கொரோனா கால ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து, இலவச அரிசியை நம்பியே பல லட்சம் குடும்பங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழலில் நுண்கடன் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெண்களுக்கு நெருக்கடி கொடுத்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தள்ளி வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் பேரளத்தை சேர்ந்த திருமதி. தனலெட்சுமி என்பவர் ஒரு வாரத்திற்கு முன்பு மண்ணெண்னை ஊற்றிக்கொண்டு தனக்கு தீ வைத்துக்கொண்டார். இறந்த பின்னர் வரும் இன்சூரன்ஸ் பணத்தை வைத்து தமது குடும்பத்தினர் கடனை அடைக்க முடியும் என்பதால் தீ வைத்துக்கொண்டதாக கூறியுள்ளார். நுண்கடன் நிறுவனங்கள் பெண்களை எவ்வளவு கொடூரமான நிலைக்கு தள்ளியதற்கு இது ஒரு உதாரணம்.
ஆகவே அடாவடி செய்யும் நுண்கடன் நிறுவனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து நின்ற பெண்கள் தங்களது அனுபவத்தினை “ஒரு உரையாடலாக” பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…
தகவல் :
பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்.
தஞ்சை, தொடர்புக்கு : 89034 03970.