”தெய்வம் தொழாஅள்” என்ற குறளானது பெண்அடிமைத்தனம் அல்ல,
மாறாக இது ஒரு பார்ப்பனிய எதிர்ப்புக்கலகக் குரல் – வி.இ.குகநாதன்

ள்ளுவரின் பின்வரும் குறளானது பெரிதும் அறியப்பட்ட ஒன்றாகும்.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. (குறள் : 55)

இந்தக் குறளிற்கான விளக்கத்தினைப் பலரும் “வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!” என்ற பொருள் படவே கூறிவருகின்றார்கள். உண்மையிலேயே கணவனைக் கடவுளிலும் மேலாக வழிபடச்சொல்லும் ஒரு பெண் அடிமைத்தனக் குறளாகவா இக் குறள் உள்ளது எனப் பார்ப்போம். கணவனை வழிபடச்சொல்லுகின்றார் என வைத்தாலும் ஏன் கடவுளைக் கும்பிட வேண்டாம் என்கின்றார்? ஒருவேளை கடவுளையே கும்பிடவேண்டாம் எனப் பகுத்தறிவு பேசுகின்றார் என்றால், அந்தப் பகுத்தறிவு பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்துமா? போன்ற நியாயமான கேள்விகள் எழுகின்றன. பிறப்பால் எல்லோரும் சமன் (பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்) என்று கூறிய வள்ளுவர் எவ்வாறு பிறப்பினடிப்படையிலான பால் வேறுபாட்டினை நியாயப்படுத்துவார்? மேற்கூறிய காரணங்களால், குறித்த இக் குறளிற்கு ஏற்கனவே பலர் கூறிய விளக்கம் பொருத்தமற்றது எனத் துணிந்து கூறலாம்.

எனவேதான் இக் குறளிற்கான விளக்கத்தினை வேறு வகையில் பார்க்கவேண்டியுள்ளது. இக் குறளினை எளிமை கருதி மூன்று பகுதிகளாப் பிரித்துப் பொருள் கண்டு, பின்னர் முழுமையாகப் பார்ப்போம்.

“தெய்வம் தொழாஅள் ; கொழுநன் தொழுதெழுவாள் ;
பெய்யெனப் பெய்யும் மழை.”

இந்த மூன்றுபகுதிகளிற்குமான பொருளை பின்னிருந்து முன்னாகப் பார்ப்போம் (இது ஒரு வகையில் தேர்வில் எளிமையான கேள்விகளை முதலில் அணுகுவது போன்ற ஒரு முறை).

பெய்யெனப் பெய்யும் மழை :

“பெய் எனப் பெய்யும்” மழை என்பதற்கு “மனைவி ஆணையிட மழை பெய்யும்” என்பது போன்றே இதுவரைப் பலராலும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிற்குப் பொருந்தாத “மந்திரம் ஓத மாங்காய் வரும்” போன்ற கருத்தை வள்ளுவர் வேறு எங்குமே கூறாதபோது, இந்த விளக்கம் பொருத்தமில்லை என்பதே எனது கருத்து. பொதுவாக இன்றும் பெரு மழை பெய்யும்போது பேச்சுவழக்கில் “மழை பெய்யோ பெய் எனப் பெய்தது” என்கின்றோம். இங்கு பெய் என்று கூறியவுடன் பெய்கின்றது என்ற பொருள் அல்லவே. அதுபோன்றே இங்கும் ‘’பெய் எனப் பெய்யும்’’ என்பதனைத் தேவைப்படும்போது பெய்யும் மழை என்றே கொள்ள வேண்டும். மழை பொதுவாக நன்மை தருவது என்றாலும், பொருத்தமற்ற நேரங்களில் பெய்யும் மழையால் உழவர்களிற்கு அழிவும் ஏற்படலாம். எனவேதான் பொருத்தமான நேரத்தில் பெய்யும் மழை முதன்மை பெறுகின்றது. இன்னும் விளக்கமாகச் சொன்னால், உழவர் மழை பெய்ய வேண்டும் என நினைக்கும்போது மழை பெய்தால், அதுவே சிறப்பானது, அத்தகைய மழையினையே வள்ளுவர் குறிப்பிடுகின்றார்.

படிக்க:
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஃபேஸ்புக் பதிவுகள் !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

திருக்குறள் இடம்பெறும் பதினெண் கீழ் கணக்கு நூல்கள் எனும் அதே தொகுதியினுள் இடம்பெறும் இன்னொரு நூலான நல்லாதனார் எழுதிய திரிகடுகம் நூலிலும் ‘’பெய் எனப் பெய்யும் மழை’’ என்ற தொடர் உள்ளது (இவ்விரு நூல்களுமே காலத்தால் ஏறக்குறைய சமனானவை).

‘’கொண்டான் குறிப்பு அறிவாள் பெண்டாட்டி; கொண்டன
செய் வகை செய்வான் தவசி; கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன்; இவர் மூவர்
பெய் எனப் பெய்யும் மழை’’ திரிகடுகம் (96) – நல்லாதனார்

இங்கு அன்பால், அறிவால் ஆளும் பெண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண்டாட்டி), தவசி (தன் நெறிக்கு உண்டான நோன்புகளை, முறைப்படி செய்து முடிப்பான் தவசி), மக்களுக்கு வரும் கொடுமைகளை நீக்கி நல்லது செய்யும் அரசன் ஆகிய மூவரும் எந்தவித பயனும் கருதாமல் தேவைப்படும் போது பெய்யும் மழைக்குச் சமனானவர்கள் என்ற பொருளிலேயே பாடல் இடம்பெற்றுள்ளது (இங்கு தவசியோ அல்லது அரசனோ கணவனை வழிபடுபவர்கள் அல்ல). எனவே, இதே விளக்கத்தினையே நாம் குறளில் இடம்பெறும் பெய் எனப் பெய்யும் மழைக்கும் கொடுக்கலாம்.
கொழுநன் தொழுதெழுவாள்:

இத்தொடரில் கொழுநன், தொழு, எழுவாள் ஆகிய மூன்று சொற்களின் பொருள்களைப் பார்ப்போம். இங்கு கொழுநன் என்பது கணவனையும், எழுதல் என்பது படுக்கையிலிருந்து எழுந்திருத்தல் என்பதையும் குறிக்கும் என்பது பல உரையாசிரியர்கள் கூறியது போன்று சரியானவையே. எஞ்சியிருக்கும் ‘’தொழு’’ என்ற வினைச்சொல்லிற்கான பொருளிலேயே இக் குறளிற்கான விளக்கத்திற்கான திறவுகோலே உண்டு. ‘’தொழு’’ என்ற சொல்லினை ‘’வழிபடு’’ என்றே பலரும் கருதியிருந்தனர். இங்கு அச் சொல்லிற்கு வேறு பொருள் இருக்கின்றதா? எனப் பார்ப்போம். தொழு என்ற வினைச்சொல்லிற்கு பல்வேறு வகைகளில் பொருள் கொள்ளலாம் எனினும் இங்கு பொருத்தமாக வருவது சேர்தல் / இணைதல் என்பதாகும். இதனைச் சற்று விரிவாகவே பார்ப்போம்.

இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் தொகுதி (கூட்டம்) என்ற சொல் தொழுதி என்ற சொல்லின் மருவிய வடிவமேயாகும். ‘’பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி’’ என்ற பாடலில் (நெடுநல்வாடை-15) மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் கூறும் தொழுதி என்ற சொல்லும், ‘’பருவத் தேனசைஇப் பல்பறைத் தொழுதி’’ (குறுந்தொகை-175) என்ற பாடலிலும் இச் சொல்லின் (தொழுதி) பயன்பாட்டினைக் காணலாம். இவற்றில் தொழுதி என்ற சொல் கூட்டம் (இணைந்து வாழுமிடம்) என்ற பொருளிலேயே இடம்பெற்றுள்ளது. பெயர்ச்சொற்கள் எல்லாம் வினைச்சொல் அடியினை ஒட்டியே பிறக்கின்றன என்ற தமிழறிஞர்களின் கருத்துப்படி, இங்கு தொழுதி என்ற சொல்லிற்கு அடிப்படையாக அமைந்த வினைச்சொல் ‘’தொழு’’ (சேரல்) என்பதேயாகும். இன்றும் மாடுகள் வாழுமிடத்தை ‘’தொழுவம்’’ என்று அழைக்கின்றோம்.

“தொழுவினிற் புலியானான்’’ (கம்பராமாயணம் மூலபல-181) என்ற பாடலில் கம்பர் விலங்குகள் சேர்ந்து வாழுமிடத்தை தொழு என்கின்றார். ‘’தொழு’’ என்ற சொல் இணையர் (கணவன்-மனைவி) சேர்ந்து வாழ்வதனைக் குறிக்கும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு சீவக சிந்தாமணியில் உள்ளது.

தொழுவில் தோன்றிய தோமறு கேவலக்
கிழவன் மூது எயில் போல் கிளர்வுற்றதே
– சீவக சிந்தாமணி-856

இப் பாடலில் ‘’தொழுவில் தோன்றிய’’ என்பதற்கு ‘’இல் வாழ்வில் உண்டான’’ என்ற பொருளே கொள்ளப்படுகின்றது (இங்கு தொழு = இல்வாழ்வுச் சேரல்). இதனைக் கொண்டு தொழுதல் என்பதனைச் சேரல் (புணர்தல்) எனவும் கூறலாம். உங்களிற்கு இந்த ‘’தொழு’’ என்ற சொல் இப்போது என்னவாயிற்று என்ற கேள்வி எழலாம். இப்போது ‘’தொழு’’ என்ற அந்த வினைச்சொல் ‘’தொகு’’ என்ற வினைச்சொல்லாக மருவியுள்ளது (மழவு – மகவு, முழை – முகை போன்று மருவியுள்ளது). இன்றும் ‘’தொகு’’ என்ற சொல்லிற்கு சேர்த்தல் என்ற பொருள் உள்ளபோதும், மனிதர்களின் இல்லறச் சேரலை அச்சொல் இப்போது குறிப்பதில்லை. அதே போன்று ‘’தொழு’’ என்றால் இப்போது ‘’வழிபடு’’ என்ற பொருளே பெருமளவிற்குப் பயன்படுத்தப்படுவதாலேயே, குறளிற்கான விளக்கத்தில் குளறுபடி நடந்துவிட்டது. உண்மையில் குறளின் விளக்கத்தினை நாம் அந்தக்காலப் பொருளிலேயே (இல்வாழ்வுச் சேரல்) கொள்ளவேண்டும்.

மேற்கூறிய விளக்கங்களின்படி, ‘’கொழுநன் தொழுதெழுவாள்’’ என்பது கணவனுடன் சேர்த்து (புணர்ந்து) படுக்கையிலிருந்து துயில் எழுபவள் என்ற பொருளே கொள்ளவேண்டும்.

தெய்வம் தொழாஅள்:

இப்போது குறளின் மூன்றாவது பகுதிக்கு வந்தால், இங்கு ‘’தொழாஅள்’’ என்பது ‘’சேர மாட்டாள்’’ என்ற பொருளில் (நாம் ஏற்கனவே பார்த்த விளக்கத்தின்படி) வரும். இங்கு நாம் பொருள் காண வேண்டியது `தெய்வம்` என்ற சொல்லிற்கே ஆகும். தெய்வம் என்னும் சொல் திருக்குறளில் ஆறு இடங்களில் பயின்றுவருகிறது. இங்கு நாம் முதன்மையாகப் பார்க்கும் ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற குறள் தவிர்த்த ஏனைய ஐந்து குறள்களையும், அவற்றில் தெய்வம் என்ற சொல்லினை என்ன பொருளில் பயன்படுத்துகின்றார் எனவும் பார்ப்போம்.

“தெய்வத்தால் ஆகா(து) எனினும்
முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்” – (குறள்: 619)
{தெய்வம் = ஊழ்}

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.” – (குறள்: 1023)
{தெய்வம் = ஊழ்}

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.” (குறள்: 50)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்ந்தோர்}

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை” (குறள்: 43)
{தெய்வம் = வாழ்வாங்கு வாழ்வோர்}

“ஐயப் படாஅ(து), அகத்த(து) உணர்வானைத்,
தெய்வத்தோ(டு) ஒப்பக் கொளல்” (குறள்: 702)
{ தெய்வம் = ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன்}

மேலே ‘’தெய்வம்’’ என்ற சொல் இடம்பெறும் ஐந்து குறள்களிலும், அச் சொல்லானது வெவ்வேறு பொருள்களில் இடம்பெற்றுள்ளது என்பதனைக் காணலாம். இந்த வகையில் ஆறாவது குறளிலும் (குறள்: 55) தெய்வம் என்ற சொல் வேறொரு பொருள் கொள்ளலாம் என்பது தெளிவாகின்றது.

இப்போது திருக்குறள் எழுதப்பட்ட காலத்தினை கவனத்திற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே நான் இன்னொரு கட்டுரையில் (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். எவ்வாறு முன்னைய குறள்களில் ஆசீவகக் கருத்தான ஊழ் என்பதனை தெய்வமாகவும், வேறு இடங்களில் தமிழரின் நீத்தார் வழிபாட்டினைத் (வாழ்வாங்கு வாழ்ந்து நீத்தார்) தெய்வமாகவும் கொண்டாரோ, அதேபோன்று இங்கு வைதீகத் தெய்வத்தினைக் குறிப்பிடுகின்றார் (இத்தகைய வெவ்வேறு தெய்வங்கள் எல்லாம் தமிழர்களிடையே அன்று காணப்பட்டமையாலேயே, அத்தகைய வெவ்வேறான தெய்வங்களை வெவ்வேறு குறள்களில் வள்ளுவர் கையாளுகின்றார்). சரி, அந்த வைதீக தெய்வம் யாதென வேதத்தின் வழியே பார்ப்போம்.

தெய்வாதீனம் ஜகத் ஸர்வம் = உலகம், தெய்வப் பிடியில்
மந்திராதீனம் ச தேவதா = தெய்வமோ, மந்திரத்தின் பிடியில்
தே மந்த்ரம் பிராமணா தீனம் = மந்திரமோ, பிராமணப் பிடியில்
பிராமணோ மம தேவதா = பிராமணர்களே, நம் தெய்வங்கள்!

ஆம், அந்த வைதீக தெய்வம் பார்ப்பனரே ஆகும். இந்தப் பார்ப்பனக் கடவுளிற்கும், ‘’தொழாஅள்’’ என்பதற்கும் என்ன தொடர்பு? என யோசிக்கின்றீர்களா? இதற்கு இன்றும் திருமணங்களில் ஓதப்படும் வடமொழி மந்திரமான “ஸோம: ப்ரதமோ…” (மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க) என்பதனை அறியவேண்டும். இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாக பல தேவர்களுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதிவருகின்றார்கள்.

இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள். இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினை பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். இதனை நாம் இன்றும் கேரளாவிலுள்ள தறவாடு முறையின் எச்சங்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்’’.

(“கெட்டு கல்யாணம்” என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்). கேரளாவிற்கு ஏன் போகவேண்டும். தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்த காலத்தில் “இயற்பகை நாயனார்” என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர்.

படிக்க:
உனக்கு கீதை எங்களுக்கு சங்க இலக்கியம் – பழ. கருப்பையா
திருக்குறளில் நடந்த திருவிளையாடல்கள் | பொ. வேல்சாமி

சிலர், சிவனே பிராமண வேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள். (இந்த தறவாடு, இயற்பகை நாயனார் போன்ற நிகழ்வுகள் யாவும் குறளிற்குக் காலத்தால் பிந்தியவை என்றாலும், அவை கடந்த கால நடைமுறைகளின் / நடைமுறைப்படுத்த முயன்றவற்றின் எச்சங்களே). இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்த்த ஏனையோரினை சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

இவற்றை எல்லாம் சேர்த்துப் பார்க்கும்போது ‘’தெய்வம் தொழாஅள்’’ என்ற தொடர் தெளிவாக விளங்கும் என்று நினைக்கின்றேன். அதாவது வள்ளுவர் இங்கு வேதங்கள் கூறுவது போன்று பார்ப்பனத் தெய்வத்துடன் தொழ (புணர) வேண்டாம் என்று கூறுகின்றார்.

குறளின் விளக்கம்:

இப்போது மேலே பார்த்த மூன்று பிரிவுகளையும் ஒன்றாக்கினால் குறளின் விளக்கம் தெளிவாகும். (பார்ப்பனத்) தெய்வத்துடன் புணராமல், கணவனுடன் சேர்ந்திருந்து துயில் எழும் மனைவியானவள் தேவைப்படும்போது பெய்யும் மழை போன்றவள் என்பதே இக்குறளின் விளக்கமாகும்.

பார்த்தீர்களா! பெண் அடிமைத்தனத்தை வலியுறுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான குறள் என்று இதுநாள் வரை நாம் கருதியிருந்த ஒரு குறளானது, உண்மையில் எவ்வளவு முற்போக்குத்தனமான பார்ப்பனிய எதிர்ப்புக்குரலாக அமைந்துள்ளது என.

குறிப்பு: இக் கட்டுரையானது பேரா. ந. கிருஷ்ணன், ராமானுஜ தாத்தாச்சாரியார், முனைவர் இரவி சங்கர் கண்ணபிரான் ஆகியோரது பல்வேறுபட்ட எழுத்துகளிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளது.

வி.இ. குகநாதன்

`

114 மறுமொழிகள்

 1. திருக்குறளை திரித்து,பெண்ணை அடிமையாக்கி,ஆணாதிக்க மூடத்தனத்தை வளர்த்த பார்ப்பனியத்தின்,உச்சமாகிய இந்த பொள்ளாச்சி சம்பவம்.பெண்ணை போகப்பொருளாக கருதும் இன்றைய சூழலில் ,பெண்ணினத்தை வீறு கொண்டு எழ வைத்து இருக்கிறது.ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடக்கும் பெண்ணினம்,இன்று தன் உரிமைக்காக, வீதியில் இறங்கி போராடி கொண்டு இருக்கிறது.மனிதர்கள் வாழ வழி வகுத்த,இந்த திருக்குறள் தோன்றிய இம்மண்ணில்தான் பெண் விடுதலைக்கான முதல் எழுச்சி தோன்றியதில் ஐயமில்லை!

 2. பேராசிரியர். அர.வெங்கடாசலம் பி.எச்.டி மேனாள் பேராசிரியர் உளவியல் துறை.பாரதியார் பல்கலைக் கழகம்

  ஐயா நான் ஒரு திருக்குறள் ஆய்வாளன். ஆங்கிலத்தில் ஒரு நூலும் தமிழில் மூன்று நூல்களும் எழுதி உள்ளேன்.

  தெய்வம் தொழாள் . . பாவிற்கு நான் கொண்டு உள்ள பொருள்
  காலையில் கண்விழித்துக் கடவுளைத் தொழும் முன் தன்னுடைய கணவனின் அன்பான நினைவில் மூழ்கித் திளைத்துத் தம் அன்பினைப் புதிப்பித்துக் கொண்டு நாளைத் துவக்கும் மனைவி மிகுந்த புத்துணர்ச்சி பெறுவதோடு அதன் காரணமாக மிகுந்த ஊக்கமும் ஆக்கமும் பெறுவாள். அவள் பெய்யென்றால் மழை பெய்யும்.( தோளோடு தோள் கொடுத்து நம்மோடு நிற்க ஒருவர் இருக்கிறார் என்ற நிலை பெறும் ஊக்கத்தைத் தருவதாகும் என்ற உண்மை நாம் அனைவரும் அறிந்த.ஒன்று. அவ்வூக்கத்தில் பிறக்கும் ஆற்றலின் அளவைக் கூறப் புகுந்த கவி தமக்கே உரிய ஓங்கி உரைக்கும் பாணியில் அவள் மழை பொழியச் சொன்னாலும் அவ்வாறே மழை பொழியும் என்று கூறுகிறார் காலத்தாலும் இடத்தாலும்.செயல்பட்டால் ஒருவன் உலகத்தையே தன் ஆட்சியின் கீழ் கொண்டு வரமுடியும் என்றும்(484) அனிச்சத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்(1120) என்றும் கூறியதைப் போல.)

  • உங்களது விளக்கம் (#தன்னுடைய கணவனின் அன்பான நினைவில் மூழ்கித் திளைத்துத் தம் அன்பினைப் புதிப்பித்துக் கொண்டு#) `கொழுநன் தொழுதெழுவாள்`என்ற சொற்தொடரிற்குப் பொருந்தவில்லையே ! . “தொழு = நினைவில் மூழ்கித் திளைத்து” என்கின்றீர்களா? சான்று என்ன?

   • நீங்க மட்டும் என்னோடு நில்லுங்க அவங்களை நான் ஒரு கை பார்த்து விடுகிறேன் என்று சொல்வதில்லையா! அன்பான கணவனை தொழுதவுடன் அவள் பெய்யெனப் மழை பொழியும் அளவுக்கு ஆற்றல் பெற்றுவிடுகிறாள் என்றால் மனதில் அந்த அளவுக்கு நம்பிக்கையும் நேர்மறையான ஆர்வம் மற்றும் மகிழ்ச்சி கிட்டுகிறது என்று பொருள். இதையே இப்படிப் பாருங்கள். அவளுடைய கணவன் அவளிடத்தில் அன்பு இல்லாதவளாக இருந்தால் அவள் அவனைத் தொழவும் மாட்டாள் அவள் உள்ளத்தில்.உற்சாகமும் இருக்காது. கடவுளே இன்றையை தினத்தை நான் எவ்வாறு கழிக்கப்போகிறோனோ என்று கலங்கி நிற்பாள்.
    திருக்குறளில் பக்தி கிடையாதும் ஆன்ம மேம்பாடு மட்டுமே உண்டு. அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் ஆகியன முற்றிலும் நீங்கி அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம் மற்றும் வாய்மை ஆகிய ஐந்தும் நிறைந்தால் அவன்/அவள் பிறவித்தொடர் முற்றுப் பெற்று புத்தேளிர் உலக வாசியாவர். அது மனிதன் ஈட்டுவது. கடவுள் ஈவது/அருள்வதன்று.

 3. ஐயா… அருமையான விளக்கம் ..தங்களின் விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி உள்ளது …. மற்றபடி வினவில் வருவதனை போன்று, பார்ப்பன வெறுப்பின் பார்பட்டு வள்ளுவர் இப்படி குறள் செய்திருப்பார் என்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை …

  • திருக்குறள் திருவள்ளுவர் என்ற தனி மனிதனால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை.சமண சமயத்தை சேர்ந்த பல துறவிகள் எழுதியது.தென்னிந்திய மன்னர்கள் பலர்,சமண மதத்தவராய் இருந்து பின்னர் பார்ப்பனிய மேலாதிக்கம் காரணமாக சைவ மதத்தை தழுவினர்.இதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன.இரு பிரிவினரிடையே அனல் வாதம்,புனல் வாதம் என்று நிறைய வாதங்கள் நிகழ்ந்தன. உண்மையான தர்க்கத்தின் அடிப்படையில் வாதத்தில் வெல்ல முடியாத பார்ப்பனர்கள்,பல சமணர்களை கழுவில் ஏற்றினர்.எனவே அதன் அடிப்படையில் இந்த குறளும் பார்ப்பன எதிர்ப்பு குறள் என்பதில் ஐயமில்லை.!.

 4. Dear team,

  I humbly request you that if you want to follow thanthai periyar go ahead. If you want to follow Jesus or Nabi, kindly go ahead. If you want to follow any other religion in this world kindly, go ahead. But don’t take an example of thirukural to critisise another religion. Here, the people not trying to follow one god; they want to critisise other religion gods, this is not good stage.. ok.. let us consider if you want to tell us all brahmins are making us fool. You Don’t follow brahmins, but you don’t have the rights to say that or read that brahmins vedas. If you don’t believe on veda, Why you want to read it? If you read, also how can you understand the correct meaning? Because your ideas was “there is no god”..

  Don’t critisise other believes, it’s like critisising a neighbor around you; who you don’t like.

  Live.. let others live..

 5. Dear team,

  This is nagapandian; let I come to your point.. if thiruvalluvar want to tell like that. Ok.. But thiruvalluvar also told importance of not taking non-veg, why don’t you follow that?

  This what you people do.. you never fully follow one person. Your main motto is critisise other religion and make people mad.

  • Same valluvar said,find the truth behind the word,doesn’t matter who said it.
   எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
   அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.
   May be you have to reconsider your point.

   • Ok.. let I agree? What about second point ? Do you follow the words of thiruvalluvar regarding vegetarian?

    This what I’m telling, if you want to get message from a book, read the book fully… Then you can speak about the book.

    Why people are not obeying a great man who told to avoid non-veg?

    • Again, the choice is entirely up to you,whether to follow vegetarian food or not.If you are a kind person,you can follow vegetarian.If you want to be strong and healthy eat non vegetarian food.Because many research says, vegetarian food doesn’t provide,enough vitamin B,which is available in meat.

     • Mam,

      If you are taking references from a book, you should agree with all the pages in the same book… Why you are diverting it from thiruvalluvar to our current researchers?

      If you don’t agree with thiruvalluvar, then why are you taking references from his book?

      If you agree with thiruvalluvar then why don’t you agree with his context of “pulal maruthal”?

      If we agree on our current researchers then I’m very happy.. then go ahead with them; surely we don’t want speak about thiruvalluvar or thirukural.

      I agree with the things of what the essay breifed, but why you don’t agree on same thiruvalluvar context on non-veg?

      Only one thing can accepted, if you believe on thanthai periyar better stop talking about thirulluvar or thirukural or if you believe on thiruvalluvar better don’t follow thanthai periyar. Kindly don’t mix both context and Dont hurt anyone.

      • According to me, learning a good thing,even from evil is the best policy.Moreover, following the advice,whether it is from Thiruvalluvar or Periyar,if it is useful for your present life,time and situation you can follow it.If it is not appropriate,you can always leave it.Accepting one person as a guru,following him blindly with all his flaws happens only in guru kulam.

       • Mam,

        Evil is always evil, you cannot learn a good thing from evil, that’s y it was called evil.

        Let us consider the school where you are blindly to follow the abcd…, Where you don’t know why you read it.. you cannot tell the teacher that I don’t like to read this.
        I never tell that blindly follow the guru.. just search for a good guru.. he will help you to lead good life; A good Guru never needs your money, and he always ask us to lead a simple life.

        Thiruvalluvar was a good guru and we are not that much wise to comment on his context. We cannot compare him with us.

        Even Jesus told us in the ten commandments ” thou shalt not kill”; but we don’t follow that by taking non veg.

        Kill in the sense don’t kill the living things, we interpret those things and we are killing animals for food.

        I don’t want to blindly follow the guru, you ask him the things, “why do we should not do that?”; He will surely explain the things. A good guru or good will never let you down. Only thing is just to believe things.

        I compared the school because we are wise enough to analyze or research about our forefathers or thirukural.

        Thirukural is “ulaga pothu murai ” book. I hope there will be no flaws in this book.

         • “குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
          மிகைநாடி மிக்க கொளல்”
          வள்ளுவர் சொல்லிவிட்டார் என்பதால் அவர் கூறியதனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அறிவுடைமை ஆகாது.
          “சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்” என்று கூறிய கடவுளே விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்.
          மிருகங்களைக் கொன்று புலால் ருசிப்பது பாவம் என்பது கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வண்டி வண்டியாக பசுக்களையும் குதிரைகளையும் யாகம் என்ற பெயரில் தீயிலிட்டு தின்று வந்த பார்ப்பனியத்தை பவுத்தமும் சமணமும் “கொல்லாமை” பிரச்சாரம் செய்து ஒழித்துக்கட்டியது. அந்த காலகட்டத்தில் இயற்றப்பட்ட திருக்குறள் அதற்கு அத்தாட்சி. பிற மத கருத்துக்களை திருடி செரித்து தன்னை மீட்டுக்கொண்டது பார்ப்பனியம்.
          இன்று பார்ப்பனர்கள் எல்லோரும் புலால் உண்ணுகிறார்கள் என்று குற்றம் சாட்டினால் “அவரு ஷாப்பிடுறதில்லை, இவரு ஷாப்பிடுறதில்லை” என்று தான் பதில் வருமே தவிர “எவனுமே ஷாப்பிடுறதில்லை” என்று கூற முடியாது. இது நம்மை உறுத்துவதேயில்லை. அக்லக்குகளைக் கொன்று தான் மாடுகளை காப்பாற்ற வேண்டுமா? என்பது தான் கேள்வி.

          • Mr.Karthikeyan,

           Again why are we taking references from thirukural?; the first basic things in thirukural is “glory of God”.
           Do we accept God existence?

           Then don’t take references from thirukural to explain our own thinking.

           Do you know Sanskrit language to explain the context of your quote “chathur varnam Maya srishtam”?

           If I tell my teacher that I will not read ABCD, but directly want to read English! Will the teacher accept it?

           Again you are taking references from Sanskrit to explain gods quality?

           If you taking a book to read, you don’t accept the first 2 pages of the book, then you accept the 60th pages of the book. What is this type of reading?

           How you can do that?

           Please accept things as it is or don’t comment on that book or don’t take references from that book.

           Don’t mix the things..

           If we are not accepting thirukural, then which book we will trust as the best book of displine?

           At least will we follow all the things which stated on that book which you consider as the best?
           We cannot critisise people that is also told in every regions holy book.

           At least you can follow that, if you don’t like them leave it. That is upto you, every person has a different dimension: Your thinking will not sync with your son’s thinking or wife thinking.

           The thing is follow a discipline where we should not critisise others.

           Nowadays, we people are mixing current author books with older books.
           how could it will be possible?

           Ok.. let us consider we accept Buddha, he also told not to kill any living things! At least will we accept it..
           If we are taking references from Buddha then you should follow him.. otherwise don’t take references from him to disprove other things.

           We are not wise enough to research on buddihism or Jainism or any other religion, Accept as it is or better don’t speak about that.
           If we don’t accept it; better don’t follow it.

           But don’t interpret with the things.

        • There is no such thing as purely good or purely evil.There is a combination of these two qualities in every person.Only the percentage varies.As you say,the so called good guru,his knowledge is limited,compare to the rest of the world.(கற்றது கையளவு,கல்லாதது உலகளவு) Thirukkural is said to be written 2000 years ago.There are lot of changes in people,compare to those days and now.So it may not be possible to follow everything what is written in that.Understanding the kural itself varies depending on individual perception.Infact we need those differences,to make the life more interesting.We may not be wise enough to analyse thirukkural ,but we can be wise enough to choose to listen to someone who is good in that.That makes life easier.

         • Mam,

          There is pure god and pure evil. We are not speaking about a normal person. A normal person may have both things good and bad. But the spiritual Masters won’t have evil things. In olden days they never try simply write anything. They will experience and with God’s blessings only we can write things. Without God’s blessings thiruvalluvar could not write things.

          You may believe that God is not there. But it’s upto you, don’t compare older books to prove that.
          If you want to prove that, you want believe all the things stated in the book.

          No issues if you don’t believe that book and also don’t refer things from that book.

          You have different ideas I appreciate it, but my point is don’t take references from the book in which you don’t believe.

          You can live as such, but in this world there are some disciplines to lead a good life which was stated in thirukural very clearly.

          • I don’t get your point,why are you imposing your ideas,of belief in following the book.You act asthough you have the copyright of the book thirukkural.If you want to believe God helped Thiruvalluvar,to write that kural,that’s fine.Don’t expect others also to believe,or act like you.It’s really annoying.

          • Mam,

           You cannot wrongly percept any book.

           If I’m reading big bang theory, I cannot percept in anyway, I should understand the concept told by scientist. If I don’t agree with him, I can say him directly that ” im not agreed with you” – no issues in that.

           But I can’t say that “the fourth point you told in big bang theory was attracted me – I believe that , I agree that point. ”

           We cannot percept as our wish, we should understand, believe, then we can speak about that – regarding thirukural.

 6. அருமையான விளக்கம்!
  பார்ப்பன அடிமைகளை கதற வைக்கிறது.
  வெறும் பார்ப்பன வெறுப்பு என்று அடிமைகள் புறந்தள்ளாமல் கட்டுரையில் நிறுவப்பட்ட கருத்துக்களுக்கு சவாலான விவாதத்தை எடுத்து வைக்க வேண்டும்

 7. அற்புதமான விளக்கம். இந்த விளக்கத்தில் வரும் ‘பார்ப்பன’ என்ற சொல்லாடலை தவிர்த்துவிட்டு, ‘தன்னையே தெய்வமாக காட்டிக்கொள்ளும்’ அனைத்துவிதமான கயவர்களுக்குமான ஒரு அடைமொழிப் பெயரை தேர்வு செய்து பயன்படுத்தியிருந்தால், பிராமணர்களும் ஏற்றுக்கொள்ளும் கருத்தாகவே இது பார்க்கப்படலாம்.

  இதற்கு முன் இக்குறளுக்கு நான் படித்த பல விளக்கங்களில் கலைஞர் கருணாநிதி அவர்களின் விளக்கமே சரியானதாகத் தோன்றியது எனக்கு.

 8. 1) இன்னும் இந்த சோமன், கந்தர்வன் இந்த பாட்டையெல்லாம் தி.க குரூப் விடவில்லை போலும். இதற்குண்டான விளக்கத்தை ‘மஞ்சை வசந்தனுக்கு’ எப்போதோ கொடுத்தாகி விட்டது. அது சரி தி.க குரூப் இப்படி எல்லாம் செய்யவில்லை என்றால் தான் ஆச்சார்யம்

  2) // திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; //

  மனு இருந்த சமயம் 170 – 150 BC என்று சொல்லப்படுகிறது. ‘மனு தர்மம்’ என்பதே இந்திரன் வாய் மொழியாக சொன்னதை ‘மனு’ அடுத்த தலைமுறைக்கு எடுத்து சென்றான். அதுவும் அந்த காலத்தில் ‘எழுதுகோல்’ இருந்ததா என்று கூட தெரியாது.

  இதில் கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் ‘இந்திரன்’ என்பதே புராண புரட்டு. ஆனால் நம்முடைய ‘தி.க’ குரூப்பிற்கு இங்கு மட்டும் இந்து கடவுள் ‘இந்திரன்’ வாழ்கிறான் போல்

  3) // ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது //

  மனுதர்மத்திற்கு (அல்லது ) ரிக் வேத காலத்துக்கு முற்பட்டது என்றால் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் ? அப்போது எழுதுகோல் இருந்ததா ? எழுதுகோல் இல்லை என்றால் எதை வைத்து வள்ளுவர் எழுதினார் என்பதை எல்லாம் ஆசிரியர் விளக்கவில்லை

  4) // (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். //

  வைதீக தெய்வத்தை திருவள்ளுவர் எங்கு குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. மற்றவர்கள் அவர்கள் இஷ்டத்திற்கு எதை வேண்டுமானாலும் எழுதி விட்டு போகட்டும்

  ஆசிரியர் சொன்னபடியே திருவள்ளுவர் ‘தெய்வம்’ என்கிற சொல்லை (1) ஊழ் (2) வாழ்வாங்கு வாழ்ந்தோர், (3) ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்ல மனிதன் என்று பல்வேறு பொருள்பட கூறுகிறார்

  அதவது மேற்சொன்ன விளக்கத்தின் படி ‘தெய்வம்’ என்கிற சொல் ‘கடவுளை’ குறிக்கவில்லை

  அனால் ‘குறள் 55ல்’ மட்டும் ‘வைதீக தெய்வம்’ என்று ‘திருவள்ளுவர்’ எப்படி குறிப்பிட்டு இருக்க முடியும் ?
  இந்த ஒரு குறளில் மட்டும் ‘வைதீக தெய்வம்’ (அல்லது) கடவுளராக ‘திருவள்ளுவர்’ எப்படி குறிப்பிட்டார் ?

  விளக்கம் அளிக்க முடித்தவர்களுக்கு நன்றிகள்

  நன்றி

  • பாயின்ட் பாயின்டா போட்டு எழுதியதில் உங்க கொண்டைதான் வெளியே தெரியுது Sathish.
   // திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; //
   கட்டுரையாளர் குறிப்பிடாததை அடைப்புக்குறியில் போட்டு அதற்கு விளக்கமும் அளிப்பது என்ன வகையான அயோக்கியத்தனம் …?

   • நான் படித்ததை எழுதி இருக்கிறேன். ஏன் மனுவே ஒரு கர்ப்பிணி பாத்திரமாக இருக்கக்கூடாது ?

    அது தான் உண்மையா என்பதை உங்களை போன்ற பகுத்தறிவாதிகள் தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நீங்கள் தான் சிந்திக்கவே பிறந்தவர்கள்

    அது சரி நீங்கள் யோக்கியன் ஆயிற்றே/ குரல் 55ல் மட்டும் எப்படி ‘தெய்வம்’ என்கிற சொல் ‘கடவுளை’ குறிக்கும் சொல் ஆயிற்று? அதுவும் ‘வைதீக கடவுளை’ குறிக்கும் சொல் ஆயிற்று ?

    நீங்கள் செய்வது அயோகியதனம் இல்லையென்றால் விளக்கம் கொடுக்கவும். அதை விடுத்து வெட்டி விவாதம் எதற்கு ?

   • தட்டச்சு பிழை

    ஏன் மனுவே ஒரு கறபனை பாத்திரமாக இருக்கக்கூடாது ?

   • // கட்டுரையாளர் குறிப்பிடாததை அடைப்புக்குறியில் போட்டு அதற்கு விளக்கமும் அளிப்பது என்ன வகையான அயோக்கியத்தனம் …? //

    யார் அயோக்கியத்தனம் செய்வது? கட்டுரையை முழுமையாக படியுங்கள்.

    • // (வினவு இணையத்தளத்தில் இடம்பெற்ற திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம் : பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) குறிப்பிட்டது போல, ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. எனவே, வள்ளுவர் இந்தத் திருக்குறளில் (குறள்: 55) குறிப்பிடும் தெய்வம் வேதம் குறிப்பிடும் வைதீக – பார்ப்பனிய தெய்வமே ஆகும். //
     கட்டுரையாளர் ரிக் வேதம் மற்றும் திருக்குறள் காலத்தை விவரிப்பதை முன் பின்னான வாக்கியங்களுடன் சேர்த்து கொடுத்திருக்கிறேன்.
     நீங்கள் கொடுத்த “ரிக்வேதம் திருக்குறள் காலத்திற்கு முந்தையது” என்று கட்டுரையாளர் கூறுவதை முன் பின் வாக்கியங்களுடன் கொடுங்கள்.
     நீங்கள் கொடுத்தது போல் கட்டுரையாளர் கூறியிருந்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருவேன்.
     இல்லையெனில் நீங்கள் செய்தது “அயோக்கியத்தனம்” என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்

     • மனு’ என்பவன் யார்? இது பற்றி புரட்சியாளர் அம்பேத்கர் விரிவாக ஆய்வுகளை செய் துள்ளார்.
      பழங்கால இந்தியாவில் ‘மனு’ என்பது ஒரு மரியாதைக்குரிய பெயராக இருந்து வந்திருக்கிறது. அதற்காக ‘மனு’ என்ற பெயரில் இதை பார்ப்பனர்கள் பரப்பினார்கள். உண்மையில் இது ‘மனு’ என்ற ஒரு தனி நபரால் எழுதப்படவில்லை. ‘நாரத ஸ்மிருதி’ என்ற மற்றொரு நூலை எழுதிய சுமதிபார்க்கவா என்பவன்தான் மனுஸ்மிருதியை எழுதி, தன் பெயரை மறைத்துக் கொண்டு அந்த காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ‘மனு’வின் பெயரைப் பயன்படுத்திக் கொண்டான் என்கிறார் அம்பேத்கர். பவுத்தர்களுக்கு எதிராகவே மனு சாஸ்திரத்தில் பல ஸ்மிருதிகள் திணிக்கப்பட்டன. எனவே, பவுத்த கொள்கைகளை ஒழித்து மீண்டும் வேத பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வந்ததே மனு சாஸ்திரம்.
      மனு நீதியில் பல கருத்துகள் பிற்பட்ட சேர்க்கையே.கட்டுரையாளர் குறிப்பிட்டது சரி.

 9. `சோமன், கந்தர்வன்.. (ஸோம ..)` மந்திரத்திற்கு ராமானுசர் கொடுத்த விளக்கத்தைப் படிக்கவும். கீழுள்ள இணைப்பில் நேரடியாகக் காண்க (3வது 3rd manthra மந்திரத்தின் 15 வது வரியினைக் கவனிக்குக- மொழிபெயர்ப்பும் இணைப்பும் யாருடையது என்பதையும் கவனிக்குக)

  ஆளவந்தார் ((யாமுனாசார்யர்) என்ன சொல்கின்றார் .எங்களிற்குத்தான் வேதம் புரியாது. இராமனுசர், ஆளவந்தார் போன்றோரிற்குமா வேதங்கள் தெரியாது?
  பார்ப்பனர்களின் பொய்முகத்தினை வெளிப்படுத்திய அருமையான ஒரு கட்டுரை.

   • “மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்” (குறள் 134)

 10. Poongodi Mam,

  I don’t want everyone to believe thirukural, that is upto their wish.

  My question is you don’t totally accept “kadavul vazhthu” from thirukural, then why are jumping or referring to 55th context to impose your own ideas?

 11. My question is why do you have two different approach to science and literature.Author in this article has done a great job of finding the time,place and circumstances of the kural.He has done a research in finding the correct meaning of that particular kural.which helps in ,better understanding, of life style in those days,influence of philosophy and so on.So we can not only learn,but pass on the good ideas to the next generation.Otherwise reading and reciting the kural,or making valluvar as a saint or God, doesn’t help the society,much.

 12. Mam,

  You not reached my point; ok.

  Let I come to yours, I’m not approaching science and literature both inb
  different ways. Already valluvar explained the human science in kural “piravi perungadal neenthuvar neenthar iraivanadi Sera thar” in kadavul Vazhthu.
  On that day itself he told us soul and body is different; our soul crosses the ocean of birth and death – only when it reaches God feet.

  It was a pure science of self realisation; the soul is the energy. It was transferred from one body ( living thing ) to another body ( living thing ) always until the energy ( soul) reaches God.

  It was also explained by scientist ” energy can neither be created; nor be destroyed but can be transformed from one form to another form.

  Our literatures have some scientific experiments and understanding, which we don’t understand.

  Let us consider, the author taking explained in a good manner; but the author was taking example of a book in which he won’t believe the first 10 context and only explain on 55th context.

  This thirukural book only for people, who believe god, even hindu, Christian or Muslim, jains, Buddhist, or any religion who believe god.

  I also don’t want to interrupt in your ideas for which you tell about non- existence of God. Similarly, I also expect that; I don’t want to argue the existence of God with you.

 13. நான் கேட்ட எந்த கேள்விக்கும் இன்னும் பதில் வரவில்லை. இருந்தாலும் பரவாயில்லை

  (1) உரை ஆசிரியர் குறிப்பிட்டது பின் வருமாறு

  // அதாவது மனுதர்மத்தில் கூறப்பட்டவையே அறம் என வேண்டுமென்றே பொய் சொல்லுகின்றார். திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; மறுபுறத்தே மனுதர்மத்திற்கும், குறள் விளக்கும் அறத்திற்குமிடையே மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடுகள் உண்டு.//

  முன் மற்றும் பின் வரிகளை சேர்த்து மேலே கொடுக்கப்பட்டுள்ளது

  // நீங்கள் கொடுத்தது போல் கட்டுரையாளர் கூறியிருந்தால் நான் பகிரங்கமாக மன்னிப்பு கோருவேன்.
  இல்லையெனில் நீங்கள் செய்தது “அயோக்கியத்தனம்” என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் //

  அதாவது யாதெனில் திரு S S கார்த்திகேயன் தவறு செய்தால் ‘மன்னிப்பு’ கேட்டு நல்ல பிள்ளை ஆகிவிடுவார்.

  அதையே நான் செய்தால் நான் ‘அயோகியன்’. நான் ‘மன்னிப்பு’ எல்லாம் கேட்கக்கூடாது. இதற்க்கு பெயர் தான் சிறப்பு பகுத்தறிவாதம்

  (2) உரை ஆசிரியர் மேலும் என்ன சொல்கிறார்

  // `கடவுள்` என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது //

  // இங்கு `இறைவன்` என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) . தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும். //

  மேலே சொன்னதில் இருந்து ‘இறை ‘, ‘தெய்வம்’ என்பது வெவ்வேறு பொருள்களில் குறிப்பிட பயன்படுத்திய ஒரு வார்த்தை அவ்வளவே.

  இதற்கும் ‘வைதீக தெய்வத்திற்கும்’ என்ன சம்பந்தம் ? எப்படி குறள் 55ல் மட்டும் ‘கடவும்’ மற்றும் ‘வைதீகம் தெய்வம்’ உள்ளே வந்தது

  3) திருவள்ளுவர் ஆண்டு 31 BC என்று சொல்லப்படுகிறது. 500 தமிழ் புலவர்கள் சேர்ந்து கண்டுபிடித்த வருடம் இது

  மனு வாழ்ந்த காலம் 170 – 150 BC என்று சொல்லப்படுகிறது. இருவரும் ஏறத்தாழ சமகாலத்தில் வாழ்ந்துள்ளார்கள்

  ஆனால் உரை ஆசிரியர் “திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க” என்று கூறுகிறார். மனு வாழ்ந்த காலம் (170 – 150 BC) என்றால், திருவள்ளுவர் எப்படி ‘மனுவுக்கு’ முன்பு இதை இயற்றி இருக்க முடியும் ?

  4) மேலும் உரை ஆசிரியர் என்ன சொல்கிறார்

  // ரிக் வேத கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது //

  ரிக் வேதம் தமிழ் மண்ணை எந்த நூற்றாண்டில் வந்து சேர்ந்தது ? இதற்கு உரை ஆசிரியர் சரியான விளக்கம் கொடுக்கவில்லை. போகிற போக்கில் ஒரு வரி சேர்த்தால் போல் தோன்றுகிறது

  எந்த நூற்றாண்டில் ‘ரிக் வேதம் தமிழ் மண்ணை வந்து சேர்ந்தது’ என்று சொன்னால் விஷயங்களை புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்

  வாழ்க சிறப்பு பகுத்தறிவாதம் !!!

  நன்றி

  • குப்த பேரரசு காலத்தில் அதற்கும் பின்பே மனுசாத்திரம் எழுதப்பட்டிருக்கும், ஏனெனில் சமற்கிரத மொழிக்கு கி.பி 2ம் நூற்றாண்டுவரை எழுத்துவடிவமே இல்லையே. (இருக்கின்றது என நினைப்பவர்கள், சான்று தரவும்)

   • திருக்குறள் மனுவுக்கு முன்பு எழுதப்பட்டதா அல்லது பிற காலத்தில் எழுதப்பட்டதா என்பது தனி விவாதமாக எடுத்து கொள்ளலாம். இதை தான் நானும் முன்பே சொல்லி இருக்கிறேன். மனு தர்மம் என்பது வாய் வழியாக சொல்லப்பட்டது / பரப்பப்பட்டது என்று

    உரை ஆசிரியரின் குறளுக்கான விளக்கம் எப்படி சரியாகும் என்பதே கேள்வி ? பார்ப்பான வெறுப்பாளர்கள் ‘உரை ஆசிரியர்’ சொன்ன விளக்கத்தை ஏற்று கொண்டு மனதளவில் பொய்யாக மகிழ்ந்து கொள்வது தான் ‘பகுத்தறிவா’ ??

    உரை ஆசிரியரின் இந்த விளக்கம் தவறு எனில் பார்ப்பான வெறுப்பாளர்கள் ‘சிறப்பு பகுத்தறிவாதிகள்’ என்றே கருதப்படுவர்

  • Sathish,
   நீங்கள் கட்டுரை ஆசிரியரின் முந்தைய கட்டுரையிலிருந்து விபரங்களை கையாண்டுள்ளீர்கள். இதை நீங்கள் குறிப்பிட்டிருக்கலாம். மேலும் ரிக்வேத காலத்தையும் மனுதர்ம காலத்தையும் நான் சரியாக உள்வாங்கவில்லை.
   இந்த குழப்பங்களால் உங்களை கடுமையாக விமர்சித்ததற்கு வருந்தி உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.
   //அதாவது யாதெனில் திரு S S கார்த்திகேயன் தவறு செய்தால் ‘மன்னிப்பு’ கேட்டு நல்ல பிள்ளை ஆகிவிடுவார்.
   அதையே நான் செய்தால் நான் ‘அயோகியன்’. நான் ‘மன்னிப்பு’ எல்லாம் கேட்கக்கூடாது. இதற்க்கு பெயர் தான் சிறப்பு பகுத்தறிவாதம்//
   நீங்கள் தவறு செய்ததாக கருதி மன்னிப்பு கோரினால் நிச்சயமாக ஏற்கப்படும். அதிலென்ன பாரபட்சம்…
   விவாதங்களின் குறிக்கோளே நட்பை வென்றெடுப்பதுதானே..!
   விவாதத்தை தொடருவோம் நண்பரே…!

 14. பார்ப்பன ஆதரவாளர்கள் கதறுவதைப் பார்க்க மகிழ்வாக உள்ளது. சரியான கட்டுரை

 15. Dear team,

  You people don’t believe on god, then why are you quoting references from thirukural book ( that proves existence of God )?

  Please accept only one thing from Below two points!

  1) If you accept God, then you can come to thirukural.

  2) If you don’t accept God, better stay away from it and follow your well wisher periyar.

  It is the foolish thing to mix both.

  Don’t confuse your ideas with thiruvalluvar quotes; take things as it is. Here there is no way for “in my opinion”.

  What you people want actually?
  All the people want to hate brahmins?

  See, our soul will always try to critisise everyone. We are the best, my thinking is best, I’m telling best; I know everything. Don’t give the way to your soul to think like this, it was the dangerous way.

  Let you know everything, better keep it in yourself.