Sunday, July 21, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்குடிமக்களை கிரிமினல்களாக நடத்தும் பாசிசத்தை முறியடிப்போம்!

குடிமக்களை கிரிமினல்களாக நடத்தும் பாசிசத்தை முறியடிப்போம்!

-

வாடகைதாரர்களின் விவரம் திரட்டும் சென்னை போலீசின் உத்தரவுக்கு நீதிமன்றத் தடை!

வாடகைதாரர் விவரம்சென்னை மாநகரப் போலீசு நடத்திய போலி மோதல் கொலைகளும், வடமாநிலத் தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. சென்னையில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் குடியிருக்கும் ‘சமூக விரோதி’களால் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் குடியமர்த்திருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய விவரங்களை அருகாமை போலீசு நிலையத்தில் தரவேண்டும் என்றும், அவ்வாறு அளிக்கத் தவறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது இ.பீ.கோ பிரிவு 188இன் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போலீசு உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ், மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, போலீசு தருகின்ற படிவத்தில், ‘வாடகைதாரரின் புகைப்படம், அடையாள அட்டை, அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கெனவே குடியிருந்த முகவரி, செல்பேசி எண், வேலை செய்யும் இடத்தின் முகவரி, வீட்டில் தங்கியிருப்பவர்கள் குறித்த விவரம்’ ஆகியவற்றைத் தரவேண்டும்.  வீட்டு உரிமையாளர் அதற்கு கைச்சான்றும் அளிக்க வேண்டும்.

ஜெயா அரசின் அப்பட்டமான இந்த பாசிச நடவடிக்கையை ஓட்டுப் பொறுக்கிகள் யாரும் கண்டிக்கவில்லை. சில மனித உரிமை அமைப்புகளும் வழக்குரைஞர்களும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். வலுவான எதிர்ப்பேதும் இல்லாததால், உள்ளூர் ஓட்டுப்பொறுக்கித் தலைவர்கள் மூலம் வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது போலீசு. வீட்டு உரிமையாளர்களின் பார்வையில், வாடகைதாரர்கள் சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகளாக மாறிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) இவ்வுத்தரவுக்கு எதிராக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றையும் தாக்கல் செய்தது. போலீசின் உத்தரவு வாடகைதாரர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதுடன், அவர்களது தனிமைச் சுதந்திரத்தை மறுப்பதாகவும், சொந்த வீடு இல்லாதவர்களையும் வெளிமாநிலத்தவரையும் கிரிமினல்களாகச் சித்தரிப்பதாகவும், வீட்டு உரிமையாளர்களை ஆள்காட்டிகளாக மாற்றுவதாகவும் வாதிட்ட ம.உ.பா.மையம், இந்த உத்தரவுக்கு உடனே  தடை விதிக்கக் கோரியது. வீட்டு உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் 30.3.2012 அன்று தடை விதித்த உயர் நீதிமன்றம் 25.4.2012 அன்று மொத்த உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. போலீசின் இவ்வுத்தரவு  தடுக்கப்படாமலிருந்தால், தமிழகம் முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்பட்டிருக்கும்.

பயங்கரவாத தடுப்பு, கிரிமினல் குற்றத் தடுப்பு என்ற பொய் முகாந்திரங்களை வைத்து மக்கள் மீதான கண்காணிப்பை அதிகரித்து வருகின்றன, மத்தியமாநில அரசுகள். மக்கள் மீதான மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவற்றுக்கெதிரான போராட்டங்களும் அதிகரிக்கும் என்பதால், குடிமக்கள் அனைவரையும் கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகவே அரசும் ஆளும் வர்க்கமும் கருதுகின்றன. மத்தியமாநில உளவுத் தரவுகளை ஒருங்கிணைக்கும் “நாட்கிரிட்” என்ற தேசிய உளவு வலைப்பின்னல், ஆதார் அட்டை, வீதிகளில் ஆங்காங்கே நிறுவப்படும் டி.வி. காமெராக்கள், கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர் போன்றோரின் தரவுகள் திரட்டப்படுதல் போன்றவற்றின் வரிசையில் வருகிறது, சென்னை போலீசின் இவ்வுத்தரவு.

பாசிசம் வெகுவேகமாக நிறுவனப்படுத்தப்படுகிறது. சுருக்கு இறுகுமுன்னர் விழித்துக்கொண்டு அதனை அறுத்தெறிந்தாகவேண்டும்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. வாழ்த்துக்கள் . மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பணி தொடர்ந்து வெல்லட்டும்

 2. கொலை, கொள்லை, கர்ப்பழிப்பு, ஊழல், கிருமினல் வேலைனு அனைத்தையும் அரங்கேட்ருவதே போலிசு, ராணூவம், அதிகாரிகள், அரசியல் வாதிகள் தான் இவர்கள் தான் மக்களால் கண்கானிக்கப்பட வேண்டும் இவர்கள் மக்கலை கண்காணிப்பது என்பது திருடன் கையில் சாவியை கொடுத்த மாதிரிதான்………….ஆக உடனே கண்காணிக்க தொடங்குவோம்.

 3. வாழ்த்துக்கள் வினைவுக்கு . மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் பணி தொடர்ந்து வெல்லட்டடும்

 4. உண்மைதான்.

  அம்மாதிரித்தான் நாட்டின் அத்தனை குடிமக்களையும் கிரிமினல்கள் போல ஷ்டாஸி அமைப்பு மூலம் வேவு பார்த்த கிழக்கு ஜெர்மானிய அரசு உலக வரைபடத்திலிருந்தே மறைந்தது. பார்க்க: http://dondu.blogspot.com/2007/09/staatssicherheit-staasi.html

  சர்வாதிகார அரசுகளுக்கு எவ்வளவு பட்டாலும் புத்தி வராதுதான்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • இங்கே டோண்டு என்ன சொல்றாருன்னா…

   சர்வாதிகார பாசிச ஜெயலலிதா அரசு, இந்திய அரசு, பேடி பயல் மோடி அரசு… இவை எல்லாம் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போய் விடும் என்கிறார்…

   ஜெயலலிதாவுக்கும், மோடிக்கும், இந்திய அரசுக்கும் எத்தனை முறை மலம் தேய்ந்த செருப்பால் அடித்தாலும்… புத்தி வராது என்கிறார் டோண்டு…

   நன்றி டோண்டு சார்…

 5. தமிழ்க் குரல் சொல்வது என்னவென்று அவருக்கே புரியவில்லை. மோடி, ஜெயாலிதா ஆகியோர் முதல்வர்கள் மட்டுமே. அவர்களது ஆட்சிக் காலம் முடிந்து, தேர்தலில் வெற்றி பெற முடியாது போனால் அதிகாரத்திலிருந்து காணாமல் போகக் கூடியவர்கள். ஆனால் நான் குறிப்பிட்ட கிழக்கு ஜெர்மானிய அரசு நிஜமாகவே உலக வரைபடத்திலிருந்து மறைந்தது. அதை இப்போது புரிந்து கொண்டதால்தான் வினவு கள்ள மௌனம் சாதிக்கிறது.

  வினவுதான் முதலில் அது புரியாமல் பாசிச அரசு என்றெல்லாம் எழுதினால் தமிழ்க் குரலுக்கும் அதே அபுரிதல்தானா? அட கஷ்ட காலமே.

  தீய சக்தியான பிரபாகரனின் ஆதரவாளரிடமிருந்து வேறென்னத்தான் எதிர்பார்க்க முடியும்?

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • டோண்டு,தமிழ் குரல் இந்திய அரசையும் சேர்த்து சொல்லியிருக்கார்.அதாவது குடிமக்களை வேவு பார்ப்பதால் கிழக்கு ஜெர்மானிய அரசை போல் இந்திய அரசும் காணாமல் போகும் என உங்கள் கூற்றுக்கு பொருள் கூறுகிறார்.வசதியாக மோடியையும் ஜெயாவையும் எடுத்துக்கொண்டு பதில் சொல்லும் டோண்டு இந்திய அரசை சாய்ஸில் விடுவது ஏனோ.

 6. இந்திய அரசு ஜனநாயக அரசு. கிழக்கு ஜெர்மனி சர்வாதிகார அரசு.

  நீங்கள் இங்கமர்ந்து கொண்டு தெனாவெட்டாக எழுதுவதெல்லாம் கிழக்கு ஜெர்மனியில் நடந்திருக்காது. உங்கள் குழந்தைகளே உங்களை வேவு பார்த்து போட்டுக் கொடுத்திருப்பார்கள். நான் சுட்டிய எனது ஷ்டாஸி பதிவைப் பாருங்கள்.

  அது கூட தெரியாது நீங்களும் தமிழ்க் குரலும் உளறுகிறீர்கள். அது தெரிந்துதான் வினவின் கள்ள மௌனம் நீடிக்கிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • வாதத்தை ஆரம்பிக்கும்போதே ”உண்மைதான்” என்று சொன்னது பதிவையும் சேர்த்துதானே.வாதத்திற்காக கிழக்கு ஜெர்மனி குடிமக்களை வேவு பார்த்ததாகவே இருக்கட்டும்.அதே வேலையை செய்யும் உங்கள் ”ஜனநாயக”இந்திய அரசு மட்டும் ஒழியாது என சொல்வது எந்த வகையில் அறிவுக்கு பொருத்தமானது.

   \\அம்மாதிரித்தான் நாட்டின் அத்தனை குடிமக்களையும் கிரிமினல்கள் போல ஷ்டாஸி அமைப்பு மூலம் வேவு பார்த்த கிழக்கு ஜெர்மானிய அரசு//
   இதில் உள்ள ”அம்மாதிரித்தான்” என்ற சொல் இந்திய அரசும் வேவு பாக்குது என்பதைத்தானே குறிக்குது.இதை ஜனநாயக அரசுன்னு வேற சொல்றீங்க. இப்போ சொல்லுங்க உளறுவது யார்.

   அப்புறம் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையை நாங்களும் அறிவோம்.

   மக்கள் ஒப்புதல் பெற்றா காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போட்டது.

   மக்கள் ஒப்புதல் பெற்றுத்தான் ஈழப்போரை நடத்தியதா.

   • I dont understand why Dondu Raghavan compares this with east Germany.If we have a police which has to take care of People’s security,then they have to be helped to do a better job.

    Whats wrong with registering the identities with the police,what are they going to do with it.How ll any normal person suffer as a consequence?

    Vinavu people here are scared that those terrorists working against the state will have no choice to come under the scanner and with this the hold of the administration ll increase and their revolution dreams come to a full stop.

    But normal people leading their lifestyle wont suffer in anyway.It is a huge derider for anti social elements and a boost for normal people.

    The Aaadhar initiative along with this is a good boost.

 7. Mokkai discussion,

  Most people here can only talk big words,fascism,communism this that,general intuitive understanding of society is zero in most posters here and thats why people dont come to you for solutions.

 8. இந்திய அரசு வேவு பார்ப்பது தேவைக்காக, பொறுக்கி எடுத்த சில சந்தர்பங்களுக்கு மட்டும். ஆனால் கிழக்கு ஜெர்மானிய அரசு வேவு பார்த்தது டீஃபால்ட்டாக அத்தனை குடி மக்களையும், எப்போதுமேயே. உங்களுக்கு இன்னுமா இந்த வேறுபாடு புரியவில்லை?

  அம்மாதிரித்தான் என நான் எழுதியது கின்டலுக்காக. வினவு புரிந்து கொன்டு விட்டது. உங்களுக்குத்தான் புரியவில்லை அல்லது புரியாதது போல நடிக்கிறீர்கள். சர்வாதிகாரியாக ஆட்டம் போட்ட இந்திரா தூக்கி எறிந்தவர்கள் நம் மக்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • இது நல்ல தந்திரமா இருக்கே.ஒரு கருத்த சொல்ல வேண்டியது.வாதத்தின் போக்கில் அது நமக்கு எதிரா போயிட்டா கிண்டல்னு சொல்லி தப்பிச்சுக்கலாம். வரும் எதிர்ப்பை பொறுத்து தேவைப்பட்டால் உண்மைன்னோ.கிண்டல்னோ சொல்லிக்கலாம்.

   ஒரு வழியா இந்திய அரசு தேவைக்காகவும்,சில சந்தர்ப்பங்களிலும் வேவு பார்ப்பது சரிதான் என்ற நிலைப்பாட்டுக்கு வந்து சேர்ந்துருக்கிறீர்கள்.நல்லது.

   இந்திய அரசு யாருடைய நலனுக்கானது.அதன் வர்க்க சார்பு எத்தகையது.அதன் பொருளாதார கொள்கைகள் மக்களின் நலனை மனதில் கொண்டு வகுக்கப்படுபவையா.உள்நாட்டு,வெளிநாட்டு பெரும் முதலாளிகள் கொள்ளை லாபத்தை மனதில் கொண்டு வகுக்கப்படுபவையா.

   இந்த கேள்விகளுக்கான விடைகள் மனசாட்சி அடிப்படையில் இருக்குமானால் இந்திய அரசின் வேவுப்பணி எவ்வளவு ”மகத்தானது” எவ்வளவு ”அவசியமானது” என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

 9. வேவு பார்க்காத அரசே கிடையாது. உங்களால் உலகில் ஏதேனும் ஒரு தேசத்தை வேவுபார்க்காத தேசம் என சொல்ல இயலுமா?

  வேவு பார்ப்பது ஜனநாயக அரசுகள் நாட்டு நலனுக்காக செய்கின்றன. சர்வாதிகார அரசுகள் அவ்வாறு இல்லை. அதுதான் வேற்றுமை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • \\வேவு பார்ப்பது ஜனநாயக அரசுகள் நாட்டு நலனுக்காக செய்கின்றன//

   இங்குதான் நாம் வேறுபடுகிறோம்.

   நாட்டு நலன் என்று எதை குறிக்கிறீர்கள்.நாட்டு நலன்,தேச பாதுகாப்பு என்ற பெயரில்தான் இந்திய அரசு தனது மக்கள் விரோத போக்குகள் அனைத்தையும் நியாயப்படுத்தி வருகிறது.உண்மையில் நாடு எனபது மக்கள்தான்.அந்த மக்களின் நலனுக்கானவை மட்டுமே நாட்டுக்கு நலன் பயக்கும்.

   இந்திய அரசு பரந்துபட்ட மக்கள் நலன் பேணும் அரசு அல்ல.அது பெரும் முதலாளிகள்,அதிகார வர்க்கம்,அரசியல்வாதிகள், ஏகாதிபத்தியங்கள்,பன்னாட்டு நிறுவனங்கள் நலனுக்கானது.அதன் கொள்கைகள்,செயல்பாடுகள் அனைத்தும் இந்த திசையிலேயே இருக்கும்போது வேவு பார்ப்பது மட்டும மக்கள் நலனுக்காக இருக்க முடியாது.ஓரளவுக்காவது உரிமைகளை பெற்றுத்தரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கவே அவை பயன்படுத்தப்படும்.

   • ஒரு திருத்தம்.
    \\ அந்த மக்களின் நலனுக்கானவை மட்டுமே நாட்டுக்கு நலன் பயக்கும்.//
    இந்த வரியை ”அந்த மக்களின் நலனுக்கானவை மட்டுமே நாட்டு நலன் என ஏற்கமுடியும்” என திருத்தி படிக்கவும்.

 10. If you dont believe in the government,there is no use talking about anything.Government is also made up of people and what is the guarantee that your group will no do the same to people who disagree with you?

 11. வேவு பார்க்காத அரசின் உதாரணம் கேட்டேன். இன்னும் தரவில்லை. அரசு பை டெஃபினிஷன் அப்படித்தான் இயங்க முடியும். ஒற்று என்பது உள்நாட்டிலும் சரி வெளி நாட்டிலும் சரி நடந்தே தீரும். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் படிக்கவும். திருக்குறளின் பொருட்பாலை படிக்கவும். அவை சரியாக இயங்குகின்றனவா என்பதைக் காண்பதுதான் முக்கியம்.

  ஜனநாயக நாட்டில் முறைகேடுகள் நடந்தாலும் அவை சுதந்திர பத்திரிகைகளால் வெளிக்கொணரமுடியும். உதாரணம் வாட்டர்கேட் ஒற்றாடல். அமெரிக்க ஜனாதிபதியையே இறக்கி வைத்த விஷயம். வினவு வித்ந்தோதும் க்ம்யூனிஸ்ட் அரசியலில் இல்லாத உள்நாட்டு ஒற்றாடலா? வாட்டர்கேட் மாதிரி ஒற்றாடல் எல்லாம் அங்கே ஜுஜுபி. ஆகவேதான் இதுவரை இப்பதிவில் வினவு எனது பின்னூட்டங்களுக்கு பதிலளிக்காது கள்ள மௌனம் சாதிக்கிறது.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க