பெண்களுக்கு அரசியல் தேவையா ? – வேணி, லட்சுமி
பெண்களுக்கு நடக்கும் எந்த பிரச்சனைக்கும் காரணம் குடும்பமும், விதியும்தான், என்று நினைத்த என்னை, சமூக அமைப்பு முறைதான் பெண்களுக்கான எதிரி என்பதை உணர்த்தியது வினவு.
கருத்து மாற்றத்தினால் களத்தில் இறங்கினேன் – சேகர்
மீதமுள்ள என் வாழ்நாளை சரியான வழியில் தோழர்களுடன் வினைபுரியக் காத்திருக்கும் ஒரு தோழனாக என்னை மாற்றியிருக்கிறீர்கள்.
அவர்களோடு தொடர்பு வேண்டாம் – ஜோதிஜி திருப்பூர்
ஏதாவது மாற்றம் நடந்து விடாதா?? என்ற சிறுபான்மை கூட்டத்திற்கும் இனி இங்கு எந்த மாற்றத்திற்கும் வழியில்லை? என்ற பெரும்பான்மையினருக்கும் இடையே உள்ள போராட்டங்கள்.
கிராமம் முதல் இணையம் வரை : ஜீவா, பரமேசு
செய்தியாளர்களாக கருத்துச்சொல்லிகளாக மட்டும் இராமல் களத்திலும் தொடர்ந்து போராடி வருகிற கொள்கைச் செம்மை தான் வினவு தோழர்களைச் சிறந்த முன்னுதாரணங்களாக நம்முன் நிறுத்துகிறது.
வாழ்த்து கூறும் எண்ணம் இல்லை : செங்கொடி
எல்லோரும் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருப்பதில்லை. அப்படி இல்லாதது தவறாகவோ, குற்றமாகவோ தெரிவதில்லை. திருந்திக் கொள்ள வேண்டும் எனும் எண்ணமும் அதனால் தோன்றுவதில்லை.
ஆம்பூர் தோல் முதலாளிகள் விரும்பாத புஜதொமு கருத்தரங்கம் !
வழக்கமாக மாலை 3 அல்லது 4 மணிக்கு ஷிப்ட் முடித்து வெளிவரும் தொழிலாளர்களை நிகழ்ச்சியன்று கூடுதல் வேலை (OVER TIME) செய்யும்படி கட்டாயப்படுத்தி நிகழ்ச்சிக்கு வருவதை தடுக்க சில கம்பெனிகள் முயற்சித்தன.
வினவை வாசிப்பவர்கள் யார் ? – மருதன்
எனக்குத் தெரிந்து பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சமூக ஆர்வலர்கள், சிறு பத்திரிகை ஆசிரியர்கள் என்று பலரும் வினவைத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள்.
வினவு ஏற்படுத்தும் குற்ற உணர்ச்சி – சீனிவாசன்
மற்ற எழுத்தாளர்களின் வாசகர்களாய் இருப்பதில் பிரச்சனை ஒன்றுமில்லை. படித்தோமோ போனோமா என்று இருந்துவிடலாம். வினவு வாசகர்களுக்கு குறைந்தபட்சம் தன் சொந்த வாழ்க்கையை மாற்றிக்கொள்ள இயலாத குற்ற உணர்ச்சியாவது அவர்களை வாட்டும்.
தொலைகின்ற தருணங்களில் வழிநடத்தும் விரல்கள் – விஜயபாஸ்கர், பெரோஸ், சுதாகர்
பாராட்டுகள் அதிகமாகும் வேளையில் செய்ய வேண்டிய கடமைகள் அதிகம் இருக்கின்றன என்பதை வினவின் தோழர்கள் உணர்ந்து இன்னும் பரந்த வீச்சுடன் செயல்படுவார்கள் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.
மோதலில் துவங்கிய எனது அறிமுகம் : ரிஷி !
உரிமைகள் பறிக்கப்படுவதை பொறுத்துக் கொண்டு கெஞ்சினால் மட்டும் கிடைக்கும் என்ற அளவிலேதான் ஜனநாயகம் இருக்கிறது. வலுத்தவன் வாழ்வான்; எளியவன் சாவான் என்ற கட்டமைப்புதான் இங்கே இருக்கிறது.
கருப்பு வெள்ளையல்ல வாழ்க்கை ! – வெங்கடேசன்
சுடும் வெயிலில் தார் சாலை போட்டுவிட்டு, அருகிலேயே தகர கொட்டகையில் உறங்கும் தொழிலாளர்கள் இப்போது குற்ற உணர்ச்சியை தருகிறார்கள்.
வினவுக்கு சில ஆலோசனைகள் – குருத்து
புதிய கலாச்சாரம் மாதம் இரண்டாக, வாரம் ஒன்று, இரண்டாக, தினசரி இதழாக வரவேண்டும் என எழுதினேன். வினவின் வடிவத்தில் அந்த கனவு நனவாகி கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக ஊர்வலம் !
குர்கானில் நடந்த பிரச்சினைக்கு புதுச்சேரியில் எதிர்ப்பா? என்கிற அச்சம் அவர்களின் முகத்தில் காண முடிந்தது.
என் பார்வையில் வினவு – வளவன்
சமூக ஒழுக்கங்களை 'கட்டுடைத்து', பிழைப்புவாதத்தை புதிய அறமென விதந்தோதும் பின்நவீனத்துவ அறிவாளிகளை அம்பலப்படுத்துவதில் வினவு ஆற்றிவரும் பாத்திரம், குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது.
என் பார்வையில் வினவு : நாயகன், வேலு
நான் படித்தவற்றை நான்கு பேருடன் கலந்தாலோசிக்கும்போது அவர்களையும் விழிப்படையச் செய்வதில் என்னாலான சிறு பங்கை ஆற்ற வினவு மிகவும் உதவியாக உள்ளது.












