Sunday, July 21, 2024
முகப்புகட்சிகள்காங்கிரஸ்கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!

கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!

-

கேரள-இனவெறி-அரசு-2முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வுக்காகப் போடப்பட்ட துளைகளை அடைக்கவிடாமல் அடாவடித்தனம் செய்யும் கேரள அரசை எதிர்த்தும், அணையை உடைக்கச்  சதிகளைச் செய்யும் கேரள போலீசை வெளியேற்றி, அணையைத் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் கோரியும், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரைத் தேக்க நடவடிக்கை எடுக்காமல் கேரள அரசின் இனவெறி அரசியலுக்குத் துணைபோகும் மைய அரசை எதிர்த்தும், 15.6.2012 அன்று உசிலை பேருந்து நிலையம் அருகே தேனி சாலையில் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு  ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.  அணைப் பாதுகாப்புக் குழு பொருளாளர் சந்திரபோஸ் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை வட்டார ஆட்டோ ஓட்டுநர் சங்கம், டூவீலர் மெக்கானிக் சங்கம், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம், ம.க.இ.க. ஆகிய அமைப்புகளும் பங்கேற்றன.

நீதிபதி ஆனந்த் குழுவின் தீர்ப்பை ஏற்க மறுக்கும் கேரள காங்கிரசு முதல்வர் உம்மன் சாண்டியின் உருவப் பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து, ஓட்டுக்கட்சிகளின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தி, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டம், முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீரைத் தேக்கி, தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்காவிடில், முல்லைப் பெரியாறு அணையைக் கைப்பற்றும் போராட்டமாகத் தமிழகம் கிளர்ந்தெழும் என்று பிரகடனப்படுத்துவதாக அமைந்தது. பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் உணர்வோடு திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

கேரள-இனவெறி-அரசு-1தமிழகத்தின்  கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களின் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் அடிப்படையாக உள்ள பவானி மற்றும் சிறுவாணி ஆறுகளில் கேரள எல்லைப் பகுதியில் 1978இல் அணை கட்ட முயற்சித்து தமிழக மக்களின் கடும் எதிர்ப்பால் அத்திட்டங்களைக் கைவிட்ட கேரள அரசு, இப்போது மீண்டும் அவற்றைச் செயல்படுத்த முயற்சித்து வருகிறது. முல்லைப் பெரியாறு நீரில் கேரள அரசின் இனவெறி  துரோகம் அம்பலப்பட்டுள்ளதால், தமிழகத்தைப் பழிவாங்கும் நோக்கத்தோடு இதனைச் செயல்படுத்த முயற்சிக்கிறது. இது மட்டுமின்றி, தமிழக எல்லைப் பகுதிகளில் இரகசியமாக மருத்துவமனைக் கழிவுகளையும் இறைச்சிக் கழிவுகளையும் கொட்டித் தமிழகத்தைக் குப்பை மேடாக்கி வருகிறது.

கேரள அரசின் அடாவடித்தனத்தையும் இனவெறியையும் எதிர்த்து 23.6.2012 அன்று செஞ்சிலுவைக் கட்டிடம் அருகே  மனித உரிமைப் பாதுகாப்பு மையம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. கோவை மாவட்டத் தலைவர் ராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியார் திராவிடக் கழகம், பு.ஜ.தொ.மு; ம.க இ.க; ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், திரளான வழக்குரைஞர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்றுப் போராட அறைகூவினர்.

__________________________________________

– புதிய ஜனநாயகம், ஜூலை – 2012.

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 1. மலையாளிகள், தமிழர்களை தங்களின் முதல் எதிரியாகவே கருதுகிறார்கள்! தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதிலும், தமிழனின் மொழியை அழிப்பதிலும் தீவிர மன உறுதியோடே இருக்கிறார்கள்! மலையாளியின் இந்த சூழ்ச்சியை எந்தெந்த இடங்களில் அவன் வெளிப்படுத்த முடியுமோ அதிலெல்லாம் வெளிப்படுத்தி, தமிழனைக் கேவலப் படுத்தவும், தமிழ் மொழியை எள்ளி நகையாட வைக்கவும் அவர்களுக்குக் கிடைக்கும் சிறு சந்தர்ப்பங்களையும் அதற்குப் பயன்படுத்தி அசிங்கப் படுத்துகிறார்கள்! எடுத்துக்காட்டாக, தென்னக இரயில்வேயை தன்னுடைய அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கும் மலையாளிகள் தமிழகத்திலுள்ள ஊர்களின் பெயர்களை திரித்தும் மாற்றியும் எழுதுகிறார்கள். முகஞ்சுழிக்க வைக்கும் சிறு உதாரணம்: சென்னையின் ‘கிண்டி‘ என்ற பெயரை ஆங்கிலத்தில் ‘குண்டி‘ என்று வாசிக்கும் படி எழுதி வைத்து அதை நம்மவர்களும் வெட்கமேயில்லாமல் ‘குண்டி‘ என்றே எழுதுகிறார்கள், ஆங்கிலத்தில்!
  தகவல் தொழில் நுட்பத்துறையில் உள்ள இவர்களால், ‘சோழங்கநல்லூர்‘ என்பதை ‘ஷேஷாளிங்க நல்லூர்‘ என்று தமிழைச் சிதைத்து, ஆங்கிலத்தில் மற்றவர்களையும் எழுத வைத்திருக்கிறார்கள்.
  உச்சகட்டமாக, தமிழக எல்லைப் பகுதியான செங்கோட்டை என்ற தமிழ் பெயரை, மலையாளியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இரயில்வேயின் அறிவிப்புப் பலகையில் ‘ஸென்கோட்டை‘ என்றும் எழுதியது மட்டுமல்லாமல், நம்மவர்கள் எழுதும் தன் விவரக் குறிப்பில் (BIO-DATA) எழுதும்போது Shenkottai என்றே, சிறு பிள்ளைகளைக் கூட எழுத வைத்திருக்கிறார்கள்! …எப்படிம்மா She போடுறது சரியாகும்? Che போட்டல்லவா எழுத வேண்டும், சென்னையை அப்படித்தானே எழுதுகிறோம், அதே ‘செ‘ உச்சரிப்புதானம்மா செங்கோட்டைக்கும்? என்று கேட்டால், அப்படித்தான் எழுதணும்சார் என்று ஆணித்தரமான பதில் வேறு..! ஏம்மா இப்படி தமிழைக் கொலை செய்கிறீங்க? ஆங்கிலத்தை இப்படி அசிங்கமா எழுதுவீங்களா? தமிழ்னா கேள்வி கேட்க யாரும் இல்லேண்னா இப்படி பண்றீங்க? என்று கேட்டதற்கு, அடுத்த வாட்டி வேண்ணா திருத்திக்கிறேன்சார், என்ற பதிலைத் தந்தாலும், அடுத்தமுறை தன்விவரக்குறிப்பை(BIO-DATA) ‘படி‘ எடுக்கும் போது(Photocopy) கவனித்தால், பழைய குருடி கதவத் திறடி கதைதான்!
  மலையாளிகளின் இந்த வஞ்சக வலைபின்னல் செங்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் வரை விரிந்து பரவியிருக்கிறது. தமிழக அரசு அலுவலகத்தில் புகுந்துள்ள இந்த மலையாளிகள், அரசின் சார்பில் வழங்கப்படும் ஓட்டுநர் உரிமத்திலே செங்கோட்டையை ‘ஷென்கோட்டாஆ‘ ( Shenkottah ) என்று எழுதுகிற அதி உயர் கொடுமையை, தன்னுடைய மனைவியை கூட்டிக் கொடுத்து பதவி பெறும் கேவலமான இந்த மலையாளிகள் செய்கிறார்கள் என்றால்.., இவர்கள் தமிழர்கள் மேல், தமிழ் மொழியின் மேல் எவ்வளவு கொலைவெறி வன்மத்தோடு இருக்கிறார்கள் என்பது அய்யமே இல்லாம் புரிகிறது! தமிழர்களைச் சுரண்டி வாழும் இந்த மலையாள மண்டைவீங்கிகளுக்கு தகுந்த பதிலடியை தமிழகத்தில் வழங்கினாலொழிய இவர்கள் திருந்த மாட்டார்கள். காசிமேடுமன்னாரு.

 2. இவர்கள் தமிழகத்தில் வெடிக்க காத்திருக்கும் ஒரு ‘டைம் பாம்’. இதை புரிந்து கொள்ளவில்லையெனில் தமிழரை போன்ற முட்டாள்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். என் நண்பர்கள் ஒரு விஷயத்தை சொல்ல கேட்டிருக்கிறேன். சேலம் வழியாக கோவைக்கு போய் கேரளாவுக்குள் நுழையும் ரயிலில் ஓப்பன் கம்பார்ட்மெண்டில் இவர்கள் கால் நீட்டி படுத்து தூங்கிக்கொண்டு வருவார்களாம்.நம்மவர்கள் நின்று கொண்டே போகவேண்டும். அருகில் நிற்பவர்கள் மலையாளத்தில் சம்சாரிப்பது தெரிந்தால் மெதுவாக காலை நகர்த்தி உட்கார இடம் கொடுப்பார்களாம். அவ்வளவு இன மற்றும் மாநில பற்று!. இப்போது எப்படி என தெரியவில்லை. தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு தொழில்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆதிக்கம் செய்வது மட்டுமன்றி மாநில அரசின் கீழ் வரும் நிறுவனங்களிலும் இவர்கள் இருக்கிறார்கள். இவை எல்லாவற்றையும் நாம் பொறுத்துக்கொள்ளலாம்.ஆனால் இவர்களுக்கு தமிழர்கள் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி இருக்கிறதே, அதை சொல்லில் வடிக்க முடியாது. என்ன செய்வது தமிழர்கள் நிலை அப்படி!

 3. தோழரே உங்கள் வருத்தம் புரிகிறது! நம் தமிழ் நாட்டில் உள்ள மரபை நினைத்து பாருங்கள் சேர,சோழ, பாண்டியன் காலத்தில் ஒன்றாக இருந்த மாகாணம் தான் மொழி வாரியான மாகாநங்கலாக பிரிதபொழுதுதான் கேரளாவாக மாறி உள்ள்ளது என்பதை உணர்த்துவோம் . தமிழன் என்றும் தரம் தாழ மாடான்.

  • அன்றைக்கு இருந்த சேர நாடு வேறு, இன்று இருக்கும் கேரளா வேறு. இன்று கேரளத்தில் உண்மையான சேரர்கள் மிகக்குறைவு. பெரும்பாலானவர்கள் கலப்பினத்தவரே. மேலும் நம் தமிழகத்தின் நிலை அரசியல் என்றாலும் சுகாதாரம் என்றாலும் படு கேவலமாக இருக்கிறது. ஆகையால் அவர்களின் காழ்ப்புணர்ச்சியை பற்றி புரிந்து கொள்ளாமல் எதையாவது கற்பனை செய்யாதீர்.

 4. கடந்த நான்கைந்து நாட்களாக இரு மாநிலங்களிலும் எல்லையோரங்களில் பதட்டங்கள் ஏற்பட்டுள்ளன. இரு மாநிலங்களிலும் மற்ற மாநிலத்தவர்களின் கடைகள் தாக்கப்படுகின்றன. இன்றைய நாளிதழ்ச் செய்திகளின்படி இங்கே கோவையில் மட்டும் 37 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து வேலைக்குச் சென்ற தொழிலாளிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களெல்லாம் கேரளத்தில் தாக்கப்படுன்றனர். தற்போது நடந்து கொண்டுள்ள இந்த வன்முறைகளையும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளையும் பொருத்த மட்டில் கேரள அரசியல்வாதிகளுக்கே பெருத்த பங்கிருக்கிறது. சென்ற மாதம் பெய்த கடும் மழையில் முல்லைப் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கிய உடனேயே கட்சி வேறுபாடுகளின்றி அணை உடையும் பீதிப் பிரச்சாரத்தைப் பல்வேறு வடிவங்களில் அவர்கள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். பெரிய அளவில் போட்டிபோட்டுக் கொண்டு போராட்டங்களையும் கேரளக் கட்சிகள் நடத்தத் தொடங்கின. இது இங்கேயும் கடும் எதிர்வினைகளைத் தோற்றுவித்தது. இயக்கங்கள் நடத்திய போராட்டங்களுக்கு அப்பால் முல்லைப் பெரியாறு அணைப் பாசன விவசாயிகள் தன்னெழுச்சியாகத் திரண்டு கேரளத்திற்குச் செல்லும் வாகனங்களைத் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக அமைந்தது.

 5. ‘‘தண்ணீர், பாதுகாப்பு போன்ற விஷயங்களை எல்லாம் தாண்டி கேரளத்திற்கு மிகப்பெரிய அநீதி கடந்த ஒரு நூற்றாண்டாக இழைக்கப்பட்டிருப்பதாக இந்த ஐயர் மலையாளிகளுக்காக மாலை மாலையாக கண்ணீர் வடிக்கிறார். முல்லைப் பெரியாறு முழுக்க முழுக்க கேரளத்திற்கே சொந்தமாம்! இதில் தமிழ்நாடு உரிமை கொண்டாடுவதில் எந்த நியாயமும் இல்லையாம்! இருந்தாலும் கேரளம் பெரிய மனது பண்ணி புதிய அணை கட்டி தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவதாகத்தான் கூறுகிறார்களாம்’ என்றெல்லாம் கேரளத்திற்கு வக்காலத்து வாங்கும் இந்த ஐயர், ‘1886 ஆம் ஆண்டைய ஒப்பந்தமே அடிப்படையில் அபத்தமானது!’ என்றெல்லாம் உளறுகிறார்.

 6. இந்த மலயாளிகளின் மொழி மற்றும் இனவெறியை மைய அரசு / சொந்தமான பொதுதுறைநிற்ர்வனஙகளில் நிறைய காணலாம்.எங்கிருந்தாலும் ஒட்டுண்ணியை போல் பரவி விடுவார்கள்.தங்கள் ஆதிக்கத்தைந நிலைநிருத்துவதே அவர்களது குறிக்கோளாக இருக்கும்.தங்களை சேர்ந்தவர்களையே முக்கிய பதவிகளில் அமருமாறு பார்துக்கொள்வார்கள்.தங்களது மொழிவெறியை சற்றும் அச்சமோ வெத்கமோ இன்றி வெளிப்படுதுவதிலும்நடைமுரைப்படுதுவதிலும் சளைத்தவர்கள் இல்லை.எடுத்துக்காட்டாக சமீபத்தில் செய்திதாள்களில் வந்த இரு செய்திகளை பார்க்கலாம்.சென்னை அண்ணானகரில் தெற்கு ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் படிவஙளை மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் மட்டுமே அச்சடித்து வினியோகிதார்கள்.தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பால் விலக்கிகொண்டார்கள்.பி.எச்.என்.எல் கை பேசி மறு தொகை உள்ளீடு செய்யும் அட்டையை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மட்டுமே அச்சடித்து சென்னையில் வினியொகித்தார்கள்.தாங்கள் பெரும்பான்மையாக உள்ளநிறுவனகளில்நடைபெரும் ஒப்பந்த புள்ளி வேலைகளில் மலையாளிகலே வருமாறு பார்துக்கொள்வார்கள்.சிறு சிறு வேலைகளுக்கு கூட மலையாளிகளை தேடிப்பிடித்து தருவார்கள்.சிறுபான்மையாக இருந்தால் தேசிய முகமூடி அணிவார்கள்.தாங்கள் மட்டுமே திறமையானவர்கள் என்ற சோடனையை உருவாக்குவார்கள்.இவர்களின் இந்த பாசாங்கில் தமிழ் அதிகாரிகள் ஏமாந்து போவார்கள்.பின்னர் வருந்துவார்கள்.மலையாளிகளின் இந்த போக்கை புரிந்து கொண்டு தமிழர்கள் தங்களின் இன உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.

 7. மலையாளிகள் எவ்வளவு கீழ்த் தரமாக நடந்து கொண்டாலும் அது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் படி சரி. ஆனால், தமிழ் – தமிழினம் என்று எவராவது பேசினால், அது குறுந்தேசிய இனவெறி. அது தான் வினவின் இலக்கணம். ஆக, தமிழர்களே, உங்கள் இனம் – மொழி வெறியைக் கைவிட்டு வெறும் பாட்டாளிகளாக உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுங்கள். மலையாளி நம்மை அடித்து துவம்சம் செய்தாலும் நாம் அடிவாங்கிக் கொண்டு தான் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தைக் காப்பாற்ற வேண்டும்.!

  • நீங்கள் அப்படி கருதிக்கொண்டால் அதற்கு பெயர் சர்வதேசியம் அல்ல பரத்.
   ம.க.இ.க மணியரசன் கும்பலை போல தேசியவாத பாசிஸ்டுகளாக சீரழிந்து போகாமல் சர்வதேசவாதிகளாக இருப்பதாலேயே இப்படி எல்லாம் சொல்லலாமா ?

 8. கேரள இனவெறிக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டங்களை நீங்கள் கேரளாவுக்கு போய் அங்கிருக்கும் உழைக்கும் வர்க்கத்தினர் உதவியுடன் அங்கே அல்லவா நடத்த வேண்டும்? இங்கே தமிழகத்தில் நடத்துவதால் என்ன பயன்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க