Monday, June 17, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

ஆதார் அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

-

தேசிய அடையாள அட்டை: மக்கள் நலனுக்கான திட்டமா? மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?“ஆதார்” எனப்படும் தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம், கடந்த செப்டம்பர் 29 அன்று மன்மோகன் சிங், சோனியா காந்தி, இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் நந்தன் நிலகேணி ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டது.  இந்த தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான இந்திய தேசிய அடையாள அட்டை ஆணையம், திட்டக் கமிசனால் உருவாக்கப்பட்டு, நந்தன் நிலகேணி அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி மக்களின் பத்து கைவிரல் ரேகைகளும், கண் பாவை, முகம், பெயர், முகவரி, குடும்ப உறுப்பினர் உள்ளிட்ட விவரங்களும் ஒரு மையப்படுத்தப்பட்ட தகவல் கிடங்கில் பதிவு செய்யப்படும்; அனைவருக்கும் 12 இலக்க எண் ஒன்றும் கொடுக்கப்படும். புகைப்படமும், மின்னணுத் தகவல் சில்லுடனும் கூடிய அடையாள அட்டையும் வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டை மூலம் பொது விநியோகத்தில் நடந்து வரும் முறைகேடுகள் களையப்படும்; கிராமப்புற வேலை உறுதித் திட்ட நிதி மக்களைச் சென்றடையும்; அனைவருக்கும் கல்வி கிட்டும்; உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து வாழும் மக்களுக்கு ஓர் அடையாளம் தரப்படும்; அரசின் நலத் திட்டங்கள் மக்களை முறையாகச் சென்றடையும்; அதிகாரிகளின் ஊழல்-முறைகேடுகள் கட்டுப்படுத்தப்படும்; நாட்டுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

இவற்றுக்கும் தேசிய அடையாள அட்டைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவர்கள் கூறும் இந்தக் காரணங்கள் கற்பனையானவையே. உண்மையான காரணம் நாட்டு மக்கள் அனைவரையும் குற்றவாளிகளைப் போலக் கண்காணிப்பதும், உளவு வேலை பார்ப்பதுமேயாகும். இதையே, “சட்டவிரோத அகதிகள் அதிகரித்து விட்டனர், எனவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்க வேண்டும்” என 2001-இல் தேசியப் பாதுகாப்பைச் சீரமைப்பதற்கான மைய அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை தெளிவுபடுத்தியது.

பா.ஜ.க. ஆட்சியில்  2002-இல் இத்திட்டத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. 2008-இல் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை (MNIC) என்ற பெயரில் இத்திட்டம் செயல்வடிவம் பெற்றது. தேசப் பாதுகாப்பிற்காகவென்று பா.ஜ.க. அரசு செயல்படுத்திய திட்டத்தைத்தான், “ஆதார்” என்ற பெயரில் நாட்டு மக்களின் ஏழ்மையைப் போக்க கொண்டுவருவதாக மன்மோகன் அரசு கூறுகிறது.

தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான என்.சி.சக்சேனா அடையாள அட்டையின் அருகதையைப் பற்றிச் சொல்லும்போது, “பொது விநியோக அமைப்பே சீர்கெட்டுப் போ, அதற்கு ஒதுக்கப்படும் உணவு தானியத்தில் 36% கள்ளச்சந்தைக்குச் செல்கிறது; தேசிய அடையாள அட்டையால் இவற்றைத் தடுக்க இயலாது” என்கிறார்.

ரேசன் அட்டை இருந்தும் உணவு தானியம் கொடுக்கப்படாததற்கு மக்களால் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதது காரணமல்ல. ஆனால், அடையாள அட்டை கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்லும் அரசின் உண்மையான நோக்கம், “சேம நலச் செயல்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுடன்,  பொது விநியோக அமைப்பை முற்றாக ஒழித்துக் கட்டுவதும்தான்” எனச் சமூக ஆய்வாளர் ராம்குமார் கூறுகிறார். இதைத்தான், “தேசிய அடையாள அட்டை நடைமுறைக்கு வந்தால், பொது விநியோக முறைக்குப் பதிலாக உணவுக் கூப்பன்கள் மூலம் தனியார் கடைகளில் உணவு வாங்கிக் கொள்வது சாத்தியமாகும்”  எனத் திட்டக் கமிசனும் சொல்கிறது. மன்மோகனும், “அடையாள அட்டை வழங்குவதன் மூலம் இலக்கு தெரியாமல் கொடுக்கப்படும் மானியங்களை ஒழித்துத் தேசிய வருவாய்ப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும்” என வழிமொழிகிறார்.

1999 கார்கில் போருக்குப் பிறகு  நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், அரசின் பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்புக்கான கருவிகளைச் செழுமைப்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. அரசின் அமைச்சரவை பரிந்துரை செய்தது.  இதைத்தான் புலனாய்வுத் துறையின் (IB) முன்னாள் இயக்குனர் ஏ.கே. டோவல், “தேசிய அடையாள அட்டை திட்டம் உண்மையில் அந்நியர்களையும், சட்டவிரோதிகளையும் இனம்காட்டுவதை நோக்கமாகக் கொண்டது; ஆயினும் தற்போது மக்களின் முன்னேற்றத்திற்காக என்று முன்னிறுத்தப்பட்டால்தான் மக்கள் பயப்படாமல் தகவல்களைக் கொடுப்பார்கள்” என்று சொல்கிறார். மேலும், “எல்லா தகவல் கிடங்குகளும் இணைக்கப்பட்டுவிடுவதால் இந்தத் திட்டத்தின் மூலம் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம்; எனவே, தேசப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கிடைக்கும்” என்றும் அவர் சொல்கிறார்.

ஏற்கெனவே ப.சிதம்பரம் அறிவித்துள்ள தேசியப் புலனாய்வு இணையத் தொகுப்பின் (Nat Grid) கீழ் நாடு முழுவதும் பல்வேறு தகவல் கிடங்குகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, யாரை வேண்டுமானாலும் கண்காணிக்கவும், பின் தொடரவும் இயலும். இவற்றுடன் “ஆதார்” இணைந்தால் அரசால் எங்கும் யாரையும் குறிவைத்துத் தாக்க இயலும்.

“நாட்டு மக்களுடைய தனிமனித சுதந்திரத்தை, தேச முன்னேற்றம் போன்ற எதற்கு மாற்றாகவும் விலை பேச முடியாது” என்கிறார் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞரான அமர்த்யா சென். அரசோ, தேசப்பாதுகாப்பிற்காக மக்கள் தமது சுயகௌரவத்தையும், தனிமனித உரிமையையும் விட்டுக் கொடுப்பதும், அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்துவதும் தப்பில்லை என்று சூசகமாகச் சொல்கிறது.

தேசிய அடையாள அட்டை என்பது முகவரி மற்றும் அடையாள விவரங்களைக் கொண்ட எளிமையான தகவல் அட்டை என்றாலும் கூட, கடவுச்சீட்டு, ஓட்டுனர் உரிமம், வருமான வரி எண், வங்கி எண், வாக்காளர் அட்டை, மருத்துவ சேவைக்கான அட்டைகள் போன்ற பல்வேறு அரசு மற்றும் தனியார் தகவல் கிடங்குகளுடன் இணைக்கப்படுவதன் மூலம் குறிப்பிட்ட அட்டைக்குரிய  நபர் பற்றிய அத்துணை விவரமும் சேகரிக்கப்படும்.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

இது ஒரு மைய இழை போலச் செயல்படும்; ஒருவருடைய தேசிய அடையாள அட்டையைக் கொண்டே, அவர் மீதுள்ள வழக்குகள், வங்கிக் கணக்குகள், பிடித்த பொருட்கள், மருத்துவப் பிரச்சினைகள், உணவுப் பழக்கம், அரசியல் சார்புகள், ரசனை என்று முழு விவரங்களையும் சேகரிக்க இயலும். மக்களுக்குப் பல்வேறு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள்  மூலமும், இணையச் செயல்பாடுகளின் ஊடாகவும் அவருக்கே தெரியாமல் அவர் பற்றிய விவரங்கள் தினந்தோறும் சேகரிக்கப்படும். நாளடைவில் ஒரு தனிநபரைப் பற்றி அவரை விடவும், அவருக்கு நெருக்கமானவர்களை விடவும் அரசும், அதிகாரத்தில் உள்ளவர்களும் அதிகம் தெரிந்து கொண்டிருப்பர்.

தனிநபர் அடையாளங்களை முறைப்படுத்துதல் (PIC-Personal Identification Codification) திட்டத்தின் நோக்கமே பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, ஒருங்கிணைத்து, ஒவ்வொரு தனிநபரையும் ஓர்மையாக இனங்காண வேண்டும் என்பதாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும்  தேசிய அடையாள அட்டையின் மூலம், ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தைப் பொது வெளியில், அதிகாரத்தில் உள்ளவர்களின் ‘கருணைப் பார்வை’யில் வைத்துக் கண்காணிப்பது சாத்தியமாகும்.

விவசாயத்தின் சீரழிவால், பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் நாடு முழுவதும் அத்துக்கூலிகளாக அலைகிறார்கள்.  தன் மீது அதிருப்தியில் இருக்கும் இவர்களை அரசு எப்போதும் கண்காணிக்கவே விரும்புகிறது. மேலும், அரசின் மறுகாலனியாக்க நடவடிக்கைகளினால், பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வெறுப்படைந்து வரும் சூழலில், நாடு தழுவிய உளவுத்தகவல் ஒருங்கிணைப்பும், கண்காணிப்பும் தேவைப்படுகிறது. இதனை நிறைவு செய்யும் நோக்கத்துடனேயே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்திட்டம் மக்களிடையே, குறிப்பாக ஏழை உழைக்கும் மக்களிடமும், நடுத்தர வர்க்கத்திடமும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடோடிகளாத் திரியும் ஏழை மக்கள் எங்கு சென்றாலும் ‘நீ யார்?’ என்ற கேள்வியை எதிர்கொள்கிறார்கள். இரகசியப் புகைப்படக் கருவிகள், இரவு நேர ரோந்துகள் என நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு அடையாள அட்டை இன்றியமையாததாகிவிட்டது.

இன்னொரு பக்கம், அமெரிக்கா, பிரிட்டன் என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நடுத்தர வர்க்கம், புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக, நமக்கும் ஒரு அடையாள அட்டை தேவை என்கிறது. அங்குள்ள அட்டைகள் சமூக உரிமைகளை உத்திரவாதம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், தனிமனித உரிமைகளைக் காக்கும் சட்டங்களும், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் கடுமையாக உள்ளன என்பதை இவர்கள் உணர்வதில்லை.

நாட்டின் பெரும்பான்மை மக்களின் ஆதரவான மனநிலையை பயன்படுத்திக் கொண்டு,  தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டம், எல்லாவகையான ஜனநாயக உரிமைகளையும் மீறி அமல்படுத்தப்படுகிறது.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?நந்தன் நிலகேணி தலைமையிலான இவ்வமைப்பு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத, அதன் கட்டுப்பாட்டிலில்லாத, சர்வாதிகார அமைப்பாகும்.  இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து தகவல்கள் பெறவும், பயன்படுத்தவும் ஒப்பந்தங்கள் பலவற்றைப் போட்டுள்ளது.

இந்த அமைப்பு முன்வைத்துள்ள “தேசிய அடையாள ஆணையச் சட்டம் 2010” என்ற சட்ட முன்வரைவின்படி, தேசிய அடையாள அட்டை சார்ந்த தகவல்களை வாங்க, நீதிமன்ற உத்தரவோ, துறை சார்ந்த இணைச் செயலாளரின் ஆணையோ இருந்தால் போதும். ஆனால், இது தனிமனித உரிமையைப் பாதுகாக்கும் சர்வதேச சட்டங்களுக்கும், ஏன் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும்கூட விரோதமானது.

நாட்டு மக்களின் தனிப்பட்ட விவரங்களைச் சேமித்து வைத்துள்ள இத்தகைய தகவல் கிடங்கைப் பாதுகாக்கவோ, அதனைக் கையாடல் செய்யும் ஒருவரைத் தண்டிக்கவோ எந்த வழிமுறையையும் இந்தச் சட்ட முன்வரைவு கொண்டிருக்கவில்லை.  இந்தத் தகவல் கிடங்கில் கைவைப்பதன் மூலம் அரசுக்குப் பிடிக்காதவரை ஒழித்துக்கட்ட இயலும். ஒருவர் இருந்ததற்கான தடயங்களை முழுவதும் அழிக்க முடியும்.

கொடும் சித்திரவதைகளையும், போலி மோதல் கொலைகளையும் தனது அன்றாட வழக்கமாகக் கொண்ட அரசின் கையில், மக்களின்  நடவடிக்கைகள்அனைத்தையும் கண்காணிக்கும் தொழில்நுட்பங்கள் இருப்பது மிக அபாயகரமானது.  விசாரணைக் கைதிகளாகவே பலரை ஆண்டுக்கணக்கில் சிறையில் வைத்துள்ள நாடுதானே இது? பசுமை வேட்டையை அம்பலப்படுத்தியதற்காக அருந்ததி ரா போன்றோரை ஒழித்துகட்ட விரும்பும் அரசுதானே இது?

சொந்த நாட்டு மக்களாலேயே வெறுக்கப்பட்டு, தன்னைச் சுற்றி அபாயமிருப்பதாகப் பீதியடையும் அரசு, நடைமுறைப்படுத்தும் பாசிசத் திட்டமே இது. நாட்டில் சிவில்  உரிமைகள் ஏற்கெனவே சட்டப்படி உறுதி செய்யப்படவில்லை; இருக்கும் அற்பமான உரிமைகளை அடைய நீதிமன்றப் படிக்கட்டுகளையும், பல்வேறு போராட்டங்களையும் கடக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம், அடிமைத்தனங்களையே உயர்வானதாக மதிக்கும் கலாச்சாரப் பிற்போக்குத்தனம் மக்களிடம் வேரூன்றிக் கிடக்கிறது. இத்தகைய ஜனநாயகமற்ற சூழலில்  அதிஉயர் தொழில்நுட்பங்களின் ஊடாக நிறுவப்படும் அரசுக் கண்காணிப்பு, கொடூரமான பாசிச ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிடும்.

தேசிய அடையாள அட்டை: மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா?

இவையெல்லாம் கட்டுக்கதைகளல்ல. சென்னையில் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தாழ்த்தப்பட்ட மக்களின் கோரிக்கைக்காக போராட்டம் நடத்திய போது, வீடுவீடாகச் சென்ற காவல்துறை, தலித்துகளைக்  குறிவைத்துக் கைது செய்தது. குஜராத்தில், காவி பயங்கரவாதிகள் ரேசன் கார்டு, வாக்காளர் பட்டியல் உதவியுடன் முசுலீம்களைக் குறிவைத்துக் கொன்றொழித்தனர்.

இவையெல்லாம் இனி தேசிய அடையாள அட்டையின் உதவியுடன் சிக்கலின்றி, தாமதமின்றிச் செய்யப்படும். அரசுடன் முரண்பட்டு சிறு கண்சிமிட்டல் செய்தால் போதும், நீங்கள் குறி வைக்கப்படுவீர்கள்; உங்களது அந்தரங்கம் அரசால் கண்காணிப்படும்.

இலங்கையில் அடையாள அட்டை இல்லாத தமிழன் அரைப்பிணத்துக்குச் சமம். அத்தகைய நிலை ஏற்கெனவே காஷ்மீர், மத்திய இந்திய, கிழக்கிந்தியப் பகுதிகளில் உள்ளது. இது நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படுவதை தேசிய அடையாள அட்டை உறுதி செய்யும். இது, காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் ரவுடிகளின் பட்டியலைப் போன்றது. இன்னும் சரியாகச் சொன்னால், நவீன குற்றப்பரம்பரைச் சட்டம் போன்றது.

காலனியாதிக்க காலத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் இத்தகைய ஒடுக்குமுறைக்கு எதிராக,  மக்கள் போராடினர். ஆனால், இன்று இத்தகைய அடிமைச் சின்னங்களே பெருமிதமிக்கதாக முன்னிறுத்தப்படுகிறது.

________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர், 2010
________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. தேசிய அடையாள அட்டை : மக்களை உளவு பார்க்கும் ஏற்பாடா ?…

  தலித்துகள் குறிவைத்துக் கைது செய்தது, குஜராத்தில், ரேசன் கார்டு, உதவியுடன் முசுலீம்களைக் கொன்றொழித்தது போன்றவை இனி தேசிய அடையாள அட்டை உதவியுடன் சிக்கலின்றி, தாமதமின்றிச் செய்யப்படும்….

 2. Please stop dopping….
  you are running beyond your limits…
  it is such a good scheme, developed in concern about regularising banged society…
  you may be a media person, you may whatever bullshit, keep your fucking pen away from this issue…

  facebook should really consider about blocking your page and rss feeds …

  all bullshits…

  if you want to be a good journalist, write for people’s goodness
  dont always look for someone or something to blame on

 3. wat do you know about this plan?

  you know how many people working behind?

  you have any idea about for what these would be used?

  As a journalist do u have any idea about social security number used in country suchas singapore, USA.

  just only because you ppl, country is not developing, ppl get suffered, not because of these kind plans…

  keep your fucking ass off from this issue

  • ஏன் இவ்வளவு கோபம்? மாற்று சிந்தனை என்று எடுத்து கொள்ளுங்கள், வருமுன் காப்பது அவசியம்.

  • http://uidai.gov.in/images/FrontPageUpdates/uid_doc_30012012.pdf

   Please explain us on what sort of analytics would be used?
   Please explain on rationale behind selecting hadoop related technology, disaster recovery plan etc.,

   Say if someone is facing a famine in a remote corner of orissa, tell us how aadhaar can deliver food rotting at FCI godowns to starving citizens? (does computer posses mytical superpowers to transport rotting food from godown to tribal villages using copper wire?)

 4. Citizens were under police watch in Russia when Stalin ruled.If that was fine for you why do you oppose this.When revolutionary govt. is set up it will also make use of this.So Vinavu who dreams of a revolution in India and formation of a revolutionary govt. with all powers to arrest,kill and deport people a.k.a stalinist regime should welcome this project.Wont this be useful to you later.Better try to learn about this.

 5. என்ன சந்தியா இப்படி பொரிஞ்சி தள்ளி இருக்கீங்க .. இன்போசிஸ்ல வேல செயரிங்கள??? சோத்துக்கு வழி இல்லதவன்க்கு எதாவது செய்ய வக்கு இல்ல, இருக்குற தனியன்கள கொடுக்கறதுக்கு மனசு இல்ல இத எல்லாம் கரீக்டா செய்றாரு… வீடு இல்ல, நிலம் இல்ல, வேலை இல்ல, வாழ வழி இல்ல இந்த அடையாள அட்டைய என்ன ‘மா’னவுக்கு???

  • நீயும் படிச்சு வேலைக்கு போக வேண்டியது தான …நீ ஊர் சுத்திட்டு பீடி குடிச்சிட்டு இருந்திருப்ப….அதுக்கு யார் என்ன பண்ண முடியும்…புரட்சி பண்றத விட்டுட்டு போய் புள்ள குட்டிய வாவது படிக்க வைங்கடா

 6. இந்த திட்டம் விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டும் தான் நானும் எனது குடும்பத்தில் யாரையும் இதில் சேர்க்க போவது இல்லை

 7. Hi Sandhya,
  You donno the reality. What ever vinavu said is the reality. These politicians are portraiting that wonders will happen due to this. But nothing will happen to the rich and the politicians. The middle class and the lower class people will only be monitored by the government which will gradually move towards private companies and corporations.

  You will be made to follow the rules set by the government. For ex the road rules (this is just an example there are tons of smiliar) if you disobey the law set by the law makers you will be fined and you will be pushed to the extent that either you have to abid by law or lose ur driving rights..

  If you are loyal like a dog to the government and its law yes you will see an illustrative heaven.

 8. முதன் முதலாக வினவு தளத்தில் வந்த கட்டுரைகளில் அதிகம் வருத்தம் தந்த கட்டுரை இது. நீங்கள் சொல்ல வரும் அடிப்படை உண்மையென்றாலும் கூட.

  http://texlords.wordpress.com/2009/08/22/
  ஒரு விஐபி யின் அந்தரங்க ரகஸ்யங்கள்

  இந்த கட்டுரைக்கு முழுமையான விமர்சனம் கொடுக்க முடியாமல் இந்த இணைப்பை உங்கள் பார்வைக்கு பகிர்ந்துள்ளேன்.

  நீங்கள் விரும்பும் விரும்பாத அத்தனை முக்கிய நபர்களின் ரகஸ்யங்களும் விரைவில் வௌியே வந்து விடக்கூடிய அபாயமணி சத்தம் கேட்கிறது?

  ஆகஸ்ட் 22 2009 நான் எழுதிய கட்டுரையின் தொடக்க வரிகள் இது.

  கட்டுரையின் முடிவின் போது இவ்வாறு எழுதியிருந்தேன்.

  ஒரே ஒரு முறை மிகப்பெரிய அனைத்து அந்தரங்க ரகஸ்யங்களையும் சேமிக்கும் செலவீனம். அதுவே அத்தனை இனங்களையும் தலைமுறை தாண்டியும் வார்ப்பாக வளர்த்தெடுத்து முன்னெடுத்து செல்லும் முக்கிய ஆவணம்.

  மொத்தத்திலும் ஒரே ஒரு பிரச்சனை?

  எல்லோருடைய ரகஸ்யங்களையும் காக்கக்கூடிய இடத்துக்கு வரக்கூடிய “தல” தறுதலயாய் இருந்துவிடக்கூடாது.

  ஒரே பார்வையின் பக்கம் மட்டும் எழுதி விட்டீர்களே?

 9. தேசிய அடையாள அட்டை என்பது புதிதல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் சமூகப் பாதுகாப்பு எண் (SSN) என்பதன் இந்திய வடிவம்தான்.

  எனக்கு இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. ரேஷன் கார்டு, வாக்களர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் போலத்தான் இதுவும். என்ன இந்த அடையாள அட்டை மேலே சொன்ன அனைத்தின் விவரங்களையும் கொண்டிருக்கும்.

  எனக்குத் தெரிந்தவரை இது சட்டவிரோதிகளைக் கண்காணிக்க உதவும் ஒரு விஷயமாகவேப் படுகிறது.

  நீங்கள் சொல்லும்படி இதை அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறாக உபயோகிக்க முடியும் எனத் தோன்றவில்லை. எனக்குத் தெரிந்தவரை, ஒவ்வொரு துறையினருக்கும் தேவையான‌ தகவல்களைத் தெரிந்து கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கும் வகையில்தான் இந்த டேட்டாபேஸ் உருவாக்கப் படுகிறது. எனவே ஒருவர் நினைத்தால் நம்மைப் பற்றிய எல்லாத் தகவலையும் தெரிந்துகொள்ளமுடியும், அந்தரங்கம் போய்விடும் என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள்.

  • //தேசிய அடையாள அட்டை என்பது புதிதல்ல. அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கும் சமூகப் பாதுகாப்பு எண் (SSN) என்பதன் இந்திய வடிவம்தான்.//

   இல்லை, இரண்டிற்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. அங்கு SSNயை ஒருவர் சோதிக்கக் கேட்கிறார் எனில் பிரைவசி பாதுகாக்கும் உத்திரவாதச் சான்று அளித்தப் பிறகே ஒரு குடிமகனுடைய SSNயை அவர் பார்க்க இயலும். இதை நிர்வகிக்கும் அமைப்பு அமெரிக்க செனட்டுக்குக் கட்டுப்பட்டது. SSNன் நோக்கம் சட்டரீதியாக மக்களுக்கு சேவை வழங்குவதும், வரி ஏய்ப்புகளை கண்காணிப்பதும் ஆகும்.

   ஆனால், இந்தியாவில் உள்ளதோ சர்வாதிகார அமைப்பின் மூலம், சட்டவிதிகளை மீறி, அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக, பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டிலோ அல்லது எந்தவொரு ஜனநாயக அமைப்பின் கட்டுப்பாட்டிலோ இல்லாமல் செயல்படும் அமைப்பின் கீழ் இந்த அட்டை வருகிறது. இதன் நோக்கம் சட்டரீதியாகவே கண்காணிப்பது மட்டுமே ஆகும். செமநலத் திட்டங்களை இந்த அட்டை உத்திரவாதப்படுத்தாது என்றே எழுதிக் கொடுத்துள்ளனர்.

   அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் உள்ள சேமநலத் திட்டங்களுக்கான அட்டைகளை அந்த மக்கள் எதிர்க்கவில்லை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆனால், இந்தியாவில் செய்தது போல கண்காணிப்பதற்கான அட்டை கொண்டு வர முயன்ற பொழுது ஐரோப்பிய நாடுகளில், லண்டனில் மக்கள் எதிர்ப்பின் காரணமாக அந்தத் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

   அன்பு, எதற்கும் கட்டுரையை முழுமையாக ஒருமுறை வாசித்துவிடவும்

  • /ஒவ்வொரு துறையினருக்கும் தேவையான‌ தகவல்களைத் தெரிந்து கொள்ள மட்டுமே அனுமதி அளிக்கும் வகையில்தான் இந்த டேட்டாபேஸ் உருவாக்கப் படுகிறது. எனவே ஒருவர் நினைத்தால் நம்மைப் பற்றிய எல்லாத் தகவலையும் தெரிந்துகொள்ளமுடியும், அந்தரங்கம் போய்விடும் என்பதெல்லாம் தேவையில்லாத கவலைகள்.//

   இந்த உத்திரவாதத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் இந்த தகவல் கிடங்கை தவறாகப் பயன்படுத்துபவரை எதுவும் செய்ய இயலாது என்பதற்கு சமீபத்தில் இடப்பட்ட சட்டமே ஆதாரம்.

 10. Dear Sandya… Please read Nov 5/2010(today) The Hindu OP-ED ( Jean Dreze) article about this UID or Aadhaar scheme. And more UID is optional but in feature without this we get nothing from Govt.

 11. today The Hindu (25/11/2010) Jean Dreze article conclude like this…… ” so, is UID a facility or a calamity? It depends for whom. For intelligence agencies, bank managers, the corporate sector , and NIDAI, it will be a facility and a blessing. For ordinary citizens, especially poor and marginalised, it could well be a calamity”.

 12. “அரசுடன் முரண்பட்டு சிறு கண்சிமிட்டல் செய்தால் போதும், நீங்கள் குறி வைக்கப்படுவீர்கள்”.

  sandhya வும் boochkin னும் கண் சிமிட்டாதவர்களோ! கண்சிமிட்டப் போகிறவர்களுக்காக வினவு கவலைப்படுகிறது.

  கண்சிமிட்டாமல் எதுவும் நடப்பதில்லை என்பதே நடைமுறை அனுபவம். அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், காவல்துறை மற்றும் இவர்களோடு கைகோர்த்திருக்கும் சமூக விரோதிகள் போன்றவர்களின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டு முகம் சுளித்தாலே முட்டி பேர்க்கடுகிறது. பாவம் sandhya வுக்கும் boochkin க்கும் இதெல்லாம் எப்படித் தெரியும். எவன் முட்டி பேர்ந்தால் என்ன என்று தன் வீட்டை மட்டும் பார்ப்போருக்கு இது விளங்காது. கண் சிமிட்டாமல் யாராலும் இருக்க முடியாது. அவர்கள் கண் சிமிட்டும் நாள் வரும். அன்று தெரியும் இந்த அடையாள அட்டையின் உள்நோக்கம் என்னவென்று.

  ஊரான்.

 13. //தனிநபர் அடையாளங்களை முறைப்படுத்துதல் (PIC-Personal Identification Codification) திட்டத்தின் நோக்கமே பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைத் திரட்டி, ஒருங்கிணைத்து, ஒவ்வொரு தனிநபரையும் ஓர்மையாக இனங்காண வேண்டும் என்பதாகும். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் தேசிய அடையாள அட்டையின் மூலம், ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தைப் பொது வெளியில், அதிகாரத்தில் உள்ளவர்களின் ‘கருணைப் பார்வை’யில் வைத்துக் கண்காணிப்பது சாத்தியமாகும்.//

  நீ யார் என்ற கேள்வியை யார் எதிர்கொள்ள தேவை இல்லை
  அடையாள அட்டை ஒருவரின் தனிபட்ட அந்தரங்கத்தை எப்படி சோதிப்பதாகும்

  கொஞ்சம் விளக்க முடியுமா

  • ராம் காமேஸ்வரன், ஆரம்பத்தில நீங்க ஒழுங்காத்தான் விவாதிச்சிகிட்டிருந்தீங்க.. போகப்போக அப்படியே கம்யூனிச எதிர்ப்பு ஜல்லியா மழுங்கிப்போயிட்டீங்க 🙁

   உங்க மாதிரியே கேட்கனும்னா, வினவுல சீனாவோட RIC-PRC யை ஆதரிச்சு கட்டுரைவந்திருக்கான்னுதான் கேட்கனும் ஆனா அது விதண்டாவாதமாத்தான் போகும்.. குறைந்த பட்சம் வினவு சீனா ஒரு கம்யூனிச நாடுன்னு ஒத்துக்குறாங்களான்னு கூடத்தெரியாம நீங்க பாட்டுக்கு பேசுனா என்ன பதில் சொல்றது?

   இப்படித்தான் அதியமான்னு ஒருத்தர், பதில் சொல்லமுடியாத விவாதம் வந்தால் மாவோ, சீனா, ஸ்டாலின்-சோவியத் அப்படியே செவ்வாய் கிரகம், மில்கி வேன்னு போயி கடசீல அதுக்கும் அந்தாண்ட தொடர்ப்பு எல்லைக்கு வெளியவே போயிட்டாரு இன்னமும் தேடிக்கிட்டிருக்கோம்

   சரி வெட்டிப்பேச்சு எதுக்கு, ஒரு கட்டுரையை பத்தி விவாதிக்கனும்னா அந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை விமரிசனம் பண்ணலாம், தகவல், முரண்களை முன்வைக்கலாம், விவரப் பிழை இருந்தா சுட்டலாம் அதை விட்டுப்போட்டு கட்டுரைக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒன்றை பற்றி பேசி விவாதத்தையும் நேரத்தையும் கடத்துவது அறிவார்ந்த நபருக்கு அழகா..?

   அதுக்காக சீனா, சோவியத்தை பற்றி பேச வேணாமின்னு யாரும் சொல்லல, இங்க பேசாமயும் இல்ல, அதுக்கு உரிய இடத்தில, நேரத்தில பேசுவோமே.. நாமளும் என்ன மில்கிவேக்கா போகப்போறோம் 🙂

 14. //தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான என்.சி.சக்சேனா அடையாள அட்டையின் அருகதையைப் பற்றிச் சொல்லும்போது, “பொது விநியோக அமைப்பே சீர்கெட்டுப் போ, அதற்கு ஒதுக்கப்படும் உணவு தானியத்தில் 36% கள்ளச்சந்தைக்குச் செல்கிறது; தேசிய அடையாள அட்டையால் இவற்றைத் தடுக்க இயலாது” என்கிறார்.//

  என்.ஸி. சக்ஸேனா சொல்வது “எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணியாக அடையாள அட்டையை கருத முடியாது, ஆனால் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு, குறிப்பாக திருட்டு மற்றும் போலி பயனாளிகளை கண்டுகொள்ள அடையாள அட்டை உதவும்” என்கிறார்

  Although the introduction of modern tools such as smart cards may not be a
  panacea for all these evils, it can solve many of the problems particularly that of pilferage
  and spurious beneficiaries.

  http://www.sccommissioners.org/documents/download/134

  • //குறிப்பாக திருட்டு மற்றும் போலி பயனாளிகளை கண்டுகொள்ள அடையாள அட்டை உதவும்”//

   நாட்டிலேயே பெரிய திருடனும், போலியும்தான் பிரதமராகவும், அமைச்சராகவும் ஐ பிஎஸ் அதிகாரிகளாகவும் வலம் வருகிறார்கள். இவர்கள் எல்லாம் அடையாளம் கண்டுகொள்ள இயலாத திருடர்களா என்ன?

   பிரச்சினை திருடனை அடையாளம காணுவது அல்ல. அது ஏற்கனவே மக்களுக்குத் தெரிகின்ற விசயம்தான். ஆனால் அதனை திருட்டை தடுப்பது அல்லவா இங்கு பிரச்சினை? திருட்டை தடுக்க என்றுதான் இந்த அடையாள அட்டை கொண்டு வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் தடுக்காதுஎன்று சொல்கிறார் சக்சேனா.

   மேலும், பல அதிகாரிகள், தலைவர்களின் கருத்து அட்டையின் நோக்கம் மக்களின் மீது கண்காணிப்புஎன்பதை நிறுவுகிறது.

 15. மக்களைப் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஒரு டாட்டாபேஸ் உருவாக்கப்பட்டால் அது தவறான வகையில் துஷ்பிரயோகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளது என்ற ஒரு அச்ச உணர்வு மட்டுமே, இந்த தேசிய அடையாள அட்டைக்கு எதிர்வாதமாக வைக்கப்படுகிறது.

  அனால் இத்திட்டத்திற்கு ஆதரவாக வைக்கப்படும் காரணங்களான பொது வினியோகத்துறை சீரமைப்பு, நலத்திட்டங்கள் உகப்பாக்குதல், ஆகியவை தவறு என்று நிரூபிக்க இக்கட்டுரை தவறிவிட்டது.

  • //இத்திட்டத்திற்கு ஆதரவாக வைக்கப்படும் காரணங்களான பொது வினியோகத்துறை சீரமைப்பு, நலத்திட்டங்கள் உகப்பாக்குதல், ஆகியவை தவறு என்று நிரூபிக்க இக்கட்டுரை தவறிவிட்டது.//

   பொதுவினி யோகத்துறை சீரமைப்பு செய்ய வேண்டுமென்றால் முதலில் அந்தத் துறை உயிரோடு இருக்க வேண்டும். பொதுவினியோகத்திற்கான ஒதுக்கீட்டை குறைத்து வரும் அரசு, அதை முறைப்படுத்தஏன் இவ்வளவு செலவு செய்து அட்டை கொண்டு வர வேண்டும்?

   யாரை ஏமாற்ற இது?

   இல்லாத பொதுத் துறைக்கு கண்காணிப்பா இல்லை அதன் பெயரில் மக்கள் மீது குற்றப்பரம்பரைச் சட்டமா?

   இதுதான் கட்டுரையின் கேள்வி

  • //அனால் இத்திட்டத்திற்கு ஆதரவாக வைக்கப்படும் காரணங்களான பொது வினியோகத்துறை சீரமைப்பு, நலத்திட்டங்கள் உகப்பாக்குதல், ஆகியவை தவறு என்று நிரூபிக்க இக்கட்டுரை தவறிவிட்டது.//

   அட்டை பொதுவினியோகத்தை உத்திரவாதப்படுத்தும் என்று யாராவது சொல்லியிருக்கிறார்களா என்ன? உத்திரவாதப்படுத்தாது என்றுதான் திரும்ப திரும்ப சொல்கிறார்கள்.

   அட்டைக்கும், பொதுவினியோகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. சட்டரீதியாக நீங்கள் இரண்டையும் தொடர்பு படுத்தி கேள்வி கேட்க முடியாது. இதனை அவர்கள்து வெப்சைட்டிலேயே சொல்கிறார்கள்.

 16. அதே N.C சக்ஸேனா தான் கீழே சுட்டியிலுள்ள கட்டுரையில் இருக்கும் யோசனையை தெரிவித்து இருக்கிறார்.
  போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க அனைத்து கார்டுதாரர்களின் புகைப்படமும், அவர்களை பற்றிய விவரங்களும் அனைவரும் அறியத் தகுந்த வகையில் வெளியிடப்படவேண்டும். பொதுநல நிறுவனங்களும், நுகர்வோரும் சுலபமாக விவரங்களை சரிபார்க்க இது உதவும்.

  http://www.sccommissioners.org/pdfs/articles/ncstpdsloksabha.pdf

  Elimination of Ghost Ration Cards – All card holders must be photographed, and their details along with their photographs should be in the public domain. This will make it easy for the civil society or consumers to check the list.

  இதற்க்கும் தேசிய அடையாள அட்டைக்கும் என்ன வித்தியாசம் என்பதை வினவு விளக்கினால் தேவலை.

  • //அதே N.C சக்ஸேனா தான் கீழே சுட்டியிலுள்ள கட்டுரையில் இருக்கும் யோசனையை தெரிவித்து இருக்கிறார்.
   போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க அனைத்து கார்டுதாரர்களின் புகைப்படமும், அவர்களை பற்றிய விவரங்களும் அனைவரும் அறியத் தகுந்த வகையில் வெளியிடப்படவேண்டும். பொதுநல நிறுவனங்களும், நுகர்வோரும் சுலபமாக விவரங்களை சரிபார்க்க இது உதவும்.//

   அய்யா ராம் காமேஸ்வரன்,

   இங்கு பேசப்படுகிற விசயம் பொதுவிநியோகத்திற்கான அட்டை என்ற பெயரில் செய்யப்படும் கண்காணிப்பு அட்டை பற்றி. நீங்களோ பொது வினியோகம் என்பதைத் தாண்டி இன்னும் வரவேயில்லை. கட்டுரையில் ஒரேயொரு பேராவில் மட்டும் வரும் விசயத்தை தாண்டி ராம்காமேஸ்வரன் ஏன் வர மறுக்கிறார்?

   • தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினரான என்.சி.சக்சேனா அடையாள அட்டையின் அருகதையைப் பற்றிச் சொல்லும்போது, “பொது விநியோக அமைப்பே சீர்கெட்டுப் போ, அதற்கு ஒதுக்கப்படும் உணவு தானியத்தில் 36% கள்ளச்சந்தைக்குச் செல்கிறது; தேசிய அடையாள அட்டையால் இவற்றைத் தடுக்க இயலாது” என்கிறார்.

    ரேசன் அட்டை இருந்தும் உணவு தானியம் கொடுக்கப்படாததற்கு மக்களால் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாதது காரணமல்ல. ஆனால், அடையாள அட்டை கொடுத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்லும் அரசின் உண்மையான நோக்கம், “சேம நலச் செயல்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுடன், பொது விநியோக அமைப்பை முற்றாக ஒழித்துக் கட்டுவதும்தான்” எனச் சமூக ஆய்வாளர் ராம்குமார் கூறுகிறார். இதைத்தான், “தேசிய அடையாள அட்டை நடைமுறைக்கு வந்தால், பொது விநியோக முறைக்குப் பதிலாக உணவுக் கூப்பன்கள் மூலம் தனியார் கடைகளில் உணவு வாங்கிக் கொள்வது சாத்தியமாகும்” எனத் திட்டக் கமிசனும் சொல்கிறது. மன்மோகனும், “அடையாள அட்டை வழங்குவதன் மூலம் இலக்கு தெரியாமல் கொடுக்கப்படும் மானியங்களை ஒழித்துத் தேசிய வருவாய்ப் பற்றாக்குறையை குறைக்க வேண்டும்” என வழிமொழிகிறார்.

    புலனாய்வுத் துறையின் (IB) முன்னாள் இயக்குனர் ஏ.கே. டோவல், “தேசிய அடையாள அட்டை திட்டம் உண்மையில் அந்நியர்களையும், சட்டவிரோதிகளையும் இனம்காட்டுவதை நோக்கமாகக் கொண்டது; ஆயினும் தற்போது மக்களின் முன்னேற்றத்திற்காக என்று முன்னிறுத்தப்பட்டால்தான் மக்கள் பயப்படாமல் தகவல்களைக் கொடுப்பார்கள்” என்று சொல்கிறார். மேலும், “எல்லா தகவல் கிடங்குகளும் இணைக்கப்பட்டுவிடுவதால் இந்தத் திட்டத்தின் மூலம் யாரை வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கண்டுபிடித்து விடலாம்; எனவே, தேசப் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் கிடைக்கும்” என்றும் அவர் சொல்கிறார்.

  • Purpose of UID: It will only guarantee identity and will not confer any rights, benefits or entitlements.

   they open a bank account or apply for passport or a driving licence or any other similar service. It will be accepted as identity proof across service providers.

   இது விக்கிலீக்கில் நீல்கேனி அளித்த அறிக்கையை வெளியிட்டதிலிருந்து எடுத்த வரிகள். நாட்டில் பெரிய பிரச்சினையே அடையாள அட்டை இல்லாததுதான் என்பது போல இங்கு பேசுபவர்களின் கருத்துக்கள் நகைப்பிற்கிடமாக உள்ளன.

 17. நண்பர் அன்பு அவர்களே,
  “தேசிய அடையாள அட்டை என்பது சட்டவிரோதிகளைக் கண்காணிக்க உதவும் ஒரு விஷயமாகவே கருதுவதாக குறிப்பிட்டுள்ளீர்!”சட்டவிரோதிகள் என்பவர்கள் யார்?
  கரூரை அடுத்துள்ள ராயனூரில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிமுகாமைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்,முகாமிலிருந்து காவல்துறை வாகனத்திலே அழைத்துசெல்லப்பட்டு மூன்று காவலர்களால் வக்கிரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார்.இந்த அவமானம் தாங்காமல் அந்த பெண் தீக்குளித்து தற்கொலைசெய்துக் கொண்டார்.அந்த பெண்ணின் மரணவாக்குமூலம் தெள்ளத் தெளிவாக இருந்தும் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் இல்லையே ஏன்? அந்த அபலைப் பெண்ணின் ஏழைத்தாய் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிவேண்டி நடையாய் நடக்கிறாரே ஏன்?
  அடுத்து வளைகுடா நாடு ஒன்றில் பணியாற்றிவரும் ஒருவரின் மனைவி சென்னையை ஒட்டியுள்ள நீலாங்கரையில் தனியாக வசிக்கிறார் என்பதை தெரிந்துக்கொண்டு அந்தப் பெண்ணிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டு இரண்டு காவலர்கள் மிரட்டியுள்ளனர்.கேட்ட பணத்தை தராவிட்டால்,விபச்சார வழக்கு,கஞ்சா வைத்திருந்ததாக வழக்குப் போடுவோம் என மிரட்டிவிட்டு,ஐந்து பவுன் தங்கநகை,ரூ20,000/- பணம் ஆகியவற்றை பறித்துச்சென்றனர்.
  மேற்கண்ட சம்பவங்களில் சம்மந்தப்பட்ட போலீசுக்காரர்கள் சட்டத்தின் காவலர்கள்.பாதிக்கப்பட்டோர்(அ)அவர்களுக்காக யாராவது போராடினால் அவர்கள் சட்டவிரோதிகள்.சரி விடுங்க சார்.இவர்களெல்லாம் சுண்டைக்காய்.நாம போயி உயர் அதிகாரிகிட்ட சொல்லி கரெக்ட்பண்ணிடலாம்னு போவலாம்ன்னா அங்க ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை ஆணையரே பாமாயில் இறக்குமதி ஊழல்,2G அலைக்கற்றை ஊழல் புகழாக உள்ளார்.சரி நாட்டையே ஆள்றதா சொல்றாங்களேன்னு முதல்வரிடமோ,பிரதமரிடமோ,ப.சிதம்பரத்திடமோ போவலாம்ன்னு பார்த்தா நாட்டையே அமெரிக்காக்காரனுக்கு கூட்டிக்கொடுத்துகிட்டே நக்சலைட்டுகள்தான் சட்டவிரோதிகள்ன்னு மைக் போட்டு கத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
  சரி. விசயத்துக்கு வருவோம்.இப்போசொல்லுங்க தேசிய அடையாள அட்டை யாரைக் கண்காணிக்க யாரால் பயன்படுத்தப்படும்?
  __ சுடலை

 18. இந்தியா முட்டாள்களின் கூட்டம் என்று வெளிநாட்டினர் சொன்ன போது நான் கோப பட்டேன். ஆனால் அது முற்றிலும் உண்மை என்பது இந்த கட்டுரையும் அதற்கு சில குண்டு சட்டி குதிரை ஓட்டிகளின் கமெண்ட்ஸ் மிக சிறந்த உதாரணம். இது காலம் கடந்த நமது ஆட்சியாளர்களின் நல்லதொரு திட்டம். இதனால் தவறு நடக்கிறதென்றால் அதற்கு கரணம் குறுக்கு புத்தி கொண்ட மக்கள் சிலர் அல்லது அரசியல்வாதிகள் காரணமாக இருக்கலாம்..இப்படி பழமை பேசி நாட்டை கெடுக்கும் கும்பலை வைத்து கொண்டு இந்தியா எப்படி உருப்படும்.நல்ல திட்டத்தை நல்லபடி செயல் படுத்த வேண்டும் என்ற எண்ணமும் உண்மையும் இருக்க வேண்டும் என்று கேளுங்கள், சொல்லுங்கள் அது நியாயம். அதை விடு இப்படி மேதாவி போன்று உளறி கொட்டி கொண்டு இருக்காதீர்கள் ..உங்களை போன்றோர்தான் வளர்ச்சிக்கு எதிரிகள்..எப்பொழுதும் ரேஷன் கடை அரிசி வங்கி உண்டு தின்றால் போதும்..அதுக்கு பங்கம் வர கூடாது என்று நினைக்காமல் அந்த கேடு கேட்ட நிலை மாற வேண்டும்.அனைவரும் சொந்த காலில் நிற்க வேண்டும்.அதற்கு ஊழல் பேர் வழிகளின் கொள்ளை வெளி கொண்டு வர பட வேண்டும்..இல்லை ஊழல் செய்து காசு சேர்க்க வழியே இலாத நிலை வர வேண்டும் என்று எண்ணுங்கள்..அதற்கான ஒரு முதல் படிதான் இது.இதை கண்டு சாதாரண மக்கள் ஏன் அஞ்ச வேண்டும்..ஊழல், தீவிரவாதம், தவறு செய்பவர்கள் தானே அஞ்ச வேண்டும்..ஏன் என்றல் அது கண்டு பிடிக்க படு முளையிலேயே கிள்ளி எரிய பட்டு விடும் ..இதனால் வளர்ச்சி சமமானதாக இருக்கும்..இருக்க வேண்டும்..அதற்கு இது நேர்மையான முறையில் செயல் படுத்த பட வேண்டும் ..உங்களை போன்றோர் முதலில் அதற்கு திருந்தி அடுத்தவர்களையும் திருத்த வேண்டும்..

 19. இந்த சுட்டியின் கட்டுரையாளர் “ஜான் ட்ரேஸே”வின் கவலையெல்லாம் தேசிய அடையாள அட்டை இருந்தால் அருந்ததி ராய் நாளைக்கு தாந்தேவாடாவுக்கு மாவோயிஸ்டுகளை ரகசியமாக சந்திக்க போகும்போது இந்திய அரசுக்கு தெரிந்து விடும் என்பதுதான். நம்ப நக்கீரன் கோபால் சந்தணகட்டைவீரப்பரை அப்பப்போ சந்தித்து காஸெட் வாங்கி வந்தே ரொம்ப நாள் செய்தியிலிருந்தாற் போல் அருந்ததி அம்மாவால் இருக்க முடியாதே என்ற ஆதங்கம் சந்தண முல்லை அம்மாவயும் வாட்டுறாப் போல தெரிகிறது

  Jean Dreze

  If, say, Arundhati Roy makes another trip to Dantewada, she will be picked up on arrival like a ripe plum

  • //நம்ப நக்கீரன் கோபால் சந்தணகட்டைவீரப்பரை அப்பப்போ சந்தித்து காஸெட் வாங்கி வந்தே ரொம்ப நாள் செய்தியிலிருந்தாற் போல் அருந்ததி அம்மாவால் இருக்க முடியாதே என்ற ஆதங்கம் சந்தண முல்லை அம்மாவயும் வாட்டுறாப் போல தெரிகிறது //

   அப்படியே இருந்துவிட்டு போகட்டும். கட்டுரை சுட்டிக் காட்டுவது போல ராம் காமேஸ்வரன் தனது வீட்டில் ஒரு கேமாரா பொருத்தி அரசுக்கு தனது அந்தரங்கங்களை வெளிப்படுத்திக் கொள்ளட்டும். மானமுள்ள மற்றவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா நாட்டு மக்கள் இது போன்ற திட்டங்களை எதிர்த்து நிறுத்தி வைத்துள்ளது போல போராடட்டும்.

 20. //நந்தன் நிலகேணி தலைமையிலான இவ்வமைப்பு, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத, அதன் கட்டுப்பாட்டிலில்லாத, சர்வாதிகார அமைப்பாகும். இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, பல்வேறு அரசுத் துறைகளிடமிருந்து தகவல்கள் பெறவும், பயன்படுத்தவும் ஒப்பந்தங்கள் பலவற்றைப் போட்டுள்ளது//

  வினவு சொல்கிறாற்போல் சட்ட விரோதமாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத, அமைப்பாக “ஆதார்” இருக்கும் பட்சத்தில் சட்டரீதியாகவே இந்த அமைப்பை தடை செய்ய முயலலாமே?
  http://uidai.gov.in/index.php?option=com_content&view=article&id=173&Itemid=212

  • //வினவு சொல்கிறாற்போல் சட்ட விரோதமாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாத, அமைப்பாக “ஆதார்” இருக்கும் பட்சத்தில் சட்டரீதியாகவே இந்த அமைப்பை தடை செய்ய முயலலாமே?//

   அந்த வேலையை நல்லவர் ராம்காமேஸ்வரன் கூட செய்யலாம்.

 21. Read about the movie review of Lives of others – German movie on http://www.karundhel.com/2009/12/lives-of-others
  \\நமது வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எந்தச் சிக்கலும் இல்லாமல் இன்பமாக உள்ளது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நமது நண்பர்கள், மனைவி, உறவினர்கள் இப்படி எல்லாரோடும், தினம் ஒரு பார்ட்டி என்று அனுபவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இது அத்தனையையும் – நம் வாழ்வில் நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் – யாரோ ஒட்டுக்கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு திடுக்கிடும் உண்மை நமக்குத் தெரியவந்தால், எப்படி இருக்கும்? அதுவும், அந்த வார்த்தைகள் கோப்புகளில் வேறு தொகுக்கப்பட்டு, அந்தக் கோப்புகள் அரசின் பார்வைக்கு அனுப்பப்படுகிறது என்று வேறு நமக்குத் தெரிந்தால்?

  ஒரு கொடுங்கோல் அரசின் அடக்குமுறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டும் படம்தான், ‘லைவ்ஸ் ஆஃப் அதர்ஸ்’ என்ற ஜெர்மானியப்படம்.\\

  Watch this movie and feel the Kafkaesque of Bureaucracy. This may happen to Santhya, kuppan, chuppan r anyone if govt want. Nobody has an exemption. UID simplifies the process.

  • this movie is about the story of German spy under communist rule who was mandated to follow and report the actions of a writer and his actress mate.
   this kind of state terror and spying was most severe under former communist nations. ok.

   all should watch this movie once.

 22. “அடிமையாக இரு பட்டினி போடுகிறோம்; உரிமை கோரினால் உள்ளதும் (உயிர்) போகும்” என்பதைத் தாண்டி இத்திட்டத்தின் மூலம் இந்திய அரசு நாட்டு மக்களுக்கு வேறென்ன வழங்கிவிடும் ? அதுவும் கொள்ளைப்புறம் வழியாக.

 23. I was thinking that, this identity card is just a kind of smart card having all the informations of an individual stored in the chip and also in the govt database.
  But, looking at this article and the favourable feedbacks (like.. the card will expose an individuals privacy .. அந்தரங்கம்..etc) I doubt that this card will be issued with an attached microphone, camera, GPS, etc.. 🙂

  Why people should be worried about this card, as if it is going to capture ur voice/video movements? If any corrupted govt official or politician want to corner any citizen, they can do that even with out this identity card project… because, almost all the data which is going to be in this card/database, is already available with govt… This identity card project will just put all together in a single source and thats it.

  I also feel bad reading this article in Vinavu page. I agree that Vinavu opposes the corrupted politics and govt.officials..
  ஆனால், பயந்தவன் கண்ணுக்கு பாக்குறது எல்லாம் பேய்-னு சொல்லுறது மாதிரி இருக்க கூடாது… சில நல்ல திட்டங்கள் வரும்போது அதை ஆதாரிப்போம்…

  I agree that this identity card will not bring any good news to low/middle class people.. but the same time, this is not going to harm anymore newly [except the government investment on the project which seems to be not useful].

  • //I doubt that this card will be issued with an attached microphone, camera, GPS, etc.. :-)//

   தலைவர் இன்னும் 1947லில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். டெக்னாலஜி நெம்ப இம்ப்ரூவ் ஆயிருச்சிங்கோவ்… மைக்ரோபோன், கேமரா எல்லாம் ஒரு பகுதி மட்டும்தான் மற்றபடி சொந்த செலவில் சூனியம் வைப்பது போல நீங்களே வாண்டடா இண்டர்நெட், கடைகளில் பொருள் வாங்கும் போது ஸ்வைப் செய்யும் கார்டுகள், தொலைக்காட்சியில் நீங்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகள், தொலைபேசி, செல்பேசி உரையாடல்கள்/தகவல் பரிமாற்றங்கள் போன்ற பல தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை பயன்படுத்துவதின் ஊடாக உங்களுக்கு நீங்களே கண்காணிப்பாளர் ஆயிருவீங்க.

   அரசோட வேலை இதையெல்லாம் ஒரு ஐடியின் கீழ் சேமித்து வைத்து அனலைஸ் செய்ய வேண்டியதுதான்.

   பை தி வே உங்க வயசு 89 இல்லையே?

  • எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி…

   //நல்ல திட்டங்கள் வரும்போது அதை ஆதாரிப்போம்…//

   இது எப்படி நல்ல திட்டம்னு இன்ன வரை ஒருத்தனும் சொல்ல மாட்டேன்கிறாங்க. நந்தன் நீல்கேனிதான் இதை ரகசியமா வைச்சிருக்கான்னா அட்டைக்கு ஆதரவா வரும் இவிங்களும் ஏன் ரகசியமாவே வைச்சிருக்காங்கன்னு தெரியல.

   வினவு குரூப்பு வரும், அட்டையினால என்ன நல்லது நடக்கும்னு கேக்கும் எதையும் சொல்லிராதீங்க. விவாதிச்சுக் கூட கேப்பாய்ங்க அப்பயும் சொல்லிராதீங்க… என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

   • Initially it will be just an ID. Later your bank accounts, family information, credit card information, loans, purchases, ration card etc can be linked to this ID. But these information would not be visible to the end users(you) or public(your family).

    IT IS ONLY FOR THE GOVT. To rule you better. So suppose they have a doubt that you are doing some unlawful (You already know how greatly this law protects, serves people!!?) activities.. Govt just has a DOUBT.. you not necessarily be a terrorist (terrorists know how to escape these things) you can be watched.

    Which ATM you draw your money. Where you bought vegetables. Which drugs you bought on medical shop. Which electronic items you purchased. Where you located at this point of time. How much money in your savings bank account. How much in fixed deposit. How much loan you have got. How much you transacted to your college time sweet heart…etc. Everything will be visible to the government when this ID card is completely linked to all other your legal transactions.

    But it takes time. Not now. Few years may be. You can be free until then.

    Now you tell me… what sort of usefulness this ID card gives you other than a ration card.

  • it is funny that Vianvu and commnists should write this kind of post !!
   All this is peanuts and kinder garden stuff when compared to the set up that exisited in former USSR under Annan Beria of NKVD / KGB era.
   All communist nations need this kind of all prevading state ‘monitoring’ and control to ‘arrest’ the ‘bourgeouise elements’ and
   ‘traitors to the revolution’ among the masses. read more about this kind state ‘watch dogs’ at :

   http://en.wikipedia.org/wiki/NKVD#NKVD_activities

   and personally i am unable to get proper id card in TN and
   it is impossible to get a ration card here. and hope this UID may
   relive us of this pain. millions of migrants within the nation lack
   proper id cards and now without any form of proof of address or
   id, it is impossible to open a bank account, or apply for passport or
   get any govt benefits or use schemes. that is all.

 24. ‘1984’ என்றொரு ஆங்கிலப் படம். ஜார்ஜ் ஆர்வெல்லின் நாவலை வைத்து எடுக்கப்பட்ட படம். எதிர்காலத்தில் தனிமனிதனின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனிக்கும் டெக்னாலஜி கொண்ட அரசில் வேலை செய்யும் அரசு அதிகாரி ஒருவன் காதலில் விழும் ‘தவறை’ச் செய்கிறான். அவனும் கண்காணிப்பில் இருந்து தப்ப இயலாத நிலையில் காதலை எவ்வாறு நிறைவேற்றுகிறான். கண்காணிப்பில் இருந்து தப்பிக்கிறான் என்பது தான் அந்த ஆங்கிலத் திரைப்படம். சிறுவயதில் பார்த்தேன் இப்படத்தை.

  ‘எனிமி ஆப் த ஸ்டேட்ஸ்’ என்கிற இன்னொரு ஆங்கிலப்படம். அதில் ஒரு நல்ல, அப்பாவியான மனிதனிடம் சி.ஐ.ஏ வின் ஒரு அதிகாரி செய்யும் அரசியல் படுகொலை டேப் தற்செயலாக மாட்டிக் கொள்ள, நாட்டுக்கே துரோகம் செய்பவனாக அவன் சித்தரிக்கப்பட்டு வேட்டையாடப்படுவது பற்றிய படம். வில் ஸ்மித் நடித்தது.

  இந்தப் படங்கள் குறிப்பிடும் மாதிரியான ஒரு ஆபத்து நிச்சயம் மக்களுக்கு இருக்கிறது என்பது தான் உண்மை. அதைச் சொன்னதற்கே வினவின் மேல் வரிந்து கட்டிக் கொண்டு பாயும் ஆசாமிகளுக்கு ஒரு கேள்வி. தனிமனிதனை மிகத் துல்லியமாக கண்காணிக்க வேலை மெனக்கெட்டு எலெக்ட்ரானிக் அட்டைகளை ஏற்பாடு செய்யும் ஒரு அரசு, ஸ்விஸ் பேங்க்கில் 70 லட்சம் கோடி ரூபாய்களைப் போட்டு வைத்துள்ள நபர்களை ஏன் கண்காணிக்க வில்லை? அல்லது கண்காணிக்க விரும்பவில்லை?

  ஏனென்றால் 70 லட்சம் கோடி ரூபாய் கள்ளமாய் பணம் போட்டவன் சோத்துக்கும், தங்கும் குடிசைக்கும், வேலைக்கும் அலையப் போவதில்லை. அரசின் மேல் விரக்தியடையப் போவதில்லை. குண்டு வைக்கப் போவதில்லை.

  நடுவில் இருக்கும் நடுத்தர ஆசாமிகள். மாசா மாசம் சம்பளம் வாங்கி, பிள்ளை குட்டிகளை படிக்க வைத்து, வேலை வாங்கி, கல்யாணம் கட்டிக் கொடுத்து வாழ முடிந்த நடுத்தர ஆசாமிகளுக்கு மாவோயிஸ்ட், நக்ஸலைட் என்றால் தீவிரவாதி, தன்னை குண்டு வைத்து கொல்பவன் என்கிற பயம். அதுதான் தன் அந்தரங்கம் போனாலும் பரவாயில்லை என்று வெட்கம் கெட்டு பேச வைக்கிறது.

  அமெரிக்காவில் சோசியல் செக்யூரிட்டி எண் என்று ஒரு எண் உண்டு. அது கிட்டத்தட்ட நம் தேசிய அடையாள அட்டை போன்றது தான். அது இருந்தும் அமெரிக்காவில் கோடீசுவரன்களுக்கும், கள்ளத்தனமாய் பணம் வைத்திருக்கும் ஆசாமிகளுக்கும், ஆயுத வியாபாரிகளுக்கும், எண்ணெய் கொள்ளை செய்யும் கம்பெனிகளுக்கும் ஒன்றும் ஆகவில்லை. ஏன்? அரசு இயந்திரம் அவர்களை கண்காணிக்க அதை பயன்படுத்தவில்லை என்பது தான் நிதர்சனம்.

  இங்கே பேசும் ஆசாமிகள் என்னவோ ஆ.ராசாவிற்கு தேசிய அடையாள அட்டை இருந்திருந்தால் அதிலேயே 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் ஊழலுக்கான ரசீது கிடைத்திருக்கும் என்பது போல் எண்ணுவது எவ்வளவு புத்திசாலித்தனமானது?

 25. ஜரோப்பாவில் இலக்க அட்டைகள் ( உதாரணத்துக்கு நசனல் இன்சூரன்ஸ் நம்பர் இங்கிலாந்தில்) ( புகைப்படங்களுடன் இல்லை – வங்கி அட்டைகள் மட்டும் புகைப்படத்துடன் இருக்கும்) இருந்தாலும் யாரும் அவற்றை காவித்திரியும் கட்டாயம் கிடையாது.

  இந்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை முறை இலங்கை அரசு – இராணுவம் தமிழ் மக்கள் மேல் திணித்த ஒரு நடவடிக்கை. அவர்கள் யாராயிருப்பினும் எங்கு சென்றாலும் கண்காணிக்க பயன்படுத்திய ஒரு நடைமுறையாகும். அடையாள அட்டைகளை தம்முடன் எடுத்துச் செலலாதவிடத்து வழிகளில் மறிக்கப்படும் போது பிரயாணங்களில் இடைநிறுத்தி பரிசோதிக்கப்டும் போது காட்டத் தவறினால் அவர்கள் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்படுவார்கள்.

  ஒருநாள் ஆஸ்த்மா உபாதையால் கஸ்டப்பட்ட எனது தாய்க்கு அவசரமாக மருந்து வாங்கச் சென்ற நான் அடையாள அட்டையை அவசரத்தில் எடுத்துச் செல்ல மறந்து விட்டேன். மருந்து வாங்கியபின் நகரத்திலுள்ள பஸ்நிலையத்துக்கு திரும்பும் வழியில் ஆயுதம் தரித்த ரோந்து வாகனங்களுடன் வந்த இராணுவம் பஸ் நிலையத்தை சுற்றி திடீர் முற்றுகையிட்டு அடையாள அட்டைகளைக காண்பிக்குமாறு பணித்தது. என்னிடமும் இன்னும் சிலரிடமும் அடையாள அட்டைகள் இருக்கவில்லை. விளைவு இராணுவ வாகனத்தில் ஏற்றி அடுக்கப்பட்டு பலாலி இராணுவ முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கா வரிசையில் நிறுத்தப்பட்டோம். அன்றிரவு முழுவதும் இராணுவ முகாமில் என்னோடு என்னைத் தவிர மற்றவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். கையில் நான் வாங்கி வைத்திருந்த மருந்தும் அது எனது தாயின் ஆஸ்த்துமா நோய்க்கான மருந்துடன் நான் உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கையினால் மட்டும் நான் இரவிரவாக வீடு செல்ல அனுமதிக்கப்படடேன்.

  ஆனால் அடையாள அட்டை இல்லாதவர்கள் அப்பாவிகள் பலபேர் இம்சிக்கப்பட்டதும் சுற்றிவளைப்புகளின் பேர்து தேடுதல்களின் போதும் பெரும் தொகையில் கைது செய்யப்பட்டு தடுப்புமுகாம்களில் விடுவிக்கப்படாது சிறை வைக்கப்பட்டதும் எமது அநுபவங்கள். (பூசா முகாம் இதற்கு உதாரணம்).

  இந்தியாவுக்கு இது எந்தவகையில் பயன்படும் என்பது இன்றே வெளிச்சமாக புரிகிறது.

  சுமூக நலத்திட்டங்களுடன் பிணைக்கப்பட்ட அடையாள இலக்கங்களை அலுவலகங்களில் மட்டுமே தெரிவிக்க வேண்டும். அந்த இலக்கங்கள் அதனை உரித்துடைய நபருக்கு பிரத்தியேகமானதொன்று என்ற உரிமை ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தப்படுகிறது நான் வாழும் நாட்டில்.

  அசுரன் குறிப்பிட்டது போல் அண்மையில் ஒரு நபர் என்ன என்ன வகையான பொழுது போக்கில் ஈடுபடுபவர் எந்த வகையான பொருட்களை வாங்குபவர், அவர் தனது வீட்டு ரீ.வியல் பார்க்கும் சனல்கள் என்ன, இன்ரநெற்றில் எந்தெந்த வகையான தளங்களை பார்வையிடுகிறார் என்பன போன் ஒரு நபர் குறித்த அத்தனை இலத்திரனியல் தடயங்களையும் ஒருமயமாக்கப்பட்ட வகையில் திரட்டிக் கொள்ள சமூக உதவி வழங்கல் அதிகாரசபைக்கு உரிமை வழங்கப்படுவதற்கு மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. காரசாரமான விவாதங்கள் கிளம்பியுள்ளது நான் வசிக்கும் நாட்டில் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

 26. ஆம் இது ஒரு உளவு பார்க்கும் ஏற்பாடே:

  அனைவருக்கும் ஏன் அடையாள அட்டை வழங்கப்படுகிறது எனது கருத்து இதுதான்

  1.ஒடுக்குமுறைக்கு என சொன்னால் யாரும் அடையாளத்தை தரமாட்ட்டார்கள் எனவே சலுகைக்கு என சொல்லப்படுகிறது
  2.ஆனால் இந்த அரசு இந்த பனிரெண்டு இலக்க எண்ணை கொண்டு ஒருவன் பட்டினியால் கிடந்தால் சோறு போடுமா
  போடாது என்பதே வீணாக கிடக்கும் தானியங்களே சான்று

  3.இதன் மூலம் இந்திய மேலாதிக்கத்துக்கு சவாலாக விளங்கும்
  கம்யூனிஸ்டுகளை களை எடுக்கும்

  4.போராடுகிற மக்கள் அது கிருத்தவ இஸ்லாமிய சிறுபான்மையினராக யாராக இருந்தாலும் அடையாளமிடும்
  தேவையற்ற வழ்க்குகள் போட்டு முடக்கும்
  5.போராடும் அனைத்து மக்களையும் இனம்கண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பில் இருந்து ரோட்டில் நடந்து செல்லும் உரிமையை கூட தடை செய்யும்
  6.ஏனெனில் இப்போது இருக்கும் ஜனநாயக உரிமை கூட மேலாதிக்ககாரர்களுக்கு பெரும் இடைஞ்சலாக உள்ளது அதையும் இரத்து செய்ய வேண்டுமெனில் அவர்களுக்கு இதன் மூலம் தனியார்மயம் தாராளமயத்தை எந்த தடையும் இன்றி
  செயல்படுத்தும்

 27. //4.போராடுகிற மக்கள் அது கிருத்தவ இஸ்லாமிய சிறுபான்மையினராக யாராக இருந்தாலும் அடையாளமிடும் தேவையற்ற வழ்க்குகள் போட்டு முடக்கும்//

  ஆதார் கார்ட் வழங்குவதற்காக சேகரிக்கப்படும் demographic விவரங்களில் மதம், ஜாதி,போன்ற விவரங்கள் கிடையாது.

  A random number generated, devoid of any classification based on caste, creed, religion and geography

  http://uidai.gov.in/index.php?option=com_content&view=article&id=57&Itemid=105
  அது கிடக்கட்டும் இந்த ஆதார் அட்டை இல்லாமலேயே இன்றைக்கு ஒருவர் முஸ்லிமா, கிருத்துவரா என்று கண்டுபிடிப்பது என்ன பெரிய கஷ்டமான வேலையா என்ன?

  • /ஆதார் கார்ட் வழங்குவதற்காக சேகரிக்கப்படும் demographic விவரங்களில் மதம், ஜாதி,போன்ற விவரங்கள் கிடையாது.//

   கார்டு ஜெனரேட் பன்னும் போது உங்க வங்கி விவரங்கள், காய்கறி விவரம் கூடத்தான் சேகரிக்கப்படுவதில்லை. ஆனால், நேட்கிரிட் மற்றும் பி ஐ சி நடைமுறைக்கு வரும் பொழுது நீங்கள் கக்கா எந்த கலரில் போகிறீர்கள் என்பது கூட உங்களது கார்டுடன் தொடர்புபடுத்தி சேமிக்கப்படும் வாய்ப்புள்ளது எனும் போது மதம், சாதி, இன, மொழி அடையாளங்கள் சேகரிப்படாது என்று சொல்வதற்கு தனி நகைச்சுவைத் திறன் வேண்டும்

  • //அது கிடக்கட்டும் இந்த ஆதார் அட்டை இல்லாமலேயே இன்றைக்கு ஒருவர் முஸ்லிமா, கிருத்துவரா என்று கண்டுபிடிப்பது என்ன பெரிய கஷ்டமான வேலையா என்ன?//

   கொஞ்சம் கஸ்டம்தான். டவுசரை கழற்றிப் பார்த்துதான் முஸ்லீமா என்று கண்டுபிடிக்க வேண்டும்.

 28. //அது கிடக்கட்டும் இந்த ஆதார் அட்டை இல்லாமலேயே இன்றைக்கு ஒருவர் முஸ்லிமா, கிருத்துவரா என்று கண்டுபிடிப்பது என்ன பெரிய கஷ்டமான வேலையா என்ன?//
  ரகுமான் என்ற பெயர் முஸ்லீம் என்பதையும்
  ஜோசப் என்ற பெயர் கிருத்துவரையும் அடையாளம் காட்டுகிறதே

  ஒரு ஊரில் எத்தனை ரகுமான் எத்தனை ஜோசப் என எளிதாக கணக்கிட முடியும்

  வேண்டும் போதெல்லாம் இவர்கள் அடையாள அட்டையுடன் இருக்க வேண்டும் என சொல்லி ஒடுக்க முடியும்

  முதலில் இந்த அரசு ஒரு மதசார்பற்ற அரசென நிறுவுங்கள் பிறகு இந்த காடு மத ஒடுக்குதலுக்கு அல்ல என்பதை பற்றி பேசலாம்
  ஏனெனில் அயோத்தி தீர்பாகட்டும் குஜராத் படுகொலை யாகட்டும் எல்லாமே இது சிறுபான்மையினருக்கு எதிரான அரசென்பதை சொல்கிறது

 29. http://www.thehindu.com/todays-paper/tp-national/article2005223.ece

  புதிய சட்டம் உங்களது இணைய அந்தரங்கத்தை வெட்டவெளிச்சமாக்குகிறது. எதுவும் இனி அரசின் – அதிகாரவர்க்கத்தின் கருணைப் பார்வையின் கீழ்தான் நடக்கும். நவீன ஆண்டையாக உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் முழுப் பரிணாமம் காட்டிவிட்டது. தனிமனித சுதந்திரம், பிரைவசி என்று பேசி அரசியல், போராட்டம் போன்றவற்றை வெறுப்பதாகக் காட்டிக் கொள்ளும் டீசன்ஸி வர்க்கம் புதிய சட்டத்திற்கு வசதியாக தமது சாளரங்களை திறந்துவிட்டு வெற்றுப் பெருமை பேசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

  எப்படிப் பார்த்தாலும் அம்மணமும் ஒரு அழகுதானே..

 30. […] தேசிய அடையாள அட்டை (ஆதார்) திட்டம், குடிமக்களின் பெயர், வயது, முகவரி போன்ற வெளிப்படையான விவரங்களை மட்டும் கொண்டிருக்கவில்லை; அவரது வங்கி இருப்பு தொடங்கி அவருக்கு உள்ள நோய் வரை அனைத்து அந்தரங்கமான தகவல்களையும் இந்த ஆதார் அட்டையின் மூலம் அரசு நோட்டம் விடுகிறது. […]

 31. மத்திய அரசு தற்போது டீசல், மணெண்ணை, சமையல் கியாஸ், ரேசன் பொருட்கள், உர வகைகள், உணவு தானியங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு மானியம் அளித்து வருகிறது.

  மேற்படி அனைத்தையும் முடி விட்டு

  மத்திய அரசின் நேரடி மானிய தொகையை பெற விரும்புபவர்கள் கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

  உணவு பொருளின் ஏற்றுமதி இறக்குமதி எதற்க்கும் கட்டுபாடு கிடையாது முன்பேர வர்த்தகம் தடை இருக்காது அரசு இனி நேரடியா கொள்முதல் பன்னாது.அனைத்து பொருளின் விளையும் சந்தை தீர்மானிக்கும்

  அதாவது ஒருவன் உயிர் வாழனுமா கூடாதா போன்ற விசயங்களை இனி சந்தை தான் தீர்மானிக்கும்

  அதார் அட்டையின் மூலம் மனியம் -எதாவது எதிர்த்து கேள்வி கேட்டால் அகவுன்டை ப்லாக் செய்யலாம் உள் நாட்டில் அகதி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க