Wednesday, October 9, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஷாருக்கானுக்காக கொதித்தெழுந்த இந்தியா சையதை கைது செய்தது ஏன்?

ஷாருக்கானுக்காக கொதித்தெழுந்த இந்தியா சையதை கைது செய்தது ஏன்?

-

ஷாருக்-கான்
தேசிய அவமானம்

அரண்மனை பாதுஷாக்கள் அதே தோரணையோடு உப்பரிகையில் இருக்கலாம், அம்பாரியில் பவனி வரலாம். ஆனால் தெருவிலிறங்கி அப்படி நடக்க முடியுமா? ஒருவேளை அப்படியொரு அசந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டால் என்னவாகும்? செருப்பில் குத்திய சிறு கல்லுக்காக பூமியைத் தாங்கி நிற்கும் டெக்டோனிக் தகடுகளே மேலெழுந்து வந்து கூத்தாடி பாதுஷாவின் முன் பணிந்து மன்னிப்புக் கேட்டு விடுமா என்ன? கேட்பதற்கே வினோதமான நகைப்புக்கிடமான இது போன்ற கதைகள் சாத்தியமில்லாதது என்று நீங்கள் நினைத்தால், அந்த நினைப்பைக் கொஞ்சம் மாற்றிக் கொள்ளுங்கள்.

பாலிவுட்டின் பாதுஷா என்று போற்றப்படும் ஷாருக் கான் கடந்த மாதம் 12-ம் தேதி அமெரிக்கா சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் 2 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.  அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் Chubb Fellowship எனப்படும் சிறப்பு விருது ஒன்றைப் பெற அம்பானியின் மனைவி நீத்தா அம்பானியுடன் தனியார் விமானத்தில் சென்று இறங்கிய போது தான் அவருக்கு இந்த ‘அவமானம்’ நேர்ந்தது.

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதைக் கேள்விப்பட்ட  பல்கலைக்கழக நிர்வாகிகள், உடனடியாக பாதுகப்புத் துறை மேலதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அவரை சீக்கிரம் விடுவிக்க வகை செய்துள்ளனர்.

ஷாருக்-கான்-3
நன்றி www.manjul.com

அடிமை நாட்டின் ராஜபார்ட்டுக்கு நேர்ந்த இந்த மாபெரும் அவமரியாதைக்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவே களத்திலிறங்கி கம்பு சுற்றியுள்ளார். நடந்த சம்பவம் இந்தியாவுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி என்று குறிப்பிட்டவர், இனி இந்தியாவுக்குள் நுழையும் அமெரிக்கர்களுக்கு இதே விதமான ‘மரியாதை’ தான் காட்டப்படும் என்றோ, அமெரிக்காவுடனான பொருளாதார உறவுகளை இந்தியா மறுபரிசீலனைக்கு உட்படுத்தும் என்றோ அறிவித்து விடவில்லை. மாறாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவை அழைத்து மேற்படி சம்பவத்தின் மூலம் இந்தியாவுக்கு நேர்ந்த அவமானத்தின் பரிமாணத்தை அமெரிக்க எஜமானர்கள் முன் பவ்வியமாக வைக்கும் படி கேட்டிருக்கிறார்.

இந்திய ஆளும் வர்க்கம் மயிலறகால் அடித்த அடியைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் நடந்த சம்பவத்துக்காக ‘மன்னிப்பு’ கேட்டுள்ளனர். அந்த மன்னிப்பிலும் எந்த காரணத்துக்காக ஷாருக்கான் மேல் தாங்கள் சந்தேகப்பட்டோம் என்கிற விளக்கமோ இனிமேல் இவ்வாறு நடக்காது என்கிற உறுதிமொழிகளோ இல்லை. ஆனாலும் அடிக்கிற கை தானே அணைக்கும் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொண்டு விஷயத்தை ஆறப்போட்டு விட்டது இந்திய அரசும் அல்லக்கை ஊடகங்களும். செருப்பால் அடித்தாலும் மறக்காமல் கருப்பட்டியைக் கொடுத்து விட்டார்களல்லவா?

ஷாருக்கான் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தைப் பற்றி காட்டமாக எழுதிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள் அனைத்தும், நடந்த சம்பவத்திற்கான அடிப்படையான காரணம் பற்றி மூச்சே விடவில்லை. ஷாருக்கான் போன்ற மாபெரும் அப்பாடக்கருக்கே இந்த நிலையா, இதைக் கேட்பாரில்லையா என்றெல்லாம் குரல்வளை கிழிய கூவிய ஊடகங்கள், இது இந்தியாவுக்கே நேர்ந்த அவமானமென்றும், அமெரிக்காவுக்கே இதே பிழைப்பாய்ப் போய் விட்டதென்றும் அங்கலாய்த்திருந்தன. ஆனால், மறந்தும் கூட மேற்படி கார்ப்பரேட் கூத்தாடி துரதிர்ஷ்டவசமாகவோ அசந்தர்ப்பமாகவோ ‘ஷாருக்கான்’ என்கிற முசுலீம் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பதாலேயே தான் இந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது என்கிற கசப்பான உண்மையைப் பற்றி வாயே திறக்கவில்லை.

ஒருவேளை அப்படிச் சொல்ல நேர்ந்து விட்டால் தேவையில்லாமல் அமெரிக்காவின் முசுலீம் இனவிரோத பாஸிச அரசியல் பற்றியும், அதைத் தொடர்ந்து உலகெங்கும் முசுலீம்களை அமெரிக்கா எப்படி நடத்துகிறது – இசுலாமிய நாடுகளை எப்படிக் குத்திக் குதறுகிறது என்பதைப் பற்றியெல்லாம் வாசகர்களுக்கு நினைவூட்டியதைப் போலாகி விடுமல்லவா? இவர்களே இத்தகைய முசுலீம் வெறுப்பு அரசியலைத்தான் செய்து வருகிறார்கள். இது இந்துத்துவ பா.ஜ.கவிற்கும், ‘மதச்சார்பின்மை’ காங்கிரசுக்கும் வேறுபாடின்றி பொருந்தும். அதனால் இந்திய ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாய் விளங்கும் இந்த அல்லக்கைகளின் பார்ப்பன ஆன்மாவுக்கு தவறிக் கூட அப்படியெல்லாம் எழுதக் கைவராது என்பதே உண்மை. ஊதாங்குழலில் இருந்து சிம்பொனி இசையா பிறக்கும்?

ரத்த நாளங்களெங்கும் அடிமைத்தனமும் கோழைத்தனமும் பாயும் உணர்வுப்பூர்வமான அடிமைகளுக்கென்றே ஒரு விசேஷ குணம் இருக்கிறது – எந்தளவுக்கு எஜமானன் முன் மண்டியிட்டுக் குனிந்து குழைந்து போகிறார்களோ அந்தளவுக்கு தனக்குக் கீழ் இருப்பவர்கள் முன் விறைப்புக் காட்டுவார்கள். எடுப்பது பிச்சையென்றாலும் ராத்திரி பெண்டாட்டியைப் போட்டு அடிக்கும் பிச்சைக்காரர்களையும், செய்வது கூலி வேலையென்றாலும் ‘நாங்களெல்லாம் சத்திரிய பரம்பரை தெரியுமில்லே’ என்று தலித்துகளிடம் மீசை முறுக்கும் சாதி வெறி அற்பர்களையும் கொண்ட புண்ணிய பூமியாயிற்றே?

ஷாருக்-கான்
யேல் பல்கலையில் குத்தாட்டம் போடும் பாதுஷா – படம் www.thehindu.com

ஷாருக்கானுக்கு அமெரிக்காவில் நேர்ந்த அவமரியாதைக்குப் பொங்கிய இந்தியா, அமெரிக்க அதிகாரிகள் எந்த அடிப்படையில் அவரை இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்தார்களோ அதே  அடிப்படையில் ஒரு அப்பாவியைச் இங்கே சிறையில் தள்ளியிருக்கிறார்கள். இவர் ஷாருக்கானைப் போல் ஒரு கார்ப்பரேட் கூத்தாடியாக இல்லாத ஒரே பாவத்துக்காக பத்திரிகைகளும் பெரிதாக இதைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.

சையத்-அகமது-காஸ்மி
சையத்-அகமது-காஸ்மி

சையது அஹமது காஸ்மி ஒரு உருது பத்திரிகையாளர். மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். குறிப்பாக ஈரான், சிரியா போன்ற நாடுகளின் அரசியலைப் பற்றி தொடர்ந்து எழுதி வருபவர். இப்பிராந்திய அரசியல் பற்றி எழுதக் கூடிய மிகச் சில இந்திய (Political Analyst) அரசியல் ஆய்வாளர்களில் ஒருவர் . மார்ச் 6-ம் தேதி தூர்தர்ஷன் உருது சேனலின் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு திரும்பிய காஸ்மியை காலை 11:30 வாக்கில் போலீசார் கைது செய்கிறார்கள். பிப்ரவரி மாதம் இசுரேலிய தூதரக அதிகாரி ஒருவரின் மனைவியினுடைய கார் குண்டுவைத்துத் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் வழக்கு சம்பந்தமான ஆவணங்களையோ கைது செய்தற்கான அடிப்படை ஆதாரங்கள் இன்னதென்றோ தெரிவிக்க காவல்துறை மறுத்துள்ளது. பின்னர் நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த ஆவணங்களை காஸ்மியின் வழக்கறிஞர்கள் பரிசீலித்த போது, அதில் நடந்த சம்பத்தோடு காஸ்மியைச் சம்பந்தப்படுத்தும் வகையிலான குறிப்பான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று தெரியவந்துள்ளது. ஈரானிய விவகாரங்கள் பற்றி தொடர்ந்து பத்திரிகைகளில் எழுதியும் பேசியும் வந்த காஸ்மிக்கு ஈரானியர்கள் சிலரோடு தொடர்பு ஏற்பட்டதாகவும், அதில் சிலர் சந்தேகத்துக்குரியவர்களென்றும், அவர்கள்தான் கார் குண்டு வெடிப்புக்காக காஸ்மி உதவி செய்ய வேண்டி அமெரிக்க டாலர்களைக் கொடுத்துள்ளார்களென்றும் கதையைக் கட்டி விடும் போலீசு,  இதற்கு ஆதாரமாக காஸ்மியின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட சில டாலர் நோட்டுகளைக் காட்டுகிறது – அந்த நோட்டுகளின் மொத்த மதிப்பு 1254 டாலர்கள் மட்டுமே.

மேலும் காஸ்மியின் வீட்டிலிருந்து ஸ்கூட்டி ஒன்றைக் கைப்பற்றியிருக்கும் போலீசு, இதில் சென்று தான் தீவிரவாதிகள் குண்டு வைத்தனர் என்றும் சொல்கிறது. மேலும், குண்டு வைத்தவர்களுக்கு காஸ்மி தனது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார் என்றும் சொல்கிறது. அதே போல் காஸ்மியின் செல்பேசியிலிருந்து சில ஈரானிய எண்களுக்கு பேசப்பட்டிருப்பதையும் போலீசு ஆதாரம் என்று காட்டுகிறது. இதில் போலீசார் குறிப்பிடும் அந்த ஸ்கூட்டி வண்டி, சுமார் இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் காஸ்மியின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

அந்த ஓட்டை ஸ்கூட்டியை ஓட்டிப் போய் குண்டு வைத்து விட்டு தப்பிக்க வேண்டுமென்றால் அது இளைய தளபதி விஜயைத் தவிற இந்த பிரபஞ்சத்திலேயே வேறு யாராலும் முடியக் கூடிய காரியமல்ல. அதே போல் ஒரு பத்திரிகையாளர் என்கிற வகையிலும், அதிலும் மத்திய கிழக்கு நாடுகள் பற்றிய அரசியல் வல்லுனர் என்கிற வகையிலும், ஈரானிய செய்தி நிறுவனம் ஒன்றிற்காக வேலை பார்ப்பவர் என்கிற வகையிலும், காஸ்மியின் செல்பேசியிலிருந்து ஈரானிய எண்களுக்கு அழைப்புகள் செல்வதும் இயல்பானது தான். வெளிநாட்டு ஊடகங்களின் பிரதிநிதியாய் வேலை செய்பவர் ஆயிரம் அமெரிக்க டாலர் வைத்திருப்பதும் இயல்பானதுதான்.

ஆக, தீர்ப்பு இன்னதென்று முடிவு செய்து விட்டுத் தான் விசாரணையையே தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுப் போலீசு என்கவுண்டர்களுக்கு எழுதும் திரைக்கதையை விட மிக மொக்கையான கதையை எழுதியிருக்கிறார்கள். இது ஒன்றும் இந்தியாவின் காவல் துறைக்குப் புதிய விஷயமல்ல. நாண்டெட், சம்ஜௌதா, ஹைதரபாத் என்று எங்கே குண்டு வெடித்தாலும் விசாரணையை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே சில பத்து முசுலீம் இளைஞர்களைக் கைது செய்து, சித்திரவதை செய்வது காவல் துறையின் வாடிக்கையான நடவடிக்கை தான். அதே போல் இங்கே நடந்த பேர்பாதி குண்டு வெடிப்புகளைச் செய்ததே  ஆர்.எஸ்.எஸ் கும்பல் தானென்பது விசாரணையின் போக்கில் வேறு வழியின்றி வெளிப்பட்டு அம்பலமாவதும் நமக்குப் புதிதில்லை தான்.

சையத்-அகமது-காஸ்மி-2
காஸ்மியை விடுவிக்க நடந்த ஆர்பாட்டத்தில் அவர் மனைவி-மகன் (படம் தெஹெல்கா)

பிப்ரவரி மாதம் நடந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து எந்த விசாரணையோ முகாந்திரமோ இல்லாமல் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஈரான் தானென்று முதலில் இசுரேல் குற்றம் சுமத்துகிறது. ஈரானின் மேல் இசுரேலும், அமெரிக்காவும் பொருளாதாரத் தடை விதித்துள்ளதையும், ஈரானின் பெட்ரோலை எந்த நாடுகளும் இறக்குமதி செய்யக் கூடாது என்று அமெரிக்கா அடாவடித் தனம் செய்து வந்ததையும், அந்தச் சூழ்நிலையில் இந்தியா தனது மொத்த எண்ணைய் இறக்குமதியில் சுமார் 16 சதவீதம் அளவுக்கு ஈரானிடம் இருந்து கொள்முதல் செய்து வந்ததையும், இதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்காவும் இசுரேலும் அழுத்தம் கொடுத்து மிரட்டி வந்ததையும் பின்னணியில் கொண்டே மேற்படி குண்டு வெடிப்பையும் அதைத் தொடர்ந்து இசுரேல் கூறிய குற்றச்சாட்டையும் காண வேண்டும். ஆரம்பத்தில் இசுரேல், ஈரான் மேல் சுமத்திய குற்றச்சாட்டுக்கு அடிப்படையேதும் இல்லை என்று சொல்லி வந்த இந்தியா, அதன் பின் இசுரேல் கொடுத்த அழுத்தங்களின் அடிப்படையில் தான் தனது நிலையை மாற்றியிருக்கிறது.

ஷாருக் கானை அமெரிக்கா இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்ததன் அடிப்படை என்னவென்பதை இந்திய ஆளும் வர்க்கமோ அதன் அல்லக்கை ஊடகங்களோ பேசாமலிருப்பதன் காரணம் இவர்கள் பவிசாகப் போட்டுக் கொண்டு திரியும் ஜனநாயக முகமூடிகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பன பாஸிச ஒரிஜினல் மூஞ்சிகளிகளின் யோக்கியதை தான் காரணம்.  ஷாருக்கான் ஒரு கார்ப்பரேட் கூத்தாடி என்பதாலோ முதலாளிகளின் அரசவைக் கோமாளி என்பதாலோ ஒரு சம்பிரதாயமான மன்னிப்பு அறிக்கையைப் பெற்றிருக்கிறார் – குவாண்டனாமோ பேயிலும், இந்தியச் சிறைகளிலும் முசுலீம் என்கிற ஒரே காரணத்துக்காக எந்தக் குற்றமும் செய்யாமல் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி முசுலீம்களின் நியாயம் யாரால் தீர்க்கப்படும்?

இதில் இந்திய ஊடகங்கள், நடுத்தர வர்க்கத்தின் சென்டிமெண்டை பெற்ற ஷாருக்கானும் கூட தான் முசுலீம் என்பதற்காக தடுக்கப்பட்டதை கண்டிக்கவில்லை. ஆக முசுலீம் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத அவதூறை ஆதரித்துக் கொண்டுதான் இத்தகைய ‘முன்னுதாரணமான’ முசுலீம்கள் பிசினெஸ் செய்யமுடியும். இதைத்தான் அவர் நடித்த “மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். பகவத் கீதை படிக்கும் ‘முசுலீமாக’ இருப்பதால்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாரதிய ஜனதா ஆக்கியது.

நாட்டில் பெரும்பான்மையான முசுலீம் மக்கள் இத்தகைய பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்டபடிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது கரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர். அதுவும் அவர் ஒரு முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு……

_____________________________________________________

– தமிழரசன்

________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. இன்னும் எத்தன நாளைக்கி தான் நம்ம ஷாருக்கானை வஞ்சிக்கப்ட்டு விட்டார்ன்னு பாக்கறது வேற இஸ்லாமியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவது இல்லையா, வேற எந்த “கான்” நடிகரும் அமெரிக்க செல்லவில்லையா

    அண்டர்வேர்ல்ட், மாபியா தொடர்ப்பு இந்த கோணத்தில் ஷாருகான் விஷயத்தை பார்க்கலாமே

  2. //நாட்டில் பெரும்பான்மையான முசுலீம் மக்கள் இத்தகைய பாசிச அடக்குமுறைகளை எதிர்கொண்டபடிதான் வாழ்கின்றனர். அவர்கள் மீது கரிசனம் கொள்ளக்கூடாது என்போர்தான் ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானத்தை அகற்ற துடிக்கின்றனர். அதுவும் அவர் ஒரு முசுலீம் என்ற அடையாளத்தை மறைத்து விட்டு.//

    ஒரு பக்கம் இஸ்லாமிய அடையாளங்களை விடுத்து வர்க்கமாக ஒன்று சேர சொல்லும் வினவு இன்னொரு பக்கம் ஏன் முஸ்லீம் என்கிற அடையாளத்தை விடனும் என கேள்வி கேட்கிறது

    • தியாகுருவே,

      நீங்கள் எழுதியிருப்பது வயக்கம் போல சுத்தமாக விளங்கவில்லை. பித்தகோரஸ் தியரத்தை விட சிக்கலான தத்துவ முடிச்சுகளை அவிழ்க்கும் திறன் படைத்த (தத்துவ)முடிச்சவிழ்க்கியான நீங்களே உங்கள் தத்துவ முடிச்சையும் அவிழ்த்து விடுங்களேன்.

      நீங்கள் சுட்டிக் காட்டியிருக்கும் வினவு எழுதிய நாலு வரிகளுக்குள்ளும் புகுந்து பார்த்து விட்டேன் ஆனால், //ஏன் முஸ்லீம் என்கிற அடையாளத்தை விடனும் என கேள்வி கேட்கிறது// இந்தக் கேள்வியை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. கடல்ல்லய்யே இல்லையாம்.

    • பெரும்பாண்மை இசுலாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதையோ, ஒடுக்குமுறைக்குள்ளாவதையோ கண்டுகொள்ளாத கூட்டம் இன்று ஷாருக்கானுக்காக வக்காலத்து வாங்க என்ன காரணம் ? அந்த பெரும்பாண்மை இசுலாமியர்கள் ஏழைகளாக இருப்பதும், ஷாரூக் பெரிய கோடீஸ்வரனாகவும் ஐ.பி.எல் முதலாளியாகவும் இருப்பது தான் தியாகு காரணம். இது சரியாகத் தானே இருக்கிறது. இதில் நீங்கள் சொல்ல வருகிறீர்கள் ?

      • //பெரும்பாண்மை இசுலாமிய மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதையோ, ஒடுக்குமுறைக்குள்ளாவதையோ கண்டுகொள்ளாத கூட்டம் இன்று ஷாருக்கானுக்காக வக்காலத்து வாங்க என்ன காரணம் ? அந்த பெரும்பாண்மை இசுலாமியர்கள் ஏழைகளாக இருப்பதும், ஷாரூக் பெரிய கோடீஸ்வரனாகவும் ஐ.பி.எல் முதலாளியாகவும் இருப்பது தான் தியாகு காரணம்//

        பெரும்பாண்மை இஸ்லாமியர் இஸ்லாமியர் என்கிற காரணத்தால் மட்டுமே கொல்லப்படுகின்றனர் எனவே இஸ்லாமியனாக ஒன்றுபடுங்கள் என்பது இஸ்லாமிய அமைப்புகளின் கூற்று ஆனால்

        பிரச்சனை முதலாளித்துவத்தில் உள்ளது

        //அந்த பெரும்பாண்மை இசுலாமியர்கள் ஏழைகளாக இருப்பதும், //

        இந்த பெரும்பாண்மை உள்ளே இஸ்லாமியர்கள் மட்டுமல்ல இந்துகள் கிருத்தவர்கள் என மத பாகுபாடின்றி அனைவரும்தான் இருக்கிறார்கள்

        ஆகவே மதத்தை தூக்கி பிடிக்க ஒன்றுமில்லை என்பதே எனது வாதம்

  3. //ஆனால், மறந்தும் கூட மேற்படி கார்ப்பரேட் கூத்தாடி துரதிர்ஷ்டவசமாகவோ அசந்தர்ப்பமாகவோ ‘ஷாருக்கான்’ என்கிற முசுலீம் பெயரைத் தாங்கிக் கொண்டிருப்பதாலேயே தான் இந்த அவமானத்தைச் சந்திக்க நேர்ந்தது என்கிற கசப்பான உண்மையைப் பற்றி வாயே திறக்கவில்லை.//

    //இதைத்தான் அவர் நடித்த “மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். பகவத் கீதை படிக்கும் ‘முசுலீமாக’ இருப்பதால்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாரதிய ஜனதா ஆக்கியது.//

    இந்த இரண்டு வரிகளும் சொல்வது என்ன

    முஸ்லீம் என்கிற அடையாளத்துக்காக ஒரு நபர் கைது செய்யப்பட கூடாது என சொல்லவில்லை

    இரண்டாவது இந்த நபர் தான் ஒரு முஸ்லீம் என்பதை மறுக்கிறார் எப்படி பயங்கரவாத முஸ்லீம்களை போலீசுக்கு காட்டி கொடுப்பதன் மூலம்

    இந்த தோசையை அப்படியே திருப்பி போட்டால் என்ன வரும்

    முஸ்லீம் என்கிற அடையாளத்துக்காக கைது செய்வதை நிறுத்த வேண்டும்
    அடுத்து முஸ்லீம்கள் “பயங்கரவாத முஸ்லீம்களை “ இனம் காட்ட கூடாது

    ”நீ முஸ்லீமாய் இருப்பதானால் நீ பயங்கரவாதத்தில் ஈடுபடுன்னு
    பின்லேடனும் இதைத்தானய்யா சொல்றாரு பெரிசா தத்துவ முடிச்செல்லாம் இல்லை இதில் ”

    அதைத்தான் வினவும் சொல்கிறது

    மேல நான் எழுதி இருப்பது புரியலைன்னா அதுக்கு நான் பொறுப்பல்ல ஏனெனில்புரியாமல் எழுதுவது வினவு அண்ணந்தான்

    • ///இந்த தோசையை அப்படியே திருப்பி போட்டால் என்ன வரும்///

      எந்த தோசையை திருப்பி போட்டாலும் தோசை தானே வரும்? அண்ணனுக்கு மட்டும் அவரப்போலவே ஆப்பாயில் வருமோ???

      வந்தாலும் வரும், யாரு கண்டா?

  4. தியாகுருவே,

    தோசையை பலவித கோணங்களில் திருப்பிப் போட்டு ஹாப்பாயில் வரவழைக்கும் உங்கள் உத்தியைக் கண்டு மிஸ்டர் குயாதிக்கு பொறாமை. விடுங்க குருவே.

    ஆனா,

    //மேல நான் எழுதி இருப்பது புரியலைன்னா அதுக்கு நான் பொறுப்பல்ல ஏனெனில்புரியாமல் எழுதுவது வினவு அண்ணந்தான்//

    தெள்ளத் தெளீவாக எயுதப்பட்ட இந்த இரு வரி திருக்குரளுக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசே தரலாம்.

    நீங்கள் எழுதுவது புரியாமல் போனாலும் வினவு தான் காரணம் உங்களுக்கு மலச்சிக்கல் வந்தாலும் ம.க.இ.க தான் காரணம் என்கிற அரிய தத்துவம் ஒன்றுக்காகவே தத்துவத்துக்கான நோபல் பரிசு கொடுக்கலாம்.

    கலக்கறேள் போங்கோ…

  5. பின்னூட்டம் இடுபவர்கள் தியாகு போன்ற மாணவர்களுக்கு புரியும் விதமாக எடுத்துச்சொல்லுங்கள். அதுதான் அவரது புரிதலுக்கு உதவும்.

  6. கட்டுரை ஷாருக்கானை கைது செய்யலாம், ஆனால் சையத்தை கைது செய்யக்கூடாது என சொல்கிறதா?
    தியாகுவின் வரிகளிலிருந்து…
    //முஸ்லீம் என்கிற அடையாளத்துக்காக கைது செய்வதை நிறுத்த வேண்டும்
    அடுத்து முஸ்லீம்கள் “பயங்கரவாத முஸ்லீம்களை “ இனம் காட்ட கூடாது//

    இதுதான் இந்த கட்டுரையின் மைய கருத்தாக்கமா ?

    • முஸ்லீம் பெயர் என்ற அளவுகோலை மட்டும் கைது செய்வதற்கு பயன்படுத்துவதுதான் தவறு. உதாரணத்திற்கு RSS இயக்கம் ஒரு கொலைகார இயக்கம் என்பதற்காக நீங்கள் இந்து என்பதற்காகவே உங்களையும் அந்த லிஸ்டில் இணைக்க முடியுமா!

      • //முஸ்லீம் பெயர் என்ற அளவுகோலை மட்டும் கைது செய்வதற்கு பயன்படுத்துவதுதான் தவறு. //

        அது சரி ஆனால் பயங்கரவாத முஸ்லீம்களை காட்டிகொடுப்பவன் முஸ்லீமே இல்லை என்கிற வாதம் சரியா

  7. ஆக, ஒப்பந்தப்படி நாம் பெட்ரோலை இரானிடம் இருந்து இறக்குமதி செய்திருந்தால் இந்த பெட்ரோல் விலை ஏற்றம் இருந்திருக்காது. அமெரிக்க இஸ்லாமிய எதிர்ப்பிற்கு, நாம் ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்..

    இதற்கு பெயர் தான் அடிமை தேசமோ?? என்ன கொடுமை சார் இது..

    • //ஆக, ஒப்பந்தப்படி நாம் பெட்ரோலை இரானிடம் இருந்து இறக்குமதி செய்திருந்தால் இந்த பெட்ரோல் விலை ஏற்றம் இருந்திருக்காது. அமெரிக்க இஸ்லாமிய எதிர்ப்பிற்கு, நாம் ஒரு லிட்டருக்கு 8 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்..//
      is this true?

  8. ////முஸ்லீம் என்கிற அடையாளத்துக்காக கைது செய்வதை நிறுத்த வேண்டும்
    அடுத்து முஸ்லீம்கள் “பயங்கரவாத முஸ்லீம்களை “ இனம் காட்ட கூடாது//

    இதுதான் இந்த கட்டுரையின் மைய கருத்தாக்கமா ?///

    பயங்கரவாத இந்து ,பயங்கரவாத முஸ்லீம் , அல்லது பயங்கரவாத கம்யூனிஸ்டுகள் எல்லாருமே தவறு செய்கிறார்கள்

    மக்களுக்காக உருவான தத்துவம் எதுவுமே மக்களை கேள்வி கேட்பாரின்றி கொல்ல அனுமதிப்பதில்லை

  9. மதங்கள் எல்லா மதங்களும் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் வருகின்றன

    //“மதத்தின் துயரம் என்பது ஒரே நேரத்தில் உண்மையான துயரத்தின் வெளிப்பாடாகவும், அதற்கு எதிரான கண்டனமாகவும் இருக்கிறது. மதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும், இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மாவற்ற நிலைகளின் ஆன்மாவாகவும் இருக்கிறது. இது மக்களின் அபினியாக உள்ளது.
    .. .. ..
    மக்கள் உண்மையான மகிழ்ச்சி பெறுவதற்காக, மக்களது மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை அழிப்பது அவசியமாக்குகிறது. தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும்.” காரல் மார்க்ஸ் //

    இதில் சாருக்கான போன்றவர்கள் பணக்கார இந்திய ஆதிக்க ஆதரவு சக்திகள் என்றும் அவர்களை எதிர்க்க வேண்டும் என்றும் சையது போன்றவர்கள் இந்தியாவையும் அமெரிக்காவையும் மத அடிப்படையில் எதிர்க்கிறார்கள் அல்லது பயங்கரவாத முஸ்லீம்கள் செய்வது சரியானது என்ற கோணத்தில் பார்த்து அதை காட்டி கொடுக்கும் நபர்களாக இருக்கும் சாருக்கான் , அப்துல்கலாம் போன்றவர்கள் மட்டுமே கண்டனத்துக்கு உரியவர்கள் என்றும் மற்றபடி மத நம்பிக்கைகள் அது தொடர்பான போராட்டங்கள் சரியானது என்றும் முற்றிலும் மார்க்சிய விரோத நிலையை எடுக்கிறது இந்த கட்டுரை

    மதம் என்பது இதயமற்ற உலகில் இதயமாக இருக்கிறதென்று மார்க்ஸ் சொல்கிறார் என்றால் அது இந்து முஸ்லீம் கிருத்தவ எல்லா மதங்களையும் சேர்த்தே சொல்கிறார்

    இதில் ஒரு மதத்தை ஆதரித்து இன்னொரு மதத்தை எதிர்க்கும் பேச்சுக்கே இடமில்லை

    //தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்த்தோற்றத்தை விட்டொழிக்கும்படிக் கோருவது, அத்தகைய பொய்த்தோற்றங்கள் தேவையாக இருக்கும் நிலைமைகளை விட்டொழிக்கும்படிக் கோருவதே ஆகும்.”//

    தங்களது நிலைமைகள் குறித்து மக்கள் கொண்டுள்ள பொய்தோற்றம் தான் இந்த இஸ்லாம் மதம் அல்லது இந்து மதம் ஆகும் அந்த பொய் தோற்றத்துக்கு காரணமான நிலமையும் சமூக பொருளாதார காரணமாக இல்லாமல் அவர்கள் நம்பும் மதம் காரணமில்லை என்பதே ஆணித்தரமான கருத்து

    ஆகவே மதரீதியான எதிர்ப்புகளை விடுத்து ஒட்டுமொத்த சமூக அமைப்பை மாற்றும் வர்க்க போராட்டத்தில் மதம் சாராத வர்க்க அரசியலை துணிச்சலுடன் பேச முடிந்தால் அது மட்டுமே சரியான பாதையாகும்

    • அய்யா நீங்க எழுதி இருக்குறதுல எனக்கு புரிஞ்ச மாதிரி இருக்குறது இதுதான்.
      //மாயையான மகிழ்ச்சியாக அமைந்துள்ள மதத்தை அழிப்பது அவசியமாக்குகிறது.//

      நானும் அதைத்தான் பல நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன். மதங்களை ஒழித்து விடுங்கள். ஆனால் ஒரு குயவன் இருப்பைப் போல கடவுளின் இருப்பையும் நம்பித்தான் ஆகவேண்டும். அதுவே உண்மையான மகிழ்ச்சியைத் தருவது. எங்கே நம்ம பாஸூ ரொம்ப நாளா ஆளையே காணோம்.

  10. /நீதி, மதம், அரசியல், சமுதாயம் சம்பந்தமான எல்லாவிதச் சொல்லடுக்குகளுக்கும் பிரகடனங்களுக்கும் வாக்குறுதிகளுக்கும் பின்னே ஏதாவதொரு வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமாக ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள். பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய போதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்தப்பட்டு வருகிறது. சீர்திருத்தங்கள், மேம்பாடுகள் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் இதை உணராத வரையில் பழைய அமைப்பு முறையின் பாதுகாவலர்கள் அவர்களை என்றென்றும் முட்டாள்களாக்கிக் கொண்டேயிருப்பார்கள்.”-லெனின்//

    இந்து மதத்தின் பின் எப்படி ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்து கொண்டு இருக்கிறதோ அதை போலவே இஸ்லாம் மத போதனைக்கு பின்னும் வர்க்க நலனே ஒழிந்து கொண்டு இருக்கும் இரண்டு குட்டைகளும் நேராக ஆதிக்க வர்க்கத்துக்கு சேவை செய்கிற வேளையில்

    1.இந்து மதம் அதனுடன் சேர்ந்த கிருத்தவ மதம் மட்டுமே ஒடுக்கும் மதமாக இருப்பதை போலவும்
    2.இஸ்லாம் மதம் போன்றவை ஒடுக்கப்படும் சுரண்டப்படும் மதங்களாக இருப்பதை போலவும் பேசுவதும் எழுதுவதும்

    தவறானதாகும்

    //வர்க்கத்தின் நலன்கள் ஒளிந்து நிற்பதைக் கண்டு கொள்ள மக்கள் தெரிந்து கொள்ளாத வரையில் அரசியலில் அவர்கள் முட்டாள்தனமாக ஏமாளிகளாகவும் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வோராகவும் இருந்தனர், எப்போதும் இருப்பார்கள்.//

    ஆகவெ மொத்தமாக ஆளும் வர்க்க அரசியலை

    1.ஒரு பெரும்பான்மை மத அல்லது சாதி அல்லது இன அடையாளப்படுத்தி

    தனியே பிரித்து விடுதல் எந்த நன்மையும் பயக்காது

    இன்று இந்து பெரும்பான்மை மதம் இருந்த இடத்தில் முன்பு இஸ்லாமிய மதம் இருந்தது
    ஆதிக்க சக்தியாக ஆனாலும் அதுவும் அன்று இருந்த நிலபிரபுக்களுக்கே சேவை செய்தது

    இன்று இருக்கும் இந்து மதம் முன்பும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது அதுவும் ஆளும்வர்க்கத்திற்கே சேவை செய்தது

    எனவே எந்த மதமும் உழைக்கும் வர்க்கத்தின் மதமல்ல

  11. புரோட்டாளி தியாகு ஏன் இப்படி கட்டுரைக்கு தொடப்பே இல்லாம வெர்பல் டயோரியா வந்ததுபோல எழுதுகிறார்னு இங்க பல பேருக்கு சந்தேகம் வரலாம்..

    அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன், மேலே இருப்பதுவெல்லாம் ஏற்கனவே அவர் பெற்ற உள்ளொளியின் விளைவாக தியாகு இயல்பு நிலையில் ரொம்ப சிந்திச்சு மெனக்கெடாம போகிற போக்கில் எழுதியது..

    இதுவே அவர் சிந்தித்து அறிவு பூர்வமாக எழுதனுன்னு முயற்சி செஞ்சாருன்னு வையி, அவ்ளோதான் இங்க ஒரு பய இருக்க முடியாது,

    எல்லாரும் வயிறு கலங்கி பேதி புடுங்கியிருக்கும், வாயில ரத்தம் ரத்தமா கக்கியிருக்கும், கண்ணு இருண்டு போய் பூமியே முன்னூரு கிலோமீட்டர் வேகத்தில் காலடியில் சுற்றி தொபேர்னு விழுந்து அப்படியே நட்டுகிட்டிருப்பீங்க, ஜாக்ரத

  12. //எனவே எந்த மதமும் உழைக்கும் வர்க்கத்தின் மதமல்ல // திரும்பவும் அச்சச்சோ… யாருங்க இப்டிலாம் சொன்னது? 🙁

    • ஏம்பா மன்னாரு, யாரு சொன்னா யாரு சொன்னான்னு கேட்டா எப்படி?

      இங்க என்ன நடக்குது?

      வழக்கம் போல தியாகுவோட டைனோசர் மூளைக்கு எதுவும் புரியல,

      புரியாததுனால தப்பு கண்டுபுடிக்க முடியல , தப்பு கண்டுபிடிக்கலேன்னா மலச்சிக்கல் வந்திடும்.. தாங்குமா? தாங்காது.., அதனால தியாகு ரெண்டுநாள் கவுந்தடிச்சு யோசிச்சு ஒரு ஐடியா பண்ணிணார்..

      அந்த ஐடியாபடி அண்ண்ணே தப்புத்தப்பா எதுவோ எழுதினார்? அப்புறம் அவர் எழுதுனதை அவரே தப்புன்னு நிருபிக்க இணையத்தெருக்களிலெல்லாம் பிச்சையடுத்து பத்தி பத்தியா காப்பிபேஸ்டு பண்ணுவார்… #எப்பூடி!!!

      இப்ப என்னாச்சு?

      தப்புன்னு புரூவ் பண்ணியாச்சு! விமர்சனத்துக்கு விமர்சனமும் ஆச்சு, அறிவு ஜீவிமாதிரி காமிச்சுக்கிட்டமாதிரியும் ஆச்சு..

      அட இந்த கிறுக்கு பய தியாகு தானே தத்துபித்துன்னு உளரிட்டு அதை தானே விமரிசனம் செஞ்சு தன்னைத்தானே அசிங்கப்படுத்திக்கிறானேன்னு நீங்க காறி துப்புற சத்தம் கேக்குது,

      என்ன பண்றது?

      கிரிக்கெட் வெள்ளாடும் போது அம்மணமா ஓடியாரவங்களை பாத்திருக்கோமில்ல, அதுமேரிதான்… பாத்தோமோ துப்புனோமான்னு போயிட்டே இருக்கனும்..

      என்னது ஏற்கனவே துப்புனது பத்தாதான்னா கேக்குறீங்க…

      இதுவரைக்கும் நாம துப்புனதுலதான் அண்ணன் சும்மிங்கே அடிக்குறாராம்… யாருகிட்ட ????

      • மிஸ்டர் குயாதி, நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எங்கள் குரு தியாகு ஒன்றை தவறு என்று நினைத்து விட்டால் அதை வினவு தான் எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதவில்லை என்றால் அது வினவின் குற்றம் – இதில் எங்கள் குரு தியாகுவை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்?

        இப்போது கூட பாருங்கள், எங்கள் குரு வினவு ‘என்னவோ சொல்லி விட்டதாக’ நினைத்து எதிர்விணையாற்றிக் கொண்டிருக்கிரார். வினவு அப்படி சொல்லியே இருக்காவிட்டால் அது வினவின் குற்றம் தானே?

        என்னய்யா ஊர்நாட்டான்னா உங்களுக்கெல்லாம் எளக்காரமா போச்சா? பாக்க கேண மாதிரி இருந்தா ஏமாத்திடுவீங்களா? இல்ல நாங்க தான் விட்றுவோமா?

        தியாகுருஜி,

        போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும். நீங்கள் உங்கள் வரலாற்றுக் கடமையை ஆற்றிக் கொண்டேயிருங்கள். பாருங்க நாலு இடத்தில புல்ஸ்டாப் வைக்கலை. மார்க்சியஇயங்கியல்பொருள்முதல்வாதட்ராஸ்கியலெனியமாவோவியசேகுவேராவியத்தின் படி இது மாபெறும் குற்றம்.

        கேப்பு விடாம அடிங்க பாஸு.

  13. ஒரு மார்க்சிய வாதியின் கடமை என இங்கே சொல்லப்பட்டிருப்பது மிக சரியானது
    (http://samaran1917.blogspot.in/2010/01/blog-post.html)
    //சிந்தாந்தப் பிரச்சாரம் என்பது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருந்தவரும் பண்பாடு மற்றும் முன்னேற்றத்திற்குமான எதிரியை எதிர்த்த ஒரு போராட்டமாகும். இப்போராட்டத்தை எவ்வாறு வர்க்கப் போராட்டத்துக்கு உட்படுத்த முடியும்? அதாவது அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒரு திட்டவட்டமான நடைமுறை நோக்கங்களுக்காக நடத்தப்படும் ஒரு போராட்டத்துக்கு உட்படுத்த முடியும் என்று கேட்கக்கூடும். இவ்வாறு கேட்பது மார்க்சிய இயக்கவியலைப் பற்றி ஒரு சரியான புரிதலின்மையினாலேயாகும். இந்த எதிர்ப்பாளர்களை திகைக்கச் செய்யும் இந்த முரண்பாடு உண்மையான வாழ்க்கையில் உள்ள ஒரு உண்மையான முரண்பாடாகும். அதாவது இது ஒரு இயக்கவியல் முரண்பாடாகும். இது ஒரு வெற்றுப்பேச்சோ அல்லது புனையப்பட்ட ஒன்றோ அல்ல.நாத்திகப் பிரச்சாரத்துக்கும் – அதாவது உழைக்கும் மக்களின் ஒரு பிரிவினருக்கிடையில் உள்ள மத நம்பிக்கைகளை ஒழிப்பதற்கும் இப்பிரிவினரின் வர்க்கப் போராட்டத்தின் வெற்றிக்கும், முன்னேற்றத்திற்குமான நிலைமைகளுக்கும் இடையில் அழிக்க முடியாத ஒரு எல்லைக் கோட்டை வரைவது இப்பிரச்சினையை இயங்கியலற்ற முறையில் (அதாவது மாறாநிலைவாத கண்ணோட்டத்தில்) புரிந்துக் கொள்வதாகும். மாறக்கூடய, ஒப்புநோக்கு ரீதியலான ஒரு எல்லைக் கோட்டை (வேறுபாட்டை) அழிக்க முடியாத முற்றான ஒரு எல்லைக்கோடாக (வேறுபாடாக) மாற்றிவிடுவது ஆகும். இவ்வாறு செய்வது மெய்யாக வாழ்க்கையின் பிரிக்க முடியாதவாறு இணைந்திருக்கும் ஒன்றை பலவந்தமாகப் பிரிப்பதாகும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.
    உழைக்கும் மக்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் கொண்டு வரும் அரசியல், பொருளாதார, ஒடுக்குமுறைகளை எதிர்த்தோ அல்லது சுரண்டும் வர்க்கங்களின் சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் எதிர்த்தோ உழைக்கும் மக்கள் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். உழைக்கும் மக்களில் ஒரு பகுதியினர் முற்போக்கான (சோசலிச) கருத்துகளைக் கொண்டிருப்பவர்களாகவும், மற்றொரு பிரிவினர் இன்னும் மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களாகவும், பிளவுபட்டிருக்கின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சூழ்நிலைமையில் மதவாதிகள் உழைக்கும் மக்களிடையில் இருக்கும் மதம் குறித்த கருத்து வேற்றுமைகளைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைப் பிளவுபடுத்தி ஆட்சியாளர்களுக்கோ அல்லது சுரண்டும் வர்க்கத்தினருக்கோ சேவை செய்ய முயற்சித்து வருகின்றனர் என வைத்துக்கொள்வோம். இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் ஆட்சியாளர்களுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையில் அரசியல் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக ஒரு போராட்டம் துவங்கிவிட்டது. அப்போது ஒரு மார்க்சிய வாதியின் கடமை என்ன? இப்போராட்டத்தில் உழைக்கும் மக்கள் வெற்றி பெறச் செய்வதை எல்லாவற்றிற்கும் மேலான ஒரு கடமையாகக் கருதி, இப்போராட்டத்தில் முற்போக்கான தொழிலாளர்களையும், மதநம்பிக்கைக் கொண்ட தொழிலாளர்களையும் இரண்டாகப் பிளவுபடுத்துவதை எதிர்த்து தீவிரமாகப் போராடச் செய்வதும் அவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதற்காகப் பாடுபடுவதும் ஒரு மார்க்சியவாதியின் கடமையாகும்.//

    இந்து மத நம்பிக்கை கொண்ட தொழிலாளர்களும் இஸ்லாம் மத நம்பிக்கை கொண்ட தொழிலாளர்களையும் பிரித்து விடாமல் அவர்களை ஒன்று சேர்த்து போராடுவதே சரியானது

  14. //ஷாருக் கானை அமெரிக்கா இரண்டு மணி நேரங்கள் தடுத்து வைத்ததன் அடிப்படை என்னவென்பதை இந்திய ஆளும் வர்க்கமோ அதன் அல்லக்கை ஊடகங்களோ பேசாமலிருப்பதன் காரணம் இவர்கள் பவிசாகப் போட்டுக் கொண்டு திரியும் ஜனநாயக முகமூடிகளுக்குப் பின் ஒளிந்து கொண்டிருக்கும் பார்ப்பன பாஸிச ஒரிஜினல் மூஞ்சிகளிகளின் யோக்கியதை தான் காரணம். ஷாருக்கான் ஒரு கார்ப்பரேட் கூத்தாடி என்பதாலோ முதலாளிகளின் அரசவைக் கோமாளி என்பதாலோ ஒரு சம்பிரதாயமான மன்னிப்பு அறிக்கையைப் பெற்றிருக்கிறார் – குவாண்டனாமோ பேயிலும், இந்தியச் சிறைகளிலும் முசுலீம் என்கிற ஒரே காரணத்துக்காக எந்தக் குற்றமும் செய்யாமல் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி முசுலீம்களின் நியாயம் யாரால் தீர்க்கப்படும்?//

    //பார்பன பாசிச ஆட்சி என சொல்வதன் மூலம்//

    இந்தியாவில் நடந்துகொண்டு இருக்கும் முதலாளித்துவ ஆட்சியை மறைப்பதன் மூலம் மட்டுமே தமது ஓட்டாண்டியான நக்சல் பாரி அரசியலின் கோமணத்தை இழுத்து தைத்து கொண்டு இருப்பவர்கள் நீங்கள்

    • புரோட்டாளிகளின் வெண்ணையே, தியாகுவே, எடுத்துக்கொடுக்கிறேன் கேள்மின்!!!

      பார்ப்பன ஆச்சி என்று இந்தியாவில் கிடையவே கிடையாது. செட்டினாட்டு ஆச்சி, மனோரமா ஆச்சி போன்றவர்களே இருக்கின்றனர். தவறான தகவல்களை கொடுத்து இப்பேர்பட்ட வரலாற்று பிழையை செய்யும் இந்த தையல்காரர்களை சும்மா விடப்பிடாது.

  15. தியாகுருவே…. எங்கேயோ போயிட்டீங்க.

    மிஸ்டர் குயாதி, பார்த்தீர்களா ஒரே பாலில் ஒரு சிக்ஸும் ஒரு ஃபோரும் ஒரு சிங்கிளும் அடித்து உங்களை க்ளீன் போல்டும் ஆக்கி, ஆக மொத்தம் மூன்று கோல்களையும் வேறு போட்டு கடைசியில் கோப்பையைத் தட்டிச் சென்று விட்டார் எங்கள் தலைவர்.

    • மன்னாரு, ஒப்புக்கறேன், உங்கள் தியாகுருவுக்கு இணையான கப்பு பார்ட்டி ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் கிடையாது

      • /மன்னாரு, ஒப்புக்கறேன், உங்கள் தியாகுருவுக்கு இணையான கப்பு பார்ட்டி ஈரேழு பதினான்கு லோகத்துலேயும் கிடையாது//

        இவரென்னங்க மன்னாரு ரொம்ப கோவிச்சுக்கிறார்

  16. //முசுலீம் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பயங்கரவாத அவதூறை ஆதரித்துக் கொண்டுதான் இத்தகைய ‘முன்னுதாரணமான’ முசுலீம்கள் பிசினெஸ் செய்யமுடியும். இதைத்தான் அவர் நடித்த “மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். பகவத் கீதை படிக்கும் ‘முசுலீமாக’ இருப்பதால்தான் அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக பாரதிய ஜனதா ஆக்கியது.//

    முஸ்லீம் மக்கள் மீது சுமத்த பட்டிருக்கும் பயங்கர வாத அவதூறு என்பது ஒரு தவறான பொது புத்தி என்றால்

    // ஆதரித்துக் கொண்டுதான் இத்தகைய ‘முன்னுதாரணமான’ முசுலீம்கள் பிசினெஸ் செய்யமுடியும். //

    இப்படி சொல்வதும் ஒரு தவறான பொதுபுத்திதான்

    3
    //மை நேம் ஈஸ் கான்” படத்தின் கதையும் கூறுகிறது. அதாவது ‘பயங்கரவாத’ முசுலீம்களை பிடித்துக் கொடுத்தபடிதான் தனது மீதான பயங்கரவாதத்தை அமெரிக்க ஜனதிபதி வரை சென்று அகற்றப் போராடுவார். //

    பிடித்து கொடுக்காமல் தன் பெயரை பயங்கரவாதிகள் லிஸ்டில் இருந்து எடுப்பது எப்படி எனில்

    மக இகவின் கிழிந்து போன கோமணத்தை போல

    மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறோம் ஆனால் நாங்கள் ஆயுதம் தூக்க மாட்டோம்

    கலெக்டரை கடத்துவது தவறல்ல ஆனால் அதை நாங்கள் செய்ய மாட்டோம் என்பதை போன்ற இரப்டை வேட அரசியல் மூலம் மட்டுமே முடியும்

    • சாக்கடையின் கோச்சடையே, தியாகுவே எடுத்துக்கொடுக்கிறேன் கேள்மின்!!!

      இராக் போரை கண்டிப்பார்கள் ஆனால் இராக்குக்கு போய் சண்டை போடமாட்டார்கள்

      நித்தி ஆதினமாவதை ஆதரிப்பார்கள் ஆனால் தானே ஆதினமாகமாட்டார்கள்

      தமிழ்நாட்டில் இருந்து கொண்டு காஷ்மீரத்து அடக்குமுறையை எதிர்பார்க்ள் ஆனால் காஷ்மீருக்கு போய் தமிழ்நாட்டு பேயாட்சியை எதிர்க்கமாட்டார்கள்

      மக்களை தேர்தலை புறக்கணிக்கச்சொல்வார்கள் இவர்களும் தேர்தலில் பங்குபெறமாட்டார்கள்

      #என்ன ஒரு வில்லத்தனம்

      • மிஸ்டர் குயாதி,

        நீங்கள் எங்க தல சொல்றத சரியா புரிஞ்சுக்கலை பாஸ்.

        அதாவது,

        முஸ்லிம்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பதும் பொதுபுத்தி – அந்த பொதுபுத்தியை எதிர்ப்பதும் பொதுபுத்தி.

        முசுலீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பது பொதுபுத்தி – அப்படிப் பிடித்துக் கொடுப்பது கட்டாயமா என்று கேட்பதும் பொதுபுத்தி

        இது தான் எங்கள் தியாகு சொல்லவருவதன் பொழிப்புரை.

        பொதுப்புத்திக்கே புத்திபுகட்டிய வெற்றித்திருமகனார் தியாகுருவே…. நீங்க எங்கியோ போயிட்டீங்க.

        • //முசுலீம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பது பொதுபுத்தி – அப்படிப் பிடித்துக் கொடுப்பது கட்டாயமா என்று கேட்பதும் பொதுபுத்தி//

          தீவிரவாதம் செய்யும் இஸ்லாமியர்களை காட்டி கொடுப்பது தவறு என்பது
          தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களின் பொதுபுத்தி அதை ஆதரிக்கிறதா வினவு

          • மிஸ்டர் தியாகு,

            எது தீவிரவாதம் என லெனின் சொல்லியிருக்கிறார்.

            • மிஸ்டர் வசீகரன் ,

              லெனின் கீழ்கண்ட தாக்குதல்களை ஆதரிப்பாரா

              Main article: List of Islamic terrorist attacks
              The outer skin of World Trade Center Tower Two that remained standing after an Islamist terrorist attack orchestrated by Al-Qaeda.

              18 April 1983 – 1983 United States embassy bombing 63 killed, 120 wounded.
              23 October 1983 – 1983 Beirut barracks bombing 305 killed, 75 wounded.
              26 February 1993 – World Trade Center bombing, New York City. Six killed.
              13 March 1993 – 1993 Bombay bombings. Mumbai, India. 250 dead, 700 injured.
              28 July 1994 – Buenos Aires, Argentina. Vehicle suicide bombing attack against AMIA building, the local Jewish community representation. 85 dead, more than 300 injured.
              24 December 1994 – Air France Flight 8969 hijacking in Algiers by three members of Armed Islamic Group of Algeria and another terrorist. Seven killed, including the hijackers.
              25 June 1996 – Khobar Towers bombing, 20 killed, 372 wounded.
              17 November 1997 – Luxor attack, six terrorists attack tourists at Egypts famous Luxor Ruins. 68 foreign tourists killed.
              14 February 1998 – Bombing in Coimbatore, Tamil Nadu, India. 13 bombs explode within a 12 km radius. 46 killed and over 200 injured.
              7 August 1998 – 1998 United States embassy bombings in Tanzania and Kenya. 224 dead. 4000+ injured.
              4 September 1999 – A series of bombing attacks in several cities of Russia, nearly 300 killed.
              12 October 2000 – Attack on the USS Cole in the Yemeni port of Aden.
              11 September 2001 – Four planes hijacked and crashed into World Trade Center and The Pentagon by 19 hijackers. Nearly 3000 dead.[172]
              13 December 2001 – Suicide attack on Indian parliament in New Delhi by Pakistan-based Islamist terrorist organizations, Jaish-E-Mohammad and Lashkar-e-Toiba. Aimed at eliminating the top leadership of India and causing anarchy in the country. 7 dead, 12 injured.
              27 March 2002 – Suicide bomb attack on a Passover Seder in a Hotel in Netanya, Israel. 30 dead, 133 injured.
              30 March 2002 and 24 November 2002 – Attacks on the Hindu Raghunath temple, India. Total 25 dead.
              24 September 2002 – Machine gun attack on Hindu temple in Ahmedabad, India. 31 dead, 86 injured.[173][174]
              12 October 2002 – Bombing in Bali nightclub. 202 killed, 300 injured.[175]
              16 May 2003 – Casablanca Attacks – Four simultaneous attacks in Casablanca killing 33 civilians (mostly Moroccans) carried by Salafia Jihadia.
              11 March 2004 – Multiple bombings on trains near Madrid, Spain. 191 killed, 1460 injured (alleged link to Al-Qaeda).
              1 September 2004 – Beslan school hostage crisis, approximately 344 civilians including 186 children killed.[176][177]
              2 November 2004 – The murder of Theo van Gogh (film director) by Amsterdam-born jihadist Mohammed Bouyeri.[178]
              5 July 2005 – Attack at the Hindu Ram temple at Ayodhya, India; one of the most holy sites of Hinduism. 6 dead.
              7 July 2005 – Multiple bombings in London Underground. 53 killed by four suicide bombers. Nearly 700 injured.
              23 July 2005 – Bomb attacks at Sharm el-Sheikh, an Egyptian resort city, at least 64 people killed.
              29 October 2005 – 29 October 2005 Delhi bombings, India. Over 60 killed and over 180 injured in a series of three attacks in crowded markets and a bus, just 2 days before the Diwali festival.[179]
              9 November 2005 – 2005 Amman bombings. a series of coordinated suicide attacks on hotels in Amman, Jordan. Over 60 killed and 115 injured.[180][181] Four attackers including a husband and wife team were involved.[182]
              7 March 2006 – 2006 Varanasi bombings, India. A series of attacks in the Sankath Mochan Hanuman temple and Cantonment Railway Station in the Hindu holy city of Varanasi. 28 killed and over 100 injured.[183]
              11 July 2006 – 11 July 2006 Mumbai train bombings, Mumbai, India; a series of seven bomb blasts that took place over a period of 11 minutes on the Suburban Railway in Mumbai. 209 killed and over 700 injured.
              14 August 2007 – Qahtaniya bombings: Four suicide vehicle bombers massacred nearly 800 members of northern Iraq’s Yazidi sect in the deadliest Iraq war’s attack to date.
              26 July 2008 – 2008 Ahmedabad bombings, India. Islamic terrorists detonate at least 21 explosive devices in the heart of this industrial capital, leaving at least 56 dead and 200 injured. A Muslim group calling itself the Indian Mujahideen claims responsibility. Indian authorities believe that extremists with ties to Pakistan and/or Bangladesh are likely responsible and are intent on inciting communal violence.[184] Investigation by Indian police led to the eventual arrest of a number of terrorists suspected of carrying out the blasts, most of whom belong to a well-known terrorist group, the Students Islamic Movement of India.[185]
              13 September 2008 – Bombing series in Delhi, India. Pakistani extremist groups plant bombs at several places including India Gate, out of which the ones at Karol Bagh, Connaught Place and Greater Kailash explode leaving around 30 people dead and 130 injured, followed by another attack two weeks later at the congested Mehrauli area, leaving 3 people dead.
              26 November 2008 – Muslim extremists kill at least 174 people and wound numerous others in a series of coordinated attacks on India’s largest city and financial capital, Mumbai. The government of India blamed Pakistan based militant group Lashkar-e-Taiba and stated that the terrorists killed/caught were citizens of Pakistan, a claim which the Pakistani government first refused but then accepted when given proof. Ajmal Kasab, one of the terrorists, was caught alive.[186][187]
              25 October 2009. Baghdad, Iraq. During a terrorist attack, two bomber vehicles detonated in the Green Zone, killing at least 155 people and injuring 520.
              28 October 2009 – Peshawar, Pakistan. A car bomb is detonated in a woman exclusive shopping district, and over 110 killed and over 200 injured.
              3 December 2009 – Mogadishu, Somalia. A male suicide bomber disguised as a woman detonates in a hotel meeting hall. The hotel was hosting a graduation ceremony for local medical students when the blast went off, killing four government ministers as well as other civilians.[188]
              1 January 2010 – Lakki Marwat, Pakistan. A suicide car bomber drove his explosive-laden vehicle into a volleyball pitch as people gathered to watch a match killing more than 100 people.[189]
              1 May 2010 – New York, New York, USA. Faisal Shahzad, an Islamic Pakistani American who received U.S. citizenship in December 2009, attempted to detonate a car bomb in Times Square working with the Pakistani Taliban or Tehrik-i-Taliban Pakistan.
              13 May 2011 – Tehrik-i-Taliban Pakistan claimed attacks on two mosques simultaneously belonging to the Ahmadiyya Muslim Community, killing nearly 100 and injuring many others.[190]
              13 July 2011 – Three bombs exploded at different locations in Mumbai, perpetrated by Indian Mujahideen.

              • அல்லது இதை ஆதரிப்பாரா லெனின்

                //On 7 October, Naxalites attempted derailment of Triveni express, a train of Singrauli-Bareilly route, by removing 4 fishplates and 42 sleeper clips.[62][63]//

                • மிஸ்டர் தியாகு,

                  இந்த லிஸ்டின் மூலம் தாங்கள் கூற வருவதென்ன?

      • // குவாண்டனாமோ பேயிலும், இந்தியச் சிறைகளிலும் முசுலீம் என்கிற ஒரே காரணத்துக்காக எந்தக் குற்றமும் செய்யாமல் வருடக்கணக்கில் வாடும் அப்பாவி முசுலீம்களின் நியாயம் யாரால் தீர்க்கப்படும்? //

        குவாண்டனாமோ பேயில் உள்ள முஸ்லீம்கள் பலரை பாகிஸ்தான் பிடித்து ஏற்றுமதி செய்தது. அமெரிக்கா தன் நாட்டுக்குள் இச்சிறையை வைக்க சட்டம் இடம் கொடுக்காது என்பதால், கியூபாவில் உள்ள தன் குவாண்டனாமோ பே கடற்படைத்தளத்தில் கொண்டுபோய் வைத்தது. இது லீஸ் ஒப்பந்த்தத்துக்கு எதிரான சட்டவிரோத நடவடிக்கை என்று எச்சரிக்க கியூபாவுக்கும் ஆர்வம் இல்லை.

        அப்பாவி உய்குர் முஸ்லீகள் சீனச் சிறைகளில் வாழும் தகவல்களை கட்டுரை தவிர்த்துவிட்டது இந்திய ’பார்ப்பன பாசிச’ ஊடகங்களின் அதே வகையான செயல்பாடு :

        http://indigenouspeoplesissues.com/index.php?option=com_content&view=article&id=13793:china-life-in-prison-for-uyghur-asylum-seekers&catid=31&Itemid=64.

        இந்திய ஊடகங்கள் பார்ப்பன பாசிஸ்டுகளாகவா அப்பாவி முஸ்லீம்களின் சிறைவாசத்தை புறக்கணிக்கின்றன..? சாருக் கான் மேட்டரில் கிடைக்கும் விறுவிறுப்பும், அப்பாவி முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கப் போய், உள்ள ரேட்டிங்கும் போய்விடுமோ என்ற வியாபாரப் புத்தியும் தானே காரணம்..

      • //இராக் போரை கண்டிப்பார்கள் ஆனால் இராக்குக்கு போய் சண்டை போடமாட்டார்கள்//

        உள் நாட்டிலேயே ஒரு பொம்மை துப்பாக்கி கூட தூக்காதவர்கள் நீங்கள் எங்க ஈராக்குக்கு போய் என்னத்த செய்வது “நானும் ரவுடிதான்னு “ ஜீப்பில ஏறினா மட்டும் போதுமா பாஸ்

        //நித்தி ஆதினமாவதை ஆதரிப்பார்கள் ஆனால் தானே ஆதினமாகமாட்டார்கள்//

        நித்தி ஆதினமாவதை மட்டுமல்ல ஆறுமுக சாமி தமிழில் பாடிவிட்டால் சைவ சித்தாத்தம் என்பது ஜாதியை கடந்த நிலைத்து நிற்கும் என்பதே உங்கள் கண்டுபிடிப்புதானே

        //தமிழ்நாட்டில் இருந்து கொண்டு காஷ்மீரத்து அடக்குமுறையை எதிர்பார்க்ள் ஆனால் காஷ்மீருக்கு போய் தமிழ்நாட்டு பேயாட்சியை எதிர்க்கமாட்டார்கள்//

        எங்கிருந்தாலும் கிணத்துக்குள் இருக்கும் தவளையை போல கத்தும் உங்களை ஜீப்பில் ஏற்ற அவங்க தயாராக இல்லையே பாஸ்

        நீங்கவேண்டா நாங்க பிரண்சண்டாவுடன் ஈக்குவளா பேசிட்டு இருந்தோம்லன்னு சொல்லலாம் ஆனா நீங்க ரவுடின்னு யாரும் ஏத்துகலையே பாஸ் என்ன பரிதாபகரமான நிலமை பாருங்கள்

  17. தியாகுருவே,

    //நித்தி ஆதினமாவதை மட்டுமல்ல ஆறுமுக சாமி தமிழில் பாடிவிட்டால் சைவ சித்தாத்தம் என்பது ஜாதியை கடந்த நிலைத்து நிற்கும் என்பதே உங்கள் கண்டுபிடிப்புதானே //

    உங்கள் மூளையின் செயல்திறனுக்கு இது ஒரு நல்ல எடுத்துக் காட்டு.

    மிஸ்டர் குயாதி, உங்களுக்கு ஒரு எச்சரிக்கை.எங்கள் குருநாதர் முடிவு செய்து விட்டார் நீங்கள் சைவ சிதாந்த ஆதரவாளர் என்று. சீக்கிரம் ஆகி விடுங்கள் இல்லை ஆக்கப்படுவீர்கள். அப்படி நீங்கள் சைவ சித்தாந்த ஆதரவு நிலை எடுத்திருக்காவிட்டாலும் – இனிமேலும் எடுக்காவிட்டாலும் நீங்கள் தான் பொறுப்பு.

    ஏனெனில், எங்கள் குருநாதர் தியாகுரு குசு விட்டால் அதற்கு நீங்கள் மொச்சைப் பருப்பு சாப்பிட்டது தான் காரணம். இல்லாவிட்டால் கூட மொச்சை சாப்பிடாமல் விட்டது உங்கள் குற்றம் தான்

    யாரையும் ரவுடி என்று நியமிக்கும் அண்டர்வேர்ல்டு தாதாவான தியாகுரு சாதாரணப்பட்டவர் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. கம்யூனிஸ்டு ஓர்க்கர் ப்ளாட்பார்ம் கட்சியின் நாட்டுத் துப்பாக்கி தயாரிப்புத் தொழிற்சாலையின் போர்மேனாக திருப்பூர் தியாகு இருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள்.

    தியாகுருவே.. நீங்க எங்கெங்கேயோ போய் இப்ப துருக்கிக்கு பக்த்துல நிக்கறீங்க. அப்படியே இன்னும் கொஞ்சம் போய் அமெரிக்காவை அடைஞ்சி ஏகாதிபத்தியத்தை வீழ்த்தி விட்டு திரும்ப வாழ்த்துக்கள்.

    நீங்க நடத்துங்க பாஸு.

    • //நீங்க நடத்துங்க பாஸு.
      //

      என்ன பாஸ் நீங்க இப்படி சொல்லிட்டு போயிட்டீங்க வெக்கப்படாம வாங்க பாஸ்

      • குருநாதா, தலையிருக்கும் போது வால் ஆடக் கூடாது. நீங்க நடத்துங்க. நான் அப்பப்ப வந்து உங்க திருக்குரள்களுக்கு பொழிப்புரை மட்டும் எழுதிச் செல்கிறேன் 🙂

  18. It is USA security policy and they followed the protocols why so much hype on it. USA doesn’t care whether its Khan or Kumar if they suspect they have right to inspect and detain . If you don’t like then don’t go there

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க