருக்காக வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து தான் அவர் யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ளும் போது தான் எதற்காகச் சாக வேண்டும் என்பது தெரியவரும். இந்தப் பரிசீலனைகளின் நீட்சியாக எப்போது செத்தார் என்கிற ஆராய்ச்சியின் தேவையும் தேவையின்மையும் அதன் மெய்யான பொருளில் நமக்கு விளங்கும்.

ஒசாமா இறந்தாலும் ஆயிரம் பொன், இருந்தாலும் ஆயிரம் பொன்!

ஒப்பீட்டளவில் ஒசாமாவைக் காட்டிலும் உள்நாட்டு மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்த சதாம் உசேன் பிடிபட்டதையும், விசாரணை என்கிற பெயரில் அவர் அவமானப்படுத்தப்பட்டதையும், பின்னர் அவர் அநீதியான முறையில் கொல்லப்பட்டதையும் வீடியோக்களாக ‘கசிய’ விட்டு ஈராக்கியர்களிடையே பயபீதியை ஏற்படுத்திய அமெரிக்கா, ஒசாமா கொல்லப்பட்டதும் அவரது உடலை வெளியே காட்டாமல் அவசர அவசரமாக கடலில் வீசியெறிந்து விட்டதாகச் சொல்கிறது.

ஒசாமாவைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் ஜெரோனிமா பற்றிய தகவல்களைக் கூட அமெரிக்க சி.ஐ.ஏவின் உயரதிகாரிகளும் வெள்ளை மாளிகளை அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாகத் தான் சொல்லி வருகிறார்கள். ஒசாமாவோடு அவரது மனைவியும் மகனும் கொல்லப்பட்டார்கள் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் – பின்னர் இல்லையில்லை அது அவரது கூட்டாளியின் மனைவியும் மகனும்  என்று மாற்றினார்கள். அடுத்து, ஒசாமாவே துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டையிட்டார் என்றார்கள். ஒசாமாவின் உடல் நலிவைப் பற்றி ஊடகங்கள் எழுதத் துவங்கிய பின் இல்லையில்லை அவர் கைது நடவடிக்கையை எதிர்க்கும் விதமான செய்கைகளைச் செய்தார், எனவே தற்காப்புக்காக கொன்றோம் என்கிறார்கள்.

இப்படி மாற்றி மாற்றி அமெரிக்கர்கள் உளறிக் கொட்டுவதைச் சுட்டிக் காட்டும் சிலர், இது மொத்தமுமே ஒரு நாடகம் என்கிறார்கள். ஒசாமா 2001 டிசம்பரிலேயே கொல்லப்பட்டு விட்டதாகவும், தமது ‘தீவிரவாதத்துக்கு எதிரான’  போருக்கு மக்களிடையே ஒரு ஆதரவு தளத்தை உண்டாக்கவும், ஒசாமாவை மோசமான எதிரியாகச் சித்தரித்து அமெரிக்கர்களிடையே போருக்கு ஆதரவானதொரு பொதுக் கருத்தை காட்டமைக்கவே இத்தனை நாளும் அதை மறைத்தார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள்.

இரட்டை கோபுரத் தகர்ப்புக்குப் பின் பகிரங்கமாக ஒசாமா வெளியே தலைகாட்டாமல் இருந்ததையும் அதன் பின் வெகு சில சந்தர்பங்களில் வெளியான அவரது வீடியோக்களின் நம்பகத்தன்மை சுயேச்சையான ஆய்வுகளில் (ஃபோரன்சிக் ஆய்வு) கேள்விக்குள்ளாக்கப் பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டும் இவர்கள், இப்போது ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் அமெரிக்கா தவிப்பதாகவும், போருக்கான செலவினங்கள் அதிகரித்து அமெரிக்கப் பொருளாதாரத்தின் கழுத்தை நெறிப்பதாகவும், இதனால் ஆப்கான் போரை ஒரு கவுரவமான வெற்றியாக சித்தரிக்கும் முகமாகவே இப்போது ஒசாமா கொல்லப்பட்ட நாடகம் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இன்னொரு பக்கத்தில் ஒபாமாவின் சரிந்து போன செல்வாக்கை உயர்த்தவும் பயன்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.

மேற்கண்ட வாதங்கள் முழுமையும் பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. ஆனால், ஒரு அடிப்படையான அம்சத்தை இவர்கள் காணத் தவறுகிறார்கள். போரிலிருந்து பின்வாங்குவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றால், இப்போது லிபியாவின் மேல் ஏன் போர் தொடங்க வேண்டும்? அடுத்து சிரியாவின் மேல் ஏன் குறிவைக்க வேண்டும்? நிதர்சனம் என்னவென்றால், ஏகாதிபத்தியம் போர்களில் இருந்து விலகுவதன் மூலம் தனது நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ள விளைவதில்லை – அது மேலும் மேலும் போர்களில் ஈடுபடுவதன் மூலமே தனது நெருக்கடிக்கான தீர்வை அடைய விரும்புகிறது. அதுதான் ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்தலின் ரகசியம்.

அதே நேரம் ஒசாமா கொலை பற்றி அமெரிக்கர்கள் மாற்றி மாற்றி முரண்பட்ட தகவல்களை அளிப்பதையும், 2007-க்குப் பிறகு ஒசாமா வீடியோ / ஆடியோ உள்ளிட்ட எந்த ரூபத்திலும் தலைகாட்டாத எதார்த்த உண்மையையும், இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின் நடந்ததாகச் சொல்லப்படும் ‘இசுலாமிய தீவிரவாத’ தாக்குதல்கள் எதையும் ஒசாமாவின் நேரடிக் கட்டளையின் பேரில் நடக்கவில்லை என்று ஏகாதிபத்தியவாதிகளே சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆக, உண்மை என்பது இந்த இரண்டுக்கும் இடையில் தான் இருக்கிறது.

ஒசாமா 2001-ல் இறந்தாரா – இல்லை 2011-ல் இறந்தாரா என்பதைப் பற்றிய பரிசீலனைக்குள் போவதற்கு முன், ஒசாமா பின்லேடன் என்கிற பெயர், அதைச் சுற்றி கவனமாக கட்டப்பட்ட பிம்பம், அந்த பிம்பத்தைப் பற்றி அமெரிக்க மற்றும் உலக மக்களின் பொதுக்கருத்தில் முதலாளித்துவ ஊடகங்களால் தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்ட பயபீதி, இந்த பயபீதியினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன – அது யாருடைய நலனுக்கு சேவை புரிந்துள்ளது என்பதைக் குறித்து நாம் புரிந்து கொண்டால் தான் முந்தைய கேள்விக்கான பதில் நமக்கு விளங்கும்.

அமெரிக்க அரசின் இயக்கமும் அதன் செயல்பாடுகளும் – அந்தச் செயல்பாடுகளினால் விளையும் நன்மைகளும் முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிகளின் நலன் சார்ந்த ஒன்று. போர் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம்? போர் என்றால் அப்பாவி மக்கள் சாவார்கள். ஒன்றுமறியாத குழந்தைகள் அநியாயமாகச் சாவார்கள். போர் என்றால் ஒரு சமூகத்தின் சர்வநாசம். அதன் சமூகப் பொருளாதாரக் கட்டமைவின் பேரழிவு. இப்படித்தான் போரைப் பற்றி ஓரளவுக்கு விவரம் புரிந்தவர்கள் கூடப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சரிதானே?

ஆனால், முதலாளிகளைப் பொருத்தளவில் போர் என்பது ஒரு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். போர் என்றால் ஆயுத விற்பனை – ஆயுத வியாபாரிகள் கொழிப்பார்கள். போரின் அழிவு என்றால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு – கட்டுமானக் கம்பெனிகளின் கொழிப்பு. போரின் இறுதியில் தோற்றுப் போகும் நாட்டின் வளங்களின் மறுபங்கீடு. தமது பொருட்களுக்கான சந்தை. இதையெல்லாம் கடந்து வெல்லப்பட்ட நாட்டின் மீது வென்ற நாட்டின் மேலாதிக்கம்.

ஒசாமா பின்லேடன் என்று ஒருவர் இல்லாமல் போய் – இரட்டை கோபுரம் தகர்க்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட ஆப்கான் போர் என்பது சர்வ நிச்சயமாய் நடந்திருக்கும். அதற்கு இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பதையும் மனிதகுலத்துக்கே சவால் விடுக்கும் ‘படுபயங்கர’ சாத்தானாகச் சித்தரிக்கப்படும் ஒசாமா பின்லேடனையும் கடந்து பல்வேறு தேவைகளும் காரணங்களும் அமெரிக்காவிடம் இருந்தன. அந்தக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றி நாம் விரிவாக விளக்கும் முன்,  ஈராக் போருக்கான முக்கியமான காரணமாக அமெரிக்காவால் சொல்லப்பட்ட பேரழிவிற்கான ஆயுதங்கள் என்பது ஒருபோதும் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டதில்லை என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும், அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும் தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின் யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான் ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.

கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான் வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.

ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும். ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த கதையாகி விடும்.

ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும் எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும், ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.

இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது  மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல் மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின் போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும் கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில் வைத்திருப்பதும் முக்கியமானது.

ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான் பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான் தாலிபானும் அல்-காய்தாவும்.

நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர். இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.

பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம் சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச ‘அபாயத்தைக்’ களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும், அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.

அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும் இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித் தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.

இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை  உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.

என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப்  பாடதிட்டமான இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு வேறானது. பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள் விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில் மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல. அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.

அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால் ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள் மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.

வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின் போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை. முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய் தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின் முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின் அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின் மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.

இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.

உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே  நடக்க அனுமதித்தது என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இந்த தாக்குதலை வைத்து அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை முக்கியமானது.

ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத் துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது  அமெரிக்கா. இப்படித்தான் விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.

தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக் மேலும்  குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் – ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான் போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான் போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.

அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக் கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக் கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்  என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ முகம்.

ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில் பாய்ந்த போதும் சரி  – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி; அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.

இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை’ என்பதே நமது அக்கறைக்கும் கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது எதார்த்தம் சாமானிய  அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.

இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும் மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும் நிகழ்ந்துள்ளது.

பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல் வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே  எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப் பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை ஸ்திரப்படுத்திக்  கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச் சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள் இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது ‘மனிதாபிமான அடிப்படையிலான’ தலையீடு.

சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை. இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத் தேவையில்லை.  இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும் இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.

கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் ‘நல்லெண்ண அடிப்படையிலான’ போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது – இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.

யார் பயங்கரவாதி? அல் காய்தாவா, அமெரிக்காவா?

பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அறிவித்த பராக் ஒபாமா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்ற ஒரு பயங்கரமான தீவிரவாதியை ஒழித்து நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், இத்தோடு நில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது இதுவரை நிலைநாட்டியதைக் கடந்து இன்னமும் நிலைநாட்டப்படுவதற்கு இன்னமும் நீதியை அமெரிக்கா ஸ்டாக் வைத்துள்ளது என்பதே அந்த அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தம்.

பராக் ஒபாமாவின் வார்த்தைகள் ஒரு அம்சத்தில் உண்மையானது தான் – அதாவது அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொல்பவன் ஒரு பயங்கரமான தீவிரவாதியாகத் தான் இருக்க முடியும். அவன் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்கிற ஒபாமாவின் ஆசையைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது – அது நியாயமானது தான். எமது ஆசையும் கூட அதுவே தான். நாம் எமது வாசகர்களையும் பொதுமக்களையும் ஒபாமாவின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு கோருகிறோம். ஆனால், ஒசாமா பின்லேடன் ஒழிந்த பின் இப்போது உலகிலேயே பயங்கரமான தீவிரவாதி யாராக இருக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அது நியாயமானது தான். எனவே அப்படியொரு தீவிரவாதியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது வினவின் தலையாய கடமையாக  கருதுகிறோம்.

இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான். அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் தம் பெற்றோர் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். தாய்மார்கள் தமது பிள்ளைகள் முன்பே மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றுமறியாத சிறு பிள்ளைகள் இந்த பயங்கரவாதி வீசிய குண்டுகளில் சிதைந்து போயுள்ளன. கருவிலிருக்கும் சிசு வரையில் ஊடுருவும் வீரியம் மிக்க அந்த குண்டுகளினால் பிறக்கும் குழந்தைகள் உருவமற்ற வெறும் சதைக்கோளங்களாகப் பிறந்துள்ளன.

ஒசாமா பின்லேடனாவது எந்த நீதிமன்றத்தாலும் விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டவனில்லை – ஆனால், நாங்கள் அடையாளம் காட்டுவதோ சர்வதேச நீதிமன்றத்தாலேயே குற்றவாளி  என்று தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கரவாதியை. இன்னமும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் அந்தத் தீவிரவாதி வேறு யாரும் இல்லை – அது அமெரிக்கா தான். உலகெங்கும் ஒரு ஆக்டோபஸின் கரங்களைப் போல் விரியும் அமெரிக்காவின் பயங்கரவாதக் கொலைக் கரங்கள் விளைவித்த சர்வநாசங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை இங்கே வழங்குகிறோம். முதலில் அமெரிக்காவின் கொல்லைப்புறமான லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து துவங்குவோம்.

அமெரிக்க பயங்கரவாதம்

அமெரிக்க பயங்கரவாதம் – தென் அமெரிக்க சாட்சியங்கள்!

வட அமெரிக்க கண்டத்தையும் தென்னமெரிக்க கண்டத்தையும் இணைக்கும் மெல்லிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய நாடு நிகரகுவா. 1936-ல் தொடங்கி சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தது சோமோசா சார்வாதிகார கும்பல். இன்றைக்கு உலகமக்களுக்கு ஜனநாயக விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இதே யோக்கிய அமெரிக்கா தான் அன்று மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த சோமோசா கும்பலுக்கு உற்ற பங்காளி.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வுகள் ஒரு பௌதீக வடிவமாக ஸான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் வடிவில் உருக்கொண்டு எழுந்து சூறாவளியாய்ச் சுழன்றடித்ததில் சோமோசா குடும்பத்தின் கடைசி வாரிசும் அப்போது அதிகாரத்திலிருந்த கொடும் சர்வாதிகாரியுமான அனடேஸியோ சோமோசா டெபாயேல் 1979-ம் ஆண்டு அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். மக்களின் விடுதலை உணர்வுகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது. 77-ம் ஆண்டே இதை முன்னறிந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார். ஆனாலும் சுழன்றடித்த மக்களின் கோபக் கனலில் சோமோசா சர்வாதார ஆட்சி கவிழ்ந்து சான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோமோசா கும்பலுக்கு விசுவாசமான கூலிப்படையினரைப் பொறுக்கியெடுத்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, அவர்களுக்கு கான்ட்ராஸ் என்று பெயரிட்டு பயங்கரவாத நாசவேலைகள் செய்வதற்கு பயிற்றுவித்தனர். இதற்காகவே “ஸ்கூல் ஆப் அமெரிக்கானாஸ்” என்கிற பயங்கரவாத பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வந்துள்ளது அமெரிக்கா. 1946-ல் துவங்கப்பட்ட இந்த பயங்கரவாதப் பயிற்சிப் பள்ளியில் வைத்து தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒசாமாவுக்கே அப்பன்மார்களையெல்லாம் அமெரிக்கா விரிவாகப் பாடம் நடத்திப் பயிற்றுவித்து உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது.

சுமார் 60,000 பங்கரவாதிகளை உருவாக்கிய இந்தப் பள்ளியை உள்நாட்டில் கிளம்பிய எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் டிசம்பர் 2000-ல் இழுத்து மூடிய அமெரிக்கா ஒரே மாதத்தில் – 17 ஜனவரி 2001-ல் – மேற்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பயிற்று மையம்  (Western Hemisphere institute for security cooperation) என்கிற பெயரில் மீண்டும் திறந்துள்ளது. நிகரகுவா மட்டுமின்றி, எல்சால்வடாரில் இயங்கிய கொலைப்படை, பனாமாவின் கொடூர சர்வாதிகாரி மானுவேல் நொரியேகா, கொலம்பியாவின் மாஃபியா கும்பல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகளையும் பயங்கரவாத கும்பலையும் பெற்றெடுத்துள்ளது இந்தப் பள்ளி.

அமெரிக்க செனேட்டரான ஜோஸப் கென்னடியின் கூற்றுப்படி, சுமார் பதினோரு இலத்தீன் அமெரிக்கச் சர்வாதிகாரிகள் இந்தப் பள்ளியிலிருந்து தான் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். மேலும் அவர், உலகிலேயே அதிகளவிலான கொடூர சர்வாதிகாரிகளைத் தோற்றுவித்த ஸ்தாபனம் இதுவாகத் தான் இருக்கும் என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட்டுகளையும் புரட்சியாளர்களையும் எப்படித் தேடித் தேடிக் கொலை செய்ய வேண்டும், மாட்டிக் கொண்ட அப்பாவிகளை எப்படிச் சித்திரவதை செய்ய வேண்டும், கைது செய்த அரசியல் கைதிகளை எப்படித் துன்புறுத்தி விசாரிக்க வேண்டும், ஒரு சிவில் சமூகத்தில் நாசவேலைகளைச் செய்வது எப்படி என்பதெற்கெல்லாம் விரிவாக கோனார் நோட்ஸ் போட்டு பாடம் நடத்தியுள்ளார்கள். பொறுமையும் மனதைரியமும் இருந்தால் அவற்றில் ஒன்றை நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.  அமெரிக்க சி.ஐ.ஏவின் இது போன்ற பயங்கரவாதக் கையேடுகள் இணையத்தில் நிறையக் கிடைக்கிறது.

பயிற்றுவிக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்ட அமெரிக்காவின் இந்த ‘மாணவப்’ படை அப்பாவி மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயங்கரங்கள் சொல்லில் வடிக்க முடியாதளவுக்கு ரத்தக் கவுச்சி வீசும் சொல்லொணாத் துயரங்கள். இது பற்றி பதிவு செய்துள்ள நோம் சோம்ஸ்கி

“நிகரகுவாவில் அமெரிக்க அரசால் இயக்கப்பட்ட காண்ட்ரா கொலைப்படையாகட்டும், கவுதமாலா, எல்சால்வடாரில் செயல்பட்ட நமது பினாமி பயங்கரவாதிகளாட்டும், அவர்கள் சாதாரண முறையில் கொலை செய்வதில்லை… குழந்தைகளைப் பாறையில் மோதிக் கொல்வது, பெண்களின் மார்புகளை அறுத்துத் தலைகீழாகத் தொங்கவிட்டு ரத்தம் வெளியேறிச் சாகச் செய்வது, தலையைச் சீவிவிட்டு முண்டத்தை மட்டும் கழுமரத்தில் சொருகி வைப்பது என அனைத்துமே கொடூரமான வக்கிரமான முறைகள்”

பாதிரியாரான சாண்டியாகோ சொல்வது நமது முதுகெலும்பைச் சில்லிட வைக்கிறது –

“சதைகள் பிய்ந்து எலும்பு தெரியும் வரை குழந்தைகளை முள் கம்பிகளின் மேல் புரட்டி இழுத்து அந்தக் காட்சிகளைக் காணுமாறு பெற்றோர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்” இந்தக் கொடூரங்களைச் செய்ய பக்குவப்படுத்தும் பயிற்சி முறைகளை அமெரிக்காவே முன்னின்று கற்றுக் கொடுத்துள்ளது. எல்சால்வடாரின் கொலைப்படையில் இருந்து மன உளைச்சல் தாளாமல் தப்பியோடி வந்த ஒரு அகதி இதை 1990-ம் ஆண்டு அமெரிக்க நீதி மன்றத்திலேயே சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார்.

“சேரிகளுக்குள் புகுந்து 13, 14 வயது சிறுவர்களை போலீசு அள்ளிக் கொண்டு போகும். அவர்களுக்குப் பயிற்சி முகாமில் கொலை, கற்பழிப்பு, சித்திரவதை ஆகியவைகளை ஒரு மதச் சடங்கைப் போலப் பயிற்றுவிப்பார்கள். ‘மாணவர்கள்’ நாய்களையும் பருந்துகளையும் கழுத்தை முறித்து, பற்களால் தொண்டையைக் கடித்தே கொலை செய்யப் பழக வேண்டும். வெறும் மிருகங்களை வைத்து மட்டும் செய்முறை பயிற்சி அளிக்கப்படவில்லை. தமது ‘மாணவர்களின்’ திறன் வெறும் மிருகங்கள் பறவைகள்  எனும் அளவில் மட்டும் சுருங்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறது.

பதிமூன்று ஆண்டுகளாக சி.ஐ.ஏ அதிகாரியாகப் பணியாற்றிய ஜான் ஸ்டாக்வெல் இது போன்ற செய்முறைப் பயிற்சிகளைப் பற்றி அளித்த பேட்டியொன்றில் மாணவர்களைத் தயாரிக்கும் முறைகளை விவரமாக பதிவு செய்துள்ளார். “சித்திரவதை முறைகளைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால், மாணவர்கள் தம் சொந்தக் கைகளால் அதைச் செய்து பழக வேண்டுமே. எனவே தெரிவுலிருக்கும் அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரை அள்ளிக் கொண்டு வருவோம். அவர்கள் தான் எங்கள் சோதனைச் சாலை எலிகள்”

“மெல்லிய உறுதியான மின் கம்பியை பற்களுக்கிடையில் நுழைத்து விட்டு இன்னொரு முனையை ஆண் குறியில் முடுக்கி விட்டு மின்சாரத்தைச் செலுத்துவார்கள். துன்பம் தாங்காமல் அவர்கள் கதறுவார்கள். அரசியல் கைதிகளாயிருந்தால் “நிறுத்து. உண்மையைச் சொல்லிவிடுகிறேன்” என்று அலறக் கூடும். இந்த அனாதைகளுக்கோ தம்மை ஏன் சித்திரவதை செய்கிறார்கள் என்பதே தெரியாது. எனவே கதறுவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய இயலாது”

“வலி தாங்காமல் துடித்து மயங்கி விழுந்தவுடன் டாக்டர் வருவார். இந்த ‘சோதனைச் சாலை எலிகளுக்கு’ வைட்டமின் ஊசி போட்டு ஓய்வெடுக்க வைப்பார். சிறிது நேரத்திற்குப் பிறகு அடுத்த வகுப்புக்கு எலிகள் தயாராக வேண்டும்”

“ஒரு கட்டத்தில் அவர்கள் செத்துப் போவார்கள். அவர்களது பிணமும் பயன்படும். பிணத்தை நகரத்தின் நடுவீதியில் வீசியெறிவோம். பிணத்தைப் பார்க்கும் மக்கள் ‘அரசாங்கம் – போலீசு’ என்று நினைத்தாலே குலை நடுங்குவார்கள்”

தற்போது அமெரிக்காவின் ஆசி பெற்ற ‘ஜனநாயகப்’ போராளிகள் லிபியாவில் இப்படித்தான் சண்டை போடுகின்றனர். உயிரோடு லிபிய இராணுவச் சிப்பாயை தலைகீழாக் கட்டி தொங்கவிட்டு நெஞ்சைப் பிளந்து இதயத்தை அப்படியே பிடுங்குகிறார்கள். யூ டியூபில் இந்தக் காட்சியைப் பார்ப்போர் உடைந்து போவது நிச்சயம்.

கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் எதற்கெடுத்தாலும் அமெரிகாவைக் குறை சொல்கிறீர்களே என்று சலித்துக் கொள்ளும் சில அறிவாளிகள் இதயத்தில் ஈரமும் கண்களில்  கொஞ்சமாவது கண்ணீரும் மிச்சமிருந்தால் அந்தத் தென்னமெரிக்க அப்பாவிகளுக்காக அது வடியட்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து, தனது சொந்த மக்களைத் தவிக்க விட்டு, அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் இது போன்ற படுபயங்கரவாதச் செயல்களுக்கு நிதி ஒதுக்குகிறது அமெரிக்கா.

முழு உலகிலும் அமெரிக்க பயங்கரவாதத்தின் ரத்தச் சுவடுகள்

தென்னமெரிக்க கண்டம் மட்டுமல்ல, கொரியப் போர்களில் வீசப்பட்ட நாபாம் குண்டுகளும், வியட்நாமில் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளும் கருக்கியெறிந்த கனவுகளும் மக்களின் வாழ்க்கையும் எண்ணிலடங்காதவை. தென்னமெரிக்க அனாதைகள் மட்டுமா அமெரிக்காவின் பயங்கரவாதப் பள்ளிகளுக்குச் சோதணைச் சாலை எலிகள்? கொரியாவின் தேசிய விடுதலைக்காக ஜப்பானை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டுப் போராளிகள் மேல் நாபாம் குண்டுகளையும் பல்வேறு உயிரி ஆயுதங்களையும் வீசி அமெரிக்கா நடத்திய சோதனையின் விளைவு மட்டுமே ஒரு லட்சம் உயிர்கள் பலி. இன்னும் வியட்நாம், யுகோஸ்லோவியா, ஈராக், ஆப்கான், லிபியா என்று அதன் பாவ மூட்டைகளை ஒன்றாகக் குவித்தால் அது இந்த பூமிப் பந்தை விட அளவில் பெரிதாய் இருக்கும்.

ஈராக்கின் மேல் இராணுவத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும்  என்றால் அதற்கும் முன்பிருந்தே பொருளாதாரத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அத்தியாவசிய மருந்துகளைத் தடுத்ததன் மூலம் மட்டுமே ஐந்து லட்சம் அப்பாவிக் குழந்தைகளை ஈராக்கியர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். பாலைவன தேசமான ஈராக்கில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களை இறக்குமதி செய்யவிடாமல் தடுத்ததன் மூலம் காலரா போன்ற நோய்களுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை தனி கணக்கு.

சிதறி ஓடுபவர்களை துரத்தித் துரத்திக் கொல்ல கொத்து குண்டுகள் என்றால், நிலத்தினடியில் பதுங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்ல, நிலத்தையே இருபதடிகள் வரை ஊடுருவித் தாக்கும் டொமஹாக் ஏவுகணைகள் – கருவிலிருக்கும் குழந்தைகளைத் தாக்கியழிக்க அணுக் கழிவு ஏவுகணைகள் என்று ரகரகமாக ஈராக்கிலும் ஆப்கானிலும் குண்டுகளை பொழிந்துள்ளது அமெரிக்கா. ஈராக்கியர்களின் தோல்வியின் ரணம் என்பது சிலவருடங்களில் ஆறிப் போவதல்ல – அது அணு ஆயுத பாதிப்பு என்கிற வகையில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்ந்து வரப்போகும் சாபம்.

ஒபாமா அறிவித்துள்ளதைப் போல் பயங்கரவதாதத்திற்கு எதிரான போர் தொடரத் தான் வேண்டும் ஆனால் யார் மிக மோசமான பயங்கரவாதி? இன்றைய உலகின் மிக மோசமான பயகரவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மக்களின் மேல் ஏவி விட்டுள்ள பயங்கரவாதம் தான் என்பதற்கு நம்மிடம் ஏராளமான சான்றுகளும் அதனால் உலக மக்கள் அனுபவித்து வரும் பாடுகளும் எதார்த்தத்தில் நம் கண் முன்னேயே உள்ளன. அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு எங்கோ உள்ள தென்னமெரிக்க கண்டத்து மக்களும் ஆப்கானிய ஈராக்கிய மக்களும் மட்டும் தானென்றும் இங்கே நாமெல்லாம் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் வாழ்வதாக கருதிக் கொள்ளும் நடுத்தரவர்கத்தினரின் சமையலறை வரையில் அமெரிக்க ஆக்டோபஸின் கரங்கள் நீண்டிருப்பதை உணரவில்லை.

அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொல்வது ஜார்ஜ் புஷ், ஒபாமா போன்ற ஒருசிலரோடு மட்டும் முடிந்து விடுவதல்ல – இவர்கள் உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவர்களாக வீற்றிருக்கும் தேசங்கடந்த தொழிற்கழக முதலாளிகளின் உற்சவ மூர்த்திகள் மட்டும் தான். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தையும், உள்நாட்டுத் தொழில்களையும் தாக்கியழித்துக் கபளீகரம் செய்யும் தனியார்மய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளாக அது தேச எல்லைகளையெல்லாம் கடந்து நீண்டு கிடக்கிறது. பி.டி கத்தரிக்காயாக உங்கள் சமையலறையில் ஊடுருவியிருக்கும் அதே நேரத்தில் நியாம்கிரி மலையிலும் இன்னும் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் தொழில் ‘வளர்ச்சியாக’ சிறகு விரித்துக் கிடக்கிறது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரப் போகிறது – நீங்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகிறீர்கள்?

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வினவில் கேள்வி-பதில் பகுதி ஆரம்பம்: எது கேள்வி?

26

றிவின் தோற்றம், இருப்பு, வளர்ச்சி என்பது பழைய கருத்துக்கும், அதன் போதாமை காரணமாக பிறக்கத் துடிக்கும் புதிய கருத்துக்கும் இடையே இயங்கிக் கொண்டிருக்கும் மூளையின் போராட்டம். ஆனால் அறிவு என்பது அனைத்தையும் அறிந்து கொண்ட பேரமைதி என்று பலர் கருதுகின்றனர். இப்படித்தான் ஞானிகள், நவீன சாமியார்கள், சூப்பர் ஸ்டார்கள் கொண்டாடப் படுகின்றனர்.

அனைத்தையும் அறிய முயற்சி செய்கிறேன் என்பது வேறு, அனைத்தையும் அறிந்து கொண்டேன் என்பது வேறு. பின்னது மதவாதமாகவும், முன்னது அறிவியலாகவும் இருக்கிறது. எதையும் அறிய முடியாது என்பதன் மறுபக்கமே எல்லாவற்றையும் அறிந்து கொண்டேன் என்று சொல்வது. இந்த உலகை, மனித சமூகத்தை, மனித சிந்தனையை இயக்கும் விதிகளைப் புரிந்து கொண்டு சமூக நலனுக்காக நடைமுறையை நிபந்தனையாகக் கொண்டு வளரும் அறிவு ஒரு போதும் அமைதியாக இருக்காது. அது கொந்தளிப்புடன் கூடிய பேரரறிவுப் பெருங்கடல்.

என்சைக்ளோப்பீடியா போன்றதொரு தகவல் பதிவுகளை மனனம் செய்வதெல்லாம் அறிவாக முடியுமா? குமுதம், விகடன் முதலான பிரபல இதழ்களில் என்சைக்ளோப்பீடியாவின் தகவல்களே கேள்வி பதில்களாக வருகின்றன. அதை விட்டால் கடிகள், ஏட்டிக்குப் போட்டி முதலானவை இருக்கும். முத்தத்தின் வரலாறு, உலகிலேயே இனிப்பான மாம்பழம், உள்ளாடைகள் வளர்ந்த வரலாறு…..இவையெல்லாம் இந்த கேள்வி பதில் நாயகர்கள் அதிகம் அலசும் நொறுக்குத்தீனி விசயங்கள்.

மதன், சுஜாதா போன்றோர் அதிகரித்து வரும் நுகர்வுக் கலாச்சார வசதிகளையே அறிவியல் என்ற பெயரில் கேள்வி பதில்களாக வெளியிட்டனர். மறுபுறம் சமூக பயன்பாடு குறித்த விமரிசனம் இல்லாமல் தூய அறிவியலை மட்டும் மர்மம் நிறைந்த பாடு பொருளாக அறிமுகம் செய்வது சுஜாதா பாணி. சமகால அரசியலில் நீர்த்துப் போன நியாயங்களையும், கிளுகிளுப்பூட்டும் நடிகைகளின் அங்கங்களை ஒப்பிடுவதும், குமுதம் அரசு கேள்வி பதிலின் இலக்கணம்.

சம கால வாழ்வின் இடர்களை புரிந்து கொள்ளவோ, அதை மாற்றியமைக்கவோ வேண்டுமென்றால் யதார்த்தத்தை கேள்வி கேட்பதிலிருந்தே துவங்க முடியும். புத்தர், ஏசுநாதர், நபிகள் நாயகம் போன்றோரெல்லாம் தமது சம கால சமூக அமைப்பை அந்தந்தக்காலம் விதித்திருக்கும் வரம்புகளுக்குட்பட்டு கேள்வி கேட்டவர்கள். மட்டுமல்ல அதற்கான விடையையும் தேடியவர்கள். பின்னர் அவையே கேள்விகளோ, சந்தேகமோ ஏற்படக்கூடாத மத நிறுவனங்களாக நிலை பெற்றன.

வர்க்க சுரண்டலை கேள்வி கேட்க முடியாத அடிமைகள், மறுமையில் காத்திருக்கும் இன்பத்திற்காக, இம்மையின் துன்பத்தை கேள்விகளின்றி ஏற்றுக் கொள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டார்கள். அந்த பாத்திரத்தை செம்மையாக நிறைவேற்றிய மதங்கள், ஆண்டைகளுக்கு தேவைப்பட்டன. வர்க்கங்களை சாதிகளாக்கி, ஏற்றத்தாழ்வில் பீடுநடை போட்ட பார்ப்பன இந்து மதம் இதில் ஒரு மைல்கல். இதனால் பல நூறு ஆண்டுகளாக நம் மக்களுக்கு கேள்வி கேட்பது என்னவென்றே தெரியாத நிலை. எல்லா வகை அடிமைத்தனங்களையும் ஏற்றுக்கொண்டு உலகோடு ஒட்ட ஒழுகல் என்ற நிலையில் உழைக்கும் மக்கள் இங்கே மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த வரலாறு இன்றும் மாறிவிடவில்லை. நவீன கார்ப்பரேட் சாமியார்களோ புரிந்து கொள்ள வேண்டிய சமூக இயக்கத்தின் ஆன்மாவை மறைத்து விட்டு, நல்லது – கெட்டது, ஒழுக்கம் – சீர்கேடு என்று அகநிலையை, கற்பனையில் மேம்படுத்தும் இருமை முரண்களாக முன்வைக்கின்றனர். ஆனால் சமூக உலைக்களத்தில் புடம் போடப்படாமல் எந்த மனிதனும் தனது வாழ்க்கைப் பிரச்சினையையும், அதன் தாக்கத்தால் நோயுற்றிருக்கும் சிந்தனையையும் மாற்றிவிட முடியாது.

ஒபாமா, சோனியா காந்தி, மன்மோகன் சிங், அத்வானி, வாஜ்பேயி, கருணாநிதி, ஜெயலலிதா போன்ற நவீன ஆண்டைகள் குழுமியிருக்கும் போது ஊடக அறிவாளிகள் பவ்யமாக, பணிவுடன், பிரச்சினைகளற்ற முறையில் கேள்விகள் – கேள்விகளா அவை?- கேட்பதைப் பார்த்திருப்பீர்கள். உண்மையான கேள்விகளை தணிக்கை செய்து கேட்பதற்குத்தான் நிருபர்கள் பழக்கப்பட்டிருக்கின்றனர். மீறி உண்மையையோ, சொல்லையோ, செருப்பையோ வீசினால் தண்டனை நிச்சயம்.

ஆம். கேள்விகளே இல்லாத, சந்தேகங்களே தோன்றாத, அறிவின் தேடலோ, சமூக அக்கறையின் வெளிப்பாடோ அற்ற ஒரு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இந்த உலகின் அநீதிகளை எதிர்த்துப் போராடுவோர் முதலில் மக்களை கேள்விகள் கேட்க வைப்பதற்கு வற்புறுத்த வேண்டும்.

வினவில் கேள்வி பதில் பகுதியை ஆரம்பித்திருக்கிறோம். கேளுங்கள்.

அரசியல், சமூகம், பண்பாடு, நடப்பு நிகழ்வுகள், தத்துவம், சித்தாந்தம், மதம், சாதி, காதல், என்று எது தொடர்பாகவும் அவை இருக்கலாம். எங்களால் முடிந்த அளவு, எவை முக்கியமென்று கருதுகின்ற அளவு பதில் அளிக்கிறோம். அதே நேரம் எல்லாக் கேள்விகளுக்குமான பதில்கள் எங்களிடமில்லை. ஆனால் ஒரு கேள்வியை வெறும் கேள்வி என்ற நிலையிலிருந்து மாற்றிவிட்டு, அந்த கேள்வியின் வரலாற்றுக்காலத்தை புரிந்து கொள்ளும்போது நமக்கு தெரியமால் இருக்கும் விடையை கண்டுபிடிக்கும் வழியை அறிந்து கொள்வோம். அதாவது கேள்விக்கான முதல் அடியே கேள்வியை முற்று முழுதாக புரிந்து கொள்வதுதான்.

கேள்விகளை அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பக்கத்தில் மட்டும் அளியுங்கள், பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டாம். கேள்விகள் மிக மிகப் பொதுவாக இல்லாமல் மிக மிகக் குறிப்பானதாக இருந்தால் கேள்விகளைப் புரிந்து கொள்வதற்கு உதவும்.

ஒரு விசயம் குறித்து புரியவில்லை என்றால் அதை புரிந்து கொள்வதற்கு சொந்த முறையில் களைப்பூட்டும் வரை முயன்று பார்த்து விட்டு அதன் பிறகும் தெரியவில்லை எனும் போது கேள்விகள் கேட்டால், அப்போது கேள்விகளே ஒரு புதிய வாசலைத் திறந்து விடும் சூட்சுமத்தைக் கொண்டிருக்கும். ஒரு கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்கச் செலவழிக்கப்படும் நேரம் அந்த கேள்வியைத் தயாரிப்பதிலும் இருத்தல் நலம்.

வாரந்தோறும் வெள்ளியன்று கேள்வி பதில் இடம்பெறும். சில நேரம் தனிச் சிறப்பான கேள்வி பதில் கட்டுரைகள் தேவையைப் பொறுத்து எப்போது வேண்டுமானலும் வெளியிடப்படும்.
கேளுங்கள், காத்திருக்கிறோம்!

__________________________________

வினவுடன் இணையுங்கள்

மைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!

82

அதியமான் ஒரு மதவாதி! – மைக்மோகன் தீர்ப்பு!

மைக்மோகன்வினவில் எந்தக் கட்டுரை வந்தாலும் பின்னூட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் அபாயம் குறித்து தவறாது லிங்க் போட்டு பேசும் அதியமானை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவ்வப்போது கோபித்துக் கொண்டு வினவில் மறுமொழி இடாமலும் இருப்பார். ஆனால் தவறாது படிப்பார்.

ஒருமுறை ஜெயமோகன் எனும் மைக்மோகன் தளத்தில் “வினவில் உரையாடுவது வீண் வேலை, இனி அங்கே விவாதிக்கப் போவதில்லை” என்று அவர் பிரகடனம் செய்த கடிதம் வெளிவந்தது. மைக்மோகனும் கூட அதை மாபெரும் வெற்றிச் செய்தியாக வாசகர்களுக்கு அறிவிப்பதற்காக வெளியிட்டிருக்கலாம். ஆனாலும் அதியமானால் அப்படி இருக்க முடியவில்லை. மீண்டும் வினவில் வந்து பேச ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் அவர் வெறுக்கும் கம்யூனிசம், வினவு வழியாக ஆயிரக்கணக்கான வாசகரை ‘தவறான’ பாதைக்கு அழைத்துச் செல்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் இனி எழுதமாட்டேன் என்ற வெற்றுப் பிரகடனத்தை தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் வினவுக்கு வந்தார்.

பிறகு அன்றாடம் நான்கைந்து புதிய புதிய பெயர்களில் வந்து புலம்ப ஆரம்பித்தார். இது வாசகரை குழப்பும் வேலை என்றும் ஏதாவது ஒரு பெயரில் மட்டும் பேசுமாறு கோரியதற்கு அவர் இணங்கவில்லை. மீண்டும் கோபித்துக் கொண்டிருக்கிறார்…

இங்கு வாசகர்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதியமானுக்கு எதிர் கருத்து கொண்டிருப்பவர்களை அவர் தகாத வார்த்தைகளால் பேசுவது வினவில் மட்டும்தான். வினவைக் கூட அவர் அப்படி அவ்வப்போது அழைப்பார். ஆனால் மைக்மோகன் தளத்திற்கு சென்றால் ஜெயேந்திரனது கால்களில் விழுந்து கிடக்கும் அவாள்கள் போல பவ்யமாக பணிந்து பேசுவார். மைக்மோகனோடு கருத்து வேறுபாடு  இருந்தாலும் அதை ” என்ன ஆண்டவரே, கொஞ்சம் எங்களையும் பரிசீலியுங்கள்” என்றுதான் முன்வைப்பார்.

முக்கியமாக மைக்மோகனது தளத்தில் மறுமொழி என்ற ஜனநாயக உரிமை இல்லை. இடையில் அப்படி அனுமதித்து, தனது இ(ம்சை)சத்தை புரிந்து  கொள்ளும் தரம் இந்த தமிழுலகிற்கு இல்லையே என்று தடாலடியாக பின்னூட்டப் பெட்டியை நீக்கியும் விட்டார். எனினும் விவாதங்களை மறுக்கும் மைக்மோகனை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், விவாதங்களை தடையின்றி ஊக்குவிக்கும் வினவை மாபெரும் பாசிஸ்ட்டாகவும்தான் அதியமான் கருதுகிறார்.

அதியமானது இந்த பக்திக்கு அடிப்படை என்ன? கம்யூனிசத்தை விக்கி பீடியா லிங்கு மூலம் அழித்து விடலாம் என்று எண்ணிய அதியமான் அதற்கு மேல் சிந்திக்கும் திறனுடையவர் அல்லர். அவரால் விவரங்கள், புள்ளிவிவரங்களை தரமுடிந்த அளவுக்கு அவற்றிலிருந்து உண்மையை கண்டறியும் கலையை அறிய முடியவில்லை.

மைக்மோகனோ இத்தகைய விவரங்களை தவிர்த்து விட்டு உள்ளொளி, அறம், மனித குலத்தின் ஆகப்பெரும் கனவு என்று அகநிலை அம்சங்களை அதாவது வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட எண்ணப் படிமங்களை அடித்து விடுவதில் வல்லவர். இன்னமும் கூட கோடம்பாக்கம் “அண்ணன் தங்கை சென்டிமெண்ட்” மூலம் தமிழக மக்களை அழவைக்கும் போது மைக்மோகனது சென்டிமெண்டிற்கும் மார்கெட் இருந்தாக வேண்டுமே? எனினும் இந்த வார்த்தை சென்டிமெண்ட் எல்லை மீறும் போது விவரங்களையும், புள்ளிவிவரங்களையும் பொய்யாகக்கூட சொல்வார் மைக்மோகன்.

மைக்மோகன் அளவுக்கு கம்யூனிசத்தை எதிர்த்து கன்வின்சிங்காக நம்மால் பேச முடியவில்லையே என்ற மரியாதைதான் மைக்மோகன் மீது அதியமான் கொண்டிருக்கும் பக்திக்கு அடிப்படை. ஆனாலும் அண்ணன் அதியமான் ஒரு போதும் மைக்மோகனது உளவியலை தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் சோகம். அந்த சோகத்தை டபுள் ஸ்கொயராக்கி சமீபத்தில் ஒரு மாபெரும் சோகம் அதியமானுக்கு நடந்திருக்கிறது. வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர் சகஜமாக இருக்க முயன்றாலும் அண்ணன் பட்ட சோகத்தை இங்கே அனைவரும் புரிந்து கொண்டு உச்சு கொட்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அந்த கதையினை இங்கு தருகிறோம்.

மைக்மோகனிசம், முதலாளித்துவம்: யார் பெரியவர்?

அண்ணா ஹாசாரே, காந்தியம், ஊழல்கள் குறித்து சமீபத்தில் மைக்மோகன் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதிய அதியமான்,” அருமையான கட்டுரைகள், பல விடயங்களை தெளிவுபடுத்தின, முக்கியமாக இடதுசாரி எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றி…” என்று போற்றுதலோடு குறிப்பிடுகிறார். கூடுதலாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் ஊழல் அரசுகள் இருந்தன என்று மைக்மோகன் கூறியிருந்ததை ஏற்க முடியவில்லை என்று வழக்கம் போல பணிவாகவே மற்றும் லிங்குகளுடன் தெரிவித்திருந்தார்.

இது அதியமான் எப்போதும் கூறும் கருத்துதான். வினவில் கூட நல்ல முதலாளித்துவ அரசுகளாக அவர் சில பல ஐரோப்பிய நாடுகளின் பட்டியலை திரும்பத் திரும்பக் கூறுவார். ஒரு முறை ரியல் என்கவுண்டர் என்ற தோழர் அந்த தூய முதலாளித்துவ நாடுகளின் உண்மைகளை, லிங்குகள் மூலம் போட்டு சவால் விட்ட பிறகு, அதியமான் அதை மறுக்க வில்லை. மாறாக ஊழல் இல்லாத நாடு, சொக்கத் தங்கமான நாடு எதுவும் கிடையது என்று ஒரே போடாக முடித்துக் கொண்டார்.

அதியமானைப் பொறுத்த வரை தனது குருநாதர் மைக்மோகன் எல்லா விசயத்திலும் சரியான கருத்துக் கொண்டிருக்கும் போது முதலாளித்துவத்தோடு மட்டும் கொஞ்சம் மாறான கருத்து கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. அதை மட்டும் குருநாதர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அதியமான் நோக்கம்.

அதியமானது இந்தக் கடிதத்தை வெளியிட்ட மைக்மோகன் விரிவான பதில் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில்,

அன்புள்ள அதியமான்,

பொதுவாக நான் வாதங்களை தவிர்க்க விரும்புகிறவன். முன்முடிவுள்ள ஒருவரிடம் விரோதம் வரை விவாதித்துச் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே மதவாதிகளிடம் விவாதிப்பதில்லை. அதே கரணத்தால்தான் அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.

மன்னிக்கவும் அதியமான், நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளியல் முன்மாதிரியை ஒரு மத நம்பிக்கை போல முன்வைக்கிறீர்கள். நீங்கள் நம்புவதை நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.” என்று ஆரம்பிக்கிறார்.

இதன் பொருளென்ன? அதியமான் ஒரு மதவாதி. மத நம்பிக்கை போல முதலாளித்துவத்தை நம்புகிறார். அதற்காகவே எந்த விசயத்தையும் தனது மதநம்பிக்கைக்கேற்ப மறுக்கவோ, நிறுவவோ முயற்சிக்கிறார். இத்தகைய மதவாதிகளிடம் தான் பேசும் வழக்கம் கொண்டவனில்லை என்கிறார் மைக்மோகன். தோழர் அசுரன் கூட ஒரு போதும் மதவாதி என்று அதியமானை விளித்ததில்லை  என்பது இங்கே நினைவுகூறத்தக்க ஒன்று.

அதியமான் மதவாதி என்றால் டோண்டு ராவகன் போன்றோர் அறிவார்ந்தவாதியா? தெரியவில்லை. ஏனெனில் இந்த பார்ப்பனிய தாசரான டோண்டு இன்னமும் மைக்மோகனோடு ‘உரையாடு’கிறார். இது போல பல ஆர்.எஸ்.எஸ் அம்பிகளெல்லாம் மைக்மோகனோடு தொடர்ச்சியான ‘உரையாடல்களில்’ இருப்பவர்கள்தான். மைக் மோகனது வாசகர்கள் யார் என்று சர்வே செய்து பார்த்தால் அதில் பெரும்பான்மையினர் அட்சர சுத்தரமான மதவாதிகள்தான்.

சரி, இப்போது அதியமானை மதவாதி என்று சொல்லும் அளவுக்கு என்ன வந்தது? அதுதான் மைக்மோகனது உளவியலை அதியமான் புரிந்து கொள்ளவில்லை என்கிறோம். இந்த உலகில் கம்யூனிசம், ‘இந்துயிசம்’, முதலாளித்துவ இசம் என்று எத்தனை இசங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மைக்மோகன் எப்போதும் நிராகரிப்பார். ஏனெனில் இந்த இசங்களை விட மைக்மோகனிசம் என்ற இசம்தான் உலகிலேயே உயர்ந்த இசம். அதை ஏற்றுக் கொண்டவர்களோடு மட்டும்தான் மைக்மோகன் உரையாடுவார். யாரெல்லாம் மைக் மோகனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ, இல்லை அதில் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் மைக்மோகனைப் பொறுத்த வரை மதவாதிகள்தான். மைக்மோகனிசம் என்றதும் ஏதோ புதுச் சரக்கு என்று நினைத்து விடாதீர்கள். அது நவீனப் பார்ப்பனியம் என்ற புதிய மொந்தைச் சரக்குதான்.

சுயமோகனிசத்தை கேள்விக்கிடமற்ற நம்பிக்கையோடு பின்பற்றாதவர்களை மைக்மோகன் மதவாதி என்கிறார் என்றால் எதைக் கொண்டு அடிக்க, என்னத்தைச் சொல்லி அழ? ஒரு மத ஆதினம், தனது மத நம்பிக்கையை ஏற்காதவர்களை மதவாதி என்றால் எது மதம், எது மத நம்பிக்கை, எது  மதவாதம்?

அதியமான் ஜோசியம், பாரத தர்மம், யோகம், இலக்கியம், நல்ல இந்து மதம்,  கலை, கம்யூனிச எதிர்ப்பு என்று எல்லாவற்றிலும் சுயமோகனிசத்தை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் முதலாளித்துவத்தை மட்டும் சுயமோகனிசத்திற்கு மேல் கருதுகிறார் இல்லையா, இதுதான் பிரச்சினை. கூடவே அவர் ஒன்ஸ் அப்பான் எ டைமில் எழுதிய அரதப் பழசான இத்துப் போன கட்டுரைகளை மாபெரும் அறிவுப்படையலாக லிங்குகள் என்ற பெயரில் போட்டிருப்பது மைக் மோகனை நிச்சயம் படுத்தியிருக்கும். இதை அன்றாடம் பார்க்கும் நமக்கே எரிச்சல் வரும்போது மைக் மோகனுக்கு எவ்வளவு லார்ஜ்ஜாக இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

ஊழல்: மைக் மோகன், அதியமானது அபத்த உளறல்கள்!

னினும் அதியமானை வெறுமனே மதவாதி என்று முத்திரை குத்தி மட்டும் மைக்மோகன் சென்று விடவில்லை. முதலாளித்துவ நாடுகளில் முன்னர் ஊழல் இருந்ததை விவரிக்கிறார். அதன்மூலம் அதியமானது முதலாளித்துவ தூய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறார். அதில் அவர் சொல்லியுள்ளதின் சுருக்கத்தை மட்டும் பார்ப்போம்.

மைக்மோகன் கருத்துப்படி, மன்னராட்சியாக இருந்த ஐரோப்பிய நாடுகளில் குடியரசு வந்த போது பண்ணையார்களும், முதலாளிகளுமே அரசின் இடங்களை நிரப்பியதால் ஊழல் மலிந்திருந்ததாம். பின்னர் மக்கள் போராட்டங்களின் காரணமாக அரசியலில் சாதாரணமானவர்கள் வந்த போது ஊழல் கிடையாதாம். எனினும் இன்று முதலாளித்துவ நாடுகளில் நாம் நினைக்கும் ஊழல்களை சட்டப் பூர்வமாக்கியிருக்கிறார்களாம். இருந்த போதும் மக்கள் நலத்திட்டங்கள், அன்றாட அரசியல் வாழ்வில் ஊழல் கிடையாதாம், இதுதான் மைக்மோகனது கருத்து.

எதை எடுத்தாலும் ஆதி முதல் அந்தம் வரை அரசியல், தத்துவம், சித்தாந்தம், கலை, கட்சிகள், நபர்கள் என்று இந்த உலகில் உள்ள சகலவற்றையும் ‘ஆய்வு’ செய்து கூறும் மைக்மோகனது கூற்றில் உள்ள அபத்தங்களை எளிமையாக சுட்டிக் காட்ட முடியுமென்றாலும் நாமும் அதே போல ஆதி முதல் அந்தம் வரை எல்லா எழவையும் பேச வேண்டியிருக்கிறது. இதுவே மைக்மோகனைப் பற்றி எழுதுவதற்கு மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. இதை இன்னும் ஆழமாக ஏங்கெல்ஸ் ” டூரிக்கிற்கு மறுப்பு” நூலில் ஜெர்மன் அறிவாளிகள் குறித்து விளக்கியிருப்பார். போகட்டும்.

முதலாளித்துவம் என்றால் என்ன என்று மைக்மோகனுக்கும் சரி, அதியமானுக்கும் சரி நிச்சயமாகத் தெரியவில்லை. அவர்கள் இருவருமே தத்தமது விருப்பம் போல அதை தயாரித்திருக்கிறார்கள்.

தனி முதலாளி, தனது இருப்பைக் காக்கவும், அதிகரிக்கவும், போட்டி முதலாளியாகி, பின்னர் தான் மட்டுமே இருந்தால்தான் இலாபம் அதிக அளவில் ஈட்ட முடியும் என்று ஏக போக முதலாளியாகி, பின்னர் அதை அரசு மூலம் நிலை நிறுத்த காலனிய நாடுகளை பிடிக்கும் ஏகாதிபத்தியங்களை உருவாக்கி, தற்போது ஒட்டு மொத்த உலகையும் ஒரே மூச்சில் சுரண்டுவதற்காக மேல் நிலை வல்லராசாகவும் தங்களது அரசுகளை மாற்றி விட்டார்கள்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்ன வென்றால் ஒரு முதலாளியும், முதலாளி வர்க்கமும் தனது தொழிலை நிறுவதற்காக மற்ற முதலாளிகள், மற்ற வர்க்கங்கள், மற்ற நாடுகள் அனைத்தையும் வென்று காட்டுவதே அவர்களது உயர்வாழும் தன்மையின் இரகசியம். இதை ஆயுத பலத்தினாலா, இல்லை அரசு பலத்தினாலா, இல்லை ஊழல் பலத்தினாலா எதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் சூழல், தேவையைப் பொறுத்தது.

முதலாளித்துவ சமூகம் என்று அடிக்கடி பலரும் பேசுகிறார்கள். இதில் ஏதோ சில முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள் என்று மட்டும் எளிமையாக புரிந்து கொள்வது சரியல்ல. ஒரு முதலாளித்துவ சமூகம் நீடிக்க நீடிக்க என்ன நடக்கிறது, சமூகம் எப்படி மாறுகிறது என்பதே முக்கியமானது. அதன்படி அந்த சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், சில முதலாளிகள் மேலும் மேலும் சொத்துக்களை சேர்ப்பதும் நடக்கிறது. அதனால்தான் இன்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏழைகள், பணக்காரர்களுக்கான சொத்து இடைவெளி இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதில் மேலை நாடுகளில் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தனது நிலையினை ஒத்த வர்க்கங்களை விட அதிக சம்பளம், தரமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறது என்பதன் காரணம் அந்த நாடுகளின் முதலாளிகள் முழு உலகையும் சுரண்டி அதில் கொஞ்சம் தனது நாட்டு தொழிலாளி, நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கிறார்கள் என்பதே. தற்போது இதுவும் பிரச்சினைக்குள்ளாகி வருகிறது.

இந்த கட்டுரையின் வரம்பிற்குள் நின்று மட்டும் பேசுவதாக இருந்தால் முதலாளி வர்க்கம் தனது நலன்களுக்காக அரசு, அரசாங்கத்தை செயல்படவைப்பதில் முனைப்பாக இருக்கும். சொல்லப் போனால் அந்த அரசாங்கங்களே முதலாளிகளது வர்க்கத்தின் பிரதிநிதியாகவே செயல்படும். ஆனால் ஒரு தொழிலில், ஒரு நாட்டில், ஒரு கண்டத்தில் முதலாளிகளுக்கிடையே இருக்கும் போட்டி என்பது அரசிலும் பிரதிபலிக்கும். அப்போது தனது குறிப்பான தேவைகளுக்காக குறிப்பிட்ட முதலாளிகள் ஊழல் முறையின் மூலம் அந்தந்தக் கால அரசாங்கங்களை விலைக்கு வாங்குகிறார்கள், அல்லது செயல்பட வைக்கிறார்கள்.

ஆக மனித சமூகத்தின் வரலாற்றுக் காலத்தில் முதலாளித்துவ சமூகங்களில்தான் முதன்முதலில் ஊழல் என்பது பிரம்மாண்டமாக உருவெடுக்கிறது. அல்லது அப்படி தோன்றுவதற்கான சமூக நிலைமைகள் உருவாகிறது. இதை மன்னராட்சிக் காலத்தில் பெண் கொடுத்தான், தங்கம் கொடுத்தான் என்று ஒப்பிட்டு இணை வைத்துப் பேசுவது அபத்தம. தன்மையிலும், பொருளிலும், அது வேறு, இது வேறு.

இன்று ஊழல் என்பது முதலாளித்துவ நாடுகளில் சட்டப்பூர்வமாகியிருக்கிறது என்பதை மைக்மோகன் ஒத்துக்கொள்கிறார், அதியமான் ஒத்துக் கொள்ளவில்லை. அதியமானைப் பொறுத்த வரை சூதாட்டத்தைக் கூட சட்டப்பூர்வமாக நடத்தலாம். இதில் மைக்மோகன் புரிந்து கொள்ளத் தவறியிருக்கும் விசயம் என்னவென்றால் முதலாளித்துவ நாடுகளில் ஊழல் என்பது ஒன்று சட்ட பூர்வமாகவோ, இல்லை சட்ட விரோதமாகவோ இருந்தே தீரும். ஏனெனில் முதலாளித்துவத்தின் அடிப்படையான வாழ்க்கைக்கு அது மிகவும் அத்தியாவசியம். முதலாளித்துவம் என்பதே ஊழலை அடிப்படையாக வைத்து இயங்கும் ஒன்றுதான்.

ஊழலில் கடைசி இடம், முதல் இடம்: எது அளவு கோல்?

தியமான் போற்றும் ஸ்காண்டிநேவிய (டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து) நாடுகளை எடுத்துக் கொள்வோம். ஸ்வீடனது போபார்ஸ் ஆயுத கம்பெனி தனது விற்பனைக்காக புரோக்கர்களை பிடித்து கமிஷன் கொடுத்து இந்தியாவுக்கு விற்கிறது. இந்த கமிஷன் இல்லை என்றால் அந்த தொகை விற்பனைத் தொகையில் கழிக்கப்பட்டிருக்கும். எனவே இது இந்தியாவுக்கு நட்டம் அல்லது ஊழல் என்றாலும் ஸ்வீடனைப் பொறுத்தவரை ஊழல் கிடையாது. ஸ்வீடனுக்கு மட்டுமல்ல எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் தமது விற்பனையைப் பெருக்க இப்படி இலஞ்சம் கொடுப்பதை வழமையாக கொண்டிருக்கின்றன.

அடுத்து இந்த உலகில் ஆயுதங்களின் தேவை அதிகம் இருந்தால்தான் போபார்ஸ் நிறுவனம் தனது ஆயுங்களை தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதும், அந்த நாடுகள் செயற்கையான ஒரு பதட்டத்தில் இருப்பதையும் அவர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் புரட்சி நடத்த விரும்பும் ஒரு போராளிக் குழுவுக்கு இவர்கள் கடன் கொடுத்தாவது விற்பது வழக்கம். மேலும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் ஆயுதங்களில் பெரும்பான்மை மேலை நாடுகளைச் சேர்ந்தவைதான்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா கம்பெனி ஸ்ரீபெரும்புதூரில் ஒரு ஆலை அமைத்து 3000 ரூபாய் குறைவான கூலி கொடுத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுத்து, இன்னும் பல சலுகைகளோடும், சுரண்டல்களோடும் தொழில் நடத்துகிறது. பெரும் இலாபத்தை இங்கிருந்து கொண்டு செல்கிறது. இதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும், சட்ட பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் இவர்கள் அரசு அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சி அரசிசயல்வாதிகளுக்கும் இலஞ்சம் கொடுக்கிறார்கள். இப்போது உலகளவில் இலஞ்சம் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பின்லாந்து, ஸ்வீடன் கடைசி இடத்திலும் வருகிறதென்றால் இதை நாம் ஏற்க இயலுமா? மைக்மோகனும், அதியமானும் ஏற்கிறார்கள்.

அடுத்து மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் ஊழல் இல்லை என்பதால் மக்கள் நிம்மதியாக மேலை நாடுகளில் வாழ்வதாக மைக்மோகன் நம்புகிறார். அந்த நிலை இங்கு வர அண்ணா ஹாசாரே போன்றவர்களது போராட்டங்கள் உதவும் என்பதும் அவரது புரிதல்.

இதையும் கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம்.

மேற்குலகின் மக்கள் நலத் திட்டங்கள் – காரணம், பின்னணி என்ன?

முதலில் மேலை நாடுகள் அத்தனையும் 50 ஆண்டுகள் முன்புவரை முழு உலகிலும் காலனிய நாடுகளைக் கொண்டிருந்தன. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், தென்னமெரிக்காவிலும் இருந்து இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தை தற்போது வட்டியில்லாமலாவது திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு அவர்கள் அப்படி கொடுத்து விட்டால், மறுகணமே அந்த மேலை நாடுகள் பிச்சைக்கார நாடுகளாகிவிடும். எனவே இப்படி கொள்ளையடித்த பணம்தான் அந்தெந்த நாடுகளில் சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனால்தான் அந்த நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கம் பிற்போக்காக இருந்தது. அந்த வகையில் இது போராடாமல் இருப்பதற்கான ஊழல் என்றும் சொல்லலாம்.

மேலும் ரசிய, சீன புரட்சிகளுக்குப் பிறகு முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச அபாயம் கருதியும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை வேறுவழியின்றி கொண்டுவந்தன. எனினும் மேலை நாடுகள் பல தற்போதைய முதாளித்துவ நெருக்கடிகளால் அந்த நலத்திட்டங்களை ரத்து செய்து வருகின்றன. இதை எதிர்த்து பிரான்சு முதல் கிரேக்கம் வரை மக்கள் போராடுகிறார்கள். பொதுவில் ஐரோப்பாவின் தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தகைய போராட்ட மரபு கிட்டத்தட்ட 200 வருடங்களாகவே உண்டு. ரசியப் புரட்சி அதன் உச்சம்.

இடையில் தொழிலாளி வர்க்கத்தை முடக்குவதற்காக செய்த நலத்திட்டங்கள் இப்போது இல்லை எனும் போது அந்த போராட்டங்கள் மீண்டும் வருகிறது. எனினும் இந்த போராட்டங்கள் எவையும் முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற அரசியல் நிலையிலிருந்து நடக்கவில்லை. தங்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற நிர்ப்பந்தித்திலேயே நடக்கிறது. தொடர்ச்சியான போக்கில் இது தனது பிரச்சினை என்ற குறுகிய வட்டத்திலிருந்து நமது பிரச்சினை என்ற தளத்திற்கு நகரும் போது அதன் அரசியல் தன்மை மேலும் மேலும் முன்னேறும்.

காலனியாதிக்கத்தின் மூலம் மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டிய மேலை நாடுகள் தற்போது அதை விட அதிகமாக உலகமயத்தின் மூலம் பூமி முழுவதையும் சுரண்டுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலகின் அனைத்து வளங்களையும் சூறையாடுகின்றன. அது நீர் வளமாகவோ, இல்லை கனிம வளமாகவோ, இல்லை மனித வளமாகவோ எதையும் விடாமல் அனைத்தையும் சுருட்டுகின்றன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் வரலாறும், அரசியலும் அவற்றினை இயக்கும் விதிகளோடும் பரிச்சயம் இருக்க வேண்டும்.

இனி மைக்மோகனது சமூக வாழ்வு திட்டங்கள், அன்றாட அரசியலில் ஊழல் இல்லை என்பதைப் பார்ப்போம். ஐரோப்பாவில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாடு அநேக மனித உரிமைகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பிரபலமான நாடாகும். வெளிப்பார்வையில் பார்க்கும் போது இந்த நாட்டில் பிறந்திருக்கலாகாதா என்று கூட நம்ம அதியமானுக்கும், மைக்மோகனுக்கும் தோன்றலாம்.

ஆனால் உண்மை என்ன? ஸ்விட்சர்லாந்து நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் பாதி அளவை அந்நாட்டின் வங்கிகள் கொண்டிருக்கின்றன. எனில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு படியளப்பதற்கு வங்கிகளே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சரி, இந்த வங்கிகளுக்கு எப்படி பணம் வருகின்றன? உலக நாடுகளில் உள்ள முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் தமது கருப்பு, ஊழல் பணத்தை இந்த நாட்டின் வங்கிகளில்தான் போடுகின்றன. அவற்றின் மதிப்பு மிக மிக அதிகம். இப்படி ஊரைக் கொள்ளியடித்த கயவர்களின் கந்து வட்டி பைனான்ஸ் வங்கியாகத்தான் ஸ்விஸ் இருக்கிறது. இப்படி எந்த தொழிலும் செய்யாமலே, உட்கார்ந்த இடத்தில் பலப் பல டிரில்லியன் டாலரை, யூரோவை, இரத்தப் பணத்தை வைத்திருக்கும் நாடு தனது சொந்த நாட்டு மக்களின் சில நலத்திட்டங்களுக்கு பிச்சை போடுகிறது என்றால் அதை போற்றுபவர்களை என்னவென்று அழைப்பது?

நம்மூரில் அயோத்தி குப்பம் வீரமணி, பங்க் குமார், ஜான் பாண்டியன் முதலான ரவுடிகள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், மாமூல் மூலம் பல இலட்சங்களை சம்பாதிக்கிறார்கள். அதிலிருந்து தத்தமது ஊர்கள், சாதிகளைச் சேர்ந்தோருக்கு கோவில் கொடை, படிப்பு உதவி போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு செலவிடுகிறார்கள். மைக்மோகனது பார்வைப்படி யாருக்கும் ஐந்து காசு கொடுக்காத வினவை விட இத்தகைய அண்ணன்கள், வள்ளல்கள் மேலானவர்கள்!

முதலாளித்துவ அமைப்பே ஊழல்தான் எனும் போது அன்றாட வாழ்வில் ஊழல் இல்லை என்பது முட்டாள்தனம்!

தாசில்தார் ஆபிஸ், கலெக்டர் ஆபிஸ், பாஸ்போர்ட் அலுவலகம் என்று மிகச் சுருங்கிய உலகை மட்டும் மக்களோடு தொடர்புடைய அரசியலாக மைக்மோகன் பார்க்கிறார். இத்தகைய துறைகளில் மேலை நாடுகளில் ஊழல் இல்லையென அதிசயிக்கிறார். இந்தியாவைப் போன்று மின்சாரம், இரயில்வே, கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்று சகல துறைகளிலும் அரசு இருப்பதைப் போன்று அங்கில்லை. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். தனியாரின் சேவை என்பது இலாபத்தின் மேல் நின்று கொண்டிருப்பதைப் போன்று அரசு துறைகள் செயல்படுவதில்லை. அவை லாப நோக்கமற்ற சேவை அடிப்படையில்தான் நடக்கிறது. அந்த வகையில் மேலைநாடுகளில் உள்ள சாதாரண மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக கணிசமான வருமானத்தை தனியார் முதலாளிகளிடம் இழக்கின்றனர். அமைப்பு முறையின் இந்த ஊழலைப் பார்க்காமல் ஒரு சிப்பந்தி லஞ்சம் வாங்குவதில்லை என்று சுயதிருப்தி அடைவது அபத்தம்.

ஐரோப்பாவில் சில நாடுகளில் இத்தகைய அரசு துறைகள் இன்றும் உண்டு என்றாலும், மொத்தத்தில் அது தீர்மானிக்கவில்லை. இந்திய அரசு வங்கிகளில் கடன் வாங்குவதற்கு படாதபாடு படவேண்டும். ஆனால் ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் கடன் வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு எந்த சிக்கலுமின்றி அள்ளிக் கொடுக்கின்றன. கடன் அட்டையை அடிக்கடி தேய்க்குமாறும் வலியுறுத்துகின்றன. இறுதியில் 50,000 செலவழித்திருந்தால் அது பல சிக்கலான கணக்குகளோடு 3 இலட்சம் என்று வருகிறது. கட்டத் தவறினால் ஆள்வைத்து மிரட்டி வசூலிக்கிறார்கள். எனில் அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகள் அதிகம் சேவை தருகின்றன என்று மெச்ச முடியுமா?

தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்கள் எந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களோ அந்த அளவுக்கு அந்நாட்டின் சமூக நலத்திட்டங்கள் செயல்படும். முதலாளிகளது ஊழல் அமைப்பும் சுலபமாக செயல்படாத படி தடைகள் இருக்கும். ஆனால் இன்று இந்த நிலைமை எந்த நாட்டிலும் இல்லை என்பதால் நம் புலனறிவு அறியாத படி ஊழல்தான் இந்த முதலாளித்துவ உலகை வழிநடத்துகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ, பிரான்சிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களெல்லாம் தொண்டர்களின் பலத்தால் வந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு எவ்வளவு பணம் வசூலித்து கொடுக்க முடியும் என்பதை வைத்தே தலைவராகிறார்கள்.

இதற்கு மேலும் ஒவ்வொரு தேர்தலையும் ஆயுதம், சேவைத்துறை, நிதி வங்கி, காப்பீடு, மருந்து என்று பல்வேறு முதலாளிகளின் செல்வாக்கே தீர்மானிக்கிறது. ஜார்ஜ் புஷ்ஷை ஆயுத, எண்ணெய் முதலாளிகளும், அல்கோரை மருந்து முதலாளிகளும் முன்னிறுத்தினர் என்பது மேலை நாடுகளின் எல்லா தேர்தல்களுக்கும் பொருந்தும். ஆக தமிழகத்தில் நூறு ரூபாய்க்கு வோட்டுப் போடுவதை ஊழல் என்றும் அமெரிக்காவில் ஆயிரம் டாலர் கட்டி அதிபர் விருந்தில் கலந்து கொள்வது ஊழலற்ற ஜனநாயகம் என்றும் பார்ப்பது முட்டாள்தனம், பாமரத்தனம், அயோக்கியத்தனம்.

தேர்தலில் ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்பதையும், லிமிடெட் கம்பெனியில் ஒரு பங்குக்கு ஒரு வோட்டு என்பதையும்  ஜனநாயகம் என்ற முறையில் ஒன்று என்று சொல்ல முடியுமா? ஒன்றுதான் என மைக்மோகனும், அதியமானும் சொல்கிறார்கள்.

மைக்மோகன் தனக்கு தெரிந்த வாழ்க்கையில் நடமாடும் சில கதை மாந்தர்களது பாத்திரத்தை அசைபோடுவது போல, உலக அரசியல், பொருளாதாரம், சமூகத்தை எடை போடுகிறார். கதை சொல்லும் திறனாலேயே, கதைகளை தீர்மானிக்கும் முதலாளித்து சமூகத்தை புரிந்து கொள்ளலாம் என்பது அசட்டுத்தனம்.

மைக்மோகனிசம் ஒன்றுதான் இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட மைக்மோகனது சன்னிதானத்தை அதியமான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் மதவாதி என்ற பட்டம் வாங்கிய பிறகும் சுரணையில்லாமல் மீண்டும் மைக்மோகனிடம் பேசுகிறார். ஒருவர் வார்த்தைகளால் வாழும் மதவாதி. மற்றொருவர் லிங்குகளால் வாழும் காரியவாதி. எனினும் லிங்குகளை விட வார்த்தைகள் மேம்பட்டது என்ற காரணத்தினால் காரியவாதி மீண்டும் மீண்டும் வார்த்தை மதவாதியிடம் சரணடைகிறார்.  மைக்மோகனோ “எவ்வளவு அடித்தாலும் தாங்குறானே” என்று புன்னகையுடன் அதியமானை கடந்து செல்கிறார்.

____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!

ஜார்கண்ட் மாநிலம்  ஹஸாரிபாக் மாவட்டத்தில் தற்பொழுது வசித்து வரும் ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.  10 து 10 சுற்றளவு கொண்ட, 400 அடி ஆழத்திற்குப் பூமிக்குள் இறங்கிச் செல்லும் சுரங்கத்திற்குள் சென்று, நிலக்கரியை வெட்டியெடுத்து வரும் குழந்தைத் தொழிலாளி ஜாவிர் குமார்.

எலி வளையைப் போலப் பூமிக்குள் செல்லும் இச்சுரங்கத்தை மரணக் குழி என்றுதான் சொல்ல முடியும்.  அதற்குள் சென்று நிலக்கரியை வெட்டியெடுத்து வருவது உடலை வருத்தக்கூடியது மட்டுமல்ல, உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயம் நிறைந்ததாகும்.  சுரங்கத்திற்குள் பரவிக் கிடக்கும் இருளை விரட்டுவதற்கு ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும், நிலக்கரியை வெட்டியெடுப்பதற்கு ஒரு இரும்புக் கம்பியையும், வெட்டிய நிலக்கரியை வெளியே எடுத்துவருவதற்கு ஒரு கூடையையும் எடுத்துக் கொண்டு அதிகாலை ஐந்து மணிக்கு சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், தனது வேலையை முடித்துக்கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியே வரும்பொழுது, பொழுது சாய்ந்து இருட்டிவிடும்.  ஒரு இரும்புக் கம்பி, ஒரு கூடை, ஒரு விளக்கு ஆகியவற்றைத் தவிர, வேறெந்த பாதுகாப்புச் சாதனமும் இன்றிச் சுரங்கத்திற்குள் இறங்கும் ஜாவிர் குமார், “சுரங்கத்திற்குள் மண் சரிவு ஏற்பட்டால், உயிரோடு புதைந்து இறந்து போவோம்” எனத் தெரிந்தேதான் இந்த வேலையைச் செய்து வருகிறான்.

ஹஸாரிபாக் மாவட்டத்தில் மட்டும் இது போன்று நூற்றுக்கணக்கான நிலக்கரிச் சுரங்கங்கள் சட்டவிரோதமான முறையில் இயங்கி வருகின்றன.  ஜாவிர் குமாரைப் போன்று ஆயிரக்கணக்கான சிறுவர்களும், சிறுமிகளும், பெண்களும் சுரங்க வேலை என்ற பெயரில் தினந்தோறும் மரணத்தோடு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  இச்சுரங்கங்களில் கொத்தடிமைகளாக வேலை செய்ய ஒரிசா, பீகார், சத்தீஸ்கர், அசாம் ஆகிய வறிய மாநிலங்களிலிருந்து சிறுவர்கள் பிடித்து வரப்படுகிறார்கள்.

ஜார்கண்ட் மாநிலத்தின் அமைச்சர்கள், போலீசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிந்துதான் இச்சட்டவிரோதச் சுரங்கங்கள் நடந்து வருகின்றன.  இச்சுரங்கங்களை நடத்தி வரும் மாஃபியா கும்பல் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் “கவனித்து’’விடுவதால், அச்சுரங்கங்களில் ஏற்படும் விபத்துக்களை, சிறுவர்களின் மரணங்களைப் பற்றி பதிவு செய்யவும், விசாரிக்கவும் அரசு முன்வருவதேயில்லை.  அச்சுரங்கங்கள் சட்டவிரோதமாக இயங்கிவருவதைக் காரணமாகக் காட்டியே, இறந்து போகும் சிறுவர்களின் குடும்பத்திற்கு நட்ட ஈடு தரவும் அரசு முன்வருவதில்லை.

வசந்தி தேவி என்ற தாயிடம், “உங்கள் மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்காமல், அபாயமிக்க சுரங்க வேலைக்கு ஏன் அனுப்பியிருக்கிறீர்கள்?” எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “வறுமை” என எந்தவிதமான உணர்ச்சியு மின்றிப் பதில் அளித்தார், அவர்.

தனியார்மயத்தின் பின் அம்பானியும் டாடாவும் உலகக் கோடீசுவரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கிறார்கள்.  ஜாவிர் குமாரும் வசந்தி தேவியும் அஞ்சுக்கும் பத்துக்கும் தினந்தோறும் மரணத்தோடு போராடுகிறார்கள்.  இந்தியா வல்லரசாகிறது எனப் பல்லைக் காட்டுகிறார், மன்மோகன் சிங்.

_____________________________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2011
_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !

காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன; நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்; மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்ற சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக சேவகர்களையும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களையும்கூட அரசுப் படைகள் தாக்கி விரட்டியடித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து செயல்பட்டன.

சட்டிஸ்கர் மாநில அரசு மாவோயிஸ்டுகளையும், பழங்குடியின மக்களையும் வேட்டையாடுவதற்காகவே சல்வாஜுடும் என்ற குண்டர்படையை நடத்தி வந்தது. இந்தப் படையினரின் கொலைவெறியாட்டமும் மனித உரிமை மீறல்களும் அம்பலமானதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இப்படையைக் கலைக்குமாறு சட்டிஸ்கர் அரசிற்கு உத்தரவிட்டது. இதன்படி, தற்போது சல்வாஜுடும் கலைக்கப்பட்டுவிட்டதாக அரசு கூறினாலும், கோயா கமாண்டோஸ் என்ற பெயரில் மற்றொரு அரசு கூலிப்படையை உருவாக்கி, அதில் சல்வாஜுடுமில் இருந்த கூலிப்படையினரை இணைத்துக் கொண்டிருக்கிறது. பழங்குடியின மக்களைக் கொண்ட படையைப் போல இதனைக் காட்டுவதற்காகவே, கோயா என்ற பழங்குடியின சமூகத்தின் பெயரை இக்கூலிப்படைக்கு வைத்து ஊரை ஏய்த்து வருகிறது, சட்டிஸ்கர் மாநில அரசு.

இவ்வாறு அமைக்கப்பட்ட 200 கோயா கமாண்டோக்களையும், மத்திய ரிசர்வ் போலீசின் கோப்ரா படைப் பிரிவின் 150 சிப்பாய்களையும் கொண்ட கூட்டுப் படையைக் கொண்டு, மொர்பள்ளி, திம்மாபுரம், தர்மேத்லா ஆகிய மூன்று ’மாவோயிஸ்டு ஆதரவு’ கிராமங்களின் மீது ஏவி தாக்கத் திட்டமிட்டது, சட்டிஸ்கர் மாநில அரசு. அதன்படி, இந்த அரசு பயங்கரவாதத் தாக்குதலின் முதல் இலக்காக மொர்பள்ளி அமைந்தது.

கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி அதிகாலை வேளையில் மொர்பள்ளியைச் சுற்றி வளைத்த படையினர் வானத்தை நோக்கிச் சுட்டவாறு முன்னேறினர். அரசுப் படைகள் தமது கிராமத்தைச் சுற்றி வளைத்துத் தாக்கப் போவதை உணர்ந்துகொண்ட கிராம மக்கள் காட்டுக்குள் ஓடிச்சென்று தப்பித்துக் கொள்ள முயன்றனர். ஆனால், அனைவராலும் அவ்வாறு ஓடி ஒளிய முடியவில்லை. அச்சமயத்தில் புளியமரத்தில் ஏறிப் பழங்களை உலுக்கிக் கொண்டிருந்த மாதவி சுல்லாவால் வேகமாக இறங்கி ஓட முடியவில்லை.

அவரைச் சுட்டுத் தள்ள முயன்ற படையினரிடம் அவரது மனைவி, “சுட வேண்டாம்” எனக் கெஞ்சியதையும் கேளாமல், அவர்கள் தமது கொலைவெறி அடங்கும் வரை சுல்லாவைக் குறிவைத்துச் சுட்டுக் கொண்டே இருந்தனர். துப்பாக்கி ரவைகளால் சல்லடைக் கண்ணாகத் துளைக்கப்பட்ட சுல்லா மரத்திலேயே பிணமானார். படைவீரர்கள் மொர்பள்ளியை விட்டு வெளியேறும் வரை சுல்லாவின் பிணம் மரத்திலேயே தொங்கிக் கொண்டிருந்தது.

அடுத்ததாக அப்படை, அயிம்லா காகி என்ற தாயைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கொண்டது. அவரது மகள்கள் கண்ணெதிரேயே அயிம்லா காகி பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டார். அதுமட்டுமன்றி, அச்சிப்பாய்கள் அவர் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாயையும் அபகரித்துக் கொண்டனர்.

மேலும், 37 வீடுகளைத் தீக்கிரையாக்கிவிட்டு, அன்று மதியம் மொர்பள்ளியிலிருந்து திரும்பிச் சென்ற அப்படையினர், தமது வழியில் எதிர்ப்பட்ட மாதவி கங்கா, அவரது மகன் பீமா மற்றும் மகள் ஹரே ஆகியோரை பிடித்துக் கொண்டு போய், மொர்பள்ளிக்கு அருகிலுள்ள சிந்தால்னர் போலீசு நிலையத்தில் சட்டவிரோதமாகச் சிறைவைத்தனர். அக்கொட்டடியிலேயே ஹரேவை விடியவிடியச் சித்திரவதை செய்த சிப்பாய்கள், அவரைப் பாலியல் வல்லுறவு தாக்குதலுக்கும் ஆளாக்கினர். மாதவியும், பீமாவும் மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாகக் கூறப்பட்டு, அடித்துச் சித்திரவதை செய்யப்பட்டனர். மொர்பள்ளியைச் சேர்ந்த பெண்கள் ஒன்று திரண்டு சிந்தால்னர் போலீசு நிலையத்தை முற்றுகையிட்ட பிறகே மாதவி குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டனர்.

மொர்பள்ளி கிராமத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதத் தொழிற்சாலையொன்றை நடத்திவந்ததாகக் கூறி இத்தாக்குதலை நடத்தியிருக்கும் அரசு, அக்கிராமத்தில் ஆயுதத் தொழிற்சாலை இருந்ததற்கான சுவட்டைக்கூடக் காட்டவில்லை. மொர்பள்ளியை மாவோயிஸ்டுகளின் கோட்டையைப் போலச் சித்தரித்தது அரசு. ஆனால், அக்கிராமத்தில் இருப்பதோ மாவோயிஸ்டுப் போராளிகளுக்காக மக்கள் எழுப்பியிருந்த 15 அடி நினைவுத்தூண் மட்டும்தான்.

மொர்பள்ளி கிராமத்தையடுத்து, மார்ச் 13 அன்று கோயா கமாண்டோக்கள் மட்டும் தனியாகச் சென்று திம்மாபுரம் என்ற கிராமத்தைச் சுற்றி வளைத்தனர். திம்மாபுரம் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தபொழுதே, பர்சே பீமா, மனு யாதவ் என்ற இரு கிராமவாசிகளைச் சிறைபிடித்துக் கொண்டது இக்கூலிப்படை. கோயா படையின் வருகையைத் தெரிந்துகொண்ட அக்கிராம மக்கள் காட்டுக்குள் ஓடி ஒளிந்துகொண்டனர்.

வெறிச்சோடிக் கிடந்த திம்மாபுரம் கிராமத்திற்குள் நுழைந்த அப்படை, கிராம மக்கள் தமது வீடுகளில் விட்டுச் சென்றிருந்த கோழிகளையும் ஆடுகளையும் வெட்டித் தின்றதோடு, கிராமவாசிகள் திரும்பும் வரைக் காத்திருக்க முடிவு செய்து அங்கேயே இரவு தங்கியது. மறுநாள் அதிகாலையில் திம்மாபுரத்திலிருந்த கோயாக்களை மாவோயிஸ்டுகள் தாக்கினர். மதியம் வரை நீண்ட இந்தச் சண்டையில் மூன்று கோயா கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்; ஒன்பதுபேர் காயமடைந்தனர். மதியத்திற்குப் பிறகு மாவோயிஸ்டுகள் பின்வாங்கித் திரும்பிவிட அன்று இரவும் கோயாக்கள் அங்கேயே தங்கியிருந்து மீதமிருந்த கோழிகளையும், ஆடுகளையும் வெட்டித் தின்றனர்.

மூன்றாம் நாள் கோயா படையினர் திம்மாபுரத்தைவிட்டு வெளியேறியபோது, ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளும் தானியக் கிடங்குகளும் தீக்கிரையாக்கப்பட்டிருந்தன. அப்படை, தான் சிறைபிடித்து வைத்திருந்த இருவரில் பர்சே பீமாவைக் @காடரியால் பிளந்து கொன்றுவிட்டுச் சென்றது. அவர்கள் திரும்பிச் சென்ற பின்னர் பீமாவின் மனைவி வந்து பார்க்கும் போது, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு, நெஞ்சில் பாய்ந்த @காடரியுடன் பீமா இரத்த வெள்ளத்தில் முழங்காலிட்டபடி இறந்து கிடந்தார். மூன்று நாட்கள் நடந்த இந்தப் படையெடுப்பில் வெறும் கையோடு திரும்ப விரும்பாத கோயா படைக்கு, ஒரேயொரு ஒரு மாவோயிஸ்டின் உடலாவது தேவைப்பட்டது. கோயா படையனரால் சிறைபிடிக்கப்பட்ட மனு யாதவ் சிந்தால்னர் காட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு, மாவோயிஸ்டு என முத்திரை குத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தர்மேத்லா கிராமம் மார்ச் 16ஆம் தேதி கோயா படையினரால் தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் அக்கிராமத்திலிருந்த 200க்கும் அதிகமான வீடுகளும் தானியக் கிடங்குகளும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அக்கூலிப் படையால் பிடித்துச் செல்லப்பட்ட அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மாதவி ஹண்டா, மாதவி அயிடா ஆகிய இருவரும் எங்கிருக்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என்பது இன்றுவரை மர்மமாக உள்ளது. அவர்கள் போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கக்கூடும் எனக் கிராமவாசிகள் கருதுகின்றனர்.

தர்மேத்லா கிராமத்தின் மீதான தாக்குதலின் போது படையினரிடம் சிக்கிய மாதவி ஹிட்மே தனது ஒருபக்கப் பார்வையையே இழந்துவிட்டார். அரசுப் படைகள் தமது கிராமத்தைத் தாக்கத் தொடங்கியதை அடுத்து, ஹிட்மே தனது நகைகள், பணம் அனைத்தையும் கட்டியெடுத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடினார். அப்பொழுது தன்னை வழிமறித்த நான்கு சிப்பாய்கள் தாக்கியதில் மயங்கிச் சரிந்துவிட்டதாகக் கூறும் ஹிட்மே, நினைவு திரும்பி கண்விழித்துப் பார்த்தபோது, உடம்பில் ஒட்டுத் துணிகூட இல்லாமல் நிர்வாணமாக்கப்பட்டுக் கிடந்ததாகவும் கூறுகிறார். அவரது நகை மற்றும் பணத்தை அபகரித்துக் கொண்ட படையினர், அவரை மிருகத்தனமாகவும் தாக்கியுள்ளனர். இதில் அவரது முகத்தின் ஒரு பகுதி சிதைந்து, இடது கண்ணின் பார்வைத் திறனே போய்விட்டது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து ஊடகங்களில் எந்தச் செய்தியும் வந்து விடாமல் தடுப்பதில் அரசு மிகுந்த முனைப்பு காட்டியது. பத்திரிகையாளர்கள் உடனடியாக அந்த கிராமங்களுக்குச் சென்றுவிடாமல் போலீசாரால் தடுக்கப்பட்டனர். தாக்குதல் நடந்து பல நாட்களுக்குப் பிறகே பத்திரிக்கையாளர்களால் அங்கே செல்ல முடிந்தது. அதுவும் அரசுப் படையினருக்குத் தெரியாமல் காட்டு வழியில் இரகசியமாகச் செல்ல வேண்டியிருந்தது. சட்டிஸ்கர் மாநில எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் உண்மை நிலையை அறிய முயன்றபோது, அவர்களையும் அக்கிராமத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி விட்டனர். ஒரு ஈ, காக்கைகூட காட்டுக்குள் செல்வதை அனுமதித்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்தார், இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்திய சிறப்பு போலீசு கண்காணிப்பாளரான கல்லூரி.

மார்ச் மாத இறுதி வாரத்தில் இத்தாக்குதல் குறித்த உண்மை நிலவரங்கள் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, தாக்குதலில் பாதிக்கப்பட்டு, வீடு, பணம், தானியம்  என அனைத்தையும் இழந்து, காட்டில் நிராதரவாக நிற்கும் கிராம மக்களுக்கு உதவுவதற்காகத் தனது ஆதரவாளர்களுடனும், நிவாரணப் பொருட்களுடனும் அக்கிராமங்களுக்குச் செல்ல முயன்றார், சுவாமி அக்னிவேஷ். இவர், மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மைய அரசால் நியமிக்கப்பட்ட தூதுவர். சில மாதங்களுக்கு முன்னர் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட போலீசாரை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தவர்.

அதுமட்டுமன்றி, காட்டு வேட்டையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்குத் தொடர்ந்து உதவி வருபவர். மார்ச் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க இவர் சட்டிஸ்கர் போகும் முன்பே, அம்மாநில போலீஸ் டி.ஐ.ஜி.யிடம் இது குறித்துப் பேசி, காட்டுக்குள் செல்ல அனுமதியும் வாங்கியிருந்தார்.

ஆனால், மார்ச் 26ஆம் தேதி அதிகாலை இவரும் இவரது குழுவினரும் தொர்னாபால் என்ற நகரத்தில் நூற்றுக்கணக்கான சல்வாஜுடும் குண்டர்களால் வழிமறிக்கப்பட்டனர். இவர்களைத் திரும்பிப் போகும்படி முழக்கமிட்ட அக்கூலிப் படை, கும்பல் சுவாமி அக்னிவேஷ் சென்ற வண்டியை சூழ்ந்துகொண்டு தாக்கியது. அவர்களிடமிருந்து தப்பிய குழுவினர், முதலமைச்சர் இராமன் சிங்கைத் தொடர்புகொண்டு நடந்தவற்றை விளக்கினர். முதல்வர் இராமன் சிங், அவர்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதமளித்ததோடு, நிவாரணப் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று கொடுக்கும்படியும் கூறியிருக்கிறார்.

முதல்வரின் இந்த உத்திரவாதத்தையடுத்து, நண்பகலில் இக்குழுவினர் மீண்டும் தொர்னாபால் வந்த போது, அங்கே மூவாயிரத்திற்கும் அதிகமான சல்வா ஜுடும் குண்டர்கள், துப்பாக்கி, கத்தி, இரும்புக் கம்பி போன்ற ஆயுதங்களோடு, இக்குழுவினரைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். அக்கூலிப்படை கும்பல் இம்முறை அக்னிவேஷை, அவரது தலைப்பாகையைப் பிடித்து இழுத்துச் சாலையில் தள்ளி, கற்களைக் கொண்டு தாக்கியது. இதனைத் தடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் மீதும், குழுவிலிருந்த மற்றவர்கள் மீதும் கற்களை வீசித் தாக்கியது, அச்சமூக விரோதக் கும்பல். “ஒருபுறம் தங்களைக் கிராமத்திற்குச் செல்ல அனுமதித்துவிட்டு, மறுபுறம் இவ்வாறு குண்டர்களை ஏவிவிட்டுத் தங்களைத் தாக்கியதை தற்செயலானதாகப் பார்க்க முடியாது. சிறப்புப் போலீஸ் எஸ்.பி. கல்லூரியால் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இது” என அக்னிவேஷ் சட்டிஸ்கர் அரசின் மீது குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.

மேலும் அவர் இது குறித்துக் கூறும் போது, “துப்பாக்கியேந்திய ஒருவர் என்னைக் கொல்ல விரும்புவதாகக் கூறக் கேட்டது மிகவும் பயங்கரமான தருணம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பயத்தைத்தான் பழங்குடியினரிடமும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுபவர்களிடமும் அரசு உருவாக்க முனைகிறது. பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகளைச் செய்துவந்த பினாயக் சென்னைப் பொய்யாகக் குற்றம்சாட்டிச் சிறையில் தள்ளினார்கள். பழங்குடியினரைக் காணச் சென்ற மேதா பட்கரை கல் வீசித் தாக்கினார்கள். இன்றோ, மனிதாபிமான உதவிகளைச் செய்யச் சென்ற அக்னிவேஷையும் துரத்தித்துரத்தித் தாக்கியுள்ளனர்.

அவர்களுக்கு வேண்டியதெல்லாம் Œட்டிஸ்கரில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை எவ்விதமான எதிர்ப்பும் இன்றி பன்னாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை உத்திரவாதப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இத்தனை தாக்குதல்களும் அழித்தொழிப்புகளும். இத்தாக்குதல்களை,“நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் தவிர்க்கவியலாத நடவடிக்கைகள்” எனத் தாராளமயத் தாசர்கள் நியாயப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

_______________________________________________________

-புதிய ஜனநாயகம், மே – 2011
_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் – மே 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – மே 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் மே 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “இது கார்ப்பரேட் முதலாளிகளிம் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! ஓட்டுப் போடாதே! புரட்சி செய்” -புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்.
  2. ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்
  3. ஊழல் ஒழிப்பு: ஹசாரேவின் நாடகமும் நக்சல்பாரிகளின் போராட்டமும்
  4. ஓட்ட்டுப் பொறுக்குவதில் எதிரெதிர் அணி! கார்ப்பரேட் சேவையில் ஓரணி!
  5. ஒட்டுண்ணிக் கட்சிகளின் கையறுநிலை
  6. உடுக்கையடிக்கும் பத்திரிகைகள் சாமியாடும் தேர்தல் ஆணையம்
  7. டௌ கெமிக்கல்ஸுக்கு சி.பி.எம்.இன் ஆராதனை!
  8. ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டம்: புண்ணுக்குப் புனுகு!
  9. சட்டிஸ்கர்: இந்திய அரசின் போர்க்குற்றங்கள்
  10. அணு மின் உற்பத்திக்குத் தொழிலாளர் பலிகிடா!
  11. அரபு சர்வாதிகாரிகளைத்தாங்கும் அமெரிக்க ஜனநாயகம்
  12. பஞ்சாப்: பிணக்காடாகும் கோதுமைக் களஞ்சியம்
  13. எஸ்.டி.எஸ். மெட்ரிக் பள்ளியின் மிரட்டல், வசூல் வேட்டை: கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக…
  14. ‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!

புதிய ஜனநாயகம் மே 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மதுரை வில்லூர் தேவர் சாதிவெறி!

108

madurai-villur

துரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி. கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க சாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் சாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.

அகமுடையார்கள் வசிக்கும் மேலத்தெருவான காளியம்மன் கோவில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போக கூடாது என்பது இப்போது கூட எழுதப்படாத விதி. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் கூட தேவர் சாதி மாணவர்களை ஐயா என்றுதான் உடன்பயிலும் தாழ்த்தப்பட்டவன் அழைக்க வேண்டுமாம். இது இந்து பாசிசம் கோலோச்சும் குஜராத்திலோ அல்லது வடக்கின் இந்தி பேசும் மாநிலங்களிலோ நடக்கவில்லை. பெரியார் பிறந்த மண்ணில்தான் இந்தக் கொடுமை.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலுமா இப்படி என முகவாயை தேய்ப்பவர்களும், 2020- இல் எப்படியாவது வல்லரசாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வாளாவிருப்பவர்களும் அவசியம் போய் வர வேண்டிய இந்தியாவின் பல கிராமங்களில் ஒன்றுதான் வில்லூர்.

இந்த கிராமத்தில் வசிக்கும் குரு என்பவரின் இளைய மகன் தங்கபாண்டியன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் பள்ளியில் கிடைத்த அவமானங்களையும் சகித்துக் கொண்டு ஆசிரியர் பயிற்சி வரைக்கும் படித்து விட்டு, தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு 7 ஏக்கர் விவசாய நிலம் வாங்க முடிந்த காரணமே அக்குடும்பத்தினர் மீது தேவர் சாதியினர் கோபமடைய போதுமான காரணமாக இருக்கையில் தங்கபாண்டியனின் எதிர்கால வாத்தியார் வேலை என்பது அவர்களது கோபத் தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தது.

தந்தை வாங்கித் தந்த மோட்டார் சைக்கிளில் ஊரை வலம் வர விரும்பினார் அந்த இளைஞர். அப்படி வலம் வருகையில் காளியம்மன் கோவில் தெருவிற்குள்ளும் அவரது மோட்டார் சைக்கிள் போகவே, ஆத்திரமடைந்த அகமுடையார் சாதியினர் சுமார் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். 27 வயது நிரம்பிய தங்கப்பாண்டியனை தாக்கிய அகமுடையார் சாதியைச் சேர்ந்த ஐவரில் மூவர் 24 வயது இளைஞர்கள். மற்ற இருவரும் நாற்பதுகளில் உள்ளவர்கள். இன்று யாரும் சாதி பார்ப்பதில்லை என்பதை பேசுபவர்கள் இதனைக் கவனிக்கவேண்டும். பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளையும் பிடுங்கிக் கொண்டார்கள்.

இது குறித்து தங்கப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் 5 பேரும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டனர். கடந்த சனியன்று இரவு நடந்த இச்சம்பவத்திற்கு மறுநாள் போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலைமையில் அமைதி ஏற்படுத்த அமைதிக்குழு அமைக்கும் பணியை அரசுத் தரப்பு தொடங்கியது.

ஆனால் தங்களிடம் வந்து அபராதம் கட்டி, மன்னிப்புக் கேட்டு மோட்டார் சைக்கிளைத் திரும்ப பெறாமல் போலீசுக்குப் போனதால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் எஸ்.பி மீதும் தாக்குதலை நடத்தினர். காவல்துறை இணை ஆணையாளரின் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், லத்தி சார்ஜீலும் பலர் காயமடைந்தனர். 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையிலேயே தங்கப்பாண்டியனின் அண்ணன் முருகன் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு குடும்பம் முன்னேறுவதையே சகிக்க முடியாத அளவுக்கு சாதிவெறி கோலோச்சுகிறது.

தாழ்த்தப்பட்டவனுக்கு தேநீர்க்கடையில் தனிக்குவளையும், மேலத்தெருவில் செருப்புப் போடத் தடையும் உள்ள ஊருக்குள் தாழ்த்தப்பட்டவன் வாத்தியாருக்குப் படித்திருப்பதும், அவன் பேண்ட் சட்டை போடுவதும் அந்த ஊரில் அதுவும் மேலத்தெருவிலே புதுசாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான் என்றால் சாதிவெறியால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வேளை தங்கபாண்டியனின் ஆசிரியர், பொருளாதாரத் தகுதி காரணமாக அகமுடையார் சமூகப் பெண்கள் அவனைக் காதலித்திருந்தால் என்ன நடக்கும்? கொலைதான் நடக்கும்.

மதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் அங்கே நிலவும் ஆதிக்க சாதிவெறியை நன்கு உணர்ந்திருப்பார்கள். பத்தாண்டுகள் அங்கே வாழ்ந்தவன்  என்ற முறையில் நானே இதை பார்த்திருக்கிறேன். அக்டோபர் 30- ஆம் தேதி பிறந்து, அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர், அந்த குருபூஜைக்கு சுயமரியாதை இயக்க அரசியல்வாதிகளை மாத்திரமின்றி, போலிக் கம்யூனிஸ்டுகளையும் வரவழைக்குமளவுக்கு செல்வாக்கான ஆதிக்க சாதியினர். பசும்பொன் கிராமத்திற்கு லாரி,  வேன்களில் நிரம்பி வழியும் தேவர் சாதி குடிமகன்கள் மதுரை மேலமாசி வீதி வழியே அம்பேத்கரையும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் அர்ச்சிக்கும் வார்த்தைகளை காதால் கேட்கவே கூசும்.

பருத்தி வீரன் கார்த்திக் போல அம்மா மார் சிறுவாடு சேர்த்து வைத்த பணத்தில் குடித்துக் கூத்தடிப்பதும், அம்மா போனபிறகு வழியில்லாமல் பொறுக்கித் தின்ன ரவுடியாவதும் என இச்சாதியின் பெரும்பாலான ரவுடிகளால் மதுரை நிரம்பி வழிகிறது.

மச்சி, மாப்பிள்ளை என்று சக நண்பர்களைப் பதின்வயதில் கூப்பிட்டு மகிழ்ந்தவர்களுக்கு மதுரைப் பகுதியில் வழங்கிவரும் பங்காளி என்ற உறவுமுறை புரிவதற்கு சிரமமானதுதான். ஆதிக்க சாதிகள் தமக்குள் மாத்திரம் விளித்துக்கொள்ளப் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை அது என எனக்கு தெரியாது. அப்படித் தெரியாமல் விளித்து, அவர்களிடம் வாங்கியும் கட்டிக்கொண்டவன் நான். எல்லோரையும் உறவுமுறை வைத்துப் பேசினாலும் தாழ்த்தப்பட்டவர்களை மாத்திரம் அப்படி மறந்தும் கூப்பிட மாட்டார்கள்.

அப்போதுதான் பாரதி கண்ணம்மா திரைப்படம் வந்து போயிருந்தது. எனது அறையை கல்லூரி விடுதியில் பகிர்ந்து கொண்ட சக வகுப்பு மாணவனுக்கு நடிகை மீனாவைப் பிடிக்காது. ஏன் என கடைசி வரை அவன் சொல்லவே இல்லை. கல்லூரி இறுதி நாளில் அவனே சொன்னது இது. “பின்ன என்னடா ! எங்க தேவர் சாதில பொறந்துட்டு போயும் போயும் எஸ்சி தான் கெடச்சானா காதலிக்கிறதுக்கு.”

கஞ்சிக்கில்லை என்றாலும் இத்துப் போன சாதி கௌரவத்திற்காக இந்த தேவர் சாதி வெறியர்கள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் நிறைய உண்டு. வசதியான தொழில் நடத்தும் தேவர் சாதி பிரமுகர்கள்தான் ஏழை தேவர் சாதி மக்களை வைத்து இப்படி சாதிவெறியைக் கிளப்பிவிட்டு குளிர் காய்கின்றனர். இவர்களை பொது அரங்கில் அம்பலப்படுத்தி விரட்டும் போது மட்டும்தான் வில்லூர் போன்ற கிராமங்களில் இந்தக் கொடுமைகள் நடப்பது குறையும்.

_________________________________________________________

வசந்தன்
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

லங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது நடந்த படுகொலைகள், அத்துமீறல்கள் குறித்துப் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின்படி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொடூரமான இனப்படுகொலை பற்றியும், மனித உரிமை மீறல்கள் அட்டூழியங்களையும் இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்துலகச் சட்டங்களின் படி, இலங்கை அரசே விசாரணையை நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும், வடக்கு  கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி, அதன் செயற்பாடுகளைக் கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா. பொதுச் செயலர் அமைக்க வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கை இலங்கை அரசு பாரிய போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகப் பட்டியலிடும் அதேசமயம், புலிகளும் பெருமளவிலான போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகப் பட்டியலிட்டு இருதரப்பையும் சம அளவில் வைத்துத்தான் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், “புலிகள் அளித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் ஒருதலைபட்சமான அறிக்கையை ஏற்க இயலாது” என்றும், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் எல்லைமீறித் தலையிட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஐ.நா. குழு சீர்குலைப்பதாகவும் குற்றம் சாட்டி, ராஜபக்சே கும்பல் தேசிய வெறியையும் இனவெறியையும் தூண்டிவிட்டு வருகிறது.

ஐ.நா. பொதுச் செயலர் தனிப்பட்ட முறையில் தனக்கு ஆலோசனை வழங்க இக்குழுவை நியமித்துள்ளாரே தவிர, இது ஐ.நா. மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அல்ல. இக்குழுவின் அறிக்கையும் ஐ.நா. மன்றத்தின் அறிக்கையோ, போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையோ அல்ல. இப்படித்தான், கடந்த 2009ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதிப் போரின்போது நடந்த ஈழத் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் சாடி அனைத்துலக மனித உரிமைக்கான தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததால் ஜனநாயக நாடகமாடுவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளில் போராடிய புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்காலிக மன ஆறுதல் தருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பாசிபிச சதியாகவே இப்படியொரு தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதை ஐ.நா. பொதுச் சபையில் வைத்து விவாதித்துப் பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கீகரித்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால், அத்தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாக முடங்கிப் போனது. இப்போது மீண்டும் அதேவழியில் ஐ.நா. பொதுச் செயலர் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையும் அமைந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான இன்றைய ஒற்றைத் துருவ ஏகாதிபத்திய உலகில், இனப்படுகொலைகளை நடத்திவரும் பாசிச  இராணுவ சர்வாதிகார அரசுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் விருப்பத்திற்கேற்ப கண்டும் காணாமல் விடப்படுகின்றன அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தலையீடும் ஆக்கிரமிப்பும் தொடர்கின்றன. அதேசமயம், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் தலையீட்டையோ அத்துமீறலையோ ஆக்கிரமிப்பையோ யாரும் வாயளவில்கூட கண்டிக்க முடியாது.

இத்தகைய நிலைமையில், அமெரிக்காவும் அதன் தலைமையிலான ஏகாதிபத்திய உலகமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடவே விரும்புகின்றன. அதேசமயம், ஈழத் தமிழின அழிப்புப் போர் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தால், ஜனநாயக நாடகமாடவும் செய்கின்றன. ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கு ஏற்பச் செயல்படும் கைப்பாவையான ஐ.நா. மன்றமும் அதற்கேற்ப தலையாட்டுகிறது.

இறுதிக் கட்ட ஈழப் போரில் நடந்துள்ள மனித உரிமை மீறல்களைப் பட்டியலிட்டு நிபுணர் குழு மூலம் ஆவணப்படுத்தி, அவசியமேற்படும்போது ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அதைப் பயன்படுத்தலாம் என்பதுதான் ஏகாதிபத்தியங்களின் திட்டமாக உள்ளது. மனித உரிமை  ஜனநாயகம்  பயங்கரவாத எதிர்ப்பு நாடகமாடிக் கொண்டு ஈராக், ஆப்கான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் மட்டுமல்ல; அண்மைக் காலமாக, அரபு நாடுகளில் அமெரிக்க விசுவாச சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தமது ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் எதிரானதாகத் திரும்பிவிடாதிருக்க, மனித உரிமை  ஜனநாயக நாடகமாடிக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன.

மறுபுறம், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுக்குப் போட்டியாக இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவே இலங்கை அரசுக்கு ரஷ்யா, சீனா முதலான நாடுகள் ஆதரவளிக்கின்றன. இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையை தாஜா செய்யும் நோக்கத்துடன் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியான பாகிஸ்தான், ஈழப் போரின்போது இலங்கைக்கு ஏராளமான ஆயுதங்களை விற்று ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்றது. இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடாமல் தனது மேலாதிக்கப் பிடியில் இருத்தி வைப்பதற்காகவே இந்தியா, ஈழத்தில் மறைமுகமாகப் போரை வழிநடத்தி ராஜபக்சே கும்பலுக்கு உற்ற துணையாக நின்றது. மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இத்தகைய நிலைமைகள்தான் இலங்கை அரசை இந்த நாடுகள் ஆதரிக்கக் காரணமாக உள்ளன.

இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல; காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை முதலானவற்றிலும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அப்பட்டமான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர அரசு என்பது நிரூபணமாகியுள்ளது. இருப்பினும், ஒரு போரில் மனித உரிமை ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் அட்டூழியங்களில் ஈடுபடுவதுதான் போர்க் குற்றம் என்பதாகவும், உள்நாட்டில் அரசு பயங்கரவாத அட்டூழியங்களையும் புரட்சிகரஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களையும் சமப்படுத்தி இருதரப்பும் மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டுவதாகவும்தான் ஏகாதிபத்தியங்கள் மற்றும் சில மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கைகளாக உள்ளன. தமிழினவாதிகளும் ஈழ ஆதரவு நாடகமாடும் ஓட்டுக் கட்சிகளும், ஏதோ இந்திய அரசு இதுவரை போர்க்குற்றங்களில் ஈடுபடாதது போலவும், ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்று ஈழப் போரை வழிநடத்தியதுதான் போர்க்குற்றம் என்பதாகவும் மாய்மாலம் செய்து, இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கின்றனர்.

இன்றைய நிலையில், சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் போர்க்குற்றவாளியான ராஜபக்சே கும்பலுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர். ராஜபக்சே கும்பல் மீது போர்க்குற்றம் சாட்டும் மேலைநாடுகளின் மனித உரிமை இயக்கங்களும்கூட ஒரு சில செயல்வீரர்களின் நடவடிக்கைகளாகவும் ஊடகங்களின் அம்பலப்படுத்தல்களாகவும் அமெரிக்காவின் தலையீட்டைக் கோருவதாகவும் உள்ளனவே தவிர, மக்கள்திரள் இயக்கமாக முன்னேறவில்லை. இந்நிலையில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்குவதும், ஏகாதிபத்திய சதிகளை அம்பலப்படுத்தி, அக்கும்பலைத் தண்டிக்க மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்து இறுதிவரை முன்னெடுத்துச் செல்வதும்தான் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

______________________________________________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2011

______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் நடத்திய மே தினப் பேரணி சிறப்பாக நடந்தேறியது. சென்னை, கடலூர், திருச்சி, கோவை, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். உசிலையில் மட்டும் போலீசு ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. தடையை மீறி ஊர்வலம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மே தினத்திற்கு கூட ஊர்வலம் அனுமதி இல்லை எனும் பாசிச நிலையை வந்தடைந்திருக்கிறோம். அதனால் போராட்டம் நின்றுவிடப் போவதில்லை. மே நாள் தரும் ஊக்கத்தில் அது தொடர்ந்து நடக்கும். இங்கே ஊர்வலக் காட்சிகளை ஊர் வாரியாக வெளியிடுகிறோம்.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

 

உசிலம்பட்டி

மே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டி

 

திருச்சி

மே நாள் 2011 - திருச்சி

ஓசூர்

ஓசூரில் கடந்த மே 1 அன்று நடந்த மேதின நிகழ்வில், விவசாயிகள் விடுதலை முன்னணி ஐ சார்ந்த தோழர் முனிராஜ் மே தினப் பேரணியைத் துவக்கி வைத்துப் பேசினார். பேரணியின் முடிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட விவிமு  தோழர் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

மே தினம் எனும் தொழிலாளர் தினம், 8 மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற தமது கோரிக்கைகளுக்காகப் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தைப் போராடி பணிய வைத்த தினம். இன்று தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகளால் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களும், தனியார் அல்லது அரசு நிறுவனம் என்ற வேறுபாடு இல்லாமல் தினசரி 16 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுகின்றனர்.

எனவே கேக் வெட்டிக் கொண்டாடவோ, கோவிலுக்குப் போய் கும்பிடுவதற்கோ இந்நாளைப் பயன்படுத்தக் கூடாது.  நமது உரிமையை நிலைநாட்ட, முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டிட‌  வேண்டும்.  கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எதிராகப் போராடி நமது நாட்டைப் பாதுகாக்க‌ வேண்டும். அதற்காக தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கம் என்ற வகையில் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இதற்கான சூளூரையை இந்நாளில் ஏற்பதுதான் சரியானது என்று பேச்சாளர்கள் பேசினர்.

கமாஸ் வெக்ட்ரா ஆலையின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் முருகன் நன்றியுரை ஆற்றினார். ஆயிரக்கணக்கான மக்களும், செஞ்சட்டையணிந்த தோழர்களும், பெண்களும், குழந்தைகளும் முழக்கங்களை பாதகைகளுடன் முழங்கியது ஓசூரில் தொழிலாளர்களுக்கு மேதினத்தில் வர்க்க உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும், தாம் ஒன்றுபடுவதன் அவசியத்தை உணரவைப்பதாகவும் அமைந்திருந்தது.

மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே நாள் 2011 - ஓசூர்

கோவை

கோவையில் மே 1 பேரணி மாலை 4 மணிக்கு சிவானந்தா காலனியிலிருந்து புறப்பட்டு . சித்தாபுத்தூர் V  K மேனன் வீதியில் பொதுக்கூட்டத்துடன் முடிந்தது, பேரணியில் 950 க்கும் மேற்பட்ட தோழர்களும் அவர்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பேரணியின் இடையில் பெரும் காற்றுடன் மழை வந்தும் பேரணி சற்றும் கலையாமல் நடந்தது.  பொதுமக்களின் பார்வையில் மே தினத்தை கொண்டாட முழு தகுதி உடையவர்கள் இவர்களே என்பதை உணர்த்தியது. இறுதியில் அடாத பெரும் மழையிலும் பொதுக்கூட்டத்தில் நிகழ்ச்சி முடியும் வரைதோழர்கள் கலையாமல் நின்றனர்  . இதே வேளையில் மழையின் காரணமாக சிபிஐ-சிபிஎம் கட்சியின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மே நாள் 2011 - கோவைமே நாள் 2011 - கோவைமே நாள் 2011 - கோவை

சென்னை

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் பூந்தமல்லியில் மே நாள் விழா  நிகழ்ச்சி நடந்தது.

பல தொழிலாளர்கள் தங்களின் இன்னுயிர் ஈந்து பெற்றுத்தந்த உரிமைகளை அடகு வைக்க முண்டியடிக்கும் போலிகளின் குத்தாட்டங்களுக்கும், சடங்குகளுக்கும் மத்தியில் போராட்டமே மகிழ்ச்சி என்ற  மார்க்சிய ஆசானின் கூற்றுக்கேற்ப புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் மே நாள் விழா போராட்டமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்பட்டது. வர்க்கப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு முறைப்படி வீரவணக்கம் செலுத்தி பேரணி  கல்லறை பேருந்து நிறுத்தத்தில் காலை 10 மணிக்கு பறை முழக்கத்தோடு புஜதொமு தலைவர் அ.முகுந்தன் தலைமையில் தொடங்கியது.”மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு ?” என்று  நாட்டின் இயற்கை வளத்தை கொள்¨ளயடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடக்கோரும்  பாடல் இசைக்கப்பட்டது.

ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்கள் செஞ்சட்டையுடன் செங்கொடியேந்தி  தொழிலாளி வர்க்கத்தின் உரிமைககளை ப¡துகாப்பதற்காக இழந்து போன உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, அந்த கம்யூனிச செஞ்சுடரை ஏந்தி  பேரணியாய் சென்றார்கள்.  இருங்காட்டுக்கோட்டை, திருப்பெரும்புதூர் பகுதியிலே பணிபுரிந்து சுரண்டப்படும் தொழிலாளிகள் பரவலாக வாழும்  பகுதிகளின் ஊடாக  பேரணி சென்றது. அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிக்கக்கோரியும், தனியார் மயம் தாராளமயம் உலக மயத்தை முறியடிக்ககோரியும், கார்ப்பரேட் கொள்ளையர்களையும், ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க நக்சல் பாரிப் பாதையில் அணி திரளக்கோரியும் முழக்கங்கள் முழங்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் மாவோவின் படங்களை ஏந்தி  அவர்களின் உண்மையான வாரிசுகளாக களத்திலே  தங்கள் குடும்பங்களோடு தோழர்கள் சென்றார்கள்.   தோழர்கள் மூன்று கிலோமீட்டர் பேரணியாய் சென்றார்கள் என்றால் மக்கள் பெருந்திரளாக ஆதரித்து தோழர்களுக்கு தண்ணீர் தேவையா என்று தோழமையோடு வினவினார்கள்.

பூந்தமல்லி  நீதி மன்றம் அருகே 11 மணிக்கு பேரணி முடிவுற்றது . அவ்விடத்திலே   ஆர்ப்பாட்டம் தொடங்கியது. புஜதொமு மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றி வேல் செழியன்  சிறப்புரையாற்றினார்.  125 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் தொழிலாளார்களால் எட்டு மணி நேர வேலை என்ற  தொழிலாளிவர்க்கத்தின் கோரிக்கைக்காக தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் முழுக்க பற்றிப்படர்ந்து பல தொழிலாளர்கள் குருதி சிந்தி சாதித்தது. ஆனால் அப்படி போராடி வாங்கிய உரிமைகள் இன்றைய மறூகாலனியாக்கச் சூழலில் நசுக்கப்பட்டு,  வேலைகள் பறிக்கப்பட்டு, தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையற்ற அடிமையாக தொழிலாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.  சிஐடியூ, ஏஐடியுசி போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் தொற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்றபடி தாளம் போடுபவையாக உள்ளன. தொழிலாளிகளிடம் வர்க்க உணர்வை வளர்ப்பதற்கு மாறாக அவர்களின் போர்க்குணத்தை சிதைக்கின்றன. தொழிலாளிகள் தம் உரிமையை மீட்டெடுக்க ஓட்டுக்கட்சிகளை நம்பிப்பலனில்லை. புரட்சிகர தொழிற்சங்கமான புஜதொமு தொழிலாளர்களின் போராடி வென்றதையும் , புஜதொமுவைப்பற்றி அரசு பரப்பும் பெ¡ய் செய்திகளையே போலி கம்யூனிஸ்டுகள் பரப்பிக்கொண்டு செல்லும் வேளையில் தொழிலாளி வர்க்கத்தின் இன்னல் தீர புதிய ஜனநாயகப் புரட்சியே தீர்வென்றும் அதற்கு நக்சல்பாரிப் பாதையில் அணிதிரள  வேண்டுமென்றும் அறைகூவியது சிறப்புறை . பாட்டளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது

மே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னை

கடலூர்

மே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரி

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?

நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?

‌க்ச‌ல்க‌ள் எல்லாம் தீவிர‌வாதிக‌ள் அவ‌ர்க‌ளை ஒடுக்க‌வே நாங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ச‌ண்டையில் ஈடுப‌ட்டுள்ளோம் என்று கூறும் இந்திய‌ பாதுகாப்பு(!) ப‌டையின் உண்மை முக‌த்தை தோலுரித்து காட்டுகின்ற‌து இக்க‌ட்டுரை. வீரப்ப‌னின் தேடுத‌ல் வேட்டையில் எவ்வாறு அங்கு வாழ்ந்த‌ சோள‌க‌ர் ப‌ழ‌ங்குடி இன‌ ம‌க்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை ச‌.பால‌முருக‌ன் எழுதிய‌ சோள‌க‌ர் தொட்டி என்ற‌ நாவ‌ல் மிக தெளிவாக பதிந்துள்ளது.

அதைப் போலவே மாவோவின‌ர்களை  தேடும் வேட்டையில் பாதிக்க‌ப்ப‌டும் ப‌ழ‌ங்குடி இன‌ம‌க்க‌ளின் வாழ்க்கை நிலையைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ இக்க‌ட்டுரை ஒரு சிறிய‌ அள‌விலாவ‌து உங்க‌ளுக்கு உத‌வும்.  மேலும் இதுபோல பாதிக்கப்படுகின்ற பழங்குடி இன மக்களுக்கு ஆதரவாக போராடும் பினாயக் சென் போன்றோர் அரச நிறுவனங்களால் ஒரு தேச‌துரோகியைப் போல சித்தரித்து கைது செய்யப்பட்டு அடைப்பது அவரை மட்டும் தண்டிப்பதற்காக அல்ல…குறிப்பாக மக்களுக்காக வேலை செய்பவர்களிடம் ஒரு அச்ச‌ உணர்வை எப்பொழுதுமே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அந்த அச்ச‌த்தின் மூலமாக மக்களை ஆட்சி செய்வது தான் இராணுவ ஆட்சி, இந்தியாவிலும் இந்த முறையிலான‌ இராணுவ ஆட்சியே நடக்கின்றது…..

இந்த கட்டுரையின் இறுதியில் கோவசி அத்மா என்ற பழங்குடி விவசாயி கூறுவது போல இங்கு இரண்டு வேறுபட்ட அரசுகள் உள்ளன (ஒன்று ஏழை இந்தியா, மற்றொன்று பணக்கார இந்தியா)என்பதை தனது அண்மைய தீர்ப்பின் மூலமாக உச்சநீதிமன்றம் வேறுவழியில்லாமல் உறுதி செய்துள்ளது.

காவல் துறையின் இயக்கல்களுக்கு(operation) நடுவே தாண்டேவாடாவில் வாழுகின்ற மனிதர்களான பழங்குடிகளின் உண்மையான நிலையைப் பற்றியும், அங்கு மார்ச் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற‌ படுகொலை நிகழ்வுகளைப் பற்றியும் விவரிக்கின்றது இக்கட்டுரை. இக்கட்டுரையை எழுதியவர் தெகல்கா நாளிதழின் நிருபரான‌ துசா மிட்டல்…

______________________________________________

ந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோவினர் இந்திய‌ எல்லைப் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த பேருந்தின் மீது நடத்திய மிக மோசமான  தாக்குத‌ல் ந‌டைபெற்று இன்றோடு(6 ஏப்ரல் 2011) ஒர் ஆண்டு ஆகின்ற‌து. க‌ட‌ந்த ஆண்டு இதே நாளில் தான் ச‌ட்டீசுக‌ரின் வ‌ன‌ப்ப‌குதியில் 76 எல்லைப் பாதுகாப்புப‌டை வீர‌ர்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ப‌டுகொலை மாவோவின‌ர் மீதான‌ எதிர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை அதிக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ கார‌ணியாக‌ ஆன‌து. ஓர் ஆண்டுக்கு பின்ன‌ர் அதே வ‌ன‌ம் இன்னொரு ப‌டுகொலை நிக‌ழ்வைச் ச‌ந்தித்துள்ள‌து. ஆனால் இந்த‌ முறை ப‌டுகொலையை செய்த‌து நாம் எதிரிகளாகக் கருதும் மாவோவின‌ர் அல்ல, இந்திய‌ பாதுகாப்பு ப‌டைக‌ள் என்ப‌து தெக‌ல்கா நாளித‌ழின் விசாரணையிலிருந்து தெரிய‌ வ‌ருகின்ற‌து. இதில் தாக்குத‌லுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இந்தியாவில் உள்ள‌ ச‌க‌ம‌க்க‌ளின் க‌ண்க‌ளுக்கு (தெரிந்தும்)தெரியாத‌ ப‌ழ‌ங்குடிகளே.

மார்ச் இர‌ண்டாவ‌து வார‌த்தில் பாதுகாப்பு ப‌டை ந‌ட‌த்திய இய‌க்க‌ல் ஐந்து நாட்க‌ள் நீடித்த‌து. இதில் இந்திய‌ பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொளுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌. நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌(மொத்த‌ இருப்பு) த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.

கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ரின் உட‌ல் ஒரு ம‌ர‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்டும், ம‌ற்ற‌ ஒருவ‌ரின் உட‌ல் கோடாரியால் இர‌ண்டாக‌ பிள‌க்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்த‌து. அவ‌ர்க‌ளின் வாழ்வாதார‌மான‌ கோழி, ஆடு, உண‌வுப் பொருட்களும் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.

இதைப் ப‌ற்றிய‌ செய்தி “Rajastan Patrika” என்ற ஒரே ஒரு இந்தி நாளிதழலும், “இந்து” நாளித‌ழிலும், சில‌ உள்ளூர் தொலைக்காட்சி அலைவ‌ரிசைக‌ளிலும் வெளிவ‌ந்த‌தை த‌விர வேறு எந்த‌ ஒரு த‌னிப்ப‌ட்ட‌ விசார‌ணைக‌ளும் மேற்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. தாண்டேவாடாவில் காவல்துறை தலைமை அதிகாரியான கல்லுரி என்பவரின் தலைமையில் தான் இந்திய‌ துணை இராணுவமும், மற்ற படைகளும் இய‌ங்குகின்றன‌. இவ‌ர் இந்த‌ ப‌டுகொலையும், தீ வைப்பும் “மாவோவின‌ரின் பர‌ப்புரை யுத்தி” என்கின்றார். ச‌ட்டீசுக‌ர் மாநில‌ உள்துறை ம‌ந்திரி ந‌ன்கிராம் க‌ன்வாரோ இந்த‌ தீ வைப்புக‌ளுக்கு கார‌ண‌ம் மாவோவின‌ர் தான் என‌க் குற்ற‌ம் சாட்டுகின்றார்.

இந்த‌ ப‌டுகொலை நிக‌ழ்வுக்கு பின்ன‌ரான‌ மார்ச் இறுதி வார‌ங்க‌ளில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளில் நுழைவ‌த‌ற்கு ப‌ல தனிப்பட்ட விசாரணை குழுக்க‌ளுக்கு த‌டைவிதிக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ட்டீசுக‌ர் மாநில‌ முத‌ல்வ‌ர் இராமன் சிங்கின் உத்திரவாத‌த்தின் பேரில் காவ‌ல்துறையின‌ரின் பாதுகாப்போடு சென்ற‌ ச‌மூக‌ செய‌ல்பாட்டாள‌ரான‌ சுவாமி அக்னிவினேசு வெறி கொண்ட‌‌ ஒரு கூட்ட‌த்தின‌ரால் தாக்க‌ப்ப‌ட்டார். உள்ளூர் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ல‌ர் தாக்க‌ப்பட்டுள்ளார்கள், மேலும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவ‌ல்துறையால் மிர‌ட்ட‌ப்பட்டுமுள்ளார்க‌ள்.

தாண்டேவாடா மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் கொடுத்த‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ சுமையுந்தின் ஓட்டுநர், க‌ர்த‌ம் சூர்யா என்ற‌ சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியினால் தாக்க‌ப்ப‌ட்டார். இந்த காதம் சூர்யா இதற்கு முன்னர் ஒரு க‌ற்ப‌ழிப்பு வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்பட்டவர். இவ‌ரை க‌ண்டுபிடிக்க‌முடிய‌வில்லை என்று காவல்துறை கூறுகின்ற‌‌து. பாதுகாப்பு பிர‌ச்ச‌னை என்ற‌ பெய‌ரில் ச‌ட்டீசுக‌ர் மாநில‌ எதிர் க‌ட்சியைச் சேர்ந்த‌ 11 ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ ப‌குதிக்குள் நுழைவ‌த‌ற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்பட்டுள்ள‌‌து. ப‌ல‌ வித‌மான‌ இழுத்த‌டிப்புக‌ளுக்கு பின்ன‌ர் வேலை செய்ய‌த்துவ‌ங்கிய‌ மாநில‌ நிர்வாக‌ம் தாண்டேவாடா மாவ‌ட்ட‌ காவல்துறை த‌லைமை அதிகாரி க‌ல்லுரியை இட‌மாற்ற‌ம் செய்து, மேலும் இந்த‌ ப‌டுகொலை தொட‌ர்பான‌ நீதி விசார‌ணை ந‌ட‌க்கும் என்று உத்திர‌வாத‌த்தையும் வ‌ழ‌ங்கியுள்ள‌து.

க‌ட‌ந்த‌ வார‌ம் காவ‌ல்துறையின் அர‌ண்க‌ளை தாண்டி செல்வ‌த‌ற்காக‌ மிக‌வும் தொலைவான‌ காட்டுப்ப‌குதியின் மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளை தெக‌ல்கா குழுவின‌ர் சென்ற‌டைந்த‌ன‌ர். ம‌த்திய‌ காவ‌ல் ப‌டை வீர‌ர்க‌ள், “கோப்ரா”, “கோய” அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரிக‌ள், காவ‌ல்துறை அதிகாரிக‌ள் எல்லாம் சேர்ந்து தான் இந்த‌ ப‌டுகொலையை நிகழ்த்தினார்கள் என்று நிக‌ழ்வை நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் எம்மிடம்(தெகல்கா) கூறினார்க‌ள். மேலும் இவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌ உடுப்பு அணிந்தும், பொது ம‌க்க‌ளைப் போன்ற‌ உடைய‌ணிந்தும் இருந்த‌ சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரிகளும் இருந்துள்ளார்கள்.

“இந்த‌ப் ப‌குதியில் நாட்டுத்துப்பாக்கிக‌ள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுவ‌தாக‌ காவ‌ல்துறை க‌ருதியிருந்த‌து. மேலும் கிடைத்திருந்த‌ உள‌வுத்த‌க‌வ‌ல்க‌ளின் ப‌டி முக்கிய‌மான‌ மாவோவின‌ர் இந்த‌ப் ப‌குதியில் ப‌துங்கியிருப்ப‌தாக‌வும் எங்களுக்கு த‌க‌வ‌ல்க‌ள் வ‌ந்த‌ன‌” என‌ காவ‌ல்துறை வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன. அவர்கள் மேலும் கூறுகையில் “இந்த‌ கிராம‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌க்ச‌ல் ஆத‌ர‌வாள‌ர்க‌ள், தெரிந்தோ, தெரியாம‌லோ ந‌க்ச‌ல்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் உட‌ந்தையாக‌வும், 76 ப‌டை வீர‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கு உத‌வியும் உள்ளார்க‌ள்”.

தீ வைத்து கொழுத்த‌ப்ப‌ட்ட‌ மோர்பளி, திமாபுர், தர்மத்லா கிராம‌ங்க‌ள் ம‌யான‌ பூமியைப் போல‌ எங்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌ன‌. அந்த‌ நில‌ப்ப‌குதி மொத்த‌‌மும் எரிந்த‌ குடிசைக‌ளையும், ஆள் அரவமற்ற எரிந்து போன தானிய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ழ‌ங்கால‌ தாழிக‌ளையும் கொண்ட இடிந்து போன வீடுகளையும் மட்டுமே கொண்டிருந்த‌து. இது ச‌ல்வா சூடும் ந‌டைபெற்ற‌ ஆர‌ம்ப‌ கால‌ க‌ட்ட‌த்தை எம‌க்கு நினைவூட்டிய‌து. 2005-ல் தொடங்கிய ச‌ல்வா சூடும் இய‌க்க‌லினால் மொத்த‌ம் 645 கிராம‌ங்க‌ள் எரித்து சாம்ப‌லாக்க‌ப்பட்டது, மொத்த‌ம் 60,000 ம‌க்க‌ள் உள்நாட்டிலேயே இட‌ப்பெய‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ச‌ல்வா சூடும் இய‌க்க‌ல் அர‌ச‌ உத‌வி பெற்ற‌ ஒரு ஆயுத‌ப்ப‌டை இயக்கல் என்ப‌து பெரும்பான்மையோரால் ஒப்புக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும்.


பாதுகாப்பு ப‌டையினரால் தாக்க‌ப்ப‌ட்டு, க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ ஐம்லா சோகி
பாதுகாப்பு ப‌டையினரால் தாக்க‌ப்ப‌ட்டு, க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ ஐம்லா சோகி


அது போல‌ ஒரு பெரிய‌ இட‌ப்பெய‌ர்வு இப்பொழுது ந‌ட‌க்க‌வில்லை என்றாலும், இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ளால் வீடுக‌ளை இழ‌ந்து பாதிக்க‌ப்பட்ட‌ ப‌ழ‌ங்குடிக‌ள் ஆந்திர‌ மாநில‌த்திற்கு இட‌ம்பெய‌ர்ந்து அங்கு கூலி வேலைக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இதை விடுத்த‌ அந்த‌ கிராம‌ங்க‌ளிலேயே வாழ்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள் வீடுக‌ள் இல்லாத‌ காரண‌‌த்தினால் பெரிய‌ ம‌ர‌ங்களின் கீழ் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்து வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ கொடூர‌ நிக‌ழ்வை செய்த‌து சீருடை அணிந்த‌ மாவோவின‌ர் என்று முத‌லில் க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் இதில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ உள்ளூர்வாசிக‌ள் இந்த‌ தாக்குத‌லில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ப‌டையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளே என்றும், அவ‌ர்க‌ளில் சில‌ர‌து பெய‌ர்க‌ளையும் கூறினார்க‌ள்: ந‌க‌ர‌ம் ப‌குதியைச் சேர்ந்த‌ இர‌மேசு என்ற‌ ம‌த்க‌ம் பீமா, லேகாப‌ரோ ப‌குதியைச் சேர்ந்த‌ தெல‌ம் அன்ட, மோர்பளி ப‌குதியைச் சேர்ந்த‌ புத்கே ம‌ரா, குர்ராப‌ரோ ப‌குதியைச் சேர்ந்த‌ கிச்சே ந‌ந்தா (இவ‌ர் ஏற்க‌ன‌வே சிங்கார‌ம் என்ற‌ ப‌குதியில் 19 ப‌ழ‌ங்குடியின‌ரைக் கொலை செய்த‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்), மிசுமா ப‌குதியைச் சேர்ந்த‌ க‌ர்த‌ம் சூர்யா (இவ‌ர் ஏற்க‌ன‌வே 4 ப‌ழ‌ங்குடி இன‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்). மேலும் ந‌ந்தா, சூர்யாவைக் கைது செய்ய‌ச் சொல்லி நீதிம‌ன்ற‌ம் பிற‌ப்பித்த‌ தீர்ப்பு ஒன்றும் நிலுவையில் உள்ள‌து. வ‌ழ‌மை போல‌வே இவ‌ர்க‌ளை எல்லாம் காண‌வில்லை என்று காவ‌ல்துறை கூறுகின்ற‌து.

இவ‌ர்க‌ளில் சில‌ர் ச‌ர‌ண‌டைந்த‌ மாவோவின‌ர் (பின்னர் அர‌ச‌ த‌ர‌ப்பால் மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்), சில‌ர் ச‌ல்வாசூடும் இய‌க்க‌லில் ப‌ணியாற்றி பின்ன‌ர் சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியாக‌ ஆன‌வ‌ர்க‌ள், சில‌ர் சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியாக ப‌ணியாற்றி “கோய”அதிர‌டிப்ப‌டை அதிகாரிக‌ளாக‌ ப‌த‌வி உய‌ர்வு பெற்ற‌வ‌ர்க‌ள். அர‌சு ச‌ல்வா சூடும் இய‌க்க‌ம் முடிவுக்கு வ‌ந்துவிட்ட‌தாக‌ கூறுகின்ற‌து, ஆனால் அந்த‌ இய‌க்க‌லில் ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் தான் அதிர‌டி ப‌டைக‌ளிலும், சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரிக‌ளாக‌வும் ப‌ணியாற்றி வ‌ருகின்றார்க‌ள். ச‌ல்வா சூடும் இய‌க்க‌ல்…துணைப் பாதுகாப்பு ப‌டை இய‌க்க‌ல் என்று பெய‌ர் மாற்ற‌ம் தான் அடைந்திருக்கின்ற‌தே த‌விர‌ ச‌ல்வா சூடும் முடிந்து, துணை இராணுவ‌ப்ப‌டையின் ந‌டவ‌டிக்கைக‌ள் தொட‌ங்கி இருக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்கான‌ சான்றுக‌ள் தென்ப‌ட‌வே இல்லை.

மேலும் இங்கு த‌னிப்ப‌ட்ட‌ ப‌கை ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கின்றதா இல்லை மாவோவின‌ருக்கு எதிரான ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கின்ற‌தா என்பதும் தெளிவாக தெரியாத‌ நிலையே நிலவுகின்றது. இந்த படுகொலை நிகழ்விற்கு உடந்தையாக இருந்த த‌ன் ம‌கன்(புத்கே மற) சாக‌ வேண்டும் என்று நினைக்கும் மோர்ப‌ளி வாசியான‌ புத்கே ல‌ச்சாவை நீங்க‌ள் ச‌ந்திந்தால் தான் இங்கு ந‌ட‌ந்து வ‌ரும் உள்நாட்டுப் போர் எந்த‌ள‌வு ம‌க்க‌ளை பாதித்துள்ள‌து என்ப‌து உங்க‌ளுக்கு தெரிய‌ வ‌ரும். புத்கே ல‌ச்சா மேலும் கூறுகையில் தொட‌க்க‌த்தில் புத்கே ம‌ற‌ குடிப்ப‌ழ‌க்க‌த்தில் ஈடுப‌ட்டு பெண்க‌ளிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முற்ப‌ட்டான், பின்னர் ஒரு பெண்ணை க‌ற்ப‌ழித்து என‌க்கு தீராத‌ க‌ள‌ங்க‌த்தை உண்டாக்கிவிட்டு இந்த‌ கிராம‌த்தை விட்டே வெளியேறிவிட்டான்.

“அவ‌ன் ஆந்திராவில் கூலி வேலை செய்வ‌தாக‌வும், எங்கேயாவ‌து அவ‌ன் த‌ங்க‌ நேர்ந்தால் அங்குள்ள‌ ப‌சு, உண‌வு தானிய‌ங்க‌ள், ப‌ண‌த்தை திருடி வ‌ருவ‌தாக‌வும்” நான் கேள்விப்ப‌ட்டேன் என‌ புத்கே ல‌ச்சா கூறுகின்றார். இதன் பின்ன‌ர் கடந்த ஆண்டு(2010)ச‌த்தீசுக‌ர் வ‌ந்த‌ த‌ன் ம‌க‌ன் நேரடியாக கோன்டா ப‌குதியில் உள்ள‌ ச‌ல்வா சூடும் குழுவிற்கு த‌லைமை பொறுப்பு வ‌கித்ததாகவும், இதன் பின்னர் சில மாதங்களிலேயே அவனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சிறப்பு காவல்துறை அதிகாரியானான், அவனுக்கு அரச படைகளின் சீருடையும், ஒரு துப்பாக்கியும், மாதம் 3,000 ரூபாய் சம்பளமும் அரசால் வழங்கப்பட்டது. அவன் மட்டும் தனியாக இந்த கிராமத்திற்கு மீண்டும் வந்தால் இங்கிருக்கும் மக்கள் எல்லாம் ஒன்றாக‌ சேர்ந்து அவனை கொன்று விடுங்க‌ள் என்று நான் இங்குள்ள‌ மக்களிடம் கூறுவேன் என்கிறார் புத்கே லச்சா.

ப‌டுகொலையை நேரில் க‌ண்ட‌ சாட்சிய‌ங்க‌ள் கூறிய‌த‌ன் அடிப்ப‌டையில் அந்த‌ நாட்க‌ளில் நிக‌ழ்ந்தவை…..

11 மார்ச், காலை 8.00 மணி – இடம். மோர்பளி

பாதுகாப்பு ப‌டையினரால் தன் கண‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தின‌ருகே நிற்கின்றார் ம‌த்வி உங்கி
பாதுகாப்பு ப‌டையினரால் தன் கண‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தின‌ருகே நிற்கின்றார் ம‌த்வி உங்கி

அரச படை இரண்டு பிரிவுகளாக மோர்பளி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். மத்வி கங்காவின் குழந்தைகள் தண்ணீர் எடுக்கச் சென்ற குளத்தை ஒட்டிய பாதை வழியாக முதல் அணி வந்தது. அவர்கள் வரும் சத்தத்தை கேட்டு தன் குடும்பத்தை எச்சரிக்க சென்றார் மத்வி கங்கா(வயது 40), ஆனால் அவர்கள் அதற்குள்ளாக அங்கு வந்துவிட்டார்கள். மத்வி கங்காவையும், அவரது மகள் லக்கேவையும்(17 வயது), மகன் பீமா மூவரையும் தாக்கியுள்ளார்கள், பின்னர் அவர்களை கட்டி கிராமத்திற்குள் இழுத்து வந்துள்ளார்கள். பின்னர் அவர்களிடம் “மாவோவினர் எங்கே என்று? கேட்டுள்ளார்கள்.

முதல் அணி மோர்பளி கிராமத்திற்குள் வருவதற்கு முன்னதாகவே அந்த கிராமத்தில் வசித்த 200 பேரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். அரச படைக்கு மாவோவினரோ, மக்கள் தயாரிப்பதாக சொன்ன நாட்டு துப்பாக்கிகளோ எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் மாவோவினர் மாவீரர்களுக்காக கட்டிய 15 அடி உயர நினைவுச் சின்னம் மட்டுமே. அந்த கிராமத்தில் மாவோவினரின் நினைவுச் சின்னம் இருப்பதாலேயே அந்த கிராமவாசிகள் அனைவரும் மாவோவினர் என்று கூறி விடமுடியாது.

ம‌று புற‌ம், இர‌ண்டாவ‌து அணி வ‌ரும் பொழுது, 40 வ‌ய‌தான‌ ஐம்லா என்ப‌வ‌ர் த‌ன‌து நில‌த்தை உழுது கொண்டிருந்தார். அவரை நோக்கி வந்த இரண்டாம் அணியைச் சேர்ந்தவர்கள் “எழுந்து, அந்த ப‌க்க‌மாக‌ச் செல், நாங்க‌ள் எல்லோரும் ஆந்திர‌ பிரிவைச் சேர்ந்த‌ ந‌க‌ச‌ல்க‌ள், நாங்க‌ள் அவ‌ச‌ர‌மாக‌ ஒரு ச‌ந்திப்பிற்குச் சென்று கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்க‌ள். அவ‌ர் அங்கிருந்து ந‌க‌ர‌ ம‌றுக்க‌வே, அவ‌ரை த‌ங்க‌ள் கைக‌ளிலிருந்த‌ இல‌த்தி க‌ம்பைக் கொண்டு தாக்கி, அவ‌ர் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்த அவரது வாழ்நாள் சேமிப்பான‌‌ ரூ. 10,000த்தை அவ‌ரிட‌ம் இருந்து ப‌ரித்து, அவரது இரு பெண் குழந்தைகளின் கண் முன்பே அவ‌ரை பாலிய‌ல் துன்புறுத்த‌லுக்கு உட்ப‌டுத்தினார்க‌ள். (ச‌ல்வா சூடும் கால‌த்தில் அடிக்க‌டி வீட்டிற்கு தீ வைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெறத் தொட‌ங்கிய‌தால் இங்கு வாழும் பழ‌ங்குடிக‌ள் த‌ங்க‌ள் வாழ்நாள் சேமிப்புக‌ளான‌ த‌ங்க‌ ந‌கைக‌ளையும், ப‌ண‌த்தையும் எங்கு சென்றாலும் த‌ங்க‌ளுட‌னே எடுத்துச் செல்ல‌த்தொட‌ங்கினார்க‌ள்..இல்லையென்றால் அவையும் எரிந்து சாம்ப‌லாகிவிடும்)

அந்த‌ கிராம‌த்தில் உள்ள‌ 35 வீடுக‌ளிலுள்ள‌ பொருட்க‌ளையும் க‌ளவாடி, அங்கிருந்த‌ ம‌க்க‌ளை அடித்து துன்புறுத்திய‌ இரு அணிக‌ளும், கையில் தீக்குச்சி மற்றும் கல்லெண்ணெய்(petrol) மூலம் அந்த‌ கிராம‌த்தை எரித்து விட்டுச் சென்றார்க‌ள். விவ‌சாயியான‌ க‌ர்த்தி ல‌ச்சாவின் ம‌ண் குடிசை இத‌ற்கு முன்பே ஒருமுறை ச‌ல்வா சூடும் ப‌டையின‌ரால் 2006ல் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. இது இர‌ண்டாவ‌து முறை. “எத்த‌னை முறை தான் நான் என‌து குடிசையும் மீள‌க்க‌ட்டுவ‌து?, மீண்டும் அவ‌ர்க‌ள் வ‌ந்து என‌து குடிசையை கொளுத்த‌மாட்டார்க‌ள் என்ப‌து என்ன‌ நிச்ச‌ய‌ம் என்று?” அவ‌ர் கேட்கின்றார்.

அங்க‌ன்வாடி ப‌ணியாள‌ரான‌ சோடி சான்டோவின் குடிசையும் இதில் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ர‌து குடிசையில் தான் க‌ர்ப்பிணி பெண்க‌ளுக்காக‌ அர‌சினால் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் உண‌வுப் பொருட்க‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன. சோடி சாண்டோவின் குடிசை தான் இந்த கிராமத்திலிருந்த ஒரே அரச அலுவலகம்.  ப‌ள்ளிக்கூட‌ங்க‌ள், நியாய‌ விலைக் க‌டைக‌ள், குடி நீர் என்று எல்லா அடிப்ப‌டை தேவைக‌ளுக்கும் இவ‌ர்க‌ள் த‌ங்கள் கிராம‌த்திருந்து நெடுந்தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டியிருந்த‌து. மேலும் இது போன்ற‌ இட‌ங்க‌ளைச் சுற்றி ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டையின் முகாம்க‌ளும், காவ‌ல்துறை நிலையங்களும் இருந்த‌ன.

புதிதாக கட்டப்பட்ட இரண்டு ஆசிரம பள்ளிக்கூடங்கள் கூட இந்த கிராமத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன‌. சல்வா சூடுமினால் வனப்பகுதியின் உள்ளிருக்கும் கிராமங்கள் தீ வைத்து காலி செய்யப்படுவதற்கும், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகங்கள் முக்கிய சாலைகளின் அருகிலேயே அமைந்திருப்பதற்கும் தொடர்புகள் இல்லாமல் இல்லை. முதலில் அவர்களது இடங்களிலிருந்து பழங்குடி மக்களை விரட்டி காவல்துறை, மற்ற படைகளின் கண்காணிப்பிலேயே வைப்பது தான் அவர்களின் உத்தி.

பாதுகாப்பு ப‌டையினால் த‌ன‌து வீடு, சேமிப்பு மொத்த‌த்தையும் இழ‌ந்த‌ ரேவா கொசா
பாதுகாப்பு ப‌டையினால் த‌ன‌து வீடு, சேமிப்பு மொத்த‌த்தையும் இழ‌ந்த‌ ரேவா கொசா

மோர்ப‌ளி கிராம‌த்தை தீவைத்து கொளுத்திய‌ பின்ன‌ர் ஒரு குழு க‌ங்கா, ம‌ற்றும் அவ‌ர‌து இரண்டு பிள்ளைக‌‌ளையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள‌ சிந்த‌ல்ந‌ர் காவ‌ல்நிலைய‌ம் நோக்கி புற‌ப்ப‌ட்ட‌து. போகின்ற‌ வ‌ழியில் ப‌டையின‌ர் வ‌ண்டியை நிறுத்தி தாங்க‌ள் கொள்ளைய‌டித்து வ‌ந்திருந்த‌ 50 கோழிக‌ளையும்(இதில் இரண்டு கோழிகள் கங்காவிற்கு சொந்தமானவை) ச‌மைத்து உண்டு, பின் ஓய்வெடுத்த‌ பின்ன‌ரே சென்றார்க‌ள். காவ‌ல்துறை நிலைய‌த்தில் க‌ங்காவும், அவ‌ர‌து இர‌ண்டு பிள்ளைக‌ளும் சிற‌ப்பு கால்துறை அதிகாரிக‌ளால் மீண்டும் தாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். “ஏன் அங்கிருந்து ஓடினீர்கள்? என்று அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு, அவ‌ர் த‌ன‌து கிராம‌த்தில் ந‌ட‌ந்த‌ கொள்ளை, தீவைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அவ‌ர்க‌ளிட‌ம் கூறினார், ஆனால் அவ‌ர்க‌ள் ப‌திவு செய்த‌து என்ன‌வோ க‌ங்கா குடும்ப‌த்தின‌ரின் பெய‌ர்க‌ளை ம‌ட்டுமே.

இத‌ற்கிடையில் கங்காவின் 17வ‌ய‌து பெண்னை அருகிலிருந்த இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்க‌ள், அடுத்த‌ நாள் காலையில் கிழிந்து போன‌ உள்ளாடைக‌ளுடன் அரை நிர்வாணமாக‌ அவ‌ள் வெளியே வ‌ந்தாள். “அவ‌ளை அடித்து துன்புறுத்தி க‌ற்ப‌ழித்துள்ளார்க‌ள்” என்று கூறுகின்றார் க‌ங்கா. தெக‌ல்கா குழுவின‌ர் மோர்ப‌ளி கிராம‌த்திற்கு சென்ற‌ பொழுது அந்த‌ பெண் தனக்கு புதுத்துணிக‌ள் வாங்குவ‌த‌ற்காக‌ கூலி வேலை செய்ய‌ ஏற்க‌ன‌வே ஆந்திராவிற்கு சென்றிருந்தாள்.

மோர்ப‌ளியில் இருந்த‌ இர‌ண்டாவ‌து அணி அங்கிருந்து வ‌ன‌ப்ப‌குதியை சோத‌னை செய்ய‌ச் சென்ற‌ பொழுது 35 வ‌ய‌தான‌ ம‌த்வி உங்கி ம‌வுவா விதைக‌ளை பிரித்து வைத்துக்கொண்டிருந்தார், அவ‌ர‌து க‌ண‌வ‌ரான‌ ம‌த்வி சுக்கா (40 வயது) அருகிலுள்ள புளியமரத்தில் நன்றாக பழுத்திருந்த புளியங்காய்களை பறித்துக்கொண்டிருந்தார். அரசபடையின் காலணி சத்தத்தை கேட்ட உடனே மரத்தில் இருந்து கீழே இறங்கிய மத்வி சுக்கா இலைகள் அதிகமாக‌ இருந்த‌ டெண்டு ம‌ர‌த்தில் ஏறி ம‌றைந்து கொண்டார். ம‌த்வி உங்கி அங்கிருந்து ஓடி த‌ன‌து குடிசைக்குள் சென்று விட்டார். அவ‌ர‌து ஒரு வ‌ய‌து ம‌க‌ளை தூக்கி வைத்துக் கொண்டார். அவ‌ர‌து வீட்டிற்குள் புகுந்த அரச‌ப‌டையின‌ர் அவ‌ரை தாக்கி அவ‌ள‌து மேல்ச‌ட்டையை கிழித்துள்ளார்க‌ள்.

ப‌டையின‌ர் அங்கிருந்து ந‌க‌ர்ந்து செல்லும் போது துப்பாக்கி ச‌த்த‌ம் கேட்க‌, த‌ன‌து குடிசையில் இருந்து வெளியே த‌வ‌ழ்ந்த‌ ப‌டியே(நடக்க முடியாததால்) வ‌ந்த‌ உங்கி த‌ன‌து க‌ண‌வ‌ரை தேடி‌ச்சென்றார். அவ‌ர‌து க‌ண‌வ‌ர் இருந்த‌ இட‌த்தில் ஒரே இர‌த்த‌மாக‌ இருந்த‌து ஆனால் அவ‌ர‌து உட‌ல் அங்கில்லை, ச‌ற்று நிமிர்ந்து மேலே பார்த்தால் அவ‌ர‌து க‌ணவ‌ரின் உட‌ல் ம‌ர‌க்கிளைக்கு இடையில் குத்த‌ப்ப‌ட்டு தொங்கிக்கொண்டிருந்தது.  “இங்கே தான் பாதுகாப்பு‌ ப‌டையின‌ர் என‌து க‌ண‌வ‌ரை சுட்டுக் கொன்றார்க‌ள்” என்று ஒரு கால‌த்தில் தான் வ‌ழிப்ப‌ட்ட வந்த அந்த‌ ம‌ர‌த்தைக் நம்மிடம் காட்டுகின்றார்.

13 மார்ச், ம‌திய‌ம் 12 ம‌ணி, புத்தாம்ப‌டு கிராம‌ம்

அன்று ம‌திய‌ம் சிந்த‌ல்ந‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டைப்பிரிவு முகாமில் இருந்த‌ 300 பேர் திமாபுரை நோக்கி செல்ல‌த் தொட‌ங்கினார்க‌ள். அந்த‌ ப‌குதியில் மாவோவின‌ர் முகாம் அமைத்திருப்ப‌தாக‌ காவ‌ல்துறை த‌ர‌ப்பு கூறிய‌து. திமாபுர் செல்லும் வ‌ழியில் புத்தாம்ப‌டு கிராம‌த்தை அவ‌ர்க‌ள் சுற்றி வ‌ளைத்தார்க‌ள். ச‌ற்று தூர‌த்தில் அர‌ச‌ ப‌டையின‌ர் வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ அந்த‌ கிராம‌ ம‌க்க‌ள் ப‌ய‌த்தில் ஓட‌த் தொட‌ங்க, உடனடியாக‌ ப‌டையின‌ர் அவ‌ர்க‌ளை நோக்கி சுட‌த்தொட‌ங்கினார்க‌ள். இதில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌த்க‌ம் கித்மீ கூறுகையில் “அவ‌ர்க‌ள் என்னை கொன்று விட்டார்க‌ள் என்றே நினைத்தேன், ஆனால் ந‌ல்வாய்ப்பாக(luckily) அந்த‌ குண்டு என் காலில் பாய்ந்த‌த‌னால் நான் த‌ப்பித்தேன்”. இப்பொழுது அவர் தனது கால்க‌ளை இழுத்துக் கொண்டே காட்டிற்குள் செல்கின்றார். த‌லையில் டெண்டூ இலைக‌ளை ஒரு கூடையில் சும‌ந்து கொண்டும், காலில் துப்பாக்கி குண்டோடும் அவ‌ர் வாழ்ந்து வ‌ருகின்றார்.

ஆனால் கித்மீயைப் போல‌ ப‌த்சே பீமாவிற்கும்(வ‌ய‌து 40), ம‌ன்னு ராமிற்கும் ந‌ல்வாய்ப்பு கை கொடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் கைது செய்து அழைத்து கொண்டு ப‌டையின‌ர் திமாபுர் நோக்கி ப‌ய‌ணித்தார்க‌ள். த‌ன‌து க‌ண‌வ‌ன் பீமாவை விட்டு விடுமாறு அவ‌ர‌து ம‌னைவி ப‌த்சே ல‌க்மீ ப‌டையின‌ரிட‌ம் கெஞ்சினாள், இன்னும் ஒரு நாளில் அவ‌ரை விடுவித்து விடுவோம் என‌‌ ப‌டையின‌ர் அவ‌ருக்கு உறுதிய‌ளித்தார்க‌ள். ஆனால் இர‌ண்டு நாள் க‌ழித்து திமாபுரில் முழ‌ங்காலி‌டப‌ட்டு தொழுகை செய்யும் நிலையில் அவ‌ர‌து க‌ண‌வ‌ரின் உட‌லை இர‌த்த‌ வெள்ள‌த்தில் ம‌ட்டுமே ல‌க்மீயால் காண‌முடிந்த‌து. அப்போதும் கூட‌ அவ‌ர‌து க‌ண‌வ‌ரைக் கொன்ற‌ கோடாரி அவ‌ர‌து முதுகுப்ப‌குதியின் உள்ளே இருந்த‌து, அவ‌ர‌து கைக‌ளே ஒரு க‌யிற்றின் மூல‌மாக‌ பின்னால் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து.

13 மார்ச், மாலை 3 ம‌ணி, திமாபுர் கிராம‌ம்….

எரிந்து போன‌ தானிய‌ங்க‌ளிலிருந்து சில‌ ந‌ல்ல‌ தானிய‌ங்க‌ளை ம‌த்வி பிசேவும், அவ‌ர‌து குழ‌ந்தைக‌ளும் பிரித்தெடுக்கின்றார்க‌ள்.
எரிந்து போன‌ தானிய‌ங்க‌ளிலிருந்து சில‌ ந‌ல்ல‌ தானிய‌ங்க‌ளை ம‌த்வி பிசேவும், அவ‌ர‌து குழ‌ந்தைக‌ளும் பிரித்தெடுக்கின்றார்க‌ள்.

மாலை 3 ம‌ணிய‌ள‌வில் பாதுகாப்பு‌ ப‌டையின‌ர் திமாபுர் கிராம‌த்திற்குள் நுழைந்த‌ன‌ர். திமாபுர் கிராம‌ம் அர‌சினால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கிராம‌மாகும், ப‌ள்ளிக் கூட‌ங்க‌ள் கிடையாது, நியாய‌ விலைக் க‌டைக‌ள் கிடையாது, குடிநீர் வ‌ச‌தியும் கிடையாது. அங்கு இருந்த‌ ஒரு தொட‌க்க‌ப்ப‌ள்ளியும் ச‌ல்வா சூடும் தொட‌ங்கிய‌ பிற‌கு முற்றிலுமாக‌ செய‌ல்ப‌டுவ‌தில்லை (ச‌ல்வா சூடும் ப‌டையினரால் ஆசிரிய‌ர்க‌ள் யாரும் வ‌ன‌ப்ப‌குதிக்குள் நுழைய‌ வேண்டாம் என்று மிர‌ட்ட‌ப்ப‌ட்டார்க‌ள்)  மேலும் திமாபுர் கிராம‌த்திற்கு ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ரும் கிடையாது. முன்ன‌ர் ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ராக‌ இருந்த‌ ம‌த்க‌ம் ம‌சுகா இப்பொழுது தோர்ந‌ப‌ல் ப‌குதியில் உள்ள‌ ச‌ல்வா சூடும் முகாமில் உள்ளார். 2006ஆம் ஆண்டிற்கு பின்ன‌ர் எந்த‌ ஒரு ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ரும் இந்த‌ கிராம‌த்திற்கு வருவதும் கூட கிடையாது.

13 மார்ச் அன்று சில‌ குடிசைக‌ளை எரித்துக் கொண்டே அர‌ச‌ ப‌டை திமாபுர் கிராம‌த்திற்குள் மாவோவின‌ரையோ அல்ல‌து கிராம‌வாசிக‌ளையோ தேடிய‌ப‌டியே உள்ளே நுழைந்த‌து. ஆடுக‌ளும், கோழிக‌ளும் ம‌ட்டுமே அங்கிருந்த‌ உயிருள்ள‌ பொருட்க‌ளாகும். வ‌ழ‌மை போல‌வே அவ‌ற்றை கொன்று த‌ங்களின் இர‌வு உண‌வாக்கிக் கொண்டார்க‌ள். இர‌வு அவ‌ர்க‌ள் அங்கேயே த‌ங்கிவிட்டு, காலையில் அங்கிருந்து வெளியே செல்லும் வ‌ழியில்(2கிலோ மீட்ட‌ர் தொலைவில்) மாவோவின‌ரின் தாக்குத‌லுக்கு உள்ளானார்க‌ள்.
“அங்குள்ள‌ கிராம‌ங்க‌ளை பாதுகாக்க‌வே எங்க‌ள‌து ம‌க்க‌ள் விடுத‌லை க‌ர‌ந்த‌டி இராணுவ‌ம்(people liberation guerrills Army) அவ‌ர்க‌ளை தாக்கிய‌து” என்ற‌ கையெழுத்து பிர‌தி ஒன்று தெக‌ல்கா குழுவின‌ருக்கு வ‌ந்த‌து. இந்த‌ கையெழுத்து பிர‌தியின் கீழே – மாவோவிவ‌ன‌ரின் தெற்கு பாசுட‌ர் ப‌டையணியின் த‌லைமை அதிகாரி – வெங்க‌டேசு என்று கையொப்ப‌ம் இட‌ப்ப‌ட்டிருந்த‌து. மேலும் அந்த‌ அறிக்கையில் “க‌ல்லுரிக்கும்(மாநில‌ காவ‌ல்துறை த‌லைமை அதிகாரி) அவ‌ர‌து ப‌டைக‌ளுக்கும் இந்த‌ கிராம‌வாசிக‌ள் எப்பொழுது வேண்டுமானாலும் வேட்டையாட‌ப்ப‌டும் வ‌ன‌ மிருக‌ங்க‌ள் ஆகிவிட்டார்க‌ளா? எப்பொழுதெல்லாம் இவர்களில் எவர் ஒருவ‌ரை அவர்கள் பார்த்தாலும், அவ‌ரை தாக்கியோ, கொன்றோ, அல்ல‌து அவ‌ர‌து பொருட்க‌ளை கொள்ளைய‌டித்தோ செல்கின்றார்க‌ள். அர‌ச‌ நிர்வாக‌ம் ஆதிவாசிக‌ளுக்கான‌ அபிவிருத்தி(development) திட்ட‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசி வ‌ருகின்ற‌து. ஆனால் நீங்க‌ள் பார்த்துவ‌ரும் இந்த‌ கிராம‌வாசிக‌ள் ஆதிவாசிக‌ளைப் போல‌வா ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்?” என்று எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து.

மாவோவின‌ரின் தாக்குத‌லில் 3 “கோயா” அதிர‌டிப்ப‌டை அதிகாரிக‌ளும், 1 மாவோவின‌ரும் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள். இத‌ன் பின்ன‌ர் பாதுகாப்பு‌ ப‌டை மீண்டும் திமாபுர் கிராம‌த்திற்கு திரும்பிய‌து. அடுத்த‌ நாள் முழுவ‌தும் அங்கே த‌ங்கியிருந்த‌ ப‌டையின‌ர், 15 மார்ச் அதிகாலையில் கிராம‌த்தை விட்டு சிந்த‌ல்ந‌ர் நோக்கி புற‌ப்ப‌ட்டார்க‌ள். வ‌ழ‌மை போல‌வே அங்கிருந்த‌ 50 குடிசைக‌ளை தீவைத்து கொளுத்தி, தாங்க‌ள் கைது செய்து கொண்டு வ‌ந்த‌ ப‌த்சே பீமாவை அங்கேயே கொன்றுவிட்டு சென்றார்க‌ள். ம‌ன்னு ராமை அவ‌ர்க‌ள் தங்க‌ளுட‌னே சிந்த‌ல்ந‌ர் காவ‌ல்நிலைய‌த்திற்கு அழைத்துச் சென்றார்க‌ள்.

இர‌ண்டு நாட்க‌ளுக்கு பின்ன‌ர் த‌ன‌து க‌ண‌வ‌ரான ம‌ன்னு ராமைத் தேடி சிந்த‌ல்ந‌ர் வ‌ந்தார்‌ ம‌ங்க‌லி‌. “காவ‌ல்நிலைய‌த்திலிருந்து ஒரு நூறு மீட்ட‌ர் தொலைவில் ஒரு இர‌த்த‌ வெள்ள‌ம் ப‌டிந்திருந்த‌து” என‌ அவ‌ர் எ‌ம்மிட‌ம் கூறினார். அந்த‌ இட‌த்தில் தான் ம‌ன்னு சுட்டு கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ அங்கிருக்கும் கிராம‌வாசிகளும் கூறினார்க‌ள். காவ‌ல்துறை இந்த‌ தாக்குத‌லில் 35 ந‌க்ச‌ல்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌வும், ஒரு ந‌க்ச‌லின் உட‌ல் கிடைத்துள்ள‌தாக‌வும் கூறிய‌து. 35 ந‌க்ச‌ல்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை மாவோவின‌ர் ம‌றுத்துள்ளார்க‌ள். காவ‌ல்துறை கூறும் அந்த‌ ஒரு உட‌லும் க‌ண்டிப்பாக‌ ம‌ன்னு ராமுடையதாக‌‌த்தான் இருக்கும்.

16 மார்ச், காலை 5 ம‌ணி, த‌ர்ம‌த்லா கிராம‌ம்

எரிந்து, ப‌குதி இடிந்து போன‌ த‌ன் வீட்டினுள்ளே கோவசி அத்மா உட‌ன் அவ‌ர‌து ம‌னைவி
எரிந்து, ப‌குதி இடிந்து போன‌ த‌ன் வீட்டினுள்ளே கோவசி அத்மா உட‌ன் அவ‌ர‌து ம‌னைவி

நான்கு ப‌க்க‌மும் இருந்த‌ வ‌ருகின்ற‌ ப‌டையின‌ரின் ச‌த்த‌த்தை கேட்டு அந்த‌ கிராம‌ம் அன்று விழித்த‌து. “எப்ப‌டி நீங்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு த‌ங்குவ‌த‌ற்கு இட‌ம் கொடுக்க‌லாம்? எப்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு ச‌மைத்து கொடுத்தீர்க‌ள்? என்று ச‌த்த‌ம் போட்டு கொண்டே ப‌டை சீருடையும், க‌ருப்பு முக‌மூடியும் அணிந்த‌ ஒருவ‌ர் ம‌த்வி முக்காவை அவ‌ர‌து ம‌ண்குடிசையில் இருந்து வெளியே இழுத்து வ‌ந்தான். ம‌ற்றுமொரு ப‌டைக்குழு அவ‌ருக்கு பின்னால் தீக்குச்சிக‌ளோடு நின்று கொண்டிருந்த‌து, இன்னொரு ப‌டைய‌ணியோ தீயை ப‌ற்ற‌வைத்து ஒருபுற‌ம் எறிந்து கொண்டிருந்தார்க‌ள்.

ஓடி த‌ப்பிக்க‌ முடியாத‌வ‌ர்க‌ள் ப‌டையின‌ரிட‌ம் மாட்டிக்கொண்டார்க‌ள். அவ‌ர்க‌ளில் 30 வ‌ய‌தான் ஐம்லா சோகியும் ஒருவ‌ர். அவ‌ர்க‌ள் என்னை துப்பாக்கி முனையில் வைத்து வ‌ன‌ப்ப‌குதிக்குள் இழுத்துச்  சென்றார்க‌ள். ச‌ற்று தூர‌ம் சென்ற‌ பின்ன‌ர் அவ‌ரை துப்பாக்கியின் க‌ன‌மான‌ பின்புற‌ப்பகுதியின் மூல‌ம் அடித்து தாக்கி, க‌ற்ப‌ழித்துள்ளார்க‌ள். பலமாக தாக்கப்பட்டதினால் சில‌ நிமிட‌ங்க‌ளில்  அவ‌ர் ம‌ய‌ங்கியுள்ளார். அன்று ந‌ட‌ந்த‌தை அவ‌ர் நினைவு கூறுகையில் ஒருவ‌ர் க‌த்தியை எடுத்து அருகில் வ‌ந்த‌தாக‌வும் அதை வைத்து அவ‌ர் என்ன‌ செய்தார் என்று த‌ன‌க்கு நினைவில்லை என்றும் அவ‌ர் எ‌ம்மிட‌ம் கூறினார். ஆனால் அவ‌ர‌து க‌ண்ணிற்கு ச‌ற்று கீழே ஆழ‌மான‌ வெட்டுக்காய‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ரால் த‌ற்பொழுது ச‌ரியாக‌ பார்க்க‌ முடிவதில்லை. ம‌ய‌க்க‌ம் தெளிந்து ஒரும‌ணி நேர‌ம் க‌ழித்து அவ‌ர் எழுந்து பார்க்கும் பொழுது அவ‌ர் இடுப்பில் முடிந்து வைத்திருந்த‌ வாழ்நாள் சேமிப்பான‌ ரூ.8,000மும், த‌ங்க‌ காத‌ணிக‌ளும், மூக்குத்தியும் காணாம‌ல் போயிருந்த‌ன‌. மேலும் அவ‌ர‌து வீடும் தீக்கிரையாகி இருந்த‌து.

“நான் ம‌ய‌க்க‌ம‌டைந்து விட்ட‌தால் என்னை யார் க‌ற்ப‌ழித்தார்க‌ள் என்று என்னால் அடையாள‌ம் காட்ட இயலவில்லை, என‌க்கு நீதி கிடைக்க‌ வாய்ப்புள்ள‌தா?, என‌க்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்று நான் இந்த‌ உல‌க‌த்திற்கு கூற‌ வேண்டும், என்னை இந்த‌ நிலைக்கு உள்ளாக்கிய‌வ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டும்” என கூறுகின்றார் ஐம்லா சோகி.

இரண்டு ம‌ணி நேர‌த்திற்கு பிறகு த‌ர்மத்லா கிராம‌த்தை விட்டு பாதுகாப்பு ப‌டை வெளியேறிய‌து. அவ‌ர்க‌ள் செல்லும் போது த‌ர்ம‌த்லா கிராம‌வாசிக‌ளான‌ ம‌த்வா ஆன்டாவையும், ம‌த்வா ஐதாவையும் கயிற்றினால் க‌ட்டி த‌ங்க‌ளுட‌ன் இழுத்துச் சென்றார்க‌ள். இந்த‌ இர‌ண்டு ம‌ணி நேர‌த்தில் மொத்த‌ம் 207 குடிசைக‌ள் இடிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. ம‌த்வி முகா த‌ன‌து வீட்டிற்கு திரும்பி வ‌ந்த‌ பொழுது த‌ன‌து சில‌ லுங்கிக‌ளையும், வாழ்நாள் சேமிப்பான‌ ரூபாய், 2,000த்தையும், 60 அரிசி மூட்டைக‌ளையும், 20 விதை மூட்டைக‌ளும் கொண்டிருந்த‌ அந்த‌ வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டு குப்பை மேடாக‌ காட்சிய‌ளித்த‌து.

ஒரு வார‌த்திற்கு பின்ன‌ர் அர‌சு பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ளுக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்களான‌ அரிசி, ப‌ருப்பு போன்ற‌வைக‌ளும், எரிந்த குடிசைகளுக்கு ரூபாய். 3,000மும் அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. “இர‌ண்டு மாறுப‌ட்ட‌ அர‌சுக‌ள் இங்கு உள்ள‌ன‌வா? (ஒரு அர‌சு எங்க‌ள் வீடுக‌ளை இடித்து தீக்கிரைய‌க்குகின்ற‌து, ம‌ற்றொன்று நிவார‌ண‌மாக‌ அரிசியும், ப‌ண‌மும் கொடுக்கின்ற‌து), எப்ப‌டி இந்த‌ இர‌ண்டு அர‌சுக‌ளும் ஒன்றாக‌ இருக்க‌ முடியும்?” என்று விவ‌சாயியான‌ கௌவாசி அத்மா கேட்கின்றார்.

______________________________________________________________________________
செய்தி/படங்கள் – ந‌ன்றி : துசா மிட்ட‌ல், தெக‌ல்கா

மூல‌ம்: http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne160411Are.asp

மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!

61

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அல்ஜசிரா உட்பட உலக ஊடகங்கள் அனைத்தும் வரும் நாட்களில் இதையே பேசிக்கொண்டிருக்கும். சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற பின்னணியில் வந்திருக்கும் இந்த அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன? ஆப்கானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை பலிகொடுத்து, சில ஆயிரம் மக்களைக் கொன்று வரும் அமெரிக்க இராணுவம் அங்கே வெற்றியைப் பெறவில்லை. கூடவே வீரர்களை குவித்தும் நிலைமையை தக்கவைக்க முடியவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஈராக், ஆப்கான், போன்ற புதை குழியில் சிக்கியிருக்கும் அமெரிக்கா தற்போது லிபியாவிலும் ஆக்கிரமிக்கத் துவக்கியிருக்கிறது. தனது ஆக்கிரமிப்பு போர்களின் சிக்கலை தீர்ப்பதற்கு மேலும் மேலும் ஆக்கிரமிப்பு போர்களை அதிகரிப்பதே அதன் முன் உள்ள தீர்வு.

பின்லேடன் உள்ளிட்ட இசுலாமிய பயங்கரவாதம் என்பதை இறைவன் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காதான் தோற்றுவித்தது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை இந்தக் கட்டுரை வழங்குவதோடு எல்லா பயங்கரவாதங்களும் ஏகாதிபத்தியங்களாலும், உள்நாட்டு பிற்போக்கு அரசுகளாலும் பராமரிக்கப்படுவதையும் விளக்குகிறது. மதம் போர்த்தியிருக்கும் இந்த மாயத் திரையை அறுப்பதினூடாகத்தான் மூன்றால் உலக நாடுகளின் மக்கள் தங்களை சுரண்டி வரும் உள்நாட்டு, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும். பின்லேடன் மறைவு குறித்த செய்திகள், பின்னணிகள் முதலானவற்றை பொறுத்திருந்து பார்த்துவிட்டு விரிவான கட்டுரை வெளியிடுகிறோம். அதற்கு முன்னுரையாக இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு அடிப்படை புரிதலை ஏற்படுத்தும். பின்லேடனை பிடிப்பதற்காக ஆப்கனிலும், பாக்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போது பின்லேடன் கொல்லப்பட்டதனால் அந்த துயரம் குறைந்து விடுமா? இல்லை என்றுதானை தோன்றுகிறது.

பின்லேடனை வைத்து முசுலீம்கள் அனைவரும் பயங்கரவாதிகள், பாக்கிற்கு அடித்து விரட்டப்படவேண்டியவர்கள் என்று இந்துமதவெறியர்கள் ஏற்கனவே செய்து வந்த பிரச்சாரத்தை இப்போது வலுவுடன் செய்வாகள். ஆனால் பின்லேடனை விட பலமடங்கு ஆபத்தான இந்த இந்துத்வ பயங்கரவாதிகள் இந்தியாவில் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதனால் இவர்களை நாம் சட்டத்தின் மூலம் அல்ல உழைக்கும் மக்களை அணிதிரட்டித்தான் ஒழிக்க முடியும். அது குறித்தும் இந்தக்கட்டுரை விளக்குகிறது.

_______________________________________________________

பின்லேடன்
பின்லேடன் கொலை – படம் அல்ஜசீரா

ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பலவீனத்தை முதலீட்டாக்கி அரசியல் சூதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இசுலாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்காதான்.

வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தப் பாலைவன நாடுகளின் அரசியல் திசைவழியை ஏகாதிபத்திய நாடுகள் தமது நலனுக்கேற்ப அமைத்துக் கொண்டன. குறிப்பாக இங்கிலாந்தும், பின்னர் அமெரிக்காவும் அரபு நாடுகளின் எண்ணைய் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டு அதற்குத் தோதான பிற்போக்கு சக்திகளை நாடாள அனுமதித்தன.

அப்போது பரவிவந்த கம்யூனிச ‘அபாயத்திற்கு’ எதிராகவும், தேசிய விடுதலைப் போராட்டங்களை திசை திருப்புவதற்கும் அரபு நாடுகளின் இசுலாமிய மதவாதிகளை அமெரிக்கா ஆதரித்தது. இன்று வரை அரபு நாடுகளில் மன்னராட்சி தொடர்வதற்கும் முழு நாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஷேக்குகளின் கையில் இருப்பதற்கும் அமெரிக்க ஆதரவுதான் அடிப்படை. இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றி பாடம் நடத்தும் அமெரிக்கா சவுதி நாடுகளில் மட்டும் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியை சந்தர்ப்பவசமாக ஆதரிக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக ஷேக்குகள் பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் எண்ணெய் தொழில் நடத்துவதும், கிடைக்கும் அபரிதமான பணத்தை இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதும் என பரஸ்பரம் உறவு தொடர்கிறது.

உள்நாட்டில் எல்லாப் பிற்போக்குத்தனங்களையும் அமல் படுத்தும் ஷேக்குகள் சொந்த நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கு இசுலாத்தின் காவலர்களாக நடிக்கின்றனர். மதத்தின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு தமது செல்வத்தைக் காப்பாற்றும் இந்த ஷேக்குகள் உலகம் முழுவதும் இசுலாமிய மதவாத அமைப்புக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் புரவலர்களாகவும் இருக்கின்றனர். இசுலாமிய மதம் எந்த அளவுக்கு மக்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு இலாபமுண்டு என்பதை இவர்கள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். ஷேக்குகளின் கையிலிருக்கும் வரை அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை உறிஞ்சலாம் என்பதால் அமெரிக்காவும் இந்த அணுகுமுறையை அனுமதிக்கிறது.

இப்படித்தான் அரபுநாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகளும், ஜனநாயக சக்திகளும், தேசிய வாதிகளும் கொடுராமாக ஒடுக்கப்பட்டனர். மக்களின் விடுதலைப் பெருமூச்சை எழுப்பி விட்ட இச்சக்திகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் மதவாதத்தால் நிரப்பப்பட்டது.

ஈராக்கில் இப்படித்தான் கம்யூனிஸ்டுகளைக் கொடுரமாக அழித்துவிட்டு சதாம் உசேனின் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. வளைகுடா நாடுகளில் ஈராக்கை ஒரு வட்டார அடியாளாக உருவாக்கும் பொருட்டு அமெரிக்கா சதாம் உசேனை எல்லா வகையிலும் ஆதரித்தது. அதே காலத்தில் ஈரானில் ஷா மன்ன்னது சர்வாதிகார ஆட்சியையும் அமெரிக்கா ஆதரித்தது. மற்ற கட்சிகளெல்லாம் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்டதால் அமெரிக்க எதிர்ப்புக்கும் இசுலாமிய மதம்தான் பயன்படும் என்பதை கொமெனி புரிந்து கொண்டார். அப்படித்தான் ஈரானில் ஷா ஆட்சி தூக்கியெறியப்பட்டு கொமெனியின் தலைமையில் இசுலாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். இதனால் கொமெனியின் ஈரானைத் தாக்கி அழிக்க சதாம் உசேனை அமெரிக்கா பயன்படுத்தியது. அவருக்கு ஆயுத உதவியை அபரிதமாக வழங்கி ஈராக்- ஈரான் போரை அமெரிக்கா துவக்கியது. இருதரப்பிலும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இந்தப் போர் சில ஆண்டுகள் நீடித்தது. அமெரிக்கா வழங்கிய ரசாயன வாயுவின் மூலம் பல ஈரானிய வீரர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டதெல்லாம் பின்னாளில் அம்பலமாயின. அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இசுலாமிய மதவாதம் ஈரானில் மட்டும் அமெரிக்காவை எதிர்ப்பதாகக் கருக்கொள்ள ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் இசுரேல் உருவாக்கப்பட்டது. பின்னாளில் யூதவெறி இசுரேல் அரசால் பாலஸ்தீன மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மாறினர். மத்திய கிழக்கில் இசுரேலை ஒரு வலிமையான அடியாளாக உருவாக்குதற்கு தேவையான எல்லா உதவிகளையும் அமெரிக்கா அன்றும் செய்தது. இன்றும் செய்து வருகிறது. ஆரம்பத்தில் தமது தாயகத்திற்காக போராடத்துவங்கிய பாலஸ்தீன மக்களின் போராட்டத்தில் மதம் இருக்கவில்லை. பின்னாளில் துரோகமிழைத்த யாசர் அராபத்தின் பி.எல்.ஓ இயக்கம்கூட மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் அன்று போராடியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மதச்சார்பானதாக மாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வந்தது.

பாலஸ்தீன், ஈரான் இரண்டு நாடுகளிலும் மக்கள் மதத்தின் துணை கொண்டு அமெரிக்காவை எதிர்த்து வந்தாலும் மொத்தத்தில் இசுலாமிய மக்கள் மதத்தின் பால் கட்ட்டுண்டு கிடப்பது அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் இருந்த்து. மதத்தின் பெயரால் நடத்தப்படும் தேசிய விடுதலைப் போரட்டங்களையெல்லாம் தனிமைப் படுத்தி முடக்கவும், அதே மதம் பயன்படுகிறது என்பதால் மொத்தத்தில் அமெரிக்காவிற்கு இந்த மதவாத அணுகுமுறை ஆதாயமாகவே இருந்தது. அரபு ஷேக்குகளுடன் ஒரு புறமும், மறுபுறம் இசுரேல் எனவும் அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் சோவியத் யூனியன் என்ற சமூக ஏகாதிபத்தியம் ( சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம் ) 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அமெரிக்கா, சோவியத்யூனியன் இரண்டு நாடுகளும் அன்று கெடுபிடிப்போரின் உச்சத்தில் இருந்தன. உலக மேலாதிக்கத்திற்காக மறைவுக் கெடுபிடிப் போர்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. அன்று உலக நாடுகள் எந்தப் பிரச்சினையென்றாலும் இரண்டில் ஒன்றை சார்ந்து இருக்குமளவுக்கு பிரிந்திருந்தன. இப்படி ஆப்கானில் போலிக் கம்யூனிசம் நஜிபுல்லாவின் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சோவியத் யூனியனை அங்கிருந்து விரட்டுவதற்கு முயற்சிகளை ஆரம்பித்தது. பின்னர் 1989இல் சோவியத் யூனியன் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை அமெரிக்கா தன் முயற்சிகளை விடவில்லை.

ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர். முஜாகிதீன்களுக்கான ஆயத உதவி முதல் பணம் வரை எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாயின. அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் ஆசிய வானொலிச் சேவைகள் இந்தப் புனிதப் போருக்கான மதப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டன. இசுலாமிய நாடுகளிலிருந்து போராளிகள் மதத்தைக் காப்பாற்றுவதற்கென்றே இறக்குமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்.

இதற்கான மையமாக பாக்கிஸ்தான் பயன்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வேலைகளை பாக்கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் ஆணைக்கேற்ப ஒருங்கிணைத்தது. இந்த அடியாள் வேலைக்காகவே பாக்கின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழுமனதுடன் ஆதரித்தது. இன்றைக்கும் பாக்கின் ஜனநாயக அரசாங்கம் உண்மையான அதிகாரமின்றி பொம்மை ஆட்சி நடத்துமளவுக்கு இராணுவமும், உளவுத் துறையும் சூத்திரதாரிகளாக இருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கவின் ஆசிதான்.

பின்னர் ஆப்கானில் சில ஆயிரம் வீரர்களை பலிகொடுத்து சோவியத் யூனியன் தன் படைகளை விலக்கிக் கொண்டது. ஆதரவின்றி தத்தளித்த நஜிபுல்லா முஜாகிதீன்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலிருந்த ஆப்கானில் கல்வி, பெண்ணுரிமை, போன்ற நலத்திட்டங்களெல்லாம் அமல்படுத்தப்பட்ட போது அவை இசுலாத்திற்கு விரோதமென அமெரிக்காவால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்கள் அமெரிக்க ஆசியுடன் களத்தில் இறங்கினர். ஆப்கானில் இத்தகைய முட்டாள் மதவாதிகள் ஆட்சியிலிருப்பது தனக்குப் பல விதங்களில் உதவியாக இருக்குமென எதிர்பார்த்த அமெரிக்காவும் இதற்குத் துணைபுரிந்தது. மேலும் மத்திய ஆசியாவின் கனிம வளத்தை குறிப்பாக எண்ணெய் எரிவாயுவை குழாய் மூலம் ஆப்கான், பாக் வழியாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் தேவையை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் உணர்ந்திருந்தன. அந்த வகையில் ஆப்கானின் இருப்பிடம் செயல்தந்திர ரீதீயாக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.

ஆப்கானில் புகுந்த தாலிபான்கள் நஜிபுல்லாவைக் கொன்று தெருவில் தொங்கவிட்டனர். காட்டுமிரண்டித்தனமான ஒழுங்குகளெல்லாம் இசுலாத்தின் பெயரில் அமல்படுத்தப்பட்டன. பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது. புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அமெரிக்கா தாலிபானை கைவிடவில்லை என்பது இங்கே முக்கியம்.தாலிபானின் ஆட்சியை உலகநாடுகள் அங்கீகரிக்கவில்லையெனினும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி, பாக்கிஸ்தான் நாடுகள் மட்டும் அங்கீகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக தாலிபான் பிரதிநிதிகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அழைத்து வந்தன. ஆரம்பத்தில் முஜாகிதீன்களின் வருவாய்க்காக கஞ்சா உற்பத்தியை பெரும் பரப்பளவில் பயிரிடுவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் உதவியிருந்தது. ஏழை நாடான ஆப்கானில் தாலிபானின் முக்கிய வருவாயாக கஞ்சா உற்பத்தி திகழ்ந்தது. இதை மேற்குலகின் சந்தைக்கு கொண்டு செல்லத் தேவையான வழிகளையும் சி.ஐ.ஏ ஏற்படுத்திக் கொடுத்தது.

இக்காலத்தில் ருமைலா எண்ணெய் வயலின்மூலம் தனது எண்ணெய் வளத்தை குவைத் நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் உதவியோடு ஆக்கிரமிக்க  முயன்றதால் சினமடைந்த சதாம் உசேன் குவைத் மீது போர் தொடுத்தார். தான் வளர்த்த ஒரு சர்வாதிகாரி தனக்கே எதிராகத் திரும்பியதைக் கண்ட அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தது. சதாம் உசேனைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பொம்மை ஆட்சியைக் கொண்டு வர அமெரிக்கா எத்தணித்தது. ஏற்கனவே பாலஸ்தீன், ஈரான் பிரச்சினைகளில் இருந்த இசுலாத்தின் அமெரிக்க வெறுப்பு இப்போது ஈராக்கிற்கும் பரவியது. தான் உரமிட்டு வளர்த்த இசுலாமிய மதவாதம் தனக்கே எமனாகத் திரும்புமென அமெரிக்கா அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. சில அசட்டு மதவாதிகள் என்ன செய்துவிட முடியுமென மேற்குலகம் மெத்தனமாக இருந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த வரை அமெரிக்காவால் தோற்றுவித்து வளர்க்கப்பட்ட இசுலாமிய மதவாதம் அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிவந்தது. சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இருவரும் தமது நலன்களால் பிரிவுகொள்ளும் சூழ்நிலை வந்தது. முதல் வளைகுடாப் போரும், இசுரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் இசுலாமிய மக்களை சினம் கொள்ள வைத்தது. இந்தப் பின்னணியில்தான் பின்லேடனின் அல்கைதா தனது முன்னாள் ஏஜமானனை எதிரியாக அறிவித்து 90களின் பிற்பகுதியில் சில நாடுகளிலிருந்த அமெரிக்க தூதரகங்களை குண்டுவைத்துத் தாக்கியது. அமெரிக்காவின் கட்டளையோடு பாக்கின் பங்களிப்போடு உருவான தாலிபான்களும் அல்கைதா பக்கம் சாயத்துவங்கினர். சன்னி பிரிவின் கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்களை பாக்கின் இராணுவ அதிகார வர்க்கம் ஆதரித்து வந்தாலும் அமெரிக்காவை எதிரியாகக் கருதும் தாலிபான்களை மாற்ற முடியாமல் திணற ஆரம்பித்தது.

மதவாதிகளை அறிவுப்பூர்வமாக ஏமாற்ற முடியாமலும், உணர்ச்சிப் பூர்வமாக சமாளிக்க முடியாமலும் இருந்த நேரத்தில்தான் 2001 உலக வர்த்தக மையம் அல்கைதாவால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா என்பதையும் உத்திரவாதம் செய்ய முடியாது. இதை தெரிந்து வேண்டுமென்றே நடக்கவிட்டு மக்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவுடன் ஆப்கானையும், ஈராக்கையும் ஆக்கிரமிப்பதற்கென்றே கூட இது அனுமதிக்கப்பட்டிருக்கலாம். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என அறிவித்து இருநாடுகளையும் பின்னாளில் ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை இராணுவ பலத்தை அந்நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்க்கவேண்டும். இன்னொரு கோணத்தில் டாலரால் ஊட்டி வளர்க்கப்பட்ட இசுலாமியத் தீவிரவாதம் தனது தர்க்கபூர்வமான வளர்ச்சியில் சுயேச்சையாக அமெரிக்காவை எதிர்க்கும் இயல்பான நிலைக்கு வந்ததையும் மறுக்க முடியாது. அதே சமயம் இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளையும் அமெரிக்கா தனது நலனுக்காக பயன்படுத்துகிறது என்பதுதான் எல்லவற்றையும் விட முக்கியமானது. பின்லேடன் பிடிபடாத வரைக்கும் அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை பொன்முட்டையிடும் வாத்துதான். பிடிபட்டாலும் புதிய வாத்துக்கள் உருவாக்கப்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு தொடரும்.

இன்று ஈராக்கில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு சதாம் உசேனும் அமெரிக்க சதியால் தூக்கிலிடப்பட்டுவிட்டார். ஆப்கானிலும் அதே நிலைமை உருவாகிவிட்டது. ஆனாலும் போர் இன்னமும் முடியவில்லை. ஆப்கான் பாக் எல்லைப் பகுதியில் இருக்கும் அல்கைதா, தாலிபானை ஒடுக்குவதற்காக போரை தீவிரப்படுத்துவேன் என புதிய அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அடுத்தது ஈரான் அணுகுண்டு பூச்சாண்டி காட்டுவதாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் பட்டியலில் வருவதற்குக் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் இதுவரை அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்ட பாக்கிஸ்தானில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது.

இந்தியாவைப் போல அல்லது இன்னமும் அதிகமாக ஏழை நாடாக இருக்கும் பாக்கிஸ்தான் அமெரிக்காவின் சூதாட்டத்தில் ஏராளமாக இழந்திருக்கிறது. முதல்பலி ஜனநாயகம். பாக்கின் இராணுவ சர்வாதிகாரிகளை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரித்தற்கும் ஆப்கான் பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாகும். மேலும் முன்னர் இந்திரா காந்தி காலம் வரை இந்தியா சோவியத் முகாமில் இருந்ததால் அமெரிக்கா தனது இயல்பான கூட்டாளியாக பாக்கை மாற்றிவந்தது. சோவியத் ஆக்கிரமிப்பு இந்த உறவை உறுதி செய்தது. இதற்குப் பொருத்தமாக இராணுவ சர்வாதிகாரம் பாக்கில் நிலை கொண்டது. இராணுவ அதிகார வர்க்கமே பாக்கில் சொத்துக்களையும், தொழில்களையும் கையில் வைத்திருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான தேசபக்த உணர்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு இந்த இராணுவ சர்வாதிகாரிகள் செல்வத்தில் திளைத்தார்கள். பின்னர் முஜாகிதீன்களுக்காக மதரசாக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த ஏழை நாட்டின் மக்கள் மதவாத வெறிக்கும் பலியாகினர். இதற்கு முன்னர் இசுலாத்தில் மதவாதம் மட்டுமே இருந்தது என்றால் சி.ஐ.ஏ தயவில் உருவாக்கப்பட்ட இந்த மதரசாக்கள் இசுலாமிய கடுங்கோட்பாட்டு வாதத்தை முதன்முறையாக உருவாக்கின.

தாலிபான் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மதரசாக்களுக்கான அமெரிக்க, சவுதி புரவலர்கள் கையை விரித்தாலும் மதவாதம் வீறு கொண்டு எழும் வண்ணம் ஈராக், செசன்யா, காஷ்மீர், பாலஸ்தீனம், லெபனான் என பல தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களால் தீர்வு தடை செய்யப்பட்டிருக்கும் பிரச்சினைகள் உதவி செய்தன. மேலும் பாக்கின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை தனது அமெரிக்கா எஜமானின் உதவியோடு இந்த வேலைகளை இதுவரை செய்து வந்தவர்கள் இப்போது அதே வேலைகளுக்கு எதிராக செய்யவேண்டுமெனும்போது பிரச்சினை வருகிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பில் இப்பொது அமெரிக்க ஆதரவு, தாலிபான்-அல்கைதா ஆதரவு, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட காஷ்மீர் அமைப்பு ஆதரவு என பல குழுக்கள் பல போக்குகள் இருக்கின்றன. இராணுவமும் அதே மனநிலையில்தான் இருக்கிறது. ஆப்கான் பாக் எல்லையில் அமெரிக்காவின் கட்டளைக்கேற்ப இசுலாமிய தீவிரவாதிகளுக்கெதிராக போரிடும் பாக் இராணுவம் இதுவரை 2000 வீரர்களை இழந்திருக்கிறது. இந்தப் போரை தொடரும் மனநிலையில் துருப்புக்கள் இல்லை என்பதும் முக்கியம். பாக்கின் சிவில் அரசாங்கம் அமெரிக்காவின் கட்டளையை முழுமனதுடன் ஆதரித்தாலும் இராணுவமும், உளவுத் துறை அமைப்பும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இன்று பாக்கிஸ்தான் யார் கட்டுப்பாட்லும் இல்லை என்று சொன்னால் மிகையல்ல.

மதவாதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாட்டில் இன்று அதே மதவாதத்தை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வது? பாக்கின் ஆளும்வர்க்கம் அமெரிக்காவின் அடிவருடி என்பதால் அவர்களையும் இந்த மதத் தீவிரவாதிகள் தாக்கத்தான் செய்கிறார்கள். பெனாசிர் புட்டோ முதல் பலரும் அதில் பலியாயிருக்கிறார்கள். ஜூலை 2007 முதல் இன்று வரை பாக்கில் நடந்த நூற்றுக்கணக்கான தற்கொலைத் தாக்குதலில் 1200பேர் இறந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்தியாவை விட இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம்பேரை பலி கொடுத்திருப்பது பாக்கிஸ்தான்தான். இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா பாக்கிலும் தடை செய்யப்பட்ட இயக்கம்தான். இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளும் மசூரின் ஜெய்ஷி முகம்மது இயக்கம் பாக்கிலும் ஆட்சியாளர்களைக் குறிவைத்து பல தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. இப்படி ஏகாதிபத்தித்தினாலும், மதத் தீவிரவாதத்தினாலும் நெருக்கடியின் உச்சத்திலிருக்கும் ஒரு நாட்டிலிருந்ததுதான் மும்பைத் தாக்குதலுக்கான குழு வந்திருக்கிறது.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றது. ஆப்கான் எல்லையில் போரிடும் பாக்கின் இராணுவத்தை விடுவிக்கவேண்டுமென  பாக் இராணுவத்திலும், ஐ.எஸ்.ஐ யிலும் சிலர் நினைத்திருக்கலாம். அவர்களே அப்படி நினைக்காவிட்டாலும்  இந்தியாவுக்கும் பாக்கிற்கும் ஒரு பதட்டத்தை தோற்றுவித்தால் தங்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாக் இராணுவத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறலாம் என்று இசுலாமியத் தீவிரவாதிகள் நினைத்திருக்கலாம். இதை காஷ்மீருக்காக போராடும் சில மதவாதக் குழுக்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அமெரிக்காவே இந்தத் தாக்குதலை தெரிந்திருந்தும் அனுமதித்து அதன்மூலம் தனது பயங்கரவாத எதிர்ப்பு போருக்கு இந்தியவை இன்னமும் அதிகமாக பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கலாம். ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் சிக்கியிருக்கும் உலகில் எல்லாப் பிரச்சினைகளும் நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிமையாக புறத்தோற்றத்தில் இருப்பதில்லை. நண்பன் யார், எதிரி யார், காரணம் எது, விளைவு என்ன, என்பதெல்லாம் இங்கு சுலபமாகத் தெரிவதில்லை.

இன்று இந்தியா பாக் மீது போர் தொடுக்க வேண்டுமென சில ‘தேசபக்தர்கள்’ வலியுறுத்துகிறார்கள். பாக்கிலிருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும் அப்படித்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் வரும் பட்சத்தில் இருநாட்டு மக்களும் அடையப்போகும் அழிவிற்கு முன்னால் இது ஒரு அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று பாக்கிலிருக்கும் அணு ஆயுதத்தின் மீது யாருக்கு கட்டுப்பாடு இருக்கிறது என்பதை அறுதியிட முடியாது. எனவே பாக்கிஸ்தானை போரிலிருந்து தவிர்ப்பதற்கு யாரையும் விட இந்தியாவுக்குத்தான் அவசியம் அதிகமிருக்கிறது. இரு நாட்டு தேசபக்தி வெறியை கிளறி விட்டு இருநாடுகளுக்கும் ஆயுதம் விற்று இலாபம் பார்த்திருக்கும் அமெரிக்காவும் இத்தகைய போர் அபாயத்தை கட்டுப்படுத்தும் வழியை யோசிப்பதை விட அதனால் கிடைக்கும் ஆதாயத்தையே முதன்மையாக வைத்து செயல்படுகிறது. இந்தியாவின் பதட்டத்தை தணிப்பதும், பாக்கை கட்டுப்படுத்துவதும் அவர்கள் இதன் பொருட்டே செய்கிறார்கள். இந்த குழப்பமான நிலையை அமெரிக்க எதிர்பப்பிற்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதே இசுலாமிய தீவிரவாதிகளின் நிலை. இத்தகைய சதிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த காலத்தில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சிக்கிக் கொண்டிருப்பது இன்றைய காலத்தின் அவலம்.

இசுலாமிய பயங்கரவாதத்தை இசுலாமிய மக்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவே செய்கிறார்கள். ஆனால் அம்மக்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் மதவாதிகள், அவர்கள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பவர்களாக இருந்தாலும் மதவாதம் என்ற முறையில் சித்தாந்தம் என்ற நிலையில் பயங்கரவாதிகளோடு ஒன்றுபடவே செய்கிறார்கள். உலகம் முழுவதும் இசுலாத்தின் ஆட்சி வரப்போவதாகவும், ஷரியத்தின் சட்ட ஒழுங்கில்தான் உலகம் அமைதி பெறமுடியுமென்றும், மனித குலத்திற்கு இசுலாம் மட்டுமே விடுதலை அளிக்கப் போவதாகவும் நம்புகிறார்கள். இதை காந்திய வழியில் செய்வதா, அல்கைதா வழியில் செய்வதா என்பதில்தான் வேறுபாடு. ஆனால் இந்த மதப்புனிதம் இசுலாம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நிலவியதில்லை என்பதோடு இனியும் நிலவ முடியாது என்பதுதான் உண்மை.

ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது. அதை வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித குலப்பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பது அடி முட்டாள்தனம். அது இசுலாமிய மக்களுக்கு எந்த விடுதலையையும் வழங்க முடியாது என்பதோடு அவர்களது அவல வாழ்க்கையை மதம் என்ற உணர்ச்சியில் மூழ்கடிப்பதற்குத்தான் பயன்படும். அதைத்தான அரபு ஷேக்குகளும், இசுலாமிய நாடுகளிலிருக்கும் ஆளும் வர்க்கங்களும் செய்து வருகிறார்கள். மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.

இசுலாமிய நாடுகள் பல இருந்தாலும் அவை மதத்தான் ஒரு சகோதர உணர்வைப் பெறவில்லை. இனம், மொழி, இன்னும் பல பிரிவினைகளோடுதான் இசுலாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஷியா, சன்னி மதப் பிரிவுகள் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் பல நூறு மக்கள் இன்றும் கொல்லப்பட்டுத்தான் வருகின்றனர். ஈரான், ஈராக் போர் இசுலாமிய சகோதரவத்துவத்தால் நடை பெறாமல் போகவில்லை. ஈராக் முசுலீம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவையான எல்லா வசதிகளையும் முசுலாம் நாடுகளான சவுதியும், குவைத்தும்தான் செய்து வருகிறது. அரபு மன்னர்களும், ஷேக்குகளும் தமது நாட்டு செல்வத்தை அமெரிக்காவில்தான் முதலீடு செய்திருக்கின்றனர். அப்பாவிப் பெண்களை பர்தா போடவில்லையென்றால் தண்டிக்க வேண்டும் என்று வாதாடும் மதவாதிகள் எல்லா ஒழுக்கக்கேடுகளையும் வைத்துக் கொண்டு வாழும் ஷேக்குகளை கண்டிப்பதில்லை. தஸ்லிமா நஸ்ரீன் என்ற பெண்ணிற்கு எதிராக வாளைச் சுழற்றும் மதவாதிகள் எவரும் இந்த ஷேக்குகளுக்கு எதிராக பத்வாவைப் பிறப்பிக்கவில்லை.

பிலிப்பைன்சைச் சேர்ந்த சிறுமி சாரா தன்னை பாலியல் வன்முறை செய்த கிழட்டு ஷேக்கை தற்காப்பிற்காகக் கொன்றபோது அவளுக்கு மரணதண்டனை வழங்கியதுதான் ஷரியத்தின் இலட்சணம். ஐதராபாத்தைச் சேர்ந்த ஆமினாவைப் போன்ற ஏழைச்சிறுமிகளை பலதாரமுறை என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு கடத்துவதுதான் இசுலாம் வழங்கியிருக்கும் மதச்சுதந்திரம். ஷாபானு என்ற முதிய பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்று போராடியதுதான் இந்தியாவின் இசுலாமிய மதவாதிகளின் உரிமையாக அறியப்பட்டது. சாரத்தில் ஏழைகளுக்கும், பெண்களுக்கும் இசுலாமிய மதவாதிகள் செய்திருக்கும் அநீதிகள் பல. ஏழை இசுலாமிய நாடுகளிலிருக்கும் வறிய மக்களின் வர்க்க கோரிக்கைகளுக்காக தமது சுண்டு விரலைக்கூட அசைத்திராத இந்த வீரர்கள்தான் மதம் என்ற பெயரில் இன்றைக்கும் பல பிற்போக்குத்தனங்களுக்காக போராடுகிறார்கள். இசுலாமிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்த அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போராடும்போதுதான் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக போராடும் வல்லமையை அவர்கள் பெற முடியும். கண்மூடித்தனமான பயங்கரவாதத்திற்கு சலிக்காமல் சப்ளை செய்யும் இளைஞர்களை தடுப்பதும் அப்போதுதான் சாத்தியம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள் என்று பலரும் இருக்கின்றனர். ஆனால் இசுலாமிய மக்கள் மட்டும்தான் மதத்தின் பெயராலும் எதிர்க்கின்றனர். இது நிச்சயமாக ஆரோக்கியமான போக்கல்ல, அதற்கான அடிப்படையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியிருந்த போதும். ஏனெனில் பாலஸ்தீன், ஈராக், காஷ்மீர் போராட்டங்களெல்லாம் தேசிய இனப் போராட்டங்களாகத்தான் இன்னமும் இருந்து வருகிறது. அவற்றை மதம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதால் அந்தப் பலனை ஏகாதிபத்தியங்கள்தான் அடைகின்றனவே தவிர இசுலாமிய மக்களல்ல. மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலினால் இசுலாம் மட்டுமல்ல பல மதங்களைச்சேர்ந்த மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களை வர்க்க உணர்வுதான் இணைக்கவேண்டுமே ஒழிய மதம் அல்ல. அப்படி மதத்தால் பிரிக்கப்பட்டால் நாம் போராடுவதற்கான தோழமைகளை இழந்து போகிறோம் என்பதுதான் கண்ட பலன்.

இசுலாமிய மக்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அவர்கள் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுவதும், வாடகைக்கு வீடு கூட கிடைக்காது என்ற நிலையில் சமூக வாழ்க்கையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல என்றாலும் அப்போதும் அவர்கள் மதவாதத்திலிருந்து விலகி இருக்கவேண்டும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம். மசூதிக்கு செல்வதும், அல்லாவைத் தொழுவதும் நமக்குள்ள தனிப்பட்ட உரிமைகள், அதைத்தாண்டி நமது சமூக வாழ்க்கைக்கு அந்த உரிமைகளை பயன்படுத்துவதில் பலனில்லை என்பதையே இசுலாமிய மக்கள் உணரவேண்டும். இந்த விதி இசுலாத்திற்கு மட்டுமல்ல எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்.

மும்பைத் தாக்குதலைச் செய்த பயங்கரவாதிகளை வினவு கண்டிக்கவில்லை என சில நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தார்கள். வினவு நிச்சயாமாகக் கண்டிக்கிறது. ஆனால் நமது கண்டிப்பு அம்புகளுக்கு மட்டுமல்ல அவற்றை எய்த கைகளுக்கும் சேர்த்தே போகவேண்டும். அந்தக் கைகளில் அமெரிக்காவின் கையே முக்கியமானது என்பதை இந்தத் தொடரின் மூலமாக இயன்ற அளவு விளக்கியிருக்கிறோம். இந்தியாவில் இருப்பவர்கள் முக்கியமாக இந்து மதவெறியர்களை கண்டிப்பதும், காஷ்மீர் போராட்டத்தினை ஆதரிப்பதும் செய்யும்போதுதான் இசுலாமிய பயங்கரவாதத்தையும் கண்டிக்க முடியும். முன்னதை தவிர்த்துவிட்டு பின்னதை மட்டும் கண்டிப்பதில் பயனில்லை. அது வெறுமனே தேசபக்தி என்ற பெயரில் இந்திய ஆளும்வர்க்கங்கள் உருவாக்கும் மற்றொரு மதவாதம்தான்.

மும்பைத் தாக்குதலினால் இசுலாமிய பயங்கரவாதிகள் மக்களைக் கொன்றது போக பல தீங்குகளை நாட்டு மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். காஷ்மீரில் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் மீண்டும் மக்களை அணிதிரட்டி வளர்ந்து வரும் நிலையில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் அதைக் கொச்சைப் படுத்தி அவதூறு செய்கிறது. ஏற்கனவே இனப்படுகொலை செய்யும் இந்துமதவெறியர்களின் பாசிச வேட்கையையும் அதற்கான நியாயத்தையும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் இலவசமாக வழங்கியிருக்கிறது. பொடாவை விட அதிக அடக்குமுறைகள் கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. இனி சிறுபான்மை மக்களும், இந்திய அரசை எதிர்த்துப் போராடும் புரட்சிகர அமைப்புகளும் இந்த சட்டத்தால் கேள்வி முறையின்றி வேட்டையாடப்படுவார்கள். ஈழத்திற்காக குரல் கொடுப்பவர்களைக்கூட இந்தச் சட்டப்பிரிவின் மூலம் ஒடுக்க முடியும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கச் சுரண்டல்களுக்கெதிராக போராடும் உலக மக்களின் அரசியலை பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் மூழ்கடித்து திசைதிருப்புகிறது.

இந்தியாவில் இந்துத்வமும், பாக்கில் இசுலாமிய அடிப்படைவாதமும் பாரிய அளவில் தீங்கிழைத்திருக்கின்றன. இரு நாட்டு மக்களும் இந்த இரு அடிப்படைவாதங்களையும் எதிர்த்துப் போராடும்போதுதான் இந்தியத் துணைகண்டத்தில் நடக்கும், நடைபெறப்போகும் பயங்கரவாதங்களை தடுக்கமுடியும். இந்த போராட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேறுகிறோமோ அந்த அளவு அமெரிக்கா நடத்தும் ஆக்கிரமிப்பு சூதாட்டங்களையும் தடுக்க முடியும். மதத்தை வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்திவரும் பதிலிப்போரிலிருந்து நாம் விடுபடுதோடு உண்மையான வர்க்கப் போரை அறிவிக்கவும் முடியும். இவை எதுவும் நிறைவேற முடியாத கனவல்ல. ஏனெனில் இறுதியில் நம் செயல்பாட்டை மதம் தீர்மானிப்பதில்லை, நம் சமூக வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது. அந்த உண்மையிலிருந்து கற்றுக்கொண்டு இந்துத்வப் பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க பயங்கரவாதம் என எல்லா பயங்கரவாதங்களையும் எதிர்த்துப் போராடுவோம்.

___________________________________________________________________________________________________

மும்பை 26/11 தாக்குதலை ஒட்டி வினவில் வெளிவந்த தொடர் கட்டுரையின் இறுதிப்பகுதி (முதல் பதிப்பு 18-12-2008 )
___________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மும்பை 26/11


மே நாள் சிலிர்க்கும்!

வர்க்கமாய் உணர்தலே
உயர்திணை…
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.

சங்கமாய் திரள்வதே சரிநிலை
வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை

ஈழமோ, காசுமீரோ
இந்திய மேலாதிக்கக் கொடுங்கொலை…
சிக்காகோவோ, சிங்கூரோ
உரிமைக் கேட்டால் படுகொலை…

நமைச்சுற்றி பகை வர்க்கம்
உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து! அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!

எதற்கெடுத்தாலும், “எனக்கு நேரமில்லை
இந்தப் புரட்சி… இயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல்… கோஷமிடுதல் ஒத்து வராது…
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது”
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!

கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்,
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி,
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு!
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்!

உணவுக் கூடத்திலும்
உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் சூப்பர்வைசர்,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
பணிநீக்கும் அதிகாரம்,
புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி

இத்தனைக்கும் மத்தியில்
ஆங்கே… ஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!

உயிரைக்கொடுத்துப் போராடி
மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.

உழைப்பை கூலிக்கு விற்பதையே
எதிர்த்தவர்கள் அவர்கள் – இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார்,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார்.
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது!

மேநாளின் இலக்கு,
எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.

மேநாளின் சிறப்பு,
நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்…

செய்! மேநாள் சிலிர்க்கும்…

_______________________________________________

– துரை.சண்முகம்.
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா?

ம், நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் “உலகக் கோப்பை” தொலையட்டும், அதற்கான விழாக்கள் தொலையட்டும், அரசுகளால் அந்த வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும் இலவச நிலங்களும், கோடிக்கணக்கான ரூபாய்களும் தொலையட்டும், ஏன்? இந்த “விழாக்கள்” நடக்கிற இடத்திலிருந்து சில கி.மீ தூரங்களில் எனது உணவுக்கு வழிவகுக்கும் உழவர்கள் மாண்டு கொண்டிருக்கும் போது, நான் எப்படி காலன் கணக்கில் பீரும், மதுவும் அருந்திக் கொண்டு குதியாட்டம் போட முடியும்.

உங்களுக்குத் தெரியுமா, 9 சதவீத வளர்ச்சியுடன் அடுத்த பொருளாதார வளர்ந்த நாடு என்று புகழப்படும், இந்த மிளிரும் நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக  47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது.

கடந்த மாதம், மார்ச் 5-ம் நாள், வெள்ளிக்கிழமை மாலை பெங்களூருவின் நீர் நிரம்ப வேண்டிய இடங்களிலெல்லாம் வழிந்து கொண்டிருக்கும் போது, காதைச் செவிடாக்கும் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் வானை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, ஆடம்பர விடுதிகளில், பாரிஸ்டாசில் உட்கார்ந்து கொண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் சந்தர்ப்பத்தை பற்றி சுவாரசியமாய் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அதே பெங்களூருவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் சுவாமிகவுடா, வசந்தம்மா என்ற விவசாய ஜோடிகள் அவர்களது இரண்டு குழந்தைகளை நிற்கதியாய் விட்டுவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஏன் அவர்கள் இதைச் செய்தார்கள்?  அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்களா? இல்லை. அவர்கள் குடிகாரர்களா? இல்லை. அவர்களுக்கு தீராத வியாதியா? இல்லை. பிறகு ஏன்? ரூ  80 ஆயிரம் கடன் வாங்கியது சிறிது சிறிதாக கூடி ஒரு லட்சத்தி இருபதாயிரம் வரை உயர்ந்த கடனாகக் கட்ட இயலாமல் போனதே காரணம் (இது கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு ஜோடியின் ஒரு மாத ஊதியம், அவர்கள் 2 அல்லது 3 மாதங்கள் கடனுக்கு கட்டும் மாத தவணை)

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் அந்தக் கடனை தங்களால் எப்போதும் திரும்பக் கட்ட இயலாது என்று, அவர்கள் பாதிப்பிற்குள்ளானார்கள்.  அரசாங்கத்தாலும் பாதிப்படையச் செய்யப்பட்டார்கள்.  30 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு (பட்டு) சில்க்-ற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்தது இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்.  அவர்கள் ஏற்கனவே நலிந்து போன பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள்.  இந்த இறக்குமதி வரிச் சலுகையால் சீனாவிலிருந்து மலிந்த விலைக்கு பட்டு முதலான பொருட்கள் நமது நாட்டின் சந்தையில் வந்து குவியும், நமது விவசாயிகள் நிற்கதியாய் நிற்பார்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  உங்களால் நம்ப முடிகிறதா? நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த உண்மை தெரியாது. ஏன்? உலகத்திலேயே மிகப்பெரிய ஊடகம் என்று போற்றப்படும், இந்தியாவின் ஊடகங்கள் இத்தகைய தகவல்களை கொடுப்பதில், சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.  ஏனென்றால் அவர்கள் கேளிக்கை விடுதிகளிலும், அரங்குகளிலும், ஆடம்பர அரங்கேற்றங்களிலும், கேளிக்கை களிலும்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.  பாகிஸ்தான் அணி விளையாட்டு தொடர் ஆரம்பிக்க உள்ள நாளுக்கு முதல்நாள் வேர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்யும் போது, ஏன் நமது நாட்டு வீரர்கள் அவ்வாறு பயிற்சி செய்யவில்லை என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் “பூனம் பாண்டே” (விளம்பர மாடல்) மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஊடகங்கள் சனநாயகத்தின் மூன்றாவது கண் என்பார்கள்.  சனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள்? ஆனால், இங்கோ ஊடகங்கள் “தரகர்களாக” மாறிவிட்டன, சுத்தமான வியாபாரம்.

எனவே ஊடகங்கள்  மூலம் இத்தகைய சாவுகளை தெரிந்து கொள்வது சாத்தியமற்றது.  பிறகு யார் இருக்கிறார்கள்?  அரசாங்கம் செய்யுமா?  ஆனால் நமக்கெல்லாம் தெரியும் அரசாங்கம் எப்படி செயல்படுகிறதென்று.

பிறிதொருநாள் நான் பெங்களூருவின் விஞ்ஞான் சபா (சட்டசபை) பக்கம் கடந்து போக வேண்டியிருந்தது. அங்கே நான் வாசித்த ஒரு வார்த்தை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.  அங்கே ஓரிடத்தில் “அரசாங்கத்தின் வேலை ஆண்டவன் வேலை” என்று எழுதப்பட்டிருந்தது.  அப்போதுதான் புரிந்தது அரசாங்கம் தங்களது எல்லாப் பணிகளையும் ஆண்டவனிடத்தில் விட்டு விட்டார்கள் என்பது.

கர்நாடக முதல்வர் திருவாளர் எடியூரப்பா அனைத்து வீரர்களுக்கும் நிலம் பரிசாக வழங்கப் போவதாக அறிவித்தார்.  ஆனால் நிலம் எங்கே?  பெங்களூரிலேயேவா? திருவாளர் முதலமைச்சரை நீங்கள் கேலியாக பார்க்கிறீர்கள்.  உடனே திருவாளர் முதலமைச்சர் தனது முடிவை மாற்றிக் கொண்டு பணமாக கொடுக்க தீர்மானிக்கிறார்.  ஆனால், அதுவும் எங்கிருந்து வரும்?  உங்களது, எனது வரிதான் உள்ளதே.  ஏற்கனவே கோடிக் கணக்கில் பணம் ஈட்டும் அந்த கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும், அதிகம் பணத் தேவையில் பாடுபடுபவர்கள் இந்த ஏழை விவசாயிகள் இல்லையா?

அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி நீங்கள் ஒரு “மெர்சிடீஸ் பென்ஸ்” கார் வாங்க கடன் கேட்டால் 6 சதவீத வட்டிக்கு கடன் கொடுப்பார்கள்.  ஆனால் அதே வங்கியில் ஒரு விவசாயி டிராக்டர் வாங்க கடன் கேட்டால் வங்கி எவ்வளவு வட்டி கேட்கும் தெரியுமா? 15 சதவீதம்.  ஏற்றத் தாழ்வின் ஆழத்தைப் பாருங்கள்.  தண்ணீர் பாட்டில் ரூ15-க்கு விற்கப்படும் போது, செல்போனின் சிம் கார்டு இலவசமாக கொடுக்கப்படுகிறது.  இனி எவ்வளவு காலத்திற்குத்தான் நமக்கு உணவளிக்கும் உழவர்களின் கையைக் கடிக்கப் போகிறோம்.  சமீபத்தில் வெங்காய விலை ஒரு உதாரணம்.

2008ல் லக்மே இந்தியா ஒரு அலங்கார காட்சி ஒன்றை மும்பையில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தியது.  அதில் 500 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.  அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பொருள் “பருத்தி”.  இந்த ஆடம்பர ஹோட்டலிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள இடங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 லிருந்து 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  எத்தனை தொலைக்காட்சி நிருபர்கள் இதைப் படம் பிடித்திருப்பார்கள்?  ஒருவருமில்லை.

60 சதவீததத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் ஒரு நாளைக்கு ரூ 20-ல் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளனர்.  டயட் என்ற நாம் அருந்தும் ஒரு கோக் பானத்தின் விலை அவர்களது ஒரு நாளைய வாழ்க்கை.  ஒரு நாள் இரவு-பகல் கிரிக்கெட் ஆட்டத்திற்கு செலவிடப்படும் மின்சாரம், விவசாயி பல வாரங்களுக்கு பயன்படுத்த போதுமானது.  உங்களுக்கு ஒன்று தெரியுமா?  மின்சார நிறுத்தம் கூட வர்க்க நலன் சார்ந்ததாக உள்ளது. பெரும் நகரங்களுக்கு 2 மணிநேரம், சிறு நகரங்களுக்கு 4 மணிநேரம், கிராமங்களுக்கோ 8 மணி நேரம், இப்போது யாருக்கு அதிக மின்சாரம் தேவைப் படுகிறது.  இரவு பகலாக தனது மோட்டாரை இயக்கி, நீர் பாய்ச்சி பயிர் வளர்க்கும் விவசாயிக்கா, இலகுவாக கிடைக்கும் வருமானத்தை செலவு செய்து கணினியில் இந்திய லீக் கிரிக்கெட் பார்க்கும் சில மேற்குடி அலுவலர்களுக்கா?

நமது பிறந்த நாள் விழாக்களில் எத்தனை ஆயிரம் ரூபாய்களை வாரி இறைக்கிறோம்.  குளிர் சாதனம் பொருத்தப்பட்ட கார்களில் அங்கும் இங்கும் பறக்கிறோம்.  வார இறுதியில் கூர்க்கு (மலைவாழ் சுற்றுலாத்தலம்) செல்ல நமது குளிரூட்டப்பட்ட அறைகளில் மெத்தை போன்ற சோபாக்களில் அமர்ந்து கொண்டே திட்டமிடும் போது, அந்த வழியாக போகும் போது, அதற்கு மிக அருகில் உள்ள கிராமங்களில் ரூ 10 ஆயிரம் கடனுக்காக விவசாயிகள் பூச்சி மருந்து குடித்தோ, தூக்கில் தொங்கியோ தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்களே அது குறித்து நாம் எண்ணியதுண்டா?

பன்றிக் காய்ச்சல் வந்த போது ஒரே அமளி, ஆர்ப்பாட்டம்.  ஒவ்வொரு இறப்பும், ஒவ்வொரு நிமிடமும், ஊடகங்களில் காட்டப்பட்டது, ஏன்?  ஏனென்றால் இந்த நோய் அபரிமித மாத வருமானம் வாங்கும் கணணி பொறியாளர்களை, மத்திய தர வர்க்கத்தினரை நேரடியாகத் தாக்கியதே காரணம். அங்கே உடனே முக்கியத்துவம் வந்தது.  நிவாரண முகாம்கள் தோன்றியது.  அரசாஙகத்தாலேயே விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டது இந்த வர்க்கத்தினரை திருப்திப் படுத்துவதற்காக. ஆனால் மறுபுறம், ஒவ்வொரு நாளும் 47 பேர் கடந்த 15 ஆண்டுகளாக மடிந்து வருகிறார்கள்.  யாராவது இதைத் தடுக்கவோ, அதைப்பற்றி கவலைப்படுவதோ இல்லை ஏன்?

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதத்திற்குள் அவனது மனைவி தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் குடித்து மடிவது அல்லது குழந்தைகளை அநாதையாக விட்டு விட்டு தான் மட்டும் மடிவது என்ற நிலைதான் நிலவுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தப்பூரில் ஒரு துயருற்ற விவசாய பெண்மணி அரசு நடத்தும் விதைக் கடையில் கடனுக்கு பூச்சி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டு உயிரை விட்டார்.  வாழ்நாள் முழுவதும் கடனில் இருந்தவள், இறந்த பின்னும் கடனை விட்டுச் செல்ல வேண்டிய பரிதாப நிலை.

பல நூற்றாண்டுகளுக்கு முன் ரோம் சாம்ராஜ்யத்திற்க நீரோ என்ற பேரரசன் இருந்தான்.  அவன் பலமான அரசனாக இருந்தான்.  ஆனால் அதே நேரத்தில் கலை, கவிதை, குடி என்று வாழ்க்கை முழுவதும் கேளிக்கையாகவே வாழ்க்கையை நடத்தினான்.  ஒரு முறை அவன் மிகப் பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதற்கு சமுதாயத்திலுள்ள கவிஞர்கள், ஓவியர்கள், அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்று அனைவரையும் அழைத்திருந்தான்.  ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் குடிக்கவும், உண்ணவும், சிரித்தும் மகிழ்ந்திருந்தார்கள்.  நேரம் ஆக ஆக கேளிக்கை அதன் உச்சத்தை அடைந்தது.  இரவும் வந்தது.  அதை அப்படியே தொடர வேண்டும் என்றான் நீரோ மன்னன்.  இந்த நேரத்தில் அந்த மன்னன் அவனது நாட்டு சிறையிலிருந்த அனைத்து குற்றவாளிகளையும் அவன் தோட்டத்தை சுற்றி நிற்க வைத்து அனைவரையும் தீயிலிட்டான்.  அது அவனது விருந்தினர்களுக்கு, கேளிக்கை தொடர்வதற்கு தேவையான வெளிச்சத்தை கொடுத்ததாம்.  அந்த விருந்தினர்களுக்க மகிழ்ச்சியான நேரம்தான்.  ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட விலை குறித்து அவர்களுக்கு தெரியுமா?  அந்த விருந்தினர்களுக்கு என்ன நிலையான மனசாட்சி இருந்திருக்கும்.

நீரோவின் விருந்தினர்கள்

அன்று நீரோ மன்னனின் விருந்தில் என்ன நடந்ததோ அதற்கும் இன்று நம் நாட்டில் நடந்து கொண்டிருப்பதற்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.  மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த, கைநிறைய சம்பாதித்து, கடைவீதிகளைச் சுற்றி வரும், கிரிக்கெட் மோகத்திலிருக்கும், விருந்து பிரியர்களான நாம்தான் நீரோவின் விருந்தாளிகள். மடிந்து போகும் நம் விவசாயிகளின் உயிரில் அந்த கேளிக்கைகளை நாம் அனுபவிக்கிறோம்.  ஒவ்வொரு ஆண்டின் அரசின் பட்ஜெட்டும் வசதியானவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது.  அவர்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்கு நமது விவசாயிகளிடமிருந்து நிலங்களை புடு்ங்கி கொடுப்பதுடன், புதிய தாராளமயக் கொள்கையென்ற பெயரில் அவர்களுக்குத்தான் அதிகமான வரிச்சலுகை, இறக்குமதி வரிகுறைப்பு.  லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு தகுதியற்ற தயாரிப்பாக இருந்தாலும், அவர்களின் கடன்களுக்கு அதிகமான வட்டிச் சலுகைகள் என்று அபரிமிதமாக கொடுக்கப்படுகிறது.  ஏனென்றால் நாமெல்லாம் நீரோவின் விருந்தினர்கள் இல்லையா?

நான் இந்த விழாக்களுக்கெல்லாம் எதிரியல்ல.  நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு கூட எதிரியல்ல.  உலகக் கோப்பைக்கு எதிரானவனல்ல.  எனது நாட்டு மக்கள், விவசாயிகள், கிராமத்து மக்கள் எல்லோரும் இணைந்து குதூகலிக்கும் போது, எனது விவசாயிகள் கொடூரமாக தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளாத போது, மெர்சிடீஸ் பென்சுக்கும், டிராக்டருக்கும் கடனுக்கு ஒரே மாதிரி வட்டி விகிதம் வசூலிக்கப்படும் போது, இந்தியா உலக அளவில் ஒன்றை சாதிக்கிறதென்றால், முதலில் குதூகலிப்பவன், கூச்சலிடுபவன் நானாகத்தான் இருக்கும். அந்த நாளில்தான் கையில் இந்தியக் கொடியை ஏந்திக் கொண்டு பாரத் மாதாவிற்கு ஜே என்று கோஷமிட்டுக் கொண்டு மோட்டார் பைக்கில் வலம் வருவேன்.  ஆனால் இல்லை.  இன்றில்லை.  எனக்கு உணவு கொடுக்கும் விவசாயிகள் துயரத்திலில்லை என்பது வரை நான் இதைத்தான் சொல்வேன்.  உங்களது ஆடம்பர கடை வீதிகளும் நாசமாய் போகட்டும்மென்று.  உங்களது இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாசமாய் போகட்டுமென்று. உலகக் கோப்பை நாசமாய் போகட்டுமென்று.  உங்களது அனைத்து கொண்டாட்டங்களும் நாசமாய் போகட்டுமென்று.

_______________________________________________

உழவர்கள் மடியும் போது ” உலகக் கோப்பை,” ஒரு கேடா?
– நரேந்திர ஷெகாவத்,
நன்றி – தி ஹிந்து 24.04.11

தமிழில் – சித்ரகுப்தன்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்