வமதிப்புக்குரிய அரசியல் இறுமாப்பு இந்த வாரம் இந்தியாவில் பெருந்தொற்று நிதர்சனத்தை சந்தித்தது. மார்ச் மாத தொடக்கத்தில், நரேந்திர மோடியின் இந்து தேசியவாத அரசாங்கம், இந்தியா கோவிட் -19ன் “முடிவில்” இருப்பதாகக் கூறியது. இந்தியா இப்போது ஒரு நரகமாக மாறியுள்ளது. ஒரு புதிய “இரட்டை ம்யூடண்ட்” வகை, பி.1.617, பேரழிவு தரும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் வெளிப்பட்டுள்ளது.

இந்த இரண்டாம் அலையில், மருத்துவமனைப் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை போன்ற அவல நிலைமைகளை காண முடிகிறது. பிணவறைகள் நிரம்பியதால், உடல்கள் வீட்டிலேயே வைக்கப்பட்டு அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மரணங்கள் தெருக்களில் விடப்படும் ஆபத்து உள்ளதாக தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கின்றன.

படிக்க :
♦ ஆக்சிஜன் கேட்டால் தேசிய பாதுகாப்பு சட்டமாம் – இந்துராஷ்டிர இளவல் ஆதித்யநாத் எச்சரிக்கை !

♦ புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்

கடந்த வெள்ளிக்கிழமை (23.42021) இந்தியாவில் 3,32,730 புதிய சார்ஸ்‑கோவிட்‑2 நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக உலகளவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்று எண்ணிக்கை. முந்தைய 24 மணி நேரத்தில் 2,200-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இருந்து வரும் விமானங்களை பிற நாடுகள் தடை செய்துள்ளன. அங்கு பயணிப்பதைத் தவிர்க்க பரிந்துரைத்தன அல்லது சென்று வந்தவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளன.

ஆறு வாரங்களுக்கு முன்னர், மக்கள் தொகையில் 1% கூட தடுப்பூசிப் போடாத நிலையில், மோடி இந்த நாடு “உலக மருந்தகம்” என அறிவித்தார். பெருந்தொற்று நோய்க்கு முந்தைய வாழ்க்கை மீண்டும் தொடங்கப்படலாம் என சமிக்ஞை காட்டினார். கும்பமேளா-வில் லட்சக்கணக்கான இந்துக்கள் கங்கையில் நீராடிய போதும் ஆயிரக்கணக்கானவர்கள் கிரிக்கெட் மைதானங்களில் நிரம்பிய போதும்  தொற்று அதிக அளவில் பரவியது.

டொனால்ட் டிரம்பைப் போலவே, மோடியும் தொற்றுநோய் சீற்றமடைகையில் பிரச்சாரத்தை கைவிட மாட்டார். ஏப்ரல் மாதத்தில் ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு இந்தியா தயாரானபோது, முகத்திரை அணியாத மோடி மிகப் பெரிய பேரணிகளை நடத்தினார்.

மோடியின் முத்திரையான இந்திய விதி விலக்கு (Indian exceptionalism) அகமகிழ்வை வளர்த்தது. தேசிய மகத்துவத்தின் ஒரு அனுமானம் ஆயத்தமின்மைக்கு வழிவகுத்தது, குறிப்பாக தடுப்பூசி உற்பத்தியில் உலகளாவிய மருந்து தயாரிப்பில் இந்தியாவை சக்கரத்தின் ஆணியாக உருவாக மேற்குலக நாடுகள் ஊக்குவித்தன.

ஆனால் இந்த வாரம் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் இது ஒரு பிழையாக இருக்கலாம் என பரிந்துரைத்தார். சீனாவும் அமெரிக்காவும் இப்போது இந்தியாவைவிட அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. இது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை எளிதாக்க வாஷிங்டனை இன்னும் அமைதிப்படுத்தவில்லை, இது ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய நாட்டை கட்டாயப்படுத்தியது.

இந்திய பிரதமர் தனது சொந்த உள்ளுணர்வு மற்றும் கேலிக்குரிய நிபுணர் ஆலோசனையில் அதீத நம்பிக்கையுடன் அவதிப்படுகிறார். இந்த வாரம் கோவிட்-19 தொற்று காரணமாக  மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சற்று முன்னர் வரை முன்னாள் காங்கிரஸ் பிரதமர் எப்படி ஆலோசனை வழங்கத் துணிந்தார் என அவரது அமைச்சர்கள் பாய்ந்தனர்.

கடந்த ஆண்டு மோடி இந்தியாவின் பில்லியன் மக்கள் மீது கொடுங்கோலான திடீர் பொதுமுடக்கத்தை  அறிவித்தார். எச்சரிக்கையில்லாத ஒரு பணி நிறுத்தம் நாட்டின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆலோசனையை எதிர்த்து சென்றது, ஆனால் அவரது ரசனைக் கேற்ற நாடகத்தனமான அசைவுகளுக்கு அது பொருந்தியது.

இளையர்களை கொண்ட மக்கள் தொகையுடன், கோவிட்-19 தொற்றுக் காரணமாக இறந்த இந்தியர்களின் விகிதம் மற்ற நாடுகளை விட குறைவாக இருக்கும். இறப்பு கணக்கு குறித்த சந்தேகங்கள் இருக்கும் நிலையில், இந்தியர்கள் வைரஸை எதிர் கொள்ளும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் என்ற ஆதாரமற்ற உணர்வு பரவியுள்ளது, மோடியால் எதிர்க்கப்படாததாகவும் இருந்தது.

முதல் அலையில், கோவிட் இந்தியாவின் நகரங்களைத் தாக்கியது. ஆனால், இப்போது இது நாட்டின் பெரும் பகுதியினர் வசிக்கும் கிராமப்புறங்களுக்கு நகர்கிறது. பல நாடுகளை கடுமையாக தாக்கியது போல, இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை பெரும்பாலும் தவிர்க்கக் கூடியது.

மேலும் திமிர்பிடித்த மற்றும் திறமையற்ற அரசாங்கத்தின் விளைவால் ஏற்பட்டதாகும். இந்தியா ஒரு பெரிய, சிக்கலான மற்றும் மாறுபட்ட நாடு. ஒரு தேசிய அவசரநிலை காலத்தின் போது, ஆட்சி செய்வது கடினம். இப்போது இது கொரோனா வைரஸ் மற்றும் பயம் என்ற இணையான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரியல் மற்றும் சமூக தொற்று நோய்களைக் கட்டுப்படுத்த அச்சத்தை தணித்தல் மற்றும் மக்கள் முகக் கவசங்கள் அணிந்து கொள்வது, உடல் ரீதியான இடைவெளி விதிகளுக்குக் கீழ்ப்படிதல் ஆகிய நம்பகமான உறுதியளிப்பு தேவை.

படிக்க :
♦ கொரோனா ஊரடங்கு என்பதே மோசடி || தோழர் வெற்றிவேல் செழியன்

♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !

மோடி தனது குழப்பத்தை அகற்ற மாநில அரசுகள் மீது பொறுப்புகளை ஏற்றியுள்ளார். ஆனால், பொறுப்பு அவருடன் நிற்கிறது. மாபெரும் துன்பத்தை ஏற்படுத்திய தவறுகளை அவர் ஒப்புக் கொண்டு, திருத்த வேண்டும். கட்டுப்பாடுகளை எவ்வாறு நிலை நிறுத்துவது என்பது குறித்து அவர் நிபுணர்களுடன் ஆலோசிக்க வேண்டும்; அரசாங்க வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், ஒற்றுமை தேவைப்படும்போது பிரிக்கும் குறுங்குழுவாத சித்தாந்தத்தை கைவிடவும் வேண்டும். பேரழிவுகரமான பொதுச்சுகாதார முடிவுக்கு வழிவகுத்த விதிவிலக்கானப் பார்வையைத் தொடர்ந்தால் எதிர்கால வரலாற்று ஆசிரியர்கள் மோடி மீது கடுமையுடன் தீர்ப்பு எழுதுவார்கள்.


அனிதா
நன்றி : தி கார்டியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க