சிஏஜி அறிக்கை : மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறுகிறது !

ரஃபேல் விமானங்களை வாங்கியதில் மோடி அரசு செய்த முறைகேடுகளை ஊடகங்கள் ஆதாரங்களோடு வெளியிட்டுவருகின்றன. ரஃபேல் விமானங்கள் வாங்கியது குறித்த மத்திய தணிக்கை குழு அறிக்கை வெளியிடப்படாது என குற்றச்சாட்டுகள் வெளியான போதெல்லாம் மறுத்து வந்தது மோடி அரசு.

இந்நிலையில், தேர்தல் நேரத்தில் வெளியான ஊடக செய்திகளின் அழுத்தம் காரணம் நாடாளுமன்றத்தில் மத்திய கணக்கு தணிக்கை குழுவின் அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது மோடி அரசு.

முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு சிஏஜி அறிக்கை பதில் சொல்லும் என மோடி தரப்பினர்  அறைகூவல் விடுத்த நிலையில், அந்த அறிக்கையும்கூட மோடி செய்த தகிடுதத்தங்களை முழுமையாக மறைக்க முடியாமல் வெளி வந்திருக்கிறது.

சிஏஜி அறிக்கையில் உள்ள சில அம்சங்களை(முறைகேடுகளை)ப் பார்ப்போம்…

♥ 2012-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் விடப்பட்ட ஏலத்தில் டஸால்ட் ஏவியேசன் நிறுவனம் குறைந்த விலை ஏலம் கேட்கவில்லை என்பதை 36 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான தேவை குறித்து பிரதமர் மோடி அறிவிப்பதற்கு ஒரு மாதம் முன்னர்தான் பாதுகாப்பு அமைச்சகத்தின் குழு கண்டறிந்தது. அதனால்தான் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பதையும் அக்குழு தெரிவித்திருக்கிறது.

மோடி குழாம் (கும்பல்),  குறைந்த விலையை சொன்னதாலேயே டஸால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டதாக புளுகி வந்தது. பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்ட டெண்டரில் டஸால்ட் நிறுவனம் குறைந்த விலையை கோரியதால், அவசர நிலையில் ஒப்பந்ததை கையெழுத்திட வேண்டியிருந்தது என்றார். தணிக்கை குழுவின் அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகத்தின் குழு டஸால்ட் நிறுவனம் குறைந்த விலைக்கு ஏலம் கேட்கவில்லை என கூறுகிறது.

பாதுகாப்புத் துறை தொடர்பான உடன்படிக்கை இந்திய அரசுக்கும் பிரான்ஸ் அரசுக்குமானது இதில் நிறுவனம் நேரடியான தொடர்பில் வர எந்த தேவையும் இல்லை என பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க:
♦ ரஃபேல் ஊழல் : அம்பலமானது அடுத்த ஆதாரம் !
♦ திருச்சி மாநாடு அனுமதி மறுப்பு : ரஃபேல் ஊழல் பாடலை கோவன் பாடக் கூடாதாம் ! இதோ அந்தப் பாடல் !

♥ 2012-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு ஏலம் கோரியவருக்கு ஒப்பந்தம் என முடிவான பிறகு, விலைமதிப்பீட்டு முறையில் முறையற்ற தன்மை இருந்ததாகக் கூறி சில எம்.பி-க்கள் உள்பட பலர் குற்றம்சாட்டியிருந்ததாக சிஏஜி அறிக்கை கூறுகிறது. இதன் அடிப்படையில் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, அந்த ஆண்டின் ஜூன் மாதம் அமைச்சரவை அதிகாரிகளை அமைத்து, முழு செயல்பாட்டையும் மீண்டும் ஒரு முறை சரிபார்க்க சொன்னார் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதன் அடிப்படையில் பாதுகாப்புத் துறை அமைச்சரவை அலுவலர்கள் 2015-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஒரு அறிக்கையை சமர்பித்தனர். அந்த அறிக்கையில் ‘டஸால்ட் நிறுவனம் குறைந்த விலைக்கு ஏலம் கோரவில்லை, எனவே, அவர்களுடன் ஒப்பந்தம் செய்ய முடியாது’ என தெரிவித்திருந்தனர்.

டஸால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என அமைச்சக அலுவலர்கள் அறிக்கை அறிவுறுத்திய போது, மோடி அரசு அந்நிறுவனத்துடன் விடாப்பிடியாக ஒப்பந்தம் செய்துள்ளது. வெளிப்படையான காரணம் எதுவும் இல்லாத நிலையில், மோடி அரசு ஊழல் முகாந்திரத்துடன் அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த அறிக்கை வெளியான அடுத்த மாதமே பாரீஸ் போன மோடி, அதாவது ஏப்ரல் 2015-ம் ஆண்டு 36 விமானங்களை வாங்குவதாக அறிவிக்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சர் அல்ல, மோடியே நேரடியாக இந்த ஊழலில் முக்கிய புள்ளியாக செயல்பட்டிருக்கிறார் என்பதை வெட்ட வெளிச்சமாக்குகிறது சிஏஜி அறிக்கை.

♥ சிஏஜி அறிக்கையும் ரஃபேல் போர் விமானங்களின் விலையை கூறவில்லை. எனினும் முந்தைய  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு போட்ட ஒப்பந்ததைக் காட்டிலும் மோடி ஒப்பந்தத்தில் கூறப்பட்ட விலை 2.86% குறைவு என சிஏஜி கூறுகிறது.

மோடி குழாம் தாங்கள் செய்த ஒப்பந்தப்படி போர் விமானங்களின் விலை முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசினுடையதை விட குறைவு என பல்வேறு சமயங்களில் தெரிவித்து வந்தது. ‘பாதுகாப்பு’ காரணங்களைக் கூறி ரஃபேல் விமானங்களின் விலையை வெளிப்படையாக சொல்லாத நிலையில், விமானங்களின் விலை 9% முதல் 20% வரை குறைவு எனக் கூறியது மோடி அரசு.  ஆனால், இப்போது சிஏஜி அறிக்கை வெறும் 2.86% மட்டுமே குறைவு என சுட்டிக் காட்டுகிறது.

முந்தைய அரசின் தொழிற்நுட்ப பரிமாற்றத்துடன் கூடிய 108 விமானங்கள் மற்றும்  18 பறக்கு நிலை விமானங்களின் விலையுடன் தற்போதைய ஒப்பந்தத்தின் கீழ் 18 பறக்கும் நிலையில் வாங்கப்படும் விலையுடன் ஒப்பீடு செய்து சிஏஜி இந்த அறிக்கையை தயாரித்துள்ளது. எனவே, 2.86% விலை குறைவு என்பதும்கூட சரியான ஒப்பீட்டில் கணக்கிடப்பட்ட விகிதம் அல்ல என்பது தெளிவாகிறது.

படிக்க:
♦ தூய்மை இந்தியா பெயரில் ரூ. 4000 கோடி அபேஸ் செய்த மோடி அரசு !
♦ ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

♥ ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒப்பந்தத்தில் 72 மாதங்களில் விமானங்கள் இந்தியாவிடம் அளிக்கப்படும் என தெரிவித்தது. மோடி அரசு 71 மாதங்களில் விமானங்கள் ஒப்படைக்கப்படும் என  ஒப்பந்தம் போட்டிருக்கிறது. ஆக, மொத்தம் ஒரு மாத காலத்தை மிச்சம் பிடித்திருக்கிறது மோடி அரசு. சிஏஜி அறிக்கை இதைக்கூறுகிறது!

♥ மோடி குழாம் முந்தைய 2007-ம் ஆண்டின் ஒப்பந்தத்தைவிட கூடுதல் வசதிகள் செய்யப்படாத போர் விமானங்களின் விலை 9% குறைவு என சொன்னது. ஆனால் சிஏஜி அறிக்கை இரண்டு ஒப்பந்தங்களின் விலையிலும் எந்த மாற்றமும் இல்லை என்கிறது.

ஆக, மொத்தத்தில் ரஃபேல் முறைகேடு குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் சிஏஜி அறிக்கை விளக்கமளித்துவிட்டதாக மோடி குழாம் சொல்லிக்கொண்டாலும், மோடியின் நேரடி ஊழலை மறைக்க திணறுகிறது இந்த அறிக்கை.

அனிதா
நன்றி: தி பிரிண்ட்தி இந்து