முகப்பு'புனிதமும்' வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !
Array

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !

-

கன்னியாஸ்திரிகள்

இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறுஎன்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.

ஆமென் - ஒரு கன்னியாஸ்திரியின் சுயசரிதைகாங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்மெல் எனும் கன்னியாஸ்திரி சபையில் சகோதரியாகப் பணியாற்றிய ஜெஸ்மி, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடைசியாக திருச்சூரில் இருக்கும் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். 35 இலட்சம் உறுப்பினர்களுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய, பணக்கார கத்தோலிக்க சர்ச்சான ஸிரோ மலபார் சர்ச்சால்தான் விமலா கல்லூரி நடத்தப்படுகின்றது. இச்சபையில் இருக்கும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் ஜெஸ்மிக்கு பைத்தியகார பட்டம் சூட்டி தனிமைப்படுத்த நினைத்த தலைமைப் பாதிரியார்களின் சதியை முறியடிக்கும் வண்ணம் அவர் இந்த சுய வரலாற்று நூலை எழுதியிருக்கின்றார்.

இந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை, முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பது, ஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வது, இவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும், தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார். மேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.

ஆனால் இந்த அதிர்ச்சி அலைக்கு முரணாக 2008 அக்டோபர் மாதம் கேரள கிறித்தவ உலகமே பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. காரணம் 1946ஆம் ஆண்டு மரணமடைந்திருந்த அல்போன்சா என்ற கேரள கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் புனிதர் என்ற பட்டத்தைக் கொடுத்ததுதான். வாட்டிகனில் வழங்கப்பட்ட இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளாவிலிருந்து பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். கேரள மார்க்சிஸ்டு அரசு தன்னை மதச்சார்பற்ற இடதுசாரி முன்னணி என அழைத்துக் கொள்ளும் அரசு இந்த விழாவிற்கென ஒரு அமைச்சரையே அனுப்பி வைத்ததென்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். கேரளாவில் கிறித்தவ மக்களின் விகிதம் அதாவது ஓட்டு அதிகமென்பதுதான் மார்க்சிஸ்டுகளின் இந்த முற்போக்குநடவடிக்கை உணர்த்தும் செய்தி.

அல்போன்சாவின் கல்லறை இருக்கும் பரனங்கானம் என்ற ஊர் இன்று அகில இந்திய சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவில் முதல் இந்தியக் கிறித்தவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் கொண்டாடப்படுவது அதிசயமில்லை.

அல்போன்சாஅல்போன்சா எனும் அந்த எளிய பெண்மணி 1910இல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரியாக மாறி அதிகமும் கல்விப்பணி புரிந்து பின்னர் வெகுகாலம் நோய்வாய்ப்பட்டு 1946இல் இறக்கின்றார். 1953ஆம் ஆண்டு அல்போன்சாவை தேவனின் சேவகிஎன்று வாட்டிகன் ஏற்கின்றது. கேரளாவில் அவரைப் புனிதராக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. புனிதர் பட்டம் பெற வேண்டுமென்றால் அந்த நபர் இரண்டு அற்புதங்களை செய்திருக்க வேண்டுமாம். அப்படி அற்புதங்கள் செய்ததாக 1984இல் போப் இரண்டாம் ஜான் பால் அறிவித்துவிட்டு 1986 ஆம் ஆண்டு கோட்டயத்திற்கு வந்தபோது அல்போன்சாவை ஆசிர்வதிக்கப்பட்டவர் என அறிவிக்கின்றார். இறுதியில் 2008இல் போப் பதினாறாம் பெனடிக்ட் அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கின்றார். இதுதான் ஒரு இந்தியர் முதன் முதலாகப் புனிதர் பட்டம் பெற்ற கதை.

இப்படி இந்தப் புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். நமது நீதிமன்றங்களில் ஒரு சிவில் வழக்கு பத்தாண்டுகளாக இழுக்கப்படுவதற்கு ஒப்பானது இது என்றாலும், அந்த அளவுக்கு புனிதர் பட்டத்திற்கு மவுசு இருக்கிறது என்பதால்தான் இந்த ஜோடனைகள்.

புனிதர் பட்டம் பெற்ற அல்போன்சாவும், திருச்சபையின் பாலியல் உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஜெஸ்மியும் ஸிரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்தான். சென்ற ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்த இந்த சர்ச் இந்த ஆண்டு மருண்டு போயிருக்கின்றது. திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை பால் தேலக்காட் கூட இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தப் பாலியல் முறைகேடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டு, அதைச் சரிசெய்ய முடியுமெனவும் கூறியிருக்கிறார். இதிலிருந்து திருச்சபையே இதை மூடிமறைக்க முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் ஜெஸ்மியை மனநோயாளி என முத்திரை குத்த நடந்த முயற்சி குறித்து தேலக்காட் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவரது மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எனச் சமாளிக்கிறார்.

இதே தேலக்காட் இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவரான 82 வயது கார்டினல் வர்கி விதயாதிலின் சுயசரிதையை எழுதியிருக்கின்றார். அதில் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் அச்சத்துடன் வாழ்வதாகவும், பலர் பாதிரியார்களின் எடுபிடி சேவகர்களாகக் காலம் கழிப்பதாகவும் விதயாதில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் திருச்சபையின் கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல், தப்பு செய்பவர்களின் முயற்சிக்கு சபை ஒருபோதும் உதவாது என்றும் தெரிவித்திருக்கிறார். எல்லாம் திருச்சபையின் முடைநாற்றம் முச்சந்திக்கு வந்தபின்பு தவிர்க்க இயலாமல் தெரிவிக்கப்படும் பாவ மன்னிப்புக்கள்.

தேவனை நம்பும் எளிய மக்கள் தமது தவறுகளை திரைத் தடுப்புக்கு அப்பால் உள்ள பாதிரியார்களிடம் கூறி மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கே ஒரு மனிதனின் தவறு அவனது சுயவிமரிசனம் மற்றும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உட்பட்டு திருத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக அவனது தவறுகள் பொதுவான காரணங்களினால் மன்னிக்கப்பட்டு, அதாவது தவறை தேவனின் பிரதிநிதியிடம் கூறியதற்காகவே குற்றவாளி என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றான். இம்மை, மறுமை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், சாத்தான்கள், பரிசுத்த ஆவி என்று கற்பனையாகக் கட்டியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் நிகழ்காலத்தின் நெறிமுறையை மதத்தின் நம்பிக்கை என்ற பெயரால் வடிவமைக்கின்றன. இந்தக் கற்பனையான விடுவித்தலில் எளிய தவறுகள் செய்யும் சாதாரண மக்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை.

ஆனால் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பார் என்று பேசும் அமெரிக்க அதிபர்களுக்கு ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்கள் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்படுவது தெரியும். போபாலில் பல ஆயிரம் பேரைக் கொன்ற ஆண்டர்சனோ, பங்குதாரர்களை ஏமாற்றிய என்ரானின் தலைவரோ தேவாலயம் சென்று பாவமன்னிப்பு பெறுவார்களா என்ன? தொழில் வேறு மதம் வேறு என்பதோடு, அவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது மக்களை நயம்பட ஏமாற்றுவதற்கான தந்திரம்தான்.

பகுத்தறிவால் நாத்திகரானவர்களை அறிந்திருப்போம். ஆனால் பூசாரிகள் அத்தனைபேரும் நாத்திகர்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கருவறைக்குள்ளிருக்கும் சாமியின் உருவத்தைத் தாங்கியிருக்கும் கல் வெறுமனே கல்தான் என்பதை மற்றவர்களை விட பூசாரி நன்கறிவான். அதனால்தான் சபரிமலையின் தலைமைப் பூசாரி சுத்த பத்தமாக இருப்பதற்காக விலைமாதர்களிடம் செல்வதும், தில்லை வாழ் தீட்சிதர்கள் நள்ளிரவில் நடராசப் பெருமானின் சன்னிதியில் டாஸ்மார்க் பாரை நடத்துவதும் சாதரணமாகியிருக்கின்றது. இந்த விதி பாதிரியார்களுக்கும் பொருந்தும்.

பால் ஷேன்லிஅமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகள் செய்ததாக வழக்கு நடக்கின்றது. இதில் பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு எட்டாண்டு சிறைத் தண்டனையே கிடைத்திருக்கின்றது. இந்தப் பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை அபராதமாகவும், நிவாரணமாகவும் கட்டியிருக்கின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் இதற்காகவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அமெரிக்க கிறித்தவ சபைகளில் நிலவும் இந்த ஒழுக்கம்எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை.

ஒரு மனிதனின் தவறு என்பது அவனது சமூகத்தாலும், சமூக நடவடிக்கைகளாலும்தான் திருத்த முடியும். ஒரு கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்படும் இசுலாமியப் பெண்ணொருத்தியின் தீர்வுக்கு குர்ஆனையும், ஹதீசையும் புரட்டுவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டா மதத்தின் தீர்வுகள் முடிவு செய்யப்படுகின்றன?

எல்லா மதங்களும் மனித சமூகத்தின் தவறுகளைப் பாவம், புண்ணியம் என்ற மத நம்பிக்கையின் மூலம்தான் அணுகுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மனிதகுலப் பிரச்சினைகளுக்கு மிகப் பழைய நூற்றாண்டின் புண்ணிய நூல்களில் தீர்வுகள் தேடப்படுகின்றன. உண்மையில் மதத்தை வைத்து ஆதாயம் தேடும் ஆளும் வர்க்கத்தின் பல பிரச்சினைகள் இத்தகைய மத நூல்கள் மூலம் கேள்வியின்றி தீர்க்கப்படுகின்றன.

ஜெஸ்மி தனது சுய வரலாற்றில் ஒரு பாதிரியார் எல்லா கன்னியாஸ்திரிகளையும் கட்டித்தழுவி முத்தம் கொடுப்பதைக் குறிப்பிட்டு, தான் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அதற்கு அந்தப் பாதிரியார் முத்தம் கொடுப்பதை நியாயப்படுத்தும் வாசகத்தை பைபிளிலிருந்து படித்துக் காண்பித்ததாகத் தெரிவிக்கின்றார். பச்சையான பாலியல் இச்சைகளையும், வன்முறைகளையும் கூட பைபிளின் பெயரால் நியாயப்படுத்த முடியும் என்றால் கன்யாஸ்திரிகளுக்கு விடுதலை என்பது எப்படி சாத்தியம்?

மற்றவர்களின் பாவங்களுக்கு தேவனின் பிரதிநிதியாய் இருந்து மன்னிப்பை வழங்கும் ஒரு பாதிரியார் தனது பாவம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று காட்ட முயல்வதன் மூலம் கடவுள் என்பவரே கற்பனையானவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஏசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒரு ஏழை அல்ல; ஏசுவின் தரகர்களாக வலம் வந்து பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கும் இந்தப் பாதிரியார்கள்தான் அபாயகரமானவர்கள். இந்த அபாயம் பக்தர்களின் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை தரும் துணிச்சலிலிருந்து எழுகின்றது.

எல்லா மதங்களும் தமக்கு வேண்டிய நம்பிக்கைகளைக் கண்டிப்பான கண்மூடித்தனமான முறையில்தான் ஒரு கட்டளையைப் போலவே பக்தர்களிடம் கோருகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு மத நம்பிக்கையில் ஐயமோ, சந்தேகமோ, நம்பிக்கையின்மையோ வரக்கூடாது என்பதால்தான் மதப் பூசாரிகளின் அட்டூழியங்கள் அதற்குரிய பொருளில் பார்க்கப்படுவதில்லை. நடிகைகளோடு கூடிக்குலாவியும், சங்கர ராமனை ஆள் வைத்துக் கொன்றவர் என்றாலும் ஜகத்குரு என உலாவரும் சங்கராச்சாரியை பெரும்பான்மையான பார்ப்பன மேல்சாதியினர் இன்னமும் புனிதவானாக நம்புகின்றார்கள் என்றால் இந்தப் பக்தர்களின் விமரிசனமற்ற நம்பிக்கைதான் நமது விமரிசனத்திற்குரியது.

carl-bloch-jesus-and-the-little-childrenரோமாபுரிப் பேரரசின் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முயன்ற ஏசுநாதரின் பெருமை அவர் செய்த அற்புதங்களின் பெயரால்தான் வியந்தோதப்படுகின்றது. இன்றும் தினகரன் முதல் பல நற்செய்தியாளர்களும், சாய்பாபா, கல்கி, பிரேமானந்தா முதலான இந்துச் சாமியார்களும் அற்புதங்கள் மூலம்தான் தமது ஆன்மீகச் சந்தையை உருவாக்குகின்றனர்.

ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர்.

இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்? அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே? மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே?

இப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் மதங்களின் சிறப்புக்கள் முழுமுதல் உண்மை போல இறைக்கப்படுகின்றன. இதையே நவீன இந்து சமய சாமியார்கள் யோகம், தியானம் என்று எல்லா வளங்களையும் தரும் உடனடி லாட்டரிகளைப் போல அள்ளித் தெளித்து தமது ஆன்மீக சாம்ராஜ்ஜியங்களை விரிவாக்குகின்றனர்.

அல்போன்சாவின் புனிதர் பட்டத்தின் கதையைக் கூட எடுத்துக் கொள்வோம். அவர் இறந்த பிறகு அவரது கல்லறையில் பிரார்த்தனை செய்த இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடந்திருக்கின்றதாம். அதில் ஒரு கேரள தம்பதியினர் பிறவியிலேயே ஊனமுற்ற தமது மகன் அல்போன்சாவின் அருளால் ஊனம் நீங்கி நடப்பதைத் தெரிவித்தார்களாம். இதை ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உண்மையென உறுதி செய்து வாட்டிகனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டதாம். இந்த மருத்துவர் குழுவில் இருக்கும் மருத்துவர்களும் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை கொண்டு திருச்சபையை மதிக்கும் பக்தர்கள் என்பதுதான் உண்மை.

அன்னை தெரசாவுக்கும் இப்படித்தான் இரண்டு அற்புதங்கள் ஜோடிக்கப்பட்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கிறித்தவ மதத்திற்காகத் தொண்டூழியம் செய்பவர்களை அவர்கள் மட்டுமின்றி யாரும் ஏன் போப்பும் கூட செய்ய முடியாத அற்புதங்கள் எனும் மோசடி கொண்டுதான் அளவிட வேண்டுமா? அல்போன்சா தனது வாழ்வை ஆசிரியப் பணிக்கு அர்ப்பணித்து விட்டு வெகுநாட்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார். இதைத் தவிர அந்த அப்பாவி கன்னியாஸ்திரியின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தித்தால் அற்புதங்கள் நிகழும் என்று ஜோடிக்க வேண்டிய அவசியமென்ன?

நீங்களும் உடனடி பக்திமானாகலாம்மேற்குலகில் கிறித்தவத்தின் நம்பிக்கை வெகுவாக வடிந்திருக்கும் நிலையில் மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் மந்தைகளைத்தான் தேவனின் செய்தியால் மாற்ற முடியும் என்ற ஒரே காரணத்தால்தான் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. டெண்டுல்கர் சதமடித்தாலோ, ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலோ முழு நாடே கொண்டாடும் சூழலில் ஒரு முதல் இந்தியருக்கு அளிக்கப்பட்ட புனிதர் பட்டமும் அப்படித்தான் கொண்டாடப்படுகின்றது. மேலும் பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் அள்ளி வழங்கும் கேரளத்தின் சேவையைக் கணக்கில் கொண்டும் இந்தப் புனித மோசடி கச்சிதமாக நடந்திருக்கின்றது.

இலட்சக்கணக்கான பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வாழும் உலகில் இப்படி ஒரு சிலர் மட்டும்தான் அற்புதங்களைச் செய்ய முடியுமென்றால் மற்றவர்களெல்லாம் பாவிகளா இல்லை சாத்தானின் அவதாரங்களா? நோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமே, என் அப்படி நடக்கவில்லை? ஆக மதநம்பிக்கையைப் பரப்புவதிலேயே இத்தகைய பச்சையான மோசடிகளும் ஊழலும் இருக்கும்போது, கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்முறையை மட்டும் தனிச்சிறப்பான மோசடி என்று எப்படிக் கூற முடியும்?

எனவேதான் திருச்சபையில் இருக்கும் ஆன்மீக ஊழல்களும், லவுதீக ஊழல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்கின்றோம். அற்புதங்கள் என்பது எப்படியும் நிகழாத ஒன்று என உறுதியாகத் தெரிந்திருக்கும் ஒரு பாதிரி, சபையில் சேரும் இளம் கன்னியாஸ்திரியை பாலியல் வன்முறை செய்வது ஒன்றும் தெய்வக் குற்றமில்லை என ஏன் நினைக்க மாட்டான்? தெய்வமே இல்லை என்றாகும்போது தெய்வக்குற்றம் மட்டும் எப்படி இருக்க முடியும்?

பேசாத அம்மன் சிலையை வெறும் கல்லென்று தெரிந்து கொண்டு கைகளால் கழுவி அபிஷேகம் செய்யும் ஒரு பூசாரி கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வது அவனுடைய தனிப்பட்ட தவறு மட்டுமில்லை, தவறையே தனது ஆன்மாவாகக் கொண்ட மதத்தின் தவறாகவும் இருக்கிறது. மதத்தின் ஆன்மாவே தவறுகளின் மேல் கட்டப்பட்டிருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளாத வரைக்கும் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை மட்டும் வெட்டியெடுத்து திருத்திவிட முடியாது.

ஜெஸ்மி தனது முப்பது வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டு, அதன் காரணங்களையும் வெளி உலகிற்கு தெரிவித்து விட்டார். இல்லையேல் அவர் ஒரு மனநோயாளி என ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார். இப்போதும் கூட அவர் கிறித்தவ மதத்திலிருந்து வெளி@யறவில்லை. இவரது பிரச்சினை கிளப்பிய புயலில் அரண்டுபோன திருச்சபையும் இந்தப் பாலியல் முறைகேடுகளைச் சரி செய்யும் நுட்பத்தை அமல்படுத்தப் போவதாகப் பேசுகின்றது. ஏற்கனெவே சகோதரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும் 1 கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மூத்த கன்னியாஸ்திரிகளின் கொடுமை தாங்காமல் சகோதரி அனூப் மேரி தற்கொலை செய்து கொண்டார். இவையெல்லாம் கேரளாவில் அம்பலத்திற்கு வந்த திருச்சபையின் குற்றங்கள்.

மதம் மற்றும் திருச்சபையின் முறைப்படியே ஆண் பாதிரிகளுக்கு உரிய தகுதியும், பதவியும் பெண் கன்னியாஸ்திரிகளுக்கு கிடையாது. இப்படி வழக்கத்திலேயே ஆணாதிக்கம் கோலோச்சும் ஒரு நிறுவனத்தில் சேரும் இளம்பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? ஜெஸ்மி தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து ஒரு மதர் சுப்பீரியரிடம் முறையிட்ட போது அந்த தலைமைச் சகோதரி சொன்னாராம் இந்தக் குற்றச்சாட்டை விட சர்ச்சின் கவுரவம் முக்கியமானது என்பதால், இவற்றைக் கண்டுகொள்ளாமல் கர்த்தருக்கு பணியாற்றுவதுதான் முக்கியம்

புதிய கலாச்சாரம் பத்திரிகையை பல இளம் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் தவறாமல் படிக்கிறார்கள் என்ற நல்ல விசயம் எங்களுக்குத் தெரியும் என்பதால், அவர்களிடம் ஒரு கேள்வியை உங்கள் மதத்தால் சாத்தானென்று கருதப்படுகிறோம் என்றாலும் கேட்க விரும்புகின்றோம். நீங்கள் எப்போது சபையை விட்டு வெளியேறி உண்மையான மக்கள் பணி ஆற்றப் போகின்றீர்கள்?”

சர்ச்சின் கவுரவம் பெரியதா, அல்லது உங்களின் மனச்சாட்சி பெரியதா? முடிவு செய்யுங்கள்.

-புதிய கலாச்சாரம், மே’2009

தொடர்புடைய பதிவுகள்

யேசுவே நீரும் இல்லை – அன்னை தெரசா !

புதிய கலாச்சாரம் மே 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

vote-012

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

  1. Nice article! Yes, its true , things like those mentioned in the articles are happening.But we cant blame everyone.There are thousands of nuns,deacons and priests who are willingly suffer themselves and do social work for the welfare of the poor people.The last question is unwanted, there is no need to come out and do charity.Church always cover up these kind of things but atleast in these case they are little open.Hopefully in future the Church will open more itself to the people.

  2. I hope you knew the procedure behind the ‘Sainthood’ or ‘beatification’ you need to know more !! . you know why we call certain people as ‘good’ and certain as ‘bad’ that’s the answer behind many of the religious belief..

    • Mr.Sasitharan

      Could you just explain what is “bad” or what is “good” can you find defination for good or bad ? in any dictionary .Religious belief is just blind belief ..if you ask yourself who you are? and what is your genetic identity ? what is the raltionship between people who born and brought up in tamilnadu following a religon which has been orginated in somewhere from middleeast ? can you ask youself ?

  3. >>அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்? அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே?

  4. கட்டுரையாளருக்கு வணக்கம்!
    உங்களின் இந்த கட்டுரையை “கிறிஸ்துவமத துவேசமாக” எடுத்துகொள்பவர்கள் பற்றி கவலைபட வேண்டாம்.அதே சமயம்

    உண்மையை துணிச்சலாக வெளிக்கொணர்ந்த அந்த சகோதரிக்கு நன்றி சொல்லவேண்டும். மதம் என்பது சினிமா,அலுவலகம்,விளையாட்டு,ராணுவம்,ஆராய்ச்சி,போண்ற ஒரு துறை தானே தவிர,அது ஒன்றும் மணித வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தும் ஆண்டவனின் நேரடி அமைப்பு அல்ல.எனவேதான் மற்ற துறைகளை போல,இங்கேயும் மத குருமார்கள்,மத பிரமுகர்களால் பெண்கள் சீரழிக்கபடுகின்றனர்.இது மதம் குறித்தும்,மத முக்கியஸ்தர்கள் குறித்தும் மக்கள் கொண்டுள்ள பிரமை மாறும் வரை தொடரும் ஒரு அவலமாகத்தான் இருக்கும்.

  5. very informative one,and i would like to request vinavu can u please make some analysis about oneness dharma ,i heard its really helps the society not by any miracle.

  6. தமிழக கிறிஸ்தவர்களின் சாதி வெறி, பாதிரியார்களின் சாதி வெறி பற்றி எழுதப்பட்ட என்னுடைய பழைய பதிவு ஒன்று..

    http://tvpravi.blogspot.com/2008/02/blog-post_11.html

    பங்கு சாமியார்களின் சின்ன வீடு லீலைகளை தனி பதிவாக போடவேண்டும்..நேரம் இருந்தால் செய்கிறேன்…

    • பிரபாகரனை கடவுளாக கொண்டு உருவாக்கப்படும் மனித விரேதமான புதிய மதமான புலிகள் மதத்தின் தீவிர ஆதரவாளர் ஆகி நீர் வேறு மதத்தை குறை கூற வந்துவிட்டீர்!!.
      நீங்கள் எல்லாம் ஒரு குட்டையில் ஊறிய குப்பைகள்.

      • நல்லது எது சொன்னாலும் நீ யாரு சொல்லன்னு கேள்வி கேட்டே எவனும் எதுவும் சொல்லாம நம்மள முட்டலவே வச்சிட்டு போயடனுங்க. இது உண்மைய பொய்யான்னு மட்டும் பாருங்க யாரு sonna இன்றது முக்கியமல்ல.

  7. how can u say the below links, did u live in Jesus christ time, how can u saw like this without knowing anyting,

    ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை.

  8. மதம் என்பது பல்லாயிரம் கோடி புரளும் மிகப் பெரும் வியாபாரம்….விவசாயம், ஜவுளித்துறை, மோட்டார் தொழில், விபச்சாரம் போல மதமும் உலகம் தழுவிய வியாபாரம்…

    நாட்டுக்கு நாடு பெரும்பான்மையினரின் மதம் தான் மாறுகிறதே தவிர, எல்லா மதங்களின் அடிப்படையும் ஒன்று தான்…

    கேள்வி கேட்காதே…கடவுளை நம்பு…நம்பினால் உனக்கு எல்லா நன்மையும் உண்டு…கடவுளை நம்பாதவன் அய்யோ பாவம் என்று போவான்… இதையே தான் எல்லா மதங்களும் வெவ்வேறு தொனியில் சொல்கின்றன…

    இந்த பிறவியில் ரொம்ப கஷ்டமா இருக்கே சாமி? எல்லா மதங்களின் பதில் “உனக்கு சொர்க்கத்தில் இடம் உண்டு”..

    இந்த சொர்க்க இடத்தை இதுவரை வெரிஃபை செய்தவன் எவனும் இல்லை…ஆக, வெரிஃபை செய்ய முடியாது என்பதாலேயே இந்த “சொர்க்கம்” எல்லா மதங்களாலும் பேசப்படுகிறது…

  9. மத நிறுவனமாகட்டும், அரசியல் நிறுவனமாகட்டும்… தன் தலைவன், தன் தலைமை தப்பு செய்கிறது என தெரிந்தும்…. அதை “ஏதோ தனக்கு” சல்ஜாப்பு செய்து கொண்டு அவர்களை ஆதரித்து செல்பவர்கள் இங்கு அதிகம்.
    திமுகவிற்கு ஆதரவாக எழுதும் சின்ன குத்தூசியார், வலையுலகில் உலவும் லக்கிலுக்… இந்த பட்டியலின் நீளம் அதிகம். இவர்களாய் மனம் திருந்தி மாற்று வழிக்கு வருவதற்கு… ஒரு நேர்மை வேண்டும். அல்லது சமூகத்தில் முற்போக்கு இயக்கங்களின் செல்வாக்கு பெற்றால் மட்டுமே இவர்கள் இடம் மாறுவார்கள். அதுவரை… இந்த போக்கு தொடரும் என்றே நினைக்கிறேன்.

  10. எது பெண்ணுரிமை?
    நமது இந்தியக் குடியுரிமைச் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் அடுத்தவரின் உரிமையைப் பாதிக்காமலும் பறிக்காமலும் தான் விரும்பியதைச் செய்ய முழு உரிமை பெற்றவராவார்.

    http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=738&Itemid=276

  11. இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா – புர்கா, -துப்பட்டி என்றும் குறிப்பிடப்படுகின்றதுஅணிய கட்டாயப்படுத்துவது ஏன்?

    முஸ்லிமல்லாதாரின் விமர்சனத்துக்கு இலக்காகும் பிரச்சனைகளில் முக்கியமானதாகத் திகழ்கின்றது.

    http://vanjoor-vanjoor.blogspot.com/2007/03/blog-post_5416.html

  12. Again again the same misunderstanding among atheists.Hello sir you are the people think more about GOD.All the problems explain only human beings problem.if a person does mistake then it is not the religion’s mistake. Please understand the difference between the relion and the human being making mistake on Religion and tell me why death happens and what happens beyond death. Sirji please understand science cannot give answers to all. So never say some force is beyond you dear.Rubbish clean your mind before writing all these stories. I think you only so interested no body bothers about it.

  13. கிறித்தவம்,இந்து மதங்களின் மோசடிகளை அம்பலப்படுத்தியாச்சு.கொஞ்சம் இசுலாம் பக்கமும் போய்ட்டு வாங்க அங்கயும் நல்லா தேறும்னு நெனைக்கறேன்.அப்படி நீங்க போகலேன்ன அவன் குண்டு போட்டுருவானோன்னு பயந்ததாகத்தான் அர்த்தம்

  14. மனிதன் எவனுமே பாவம் செய்யக் கூடியவன்தான் அதில் இவர்கள் ஒன்றும் விதிவிலகானவர் அல்ல. அதே நேரத்தில் பாவங்களை யார் செய்தாலும் அதற்கான தண்டனை வழங்கி நியாயம் தீர்க்கவே இயேசு சீக்கிரம் வரப்போகிறார். இயேசுவோடு கூடவே இருந்த யூதாஸ்ம் பாவம் செய்தான் விளைவு நான்று கொண்டு, குடல் வெடித்து செத்தான். தேவன் பட்சபாதம் உடையவரல்ல.
    மேலும் இயேசு அற்புதமே செய்யவில்லை என்று மற்றொரு வாதத்தை இங்கே அபத்தமாக கூறியுள்ளீர்கள். பூனை கண்ணை மூடிவிட்டால் உலகமே இருட்டு என்றதாம் அதுபோல இயேசு அற்புதங்கள் செய்யவில்லை எனக்கூறுபவர்களும் கண்களும் மூடிப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இயேசுவின் அற்புதங்களை தினமும் நாங்கள் குடும்பத்திலும், ஊழியத்திலும், தனிப்பட்ட வாழ்விலும் இன்றும் அனுபவித்து வருகிறோம். அதை மறுப்பவர்கள் கண் மூடப்பட்டுள்ளது என்பதே அற்புதங்களை அநுபவிப்பவர்களின் சாட்சியான அறிக்கை.
    மேலும் இயேசு அற்புதங்களைச் செய்தால் மருத்துவமனைகள் எதற்கு என்ற கேள்வி கேட்டுள்ளீர்கள். இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் (நமது முன்னோர்) கோவனம் கட்டிக் கொண்டு எழுதப் படிக்கத் தொியமல் வாழ்ந்த காலத்தில் பள்ளிக் கூடங்களை ஏற்படுத்தி நமக்கு படிக்கச் சொல்லிக் கொடுத்து, நாகாிகமாக உடுத்தச் சொல்லிக் கொடுத்து நம்மை முன்னுக்குக் கொண்டு வரக் காரணமே ஆதிகாலத்து மிஷனொிகள்தான் என்பதை மறந்து, மிஷனொிகளுக்கு விரோதமாக வாய்பேசும் அளவு துணிந்திருக்கிறீர்களா? நன்றி மற்நது மனம்போல எதையும் எழுத எண்ணாதீர்கள். எல்லாமே உங்களுக்குத் தொிந்த மேதாவிபோல எழுததீர்கள்.
    இந்த கல்விப் பணியைப் போலத்தான் நற்பணிகளை செய்ய வேண்டும் என்ற இயேசுவின் போதனைகளுக்கு கீழ்படிந்து நடத்தப் படுகிற மருத்துவ மனைகளைப் பற்றி குறை கூற என்ன அருகதை உள்ளது. இயேசு அற்புதங்களைச் செய்கிறாரென்றால் அதற்காக கையை நீட்டினால் சாப்பாடு வராது, வயிறு தானாக நிறையாது, இயேசு வந்து குளிப்பாட்டிவிட மாட்டார், பல் விளக்கி விடமாட்டார். சோறு ஊட்டி விடமாட்டார். இது போல அநேக உலக கடமைகளை நாம்தான் செய்ய வேண்டும். அதுபோலவே வியாதி வந்தால், மனிதன் தேவனால் பெற்ற அறிவைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை பயன்படுத்தி நன்மை செய்யவே மருத்துவ மனைகளைக் கட்டுகிறர்கள்.
    அது இருக்கட்டும் எத்தனை வியாதிகளுக்கு மருத்துவர்களால் கைவிடப்படும் நிலை இருக்கிறது. அப்போது மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள். எங்களால் முடிந்ததை செய்துவிட்டோம்.இனி ஆண்டவரை வேண்டுங்கள் என்கிறார்களே! அப்படிப்பட்ட எத்தனை மக்கள் இயேசுவால் அற்புதமாக குணமாக்கப்படுகிறார்கள். அது அற்புதமில்லையா.
    இப்படி தேனை அறிந்துகொள்கிற ஆன்மீக அறிவை ஆண்டவர் உங்களுக்குத் தருவாராக.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க