பகத்சிங் ஓவியக் கண்காட்சி – அனைவரும் வருக !
பார்ப்பன பாசிசத்திற்கு எதிராக பகத்சிங் நினைவுநாளில் சென்னையில் கருத்தரங்கம், ஓவியக் கண்காட்சி. நாள்: மார்ச் 23 மாலை 5 மணி இடம் ஸ்ரீ கிருஷ்ணா திருமண மாளிகை (வானகரம் பேருந்து நிறுத்தம் அருகில்) அனைவரும் வருக!
மண்டபத்தில் தியாகி பகத்சிங் நினைவுநாள் ஓவியக் கண்காட்சியும் நடைபெறுகிறது. அனைவரும் வருக!
மார்ச் 23 கருத்தரங்கம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கூட்டத்தை வீழ்த்துவோம் !
காவி இருள் நாட்டையே கவ்வியிருக்கிறது. நாம் என்ன செய்ய போகிறோம்? ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் காட்டியப் பாதையை வரித்துக் கொள்வோம். இப்பாதையில் மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்கள் இதர உழைக்கும் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவோம்.
ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !
தனது நிலத்தைச் சுற்றியுள்ள பலரும் நிலத்தை பிளாட் போட்டு விற்றுவிட்ட நிலையிலும் விவசாயத்தை கைவிடக்கூடாது என்று உறுதியுடன் இருந்துள்ளார் சேகர். தான் ஒரு விவசாயி என்பதில் பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால் இன்று நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
தமிழக ஒரு வரிச் செய்திகள் 15/03/2017
நீதி: ஏ1 மறைவுக்குப் பிறகு, ஏ2 சிறைவாசத்திற்கு பிறகு, ஏ1,2-க்களின் சார்பில் ஏகமனதாக அறிவிக்கப்பட்டுள்ள சிங்கப்பூர் குடிமகன் டி.டி.வி தினகரனுக்கு இந்தியக் குடிமக்கள் வாழ்த்து தெரிவிக்கலாமா?
உலகம் – இந்தியா ஒரு வரிச் செய்திகள் 15/03/2017
மராட்டிய நீர்ப்பாசன ஊழலில் துள்ளிப் பாய்ந்தவரும் குடும்ப திருமணத்திற்கு அள்ளி அள்ளி செலவழித்தவருமான கட்காரி, சோரம் போன குதிரைகளை உடனுக்குடன் ரேட் போட்டு வாங்கியதால் இன்று முதல் அவர் கோவாவின் சிறந்த குதிரைத் தரகர் என்று அழைக்கப்படுகிறார்.
கேள்வி கேட்கக் கூடாத புனித ஆவி மோடி !
மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை என்பார்கள். கடந்தகாலம், நிகழ்காலம் என முழுக்க முழுக்க அயோக்கியத்தனங்களையே வரலாறாகக் கொண்டுள்ள மோடிக்கு, இன்னும் நூறு அமித்ஷாக்களும், சதாசிவங்களும், மாத்தூர்களும் தேவை.
தங்கப் படிக்கட்டுடன் பயணிக்கும் சவுதி மன்னர் சல்மான்
கடைசியாக அவர் இந்தோனேசியாவின் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த போது பெய்த மழையிலிருந்து அவரைக் காக்க அவரது மெய்காவலர்களும், இந்தோனேசிய அதிகாரிகளும் என கிட்டத்தட்ட 7 நபர்களுக்கும் அதிகமானோர் அவருக்குக் குடை பிடித்தனர்.
குறுஞ்செய்திகள் – கேலிச்சித்திரங்கள்
வங்கதேச ஏழைகள் இந்தியாவில் வேலை பார்ப்பதை இந்துமதவெறியர்கள் எதிர்ப்பது போல மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் பணியாற்றுவதை வெள்ளை நிறவெறியர்கள் எதிர்க்கிறார்கள்.
நெடுவாசல் – நீதிமன்றத்துக்குப் போகாதே ! எச்சரிக்கை !
“எங்கள் நிலம், எங்கள் உரிமை!” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள்! மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம்!” என்று போராடும் நெடுவாசல் வட்டார மக்கள் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். போராட்டத்தை காப்பாற்றுவதற்கும், நிலத்தைக் காப்பாற்றுவதற்கும் இது அவசியம். அவசரம்.
அரசு அலுவலகங்களில், பாட நூல்களில் குற்றவாளி ஜெயா பெயர் நீக்கம்
குற்றவாளிகள் நம்மை ஆள்வது நமக்கு அவமானம், கொள்ளையர்களை எதிர்த்து போராடாமல் இருப்பதும் குற்ற செயலுக்கு ஒப்பானது. வாருங்கள் மெரினா நமக்கு வழிக்காட்டியுள்ளது - மக்கள் அதிகாரம்
அவசரச் செய்தி : திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டத்திற்கு தடை – கைது !
பிப் 26, 2017 நடைபெற இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசு மக்கள் அதிகாரம் தோழர் முரளியை திருவாரூரிலும், தோழர் செல்வத்தை திருத்துறைப்பூண்டியிலும் நேற்று நள்ளிரவு கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று வைத்திருக்கின்றனர்.
கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை விட சுற்றிலும் ஓடி வந்து கைது செய்ய முற்பட்ட போலிசுகளே அதிகம். பின்னர் அருகிலிருந்த மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு, மோடி கோவையிருந்து புறப்பட்ட 9 மணிக்கு பின்னரே விடுதலை செய்தனர்.
கிரிமினல் ஜெயா படத்தை உடைத்த தோழர்கள் கடலூர் சிறையில் அடைப்பு !
தடையை மீறி எம்.எல்.ஏ. அலுவலகம் உள்ளே சென்று குற்றவாளி ஜெயாவின் உருவப்படத்தை உடைத்ததால் காவல்துறை மக்கள் அதிகாரம் தோழர்கள் 70 பேரை கைது செய்து பேருந்தில் அழைத்துச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது. பின்னர் அனைவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விருத்தாசலம் : MLA அலுவலக ஜெயா படம் உடைப்பு ! மக்கள் அதிகாரம்
பொதுமக்களும் தோழர்களும் தடையை மீறி உள்ளே நுழைந்து குற்றவாளி ஜெயாவின் படத்தை அப்புறப்படுத்தினர். பின்னர் அந்த படம் வீதியில் போட்டு நொறுக்கப்பட்டது. தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ உட்பட பல தோழர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை – அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டம் : உண்மை அறியும் குழு அறிக்கை
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போராட்டக்களத்தில் இருந்து வெளியூர் இளைஞர்களோ,ஊர் மக்களோ வன்முறையில் ஈடுபடவில்லை. ஊர்க்கமிட்டியில் உள்ள உள்ளூர் அ.தி.மு.க.வினர் முதலில் கல்லால் எறிந்து வன்முறையைத் தூண்டியுள்ளனர்.