Monday, August 15, 2022
முகப்பு உலகம் அமெரிக்கா மைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!

மைக்மோகனால் மதவாதியான ஐயோ பாவம் அதியமான்!

-

அதியமான் ஒரு மதவாதி! – மைக்மோகன் தீர்ப்பு!

மைக்மோகன்வினவில் எந்தக் கட்டுரை வந்தாலும் பின்னூட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் அபாயம் குறித்து தவறாது லிங்க் போட்டு பேசும் அதியமானை வாசகர்கள் அறிந்திருக்கலாம். அவ்வப்போது கோபித்துக் கொண்டு வினவில் மறுமொழி இடாமலும் இருப்பார். ஆனால் தவறாது படிப்பார்.

ஒருமுறை ஜெயமோகன் எனும் மைக்மோகன் தளத்தில் “வினவில் உரையாடுவது வீண் வேலை, இனி அங்கே விவாதிக்கப் போவதில்லை” என்று அவர் பிரகடனம் செய்த கடிதம் வெளிவந்தது. மைக்மோகனும் கூட அதை மாபெரும் வெற்றிச் செய்தியாக வாசகர்களுக்கு அறிவிப்பதற்காக வெளியிட்டிருக்கலாம். ஆனாலும் அதியமானால் அப்படி இருக்க முடியவில்லை. மீண்டும் வினவில் வந்து பேச ஆரம்பித்தார். என்ன இருந்தாலும் அவர் வெறுக்கும் கம்யூனிசம், வினவு வழியாக ஆயிரக்கணக்கான வாசகரை ‘தவறான’ பாதைக்கு அழைத்துச் செல்வதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆதலால் இனி எழுதமாட்டேன் என்ற வெற்றுப் பிரகடனத்தை தூக்கிக் கடாசிவிட்டு மீண்டும் வினவுக்கு வந்தார்.

பிறகு அன்றாடம் நான்கைந்து புதிய புதிய பெயர்களில் வந்து புலம்ப ஆரம்பித்தார். இது வாசகரை குழப்பும் வேலை என்றும் ஏதாவது ஒரு பெயரில் மட்டும் பேசுமாறு கோரியதற்கு அவர் இணங்கவில்லை. மீண்டும் கோபித்துக் கொண்டிருக்கிறார்…

இங்கு வாசகர்கள் ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். அதியமானுக்கு எதிர் கருத்து கொண்டிருப்பவர்களை அவர் தகாத வார்த்தைகளால் பேசுவது வினவில் மட்டும்தான். வினவைக் கூட அவர் அப்படி அவ்வப்போது அழைப்பார். ஆனால் மைக்மோகன் தளத்திற்கு சென்றால் ஜெயேந்திரனது கால்களில் விழுந்து கிடக்கும் அவாள்கள் போல பவ்யமாக பணிந்து பேசுவார். மைக்மோகனோடு கருத்து வேறுபாடு  இருந்தாலும் அதை ” என்ன ஆண்டவரே, கொஞ்சம் எங்களையும் பரிசீலியுங்கள்” என்றுதான் முன்வைப்பார்.

முக்கியமாக மைக்மோகனது தளத்தில் மறுமொழி என்ற ஜனநாயக உரிமை இல்லை. இடையில் அப்படி அனுமதித்து, தனது இ(ம்சை)சத்தை புரிந்து  கொள்ளும் தரம் இந்த தமிழுலகிற்கு இல்லையே என்று தடாலடியாக பின்னூட்டப் பெட்டியை நீக்கியும் விட்டார். எனினும் விவாதங்களை மறுக்கும் மைக்மோகனை மாபெரும் ஜனநாயகவாதியாகவும், விவாதங்களை தடையின்றி ஊக்குவிக்கும் வினவை மாபெரும் பாசிஸ்ட்டாகவும்தான் அதியமான் கருதுகிறார்.

அதியமானது இந்த பக்திக்கு அடிப்படை என்ன? கம்யூனிசத்தை விக்கி பீடியா லிங்கு மூலம் அழித்து விடலாம் என்று எண்ணிய அதியமான் அதற்கு மேல் சிந்திக்கும் திறனுடையவர் அல்லர். அவரால் விவரங்கள், புள்ளிவிவரங்களை தரமுடிந்த அளவுக்கு அவற்றிலிருந்து உண்மையை கண்டறியும் கலையை அறிய முடியவில்லை.

மைக்மோகனோ இத்தகைய விவரங்களை தவிர்த்து விட்டு உள்ளொளி, அறம், மனித குலத்தின் ஆகப்பெரும் கனவு என்று அகநிலை அம்சங்களை அதாவது வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட எண்ணப் படிமங்களை அடித்து விடுவதில் வல்லவர். இன்னமும் கூட கோடம்பாக்கம் “அண்ணன் தங்கை சென்டிமெண்ட்” மூலம் தமிழக மக்களை அழவைக்கும் போது மைக்மோகனது சென்டிமெண்டிற்கும் மார்கெட் இருந்தாக வேண்டுமே? எனினும் இந்த வார்த்தை சென்டிமெண்ட் எல்லை மீறும் போது விவரங்களையும், புள்ளிவிவரங்களையும் பொய்யாகக்கூட சொல்வார் மைக்மோகன்.

மைக்மோகன் அளவுக்கு கம்யூனிசத்தை எதிர்த்து கன்வின்சிங்காக நம்மால் பேச முடியவில்லையே என்ற மரியாதைதான் மைக்மோகன் மீது அதியமான் கொண்டிருக்கும் பக்திக்கு அடிப்படை. ஆனாலும் அண்ணன் அதியமான் ஒரு போதும் மைக்மோகனது உளவியலை தெரிந்து கொள்ளவில்லை என்பதுதான் சோகம். அந்த சோகத்தை டபுள் ஸ்கொயராக்கி சமீபத்தில் ஒரு மாபெரும் சோகம் அதியமானுக்கு நடந்திருக்கிறது. வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர் சகஜமாக இருக்க முயன்றாலும் அண்ணன் பட்ட சோகத்தை இங்கே அனைவரும் புரிந்து கொண்டு உச்சு கொட்ட வேண்டுமென்ற நல்லெண்ணத்தோடு அந்த கதையினை இங்கு தருகிறோம்.

மைக்மோகனிசம், முதலாளித்துவம்: யார் பெரியவர்?

அண்ணா ஹாசாரே, காந்தியம், ஊழல்கள் குறித்து சமீபத்தில் மைக்மோகன் கட்டுரைகள் வெளியிட்டிருந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதிய அதியமான்,” அருமையான கட்டுரைகள், பல விடயங்களை தெளிவுபடுத்தின, முக்கியமாக இடதுசாரி எதிர்ப்பாளர்களின் நிலைப்பாடுகள் பற்றி…” என்று போற்றுதலோடு குறிப்பிடுகிறார். கூடுதலாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் ஊழல் அரசுகள் இருந்தன என்று மைக்மோகன் கூறியிருந்ததை ஏற்க முடியவில்லை என்று வழக்கம் போல பணிவாகவே மற்றும் லிங்குகளுடன் தெரிவித்திருந்தார்.

இது அதியமான் எப்போதும் கூறும் கருத்துதான். வினவில் கூட நல்ல முதலாளித்துவ அரசுகளாக அவர் சில பல ஐரோப்பிய நாடுகளின் பட்டியலை திரும்பத் திரும்பக் கூறுவார். ஒரு முறை ரியல் என்கவுண்டர் என்ற தோழர் அந்த தூய முதலாளித்துவ நாடுகளின் உண்மைகளை, லிங்குகள் மூலம் போட்டு சவால் விட்ட பிறகு, அதியமான் அதை மறுக்க வில்லை. மாறாக ஊழல் இல்லாத நாடு, சொக்கத் தங்கமான நாடு எதுவும் கிடையது என்று ஒரே போடாக முடித்துக் கொண்டார்.

அதியமானைப் பொறுத்த வரை தனது குருநாதர் மைக்மோகன் எல்லா விசயத்திலும் சரியான கருத்துக் கொண்டிருக்கும் போது முதலாளித்துவத்தோடு மட்டும் கொஞ்சம் மாறான கருத்து கொண்டிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. அதை மட்டும் குருநாதர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அதியமான் நோக்கம்.

அதியமானது இந்தக் கடிதத்தை வெளியிட்ட மைக்மோகன் விரிவான பதில் ஒன்றை அளித்திருக்கிறார்.

அதில்,

அன்புள்ள அதியமான்,

பொதுவாக நான் வாதங்களை தவிர்க்க விரும்புகிறவன். முன்முடிவுள்ள ஒருவரிடம் விரோதம் வரை விவாதித்துச் செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே மதவாதிகளிடம் விவாதிப்பதில்லை. அதே கரணத்தால்தான் அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.

மன்னிக்கவும் அதியமான், நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளியல் முன்மாதிரியை ஒரு மத நம்பிக்கை போல முன்வைக்கிறீர்கள். நீங்கள் நம்புவதை நிறுவியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.” என்று ஆரம்பிக்கிறார்.

இதன் பொருளென்ன? அதியமான் ஒரு மதவாதி. மத நம்பிக்கை போல முதலாளித்துவத்தை நம்புகிறார். அதற்காகவே எந்த விசயத்தையும் தனது மதநம்பிக்கைக்கேற்ப மறுக்கவோ, நிறுவவோ முயற்சிக்கிறார். இத்தகைய மதவாதிகளிடம் தான் பேசும் வழக்கம் கொண்டவனில்லை என்கிறார் மைக்மோகன். தோழர் அசுரன் கூட ஒரு போதும் மதவாதி என்று அதியமானை விளித்ததில்லை  என்பது இங்கே நினைவுகூறத்தக்க ஒன்று.

அதியமான் மதவாதி என்றால் டோண்டு ராவகன் போன்றோர் அறிவார்ந்தவாதியா? தெரியவில்லை. ஏனெனில் இந்த பார்ப்பனிய தாசரான டோண்டு இன்னமும் மைக்மோகனோடு ‘உரையாடு’கிறார். இது போல பல ஆர்.எஸ்.எஸ் அம்பிகளெல்லாம் மைக்மோகனோடு தொடர்ச்சியான ‘உரையாடல்களில்’ இருப்பவர்கள்தான். மைக் மோகனது வாசகர்கள் யார் என்று சர்வே செய்து பார்த்தால் அதில் பெரும்பான்மையினர் அட்சர சுத்தரமான மதவாதிகள்தான்.

சரி, இப்போது அதியமானை மதவாதி என்று சொல்லும் அளவுக்கு என்ன வந்தது? அதுதான் மைக்மோகனது உளவியலை அதியமான் புரிந்து கொள்ளவில்லை என்கிறோம். இந்த உலகில் கம்யூனிசம், ‘இந்துயிசம்’, முதலாளித்துவ இசம் என்று எத்தனை இசங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் மைக்மோகன் எப்போதும் நிராகரிப்பார். ஏனெனில் இந்த இசங்களை விட மைக்மோகனிசம் என்ற இசம்தான் உலகிலேயே உயர்ந்த இசம். அதை ஏற்றுக் கொண்டவர்களோடு மட்டும்தான் மைக்மோகன் உரையாடுவார். யாரெல்லாம் மைக் மோகனிசத்தை ஏற்றுக் கொள்ளவில்லையோ, இல்லை அதில் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அவர்களெல்லாம் மைக்மோகனைப் பொறுத்த வரை மதவாதிகள்தான். மைக்மோகனிசம் என்றதும் ஏதோ புதுச் சரக்கு என்று நினைத்து விடாதீர்கள். அது நவீனப் பார்ப்பனியம் என்ற புதிய மொந்தைச் சரக்குதான்.

சுயமோகனிசத்தை கேள்விக்கிடமற்ற நம்பிக்கையோடு பின்பற்றாதவர்களை மைக்மோகன் மதவாதி என்கிறார் என்றால் எதைக் கொண்டு அடிக்க, என்னத்தைச் சொல்லி அழ? ஒரு மத ஆதினம், தனது மத நம்பிக்கையை ஏற்காதவர்களை மதவாதி என்றால் எது மதம், எது மத நம்பிக்கை, எது  மதவாதம்?

அதியமான் ஜோசியம், பாரத தர்மம், யோகம், இலக்கியம், நல்ல இந்து மதம்,  கலை, கம்யூனிச எதிர்ப்பு என்று எல்லாவற்றிலும் சுயமோகனிசத்தை ஏற்றுக் கொண்டவராக இருந்தாலும் முதலாளித்துவத்தை மட்டும் சுயமோகனிசத்திற்கு மேல் கருதுகிறார் இல்லையா, இதுதான் பிரச்சினை. கூடவே அவர் ஒன்ஸ் அப்பான் எ டைமில் எழுதிய அரதப் பழசான இத்துப் போன கட்டுரைகளை மாபெரும் அறிவுப்படையலாக லிங்குகள் என்ற பெயரில் போட்டிருப்பது மைக் மோகனை நிச்சயம் படுத்தியிருக்கும். இதை அன்றாடம் பார்க்கும் நமக்கே எரிச்சல் வரும்போது மைக் மோகனுக்கு எவ்வளவு லார்ஜ்ஜாக இருந்திருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை.

ஊழல்: மைக் மோகன், அதியமானது அபத்த உளறல்கள்!

னினும் அதியமானை வெறுமனே மதவாதி என்று முத்திரை குத்தி மட்டும் மைக்மோகன் சென்று விடவில்லை. முதலாளித்துவ நாடுகளில் முன்னர் ஊழல் இருந்ததை விவரிக்கிறார். அதன்மூலம் அதியமானது முதலாளித்துவ தூய நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறார். அதில் அவர் சொல்லியுள்ளதின் சுருக்கத்தை மட்டும் பார்ப்போம்.

மைக்மோகன் கருத்துப்படி, மன்னராட்சியாக இருந்த ஐரோப்பிய நாடுகளில் குடியரசு வந்த போது பண்ணையார்களும், முதலாளிகளுமே அரசின் இடங்களை நிரப்பியதால் ஊழல் மலிந்திருந்ததாம். பின்னர் மக்கள் போராட்டங்களின் காரணமாக அரசியலில் சாதாரணமானவர்கள் வந்த போது ஊழல் கிடையாதாம். எனினும் இன்று முதலாளித்துவ நாடுகளில் நாம் நினைக்கும் ஊழல்களை சட்டப் பூர்வமாக்கியிருக்கிறார்களாம். இருந்த போதும் மக்கள் நலத்திட்டங்கள், அன்றாட அரசியல் வாழ்வில் ஊழல் கிடையாதாம், இதுதான் மைக்மோகனது கருத்து.

எதை எடுத்தாலும் ஆதி முதல் அந்தம் வரை அரசியல், தத்துவம், சித்தாந்தம், கலை, கட்சிகள், நபர்கள் என்று இந்த உலகில் உள்ள சகலவற்றையும் ‘ஆய்வு’ செய்து கூறும் மைக்மோகனது கூற்றில் உள்ள அபத்தங்களை எளிமையாக சுட்டிக் காட்ட முடியுமென்றாலும் நாமும் அதே போல ஆதி முதல் அந்தம் வரை எல்லா எழவையும் பேச வேண்டியிருக்கிறது. இதுவே மைக்மோகனைப் பற்றி எழுதுவதற்கு மிகவும் எரிச்சல் ஊட்டுகிறது. இதை இன்னும் ஆழமாக ஏங்கெல்ஸ் ” டூரிக்கிற்கு மறுப்பு” நூலில் ஜெர்மன் அறிவாளிகள் குறித்து விளக்கியிருப்பார். போகட்டும்.

முதலாளித்துவம் என்றால் என்ன என்று மைக்மோகனுக்கும் சரி, அதியமானுக்கும் சரி நிச்சயமாகத் தெரியவில்லை. அவர்கள் இருவருமே தத்தமது விருப்பம் போல அதை தயாரித்திருக்கிறார்கள்.

தனி முதலாளி, தனது இருப்பைக் காக்கவும், அதிகரிக்கவும், போட்டி முதலாளியாகி, பின்னர் தான் மட்டுமே இருந்தால்தான் இலாபம் அதிக அளவில் ஈட்ட முடியும் என்று ஏக போக முதலாளியாகி, பின்னர் அதை அரசு மூலம் நிலை நிறுத்த காலனிய நாடுகளை பிடிக்கும் ஏகாதிபத்தியங்களை உருவாக்கி, தற்போது ஒட்டு மொத்த உலகையும் ஒரே மூச்சில் சுரண்டுவதற்காக மேல் நிலை வல்லராசாகவும் தங்களது அரசுகளை மாற்றி விட்டார்கள்.

இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய விசயம் என்ன வென்றால் ஒரு முதலாளியும், முதலாளி வர்க்கமும் தனது தொழிலை நிறுவதற்காக மற்ற முதலாளிகள், மற்ற வர்க்கங்கள், மற்ற நாடுகள் அனைத்தையும் வென்று காட்டுவதே அவர்களது உயர்வாழும் தன்மையின் இரகசியம். இதை ஆயுத பலத்தினாலா, இல்லை அரசு பலத்தினாலா, இல்லை ஊழல் பலத்தினாலா எதன் மூலம் சாதிக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் சூழல், தேவையைப் பொறுத்தது.

முதலாளித்துவ சமூகம் என்று அடிக்கடி பலரும் பேசுகிறார்கள். இதில் ஏதோ சில முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள் என்று மட்டும் எளிமையாக புரிந்து கொள்வது சரியல்ல. ஒரு முதலாளித்துவ சமூகம் நீடிக்க நீடிக்க என்ன நடக்கிறது, சமூகம் எப்படி மாறுகிறது என்பதே முக்கியமானது. அதன்படி அந்த சமூகத்தில் பெரும்பான்மை மக்கள் மேலும் மேலும் வறியவர்களாக மாறுவதும், சில முதலாளிகள் மேலும் மேலும் சொத்துக்களை சேர்ப்பதும் நடக்கிறது. அதனால்தான் இன்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த ஏழைகள், பணக்காரர்களுக்கான சொத்து இடைவெளி இன்று பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதில் மேலை நாடுகளில் தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள தனது நிலையினை ஒத்த வர்க்கங்களை விட அதிக சம்பளம், தரமான வாழ்க்கையைக் கொண்டிருக்கிறது என்பதன் காரணம் அந்த நாடுகளின் முதலாளிகள் முழு உலகையும் சுரண்டி அதில் கொஞ்சம் தனது நாட்டு தொழிலாளி, நடுத்தர வர்க்கத்திற்கு அளிக்கிறார்கள் என்பதே. தற்போது இதுவும் பிரச்சினைக்குள்ளாகி வருகிறது.

இந்த கட்டுரையின் வரம்பிற்குள் நின்று மட்டும் பேசுவதாக இருந்தால் முதலாளி வர்க்கம் தனது நலன்களுக்காக அரசு, அரசாங்கத்தை செயல்படவைப்பதில் முனைப்பாக இருக்கும். சொல்லப் போனால் அந்த அரசாங்கங்களே முதலாளிகளது வர்க்கத்தின் பிரதிநிதியாகவே செயல்படும். ஆனால் ஒரு தொழிலில், ஒரு நாட்டில், ஒரு கண்டத்தில் முதலாளிகளுக்கிடையே இருக்கும் போட்டி என்பது அரசிலும் பிரதிபலிக்கும். அப்போது தனது குறிப்பான தேவைகளுக்காக குறிப்பிட்ட முதலாளிகள் ஊழல் முறையின் மூலம் அந்தந்தக் கால அரசாங்கங்களை விலைக்கு வாங்குகிறார்கள், அல்லது செயல்பட வைக்கிறார்கள்.

ஆக மனித சமூகத்தின் வரலாற்றுக் காலத்தில் முதலாளித்துவ சமூகங்களில்தான் முதன்முதலில் ஊழல் என்பது பிரம்மாண்டமாக உருவெடுக்கிறது. அல்லது அப்படி தோன்றுவதற்கான சமூக நிலைமைகள் உருவாகிறது. இதை மன்னராட்சிக் காலத்தில் பெண் கொடுத்தான், தங்கம் கொடுத்தான் என்று ஒப்பிட்டு இணை வைத்துப் பேசுவது அபத்தம. தன்மையிலும், பொருளிலும், அது வேறு, இது வேறு.

இன்று ஊழல் என்பது முதலாளித்துவ நாடுகளில் சட்டப்பூர்வமாகியிருக்கிறது என்பதை மைக்மோகன் ஒத்துக்கொள்கிறார், அதியமான் ஒத்துக் கொள்ளவில்லை. அதியமானைப் பொறுத்த வரை சூதாட்டத்தைக் கூட சட்டப்பூர்வமாக நடத்தலாம். இதில் மைக்மோகன் புரிந்து கொள்ளத் தவறியிருக்கும் விசயம் என்னவென்றால் முதலாளித்துவ நாடுகளில் ஊழல் என்பது ஒன்று சட்ட பூர்வமாகவோ, இல்லை சட்ட விரோதமாகவோ இருந்தே தீரும். ஏனெனில் முதலாளித்துவத்தின் அடிப்படையான வாழ்க்கைக்கு அது மிகவும் அத்தியாவசியம். முதலாளித்துவம் என்பதே ஊழலை அடிப்படையாக வைத்து இயங்கும் ஒன்றுதான்.

ஊழலில் கடைசி இடம், முதல் இடம்: எது அளவு கோல்?

தியமான் போற்றும் ஸ்காண்டிநேவிய (டென்மார்க், ஸ்வீடன், நார்வே, பின்லாந்து, ஐஸ்லாந்து) நாடுகளை எடுத்துக் கொள்வோம். ஸ்வீடனது போபார்ஸ் ஆயுத கம்பெனி தனது விற்பனைக்காக புரோக்கர்களை பிடித்து கமிஷன் கொடுத்து இந்தியாவுக்கு விற்கிறது. இந்த கமிஷன் இல்லை என்றால் அந்த தொகை விற்பனைத் தொகையில் கழிக்கப்பட்டிருக்கும். எனவே இது இந்தியாவுக்கு நட்டம் அல்லது ஊழல் என்றாலும் ஸ்வீடனைப் பொறுத்தவரை ஊழல் கிடையாது. ஸ்வீடனுக்கு மட்டுமல்ல எல்லா பன்னாட்டு நிறுவனங்களும் தமது விற்பனையைப் பெருக்க இப்படி இலஞ்சம் கொடுப்பதை வழமையாக கொண்டிருக்கின்றன.

அடுத்து இந்த உலகில் ஆயுதங்களின் தேவை அதிகம் இருந்தால்தான் போபார்ஸ் நிறுவனம் தனது ஆயுங்களை தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதும், அந்த நாடுகள் செயற்கையான ஒரு பதட்டத்தில் இருப்பதையும் அவர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் புரட்சி நடத்த விரும்பும் ஒரு போராளிக் குழுவுக்கு இவர்கள் கடன் கொடுத்தாவது விற்பது வழக்கம். மேலும் கள்ளச் சந்தையில் விற்கப்படும் ஆயுதங்களில் பெரும்பான்மை மேலை நாடுகளைச் சேர்ந்தவைதான்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா கம்பெனி ஸ்ரீபெரும்புதூரில் ஒரு ஆலை அமைத்து 3000 ரூபாய் குறைவான கூலி கொடுத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி, தொழிற்சங்கம் அமைக்க அனுமதி மறுத்து, இன்னும் பல சலுகைகளோடும், சுரண்டல்களோடும் தொழில் நடத்துகிறது. பெரும் இலாபத்தை இங்கிருந்து கொண்டு செல்கிறது. இதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும், சட்ட பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் இவர்கள் அரசு அதிகாரிகளுக்கும், ஆளும் கட்சி அரசிசயல்வாதிகளுக்கும் இலஞ்சம் கொடுக்கிறார்கள். இப்போது உலகளவில் இலஞ்சம் வாங்கும் நாடுகளில் இந்தியா முதலிடத்திலும், பின்லாந்து, ஸ்வீடன் கடைசி இடத்திலும் வருகிறதென்றால் இதை நாம் ஏற்க இயலுமா? மைக்மோகனும், அதியமானும் ஏற்கிறார்கள்.

அடுத்து மக்கள் நல்வாழ்வுத் திட்டங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகளில் ஊழல் இல்லை என்பதால் மக்கள் நிம்மதியாக மேலை நாடுகளில் வாழ்வதாக மைக்மோகன் நம்புகிறார். அந்த நிலை இங்கு வர அண்ணா ஹாசாரே போன்றவர்களது போராட்டங்கள் உதவும் என்பதும் அவரது புரிதல்.

இதையும் கொஞ்சம் சுருக்கமாக பார்த்து விடுவோம்.

மேற்குலகின் மக்கள் நலத் திட்டங்கள் – காரணம், பின்னணி என்ன?

முதலில் மேலை நாடுகள் அத்தனையும் 50 ஆண்டுகள் முன்புவரை முழு உலகிலும் காலனிய நாடுகளைக் கொண்டிருந்தன. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும், தென்னமெரிக்காவிலும் இருந்து இவர்கள் கொள்ளையடித்துச் சென்ற செல்வத்தை தற்போது வட்டியில்லாமலாவது திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டு அவர்கள் அப்படி கொடுத்து விட்டால், மறுகணமே அந்த மேலை நாடுகள் பிச்சைக்கார நாடுகளாகிவிடும். எனவே இப்படி கொள்ளையடித்த பணம்தான் அந்தெந்த நாடுகளில் சமூக நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களுக்கு வழங்கப்பட்டது. அதனால்தான் அந்த நாடுகளில் உள்ள தொழிலாளி வர்க்கம் பிற்போக்காக இருந்தது. அந்த வகையில் இது போராடாமல் இருப்பதற்கான ஊழல் என்றும் சொல்லலாம்.

மேலும் ரசிய, சீன புரட்சிகளுக்குப் பிறகு முதலாளித்துவ நாடுகள் கம்யூனிச அபாயம் கருதியும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை வேறுவழியின்றி கொண்டுவந்தன. எனினும் மேலை நாடுகள் பல தற்போதைய முதாளித்துவ நெருக்கடிகளால் அந்த நலத்திட்டங்களை ரத்து செய்து வருகின்றன. இதை எதிர்த்து பிரான்சு முதல் கிரேக்கம் வரை மக்கள் போராடுகிறார்கள். பொதுவில் ஐரோப்பாவின் தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தகைய போராட்ட மரபு கிட்டத்தட்ட 200 வருடங்களாகவே உண்டு. ரசியப் புரட்சி அதன் உச்சம்.

இடையில் தொழிலாளி வர்க்கத்தை முடக்குவதற்காக செய்த நலத்திட்டங்கள் இப்போது இல்லை எனும் போது அந்த போராட்டங்கள் மீண்டும் வருகிறது. எனினும் இந்த போராட்டங்கள் எவையும் முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்க வேண்டும் என்ற அரசியல் நிலையிலிருந்து நடக்கவில்லை. தங்களது வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது என்ற நிர்ப்பந்தித்திலேயே நடக்கிறது. தொடர்ச்சியான போக்கில் இது தனது பிரச்சினை என்ற குறுகிய வட்டத்திலிருந்து நமது பிரச்சினை என்ற தளத்திற்கு நகரும் போது அதன் அரசியல் தன்மை மேலும் மேலும் முன்னேறும்.

காலனியாதிக்கத்தின் மூலம் மூன்றாம் உலக நாடுகளைச் சுரண்டிய மேலை நாடுகள் தற்போது அதை விட அதிகமாக உலகமயத்தின் மூலம் பூமி முழுவதையும் சுரண்டுகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் மூன்றாம் உலகின் அனைத்து வளங்களையும் சூறையாடுகின்றன. அது நீர் வளமாகவோ, இல்லை கனிம வளமாகவோ, இல்லை மனித வளமாகவோ எதையும் விடாமல் அனைத்தையும் சுருட்டுகின்றன. இவற்றையெல்லாம் புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் வரலாறும், அரசியலும் அவற்றினை இயக்கும் விதிகளோடும் பரிச்சயம் இருக்க வேண்டும்.

இனி மைக்மோகனது சமூக வாழ்வு திட்டங்கள், அன்றாட அரசியலில் ஊழல் இல்லை என்பதைப் பார்ப்போம். ஐரோப்பாவில் இருக்கும் ஸ்விட்சர்லாந்து நாடு அநேக மனித உரிமைகளுக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்கும் பிரபலமான நாடாகும். வெளிப்பார்வையில் பார்க்கும் போது இந்த நாட்டில் பிறந்திருக்கலாகாதா என்று கூட நம்ம அதியமானுக்கும், மைக்மோகனுக்கும் தோன்றலாம்.

ஆனால் உண்மை என்ன? ஸ்விட்சர்லாந்து நாட்டின் மொத்த தேசிய வருமானத்தில் பாதி அளவை அந்நாட்டின் வங்கிகள் கொண்டிருக்கின்றன. எனில் ஸ்விட்சர்லாந்து நாட்டிற்கு படியளப்பதற்கு வங்கிகளே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. சரி, இந்த வங்கிகளுக்கு எப்படி பணம் வருகின்றன? உலக நாடுகளில் உள்ள முதலாளிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் தமது கருப்பு, ஊழல் பணத்தை இந்த நாட்டின் வங்கிகளில்தான் போடுகின்றன. அவற்றின் மதிப்பு மிக மிக அதிகம். இப்படி ஊரைக் கொள்ளியடித்த கயவர்களின் கந்து வட்டி பைனான்ஸ் வங்கியாகத்தான் ஸ்விஸ் இருக்கிறது. இப்படி எந்த தொழிலும் செய்யாமலே, உட்கார்ந்த இடத்தில் பலப் பல டிரில்லியன் டாலரை, யூரோவை, இரத்தப் பணத்தை வைத்திருக்கும் நாடு தனது சொந்த நாட்டு மக்களின் சில நலத்திட்டங்களுக்கு பிச்சை போடுகிறது என்றால் அதை போற்றுபவர்களை என்னவென்று அழைப்பது?

நம்மூரில் அயோத்தி குப்பம் வீரமணி, பங்க் குமார், ஜான் பாண்டியன் முதலான ரவுடிகள் எல்லாம் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், மாமூல் மூலம் பல இலட்சங்களை சம்பாதிக்கிறார்கள். அதிலிருந்து தத்தமது ஊர்கள், சாதிகளைச் சேர்ந்தோருக்கு கோவில் கொடை, படிப்பு உதவி போன்ற மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கு செலவிடுகிறார்கள். மைக்மோகனது பார்வைப்படி யாருக்கும் ஐந்து காசு கொடுக்காத வினவை விட இத்தகைய அண்ணன்கள், வள்ளல்கள் மேலானவர்கள்!

முதலாளித்துவ அமைப்பே ஊழல்தான் எனும் போது அன்றாட வாழ்வில் ஊழல் இல்லை என்பது முட்டாள்தனம்!

தாசில்தார் ஆபிஸ், கலெக்டர் ஆபிஸ், பாஸ்போர்ட் அலுவலகம் என்று மிகச் சுருங்கிய உலகை மட்டும் மக்களோடு தொடர்புடைய அரசியலாக மைக்மோகன் பார்க்கிறார். இத்தகைய துறைகளில் மேலை நாடுகளில் ஊழல் இல்லையென அதிசயிக்கிறார். இந்தியாவைப் போன்று மின்சாரம், இரயில்வே, கல்வி, மருத்துவம், சுகாதாரம் என்று சகல துறைகளிலும் அரசு இருப்பதைப் போன்று அங்கில்லை. ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம். தனியாரின் சேவை என்பது இலாபத்தின் மேல் நின்று கொண்டிருப்பதைப் போன்று அரசு துறைகள் செயல்படுவதில்லை. அவை லாப நோக்கமற்ற சேவை அடிப்படையில்தான் நடக்கிறது. அந்த வகையில் மேலைநாடுகளில் உள்ள சாதாரண மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக கணிசமான வருமானத்தை தனியார் முதலாளிகளிடம் இழக்கின்றனர். அமைப்பு முறையின் இந்த ஊழலைப் பார்க்காமல் ஒரு சிப்பந்தி லஞ்சம் வாங்குவதில்லை என்று சுயதிருப்தி அடைவது அபத்தம்.

ஐரோப்பாவில் சில நாடுகளில் இத்தகைய அரசு துறைகள் இன்றும் உண்டு என்றாலும், மொத்தத்தில் அது தீர்மானிக்கவில்லை. இந்திய அரசு வங்கிகளில் கடன் வாங்குவதற்கு படாதபாடு படவேண்டும். ஆனால் ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் கடன் வாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு எந்த சிக்கலுமின்றி அள்ளிக் கொடுக்கின்றன. கடன் அட்டையை அடிக்கடி தேய்க்குமாறும் வலியுறுத்துகின்றன. இறுதியில் 50,000 செலவழித்திருந்தால் அது பல சிக்கலான கணக்குகளோடு 3 இலட்சம் என்று வருகிறது. கட்டத் தவறினால் ஆள்வைத்து மிரட்டி வசூலிக்கிறார்கள். எனில் அரசு வங்கிகளை விட தனியார் வங்கிகள் அதிகம் சேவை தருகின்றன என்று மெச்ச முடியுமா?

தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் உழைக்கும் மக்கள் எந்த அளவுக்கு அரசியல் விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களோ அந்த அளவுக்கு அந்நாட்டின் சமூக நலத்திட்டங்கள் செயல்படும். முதலாளிகளது ஊழல் அமைப்பும் சுலபமாக செயல்படாத படி தடைகள் இருக்கும். ஆனால் இன்று இந்த நிலைமை எந்த நாட்டிலும் இல்லை என்பதால் நம் புலனறிவு அறியாத படி ஊழல்தான் இந்த முதலாளித்துவ உலகை வழிநடத்துகிறது. அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ, பிரான்சிலோ, ஜெர்மனியிலோ இருக்கும் ஆளும் வர்க்கக் கட்சிகளின் உள்ளூர் தலைவர்களெல்லாம் தொண்டர்களின் பலத்தால் வந்தவர்கள் அல்ல. மாறாக அவர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு எவ்வளவு பணம் வசூலித்து கொடுக்க முடியும் என்பதை வைத்தே தலைவராகிறார்கள்.

இதற்கு மேலும் ஒவ்வொரு தேர்தலையும் ஆயுதம், சேவைத்துறை, நிதி வங்கி, காப்பீடு, மருந்து என்று பல்வேறு முதலாளிகளின் செல்வாக்கே தீர்மானிக்கிறது. ஜார்ஜ் புஷ்ஷை ஆயுத, எண்ணெய் முதலாளிகளும், அல்கோரை மருந்து முதலாளிகளும் முன்னிறுத்தினர் என்பது மேலை நாடுகளின் எல்லா தேர்தல்களுக்கும் பொருந்தும். ஆக தமிழகத்தில் நூறு ரூபாய்க்கு வோட்டுப் போடுவதை ஊழல் என்றும் அமெரிக்காவில் ஆயிரம் டாலர் கட்டி அதிபர் விருந்தில் கலந்து கொள்வது ஊழலற்ற ஜனநாயகம் என்றும் பார்ப்பது முட்டாள்தனம், பாமரத்தனம், அயோக்கியத்தனம்.

தேர்தலில் ஒரு நபருக்கு ஒரு ஓட்டு என்பதையும், லிமிடெட் கம்பெனியில் ஒரு பங்குக்கு ஒரு வோட்டு என்பதையும்  ஜனநாயகம் என்ற முறையில் ஒன்று என்று சொல்ல முடியுமா? ஒன்றுதான் என மைக்மோகனும், அதியமானும் சொல்கிறார்கள்.

மைக்மோகன் தனக்கு தெரிந்த வாழ்க்கையில் நடமாடும் சில கதை மாந்தர்களது பாத்திரத்தை அசைபோடுவது போல, உலக அரசியல், பொருளாதாரம், சமூகத்தை எடை போடுகிறார். கதை சொல்லும் திறனாலேயே, கதைகளை தீர்மானிக்கும் முதலாளித்து சமூகத்தை புரிந்து கொள்ளலாம் என்பது அசட்டுத்தனம்.

மைக்மோகனிசம் ஒன்றுதான் இந்த உலகின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு என்று தன்னைத்தானே நியமித்துக் கொண்ட மைக்மோகனது சன்னிதானத்தை அதியமான் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் மதவாதி என்ற பட்டம் வாங்கிய பிறகும் சுரணையில்லாமல் மீண்டும் மைக்மோகனிடம் பேசுகிறார். ஒருவர் வார்த்தைகளால் வாழும் மதவாதி. மற்றொருவர் லிங்குகளால் வாழும் காரியவாதி. எனினும் லிங்குகளை விட வார்த்தைகள் மேம்பட்டது என்ற காரணத்தினால் காரியவாதி மீண்டும் மீண்டும் வார்த்தை மதவாதியிடம் சரணடைகிறார்.  மைக்மோகனோ “எவ்வளவு அடித்தாலும் தாங்குறானே” என்று புன்னகையுடன் அதியமானை கடந்து செல்கிறார்.

____________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. இது போன்ற செய்திகளுக்காக சில மணிநேரங்களை வீணடித்ததற்காகக் கடும் கண்டனங்கள் 😉

  ஆனாலும் சுயமோகனின் தளத்தை வழமையாக வாசிக்காத என் போன்றோருக்கு இது ஒரு சரியான தகவல் பதிவு.

 2. சிறப்பான கட்டுரைக்கு நன்றி !

  // மைக்மோகனோ “எவ்வளவு அடித்தாலும் தாங்குறானே” என்று புன்னகையுடன் அதியமானை கடந்து செல்கிறார்.//

  🙂

 3. முதலில் தனிமனித எதிர்ப்பையும் சுய விளம்பரத்தையம் நிறுத்துஙள்..

  உபயோகமாக எதாவது எழுதுங்கள்..

 4. Very good class taken by vinavu in respect of issues debated by mike mohan and Athiyamaan.Let Athiyaman understand the democracy prevailed in Mike mohan’s and other Capitalist minds.

 5. மைக்மோகன் , அதியமான் அவர்களே! நீங்க பாஸசாகிட்டிங்க. பெருமைதானே,உங்க
  அருமை,பெருமைகளை வினவு எழுதிட்டாங்களே! போதாதா?

 6. அடுத்து இந்த உலகில் ஆயுதங்களின் தேவை அதிகம் இருந்தால்தான் போபார்ஸ் நிறுவனம் தனது ஆயுங்களை தொடர்ந்து விற்பனை செய்ய முடியும். அந்த வகையில் மூன்றாம் உலக நாடுகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்வதும், அந்த நாடுகள் செயற்கையான ஒரு பதட்டத்தில் இருப்பதையும் அவர்கள் விரும்புவார்கள். அந்த வகையில் ஆப்பிரிக்க நாடு ஒன்றில் புரட்சி நடத்த விரும்பும் ஒரு போராளிக் குழுவுக்கு இவர்கள் கடன் கொடுத்தாவது விற்பது வழக்கம். //

  இதை கண்டிப்பா புரியணும் உலக மக்கள்.. அயுத விறபனைக்காகவே தேவையற்ற போர்கள் பல..

  ( தனிமனித தாக்குதல் இருப்பது வருத்தத்தை தருது. கருத்துரிமை எல்லாருக்கும் உண்டுதானே?.. )

  பல புதிய விளக்கம் , முதலாளித்துவத்தையும் , மக்கள் எப்படி தனியார் என்ற பேரில் ஏமாற்றப்படுகிறார்கள் என்றும்..

 7. எதிர்மறையின் மேலான விமர்சனம் என்பதை மைய இழையாக நீங்கள் எடுத்துக் கொண்டிருந்தாலும் நேர்மறையை வாசகர்களுக்கு மிகச் சரியாக அடையாளம் காட்டி அறிமுகம் செய்துள்ளீர்கள். இந்தக் கட்டுரையை வாசிக்கும் நண்பர்கள் முந்தைய அம்சம் அளிக்கும் வாசிப்பின்பத்தோடு மட்டும் நில்லாமல் அதற்கு எதிராக நிறுவப்பட்டுள்ள நேர்மறையான விளக்கங்களையும் புரிந்து கொள்ள வேண்டும் – அதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு இரண்டாவதாக ஒரு முறை கூட வாசிக்கலாம்.
  மைக்மோகனிசம் பற்றி எனது இரண்டு பைசா – இதில், இந்தியாவில் ஊழல் முறைகேடுகள் பற்றிப் பேசும் போது சுயமோக வாசக வட்டத்தின் வர்க்க இயல்புப்படி தவிர்க்கவியலாமல் ஐரோப்பிய ஸ்காண்டிநேவிய நாடுகள் பற்றிய ஒப்பீடு எழுந்து விடும். எனவே கவனமாக அதற்கும் ஒரு முட்டுக் கொடுத்து விட வேண்டிய கட்டாயம் மைக்குக்கு இருக்கிறது. அதற்காக அதியமான் போல ஐரோப்பிய நாடுகளில் ஊழல் இல்லை என்று சொல்லிவிட்டால் அது ‘ஐரோப்பிய மைய்யவாத நோக்காக’ புரிந்து கொள்ளப்பட்டு விடும் அபாயம் இருக்கிறது. அதே நேரம் இந்திய ஊழல் பற்றி ரொம்பப் பேசினால் அதுவும் பேக்ஃபையர் ஆகிவிடும் – என்ன இருந்தாலும் புண்ணிய பூமி / கர்ம பூமி / தர்ம பூமி இல்லையா?
  எனவே ஜெயமோகனிசம் சரணடையும் முட்டுச் சந்து தான் அந்த பதிவின் கருத்து. இதை சரியாகப் புரிந்து கொள்ளாமல் வழக்கம் போல் லிங்குகள் சகிதம் நேரம் கெட்ட நேரம் பார்த்து ஆஜரானது மட்டும் தான் அதியமான் செய்த தவறு. பாவம். ஜனநாயகம் / பேச்சுரிமை புண்ணாக்குப் புடலங்காய் எல்லாம் கம்யூனிஸ்ட்டுகளிடம் மட்டும் பிலிம் காட்டத் தேவையான கருவி என்கிற மைக்மோகனிச விதி 3 உட்பிரிவு 1ஐ அவசரத்தில் அதியமான் மறந்திருக்கிறார். அதற்காக அந்தப் பச்சை மனசை அப்படிக் கீறியிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது தான்.
  போகட்டும், நான் திரும்ப சுமோகனியத்திற்கே வருகிறேன். சுயமோகனும் நீல்ஸ் ஜடாயு உள்ளிட்ட காக்கி ஜட்டி கும்பல் பெரும் அபாயமாக முன்வைக்கும் “ஐரோப்பிய மைய்யவாத ஆய்வு” முறைக்கு பலியாகி விடாமல் பேலன்ஸ் செய்யும் விதமாக “ஐரோப்பாலி ஊழல் இருக்கு ஆனா இல்லை….” என்றும் அவரது சொந்த மைக்மோகனிச தத்துவத்தின் ஆய்வு முறையான இந்துத்துவ ஏகாத்மவாதத்திற்கு உட்பட்டு “இந்தியாவில் ஊழல் இல்லை ஆனா இருக்கு….” என்றும் ‘என்னத்த’ கண்ணைய்யா ரேஞ்சுக்கு மைக் இழுக்கிறார்.

  ———–
  சரி, இப்போ ஒரு வேண்டுகோள் –
  டூரிங்குக்கு மறுப்பு நூலில் ஜெர்மன் ‘அற்பவாதிகள்’ பற்றி வருவதை கோடிட்டுக் காட்டியிருக்கிறீர்கள். ஆனால், இங்கே தமிழ்ச்சூழலில் அதற்கு மிக எடுப்பான வாழும் உதாரணமாக விளங்கும் சுயமோகனையும் இன்னும் அது போல் இலக்கியவாதிகள் என்று காலரைத் தூக்கிக் கொண்டு தாதாத்தனம் செய்து திரியும் வேஸ்ட்டு பெலோக்களையும் இந்த அம்சத்தில் அம்பலப்படுத்தும் விதமாக கட்டுரைகள் எழுத வேண்டும் (இணைப்பிலிருக்கும் நவ்வாப்பழம் கட்டுரை போல) என்று வாசகர்கள் சார்பாக கோரிக்கை வைக்கிறேன்.

 8. ’கோபித்து கொண்டு’ இங்கு பின்னூட்டம் இடுவதை நிறுத்தவில்லை. Ph.d ரேஞ்சில் இருப்பவன், ஒன்னாம் கிளாஸ் பசங்களுடன் ‘விவாதம்’ செய்வது வீண் வேலை என்று மிக லேட்டாக தான் புரிந்து கொண்டேன். வெறும் தற்பெருமைக்காக இதை சொல்லவில்லை. மற்றபடி உங்க கருத்துகள் மற்றும் அர்த்தப்படுத்திக்கொள்ளிதல் என்பது over simplification மற்றும் gross generalisation என்று தான் சொல்ல முடியும். மேற்படி ’கட்டுரையும்’ இதே வகை தான்.

  ஜெ எம்மை மதவாதி என்று சொல்லவில்லை. மதவாதியை போல் கருதுகிறீர்கள் என்கிறார். இந்த வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத ’பகுத்தறிவு’ உங்களுக்கு ! அவர் தளத்தில் தனி மனித தாக்குதல்கள் கிடையாது. எல்லோரும் நண்பர்கள் தாம். பண்பு மிக்கவரகள். மாற்று கருத்துகள் இருந்தாலும். அதனால் அங்கு நானும் பண்புடன் நடந்து கொள்வது சாத்தியம் மற்றும் தேவை. ஆனால் இங்கு உங்க தளத்தில், புணைப் பெயரிகளில் வெற்று தனி மனித தாக்குதல் செய்து ‘புரட்சி’ அய் உருவாக்க பாடுபடும் கூட்டம் அதிகம். எம்மை பொறுத்து வரை Give respect, take respect. அதனால் இங்கு தாங்க முடியாமல் தனி மனித தாக்குதல் போனால், திருப்பி அதே ‘மொழியில்’ பேசுயிருக்கிறேன். இதை புரிந்து கொள்ள common sense தேவை. அதெல்லாம் உம்மை போன்ற மேதைகளுக்கு கிடையாதே !! :))))

  மற்றபடி, ஊழல், ஜனனாயகம், ஏழ்மை ஒழிப்பு பற்றி உங்க கருத்துகள் மட்டும் தான் மிக சரியானவை என்று நீங்க வெண்டும் என்றால் தொடர்ந்து சொல்லிக்கொள்ளாம். ஸ்காண்டினேவிய நாடுகளில் உள்ள ஊழல் அளவை பற்றி Transparency International
  rating method மற்றும் இதர தரவுகள் பற்றி எல்லாம் அலச உங்களுக்கு போதாது தான். விதி விலக்குகளை மட்டும் வைத்துகொண்டு பொத்தாம் பொதுவாக எல்லாம் தெரிந்த மாதிரி விடுவது உங்கள் பாணியாச்சே !! 100 சதம் perfect ஆன, 100 சதம் ஊழலே இல்லாத அமைப்பு மற்றும் நாடு சாத்தியமில்லை என்று தான் சொல்லியிருந்தேன். திரிப்பது உங்கள் பாணி ! மற்றபடி விக்கிபீடியா சுட்டிகளை ஏளனம் செய்பவர், பல சமயம் நீங்களே அதை எடுத்து காட்டுவது இரட்டை வேடம். மேலும் அந்த சுட்டிகளை முழுசா உள் வாங்கி, அவை சரியா அல்லது தவறா என்று ஆராய்ந்து உணர்வதே பகுத்தறிவு.

  சரி, எமக்கு இங்கு திடிரேன இத்தனை publicity அளித்தமைக்கு மிக்க நன்றி. மக்களே எம் பிளாகுகளை படித்து, வினவு எம் ‘கருத்துகளை’ பற்றி சொல்வது சரியா அல்லது sweeping statements and wrong interpretations ஆ என்று நீங்களே முடிவு செய்து கொள்ளவும். எமது பிளாக்குகள் : (கூகுள் புண்ணியத்தில் ) :

  தமிழ் :

  http://nellikkani.blogspot.com (economic issues)
  http://athiyamaan.blogspot.com

  english :

  http://athiyaman.blogspot.com (economic issues)
  http://tamilopinion.blogspot.com

  முகப் புத்தகத்தில் :

  http://www.facebook.com/karur.athiyaman

  மீண்டும் எமது நன்றிகள் தோழர்.

  • அதியமான்,

   இது ஒரு குட் ட்ரை. ஆனா வொர்த் இல்லே. நீங்க வேணா இங்கே திரும்ப சொல்லியிருக்கும் ஊழலற்ற ஸ்காண்டிநேவிய நாடுகள் பற்றிய விவரங்களை சுமோவிடம் நூல் விட்டுப் பாருங்களேன். சந்நிதானத்திடம் பேசும் முறைபற்றி உங்களுக்கு தனியே சொல்லத் தேவையில்லை இருந்தாலும் இதை முயற்சித்துப் பார்க்கலாம் “மஹா கணம் பொருந்திய தத்துவ ஆசானே, மனித குலம் தோன்றிய நாள் தொட்டு உருவான சிந்தனையாளர்களின் மொத்த சாராம்சமே, சுயமோகனிய மூலவரே.. தயை கூர்ந்து இந்த ஸ்காண்டிநேவிய நாடுகளில் ஊழல் இல்லை என்பது பற்றிய எனது லிங்கை ஒரு பார்வை பாருங்களே. லிங்கை பார்த்தாலே போது ஆண்டவரே.. அதை க்ளிக் கூட செய்ய வேண்டாம். கடவுளே அந்த லிங்கில் இருக்கும் தேதியும் மாதத்தையும் ஆங்கில எழுத்துக்களையும் பார்க்க முடிகிறதா உங்களுக்கு”

   சரி அதியமான், வினவில் விவாதம் என்பது பொது இடத்தில் நடக்கும் விவாதம் போலத் தான் இருக்கும். எல்லா தரப்பும் வருவார்கள்.எல்லா வகையாகவும் பேசுவார்கள். அவர்களை கன்வின்ஸ் செய்ய முடியவில்லை என்பது உங்கள் குறை தானே ஒழிய அவர்கள் பிழை அல்ல. சந்நிதானத்தைப் பொருத்தளவில் அப்படியல்ல – அங்கே ஒரு வார்த்தை – ஒரே வர்த்தை – ஒருவரின் வார்த்தை மட்டுமே இறுதி. சுயமோகனியத்தை நீங்கள் லேசாக ‘டிச்சு’ பண்ணினால் கூட தூக்கி குப்பை வீசி விடுவார்கள். வேண்டுமானால் போய் அங்கே பேசப்படும் ‘உள்ளொளி’ ‘மனஎழுச்சி’ என்பன போன்ற வார்த்தைப் பசப்பல்களை ஒரு பேச்சுக்காவது மறுத்துப் பாருங்களேன் – உங்களுக்கே புரியவரலாம்.

  • வினவு ஒளிரும் நிலவை சுட்டி காட்டுகிறது..!!! ஆனால்,அதியமானும் அவரது கூட்டமும் சுட்டும் விரலையே பார்க்கின்றார்கள்…!!!

  • அவர் தளத்தில் தனி மனித தாக்குதல்கள் கிடையாது. எல்லோரும் நண்பர்கள் தாம். பண்பு மிக்கவரகள். மாற்று கருத்துகள் இருந்தாலும். அதனால் அங்கு நானும் பண்புடன் நடந்து கொள்வது சாத்தியம் மற்றும் தேவை”

   அதியமான் !

   இது தவறான பேச்சு.

   ஜெயமோகனின் பதிவு என்பது சிங்கத்தில் குகைக்குள் நுழைவதைப்போலாகும். அல்லது ஒரு பேட்டை தாதாவின் இருட்டறைக்குள் சென்று அத்தாதாவைநேரே கேள்வி கேட்பதைப்போலாகும்.

   எனக்கு அனுபவம் உண்டு. ஒருதடவை நான் மாற்றுக்கருத்தை எழுதிய போது, ஜெயமோகன் விளக்கமோ பதிலோ சொல்லாமல், அங்கு வழக்கமாகவே பின்னூட்டம் போடும் ஒரு நாலைந்து பேர் எனக்கு எதிர்வினை எழுதினார்கள். இவர்கள் ஒரு தாதாவின் கூலிப்படைபோல, இவன் யார், இவன் ஐ.பி என்ன? எங்களுக்கு இவனை கண்டுபிடிப்பது சுலம்ப என்றெல்லாம் அவர்களுக்குள் விவாதித்தார்கள். இக்கூட்டம் அங்கு எப்போது இருக்கும். அவுஸ்திரேலியா, அமரிக்கா, டில்லியிலிந்து ஒரு ஓய்வு பெற்ற தமிழ்ப்பேராசிரியை என்று. ஜெயமோகனின் கட்டுரைகளைப்புகழந்துதான் பின்னூட்டமிடவேண்டும். மாற்றுக்கருத்துகள் இருப்பின், அதை ஒரு மகாராஜாவிடம் எப்படி சொல்லவேண்டுமோ அப்படி அடிமைத்தனாமா பவயந்து சொல்லவேண்டும். அவர் அன்புள்ள என்று ஆரம்பித்து சுற்றிவளைத்து மாற்றுக‌ருத்து சொன்ன‌வ‌னை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ஏண்டா சொன்னோம் என்று நின‌க்கும்ப‌டி முட்டாளாக்கிவிட்ட‌தைப்போல‌ தோர‌ணையில் எழுதுவார்.

   ஜெய‌மோக‌னின் ப‌திவுல‌க‌ம் ஒரு அடிமை உல‌க‌ம். அங்கு அவ‌ர்தான் சாம்ராட். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அவ‌ரின் சாம‌ர‌ம் வீசுப‌வ‌ர்க‌ள்.

   அவ‌ரின் க‌ருத்துக‌ள் என்ன‌ முடிவைச்சொல்லும் என்று முன்பே தெரியுமாத‌லால், அவ‌ரின் க‌ருத்துக‌ள் அஃதோடு உட‌மைகொண்டோராலேயே ப‌டிக்க‌ப்ப‌டும். பின்னூட்ட‌க்கார‌ர்க‌ள் அனைவ‌ரும் அவ‌ரின் ஜால்ராக்க‌ள்.

 9. //கம்யூனிசத்தை விக்கி பீடியா லிங்கு மூலம் அழித்து விடலாம் என்று எண்ணிய அதியமான் அதற்கு மேல் சிந்திக்கும் திறனுடையவர் அல்லர்.///

  அப்படியா ? ‘சிந்திப்பது’ எப்படி என்று சொல்ல முடியுமா ? :))) ஆனால் எம் பேராசிரியர்களுகம், நண்பர்களும், எம்முடன் முரண்படும் பத்திரிக்கையாளர் ஞாநி, திரு.ராஜன் குறை போன்ற பெரு மக்களும் எம் ‘சிந்தனை’ பற்றி வேறு மாதிரி அல்லவா கருதுகிறார்கள் !! அப்ப யார் பார்வை சரி ?

  ///அவரால் விவரங்கள், புள்ளிவிவரங்களை தரமுடிந்த அளவுக்கு அவற்றிலிருந்து உண்மையை கண்டறியும் கலையை அறிய முடியவில்லை.///

  good joke. ஆனா இது உங்களுக்கு தான் மிக மிக பொருந்துகிறது என்று நான் சொல்கிறேன். இந்த ’கலை’ பற்றியும் ஒரு விரிவான கட்டுரை எழுங்களேன் !! :)))

  • ///எம்முடன் முரண்படும் பத்திரிக்கையாளர் ஞாநி, திரு.ராஜன் குறை போன்ற பெரு மக்களும் எம் ‘சிந்தனை’ பற்றி வேறு மாதிரி அல்லவா கருதுகிறார்கள்///

   வாட் ஹேப்பண்டு டூ அ.மார்க்ஸ், பாஸ்கர் சக்தி etc., ஒய் ஆர் தே மிஸ்ஸிங் இன் த லிஸ்ட். ஐ வான்டு நோ த ரீசன் 🙁

 10. வினவு தோழர்களுக்கு,

  அதியமான் என்கிற நபருக்காக இந்த கட்டுரை எழுதப்படவில்லை எனினும் அவரை முன்னிறுத்தி இவ்வளவு பெரிய கட்டுரையை எழுதி உங்கள் நேரத்தையும் எங்களுடைய நேரத்தையும் வீனடிப்பது தவறு. அவரோ இதையும் கூட பப்ளிசிட்டியாகவே எடுத்துக்கொள்கிறார். அதியமான் இப்போது இங்கு பின்னூட்டங்களே இடுவதில்லை, மேலும் அவரை அனைவரும் மறந்து விட்ட இந்த சமயத்தில் எதற்கு அவரை முன்னிருத்தி இப்படி ஒரு கட்டுரை ?

  இதற்கு மாறாக நீங்கள் ஜெயமோகனை அம்பலப்படுத்தி எழுதுவது தான் அவசியமானது. உழல், முதலாளித்துவம், மாவோயிசம், மார்க்சியம் குறித்தெல்லாம் ஜெமோ எழுதுவதற்கும் மறுப்பு எழுதுவது தான் அவசியமானது என்று வலியுறுத்துகிறேன்.

  அதியமான் போன்றவர்களை பொருட்படுத்தி பதிவுகள் போடுவதெல்லாம் வீன் வேலை.

  • நானும் தோழர் தமிழ் கருத்தை வழி மொழிகிறேன். அதியமான் பொருட்படுத்தத்தக்க நபர் போன்று தெரியவில்லை. ஜே. மோ-வே எதிரி. ஒரு சாதி வெறியன், இந்துத்துவ பாசிஸ்ட், கம்யூனிச எதிரி, சிறுபான்மை மக்கள் மீது வன்மம் கொண்டவன் என்பதற்கு ஜெயமோகன் கதைகளும் கட்டுரைகளும் சாட்சி. அவ்வப்போது குறுக்கிட்டு ஜே.மோ.வின் மனித விரோத தன்மையை உரிப்பது அவசியம்.

   • ஜெயமோகன் தனது எதிர் தரப்பின் பிரதிநிதியாக நிறுத்தும் அ.மார்க்ஸ், சி.பி.எம் போன்றவர்களால் ஜெயமோஹனை எதிர்கொள்ள முடியாது. ஆனால் இவர்களை முன்னிறுத்தியே பெரும்பாலும் தமது விஷக் கொடுக்கை தொடுக்கிறார். சமீபத்தில் ஒரு கட்டுரையில் கம்யூனிசத்தை ஆதரிப்பது போல தொடங்கி கரங்களை விரித்து அணைத்து, பிறகு இறுக்கி திருதிராட்டிணன் பாணியில் கொன்று விட துடிக்கிறார். பொதுவாக அவர் தமது கம்யூனிச எதிர்ப்பு கருத்துக்களை தமது வட்டத்தோடு பேசுகிறார். எனவே பொதுவான ஒருவருக்கு உள் நுழையும் வாய்ப்பு இல்லை. பல்பிட்- இன் மேல் நின்று உரையாடும் ஒரு சர்ச் பாதிரிக்கு வாய்க்கும் வசதியைப் போன்றது இது. யாரும் எதுவும் கேட்க முடியாது. இப்படி மதவாதத்தின் அனைத்து கூறுகளையும் கொண்ட ஜே. மோ. மற்றவரை அப்படி அழைப்பது நகை முரண்.

  • முதல் ‘வடை’ பின்னூட்டத்தை காலி செய்த இந்த மொக்கை காவியத்துக்காக உங்கள் ஆட்டோகிராப் எனக்கு வேணும் ஜோதிஜி

 11. Dear vinavu,
  I think this is not going to any where. if this type of intellectual discussion has to happen means vinavu has to built 2 websites. one for the common man and one for the intellectuals .
  ****************
  One point is correct as vinavu said that is when ever the MASS MEDIA TELLS ANY TYPE OF SHIT LIES ALSO THE SO CALLED CRITICAL THINKERS ARE NOT GETTING ANGRY AND THEY ARE JUST WRITING DIPLOMATIC LETTERS CONDEMNING THE BIASED VIEW AND THE TWISTED FACTS WRITTEN BY THE MASS MEDIA AUTHORS . BUT WHEN SOMETHING RADICALLY VINAVU WRITES MEANS FROM MUSLIM GROUPS TO THE INTELLECTUALS TEAR UPSIDE DOWN THE VINAVU. OK BUT ANY HOW THIS IS A KNOWN FACT. SO MY HUMBLE REQUEST IS DO NOT SPOIL THE COMMON PLATFORM BY WRITING THIS TYPE OF ARTICLES . IF U WANT PLS GO A HEAD WITH ELEVATED EXPRESS HIGH WAY VERSION AS VINAVU 2 INTELLECTUALS VERSION 2.
  REGARDS
  RAMESH.K
  CHENNAI

 12. //கம்யூனிசத்தை விக்கி பீடியா லிங்கு மூலம் அழித்து விடலாம் என்று எண்ணிய அதியமான் அதற்கு மேல் சிந்திக்கும் திறனுடையவர் அல்லர்.///

  இந்த வார்த்தைகளில் இருக்கும் உண்மையை அதியமானால் மறுக்கமுடியாது. ஏனென்றால், அவர் ஏற்கெனவே வினவில் அதிகம் பின்னூட்டமிட்டிருக்கிறார். பின்னூட்டங்களில் அதிகம் லிங்குகளே இருக்கும். லிங்குகளை மையமாகக் கொண்டே அவரது விவாதங்கள் அமையும். லிங்குகள் இல்லாமல் அதியமானால் சொந்தமாக சிந்திக்க முடியாது என்பதற்கு அவரது பின்னூட்டங்களே சாட்சி.

 13. “அறிவாளிகள் என்பதனாலேயே மட்டும், சண்டையிடுதல்
  நாகரீகமாகிவிடாது”

  அடேங்கப்பா! எத்தனை வன்மம், எவ்வளவு விரோதம்.
  எங்கே போயின தமிழனின் சகோதரத்துவம்?
  இந்த அணுகுமுறைதான் என்னை போன்ற
  பாமர வேடிக்கையாளனுக்கு நீங்கள் பரிந்துரை செய்கிறீர்களா?

  கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள் எது உங்களை தாக்கிக்கொள்ள செய்கிறது?
  கருத்துக்கள் தானே?
  அக்கறையும் நேசமும் கருணையும் இல்லாத கருத்துக்கள்
  அவை எத்தகு செறிவு மிகுந்ததாயினும்
  செல்வந்தன் சேர்க்கும் வெற்று செல்வத்திற்கு ஒப்பானதல்லவா?

  தன்னை வாசிப்பவனை, தனது பேர குழந்தையை போல வழிநடத்தும் பொறுப்பும்,
  பண்பூட்டும் அரவணைப்பும் இருத்தல் வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கதக்கதா?
  குழந்தைகள் உறங்கியபின் மெல்லிய குரலில் சண்டையிட்டு கொள்ளும்
  பெற்றோரிடம் நாம் கற்றுக்கொள்ள ஒன்றுமே இல்லையா?

  காரல் மார்க்ஸ் யாருடன் இது போல சண்டையிட்டு பார்த்தீர்கள்.
  உங்கள் தந்தை பெரியார் கருத்துபோரை எவ்வண்ணம் கையாண்டார் என்பதை மறந்தீரோ!

  நீங்கள் அரும்பாடு பட்டு உழைத்து சேர்த்த கருத்துக்களும் சிந்தனைகளும்
  மிக மிக உன்னதமானது. ஆனால் உங்கள் தனி மனித விருப்பு வெறுப்பும்,
  வன்மமும், எள் மூக்கின் நுனியும் மிகச்சிறிய முக்கியத்துவம் வாய்ந்தது
  என்பதுதானே அடிப்படை மனிதநேய கல்வி.

  இது உங்கள் அயராத உழைப்பின் மீதான உரிமைக்குரல். இதை தாங்கள் அன்புடன் கவனத்தில்
  எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • வினவின் முழு கட்டுரையையும் படித்து நான் தெரிந்து கொண்ட, புரிந்துகொண்ட கருத்துக்களைக் காட்டிலும் தாங்கள் பின்னூட்டம் வாயிலாக அறிவுறித்தி இருக்கும் கருத்தை உணர்ந்து அடைந்த தெளிவும், நெகிழ்ச்சியும் … தங்களுக்கு என் நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

   பலருக்கு எடுத்துச் சொல்லி உணர்த்த வேண்டிய அருமையான கருத்துக்கள்!

   தங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.

   kanavugall.virpavan@gmail.com

  • @சபரி @மூர்த்தி @கண்ணன் @ஜோஸ் மற்றும் எல்லா ‘நல்லவங்களுக்கும்’

   கேக்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க, நீங்க என்ன சொல்ல வற்றீங்க? பதிவுல தனிநபர் தாக்குதல்னு எங்க இருக்கு. நீங்க எதைப்பார்த்து இப்படி எழுதியிருக்கீங்க.

   அடுத்ததா காரல் மார்க்ஸ், பெரியாரையெல்லாம் நீங்க படிச்சிருக்கீங்களான்னும் என்னால ஒரு முடிவுக்கு வர முடியல.. ஏன்னா அவங்க நடத்தாத போரா சண்டையா, மனுசன்லேருந்து கடவுள் வரைக்கும் கிழிச்சு தோரணமா தொங்க விட்டிருக்காங்க.

   அதுலயும் மூர்த்தி ரொம்ப ஓவர், முழுபதிவுலையும் படிச்சு தெரிந்து கொண்டதை காட்டிலும் சபரி பின்னூட்டத்தை படிச்சு புரிஞ்சிகிட்டாறாம்.. கொடுமையடா சாமி
   பதிவு பேசுவது ஊழலை பற்றி, சபரி எழுதியிருப்பது நீதி போதனை.. இந்த மொக்கையைத்தானே பாட்டி வட சுட்ட கதையிலிருந்து கேட்டுகிட்டு வற்றோம், என்னாத்த படிச்சு புரிஞ்சிகிட்டீங்கன்னும், அதை பதிவுல நீங்க புரிஞ்சிகிட்டதோட ஒப்பிட்டு எழுதினா நாங்க கூட விவரமாயிக்குவோம்.

   முடிஞ்சா எழுதிய பதிவு பத்தி கருத்து சொல்லுங்க இது மாதிரி சம்பந்தமில்லாம விவாததிரியை வளர்க்க வேணாம்… யப்பா முடியல

 14. அதியமான் தனது நெல்லிக்கனியை கொடுத்தாவது ஸ்காண்டிநேவியன் நாடுகளை ஜாக்கி வைத்து தூக்கிவிட்டாலும் அவர்கள் நடத்தும் ஆயுத பேரங்கள், அவர்களது இனத்திமிர் எல்லாம் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. வினவு தோழர்கள் அதியமானுடன் ஒப்பிடுகையில் எனக்குத் தெரிய சோதிட ஆராய்ச்சியில் வேண்டுமானால் ஒன்னாம் கிளாசாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அதில் ஆராய்ச்சி எல்லாம் செய்பவர் அதியமான்.
  அந்த ஜோதிடத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் க்ரோனி கேப்பிடலிசத்தின் வாடை படாமல், சகல சௌபாக்யத்துடன் தூய முதலாளித்துவம் ஸ்காண்டிநேவியன் நாடுகளில் எப்படி நிலவும் என விளக்கலாம். கூடவே சுயமோகன் வகையறா திட்டியதற்கு காரணமான நல்ல நேரம் யாருக்கு கெட்ட நேரம் யாருக்கு என்பதையும் ஆராய்ந்து விளக்கினால் நன்றாக இருக்கும்.

 15. //டேய் முதல்ல புரியுரமாதிரி எழுதுங்கடா!!!

  அன்புள்ள Ram,
  “சபரி உங்கள் கருத்து எனக்கு தெளிவற்றதாக படுகிறது” என்று நீங்கள் கூறலாம்
  இந்த அணுகுமுறையைத்தான் மேலே விரிவாக குறிப்பிட்டுள்ளேன்.அதை வினவு நன்கு அறிவார்.
  அவ்வளவுதான் மற்றபடி, Ram மரியாதைக்குரிய எனது இனிய நண்பர்.

  அன்புடன்

 16. வினவு,
  இந்த நேர்மையற்ற விதண்டாவாதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?
  .
  வினவு பக்க அமைப்பை மாற்றியமை தனது சுய விளம்பர இடுகைகட்கு உதவாததால் சோர்ந்து சும்மா கிடந்த ஒன்றை மறுபடி ஊளையிடப் பண்ணி விட்டீர்கள்.
  .
  எழுத வேறு கதையே இல்லையா?

 17. “People not talk about the world, but about their perception” – Jhon Scolten, an homoeopath.

  அதியமானின் perception சரியா தவறா என்பதை உரசிப்பார்க்க உதவும் கட்டுரை. ஒருவருடைய perception சரியா தவறா என்பதை எப்படி அறிவது? புலனறிவு பகுத்தறிவு நடைமுறை என்கிற மூன்று கட்டங்களினூடாகத்தான் அறிய முடியும். அதற்கு அதியமான் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். அதியமான் அவர்களே! வினவுடன் தொடர்ந்து வாருங்கள். நீங்களும் உண்மையை கண்டறியும் காலம் வரும். அன்பர்களே! அதுவரை அதியமானை சகித்துக் கொள்வோமாக!

 18. எல்லோரும் சேர்ந்தே ஊழலுக்கு எதிராக ‘குழி’ பறிப்போம்.

 19. எந்த ஒரு விவாதமும் எதிர்தரப்புக்கான மரியாதையையும் தர்க்க ரீதியான எதிர்கொள்ளலுமே ஆரோக்கியமான போக்கை உருவாக்கும்.
  பல நேரங்களில் எதிர்தரப்புக்கான மரியாதை அளிக்காத போக்கே நம் தமிழ் சூழலில் அதிகம். வெறும் காழ்ப்பை மட்டுமே உமிழும் கட்டுரைகளை தயவு செய்து எழுதாதீர்கள். இது அந்த கட்டுரையின் சாராம்சத்தை விட்டு விலகி தெரு குழாய் சண்டை தகுதியை உருவாக்கும். உங்கள் கட்டுரைகளை நாகரீகமான வார்த்தைகளில் எழுதினால் எங்களை போன்றவர்கள் புரிந்துகொள்ள இலகுவாய் இருக்கும்.

 20. சபரி 100% முழுமையாக உடன்படுகறேன், இந்த நாகரீகததை தான் நானும் எதிர்பார்கிறேன். நன்றி!!

 21. நண்பர்களே,

  கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. சிலர் கூறியிருக்கும் கருத்துக்கள் குறித்து பதிலளிக்கிறோம்.

  1. இந்தக் கட்டுரை அதியமானுக்காக எழுதப்பட்டதா?
  இல்லை. அதியமான், ஜெயமோகன் இருவரும் விவாதித்த முதலாளித்துவத்தின் பிரச்சினைகள் குறித்த பொய்த் தோற்றங்களை விமரிசிப்பதே முதல் நோக்கம். நல்ல முதலாளித்தவம், ஊழலற்ற ஐரோப்பிய நாடுகள், முதலானவற்றை அம்பலப்படுத்தும் பகுதிகளே கட்டுரையின் முக்கிய அங்கம்.

  அடுத்து இப்படி தமது மனச்சாய்வுகளுக்கேற்ற முறையில் விமரிசிக்கும் இருவரும் எதில் முரண்படுகிறார்கள் என்பது குறித்த அம்சம் இடம்பெற்றிருக்கிறது.

  2. இந்தக் கட்டுரை தனிப்பட்ட தாக்குதல் மற்றும் வன்மத்துடன் எழுதப்பட்டிருக்கிறதா?

  நிச்சயம் இல்லை. இந்தக் கட்டுரையில் ஜெயமோகன், அதியமான் இருவரது கருத்துக்கள் மட்டுமே தீவிரமாக விமரிசிக்கப்பட்டிருக்கின்றன. மற்ற படி மைக்மோகன் என்பதெல்லாம் தனிப்பட்ட தாக்குதல் இல்லை. அது மைக் கிடைத்தால் நான்ஸ்டாப்பாக பேசும் அரசியல்வாதியைப் போன்று ஜெயமோகனும் படுத்துகிறார் என்பதை மட்டுமே குறிக்கிறது.

  அடுத்து அதியமானை மதவாதி என்று சொல்லி இழிவுபடுத்தியவர் ஜெயமோகன். அந்த இழிவைக்கூட கண்டுகொள்ள முடியாத அவலநிலையில் அதியமான் இருக்கிறார். இதைத்தான் கட்டுரை மெல்லிய பகடியுடன் பேசுகிறது. இதுவெல்லாம் தனிப்பட்ட தாக்குதல் என்று எப்படி சொல்ல முடியும்?

  இரண்டு போலி அறிவு ஜீவிகளின் போலித்தனத்தை எடுத்தியம்புவதோடு, நேர்மறையில் முதலாளித்துவ சமூக அமைப்பின் இயக்கத்தை அதாவது அது ஊழல் என்ற அடிப்படையில் மட்டுமே செயல்பட முடியும் என்பதைத்தான் இந்தக்கட்டுரை பேசுகிறது. இதன்றி வேறு எதுவும் அல்ல.

  நேரடியாக இந்த விசயங்களை விள்க்குவதை விட இருநபர்களின் வாதங்களை அடிப்படையாக வைத்து விவாதிக்கும் போது புரிவதற்கு சுலபமாக இருக்கும்.

  மார்க்ஸ், லெனின், போன்றோரெல்லாம் போலி அறிவு ஜீவிகளை அம்பலப்படுத்துவதற்கு பொருட் செறிவு மிக்க விதவிதமான அடைமொழிகளையும், பட்டப் பெயர்களையும் கண்டு பிடித்திருக்கிறார்கள், பயன்படுத்திருக்கிறார்கள்.

  இறுதியாக ஒரு நபரின் கருத்து எந்த அளவுக்கு சமூக நலனையும், அக்கறையையும் கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அவரோடு இனிமையாக உரையாட முடியும். ஜெயமோகனது கருத்தில் சமூக அக்கறையை கேலி செய்யும் மேட்டிமைத்தனமும், மைக்மோகனிசத்தை ஆபாசமாக முன்னிறுத்துவதும்தான் இருக்கும். ஆகவே அவரோடு எங்களோடு இனிமையாக உரையாட முடியாது. இதில் தனிப்பட்ட பகை ஏதுமில்லை.

  • வினவு தோழர்களுக்கு,

   “மன்னிக்கவும் அதியமான், நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளியல் முன்மாதிரியை ஒரு மத நம்பிக்கை போல முன்வைக்கிறீர்கள்.”

   இதன் பொருள் அதியமான் ஒரு மதவாதி என்பதன்று. ஆனால் ஜெயமோகன் சொன்னதை திரித்து அதியமான் ஒரு மதவாதி என்று ஜெயமோகன் கூறிவிட்டதாக தாங்கள் எழுதுவது இந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்ததைப்போல் தோன்றுகிறது.

   “அசுரன் கூட அதியமானை மதவாதி என்று கூறியதில்லை; ஆனால் ஜெயமோகன் இப்படி கூறிவிட்டாரே ஐயோ பாவம் அதியமான்”

   “அடுத்து அதியமானை மதவாதி என்று சொல்லி இழிவுபடுத்தியவர் ஜெயமோகன். அந்த இழிவைக்கூட கண்டுகொள்ள முடியாத அவலநிலையில் அதியமான் இருக்கிறார்.”
   என்று தாங்கள் அதிமான் பால் கொண்ட கவலையும், அக்கறையும் எம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

   “நேரடியாக இந்த விசயங்களை விள்க்குவதை விட இருநபர்களின் வாதங்களை அடிப்படையாக வைத்து விவாதிக்கும் போது புரிவதற்கு சுலபமாக இருக்கும்.”

   முதலாளித்துவ சமூக அமைப்பு ஊழல் என்ற அடிப்படையில் மட்டுமே செயல்பட முடியும் என்ற கருத்தை தங்கள் கட்டுரை விளக்கினாலும் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஜெயமோகன், அதியமான் இருவரையும் போட்டுத்தாக்கும் தங்களின் முனைப்பே துறுத்திக்கொண்டு முன்னிற்பதாக தோன்றுகிறது.

   வாசகர்கள் எதை எப்படி புரிந்துகொண்டிருப்பார்கள் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?

   • எதையாவது சொல்லும் போது முழுவதும் சொல்லனும் இந்தமாதிரி செய்யப்பிடாது

    சுயமோகன் சொன்னது இது…..

    @@@@@@@@@@@

    ………. முன்முடிவுள்ள ஒருவரிடம் விரோதம் வரை விவாதித்துச்செல்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆகவே மதவாதிகளிடம் விவாதிப்பதில்லை. அதே கரணத்தால்தான் அவதூறுகளைப் பொருட்படுத்துவதும் இல்லை.

    மன்னிக்கவும் அதியமான்,நீங்கள் ஒரு முதலாளித்துவ பொருளியல் முன்மாதிரியை ஒரு மதநம்பிக்கை போல முன்வைக்கிறீர்கள், நீங்கள் நம்புவதை நிறுவியாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்…………

    @@@@@@@@@@

    இதை படித்தாலே அதியமானை மதவாதி என்று சொல்வது தெளிவாக விளங்கும். இல்லாவிட்டால் இங்கே மதவாதியை தேவையில்லாமல் வம்புக்க இழுப்பானேன், அதுவும் ஜெயமோகன் அப்படி செய்வாறா என்பதை அவர் சீடர்களே பரிசீலிக்கட்டும்.
    இதையெல்லாம் கூட விளக்கி புரிய வைக்கவேண்டிய இந்த சமகால தமிழ் சூழலில் ஜெயமோகன் ஆதீனமாக தன்னைக் கருதிக்கொள்வது ஒன்றும் வியப்பில்லை

    8888888888

    இந்த பதிவு இரண்டு போலி அறிவுஜீவிகளை விமர்சனம் செய்வதனூடாக முதலாளித்துவ ஊழல் அமைப்பை விளக்குகிறது. அந்த விமரிசனத்தைக் கூட பொறுத்துக்கொள்ளவியலாத பாஸிஸ்டுகளால நிறப்பிப் போன இந்த சமகால தமிழ் சூழலில் வினவின் தேவை இன்றியமையாததாகிறது.

  • அற்புதம் வினவு, மிக அருமையான பதில்.

   ///மார்க்ஸ், லெனின், போன்றோரெல்லாம் போலி அறிவு ஜீவிகளை அம்பலப்படுத்துவதற்கு பொருட் செறிவு மிக்க விதவிதமான அடைமொழிகளையும், பட்டப் பெயர்களையும் கண்டு பிடித்திருக்கிறார்கள், பயன்படுத்திருக்கிறார்கள். /// ஆசான் மாவோவை காட்டிலுமா தோழர்?

 22. // நல்ல முதலாளித்தவம், ஊழலற்ற ஐரோப்பிய நாடுகள், முதலானவற்றை அம்பலப்படுத்தும் பகுதிகளே கட்டுரையின் முக்கிய அங்கம்.///

  இல்லை. அப்படினீன்னு நீங்க தான் claim செய்கிறீர்கள்.

  ஜெவிடம் மேட்டிமை திமிர் எதுவும் இல்லை. உம்மிடம் தான் நிறைய தெரிகிறது. மாற்று கருத்தை சொல்கிறார் என்பதாலேயே வன்மத்துடன், வெறும் ஏச்சுகளை மட்டும் தொடர்ந்து பேசி வருகிறீர்கள் என்பதே பலரின் கருத்து. ‘நோக்கங்களை சந்தேகப்படுதல்’ என்ற வியாதி உங்களிடம் இருக்கிறது. You ascribe motives to people who differ with you in a crazy and irrational manner, while no such ‘motives exist in reality.

  இடதுசாரி சிந்தனைகள் தான் எப்போதும், எங்கும் ஊழலுக்கும், சர்வாதிகாரத்திற்க்கு வழி வகுத்திருக்கின்றது. கம்யூசித்தை உருவாக முயன்ற அனைத்து நாடுகளும், போக போக ‘சமூக ஏகாதிபத்தியமாக’ சீரழிந்ததாக நீங்களே சொல்கிறீர்கள். ஆனால் அதற்க்கு காரணம் திரிபுவாதிகளும், முதலாளித்துவ சக்திகளின் சதியும் என்று நீங்களே ஒரு மிக தவறான காரணத்தை கற்பிதம் செய்து கொண்டு, மாயையில் தொடர்ந்து வாழ்கிறீர்கள். அறிவுலகம் அப்படி கருதுவதில்லை. சோசியலிசம் என்ற பெயரில் அதிகாரங்கள் அரசிடம் மிக அதிக அளவில் குவிந்தால், அது சர்வாதிகாரத்திற்க்கும், ஃபாசிசத்திற்க்கும், ஊழலுக்கும் கண்டிப்பாக இட்டு செல்லும் என்பதே உலக வரலாறு தரும் பாடம். ஜனனாயக பாணி சோசியலிசமும் ஏறக்குறைய இதே விளைவுகளை தான் ஏற்படுத்தும் என்பது இந்திய வரலாறு காட்டும் உண்மை. இங்கு, இந்திரா காந்தி காலத்தில் இது உச்சமடைந்தது. Mixed economy with a ‘socalistic’ slant என்றும் crony capitalism மற்றும் ஊழலை உருவாக்கும் என்பதற்க்கு இந்தியாவே நல்ல உதாரணம்.

  மாற்றாக, உண்மையான சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை சீரிய முறையில் செயல்படுத்திய அனைத்து நாடுகளும் இன்று வளரந்த நாடுகளாக, லிபலரல் ஜனனாயகம் கொண்ட நாடுகளாக, ஊழல் மிக குறைந்த நாடுகளாக உருமாறியுள்ளன. The proof is right in front of us while you refuse to look at this and continue you to live in your delusions.

  ஸ்காண்டினேவிய நாடுகளில் ஊழல் மிக மிக குறைவு. ஆனால் 100 சதம் கிடையாது என்று சொல்லவில்லையே. அப்படி 100 சதம் perfect ஆனா அமைப்பு,, நாடு உருவாக சாத்தியமில்லை. ஆனால் அங்கு போஃபர்ஸ் போன்ற விதிவிலக்குகளை ’மட்டும்’ வைத்துகொண்டு, பொத்தாம் பொதுவாக அங்கும் முதலாளித்துவ ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்று பேசுவது உங்க பாணி ! பொத்தாம் பொதுவாக எல்லாத்தையும் ஒரே தட்டில் வைத்து வெற்று கோசம் பொடுவது. மொத்த உலகத்தை black and white ஆக மட்டும் பார்ப்பது. No place for shades of gray that exist everywhere, in your perspective.

  தேவ குமாரன் மீண்டும் வருவான், பொன்னுலம் இட்டு செல்வான், பாவிகளே நீங்கள் கர்த்தரின் பாதைக்கு வந்து, நல்ல வழியில் சென்று பயன் அடையுங்கள் என்று சில தீவிர கிருஸ்த்துவ குழுக்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களை ஒத்தவர்கள் தான் நீங்களும், இரு groupகளில் உள்ளவர்களும் தன்னலம் இல்லாத idealists தான். உண்மையில் உங்க ‘வழி’ தான் மக்களை உயிவிக்க, அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க ஒரே வழி என்று மனப்பூர்வமாக நம்புகிறீர்கள். சரி, அது உங்க அடிப்படை உரிமை.
  ஆனால் ஏச்சுகளிலானும், தனி மனித தாக்குதல்களினாலும் அதை செய்ய தேவை இல்லை.

  மேலும் யார் நிஜ அறிவுஜீவி, யார் போலி என்று நீங்களே சொல்லிக்கொள்ள வேண்டாமே.

 23. சோசலிசம் என்பது ஒடுக்குமுறை,தனி மனித உரிமை பறிப்பு என்பதுடன் நிற்கவில்லை.சோசலிச நாடுகளில் ஊழல்,குழு அரசியல் இருந்ததே இல்லை என்று சொல்ல முடியுமா.சோவியத் யூனியனும் ஆய்த வியாபாரம் செய்திருக்கிறது.முதலாளித்துவம் 100% மோசம், சோசலிசம் 100% சுத்தம் என்று வாதிடுவது மடத்தனம்.ஏனெனில் சோசலிச நாடுகளில் நடந்த உட்கட்சி அரசியல் போராட்டங்கள்,களையெடுப்பு,தலைமைக்கான மோதல்களில் ஒரு சாரார் இன்னொரு சாராரை ஒடுக்க பயன்படுத்திய முறைகள் கொடூரமானவை.

  நார்வே,டென்மார்க்,சுவிஸ்,ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகள்தான் ஈழத்தமிழருக்கு புகலிடம் கொடுத்து பாரபட்டசம் இன்றி நடத்தின.
  சோசலிச நாடுகள் ஒன்றும் செய்யவில்லை.ஐரோப்பிய நாடுகளை விமர்சிப்பவர்கள் ஸ்டாலின்,மாவோ செய்த ஒடுக்குமுறைகளை ஆதரிக்கிறார்கள்.இது ஒன்றே போதும் அவர்களின் ‘சொர்க்க தேசம்’ எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ள. ஐரோப்பா சொர்க்கம் இல்லை,அதே சமயம் அது இம்மென்றால் சிறைவாசம், ஏனென்றால் வனவாசம் என்றிருந்த சோசலிச நாடும் இல்லை.ஈழத்தமிழ்ர்களைக் கேளுங்கள், ஐரோப்பிய நாடுகள் எப்படிப்பட்டவை என்று. இன்றும் ஈழம் குறித்த அக்கறை ஐரோப்பிய நாடுகளிடம் இருக்கிறது. வெனிசுலாவின் சவேஸ், க்யுபாவின் காஸ்ரோ ஆதரிப்பது ராஜபக்சேயை.இதுதான் நாங்கள் கண்ட சோசலிசத்தின் உண்மை முகம்.

 24. வினவு ஆசிரியருக்கு என்னுடைய நன்றி.
  நான் எந்த சித்தாந்தத்தையும் முழுமையான உண்மை என்று இறுதி முடிவு எடுக்கவில்லை. உங்கள் தரப்பையும் நாகரீகத்துடனேயே ஏற்றுக் கொள்ள விரும்புகிறேன்.
  உங்கள் கட்டுரைகளின் வழியாக உங்கள் தரப்பை நீங்கள் முன்வைக்க உங்களுக்கு முழு உரிமை உண்டு.
  தயவுசெய்து தவறாக நினத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் கோபமும் என்னால் புரிந்துக் கொள்ளக் கூடியதே. அந்த கோபத்தை நாகரீகமான மொழியில் முன் வைப்பீர்களானால் அரசியலை கற்றுவரும் எங்களை போன்றவர்களுக்கு பேருதவியாய் இருக்கும். இதை தக்களிடல் எதிர்பார்ப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறதெனநினைக்கிறேன்.
  சபரி என்றநண்பர், தன்னை இழிவுசெய்த மற்மொழிக்கு எவ்வளவு பண்பாக பதில் அளித்தார் என்பதை மேலே உள்ள பின்னூட்டத்தில் பாருங்கள். அதுவே விமர்சனத்தை எதிகொள்ளும் பண்பான வழி. அநாகரீகமான மறுமொழியை நீங்களே நீக் விடலாம் அல்லவா?

 25. //அதியமானுக்கு எதிர் கருத்து கொண்டிருப்பவர்களை அவர் தகாத வார்த்தைகளால் பேசுவது வினவில் மட்டும்தான்//
  வினவில் மட்டும் இல்லை. ஆழமாக எதிர் வாதம் இடும் பிற தளங்களில் கூட

 26. அன்பு நண்பர் கேள்விக்குறி அவர்களுக்கு.
  உங்களுக்கு பெரியாரும் காரல் மார்க்சும் முழுவதுமாக புரிந்து கொள்ள முடிந்ததற்கு வாழ்த்துக்கள். நான் சொல்ல வந்ததை திசைதிருப்பி இருக்கிறீர்கள்.
  நாம் பின்பற்றும் அதே அரசியலையும் விவாத நாகரீகத்தையும் நம் எதிர்தரப்பும் பின்பற்ற உரிமை இருக்கிறது அல்லவா? அப்படி இருக்கும் போது அதை நாகரீகத்துடன் முன்வைக்கும் தார்மீகம்நமக்கு உண்டென்று நினைக்கிறேன்.
  நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் தான் ஆனால் மற்றவர்களின் கடவுள் நம்பிக்கையில் தலையிடுவது தவறென்று நினைக்கிறேன். பெரியார் கடவுள் சிலைகளை செருப்பால் அடித்தார். அதற்கு அவருக்கு முழு உரிமை இருக்கிறது.
  ஏனெனில் அவருக்கு அதில் நம்பிக்கை இல்லை. அதை யாரும் ஆட்சேபிப்பது தவறு.
  அதேபோல் பெரியாரை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பெரியார் சிலையயை செருப்பால் அடிக்க அவர்களுக்கும் உரிமை வந்துவிடும் அல்லவா? அதை தவறென்று எப்படி சொல்ல முடியும். ஆனால் அப்படி நடப்பது நாகரீகமான பண்பான வழியாகுமா? என்று யோசித்துப் பாருங்கள்.
  அதனால் தான் நான் அப்படி சொன்னேன்.

  • கண்ணன், மறுபடியும் என்னென்வோ பேசுகிறீர்கள்.., இங்கே அநாகரீகமாக என்ன நடந்தது என்பதை சுட்டிக்காட்டினால் தகும், ஏனென்றால் கண்ணில் கிருஷ்ணாயில் ஊற்றி தேடினாலும் எனக்கு கிடைக்கவில்லை.. பிறகு இங்கே கட்டுரை பேசும் பொருளுக்கு சற்றும் சம்பந்தமேயில்லாமல் பின்னூட்டம் எழுதுவது என்பது நம் அனைவரின் நேரத்தையும் வீண்டிக்கும் விசயம் அல்லவா. சற்று பரீசீலித்து பாருங்கள்..

 27. தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி, எங்களது கருத்துக்கு
  கனிவுடன் மதிப்பளித்து பதில் தந்தமை உங்கள் பெருந்தன்மையை
  காட்டுகிறது. நீங்கள் பதில் அளித்த முறையில் உங்களுக்கும் எங்களுக்குமான
  உள்ள இனிய உறவை, “சக நண்பர்களுக்கு” எடுத்துக்காட்டி விட்டீர்கள்.

  எமது வேண்டுகோள் தங்கள் சிந்தையில் ஒரு சிறு சாரல் துளி போல்
  எதிர்கால பரிசீலனைக்காக இடம் பெற்று இருக்கும் என்ற நம்பிக்கைகளுடனும்,
  மிக்க நன்றிகளுடனும் இந்த உரையாடலை முடித்து கொள்கிறோம்.

 28. கௌண்டமணி – டேய் நாதாரி, பட்ட படிப்பு படிச்சாங்களாம், ஆராச்சி எல்லாம் செய்யறாங்களாம் …….. இவனுங்களுக்கு வேறு வேலை இல்லை, நம்மள பாரு, ரோட்டோரமா டீ கடை பெஞ்ச்சுல காலை நீட்டி போயிட்டு வரவங்களை திட்டுறேன், நீ அப்படி இரு, நீ இப்படி இருன்னு அட்வைசு செய்யறேன், அதுக்கு மேல இந்த உலகத்து அரசியலையே ஒரு கலக்கு கலக்கி ஒபாமா முதல் ஒசாமா வரை விமர்சனம் செய்யுறேன் ……. நான் பெரிய ஆளா இல்லாட்டி வேறு எவனோ ஒருவன் பெரிய ஆளா????

  செந்திலு – அண்ணே, அது எப்படி அண்ணே சரியாகும், நீங்க வேலை வெட்டி இல்லாமதானே படுத்து கிடக்கறீங்க, ஆனா அவுகளோ ஒழைச்சு படிச்சு உருப்படியா
  இருக்காங்களே??

  கௌ: டேய் அரிசி முட்ட தலையா, இவன் என்னதான் படிச்சாலும் அவன் சொன்னத கேட்க யாருடா இருக்கா?? எனக்கு அப்படியா?? எனக்கு வெயட்டு எவ்வளோ?? உனக்குதான் தெரியுமே??

  சென்: அண்ணே சொல்லுறேன்ன்னு தப்பா எடுத்துகிடாதீங்க, வேளா வேளைக்கு சோத்த நல்ல தின்னுட்டு, வேலையும் ஏதும் செய்யாம சும்மா வெட்டியா
  நீங்க இருந்ததால அப்படி இப்படி ஒரு நூறு கிலோ மேல வெயட்டு இருக்குமண்ணே!!!

  கௌ: டேய் நான் அத்த சொல்லலடா எரும வாயா, நான் சொன்னது என் அறிவ உணருர ரசிகர் சமுதாயம் பற்றி…..

  சென்: அது யாருங்க ???

  கௌ: டேய் வேணாம், உசிரோட போக மாட்ட …….

  சென்: ஐயோ அடிக்காதீங்க ………… இப்போ புரியுதண்ணே, நான், நம்ம சப்பாணி, முடிச்சவிக்கு மன்னாரு, புளித்திருடன் பன்னீரு, கோழித்திருடன் கோவாலு,
  ராங்சைடு ராமரு போன்ற நம்ம அறிவுள்ள நண்பர் வட்டத்ததானே சொல்லுறீங்க !!!

  கௌ: டேய் மாங்கா மண்டையா பரவா இல்லைடா உனக்கும் அறிவை அப்பப்போ யூசு பண்ணதெரியுதே……….. தேரிட்டடா நீ மாங்கா மண்டையா….. இப்போவாவது ஐயா யாருன்னு உனக்கு தெரியுதே …….

  சென்: அட அதெல்லாம் இல்லீங்க,

  கௌ: அப்போ நீங்களெல்லாம் என் ரசிகர்கள் இல்லையா, நான் அறிவாளி இல்லையா, நான் பெரிய ஆள் இல்லையா, எனக்கு உங்கள மாதிரி ரசிகர் கூட்டம் இல்லையா??

  சென்: நான் அப்படி சொல்லலீங்க அண்ணே….

  கௌ: அப்போ என்ன எப்படி சொல்லுவீங்க மிஸ்டர் எருமை அவர்களே????

  சென்: வேற எப்படியும் இல்லை அண்ணே “எருமைகளால் பெருமை அடைந்த ஐயோ பாவம் ஆனாமத்தே” என்றுதான்!!!!

  • சூப்பர்யா, ஜெமோ-அதியமானை இப்படிக்கூட போட்டு தாக்கலாம் போலிருக்கே, இது தெரியாம இவ்வளோ பெரிய்ய்ய கட்டுரை எழுதியிருக்காங்க இந்த வினவு

 29. முதல் ‘வடை’ பின்னூட்டத்தை காலி செய்த இந்த மொக்கை காவியத்துக்காக உங்கள் ஆட்டோகிராப் எனக்கு வேணும் ஜோதிஜி

  நன்றி கேள்விகுறியாரே? விடுங்க உங்க ஆசையை நிறைவேற்றும் காலம் வராமலா போய்விடும். சென்னையில் வந்து சந்திக்கும் போது உங்கள் ஆசை நிறைவேறக்கடவது. சரிதானே?

  அப்புறம் அதியமான அவர்களே வினவு தளத்தில் எழுதும் சித்ரகுப்தன் அடிக்கடி சொல்லும் சில விசயங்களை நினைவுக்கு வந்து போகின்றது.

  ஆனால் அவர் இந்த விமர்சனங்களை வெளியேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கக்கூடும். வினவு தளத்தில் பிராமணர் என்ற வார்த்தை வந்தாலே விமர்சனங்கள் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். உருப்படியான ஆக்கபூர்வமான கட்டுரைக்கு ஒன்றுமே வராது. இதில் முகவரி இல்லாமல் உரையாடும் தோழர்கள் இதற்கு பதில் அளிக்க வேண்டுகின்றேன்.

  பிராமணர்களுக்கு அப்புறம் நம்ம கொங்கு சிங்கம் (இவர் பிராமணர் இல்லைங்கோ?) அதியமானுக்குத்தான் சதம் தாண்டும் போலிருக்கு.

  அதியமான கவலைப்படாதீங்க.

  வலையுலக பின்னோட்ட புகழ் ராம்ஜி யாகூவுக்குப் பிறகு (வினவு தளத்தில் விமர்சனம் கொடுத்து இருக்கிறாரா?)மொத்த வினவு தளத்தில் பல விதங்களிலும் அதிர்வுகளை உருவாக்கியவர் நீங்கள் தான் என்பதை தோழர்கள் உங்களுக்கு மரியாதை செய்துள்ளார்கள் என்பதாக எடுத்துக் கொள்ளுங்க.

  • பிராமணர்களுக்கு அப்புறம் நம்ம கொங்கு சிங்கம் (இவர் பிராமணர் இல்லைங்கோ?) அதியமானுக்குத்தான் சதம் தாண்டும் போலிருக்கு.
   அதியமான கவலைப்படாதீங்க.
   வலையுலக பின்னோட்ட புகழ் ராம்ஜி யாகூவுக்குப் பிறகு (வினவு தளத்தில் விமர்சனம் கொடுத்து இருக்கிறாரா?)மொத்த வினவு தளத்தில் பல விதங்களிலும் அதிர்வுகளை உருவாக்கியவர் நீங்கள் தான் என்பதை தோழர்கள் உங்களுக்கு மரியாதை செய்துள்ளார்கள் என்பதாக எடுத்துக் கொள்ளுங்க.

   ஜோதிஜி !

   பிராமணன் என்பவனை விட பிராமணனின் வாழ்வியல் கொள்கைகள் உயர்ந்தவை என்று சொல்லும் பிராமணனல்லாதவனிடம் கவனம் தேவை.

   அதியாமானில்ன் தளத்தில் எனக்கு அனுபவம் உண்டு. வருணக்கொள்கையே சிறந்தது என அவரெழுத நான் அதை மறுக்க, அவர் இப்படி தொடங்கி தான் எழுதியதை வலியுறுத்தினார்:

   ‘நான் திமுக குடும்பத்திலிர்ந்து வந்தவன். ஆனாலும் சொல்கிறேன் பிராமணர்கள் வகுத்த கொளகையே நல்லது’

   அப்பட்டமான பார்ப்பன ஜாதீய வெறியரான் டோண்டு பதிவில் அவரின் ஜாதியம் சரியே என்று என்னிடமும் மற்றவர்களிடம் அங்கே சொன்ன்னார்.

   பிராமணர் என்ற வார்த்தை வந்தாலே விமர்சனங்கள் வந்து விழுந்து கொண்டேயிருக்கும்
   என்று சொன்னால், அதியாமான் என்ற இரட்டைபிராமணன் என்று சொன்னால் ?

   Personally I hav no prob with anyone, whether he is a paarppanar or paarppana adivarudi, as they have right to their opinion. I only point out here that Adihiyaman is a fantasising double brahmananan.

   There r a lot of such people among us.

   • Jo.Amalan,

    ////வருணக்கொள்கையே சிறந்தது என அவரெழுத நான் அதை மறுக்க, அவர் இப்படி தொடங்கி தான் எழுதியதை வலியுறுத்தினார்:

    ‘நான் திமுக குடும்பத்திலிர்ந்து வந்தவன். ஆனாலும் சொல்கிறேன் பிராமணர்கள் வகுத்த கொளகையே நல்லது’

    அப்பட்டமான பார்ப்பன ஜாதீய வெறியரான் டோண்டு பதிவில் அவரின் ஜாதியம் சரியே என்று என்னிடமும் மற்றவர்களிடம் அங்கே சொன்ன்னார்.///

    நான் எப்போது, எங்கே இவ்விதம், வருணக்கொள்கையே சிறந்தது என்று சொல்லியிருக்கிறேன். அபாண்டமான பொய் பேசுகிறீர்கள். நான் ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்தவன் என்றும் எழுதியிருக்கிறேன்.

    சும்மா இஸ்டத்துக்கு உடாதீங்க.

    இதே பாணியில், கேனத்தனமாக ஜெ வின் தளத்தில் விவாதித்திருப்பீர்கள். அதன் விளைவுகளை பற்றி இங்கு புலம்புகிறீர்கள். உங்களை எல்லாம் சீரியசா எடுத்துக்கிட்டது தான் தவறு.

    • ஜெயின் தளத்தில் நான் இருமுறை எழுதியிருக்கிறேன். இரண்டாம் முறையில் அவர் கருத்துக்கு எதிர்கருத்தை வைக்கும்போது அவர் ஏன் பதில் எழுதவில்லை?

     கேணத்தனமா இல்லையா என்பதை படித்தபின்னர்தான் தெரியலாம். படிக்காமலே கேணத்தனம் என்பதே கேணத்தனம் ! 🙂 அதியமான் இக்கேணத்தனத்தை விடுவீர்களா?

     ஜெயின் தளம் ஒரு சிலருக்கே. அவர்கள் அவரின் ஈகோவுக்குத் தீனி போடுபவர்கள். வேறு எவராவது என்றால், அவர் எழுதும் கருத்தைப் பொறுத்தே அவருக்கு வரவேற்பு. எத்தகைய வரவேற்பு என்பதை அவரின் கூலிப்படை தீர்மானிக்கும்.

     ஜெ ஒரு அல்ட்ரா சென்சிட்டிவ் ஆசாமி. எல்லா எழுத்தாளர்களுமே சென்சிட்டிவதான். ஆனால் இவர் அல்ட்ரா. எதிர்கருத்து அவருக்கு ஒவ்வா அல்லது அவரின் கருத்தைத் தவறென்று சொல்லுவதை அவரால் தாங்கிக்கொள்ள முடியாது.

     என் எதிர்கருத்து இத்தளத்திலும் தேவர் பற்றிய திரியில் வைக்கப்பட்டிருக்கிறது. படித்து தெரியலாம். கருத்து கேணத்தனமாக இருந்தாலும், அது ஆபாசமாக இல்லாப்பட்சத்தில், அது எதிர்னோக்கி அதற்குரிய மரியாதை கொடுப்பதே மக்கட்பண்பு.

     Instead, who is this guy daring to contradict our beloved writer’s views? is the discussion that went on there when I wrote.

     Every writer and every actor serves our society by their work although they receive remuneration, in cash or kind from society. As members of society, they serve us. It is on us, our approval or disapproval, they survive or perish, as the case may be. They are not heroes for us to worship. If any writer expects more than that is due to him as a writer, he attempts to exploit the approval we, the readers, give him.

     Actors do it more badly than writers. They become politicians and CMs abusing the massive popularity given to them for their fictional roles played in films. Making them heroes spoils them.

     Our writers have been spoilt by us. Writers are different from actors being intellectuals. They should behave better than actors. Keeping a group of toadies in the blog and asking them to attack anyone who questions the views, is goondaism. Jeyamohan is doing that. It is also cowardly to want to surround oneself with sychopants and using them as your wall. Courage is to face contrary opinions and reply to them convincingly.

     Please keep the writers and actors where they should. This is my view which will be expressed everywhere.

     பெரியார்ய குடும்பத்திற்கும் தி மு க குடிபத்திற்கும் எவ்வளவு தூரம் அடிப்படையில் ?

     Support to Dondu Raagavan is support to Varnashradharmam. There are many bloggers like him, who support Varnashradharmam. Dondu Ragavan is not using religion but using politics for that. He uses gutter Tamil to attack the critics of brahminism.

     Ur support to him is well known. In a blog post of urs, you wrote about varnams and I rejoined saying it brought untold suffering to one section of Indian masses for millennia and their sufferings were never recorded in history as Brahmins and their supporters ensured that their voices were muted.

     U have right to express your opinions. V have right to expose such opinions if v think, they are antisocial.

     Stand exposed. If come public, you must be prepared for such exposure!

     • Jo Rayan,

      ///Ur support to him is well known. In a blog post of urs, you wrote about varnams and I rejoined saying it brought untold suffering to one section of Indian masses for millennia and their sufferings were never recorded in history as Brahmins and their supporters ensured that their voices were muted./////

      Prove the above from my blogs. You are bluffing.

      dondu is my good friend in the sense we like and respect each other personally. But that doesn’t mean i agree with all his views and the reverse is also true. I have never supported varnashram or other such narrow minded isims. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நல்ல நண்பர்களாக இருக்க முடியும் என்பதை அறியாவர் நீர். அவரை ‘support’ அல்லது ‘oppose’ செய்வது என்பது பொத்தாம் பொதுவான, கேனத்தனமான வாதம். முன்பு (2007இல்) போலி டோண்டு என்ற மலேசியா மூர்த்தி மிக தரக்குறைவாக, தந்திரமாக போலி அய்டிகள், தளங்களை உருவாக்கி அவரையும் தாக்கி கொண்டே இருந்தான். அவரின் பதிவுகளில் பின்னூட்டம் இட்டவர்களையும் கடுமையாக தாக்கினான். போலி பிளாக்குகள் உருவாக்கி, அவர்களில் பெயர்களை போல அய்டிக்கள் பல டசன் உருவாக்கி, பல இதர தளங்களில் ஆபச பின்னூட்டங்கள் நிறைய இட்டு, பெரும் குழப்பம் செய்தான். தமிழ்மணத்தை உருவாக்கிய நண்பர் காசியை மிக கடுமையாக இதே போல் தாக்கி, அவரை அதை விட்டே போக செய்தான். இந்த காலகட்டங்களில், டோண்டுவை பல பதிவர்கள் ‘support’ செய்தனர். பலரும் அவருடன் முரண்படுகிறவர்கள் தான். ஆனால் அதற்காக ஆபாச பதிவுகள், போலி பெயரில் ஆடிய ஆட்டத்தில், அவருக்கு துணை நின்றவர்கள் தான். இதெல்லாம் தெரியாமல் சும்மா பொத்தாம் பொதுவாக பேச வேண்டாம்.

      பிறகு 2008 மத்தியில் நண்பர் செந்தழல் ரவியின் நேரடி actionஆள், போலிஸில் அவன் சிக்கி, பாஸ்போர்ட் முடக்கப்பட்டு, அவன் குடும்பத்தினர் அவனை பற்றி முழுசா அறிந்து கொண்டு, அவனின் ஆட்டம் முடக்கப்பட்டது.

      ///n a blog post of urs, you wrote about varnams and I rejoined saying it///

      Where and when mister ?

      எம்மை பற்றி சும்மா, ஆதரமில்லாமல் பேச வேண்டாம். நான் வருணாசிரமத்தை, சாதியத்தை, மதவாதத்தை ஆதிரித்தேன் என்பதை ஆதாரத்துடன் நிருபியுங்கள் முதலில். சும்மா வாய்க்கு வந்ததை தொடர்ந்து பேச வேண்டாமே.

      • சென்னைப்பதிவர் கூட்டத்தில் டோண்டு முதல் வரிசையில் வந்தமர, அதை ஒரு பார்ப்ப்னீய ஆதிக்கம் என்ற தொனிபடும்படி அசோக் என்பவர் பதிவு போட அஃது ஒரு பிரச்சினையாக டோண்டுவின் பதிவிலே வாதிக்கப்பட்டது. அங்குதான் அதியமானின் பின்னூட்டத்தைகண்டேன் என்றநினைவு. மூர்த்தி-டோண்டு பிர்ச்சினைக்கும் இதற்கு தொடர்பில்லை. அப்பிரச்சினை காலங்களில் நான் பதிவுலத்தில் இல்லை. அஃது என்னவென்றே அப்போது தெரியாது.

       அது கிடக்க.

       டோண்டு நல்ல நண்பர். ஏன் ஒரு சிலருக்கு மட்டுமே என்பதுதான் புரியவில்லை!

       அரவிந்தன் நீலகண்டன் ஒரு முறை டோண்டுவின் பதிவில் எழுத, அவரை நான் ஒரு பச்சோந்தி என்றேன். ஏனென்றால், இந்து.காமின் ஆசிரியர் குழுவில் இருந்து கொண்டு, “எம்மதத்த்தில் ஜாதிகள் இல. எல்லாரும் சமம். எம்மத்ததை இழிவுபடுத்த மிசுனோரிகள் செய்த சூழ்ச்சி” என்றெல்லாம் எழுதிக்கொண்டு, நான் ஒரு ஐயங்கார் என்று தான் மட்டும் சொல்லாமல், வினவுவில் எழுதும் பார்ப்ப்ன நண்பர்கள் அனைவரும் ஒரு துரோகக்கூட்டம் என்றெல்லாம் எழுதும் டோண்டு ஒரு பார்ப்பன ஜாதி வெறியாளர்; அவரின் பதிவில் அரவிந்தன்நீலகண்டன் எழுதினால், இந்து.காமின் சொல்லிக்காட்டுவேன் என்றவுடன் அ.நீ எழுதவில்லை.

       There are certain basic principles in life with which we are living ardently and passionately. We cant have any truck with anyone, under whatsoever grounds, who has opposite principles.

       Is it possible to have friendship with Hitler who believed in aryan supermacism ? Is it possible for any Jew to accept him saying as you do, ‘He is my best friend, although I dont accept his principles”?

       I used to write in Dondu’s blog only to counter his jaatheeyam hoping one day he will accept that God has not created us as different castes. I will continue to do, but he is clever to block anyone who does not support jaathis. Like Jemo, he keeps company only with Hindutva and jaathi zealots, mostly Tamil brahmins for whom Hindu religion is a tool to play politics with ! No other caste of TN. O, I forget, you are a non brahmin as Johthiji called attention, arent u? And that too, from a periyaarist family, isn’t ? Very very interesting credentials !!

       As I said, you have right to have any principle like ‘I dont like his principles, but he is my friend’ Play with Dondu in the gutter and boast: The particles of the mud have not been on my body anwhere. I am clean ! he..he..:-)

       A tree is known by the frutis it bears and a man is known by the company he keeps. What a sound practical wisdom the Englishman taught us !!

       • ஜோ ராயன்,

        தொடர்ந்து அறிவு கொட்டதனமகாவும், சிறுபிள்ளைதனமாகவுமே பேசுகிறீர்கள்.
        சென்னை பதிவர் சந்திப்பில் ‘அமர்ந்த’ விசியத்தை மிக முட்டாள்தனமாக ஒரு ‘திராவிட’ பதிவர் எழுதி அனைவரின் கடும் கண்டனத்திற்க்கு தான் ஆளானார். அர்த்தப்படுத்தி கொள்வதற்க்கு கொஞ்சம் ‘பகுத்தறிவு’ வேண்டும்.

        எனக்கு தெரிந்து டோண்டு வர்ணாசிரமத்தை, சாதியத்தை ஆதரிப்பவர் அல்ல.
        தொடர்ந்து, நீர் பார்பான் தானே என்று அவரை பலரும் கேட்ட போது, ஆம் நான் வடகலை அய்யாங்கார் தான். அதற்க்கு பெருமை படுகிறேன் என்று பதில் சொன்னார். அவ்வளவுதான். ஒரு தேவர் அல்லது வன்னியர் சாதியில் பிறந்தவரை பார்த்து இப்படி தொடர்ந்து கேட்டால், அவரும் அப்படி தான் பதில் அளித்திருப்பார். ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்பு, இதே போல் இம்சை தாங்காமல், சட்ட சபையில், “ஆம், நான் ஒரு பாப்பாத்தி தான்’ என்று பகிரங்கமாகா அறிவித்தார்.

        தான் அய்யாங்கர் சாதியில் பிறந்தவர் என்பதற்காக வெட்கப்பட வேண்டும், குற்ற உணர்வு அடைய வேண்டும் என்று பலரும் அவரிடம் ‘எதிர்பார்த’ போது தான் அவரின் இந்த எதிர்வினை. மற்றபடி, பிறப்பால் யாரும் உயர்ந்தவர் / தாழ்ந்தவர் அல்ல என்பதே அவரின் நிலைபாடு. நேரில் அவர் எல்லோரிடமும் சாதி / மத / இன பேதம் இல்லாமல் அன்புடன், நட்புடன் தான் பழகுவார்.
        நல்ல நண்பர். பண்பாளர். இதெல்லாம் காட்டுமிரண்டிதனமாகவே தொடர்ந்து பேசும் உமக்கு புரியாது. இட்லர் ரேஞ்சுக்கு அவரை ஒப்பிடுகிறீர். அந்த மூர்த்திக்கும் உமக்கும் அப்ப என்ன பெரிய வித்தியாசம். பார்பானியத்தை எதிர்பதாக நினைத்து கொண்டு, தனி மனித துவேசத்தில் இறங்கும் பண்பற்றா நிலைபாடு தான் இவை.

        அவர் பி.ஜெ.பி அய் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில் நான் முரண்படுகிறேன். அவ்வளவுதான்.

        நான் வருணாசிரமத்தை ஆதரித்து எம் பதிவுகளில் எழுதியுள்ளேன் என்று கூசாமல் பொய் பேசிய நீர், இதுவரை அதை நிருபிக்க முடியவில்லை. பெரிசா டைலாக் மட்டும் தொடர்ந்து உடுகிறீர். உமக்கு அடிப்படை நேர்மை மற்றும் morals இருந்தால் அதை முதலில் நிருபித்து விட்டு பிறகு பேசுக.

        yet you write in your ARROGANCE as :

        //As I said, you have right to have any principle like ‘I dont like his principles, but he is my friend’ Play with Dondu in the gutter and boast: The particles of the mud have not been on my body anwhere. I am clean ! he..he..:-)

        A tree is known by the frutis it bears and a man is known by the company he keeps. What a sound practical wisdom the Englishman taught us !!////

        உம்மை போன்ற பொய்யர்களிடம் இங்கு வாக்குவாதம் செய்வதை தவிர்க்கவே இங்கு பின்னூட்டம் இடுவதை தவிர்க்கிறேன். இருந்தாலும், இது எம்மை பற்றிய மிக personal ஆன விசியம் என்பதால் ‘விளக்கம்’ சொல்ல வேண்டிய கட்டாயம்.

 30. கேஜிபி இந்திய அரசியல்வாதிகளுக்கு காங்கிரஸ்காரர்களுக்கு பணம் கொடுத்ததும், கம்யுனிஸ்ட் கட்சிகளுக்கு பணத்தைநேரடியாக, பதிப்பகங்கள் என்ற பிரிவில் ம்றைமுகமாக கொடுதது ஊழலா இல்லை புரட்சிகர செயல்பாடா.

 31. சிண்டு முடியறதா நல்லவே பண்ணிருக்கிங்க வாழ்த்துக்கள்…

 32. //அடுத்து அதியமானை மதவாதி என்று சொல்லி இழிவுபடுத்தியவர் ஜெயமோகன். அந்த இழிவைக்கூட கண்டுகொள்ள முடியாத அவலநிலையில் அதியமான் இருக்கிறார். இதைத்தான் கட்டுரை மெல்லிய பகடியுடன் பேசுகிறது.//

  ஹையோ ஹையோ கட்டுரை அதை மட்டும் தான் பேசுகிறது…..
  //நேர்மறையில் முதலாளித்துவ சமூக அமைப்பின் இயக்கத்தை அதாவது அது ஊழல் என்ற அடிப்படையில் மட்டுமே செயல்பட முடியும் என்பதைத்தான் இந்தக்கட்டுரை பேசுகிறது.//

  எங்கே பேசுகிறது….. யாரவது பாத்தீர்களா….. விளக்கம் என்று எதையாவது கொடுத்துவிட்டால் போதும்… அதுக்கு மேல கேள்வியெல்லாம் கேட்ககூடதோ???

  • @@@@@@எங்கே பேசுகிறது….. யாரவது பாத்தீர்களா…..@@@@

   தம்ப்ரீ… கபாலத்துல இருக்குற கண்ணை தொறந்து பார்த்தா அது உனக்கும் தெரியும்.

   • அண்ணே …… இந்த கண்ணில்லாத கபோதிக்கு கொஞ்சம் வழிகாட்டலாமில்ல அண்ணே?

    • காட்டிட்டா போச்சு. கட்டுரையில 6 உள்தலைப்பு இருக்கா அதுல 3,4,5,6 தலைப்புகளை படிக்கவும்.

 33. இந்த அதியமானுக்கு உலகத் தமிழ் மக்கள் அரங்கத்துல ஒரு முறை பின்னூட்டம் போட்டுட்டு, அசிங்க அசிங்கமா திட்டு வாங்குனது தான் ஞாபகத்துக்கு வருது. இவுரு ஆர்குட் ஃபோரம்ல போடுற கமெண்ட்டுகள் ரொம்ப டீசண்ட்டாவும், தனியா போடுற கமெண்ட்டுகள் கலீஜாவும் இருக்கும். எதாவது சொன்னா ஒடனே அட்ரஸ் ப்ரூஃப், ஐடி ப்ரூவ், பாஸ்போர்ட், ரேஷன் கார்ட், வொட்டர் ஐடி உள்ளிட்ட அனைத்தின் சிராக்ஸ் காப்பியுடனும் நேரில் தொடர்பு கொள்ளச் சொல்லுவார். ஒரு காமெடி பீசுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையில்லை.

  ”நாம் எழுதுகிறோம்” “எம் மீது கொலை வெறி ஆகிறார்கள்” “எம்மை இழிவு படுத்துகிறார்கள்” என்று ஒரு மடாதிபதி மாதிரியே பேசிக்கிட்டிருக்கிறார் இந்த காமெடி பீஸ். உடனிருந்து நல் வழிப்படுத்த யாரும் இல்லை. அருகில் இருப்பவர்கள் சொம்புமோகன், ஞாநி, அ. மார்க்ஸ் போன்றவர்களாக இருக்கிற படியால் அவ்வாறு எதிர்பார்க்கவும் முடியாது. ஆண்டவரே, இவருக்கு அருள் புரியும்.

 34. First posted with errors. Now w/o errors to adhiyaman

  “தொடர்ந்து அறிவு கொட்டதனமகாவும், சிறுபிள்ளைதனமாகவுமே பேசுகிறீர்கள்.சென்னை பதிவர் சந்திப்பில் ‘அமர்ந்த’ விசியத்தை மிக முட்டாள்தனமாக ஒரு ‘திராவிட’ பதிவர் எழுதி அனைவரின் கடும் கண்டனத்திற்க்கு தான் ஆளானார். அர்த்தப்படுத்தி கொள்வதற்க்கு கொஞ்சம் ‘பகுத்தறிவு’ வேண்டும்.”

  அதுதான் context என்றேனே தவிர அந்த பிர்ச்னையைப்பற்றி அப்போதும் இப்போதும் நான் விவாதிக்கவில்லை. Never I am interested in Chennai pathivar group etc. I am not into inter-blogging as a serious occupation.
  ‘திராவிட பதிவர்’ ? அப்படியென்றால் ‘ஆரியப்பதிவர்’ ஆர்?

  “எனக்கு தெரிந்து டோண்டு வர்ணாசிரமத்தை, சாதியத்தை ஆதரிப்பவர் அல்ல.
  தொடர்ந்து, நீர் பார்பான் தானே என்று அவரை பலரும் கேட்ட போது, ஆம் நான் வடகலை அய்யாங்கார் தான். அதற்க்கு பெருமை படுகிறேன் என்று பதில் சொன்னார். ”

  எனக்குத் தெரிந்து ? தெரியாமல் இருக்கலாம்.

  டோண்டு ஒரு ஜாதி வெறியர் என்பது அதியமானைத்தவிர மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். நீ பார்ப்பாந்தானே என்று கேட்காவிட்டாலும் அவர் தன்னை அப்படித்தான் சொல்லிக்கொள்வது மட்டுமல்ல பிறரும் அப்படியிருக்கவேண்டும் என்று சொல்லி ஜாதி ஆவேசத்தையும் பரப்பி வருகிறார். He supported the girl in Neeyaa Naanaa programme who said w/ any provocation: ‘I am proud to be born as an Iyenagaar’. I wrote apropos this: Shd others need to feel ashamed of their births ? The blog post referring to to this incident, Dondu supported her act. W/o provocation, a person says that.

  There r two worlds:
  1. We are all equal although our conditions are unequal. Births are accidents to which we contributed nothing; and as such, there is nothing to be proud of it. In an egalitarian society, at least, in the society which aspires to be such like ours, all those who believe andn support castes which are imianginary differences, should be out of the society. We have consciously chosen democracy on such principles to erase all differences. Annilhilation of castes is the prime motto of Ambedkar.
  2. We believe that we need social inequalities and castes should be there always. Lower castes and upper castes.
  I live for the 1. If you live for that too, you should condemn the members of No.1. There are many, many who belong to that group. The notorious rat in the no.2 is the man under debate.

  வினவில் எழுதும் பார்ப்ப்ன நண்பர்கள் இதை விட்டுவிட்டு பார்ப்ப்னர்களோடு சேர்ந்து ‘திராவிட இயக்கத்தை’ நசுக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். வருகிறார். ஒரு பார்ப்ப்ன நண்பரின் படத்தையும் அவர் போட்டிருக்கிறார்.

  “ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன்பு, இதே போல் இம்சை தாங்காமல், சட்ட சபையில், “ஆம், நான் ஒரு பாப்பாத்தி தான்’ என்று பகிரங்கமாக அறிவித்தார்.”

  ஆம். பரிதி இளம்வழுதியையும் சட்டசபையில் சாதி சுட்டித் திட்ட, அவர்,
  ‘ஆம்.நான்…. தான்!’ என்று ஏன் சொல்லவில்லை? மாறாக சபாநாயகரிடம்தானே முறையிட்டார்.

  ஏன் பறையர்களும் பள்ளர்களும் சக்கலியர்கள் ஏன் ‘நான் சக்கிலியன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ ” ‘நான் பறையன் என்பதில் பெருமை கொள்கிறேண்’ ‘நான் பள்ளன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்று சொல்ல மறுக்கிறார்கள் அதியமான்?
  இந்த பார்ப்பான்களும் பாப்பாத்திகளுக்கும் மட்டும் ஏன் அந்த ரோசம் வருகிறது ? Remember the dalits are routinely subject to caste slurs all over India. Can anyone repeat as u Dondu ragavan and Jeyalalitha repeat and u support it?
  இதே கேள்வியை நான் பலரிடம் டோன்டுவிடம் கேட்டதற்கு, அவர்களும் பெருமைப்பட வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள்.அப்படியென்றால் கக்கூஸ் கழுவும் தொழிலை, கோயில் மணியடிக்கும் தொழிலைவிட இழிவாகநோக்கியது ஏன் ?
  Not I, but the Supreme Court last month rejected the peititon of Prof Ananth, the IIT Madras Director for holding the post. Among the many reasons cited, one is ‘Caste biases. Yes, he did not like dalit students.
  தேவர் திரியில் இதே கேள்வியை ஒரு தேவரிடம் வைத்திருக்கிறேன். இன்னும் பதில் வரவில்லை. அவர் எழுதினார்: பெருமைப்படுக்கிறோம்

  என்ன பெருமை ? பார்ப்பானும் தேவனும் எப்படி பிறந்தார்? அதியமான் எப்படி பிறந்தார் ? பறையன் எப்படி பிறந்தான் ?
  அப்படித்தானே ? பின்ன என்ன ‘ஆம் நான் பாப்பாததி’ என ஜெயலலிதா பெருமைப்பட , பரிதி இளம்வழுதி சிறுமைப்பட வேண்டும் ?
  “பார்பானியத்தை எதிர்பதாக நினைத்து கொண்டு, தனி மனித துவேசத்தில் இறங்கும் பண்பற்றா நிலைபாடு தான் இவை”
  பார்ப்பனீயத்தை ஒருவன் உசத்திப்ப்டிக்கும்போது அதன் எதிர்ப்பாளர்கள் அவனையும் சேர்த்துதான் திட்டுவார்கள். அக்கொள்கையை பரப்பிவருபவரை என்ன செய்ய ?

  Why r u feeling proud of ur castes? And why do u say others too?

  When, u Athiyaman, say u don’t like that dharma, then how comes you stand behind the man who wants all of us to hold to our castes and feel proud ? Then, how to annihilate castes ?

 35. jo rayan,

  எம் வாதத்ததை திரிக்கிறீர்கள். என்னை, தொடர்ந்து பலரும், பல நூறு முறை நீ கவுண்டன் தானே என்று மீண்டும் மீண்டும் கேட்டால். ஆம் நான் ஒரு கவுண்டன் தான் என்று தான் பதில் சொல்வேன். that doesn’t mean that i consider those who were born as dalith are INFERIOR to me or to any one in the earth.

  நீ தமிழனா என்று ஒரு மலையாளி அல்லது வட இந்தியார் தொடர்ந்து கேலியாக அல்லது இழிவு படுத்தும் நோக்கத்துடன், personalஆக் தொடர்ந்து கேட்டால், நாம் என்ன பதில் சொல்வோம் ? ஆம், நான் தமிழன் தான் என்று. அதற்க்காக தமிழர் அல்லாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்று அர்த்தமல்ல.

  பார்பன சாதியினரை மட்டும் தான் உங்க பதிலில் பேசுகிறீக. ஆதிக்க சாதியினரான கவுண்டர், வன்னியர், தேவர், சைவ வேளாளர் போன்றவர்கள் பகிரங்கமாக சாதி சங்கங்கள், சாதி கட்சிகள் உருவாக்கி, தங்கள் சாதி ‘அடையாளத்தை’ பகிரங்கமாக declare செய்கிறார்கள். அதை பற்றி இதே போல் ஏன் ஆவேசம் கொள்வதில்லை. சினிமாவில் இதைவிட கொடுமை. தேவர் மகன், கவுண்டர், படையாச்சி படங்கள்.

  டோண்டு தான் ஒரு அய்யங்கார் தான் என்று டிக்லேர் செய்தால், உடனே அவர் தலித்துகளை கீழாக பார்கிறார் என்று அர்த்தமாகிவிடாது. பிறப்பால் ஒருவன் தாழ்ந்தவன் / உயர்ந்தவன் என்ற வருணாசிரமத்தை அவர் எங்கே ஆதரித்து எழுதியிருக்கிறார் என்று காட்ட முடியுமா ? நாடர்கள், தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள் : இவர்களில் உள்ள பெரும்பான்மையினர் அளவுக்கு, அவருக்கு சுய சாதி வெறி இல்லை என்றே சொல்கிறேன். I know him personally well for many years and எமது சொந்த ஊர் பகுதியில் உள்ள சராசரி கவுண்டர் எந்த அளவு சாதி வெறி அல்லது உணர்வு உடையவர் என்பதையும் அனுபவத்தில் அறிந்தவன் தான். நாடர்களின் சாதி உணார்வு பற்றி விசாரித்து பார்க்கவும்.

  பெரியார் பற்றிய அவரின் விமர்சனங்களுடன் முரண்படுகிறேன். ஆனால் அது அவரின் கருத்துரிமை. பெரியார் பார்பனீயத்தை தான் எதிர்த்தார். பார்பனர்களை ‘வெறுக்க’ சொல்லவில்லை. பார்பனரான ராஜாஜி தான் அவரின் மிக நெருங்கிய தோழர்.

  பெரியாரின் பண்பு நலன்களை முதலில் கற்று கொள்ள முயல்க. சும்மா வெறுப்பை மட்டும் கக்குகிறிர்கள்.

 36. தொடர்ந்து அறிவு கொட்டதனமகாவும், சிறுபிள்ளைதனமாகவுமே பேசுகிறீர்கள்

  அதியமான் ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு. இது நான் சொல்லவில்லை. களத்தில் இறங்கி விட்டால் பலவற்றை எதிர்கொள்ளத்தான் வேண்டும். வார்த்தைகளால் சிலம்பம் ஆடத் தெரியவில்லை என்றால் அமைதியாக பார்த்துக் கொண்டிருங்களேன். நான் சொன்னது போல 100 வந்து போலிருக்கே.

 37. ஜோ,

  நீங்கதானே நான் ’கொங்கு நாடு’ என்று இந்த விசியத இங்கு ஆரம்பித்து வைத்தீர்கள்.
  சில ஜென்மங்களுக்கு அவர்களுக்கு ‘புரியும்’ பாசையில் பேசினா தான் விளங்கும்.
  மேலும், நீங்க சுட்டிகாட்டிய கொங்கு நாட்டு கவுணடர் சாதியில் பிறந்த நான், எம் குடும்ப குணமான முன்கோபம் மற்றும் ஆவேசம் மிக அதிகம் கொண்டவன் தான். அருவாள தூக்கற வம்சம் தான். படிச்சு, பட்டிணத்தில் ‘டிசெண்டா’ இருக்கிற மாதிரி ’ஆக்ட்’ குடுப்பதால், சில பரம்பரை குணநலன்கள் மாறிவிடாது நண்பா ! எனக்குள்ள் தூங்கற ‘மிருகத்தை’ எழுப்பி விட்டா இப்படி தான் ஆகும் ! :))))

  பெரியார் ‘சாதி புத்தி’ இருக்கும் என்றும் சொல்லியிருந்தார் !

 38. எம் குடும்ப குணமான முன்கோபம் மற்றும் ஆவேசம் மிக அதிகம் கொண்டவன் தான். அருவாள தூக்கற வம்சம் தான்.

  அதியமான் இந்த கதை தானே ஆகாது. எந்த கவுண்டரு எந்த பிரச்சனையில அருவாள தூக்கி இருக்காங்க. 20 வருடமாக பார்த்துக்கிட்டு தானே இருக்கேன்.

  பின்னால் இருந்து கொண்டு அவரவர்களுக்கே குழிபறித்துக் கொள்வதில் தமிழ்நாட்டில் இந்த கொங்கு மக்களைப் போல வேறு எவரையும் நான் பார்த்தது இல்லை. தேவரின மக்கள் மற்றவர்கள் பார்வையில் அநியாயத்திற்கு அக்கிரமம் செய்தாலும் அவர்களுக்குள் விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் இங்கே அப்படி இருந்தால் நிச்சயம் இந்த தொழில் இந்த அளவுக்கு சரிவை சந்தித்து இருக்காது. உங்களுக்கே பல விசயங்கள் தெரியும் தானே?

 39. ஜோதி,

  நீங்க சொல்றது சரிதான். ஆனால் அது திருப்பூர் பகுதிகளுக்கு தான் மிக பொருந்தும். கரூர், நாமக்கல் போன்ற பகுதிகளில் இன்னும் இவர்களின் நேர்மை திருப்பூர் அளவிற்க்கு சீரழியவில்லை.

  50 ஆண்டுகளுக்கு முன்பு வரை கவுண்டர்களின் குணனலன்களில் (சாதி புத்தி) பாஸிட்டிவான விசியங்கள் இவை : எளிமை, கடும் உழைப்பு, விருந்தோம்பல், அடிப்படை நேர்மை, உதவும் குணம், மானத்திற்க்கு பயந்து ஒழுங்காக, பொய் பேசாமல் வாழ்தல் போன்றவை. இவை திருப்பூர் பகுதிகளில் (கடும் உழைப்பை தவிர) அனேகமாக இன்று இல்லை. ஆனால் கரூருக்கு தெற்கே உள்ள வரண்ட பகுதிகளில், எம் ஆத்தா பிறந்த முஷ்ட்டகிணத்துபட்டியில் நிலைமை ஓராளவு பரவாயில்லை என்றே சொல்வேன்.

  கவுண்டர்களின் நெகட்டிவ் ஆன குணங்கள் : தலித்களை கொடுமையாக நசுக்குவது, சாதி வெறி போன்றவை ; இவை இன்றும் அப்படியே தான் உள்ளன.

  பெண்களுக்கான கல்வி மற்றும் சுதந்திரம் ; விதவை மற்றும் விவகாரத்தான் பெண்கள் மறுமணம் : இவற்றில் நல்ல முன்னேற்றம்.

 40. மானத்திற்க்கு பயந்து ஒழுங்காக, பொய் பேசாமல் வாழ்தல் போன்றவை.

  அதியமான் உங்கள் வார்த்தைகளில் இதை படிக்கும் போது மிக மகிழ்வாய் உணர்க்கின்றேன். படித்தவர்களின் செயல்பாடுகள், படிக்காதவர்களின் செயல்பாடுகள் என்று எல்லா இடங்களிலும் உள்ள வித்யாசங்களை விட இங்கே இந்த மானம் என்ற வார்த்தை காற்றோடு எங்கேயோ எப்போதோ பறந்து போய்விட்டது. சராசரியான வளர்ந்து வளர்பவர்கள் கூட இதைப் பற்றி அக்கறைப்பட்டுக் கொள்ளாமல் இருப்பதே தொழில் வளர்ச்சியின் முக்கிய தகுதியான நிலைக்கு வர உதவும் முக்கிய கூறாக கருதுவதால் தான் இன்று பிற துறை சார்ந்த பலருக்கும் இவர்கள் படுகின்ற அவஸ்த்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறது.

  மின் தடை காரணமாக கோயமுத்தூரில் பிரம்மாண்டமாக ஊர்வலம் நடந்து இருப்பதை பத்திரிக்கைகளில் படித்து இருப்பீங்க. அதைப் போல தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் செயல்பாடுகளும் அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவும் கோவையில் இயல்பான ஒன்று.,

  ஆனால் இங்கு அது போன்ற எந்த விசயங்களும் இருக்காது, நடக்காது. காரணம் மனம் முழுக்க கேவலமான எண்ணங்களையும், அதையே தகுதி என்று கருதி வளர்த்துக் கொண்டே வருதலும், மனபிறழ்வு நோயாக மொத்த திருப்பூரையும் பிடித்து ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது.

  நீங்கள் சொன்ன மற்ற கவுண்டர் இன மக்களை அவர்களின் குணநலன்களை பார்க்கும் வாய்ப்பு இது வரையிலும் கிடைத்தது இல்லை. ஒரு வேளை சாக்கடைக்குள் பல ஆண்டு காலம் வாழ்ந்த காரணத்தால் இது போன்ற பூக்கள் நிறைந்த பகுதிக்கு செல்லும் போது கூட அந்த வாடையை மூக்கு உணர்ந்து கொள்ளுமா? என்றும் தெரியவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க