ஒரு வரிச் செய்திகள் – 19/12/2012
ஒரு வரிச் செய்தியும், நீதியும் - படியுங்கள், பகிருங்கள்!
பிளேடு பக்கிரி முதலாளிகளுக்கு இந்திய அரசு சலுகை!
வசூலிக்க முடியாது என்று அரசு கைகழுவி விட்ட வரி நிலுவைத் தொகை என்பது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளால் ஏற்பட வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படும் வருவாய் இழப்பைக் காட்டிலும் அதிகமானது.
கிரானைட் கொள்ளையை அம்பலப்படுத்தும் ஆவணப்படம்!
கிரானைட் கொள்ளையையும் அதில் அரசு எந்திரத்தின் துணையையும் அம்பலப்படுத்தி புரட்சிகர அமைப்புகள் "கிரானைட் மெகா கூட்டணி - மகா கொள்ளை" என்றொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளன.
படிக்கட்டு பயணம் – கொழுப்பா, நிர்ப்பந்தமா?
விஜயன் போன்ற மாணவர்களை இழந்த பிறகும் அருகாமைப் பள்ளிகளைப் பற்றிப் பேசத் தவறினால் தனியார்மயம் நமது சந்ததியை உடனடியாக சுடுகாட்டில் சேர்ப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
கூகிளின் வரி ஏய்ப்பு – இதுதாண்டா முதலாளித்துவம்!
'ஆமா, நாங்க வரி ஏய்ப்பு செஞ்சோம். அதை நினைத்து பெருமைப் படுகிறோம். அதுதான் முதலாளித்துவம்' என்று போட்டு உடைத்திருக்கிறார் கூகுள் நிறுவனத்தின் தலைவர் எரிக் ஷ்மிட்த்.
டாலர் வேண்டுமா? கொலை செய்!
பயிர்கள் பொய்த்துப் போய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நாட்டிலிருந்துதான் குறுக்கு வழியில் பணத்தை சுருட்டுவதற்காக கொடூரமாக கொலைகள் செய்யும் ரகுநந்தனும் தோன்றியிருக்கிறான்.
இனி காவிரி படுகை அம்பானி கையில்!
காவிரியில் தமிழகத்தின் பங்கை தர மறுத்து அடாவடி செய்யும் கர்நாடகாவையும் அதற்கு துணை போகும் மத்திய அரசையும் கண்டிக்கும் தமிழின ஆர்வலர்கள் காவிரி படுகையை கொள்ளையடிக்கும் ரிலையன்சை குறி வைத்தும் எதிர்ப்பார்களா?
10 நிறுவனங்கள் – ஒரு இலட்சம் பேர் வேலை நீக்கம்!
10 நிறுவனங்கள் மட்டும் ஒரு இலட்சம் பேரை வேலை நீக்கம் செய்திருக்கின்றன என்றால் உலக அளவில் அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் நீக்கியிருக்கும் ஊழியர்கள் கோடிகளில் இருப்பது உறுதி.
நாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி!
ஊரின் புறம்போக்கு நிலத்தில் குடிசை போட அனுமதி தரும் இந்த ஆதிக்க சாதிகள் வயதான காளை மாடுகளை இனி உழவுக்கு ஆகாது எனத் தெரிந்தால் அடி மாட்டுக்கு அனுப்புவது போல வயது முதிர்ந்த நாவிதர்களை விரட்டி விடத் துவங்குகின்றன
ஜெசிந்தாவைக் கொன்றவர்கள் யார்?
சென்ற வாரம் செவ்வாய்க் கிழமை காலை 5:30 மணிக்கு அவர் பணிபுரியும் மருத்துவமனையில் அடித்த தொலை பேசியை எடுக்காமல் இருந்திருந்தால் 46 வயதான நர்ஸ் ஜெசிந்தா சல்தானா இன்று உயிருடன் இருந்திருப்பார்.
நோபல் பரிசு: கொலைகாரனுக்கு சமாதானப்புறா பட்டம்!
அம்மாவுக்கு ஈழத்தாய் பட்டம், அண்ணா ஹசாரேவுக்கு ஊழல் ஒழிப்பு போராளி பட்டம், தா. பாண்டியனுக்கு கம்யூனிஸ்ட் பட்டம் போன்றவைகளை விட தேர்ந்த நகைச்சுவை தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு என்பது.
தருமபுரி வன்னிய சாதிவெறி தாக்குதல் : HRPC வழக்கு !
தருமபுரி தலித் கிராமங்கள் மீது ஆதிக்க வன்னிய சாதி வெறியர்கள் நடத்திய வன்கொடுமை தாக்குதல் தொடர்பாக மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கு விவரம்!
ஸ்பெயின் : உடல் நலன் விற்பனைக்கு இல்லை !
பொது மக்களுக்கான மருத்துவ வசதிகளை வெட்டும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் ஆயிரக்கணக்கான மருத்துவர்களும், செவிலியரும், பொது மக்களும் டிசம்பர் 9-ம் தேதி பேரணி நடத்தினர்.
வைரல் மார்க்கெட்டிங் – சமூக வலைத்தளங்களின் கருத்துச் சுதந்திரம் !
இந்த வைரல் மார்கெட்டிங்கில் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது விடயம் பரபரப்பாக பேசவைக்கப்படும். அந்த பரபரப்பில் அந்த விடயம் உலகெங்கும் பல லட்சக்கணகானோரின் பொதுக் கருத்தாக்கப்படும்.
தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !
வெறும் ஜீன்ஸ் டி-சர்ட் போட்டுக் கொண்டாலே ‘உயர்’ சாதிப் பெண்களெல்லாம் மயங்கி விடுவார்கள் என்று ராமதாசுக்கு கவலை பிறந்துள்ளதற்கு காரணம் இல்லாமல் இல்லை