Thursday, October 21, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் இந்து - முஸ்லிம் - தமிழ் கூட்டணியில் 5 வயது சிறுமி நரபலி!

இந்து – முஸ்லிம் – தமிழ் கூட்டணியில் 5 வயது சிறுமி நரபலி!

-

நரபலி சிறுமி ராஜலட்சுமி
கொல்லப்பட்ட சிறுமி ராஜலட்சுமி

அலகு குத்துவதும், கங்கு மிதிப்பதும், காவடி தூக்குவதும் என்றெல்லாம் இருக்கும் மூடநம்பிக்கைகள் தன்னையே வருத்திக் கொள்ளும் வரை தொலையட்டும் என்று விடலாம். ஆனால் இந்த மூடநம்பிக்கைகள் குடி கொண்டிருக்கும் அடித்தளமெது? குறிப்பிட்ட சடங்கையோ, பரிகாரத்தையோ, வலி நேர்த்திக்கடனையோ செய்து விட்டால் சம்பந்தப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்து விடுமென்று மக்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு எந்த மதத்தவரும் விதிவிலக்கல்ல. ஆனால் அந்தப் பரிகாரம் ஒரு குழந்தையை நரபலி கொடுத்துத்தான் தீரும் என்றால்? அதையும் செய்திருக்கிறார்கள் சில கொடியவர்கள். இந்தக் கொடூரத்தில் இந்து, முசுலீம் என இரு மதங்களோடு தமிழ் உணர்ச்சியும் கலந்திருக்கிறது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கச்சகட்டி கிராமத்தைச் சேர்ந்த தொத்தன் கூலி வேலை செய்து பிழைக்கும் ஒரு தாழ்த்தப்பட்டவர். இவரது 5 வயது மகள் ராஜலட்சுமி கடந்த 2011 ஜனவரி 1-ம் தேதியன்று காணாமல் போகிறாள். எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அதே ஊரைச் சேர்ந்த வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அவள் கண்டெடுக்கப்படுகிறாள். சிறுமியின் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் இது நரபலியாக இருக்கலாமென்று போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதலில் மலபார் என்ற கருப்பு மீது சந்தேகமேற்பட்டு கைது செய்யப்படுகிறார். அவரைத் தொடர்ந்து கருப்புவின் தந்தை மகாமுனியும்(65) கைது செய்யப்பட்டார். அவரோ உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் இறந்து போகிறார். நாக்கை அறுத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் சேர்ந்த கருப்புவும் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இது கொலையா, தற்கொலையா, தற்கொலைக்கு நெருக்கடி கொடுத்த நிர்ப்பந்தமா என்பதெல்லாம் தெரிய வருமா என்பது சந்தேகம்தான்.

சிறுமியின் கொலை கண்டிப்பாக நரபலிதான் என்பதோடு தேடப்படும் நபர்களின் மர்ம மரணம் காரணமாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்ட 16 மாதங்களுக்குப் பிறகு தற்போது கொலையாளிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சிறுமி அணிந்திருந்த கொலுசு வாடிப்பட்டி அடகுக் கடையில் இருந்ததை வைத்து அதைக் கொடுத்த முருகேசன் என்பவரை பிடித்து கைது செய்த போது இந்த அதிர்ச்சியூட்டும் நரபலியின் முழுக்கதையும் தெரிய வந்திருக்கிறது.

முருகேசன் கொடுத்த தகவலின் படி கச்சகட்டியைச் சேர்ந்த பொன்னுசாமி மற்றும் அயூப்கான் இருவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த நரபலியின் முதன்மைக் குற்றவாளியான அயூப்கான் திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக இருப்பதோடு முன்னர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்திருக்கிறார். தி.மு.கவில் பொதுக்குழு உறுப்பினராக இருப்பவரெல்லாம் காமா சோமா நபர்களாக இருக்கமாட்டார்கள் என்பது உடன்பிறப்புகளின் நம்பிக்கை. நாமும் நம்புவோம். அதன்படி அயூப்கானுக்கு இந்தி எதிர்ப்பு போராட்டம், திராவிட இயக்க வரலாறு எல்லாம் கொஞ்சம் தெரிந்திருக்குமென்பதால் இவரது தமிழ் உணர்வை குறைத்து மதிப்பிட முடியாது.

அடுத்து ஐந்து வேளையும் தவறாமல் அல்லாவைத் தொழும் முன்னுதாரணமான இசுலாமியனாகவும் இருந்திருக்கிறார். எனினும் அல்லா உணர்ச்சியையும், தமிழ் உணர்ச்சியையும் கட்டுப்படுத்துகின்ற ஒரு பெரிய உணர்ச்சி ஒன்று உண்டு. வருமானத்தைக் கொடுக்கும் பொருளாதர உணர்ச்சிதான் இவரது வாழ்வின் அடிப்படையான உணர்ச்சி. சுயநிதிக் கல்லூரி முதலாளிகளாக இருக்கும் ஏனைய ஒட்டுக்கட்சி பிரமுகர்களைப் போல அயூப்கானும் மதுரை எல்லீசு நகரில் ஆசிரியை பயிற்சிப் பள்ளி நடத்தி வந்த ஒரு முதலாளி. பொறியியில் கல்லூரி முதலாளிகளின் வருமானம் இலட்சங்களில் இருக்குமென்றால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதலாளிகளின் வருமானம் ஆயிரங்களில் இருக்கும். கூடவே ஊராட்சி பதவி, கட்சிப் பதவி மூலம் வருமானங்கள் தனி.

நாளொரு மேனியும் வளர்ந்து வந்த கல்வித் தொழிலுக்கு சொந்தமாக கட்டிடம் வேண்டுமென்று தனிச்சியம் பகுதியில் கட்டிடம் கட்ட ஆரம்பித்தார் அயூப்கான். அதன் பெயர் ராயல் மகளிர் கல்வியியல் கல்லூரியாம். இருப்பினும் அயூப்கான் நினைத்த வேகத்தில் கட்டிடம் எழவில்லை. வழக்கமாக கட்டிடம் கட்டுவதற்கு முன்னும் கட்டிய பின்னும் கோழியை பலி கொடுத்து அதன் ரத்தத்தை தெளித்து கட்டிடம் இடியாமல் இருப்பதற்கு கொத்தனார் ஒரு சடங்கு செய்வார். ஆனால் அயூப்கானுக்கு கோழி போதவில்லை. ஆகவே விரைவில் கட்டிடம் முடிக்கப்பட்டு தனது கல்வி வியாபரம் கொடிகட்டிப் பறக்க வேண்டுமென்று நினைத்ததால் ஒரு குழந்தையை நரபலி கொடுக்க முடிவு செய்தார்.

கோழி என்றால் நூறு இருநூறில் முடிந்து விடும். ஆனால் கைமேல் பலன் தரும் நம்பிக்கை என்றாலும்  குழந்தைக்கு எங்கு போவது? இதனால் கச்சைக் கட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பு, பொன்னுசாமி, முருகேசன் ஆகிய மூவரையும் தொடர்பு கொண்டு தனது கொடூர ஆசையை தெரிவித்து எத்தனை இலட்சம் செலவானாலும் தருகிறேன் என்று பேசி முடிக்கிறார். நரபலிக்காக மொத்தம் ஆறு இலட்ச ரூபாய் ரேட் பேசுகிறார், அயூப்கான்.

ஆறு இலட்சமா என்று வாய்பிளந்த அந்த கும்பல் உடனே காரியத்தில் இறங்கியது. அன்றலர்ந்த மலர் போல விளையாடிக் கொண்டிருந்த குழந்தை இராஜலட்சுமியை கடத்தி கருப்பின் வீட்டில் வைத்தனர். பின்னர் அதிகாலை 2 மணியளவில் சிறுமியின்  கழுத்தை துடிக்கத் துடிக்க அறுத்து இரத்தத்தை தூக்கு வாளியில் பிடித்துக் கொண்டனர். சிறுமி இறந்து போகிறாள். பின்னர் உடலை வீரணன் என்பவரின் மாட்டுத் தொழுவத்தில் போட்டுவிடுகின்றனர். கருப்புவின் தந்தை மகாமுனி மட்டும் இரத்தம் அடங்கிய தூக்குவாளியை அயூப்கானை சந்தித்து கொடுக்கிறார். அல்லாவைத் தொழும் அயூப்கானும் கல்லூரிக் கட்டிடத்தை சுற்றி அந்த ரத்தத்தை தெளிக்கிறார். பின்னர் அந்த மூவர் கும்பல் அயூப்கானிடம் ஆறு இலட்ச ரூபாயை பெற்றுக் கொள்கிறது.

இவையெல்லாம் முதலில் கைது செய்யப்பட்ட முருகேசன் மூலம் படிப்படியாக மற்றவர்கள் பிடிபட்டு போலிசிடம் தெரிவித்த தகவல்கள். அதன் பின்னரே அயூப்கான் கைது செய்யப்படுகிறார். இப்போது மகாமுனி, கருப்பு ஆகிய இருவரின் மர்ம மரணங்கள் எப்படி நடந்திருக்குமென்பதை நாம் யூகிக்கலாம்.

நரபலி

மனித குல வரலாற்றின் ஆரம்பத்தில் புராதான இனக்குழு சமூகமாக இருந்த மனிதர்கள் பின்னர் அடிமையுடமை சமூகத்தில் நுழையும் போது நரபலியும் தோன்றுகிறது. இயற்கை சீற்றங்கள், பருவ கால மாற்றங்கள், இனக்குழுச் சண்டைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள வாய்ப்பில்லாத மனித சமூகம் அவற்றை நிறுத்த வேண்டி இனக்குழு கடவுளர்களுக்கு பலியிடலை செய்கிறது. ஆரம்பத்தில் விலங்குகள் பிறகு மனிதர்கள் என்று அது மாறுகிறது.

பார்ப்பனியத்தின் வரலாற்றிலும் விலங்குகளைப் பலியிடும் சடங்குகள் தீவிரமாக இருந்தது. கூடவே மனிதர்களை பலியிடுவதும் நடக்கிறது. மகாபாரதத்தில் வரும் அரவான் பலி அதற்கோர் சான்று. இந்த வழக்கம் இருபதாம் நூற்றாண்டு வரை பரவலாகவே இந்தியா முழுவதும் இருந்திருக்கிறது. அன்றைக்கு இயற்கைக்கு அஞ்சிய மனிதகுலம் செய்த நரபலி, இன்று இயற்கையை மனிதன் கட்டுப்படுத்தும் காலத்திலும் தொடர்வதற்கு காரணமென்ன?

இன்னும் பின்தங்கிய நிலவுடமைச் சமூகங்களாக இருக்கும் நாடுகளில் இந்த வழக்கம் நீடிக்கிறது. குறிப்பாக ஆப்ரிக்கா, இந்தியா இரண்டிலும் இத்தகைய செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணமிருக்கின்றன. வாழ்க்கைப் பிரச்சினைகளை வெளிப்படையான ஜனநாயத்தில் தீர்த்துக் கொள்ளும் சூழலில்லாத நிலையில் அந்த இடத்தை மதமும், மூடநம்பிக்கைகளும் கைப்பற்றிக் கொள்கின்றன. என்னதான் தொழில் நுட்ப புரட்சியும், நவநாகரீகமும் வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன இந்து மதம் உருவாக்கியிருக்கும் மூடநம்பிக்கைகள் கருவறை முதல் கல்லரை வரை செல்வாக்கு செலுத்துகின்றது.

இதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமில்லை. பார்ப்பனியத்தின் அடிப்படை விதிகளை விடாத பல முதலாளிகள் இந்தியாவில் உண்டு. மேலும் குறுக்கு வழியில் அதிக பணம் சேர்க்க வாய்ப்புகளை வழங்கும் இந்த மறுகாலனியாக்க சூழ்நிலையில் அந்த மூடநம்பிக்கைகள் முன்னிலும் வலுவாக பின்பற்றப்படுகின்றன. எனில் இந்த அடிமை சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு பெரியார் செய்த பணிகளை இன்னும் எத்தனை வீச்சில் செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் பெரியார் இயக்க வழியில் வந்த ஒரு உடன்பிறப்பே இத்தகைய கொடூர செயலை செய்திருக்கிறது என்பதிலிருந்து திராவிட இயக்கத்தின் தோல்வியையும் ஒத்துக் கொள்ள வேண்டும்.

மதுரை மாவட்ட திமுக செயலாளர் பி.மூர்த்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி அயூப்கான் முற்றிலும் தி.மு.கவிலிருந்து நீக்கப்படவில்லை. இது பொய்க்குற்றச்சாட்டு என்று அயூப்கான் மறுத்திருப்பதால் அவர் சட்டரீதியாக விடுதலையாகும் வரை தி.மு.க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதில்லை, அவரை அன்றாட நடவடிக்கைகளிலிருந்து நீக்கி வைப்பது என்பதுதான் தி.மு.கவின் முடிவு.

ஒன்றரையாண்டுகளாக நடந்து வரும் வழக்கு, கைது செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும் போது அயூப்கானின் பங்கையும் குற்றத்தின் முகாந்திரத்தையும் மேலோட்டமாகக்கூட உணரலாம். ஆனால் ஊரேல்லாம் சொத்தை கைப்பற்றிய தி.மு.க பிரமுகர்கள் தற்போது கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சொத்துக்கள் கைவிட்டுப் போகக்கூடாது என்று அவர்கள் ஏதாவது சடங்கு, பரிகாரங்களை கண்டிப்பாக செய்வார்கள். அதன்படி அந்த சடங்கை கொஞ்சம் வரம்பு மீறினார் என்றாலும் அயூப்கான் செய்திருப்பதை உடன்பிறப்புகள் அதிர்ச்சியாகப் பார்க்கவில்லை.

நரபலிதான் என்று முடிவான பிறகு அயூப்கான் தனது வீட்டு இளைஞர்களையோ, பெண்களையோ, குழந்தைகளையோ நினைக்கவில்லை. சொந்த பந்தங்களை பார்க்காத அந்தக் கால நரபலி இன்று அப்படி பார்த்து சம்பந்தமில்லாத நபரை அதுவும் குழந்தையை கொல்லலாம் என்று முன்னேறியிருப்பதுதான் பரிணாம வளர்ச்சி போலும். அதிலும் ஒரு தலித் சிறுமி என்றால் கேட்பார் நாதியில்லை அல்லவா?

ஊரை விட்டு விலக்கி வைக்கப்ப்ட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ரத்தம், ஊரை கொள்ளையடித்து சேர்த்த சொத்தை காப்பாற்றுவதற்கு மட்டும் வேண்டும். ஒரு பச்சைப் பிஞ்சைக் கொன்று தனது கல்லூரியை இலாபகரமாக நடத்த வேண்டுமென்றால் எவ்வளவு வெறி வேண்டும்? இத்தகைய பிரமுகர்கள்தான் அரசியலிலும், ஊராட்சி பதவிகளிலும், பள்ளி – கல்லூரிகளை நடத்தும் தொழிலும் செல்வாக்கு செலுத்துகிறார்கள் என்றால் இன்னும் என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள்? அந்த துணிச்சலுக்கு மத நம்பிக்கை இருக்க வேண்டுமென்பதில்லை. அதைத்தானே போபால் படுகொலையில் பார்த்தோம்.

ஆரம்பத்தில் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பிற்கு மாற்று என்று தோன்றிய இசுலாமும், கிறித்தவமும் கூட இறுதியில் இந்து மதத்தின் செல்வாக்கில் கரைந்து விட்டிருக்கின்றன. பார்ப்பனியத்திடம் சரணடைந்த இசுலாம் என்ற கட்டுரைக்கு இணையத்தில் இருக்கும் இசுலாமிய ‘அறிவாளிகள்’ பொங்கினார்கள். இதற்கு மதத்தை குற்றம் சாட்டாதீர்கள் என்ற நழுவல் வேறு. இவர்களெல்லாம் இணையத்தில் பாதுகாப்பாக நன்னெறி மார்க்கத்தை போதித்து தமக்குத்தாமே சுய இன்பம் காணும் சுயநலவாதிகள். நேரிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் காரனை பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே சிறுநீர் கழிக்கும் கோழைகள். கிறித்தவர்களை வம்புக்கிழுத்து பைபிள் ஒரு ஆபாச நூல் என்று சவால் விடுவார்கள். ஆனால் இந்து புராணங்கள் ஒரு ஆபாசக் குப்பை என்று ஆர்.எஸ்.எஸ் காரனை நேருக்கு நேர் விவாதத்திற்கு அழைக்க வக்கற்றவர்கள். அப்படி அழைத்தால் புரட்சித் தலைவியின் நெருப்பு இவர்களை சுட்டெரிக்கும் என்பதை தெரிந்தவர்கள்.

ஒருவேளை இந்து மதத்தை அம்பலப்படுத்தி நாம் அப்படி எழுதினாலும் இது மதநம்பிக்கையை புண்படுத்துகிறது என்று ஓடிவருவார்கள். இறுதியில் இவர்கள் மதநம்பிக்கை கொண்ட அயூப்கான் அதுவும் போறாது என்று ஒரு நரபலி செய்திருக்கிறாரே இதை எப்படி நியாயப்படுத்த முடியும்? அமெரிக்காவை அண்டிப் பிழைக்கும் சவுதி ஷேக்குகள் உலக இசுலாத்தின் காவலர்கள் என்றால் பார்ப்பனியத்தின் நரபலியை பின்பற்றும் அயூப்கான்கள் போன்றோர்தான் உள்ளூர் இசுலாத்தின் பாதுகாவலர்கள். அமெரிக்காவிடமும், இந்து மதவெறியிடமும் சிக்கிக் கொண்டு துன்பப்படும் இசுலாமிய மக்கள் இந்தக் காவலர்களிடம் இருந்தும் விடுதலை பெற வேண்டும்.

தொன்மங்கள், நம்பிக்கைகள், படிமங்கள் வாயிலாக தொன்று தொட்டு வரும் இந்து ஞான மரபின் வேரை யாரும் அழிக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் ஜெயமோகன்கள் இந்த நரபலியின் தொடரும் தொன்மம் குறித்து விளக்கம் அளிப்பார்களா? எப்படி விளக்கினாலும் இந்த நரபலி இந்து ஞானமரபின் நீட்சிதான். அந்த நீட்சி இந்திய சமூகத்தை சின்னாபின்னாமாக்கியிருக்கும் யதார்த்தத்தை என்னதான் தரிசனம், அகம், உள்ளொளி என்று கீறிட்டாலும் யாரும் மறைக்க முடியாது.

இராஜலட்சுமி எனும் அந்த ஐந்து வயது தாழ்த்தப்பட்ட சிறுமி இன்று இல்லை. அவளைக் கொன்ற கொடியவர்கள் தண்டிக்கபடுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஊரறியக் கொன்ற ரன்வீர் சேனா கொலையாளிகளையே விடுவித்த நாடில்லையா? ஆனால் இந்து, இசுலாம், தி.மு.க, தமிழுணர்வு என்று சொல்லிக் கொள்பவர்களெல்லாம் தங்களது அகத்தை கொஞ்சம் கீறி சுய விமரிசனம் செய்து கொள்ளட்டும். இராஜலெட்சுமி சிந்திய இரத்தத்தை அப்படியாவது வீணாகாமல் காட்டுங்கள். பார்க்கலாம்.

________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 1. அய்யூப் கான் இந்த நரபலியை செய்தது உண்மைதான் எனும் பட்சத்தில் இவனை தூக்கில தொங்க விட வேண்டும். இஸ்லாம் இதனை போதிக்கவில்லை. இந்து மத நம்பிக்கையில் ஈர்க்கப்பட்டு செய்திருக்கலாம்.

  எங்கள் ஊரிலும் சில கட்டிட காண்டராக்டர்கள் முஸ்லிம் வீடுகளைக் கட்டும் போது கோழி போன்றவைகளைக் கொண்டு காவு கொடுப்பார்கள். அப்பொழுதுதான் விபத்துகள் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கையில். பல முஸ்லிம்கள் இதனை தடுத்ததை நான் பார்த்துள்ளேன்.

  • ஹ்ம்ம்.. \\இந்து மத நம்பிக்கையில் ஈர்க்கப்பட்டு செய்திருக்கலாம்\\

   அப்படி என்றால் ஆப்கானிஸ்தானில் மீடியாகாரர்களையும் மருத்துவர்களையும் லைவாக தலையை கொய்து கொல்கிறார்களே… அது எல்லாம் எதை பார்த்து?

  • //அடுத்து ஐந்து வேளையும் தவறாமல் அல்லாவைத் தொழும் முன்னுதாரணமான இசுலாமியனாகவும் இருந்திருக்கிறார்//

 2. இப்பொழுது மட்டும் எங்கு இருந்து வந்தது ஹிந்து… பார்க்க அவர்கள் எல்லாம் கருப்பாக இருக்கிறார்கள். அப்படி என்றால் அவர்கள் திராவிடர்கள் இல்லையா?

  அது என்னமோ தெரியல.. இவங்களுக்கு தப்பு செஞ்சா மட்டும் ஹிந்து.. நல்லது செஞ்சா… அவன் தமிழன்…

  இந்த கொலையை ஹிந்துகள் என்று சொல்படுபவர்கள் செய்தது அந்த முஸ்லீம்காரன் கொடுத்த பணத்திற்காக அதாவது ஒரு கூலிப்படை..

 3. அல்லாவைத் தொழும் அயூப்கானும் !!!..

  அல்லாவின் முடிவு —–மரனம் தன் பதில் ———-

 4. // தொன்மங்கள், நம்பிக்கைகள், படிமங்கள் வாயிலாக தொன்று தொட்டு வரும் இந்து ஞான மரபின் வேரை யாரும் அழிக்க முடியாது என்று பீற்றிக் கொள்ளும் ஜெயமோகன்கள் இந்த நரபலியின் தொடரும் தொன்மம் குறித்து விளக்கம் அளிப்பார்களா? எப்படி விளக்கினாலும் இந்த நரபலி இந்து ஞானமரபின் நீட்சிதான். அந்த நீட்சி இந்திய சமூகத்தை சின்னாபின்னாமாக்கியிருக்கும் யதார்த்தத்தை என்னதான் தரிசனம், அகம், உள்ளொளி என்று கீறிட்டாலும் யாரும் மறைக்க முடியாது. //

  பார்ப்பனியம், ஜெயமோகன், இந்து ஞான மரபு என்று இழுத்துப்போட்டு வடிவேலு பக்கதிலிருப்பவனை அடிப்பது போல் அடித்து துவைக்கிறீர்கள்.. நரபலி கொடுக்கும் காபாலிகம் போன்ற ’இந்து ஞான (அஞ்ஞான) மரபுகளை’த் தவிர்த்து, தாண்டி, 6 வகை சமயங்களை ஆதிசங்கரப் பார்ப்பனர் நிறுவி 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது ஓய்.. விட்டால் பார்ப்பான் தான் நரபலி கொடுத்தான் என்றும் சொல்வீர் போலிருக்கிறதே..!!

 5. The Prophet of Islam peace be upon him said: Whoever goes to a fortune teller or a diviner and believes him, has, in fact, disbelieved in what has been revealed to Muhammad.

  Thus Islam condemns magic- even what is called the horoscope or luck or reading one’s palm to foretell the future is also prohibited in Islam. This is based on the belief that no one knows the future or the unseen except God almighty. That is why the Quran asserts that even Muhammad does not know the unseen.

 6. அய்யா சுவனப் பிரியன் அவர்களே

  வினவு தங்களுக்கு அரிப்பு எடுக்கும் போதெல்லாம் இப்படி இஸ்லாத்தைச் சொரிந்து தங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளும். இவர்களிடம் நரபலி போன்றவைகளை இஸ்லாம் காட்டித் தர வில்லை என்று கூறுவதெல்லாம் மண்டையில் உரைக்காது. உங்கள் வேலையைப் பாருங்கள்.

  • அய்யா ரஹுமான் அவர்களே…
   மண்டையில உரைக்கிறது , எல்லாம் இருக்கட்டும் ..
   இஸ்லாமிய மதத்துல வரதட்சனை வாங்கக் கூடாதே .. எத்தனை இஸ்லாமியன் இந்தியாவுல வரதட்சனை வாங்காம கல்யாணம் பண்றான் ?..

   அல்லா மேல ஆணையா பதில் சொல்லுங்க பாப்போம் ..

 7. // எப்படி விளக்கினாலும் இந்த நரபலி இந்து ஞானமரபின் நீட்சிதான். //

  ஆப்ரகாம் நபி, இஸ்மாயில் நபியை அல்லாஹ்வுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்கவா கத்தியை எடுத்து வெட்டப்போனார்..?!!

 8. வணக்கம். மிகுந்த காலதாமதத்திற்குப் பிறகு இதை நீங்கள் எழுதியிருந்தாலும், சரியான பார்வையில் விமர்சித்துள்ளீர்கள். இந்த நரபலி சம்பவம் நடந்த நாளில், எமது கட்சியின் தோழர்களே முதன்முதலாக குழந்தையின் உடலைக் கண்டு, காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். தி.மு.க. ஆளும்கட்சியாக இருந்த அந்த நேரத்தில், எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து எமது கட்சி போராடி வந்தது. இப்பொழுது, சி.பி.சி.ஐ.டி. ஆதாரங்களை சேகரித்து, அயூப்கானை கைது செய்துள்ளது. மேலும், அயூப்கானுக்குப் பின்னால் உள்ள பி.எம்.மன்னன், மற்றும் அஞ்சாநெஞ்சன்(?) போன்றோர் எப்பொழுது மாட்டுவார்களோ தெரியவில்லை.

  இது தொடர்பான முழுமையான பதிவுகளுக்கு: http://olirumpaadhai.blogspot.com

  நன்றி.
  தோழமையுடன்

  சீனிவாசன்
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) (விடுதலை)
  மதுரை

 9. திரு அம்பி!

  //ஆப்ரகாம் நபி, இஸ்மாயில் நபியை அல்லாஹ்வுக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்கவா கத்தியை எடுத்து வெட்டப்போனார்..?!!//

  அந்த காலத்தில் இறைவனுக்காக மனிதர்களை பலி கொடுக்கும் வழக்கம் இருந்தது. அதனை தவறு என்று உலக மக்களுக்கு உணர்த்திக் காட்டவே இஸ்மாயீலை அறுக்க தந்தைக்கு கட்டளையிட்டு அதற்கு பகரமாக ஒரு ஆட்டை பலியிடுமாறு இறைவன் போதிக்கிறான். அன்று முதல் மனிதப் பலி நின்று ஆடு மாடுகள் பலியிடப்படுகின்றன. அந்த உணவுகளும் ஏழைகளுக்குத்தான் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.

  “(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்.” (அல்குர்ஆன் 22:37

  இஸ்லாம் அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டச் சொல்கிறது.

  “பூமியில் உள்ளவை மீது அன்பு காட்டுங்கள்ள, வானத்தில் உள்ளவன் உங்கள் மீது அன்பு காட்டுவான்” (திர்மிதி)

  தாகத்தோடு இருந்த நாயொன்றுக்கு நீர் புகட்டியதற்காக முன் சென்ற சமூகத்தில் ஒருவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று நபி(ச) அவர்கள் கூறிய போது “கால்நடைகளுக்கு உதவியதற்கும் நற் கூலி உண்டா? எனத் தோழர்கள் வினவினர். அதற்கு உயிருள்ள இதயமுள்ள எதற்கு உதவி செய்தாலும் நன்மை உண்டு எனக் கூறினார்கள்” (புஹாரி: 2303)

  “ஒரு பெண் பூனையொன்றைக் கட்டிப் போட்டு தான் அதற்கு உணவு கொடுக்காமலும் பூனை தானாகத் தன் உணவைத் தேடிக் கொள்ள அவிழ்த்து விடாமலும் இருந்தாள். அந்தப் பூனை செத்துவிட்டது. இதைச் செய்த பெண் நரகம் நுழைவாள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி: 2365)

  இவ்வாறான ஏராளமான நபிமொழிகள் உயிரினங்களிடம் அன்பும், பரிவும் காட்டுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

  • பிராணிகளிடமும் கருணையுள்ள அல்லாஹ்வுக்கு ஏன் ஆட்டையும், மாட்டையும், ஒட்டகத்தையும், கோழி,சேவலையும் பிஸ்மில்லா சொல்லி அறுக்கிறீர்கள்..? நீங்கள் பிரியாணி சாப்பிடவா..? விட்டுறுங்க பாய்.. பூணூல் போட்டுக்கிட்டா அறுக்கும் எண்ணம் போய் பிரியாணிக்கு பதில் தயிர்சாதம் பிடிக்க ஆரம்பிச்சுடும் பாய்.. ட்ரைப் பண்ணிப் பாருங்களேன்..

   • அம்பி, ஏன் இந்தக் கொலைவெறி?

    நம்ம பாய்மார்கள் ஏதோ வயித்துக்குச் சாப்பிட ஆட்டை மாட்டை அறுக்கிறார்கள். நீங்கள் பூணூலை மாட்டி விட்டு மனிதனை அறுக்கச் சொல்லிக் கொடுத்து விடுவீர்கள் போலிருக்கிறதே?

    ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவில் வெடித்த குண்டுகள் அணேகம் இஸ்லாமியர்கள் வைத்ததல்ல – ஆர்.எஸ்.எஸ் பூணூல் கும்பல் வைத்ததே. மத அடிப்படையிலான கலவரங்கள் அனைத்தையும் ஆரம்பித்தது இஸ்லாமியர்கள் அல்ல பூணூல் பார்ட்டிகளான தயிர் சாதங்கள் தான். சம்ஜௌதா குண்டு வெடிப்பு பற்றியும் அசீமானந்தா பற்றியும் கேள்விப்பட்டதில்லையா நீங்கள்?

    தயிர் சாதம் சாப்பிட்டு நரவேட்டை மோடியாய் வாழ்வதற்கு மாட்டுக்கறி சாப்பிட்டு மனிதனாய் வாழ்வது ஆயிரம் மடங்கு மேலானது.

     • பையா,

      இந்தியாவில் கொலைவேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ் பூணூல் கம்பேனி பற்றிச் சொன்னால் அவசர அவசரமாக பாகிஸ்தானுக்கு ஏன் ஓட வேண்டும்?

      “ஆவன் மட்டும் யோக்கியமா என்று கேட்டு நான் கேடுகெட்ட அயோக்கியன் தான்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவா?

      சின்னப்பயலே, முதலில் நம்ம ஊரைப் பற்றிப் பேசுவோம். இங்கே எப்படி மதக் கலவரங்கள் வந்தது என்பது பற்றிப் பேசுவோம். இங்கே மத வன்முறையை ஆரம்பித்தது யார் என்பது பற்றிப் பேசுவோம். அதுக்கே ஒரு இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலான வரலாறு இருக்கிறது. புஷ்யமித்ர சுங்கனில் இருந்து ஆரம்பித்து நரவேட்டை மோடி ‘தலைக் கோவணாண்டி’ ராம கோபாலன் அசீமானந்தா வரை நீண்ட பட்டியல் இருக்கிறது.

      அப்புறம் பாக்கிஸ்தான் ஆப்கானிஸ்தான் அரேபியா என்று சுற்றுலா போகலாம்.

      என்னவோ யோக்கியன் மாதிரி எகிர்றியே தம்பி, மாட்டை உறித்ததற்கு ஐந்து தலித்துகளைக் கொன்றாயே அது எந்த கணக்கில் வரும்? இன்னும் கயர்லாஞ்சியில் இருந்து பதனிடோலா கீழ்வெண்மனி என்று நீ பதில் சொல்ல ஆயிரம் உண்டு. அதற்கு முதலில் நேர்மையாக பதில் சொல்லி விட்டு நாட்டின் எல்லையைத் தாண்டு.

      • என்னது பூணுல அறுக்குறதா! என்ன ஓய் அந்த 3% பொழப்புலயும் மண்ண வாரி போட்டுடுவீங்க போலருக்கு. அதவச்சுதான் அவைங்க பொழப்பே நடத்துது, அவைங்களாவது பூனுலயாவது அறுக்குறதாவது. நாமல்லாம் சேர்ந்து அறுத்து போட்டாத்தான் ஆச்சு.

       • // நாமல்லாம் சேர்ந்து அறுத்து போட்டாத்தான் ஆச்சு. //

        புதுப் பூணூல் 1 ரூவா தான்…

       • என்னது பொழைப்பா? 300 ரூவா சம்பளமும் 4 kg அரிசியும் வாங்குன அது பொழப்பா?

        அப்போ தமிழ் பெயர வெச்சு கோடி கோடியா கொள்ளை அடிச்சவுங்களுக்கு எத அருபீங்க ?

        • கோடி கோடியா வச்சிருக்கவங்கிட்ட அறுக்கப் போனா பிடிச்சு நரபலி கொடுத்துடுவானே ஓய்..

        • என்னது 300 ரூவாயா? அலுவாலியா கணக்குபடி நீ கோடீஸ்வரனப்பா.

    • மன்னாரு, என்னமோ போங்கோ, உங்களுக்கெல்லாம் பூணூலைப் பார்த்தால் வெடிகுண்டுத் திரி மாதிரியே தெரியறது.. அதுக்கு நானோ, பூணூலோ என்ன செய்யமுடியும்…

     • அம்பி, நிச்சயம் நீங்கள் செய்ய நிறைய இருக்கிறது. அதற்கு முதல் ‘நான் பிறப்பிலேயே உன்னை விட மேம்பட்டவன்’ என்று அறிவிக்கும் அவமானக் குறியீடான பூணுலை அறுத்தெரிவதில் இருந்து துவங்க வேண்டும். உண்மையில் நீங்கள் எதாவது செய்ய வேண்டும் என்கிற அக்கறை கொண்டவராயிருந்தால் அதிலிருந்து தான் துவங்க வேண்டும்.

      அடுத்து பிறரைக் குற்றம் குறை சொல்லத் துவங்கும் முன் சொந்த சாதி / மத கொடூரங்களைப் பற்றி பேசத் துணிய வேண்டும்.

      தேவை கொஞ்சம் நேர்மையும் துணிவும் தான். அது இருக்கிறதா உங்களிடம்?

      • மன்னாரு, தற்போது பூணூலை பார்ப்பனர்கள், விஸ்வகர்மாக்கள் போல எல்லோரும் போட்டுக் கொண்டால், ராமானுசரும் பாரதியும் முயன்றது போல், அது ‘உயர் பிறப்பு’ குறியீடு என்பதிலிருந்து பொதுவான மானுட அறத்தைப் பின்பற்ற உதவும் குறியீடாக மாறிவிடாதா..?!

       • அதாவது எங்க அம்மா ஒழுக்கமானவா னு சொல்றதுக்காக ஒரு அடையாளமா ? அப்போ நூல் நழுவிட்டா .. என்னங்க இது காமடியா இருக்கு

        • ஒத்துக்கிறேன்.. உங்கம்மா பத்தினிதான்னு ஒத்துக்கிறேன்னு கைப்புள்ளங்க சொல்றதுக்கா பூணூல் போடறாங்க..?! இப்படி புதுசு புதுசா புரளியைக் கிளப்புறதுக்காகவே வருத்தமில்லா வாலிபர் சங்கம் வைச்சுருக்காங்க போலிருக்கே..!!! உருப்படுமா இந்த நாடு..

      • அவுங்க கிட்ட எல்லாம் முழு நேர்மை இருக்கு. நீங்க தான் வீட்டுல உக்காந்து பழைய கதைய பேசி பொழைக்க முடியுமான்னு ஐடியா பண்றீங்க.

       பூனல்ங்க்றது யாரையும் தாழ்த்த பயன் படுற ஒன்னு கெடையாது, உங்களுக்கு வேணும்னா நீங்களும் போட்டுக்குங்க,adhu ஒரு கலாச்சாரத்தின் அடையாளம் அவளவு தான்.

       உங்க தாழ்வு மனப்பான்மைக்கு எதுல வேணாலும் குதம் கண்டு பிடிப்பீங்க.

       இதுல காமெடி என்னன்னா ஒரு வலைத்தளம் வெச்சு ஊற எல்லாம் வசை பாடிட்டு , அடுத்தவுங்கள பாத்து நீ கொறை சொல்லாதேன்னு சொல்றது.

 10. இராஜலட்சுமி எனும் அந்த ஐந்து வயது தாழ்த்தப்பட்ட சிறுமி இன்று இல்லை.
  அப்ப உயர்ந்த சாதி குழந்தை செத்தா பரவாயில்லையா….

 11. இதை எல்லாம் நீங்க உங்க மக்களுக்கு மொதல்ல சொல்லி குடுங்க. விலங்குகளுக்கு அன்பு காட்டனும்னா நீங்க வேகேடரியான்ன மாற லாமே . வசதி இருக்குறவுங்க, கடும் உடல் உழைப்பு இன்றி பொழைக்க முடியுரவுங்க எல்லாம் சைவ சாப்பாடு சாபிடலாம்.கொண்டாய் கடலை , சிகப்பு அரிசி எல்லாம் சாப்பிடலாம்.

  • நேற்றைய பதிவில் சிறு பிள்ளைகளைக் கூட கொன்ற ரன்வீர் சேனாவின் கொடூரத்துக்கு ஆதரவு தெரிவித்து விட்டு, ( https://www.vinavu.com/2012/06/04/brahmeshwar-singh-killed/#comment-62991 ) இன்றைக்கு விலங்குக்கும் தீங்கு நினைக்காத பெரிய மனிதாபிமான மண்ணாங்கட்டியாக காட்டிக்கொள்கிறீர்கள்…

   எப்படிங்க உங்களுக்கெல்லாம் கொஞ்சமும் கூச்சமே கிடையாதா?

   • நான் நல்லவன்னு எப்பவுமே சொல்லலியே. சண்டைன்னு வந்த இழப்புகள தாங்கி தான் ஆகணும், குத்துது கொடயுதுன்ன ஒன்னும் நடக்காது.

    பிறகு அவுரு தான் குரானுல ஹடீசுல விலங்குகளுக்கு தீங்கு செய்ய கூடாதுன்னு இருக்குன்னாரு .

    ஆனா அதா எல்லாம் சொல்லிட்டு டெய்லி பீப் ப்ரியநியவே வேணும்னும் சொல்றாரு.

    இதுக்கு பேசாம கொன்ன பாவம் தின்ன போச்சுன்னு இருந்துட்டு போயிறலாம்.

    அடுத்தது புத்தர் காந்திக்கு அடுத்த மகான் பழனி பாபா தான்னு சொன்னாலும் சொல்லுவாரு.

 12. மதம்,கடவுல்,சடஙுகு,இவட்ரை மர.எல்லா மத முஅடநம்பிக்கை ஒழிய வென்டும்.ஒட்டகம் Hஅலால் ஒழி.

 13. ஒரு பாவமும் அறியாத சிறுமியைக் கொலை செய்தவன் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் (தூக்கில் இடப்பட்டு) அது தமிழனா வடவனா பூனாலா தொப்பியா ஆளுங்கட்சியா எதிர்க்கட்சியா என்றெல்லாம் விவாதிப்பதில் பயனில்லை. செயல்பட வேண்டும் அதற்கு இரக்கமுள்ளவர்களும் தைரியமுள்ளவர்களும் ஓரணியில் திரள வேண்டும்.

 14. என்னதான் தொழில் நுட்ப புரட்சியும், நவநாகரீகமும் வந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை பார்ப்பன இந்து மதம் உருவாக்கியிருக்கும் மூடநம்பிக்கைகள் கருவறை முதல் கல்லரை வரை செல்வாக்கு செலுத்தி வருகிறது

 15. ஒரு தாயின் மார்பில் சுரக்கும் பால் அவள் குழந்தைக்குதானேன்றால்
  ஒரு பசுவின் மடியில் சுரக்கும் பால் அதன்
  கன்றுக்குதானே.பின் என்ன மயிருக்கு கன்றை கட்டி வைத்து தாய்
  பசுவின் பாலை அருந்துகிறீர்கள்.இது சைவமா அசைவமா?
  நாய் ஆறு.ஏழு குட்டி போடுகிறது.ஆடு ஒரு குட்டி போடுகிறது,
  அதிசயமாய் இரண்டு குட்டி போடுகிறது.ஆனால் ஆடுகள் மந்தை,
  மந்தையாய் அலைகின்றன.ஆனால் நாய்களோ அப்படி காணபடுவதில்லை.
  என்ன காரணம்? யோசித்துதான் பாருங்களேன்.
  அயூப்கான் போன்ற அயோக்கியர்களுக்கு மதமாவது?
  மண்ணாவது?அவர்கள் பிழைக்க வேண்டும்.
  அதற்காக எதையும் செய்வார்கள்.இதையும் செய்வார்கள்.
  ஒரு ரூபாய் அளவுக்கு நெற்றியில் பொட்டு வைத்திருப்பவர்
  பகுத்தறிவு பகலவனின் வூட்டுக்காரம்மா தானே.
  கடலூர் ஆதிசங்கர் யாருக்காவது நினைவுக்கு வருகிறாரா?
  நக்கலை வீட்டுக்காரம்மாவிடம் காட்டினாரா பகலவன்?

  • சரி .. சரி .. இப்போ முடிவா இன்னா தான் சொல்ல வர்ற நீ ?..

   ஒன்னும் புரில போ …

 16. இதுல தமிழ் எங்க இருந்துய்யா வந்துச்சு??? அவரு பாய் என்பதால் பிரியாணி நிறைய சாப்பிட்டிருப்பார். அதுனால “இந்து – முஸ்லீம் – பிரியாணி கூட்டணியில் 5 வயது சிறுமி பலி” அப்டின்னு தலைப்ப வச்சிக்கங்க….

  ஒரு சின்ன குழந்தையின் மறணத்திலுமா அரசியல்????

 17. நெஞ்சு கொதிக்குது வினவு.. இப்படிப்பட்ட காரியத்த செஞ்ச நாய்கள துபாய்ல செய்யர மாதிரி பொது எடத்துல நிக்கவெச்சு கல்லால அடிச்சே கொல்லணும்.. இதுக்கு காரணம் ஒரு வெறிநாய்.. அது அல்லாவ தொழுதாலும் சரி, சிவன், விஷ்ணுவ வணங்கினாலும் சரி.. அந்த சிறுமியின் உயிரை பறித்த நாய்களுக்கு தக்க தண்டனை கிடைத்தே தீரவேண்டும்..

 18. அபூஈஸா என்ற முஅய்ரா இப்னு ஷுஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”தாய்மார்களை நோவினை செய்வதையும், தனது கடமைகளை செய்யாதிருப்பதையும், தனக்கு உரிமை இல்லாதைத் தேடுவதையும், பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதையும் அல்லாஹ் உங்களுக்கு தடை செய்து உள்ளான். மேலும், ”இப்படி இவர் கூறினார். இவ்வாறு கூறப்பட்டது” எனக் கூறுவதையும், அதிகக் கேள்வி கேட்பதையும் பொருளை வீணாக்குவதையும் அல்லாஹ் வெறுக்கிறான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 340)

 19. மூட நம்பிக்கைகள் இஸ்லாத்தின் வேர்களிலும் ஆழமாக உள்ளது. நரபலி என்ற ஒரு நிலை இசுலாத்தில் இல்லாதிருந்தால் இபுராகிம் தனது மகனை பலியிட எண்ணம் கொண்டிருக்கமாட்டார். இசுராத்தில் உள்ள மூடநம்பிக்கைகள் பற்றி அதிகமான தகல்வல்களை படிக்க http://iraiyillaislam.blogspot.in/ இங்கு செல்லுங்கள்.

 20. ##ஒரு பச்சைப் பிஞ்சைக் கொன்று தனது கல்லூரியை இலாபகரமாக நடத்த வேண்டுமென்றால் எவ்வளவு வெறி வேண்டும்?##

  மூடநம்பிக்கையுடன் தனியுடமைவெறியும் சேர்ந்துகொண்டால் நரபலியையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையையும் அல்லா இலேசாக்கித் தருவான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க