privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!

அதிகரிக்கும் போலீசு கண்காணிப்பு: பாசிமயமாகும் அரசு!

-

சென்னை-என்கவுண்டர்
என்கவுண்டர் செய்யப்பட்ட வடமாநில இளைஞர்கள்

சென்னை  வேளச்சேரியில் ஐந்து வடமாநில இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட போலி மோதல் கொலை, திருப்பூரில் ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடந்த திருட்டு ஆகிய இரண்டு சம்பவங்களுக்குப் பின், வட மாநிலங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்திருக்கும் கூலித் தொழிலாளர்கள், தமிழகத்தில் உயர் கல்வி படித்துவரும் வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோர் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்வதைக் கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளது, தமிழக போலீசு.  சென்னை, திருப்பூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வடமாநிலக் கூலித் தொழிலாளர்கள் பற்றிய விவரங்களைப் பதிவு செய்வதைத் தமிழக போலீசு அதிகாரிகளே நேரடியாக நடத்தி வருகின்றனர்.

வட மாநிலக் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் அதிரடியாகப் புகுந்தும், அவர்களைத் திருமண மண்டபங்கள் போன்ற இடங்களுக்கு வலுக்கட்டாயமாக ஓட்டிவந்தும் இப்பதிவினை போலீசார் நடத்தி வருகின்றனர்.  வட மாநிலத் தொழிலாளர்களின் பிறந்த ஊர், தொழில், தற்போதைய முகவரி, கைபேசி எண்கள் ஆகியவற்றோடு, அவர்களின் விரல் ரேகைகளும் போலீசாரால் வலுக்கட்டாயமாகப் பதிவு செய்யப்படுகின்றன.  தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தற்பொழுது கணக்குப் பாடம் நடைபெறுகிறதோ இல்லையோ, வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களைக் கணக்கெடுக்கும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசும், போலீசும் தயாரித்து வரும் இந்த “சந்தேக லிஸ்டு” வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை.  சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வாடகைக்கு குடியிருந்து வரும் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விவரங்களை அவர்களது புகைப்படம், கைபேசி எண்களோடு பெற்று அருகிலுள்ள போலீசு நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகர போலீசு வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்த விவரங்களைக் கொடுக்கத் தவறும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மாத சிறைத் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்றும் போலீசு எச்சரித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் விடுதலைப் புலிகளாக அல்லது அவர்களின் ஆதரவாளர்களாக, முசுலீம்கள் தீவிரவாதிகளாகச் சந்தேக வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டு ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டதைப் போல, வடமாநிலக் கூலித் தொழிலாளர்களைக் கொள்ளையர்களாகவும், வாடகைக்குக் குடியிருப்போரைச் சந்தேகத்துக்கு உரியவர்களாகவும் முத்திரை குத்துகிறது, தமிழக போலீசின் இந்த உத்தரவு.  இது, குடிமக்களின் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் குடிபெயரும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது; இனப் பாகுபாடு மற்றும் வர்க்கப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இந்த உத்தரவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன.

போலீசு கண்காணிப்புஎனினும், தமிழகத்தில் நடந்துவரும் கொலை, கொள்ளை ஆகியவற்றைக் காரணமாகக் காட்டி, தனது இந்தப் பீதியூட்டும் உத்தரவை நியாயப்படுத்தி வருகிறது, தமிழக போலீசு.  பாதுகாப்பான நகர வாழ்க்கைக்கு இது போன்ற கணக்கெடுப்பு அவசியமென்றும், மும்பய், டெல்லி, பெங்களூரு, புனே போன்ற நகரங்களில் வசிப்போர் பற்றிய விவரங்களைப் போலீசிடம் பதிவு செய்யும் நடைமுறை ஏற்கெனவே அந்நகரங்களில் அமல்படுத்தப்பட்டு வரும்பொழுது, தமிழகத்தில் இது காலதாமதமாகத் தொடங்கப்படுகிறதென அலுத்துக் கொள்கிறது, தமிழக போலீசு.  அதாவது, சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடந்த இரண்டு வங்கிக் கொள்ளைகளையடுத்து, வாடகை வீட்டில் குடியிருப்போரைக் கண்காணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு போலீசு வரவில்லை; அதன் மனதில் ஏற்கெனவே தயாராக இருந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு இந்தக் கொள்ளைகளை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்பதுதான் இப்பதிவின் பின்னணியிலுள்ள உண்மை.

வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் நக்சலைட்டுகளும் கலந்து வருகிறார்கள் என ஏற்கெனவே பீதி கிளப்பி வந்த போலீசு, அவர்களைப் பாகுபடுத்திப் பதிவு செய்வதற்கான வாய்ப்பாக இந்தக் கொள்ளைச் சம்பவங்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது.  நடக்கின்ற எந்தவொரு குற்றத்தையும் தனது அதிகாரத்தையும் மக்கள் மீதான கண்காணிப்பையும் கூட்டிக் கொள்வதற்கான வாய்ப்பாக போலீசு பயன்படுத்தி வருகிறது என்பதுதான் இங்கு நமது கவனத்திற்குரியது.

தமிழகத்தில் போலீசின் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்கெனவே எந்தப் பஞ்சமும் கிடையாது.  தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிப்பது என்ற பெயரில் முக்கிய ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் “மெட்டல் டிடெக்டர் மற்றும் சி.சி.டி.வி. கேமரா” கண்காணிப்பு; இரவு 11 மணிக்கு மேலாகிவிட்டால், வாகனங்களைத் தடுத்து நிறுத்திப் பரிசோதிக்கும் நேரடிக் கண்காணிப்பு; பகல்பொழுதுகளில் தெருவுக்குத்தெரு நடத்தப்படும் வாகனப் பரிசோதனை என்ற கண்காணிப்பு; இவை ஒருபுறமிருக்க, தெருவில் குடிமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காகப் புறக்காவல் நிலையங்கள் புதிதுபுதிதாகத் திறக்கப்படுவதோடு, பல்வேறு தெருச் சந்திப்புகளில் செக்போஸ்டுகளும், சி.சி.டி.வி. கேமராக்களும் அமைக்கப்படுகின்றன.  போலீசின் “இன்ஃபார்மர்களாக’’ப் பணியாற்றுவதற்காகவே போலீசு நண்பர்கள் குழு, போலீசு பாய்ஸ் கிளப்புகள் ஒவ்வொரு பகுதியிலும் கட்டப்படுகின்றன.  இப்படி தெருக்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து வரும் போலீசின் கண்காணிப்பு இன்று வீடு வரை நீள்கிறது.

குடும்ப அட்டை, மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை மூலம் குடிமக்கள் பற்றிய தேவையான விவரங்களை அரசு பெற்று வந்தாலும், மேலும் மேலும் குடிமக்களின் அந்தரங்க விசயங்களை அறிந்து கொள்ளுவதற்கும், அவற்றைத் தொகுத்து வைத்துக்கொண்டு அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கும் அரசு பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது.  தமிழகத்தில் பயின்று வரும் வடமாநில மாணவர்கள் பற்றி தற்பொழுது தமிழக போலீசு நடத்தத் துணிந்திருக்கும் இந்தக் கணக்கெடுப்பை, மைய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை ஏற்கெனவே எடுத்து வருவதாகக் கூறுகிறார், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்.  மைய அரசோ தேசிய அடையாள அட்டைத் திட்டம் மூலம் குடிமக்கள் அனைவரையும் தமது முழுக் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரும் முயற்சியினைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

தேசிய அடையாள அட்டை (ஆதார்) திட்டம், குடிமக்களின் பெயர், வயது, முகவரி போன்ற வெளிப்படையான விவரங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை; அவரது வங்கி இருப்பு தொடங்கி அவருக்கு உள்ள நோய் வரை அனைத்து அந்தரங்கமான தகவல்களையும் இந்த ஆதார் அட்டையின் மூலம் அரசு நோட்டம் விடுகிறது.

போலீசு கண்காணிப்புதமிழகத்தில் நடந்து வரும் கொலை, கொள்ளையைச் சாக்கிட்டு தமிழக போலீசு மேற்சொன்ன கணக்கெடுப்பு  கண்காணிப்பை நடத்தி வருகிறதென்றால், மைய அரசு கார்கில் போரைச் சாக்காக வைத்து ஆதார் திட்டத்தைக் கொண்டுவந்தது.  பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் கார்கில் போரை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டி, தீவிரவாத ஊடுருவலைத் தடுப்பதற்காக எல்லைப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அடையாள அட்டைகள் வழங்க வேண்டுமென ஆலோசனை கூறியது.  பா.ஜ.க. கூட்டணி ஆட்சி இந்த ஆலோசனையின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பை மறுசீரமைப்பது என்ற அறிக்கையைத் தயாரித்தது.  அதில் வங்கதேச முசுலீம்கள் ஊடுருவலை மிகப் பெரும் அச்சுறுத்தலாகக் காட்டி, தேசிய அடையாள அட்டைத் திட்டத்தை நாடெங்கும் கொண்டு வரும் முடிவை எடுத்தது.  இதற்கு ஏற்ப, குடிமக்களின் அந்தரங்க விசயங்களையும் பதிவு செய்வதற்கு ஏற்றவாறு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன.  பா.ஜ.க.விற்குப் பின் ஆட்சியைப் பிடித்த காங்கிரசு கூட்டணி அரசு, 2008  ஆம் ஆண்டு மும்பயில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைச் சாக்காகக் காட்டி, தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு தனியான ஆணையத்தை அமைத்தது.

‘‘தேசிய அடையாள அட்டை இருந்தால்தான் இனி ரேஷன் பொருட்கள் கிடைக்கும்; சமையல் எரிவாயு உருளை கிடைக்கும்; அரசு அறிவிக்கும் சமூக நலத் திட்டங்களைப் பெற முடியும்” என அரசு அடுத்தடுத்து போகிறபோக்கில் அறிவிப்பதன் மூலம் இத்திட்டத்தில் பொதுமக்கள் தாமே முன்வந்து பதிவு செய்துகொள்வதைக் கொல்லைப்புறவழியில் கட்டாயமாக்கி வருகிறது.  ஆதார் அட்டை தனி மனித உரிமைகள், அந்தரங்கங்களை மீறுகிறது என மனித உரிமை அமைப்புகளும், ஜனநாயக இயக்கங்களும் சுட்டிக் காட்டினாலும், அந்த எச்சரிக்கையை நடுத்தர வர்க்கம்கூடப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  ஏதாவதொரு அட்டை இருந்தால்தான் தமது அடையாளத்தை அரசிடம் உறுதிப்படுத்த முடியும் என்ற நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டிருப்பதால், பொது மக்கள் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பதிவுசெய்து, அவர்களைக் கண்காணிக்கும் திட்டத்தைச் செயற்படுத்துவது அரசுக்கு எளிதாகிவிடுகிறது.

வடமாநிலத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வாடகை வீட்டில் குடியிருப்போர் பற்றித் தமிழகப் போலீசு நடத்திவரும் பதிவின்பொழுது அளிக்கப்படும் புகைப்படங்களும், கைபேசி விவரங்களும் போலீசாரால் தவறாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதமுள்ளது என்ற கேள்விக்கு, “எங்களை நம்புங்கள்” என யோக்கியனைப் போலப் பதில் அளித்திருக்கிறது, சென்னை போலீசு.  சென்னை போலீசாரால் பதியப்படும் வழக்குகளுள் 60 சதவீத வழக்குகள் பொய்யானவை என மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ள விவரத்தோடு ஒப்பிட்டால், போலீசின் நேர்மையும், நாணயமும் நம்மைப் பீதியடையச் செய்துவிடும்.  சென்னை வேளச்சேரியில் நடந்த போலி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சுஜய்குமார் வங்கிகளை நோட்டம் விடுவது போல போலீசாரால் வெளியிடப்பட்ட காட்சியின் நம்பகத்தன்மை குறித்து ஐயம் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், இந்தக் கேள்வியை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்துவிட முடியாது.

போலீசு கண்காணிப்பு‘‘போலீசு கேட்கும் விவரங்களை அளிப்பதற்குச் சமூக விரோதிகள்தான் அச்சப்பட வேண்டும்.  சட்டப்படி கண்ணியமாக நடந்துகொள்ளும் பொதுமக்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?” என்ற எதிர்க்கேள்வியின் மூலம் சாதாரண பொதுமக்களை சமாதானப்படுத்த முயலுகிறது, போலீசு.  சமூக விரோதி யார், சட்டப்படி நடக்கும் குடிமகன் யார் என்ற கேள்விக்கு அரசிடம், போலீசிடம் இருக்கும் அளவுகோலே வேறானது.  ஐந்தாறு மாதங்களுக்கு முன்பாகச் சட்டப்படி நடக்கும் குடிமக்களாகக் கருதப்பட்ட கூடங்குளம்  இடிந்த கரை பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், அணு உலையை எதிர்த்துத் தீவிரமாகப் போராடத் தொடங்கிய பிறகு, அவர்களைச் சமூக விரோதிகளாகக் காட்ட அரசும் போலீசும் தொடர்ந்து முயன்று வருகின்றன.  கோவை பகுதியைச் சேர்ந்த சிறு தொழில் அதிபர்கள் மின்வெட்டைக் கண்டித்துப் போராடியபொழுது, தமிழக போலீசு அவர்களை லத்தியால் அடித்துத் துரத்தியது.  கண்ணியமான குடிமக்கள் சட்டம் ஒழுங்கிற்குச் சவால் விடுபவர்களாக மாறியது அந்தப் போராட்ட தருணத்தில்தான்.

ஆங்கிலேய காலனிய ஆட்சியின்பொழுது தம்மை எதிர்த்துப் போராடிய பழங்குடி இன மக்களைக் குற்றப் பரம்பரை சாதியாக முத்திரை குத்திய வெள்ளை துரைமார்கள், அம்மக்களை இரவு நேரங்களில் போலீசு நிலையங்களில் அடைத்து வைத்துக் கண்காணித்தார்கள்.  தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட இன்றைய மறுகாலனிய கட்டத்தில், இந்திய மக்களைக் கணினி வழியாகக் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர், பழுப்பு நிற துரைமார்கள்.  கண்காணிக்கும் முறை வேண்டுமானால் மாறியிருக்கலாம். ஆனால், இரண்டு துரைமார்களுக்கும் பொதுமக்களைப் பற்றிய பார்வை ஒன்றுதான்.

மைய அரசு சமீபத்தில் தேசிய தீவிரவாதத் தடுப்பு மையம் ஒன்றை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.  இந்த அமைப்பின் கீழ் வரும் மைய அரசின் உளவுத் துறைக்கு, சந்தேகப்படும் அனைவரையும் கைது செய்யும் அதிகாரத்தையும் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.  இதனை மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதாகக் கூறி, ஜெயா, மோடி உள்ளிட்டோர் எதிர்த்து சவுண்டு விட்டு வருகின்றனர். இந்தப் பிரச்சினையில் சந்தேக லிஸ்டில் கொண்டு வரப்படும் நபரைக் கைது செய்யும் அதிகாரம் மாநில போலீசிடம் இருக்க வேண்டுமா, அல்லது மைய உளவுத் துறையிடம் இருக்க வேண்டுமா என்பது குறித்துதான் காங்கிரசிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் நடக்கிறதேயொழிய, மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுவது பற்றிப் போலி கம்யூனிஸ்டுகள்கூட அக்கறை கொள்ளவில்லை.

போலீசு கண்காணிப்புஅரசு நடைமுறைப்படுத்தி வரும் தனியார்மய  தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளால் தமது வாழ்வாதாரங்களை இழந்துவரும் விவசாயிகள், தொழிலாளிகள், வணிகர்கள், சிறுதொழில் அதிபர்கள் என ஆகப் பெரும்பான்மையான மக்கள் அரசை எதிர்த்துப் போராடத் தயாராகிவரும் சூழ்நிலையில்தான் அரசு அனைத்துக் குடிமக்களையும் தனது முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரத் தயாராகிறது.  தனியார்மயம்  தாராளமயம் என்ற பெயரில் திணிக்கப்படும் மறுகாலனியாக்கம், சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் போன்றவற்றையெல்லாம் வேண்டாத சதைப் பிண்டமாக, தனக்குத் தொந்தரவு தரும் விசயமாகப் பார்க்கிறது.  மறுகாலனியாக்கம் சட்டத்தின் ஆட்சி என்ற இடத்தில் போலீசின் ஆட்சியைக் கொண்டு வருகிறது. மக்களின் சட்டபூர்வ போராட்டங்களைக்கூட, அது துப்பாக்கி முனையில் தீர்த்துவிடத்தான் முயலுகிறது.

வட மாநிலத்திலிருந்து வரும் கூலித் தொழிலாளர்கள், வாடகை வீட்டில் குடியிருப்போர் பற்றிய விவரங்களையெல்லாம் போலீசிடம் பதிவு செய்ய வேண்டும்; வட மாநில மாணவர்கள் பற்றிய விவரங்களைக் கல்லூரி நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும்; ஆதார் அட்டையை அல்லது அரசால் தரப்படும் வேறு ஏதாவதொரு அட்டையை, நாய்க்கு மாட்டிவிடும் லைசென்சு போன்று எப்போதும் கழுத்தில் மாட்டிக் கொண்டோ அல்லது சட்டைப் பையிலோ வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதெல்லாம் சட்டபூர்வமாகவே ஒரு பாசிச ஆட்சி திணிக்கப்பட்டு வருவதன் அடையாளங்கள்தான்.

வாய்ப்பு கிடைத்தால், கொலை  கொள்ளை, தீவிரவாதம் போன்ற குற்றச் செயல்களைக் காட்டி பொதுமக்களை இந்தக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வருகிறார்கள்; அதற்கு வாய்ப்பில்லை இல்லாதபொழுது, அடையாள அட்டை இருந்தால்தான் அரசின் சமூக நலத் திட்டங்கள் கிடைக்கும்; ரேஷனில் அரிசியும், கோதுமையும் கிடைக்கும் எனப் பொய்யான காரணங்களைச் சொல்லி மக்களைத் தமது கண்காணிப்பிற்குள் இழுத்துக் கொள்கிறார்கள்.

சந்தேகப்படும் யாரையும் கைது செய்யலாம்; அவர்களைப் போலி மோதலில் சுட்டுக்கூடக் கொல்லலாம் என்றபடி அரசு பாசிசமயமாகிவரும்பொழுது, இந்த அடையாள அட்டைகள் சுட்டு வீழ்த்தப்பட்ட அல்லது கொட்டடியில் கொல்லப்பட்ட பிணங்களை அடையாளப்படுத்ததான் பயன்படும்.  மற்றபடி, தீவிரவாதத்தையும் கொலை  கொள்ளை போன்ற குற்றச் செயல்களையும் தடுக்கத்தான் இந்தக் கண்காணிப்பு தேவைப்படுகிறது என இந்திய ஆளுங்கும்பலும் போலீசும் சொல்வதெல்லாம் வெறும் பம்மாத்துதான்.  இதனைப் புரிந்துகொள்ள தீவிரவாதத்தைத் தடுப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட தடா, பொடா சட்டங்கள் யார் மீது ஏவப்பட்டது என்பதைக் கொஞ்சம் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

______________________________________________________

– புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. சமீபகாலமாக வட இந்திய சகோதரர்களால் சென்னையில் சட்டம் ஒழுஙகு பிரச்சனை ஏற்பட்டுள்ளதா இல்லையா?

  திருப்பூர் அருகே உள்ள நூற்பாலையில் கணவனையும் மனைவியினையும் கொடூரமாகக் கொன்று பல லட்ச ரூபாய் பெருமானமுள்ளநகைகளை கொள்ளையடித்தனர்..அவர்களை இன்ன்மும் காவல்துறையால் கைது செய்ய இயலவில்லை, காரணம் அப்பகுதியில் யார் வேண்டுமானாலும் நாள் சம்பளத்திற்க்கு வேலை செய்யலாம், இதுவே ஒரு தமிழன் என்றால்நெல்லை தமிழ், மெட்ராஸ் பாசை என்பது போன்ற சிறு தகவல் கூட குற்றவாளிகளை நெறுங்க உதவியாக இருக்கும்…ஆனால் பொத்தாம்பொதுவாக நாலு வட இந்தியர்கள் இஙகு வேலை செய்தனர் என்பது காவல்துறைக்கு எந்த விதத்திலும் உதவியாக இல்லை, குற்றவாளிகளும் இன்று வரை கண்டுபிடிக்க இயலவில்லை..

  அடுத்து வட இந்திய மாணவர்கள்…

  1. என்ஜினியரிங் கல்லூரிகளில் முதலாமான்டு மாணவர்களை கேரளாவிலிருந்தும் வடைந்தியாவிலிருந்தும் சேர்த்துவிடுபவர்களுக்கு நல்ல கமிஸன் கிடைக்கிறது, இதில் தொடங்கும் பிரச்சனை பலமுறை அடிதடிகளிலும் சிலமுறை கொலைவறை கூட சென்றதுன்டு…

  2. சமையல் வேலை செய்ததற்க்கு சம்பளம் கேட்டதற்க்கு துப்பாக்கி எடுத்து காட்டி கைதான
  என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் சென்னையில் கதாகவிலக்லையா..
  3. வடைந்திய மானிலங்களுக்குள்ளான கோஸ்டி மோதலில் ஒருமாணவனை புதுவைக்குக் கொண்டு போய்க் கொல்லவில்லையா…
  4. குடிப்பொதையில் பசுவிடம் முறையற்ற வன்புணர்ச்சி கொண்டு பொதுமக்களிடம் மாட்டி தர்ம அடி வாங்கிய ஒடிசா தொழிலாளர்கள் இவை எல்லாம் நடந்தது தமிழ்னாட்டில் தான்..

  உடனே இவைஎல்லாம் தமிழன் செய்யவில்லையா என்று கேட்பார்கள் சில அறிவாளிகள்…தமிழன் செய்டால் குற்றவாளிகளை கண்டு பிடிப்பது எளிது, ஏன் ஒரு மலையாளியோ ஒரு கன்னடனோ, தெலுங்கனோ செய்தால் கூட அவனை கண்டுபிடித்து விடலாம்,நண்பர்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர் வழியே…ஆனால் மொய்க்கும் தேனியைப் போல் கூட்டம் கூட்டமாக அலையும் வட இந்தியரில் குற்றவாளியை எவ்வாறு கண்டுபிடிப்பது??

  உங்கள் வீட்டில் தங்கியிறுப்பவர் முகவரியும் இன்ன பிற தகவல்களும் தெரிந்திருப்பது அத்தியாவிசயம்…

  வட இந்தியர் அனைவரும் கொள்ளைகாரர் அல்ல, ஆனால் அவர்களின் கூட்டத்தில் பல கயவர்கள் ஒளிந்துள்ளனர், அவர்களூக்கு வேலையும் வீடும் தரும் நிறுவனங்களும் உரிமையாளர்களும் அவர்களைப் பற்றி முழு விபரங்களை தெரிந்து வைத்திருக்கவேண்டும், அவர்களுடைய அதிக உழைப்புக்கும், வாடகைக்கும் ஆசைப்பட்டால் மட்டும் போதாது..

  • ஏற்கனவே இது தொடர்பான முந்தைய பதிவுகளில் உள்ள கேள்விகளையே ( அவற்றிற்கு விரிவாக பதில் கொடுத்த பின்னரும்) பையா அண்ணன் மீண்டும் இங்கு வாந்தீ எடுத்துள்ளார். தெரியமத்தான் கேட்கிறேன் உங்களுக்கு மெமெரி லாஸ் பிரச்சனை ஏதும் இருக்கா?

   • கரப்பான்…முந்தைய பதிவுகளில் எழுதிவிட்டோம் அதனால் இப்பதிவில் எழுதமாட்டொம் என வினவு எழுதாமலா இருந்தது??இஙகு ப்திவு செய்யப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் இக்கட்டுரைக்கு 100% சம்பந்தமுள்ள கருத்துக்களே, ஏர் என்னாச்சு உனக்கு?

 2. //வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கூலித் தொழிலாளர்கள் மத்தியில் நக்சலைட்டுகளும் கலந்து வருகிறார்கள் என ஏற்கெனவே பீதி கிளப்பி வந்த போலீசு//

  நக்சலைட்டுகளை விடு அதெல்லம் ஓல்டு நியீசு…வட மாநிலங்களில் இருந்துமட்டும் இல்லை பக்கிஸ்தானில் அடிக்கப்பட்ட இந்தியக்கள்ளநோட்டிக்களை பக்கிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கும் வட இந்தியாவிலிருந்து தமிழகத்திற்க்குள்ளும் ரொம்பநாதளாக தொழிலாளர்கள் மூலமாக கடத்தல் நடந்து கொண்டுதான் இருந்தது…இடையில் சென்னைக்குக் கள்ளநோட்டுக்களை கடத்தி வந்த அன்வர் எனும் கயவன் கைது செய்யப்பட்டான் அவன் பாக்கில் அடித்த கள்ளநோட்டுக்களை ரொம்பநாதளாகவே கடத்தி வந்துள்ளா தொழிலாளி என்ற போர்வையில்…அவன் இப்பொது ஜெயிலில்..இதனாலேயே வட இந்தியர் கொடுக்கும் 500 1000நோட்டின் மீதுநமது சென்னை வியாபாரிகளுக்கு இன்னும் சந்தேகம் உள்ளது…

  • இவருதான் கரண்ட்நியூசு கந்தசாமி……ஏற்கனவே இது தொடர்பான முந்தைய பதிவுகளில் உள்ள கேள்விகளையே ( அவற்றிற்கு விரிவாக பதில் கொடுத்த பின்னரும்) பையா அண்ணன் மீண்டும் இங்கு வாந்தீ எடுத்துள்ளார். தெரியமத்தான் கேட்கிறேன் உங்களுக்கு மெமெரி லாஸ் பிரச்சனை ஏதும் இருக்கா?

 3. //குடிமக்களின் சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் குடிபெயரும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது; இனப் பாகுபாடு மற்றும் வர்க்கப் பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயக விரோத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுப் பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் இந்த உத்தரவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்துள்ளன.//வாஸ்தவம் தான் வேலையப்பாத்தோமா வீக்கெண்டுல பீரடிச்சோமா என்றிருந்தால் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை….பெங்களூர் சாப்ட்வேர் கம்பெனிகளிலும், கேரளாவில் திருவனந்தபுரத்து டெக்னோ பார்க்குகளிலும், கொச்சி இன்போ பார்க்கிலும், துபாயிம் அபுதாபிலும் அன்னாட்டு சட்ட திட்டங்களுக்குட்பட்டு கட்டட வேலை செய்யும் தமிழர்களுக்கு சுதந்திரமாக நடமாடும் உரிமை மற்றும் குடிபெயரும் உரிமை உள்ளிட்ட அனைத்து அடிப்படை உரிமைகளும் திருப்தியாகக் கிடைத்து கொண்டுதான் உள்ளது…ஆனால் அங்கு போய் திருட்டு வழிப்பறி கொலை கற்பழிப்பு, இயற்க்கைகு முறனான காமக் களியாட்டங்களில் நம்தமிழ்மக்கள் ஈடுபட்டால் நமக்கும் சுதந்திரமாக நடமாடும் உரிமையும் இன்ன பிற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படும்..

  • ஆனால் அங்கு போய் திருட்டு வழிப்பறி கொலை கற்பழிப்பு, இயற்க்கைகு முறனான காமக் களியாட்டங்களில் நம்தமிழ்மக்கள் ஈடுபட்டால் நமக்கும் சுதந்திரமாக நடமாடும் உரிமையும் இன்ன பிற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படும்..

   அட்றா அட்றா….புளுகுல பையாவை யாரும் பீட் பண்ண முடியாது.

   இங்கே பாதீ பேர் வசிப்பிடமே பாலத்துக்கடியில்தான்,

   பையாதான் குற்றங்களை கண்டுபிடிக்க “கவரு”மெண்ட்டு போட்ட புது ஆபீசர்ர்ர்ரு தெரியும்ல….

 4. பாம்பு மட்டுமல்ல வினவும் விஷம் கக்கும் என்பதை புரிந்து கொண்டு வெகுநாளாகிவிட்டது. இனி உம்மை நம்ப எவனும் தயாராயில்லை. காவல்துறைக்கு பொதுமக்களே ஒத்துழைப்பு தருவார்கள். என்கவுண்டர் சம்பவத்தின்போது – விசாரிக்க போன மனித உரிமை அமைப்பினரை பொதுமக்கள் விரட்டி அடிக்கவில்லையா? மக்களின் மனவோட்டத்தை புரிந்து கொள்ளாமல் புரட்சி நடத்த போகிறிர்களா?

  • நேசன்,

   பொதுவாக பேசுகிறீர்கள். வினவு யாருக்கு எதிராக விசம் கக்குகிறது என்பதை தெளிவாக சொல்லுங்கள்.

   ///என்கவுண்டர் சம்பவத்தின்போது – விசாரிக்க போன மனித உரிமை அமைப்பினரை பொதுமக்கள் விரட்டி அடிக்கவில்லையா?///

   அது பொது மக்கள் அல்ல பொதுமக்களை போல வேடமிட்டுக்கொண்டு நடித்த போலீசு உங்களைப் போன்ற பலரும் அவர்களை பொதுமக்கள் என்று நம்புமளவுக்கு நன்றாக நடித்திருக்கின்றனர்.

   • boss i am also a resident of that velachery area where encounter took place.. the human ranybody coming for tomorrows chennai match….im going.. let me know. may b v can join togetherights activists were insulted and sent back by our people who live there in the near by area. police was supportive but didnt compel anyone to act against them. the info u gave that police acted as residents and sent the human rights people is a complete bullshit.

   • நேசனின் புலம்பல்ஸை கேர் பண்ணாதீங்க….அது கலி முத்திடுத்து என்பவர்களின் குரல்…. மிஸ்ட்டர்ர்ர்ர் நேசன் இதை பப்ளிக்ல சத்தமா பேசிடாதேள்…செருப்படிதான் விழும் ஓய்…..

 5. ஒரு முறை அம்மாநிலங்களுக்குச்சென்று வாருங்கள்…
  உங்களுக்கு உண்மை புரியும்…

 6. ஆதாவது எப்போதும் வித்தியாசமாகச் சிந்திக்கும் அறிவாளிகளாக சிந்திக்கும் அறிவாளிகளாக வினவு அன் கோ தன்னை காட்டிக்கொள்ள முற்பட்டு பின்பு காயமுறுவது இது முதன்முறை அல்ல…அதுவும் முன்புநடந்த வினைகளை மறந்து விட்டு அதன் எதிர் வினைகளை மட்டும் அலசுவதில்நீர் PHD முடித்துள்ளீரா என்ன??

  சொந்தஙளையும்,நண்பர்களையும் கஸ்டப்பட்டு சம்பாரித்த பனத்தையும்நகையையும் கொள்ளையரிடம் கொடுத்து விட்டுநம்மவர் படும் கஸ்டம் இவர்களுக்குத் தெரியாது…ஆனால் காவல்துறை வட இந்தியருக்கு விதிக்கும் விதிகள் இவனுக்குக்கஸ்டமாகத்தெரியும், அதும் அது தினம் தொடரும் விசயம் அல்ல..ஒரே ஒரு முறை தான்….காவல்துறை இதைச்செய்யவில்லை யெனில் சென்னையில் குரங்கு மனிதனைத் தேடி இரவு கண்ணில் படுபவர்களினை எல்லாம் தாக்கியது போல் பல அப்பாவி வட இந்தியர்கல் தாக்கப்படுவர்,,…அதற்கு இது பரவாஇல்லை….ஒருமுறை காவல் துறைக்கு ஒத்துழிப்பு தருவதில் எந்தத் தவறும் இல்லை..

  1. நம்ம உள்ளூர் முன்னால் எம் ல் ஏ ஒருவரென் வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்த வடமானில லாரிக்கொள்ளையர்களை பல கஸ்டங்களுக்குப்பின் ஜாங்கிட் என்றநேர்மையான அதிகாரி கைது செய்தார், லாரியிலேயே தங்குமிடம் செட் செய்து கொடுரமான முறையில் கொலை செய்து விட்டு மாதமொரு முறை சொந்த ஊருக்குச் சென்று ஆடம்பரமாக வாழ்ந்தனர், அவர்கள் சந்தோசமாக குடும்பத்துடன் வாழ்வார்கள்…பாதிக்கப்பட்டவர்கள்????

  • அப்படியா? வெரி குட்.. அப்போ ஜாங்கிட்டை குஜராத் அனுப்பினா இசான் ஜாப்ரியை கொலை செய்தவர்களையும் அதற்கு மூல காரணமான அற்பன் மோடியையும் கைது செய்து விடுவரோ? போய்யா பீயா…

  • ஜாங்கிட் நேர்மையான அதிகாரி என்று சொல்லும்போதே பையா எவ்வளவு பெரிய அறிவாளினு புரியுது…..நீ சொல்லும் குற்றங்கள் பலவற்றின் வேர் சாட்சாத் ஜாங்கிட் தான்.. போ போய் வீட்ல பெரியாள் யாராவது இருந்தா கூட்டிட்டு வா…..

    • அதுசரி நீங்க போய் ஜாங்கிட் மாம்ஸுக்கே மாம்ஸ் வேல பாருங்க…

 7. இந்த வினவு பொதுவுடைமை கும்பல் தமிழ்நாட்டு மக்களின் கொஞ்சநஞ்ச நிம்மதியையும் கெடுத்து அவர்களை ஒழிக்காமல் விடாது போலிருக்கிறது. வட இந்தியாவில் இருந்து வருபவர்கள் மிகக்குறைந்த கூலிக்கு வேலை செய்ய தயாராக இருப்பதால் உள்ளூர் தொழிலாளிகளின் பிழைப்பு தான் பாதிக்கப்படும் (நம் தொழிலாளிகளில் ஒரு சாரார் ஊரக வேலைவாய்ப்புத்திட்டம், இலவச அரிசி ஆகியவற்றால் சோம்பேறிகளாக ஆகிப்போனார்கள் என்பது இன்னொரு விஷயம். இதனால் ஏற்கனவே கீழே போய்க்கொண்டிருந்த விவசாயம் உள்ளிட்ட பல தொழில்கள் மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளன). இந்த வட இந்திய படையெடுப்பால் முதலாளி வர்க்கம் தான் பலனடைகிறது என்பது இந்த கும்பலுக்கு தெரியாதா? வட இந்தியர்கள் இங்கு வந்து வேரூன்றினால் பொதுவுடைமை அமைப்பு வலுவடையும், தமிழகத்தில் அரசியல் அதிகாரத்தை பிடிக்கலாம் என்று இந்த வினவு பொதுவுடைமை கும்பல் மனப்பால் குடிக்குமானால் அது போன்ற முட்டாள்தனம் வேறெதுவுமில்லை. ஆர்.எஸ்.எஸ், முலாயம் சிங் யாதவ், லாலு யாதவ், மாயாவதி போன்ற கும்பல்கள் தான் தமிழகத்தில் வளரும். பக்கத்து மாநிலங்களில் தமிழ் பேசும் மக்கள் ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் அடி வாங்கி மானங்கெடுவது போதாதா? தமிழ்நாட்டிலும் தமிழ் மக்கள் ஒழிய வேண்டுமா? அசாம், மணிப்பூர் போன்ற மாநிலங்களில் இருந்து வரும் மக்களிடம் வேண்டுமானால் நம் நல்லெண்ணத்தை காண்பிக்கலாம்.அவர்களும் நம்மைப்போன்ற விளிம்பு நிலை மாநிலங்களிலிருந்து வருகிறார்கள். இந்தி பேசும் ஆக்கிரமிப்பாளர்கள் வேண்டவே வேண்டாம். ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கும் பொதுவுடைமை பேசும் கும்பலுக்கும் அடிப்படையில் வேறுபாடே கிடையாது.

  • தமிகத்திற்கு வட மாநிலத்தவர்கள் வந்து குவிவது ஆக்கிரமிப்பா? அப்படியென்றால் பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகள் படையெடுப்பது வயிற்றுப் பிழைப்புக்கோ? வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து குவிய யார் காரணம் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைதானே? தமிழகம் முதற்கொண்டு அனைதது உழைக்கும் மக்களையும் நாடோடிகளாக்கும் இக்கொள்கைக்கு எதிராக இந்திய அரசின் மேல் கோபம் வராமல் வினவின் மேல் கோபம் வருகிறதென்றால் இதற்குப் பெயர்தான் இனவெறி பாசிசம்.

   • ஹி ஹி ..இப்படி எதனை நாள் தான் எதிர் சொல் சொல்பவர்களை இன வெறி பாசிசர் என்பது ..???
    உம்மை நினைத்தால் சிரிப்பு தான் யா வருது …
    வினவு தன பதிவில் நடு நிலைமை இல்லை என்று தான் பெரியசாமி சொல்றார் …அதுக்குள்ள அவருக்கு பட்டமா???

    என்னமோ தமிழன் பிழைப்பு தேடி எங்குமே செல்வதில்லை மாதிரி தான் பேசுறே …இங்க என்ன செல்வம் கொளிசிகிட்டா இருக்கு ..?

    நமக்கும் அவங்களுக்கும் ஒத்து போகாததற்கு காரணம் , தி.மு.க போன்றா கேடு கேட்ட கட்சியின் தனி தமிழ்நாடு கோரிக்கை தான் …அது தப்போ செரியோ தெரியாது …

    இதை தான் வட இந்தியர்கல் நம்மை ஏளனம் செய்கின்றனர் ..

   • “பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகள் படையெடுப்பது வயிற்றுப் பிழைப்புக்கோ?”
    பன்னாட்டு கம்பனிகளை நாம் புறக்கணித்தால் அவை இங்கு தலை எடுக்க முடியாது.நம் மக்கள் ஒரு சிலருக்கு வேலை கிடைக்கிறது என்கிற அற்ப காரணத்தை கூறி தான் அவை இங்கு செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

    “வடமாநிலத்தவர்கள் தமிழகம் வந்து குவிய யார் காரணம் இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கைதானே?”
    அதற்காக இங்கு அலை அலையாக வந்து ஆக்கிரமித்து நமது கொஞ்சநஞ்ச நிம்மதியையும் கெடுப்பது தான் இதற்கு தீர்வா?

    “தமிழகம் முதற்கொண்டு அனைதது உழைக்கும் மக்களையும் நாடோடிகளாக்கும் இக்கொள்கைக்கு எதிராக இந்திய அரசின் மேல் கோபம் வராமல் வினவின் மேல் கோபம் வருகிறதென்றால் இதற்குப் பெயர்தான் இனவெறி பாசிசம்.”
    ன்னுடைய பொதுவுடைமை கும்பலின் கேரள சகோதரர்களை பார்த்து இன உணர்வை கற்றுக்கொள்!

  • என்ன சார் நீங்க…தமிழன் எத்தனை நாள் தான் அண்டை மாநிலத்துலேயே அடி வாங்குறது. சொந்த மண்ணிலே வடநாட்டவர்கள் கிட்ட தர்ம அடி வாங்க வேணாமா? அதுக்குத்தானே போரடிகிட்டிருக்கோம். என்னிக்கு தமிழ்நாட்டுல தமிழன் மைனாரிட்டி ஆயிட்டானோ அந்த நாளே பொன்னாள். இன்குலாப் ஜிந்தாபாத்!

   • //தமிழன் // யாருங்க அந்த தமிழன். கொஞ்சம் விளக்கம் சொல்லுங்களேன்.

    • தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து இந்த மண்ணோடு ஒன்றி போனவர்கள். இந்த தமிழ் மண்ணை விட்டால் வேறு போக்கிடம் இல்லாதவர்கள். இந்த மண்ணைத்தவிர வேறு மண்ணுக்கு விசுவாசம் பாராட்டத்தெரியாதவர்கள். இந்த மண்ணுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதனால் பாதிப்படையும் முதல் மக்கள். தமிழ்நாட்டை (இதன் மொழி, பண்பாடு, மக்கள், தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், சுகாதாரம் ஆகியன) பற்றி யாராவது தவறாக பேசினால் அல்லது எள்ளி நகையாடினால் அவமானப்படும் மக்கள். இவர்கள் தான் தமிழர்கள்.

     • //தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து இந்த மண்ணோடு ஒன்றி போனவர்கள். இந்த தமிழ் மண்ணை விட்டால் வேறு போக்கிடம் இல்லாதவர்கள். இந்த மண்ணைத்தவிர வேறு மண்ணுக்கு விசுவாசம் பாராட்டத்தெரியாதவர்கள். இந்த மண்ணுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதனால் பாதிப்படையும் முதல் மக்கள். தமிழ்நாட்டை (இதன் மொழி, பண்பாடு, மக்கள், தொழில் வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், வாழ்க்கைத்தரம், சுகாதாரம் ஆகியன) பற்றி யாராவது தவறாக பேசினால் அல்லது எள்ளி நகையாடினால் அவமானப்படும் மக்கள். இவர்கள் தான் தமிழர்கள்.// மேற்படி டெபெனிசனோட தெலுங்க பேசும் தமிழ் நிலப்பரப்பு வாழ் மக்களை என்ன பெயரிட்டு அழைப்பீர்கள்? இதன் பண்பாடு என்ன? வாழ்க்கைத் தரம் என்ன? அதை ஏன் தவறாகப் பேசக் கூடாது?

      • இந்த மண்ணில் பல நூற்றாண்டு காலமாக வாழும் வீட்டில் தெலுங்கை பேசும் மக்கள் தெலுங்கருக்கே என உருவான ஆந்திர மாநிலத்தின் மீது விசுவாசம் கொள்ளாமல் தமிழகத்தின் மீதும் அது சார்ந்த அடையாளங்களான தமிழ் மொழி போன்றவற்றின் மீதும் விசுவாசம் கொண்டு வீட்டுக்கு வெளியே அரசியல் ரீதியாக தமிழர்களாக உணர்வார்களேயானால் அவர்களும் தமிழர்களே. இது மற்ற மாநிலங்களில் வாழும் தமிழருக்கும் பொருந்தும்.

        • தெலுங்கு மொழி மிகவும் இனிமையான மொழி (யார் இல்லை என்றது). அந்த மொழி பேசும் மக்களுக்கு தனி ஆந்திரம் வேண்டும் என்று முதல்முதலில் இந்தியாவில் பிரச்சினையை ஆரம்பித்து திருப்பதி வரை இணைத்து கொண்டது போதாமல் தமிழகத்தில் இருக்கும் ஒரு தெலுங்கு கும்பல் சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை ஆந்திர மாநிலத்தோடு இணைக்க வேண்டும் என உண்ணாவிரதம் இருந்ததே.அந்த அரசியலை சொல்கிறேன்.

       • //தெலுங்கருக்கே என உருவான ஆந்திர மாநிலத்தின் மீது விசுவாசம் கொள்ளாமல் தமிழகத்தின் மீதும் அது சார்ந்த அடையாளங்களான தமிழ் மொழி போன்றவற்றின் மீதும் விசுவாசம் கொண்டு வீட்டுக்கு வெளியே அரசியல் ரீதியாக தமிழர்களாக உணர்வார்களேயானால் அவர்களும் தமிழர்களே. இது மற்ற மாநிலங்களில் வாழும் தமிழருக்கும் பொருந்தும்// இது அப்படியே ஆர் எஸ் எஸ் முஸ்லீம்களை பார்த்துச் சொல்லும் இந்துத்துவ பாசிசத்தின் மொழிவெறி வடிவமே ஆகும். மேற்படி விளக்கத்தின் படி ஐரோப்பா, மும்பை, இலங்கையில் வாழும் தமிழர்கள் அரசியல் ரீதியாக அப்பகுதியுடன் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருப்பதால்தான் அங்கு அவர்கள் தாக்கப்பட்டனர். பெரியசாமி என்ன சொல்ரார்னா இலங்கையில் நடந்து வரும் தமிழர் மீதான படுகொலை ஒடுக்குமுறைகள் சரின்னு சொல்றார்.

        • இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்கள் சகல வாழ்வுரிமைகளையும் பெற்று சிங்கள பகுதியோடு தான் அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அத்தீவின் வடகிழக்கில் வாழும் தமிழர்கள் தனி நாடு கோர உரிமை இருக்கிறது. சிங்களரோடு ஒத்துப்போக தேவையில்லை.காலனி ஆதிக்க காலத்தின் முன்னர் யாழ்ப்பான ராச்சியம் என்றொரு நாடு வடகிழக்கு மக்களுக்கு இருந்தது.அந்த பிரதேசம் நம் தமிழகம் போன்றது.

     • //தமிழ்நாட்டில் பல நூற்றாண்டு காலமாக வாழ்ந்து இந்த மண்ணோடு ஒன்றி போனவர்கள். இந்த தமிழ் மண்ணை விட்டால் வேறு போக்கிடம் இல்லாதவர்கள்.// மேற்படி விளக்கத்தின் படி மும்பை, ஐரோப்பா முதலிய நாடுகளில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக வாழும் தமிழ் பேசும் மக்கள் தமிழர்கள் இல்லை என ஆகிறது. பிறகு ஏன் அவர்களுக்கு சேர்த்து வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறார் பெரியசாமி?

      • மும்பை மற்றும் ஐரோப்பா ஆகியவற்றில் ஒரு நூற்றாண்டாக வாழ்ந்து அந்த மண்ணின் மீது அரசியல் ரீதியான விசுவாசம் கொண்டிருந்தாலும் மொழி, பழக்கவழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தமிழ்மண்ணின் நீட்சியாக இருப்பதால் அவர்கள் தமிழர் என்னும் வரையரைக்குள் வருகிறார்கள். உனக்கு யார் தமிழர் என்பதற்கு இன்னமும் டெபனிஷன் வேண்டுமானால் ஒரு சிங்களனையோ அல்லது ஒரு மலையாளியையோ பார்த்து கேள். அதுவும் இனவெறி கொண்ட ஆட்களை பார்த்து கேள். அவர்கள் யார் தமிழன் என்பதற்கு தெளிவாக விளக்கம் சொல்வார்கள்.

       • பெரியசாமி, இரவு நேர ஷிஃப்டை முடித்துவிட்டு தமது இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்லும் தமிழ் பேசும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை சந்தேகத்தின் பெயரில் ஸ்டேசனுக்கு போலீசு இழுத்துக் கொண்டு செல்கிறதே? இதற்குக் கூட மலையாளிகள் அல்லது கன்னடர்களின் தூண்டுதலா? ஏன் இந்த அரசின் மீது உங்களுக்கு கோபம் வருவதில்லை?

        • தமிழ் பேசும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களை சந்தேகத்தின் பெயரில் ஸ்டேசனுக்கு இழுத்துக் கொண்டு போய் மோசமாக நடத்துவதில் தமிழ் பேசும் போலிசை விட சிங்களம், மலையாளம், கன்னடம் , மற்றும் இந்தி பேசும் போலிசார் நூறு மடங்கு மோசமானவர்கள். இதை நீ ஒப்புக்கொள்கிறாயா?

         • விஷம் என்று ஆனப்பிறகு அதில் நல்லதாவது, கெட்டதாவது. போலீசு என்று ஆனப்பிறகு தமிழாவது, மலையாளமாவது; என்ன செய்ய முடியும் இனவாதத்திற்கே உரிய கண்ணோட்டம் இது.

 8. Then what do we have to say about Eazham Tamils going to Europe and getting jobs there and a livelihood there,why should Europe accept them? They should let them rot in yaazhpanam.

  • In world population, ezham tamils are a pitiable minority. Moreover, they move to many countries. They don’t go and concentrate in a single country troubling and disrespecting the local population. Except few, majority of ezham tamils abide the laws of their host country and try to merge with the local population. But the case of north Indians is a different one. They are doing mass migration inside the same country and serve as trojan horses of their upper caste masters in their respective region. Take the case of Maharashtra including Mumbai. Everywhere north Indian domination. Through out Maharashtra state they have written on the walls of buildings as:

   ” Hey ghaatti Marathas! we north Indians have come to rule you ”

   ” U.P, Bihar Jhaa ki hai, Abhi Maharashtra bhaakki hai ”

   So why we should not oppose them. In the power corridors of Tamil Nadu and Pondicherry, upper caste north Indians and bengalis are dominating. Please think twice before giving a comment.

   • //They don’t go and concentrate in a single country troubling and disrespecting the local population.// ஐரோப்பிய நாடுகளின் சட்ட ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமே இது போன்ற அகதிகள்தான். குறிப்பாக ஈழத் தமிழர்கள்தான் என்ற புதிய நாசிச கருத்து அங்கு வலுப்பெற்று வருகிறது. மேற்படி புது நாசிஸ்டுகள் பெரியசாமி அண்ணாச்சியின் சித்தாந்த அறிவுரைக்காக வெயிட்டிங். அண்ணாச்சி எப்போ கிளம்புறாப்புல? இதே போன்ற கருத்தை முன் வைத்துதான் மும்பையின் தாராவி தாக்கப்பட்டது. தமிழர்களை தாக்கியது அண்ணாச்சியின் ஒன்னு விட்ட உறவான சிவசேனா. மூளை என்கிற விசயத்தை கறி செஞ்சி சாப்பிட மட்டுமே உபயோகிப்பவர்களை எதைக் கொண்டு சாத்த என்று தெரியத சோகம்தான் என்னை வாட்டுகிறது.

   • What you say about Mumbai/Maharashtra is completely wrong.Just like everywhere immigrants come to Mumbai from everywhere,including other parts of Maharashtra and North India.

    They help the local economy a lot and some idiot would have written things like that.They dont do anything like that,The issues in Mumbai are because of Shiva Sena and MNS playing regional politics just like our DMK did in 1968.Raj Thackeray himself is bigtime into real estate and he needs an excuse to bulldoze the slums and capture the land.You try to investigate properly before trying to teach other people.

    Why should european countries take Tamil Immigrants, especially the uneducated ones.it is because of the historical good relationship,isn’t it?

    And dont say all this,LTTE used to be a part of the Paris underground and they used to operate there along with Albanian/Lebanese/Corsican Gangs dominating them.

    Many of them dont abide by the laws of the land but france allows it because of political compulsions.

    You are talking about North Indians not law abiding,you think Tamils inside TN are law abiding? Which law is enforced freely and fairly where it is trasnport/criminal?

  • // They should let them rot in yaazhpanam //

   எவ்வளவு காழ்ப்புணர்ச்சி நிறைந்த கருத்து!வன்மையாக கண்டிக்கிறேன்.

   சுப்ரமணியன்ற பேரில் பார்பனர்னு சொல்லிட்ருந்த நீங்க harikumar பேரில் நாயராக கூடு விட்டு கூடு பாயுற நேரத்தில் மனிதனேயமுள்ள மனிதனாக மாற குறைந்தளவேனும் முயற்சி செய்தால் நல்லது.

   • Nilavu

    I dont know what you are saying? I am not Subramanian,if you think I am subramanian,you are free to do so but dont waste time discussing other things.

    My original point was when European countries can take Eazham Tamils in their countries, why cant we do the same to people of Orissa and Bihar.

    If we shouldnt do,then neither should Eazham tamils.

 9. குண்டு சட்டியிலே குதிரை ஒட்டுனா எப்படி தெரியும் …
  வட மாநிலத்துல தமிழனே எப்படி நடதுராங்கனு போய் பாருங்க …
  தமிழன்ன தனி தமிழ்நாடு கோரும் மடையன் அப்படினு தான் நினைக்கிறான்..
  தமிழ் மொழி வெறி புடிச்சவன் ….இப்படி தான் சொல்றான் …
  இதுக்கு காரணம் புரியுதா , வினவு மறைமுகமா தி.மு.கா விற்கு ஜால்ரா போடுறது தெரியாதா?

  தி.மு.கா தான் இந்த நிலைமைக்கு காரணம் ..
  அவர்கள் கேட்ட தனி நாடு போன்ற சுயநல அரசியல் தான் நம்மை பற்றி வெறுப்பு வட நாட்டில இருக்கு ..

  அதே வெறுப்பு நமக்கும் அவங்க மேல இருக்கு ..

  தெரியாம தான் கேக்குறேன் ..நானு தினமும் பாக்குறேன் …
  கருணாநிதி ஸ்டாலின் அழகிரி கனிமொழி , ராஜ வீரபாண்டி ஆறுமுகம் இவங்க என்ன புண்ணிய காரியங்கள் செய்றாங்க …ஒரு செய்தி இவனுங்கள பத்தி இருக்கா …?

  முன்னாடி இருக்கு பினாடி இருக்கு கத உட வேண்டாம் …கடந்த ஒரு வருசமா இல்லை ..

  இதை வினவு மறுக்க முடியுமா

  • நண்பரே பெரியார்சாமி,அண்ணா ஆகியோர் வட நாட்டுக்காரன் நம்மளை கேவலபடுத்துரனணு சொல்லி திராவிட அரசியல் செய்தனர்!ஆனால் பக்கத்து மாநில காரர்களே நம்மளை அடித்து உதைக்குறான்!இப்போதும் பேசுவார்கள் திராவிடம்!செம காமெடி!

  • //வட மாநிலத்துல தமிழனே எப்படி நடதுராங்கனு போய் பாருங்க …// எம்பா அவ்வளவு தூரம்? இங்க உள்ளூர்லயே ஒடுக்கப்பட்ட சாதியினரை கவுண்டர், தேவர் சாதி வெறியர்கள் எப்படி நடத்துறாங்க. ஒடுக்கப்பட்ட சாதியினர் தமிழர்கள் இல்லையா? அதுக்கு தமிழ்தேசியம் பேசுற புடலங்காய் மண்டையனுங்க ஒரு மசிரக் கூட புடுங்கிப் போடலையே க்யுன்? இதுல கடந்த ஒரு வருசமா திமுகவை பற்றி வினவு பேசவில்லை என்ற அரிய ‘கண்டுபிடிப்பு’ வேற. உழைக்கும் மக்கள் பிரச்சினையை, இந்திய அரசின் பாசிசத்தை, சாதி-பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தும் போதெல்லாம் தமிழன் என்று இல்லாத ஒரு கருத்தை முன் தள்ளி மக்களை ஏமாற்றுவது ஏன்? யாருடைய கைக்கூலிகள் நீங்கள்?

   • ரொம்ப மரியதைய பேசும் குமிலன் …கட்டுரைக்கும் நீ புலம்பரதுகும் சம்பந்தம் இருக்கா …?

    அப்ப நீ வட மாநிலத்தவருக்கு சொம்படிகிறையா ??
    இல்ல உள்ளூர் ஜாதி வெறியர்களுக்கு எதிர பேசுறியா ??

    ஏதோ ஒன்ன தெளிவா சொல்லிடு போ

    ஏதோ நாங்க எல்லாரும் மேல் ஜாதி மாதிரியும் , நாங்க எல்லாரும் வட நாட்டு புண்ணியவான்கள் எதிரா ஒஎசுற மாதிரியும் இப்படி உளர்றே ??

    அப்போ தி.மு.க வெகுஜன மக்களின் சுமை தாங்கியா?

    உனக்கே வெக்கமா இல்லை ??
    கீழ் ஜாதி களைக்டரை வேலைய விட்டு நீக்கியது யாரு ??

    உன்னோட அருமை தமிழீன தலைவன் தான ??

    எத்தனையோ கீழ் ஜாதி தொண்டனுங்க இருந்தும் கட்சிய பையனுக்கும் புள்ளைக்கும் பங்கு போட்டு குடுத்ததும் உம தலைவன் தான்யா ???

    மேல் ஜாதியோ கீழ் ஜாதியோ ..பொய் வட நாட்டுல இருந்து பாரு …தமிழ் பேசுற ஒரே காரணத்துக்கு எப்படி பாகுரானுங்கனு ??

    • //மேல் ஜாதியோ கீழ் ஜாதியோ ..பொய் வட நாட்டுல இருந்து பாரு …தமிழ் பேசுற ஒரே காரணத்துக்கு எப்படி பாகுரானுங்கனு ??//

     தமிழனோ குமிழனோ அவன் கீழ் ஜாதி என்கிற ஒரே காரணத்துக்காக எப்படி பாகுரானுங்க…. குருணாநிதி என் தலைவன்னு சொன்னனா? அவன் ஒரு ஈத்தரவாயன் உன்ன மாதிரியே..

     • ஹா ஹா ..ரொம்ப தெளிவா உலரும் நாரவை குமிலா … அப்போ வட மாநிலம் போன தமிழர்களே அவங்க முகத்து வெச்சு மேல் ஜாதி கீழ் ஜாதி நு கண்டுபிடிகிறாங்க ….

      பேஸ் பேஸ் …அருமையான பதில் ….. அதனால தான உன்ன மாறி அடிமைகளை வெச்சு கட்சி நடத்துறான் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ..

   • அப்புறம் இன்னொன்னு ..

    என்னது பார்ப்பினயுயதுகு எதிர பேசுனாவா??

    அத தான்யா நானும் கேட்குறேன் …

    spectrum ஊழல்லே உள்ளே இருக்கும் ராஜா எந்த ஊர் பார்பான் ???

    கீழ் ஜாதி என்ற ஒரே காரணத்துக்கு தான் ராஜாவை பகடைகாய வெச்சுருகான் உன் பாசமிகு தலைவன் …

    அவனும் ஒன்னு தான் பாசிச வெறி பிடிச்ச அந்தணர் ஆஅது மாமி ஜெயலலிதாவும் ஒன்னு தான் …

    ரெண்டு பேருக்கும் என்ன வித்யாசம் கண்டு பிடிச்ச ?

    இதுல பிதற்றல் வேறு

    இன்னும் சொல்ல போனா கருணாநிதியும் ஜெயலலிதாவும் பார்பன கூடத்துக்கு சொமப்டிகும் கும்பல் தான் …

 10. சென்னையில் அதுவும் பழய மகாபழிபுர சாலையில் சென்றால் நாம் எங்கோ வட மாநிலத்திற்கு வந்தது போன்ற உணர்வு.
  இந்த ஐ டி துறை கம்பெனிகளிடமும் விபரங்களைப் சேர்க்க வேண்டும். இங்கு உள்ள ஐ டி கம்பெனிகள் எல்லா சலுகைகள் பெற்று கொண்டு பெரும்பான்மை மற்ற மாநில பணியாளர்களே வேலை செய்கிறார்கள்.இவர்கள் கலாச்சார சீர்கேட்டையும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் நாட்டில் 500க்கும் மேற்பட்ட உயர் கல்லுரிகள் உள்ளன இதிலிருந்து வெளிவருபவர்கள் இவர்களுக்கு போதாதா…

  • //கலாச்சார சீர்கேட்டையும் // என்ன சீர்கேடு? சும்மா பொய் சொல்லக் கூடாது. உனக்கு காலாச்சாரம்னு ஒன்னு இருக்கா என்ன? இருந்தா அது என்னான்னு சொல்லிட்டு போ.

   • இதுக்குப்பெயர் தான் குன்டுச்சட்டியில் குதிரை ஓட்டுவது…

    இப்போ மாநில இட ஒதுக்கீடு, அப்புறம் மாவட்டம், கிராமம் தெரு என்று போய்க்கொண்டே எல்லாரும் வீட்டில் குந்திக்கொள்ள வேண்டியது தான்…

 11. தமிழா, இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!!

  ஏய் எல்லாரும் வந்து ஸ்டேஷன்ல கையெழுத்துப் போட்டுட்டு போங்க.

  நீ யாருடா கோமாளி?
  நானும் ரவுடி தான்.
  நீ ரவுடின்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு?
  ஈக்குவலா பேசறேன் இல்லே?
  எங்கம்மா சத்தியமா நானும் ரவுடி தாங்க.
  உன்னை இந்த ஏரியாவிலே பார்த்ததில்லையே?
  நான் இந்த ஏரியாவிலே ரவுடின்னு பார்ம் ஆயிட்டேன்ல. சரி ஏறித் தொல.

  நான் ஜெயிலுக்கு போறேன்.நான் ஜெயிலுக்கு போறேன்.
  நல்லா பாத்துகுங்க நான் ஜெயிலுக்கு போறேன்.”//”நல்ல வடிவேலு காமெடி”.

  வீட்டிலும், வெளியிலும், கனவிலும் நனவிலும்/உணர்விலும், எம்மொழியை பேசுகிறார்களோ அம்மொழியைச் சேர்த்தவர்களே அவர்கள்- என்று சொல்லித் தெரிய வேண்டுமோ???

  தமிழா, இனவுணர்வு கொள்! தமிழா, தமிழனாக இரு!!

  ஹி..ஹி..ஹி இங்கிலீஷ் பேசறவன் எல்லாம் இங்கிலீஷ்காரன்.பிரெஞ்சு பேசறவன் எல்லாம் பிரெஞ்சுகாரன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க