மத்திய மாநில அரசுகளின் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையைக் கண்டித்தும்; வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்க நினைக்கும் மத்திய அரசின் பாசிசப் போக்கினைக் கண்டித்தும் செப்-04 அன்று நாகர்கோயில் நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முற்போக்கு வழக்கறிஞர் அமைப்பு (PLF) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மூத்த வழக்கறிஞர்கள் பாலஜனாதிபதி, ராஜ குஞ்சரம், வி.சி.க.வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பா.இளவரசு, கணேஷ், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் வே.சதா மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் அருள்மாறன், எழிலரசு, சிவராஜபூபதி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

  • வினவு களச்செய்தியாளர்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க