♦ “காலனியாதிக்க எதிர்ப்பு போராளி, மக்கள் தலைவர், தொழிலாளர்களின் தோழர், சுதேசி முன்னோடி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சி யின் 150-வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்” ♦ “கார்ப்பரேட்- காவி பாசிசத்தை முறியடிப்போம்” ♦ என்கிற முழக்கத்தின்கீழ் கடந்த செப்டம்பர் 5-ம் தேதி மதுரை மாநகரத்தில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

மதுரை, அனுப்பானடி பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் 5 இடங்களில் காலை முதல் துண்டு பிரசுரம் விநியோகித்து தெருப்பிரச்சாரம் செய்யப்பட்டது.
அப்பகுதி மக்களிடம் துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் போது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

படிக்க :

வ.உ.சி : ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் 150-வது பிறந்தநாள் || விலையில்லா மின்னிதழ்

ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

குறிப்பாக, வ.உ.சி, மருது சகோதரர்கள் போன்றவர்களை சாதிய தலைவர்களாக சம்பந்தப்பட்ட சமூகத்தினர் ஒருசிலர் பார்ப்பதும் இக்கலாச்சாரத்தை அரசே திட்டமிட்டு உட்புகுத்துவதையும் விமர்சித்தனர். மேலும் உங்களைப் போன்ற அமைப்பினர்தான் அத்தலைவர்களின் வரலாற்றை சரியாக பிரச்சாரம் செய்கிறீர்கள் என்றனர்.

நமது தோழர்கள் தெருப்பிரச்சாரத்தில் உரையாற்றும் போது, வ.உ.சி.யை மக்களின் தலைவராகவும், ஏகாதிபத்தியத்தின் எதிர்ப்பு போராளியாகவும் அவர் வாழ்ந்ததை விளக்கியும் பிரச்சாரம் செய்தனர். அதே நேரத்தில் அப்பகுதியில் சாதியின் அடிப்படையில் ஒரு குழுவினர் வாகனத்தில் ஊர்வலமாக சென்றனர். இந்த இரண்டு நிகழ்வையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கும் விதமாக பிரச்சாரம் அமைந்தது. மேலும் பெரியாரிய சிந்தனையாளர் ஒருவர் இப்பிரச்சாரத்தை சரியான காலகட்டத்தில் நடத்துகிறீர்கள் என வரவேற்று நமது தோழர்களை உற்சாகப்படுத்தினார்.

மதுரை அவனியாபுரம் மந்தை பகுதியிலும் மூன்று இடங்களில் செப்டம்பர் 5 அன்று மாலை 5மணி முதல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், பிற உழைக்கும் மக்கள், மாற்றுக் கட்சியினர் ஆர்வமுடன் வாங்கி கவனமாகப் பார்த்தார்கள்.

அதில் நாம் மக்களுக்காகப் போராடிய தலைவர்கள் மக்கள் தலைவராக பார்க்கவேண்டும், சாதித் தலைவராக பார்க்க கூடாது என்பதை வலியுறுத்தி பிரச்சாரம் செய்ததை மக்களும் ஆமோதித்தனர். அதில் ஒரு ஆட்டோ தொழிலாளி நீங்கள் சொல்லும் அத்தனை பிரச்சனையும் உள்ளது அதை தீர்ப்பதற்கு தீர்வு என்ன என்று வினவினார்.

வ.உ.சி வழியில் நின்று அன்னிய மறுகாலனியாக்க கொள்கையை முறியடிக்கப் போராடுவதோடு, அதனை தீவிரமாக அமல்படுத்தும் கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பலை விரட்டியடிப்பதும் தான் தீர்வு என்றும் தொடர்ந்து விவாதிப்போம் என்றும் கூறி தோழர்கள் விடைபெற்றனர்.

தகவல்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்பு குழு,
தமிழ்நாடு,
+91 97916 53200.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க