லே ஆஃப், சரியா தவறா – ஒரு கேள்வி, பல பதில்கள்
சிகரெட் குடிக்கிறது நல்லதா அப்படீன்னு ஒரு கேள்வியை கேட்டால்?
இந்தக் கேள்வியை ஒரு 5 வயது பையனிடம் கேட்கும் போது, “தப்பு சார், 5 வயசு பையன் சிகரெட் குடிக்கலாமா?” அப்படின்னு பதில் வரும்.
இந்தக் கேள்வியை ஒரு 10-வது படிக்கிற பையனிடம் கேட்டால், “இப்பதான் சார், ஏதோ ஃபிரெண்ட்ஸ் சொன்னாங்கன்னு சொல்லி ஆரம்பிச்சிட்டோம். விட முடியல, தப்பு சார், நான் சீக்கிரம் விட்டுருவேன்.
கொஞ்சம் தள்ளி போய் ஒரு காலேஜ் படிக்கிற பையனிடம் கேட்டேன், “சார், லைஃப்ல எப்பதான் சார் எஞ்சாய் பண்றது. இதெல்லாம் தப்பு கிடையாது சார், அப்பா காசில குடிக்கிறது தப்புதான். இருந்தாலும், நான் சம்பாதிச்ச பிறகு இன்னும் நிறைய, பெட்டராவே, ஒரு நாளைக்கு ஒன்னு ரெண்டுன்னு குடிக்கிறத விட ரெண்டு பாக்கெட், மூணு பாக்கெட் குடிப்பேன் சார்” அப்படீன்னு ஒரு பதில் வரும்.
சரி, அதே கேள்வியை வேலைக்கு போய் கைநிறைய சம்பாதிக்கும் போது கேட்டா, “ஏய் இதெல்லாம் கேக்கறதுக்கு நீ யாரு? who are you to say about this? என்னுடைய பெர்சனல், என்னோட தனிப்பட்ட விஷயத்தில தலையிட நீ யாரு? don’t you know basic manners” என்று ஒரு பதில் வரும்.
ஆனா, கேள்வி ஒண்ணே ஒண்ணுதான், சிகரெட் பிடிப்பது வீட்டுக்கு நாட்டுக்கு கேடு என்பதை தெளிவாக எழுதினால் கூட பதில்கள் வெவ்வேறாக உள்ளது. சரி, ஏன் இதை பேசறோம்? யூனியன் சார்பா இதை ஏன் பேசுகிறோம்?
கேள்வி, “லே ஆஃப் நல்லதா”. இந்தக் கேள்வியை ஒரு fresher கிட்ட வைக்கிறேன். இப்பதான் காலேஜ் முடிச்சிட்டு போயி ஒரு கம்பெனில ஜாயின் பண்ணியவர் கிட்ட கேட்டா, “சார் நான் இப்பதான் ஜாய்ன் பண்ணியிருக்கிறேன், முதலாளி எது பண்ணாலும் நல்லதுதான் போலிருக்கு” என்று சொல்வார்.
சரி, ஒரு 5 வருசம் எக்ஸ்பீரியன்ஸ் ஆனவர்கிட்ட போய் கேட்டா, “சார் நான் இப்பதான் லோன் வாங்கி மூணாவது வருஷம் ஈ.எம்.ஐ. கட்டிகிட்டு இருக்கேன். லேஆஃப் தப்புதான் சார், நாங்க இங்கதான் டிரெயின் ஆகியிருக்கோம். லே ஆஃப் தப்பு”ம்பாரு.
ஒரு 15 இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் எம்ப்ளாயி கிட்ட கேட்டா, “சார், நான் இப்பதான் சார் மூணாவது வீடு ஈ.எம்.ஐ. முடிச்சிருக்கேன். லேஆஃப் தப்புதான் சார். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வேலை செய்து, உடல் நலத்தை எல்லாம் காம்பரமைஸ் செய்து கொண்டு, நெஞ்சு வலி வந்தாலோ, முதுகு வலி வந்தாலும் ஆஸ்பிட்டல்லையே அட்மிட் ஆனாலும், தூக்கத்தை மறந்து வேலை செய்து கிட்டு இருகேன் சார், எப்படி இருந்த கம்பெனி, வெறும் 1000 பேர் வேலை செஞ்ச கம்பெனி 1 இலட்சம் பேர் கம்பெனி ஆனதுன்ன என் உழைப்புதான் சார் காரணம். பாருங்க லேஆஃப் தப்புதான் சார்” னு சொல்லுவாங்க.
- ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுன்டா!!
- ஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை ! சாதித்தது பு.ஜ.தொ.மு
- ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?
ஒரு காலேஜ் கிராஜுவேட் கிட்ட போனா, “இண்டஸ்ட்ரியே புரிய மாட்டேங்குது சார், திடீர்னு சம்பாதிக்கிறாங்க, திடீர்னு வேலைய விட்டு தூக்குறாங்க, என்னன்னு புரிய மாட்டேங்குது சார்”
ஒரு 25 years experience இருக்கிற ஒரு title holder கிட்ட போய் கேட்டீங்கன்னா, “சார், national interest-ல லேஆஃப் சரிதான் சார், எங்க கையில ஒண்ணுமே கிடையாது சார். போர்டு என்ன சொல்லுதோ அதைச் செய்றேன், ஒரு அடியாட்கள் நாங்க, அவங்க சொல்றாங்க நாங்க செய்றோம், அதுக்குத்தான் எங்களுக்கு சம்பளம் கொடுக்கிறாங்க. CEO வே board சொல்றத கேட்க வேண்டிய ஒரு ஆள், அவ்வளவுதான்”
இப்படித்தான் பதில் வரும்.
சரி ஒரு share holder கிட்ட போய் கேட்டு பாருங்க லே ஆஃப் நல்லதான்னு, “கண்டிப்பா நல்லது சார், profit முக்கியம், profit வைச்சுதான் நான் எந்த கம்பெனியிலயும் இன்வெஸ்ட் பண்ணுவேன்”
சரி, ஒரு mutual fund கம்பெனில போய் கேட்டு பாருங்க, “லே ஆஃப் நல்லதா”ன்னு. “சார் லே ஆஃப் நல்லதா கெட்டா என்கிறத விட, லேஆஃப்-ங்கிற நியூசை வைச்சுகிட்டு நான் எவ்வளவு பிரேக் பண்றேங்கிறதுதான் எனக்கு முக்கியம். ஒரு லே ஆஃப் இந்த கம்பெனில நடக்கப் போகுதுன்னா, அந்த கம்பெனில இலாபம் அதிகமாகும்னு சொல்லிட்டு அந்த கம்பெனி ஷேர நான் accumulate பண்ணுவேன். இந்த நியூஸ் வந்திச்சின்னா, அந்த நியூச நாங்க காசாக்குவோம். ஒரு லே ஆஃப் நல்லதா கெட்டதா என்று இல்லை. ஒரு கம்பெனில லே ஆஃப்-ஏ நடக்கலைன்னா, மார்ஜின் பெருசா இம்ப்ரூவ் ஆகாது. ஆனா லேஆஃப் நடக்குதுன்னு நடக்கும் போது சந்தையில ஏற்றம் இறக்கம் இருக்கும். மியூச்சுவல் ஃபண்ட் கம்பெனியா அதுல எனக்கு யூஸ் இருக்கும்” அப்படீன்னு ஒரு பதில் வரும்.
ஒரு CA கிட்ட போய் கேட்டீங்கன்னா, CA-ன்னா, வேற ஒண்ணுமில்லை. முதலாளியோட அல்லக்கைகள். board of directors, executives, கருப்புப் பணத்தை எல்லாம் எப்படி save பண்ணணும், எப்படி வெள்ளையாக்கணும். என் முதலாளி என்ன சொல்றாரோ அதுக்கு அப்படியே ஜால்ரா தட்றது. ஒரு CA. அவர் பேச்சை எல்லாம் நாம் கேட்கணும்னு அவசியம் இல்லை.
அடுத்து, ஒரு முதலாளி கிட்ட போய் கேளுங்க, “லே ஆஃப் நல்லதா”ன்னு. “ஆமா சார், வேலை செய்யாதவனை எல்லாம் எப்படித்தான் இது பண்றது. 15 வருஷமா வேலை செய்துகிட்டு இருந்தான். திடீர்னு ஒரு நாள் எனக்கு தெரிஞ்சிருச்சி. இலாபம் குறையறது மாதிரி இருந்தது. இவனுக்கு அதிகம் சம்பளம் அதிகம் கொடுக்கிறோம்னு திடீர்னு கண்ண முழிச்சி தெரிஞ்சுகிட்டேன். அதனால் எனக்கு வேணாம். லே ஆஃப் நல்லதுதான் நாட்டோட வளர்ச்சிக்கு, ஏன்னா, அவனவனை திருத்திக்கிறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். வேலையை விட்டு அனுப்பினேன்னா, அவனே நடு ரோட்டுக்குப் போய் பிச்சை எடுத்து வாழ்க்கையை புரிஞ்சிகிட்டு, நான் சொல்றதை எல்லாம் கேட்டுகிட்டு, பாதி சம்பளத்துக்கு வந்துருவான் சார். அதனால், லே ஆஃப் நல்லது” என்பார்.
கடைசியில, யூனியன்கிட்ட கேட்டா, எந்த யூனியனும் ஒரே குரல்ல சொல்றது, “லேஆஃப் என்பது தவறு, லே ஆஃப்னால நாட்டுக்கு இந்த சமுதாயத்துக்கு கேடு, தனிநபர்கள் சேர்ந்ததுதான் சமுதாயம். லே ஆஃப் என்பது தனிநபரை மட்டும் பாதிக்கலை. இந்த சமூகத்தையே பாதிக்கும். எனவே, லே ஆஃப்ஐ எதிர்த்து குரல் கொடுப்போம்”
நன்றி : new-democrats இணையதளத்தில் வெளியான கட்டுரை.