இந்தியாவிற்குத் தேவை புரட்சி – தோழர் மருதையன் உரை !

4

“கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!” சிறப்புக் கூட்டம் சென்னை ஒய்.எம்.சி.ஏ. நந்தனம் அரங்கில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்றது.

அக்கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் “இந்த வருடம் மார்க்சின் மூலதனம் நூலின் 150 -வது ஆண்டு மற்றும் நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு மட்டுமல்ல சீனத்தின் கலாச்சாரப் புரட்சிக்கும், இந்தியாவில் நடைபெற்ற நக்சல்பாரி எழுச்சிக்கும் 50 -வது ஆண்டு”

” ரசியப் புரட்சி என்பது வெறுமனே ஒரு நாட்டில் ஏற்பட்ட புரட்சி அல்ல. அதன் தாக்கம் உலகம் முழுவதும்  பல்வேறு நாடுகளில் எதிரொலித்தது. சோவியத் ரசியா என்பது மக்களுக்கான அரசாக இருந்தது. உழைக்கும் மக்கள் அரசாளும் ஒரு மக்கள் அரசாக இருந்தது. முதலாளித்துவம் தான் இறுதி சமூகம் என கொக்கரித்துக் கொண்டிருந்த முதலாளித்துவவாதிகள் இன்று சிஸ்டம் சரியில்லை எனப் புலம்புகிறார்கள். ரசியப் புரட்சியை இந்தியாவில் கொண்டு வரவேண்டும். 1917ஐ மீண்டும் படைப்போம்” என்பதை தனது உரையில் பேசினார்.

 

 

அவரது உரையை பாருங்கள்… பகிருங்கள்…


  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

சந்தா செலுத்துங்கள்

அச்சுறுத்தும் அதிகார வர்க்கத்தை அச்சமின்றி எதிர்க்கும் வினவு தளம் உங்கள் ஆதரவின்றி போராட இயலுமா? ஆதரியுங்கள்.

4 மறுமொழிகள்

  1. கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா சிறப்புக் கூட்டம் நவம்பர் 19,
    லைவ் டெலிகாஸ்ட் சொன்னீங்க……பிறகு தொழில்நுட்பப்பிரச்சினையால் முடியவில்லை என்றீர்கள். அதுவும் பரவாயில்லை என்று இருந்தோம்…… நிகழ்ச்சி முடிஞ்சப்பிறகும் வீடியோ சிறப்பா இருக்கும்னு எதிர் பார்த்தா, ஆடியோ மட்டுமே போட்டிருக்கலாம் போல வீடியோ இருக்கு…. தோழர்கள் பேசும்போது எதிரிலிருந்த மக்களின் உணர்வுகளை பாக்கமுடியல….. நிறைய இல்லனாலும் கைதட்டி வரவேற்கும் இடங்களை மட்டுமாவது காட்டியிருக்கலாம், ஆயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து நேரில் கண்ட உற்சாகம் வீடியோவில் பதிவாகவில்லை, அதுமட்டுமில்லாம தோழர்கள் கையை உயர்த்திப்பேசும்போது கை, வீடியோவில் கட் ஆகுது…. வீடியோவில் பார்த்தும் உயிரோட்டமாக அதனுடன் ஒன்றமுடியவில்லை. ஆடியோவில் மட்டுமே கேட்டிருந்தால்……. நம்ம சிந்தனையில் உயிரோட்டமாக்கியிருக்கலாமோ… என்று தோணுகிறது…….. மற்றபடி தோழர்களின் கடின உழைப்பும், புதிய தொழிட்நுட்பத்தை தேடித்தரும் பாங்கும் பாராட்டுக்குரியது.

  2. கார்ல் மார்க்ஸ் ன் படமும், லெனின் ரஸ்ய புரட்சியின் படமும் பதிவிடுங்கள் தோழர்..

  3. கார்ல் மார்க்ஸ் ன் படமும், லெனின் ரஸ்ய புரட்சியின் படமும் பதிவிடுங்கள் தோழர்..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க