privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

சம்புகர்களின் கொலை!

-

கற்றுக் கொள், ஒன்று திரள், போராடு என்பதுதான் உங்களுக்கு எனது இறுதி அறிவுரை. செல்வத்துக்காகவோ அல்லது அதிகாரத்துக்காகவோ இல்லை நம்முடைய போராட்டம், அது சுதந்திரத்துக்கான போராட்டம். அது மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கான போராட்டம்”

— பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

‘சதாராவில் இருக்கும் தனது பள்ளியில் தான் தண்ணீர் குடிக்க முடியாது’ என்பதைப் பீம் தனது 10 வது வயதில் 1901-ஆம் ஆண்டு உணர்ந்தார். இந்தியாவின் பெரும்பாலான தலித்துகளைப் போலவே அவருக்கும் ‘வெளிநாட்டில் ரயில் வண்டியிலிருந்து வெளியில் தள்ளப்படுவதன் மூலம்’ இனப்பாகுபாட்டின் கசப்புச் சுவை தெரிய வேண்டியிருக்கவில்லை. இருந்தாலும், கல்விக்கான தாகம் அம்பேத்கரை தொடர்ந்து செலுத்தியது. கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் முனைவர் பட்டம் பெற்று 1918-இல் நாடு திரும்பிய பிறகு மீண்டும் அவரது தீண்டாமை நினைவூட்டப்பட்டது. பரோடா மகாராஜாவின் ஆதரவு, சிறந்த கல்வி, பணம், நல்ல உடைகள் எதுவும் ‘தாகத்தை மதிப்போடு தணித்துக் கொள்ளவோ, நல்ல குடியிருப்பைத் தேடவோ’ அவருக்கு உதவி செய்யவில்லை. ஒரு சில சாதிகள் அடிப்படையிலேயே தாழ்ந்தவை என்று நம்பிய அமைப்பின் நஞ்சை முறிக்க அவர் இட ஒதுக்கீடு என்ற மாற்று மருந்தைப் பரிந்துரைத்தார். கற்றுக் கொள், ஒன்று திரள், போராடு என்ற சீர்திருத்த சோசலிச முழக்கத்தை அவர் தலித்துகளுக்கு வழங்கினார்.

இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது மனித ஆளுமையை மீட்டுக் கொள்வதற்கான போராட்டம். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இன்னமும் இயல்பாக மறுக்கப்பட்டு வரும் மனித உரிமைகளுக்கான போராட்டம்.

கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி அன்று, அனில் குமார் மீனா என்ற பழங்குடி இன மாணவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்  (எய்ம்ஸ்- AIIMS)  உள்ள அவரது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தி மீடியத்தில் படித்த அவர், இராஜஸ்தானின் பரானைச் சேர்ந்த விவசாயியின் மகன். 12-ஆம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து, எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது விடுதி அறையில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்த பால் முகுந்த் பாரதியின் அடிச்சுவட்டை அனில் குமார் மீனாவும் பின்பற்றியிருக்கிறார்.

தலித்-மாணவர்கள்-கொலை
அனில் குமார் மீனாவின் தற்கொலைக்குப் பிறகு எய்ம்ஸ் இயக்குனரின் வீட்டுக்கு வெளியில் மார்ச் 4, 2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள்

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, லக்னோ சத்ரபதி ஷாகுஜி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் நீரஜ் குமார் தனது உயிரை மாய்த்துக் கொள்வதில் தோல்வி அடைந்த செய்தி வருகின்றது. உயர் கல்வி நிறுவனங்களைப்  பன்முகப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இன்சைட் அறக்கட்டளையின் ஆய்வின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 19 தலித்/பழங்குடி மாணவர்கள் இது போன்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. விபரங்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.

இந்திய பள்ளிகளில் நிகழும் வாழ்வும் சாவும்

  • மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 –  இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை
  • அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு
  • ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்
  • செந்தில் குமார், பிப்ரவரி 23, 2008 – பி.எச்.டி, இயற்பியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்
  • பிரசாந்த் குரீல், ஏப்ரல் 19, 2008 –  முதலாம் ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
  • ஜி. சுமன், ஜனவரி 2, 2009  – இறுதி ஆண்டு எம்.டெக், ஐஐடி, கான்பூர்
  • அங்கிதா வேக்தா, ஏப்ரல் 20, 2009 – முதலாம ஆண்டு, பி.எஸ்.சி (நர்சிங்), சிங்கி நர்சிங் நிலையம், அகமதாபாத்
  • டி. ஸ்யாம் குமார், ஆக. 13, 2009  – முதலாம் ஆண்டு பி.டெக்,  சரோஜினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹைதராபாத்
  • எஸ். அமராவதி, நவ 4, 2009  – தேசிய இளநிலை பெண் குத்துச்சண்டை வீரர்,  சிறப்பு பயிற்சி மையம், ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையம், ஹைதராபாத்
  • பன்தி அனுஷா, நவம்பர் 5, 2009 – பி.காம், இறுதி ஆண்டு, வில்லா மேரி கல்லூரி, ஹைதராபாத்
  • புஷ்பாஞ்சலி பூர்த்தி, ஜனவரி 30, 2010  – முதலாம் ஆண்டு, எம்.பி.ஏ., விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெங்களூரு
  • சுஷில் குமார் சௌத்ரி, ஜனவரி 31, 2010 –  இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (முன்னாள் கேஜிஎம்சி), லக்னோ
  • ஜே.கே. ரமேஷ், ஜூலை 1, 2010 –  இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு
  • மாதுரி சேலே, நவம்பர் 17, 2010 – இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
  • ஜி. வரலக்ஷ்மி, ஜனவரி 30, 2011 – பி.டெக் முதலாம் ஆண்டு,  விக்னான் பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்
  • மனிஷ் குமார், பிப்ரவரி 13, 2011 – மூன்றாம் ஆண்டு, பி.டெக், ஐஐடி, ரூர்க்கி
  • லினேஷ் மோகன் காலே, ஏப்ரல் 16, 2011 – இளநிலை, நோய் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய நிறுவனம், புது தில்லி
  • அனில் குமார் மீனா, மார்ச் 3, 2012 – முதலாம் ஆண்டு, எய்ம்ஸ், புது தில்லி

(தகவல்: இன்சைட் அறக்கட்டளை)

ஆனால், பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். ஓம் பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தலைமை ஆசிரியரால் தனது சாதித் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். ‘போய் விளையாட்டு மைதானம் முழுவதையும் பெருக்கு, இல்லா விட்டால் உன் குண்டியில் மிளகாய்களைத் திணித்து பள்ளியிலிருந்து துரத்தி விடுவேன்’ என்று தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னாராம். பகிர்ந்து கொள்வதற்கான இது போன்ற கொடும் நிகழ்வுகள் முறையாகக் கல்வி கற்ற ஒவ்வொரு முதல் தலைமுறை தலித்திடமும் இருக்கின்றன.

பாகுபாடு பாராட்டும் இந்தக் கல்வி அமைப்பில் தாக்குப் பிடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு குடும்ப உறுப்பினர்கள் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. உடன் பிறந்தவர்கள் விவசாயக் கூலிகளாக வேலை செய்து ஒருவரின் கனவையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற உதவ வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும்பகுதி குழந்தைகள் வீட்டு வேலை செய்பவர்களாக, குழந்தைத் தொழிலாளர்களாக அல்லது பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களாகத் தொடர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு தலித் பெண்ணுக்கான சூழ்நிலை இன்னும் மோசமாக இருக்கின்றது. மகாராஷ்டிராவின் காயர்லஞ்சியில் 17 வயது பிரியங்கா போட்மாங்கே படித்து மதிப்பான வாழ்க்கையைத் தேடினார் என்ற உண்மை ஆதிக்க நிலவுடைமைச் சாதிகளின் கோபத்தைத் தூண்டியது. அவரும் அவரது தாய் சுரேகாவும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்டு கொல்லப்பட்டார்கள். அவரது சகோதரர்கள் வெட்டி வீசப்பட்டார்கள்.

இது போன்ற கடக்க முடியாத சாத்தியங்களை எதிர்த்து நின்று உயர் கல்வி நிறுவனங்களைப் போய்ச் சேரும் தலித்துகளை – புள்ளிவிபரங்களின் படி நூற்றில் 2 தலித்துகள் இதைச் சாதிக்கின்றனர் – ஆசிரியர்களின் மற்றும் சக மாணவர்களின் குத்தலும், கிண்டலும் வரவேற்கின்றன. கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படாவிட்டால் உணர்வு ரீதியாக அவர்கள் நசுக்கப்படுகிறார்கள்.

***

டந்த பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கருப்பின மாணவர்கள் குறைவாக பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது பற்றி பிரிட்டிஷ் ஊடகங்களில் ஒரு விவாதம் நடந்தது. வேறு விசயங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவராக இருந்தாலும், பிரதமர் டேவிட் காமரூன் இந்த விவாதத்தில் தலையிட்டு, அவர் படித்த ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் கருப்பின மற்றும் சிறுபான்மைக் குழுக்களிலிருந்து மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டிருப்பது “கேவலமானது” என்று சொன்னார்.

“2010 இல் பிரிட்டனின் இரண்டு பழமையான பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களில் நூற்றில் ஒரு பங்கை விடக் குறைவானர்கள்தான் கருப்பு இனத்தினர். ஆக்ஸ்போர்டில் அனுமதிக்கப்பட்ட 2617 பேரில் 20 பேர் கருப்பு இன மாணவர்கள். இது 2009-இன் 29 பேரிலிருந்து குறைந்திருந்தது” என்று டெலிகிராப் கூறியது.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கருப்பின நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லேமி, தகவல் பெறும் உரிமையின் மூலம் தரவுகளை சேகரித்து இந்த “ஆக்ஸ்பிரிட்ஜ் வெறுமையை” பற்றி குறைபட்டுக் கொண்டு, தி கார்டியனில் ஒரு கட்டுரை எழுதினார்.

பிரிட்டனில் நடக்கும் இந்த விவாதம், இந்தியாவில் நிலவும் பேரமைதிக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. தலித் மாணவர்களுக்கு எதிராக அக மதிப்பீட்டில் (குறிப்பாக செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளில்) பாகுபாடு காட்டப்படுவதாகவும், அவர்கள் தங்கும் விடுதிகள், உணவு அறைகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பிரித்து வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து 2006-இல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் சுகதேவ் தோரட்டின் தலைமையிலான மூன்று பேர் குழு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றி விசாரணை நடத்தியது. 77 பக்க தோரட் அறிக்கை நிர்வாகத்தைப் பல முனைகளிலும் குற்றஞ்சாட்டி, பரிந்துரைகளை முன் வைத்தது. ஆனால் அந்த அறிக்கை முன் முடிவுகளுடன் தயாரிக்கப்பட்டது என்று ஒதுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் ஒன்று இதோ.

ஏப்ரல் 2006-இல், உமா காந்த் என்ற தலித் எய்ம்ஸ் மாணவர், தான் தங்கியிருந்த அறை எண் 45-இன் கதவில் “இந்தப் பகுதியிலிருந்து தொலைந்து போ” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தார். அப்படி எழுதிய ரவுடிகள் ஒரு தடவை உமாகாந்த் அறைக்குள் இருக்கும்போது வெளியிலிருந்து கதவைப் பூட்டி விட்டனர். இது பற்றி உமாகாந்த் ஒரு முறையான புகார் பதிவு செய்தார். என்ன நடந்தது?. மாணவர்களுக்கு “அவர்களது கடமைகள், கட்டுப்பாட்டை பின்பற்றுதல், ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையுடன் பழகுதல் போன்றவை நினைவூட்டப்பட்டு அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தபட்டனர்”. குற்றவாளிகள் தலித் மாணவருடன் கைகுலுக்க வைக்கப்பட்டனர்.

அவர்களோ அதற்குப் பிறகு உமாகாந்தைப் பிடித்து உதைத்து, ஒதுக்கப்பட்ட இன்னொரு பகுதிக்கு அவரை அறை மாற்றிக்கொள்ள வைத்தனர். அந்தப் பகுதிதான் எல்லா ‘ஷெட்யூல்களும்’ இருக்க வேண்டிய இடம். தெரிந்தே நடந்த எய்ம்ஸ் நிர்வாகத்தின் அலட்சியங்கள் இப்படி இருக்கும் போது அனில் மீனா, பால் முகுந்ந் பாரதி இவர்களின் மரணம் கொலைகளாகக் கருதப்பட வேண்டாமா?

இத்தகைய கொலைகள் எய்ம்சில் மட்டும் நடக்கவில்லை. ஆகஸ்ட் 26, 2007 இல், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 21 வயதான அஜய் ஸ்ரீ சந்திரா என்ற ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பொதுப்பிரிவில் ஐ.ஐ.எஸ்.சி.க்கு தேர்வு பெற்றாலும், ஒதுக்கப்பட்ட பிரிவில்தான் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு நரகம் ஆரம்பித்தது. ஏதோ ஒரு வகைத் தண்டனையாக ஒரே சோதனையை மூன்றாவது முறை திரும்பச் செய்து கொண்டிருந்த போது ஆய்வகத்தில் இருந்த சூழலை அவர் தனது நாட்குறிப்பில் விவரிக்கிறார்.

“நேரம் 11.45 முற்பகல். நான் தவறான ஆய்வகத்தில் இருக்கிறேன். அல்லது இந்த ஆய்வகம் எனக்கு உரியது இல்லை. அந்தக் கண்கள், அவை என்னைப் பயமுறுத்துகின்றன. அவ்வளவு உயர்வு/தாழ்வு மனப்பான்மையுடன் என்னைப் பார்க்கின்றன”.

தலித்-மாணவர்கள்-கொலை
ஐஐஎஸ்சி இளநிலை மாணவர் அஜய் ஸ்ரீ சந்திராவின் நாட்குறிப்பிலிருந்து ஒரு பக்கம். அவர் ஆகஸ்ட் 26, 2007 அன்று தற்கொலை செய்து கொண்டார்

அனில் மீனா ‘மன அழுத்தத்தால்’ இறந்தார் என்று எய்ம்ஸ் சொல்ல, அஜய் சந்திரா படிப்புச் சுமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்தார் என்று ஐ.ஐ.எஸ்.சி முடிவு செய்தது.

கடந்த சில ஆண்டுகளாக இட ஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு உதவுவதற்காக சில பலவீனமான சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கில திறமைகளுக்கும் விரைவு பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் உயர்தர அறிவியல், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிலையங்களில் தாக்குப் பிடிக்க உதவிகள் வழங்கப்படுகின்றன. கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூக மாற்றத்துக்கான ஆய்வு மற்றும் கல்விக்கான மையம், தலித்/பழங்குடி மாணவர்களுக்கு ஒரு வார காலத்துக்கான ‘சுய முன்னேற்ற’ நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகங்களில் நடத்த முன்வருகின்றது. அதன் மூலம் ஐ.ஐ.எம்.களிலும் ஐ.ஐ.டி.களிலும் அவர்கள் பொருந்திப் போக உதவி செய்கிறது. ஐ.ஐ.டி தில்லியில் சென்ற ஆண்டு அத்தகைய பயிற்சி வகுப்பை அந்நிறுவனம் நடத்தியது.

ஆனால் இந்தக் கல்வி நிலையங்களின் பெரும்பகுதியினரான ஆதிக்க சாதி ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஏகலைவர்களின் பெருவிரல்களை வெட்டி எறிய வலியுறுத்தும் துரோணாச்சாரியர்களையும், அர்ஜூனன்களையும் மாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தேவையில்லை, பாகுபாடு காட்டுபவர்களுக்குத்தான் உதவி தேவை.

எய்ம்ஸ், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி-களில் கொல்லப்பட்ட தலித்/பழங்குடி மாணவர்களின் எண்ணிக்கையில், பாதி அளவு ஹார்வர்டு அல்லது ஆக்ஸ்போர்டில் கறுப்பின மாணவர்கள் கொல்லப்பட்டால் என்னவிதமான விளைவுகள் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

குப்தா அல்லது ஷர்மா என்ற உயர்சாதிப் பெயர்களுடைய இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும்போது அது இனவெறி என்று பேசப்படுகின்றது. அது நாடுகளுக்கிடையேயான பிரச்சனையாகக் கூட ஆகிறது. தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் இந்திய வளாகங்களில் மரணத்துக்குத் துரத்தப்படும் போது ஒரு முணுமுணுப்பு கூட இல்லை. தலித்துகளுக்கு எதிரான இத்தகைய முன் முடிவுகளையும், அவற்றால் விளையும் கொலைகளையும் மறுப்பதோடில்லாமல், நியாயப்படுத்தவும் செய்யும் அளவுக்கு இந்தியச் சமூகத்தை எது இவ்வளவு வெட்கமற்றதாக மாற்றியிருக்கின்றது?  இட ஒதுக்கீடுகளின் அடிப்படையையே எதிர்க்கும் காழ்ப்புணர்வு நிறைந்த வாதங்களை உறுதிப்படுத்துவதற்குக் கூட இந்த இறப்புகள் பயன்படுத்தப்படுவது எவ்வளவு கேவலமானது?

2003-இன் ஹிட் திரைப்படம் முன்னாபாய் எம்பிபிஎஸ் திரைப்படத்தின் கதாநாயகன் முரளி பிரசாத் ஷர்மா என்ற பிராமண சாதிப் பெயரை பெருமையுடன் சுமக்கிறான். பணம் பறித்தல், மிரட்டுதல், ஆள் கடத்தல் போன்ற தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ரவுடியான முரளி மோசடியின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். எம்பிபிஎஸ் தேர்விலும் ஏமாற்றி தேர்ச்சி பெற முயற்சிக்கிறான். உணர்ச்சியற்ற அமைப்புக்கு எதிலான கலகக் குரலாக அவன் நேசிக்கப்படவும், போற்றப்படவும் செய்தான். முன்னாபாயின் நகைச்சுவையும் செய்தியும் இவ்வளவு பிரபலமானது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் அவற்றைச் செய்தது ஒரு ஷர்மா.

அனில் மீனாவும், பால் முகுந்த் பாரதியும் முரளி பிரசாத் ஷர்மாவைப் போல் இல்லாமல் கடினமாக உழைத்து எய்ம்சுக்குப் போய்ச் சேர்ந்தனர், ஏமாற்றிச் சேரவில்லை. அவர்களின் மரணத்தில் பல லட்சம் தலித், பழங்குடி மக்களின் நம்பிக்கைகள் நசுக்கப்பட்டன. அஜய் சந்திரா, கடுமையான தீர்ப்பு சொல்லும் கண்கள் அவரை பயமுறுத்தியதை பற்றிப் பேசுகிறார். அஜ்ய்கள், அனில்கள், பால் முகுந்த்களின் கண்களை அவற்றுக்கு உரிய மரியாதையுடன் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. அதுவரை இந்த மரணங்கள் நம்மை விட்டுவிடப் போவதில்லை.

_________________________________________________________

நன்றி: ஆனந்த், அவுட்லுக்

தமிழாக்கம்: செழியன்

__________________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

    • துலுக்கர்கள் ஓரிரு பகுதிகளை ஆண்ட காலத்தில், நீங்கள் கரித்து கொட்டும் பார்ப்பன பண்டிதர்களை வைத்து கொண்டு, தூய மறையில் தங்களுடைய மதத்தை தேடினர்! அங்கு உள்ள நல்ல விஷயங்களுக்கு முன் தங்களுடையது வெறும் பாலைவன பிதற்றல்களே என்று உணர்ந்து கொண்டு, பார்பனர்களை மிரட்டி ‘அல்லோஹ்ள உபநிஷத்’ என்னும் ஒரு மட்டமான செய்யுளை யாத்தனர்! பின்னர் ஒளி மிகுந்த ஆதவன் முன் பனித்துளி கரைவதை போன்று இந்த நூல் வழக்கில் இருந்து மறைந்தது! ஆகவே எந்த மதத்தையும் தன்னுள் அடக்க வேண்டும் என்பது சனாதன தர்மத்தின் நோக்கமில்லை! அனால் அதன் அன்பில் பிற வழிகளும் தன்னை ஐக்கிய படுத்தி கொள்கின்றன! ஸ்ரீ சங்கரர் காலத்து உதாரணம் 63 தர்க்கங்கள் தங்களை இந்த சனாதன தர்மத்தின் புனித நீரோட்டத்தில் கரைத்து கொண்டது! வரலாற்று உண்மை புத்தம், சீக்கியம், சமணம் முதாலான நமது பிரிவுகளை வெள்ளையர்கள் வேறு மதங்கள் என்று சித்தரிதாளும், நாங்கள் சனாதன தர்மத்தின் வாசல்களே என்று இன்று வரை விளங்கி வருவது! நாளய உதாரணம் கிறித்துவம், இஸ்லாம் போன்ற பாலை வன ஆப்ரஹாமிய மதங்கள் தங்களை புனித சனாதன தர்மதிற்குள் அடக்கி கொள்ள போவது! காத்திருந்து பாருங்கள்! சூபி கதை தெரியுமா?

      • மற்ற மதங்கள் உங்கள் சனாதன தர்மத்திற்குள் (?) அடங்குவதும் கரைவதும் ஒரு பக்கம் இருக்கட்டும். தலித்துகள் என்று நீங்கள் ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே அந்த உழைக்கும் மககளை உங்களுடன் கலந்து கொள்ள வையுங்கள். உங்கள் பெண்களை அவர்களுக்கு திருமணம் செய்து சம்த்துவத்தை நிரூபியுங்கள்.

        முன்னேறத் துடிக்கும் ஒரு வர்க்கத்தை ஏன் தற்கொலைக்குத் தூண்டுகிறீர்கள் என்று கேட்டால் துலுக்கரையும் பாலைவனத்தையும் ஏன் சம்பந்தமில்லாமல் இங்கு கொண்டு வந்து கட்டுரையின் தாக்கத்தை வழி மாற்றப் பார்க்கிறீர்கள். நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்புவது தான் உங்கள் வழக்கமோ?

        • For that they get reservation extensively and in everything.

          I dont understand this whole marrying our girls to them,we ll marry our girls to people who are competent,deserving and who are liked by our girls.Why would we marry our girls for political reasons?

          Learn to use reservations and come up in life instead of wasting time asking for the impossible.

          Dalits were excluded but not killed for being that,which would have happened in India before 1800.

          Islamic rule is very important here because that existed until 1800s and is important for discussion here.

          • Mr Hari
            dont say your girls, my girls; it is so filthy.
            You are occupying the higher position by shutting doors of education to the dalits. Now it is time to change the rules of the game- it is by giving them priority.
            The dalits are coming upward; that is why you people are fleeing abroad.
            The Brahmins and caste Hindus are very much afraid and inimical about Muslims and Christians; bcos they at least try to be close to the dalits.

            • It is all a political game.And we are going abroad only because the lifestyle offered is much better and not because someone is going up or down.

              Basically the whole class struggle is between Brahmins and Caste Hindus and now Caste Hindus have that power and they intimidate and terrorize the Dalits.

              We shut the door on education to Dalits? Whatever education we got was vedic education and that has nothing to do with the professional education people get today,with the same facilities,environment and coaching any caste person performs equally well.

              Thats why u see many rich caste hindus and dalits in open quota,you should worry more about dalit elites alieanting themselves from the poor dalits.

              Regarding Christianity and Islam,they are even worse number gaming political religions,if you think they are the solution for the problems of Dalits,good luck with that.I know first hand, how even Christian Nadars treat other christians and how they treat Hindu Nadars.

              Dalits and free to use things in their favour,numbers and democracy,modernisation and anything to take their revenge on the hindu religion,but they should realise that by doing so they are entering a more complex world which is way more cruel and dangerous.

              And why is it filthy to say my community girls as ours? It is not that they came out of thin air.If the community exists and without reservation,then the girls also belong to the community,it is a fact of life in the real world,perhaps not in the dreamy marxist world.

              • Hi Harikumar,

                You make some valid points

                //It is all a political game.And we are going abroad only because the lifestyle offered is much better and not because someone is going up or down.//

                Why Brahmins were not going abroad earlier? Do you agree that the lifestyle enjoyed by the ancestors was though suppression of Dalits?

                //Basically the whole class struggle is between Brahmins and Caste Hindus and now Caste Hindus have that power and they intimidate and terrorize the Dalits.//

                True.

                //We shut the door on education to Dalits? Whatever education we got was vedic education and that has nothing to do with the professional education people get today,with the same facilities,environment and coaching any caste person performs equally well.//

                This is not true. Dalits and suppressed castes do not get same facilities, family environment and coaching as dominant castes (Brahmins etc). Then how can everyone compete at the same level?

                //Thats why u see many rich caste hindus and dalits in open quota,you should worry more about dalit elites alieanting themselves from the poor dalits.//

                This is true to some extent.

                //Regarding Christianity and Islam,they are even worse number gaming political religions,if you think they are the solution for the problems of Dalits,good luck with that.I know first hand, how even Christian Nadars treat other christians and how they treat Hindu Nadars.//

                As far as I know, after 2-3 generations as Christians/Muslims, the caste identity is lost. There are differences in terms of race (urdu speaking/tamil speaking muslims, anglo indians/tamil christians), but caste difference is not as oppressing as in Hindu society.

                //Dalits and free to use things in their favour,numbers and democracy,modernisation and anything to take their revenge on the hindu religion,but they should realise that by doing so they are entering a more complex world which is way more cruel and dangerous.//

                This is so patronizing. If you can survive in the “cruel and dangerous” why Dalits can not survive and prosper?

                //And why is it filthy to say my community girls as ours? It is not that they came out of thin air.If the community exists and without reservation,then the girls also belong to the community,it is a fact of life in the real world,perhaps not in the dreamy marxist world.//

                To remove this filthy set up, would you support nationalization of all properties of mutts and adheenams and temples and give the lands to Dalits? Why not Sankarachariyars and Adheenams and corporate gurus do a honest day’s work and live instead of living off others toil?

                • They were abroad back then also,I agree the landed elite were forced by the land reforms to pack up and take up education,but the lands just got sold to Thevars & Naickers and not Dalits who continue to work on the farm and take up tenancy with much worse rules.

                  The alienation of dalits is a cultural pogrom,they never had a place inside the 4 varnas as IMO,they themselves rejected the ideas of the vedic religion.But unlike other religions who just killed and forced the non believers to convert,untouchability never stopped them from anything else.

                  They did survive as everyone else,normally.

                  But there never was an issue about Dalits getting reservation or benefits but some laws they have like PCR and all is over abused and has not helped the poorer dalits in anyway.

                  The issue is about reservation to the OBCs who had all the land,business and had a choice to take up education or anything they wanted and they did too.

                  The getting 46% reservation is royal injustice but the loss is the state’s and no inidividual’s.

                  If you think Christianity/Islam will treat you as an equal,good luck.

                  the whole Urdu Muslim/Tamil Muslim break up is just a normal caste system.

                  Thats the same as caste difference,I have so many Christian Nadar friends in TN and i wonder why they call themselves Nadars still.

                  I am patronizing because the dalit movement has no indigenous background,it is desperate to take revenge on the religion and takes opposite stands blindly.

                  This is not how The Ezhavas/Nadars uplifted themselves and you can clearly see the difference as to why the dalits have not repeated their success.

                  Why would i support nationalization of anything at all?

                  I mean in a country where 100 rupees investment in public utilities returns less than 5 rupees,why do you want lands transferred to dalits,well how do u recognize those dalits and whats next? they ll sell it off to coca cola bottling plant and real estate folks(nothing wrong with them doing it?)

                  but why would i actively encourage this?

                  As it is our rivers are all dry and we depend on other states for water,this ll make TN an actual desert.

                  • வணக்கம் ஹரிகுமார்,

                    நீங்கள் ஆங்கிலத்தில் எழுதினாலும் நான் தமிழில் விவாதிக்கிறேன்.

                    //They were abroad back then also,//

                    கடல் கடந்து போவது தருமத்துக்கு விரோதம் என்று விதி இருந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். காந்தி வெளிநாடு போக முயற்சித்த போது சாதியிலிருந்து ஒதுக்கி வைத்தார்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் அப்போதும் வெளி நாடு போனார்கள் என்பது சரியில்லை.

                    //I agree the landed elite were forced by the land reforms to pack up and take up education,but the lands just got sold to Thevars & Naickers and not Dalits who continue to work on the farm and take up tenancy with much worse rules.//

                    இதுதான் முக்கியமானது. நாட்டின் நிலவுடமை
                    1. பினாமிகள் மூலமாக பண்ணையார்களிடமும்
                    2. மடங்கள், ஆதீனங்கள், கோயில்கள் மூலமாக ஆதிக்க சாதியினர் கட்டுப்பாட்டிலும்
                    3. புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலமாக பெரு நிறுவனங்கள் கட்டுப்பாட்டிலும்
                    இருக்கின்றது.

                    சிறு விவசாயிகள் 3வது வழியின் மூலம் நிலம் இழந்து நகர்ப் புற கூலித் தொழிலாளிகளாக நாடோடிகளாக மாறுகிறார்கள். இதை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

                    இந்தியாவில் விவசாயம் நலிவடைவதற்கு மேலே சொன்ன 3 நிலவுடமைகளையும் ஒழித்து
                    ஏழை மக்களுக்கு நிலவுரிமையும், விவசாயத்துக்கு ஆதரவான கொள்கைகளும் தேவை.

                    //The alienation of dalits is a cultural pogrom,they never had a place inside the 4 varnas as IMO,they themselves rejected the ideas of the vedic religion.//

                    அந்த கலாச்சார படுகொலைக்கு ஆதாரமானது பார்ப்பனீயம் என்பதால்தான் முற்போக்கு சிந்தனையாளர்கள் அதை முற்றிலும் நிராகரிக்கிறார்கள்.

                    //But unlike other religions who just killed and forced the non believers to convert,untouchability never stopped them from anything else. They did survive as everyone else,normally.//

                    தலித்துகளை கொன்று விடாமல், தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கி வைத்திருந்ததை பாராட்டுவது மிகவும் மோசமான மனநிலை.

                    //But there never was an issue about Dalits getting reservation or benefits but some laws they have like PCR and all is over abused and has not helped the poorer dalits in anyway. The issue is about reservation to the OBCs who had all the land,business and had a choice to take up education or anything they wanted and they did too. The getting 46% reservation is royal injustice but the loss is the state’s and no inidividual’s.//

                    ஓரளவு உண்மை.

                    //If you think Christianity/Islam will treat you as an equal,good luck. the whole Urdu Muslim/Tamil Muslim break up is just a normal caste system. Thats the same as caste difference,I have so many Christian Nadar friends in TN and i wonder why they call themselves Nadars still.//

                    கிருத்துவத்திலும், இஸ்லாமிலும் மதக் கோட்பாடு ஏற்றத் தாழ்வை விதிப்பதில்லை.
                    நடைமுறையில் மதம் மாறிய பிறகும் சாதி வேறுபாடுகள் இருப்பதற்கு காரணம் நமது சமூகத்தில் நிலவும் பார்ப்பனீய ஆதிக்கம்தான். இந்த பார்ப்பனீய தாக்கத்திலிருந்து விடுபடும் போது சாதி மறைந்து போய் விடும்.

                    //I am patronizing because the dalit movement has no indigenous background,it is desperate to take revenge on the religion and takes opposite stands blindly.This is not how The Ezhavas/Nadars uplifted themselves and you can clearly see the difference as to why the dalits have not repeated their success.//

                    பல நூறு ஆண்டுகளாக ஒதுக்கி வைத்து அடிப்படை மனித உரிமைகளை கூட மறுத்த மதத்தை ஒழித்தால்தான் சாதி ஒழியும் என்று தலித் மக்கள் போராடுவதில் என்ன தவறு? ‘வருணாசிரம தருமத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு அதற்குள் முன்னேற வேண்டியதுதானே’ என்று ஒருவர் கேட்டால் அவரிடம் பார்ப்பன சுயநலம் நிரம்பியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

                    //Why would i support nationalization of anything at all?

                    I mean in a country where 100 rupees investment in public utilities returns less than 5 rupees,why do you want lands transferred to dalits,well how do u recognize those dalits and whats next? they ll sell it off to coca cola bottling plant and real estate folks(nothing wrong with them doing it?) but why would i actively encourage this?//

                    அதாவது தேசிய மயமாக்கப்பட்டால் வருமானம் குறையும், பன்னாட்டு நிறுவனங்கள் நிலத்தை வாங்கி விடுவார்கள் என்று பயப்படுகிறீர்கள், உண்மைதான்.

                    நாட்டுடமையாக்கி அரசின் கையில் விட்டு வைக்காமல், மக்களுக்கு பகிர்ந்தளித்து, பன்னாட்டு நிறுவனங்கள் நிலம் வாங்குவதையும் தடை செய்து விடுங்கள். விவசாயத்துக்கு சாதகமான கொள்கைகளை செயல்படுத்துங்கள்.

                    • // நடைமுறையில் மதம் மாறிய பிறகும் சாதி வேறுபாடுகள் இருப்பதற்கு காரணம் நமது சமூகத்தில் நிலவும் பார்ப்பனீய ஆதிக்கம்தான். //

                      மேற்படி மதங்களுக்கு சாதியை ஒழிக்கும் ஆற்றல் இல்லையா..?! சரி, சமூகத்தில் நிலவும் பார்ப்பனீய ஆதிக்கம்தான் காரணம் என்றால் :

                      // பல நூறு ஆண்டுகளாக ஒதுக்கி வைத்து அடிப்படை மனித உரிமைகளை கூட மறுத்த மதத்தை ஒழித்தால்தான் சாதி ஒழியும் என்று தலித் மக்கள் போராடுவதில் என்ன தவறு? //

                      பார்ப்பனீய ஆதிக்கம், எந்த மதமாக இருந்தாலும் அதன் கோட்பாடுகளை மீறி, தொடரமுடியும் போது இந்து மதத்தின் அழிவு அதற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்..?! சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் மதச் சார்பை கடந்து இயங்குவதை கவனிக்கவில்லையா..?!

                • And one more thing,

                  whats an honest day’s work? Do subsistence farming?everyone should do that?

                  If we did only that Englishman/Arab horses would have buried us inside in no time.

                  I am not a big fan of the Kanchi Mutt but some of their initiatives like Shankar Netralaya are amazing,i mean people come from abroad and request to get their eyes treated at SN instead of Apollo.

                  This does more good to the world than some Marxist dream of collective farming.

                  well corporate gurus get money from people,because those people think those gurus do a useful thing.

                  This is what i dont understand, i agree there are poor people,starving people who have no hope in life and we need to support them and uplift them but once that happens whats wrong if someguy is enjoying chilli chicken and Johnny Walker in a A/C Room.

                  I mean back then rich people never spent money and kept storing their wealth in Gold,today the spending helps transferring wealth from rich to poorer people.

                  • //whats an honest day’s work? Do subsistence farming?everyone should do that? If we did only that Englishman/Arab horses would have buried us inside in no time. I am not a big fan of the Kanchi Mutt but some of their initiatives like Shankar Netralaya are amazing,i mean people come from abroad and request to get their eyes treated at SN instead of Apollo.

                    This does more good to the world than some Marxist dream of collective farming.

                    well corporate gurus get money from people,because those people think those gurus do a useful thing.//

                    கார்பொரேட் குருக்களை வேலையை விட்டு நீக்கி விடலாம். அவர்கள் செய்யும் வேலையை பரிசீலித்து என்ன பலன் என்று கேள்வி கேட்கலாம். யார் வேண்டுமானாலும் அடித்துப் பிடித்து கார்பொரேட் குரு ஆகி விடலாம். இது எதுவும் மடாதிபதிகளுக்கு பொருந்தாது.

                    //This is what i dont understand, i agree there are poor people,starving people who have no hope in life and we need to support them and uplift them but once that happens whats wrong if someguy is enjoying chilli chicken and Johnny Walker in a A/C Room.

                    I mean back then rich people never spent money and kept storing their wealth in Gold,today the spending helps transferring wealth from rich to poorer people.//

                    ஏழைக் குழந்தைக்கு சரியான உணவு இல்லாத போது ஏசி அறையில் சில்லி சிக்கனும் ஜானி வாக்கரும் சாப்பிட அந்த குழந்தைக்கு போய்ச் சேர வேண்டிய உணவை இன்னும் குறைக்கிறது என்பது பொருளாதார அடிப்படை. இன்னும் விபரமாக பேசலாம்.

      • Please answer or comment straight to the issues raised in the article.
        You people are very smart to circumvent to beat around the bush with some vague idiotic opinions. Very disgusting.

  1. ஒவ்வொரு தலித் மாணவரும் தன்னுடன் பயிலும் சக மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தன்னுடன் பழகும் விதத்துக்காக கட்டாய ‘சமூக, பண்பாட்டு பாடத்தில்’ 10 மார்க் வரை கொடுக்கும் முறை வந்தால் மவனே எல்லாப்பயபுள்ளைகளும் ’அன்பா’ மாறிட மாட்டானுங்க..??!!!

    • அம்பி நம்ம பய புல்லைங்க மார்க் பத்திஎல்லாம் கவல படுரது இல்ல காசு இருந்தா அதயும் வாங்கிடுவாங்க பெசாம இப்படி பன்னலாம் வெயில்ல முட்டி போட வச்சுடுவோம்………………….

      • இது இஸ்கூல் இல்லப்பு,

        அதில்லாம பாதிக்கப்பட்டவன் காசை வாங்கிக் கொண்டு மார்க் போடுவானா?! பண்றதெல்லாம் பண்ணிட்டு காசா குடுக்குறன்னு முட்டை போட்டு, போட்டுத் தள்ளுவான்..!!!

  2. Read the below article what I received from my friend.

    Gulf News 17/02/2012

    INDIA PAGE

    HARYANA

    Caste row leaves man badly injured

    Hisar: Police have arrested a man for seriously injuring another man for daring to drink water from the earthern pot of an upper caste family, a Haryana official said yesterday. The incident occurred in Daulatpur village in Hisar district. A case had been slapped against Rajender. The victim has been identified as Rajesh, a labourer who suffered head injuries. Hisar deputy commissioner Amit Kumar Aggarwall said Rajes would get free treatment.

    • Such an incident long back, gave us Indian Constitution….our leaders have completly forgotten the Cpnstitution of India..
      Laminated copies of the Constitution must be circulated every day to the Minister. MPs, MLAs, MLCs etc every morning before the start of the session, just like giving Laminated Menu Cards in Hotels an Restaurnts…

  3. இந்தியாவில் இந்துக்கள் என்று சொல்லும் பிராமினிய எண்ணத்துடம் இயங்கும் கூட்டத்திற்கு முஸ்லீம்கள் மட்டும் எதிரியல்ல. அவர்களின் முதல் எதிரி தலித்துகள் தான். பின்னூட்டம் 3 ஐ படித்து விட்டு, திருவாளர்கள். நாட்ராயன், பையா, அம்பி, சோழன், Hகரி குமார் போன்றவர்கள் கீழ்க்கண்டவாறு பின்னூட்டமிடுவார்கள் — “இப்படிபட்டவர்களால் எங்களுக்கு கெட்ட பெயர் தான். இவர்கள் இந்து மதத்தின் கரும்புள்ளிகள். இவர்கள் ஒன்றும் இந்து மதத்தின் ரெப்ரஸ்ன்டேடிவ் இல்லை”

    தலித்துக்களின் பிணங்களின் மேல் நின்று கொண்டு கூவுங்கள்.

    “வாழ்க இந்தியா. ஒளிர்க இந்தியா. முஸ்லிம்களை மட்டுமல்ல தலித்துக்களின் மரணத்திற்கும் காரணமான பார்ப்பீனிய இந்துக்கள் வாழ்க வாழ்க.”

    • ஒரு திருத்தம்:

      இந்தியாவில் இந்துக்கள் என்று சொல்லும் பிராமினிய எண்ணத்துடம் இயங்கும் கூட்டத்திற்கு முஸ்லீம்கள் மட்டும் எதிரியல்ல. அவர்களின் முதல் எதிரி தலித்துகள் தான். பின்னூட்டம் 5 ஐ படித்து விட்டு,

      • முஸ்லீம்களை தனிமைப்படுத்த வேண்டியிருப்பதால் தலித்துகள் மீதான வன்கொடுமைமையை இவர்கள் உள்ளூர் அளவிலே செய்துவருகின்றனர். இந்தியாவில் கிறித்துவம் முழுக்க முழுக்க சாதிமயப்படுத்தப் படுத்தப்பட்டுவிட்டதால் இப்போதைய காலகட்டத்தில் பிராமணியக் கூட்டத்திற்கு பிரதான இலக்கு முஸ்லீம்கள்தான். இஸ்லாம் பார்ப்பனீயத்தை செரித்துக்கொள்ள மறுப்பதால் RSS அம்பிகளுக்கு வயிறு எரிகிறது.

        • பார்ப்பனர்கள் இஸ்லாத்தை ஏற்று கொள்வது இல்லை , இஸ்லாமியர்களையும் எற்றுகொள்வதில்லை. காரணம் இஸ்லாம் போதிக்கும் “சகோதரத்துவம் ” அனைவரும் சமம் என்பதுதான். இவர்கள் இஸ்லாம் வளர்ந்தால் அது நம்மை பாதிக்கும் என்பதால் அதை எப்போதும் எதிர்த்து கொண்டே இருக்குகின்றனர். இஸ்லாமியர்களை எதிர்க்க எல்லா சாதி மனிதர்களையும் சேர்த்து கொண்டு இஸ்லாமியர்களை கொண்டொழிப்பான், எல்லா சாதி மனிதர்களும் இவன் பேச்சுக்கு மயங்கி வீதியில் வந்து சண்ட போடுவான் இத இவன் வீட்ல இருந்து கொண்டு வேடிக்க பார்ப்பான். சரி ஒரு பேச்சுக்கு இஸ்லாமியர்கள் இல்லை என்றால் மீண்டும் வரனாசிர முறைய கொண்டு வந்திடுவான். குல கல்வி திட்டம் மீண்டும் வந்திடும். நீங்கள் விவாதம் செய்யலாம் ,அதெல்லாம் அந்த காலம் இப்ப அது எல்லாம் நடக்காதுன்னு . இல்லை எல்லாமும் நடக்கும் ..அவன் என்ன உங்கள வீதியில் வந்த அடிக்க போறானா ? இல்லை .கடவுள், பக்தி, மதம் னு சொல்லி உங்கள அடிமையாக வைத்துகொண்டே இருப்பான். இதுதான் அவர்களுக்கு வேண்டும். நீங்கள் உண்மையான இந்துவாக இருப்பின் சாதியை ஒழியுங்கள் பார்ப்பபோம்.

  4. Reservationla vandha yaarayum Merit la vandhavunga ethukka maatanga,aana ellarum ippadi tharkolai senjukiradhu illa.

    Aduthavan yenn yosikkirangratha vida,namakku kedacha oppurtunitya payan paduthi munnerama,edhayellamo yosichikittu suicide ellam?

    Suicide panna 1000 reason irukku,adhukka seyvaangala?

    • அடடா , உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கமே இல்லையாடா?

      • அவர்தான் இந்தியன் ஆச்சே, அதான்!
        இவனுங்கள மாதிரி இருக்குறத விட, கக்கூஸ் கழுவறது எவ்வளவோ மேல்.

    • நீங்கள் தானே கட்டிலில் படுக்கிறீர்கள்? இல்லை அந்த வேலைக்கும் வேறு ஆள் வைத்துக்கொள்கிறீர்களா?

    • What a stupid question ! Even after taking bath in Holy Ganga you people will never change your mentality…
      The nature has to change you and your thoughts !

  5. இந்தியா முன்னேறுதாம். 30 சதவீதம் தலித்துகள் இந்தியாவில் இருக்கின்றனர். இவர்களின் வளர்ச்சியில்லாமல் இந்தியா முன்னேறிவிடுமா! இந்தியாவில் இருக்குற கேனப்பயலுவ மேரி எவனும் இருக்க மாட்டானுவ. தலித்துகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதின் மூலம் இவர்கள் இந்தியாவின் வளர்ச்சியையே முடக்கிவிடுகின்றனர்.

  6. சாதி என்னும் கொடிய கொடுமைகள் உச்சக்கட்டடத்தைநெருஙகுகிறது. உணர்விள்ளாமள் ஒதுஙி கிடக்கிறறோம், இதை எதிர்து அரசுக்கு எதிராக கலகம்நடதுவதெ தலித் அமைப்புகளீன் தலைடயாய கடமையாகும்.

  7. அம்பிஜி,

    உங்கள் 1.1.1.1.1.1.1.1.1.1 பின்னூட்டத்துக்கு பதிலாக

    //மேற்படி மதங்களுக்கு சாதியை ஒழிக்கும் ஆற்றல் இல்லையா..?! சரி, சமூகத்தில் நிலவும் பார்ப்பனீய ஆதிக்கம்தான் காரணம் என்றால் ://

    அடிப்படையிலேயே பிறப்பு ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை விதிக்கும் இந்து மதம்தான் எல்லா மதங்களிலும் கேடு கெட்டது. மற்ற மதங்களின் ஒரு சில நல்ல போதனைகள் கூட இந்து மத சூழலில் மங்கிப் போகின்றன.

    //பார்ப்பனீய ஆதிக்கம், எந்த மதமாக இருந்தாலும் அதன் கோட்பாடுகளை மீறி, தொடரமுடியும் போது இந்து மதத்தின் அழிவு அதற்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்..?! சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் மதச் சார்பை கடந்து இயங்குவதை கவனிக்கவில்லையா..?!//

    பார்ப்பனீய மதம் பரவலாக கடைப்பிடிக்கப்படும் சமூகத்தில்தான் பார்ப்பனீய ஆதிக்கம் மற்ற மதங்களின் மீதும் செலுத்தப்படும். சமூக, பொருளாதாள, அரசியல் காரணிகளையும் பார்ப்பனீய மதம் கட்டுப்படுத்துகிறது. (மடங்கள், ஆதீனங்கள் – நிலவுடமை, அதிகார மட்டங்களில் ஆதிக்கம்)

    • சிவாஜி,

      // அடிப்படையிலேயே பிறப்பு ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளை விதிக்கும் இந்து மதம்தான் எல்லா மதங்களிலும் கேடு கெட்டது. மற்ற மதங்களின் ஒரு சில நல்ல போதனைகள் கூட இந்து மத சூழலில் மங்கிப் போகின்றன. //

      சாதியை விடாது பிடித்துக் கொண்டிருக்கும் மேற்படி மதத்தவர்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறக் காரணம் நீங்கள் குறிப்பிடும் ஒரு சில நல்ல போதனைகளால் கவரப்பட்டு அல்ல என்பது தெளிவாகிறது. சாதியை கடைபிடிக்க இந்துமதத்திலிருந்தாக வேண்டிய அவசியமில்லை என்றும் உணர்ந்திருக்கிறார்கள், காரணம் புதிய மதம் நடைமுறையில் அதை அனுமதிக்கிறது. இவர்களின் புறக்கணிப்புக்கு மட்டுமின்றி, மாற்று மதத்தின்/மதத்தில் தொடரும் தவறுகளுக்கும் இந்து மதம் பொறுப்பேற்க வேண்டுமா..?!

      // பார்ப்பனீய மதம் பரவலாக கடைப்பிடிக்கப்படும் சமூகத்தில்தான் பார்ப்பனீய ஆதிக்கம் மற்ற மதங்களின் மீதும் செலுத்தப்படும். //

      அப்படி அதை ஏற்றுக் கொள்வது அந்த மதங்களின் தோல்வியை குறிக்கும்..

      // சமூக, பொருளாதாள, அரசியல் காரணிகளையும் பார்ப்பனீய மதம் கட்டுப்படுத்துகிறது. (மடங்கள், ஆதீனங்கள் – நிலவுடமை, அதிகார மட்டங்களில் ஆதிக்கம்) //

      இந்து மதத்தை விமர்சித்து இதர மதங்களை புகழ்வதை வாடிக்கையாகக் கொண்ட அரசியல், சமூக இயக்கங்களிலும் சாதி உணர்வு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் இருப்பதுவும்கூட பார்ப்பனீய மதமாக அவர்களால் புறந்தள்ளப்படும் இந்து மதத்தாலா அல்லது அவர்களின் பார்ப்பனீய சிந்தனைகளாலாலா..? இச்சிந்தனைகளுக்கு சுயநலன் சார்ந்த சமூக, பொருளாதார, அரசியல் காரணிகள் அடிப்படையாக அமைவது கண்கூடு.

Leave a Reply to Mumbai Thozhan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க