நாடு மீண்டும் அடிமையாகுது! பகத்சிங் பாதை உன்னை தேடுது!!
கோவையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி – தமிழ்நாடு சார்பில் அண்ணாமலை ஹோட்டலில் “நாடு மீண்டும் அடிமையாகுது ... பகத்சிங் பாதை உன்னை தேடுது...” என்ற தலைப்பில் பகத்சிங் நினைவு நாள் அரங்கக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
பாலாறு குண்டு வெடிப்பு வழக்கும் நீதிமன்ற பயங்கரவாதமும்!
சமூகத்தின் கூட்டுத்துவ மனசாட்சி என்று கூறி அப்சல் குருவைத் தூக்கில் போட்டது போல, போலீசின் மனசாட்சியைத் திருப்திபடுத்தவே வீரப்பன் கூட்டாளிகள் என்று கூறி அப்பாவிகள் நால்வரைத் தூக்கில் போடத் துடிக்கிறது இந்திய அரசு.
சிஐஏ சித்திரவதைக்கும் என்.ஜி.ஓக்களின் மனித உரிமைக்கும் என்ன உறவு?
"முன்னாள் சோவியத் சாம்ராச்சியத்தை இனி சோரோஸ் சாம்ராச்சியம் என்று அழையுங்கள் " என்று திமிராக அறிவிக்கும் அளவுக்கு சோரோஸின் தொண்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் விளையாடின.
‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
நீதிபதியின் மனதில் மறைந்திருக்கும் அரசியல் கருத்துக்கள், ஒருதலைப்பட்சமான அவரின் சோந்த விருப்பு-வெறுப்புகள், கேள்வி கேட்கமுடியாத அவரது சிறப்பு அதிகாரம் ஆகியவையும் குற்றவாளியைத் தீர்மானிப்பதில் பங்கு வகிக்கின்றன.
மாலி ஆக்கிரமிப்பு: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!
இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆப்பிரிக்கக் கண்டத்தில் வளர்த்துவிட்டுப் பயன்படுத்திக் கொண்டதும் இப்போது இஸ்லாமியத் தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் மாலியின் கனிம வளங்களைச் சூறையாடப் போர் தொடுப்பதும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான்.
பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
காதல், தியாகம், மரணம்: பகத்சிங்கின் பார்வை
இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம்.
நோக்கியாவின் பலே திருட்டு!
நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்து அதை பின்லாந்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
மாணவர் எழுச்சி: போராடும் பண்பு வளரட்டும்!
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
‘மதச்சார்பற்ற’ கட்சிகளின் கோழைத்தனமும், வாஜ்பாயி முகமூடியும்!
''சங்க பரிவாரத்தின் முகமூடிதான் வாஜ்பாய்'' என்று ஒருமுறை சொன்னார் கோவிந்தாசார்யா. உண்மையில் தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., பெர்னாண்டஸ் போன்ற ''மதச்சார்பற்ற'' கூட்டாளிகளின் பிழைப்புவாதத்திற்கும், காங்கிரசு முதல் மார்க்சிஸ்டுகள் வரையிலான ''மதச்சார்பற்ற'' எதிர்க்கட்சிகளின் கோழைத்தனத்திற்கும்தான் திருவாளர் வாஜ்பாயி ஒரு முகமூடியாகப் பயன்பட்டு வருகிறார்.
மகாராஷ்டிரம்: காவி, காக்கி, சாதி மூன்றும் ஒரே நிறம்!
இடைநிலைச் சாதிகளின் மேட்டுக்குடியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராகக் கவுரவக் கொலைகள் நடத்துவதுடன், இந்துவெறி அமைப்புகளின் முன்னணியில் நின்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தையும் நடத்துகிறார்கள்.
”இப்படியொரு சோகத்தை நான் கண்டதேயில்லை”
கண்டவை கேட்டவைகளில் ஒரு சிறு துளியையாவது நான் எழுத நினைக்கிறேன். ஏனென்றால் நாம் அனைவரும் இதைத் தெரிந்து கொண்டாக வேண்டும். எனக்கும் யாரிடமாவது சுமையைக் கொஞ்சம் இறக்கி வைக்கவேண்டும்.
பெண்கள் மீதான வன்கொடுமைகள்: அரசமைப்பே குற்றவாளி!
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.
இசுலாமிய தீவிரவாதத்திற்கு பாரதீய ஜனதாவின் அழைப்பு!
"என் பெண்ணை எதுவும் செய்து விடாதீர்கள். நான் பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்று அவள் இந்துக்களிடம் கெஞ்சினாள். அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டார்கள். பிறகு ஒருவர் பின் ஒருவராக பத்து பேர் அவளைக் கற்பழித்தார்கள்.
ஈழம் : தேவை முற்றிலும் புதியதொரு கொள்கை – நடைமுறை!
உலகின் பிற்போக்கு, பாசிச அரசுகளின் தயவை நம்புவதற்கு மாறாக, ராஜபக்சேக்களின் பாசிசத்துக்கு எதிராகப் போராடும் சிங்கள ஜனநாயகவாதிகள் உட்பட உலகின் முற்போக்கு, புரட்சிகர சக்திகளின் வர்க்க ஒற்றுமையைக் கட்டிப் போராடுவதுதான், சிரமமானது என்றாலும் அவசியமானது, உறுதியானது, சரியானது.









