மோடியின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், விவசாயிகள், தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்கள், சிறு தொழில் முனைவோர், படித்து வேலைதேடும் இளைஞர்கள் என அனைவரும் இதுவரை சந்தித்திராத நெருக்கடியை சந்தித்தனர்.
இனி மோடி தலைகீழாய் நின்றாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என ஜனநாயகவாதிகள் பலரும் எண்ணியிருந்த நிலையில் சாதியக் கூட்டு, மதவெறிப் பேச்சுக்கள், புல்வாமா தாக்குதல், ஊடக – கார்ப்பரேட் ஆதரவு, தேர்தல் ஆணையத்தின் துணையோடு தேர்தல் விதிமீறல் என பல்வேறு வியூகங்களை திட்டமிட்டுச் செயல்படுத்தி, இந்தத் தேர்தலில் ஆட்சிக் கட்டிலைப் அறுதிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியிருக்கிறது மோடி – அமித்ஷா தலைமையிலான பாஜக.
தனது தேர்தல் வெற்றி உரையில் சம்பிரதாயப்படி நன்றி தெரிவித்து விட்டுப் போகாமல், மதச்சார்பின்மையை நேரடியாக தாக்கிப் பேசியிருக்கிறார் மோடி. அது மட்டுமல்லாமல், கார்ப்பரேட்டுகள்தான் இந்தியாவின் ஏழைகளைக் காக்க வந்த சேவகர்கள் என்றும் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், இனி வரப்போவது கார்ப்பரேட் காவிப் பாசிசத்தின் ஆட்சிதான் என்பதை முன்னறிவித்தார் மோடி.
முதல் ஐந்தாண்டுகால ஆட்சியில் சுமார் ரூ. 4.3 லட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகையாக அள்ளித்தந்த மோடி அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்ற 100 நாட்களுக்குள் 46 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
மற்றொரு புறத்தில் கார்ப்பரேட்டுகளின் இசைவோடு நாடெங்கும் மதவெறித் தாக்குதல்கள் மீண்டும் தொடங்கியிருக்கின்றன. ஜெய் ஸ்ரீராம் என முழங்கக் கூறி முசுலீம்களை நாடு முழுவதும் தாக்கத் தொடங்கியது காவிக் கும்பல். வழக்கம் போல கள்ளமவுனம் சாதித்தார் மோடி.
அதுபோக, ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடிய வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய் சிங், குரோவர், பேராசிரியர் ராம் புன்யானி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோர் மீது சட்டரீதியாகவும், சட்ட விரோதமாகவும் ஒடுக்குமுறையை ஏவியிருக்கிறது மோடி அரசு.
இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு உகந்த வகையிலும், கார்ப்பரேட் கொள்ளைகளை சட்டப்பூர்வமாக்கும் வகையிலும், என்.ஐ.ஏ சட்டத் திருத்தம், மாநில உரிமைகள் பறிப்பு, தேசியக் கல்விக் கொள்கை எனப் பலவற்றையும் நாடாளுமன்றத்தில் உள்ள தனது பெரும்பான்மை பலத்தால் சாதித்துக் கொண்டது பாஜக அரசு.
ஏகாதிபத்தியத்திற்குச் சேவை புரியும் இந்து ராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான பணியில் சங்க பரிவாரங்கள் எப்படி ஒவ்வொரு அடியையும் அழுந்தி வைக்கின்றன என்பதை விவரிக்கிறது இந்நூல் தொகுப்பு.
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
***
போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! – புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .
அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.
இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.
” போலோ ஸ்ரீராம் – ஜெய் கார்ப்பரேட் ! “ நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- வெள்ளைகாரனிடம் மண்டியிட்ட ‘வீர’ சாவர்க்கர் வெறும் சாவர்க்கரானார்!
- நாட்டின் சக்திவாய்ந்த நபருக்கு எதிராக நின்றதுதான் சஞ்சீவ் பட் செய்த ஒரே குற்றம்!
- என்.ஐ.ஏ சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரம் உங்களை வரவேற்கிறது!
- ஆர்.எஸ்.எஸ் கூறும் இந்து ராஷ்டிரத்தின் இறுதி நோக்கம்தான் என்ன ?
- ரூ.4.3 இலட்சம் கோடியை கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக் கொடுத்த மோடி!
- முசுலீம் பெண்களைக் கும்பல் வல்லுறவு செய்யுங்கள்: பாஜக தலைவியின் அறைகூவல்!
- விவசாய வருவாய் இரட்டிப்பு வாக்குறுதி: மோடியின் அண்டப் புளுகுகள்!
- மீண்டும் கும்பல் வன்முறைகளைத் தொடங்கிய இந்துத்துவக் கும்பல்!
- தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு!
- விசாரணை இழுத்தடிப்புக்கு பயந்து செய்யாத குற்றத்தை ஒப்புக் கொண்ட முசுலீம் இளைஞர்!
- அடுத்த மல்லையா: ரூ.47,204 கோடியை அமுக்கிய சஞ்சய் சிங்கால்!
- வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவரை பழிவாங்கும் மோடி அரசு!
- இந்திய மக்களின் மின்தரவுகளைச் சேமிக்கப் போகும் அதானி குழுமம்!
- கார்ப்பரேட்டுகளின் நன்கொடையில் 93% பெற்றது பாஜக-தான்!
- நாட்டு மக்களைக் கண்காணிக்க வரும் மரபணு அடையாள மசோதா!
- நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் புராணம்!
- 100 நாட்களுக்குள் 46 அரசு நிறுவனங்களை ஒழித்துக்கட்டத் துடிக்கும் மோடி அரசு!
- பேராசிரியர் ராம் புனியானிக்கு சங் பரிவாரங்கள் கொலை மிரட்டல்!
- இந்தி: இந்தியாவை ஒன்றுபடுத்துமா? பிளவுபடுத்துமா?
- காஷ்மீர்: பொது பாதுகாப்புச் சட்டத்தின் அத்துமீறல்கள்: அம்னெஸ்டி அறிக்கைக்கு தடை!
- ஹார்லி டேவிட்சன் பைக் வரி குறைப்பு: மிரட்டும் ட்ரம்ப்! பம்மிய மோடி!
- ‘எளிமையான மத்திய அமைச்சர் பிரதாப் சாரங்கியின் கொலைகார பின்னணி!
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.
வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி:
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்:
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
____________
புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்