கோவிட்19 நோயானது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றது. பிரதானமான முதல் வகை Asymptomatic infection என்று அழைக்கப்படுவதாகும்.

அறிகுறிகளற்ற கொரோனா தொற்று (ASYMPTOMATIC nCoV19 INFECTION)

90% பேருக்கு இந்த வகை, எந்த அறிகுறிகளும் தோன்றாமல் இருக்கும். ஆனால் வைரஸ் மட்டும் தொண்டைப்பகுதியில் இருக்கும். இவர்களிடம் இருந்து பிறருக்கு பரவும் வாய்ப்பு மிக குறைவு.

இவர்களுக்கு கோவிட் நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது. எனவே இவர்களுக்கு வந்திருப்பது நோய் என்று கூற இயலாது மாறாக இவர்களுக்கு ஏற்பட்டிருப்பது “தொற்று” (Infection) மட்டுமே. இந்த வகையினருக்கு நோய் வந்ததும் தெரியாதது
போனதும் தெரியாது.

இவர்களுக்கு வேறெந்த பாதிப்பும் நேராது, இவர்களால் குறைவான அளவு நோய் பிறருக்கு வாய்ப்பு இருப்பதால். கட்டாயம் தனிமைப்படுத்துதல்(ISOLATION)
அவசியம்.

இந்த காரணத்திற்காகத்தான் நோய் தொற்று பெற்ற ஒருவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதே போன்ற தனிமைப்படுத்துதல் முறையை நாம் அம்மைத்தொற்றுக்கும் கடைபிடித்து வருகிறோம்.

COVID-19 (COrona VIrus Disease-19)

இதற்கடுத்த நிலையில் வருவது தான், அறிகுறிகள் வெளியே தென்படும்
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள COrona VIrus Disease 19 இது மொத்த கோவிட் நோயாளர்களில் 10% -15% இதில் மூன்று வகை.

 • முதல் வகை MILD COVID DISEASE

லேசான/சாதாரண கோவிட் நோய் இவர்கள் கோவிட் அறிகுறிகள் தோன்றும் நோயாளர்களுள் 80- 90% இருப்பார்கள் இந்த வகையினருக்கு

 1. காய்ச்சல்
 2. தொண்டை வலி
 3. வறட்டு இருமல்
 4. உடல் அசதி / வலி
 5. நுகர்தல் இழப்பு
 6. சுவைத்திறன் இழப்பு

போன்ற அறிகுறிகள் தோன்றும்.

இவர்களுக்கு இந்த அறிகுறிகளைத் தாண்டி வேறு பிரச்சனைகள் பெரும்பாலும் நேருவதில்லை. பெரும்பாலும் குழந்தைகள், இளைய வயதினர், வேறெந்த தொற்றா நோயும் இல்லாதவர்களுக்கு இந்த நிலையிலேயே கோவிட் நோய் சரியாகிவிடும்.

இந்த வகை நோயர்கள் கோவிட் நோயர்களிடம் இருந்து தான் பிறருக்கும் சமூகத்துக்கும் நோய் வேகமாக பரவுகிறது. எனவே கோவிட் நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனே தனிமைப்படுத்திக்கொள்ளுதல் அவசியமாகின்றது,
இவர்களுக்கு எந்த சிகிச்சையும் மருந்தும் தேவையில்லை.

படிக்க:
கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
தொடரும் லாக்டவுன் ! தொடரும் துயரங்கள் !!

காய்ச்சல் / இருமல் போன்றவற்றிற்கு உரிய மருத்துவ சிகிச்சை எடுத்தாலே போதுமானது. தானாக நோய் குறி குணமாகி பழைய நிலைக்கு விரைவில் மீண்டு விடுகின்றனர்.சுவாசம் ஒரு நிமிடத்திற்கு 24 தடவைக்குள்ளாகவே இருக்கும்
பல்ஸ் ஆக்சிமீட்டரில் எப்போதும் 95 என்ற அளவுக்கு மேலாகவே இருக்கும்.

 • மிதமான கோவிட் நோய் MODERATE COVID

இந்த வகையினர் மேற்சொன்ன நோய் அறிகுறிகள் அடுத்த நிலைக்கு சென்று
கூடவே,

 1. விடாத இருமல்
 2. மூச்சு விடுவதில் சிரமம்
 3. மூச்சு இறைத்தல்
 4. நிமிடத்திற்கு 24 முதல் 30 முறை சுவாசிப்பார்கள் ( நார்மல்- 24க்குள் இருக்க வேண்டும்)
 5. பல்ஸ் ஆக்சிமீட்டரில் 90-94 என்ற அளவில் ஆக்சிஜன் அளவுகள் ரத்தத்தில் குறையும்.
 6. இவர்களுக்கு நுரையீரலில் தொற்று ஆரம்பமாகிவிட்டது என்று பொருள்.
  இதை “நியுமோனியா” என்று கூறுவோம்.

இந்த வகையில் சிலருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இருக்கும். முறையாக ஆக்சிஜன் வழங்கி ரத்த ஆக்சிஜன் அளவுகளை பராமரிக்காவிடில் இதயத்துக்கு சுத்தமான ரத்த ஓட்டம் கிடைக்காமல் இதயம் சார்ந்த பிரச்சனைகள் உருவாகக்கூடும்.

முதல் வாரத்தில் லேசான அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு, தொற்றா நோய்கள், முதுமை போன்றவை காரணமாக இரண்டாவது வாரம் – மிதமான கோவிட் நிலைக்கு மாறுகிறார்கள்.

முதல்வாரத்திலேயே அந்த நோயாளிகளை இனங்கண்டு கண்காணித்தால் அவர்கள் இந்த இரண்டாவது நிலையை அடைவதில் இருந்து தடுக்க முடியும். சிகிச்சை அளிக்க முடியும். இந்திய ஒன்றிய அரசின் கூற்றுப்படி 3% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகின்றது

 • தீவிர கோவிட் நோய் SEVERE COVID

இரண்டாவது வாரத்தின் இறுதியில் நுரையீரலின் பெரும்பகுதியை வைரஸ் தொற்று ஆக்கிரமிப்பு செய்தவுடன், நுரையீரல் தனது வேலையை முழுமையாக செய்ய இயலாமல் போய் விடும்.

சுவாசித்தல் ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் இருக்கும். பல்ஸ் ஆக்சிமீட்டர் 90%க்கு கீழ் காட்டும். இந்த நிலையை அடைந்தவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், தீவிர மூச்சுத்திணறல் நிலை (ACUTE RESPIRATORY DISTRESS SYNDROME) என்ற பிரச்சனை ஏற்படலாம்.

இதை கவனிக்காமல் விட்டால் / தாமதமாக மருத்துவமனையை அணுகினால் நுரையீரல் செயலிழப்பு (RESPIRATORY FAILURE)ஏற்பட்டு மரணம் சம்பவிக்கின்றது.
இன்னும் சிலருக்கு இதய செயல் இழப்பு(CARDIAC ARREST) நேர்ந்து அதனால் மரணம் ஏற்படுகின்றது.

இவர்களை தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு பிரிவில் அட்மிட் செய்து பார்க்க வேண்டும். தீவிர மூச்சுத்திணறல் நிலை / நுரையீரல் செயலிழப்பு / இதய செயலிழப்பு நேர்ந்தால் உடனே இதய சுவாச மீட்பு சிகிச்சை செய்து வெண்ட்டிலேட்டரில் பொருத்த வேண்டும்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
நெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி ?

உடல் முழுவதும் இருக்கும் பாகங்களுக்கு ஆக்சிஜன் குறைவாக செல்வதால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து கடைசியில் மரணம் சம்பவிக்கின்றது. (Multi organ Dysfunction syndrome – septic shock)

இந்திய அரசின் கூற்றுப்படி நோய் தொற்றாளர்களில் 2%பேருக்கு ஐசியூ சிகிச்சை தேவைப்படுகின்றது. நூறில் ஒருவருக்கு வெண்ட்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகின்றது.

அதிக கண்காணிப்பு தேவைப்படுபவர்கள் :

1. முதியோர்கள் > 60
2. உடல் பருமனாக இருப்பவர்கள்
3. இதய / சிறுநீரக நோயாளிகள்
4. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள்
5. சுவாசப்பாதை பிரச்சனை இருப்பவர்கள்
6. புற்றுநோயர்கள்

மரணங்கள் மிக மிக அரிதாகவே நடக்கும் வயது < 20 வயதுக்குள், குழந்தைகள் மரணமடைவது மிக மிக அரிது. நோயின் தன்மையை விரைவில் கண்டறிந்து
விரைவில் சிகிச்சை பெறுபவர்கள் பிரச்சனையில் இருந்து சீக்கிரம் மீண்டுவிடுகிறார்கள்.

நோயைப்பற்றி நன்றாக அறிந்து கொண்டு, உங்களையும் உங்களை நம்பி இருப்பவர்கள் நலனையும் காக்கும் பொறுப்பு இதைப்படிக்கும் உங்களுடையது.

நன்றி : ஃபேஸ்புக்கில்Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

1 மறுமொழி

 1. கொரானா கோவிட் 19 கிருமி ; ஏன் வந்தது, எங்கிருந்து வந்தது, எப்படி உருவானது, யார் அதர்க்கு பெயரிட்டது,மருத்துவ இயலில் மனித உடம்பில் எத்தனை வைரஸ்கள் உடலை இயக்குகிறது, அலைக்கற்றை (spectrum) வழியாக வைரஸை கடத்த செய்வதர்க்கு சாத்தியமுள்ளதா,என்ன பின்விளைவுகள் வருங்காலங்களில் மக்கள் எதிர்கொள்ள நேரிடும்…??? இது நாள் வரை நிகழும் ஊரடங்கு என்பது மருத்துவரீதியில் விஞ்ஞானமுறை தீர்வா…??? இது போன்ற ஐயப்பாடுகளை நீங்க, இக்கட்டுரை மருத்துவர் பதில் பதிவு செய்யுமாறு அன்புடன் வினவுகிறேன்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க