ஜா புயலின் கோரத்தாக்குதலுக்கு ஆளான ஏழை எளிய மக்களுக்கு கடந்த பத்து நாட்களுக்குமேலாக பல்வேறு பகுதிகளிலிருந்து நிவாரணப் பொருட்களைத் திரட்டி  பல கிராமங்களில் வழங்கி வருகிறோம். இதுவரை சுமார் 18 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் வினியோகிக்கப்பட்டு, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி சேதமான வீடுகளைச்  சீரமைப்பது, கீற்று வேய்வது, இடிபாடுகளை அப்புறப்படுத்துவது, சாய்ந்த மரங்களை அறுத்து அகற்றுவது என புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு யாரும் செய்யாத இத்தொண்டு மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்று வருகிறது.

வேதாரண்யம் ஆயக்காரன்புலத்தில் நண்பர் ஒருவரது வீட்டில் சேகரித்து வைத்து வினியோகித்து வருகிறோம். இந்நிலையில் நவம்பர் 27-ம் தேதியன்று பிற்பகல் வாய்மேடு காவல் ஆய்வாளர், சில போலீசுடன் வந்து இடம் கொடுத்து உதவிய நண்பரிடம் ‘’யாரைக் கேட்டு இடம்கொடுத்தீர்கள், எந்த ஊரிலிருந்து என்ன பொருள் வந்துள்ளது’’ என மிரட்டியுள்ளார். வேதாரண்யம் வட்டார மக்கள் அதிகார அமைப்பாளர் தோழர் தனியரசுவிடம், ‘’வெளியூர்க்காரர்கள் அனுமதியில்லாமல் எப்படி வரலாம்?’’ என மிரட்டல் தொனியில் பேசியுள்ளார். இதற்கு தோழர் தக்க பதிலடி கொடுத்ததும், எப்போது கூப்பிட்டாலும் காவல் நிலையம் வரவேண்டும் எனக் கூறிச் சென்றுள்ளனர்.

படிக்க:
ஊடக உலகில் வினவு தளத்தின் அவசியம் என்ன ? வாசகர் சர்வே
திருப்பூர் – விவசாயியைக் ’கொன்ற’ கோடக் மஹிந்திரா வங்கி – போலீசு – நீதிமன்றம்

வாய்மேடு போலீசின் இந்த மக்கள் விரோத அராஜகச் செயலை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. நிவாரணப் பணிகளைத் தடுத்த வாய்மேடு காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து உடனே பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம். இது குறித்து வேதாரண்யம் வட்டாட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரமாக மக்கள் சொல்லொணாத்துயரில் தவிக்கும் நிலையில் நிவாரணப்பணிகளைத் தடுக்கும் போலீசின் இந்த மக்கள் விரோத அராஜகச் செயலை அனைவரும் கண்டிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

காளியப்பன்,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
கைபேசி: 94431 88285

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க