ங்கெல்லாம் மாற்றுக்குரல், விமர்சன குரல் எழுகிறதோ அங்கெல்லாம் ஆர்.எஸ்.எஸ்.-பாஜக காவிப்படை வன்முறையை கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது. லயோலா கல்லூரியில் இந்துத்துவ பயங்கரவாதத்தை விமர்சித்த தோழர் முகிலனின் ஓவியங்களுக்கு எதிராக பொங்கிய காவி கும்பல் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தக் கல்லூரியை மன்னிப்பு கேட்க வைத்தது.

தமிழகத்தில் தனது ரவுடித்தனத்தை காட்டினால் கதை கந்தலாகிவிடும் என தெரிவிந்து வைத்திருக்கிற காவிகள், அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டுவார்கள். ஆனால், சங்கிகள் காலூன்றிவிட்ட மாநிலங்களில் அவர்களின் ரவுடித்தனத்தை வேறு கட்சிகள் ஆண்டாலும்கூட தடுக்க முடிவதில்லை.

சிவ் விஸ்வநாதன்

சமீபத்தில் கர்நாடகாவில் ‘தார்வாட் சாகித்ய சம்மேளன்’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில், ‘தேசியவாதம்: சமகால சூழலில் கருத்து முரண்பாடுகள்’ என்ற தலைப்பில் கல்வியாளர் சிவ் விஸ்வநாதன் பேசினார். தேசியத்தின் பெயரால் அசாம் மற்றும் காஷ்மீரில்  நடந்த அத்துமீறல்களை தனது கருத்துரையில் சுட்டிக்காட்டினார்.  தேசியத்துக்கு எதிரானவர் என்ற சொல்வதே தன்னை இந்தியனாக்கும் என பேசிய அவர், “ஜனநாயக முறையில் கேள்வி கேட்பதை நாம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகப்படியான உரையாடல்கள், விவாதங்கள் வரலாற்றின் புதிய கோணத்துக்கு ஒளி பாய்ச்ச உதவும்.  அதோடு, இந்த நாட்டின் பன்மைத்துவத்தையும் வேறுபாட்டையும் புரிந்துகொள்ள உதவும்” என்றார்.

சிவ் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருக்கும் போதே பலர் இடைமறித்தனர். அதில் முன்னாள் ராணுவ அதிகாரிகளும் அடக்கம்.  விஸ்வநாதன், ராணுவத்தின் மீதான குற்றச்சாட்டை பொதுமைப்படுத்துவதாக தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கே.வி. அக்சர், விஸ்நாதனை முழுமையாக பேச விடும்படி கேட்டுக்கொண்டார். பேச்சின் முடிவில், கூட்டத்தில் இருந்த பலர் கேள்விகளை எழுப்பினர்.

படிக்க:
♦ திரிபுராவில் பாஜக காலிகள் வெறியாட்டத்தைக் கண்டித்து புதுவை – மதுரை ஆர்ப்பாட்டம் !
♦ பேராசிரியரை காலில் விழவைத்த ஏ.பி.வி.பி. குண்டர்கள் !

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சித்தலிங்கையா ஹிரேமத், விஸ்வநாதன் தன்னுடைய கருத்துக்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.  நாடக ஆசிரியர் கே.வி. அக்‌ஷரா மற்றும் மொழியியலாளர் கணேஷ் தேவி ஆகியோரின் தலையீட்டின் பேரில் நிலைமை அப்போதைக்கு கட்டுக்குள் வந்தது.

ஆனால், மூன்று நாள் நிகழ்வை முடித்து வைக்கும் வகையில் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றியுரை ஆற்றும்போது மேடையேறிய ஆர்.எஸ்.எஸ். காக்கி உடையணிந்த பாஜக இளைஞரணியைச் சேர்ந்தவர்கள், அடிப்படை நாகரிகம் இல்லாமல், பேசிக்கொண்டிருந்தவரின் மைக்கைப் பிடுங்கி வீசி ஏறிந்தனர். மேடையிலிருந்து நாற்காலிகளை தூக்கி உடைத்தனர். பேனர்களை கிழித்தனர்.  காவிகளின் ரவுடித்தனத்தை கை கட்டிப் பார்த்த போலீசு மெதுவாக வந்து அவர்களை அப்புறப்படுத்தியது.  கூட்டத்தில் இருந்த காவிகள் பலர், முழுக்கங்களை எழுப்பினர்.  அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

விஸ்வநாதனை பேச அழைத்ததற்காக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என ஊடகத்துறை மாணவர்கள் வலியுறுத்தியதாகவும் அதன்படி அவர்கள் மன்னிப்பு கேட்டதாகவும் ஊடகங்கள் சொல்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் பி.எல். சந்தோஷ் மற்றும் தார்வாட் தொகுதி பாஜக எம்.பி. பிரஹலாத் ஜோசி ஆகியோர் விஸ்வநாதனின் பேச்சு குறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளனர்.

காவி தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட கௌரி லங்கேஷ், “கர்நாடகம் காவிகளின் நுழைவாயில்” என சுட்டிக்காட்டியிருந்தார். அந்த வகையில் காவிகள் காலூன்றி விட்ட கர்நாடகத்தில், அடிப்படையான ஜனநாயக உரிமைகள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகின்றன. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவிகளின் தீவிரவாதம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. இது நம் அனைவருக்குமான எச்சரிக்கை!

கலைமதி
செய்தி ஆதாரம்: தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க