டக்குமுறைதான் ! ஜனநாயகமா? என்ற தலைப்பில் வருகிற செப்-08 அன்று திருச்சியில் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்தவிருக்கிறது, மக்கள் அதிகாரம். கடந்த ஆகஸ்டு 18 அன்று, வேதாரண்யம் கடைவீதியில் இம்மாநாடு நடத்தப்படுவதன் நோக்கத்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தும் மாநாட்டு செலவினங்களுக்காக மக்களிடம் நன்கொடையும் திரட்டிக் கொண்டிருந்தனர், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள்.

அன்று நள்ளிரவு 2 மணிக்கு மக்கள் அதிகாரத்தைச் சேர்ந்த தோழர் தனியரசு வீட்டிற்கு சென்ற வேதாரண்யம் போலீசு இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் எஸ்.ஐ. அன்பழகன் உள்ளிட்ட நான்கு போலீசார் தோழர் தனியரசுவை சட்டவிரோதமான முறையில் கடத்திச் சென்றனர்.

அப்போது, பீரோ உள்ளிட்டு வீடு முழுவதையும் சோதனையிட்டதோடு, மக்களிடம் விநியோகிப்பதற்காக வைத்திருந்த திருச்சி மாநாட்டுப் பிரசுரங்களை அள்ளிச்சென்றனர்.

சாதாரண மக்கள் சட்டப்படியேக்கூட வாழமுடியவில்லை என்பதோடு, அடக்குமுறைதான் ஜனநாயகம் என்பதை தமது நடைமுறையின் மூலம் மீண்டுமொருமுறை நிருபித்திருக்கிறது, வேதாரண்யம் போலீசு.

”தங்களது நடவடிக்கை சட்டவிரோதமானது. எதற்காக தனியரசுவை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?” என்று வழக்கறிஞர்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் வேதாரண்யம் போலீசு இன்ஸ்பெக்டரிடம் விசாரித்த போது, தாம் தனியரசுவை கைது செய்யவில்லை என்று திமிராகப் பேசியுள்ளார்.

இதற்குப் பின்னரே, தோழர்கள் தனியரசு மற்றும் வெங்கடேசன் ஆகியோர், ”போலீசுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் போராடுமாறு மக்களுக்கு அறைகூவல் விடுத்து சுவரொட்டி ஒட்டினார்களாம், தூத்துக்குடி மாடல் வளர்ச்சி என்று பேசி, மக்களிடையே கிளர்ச்சியை உண்டுபன்ன முயற்சித்தார்களாம்.”. ஆகவே, அவர்கள் மீது ஐ.பி.சி. 153-18,  190-18 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தனர், வேதாரண்யம் போலீசார்.

தனியரசுவின் சட்டவிரோதக் கைதை கண்டித்தும் போலீசின் சதியை அம்பலப்படுத்தியும் உடனடியாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.

கைது செய்யப்பட்ட தோழர்களை, நாகை நீதிமன்றத்தில் நேர்நிறுத்திய போது, இரண்டு சட்டப்பிரிவுகளில் ஒரு சட்டப்பிரிவின்கீழ் பிணை வழங்க மறுத்துவிட்டது, நீதிமன்றம். நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர், இரு தோழர்களும்.

சாதாரண மக்கள் சட்டப்படியேக்கூட வாழமுடியவில்லை என்பதோடு, அடக்குமுறைதான் ஜனநாயகம் என்பதை தமது நடைமுறையின் மூலம் மீண்டுமொருமுறை நிருபித்திருக்கிறது, வேதாரண்யம் போலீசு.

பொய் வழக்குகளுக்கும் அடக்குமுறைக்கும் அஞ்சாமல் எமது போராட்டம் தொடரும்.

மக்கள் அதிகாரம், வேதாரண்யம்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க