privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்பாரு நிவேதிதா - சுயமோகன் ஒரு லடாய் !

பாரு நிவேதிதா – சுயமோகன் ஒரு லடாய் !

-

சாரு-நிவேதிதா-ஜெயமோகன்

ஆறு தமிழரில் ஒரு தமிழர் வசிக்கும் சென்னை மாநகரத்திலே, பல் விளக்காமல் விழுங்கிய ஒரு குலோப்ஜாமுனின் ஸ்வீட்டான மாலை நேரத்து மயக்கத்திலே, தமிழர் தம் பண்பாட்டுச் சிக்கல்களை நுண்ணிய அளவிலே கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல் நைசாக வெளியே விடும் ஒரு கெட்டவாயுவின் நாசுக்குடன் முடிச்சவிழ்க்கும் ஒரு சிற்றிலக்கிய பத்திரிகையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டமொன்று, புவியியல் சிறப்புமிக்க கூவம் நதிக்கரையின் அருகில் அண்ணா சாலையின் மத்தியில் நடைபெற்றது. சிந்தனையில் தோய்ந்து வெளிறிய கண்களுடன், கவலை குடிகொண்ட இதயத்துடன், பிஸியாக இருப்பதை பறைசாற்றும் செல்பேசி ரீங்காரங்களுக்கு மத்தியில் சென்னை மாநகரின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் நவீனத் தமிழ் இலக்கியவாதிகள் விறுசுறுப்புடன் வந்து கொண்டிருந்தனர். கவிஞர் அண்ணாச்சி மட்டும் எல்லோரையும் கெட்ட வார்த்தை சொல்லி வைது கொண்டிருந்தார். அண்ணாச்சியின் அன்புப் பிடியில் சிக்காமல் எல்லோரும் எஸ்ஸாகிக் கொண்டிருக்க, தவறிச்சிக்கிய ஒரு இளைஞனிடம், பாலா படத்தில் தான் பிச்சைக்காரனாக நடித்தது குறித்து ரொம்பவும் துக்கப்பட்டு புலம்பிக் கொண்டிருந்தார். இளைஞன் அண்ணாச்சியின் பார்வையிலிருந்து பாக்கெட்டிலிருந்த 100 ரூபாய் நோட்டை அகற்ற அரும்பாடு பட்டுக் கொண்டிருந்தான்.

மேற்படி கூட்டத்தின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பா.நி, சு.மோ இருவர் மட்டும்தான் என்பதை ஈண்டு எடுத்துரைக்கத் தேவையில்லை. ஒற்றை கடுக்கனுடன், மால்டோ வடோவா படம் போட்ட வானவில் வண்ண காபி சட்டை, முழங்கால் நீள பெர்முடா, தூக்கிவிடப்பட்ட ரேபான் கண்ணாடி, முக்கியமாக பக்கவாட்டில் சரியும் 50 வயதுத் தொப்பையுடன் வந்த பா.நி வேற்று கிரக ஜீவராசிகளை சந்திப்பது போல, நடந்து வந்தார். காதோரம் ஏறிய நரையுடன், முழுக்கை சட்டை, இன் செய்யப்பட்ட பேண்ட், செருப்பு என 9 – 5 தோற்றத்துடன் சு.மோ, தன்னால் மட்டுமே கண்டுபிடிக்கப்படுவதற்காக காத்திருக்கும்  ஏதோ ஒரு தத்துவப் பிரச்சினையை ஆய்ந்த சலிப்புடன் அதே வேளையில் கூட்டத்தை உற்றுக் கவனித்தவாறு அதாவது தனது ஆதரவாளர்கள் எத்தனை பேர் என்று எண்ணியவாறு ஒரு சதாவதானி போல வந்து கொண்டிருந்தார். கூட்டத்திற்கு முன் இருவரும் ஒரே நேரத்தில் இப்படி எதிரெதிரே சந்திப்போம் என எதிர்பார்க்கவில்லை.

சந்தித்தார்கள், கை குலுக்கினார்கள், உரையாடினார்கள்.

சு.மோ: ஹலோ பாரு எப்டி இருக்கீங்க,, பைபாஸ் சர்ஜரி முடிஞ்சு ஹெல்த் பரவாயில்லையா, உடம்மைப் பார்த்துக்கோங்க, இப்ப பாத்தீங்கன்னா உடம்பே ஆலயம்னு பண்டு சித்தர், இப்போ பல டாக்டர்ஸே ஒத்துக்கிட்ட விசயம்,,,( வயதுக்கேத்த மாதிரி  சட்டை போடாம அரை லூசு மாதிரி.. ஆபரேசன் பண்ணா உன் கொழுப்பையா எடுக்க முடியும்)

பா.நி: ம் ம்…நல்லா இருக்கேன் ( இவ்ளோ யூத்புல்லா இருப்பவனைப் பார்த்து இந்த அம்மாஞ்சிப்பய வேணும்னே கேக்குறானே, எவ்ளோ திமிர் இருக்கும்) பை தி வே கஜிதன் நல்லா மார்க் வாங்கிருக்கான்னு கேள்விப் பட்டேன், நல்லா என்கரேஜ் பண்ணுங்க, எனக்கும் அவனுக்கும் ஜாக்கி சான், ரஜினின்னு ஒத்துப் போற விசயம் பலது இருக்கு ( உன்னோட ரம்பத்துக்கு அந்தப்பையன் எவ்வளவோ மேல், அவன்ட்டயும் டெய்லி விஷ்ணுபுரம் கதையச் சொல்லி சாவடிக்கறத நிறுத்தவா போற?)

சு.மோ: அதாவது பாரு.. இந்த உலகத்துல நாம நினைச்சு எதையும் செய்யறதில்ல, பாறைக்குள்ளேர்ந்து செடி முளைக்கிற மாதிரி அவனே பாத்துக்குவான்னு நினைக்கறேன். அவனைப் பத்தி நான் எழுதின பதிவை “தந்தைமை”ன்னு சொல்லி,  தமிழில்ல இதுதான் பெஸ்ட்டுன்னு கனுஷ்ய பத்திரனே சொல்லிருக்காரு.

பா.நி: (அவனை நொண்டி நாய்னு சொல்லி ஒரு கதை எழுதினவன் நீ. அதுக்கு பழிவாங்கியிருப்பான்) அப்டியா நான் படிக்கலயே.

சு.மோ:ஆமா. அதுக்கு மட்டும் ஐம்பதாயிரம் ஹிட்ஸ், மத்தபடி அவன் இப்ப ரஜினி, ஜாக்கி சானையெல்லாம் விட்டுட்டான், இப்போ ஜென் தத்துவம், சங்க காலக் கவிதைகள், சத்ய சோதனை, அயோமா பவுத்தம்னு மூழ்கிட்டான். ( சிங்கத்துக்கு பிறந்தது பன்னிக் குட்டியாகுமா முட்டாளே) அப்புறம் கூட்டத்துக்கு எப்படி வந்தீங்க, நான் திருவனந்தபுரத்துல இருந்து ஜெட் ஏர்வேஸ்ல வந்தேன், ஏர்போர்ட்டல என்னோட வாசகர், அம்பத்தூர்ல பெரிய பேக்டரியெல்லாம் வச்சுருக்குராரு. அவர்தான் என்னை பிக்கப் பண்ணி இங்க கூட்டி வந்தாரு ( இதெல்லாம் சொன்னா உனக்கு பிரஷர் ஏறுமே, என்ன இருந்தாலும் சென்னையில கூட நான்தான் உன்னைவிட பாப்புலர்)

பா.நி: ( நான்- ஸ்டாப் ஃபிளைட்ல பாரிசு, சிங்கப்பூர், பாங்காக்னு போய்க்கிட்டு இருக்கவன் கிட்ட கட்ட வண்டியில போறதைப் பேசுறான் ஃபூல்) நான் ஸ்டேட்ஸ்ல இருந்து ஒரு அமெரிக்கன் மேட் என்னோட ஸீரோ டிகிரி பற்றி அதோட அமெரிக்க ரிலவென்ஸ் பற்றி டாக்டரேட் பண்றார், அவரை கன்னிமாரா பார்ல பாத்துட்டு அப்புடியே நடந்துவாரேன், ( உன்னோட லெவல் ஆந்திரா பார்டர் தாண்டாது மச்சி, இதக்கேட்ட ஒடனே வயிறு பத்தணுமே)

சு.மோ: இந்த மாதிரி ரிசர்ச் பத்தியெலாம் எனக்கு நல்ல ஒப்பீனியன் இல்ல பாரு, எல்லாம் அகாடமிக் ஃபிரேம்குள்ள இருந்து எல்லாத்தையும் பாப்பாங்க, ஊர்க்குருவியின் சுதந்திரம் கூண்டுக்கிளிக்கு வராதுல்ல ( அமெரிக்காவுல இல்லாத போர்னோ எழுத்தா? உன்னோடது பத்தி ஆராய்ச்சி செய்ய வாரன்னா அவன் எவ்ளோ மேங்கோ மடையனா இருக்கணும்) நானும் அடுத்த மாசம் கனடா போறேன், நயாக்ரா பக்கத்துல் நைவேத்தய கிரின்னு ஒரு ஆசிரமத்துல இளைஞர்களுக்கு கவிதை பத்தி கிளாஸ் எடுக்குறோம், இன்னைக்குக் கூட அதப்பத்தித்தான் பேசலாம்னு இருக்கேன்

பா.நி: எல்லாம் அகாடமிக்ன்னு முத்திரை குத்தக்கூடாது, இந்த அமெரிக்கா காரன் ஒரு பின் நவீனத்துவக் கொண்டாட்டக்காரன், கூவம் குடிசைங்களுக்கு போய் சுண்டக்கஞ்சி அடிக்குற ஆளு, பெரிய பிலாசபிக்காரர், அவருக்கு என்னோட நாவல் – அதான் இப்போ இங்கிலீசுல வந்திருக்கே,  நீங்களும் கேள்விப்பட்டிருக்கணுமே, ஓரே நேரத்துல நியூயார்க், பாரிஸ், சிட்னி, லண்டன்ன்னு எல்லா இடத்துலயும் ரீலீஸ் ஆயிருக்கு, இந்த வருடம் புக்கருக்கு செலக்ட் ஆகும்னு என்னுடைய பாரிஸ் தோழி இப்பதான் மெசேஜ் அனுப்பியிருக்கா.  அந்த அமெரிக்கர் என்னோட நாவல் அமெரிக்கனின் பிராப்ளத்தை ஹார்ட் டு ஹார்ட் பேசுதுன்னு ரொம்ப டீப்பா பீல் பண்ணி ரிசர்ச் பண்றார் ( நான்தான் உலக எழுத்தாளன்னு உலகமே ஒத்துக்கிட்ட விசயம், நீ உள்ளூர்ல குப்பை கொட்டிக்கிட்டிருக்க, கற்பூர வாசனை கழுதைக்கு தெரியுமா)

சு.மோ: அது வந்து பாரு இப்ப பாத்தீங்கன்னா எனக்கு மொழிபெயர்ப்புகள் மேலயே பெரிய நம்பிக்கையில்லை. கசந்தகுமார் கூட விஷ்ணுபுரத்த லாங்குவேஜூல பெரிய கமாண்ட் உள்ளவங்கிட்ட குடுத்து மொழிபெயர்த்தார், எனக்குத்தான் திருப்தி இல்லை, என்னோட மனவெளி, மொழிபெயர்ப்புல மிஸ்ஸாகுதுன்னு பீல் பண்ணி வேணாம்னு சொல்லிட்டேன். இத இங்கிலீசுல போட்டா பல ஆயிரம் விக்கும்னாங்க. நான் ஒத்துக்கல, என்ன இருந்தாலும் கலையில காம்பரமைஸ் பண்ணக்கூடாது இல்லையா( உன்ன மாதிரி கனிமொழி, அந்துமணி, கமலஹாசன்னு ஜால்ரா போட்டு பிழைக்குறவன் நானில்லை) அப்புறம் புக்கர் பத்தியெல்லாம் எனக்கு பெரிய அபிப்ராயமில்லை. அருந்ததிராய் படிச்சுருக்கேன், எல்லாம் குருவி மண்டைங்க எழுத்து, வெளிநாட்டு மனநிலையில் நம்ம பண்பாட்டை கேலி செய்து எழுதப்பட்டதால வெஸ்ட்டர்ன் மார்க்கெட்ல ஹிட் ஆகலாம்,

பா.நி: உங்க கருத்த அடியோட மறுக்குறேன் சுயமோகன். இலக்கியத்துல வெளிநாடு உள்நாடுன்னு பிரிவினை பிரிக்கறது பாசிசம்னு நினைக்கிறேன். ஒரு தென்னமெரிக்கனின் கொண்டாட்ட மனநிலையை என்னோட எழுத்து டச் பண்ணுதுன்னு பார்க்குறேன். ஆக்சுவலா நானெல்லாம் பிரேசிலில் பிறந்து சாக்கர் விளையாடி சம்பா நடனம் ஆடவேண்டிய ஆளு, ஏதோ இங்க பிறந்து சாம்பார், ரசம்னு விதிக்கப்பட்ட பூமியில சகிச்சுக்கிட்டு வாழறேன். என்னப் பொறுத்தவரை கலைக்கு மொழி கிடையாது, அதோடு கவித்துவமான மொழி எல்லா இடத்துலயும் பாஸாக முடியும், ஏன் என்னையே எடுத்துக்கங்களேன், சுட்டுப் போட்டாக்கூட மலையாளம் எனக்கு வராது, நீங்களோ மலையாளத்துல கதா கலேட்சபமே நடத்தக்கூடிய ஸ்கில் உள்ளவரு, இப்போ என்னோட புக்ஸ் எல்லாமே மலையாளத்துல ரீலீஸ் ஆகி மாதத்துல பாதி நாளு கடவுளோட சொந்த தேசத்திலதான் சுத்திக்கிட்டு, புட்டு, பயிறு, பப்படம்னு ஆயிட்டுது வாழ்க்கை, கேரளாவுல 88 இடத்துல எனக்கு கட்அவுட் வைச்சுருக்காங்க, மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்த இடத்துல நான்தான்னு சொல்றாங்க, இதெல்லாம் பெரிய விசயம்னு நானும் எடுத்துக்கல,  நான் சொல்ல வர பாயிண்டு இலக்கியத்துக்கு மொழி ஒரு ஓபனிங்தான். ( மலையாளத்துல நான்தான் சூப்பர் ஸ்டாருன்றது தெரிஞ்சு நீ எத்தனை நாள் தூங்காம இருந்தேன்னு உன்  அறுவைகளை வேறு வழியில்லாமல் படித்து ஃபுரூப் பாக்கும் உன் மனைவியிடம் கேட்டால் உண்மை தெரியும்)

சு.மோ: ( சற்று பதட்டமடைந்து) ஐயோ பாரு கேரளாவோட நிலைமையே வேறு, அங்க மரபு ரீதியான எழுத்துக்களுக்கு மத்தியில ஒரு ரீலீஃப்பாத்தான் உங்களைப் பாக்குறாங்கன்னு கிருஷ்ணன் குட்டி கூட சொல்லிட்டிருந்தார். இதப்பத்தி நானும் நிறைய எழுதியிருக்கேனே, நம்ம தமிழ்ல இருக்குற நவீன எழுத்தெல்லாம் அங்க அதிகமில்லை, ஒரு மாதிரி பாப்புலர் லெவல்லதான் சீரியஸ் லிட்டரேச்சர் இயங்குறதால அதுவே அவங்களுக்கு ஒரு தடை ஆயிடுதில்ல,  மத்தபடி நீங்க மலையாளத்துல என்ட்ரி ஆனது எனக்குக்கூட பரவசமான மனநிலையைத்தான் குடுத்திருக்கு. பாலாவுக்கு வசனம் எழுதிக்கிட்டிருக்கிறப்போ கேரளாவோட ரசனை பற்றி ஒரு பெரிய டிஸ்கஷன் பண்ணினோம். நீங்க சொன்ன உடன இப்போதான் மெமரி ஸ்ட்ரைக் ஆகுது. ( சினிமாவுக்கு நான் வசனம் எழுதுறதப்பத்தி நீ மனம் நொந்து எத்தனை நாள் பார்க் ஷெர்ட்டன்ல சரக்கடிச்சேன்னு அந்துமணிகிட்ட கேட்டதான் தெரியும், அவிடே பிராந்தனக்க சாகித்யக்காரனானு கேட்டோ)

பா.நி ( அதேபோல பதட்டமடைந்து) இல்ல சுயமோகன், சினிமாவில தீவிர இலக்கியவாதிகளுக்கு இடமுண்டான்னு தெரியலை, ஆரம்பத்துல நீங்களும், மெஸ்.கிராமகிருஷ்ணனும் எழுதறதப் பத்தி, போஸ்டர்ஸ்ல உங்க பெயர் பாத்துட்டு கூத்தாடிருக்கிறேன். ஆனா நம்மள ஒரு காண்டம் மாதிரி அவங்க யூஸ் பண்ணிக்கிட்டு த்ரோ பண்ணிடுவாங்க, ஏதோ பணம் கொஞ்சம் கிடைக்கலாம், ஆனா ரியல் சேட்டிஸ்பேக்ஷன் அங்க கிடைக்காதுன்றதுதான் என்னோட ஸ்ட்ராங்கான ஃபீலிங்.

சு.மோ: அலோ .. ஏதோ கேரளாவில சில அரைக்கிராக்குங்க உன்னை சுத்தி வருதுன்னு ரொம்ப ஆடாத, தமிழ் நாட்டுல குழாயில தண்ணிவரலேன்னா கூட கவலைப்படாத ஷோக்குப் பேர்வழி, இலக்கிய *@#$% .. கேரளாவில விவசாயிகளுக்காக கோகோ கோலாவ எதிர்த்து போராட மாதிரி சீன் காட்டுற…

பா.நி: நிறுத்துடா. *@#$% ஏதோ ரெண்டு சினிமாவுல ஐஞ்சு தயிர் சாத கேரக்டருக்காக வாந்தி எடுத்துட்டு காசு பொறுக்கினு வர ஆளு நீ.  என்மேல உனக்கு காண்டு, கொலைவெறிங்குறத ஒத்துக்கடா … என் பிளாக்குக்கு டெய்லி பத்தாயிரம் ஹிட்ஸ் தெரியுமாடா…பெரிசா பேசவந்துட்டான் *@#$%

சு.மோ: ஐயோ உன் ஹிட்ஸ் கதைதான் நெட்டுல நாறுதே. வியூஸ் எல்லாம் ஹிட்ஸ்னு கள்ளக் கணக்கு காட்டிட்டு, அதுக்கு துட்டு கேட்டு கேவலப்பட்டு, அப்புறம் ஒரு நாயும் படிக்க மாட்டான்னு பிச்சை கேக்குற… உன்னை மாதிரி நான் *@#$%  இல்லைடா மானம் கெட்டவனே…

பா.நி: நிறுத்துடா *@#$% .  டெய்லி ஐஞ்சாறு பதிவு போடுற மெஷின், நீயெல்லாம்  வொர்க்ஷாப் வெச்சு பிழக்கவேண்டியவன், கவர்மண்டு காசுல வாழ்ந்துட்டு அதுவும் பணிநேரத்துல தூங்குறேன்னு அதையும் வெக்க மானமில்லாம பிளாக்ல எழுதிட்டு, ஏதோ கீதை, பேதைன்னு ரீல் விட்டுட்டு காலத்த ஓட்டற *@#$%  நான்சென்ஸ். இலக்கியத்தை நம்பி என்னை மாதிரி வி.ஆர்.எஸ் வாங்க தைரியம் இருக்காடா உனக்கு?

சு.மோ: போடா *@#$%

பா.நி: போடா *@#$%

இதற்கு மேல் இவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது காதில் விழவில்லை. கேட்டவர்கள் பின்னூட்டத்தில் அவற்றைப் பதிவு செய்யலாம்.

  1. சமீபத்துல படிச்ச மிகச்சிறந்த காமெடி…சூப்பர்

  2. வணக்கம் வினவு!

    சமூக நிலைமைகளில் எங்க நட்சத்திர பதிவு சீரியசாவே போயிரும்னு நினைச்சுகிட்டு இருந்தேன்.

    தொடக்கம் முதல், இறுதி வரை சிரிச்சேன்.

    நல்ல பதிவு. அவர்களின் இருவரையும் தொடர்ச்சியாக வாசித்தால் தான், உங்களால் எழுத முடியும். பாவம் நீங்கள்.

  3. excellent writeup!

    சர்க்கஸில் வரும் கோமாளி மாதிரி….சிரிக்க வைத்தாலும், அனைத்து திறமைகளும் வாய்த்திருந்தாலே இது சாத்தியம்!

  4. பதிவை பாதிக்கு மேல படிக்க முடியல. அதுக்குத் தடையா உங்க மொக்கைப் பதிவுகள் பற்றிய கட்டுரை நினைவுக்கு வந்து போனது. அதில் உங்களால் சாடப்பட்ட ‘சிறுகதைகள்’ வகைப் பதிவொன்றை நீங்களே, அதுவும் ஒரு சில தினங்களுக்குள்ளாகவே வெளியிட வேண்டிய கட்டாயம் என்னை சிந்திக்க வைக்கிறது.

  5. //வகைப் பதிவொன்றை நீங்களே, அதுவும் ஒரு சில தினங்களுக்குள்ளாகவே வெளியிட வேண்டிய கட்டாயம் என்னை சிந்திக்க வைக்கிறது.//

    இதெல்லாம் பதிவரசியலில் சகஜமப்பா (க்வுண்டமணி பாணியில் வாசிக்கவும்)

  6. சினிமாவில் எழுதவேண்டும் (அதிக பணம் அங்கு கிடைக்கிறது தானே) என்பதற்காக மன்னிப்பு கேட்டு பழைய பதிவுகளை அழித்த கதையையும் சேர்த்திருக்கலாம்,

    அப்படியே சென்ற வாரம் நடந்த உடைப்புரட்சியையும் சேர்த்திருக்கலாம்

  7. செமத்தியான இந்த நையாண்டியில் உணரப்படும் உண்மை என்னன்னா ‘இவீங்கள இவிங்க நெனச்சுக்கற அளவுக்கு மத்தவிங்க நெனைக்கறதில்லே’ங்கறது தான்.

  8. //அப்படியே சென்ற வாரம் நடந்த உடைப்புரட்சியையும் சேர்த்திருக்கலாம்//
    details pls…

  9. நல்ல கற்பனை காமெடி…
    ஆனா “அதிக மொக்கை உடல் நலத்திற்கு கேடு” ஞாபகம் வச்சுக்கங்க…
    🙂

  10. துக்ளக் சத்யாவும் ஆ.விகடன் லூசுப்பையனும் சேர்ந்து, சு.மோ வையும் பா.நியையும்
    ஒரு சாத்து சாத்திட்டாங்க.

    பா.நி, இதை அவர் வலையில் பிரசுரித்தால் நீங்கள் அவர் கேட்ட பணத்தை கொடுக்கலாம். ரெடியா ?

  11. இந்த பதிவை சுயமோகனமும், பாநியும் படிக்காமல் இருக்க எலக்கிய பகவானை வேண்டிக்கொள்வோம், இல்லைன்னா தற்கொலைக்கு தூண்டின குற்றத்திற்காக இந்திய அரசியல் சட்டம் உம்மை தண்டிக்கப்போகுது ஓய்!

  12. பதிவு பட்டையை கிளப்பி சூடுபிடிக்கும் தருணத்தில் முடிந்துவிட்டது சற்று ஏமாற்றமாக இருந்தது,அவர்கள் இருவரின் டவுசரையும் கழற்றி முழு அம்மணமாக்கி ஓடவிட்டிருக்க வேண்டும்.தொடர்ந்து அவர்களுக்கு இது போன்ற சிறப்பு கவணிப்புகள் அவசியம் என்று கருதுகிறேன்.

    மேலும் தோழர் அவர்களுக்கு எனது மகிழ்ச்சிகரமான புரட்சிகர வாழ்த்துக்கள்.
    தமிழ்மணத்தில் நீங்கள் நட்சத்திர பதிவாளராகியிருப்ப்பதை நேற்று தான் அறிந்தேன் சென்ற வாரங்களில் தமிழ்மணத்திற்குள் நுழைவதற்கே நிறைய நேரமானதால் உள்ளே செல்ல முடியவில்லை,இணையத்திற்குள் வந்தபோதெல்லாம் இது ஒரு பிரச்சினையாக இருந்ததால் இதை கவ‌னிக்க முடியவில்லை,நட்சத்திர பதிவாளராகியிருப்பதற்கு மீண்டும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  13. வினவு இதை தெளிவு படுத்துங்கள்,
    உயிர்ரோசை தளத்தில் கார்ல்மார்க்ஸ் பற்றிய‌ ஒரு க‌ட்டுரையில் இப்படி கூறப்பட்டுள்ளது, இது உண்மையா மார்க்ஸ் அப்படியா கூறினார் ?

    //மார்க்ஸ் உயிரோடிருந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.

    ‘உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கையில்லை என்று தெரியும். அப்படி ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு சொல்லுங்கள். மனித குலத்தின் முன்னேற்றம் பற்றி இவ்வளவு சிந்தித்த நீங்கள் என்னவாக இருக்க விரும்புவீர்கள்?’

    ‘மனிதனாகப் பிறக்க விரும்பமாட்டேன்’ என்பது மார்க்ஸின் பதில்.//

    சுட்டி
    http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=478

  14. Intha irandu naatharigalum ilakkiya aruveruppugal..

    Dhool kilappitinga thozar..

    I really admire the posts of vinavu, there is a wide spread misconception that all leftist bloggers are way too serious in their speach/writings.. and well…. boring too. But you proove them to be wrong. It is always possible to write socially important issues in marxist view in a humorous satirical way. This kind of satire can be seen in most of the works of Marx.

    Serious content in a mokkai format. This format is important in blogosphere, where most of the readers are from petti boorshuva backgroud. Great effort vinavu team!!!

    Keep going!!!

  15. ஆமா இந்த பா நி மற்றும் சு மோ யாரு .. அந்த ரெண்டு கெ பி இல்லையே .. (கெ பி = கெட்ட புண்ணாக்கு)

  16. அவங்க டவுசர அவுக்க பார்கிர்ரறு வினவு.. ஒருத்தன் பொந்துமணி கழுத்தல்யும்
    இன்னொருத்தன் எந்திர ராமசாமி கழுத்திழயும் கயிற குடுத்திட்டு
    ஓடுறானுங்க .. . ஆக அவுக்க வேண்டிய இடம் இவனுங்க இல்ல வினவு … கி கி கி

  17. நண்பர் தெருக்கூத்தாடி,

    //உயிர்ரோசை தளத்தில் கார்ல்மார்க்ஸ் பற்றிய‌ ஒரு க‌ட்டுரையில் இப்படி கூறப்பட்டுள்ளது, இது உண்மையா மார்க்ஸ் அப்படியா கூறினார் ?

    //மார்க்ஸ் உயிரோடிருந்தபோது அவரிடம் நடத்தப்பட்ட நேர்காணல் ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்று.

    ‘உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கையில்லை என்று தெரியும். அப்படி ஒன்று இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு சொல்லுங்கள். மனித குலத்தின் முன்னேற்றம் பற்றி இவ்வளவு சிந்தித்த நீங்கள் என்னவாக இருக்க விரும்புவீர்கள்?’

    ‘மனிதனாகப் பிறக்க விரும்பமாட்டேன்’ என்பது மார்க்ஸின் பதில்.//

    சுட்டி
    http://www.uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=478 //

    எமக்குத் தெரிந்து மார்க்ஸ் எங்கேயும் இப்படிக் கூறவில்லை. அவரது மகள் எலினார் மார்க்ஸ் கேட்ட கேள்விகளுக்கு அளித்த பதில்கள் ஒப்புதல்கள் என்று தொகுக்கப்பட்டு வெளியாகியிருக்கின்றன. அதில் அப்படி ஒரு கேள்வியே இல்லை. மற்றபடி இதுபோன்ற கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மார்க்ஸ் ” இப்போது செய்கின்ற பணியை செய்யவே விரும்புகின்றேன்”: என்று கூறியிருக்கிறார். அதன் மூல ஆதாரம் தேடி எடுத்த பின் இதை உறுதி செய்கிறோம். மற்றபடி உயிரோசை தளத்தில் அறிஞர் சுகுமாரன் இப்படி எழுதியிருப்பதற்கான ஆதாரத்தை அவர்தான் வெளியிட வேண்டும். எங்களுக்குத் தெரந்து மார்க்ஸ் அப்படி கூறவில்லை என்பதை மீண்டும் உறுதி செய்கிறோம்.

    வினவு

  18. என்ன கொடுமைடா?

    அதுக்குள்ள யாரோ மார்க்ஸையும் இழுக்குறாங்கள். மார்க்ஸ் கூட எங்கலின்ஸ் எண்டு ஒருவரும் இருந்து உதவி பண்ணினார்.

  19. அன்புடையீர்,
    வினவு தளத்தின் பின்னூட்டங்கள் ஒன்றில் மார்க்சைப் பற்றிய ஒரு கேள்வி
    கண்டேன். உயிரோசை கட்டுரையில் நான் குறிப்பிட்ட வாசகம் மார்க்சைப் பற்றிய நினைவுக் குறிப்புக்ளின் தொகுப்பாக பல ஆண்டுகளுக்கு முன்னர் அயல்
    மொழிப் பதிப்பகம் மாஸ்கோ வெளியிட்ட மார்க்ஸ் வாழ்கிறார் தொகுப்பில்
    வாசித்தது. பல பொருட்கள் பற்றி அவர் சொன்ன சின்ன சின்ன பதில்கள்
    அவை. இப்போதும் நினவிலிருக்கும் இன்னொரு பதில்.

    உங்களுக்குப் பிடித்த முழக்கம்? எல்லாவற்றையும் சந்தேகி.

  20. அறிஞர் சுகுமாறன் அவர்களே!

    நீங்கள் குறிப்பிட்ட தொகுப்பு மட்டுமல்ல இணையத்திலும் தேடிப் பார்த்து விட்டோம். மார்க்ஸ் எங்கேயும் அப்படிக் கூறவில்லை. நினைவிலிருந்து நீங்கள் குறிப்பிடும் “எல்லாவற்றையும் சந்தேகி” என்ற பதிலே மார்க்ஸ் அவரது மகளுக்கு அளித்த ஒப்புதல்கள் என்ற தலைப்பில் இருக்கிறது. இன்னும் அவருக்குப் பிடித்த நிறம், உணவு, இலக்கியவாதி, பிடிக்காத நபர் என பல விசயங்கள் அதில் வருகின்றன.

    “நான் மனிதானாக பிறக்க விரும்பமாட்டேன்’ என்று மார்க்ஸ் கூறியதாக நீங்கள் குறிப்பிடும் வாசகம் நிச்சயமாக எதிலும் இல்லை. இருந்தால் ஆதாரத்துடன் குறிப்பிடுங்கள், நினைவை ஆதரமாக்குவதற்கு இது ஒன்றும் கவிதையில்லை. அமெரிக்கா திவால் ஆன பிறகு மேற்குலகில் பலரும் மார்கஸை படிப்பதாக ஒரு செய்தி படித்து அதன் பிறகுதான் உங்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் படித்த ஒரு நூல் நினைவுக்கு வந்து அதுவும் தவறாக வந்தால் என்ன செய்வது? பொழுது போக்காக மார்க்சியம் படித்தால் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுவது சகஜம்தான் என்பதால் சகித்துக் கொள்கிறோம்.

    வினவு

  21. It is quite interesting to read this article. Jeyamohan in his blog worried that Tamils had lost their humourous sense.I wish Jeyamohan should read this and publish it in his blog so that he would get a sense of satisfaction that he really has done something to develop the humourous sense of people.

  22. //நல்ல பதிவு. அவர்களின் இருவரையும் தொடர்ச்சியாக வாசித்தால் தான், உங்களால் எழுத முடியும். பாவம் நீங்கள்.//

    இதைப் படித்தவுடன் வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.

    உண்மையில் பாவப்பட்டிருக்கவேண்டும்.

  23. நண்பர் வினவு ,
    சிரித்து சிரித்து…வயிறு வலிக்கிறது..
    என்னமாய் நகைச்சுவையை கையாண்டிருக்கிறீர்கள்.
    ?
    மிகவும் பொறாமையாகவும்,பெருமையாகவும் உள்ளது..
    சாரு வை இப்படி வாரனுமா?
    (நான் உங்களுக்கு ஜெமோவின் மேல் உள்ள சாப்ட் கார்னரை இனம் கண்டு கொண்டேன்,சாருவின் மேல் இருந்த காட்டத்தைவிட இவருக்கு குறைவாக இருந்தது.
    ஜெமோவே இதை படித்தால் ,ரசிப்பார்.
    மனிதருக்கு சுட்டி சாட்டில் அனுப்பி இருந்தேன்.
    சாருவின் பகட்டு ஊர் அறிந்த ஒன்றா?வானத்தையே வில்லை வளைப்பேன் என்கிறார்.
    நான் தான் எதோ காண்டை கொட்டினேன் என நினைத்தேன்.எல்லோருமா?பாவம் சாரு…அனால் ரொம்ப ஓவர்,இவர் இசை அறிவை ஒத்தவர் உலகில் இரண்டே பேராம்.ஒன்று இவரே..இன்னொருவர் ஏ.ஆர் .ரகுமானாம் .
    இது போன்ற சுயபுராணிகள் புகழ்வதால் ஏ.ஆர்.ரகுமானுக்கு கூட இழுக்கே.
    நேரம் இருந்தால் என் பதிவில் சாருவை பாரி எழுதியதை பாருங்கள்.
    உங்கள் அளவுக்கு இருக்காது.
    உங்கள் பதிவை பற்றிய சுட்டியை என் பிளாக்கில் காணவும்.
    மிகுந்த வாழ்த்துக்கள்.
    எனக்கு கம்யூனிசம் பற்றி தெரியாது.இருந்தாலும் உங்கள் தளம் பின் பற்றி ரசித்தேன்.
    கார்த்திகேயன்
    அமீரகம்

  24. jathi வெறியன் suya mohan, sex வெறியன் paru nivethitha பற்றி yezhuthi time வேஸ்ட் pannathinga ப்ளீஸ்

    aanal rasitha
    -raghunathan

  25. கிண்டலாக தோன்றவில்லை.உண்மை நிகழ்ச்சியை படிப்பது போலத்தான் படுகிறது.ஏன் என்றால் இவகர்களின் வலைதள எழுத்துக்கள் இதை விட கேலிக்குரியதாகும்.

  26. வினவு

    சிரித்து சிரித்து மகிழ்ந்தேன், இந்த இருவர்கள்களின் வலைபக்கங்களைக் கொஞ்ச நாட்களாக படித்து வருகிறேன் என்பதால் இது உண்மையாக நடப்பதாகவே தோன்றியது. இதைப் படித்தால் சா,நி, கோபித்துக் கொள்வார். அவர் தனது ஜட்டி, பனியன் விலையெல்லாம் எழுதி பிச்சைக் கேட்பாரே அதை ஏன் ஏழுதவில்லை என்று! அடுத்து சா,நிக்கு இருக்கும் பெண் ரசிகர்கள் பற்றியும் ஏன் ஏழுதவில்லை. ஒருவன் தனக்குத் தானே காதல் கடிதம் எழுதிக் கொள்ளுவது எவ்வளவு பயங்கரமானது?
    –புதியவன்—

  27. Accidentally I came across this article in your blog. I have never laughed like this ever. Everyone at office(!) stared at me as i was bursting out when i read this article. Keep the good work.

    Abdul,
    A fellow Slave in an IT company,
    Bangalore.

Comments are closed.