செங்கொடியைத் தாங்கி நின்ற செந்நிறச் சவப்பெட்டிகள் !
பெட்டிகளைத் தூக்கி வந்தவர்கள் தமது சுமையுடன் மேட்டின் மீது ஏறிக் குழிக்குள் இறங்கினார்கள். தூக்கி வந்தவர்களில் பலரும் பெண்கள்-கட்டை குட்டையான, வலுமிக்க பாட்டாளி வர்க்கப் பெண்கள். உலகின் தொழிலாளர்களும் இனி வருங்காலத்தில் தோன்றப் போகும் அவர்களது சந்ததியினர் எல்லோரும் கண் கொண்டு இக்காட்சியைப் பார்த்திருக்க, சென்றது இந்த ஊர்வலம்....
புரட்சியின் தருணங்கள் – திரைச் சித்திரம் !
சோசலிசத்தினால் ஒரு நாட்டில் எத்தகைய சாதனைகளை சாதிக்க முடியும் என்பதையும், சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதையும் கண் முன்னே காட்டுகிறது இந்தத் திரைச் சித்திரம்.
இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை !
முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள்.
காலத்தை வென்ற மூலதனம் – தோழர் தியாகு உரை !
“கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு !!” சிறப்புக் கூட்டத்தில் மூலதனம் தமிழ்பதிப்பின் மொழிபெயர்ப்பாளர், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகுவின் உரை - வீடியோ
மதயானையை வீழ்த்திய சிற்றெறும்பு !
அவர்கள் முன்பு இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று, தமது வயல்களை, தோட்டங்களை போஸ்கோவிடம் பறிகொடுத்துவிட்டு, அகதிகளாக வெளியேறுவது. இல்லையென்றால், உயிருக்குத் துணிந்து போஸ்கோவை எதிர்த்து நிற்பது. அவர்கள் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தார்கள்.
நவம்பர் புரட்சி! – சென்னை கூட்டம் – Live
சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்து பெருந்திரளானோர் வந்துள்ளனர். இந்தக் கூட்டத்தின் நேரலை ஒளிபரப்பை இந்தப் பதிவில் உங்களுக்காக இங்கே கொடுக்கிறோம்.
மூலதனத்தின் தத்துவஞானம் !
மார்க்சின் தத்துவஞானத்தை அறிந்து கொள்வதற்கு மார்க்ஸ் எழுதிய எந்த நூலைப் படிக்க வேண்டும் என்று கேட்டால், அவருடைய வாழ்க்கையின் முக்கியமான சாதனையாகிய மூலதனத்தைப் படியுங்கள் என்பதே சரியான பதிலாகும்.
முதலாளிகளின் மூலதனம் எங்கிருந்து வந்தது?
"பணம் பிறவியிலேயே ஒரு கன்னத்தில் இரத்தக் கறையுடன் உலகில் காலடி எடுத்து வைக்கிறது" என்கிறார் ஒழியே. மூலதனமோ, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை, உடலின் ஒவ்வொரு மயிர்க்காலிலிருந்தும் இரத்தமும் சகதியும் சொட்டச் சொட்ட உலகிற்குள் நுழைகிறது.
நவம்பர் 19 கூட்டம்: மார்க்ஸின் மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 !
கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம் 19 நவம்பர், 2017 மாலை 3:00 மணி, ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை – 600 035. அனைவரும் வருக!
நமக்கும் வேண்டும் நவம்பர் புரட்சி – மின்னூல்
தொழிலாளி வர்க்கத்துக்கும் முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான போரின் ஒரு சுற்றில் தொழிலாளி வர்க்கம் தோற்றிருக்கிறது. இத்தகைய தோல்விகள் எதிர்பாரதவையல்ல. இதுவே இறுதிச் சுற்றும் அல்ல.
ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.
நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !
உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.
மூலதனம் நூலின் 150 வது ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100 வது ஆண்டு !!
உலக முதலாளித்துவத்தின் கருவறையான அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட்டிலேயே ‘‘முதலாளித்துவம் ஒழிக” என்று லட்சக்கணக்கான மக்கள் குரலெழுப்பினர். முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்களும் கூட மார்க்சின் மூலதனம் கூறும் கசப்பான உண்மைகளை அங்கீகரித்து விழுங்க வேண்டியதாயிற்று.
சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்
முதலாளித்துவம் அழிந்துபடும்போது, மனித குலத்தையும் தன்னோடு படுகுழிக்குள் இழுத்துச் செல்லுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.
இலவச மருத்துவத்தின் முன்னோடி சோவியத் யூனியன் !
உலகிலேயே முதல்முறையாக, சோவியத் குடிமக்கள் தான் இலவச மருத்துவ வசதியை அனுபவித்தனர். மருத்துவ ஆலோசனை முதல், அறுவை சிகிச்சை வரை அனைத்துமே இங்கு இலவசம் தான். ஒவ்வொரு நகரத்திலும் பத்துக்கும் குறையாத மருத்துவ மையங்கள் இருந்தன. தேவைக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை அதிகரித்தன.