ர்நாடக மாநில சட்டசபையில் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் “பசுவதைத் தடுப்பு மசோதா” கொண்டுவரப்படும் என அம்மாநிலத்தின் பா.ஜ.க. அமைச்சர் பிரபு -சவுகான் கடந்த நவம்பர் 24 அன்று அறிவித்துள்ளார்.

“ஏற்கனவே இத்தகைய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள (பா.ஜ.க ஆளும்) மாநிலங்களை ஆய்வு செய்து அம்மாநிலங்களை விட வலிமையான வகையில் இச்சட்டம் மேற்கொள்ளப்படும். எதிர்காலத்தில் (கர்நாடக) மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இறைச்சிக்காக மாடுகள் வாங்கப்படுவதும் விற்கப்படுவதும் முற்றிலும் தடைசெய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு ஏற்கெனவே கர்நாடகத்தின் அப்போதைய முதல்வரான பா.ஜ.க.வின் எடியூரப்பாவால் கொண்டுவரப்பட்ட “கால்நடை படுகொலை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு மசோதா” ஆளுநரின் ஒப்புதல் பெறுவதற்கு முன்னரே 2013-ம் ஆண்டு அன்றைய முதல்வரான சித்தராமைய்யாவால் திரும்பப் பெறப்பட்டது. அதைத்தொடர்ந்து, அம்மாநில பா.ஜ.க.வின் 2018 தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இச்சட்டத்தைக் கொண்டுவருவதற்கு “சரியான நேரம் வந்துள்ளது” என்கிறார் சவுகான்.

படிக்க :
♦ ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான்  ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
♦ முசுலீம்கள் பசுக்களை வளர்ப்பதும் ’ லவ் ஜிகாத் ‘ தானாம் !

இதேபோல, மத்தியப் பிரதேச பா.ஜ.க. அரசு கடந்த நவம்பர் 22, “பசுப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான” தனி அமைச்சரவையையே (Gau cabinet) அமைத்துள்ளதோடு, பசுக்களைப் பாதுகாப்பது என்ற பெயரில் அதற்கான வரியையும் மக்கள் மீதே “கோமாதா வரி” (Gaumata tax) என்று சுமத்தத் திட்டமிட்டுவருகிறது.

கோடிக்கணக்கன மக்கள் ஒருவேளை சோற்றுக்கு வழியில்லாமல் செத்துக் கொண்டிருக்கும் போது “பசுக்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி” பற்றி கவலைப்படும் பாசிஸ்டுகள் அதற்கான சுமையையும் மக்கள் மீதே சுமத்துகின்றனர்.

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சங்கிகளுக்கே உரிய வகையில், மாடுகளின் சாணம் மற்றும் மூத்திரம் பல்வேறு நோய்களை குணப்படுத்த வல்லது என்றும் அவற்றைப் பாதுகாப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசு பெருமளவில் குறையும் என்றும் பேசியுள்ளார். மேலும் இந்த அமைச்சரவையின் நோக்கம், “பசுக்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை (Cow based economy) உருவாக்குவதும், கிராமப்புறங்களில் வருமானம் மற்றும் வேலைவாய்ப்பைப் பெருக்குவதை நோக்கமாகக் கொண்டதும் தான்” என்று கூறியுள்ளார்.

பாஜகவின் பசு அரசியல்

மேலும் “மக்கள் கறவை வற்றிப்போன மாடுகளை தெருக்களில் திரியவிடுகிறார்கள்” என்று கூறிய சவுகான் கோசாலைகள் அமைப்பதற்கும் தனியாக ஒரு சட்டம் கொண்டுவரப்படும் என்றார்.

பசுவை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம், வேலைவாய்ப்பு என்று இவர்கள் கூறும் கூற்றுக்களில் எள்ளளவும் உண்மையில்லை. ஏற்கெனவே பசுவதைத் தடுப்புச் சட்டங்கள், கோசாலைகள் அமுல்படுத்தப்பட்ட குஜராத், உ.பி உள்ளிட்ட மாநிலங்களில், கறவை வற்றிப்போன மாடுகளை விற்கவும் முடியாமல் அவற்றை அரசும் பராமரிக்க நிதியில்லாமல் தெருவில் திரிய விடுவதால் அவை பயிர்களைத் தின்று ஏராளமான நாசத்தைத்தான் விவசாயிகளுக்கும் கிராமப்புறப் பொருளாதாரத்துக்கும் ஏற்படுத்தின.

மேலும் கறவை வற்றிப்போன மாடுகளை விற்க முடியாமல் போனதால் பெருமளவில் விவசாயிகளுக்கு நட்டமே ஏற்பட்டது. எனவே இவை விவசாயிகள் போ்ண்டியாகத்தான் வழிவகுத்தனவே அன்றி இதை வளர்ச்சி என்று கூறுவது மிகப்பெரிய மோசடி. ஏமாற்று. எனவே, பசுவதைத் தடுப்புச் சட்டங்கள், கோசாலைகள் ஆகியன ஏதோ இசுலாமியர்கள் மீது வெறுப்பை ஏற்படுத்துபவை மட்டுமல்ல, கோடிக்கணக்கான இந்து விவசாயிகளையும் போண்டியாக்குபவையே.

மிக முக்கியமாக, இந்துராஷ்டிரத்தை நிறுவும் திசையில் பயணிக்கும் பாசிஸ்டுகளுக்கு, லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போன்றவையே இசுலாமியர்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கான ஆயுதமாகும்.

படிக்க :
♦ பாசிச குற்றக் கும்பலை தண்டிப்பது எப்படி ? || புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் !
♦ டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !

பசுவதைத் தடுப்புச் சட்டத்தின் மூலம், இசுலாமியர்களின் மீது ஆரம்பகட்ட வெறுப்புணர்வைப் பரப்புவதும், அதைத் தொடர்ந்து “லவ் ஜிகாத் தடுப்பு” சட்டத்தைக் கொண்டு வந்து இசுலாமிய வெறுப்பை நிரந்தரமாக்குவது என்பதே இந்துமத வெறியர்களின் திட்டமாகும். அதற்கான வேலைகளையும் பா.ஜ.க.வினர் செய்து வருகின்றனர். அதன் அடிப்படையிலேயே பா.ஜ.க. ஆளும் ஐந்து மாநிலங்களில் “லவ் ஜிகாத் தடுப்பு சட்டங்களை” நிறைவேற்றத் துடிக்கின்றனர்.

கார்ப்பரேட் கொள்ளைகளை அரங்கேற்றி கோடிக்கணக்கான ‘இந்து’ உழைக்கும் மக்களை கொள்ளையிட, இத்தகைய இந்துத்துவ, மதவெறி நடவடிக்கைகளின் மூலம் மக்களைத் திசைதிருப்புவதில் கைதேர்ந்தது ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிசக் கும்பல். சுதந்திரப் போராட்ட காலத்தில் வெள்ளைக்காரனின் சுரண்டலுக்கு மதவெறிக் கலவரங்கள் மூலம் இந்து முசுலீம் கலவரங்களை ஏற்படுத்திய சுதந்திரப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்தது இக்கும்பல். தற்போது அதே பாணியில் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்கு நேரடியாக சேவையில் ஈடுபடுகிறது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பல்.


தீரன்
செய்தி ஆதாரம் : Indian Express

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க